சனி, 31 மே, 2014

அமைச்சரவை குழுக்களை கலைத்தார் மோடி

புதுடில்லி: அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழுக்கள் மற்றும் அமைச்சரவை குழுக்களை கலைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளே விரைவாக முடிவு எடுக்க முடியும் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், 9 அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்களும், 21 அமைச்சரவை குழுக்களும் இருந்தன. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன் எந்த முடிவும் எடுக்கும் முன்னரும், அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழு பரிசீலனை செய்யும். அதிகாரம் பெற்ற அமைச்சரவை குழுக்கள் பெரும்பாலனவற்றிற்கு ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த அந்தோணி தலைமை வகித்தார். ஊழல், நதிநீர் பிரச்னை, நிர்வாக சீர்திருத்தம், எரிவாயு மற்றும் டெலிகாம் விலை தொடர்பாக அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டன.

Iran: facebook கில் அரசுக்கு எதிராக எழுதிய 8 பேருக்கு 123 ஆண்டு ஜெயில் !

பேஸ்புக்’ சமூக வலை தளம் சர்வதேச அளவில் மக்களை ஒருங்கிணைக்கும் ஊடகமாக திகழ்கிறது. அதன் மூலம் ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
இதுபோன்ற தகவல் பரிமாற்றம் ஈரானில் 8 பேருக்கு ஜெயில் தண்டனை பெற்று தந்தது. அவர்கள் அரசுக்கு எதிராக ‘பேஸ்புக்’ மூலம் பிரசாரம் செய்ததாக புகார் செய்யப்பட்டது.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட 8 பேருக்கு தலா 7 முதல் 20 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக 123 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் ( சங்கர் ) கணேஷ் 28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்றார் !

Veteran music director Ganesh, of the yesteryear Sankar Ganesh fame, who lost eyesight in a explosion, has regained it after 28 years. The music director, who had been visually impaired all these years, can see now thanks to an advanced surgical procedure.பிரபல தமிழ் இசையமைப்பாளர்  கணேஷ், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். 28 வருடங்களுக்கு முன்பு இவரது வீட்டுக்கு வந்த ஒரு மர்ம பார்சலை பிரித்த போது திடீரென்று ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தால் இவரது கை மற்றும் வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டது.இதனையடுத்து தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு நவீன தொழில்வுட்ப சிகிச்சையால் இழந்த கண்பார்வை மீண்ம் கிடைத்துள்ளது. இது குறித்து பேசிய சங்கர் “எனது கண் பார்வை முன்னை விட தற்போது தெளிவாக உள்ளது.  எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. எனது கண்களை நான் கண் தானம் செய்துள்ளேன். அனைவரும் தங்களது கண்களை கண்தானம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். /nakkheeran.in/

ரஜினிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி? தமிழக பா.ஜ.,வை வலுப்படுத்தும் முயற்சி ?

சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக பா.ஜ.,வை வலுப்படுத்த, நடிகர் ரஜினிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கொடுத்து, அவரை பா.ஜ., பக்கம் இழுக்க, அக்கட்சி தலைமை திட்டமிட்டு உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.திராவிட கட்சிகளை எதிர்த்து, தமிழகத்தில் கட்சி அமைப்பை பா.ஜ.,வால் கட்டமைக்க முடியவில்லை. கட்சி நிர்வாகிகளை மாற்றுவதாலும், பலன் கிடைக்கவில்லை. லோக்சபா தேர்தலில், மோடி அலை வீசினாலும், தமிழகத்தில் வெற்றி பெறும் அளவுக்கான ஓட்டுகளாக, அதை மாற்ற முடியவில்லை.  ரஜினி ஒரு பக்கா சுயநலவாதி. விஜய் மற்றும் விஜய காந்த் இன் தில் கூட ரஜினியிடம் கிடையாது. தனது அண்ணனுக்கு, அவர் வாழ்க்கைக்கு என்று சில கோடிகளை ஒதுக்க நினைக்கும் அளவிற்கு நல்ல மனம் கொண்ட ரஜினி, ஆனால் லதாவின் இடையுறு இருந்து அதை செய்யாமல் விடும் அளவிற்கு, சுயநலவாதி, ரஜினி. லதா, ரவி ராகவேந்திரா இமசைகளுக்குள் சிக்கி, நசுங்கியாச்சு. இப்போது கோச்சடையான் ஃப்லாபுக்கு நஷ்டஈடு அடுத்த படத்தின் சம்பளத்தில் இருந்து கொடுப்பாராம். இவர் கையில் பணம் இல்லையா என்ன. இப்படி ஒரு சுயநலம், தனியாக முடிவெடுக்க முடியாத நிலைமை. BJP என்னமோ இவரை சேர்த்தால், பல சீட்டு தமிழ் நாட்டில் பெறும் என்ற நினைப்பு. அதெல்லாம், ரஜினிக்கு பாட்ஷா பட சமயத்தோடு காலி. காலத்தின் கட்டளை என்பது, அவர் தமிழ் நாட்டோடு ஒட்டலை என்பது தான். இன்னுமும் ரஜினி ரஜினி என்று வாழ்கையை வீணாக்காதீர்கள். ஜீரணிக்க முடிஞ்சா பாருங்க, இல்ல அவர் போஸ்டருக்கு பால் ஊத்தி, அதற்கு மேல டிக்காஷன் ஊத்தி, காபி போட்டு குடிங்க

பாதுகாப்பு துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி

புதுடில்லி:இந்தியாவின் பாதுகாப்பு துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இதனால், பாதுகாப்பு துறை சார்ந்த சாதனங்களின் இறக்குமதி குறைந்து, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கும்.தற்போது, பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்களில், அன்னிய நிறுவனங்கள் 26 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி உள்ளது.இந்நிலையில், தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையின் வரைவறிக்கையில், பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை,100 சதவீதமாக உயர்த்தலாம் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, வர்த்தக அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது.  காங்கிரஸ் அந்நிய முதலீட்டை ஊக்குவித்தால் நாட்டையே விற்று விட்டதாக கூப்பாடு. அதுவே ஆர் எஸ் ஸின் கைப்பாவைகளால் நடந்தால் ' உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகும். பாதுகாப்பு சாதனங்கள் சார்ந்த இறக்குமதி செலவினம் குறையும்' எங்கே போய்விட்டீர்கள் தங்கங்களா..........எதிர்ப்பு குரலெழுப்பிய தொழில் துறையினரே, தொழிலாளர்களே, வர்த்தகர்களே, மீடியாக்களே......ரயில்வேயிலும், இன்னும் எல்லா துறைகளிலும் 100 சதவீத அந்நிய முதலீட்டில் இந்தியா வளம் கொழிக்க போகிறது. வெள்ளையர்களுக்கு இந்தியனின் வேர்வை என்றால் மிகவும் பிடிக்கும். இதைப்பற்றியெல்லாம் வாய் திறந்தால் கொழுக்கட்டை வந்து அடைத்துக் கொள்ளும் என்பதால் மௌனிகளாகி விட்டீர்களா ........?

அஞ்சலையின் போராட்டம் கொலையை தற்கொலைதான் என்று ஊத்தி மூடிய கோட்டாட்சியர்

அஞ்சலைரிதினும் அரிதான வழக்குகளில் மட்டும்தான் காவல்துறையினர் கைது செய்யப்படுவார்கள். அந்த வழக்குகளிலும் கூட நீதி கிடைப்பதற்காக பாதிக்கப்பட்டவர்கள் சில பத்தாண்டுகள் வரை காத்திருக்க :வேண்டியதிருக்கும். அதிலும் அவர்கள் ஏழைகளாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் இருந்து விட்டால் நீதியை அவர்கள் கனவில்தான்  பார்த்துக் கொள்ள முடியும் என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.
அஞ்சலை
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் வசிக்கும் அஞ்சலை என்ற பெண்ணுக்கு இப்படி ஒரு காலம் தாழ்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.

மா.செ.,க்களை ஒடுக்க கலைஞர் திட்டம்: ஸ்டாலின் எதிர்ப்பு !

கடந்த, 1991ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின், இந்த தேர்தலில் தான், தி.மு.க., போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோற்று, பூஜ்ஜியத்தைப் பெற்றுள்ளது. இந்தளவுக்கு கட்சி பரிதாபமாக தோற்றதற்கு, மாவட்டச் செயலர்களும், வேட்பாளர் தேர்வும் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.இந்த பிரச்னையை சரி செய்ய, மாவட்டச் செயலர்களின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, கருணாநிதி முடிவு செய்துள்ளார். தற்போது, கட்சியில், 32 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டச் செயலர்களாக இருப்பவர்கள், வெகு காலமாக அந்த பதவியில் இருந்து வருகின்றனர். அவர்களை மாற்றவோ, புதியவர்களுக்கு வாய்ப்பு தரவோ முடியாத அளவுக்கு, அவர்களது ஆதிக்கம் வலுவாக உள்ளது. இதனால், தனக்கு நிகராக, வேறு யாரையும் தங்கள் மாவட்டத்தில் அவர்கள் வளர விடுவதில்லை.அதேபோல், தங்களுக்கு பிடிக்காதவரை எம்.பி.,யாகவும் அவர்கள் விடுவதில்லை. இது போன்ற காரணத்தால், தேர்தலில் அவர்கள் தோற்றுப் போவதற்கான வேலைகளைச் செய்யவும், மாவட்டச் செயலர்கள் தயங்குவதில்லை என, குற்றம் சாட்டப்படுகிறது.

