ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

PTR : பொதுத் துறை நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன? - முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Dr PTR.Palanivel Thiaga Rajan - Former Minister for Information Technology & Digital Services, Tamil Nadu | Home

 hindutamil.in : தஞ்சாவூர்: அரசின் பொதுத் துறை நிறு​வனங்​கள் சரி​யான தலை​மைப் பண்பு இல்​லாத​தால் நஷ்டத்​தில் இயங்​கு​கின்றன என முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​தார்.
தஞ்​சாவூர் தொழில், வர்த்தக சங்​கம் சார்​பில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற சிறப்பு கருத்​தரங்​கில் பங்​கேற்​று, “வணி​கத்​தில் நெருக்​கடி​யான சூழலில் தலை​மைப்​பண்​பு” என்​கிற தலைப்​பில் முன்​னாள் அமைச்​சர் பிடிஆர்​.பழனிவேல் தியாக​ராஜன் பேசி​யது: சிஏஜி தணிக்கை அறிக்​கை​யில் தமிழக அரசின் நிறு​வனங்​களுக்​கான மூலதனச் செலவு 8 சதவீதம் என்​றும், சராசரி மூலதனத்​தின் மீதான வரு​வாய் 0.8 சதவீதம் மட்​டுமே என்​றும் கூறப்​பட்​டுள்​ளது.

திமுக மா.செ.க்கள் வயது 70- பதவி இழக்கும் 13 பேர் யார்?

 மின்னம்பலம் - மதி :திமுகவில் மாவட்ட செயலாளர்களுக்கு அதிகபட்ச வயது 70 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 70 வயதை கடந்த தற்போதைய மாவட்ட செயலாளர்கள் 13 பேர் தங்களது பதவிகளை இழக்க உள்ளனர்.
சென்னையில் இன்று ஆகஸ்ட் 22-ந் தேதி திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுகவை மறுசீரமைக்கும் அதிரடி முடிவுகள் தீர்மானங்களாக நிறைவேற்றன.