சனி, 29 செப்டம்பர், 2012

சந்தானத்தின் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம்!

சந்தானத்தின் காட்டில் அதிர்ஷ்ட மழை பொழிவதால் 1 நாள் 2 நாள் கால்சீட் என்றால் நோ சொல்லிவிடுகிறாராம். 10 நாள் 20 நாள் என்றால் மட்டுமே கால்சீட் தருகிறாராம். இதற்கு காரணம் லம்பாக பணம் கிடைக்கும் என்பதுதான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தில்
காமெடி நடிகர்களைப் பொறுத்தவரை நாள் கணக்கில் தான் சம்பளம் கொடுப்பார்கள். சந்தானத்துக்கும் அப்படி தான். அவரது ஒரு நாள் சம்பளம் 10 இலட்சம். ஒரு படத்திற்கு தொடர்ந்து 10 நாள் நடித்துக் கொடுத்தால் அவருக்கு கிடைப்பது 1 கோடி. இது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளின் சம்பளத்தை விட அதிகம். இதனால் சந்தானம் சம்பந்தப்பட்ட காட்சிகளை 2 அல்லது 3 நாட்களில் முடிக்கவே இயக்குனர்கள் முயற்சி செய்கின்றனர். தற்போது சந்தானம் போட்டிருக்கும் இந்த புதிய நிபந்தனையினால், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என அனைவரும் கலங்கிப் போய் இருக்கின்றனர்.

நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் பறிபோகிறது- அரசு கையகப்படுத்துகிறது!

சென்னை: நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படாத மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக வழக்குத் தொடர இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வழக்கு என்ன?
மதுரை அருணகிரிநாதர், நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்ததை எதிர்த்து பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜெகதலபிரதாபன் என்பவர் தமது மனுவில், குற்ற வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று புகார் கூறியிருந்தார்.இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
விதிமீறல்- கையகப்படுத்த நடவடிக்கை

சபாநாயகர் ஜெயக்குமாருக்கு "ஆப்பு" மேயருடன் மோதல்.

  Why Speaker D Jayakumar Resigns தடாலடி பிறந்தநாள்... 'நான் சி.எம்' சவடால்.. மேயருடன் மோதல்.. ஜெயக்குமாருக்கு "ஆப்பு"! ஜெயக்குமாருக்கு தற்போதைய கிரக நிலைப்படி முதல்வராகும் வாய்ப்பு என்று ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிட உன்னிகிருஷ்ண பணிக்கரே சொல்லிவிட்டாராம்
சென்னை: தமிழக சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் இன்று ராஜினாமா செய்ததன் பின்னணியில் ஏராளமான சுவராஸ்ய தகவல்கள் இருக்கின்றன.
ஜெயக்குமாரின் ராஜினாமாவுக்கு சொல்லப்படும் காரணங்கள் குறித்து ஒரு பார்வை..
காரணம் 1- பிறந்த நாளில் 'எமகண்டம்':

எதியூரப்பாவுக்காக-காங்கிரஸ்: கதவு திறந்தது

 Congress Doors Are Open Bsy எதியூரப்பா போட்ட போடு.. பயந்து ஒடுங்கிய பாஜக தலைமை: காங்கிரஸ் விடும் தூது!

டெல்லி: கர்நாடகத்துக்கு புதிய பாஜக தலைவரை தேர்வு செய்ய இருந்த கட்சித் தலைமை எதியூரப்பா கொடுத்த மிரட்டலுக்குப் பயந்து அந்த முடிவை ஒத்தி வைத்துவிட்டது.
கர்நாடக பாஜக தலைவர் பதவியைக் கோரி வருகிறார் முன்னாள் முதல்வரான எதியூரப்பா. ஆனால், அந்தப் பதவியில் இருக்கும் துணை முதல்வரான ஈஸ்வரப்பாவுக்கு அதை விட்டுத் தர மனமில்லை.
ஆனாலும், கட்சியின் தலைமை எம்.பி. அனந்த் குமாரின் ஆதரவாளரான பிரகலாத் ஜோஷி என்பவருக்கு அந்தப் பதவியை தர முடிவு செய்தது. இது தொடர்பான முடிவை நேற்று ஹரியாணாவில் முடிவடைந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்க இருந்தனர்.

தற்கொலைக்கு முயன்ற பாக். வெளியுறவு அமைச்சர் ஹீனா

 hina attempted suicide over husband infidelity கணவரின் கள்ளக்காதலை கண்டுபிடித்தவுடன் தற்கொலைக்கு முயன்ற பாக். வெளியுறவு அமைச்சர் ஹீனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கணவர் பிரோஸ் குல்சாரின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்தவுடன் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக வங்க தேச பத்திரிக்கை பிளிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் தனது கள்ளக்காதலனான அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவை மணப்பதில் தீவிரமாக உள்ளார். இதற்கிடையே ஹீனாவின் கணவர் பற்றிய செய்தியை பிளிட்ஸ் வெளியிட்டுள்ளது. ஹீனாவின் கணவர் பிரோஸ் குல்சார் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை ஹீனா கண்டுபிடித்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த ஹீனா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அமைச்சர்கள் யாரும் பெருச்சாளிகள் பட்டியலில் இடம்பெற இல்லை!

Viruvirup
தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் விரிக்கப்பட்ட வலையில் 41 பூனைகள், 15 எலிகள் சிக்கின. “எலிகளை பிடிக்க மேற்கொண்ட நடவடிக்கையில் எலிகளைவிட அதிக எண்ணிக்கையில் பூனைகள் சிக்கியது இந்த அரசின் சாதனை” என தமிழக சுகாரத்துறை அமைச்சரின் அறிக்கை திங்கட்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நர்சிங் மாணவிகள் தங்கும் விடுதியில் எலிகளை ஒழிக்கும் பணியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அரசு வைத்தியசாலையில் இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.

கர்நாடகாவில் தமிழர்கள் பதட்டத்தில்! சில இடங்களில் தொடங்கியது மிரட்டல்!!


Viruvirupu
காவிரி நதி நீர் ஆணையம், தமிழகத்துக்கு, 9,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதை அடுத்து, கன்னட அமைப்புகள் வரும், 6-ம் தேதி பந்த் நடத்தவுள்ளன. இது அங்கு ஒருவித பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன், சில அமைப்புகளும், கட்சிகளும், தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டும், பேசியும் வருவதால், பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
கடந்த, 1991-ம் ஆண்டு, அப்போதைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா, காவிரி நதி நீர் ஆணைய இடைக்கால உத்தரவை ஏற்க மறுத்ததோடு, மாநில அளவில், பந்த் நடத்தினார். அந்த பந்த்தின் போது, தமிழர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். சாம்ராஜ் நகர், ஹெச்.டி.கோட்டே பகுதியில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தினர், மொத்தமாக கர்நாடகாவை விட்டு வெளியேறினர்.
தற்போது, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவை எதிர்த்து, கன்னட அமைப்புகள், அக்டோபர் 6-ம் தேதி, முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளன. சில கன்னட அமைப்புகள் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர் மாவட்டங்களில் வசிக்கும், தமிழ்க் குடும்பங்களை இப்போதே அச்சுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாயத் தொழிலில் வேலை செய்து வரும் தமிழர்கள், தனிமையாக வசித்து வருவதால் மிகவும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகாவில் நடக்கும் போராட்டத்துக்கு தமிழர்கள் ஆதரவளிக்கவில்லை எனில், 1991-ம் ஆண்டு கலவரம் போன்று மீண்டும் நடத்துவோம் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுதாண்டா இன்றைய நிலை!!! முதலமைச்சர் ஆனாலும் ஆவான் NTRரின் பேரன்

Mokshagnaநாளை இந்த மைனர் குஞ்சு, தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பார். நாட்டை காக்க தன் உயிரைக் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தோன்றுவார். தன் பின்னால் பெரும் படையே இருப்பதாக தொடை தட்டுவார். அனல் பறக்கும் பன்ச் டயலாக்குகளை பேசி செவிகளை செவிடாக்குவார். தெலுங்கு தேச கட்சியே தன்னுடையதுதான் என புருவத்தை உயர்த்துவார். முதலமைச்சர் கனவில் மாநிலம் முழுக்க சுற்றுலா செல்வார். ஒருவேளை முதலமைச்சர் ஆனாலும் ஆவார்.
மோக்ஷாக்னா
ன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது. பார்க்கும் போதே யாரோ குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை உணர முடிந்தது. சட்டப்படி இது தவறு. அதுவும், நள்ளிரவில் போதையுடன் அதி வேகத்தில் பயணம் செய்வது பெரும் குற்றம். எனவே வண்டியை நிறுத்தச் சொல்லி கை காட்டினார்கள். ஆனால், போக்குவரத்து காவலர்களை பார்த்த வண்டி ஓட்டுநர், முன்பை விட அதிக வேகத்துடன் நிற்காமல் சென்று விட்டார்.
உடனே தங்கள் வாகனத்தில் ஏறி, அந்த டாடா சஃபாரியை காவலர்கள் துரத்தினார்கள். கிட்டத்தட்ட 10 கி.மீ. தூரம் சென்ற பிறகே அந்த வண்டியை மடக்க முடிந்தது. பிடிபட்ட அந்த வண்டியின் எண்: AP 16 BK 1. வண்டியினுள் ஐந்து பேர் இருந்தார்கள். ஐவருமே மாணவப் பருவத்தில் இருந்து இளைஞர்களாக மாறிக் கொண்டிருப்பவர்கள். மைனர்கள். ஒருவர் பாக்கியில்லாமல் அனைவருமே குடித்திருந்தார்கள். முழு போதையில் நிற்கக் கூட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.

