சனி, 16 டிசம்பர், 2023

நாடாளுமன்றத்தில் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் லலித்! ! - போலீஸுக்கு நீதிமன்றம் விதித்த கெடு!

Delhi court sends Parliament attack accused Lalit Jha to 7-day police remand

nakkheeran.in : நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரிக்கு இறைச்சி கட்டில் உட்பட five star வசதிகள் வழங்க உத்தரவு!

மின்னம்பலம் -christopher : அங்கித் திவாரி மீதான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர்.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு முதல் வகுப்பு கேட்டு அவரது தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புத் தலைமையகம் இலங்கையில் !

தேசம் நெட் : இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன.
மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாட்டில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கொழும்பு பாதுகாப்பு அறிக்கையும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளின் கடல் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க, மேற்படி பிரேரணையை முன்வைத்துள்ளதுடன், மாநாடு அதற்கு இணங்கியுள்ளது. இதனால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையை மையமாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம்..

tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்று அமைச்சர் எவ. வேலு தெரிவித்துள்ளார்.
சேலம் ஏற்காடு சாலையில் 1935 ஆம் ஆண்டு டி. ஆர் சுந்தரம் என்பவரால் மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ தொடங்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர், உள்ளிட்டோர் பணியாற்றியுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டு வரை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டது. அதன்பிறகு அந்த இடத்தை வர்மா கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனம் அந்த இடத்தை வாங்கி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

ED அங்கித் திவாரி வழக்கு - விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: நீதிமன்றம்!

மின்னம்பலம் - Selvam :  அங்கித் திவாரி வழக்கு – விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: நீதிமன்றம்!
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்ற வழக்கில் மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது.
மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி அங்கித் திவாரி, கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அங்கித் திவாரியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

இணுவில் வைத்தியசாலையும் .,மேரி ratnam அவர்களின் சேவையும்

May be an image of 2 people

Manikkavasagar Vaitialingam : இணுவில் வைத்தியசாலையும் .,மேரி ratnam அவர்களின் சேவையும்  தெரியாமல் போன வரலாறும் .சிந்திக்க மறுக்கும் தமிழினமும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
02.06.1873ஆம் ஆண்டு கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாநிலத்தில் பிறந்த மேரி ஏர்வின் ஐரிஷ்-ஸ்கொட்டிஷ் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
திருச்சபைக் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்கள் சமூக சீர்திருத்தங்களில் பங்குபற்றி சமூகத் தீமைகளை அகற்றும் நோக்குடன் மிஷனரி பணிகளில் ஈடுபடுபட்டு வந்த காலம்.  
மேரி ரட்னத்தின் இள வயது காலத்தில் இப்படியான பணிகளில் ஈடுபட்டார்.
அவர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சிபெற்று 1896இல் பட்டம் பெற்றார்.
வைத்திய சமூகப் பணிகள் செய்யும் “உலக சகோதரத்துவம்” என்கிற கிறிஸ்தவ இலட்சியத்தால் ஈர்க்கப்பட்ட அவர் வெளிநாட்டில் மிஷன்களுக்கான பணியில் ஈடுபட நியுயோர்க்கில் பயிற்சி பெற அனுப்பப்பட்டார்.

வியாழன், 14 டிசம்பர், 2023

நாடாளுமன்ற தாக்குதல்: நான்கு பேருக்கு போலீஸ் காவல்!


minnambalam - Selvam : மக்களவையில் வண்ண வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டு கைது செய்யப்பட நான்கு பேருக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் நேற்று (டிசம்பர் 13) பார்வையாளர் மாடத்திலிருந்து குதித்த இருவர் வண்ண புகை குண்டு வீசினர். உடனடியாக அவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே வண்ண வெடி குண்டுகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்ட இருவரையும் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
காவல்துறை விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா, மைசூர் மனோ ரஞ்சன், ஹரியானா நீலம் வர்மா, மகாராஷ்டிரா அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது. நான்கு பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இடைநிறுத்தம்- கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட

 மாலை மலர் : சென்னை பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கூச்சல் அமளி நிலவியதால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்குப் பிறகு அவை மீண்டும் கூடியது. அப்போது தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஈரான் பெண் உரிமை போராளி நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு!