வெள்ளி, 30 மே, 2014

Delhi திடீரென தாக்கிய புயல் மழையால் இருளில் மூழ்கிய டில்லி விமானங்கள் திசை திருப்பிவிடப்பட்டன

கடும் வெயில் அடித்துவந்த தில்லியில் இன்று மாலை 5 மணிக்குகு திடீரென
புயல் காற்று வீசியது. மேலும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நகரின் பலஇடங்களில் மின் கம்பங்கள் சரிந்து மின்தடை ஏற்பட்டது. மேலும் மரங்கள் பல இடங்களில் சரிந்து விழுந்தது. தில்லி மட்டுமல்லாமல்  அருகே உள்ள நொய்டா, துவாரகா உள்ளிட்ட நகரங்களிலும் புயல் மழை பெய்தது.
இதனால் அங்குள்ள மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டன. திடீர் புயல் மழையால் தில்லிக்கு வந்து கொண்டிருந்த 11விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. இந்த புயல் மழையால் தில்லியின் பலபகுதிகள் இருளில் மூழ்கின. நேற்று  43.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.. இதுவே தில்லியில் அடித்த உச்சபட்ச வெயில்  ஆகும்.dinamani.com

திருப்பதி கோவில் சொத்துக்கு சீமாந்த்ராவும் தெலுங்கானாவும் உரிமை கோருகிறார்கள் !

திருமலை ஏழுமலையானின் சொத்துகள் முழுவதும், சீமாந்திராவுக்கே
சொந்தம் என, அரசு உத்தரவு விட்டுள்ளது.
; திருமலை ஏழுமலையான் குடிகொண்டுள்ளது சித்தூர் மாவட்டத்தில், அதனால், ஏழுமலையான் சீமாந்திராவை சேர்ந்தவர்.ஆனால், ஜூன் 2ம் தேதி முதல் ஆந்திர மாநிலம், அதிகார பூர்வமாக இரண்டாக பிரிய உள்ளது. இந்நிலையில், இரண்டு மாநிலத்திற்கும், ஆந்திராவில் உள்ள, அனைத்துத்துறைகள் சமமாக பிரிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்தின் சொத்துக்கள் அனைத்தும், ஏழுமலையானை சேர்ந்தது. மேலும், ஆந்திரா ஒன்றாக இருந்த நிலையில், தேவஸ்தானத்தின் சொத்துகள் தெலுங்கானாவிலும், உள்ளது. அரசு சொத்துகளை மட்டும் தான், இரண்டு மாநிலங்களுக்கு பிரித்தளிக்க முடியும்.

கோச்சடையான்: 'லொள்ளு சபா' ஜீவா எனும் நிழல் ரஜினி

கோச்சடையான்' படத்தின் முக்கியக் காட்சிகளில், ரஜினிக்கு பதிலாக நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான 'கும்கி' இசை வெளியீட்டு விழாவில்தான் முதன்முறையாக கலந்து கொண்டார் ரஜினி. அப்படத்தின் இசை வெளியீட்டு அழைப்பிதழில் கூட ரஜினியின் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், 'கோச்சடையான்' மோஷன் கேப்சர் தொழில்நுட்ப படம் என்பதால் ரஜினி அதிக சிரத்தையின்றி நடித்து விடலாம் என்று தீர்மானித்தார். முக்கிய நடிகர்கள் சிலரை மட்டுமே ஒரு மோஷன் கேப்சர் அரங்கினுள் வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். இதைத்தான் 'கோச்சடையான்' படத்திற்கு முன்பு உருவான விதமாக திரையிட்டார்கள். ஆனால், பல்வேறு காட்சிகளில் ரஜினியை சிரமப்படுத்தக் கூடாது என்று தீர்மானித்து 'லொள்ளு சபா' ஜீவாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். தீபிகா படுகோனுடன் உள்ள சண்டைக் காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில் ரஜினிக்கு பதில் ஜீவா நடித்துக் கொடுத்திருக்கிறார்.

370வது பிரிவை நீக்கினால் ஐ.நா. தீர்மானப்படி காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் நிலை வரும்"

ஸ்ரீநகர்: அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை நீக்கினால் இந்தியாவுடன் இருப்பதா? இல்லை பிரிந்து செல்வதா? என்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தின்படி பொதுவாக்கெடுப்பு நடத்தும் உரிமை ஜம்மு காஷ்மீரத்துக்கு இயல்பாகவே வந்துவிடும் என்று அரசியல் சாசன வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீநகர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரசியல் சாசன வல்லுநர் முசாஃபர் ஹூசைன் பெய்க் அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்: ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது மொத்தம் 562 தேசங்கள் இங்கே இருந்தன. இவை பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைந்தவை அல்ல. தனி தேசங்கள். பின்னர் இந்த தேசங்கள் ஒவ்வொன்றாக இந்தியாவுடன் இந்தியாவின் ஒருபகுதியாகவே இணைந்தன. ஆனால் ஜம்மு காஷ்மீர விவகாரம் ஐக்கிய நாடுகள் சபைக்குப் போனது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது இந்த மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.

நடிகை ’அழகி’ மோனிகா இஸ்லாம் மதத்திற்கு மாற்றம்

நடிகன்
உட்பட ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மோனிகா, அழகி படத்தின் மூலம் நாயகியாக நடித்து புகழ்பெற்றார்.   அதன்பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ள அவர் சிலந்தி படத்தில் கிளாமரில் தாராளம் காட்டினார்.தமிழ் தவிர வேறு மொழிகளிலும் நடித்துள்ள மோனிகா,  தற்போது மதம் மாறியுள்ளார். அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

லக்னோ: பலாத்காரம் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடப்பட்ட சிறுமிகள்... சாதி வெறியின் கொடூரம்

லக்னோ: உ.பியில் உள்ள ஒரு கிராமத்தில் சாதி வெறி காரணமாக இரண்டு
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர் சாதி வெறியர்கள். இந்த கொடும் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாதவ் இனத்தைச் சேர்ந்த சாதி வெறியர்கள் செய்த அட்டூழியம் இது என்று அச்சிறுமிகளின் தந்தை குமுறியுள்ளார். இந்த சிறுமிகளுக்கு வயது 15 மற்றும் 14 ஆகும். இருவரும் சகோதரிகள். கிராமத்தில் உள்ள மாமரத்தில் இருவரின் உயிரற்ற உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. புதான் மாவட்டம், கத்ரா ஷதாத் கஞ்ச் என்ற கிராமத்தில்தான் இந்த அட்டூழியம் நடந்துள்ளது. இருவரும் முதலில் பலாத்கராம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். பிறகு உடல்களை மாமரத்தில் தொங்க விட்டுள்ளனர். சாதி வெறி தலை விரித்தாடும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று உ.பி.

தமிழக சட்ட சபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிகளை பெறுமா ? அல்லது இப்போதே கரைந்துவிடுமா ?

சென்னை: தமிழகத்தில் பாஜக தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒற்றுமையில்லாத காரணத்தினால் அது மரண குழியை நோக்கிச் செல்வதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் தேமுதிக, மதிமுக, பாமக, இந்திய ஜனநாயக மக்கள் கட்சி, புதிய நீதி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணியில் பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸும் தான் வெற்றி பெற்றனர். பிற கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தன. இந்நிலையில் 2016ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலிலும் இதே கூட்டணி ஆனால் கொஞ்சம் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என பாஜக எதிர்பார்க்கின்றது. ஆனால் தற்போதே தேர்தலின்போது இருந்த அன்யோன்யம் தேமுதிகவுக்கும், பாமகவுக்கும் இல்லை. எனவே இந்த கூட்டணி எதிர்காலத்தில் கரை சேருமா அல்லது இப்போதே கரைந்துவிடுமா என பல யூகங்களை ஏற்படுத்திவிட்டது.

விஜய் டிவி திவ்யதர்ஷினிக்கு விரைவில் திருமணம் ! Reail star of Tamilnadu

விஜய் டிவியின் ‘டெலி அவார்டு’ நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக
விருது பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி (டிடி) ‘‘ரொம்பவே சந்தோஷமான தருணம் இது.மொத்தமாக 29 பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்துள்ளது. நாம ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அது மக்களுக்கு பிடிப்பதால்தான் இப்படியான விருதுகள் வரைக்கும் செல்ல முடிகிறது. < முதலில் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியின்போது விஜய் டிவி குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டாடியதை மறக்கவே முடியாது’’ என்கிறார் திவ்யதர்ஷினி. அதேநேரத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக டிடியின் வீட்டில் அவரது திருமணத்தைப் பேசி முடித்துள்ளார்களாம். மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்.
‘‘அவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி யாளராக பணியாற்றியவர். விரைவில் படம் இயக்கப் போகிறார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இரு வரும் நண்பர்கள். என்னோட வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கின நேரம். அவரோட வீட்டில் அவருக்கு பொண்ணு பார்க்க தொடங்கினாங்க.

தமிழக பா.ஜனதா பொறுப்பாளராக அமித்ஷா !

பா.ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருப்பவர் அமித்ஷா. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கைக்கு உரியவராகவும், நெருக்கமான விசுவாசியாகவும் உள்ளார்.
நரேந்திர மோடியை பிரதமராக்க அமித்ஷா அரும் பாடுபட்டார். தன்னை கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும் அமித்ஷாவை களம் இறக்கினார். உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட்டார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிக இடங்களை கைப்பற்றினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திட்டம் போட்டு செயலாற்றினார்.

ஆ.ராசா, கனிமொழி ஜாமினுக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு

2ஜி அலைகற்றை வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் ஆஜராகி வருகிறார்கள்.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் இவ்வழக்கில் ஜாமின் கேடு மனு செய்திருந்தனர்.  இன்று நடைபெற்ற விசாரணையில்,  அமலாக்கத்துறை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தரப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை வாதம் செய்தது.