ஜெமினிகணேசன்: என் வாயால சொல்லக்கூடாது…”

ஜெமினிகணேசன் பேச்சில் எதைப்பற்றியும் சுலபமாக அபிப்ராயம் சொல்பவராய் இருந்தார் என்பது தான் உடனே என் மனதுக்குப் பட்ட விஷயம். இரண்டு வருடம் கழித்து  அவ்வை சண்முகியில் நடித்தார்.நான்கு வருடம் கழித்து தான் ஜுலியானாவை திருமணம் செய்தார்.

உங்க மருமகன் ஜிஜிமாப்பிள்ளை ஸ்ரீதர் ராஜன் எப்படியிருக்கார்”ஜெமினி கணேசன் சலிப்பான பதில் : “இருக்கான்…. ராசுக்குட்டியில் நடித்த ஐஸ்வர்யா பற்றி விசாரித்தார்.ஜெமினி உடனே “ அவ அம்மா லக்‌ஷ்மி … அவ … என் வாயால சொல்லக்கூடாது…”கமல்ஹாசன் மனைவிகள் பற்றி “ வாணி… ;அவனால முடியல.. இப்ப ஒன்னு கட்டியிருக்கானே.. சரிகா….என் வாயால சொல்லக்கூடாது..என் வாயால சொல்லக்கூடாது…”
 டி.வி யில் அப்போது ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வருடம் இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
என் பெரிய மாமனார் S.M.T அங்குராஜிடம் சொன்னார்

Super Singer Junior 3 வீடு வெல்லப்போவது யார்?

 http://namathu.blogspot.com/2012/10/super-singer-junior-3.html
 latenews

Super Siner Junior 3 ஆஜித் முதல் பரிசை வென்றார்

 தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வைல்ட் கார்டு சுற்று மூலம் இன்னும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டியில் முதலாவதாக வெற்றி பெருபவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 இப்பொழுது அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. நான்கு போட்டியாளர்கள் இப்பொழுது முதல் மூன்று இடங்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். இறுதிச்சுற்றில் முதலிடத்தைப் பிடித்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வெல்லப்போவது யார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.

போதிதர்மர் வாழ்கிறார் புகழ் சீனதேசம் முழுவதும் பரவிவிட்டது.


போதிதர்மர் / அத்தியாயம் 10 www.tamilpaper.net
போதிதர்மர் இறப்பதற்கு முன்பே அவரது புகழ் சீனதேசம் முழுவதும் பரவிவிட்டது. அவர் இறந்து ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் ‘சான்’ புத்த மதம் ஜப்பானை அடைந்தது. ‘சான்’, ‘ஜென்’ ஆக பெயர் மாற்றம் பெற்றது. தாமோ (Damo) தாய்சீ தருமா (Taishi Daruma) ஆனார். பெயர் மட்டுமா மாறியது? ஜென்னின் பூர்வீகமே மாறியது.
போதிதர்மர் வரலாறு பலராலும் காலப்போக்கில் சரமாரியாக பின்னப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் பின்னியதால் இன்று எது நிஜம் எது பொய் என பிரித்தறிய இயலாத குழப்பப் பின்னலாகக் காட்சியளிக்கிறது.
அதன் விளைவாக ஜப்பானியர்கள் போதிதர்மரை குறுதெய்வமாக, தெருமுனைக் கடவுளாக, நோய்நொடி போக்கும் ஆவியாக, வீரிய சக்தியளிப்பவராக இன்னும் என்னென்னமோவாக சித்தரித்து சிங்காரித்துள்ளனர். இவை சிங்காரமா சீரழிவா என்று நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான் Is It?

Director Vijay S Letter On Thaandavam Issue தாண்டவம் படத்தின் கதை என்னுடையதுதான்... அமீர் ராஜினாமா வேதனை அளிக்கிறது - இயக்குநர் விஜய்

சென்னை: தாண்டவம் படத்தின் கதை முழுக்க முழுக்க என்னுடையதுதான். இந்த விவகாரத்தில் அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார் இயக்குநர் விஜய்.
தாண்டவம் கதையின் உரிமை பிரச்சினையில் இயக்குநர்கள் சங்கமே இரண்டாக உடைந்துள்ளது.
இந்த நிலையில், தாண்டவம் படத்தின் இயக்குநர் என்ற முறையில், விஜய் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தாண்டவம் படத்தின் இயக்குனர், கதாசிரியர் என்ற முறையில் , இப்படத்ன் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்தும், அதில் நீதிமன்றம் மூலம் நியாயம் கிடைத்தது பற்றிய எனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

சேது கால்வாய்த் திட்டம் மேலும் தாமதிக்கக்கூடாது

கி.வீரமணி அறிக்கைL  2000 கோடி ரூபாய்களைச் செலவழித்த பிறகு, இராமன் பாலம் அங்கே இடிபடுகிறது என்று கூறி, மதவாத மூடநம்பிக்கையைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு உச்சநீதி மன்றத்தில் நிறுத்தச் சொல்லி வாதாடிய பார்ப்பனீயத்தின் போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது.தனது கட்சியின் இரண்டு, மூன்று தேர்தல் அறிக்கைகளில், ஏன் விரைவாக சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை மத்திய அரசு முடிக்கவில்லை என்று குற்றம் சுமத்திய அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா

சேது சமுத்திரக் கால்வாய் திட்டப் பணிகள் மீண்டும் துவக்கி நடத்திட தமிழ்நாட்டு நலன் நாடுவோரை ஒன்று திரட்டி அழுத்தம் கொடுத்து, குரல் கொடுக்க முன் வருதல் அவசியம் தேவை தேவை என்று தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நேற்று (27-9-2012) புதுடில்லியில் திருமதி சோனியா காந்தி அவர்களது தலைமையில் கூடிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A) யின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய முடிவுகளைப் பற்றி செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டப் பணிகளை மீண்டும் துவக்கி நடத்திட உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும், இது பற்றி விரைவில் மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளால் ஆயுதம் ஏந்தும் கல்லூரி மாணவர்கள்

சென்னை கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் செய்திகள், சமீபகாலமாக அதிகளவில் வெளியாகின்றன. இந்த வன்முறைக்கு பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்ப தாக, "மோதல்' மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பம் எங்கே?
பெரும்பாலான மோதல்களுக்கு, "பஸ் ரூட்' பிரச்னையே தொடக்கப் புள்ளியாக உள்ளது. குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள், பேருந்தில் "கானா' பாடி செல்வது வழக்கம்.அப்போது, மற்றகல்லூரி மாணவர்களை தரம் தாழ்த்தி, தங்கள் கல்லூரியின் புகழை பாடுவர். இதனால், அந்த பேருந்தில் இருக்கும் மற்ற கல்லூரி மாணவர்களுடன் கை கலப்பு ஏற்படுகிறது.அதே போல, ஒரே பேருந்தில், வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் செல்லும் போது, குறிப்பிட்ட கல்லூரி மாணவியரை கிண்டல் செய்யும் போது, மோதல் ஏற்படுகிறது.
மாணவர் போர்வையில்...:

கூடங்குளத்தில் வன்முறையைத் தூண்டும் உதயகுமார்:

மதுரை: கூடங்குளம் கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், "தடியடி நடத்தியதாக கூறுவது தவறு; உதயகுமார் வன்முறையை தூண்டுகிறார்,' என திருநெல்வேலி எஸ்.பி., மதுரை ஐகோர்ட் கிளையில் பதில் மனு தாக்கல் செய்தார்.
மனித உரிமைக்கான மக்கள் ஒன்றிய நிர்வாகி மார்க்ஸ், "கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். மாவட்ட நீதிபதி தலைமையில், விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார். வக்கீல் வாஞ்சிநாதன், "காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி விசாரிக்க உத்தரவிட வேண்டும்,' என மற்றொரு மனு தாக்கல் செய்தார். மனுக்கள் நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் படப்பிடிப்பு

மலையாள நடிகை சுவேதா மேனன் தமிழில் ‘நான் அவன் இல்லை, ‘சாது மிரண்டால், ‘அரவான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.சுவேதாவுக்கும் மும்பை பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் சுவேதா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்கு சேர்த்தனர்.நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பிணி பெண் நடவடிக்கைகள், குழந்தை பெறும் போது அவர் தாங்கும் வலிகள் பற்றிய கதையாக ‘களிமண்ணு’ என்ற மலையாள படம் உருவாகி வருகிறது.

சேது சமுத்திர திட்டத்தை கையில் எடுத்த திமுக!

டெல்லி: டீசல் விலை உயர்வு, சமையஸ் கேஸ் சிலிண்டர்கள் மீதான மானியத்துக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது.
அதே நேரத்தில் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு திமுக ஒப்புதல் வழங்கியது. இதற்குப் பிரதிபலனாக சேது சமுத்திரம் திட்டத்தை உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.

கவர்ச்சி இல்லாவிட்டால் பிசினஸ் டல்லடிக்கிறது

இளமை ஊஞ்சல் படத்தை இயக்குகிறார் அரிராஜன். அவர் கூறியதாவது: சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பு உண்டு என்கிறார்கள். அந்த பார்முலா 50 சதவீதம்தான் வேலை செய்கிறது. நட்பு, காதல், குடும்பம் என எந்த கதையாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தால்தான் பிசினஸ் பேச வருகிறார்கள். இதை அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டேன்.