வீரகேசரி ; ஈரான் கடும் சிறையில் வாடும் பெண் வீராங்கனைக்கு  நோபல் பரிசு
மனித சமூகத்தில் பெண் வழி சமூகம் என்பதே ஆரம்ப காலத்தில் காணப்பட்டது. ஆனால், சமூக கட்டமைப்பில் ஆண்கள், பெண்களை விட வலிமையானவர்கள் என்ற எண்ணக்கரு உருவானது.
இதன் காரணமாக பெண் அடிமைத்துவம் என்பது பன்னெடுங்காலமாக உலகில் பல சமூகங்களிலும் நிலவி வந்தது. ஆனால், காலமாற்றத்தால் உலகில் ஆண்களை விட பெண்கள் பல துறைகளிலும் இன்று முன்னேறிவிட்டனர்.
பெண் அடிமைத்துவம் என்பதே இன்று இல்லை என்று கூறுமளவு சில சமூக கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், சில பாரம்பரிய மத நடைமுறைகளை பின்பற்றும் நாடுகளில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் அடிமைத்துவத்துடனேயே நடத்தப்படுகின்றனர்.

  ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற சில நாடுகளில் இவ்வாறு பெண்களுக்கு எதிரான கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவதாகவும், பெண் அடிமைத்துவம் இருப்பதாகவும் கூறப்படுவதுண்டு. அதற்கிணங்க பல சம்பவங்களும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

புதன், 13 டிசம்பர், 2023

பாரதியின் மறுபக்கம் . உள்ளே பார்ப்பனீய பெருமை ..வெளியே சமரசம் ..?

க.ம.மணிவண்ணன்  : பாரதி(யார்? பாரதியின் கவிதைகளைப் படித்துவிட்டு அவரை வானளாவப் புகழும் நம்மில் பல பேர் அவர் சுதேசமித்திரன், இந்தியா ஏடுகளில் எழுதியவைகளையும் அவரது கட்டுரைகளையும் முழுமையாக வாசிப்பதில்லை, அவ்வாறு வாசித்திருந்தால் இன்றைய ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி களுக்கு அவர்தான் முன்னோடி என்பதும் அவர் மகாகவி அல்ல மகா"காவி" என்பதும் தெளிவாக விளங்கும்.

1) சுதேசமித்திரன் ஏட்டில் 1906ல் “எனது தாய்நாட்டின் முன்னாட் பெருமையும் இந்நாட் சிறுமையும்” என்ற தலைப்பில், “ஆரியர் வாழ்ந்து வரும் அற்புத நாடென்பது போய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேசமாயினதே” என்று எழுதியவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
2) 1907 இல், சுதேசமித்திரனில் “வந்தே மாதரம்” பாடலில் “ஆரிய பூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரம்” என்றெழுதி இந்தியாவை ‘ஆரிய பூமி’ என்றழைத்தவர்தான் பாரதி என்பது உங்களுக்குத் தெரியுமா?

மக்களைவையில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

  Kalaignar Seithigal - KL Reshma : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தின் தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், வீரர்களுக்கு தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
அதாவது கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் உயிரிழந்தனர்.
திடீரென மக்களைவையில் புகுந்த மர்ம நபர்கள்.. குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி - நடந்தது என்ன ?

ஊர்காவற்றுறை: ஆலயத்தில் நகைகள் பொற்காசுகளை திருடிய பூசாரி கைது!

ilakkiyainfo.com : ஊர்காவற்றுறை: ஆலயத்தில் இருந்த நகைகள் மற்றும் பொற்காசுகளை திருடிய பூசாரி கைது!
ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தீவகம் .ஊர்காவற்றுறை சுருவில் ஐயனார் கோவில் என அழைக்கப்படும்,  ஸ்ரீ பூர்ணா புஸ்கலாதேவி சமேத ஸ்ரீ அரிகரபுத்திர  ஐயனார் ஆலய மூல விக்கிரமான ஐயனார் விக்கிரம் , பரிவார மூர்த்திகளான பிள்ளையார் , முருகன் – வள்ளி தெய்வானை , நவக்கிரங்கள் , வைரவர் , நந்தி – பலி பீடம் , கொடி தம்ப பிள்ளையார் , சண்டேஸ்வரர் உள்ளிட்ட விக்கிரகங்களின் கீழ் இருந்த யந்திர தகடுகளை ஆலய பூசகர் திருடி விற்று வந்தார் எனும் குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீக்கிய தலைவர் நிஜ்ஜார் கொலை - பாராளுமன்ற பேச்சிற்கு காரணம் வெளியிட்ட ட்ரூடோ