பெண்களின் பெயரை புனைபெயராக கொண்டிருக்கும் ஆண்கள்

sujathat;இலக்கியத் தரம், முற்போக்கு, பெண்ணியம் என்றெல்லாம் மூச்சு முட்ட பேசுகிறவர்கள்;
‘சுஜாதா’ என்கிற கழிசடை பேரில் விருது கொடுத்தால், முண்டியடித்து முன்னால போய் நிற்கிறார்கள்.
பாவம் அந்த அம்மா.. இந்த ஆளு அசிங்க அசிங்க எழுதுனதுக்கு.. அந்த அம்மாவுக்கு தண்டனை. திட்டுறவுங்கெல்லாம் அந்த ஆள திட்டமுடியாமா, அந்த அம்மாவையே திட்ட வேண்டியதா இருக்கு.
‘சுஜாதா’ என்று தன் மனைவியின் பெயரில் பொறுப்பற்று பெண்களுக்கு எதிராகவும் பொறுக்கித்தனமாகவும் எழுதியது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.
‘தன் பெயரால் எழுதப்படுகிற எந்த மோசமான விசயமும் தனக்குத் தெரியாது’ என்கிற நிலை, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய அவமானம். அவலம்.
பொதுவாக பெண்கள் பெயரில் எழுதுகிற ஆண்கள், பாலியல் உறவுக் குறித்து அதிகம் எழுதுகிறார்கள். காரணம், சீக்கிரத்தில் பிரபலமாகலாம் என்பதினாலேயே.

திருமணம் எனும் நிக்காஹ்' திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு

திருமணம் எனும் நிக்காஹ்' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல்
செய்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சென்னை போலீஸ் ஆணையர், திரைப்பட மத்திய தணிக்கைக் குழு மற்றும் ஆஸ்கார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத் தலைவர் டேப்லெஸ் அலிகான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: "திருமணம் எனும் நிக்காஹ்' திரைப்படத்தை ஆஸ்கார் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதை மே மாதம் 30-ஆம் தேதி திரையிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்தத் திரைப்படத்தில் முஸ்லிம்கள் தரக்குறைவாக சித்திரிக்கப்பட்டுள்ளனர். அதிலும், ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவுபடுத்தி சித்திரித்துள்ளனர். இதனால் மதக் கலவரம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வேட்பாளர்களா? தோல்விக்கு பின் கொந்தளிக்கும் தி.மு.க.,வினர்

லோக்சபா தேர்தலில் தி.மு.க, தமிழகம் முழுவதும் படுதோல்வியடைந்ததால், கட்சியினர் கடும் சோகத்தில் தத்தளித்து வருகின்றனர். இவர்களை உசுப்பி விடும் வேலையில், தி.மு.க., தலைமையும் மாவட்ட நிர்வாகங்களும் ஈடுபட்டு வருகின்றன.வரும் ஜூன் 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின், 91வது பிறந்த நாள் வருகிறது. அந்த நாளை, இந்த முறையும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என, மாவட்ட நிர்வாகங்களுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருக்கிறது. தேர்தல் தோல்வி குறித்து ஆராயவும், கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்துவதற்கும், தமிழகம் முழுவதும் கட்சியின் மாவட்ட நிர்வாகங்கள், மாவட்டம் தோறும் செயல் வீரர்கள் கூட்டத்தை கூட்டி வருகின்றன. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நேற்று, நெல்லை ஆரியபவன் ஓட்டலில் நடந்தது. தி.மு.க.,வினர் பெரும் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கட்சியின் தோல்வி குறித்து காரசார விவாதங்கள் நடந்தன.  ஸ்டாலின் திருந்தாத வரையில்  கழகத்துக்கு மீட்சி இல்லை 

விஜயகாந்த் மோடியின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமலே சென்னை திரும்பினார்

டில்லியில் மூன்று நாட்கள் முகாமிட்டும், நினைத்த காரியம் நடக்காத நிலையில், விஜயகாந்த் சென்னை திரும்பியதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் கடுமையாக ஏமாற்றம் அடைந்துள்ளனர்.<தே.மு.தி.க.,வுக்கு லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எப்படி ஈடுகட்டுவது என்ற கவலை, கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.,வில் இணைவதே நல்லது என்ற கருத்து, அக்கட்சியினர் மத்தியில், பரவலாக எழுந்துள்ளது. இதுகுறித்தெல்லாம் விஜயகாந்தும் நன்கு அறிந்திருப்பதால், அவர், கட்சியை காப்பாற்றும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். அதற்காக, அவர் தன் மைத்துனர் சுதீஷ் அல்லது மனைவி பிரேமலதாவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, பா.ஜ., தரப்பிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என, திட்ட மிட்டு, அதற்காக காய் நகர்த்த ஆரம்பித்தார். இப்படி கிடைக்கும் எம்.பி., பதவியுடன் மத்திய அமைச்சர் பதவியையும் பெற்று விட்டால், அடுத்த சட்டசபை தேர்தல் வரையில், கட்சியை சேதமில்லாமல் கரை சேர்த்து விடலாம் என, மனக் கணக்குப் போட்டார்.

ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் சஸ்பெண்ட்!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஒரு கோமாளி என கூறிய கேரள காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ;லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த முஸ்தபா, ராகுல் ஒரு கோமாளி என்றும், அவரை துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக பிரியங்காவை தலைவராக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது கருத்து காங்கிரஸ் கட்சியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முஸ்தபா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். nakkheeran .in

மோடியின் பத்து கட்டளைகள் ! 100 நாட்களில் நிறைவேற்ற கோரிக்கை !

குடிதண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும்' என்பது உட்பட, 10 கட்டளைகளை, மத்திய அமைச்சர்களுக்கு மோடி பிறப்பித்து உள்ளார். அத்துடன், 'ஒவ்வொரு மத்திய அமைச்சரும், 100 நாள் செயல் திட்டம் ஒன்றை உருவாக்கி நிறைவேற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டு உள்ளார். மத்திய அமைச்சரவையின், இரண்டாவது கூட்டம், டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின், நிருபர்களிடம் பேசிய, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், வெங்கையா நாயுடு கூறியதாவது: அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சில அறிவுரைகளை வழங்கினார். 100 நாள் செயல் திட்டம் என்ற யோசனையையும் முன்வைத்தார். ஒவ்வொரு அமைச்சரும், தன் அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகளில், அடுத்து வரும், 100 நாட்களில், என்னென்ன திட்டங்களை செயல்படுத்தலாம் என்பதையும், தேவையான திட்டங்கள் பற்றியும், தகவல்களை தொகுக்க வேண்டும். அந்தத் திட்டங்களை, 100 நாட்களுக்குள் அமல்படுத்த, முழுஅளவில் தயாராக வேண்டும் என, கேட்டுக் கொண்டார். ஆமா இதெல்லாம் உண்ம தானா??.. ஒண்ணுமில்ல... அவங்க கிட்ட பேசுனது உங்களுக்கு எப்பிடி தெரிஞ்சுது??.. என்னமோ பக்கத்துல உக்காந்து கேட்ட மாதிரி எழுதுறீங்க??.....

வியாழன், 29 மே, 2014

தீபிகா படுகோன் பச்சை குத்தியிருந்த தனது காதலன் பெயரை அழித்தார் !


தீபிகா படுகோன் தனது மாஜி காதலன் டாட்டூவை
அழித்தார்.நடிகை
நயன்தாரா மாஜி காதலன் பிரபுதேவா பெயரை குறிக்கும் வகையில் தனது கையில் பச்சை குத்திக்கொண்டார். ஜோடிகள் பிரிந்தபோதும் நயன்தாரா இன்னும் டாட்டூவை அழிக்கவில்லை. அதை அழிக்க முடியாதபடி கைய¤ல் பச்சை குத்திவிட்டதால் அவர் இப்போது தவிக்கிறார். ‘மதராசபட்டினம் பட ஹீரோயின் எமி ஜாக்சனும் தனது மாஜி காதலரான பாலிவுட் ஹீரோ பிரதீக் பப்பர் பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் இருவரும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். சில வருடங்களுக்கு முன் பாலிவுட் ஹீரோ ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். ரன்பீர் பெயரை கழுத்துப்பகுதியில் தீபிகா பச்சை குத்திக்கொண்டார்.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடுக்கு அனுமதியில்லை மத்திய அரசு- !

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று
வெளியிட்ட அறிக்கை:சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை  அனுமதிக்கக்கூடாது என இந்திய முழுவதும் வணிகர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தியும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பிடிவாதமாக  அலட்சியப்படுத்தியது.  தற்போது காங்கிரஸ் மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததற்கு சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்த காரணமும் ஒன்று  என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பொறுப்பேற்ற வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதில்லை என முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டனில் இன்று நாடு கடத்தப்படும் நிலையில் உள்ள நைஜீரிய பெண்!

நைஜீரியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்து அரசியல் தஞ்சம் கோரிய 31
வயது பெண்ணும், அந்த பெண்ணின் இரு குழந்தைகளும், பிரிட்டனில் இருந்து நாடுகடத்தப்பட உள்ளனர் என தெரியவருகிறது. தாம் நைஜீரியா திரும்பினால் உயிராபத்து ஏற்படலாம் என இந்த பெண் கோர்ட்டில் கூறியிருந்தார்.
இவர்கள் வசித்துவந்த லீட்ஸ் நகரில் இருந்து நேற்று மாலை இவர்களை லண்டன் நகருக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அதிகாரிகள்.
“லண்டன் விமான நிலையத்தில் இருந்து இவர்களை நாடுகடத்தும் நடைமுறை இது” என்று கூறியுள்ள இந்தப் பெண்ணின் வக்கீல், “இந்த வழக்கை ஹான்டில் செய்யும் வக்கீலான எனக்கே, இவர்களை நாடுகடத்தப் போவதாக அதிகாரிகள் அறிவிக்கவில்லை” என்கிறார்.

சீமாந்த்ரா தெலுங்கான இடையே எல்லை போராட்டம் ! இனி இந்த இரண்டு பகுதியும் விளங்கிடும் !