சேரி சுற்றுலா! குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது

மும்பையின் தாராவி
மேற்கத்திய சுற்றுலா பயணிகளில் பலர் பாரிசின் ஈபல் கோபுரம், நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை, ஆக்ராவின் தாஜ்மகால் இவற்றில் கிடைக்காத புதிய உணர்வை தேடி ஏழ்மை பீடித்துள்ள நகர்ப் பகுதிகளை தேடி போகிறார்கள் என்கிறது பிபிசி உலக சேவையின் பிசினஸ் டெய்லி.
ஆறு வருடம் முன்பு கிருஷ்ணா புஜாரி என்பவரும் அவரது பிரிட்டிஷ் நண்பர் கிரிஸ் ரே என்பவரும் ரியாலிட்டி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய சேரியான மும்பையின் தாராவி பகுதியை சுற்றிக் காட்டும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
“இதை வறுமை என்று மட்டும் நினைத்தால் அது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும், ஆனால் இந்த வறுமையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது” என்கிறார் பூஜாரி.

கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’

BJP ஆட்சியில் நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள்: சிபிஐ விசாரணை ஆரம்பம்

கடந்த 1993-2004ம் ஆண்டுகளில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பயனடைந்ததாகக் கூறப்பட்ட 24 தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது. இதில் பாஜக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் (1999-2004) நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரிக்கப்பட உள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் ஆரம்பித்து 2004ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 24 நிறுவனங்கள் பயனடைந்துள்ளதாக வந்த புகாரை மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் ஆய்வு செய்தது.
இந்த ஆணையத்தின் உத்தரவையடுத்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை நேற்று தொடங்கியது.

சாக்கடைக் கொலைகள்!

நகர-சுத்தி-தொழிலாளர்கள்கடந்த ஒன்றரை ஆண்டில் க‌ழிவுநீர் அடைப்பை அக‌ற்ற‌ முனைந்த 15 பேர் இற‌ந்துள்ள‌தாக‌வும், அவ்விப‌த்தில் பெரும்பான்மை சென்னையில்தான் ந‌ட‌ந்த‌தாக‌வும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
26.9.2012 புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சென்னை பெரம்பூர் மதுரைசாமி மடம் தெருவில் உள்ள கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்க முயன்ற ஒப்பந்த தொழிலாளி திருவேற்காடு சங்கர் (45) விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற 68வது வார்டுக்கான மெட்ரோ குடிநீர் வாரிய பொறியாளர் வெங்கட்ராமன் சாக்கடை குழியில் விழவே அவரும் மயக்கமானார். உடன் வந்த ஒப்பந்த தொழிலாளிகள் உதவிக்கு பலரை அழைத்தனர். எனினும், செம்பியம் தீயணைப்புத்துறையினர் வந்த பிறகுதான் இறந்தபோன அவர்களது உடல்களை மீட்டனர்.

செவ்வாய் கிரத்தில் நீரோடை இருந்த தடம்: கண்டுபிடித்தது கியூரியாசிட்டி

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது.
இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளிக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது.

அரசியல்வாதியை மிஞ்சிய கலெக்டர் ஷோபனா


கரூர்: தமிழகத்தில் உள்ள 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ அரசு அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த ஷோபனாவும் ஒருவர்.
 Karur Collector Shobana Relieved Yet To Assign Duty தமிழகத்தில் உள்ள 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதில் கரூர் மாவட்ட கலெக்டராக சென்னை மாவட்ட கலெக்டர் ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். கரூர் கலெக்டராக ஷோபனா இருந்து வந்தார். தற்போது அவரை மாற்றியுள்ளனர். ஆனால் அவருக்குப் புதிய பொறுப்பு தரப்படவில்லை, காத்திருப்போர் பட்டியலிலும் அவரை வைக்கவில்லை. மாறாக தொங்கலில் விட்டுள்ளனர்.
ஷோபனா மாற்றம் குறித்து அதிகார வட்டத்தில் விசாரித்தபோது சிலர் கூறுகையில்,
தமிழக அரசு பொறுப்பேற்று ஒரு வருடம் நிறைவு பெற்றபோது அதை பாராட்டி கரூரில் டிஜிட்டல் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியதாக கலெக்டர் ஷோபனா பெயர் அடிபட்டது.

"2ஜி வழக்கு தீர்ப்பு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்

புதுடில்லி: "2ஜி' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும். மற்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டிற்கு பொருந்தாது' என, சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், 120 ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், "ஸ்பெக்ட்ரம் போன்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டில், ஏல நடைமுறையை பின்பற்ற வேண்டும்' என்று, கண்டிப்புடன் தெரிவித்தது.
சந்தேகம்:
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இந்த உத்தரவு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டும் பொருந்துமா அல்லது அனைத்து இயற்கை வளங்களின் ஒதுக்கீட்டுக்கும் பொருந்துமா என்ற சந்தேகம், மத்திய அரசுக்கு எழுந்தது. இதையடுத்து, ஜனாதிபதி மூலமாக, சுப்ரீம் கோர்ட்டிடம் கருத்து கேட்டது. ஜனாதிபதியின் கருத்து கேட்கும் மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய, அரசியல் சட்ட, "பெஞ்ச்' நேற்று பிறப்பித்த உத்தரவு: "2ஜி' வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு மட்டுமே பொருந்தும்; மற்ற இயற்கை வளங்கள் ஒதுக்கீட்டிற்கு பொருந்தாது.

ஆர்த்தி ராவ்:என்னைக் கொல்ல முயற்சிக்கிறார் நித்தியானந்தா

என்னால் தனக்குப் பிரச்சினை வரலாம் என்பதால் என்னை ஆட்களை அனுப்பி கொலை செய்வதற்கு நித்தியானந்தா முயற்சிப்பதாக சந்தேகிக்கிறேன். இதுதொடர்பாக நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று சென்னை போலீ்ஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் நித்தியானந்தாவின் முன்னாள் பெண் ஆதரவாளரான ஆர்த்தி ராவ். நித்தியானந்தாவின் ஆதரவாளராக முன்பு விளங்கியவர் ஆர்த்தி ராவ். சென்னையைச் சேர்ந்த இவர் முன்பு அமெரிக்காவில் கணவருடன் வசித்து வந்தார். அப்போதுதான் நித்தியானந்தாவால் ஈர்க்கப்பட்டு அவரிடம் போய்ச் சேர்ந்தார். ஆனால் அவரிடம் தான் இருந்தபோது பல்வேறு வகையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆனதாகவும், பலமுறை நித்தியானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அசிங்கமான முறையில் நடந்து கொண்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றம் சாட்டினார்.
மேலும் இவரும் லெனின் கருப்பனும் சேர்ந்துதான் நித்தியானந்தாவின் படுக்கை அறைக் காட்சிகளை ரகசியமாக வீடியோவில் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்கள். இதுதொடர்பாக நித்தியானந்தா இவர்கள் மீது வழக்கும் போட்டுள்ளார்.

காவிரி நீர் திறக்காதது ஏன் ’- சுப்ரீம்கோர்ட் போட்டது உத்தரவு !

புதுடில்லி: காவிரிநதி நீர் ஆணையம் உத்தரவின் பேரில் தமிழகத்திற்கு தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் , மறுப்பது ஏன் ? என்றும் பிரதமர் உத்தரவை மதிக்காதது ஏன் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கர்நாடக அரசுக்கு சாட்டையடி கொடுத்தனர். இந்த உத்தரவு மூலம் தமிழகத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. கோர்ட் உத்தரவை தமிழக விவசாய மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
டெல்டா விவசாய பணிகளுக்கு காவிரிநதியில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பான நதிநீர் ஆணைய கூட்டம் பிரதமர் தலைமையில் கடந்த 19 ம் தேதி நடந்தது. கூட்டத்தில் தமிழகம் சார்பில் முதல்வர் ஜெ., , கர்நாடகம், மற்றும் புதுச்சேரி தரப்பில் நீர்ப்பாசன துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 9 ஆயிரம் கன அடி தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் என பிரதமர் ஆணையிட்டார். ஆனால் கர்நாடகாவுக்கு மனது இல்லாமல் இருந்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கர்நாடக அரசு மற்றும் அனைத்துக்கட்சியினர் தரப்பில் வலியுறுத்தி மகஜர் அனுப்பி வைக்கப்பட்டது. கர்நாடகாவில் பல கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

புலிகளை அழிக்க உதவியதற்கு நன்றி

Viruvirupu
இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளின் 55-வது வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்புவில் இடம்பெற்ற வைபவத்தில், விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடிப்பதற்கு உதவியதற்காக சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது இலங்கை அரசு.
இரு நாடுகளும் கடந்த 55 ஆண்டுகளாக ராஜதந்திர உறவுகளை பேணி வருவதாகவும், முன்பைவிட தமக்கிடையே நெருக்கம் அதிகமாகி உள்ளதாகவும், கொழும்புவுக்கான சீனா தூதுவர் ஊ ஜின்காவோ தெரிவித்தார். இரண்டு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயற்பட தற்போது அதிக சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசின் சார்பில், இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய இலங்கை அமைச்சர் டி.இ.டபிள்யு. குணசேகர, “முள்ளிவாய்காலில் முடிந்த யுத்தத்துக்கு சீனா வழங்கிய உதவிகள் ஏராளம்.  புலிகளை அழிப்பதற்கு சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
சீனாவுடன் இலங்கை, மேலும் நெருக்கத்தை பேணுவதற்கு தற்போது பாதை திறக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் குறிப்பிடும் ‘பாதை’ திறப்பதற்கு உதவிய தமிழக அரசியல்வாதிகள் யாருக்கும் அவர் நன்றி தெரிவிக்கவில்லை என்பதே ஒரேயொரு நெருடல். மரியாதை கருதி, குறைந்தபட்சம் தமிழக முதல்வருக்கும், சீமானுக்குமாவது நன்றி தெரிவித்திருந்தால் கௌரவமாக இருந்திருக்கும்.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் தூக்கில் பிணமாகத் தொங்கிய போலீஸ்காரர்

சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள மரத்தில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் மாளிகை உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் சங்கபோரா(43). கர்நாடகா மாநிலத்தின் பகல்கட் மாவட்டத்தை சேர்ந்த இவர், அங்கேயே தங்கி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த சங்கபேரா, சென்னை மைலாப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவியும் உடனிருந்தார். இந்த நிலையி்ல இன்று காலை 5.30 மணியளவில் ஆளுநர் மாளிகையின் தென்புற வாயில் அருகே உள்ள கருவேல மரத்தில் ஒருவர் பிணமாக தொங்குவதை, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கண்டனர். இது குறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேபாளத்தில் விமான விபத்து எடுக்கப்பட்ட போட்டோ

நேபாளத்தில் இன்று காலை காத்மாண்டுவுக்கு அருகே தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கிய விமான விபத்தின்பின் எடுக்கப்பட்ட போட்டோக்களை தருகிறோம். இந்த விபத்தில் விமானத்திலிருந்த 19 பேரும் இறந்தது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. எவரெஸ்ட் மலைத்தொடர் உள்ள லுக்லாவுக்கு சென்று கொண்டிருந்த விமானம் இது.

5 கோடி பணத்துடன் ICICI வங்கியின் வேனை கடத்திச் சென்ற கும்பல்!

 Bank Van Carrying Rs 5 Cr Hijacked In Delhi டெல்லி: டெல்லியில் ரூ. 5 கோடி பணத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் வேன் கடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 5 கோடி பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மாருதி எக்கோ வேன் வந்து கொண்டிருந்தது. அதை தெற்கு டெல்லியின் டிபன்ஸ் காலனி அருகே ஒரு ஹூண்டாய் வெர்னா கார் வழிமறித்தது.
பின்னர் அதிலிருந்த 5 பேர் கும்பல், வேனில் இருந்த காவலாளியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு வேன் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு அதைக் கடத்திச் சென்றுவிட்டனர்.
டிபன்ஸ் காலனியின் டி பிளாக் வழியாக அந்த வேனும் காரும் சென்றுவிட்டன.
இதையடுத்து டெல்லி முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

பெரியார் Film.. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

 பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்ததன் மூலம் தன்னை சனாதனக்கூட்டத்தின் விசுவாசி என்று உறுதி செய்தார். வேட்டியும் செருப்பும் அணிய முடியாமல் குறைந்தபட்ச மானமுள்ள மனிதனாகக் கூடவாழ முடி யாமல் கிடந்த தமிழக தலித் சமூகம் தலைநிமிர வழிசெய்த பெரியாருக்கு ஒரு தலித்தே துரோகம் செய்தது கண்டு பார்ப்பனக் கூட்டம் குஷியானது. இளையராஜா தலித் சமூகத்தின் துரோகியானார்.

1975ல் அன்னக்கிளியில் தொடங்கிய இளைய ராஜாவின் பயணம் திரும்பிப்பார்க்க நேரமில்லாமல் தொடர்ந்தது. தமிழ்ச்சினிமாவின் இசைப்பாதை இவருக்கு என்றே திறந்து கிடந்தது.
ஆனால் அவரது பயணத்தின் பாதையில் இரண்டு புறங்களிலும் இருந்த மரங்களில் தொங்கிக்கொண்டிருந்த பார்ப்பனீயப்பேய்கள் பல்லை இளித்து பயங்காட்டி அவரை விரட்டப் பார்த்தன என்பது வரலாறு. இன்றைக்கு அவரை ஒரு மேதை என்று பேசுகின்ற பல மேல்சாதி 'சங்கீத தெர்மாமீட்டர்'கள் அன்று அவரை ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று மட்டுமே பார்த்தவர்கள். சுப்புடு போன்ற 'சங்கீத பாராமீட்டர்'கள் எப்படியாவது அவரை திரையுல கிலிருந்து துரத்திவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செய்த சதிகளும் சாகசங்களும் ஏராளம். ஆனால் இளையராஜாவின் பெயர் தமிழ்மக்களின் வீடுகளில் தண்ணீரைப் போல் சாதாரணமாக புழங்க ஆரம்பித்தது கண்டு, கூடிக்கூடிப் பேசிக்கொண்டிருந்த பார்ப்பனர்கள், பொழைக்கிற வழியைப் பார்த்தார்கள். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே வண்டுமுருகன் (வடிவேலு) கட்சி மாறி சைக்கிளில் உட்கார்ந்து டாட்டா காமிக்கிறது மாதிரி, இவர்களும் இளையராஜாவை சடுதியில் இசைஞானி என் றும், இசைத்துறவி, இசைச்சாமியார், இசைப்பூசாரி, சக்ர வர்த்தி, மெழுகுவர்த்தி என்று தலையில் தூக்கி ஆட ஆரம் பித்தார்கள். ஒரே காரணம் - போஸ்டரில் இளையராஜா பேர் இருந்தால் படம் கண்டிப்பாக நூறு நாள் ஓடும், கல்லாப் பெட்டி நிரம்பி வழியும். இங்கேதான் சனியன் பிடித்தது.
இளையராஜா பார்ப்பனீய துதிபாடிகளின் வலை யில் விழுந்தார்.

போயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!

தா-பாண்டியன்vinavu.com
தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை என்று டி.ராஜா சொன்னாரே இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ந்திய கம்யூ கடசியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியனுக்கு 80 வது ஆண்டு நிறைவு விழா நேற்று முன்தினம் (25.9.2012) சென்னை காமராசர் அரங்கத்தில் நடந்திருக்கிறது. தா.பா வின் அரசியல் வாழ்க்கை பற்றி வெளியிடப்பட்ட சிறப்பு மலரை உ.த.பே.த. நெடுமாறன் (அதாவது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர்) பெற்றுக்கொண்டாராம்.
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியலுக்காக  நட்பை விட்டுக் கொடுத்ததில்லை. நட்புக்காக அரசியலை விட்டுக் கொடுத்ததில்லை. இந்தப் பண்பாட்டைப் பின்பற்றும் தலைவர் தா. பாண்டியன் ” என்று விழாவில் பேசினார் அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா.
இந்த  ”இயங்கியல் தத்துவத்துக்கு” என்ன பொருள் என்று நமக்கு முதலில் புரியவில்லை. வைகோ, திருமா, சீமான், பண்ருட்டி, ஜி.கே.மணி, மூவேந்தர் முன்னணி சேதுராமன் உள்ளிட்ட பலரும் வாழ்த்த வாழ்த்தத்தான் மேற்படி தத்துவம் லேசாகப் புரியத்தொடங்கியது.
“மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்,  தமிழக  பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா ஆகியோர் எனக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர்” என்று தா.பா தன்னுடைய உரையில் குறிப்பிட்ட போதுதான் தெளிவு பிறந்தது.
அடடா, நட்பு என்றால் இதுவல்லவோ நட்பு ! கம்யூனிஸ்டு என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் கொலைவெறி கொள்ளும் பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, ராம கோபாலன் மாதிரியான பாசிஸ்டுகளெல்லாம் தாபாவை வாழ்த்துகிறார்கள் என்றால், அவர்களுக்கு இடையிலான நட்பு, எத்தகைய உயர்ந்த நட்பாக இருந்திருக்க வேண்டும்.

பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் எத்தனை கோடி முதலீடு என்பது பிரச்சனை அல்ல.. மக்களின் பாதுகாப்புக்கு முக்கியம் இல்லையெனில் மூடிவிட வேண்டியதுதான் என்று மிகக் கடுமையாகவே உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அணு உலையை இயங்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிராக கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொறியாளர் சுந்தர்ராஜன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அடேல் பாலசிங்கத்திடம் போர்க் குற்ற விசாரணை : இங்கிலாந்திடம் இலங்கை கோரிக்கை

கொழும்பு:  புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த மறைந்த பாலசிங்கத்தின் துணைவியார் அடேல் பாலசிங்கத்திடம் போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டை இலங்கை கோரியுள்ளது.
புலிகளின் ஆளுமை காலத்தில் அடேல் பாலசிங்கமும் புலிகளுக்கு உதவினார். போராட்டத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பது இலங்கையின் குற்றச்சாட்டு.
மேலும் யுத்தத்துக்குப் பிந்தைய காலத்தில் வன்னி பிரதேசத்தில் கிடைத்த சாட்சியங்களும் ஆவணங்களும் இலங்கையிடம் இருப்பதாகவும் இதில் தற்கொலைத் தாக்குதல்களை அடேல் பாலசிங்கம் நியாயப்படுத்தி பேசியிருப்பதாகவும் இலங்கை கூறுகிறது.

