![]() |
ராதா மனோகர் : அப்துல் கலாம், சகாயம், அன்னா ஹாசாரே இன்னும் பல சங்கி முகமூடிகள் காலத்திற்கு காலம் தோன்றிக்கொண்டே இருப்பார்கள்
இவர்கள் எல்லோரும் பார்ப்பன பனியா கும்பல்கள் மீது எந்த தூசியும் படிந்து விடக்கூடாது என்பதில் மட்டும் மிக கவனமாக இருப்பார்கள்
உத்தர பிரதேச முதலமைச்சார் யோகி ஆதித்தனார் போன்ற கொடூர சங்கிகளை நம்மால் அடையாளம் கண்டுவிட முடியும்
.ஆனால் இவர்கள் அந்த கொடூர சங்கிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் வெறுமையாக ஊழல் நேர்மை போன்ற ஊதுபத்திகளை மட்டும் வைத்தே,
மக்களை தள்ளி கொண்டு போய் சங்கிகளின் கொட்டைகளில் அடிமாடுகளாக கட்டிவிடுவார்கள்!
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வரை சகாயம் சகாயம் என்றொரு உத்தமன் இருந்தார் .
தமிழர்களின் கையிலிருந்த கிரானைட் தொழிலை அப்படியே மார்வாடிகளின் கைகைளில் கொண்டு போய் தாரைவார்க்கும் வரைக்கும் அவருக்கு விளம்பர வெளிச்சம் அளவு கணக்கில்லாமல் கிடைத்தது