தெலுங்கானாவில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போலாவரம் பல்நோக்கு நீர்பாசனத் திட்டத்திற்காக தெலுங்கானாவைச் சேர்ந்த கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வட்டங்களில் உள்ள கிராமங்களை சீமாந்திராவில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முழுஅடைப்பு போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, ஜனநாயக முறையில் தங்களது போராட்டம் நடைபெறுவதாக கூறினார். மேலும் பேசிய அவர் போலாவரம் திட்டம் ஏற்கனவே அரசால் நிராகரிக்கப்பட்ட ஒன்று என்றும் கூறினார். இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றம் அவர் குறிப்பிட்டார்.

கோவை மேயர் வேலுசாமி ஒருவழிப்பாதையில் சென்று விபத்தை ஏற்படுத்தியதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்


நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் பல்லடம் ஒன்றிய, நகர பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க பல்லடத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார். பல்லடம் அருகிலுள பணப்பாளையத்தில் துவங்கிய நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தில் எம்.பி. நாகராஜன், மேயர் செ.ம.வேலுசாமி, பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களின் வாகனங்களில் சென்றனர்.அப்போது, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றும்,  பல்லடம் அருகிலுள்ள தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் வசித்துவரும் சந்திரசேகரன் (வயது-30) என்பவர் பல்லடம்-திருப்பூர் சாலையிலுள்ள வெட்டுபட்டான்குட்டை என்ற இடத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது சிவப்பு சுழல் விளக்குப் பொருத்திய வி.ஐ.பி. வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். சந்திரசேகரன் மீது மோதிய கார் விபத்து நடந்ததை தெரிந்தும், அங்கே நிற்காமல் சென்றுவிட்டது.

விஜயகாந்த் : மோடிவீட்டு வாசலில் பிரேமாவுக்கு அல்லது சுதீசுக்கு பதவி வேண்டி தவம் இருக்கிறார் !

தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை, கட்சியில் தக்க வைக்கும் கடைசி கட்ட முயற்சியில், விஜயகாந்த் இறங்கியுள்ளார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக, மூன்றாம் நாளாக அவர் டில்லியில் காத்திருக்கிறார்.<லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு, தி.மு.க., - -காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பு இருந்தும், பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தது. பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்றாக தமிழகத்தில் உருவானது.இக்கூட்டணிக்கு, தமிழக மக்களிடம் ஆதரவு கிடைக்கும் என, நம்பியே, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இந்த கூட்டணியின் வெற்றிக்காக, தமிழகம் முழுவதும் பிரசாரத்துக்காக சுற்றி வந்தார். தன் கட்சி சார்பிலும், 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, தீவிர பிரசாரம் செய்தார்.ஆனால், தே.மு.தி.க.,விற்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைக்கவில்லை. தே.மு.தி.க.,வின், 10 வேட்பாளர்கள் 'டிபாசிட்' இழந்தனர்.இதனால், கட்சியினர் மத்தி யில் பெரும் சோகம் நிலவுகிறது.தங்கள் எதிர்காலத்தை நினைத்து, குழப்பத்துடன் உள்ளனர்.ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், விஜயகாந்த் அமைதி காத்து வருகிறார். தோல்விக்கான காரணம் குறித்து ஆராய்வதற்கு, இதுவரை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தையும் அவர் கூட்டவில்லை. கட்சி வேகமாக கரைவதால் அதற்கிடையில் ஏதாவது பண்ணியாகணும், கட்சியைநல்ல விலைக்கு  விற்கவும்  தயார் ?

முரளி மனோகர் ஜோஷி பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார் ! born in a Brahmin family

மூத்த பாரதிய ஜனதா கட்சி தலைவரான முரளி மனோகர் ஜோஷி நேற்று
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அமைச்சராக நியமிக்கப்படலாம் என அரசல் புரசலாக தகவல் கசிந்துள்ள நிலையில் அவர் மோடியை சந்தித்து பேசியுள்ளது அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடியின் அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு துறை முழு நேர அமைச்சருக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது.2 g ஸ்பெக்ட்ரம் மூலம் 1760000 கோடி  இலாபம் வந்திருக்கும் என்று ஜேபிசி மூலம் கதை  அளந்து  பின் பம்மிக்கொண்டே இருக்கும் நேரமையாளன் இவரே ம்ம்ம் ஆனால் பார்பன உயர்ஜாதி மீடியாக்கள் எல்லாம் அதையே திருப்பி திருப்பி ரிப்பீட் அடிச்சு என்னன்ன கூத்தெல்லாம் நடக்கிறது

1,200 ஆண்டுகளுக்கு முந்தைய tablet Computer போன்ற பொருள் துருக்கியில் கிடைத்துள்ளது

துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு
முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர். இது டேபிளட் கம்யூட்டருக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல் நகர் அருகே உள்ள யேனிகாபி பகுதியில்,தோண்டி எடுக்கப்பட்ட பழமையான 37 கப்பல் சிதைவுகளில்  ஒன்றில் இருந்து  இந்த பொருள்  கண்டறியப்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தியோடோசியஸ் துறைமுகம்,  பைசண்டைன் பேரரசர் ஆட்சிக் காலத்தில்  இது நகரின் முக்கியமான வணிகதுறைமுகமாகவும் விளங்கி வந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து தற்போது கண்டறியப்பட்ட இந்த மரத்திலான பொருளானது, மரச்சட்டங்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு  ”7 இன்ச்”கள் கொண்டதாகவும் நவீன டேபிளட் கம்யூட்டர் போன்று காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் திண்ணமாக காணப்படுகிறது. உத்தேசமாக இதை கப்பல் கேப்டன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

புதன், 28 மே, 2014

பெங்களூர் பொறுக்கி போலீஸ் – இதுதாண்டா ஐபிஎஸ் !

கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத்ரவீந்திரநாத் கடந்த மே 26-ம் தேதி காலை 9 மணிக்கு பெங்களூரு கன்னிங்ஹாம் சாலையில் உள்ள ஒரு காபி ஷாப்பிற்கு செல்கிறார். அங்கிருந்த இரு இளம் பெண்களை ஆபாசமாக தனது செல்பேசியில் படம் பிடித்துள்ளார்.
டிசம்பரில் டெல்லியில் ஓடும் பேருந்தில் நிருபயா என்ற பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளான பிறகு நாடு முழுக்க பாலியல் அத்துமீறலுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. ஆனால் எந்த சட்டம் வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் காவல்துறையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், பல சமயங்களில் அவர்களே குற்றவாளிகளாக இருக்கையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்படுவதையும் காணத் தவறி விடுகிறார்கள். அதுவும் குற்றவாளி ஒரு உயரதிகாரி எனில் கேட்கவும் வேண்டுமா என்ன?

கூடுதல் காவல்துறை தலைமை அதிகாரி (ADGP) பி. ரவீந்திரநாத்

புதையல் ! மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தை கைது

 துறையூர்: திருச்சி அருகே வீட்டில் புதையல் இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி, மாணவியை நரபலி கொடுக்க முயன்ற தந்தை, சித்தி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சாமியார் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அடுத்த கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். ரவிச்சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ராணி (40) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு சங்கீதா, பானுபிரிய £(16) என இரு மகள்கள். சங்கீதாவுக்கு திருமணமாகிவிட்டது. பானுபிரியா மேட்டுப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்,1 முடித்து விட்டு தற்போது, பிளஸ் 2 செல்கிறார். கோடை விடுமுறைக்காக பானுப்பிரியா ஈரோட்டில் உள்ள தனது மாமா வீட்டுக்கு சென்றிருந்தார்.

மோடி அமைச்சரவையில் உள்ள 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவை

டெல்லி: மத்திய அரசில் புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களில் 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 45 மந்திரிகள் உள்ளனர். இவர்களில் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் தனிபொறுப்பு உள்ள இணை அமைச்சர்களாகவும் மற்றவர்கள் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பு ஏற்றுள்ளனர். மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள பிரகாஷ் ஜாவேத்கர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எந்த அவையிலும் உறுப்பினர்களாக இல்லை. விரைவில் இவர்கள் ஏதேனும் ஒரு மாநிலத்திலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இவர்கள் தவிர மற்ற 44 அமைச்சர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் ஆய்வு செய்து சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி மோடி அமைச்சரவையில் உமாபாரதி, பஸ்வான் உள்பட 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 7 பேர் மீது மிகவும் சீரியசான வழக்குகள் உள்ளது.

பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !

பாசிசம் பெற்றுப் போட்ட இந்துமதவெறியர்களுக்கு ஜனநாயகத்தின் வாசனை அறவே பிடிக்காது.
பால்தாக்கரே மரணம் கைது
சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் கைது செய்யப்பட்ட பெண்கள்.
2012 நவம்பரில், சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்த போது, ‘இதற்காக ஒரு பந்த் தேவையா’ என முகநூலில் எழுதியதற்காகவும், அதனை ‘லைக்’ செய்ததற்காகவும் மும்பையை சேர்ந்த ஷாகின் தாதா மற்றும் ரேணு என்ற இரு இளம் பெண்களின் மீது 66A சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டதுடன் மட்டும் நில்லாமல் ஷாகினின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை ஒன்றும் சிவசேனா கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.

பிறந்த குழந்தைகளுக்கு மோடியின் பெயரை பலாத்காரமாக வைக்கும் பாஜக குண்டர்கள் ! பெற்றோர் போலீசில் புகார் !