நுழைவுத் தேர்வின் பெயரால் சமூகநீதிக்கு ஆபத்து

கி.வீரமணி அறிக்கை! 
கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதன் கொடுமையை மாநிலங்கள் அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு என்பது சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது என்றாலும், மருத்துவக் கல்வியில் மத்திய அரசு மிகப் பெரிய பார்ப்பனீயத்தைச் செய்து வருகிறது.
இளநிலை மருத்துவக் கல்லூரிகளில் (எம்.பி.,பி.எஸ்.,) இரு பால் மாணவர்களைச் சேர்த்திட அகில இந்திய அடிப்படையில் தேசிய நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்துகிறது இந்திய மருத்துவக் குழு ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 15 விழுக்காடு இடங்களை மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் சென்று, அந்த இடங்களை நிரப்ப நுழைவுத் தேர்வு நடத்துகிறது.
இந்திய அளவில் இவ்வாறு எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 2503 (தமிழ்நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்படும் இடங்கள் 320). நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்படும் இந்த இடங்களில் தாழ்த்தப் பட்டவர்களுக்கு 15 விழுக்காடு, மலைவாழ் மக்களுக்கு ஏழரை விழுக்காடு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு என்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்கிற கொடுமையை எண்ணிப் பார்க்க வேண்டும்

சும்மா இருப்பதே சுகம் என்ற முடிவுக்கு வர வேண்டி உள்ளது” -கருணாநிதி

Viruvirupu “மின்வெட்டு, கூடங்குளம் பிரச்சினை, காவிரி நீர்ப் பிரச்சினை ஆகியவற்றில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழர்களுக்கு விரோதமாகவே நடந்து வருகிறார்” என்று கடுமையாக சாடி முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கைக்கு பதில் வந்திருக்கிறது.
“இரக்க உணர்வோடு ஆறுதல் கூற வருபவர்களையும், கடந்த காலத் தவறுகளைச் சுட்டிக்காட்டி இனி அவ்வாறு எதுவும் நடந்திடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையை அறிவுரையாகக் கூறினால்கூட, சல்லடம் கட்டிக் கொண்டு சண்டைக்கு வருபவர்களிடம்; என்ன பேசுவது? எதைப் பேசுவது? எப்படிப் பேசுவது? இந்த நிலையில் என்ன பேசுவது? என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் – எப்படிப் பேசுவது என்பதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் – சும்மா இருப்பதே சுகம் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும்” என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

நயன்தாரா SMS ஓடிய நடிகர்கள்!

பல நடிகர்கள் நடிகைகளை காதலித்தாலும், சிம்பு-நயன்தாரா காதல் திரையுலகமே உற்று நோக்கிய காதல். அதைவிட விறுவிறுப்பாக சென்றது பிரபுதேவா-நயன்தாராவின் காதல். இப்போது ஆட்டத்தையும், ஆடியவரையும் மறந்து தனிமையில் இருக்கிறார் நயன்தாரா.மறுபடியும் நயன்தாரா தரப்பில் காதல் பூ பூத்தால் தேன் எடுத்தே ஆகவேண்டும் என அவரையே  வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர் சில கோடம்பாக்கத்து ஹீரோக்கள். அவர்களை அலட்சியம் செய்யாமல் அன்பாக அழைத்து நல்ல முறையில் பேசி புது வழியில் நயன்தாரா அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறார்.நயன்தாராவிற்கு நூல் விடுபவர்களிடம் சிம்பிளாக ’விரல்’-ஆல் டைப் செய்யப்பட்ட எஸ்.எம்.எஸ்களை காட்டுகிறாராம். அதை படித்ததும் தலை தெரிக்க ஓடிவந்திருக்கின்றனர் பலஹீரோக்கள். அப்படி என்ன தான் இருக்கிறது அந்த எஸ்.எம்.எஸ்-ல் என ஆராய்ந்து கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

12 வயது சிறுவனுக்கு 'லிப் டூ லிப்' கொடுத்த கேரி அன்டர்வுட்

Posted by:
Carrie Underwood Gives Lip Lip 12 Year
லூயிஸ்வில்லி, கென்டகி: அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும், நடிகையுமான கேரி அன்டர்வுட் 12 வயது சிறுவனுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்து அசத்தி விட்டார். அந்த சிறுவன், கேரியின் தீவிர ரசிகனாம். கேரிக்கு உதட்டில் முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஆசையாம். இதை கேரியிடமே ஒரு நிகழ்ச்சியின்போது அவன் சொன்னதுமே வேகமாக நெருங்கி வந்து தனது குட்டி ரசிகனின் உதட்டில் முத்தமிட்டு அவனது ஆசையை நிறைவேற்றி அவனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் கேரி.
29 வயதாகும் கேரியிடம் 12 வயது சிறுவன் உதட்டு முத்தம் பெற்ற சம்பவம் கென்டகி, லூயிஸ் வில்லியில் நடந்த நிகழ்ச்சியின்போதுதான் நடந்தது.

‘தாண்டவம்’ திருட்டுக்கதை உதவி இயக்குனரை ஏமாற்றிய

பொன்னுச்சாமி, ஓர் உதவி இயக்குநர். முதலாளிகள் ஆதிக்கம் செய்யும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நம்பி சென்னைக்கு வந்த லட்சக்கணக்கான அப்பாவிகளில் இவரும் ஒருவர். ‘மொழி’, ‘பயணம்’ உட்பட பலப் படங்களை இயக்கிய ராதாமோகனின் உதவியாளர். தனியாக  படம் இயக்க முடிவு செய்ததும் அலைந்து திரிந்து இறுதியில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தமிழக அதிகாரியான தனஞ்செயனை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார்.
இவர் சொன்ன கதையை கேட்டதுமே தனஞ்செயனுக்கு அலாரம் அடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும் என அனுபவ மூளை உணர்த்தியிருக்கிறது. உடனே முழு திரைக்கதையையும் எழுதித் தரும்படி கேட்டிருக்கிறார். பொன்னுச்சாமியும் நம்பிக்கையுடன், தான் எழுதிய திரைக்கதையை கம்ப்யூட்டரில் டைப் செய்து, பிரிண்ட் எடுத்து, அதை பைண்ட் செய்து கொடுத்திருக்கிறார். உரிய நேரத்தில் அழைக்கிறோம் என்று சொல்லி அவரை தனஞ்செயன் வழியனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால், நாட்கள் மாதங்களாகி ஆண்டுகள் ஆன பிறகும் யுடிவி-யில் இருந்து பொன்னுச்சாமிக்கு அழைப்பு ஏதும் வரவில்லை. இடையில் இயக்குநர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தை யுடிவி தயாரிப்பதாக செய்தி வந்தது. ஒருவேளை இந்தப் படம் முடிந்ததும், தன்னை அழைக்கலாம் என பொன்னுச்சாமி காத்திருந்தார்.
அப்போதுதான் அந்த இடி இறங்கி பொன்னுச்சாமியின் வாழ்க்கையை பொசுக்கியது. ‘தாண்டவம்’ படம் குறித்த செய்திகளை வாசித்தவருக்கு அதிர்ச்சி. எந்தக் கதையை தனஞ்செயனிடம் சொன்னாரோ, அந்தக் கதை அப்படியே இயக்குநர் விஜய்யின் பெயரில் உருவாகிக் கொண்டிருந்தது.

பொன்முடி விவகாரம் தி.மு.க. அவசர ஆலோசனை

Viruvirupu.com அவருக்கு ஒன்று, இவருக்கு ஒன்று!
தி.மு.க.-வினர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகள் குறித்து, அவசர செயற்குழு கூட்டத்தை கூட்டுகிறார், தி.மு.க. தலைவர் கருணாநிதி. தி.மு.க. செயற்குழு அவசர கூட்டம், தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் அக்டோபர் 1-ம் தேதி (திங்கட்கிழமை) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது.
எதற்காக இந்த அவசர கூட்டம் என்ற கேள்விக்கு பதிலளித்த தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், “முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மீது, பொய் வழக்குகளை ஜோடித்து, குண்டர் சட்டத்தை பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைத்து வருகிறது இந்த அரசு.அப்படி செய்வதால், விரைவில் வரவுள்ள நாடாளுமன்றம், கூட்டுறவு தேர்தல் போன்றவற்றில் எளிதாக வென்றுவிடலாம் என்று அ.தி.மு.க. அரசு நினைக்கிறது. இதங்கு தி.மு.க. தரப்பில் என்ன பதில் நடவடிக்கை எடுப்பது என்பதை ஆராயவே செயற்குழு அவசர கூட்டம் கூட்டப்படுகிறது”
சரி. இதன் பின்னணியில் உள்ளது, முன்னாள் அமைச்சர் பொன்முடி விவகாரமா?

கோவை Power Cut உற்பத்தி இழப்பு மாதம் 5,500 கோடி

கோவை மாவட்டத்தில், தினமும் 12.00 மணி நேரம் முதல் 14.00 மணி நேரம் மின்தடை நீடிப்பதால், மின்சாரத்தை நம்பியுள்ள தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் உற்பத்தி இழப்பு மாதம் ஒன்றுக்கு 5,500 கோடி ரூபாய் இருக்கும் என தொழில் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக, பலரால் ஈர்க்கப்படும் மாவட்டம் கோவை. பருத்திக்கும், பஞ்சாலைக்கும் புகழ் பெற்ற நகரமாக, இன்ஜினியரிங் தொழிலில் அபரிமித வளர்ச்சியாக, சர்வதேச ஏற்றுமதியில் சிறப்பாக செயல்படுகிறது. தொழில் நகரமாக விளங்கும் கோவைக்கு, உயிர் நாடியாக விளங்குவது மின்சாரம். ஆனால், தற்போது நிலவும் மின்வெட்டு, கோவைக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் உள்ள மில்களில், 45 சதவீத மில்கள், தமிழகத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலும், கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இயங்கி வருகின்றன. பருத்தியிலிருந்து நூல் எடுத்து, துணியாக மாற்றி, உள்ளூர் தேவைக்கும், ஏற்றுமதிக்கும், கோவை, திருப்பூர் மாவட்டங்கள் முன்னோடியாக திகழ்ந்தன. ஆனால், சமீபகாலமாக நிலவும் தொடர் மின்வெட்டால், தொழில் நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும், கணிசமான அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளதால், மில்கள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளன.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் தினகரன் கூறுகையில், ""தினமும் 10.00 -12.00 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நீடிக்கிறது.