மாலை மலர்  : இந்தியாவிலிருந்து ஒரு பகுதியை பிரித்து சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி துவக்கப்பட்டது காலிஸ்தான் பிரிவினை அமைப்பு. இதன் முக்கிய தலைவராக இருந்தவர் ஹர்திப் சிங் நிஜ்ஜார் (45).
கடந்த ஜூன் மாதம், கனடாவின் வேன்கூவர் புறநகர் பகுதியில் ஒரு வழிபாட்டு தலத்திற்கு வெளியே ஹர்திப் துப்பாக்கி ஏந்திய இருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இப்பின்னணியில் கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஹர்திப் சிங் கொலையில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு பங்கு இருப்பதாக அறிவித்தார்.
பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இந்த விவகாரம் இரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த நல்லுறவை பின்னுக்கு தள்ளியது.

பாஜகவின் 3 மாநில வெற்றிகள் ..மாநிலங்களின் தனித்தன்மைக்கு நெருக்கடி? ஒன்றிய கோட்பாட்டுக்கு சவால்?

tamil.oneindia.com - Shyamsundar I ;  டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை பிடித்தது.
ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் பாஜக 115 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான தகுதியைப் பெற்றது.
மத்திய பிரதேசத்தில்., பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி பெற 116 இடங்கள் போதும். அங்கே சாரதான வெற்றி இல்லாமல் மாபெரும் இமாலய வெற்றியை பாஜக பதிவு செய்து உள்ளது. இந்தியா கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் களமிறங்கியது அங்கே பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளது.
மேலும் சட்டசபை தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக அபரா வெற்றி பெற்றது.

துரை தயாநிதி மருத்துவத்திற்கு அமெரிக்கா அழைத்து செல்லப்படுவார்!

மின்னம்பலம் - Kavi :  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை அமெரிக்கா அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் ஆலோசித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி டிசம்பர் 6 ஆம் தேதி தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.
அன்றிரவு நண்பரின் வீட்டிலேயே தங்கிய அவரை விடிந்து நண்பர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.
ஆனால் துரை தயாநிதி எழுந்திருக்கவில்லை. துரையின் மனைவிக்கு போன் செய்து தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
அருகில்தான் வீடு என்பதால் அவரது மனைவியும் அங்குச் சென்று தனது கணவரை எழுப்பியபோது மயக்கத்திலிருந்தது தெரிய வந்தது.

தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது” : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP வலியுறுத்தல்!

கலைஞர் செய்திகள்  : தேர்தல் ஆணைய மசோதாவை நிறைவேற்றக்கூடாது என மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் ஜம்மு - காஷ்மீர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா என பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது.
இன்றைய கூட்டத் தொடரில் தேர்தல் ஆணையர் நியமனம் செய்வது தொடர்பான புதிய சட்டத்திருத்த மசோதாவை சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார்.

செவ்வாய், 12 டிசம்பர், 2023

கச்சா எண்ணெயை அகற்றும் பணியை விரைவுபடுத்த வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம்

 tamil.abplive.com :  த. மோகன்ராஜ் மணிவேலன் :  மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த சென்னையும் கடந்த வாரம் முழுவதும் ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளத்தினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது.
வெள்ள பாதிப்புகள் ஒருபுறம் மக்களை தொந்தரவு செய்ய, சென்னை திருவொற்றியூரில் உள்ள CPCL -இல் இருந்து கச்சா எண்ணெய் கழிவுகள் வெள்ள நீரில் கலந்துள்ளது.
இதனால் திருவொற்றியூர் முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இது மட்டும் இல்லாமல், கொற்றலை ஆற்றிலும் இந்த கச்சா எண்ணெய் கழிவுகள் கலந்து கடலில் கலந்து வருகின்றது.
இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகள் உள்ளது என சூழலியல் தொடர்பான செயல்பாட்டாளார்கள் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட பிரபாகரன் திடீர் கொலை! அமைச்சர் நேருவின் தம்பி

tamil.oneindia.com - Shyamsundar :  அப்படியே உறைந்து போன திருச்சி! ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திடீர் கொலை.. என்ன நடந்தது?
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர் திருச்சியில் கொலை செய்யப்பட்டு உள்ளார். வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு உள்ளார் .
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் இவரிடம் கடந்த கடந்த சனிக்கிழமைதான் விசாரணை நடத்தினர். நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
Politician Ramajeyam murder case witness Prabu killed by a gang in Trichy
ராமஜெயம் கொலை வழக்கு; திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

30 லட்சம் குடும்பத்தினருக்கு மழை நிவாரணத் தொகை

மின்னம்பலம் - Monisha : மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் 25 முதல் 30 லட்சம் குடும்பத்தினர் நிவாரணத் தொகையை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25 to 30 lakh families get rain relief fund
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிவாரணத் தொகையானது குடும்ப அட்டை அடிப்படையில் வழங்கப்படும் என்றும், இதற்காக டோக்கன் விநியோகிக்கப்பட்ட பின்னர் மக்கள் நியாய விலை கடைகளில் நிவாரணத் தொகையை ரொக்கமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள், 11 டிசம்பர், 2023

ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் புசித்தார்கள்? வால்மீகி ராமாயணம்.