ஸ் – அதி இனிப்பும், உயர் குளிரும் கொண்ட உறைந்த பனிக்கூழ் கட்டி, கோடை காலத்தில் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த பண்டம். விரைவில் உருகும் பொருள் என்றாலும் குழந்தைகள் அதிகம் அடம்பிடிக்கும் தீனியும் கூட.
ஆனால் மீடியாக்களின் தயவில் படையெடுக்கும் காவி ஐஸ்?
எஸ்.ஏ.கிருஷ்ணா
குழந்தைக்கு பெயர் சூட்டிய பா.ஜ.கவின் எஸ்.ஏ.கிருஷ்ணா
“நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே” என்ற திருவிளையாடல் டிஎம்எஸ் பாட்டை உண்மையென நம்பும் பக்தர்கள் இப்போதுமிருக்கிறார்கள். ஒருக்கால் அந்த உண்மையை ஏற்றுக் கொண்டு மனித இதயங்கள் சில மணித்துளிகளுக்கு துடிப்பை நிறுத்தினால் சங்கூதுவதற்கு காக்காய் கூட இருக்காதே?
மோடி பிரதமராக பதவியேற்ற பிரம்ம முகூர்த்த நேரத்தில், உலகம் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறது. இதையெல்லாம் ஏதோ அறிவியல் உண்மை போல சொல்லும் அவலத்தில் வினவு இருக்கிறது.

Kashmir அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவை ரத்து செய்ய திட்டமா?

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டத்தின் 370–வது பிரிவு வகை செய்கிறது. அந்த பிரிவை நீக்க வேண்டும் என்பது பா.ஜனதாவின் கொள்கையாக கருதப்படுகிறது. ஆனால், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், அப்பிரிவை நீக்கக்கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் அலுவலக ராஜாங்க மந்திரியாக நேற்று பொறுப்பு ஏற்ற ஜிதேந்திர சிங் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டது. அவர் காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இருந்து முதல்முறையாக எம்.பி. ஆனவர் ஆவார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இந்த பிரச்சினையை, பா.ஜனதா, தொழில்முறையாக அணுகி வருகிறது. காஷ்மீரில் நிறைய சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது’’என்று  கூறினார்.

பெரம்பலூர் போலீஸ் விசாரணைக்கு சென்ற வாலிபர் கொலை !

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குன்னம் வாலிபர் மர்மான முறையில் இறந்த வழக்கில் மதுரை உதவி கமிஷனர், திருச்சி இமிகிரேசன் எஸ்ஐ உள்பட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் 19 ஆண்டுகளுக்குப்பின் கைது செய்தனர்.பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மோகன் என்பவரின் அரிசி ஆலையில் அந்தூரை சேர்ந்த பாண் டியன் என்பவர் வேலை செய்து வந்தார். மோகனின் மகள் செல்வராணிக்கும், பாண்டியனின் தம்பி செல்லதுரைக்கும் காதல் ஏற்பட்டது.இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் கடந்த 1994, ஆகஸ்ட் மாதம் வீட் டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றனர். இதுகுறித்து மோகன், குன்னம் போலீசில் புகார் அளித்தார். அப்போது பாடாலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் காந்தி. இவர் கூடுதலாக குன்னம் போலீஸ் நிலையத்தையும் கவனித்து வந்த நிலையில் மாயமான இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

300 மாணவிகள் இருக்கும் இடம் தெரிந்தது.. தயங்கும் நைஜீரிய ராணுவம் !

அபுஜா: கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கிறோம் எனப் போராடி அவர்களை தீவிரவாதத்திற்குப் பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என நைஜீரிய ராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு பள்ளி மாணவிகள் சுமார் 300 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் சுமார் 53 மாணவிகள் தப்பி வந்து விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் மீதமுள்ள 247 மாணவிகள் இன்னமும் தீவிரவாதிகள் வசம் உள்ளனர். 300 மாணவிகள் இருக்கும் இடம் தெரிந்தது.. அதிரடி மீட்பு பணியில் இறங்க தயங்கும் நைஜீரிய ராணுவம் கடத்தப்பட்ட மாணவிகளை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக தீவிரவாதிகள் எச்சரித்திருந்தனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா ஏன் விழாவில் பங்கு பற்ற வில்லை ? Bangladesh and Narendra Modi: Hopes and fears !

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வங்காளிகளை வெளியேற்றுவேன் என்று தேர்தலில் வாக்குவேட்டை ஆடியதன் பலனை இனி அனுபவிக்க வேண்டும் போல் தெரிகிறது. பங்களாதேசில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோஷத்திற்கு மோடி தூபம் போட்டு விட்டார். இதன் காரணமாகத்தான் பங்களாதேஷ் பிரதமர் மோடியின் வரவேற்பை புறக்கணித்தார் என்று நம்புவதற்கு வலுவான காரணம் உண்டு, பதவிக்கு வருமுன்பே கொழுத்தி விட்ட வாய்கொழுப்பு .
When Bangladesh media ran reports that Narendra Modi wants to set up a separate department in the
Home Ministry to combat "infiltration", it provoked furious reactions with many suggesting a change of regime in Dhaka. "Neither Hasina nor Khaleda can handle someone like Modi," said a tweet. Said another: "Let us also throw out the five lakh (500,000) Indians who work in Bangladesh, many on mere tourist visas." For many in Delhi, this may be news but Indian remittances from Bangladesh has grown over the years with a flow of technical manpower to that country. "Let Modi throw out India's first lady who hails from our country," said another tweet, referring to Subhra Mukherjee's ancestral village in Narail which her husband, President Pranab Mukherjee, visited during his 2013 Bangladesh tour.
One hopes Modi, a Twitter enthusiast, should have seen these tweets to understand how the "India factor" plays out in Bangladesh. While both Prime Minister Hasina and Opposition Bangladesh Nationalist Party (BNP) chief Khaleda Zia called up Modi to congratulate him and Hasina invited him to visit Dhaka, at a popular level, there seems to be considerable unease with Modi for the 2002 Gujarat riots and his recent threats to illegal migrants from Bangladesh to "pack up and leave".

செய்திகளும் நீதிகளும் ! வினவின் முத்தான பன்ச் டயலாக்குகள் ! நாமளும் விடுவோம்ல ?

செய்தி:  மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு அறிவித்த முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, கோரக்தாம் விரைவுவண்டி விபத்தில் இறந்தவர்களுக்கு 2 இலட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்குமாறு உத்திரவிட்டார்.
நீதி: மக்களிடம் நிலவிய காங்கிரசு வெறுப்பினால் விபத்து போல வெற்றிபெற்றவர், ஒரு ரயில் விபத்திற்கு நிவாரணம் வழங்கியது தற்செயலானதுதான். ஆனாலும் முதலிலேயே இப்படி ஒரு துக்க அறிவிப்பு வருவது இந்து மத தருமத்தின்படி ஏதோ ஒன்றின் கெட்ட சகுன அறிகுறியில்லையா?

செய்தி: பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் அலுவலகத்தின் தலைவராக, பிரதமர் அலுவலக முதன்மை செயலராக, உ.பி.,யை சேர்ந்த நிர்பேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி: ஹார்வர்டில் படித்துள்ளதால் அமெரிக்க விசுவாசமும், டிராய் ஆணையத்தில் தலைவராக பணியாற்றியுள்ளதால் முதலாளித்துவ அடிமைத்தனமும் கொண்ட மிஸ்ரா, தெரிவு செய்யப்படவில்லை என்றால்தான் அது செய்தி.

செய்தி: மோடி தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்திற்கு உறுதி அளிப்பதாக இருக்கும், அரசை விமர்சிக்க சுதந்திரம் அளிப்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது, என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கையில் மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
நீதி: மோடியை இணையத்தில் விமரிசத்தார்கள் என்று கோவாவிலும், பெங்களூருவிலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மேற்கண்ட அறிவிப்புக்கு முன் நடந்தது என்று யாராவது நிம்மதியடைய முடியுமா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 70% பேர் உயர்சாதி பார்ப்பனராக உள்ளனர்

 டான்சி வழக்கில் ஜெயலலிதா செய்தது கிரிமினல் குற்றம் என்று ஒத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் அவரை இதற்காக தண்டிக்க முடியாது எனக் கூறி, ஜெயலலிதாவே கழுவாய் தேடிக்கொள்ள வேண்டும் எனத் தீர்ப்பளித்த அதிசயம் வேறு எந்த நாட்டிலும் நடக்க முடியாதது
திருச்சி பகுதி புதிய ஜனநாயகம் வாசகர் வட்டம் 21.05.2014 புதன்கிழமை மாலை 7 மணியளவில் பு.ஜ. விற்பனைக்குழு தோழர் சேகர் தலைமையில் திருச்சி ஸ்ருதி மஹாலில் நடைபெற்றது. இதில் பல வாசகர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை கூறினர். ஒரு பேராசிரியர், “நான் பாடம் நடத்தும் போது பு.ஜவில் படித்த கட்டுரைகளை எனது மாணவர்களுக்கு கூறுவேன். அவர்களிடமும் இப்பத்திரிக்கையை கொடுத்து படிக்க வைப்பேன். ஒரு ஆங்கில நாளிதழில் அருந்ததிராய் கூறியது என் நினைவிற்கு வருகிறது. பத்திரிக்கைகளின் 90% லாபம் விளம்பரங்களின் மூலம்தான் என்று அவர் கூறியிருந்தார். ஆனால் பு.ஜ எந்த விளம்பரங்களும் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக வருவது ஆச்சரியமாக இருக்கிறது. பு.ஜ.படித்துதான் அரசியல் கற்றுக் கொண்டேன். இதுவரை தேர்தலில் ஓட்டுப் போடவில்லை. எனது மாணவர்கள் சிலரையும் தேர்தலை புறக்கணிக்க செய்துள்ளேன்” என்றார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் விவாதத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். வாசகர்களின் கேள்விகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

திமுகவின் வன்னியர் Belt ஒட்டு வங்கியில் பெரும் சரிவு ! ஸ்டாலின் வன்னிய விரோதம் ? கடிதம் எழுப்பும் கேள்வி?