அரசியல்வாதி கண்முன் நடிகை ஆடைகளை அவிழ்த்து பலாத்கார முயற்சி



Model molested at home in Bengal as politician and realtors watchகொல்கத்தாவில் உள்ள சந்தர்நாகூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல நடிகையும், மாடல் அழகியுமான அரிதி பட்டாச்சார்யா வசித்து வரு கிறார். இவர் 2002ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டவராவார். மேலும் பல டி.வி. நிகழ்ச்சிகள், நாடகங்களிலும் நடித்துள்ளார்.அரிதியுடன் அவரது தாய் ஜோதியும் வசித்து வந்தார். அரிதியின் படுக்கை அருகே உள்ள மற்றொரு வீட்டில் அந்த அப்பார்ட்மென்ட் உரிமையாளர்கள் சுமித், ஆசிஸ் முகர்ஜி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வருடங்களாக இவர்கள் நடிகை அரிதிக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.இரவு நேரங்களில் குடித்து விட்டு வந்து அரிதி முன் தகாத வார்த்தைகளால் பேசி கிண்டல் செய்து வந்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன் அரிதி அப்பார்ட்மென்ட் உரிமையாளர்களை கண்டித்தார். அப்போது அவர்கள் இனிமேல் இதுபோன்று நடக்காது என உறுதிகொடுத்துள்ளனர். ஆனால் அரிதிக்கு தினமும் இடையூறு செய்து வந்துள்ளனர். கடந்த 20ந்தேதி நள்ளிரவில் சுமித்தின் கார் டிரைவர் நிஷாத் என்பவர் குடிபோதையில் அரிதி வீட்டு முன் ரகளை செய்தார். ஆபாசமான வார்த்தைகளால் அவர் பேசியபடி திடீரென ஒரு சிலருடன் கும்பலாக அரிதி வீட்டிற்குள் புகுந்தார்.அரிதி மீது பாய்ந்த அவர், கம்பால் தாக்கினார். ரத்தம் கொட்டிய வலியால் துடித்த அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.HANDERNAGORE: Model-actor Aritri Bhattacharya and her mother were beaten up and molested in their home in the presence of a politician and realtors in Chandernagore on September 20. Aritri says the attacker stripped her and tried to rape her in front of the gawking crowd but she managed to fight him off.
Police ignored her complaint, although the victims had bleeding injuries. Chandernagore OC Sukhomoy Chakraborty was allegedly reluctant to file an FIR and kept asking Aritri to settle it "mutually". Police arrested the accused only on September 24 but filed mild charges, allowing him to walk free within hours. Now, the accused are threatening an acid attack on her, says the actor.

காங்., அலுவலகத்தில் சி.பி.ஐ., தலைமையகத்தை துவக்கலாம்: நிதின் கட்காரி சாடல்

அரசியல் நோக்கங்களுக்காக, சி.பி.ஐ.,யை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், அதன் தலைமை அலுவலகத்தை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்துவிட வேண்டும்' என்று பா.ஜ., கடுமையாக சாடியுள்ளது. பா.ஜ.,வின்,மூன்றுநாள் தேசிய செயற்குழு கூட்டம், டில்லிக்கு அருகில், சூரஜ்கண்ட் என்ற இடத்தில் நேற்று துவங்கியது. இதில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
துவக்க உரை ஆற்றிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது: அசாமில் நடப்பது மதக்கலவரங்கள் போல சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல; வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நடக்கும் ஊடுருவல்தான் பிரச்னை.

5 ஆண்டுகளில் 36 ஆயிரம் டன் உணவு தானியம் வீண்: "திடுக்' சர்வே

புதுடில்லி: நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.
தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர், "கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவு கழகத்துக்கு (எப்.சி.ஐ.,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப் போயின' என்பது பற்றிய, விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டிருந்தார்.
அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:
நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008லிருந்து, இதுவரை, 36 ஆயிரம் டன், உணவு தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, கெட்டு போயின.

சேலத்தில் தாய்- மகளை பட்டப் பகலில் கொன்று 100 பவுன் நகை கொள்ள

சேலத்தில் பட்டப் பகலில் தாய், மகள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டில் இருந்த 100 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் செவ்வாய்ப்பேட்டை நாகையர் தெருவை சேர்ந்த சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது மனைவி ராணி தமது மகள்களுடன் மாமனார் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். நேற்று மாமனார், ராணி மற்றும் மகள் சங்கீதா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். ராணிக்கு அவரது உறவினர்கள் பல முறை போன் செய்துள்ளனர். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. இதனால் அவரது உறவினர் ராஜாராம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராணியும், சங்கீதாவும் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

புதன், 26 செப்டம்பர், 2012

விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு விஜய் மல்லையாவே கமிஷன் பெற்ற கொடுமை

வெறும் 7 விமானங்களுடன் மிஞ்சியிருக்கும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்! பெங்களூர்: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு பகுதி பங்குகளை வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் விற்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அதன் உரிமையாளர் விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கிங்பிஷர் பங்குகளை அன்னிய விமான நிறுவனங்களுடன் விற்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விமானத்துறையில் அன்னிய முதலீட்டை 10 நாட்களுக்கு முன் தான் மத்திய அரசு அனுமதித்தது (இது விஜய் மல்லையாவை காப்பாற்றுவதற்காக என்று கூட கூறப்படுகிறது). இதனால் இப்போது தான் பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன என்றார்.
இந்த நிறுவனத்துக்கு ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் இணைந்து ரூ. 8,000 கோடி வரை கடன் கொடுத்துள்ளன, இதை கிங்பிஷர் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.
இதில் ரூ. 5,904 அளவுக்கான கடன்களுக்கு விஜய் மல்லையா நேரடியாக உத்தரவாதம் தந்துள்ளார். இந்த உத்தரவாதத்துக்காக அவருக்கு ரூ. 51 கோடி வரை கமிஷன் தரப்பட்டு வந்தது. ஆனால், கடனையே திருப்பிச் செலுத்தாத நிலையில் அவர் கமிஷன் வாங்குவதற்கு வங்கிகள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து இந்த ஆண்டு அவர் கமிஷன் எதையும் பெறவில்லை.
இந் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 66 விமானங்களை வைத்திருந்த கிங்பிஷர் நிறுவனத்திடம் இப்போது வெறும் 7 விமானங்களே உள்ளன.
மற்ற விமானங்களை அதை குத்தகைக்குத் தந்த நிறுவனங்கள் திரும்ப வாங்கிச் சென்றுவிட்டன. இந்த விமானங்களுக்கான குத்தகைக் கட்டணத்தைக் கூட மல்லையா செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதயகுமாருடன் கைகோர்த்த வைகோ? உருப்படாத கூட்டணி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று இடிந்தகரை சென்று போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை சந்தித்து பேசினார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிட்டும், கல்லறைகளில் குடியேறியும் போராட்டம் நடத்தினர். இன்று கழுத்தளவு மணலில் தங்களை புதைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இடிந்தகரை கடற்கரையில் கூடிய ஏராளமான ஆண்களும், பெண்களும் கழுத்தளவு மணலில் நின்று போராடி வருகின்றனர்.

பாரதிராஜா வைகோவை சாடினார் பேசிப்பேசியே தமிழர்களை மழுங்கச் செய்து விட்டார்

சென்னை::இந்திய கம்யூனிஸ்ட் ,மாநில செயலர் பாண்டியன் பிறந்தநாள் விழாவில், இயக்குனர் பாரதிராஜாவுக்கும், வைகோவுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில செயலர் தா. பாண்டியனின், 80 வது பிறந்தநாள் விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க.,வைத் தவிர, இதர கட்சிகளின் சார்பில் தலைவர்கள் பங்கேற்று பேசினர். விழாவில், திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, "" ஈழப்பிரச்னையில் நாம் தோற்று விட்டோம்; திராவிடம் பேசி, நம்மை அழித்து விட்டனர். ஒரு இனம் அழிவதை, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள்; இவர்கள் பேசியே, தமிழர்களை மழுங்கச் செய்து விட்டார்கள்'' என்றார். விழாவில் வைகோ பேசியதாவது: அரசியல்வாதிகளை பாரதிராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். நாகரீகம் இல்லாமல், பாரதிராஜா விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இவரது கொள்கை உணர்வு ,எங்களுக்கு தெரியும். இதுபோல, கருத்து சொன்ன பாரதிராஜா, பதில் வரும் வரை காத்திருக்காமல், ஏன் ஓடிவிட்டார் என்று தெரியவில்லை. இவ்வாறு பேசிவிட்டு, வைகோ உடனே கிளம்பியதால், விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.; poonththalir@hotmail.com

பிரதீபா பாட்டில் அள்ளிச் சென்ற பொருட்களை மீட்கும் முயற்சி

Viruvirupu
கிள்ளி எடுக்கல.. அள்ளிட்டாங்க!
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தனக்கு கிடைத்த பரிசு பொருள்‌களை வரும் ஜனவரி 13-ம் தேதிக்குள் ஜனாதிபதி மாளிகையில் ஒப்படைக்க வேண்டுமென தகவல் அறியும் சட்ட ஆர்வலர் சுபாஷ் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரதீபா பாட்டில் வெளிநாட்டு பயணம் செய்வதில் அதிகளவில் அரசு பணத்தை செலவிட்டடிருந்தது, ஒன்றும் பெரிய ரகசியமல்ல. அவர் ஓய்வு ‌பெற்ற பின்னர் வசிப்பதற்காக கட்டப்பட்ட வீட்டிற்கு அரசுப் பணத்தை செலவிட்டது உட்பட பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கியுள்ளார்.
சுருக்கமாக சொன்னால், ‘வாழ்க்கையில் ஒருமுறை கிடைத்த சான்ஸை’ முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். மேக்ஸிமம் எடுக்க கூடியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார்.
ஜாலிலோ ஜிம்கான இவரை ஏன்தான் தெரிவு செய்தனரோ

தமிழில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு ஒரு படம் வருமா?