சமீப காலமாக, தி.மு.க.,வில் வன்னியர்கள் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். அதனால் தான், வட மாவட்டங்களில் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இதை சரி செய்யவில்லை என்றால், கட்சியை வட மாவட்டங்களில் தூக்கி நிறுத்த முடியாது' என, வட மாவட்டத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர், கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதம், தி.மு.க., தலைமையை நிறைய சிந்திக்க வைத்திருப்பதாக, தி.மு.க., வட்டாரங்களில் தகவல் பரவி இருக்கிறது.<இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்களில் கூறியதாவது:
அந்த கடிதங்களில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களை படித்து விட்டு, கட்சியின் தலைவர் கருணாநிதி, வெகுவாக ஈர்க்கப்பட்டு விட்டார். கடிதத்தை உதவியாளர்களிடம் கொடுத்து, கட்சியின் முக்கியத் தலைவர்கள் வந்தால், படித்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

Congress: கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்கவில்லையே! கவர்ச்சியானவர் ?

Before finding modelling stardom, she worked as a waitress in macdonalds.
டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சரான ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு கூட படிக்காதவர் என்று காங்கிரஸ் கட்சியின் அஜய் மக்கான் ட்விட்டரில் பதிவு போட்டு புதிய சர்ச்சையை உருவாக்கிவிட்டிருக்கிறார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து பா.ஜ.க சார்பில் அமேதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் ஸ்மிரிதி இரானி. இவர் மத்திய கல்வி மற்றும் மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.  இவர் குறித்து தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜய் மக்கான், கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இரானி பட்டதாரி கிடையாது என்பது தேர்தலின் போது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் இருந்து தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்காத வாரிசு பட்டியல் !

அரசியல் தலைவர்களின் வாரிசுகள் முதல்வராக, அமைச்சர்களாக
பதவியேற்பது இந்தியாவில் வழக்கமான ஒன்று. கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் சச்சின் பைலட், அகதா சங்மா, வாசன், ஜோதிராதித்யா சிந்தியா, புரந்தேஸ்வரி, மிலிந்த் முரளி தியோரா ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால் இம்முறை மோடி அமைச்சரவையில், ஒரே ஒரு வாரிசுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திர மோடி, ராகுலை 'இளவரசர்' என அழைத்தார். வாரிசின் கையில் தான் ஆட்சி நடக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். சொன்னது போலவே வாரிசு யாருக்கும் அமைச்சரவையில் மோடி இடமளிக்கவில்லை.யார் அந்த ஒரே வாரிசு: முன்னாள் கப்பல்துறை அமைச்சர் வேத்பிரகாஷ் கோயல் மகன், பியூஸ் கோயல், நிலக்கரி மற்றும் எரிசக்தி துறை இணையமைச்சராக பதவியேற்றுள்ளார். வாரிசாக இருந்தாலும் 49 வயதான இவர், 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்.

செவ்வாய், 27 மே, 2014

வாட்ஸ் அப்’-பில் மோடிக்கு எதிரான செய்தி: பெங்களூரில் மாணவர் கைது

நரேந்திர மோடி பற்றி அவதூறாக ‘வாட்ஸ் அப்'-பில் குறுஞ்செய்தி அனுப்பிய கர்நாடக மாணவரை சைபர் கிரைம் போலீஸார் பெங்களூரில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெல்காம் மாவட்டம், பட்டத்தக்கலை பகுதியைச் சேர்ந்தவர் சையித் வக்காஸ் பர்மாவர் (24). இவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவருடைய தந்தை ஷமிமுல்லா பர்மாவர் கர்நாடகாவில் பரவலாக அறியப்பெற்ற உருது கவிஞர். மக்களவைத் தேர்தலின் போது வக்காஸ் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவாளராக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே 16-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானபோது வக்காஸ் தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார். பாஜகவின் பிரச்சார ஸ்லோகனான “இதுதான் சிறந்த தருணம்… மோடியை தேர்ந்தெடுங்கள்” என்பதை, “இது தான் சிறந்த தருணம்… மோடிக்கு இறுதி அஞ்சலி செலுத்துங்கள்” என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.போயும் போயும் ஒரு சிறுவனின் குறுஞ்செய்திக்கு பயப்படும் அளவு  பலவீனமாகவா இருக்கிறார்கள் ? ம்ம் அதிசயம் ஆனால் உண்மை !

முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமான சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி-

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முசாபர்நகரில் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுமோசமான மத வன்முறைகளுக்கு காரணமாக இருந்த சஞ்சீவ் பலியான் மத்திய அமைச்சராக்கப்பட்டிருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு முசாபர்நகரில் மத மோதல்கள் நிகழ்ந்தன. இதில் மொத்தம் 67 பேர் பலியாகினர். சுமார் 51 ஆயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டு இன்னமும் கூட முகாம்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.  மோதலுக்கு காரணமானவர்கள் இந்த மதமோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சஞ்சீவ் பாலியான் முசாபர்நகர் தொகுதியிலும் பிஜ்னோர் தொகுதியில் பரதெந்து சிங்கும் போட்டியிட்டு வென்றனர். இவர்களில் சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. காயங்கள் கிளறிவிடப்படுகிறது.. இது குறித்து கருத்து தெரிவித்த முசாபர்நகர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், எங்களது காயங்களை மீண்டும் கிளறிவிடுவது போல் இருக்கிறது சஞ்சீவ் பாலியானுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தது.. கலவரத்திற்கு பரிசு கொடுக்கும் பாஜாகவின் பாரம்பரியம் தொடர்கிறது,

Amway ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கைது

ஹைதராபாத்: அமெரிக்காவில் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களை தயாரிக்கும் பிரபல நிறுவனமான ‘ஆம்வே'யின் இந்திய கிளை தலைவரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் வாயிலாக, தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னி-யை ஆந்திர மாநில போலீசார் குர்கான் நகரில் திங்களன்று கைது செய்தனர். ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் கைது ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் இவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கர்நூல் மாவட்ட கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படுகிறார். இதேபோன்ற முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கேரள போலீசாரும் இவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி புறக்கணிப்படுவதாக ஆதரவாளர்கள் போர்க்கொடி ! ஆஹா நன்னாருக்கு பேஷா பண்ணுங்கோ !

டெல்லி: பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர்
ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு பதவி ஏதும் வழங்கப்படாததால் அவர்களது ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாக கருதப்படும் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி உள்ளிட்டோரும் பதவி ஏற்றனர். ஆனால் கட்சியின் மூத்த மற்றும் முன்னணி தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோருக்கு பதவிகள் உண்டா இல்லையா என்ற தகவலே இல்லையென அவர்களது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மரியாதைக்குரிய முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்திருந்தாலும், அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதாண்டா ஆர் எஸ் எஸ் பாணி  ஒட்டகத்துக்கு இடம் கொடுத்துவிட்டு குத்து குடையுதுனா?

மோடி பதவியேற்பு விழாவில் லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நரேந்திர மோடி தலைமையிலான
மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா, தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச். ராஜா உள்ளிட்டோரும் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக, தேமுதிக நீங்கலாக உள்ள பிற கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச கலந்து கொண்டதையடுத்து, இந்நிகழ்வை புறக்கணித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தில்லியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினார். அதே சமயம், மற்றொரு கூட்டணி கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, இளைஞர் அணித் தலைவர் சுதீஷ் ஆகியோர் திங்கள்கிழமை காலை 8.20 மணி விமானத்தில் சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டனர். ஆனால், அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு கடைசிவரை வரவில்லை.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு 10 நாட்கள் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் வழக்கு தொடர்பான சிவில் விவகாரங்கள் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.< இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதிகள் சவுகான், ஏ.கே.சிக்ரி அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லெக்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்றும், அந்த வழக்கு முடியும் வரை சொத்துக் குவிப்பு வழக்கிற்கு தடை விதிக்காவிட்டால் அது பெரிய அளவுக்கு முன்னனுமானங்களுக்கு இட்டுச் செல்லும் என்றும் வாதாடினார்.

மோடி பதவியேற்பு: ‘சார்க்’ தலைவர்கள் பங்கேற்பு - புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்கிறார் நவாஸ் ஷெரீப்

பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சி யில் சார்க் அமைப்பைச் சேர்ந்த
நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சார்க் (தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பூடான் பிரதமர் லியோன்சென் ஷெரீங் டோப்கே, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய், நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சார்பில் நாடாளுமன்றத் தலைவர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

மனம்: ஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல் ! அக்கிநேனு குடும்பத்தின் கனவு திரைப்படம்

பெற்றோரின் இளம் வயது ரொமான்ஸை பிள்ளைகள் காணும் சந்தர்ப்பம் நம் சமூகத்தில் குறைவு. நமக்கு நன்கு நினைவு தெரிகிறபோது அப்பாவுக்கு காதோரத்தில் நரையும், பின் தலையில் சொட்டையும் விழுந்துவிடுகிறது. தளர்ந்துபோன அம்மா மூட்டுவலியால் அவதிப்படுகிறார். இரத்த அழுத்தம் சோதிக்க அடிக்கடி மருத்துவரிடம் போகிறார். குடும்பப் பிரச்சினைகள் காரணமாக இருவரும் இணக்கமாக பேசிக்கொள்வதை காட்டிலும் ஒருவர் மீது ஒருவர் ’சுள்’ளென்று எரிந்துவிழும் காட்சிகளைதான் அதிகம் காண நேரும். இளம் வயது அம்மாவும், அப்பாவும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டு மரத்தை சுற்றி ‘டூயட்’ பாடுவதை அவர்கள் பெற்ற குழந்தைகள் காணக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?

சுதீசுக்கு அல்லது பிரேமாவுக்கு ஏதாவது பார்த்து போட்டு குடுங்க சாமி ? விஜயகாந்த் குடும்பத்தோட டெல்லியில் காவடி !

மைத்துனருக்கு பதவி கிடைக்காத பட்சத்தில், மனைவிக்காவது பதவியை
பெற்று, கட்சியை காப்பாற்றும் நோக்குடன் விஜயகாந்த் டில்லி சென்றுள்ளார். மூன்று நாட்கள்? வரை அங்கு தங்கியிருந்து, காரியம் சாதித்து முடித்து சென்னை திரும்ப, அவர் திட்டமிட்டு உள்ளார்.
தமிழக அரசியலில், அ.தி.மு.க.,- - தி.மு.க.,விற்கு மாற்று சக்தி என்று கூறி வந்த தே.மு.தி.க.,வின் நிலைமை, லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின் மோசமடைந்துள்ளது. லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், 14 தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளதன் மூலம், தே.மு.தி.க.,வின் தமிழக ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் கனவும் தவிடுபொடி ஆகியுள்ளது. தமிழகத்தில், கட்சி கடுமையாக தோல்வி அடைந்துள்ளதால், முக்கிய எதிரியான அ.தி.மு.க.,வின் நெருக்கடி, அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என, தே.மு.தி.க., தரப்பில் அஞ்ச ஆரம்பித்திருக்கின்றனர்.  துணை பிரதமர் என்கிற பதவிக்கு இதுவரை மோடி அவர்கள் ஏதும் சொல்லவில்லை. அதற்குக் ஏற்ற ஒரே தமிழக பிரதி பிரேமலதாதான்..எவ்வளவு ஆசை பாருங்கள்..தனது குடும்பம்..தனது மச்சான்..தன்மனைவி..அடேங்கப்பா..அப்போ கைகாசு போட்டு கடன்காரனாகி தெருவில் நிறுத்திய கட்சிக்காரர்களுக்கு..? இருட்டுக்கடை அல்வாதானா? இவருக்கு தேர்தலில் கொடுத்த விலையே மிக அதிகம்..அப்படி இருக்க பதவி கொடுப்பார் என்று வி காந்து எதிர்பார்ப்பது..பலவீனமே. கட்சியை கலைத்துவிட்டு பா ஜ கவில் சங்கமமாவதே சிறந்த வழி. நிச்சயம் அப்போது எதிர்பார்க்கலாம்..ஆனாலும் சுதீஷோ..பிரேமாவோ..எந்த பதவி வகித்தாலும் தமிழகத்தில் எடுபடாது..கோமாளியாகத்தான் மதிப்பார்கள்..டெல்லியில் இருந்துகொண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு சென்றமுறை 11 தொகுதிகளில் 2500 ஓட்டுக்களை மொத்தமாக பெற்றதை விட இந்த முறை அணைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 3000 ஓட்டுக்களை பெற்றாரே என்றால்..கட்சியை கலைக்கவே வேண்டாம்..மோடிக்கும் சற்றே பயமிருக்கும்..குழப்பத்தில்..நிதானமில்லாதவர்..

அன்புமணிக்கு அமைச்சு கேட்டு அய்யா டெல்லியில் முகாம் !

சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் இருப்பதால், பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜ., முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அன்புமணி, ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் என்பதால், மோடி அமைச்சரவையில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி அனந்தராமன் ஆகியோருடன், டில்லியில் முகாமிட்டிருந்தார்.அமைச்சர் பதவி வேண்டி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை, பா.ம.க., குழு சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பா.ஜ.க.கூட்டணியின் தமிழக தோல்விக்கு மருத்துவரும் ஒரு காரணம் என, இவர்களை ஒருங்கிணைத்த கூவம்  மணியன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆக சொந்த கூட்டணிக்கே சூனியம் வைத்த டாக்டரின் மகனுக்கு எப்படி மந்திரி பதவி கொடுத்து அழகு பார்ப்பது? பா.ம.க வினரால் ஒவ்வொரு போராட்டத்தின் போதும் வெட்டி சாய்த்த இயற்கை வளங்களை மீண்டும் நடுவதற்கு முயற்சி எடுங்கள்.

அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம் !

கோல்கட்டா: சில ஆண்டுகளுக்கு முன்வரை, அதிகார வர்க்கத்தின்
அடையாளமாகவும், இந்திய சாலைகளின் ராஜாவாகவும் திகழ்ந்த, அம்பாசிடர் கார்களின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக, இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது. நவீன சொகுசு கார்களின் வருகையால், விற்பனை டல்லடித்ததால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.
கடந்த 1950ல், இந்தியாவில் அறிமுகமானது, அம்பாசிடர் கார். இந்திய சாலைகளின் தரத்துக்கு ஈடுகொடுத்து, இயங்கக் கூடிய வகையில் இருந்ததாலும், பிரிட்டனில் தயாராகிய 'மோரிஸ் ஆக்ஸ்போர்டு' காரைப் போன்ற வடிவமைப்பில் இருந்ததாலும், அம்பாசிடர் கார்களுக்கு, இந்தியா முழுவதும் கிராக்கி எழுந்தது.  
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. பிர்லா குடும்பம் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்து எம் பி களாகவும் இருந்தவர்கள்.அவர்களுக்கு நன்றிக் கடனாக மத்திய காங்கிரஸ் அரசு வேறு போட்டியாளர்களுக்கு கார் தயாரிப்பு லைசென்ஸ் வழங்காமல் இழுத்தடிதது. நம் ஊர் ஸ்டாண்டர்ட் மோட்டார் போன்றவற்றுக்கு உபத்திரவம் கொடுத்து அழித்தது இது அம்பாசடரின் ஏகபோக வளர்ச்சிக்குக் காரணம். பியட் ( பிரீமியர் பத்மினி ) மட்டுமே சிறிது தாக்குப்பிடித்தது. அதாவது சஞ்சய் காந்தி மாருதியைக் கொண்டுவர அடம் பிடித்தவரை. அவர் 100% இந்திய பாகங்களைக் கொண்டே கார் தயாரிக்க்றேன் என்ற பெயரில் உருவாக்கியதோ 100% அந்நிய உதவாக்கரை கார். இதற்க்கு பதில் முன்பே இந்திய கார் தயாரிப்பளர்களை வளரவிட்டிருந்தால் இப்போது அந்நிய இறக்குமதிகளைத் தவிர்த்திருக்கலாம். ஏற்றுமதிகூட செய்து உயர்ந்திருக்கலாம். காங்கிரசின் அழிவுக் கொள்கைகளுக்கு இது ஒரு உதாரணம். உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளில் நிதானம் தேவை.

திங்கள், 26 மே, 2014

மத்தியகிழக்கு நாடுகளில் கருத்தரித்து நாடு திரும்பும் பணிப்பெண்கள்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண் வேலைக்கு
செல்லும் பெண்கள் கருத்தரித்த நிலையிலும் குழந்தையுடனும் நாடு திரும்புவது அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாரியம் கூறுகின்றது.
கடந்த இரு வருட காலப்பகுதியில், கருவுற்ற நிலையிலும் குழந்தையுடனும் சுமார் 300 பெண்கள் வரை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும் சட்டப் பிரச்சினை காரணமாக அழைத்து வர முடியாதவர்களும் அதிகம் இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு வாரியத்தின் துணை பொதுமுகாமையாளர் மங்கள ரன்தெனிய கூறுகின்றார்.
இந்தப் பெண்களை பொறுத்தவரை கணவன் மனைவியாக சென்று கர்ப்பமுற்றவர்களும் அதில் இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. கூடுதலானோர் தமது தனிப்பட்ட நடத்தை காரணமாகவே கர்ப்பமடைந்தள்ளார்கள்.

காமோடி டைம் : குஜராத் படுகொலையை மோடி நடத்தவில்லை. இஷ்ரத் ஜகான் கொலையில் மோடிக்கு தொடர்பில்லை.

நம்முடைய இராணுவ வீரனின் தலையை பாகிஸ்தான்காரன் அறுத்துக் கொண்டு போகிறான், நீ அவனுக்கு சிக்கன் பிரியாணி போடுகிறாயா?” என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மன்மோகன் சிங்கை வறுத்து எடுத்தார் மோடி. “தலையறுபட்ட கோழி மாதிரி மேடைக்கு மேடை துள்ளினார்” என்றும் சொல்லலாம்.மோடியின் மேற்படி சிக்கன் பிரியாணி உரையை வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்கும் பாக்கியம் பெற்ற அமெரிக்காவில் குடியேறிய இந்து தேசபக்தர்களுக்கே பி.பி எகிறி விட்டது எனும் போது, சாமானிய இந்தியர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. மோடிக்கு தனிப்பெரும்பான்மை வழங்கி விட்டார்கள்.
இப்படி வரலாறு காணாத தனிப்பெரும்பான்மை பெற்ற ராஜாதிராஜ, ராஜ கம்பீர, ராஜகுல திலக சக்ரவர்த்தி மோடிக்கு தனது பட்டாபிஷேக வைபவத்தில் 64 தேசத்து ராஜாக்களும் பங்கேற்க வேண்டும் என்று ஒரு அல்ப ஆசை. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை வரவழைக்க அவர் படாதபாடு பட்டுக் கொண்டிருந்தபோது, நிதின் கட்காரி குறுக்கே புகுந்து கட்டையைக் கொடுத்தார்.“வாடா, வந்து பார்றா, அண்ணன் வண்டு முருகன், 7, ரேஸ் கோர்ஸ் ரோடு, டில்லி” என்று ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் பாகிஸ்தானுக்கு சவால் விட்டார்.
உடனே “நவாஸ் செரிப் இந்தியாவுக்கு போகக் கூடாது” என்று கொடி பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளில் ஒரு குரூப். “நாங்க பேசுனதெல்லாம் ச்ச்சும்மா.. ச்ச்சும்மா.. ” என்று அவிய்ங்களுக்குப் புரியவைத்து, ஷெரிப் பாயை சரிக்கட்டி ஒத்த்த்துக்க வைப்பதற்குள் “முடியல” என்ற நிலைக்கு ஆளாகி விட்டார் மோடி..

மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன்.

தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை
கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். < திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்..