சென்னை: பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே போன்று தமிழிலும் படங்கள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் படம் ரிலீஸானால் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி யாரப்பா ஹீரோன்னு தான். படத்தைப் பற்றி செய்தி வெளியிடும்போதும் சரி, பேசும்போதும் சரி கமல் படம், அஜீத் படம், ரஜினி படம், விஜய் படம் என்று ஹீரோக்கள் பெயரைத் தான் சொல்கிறோம். ஒரு நாளும் இது இந்த நாயகியின் படம் என்று பேசுவதில்லை.
ஆனால் பாலிவுட்டில் அப்படி அல்ல. அங்கு ஹீரோயின்கள் ஹீரோ ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். ஹீரோயினை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க தென்னிந்தியாவில் யாருக்குமே தோணாத நேரத்தில் பாலிவுட்டில் ஏக்தா கபூர் வித்யா பாலனை வைத்து தி டர்ட்டி பிக்சர் தயாரித்தார். படத்தில் நசிருத்தீன் ஷா என்ற ஜாம்பவான் இருந்தாலும் வித்யா தான் ஹீரோ. தற்போது கரீனா கபூரை வைத்து ஹீரோயின் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரியங்கா சோப்ராவை மையமாக வைத்து பேஷன் படம் வெளியானது.
இது ஏன் நம்ம தெலுங்கில் கூட அனுஷ்காவை வைத்து அருந்ததி படத்தை எடுத்தார்கள்.

பெனாசிர் மகனுக்கும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹீனாவுக்கும் காதலா?

டெல்லி: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீனா ரப்பானி கர் மற்றும் அந்நாட்டு அதிபர் சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோவுக்கும் காதல் என்று வங்கதேச பத்திரிக்கை வெளியிட்ட செய்தியால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஹீனா ரப்பானி கர். இவருக்கு வயது 34 ஆகிறது. கல்யாணமாகி, 2 குழந்தைகளும் உள்ளனர். அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி- பெனாசிர் பூட்டோ தம்பதியின் மகனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவால் பூட்டோ. இவருக்கு 24 வயதாகிறது.
இந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து விட்டதாக வங்கதேச பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திதான் இப்போது பாகிஸ்தானை கலங்கடித்து வருகிறதாம்.

திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர் பதவி தர முன்வந்த பிரதமர்- நிராகரித்தார் கலைஞர்

 Dmk Turns Down Pm S Offer Berths Union Cabinet சென்னை: மத்திய அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர் பதவி அல்லது சில இணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் முன்வந்ததாகவும், ஆனால் அதை திமுக தலைவர் கலைஞர்  நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்து பெரிய கட்சி திரினமூல் காங்கிரஸ்தான். அக்கட்சிக்கு 19 எம்.பிக்கள் உள்ளனர். அடுத்த பெரிய கட்சியாக இருப்பது திமுக, அதற்கு 18 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது திரினமூல் காங்கிரஸ் வெளியே போய் விட்டதால், திமுகவுக்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.
திரினமூ்ல் விலகியுள்ளதாலும், மேலும் பல முக்கியப் பொறுப்புகளுக்கு இன்னும் அமைச்சர்கள் அறிவிக்கப்படாமல் இருப்பதாலும் மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதையடுத்து திமுகவுக்கான திட்டத்துடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை பிரதமர் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
அவரும் சென்னை வந்து சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டில் வைத்து அவரைச் சந்தித்தார். அப்போது பிரதமரின் ஆபர் குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மத்திய அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர் பதவி அல்லது சில இணை அமைச்சர் பதவிகளைத் தருவதாக பிரதமர் கூறியுள்ளதை நாராயணசாமி தெரிவித்தாராம். ஆனால் இதை  கலைஞர் நிராகரித்து விட்டாராம்.

ஓரின தம்பதிகளுக்கு தாய், தந்தை என்ற வார்த்தையை நீக்க பிரான்ஸ் அரசு

லண்டன்: ஓரின சேர்க்கையாளர்களின், திருமணத்தை ஆதரிக்கும், பிரான்ஸ் நாடு, அரசு ஆவணங்களில், தாய்- தந்தை என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு, "பெற்றோர்' என்ற வார்த்தையை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஓரின சேர்க்கையாளர்கள், தங்கள் திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி, பல்வேறு நாடுகளில் போராடி வருகின்றனர்.  இத்திருமணத்தை ஆதரிக்கும் பிரான்ஸ் அரசு, ஓரின சேர்க்கையாளர்கள், குழந்தையை வளர்க்க ஏதுவாக, அரசு ஆவணங்களில் குழந்தைகளின், தாய்- தந்தை என்ற வார்த்தையை, நீக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக, "பெற்றோர்' என்ற ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டவரைவு உருவாக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட உள்ளது

தமிழக அரசின் "ஈகோ'வால் பறிபோகிறது ரசாயன தொழில் முதலீட்டு மண்டல திட்டம்

தமிழகத்தில், "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்து, நான்கு மாதங்களாகி விட்டன. இருந்தாலும், இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட, தமிழக அரசு முன்வராததால், திட்டம் அமலாவது கேள்விக் குறியாகியுள்ளது.
தமிழகத்தில், கடலூர், சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், "பெட்ரோலிய ரசாயன தொழில் முதலீட்டு மண்டலம்' அமைக்கப்படும் என, நான்கு மாதங்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது.இந்த மண்டலத்தில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில், 1.5 கோடி டன் திறன் கொண்ட, சுத்திகரிப்பு நிலையம், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்றும், இது தவிர, தனியார் நிறுவனங்கள் பல, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்து, தொழில் துவங்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கான ஒப்புதலை, பொருளாதார விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சரவைக் குழு, ஜூலை, 3ம் தேதி அளித்தது.

இந்தி விஷயத்தில் வேண்டாம் வீம்பு!

மொழிப்போர் / அத்தியாயம் 8
இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வுகள் மெல்ல மெல்லப் பொங்கியெழுந்த சமயத்தில் அண்டைப் பகுதியான ஐதராபாத்தில் போர்ச்சூழல் உருவானது. சமஸ்தான இணைப்பில் மத்திய அரசு தீவிரம் காட்டிவந்த சமயத்தில் ஐதராபாத் சமஸ்தானம் முரண்டு பிடித்தது. விளைவு, ஐதராபாத் நிஜாமின் ரசாக்கர் படைகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கையில் இறங்கியிருந்தது.
ஐதராபாத்தில் உள்ள கலவரச் சூழல் வேறு. இங்கே இருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு வேறு.  இரண்டும் ஒன்றாகி, மிகப்பெரிய கலவரங்கள் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் வேகத்தைச் சற்றே குறைத்துக்கொள்வது என்று போராட்டக்குழு முடிவெடுத்தது. 16 செப்டெம்பர் 1948 அன்று போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் பெரியார். இது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களை சோர்வடையச் செய்தது. அவர்களைத் தேற்றும் பொறுப்பை அண்ணா கையில் எடுத்துக்கொண்டார்.
‘போராட்டம் தீவிரமாகவும் வெற்றியை நோக்கியும் சென்று கொண்டிருப்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என்றாலும், ஐதராபாத்தில் நடந்துகொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு வரும்வரைக்கும் நம்முடைய நேரடி நடவடிக்கைகளை நிறுத்திவைக்கச் சொல்லியிருக்கிறார் பெரியார்.’ என்றார். அதன் அர்த்தம், ஹைதராபாத் யுத்தம் முடிந்ததும் மொழிப்போர் மீண்டும் தொடங்கும் என்பதுதான்.

கழிவு நீர் கால்வாயில் விஷ வாயு தாக்கி இரண்டு பேர் உயிரிழப்பு

  Unhygienic conditions: Sewage stagnates on Uthukuli - Vijayamagalam Road, causing concern to residents. 
 பெரம்பூரில் கழிவு நீர் கால்வாயில் விஷ வாயு தாக்கி பொறியாளர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். கழிவு நீர் கால்வாயை ஊழியர் சங்கர் சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கியதால், சங்கரை கை கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளார் பொறியாளர் வெங்கட்ரமணன். அப்போது வெட்கட்ரமணனும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.

மாணவன் தீக்குளிப்பு -ஆசிரியர் மோசமாக திட்டியதால், பொதுமக்கள் ஆவேசம்


பட்டுக்கோட்டையை அடுத்த  பள்ளிகொண்டான் ஊரில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான் மாணவன் லாரன்ஸ்.   ஆசிரியர் இருதயராஜ்  தன்னை மோசமாக திட்டுவதாக அடிக்கடி வீட்டில் குறை கூறி வந்துள்ளான். இது குறித்து பெற்றோர்கள் அலட்சியமாக இருந்துள் ளனர்.  இந்நிலையில் நேற்றும் ஆசிரியர் இருதயராஜ் திட்டவும்,  மாணவன் வீட்டில் வந்து புலம்பியுள்ளான்.  பெற்றோர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கையில் மாணவன் விபரீதமாக முடிவெடுத்துவிட்டான்.
இன்று இரவு 7 மணிக்கு வீட்டில் இருந்த மண்ணென் னையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தான். பலத்த காயங்களுடன் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 
பின்னர் மேல் சிகிச்சைக் காக தஞ்சை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.  அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.>நடந்த சம்பவம் அறிந்த ஊர் மக்கள் திரண்டு வந்து பள்ளி மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்க ஆவேசமாக உள்ளனர்.

சீனாவின் புதிய விமானம் தாங்கி கப்பல் யுத்தத்துக்கு உதவாது

சீனாவின் முதலாவது விமானம் தாங்கி கப்பல்: என்ன தமாஷ் பண்றேளா?

Viruvirupu.com
சீனா தமது முதலாவது விமானம் தாங்கி கப்பலை (aircraft carrier) கடற்படையில் நேற்று (செவ்வாய்கிழமை) இணைத்துக் கொண்டது. சீனாவில் ‘வளரும் ராணுவ பலத்துக்கு’ இந்த விமானம் தாங்கி கப்பல் முக்கியமானது என்று சீன அரசு அறிவித்துள்ள போதிலும், ராணுவ வட்டாரங்களில் இந்த கப்பல் பற்றி கிண்டலாகவே பேசப்படுகிறது.
“இதில் செலவிட்ட பணம் வேஸ்ட்” என்பதே ராணுவ வட்டாரங்களில் கூறப்படும் காமென்ட்.
முதல் விவகாரம், இந்த புதிய விமானம் தாங்கி கப்பலில் இறக்கி ஏற்றும் ரகத்திலாக விமானங்கள் ஏதும் சீனாவிடம் இல்லை. கப்பல் தயாரான பின்னரே விமானம் வாங்கப் போகிறார்கள். அதுவரை கப்பல் சும்மா பயிற்சிகளில் மட்டுமே ஈடுபடவுள்ளது.
ட்ரயைல் ரன் ஓடும்போது, சும்மா போர் விமானங்களை பொம்மை போல நிறுத்தியிருந்தது. (மேலே போட்டோ பார்க்கவும்)
அடுத்த விவகாரம், “இது சீனாவால் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பல்” என சீன அரசு பெருமையாக சொல்லிக் கொண்டாலும், சீனா இந்தக் கப்பலை முதல் பலகையில் இருந்து தயாரிக்கவில்லை.

இளம்பெண்ணை பலிவாங்கிய 50 ஆபாச SMS.!


 தர்மபுரி காமாட்சியம்மன் தெருவை சேர்ந்தவர் சண்முகம் அரசு பஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். சண்முகம் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பங்கு தாரராக உள்ளார்.
 இதேபோல் தர்மபுரி பி.டி.ஓ. காலனியை சேர்ந்தவர் சாஜினி என்கிற நந்தினி (24), சண்முகம் பங்குதாரராக உள்ள ஓட்டலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார்.
 அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினியை, சண்முகம் ஓசூரில் வைத்து 2-வது திருமணம் செய்து கொண்டார். பின்னர் நந்தினி அவரது வீட்டிலேயே இருந்து வந்தார். சண்முகம் அங்கு சென்று வந்தார். இதுபற்றி சண்முகத்தின் முதல் மனைவி கவிதாவின் உறவினர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் தினமும் நந்தினிக்கு டார்ச்சர் கொடுத்து வந்தனர்.
தினமும் அவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியும், ஆபாசமாக திட்டியும் மெசேஜ் அனுப்பி வந்தனர். இதனால் நந்தினி மனவேதனையில் தவித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4, 5 நெம்பர்களில் இருந்து 50 ஆபாச எஸ்.எம்.எஸ்.களும், கொலை மிரட்டல் மெசேஜ்களும் வந்து இருக்கிறது.
இதனால் மனம் உடைந்த நந்தினி அவமானம் தாங்கா மல் விஷம் குடித்தார்.

பொருட்காட்சிக்கு வாலிபருடன் சென்ற 2 இளம்பெண்களுக்கு அடி, உதை, அபராதம்

பாட்னா: பீகாரில் ஒரு வாலிபருடன் பொருட்காட்சிக்கு சென்றதற்காகவும், பான் மசாலா சாப்பிட்டதற்காகவும் 2 இளம்பெண்களை பஞ்சாயத்து உத்தரவின்பேரில் மக்கள் அடித்து உதைத்து அவர்களின் முடியையும் நறுக்கியுள்ளனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள பிரபல்பூரைச் சேர்ந்தவர்கள் கலா(15), ரதி(17)(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அவர்கள் கடந்த 20ம் தேதி மீனு(21) என்ற வாலிபருடன் சேர்ந்து பொருட்காட்சிக்கு சென்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பான் மசாலா சாபிட்டுள்ளனர். இதை அந்த பொருட்காட்சிக்கு சென்ற பிரபல்பூர்வாசிகள் பார்த்துவிட்டு வந்து கிராம பஞ்சாயத்தில் தெரிவி்த்துள்ளனர்.

வைத்தியசாலையில் ஓடும் எலியையே ஒழிக்க முடியாத அரசு”

அ.தி.மு.க.-வில் ‘கிலி கொள்ளும்’ அமைச்சர்கள் வழங்கிய, ‘எலி கொல்லும்’ உபாயம்!

Viruvirupu
“தமிழக அரசின் ‘ஆபரேஷன் எலி வேட்டை’ சக்ஸஸ். ஆனால், எலி நாட் அவுட்” என்று தெரிவித்துள்ளார் தமிழக அரசின் எலி ஒழிப்பு கான்ட்ராக்ட் பெற்ற நிறுவன அதிகாரி.
சென்னை அரசு வைத்தியசாலையில் இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது.
எலி அரசு ஊழியர் அல்ல ஆகையால், எலியை விட்டுவிட்டு,  இரு டாக்டர்கள் சஸ்பெண்டு செய்ய உத்தரவிட்டார் முதல்வர் அம்மா அவர்கள்.
கடித்தது டாக்டர்கள் அல்ல ஆகையால், தொடர்ந்தும் வைத்தியசாலையில் கடி விழுந்து கொண்டிருந்தது. ஊடகங்கள், தாறுமாறாக எழுதின. “வைத்தியசாலையில் ஓடும் எலியையே ஒழிக்க முடியாத அரசு” என்ற விமர்சனம் எழுந்தது. முதல்வருக்கு அவமானமாக போய்விட்டது.
இதையடுத்து, அமைச்சர்களை அழைத்தார் முதல்வர்.
முதல்வரின் அழைப்பு என்றதும், ‘கிலி கொள்ளும்’ அமைச்சர்களிடம், ‘எலி கொல்லும்’ உபாயம் பற்றி முதல்வர் கலந்து ஆலோசித்தார்.
32 அமைச்சர்களும் ‘ஆபரேஷன் எலி வேட்டை’யில் இறக்கி விடப்பட்டனர்.
ஏற்கனவே நம்ம அமைச்சர்கள் பற்றி வெளியே கேவலமாக பேசுகிறார்கள். சட்டசபை போட்டிகோவில் அம்மா காருக்கு பின்னால் தொந்தி குலுங்க ஓடும் அமைச்சர்கள், கிராமங்களில் சினிமா கொட்டாயி அறிவிப்பு வண்டிக்கு பின்னால் ஓடும் சிறுவர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்.

மின் தடைக்கு எதிராக மக்கள் கொதிப்பு..ஜெ. அவசர ஆலோசனை

 Jaya Convenes Cabinet Meeting On Power Cut
சென்னை: தமிழகம் முழுவதும் மின் தடை விவகாரம் மக்களை கொந்தளிக்க வைத்து வரும் நிலையில், பொன்னேரியில் மின்வாரிய அலுவலகத்தை தாக்கி அதிகாரிகளைய சரமாரியாக அடித்து மக்கள் தங்களது கொதிப்பைக் காட்டியுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
இதில் மின்தடை தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. கூடுதல் மின்சாரத்தைப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து அப்போது முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை மின்தடை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது. தொழில்துறை முற்றிலும் முடங்கிப் போய் வி்ட்டது. சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் நினைத்த நேரத்தில் ஒரு சட்னியைக் கூட அரைக்க முடியவில்லை. மின்விசிறிகளை சரிவர பயன்படுத்த முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மின்தடையாக உள்ளது. 10 மணி நேரம், 14 மணி நேரம், 16 மணி நேரம் என்று மாநிலத்தை கூறு போட்டு குலைத்துக் கொண்டிருக்கிறது மின்தடையின் கோரம்.
மக்கள் பெரும் தவிப்புடனும், கோபத்துடனும், கொந்தளிப்புடனும் உள்ளனர்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 85 பேர் கைது

  இலங்கை::சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 85 பேர் பருத்தித்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு படகுகளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
ஒரு படகில் பயணித்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பருத்தித்துறை பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.