தாய்லாந்து இளவரசியின் நிர்வாண காட்சிகள் இணையத்தில்

தாய்லாந்து இளவரசி ஸ்ரீராஸ்மியின் நிர்வாண வீடியோ இணையதளத்தில்
வேகமாக பரவிவருகிறது. இதனால் தாய்லாந்து மன்னர் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். தாய்லாந்து இளவரசர் மகா, உணவகத்தில் சப்பளையராக பணியாற்றி வந்த  ஸ்ரீராஸ்மி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் செல்ல நாய்க்குட்டியின் பிறந்த நாள் விழாவை தங்கள் அரண்மனையில் கொண்டாடினர். இந்த விழாவுக்கு பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

உபி கோராக்தம் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர விபத்து: 40 பேர் பலி ! பலர் படுகாயம் .

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரக்கு ரயிலுடன்,  கோராக்பூர் சென்ற கோராக்தம்
எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 20 பேர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்டது.. இந்நிலையில் 40 பேர் பலியாகியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 100க்கனக்கான பயணிகள் படுகாயம் அடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மீட்பு பணியில் ஏராளமான தீயணைப்பு படையினர், போலீஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சிசிக்கைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மும்பை : ஆளில்லா விமானம் மூலம் Pizza டெலிவரி செய்த ஹோட்டல் மீது வழக்கு

ஆளில்லா குட்டி விமானம் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு பீட்சா
விநியோகம் செய் தது தொடர்பாக, பீட்சா நிறுவனத் தின் மீது வழக்குப் பதிவு செய் துள்ள மும்பை போலீஸார், அந்நிறுவனத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கடந்த 11-ம் தேதி மும்பை யைச் சேர்ந்த ‘பிரான்ஸெஸ்கோ பிஸ்ஸாரியா’ எனும் பீட்சா நிறுவனம் ஆளில்லா குட்டி விமானம் மூலம், கடையிலி ருந்து 1.5 கி.மீ. தொலைவில் லோயர் பரேல் என்ற இடத்திலுள்ள வாடிக்கையாளரின் வீட்டில் நேரடி யாக பீட்சாவை விநியோகம் செய்தது. முதன்முறையாக இம் முயற்சியைச் செய்த அந்நிறு வனம், இதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக இணைய தளங்களில் வெளியிட்டது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் என்பதால், முன் அனுமதி பெறாமல் குட்டி விமானத்தைப் பறக்க விட்டது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். youtube இல் பார்த்துதான் நடவடிக்கை எடுத்ததாக போலீசார் தெரிவிப்பு ! பேசாம போலீஸ் இலாகாவை மூடிவிடாலாம் நீதிமன்றங்களே நேரடியாக youtube அல்லது facebook பார்த்து .....

மோடியின் நோ 75 ப்ளஸ்' ரூல் அத்வானியையும் ஜோஷியையும் கழற்றி விட கண்டுபிடிக்கப்பட்ட ரூல்ஸ் ?

டெல்லி: 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்று மோடி அரசு அறிவித்துள்ளது. மோடியின் அமைச்சரவையில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாஜ்பாய் அரசில் மனிதவளத் துறை அமைச்சராக இருந்த 80 வயதாகும் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு மோடி அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. அத்வானிக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் செய்த மோடியின் 'நோ 75 ப்ளஸ்' ரூல் மேலும் உள்துறை அமைச்சர், துணை பிரதமர் ஆகிய பதவிகளை வகித்த 86 வயதாகும் எல்.கே. அத்வானிக்கும் மோடி அமைச்சரவையில் இடம் இல்லை. மோடியின் அமைச்சர்களில் நஜ்மா ஹெப்துல்லா(74), கல்ராஜ் மிஸ்ரா(73) ஆகியோரைத் தவிர மீதமுள்ள அனைவரும் 70 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 75 வயதுக்கு மேற்பட்ட பாஜக தலைவர்கள் யாரும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.
tamil.oneindia.in

தமன்னாவுக்கு அதிக முக்கியத்துவம் ஏன் ? பிபாசா பாசு கோபம் !

தன்னை விட தமன்னாவுக்கு அதிக
சீன் வைத்ததற்காக கோபப்பட்டிருக்கிறார்
சீனியர் நடிகை பிபாஷா பாசு.இந்தியில் ‘ஹிம்மத்வாலா’ என்ற படத்தில் நடித்த தமன்னா அடுத்து ‘ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருடன் இஷா குப்தா, பிபாஷா பாசு ஆகியோரும் நடிக்கின்றனர். ‘இப்படத்தில் இயக்குனர் சாஜித் கான் தன்னைவிட தமன்னாவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் தமன்னாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். என்னை புறக்கணிக்கிறார் என்று புகார் கூறி பட குழுவினரிடம் புலம்பி வருகிறார் பிபாஷா பாசு. இவரது புலம்பலை இயக்குனர் சாஜித் கான் கண்டு கொள்ளவில்லையாம். ‘ஹிம்மத்வாலா’ படம் தமன்னாவுக்கு பாலிவுட்டில் வெற்றி படமாக அமையவில்லை. ஹம்ஷகல்ஸ் பட வெற்றிதான் தனது பாலிவுட் மார்க்கெட்டை நிர்ணயிக்கும் என்பதால் இப்பட புரமோஷன்களில் தவறாமல் கலந்துகொள்கிறாராம் தமன்னா. பிபாஷா பாசுவின் குற்றச்சாட்டு பற்றி தமன்னாவிடம் கேட்டால் அவரும் அதுபற்றி கண்டுகொள்ளாமல் நழுவிச் சென்றுவிடுகிறார். - See more at: tamilmurasu.org

வேலூரில் கரகாட்ட பெண் வீட்டில் ரூ.4 கோடி, நகை பறிமுதல்

வேலூர்: வேலூர் இந்திரா நகரை சேர்ந்தவர் மோகனாம்மாள். இவர் காட்பாடி சென்னை, பெங்களூர், ஆந்திராவுக்கு போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மோகனாம்மாளின் தம்பி சரவணன் (35) தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. சரவணன் கொள்ளையடித்து கொண்டு வரும் நகைகளையும், பணத்தையும் யாருக்கும் சந்தேகம் வராதவாறு பதுக்கி வைக்கவே மோகனாம்மாள் காட்பாடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் மோகனாம்மாளுக்கும் இந்து இயக்க பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். தீவிரவாத கும்பல்கள் தங்கள் காரியங்களுக்காக செலவிடும் பணத்தை மோகனாம்மாள் போன்ற சந்தேகம் வராத நபர்கள் மூலம் கையாளலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது.

மோடியின் அமைச்சரவை விபரம் : தமிழ்நாட்டுக்கு 2 இணை அமைச்சு மட்டுமே ! பொன் ராதா. நிர்மலா சீதாராமன்

டெல்லி: மோடியின் அமைச்சரவையில் அருண் ஜேட்லிக்கு நிதி அமைச்சகம், ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை, சுஷ்மா ஸ்வராஜுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.  மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 21 இணை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. யார், யாருக்கு எந்தெந்த அமைச்சகங்கள் அளிப்பது என்பது குறித்து மோடி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் மோடியின் அமைச்சரவையில் யார், யார் இடம்பெறுகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

சிவப்பழகு விளம்பரங்கள்: உங்கள் பார்வை என்ன?

திரும்பிய திசையெங்கும் நான்கே வாரங்களில் சிவப்பழகு பெறுவது எப்படி
என்பதைப் பற்றித்தான் பலரும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எப்பாடுபட்டாவது சிவப்பு நிறத்துக்கு மாறிவிட வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெண்கள் மனதில் அந்த விளம்பரங்கள் விதைத்தபடி இருக்கின்றன. அதைப் பற்றிப் பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
அழகு க்ரீம் விளம்பரத்தில் நடிப்பதற்காக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்தது குறித்து நடிகை கங்கனா ரனாவத் பேசியவை:
அழகு பற்றி இங்கு நிலவும் கண்ணோட்டம் குறித்து என் குழந்தைப் பருவத்தில் இருந்தே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அப்படி இருக்கும் நிலையில் பிரபலமாகக் கருதப்படும் நான் இளைஞர்களிடம் என்ன மாதிரியான முன்னுதாரணத்தை உருவாக்கப் போகிறேன்? இந்த வாய்ப்பை மறுத்ததற்கு எவ்விதக் கவலையும் இல்லை. ஒரு பொதுமனுஷியாக எனக்கு பொறுப்புகள் உள்ளன.

காய்ன்ஸ் வைத்து நீர்மட்டம் பார்க்கும் சென்னிமலை இளைஞர்

சென்னிமலை அருகே உள்ள செலமகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர்
ராஜா (32). இவர் நிலத்தடி நீர் மட்டம் பார்த்து சொல்வாராம். கடந்த 18 ஆண்டுகளாக நிலத்தடி நீர் மட்டம் பார்த்து சொல்லும் இவர் இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிலத்தடி நீர் மட்ட பாயிண்டுகளை பார்த்து சொல்லி அவை போர்வெல் போடப்பட்டு அதிக அளவில் தண்ணீர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடும் வறட்சியான வெள்ளகோவில், தாராபுரம் பகுதியியில் அரசு அதிகாரிகளும் ராஜாவை அழைத்து நிலத்தடி நீர் மட்டம் பார்த்து போர்வெல் போட்டுள்ளனர்.

மோடி வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்தில் சேர்க்க பரிசீலனை !

இந்திய பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை
பள்ளிப்பாடத் திட்டத்தில் சேர்க்க மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருகிறது. தேசப்பற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமும் கொண்ட மோடியின் வாழ்க்கை வரலாறு அனைவரையும் கவர்வதாக உள்ளதாகவும் இந்த தகவல்களை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆலோசனைகள் வந்துள்ளதாகவும் அந்த மாநில கல்வி மந்திரி பராஸ் ஜெயின் தெரிவித்தார்.கூடவே  குதுபு  தீன் அன்சாரியின் படத்தையும் போடுங்கோ நன்னா இருக்கும்