 சார்வாகன் 
: இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம்.
மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் --"சார்வாகன்" !
கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவ தற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama
நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு பற்றி உமர் அப்துல்லா , மெஹபூபா முப்தி கடுமையான விமர்சனம்

மின்னம்பலம்   - Selvam ; umar abdullah says supreme court judgement disheartened    ஜம்மு காஷ்மீர் தீர்ப்பு: உமர் அப்துல்லா ரியாக்‌ஷன்!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது என தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவர் உமர் அப்துல்லா இன்று (டிசம்பர் 11) தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது. 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. அதனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம். எங்களுடைய போராட்டம் தொடரும். பாஜக இந்த இடத்திற்கு வர பல தசாப்தங்கள் ஆனது. கடினமான நீண்ட பயணத்திற்கு தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.செல்வம்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

hindutamil.in :  புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11) தனது தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாக, இந்த வழக்கில் 3 விதமான தீர்ப்பு உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தீர்ப்பை வாசித்தார். அதில் அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே. சட்டப்பிரிவு 1 மற்றும் 370ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

காங்கிரஸின் மாநிலங்களவை ஒடிஷா காங்கிரஸ் எம்.பி.தீரஜ் சாகு வீட்டில் 300 கோடி வரி ஏய்ப்பு

tamil.goodreturns.in - : காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் தீரஜ் சாகு. வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளின் பேரில் வருமான வரித்துறையினர் கடந்த 6ம் தேதி முதல் இவரது வீடுகள் மற்றும் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள அவரது பௌத் டிஸ்டில்லி பிரைவேட் லிமிடெட் நிறுவன வளாகங்களில் சோதனை நடத்தினர்.
கடந்த 4 தினங்களாக நடைபெற்ற இந்த சோதனையின் போது வருமான வரித்துறையினர் சுமார் ரூ.300 கோடியை ரொக்கமாக கைப்பற்றினர். இது, ஒரே நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கைப்பற்றப்பட்ட பெரிய தொகை என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
காங்கிரஸ் எம்பி வீட்டில் வருமான வரி ரெய்டு.. சிக்கிய பணத்தை எண்ணி முடிக்கவே இன்னும் 2 நாள் ஆகுமா..!

அப்பல்லோவில் துரை தயாநிதி- முழு கலைஞர் குடும்பமும் மருத்துவமனையில் .. விபரம்

minnambalam.com - Kavi :  அப்பல்லோவில் குவிந்த கலைஞர் குடும்பம்! ஆபரேஷன்… வெண்டிலேட்டர்… துரை தயாநிதியின் ஹெல்த் கண்டிஷன்!
வைஃபை ஆன் செய்ததும் மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும், ’அழகிரியின் மகன் துரை தயாநிதி ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கிறது?’ என்ற கேள்வி இன்பாக்சில் வந்திருந்தது.
இதுகுறித்து திமுக உயர் மட்ட வட்டாரங்களில் விசாரித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“டிசம்பர் 6 ஆம் தேதி தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார் துரை தயாநிதி. நண்பரின் வீட்டிலேயே தங்கியவரை அடுத்த நாள் காலையில் நண்பர்கள் எழுப்பியிருக்கிறார்கள்.
அவர் எழுந்திருக்காததால், துரையின் மனைவிக்கு போன் செய்து சொல்லியிருக்கிறார்கள்.

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

thenewsminute தன்யா ராஜேந்திரனின் முதலாளி சித்திரா சுப்பிரமணியன் Duella யார்? இவர்களின் ஆர் எஸ் எஸ் தொடர்புகள் .. flashback

ராதா மனோகர் : Mrs .chitra subramaniam duella  சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
Dhanya Rajendran

ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.   
இவர்  சுவிஸ்லாந்தை சேர்ந்த  டாக்டர் கியான்கார்லோ டூல்லா  என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு   செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில்  ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.
திரு ராஜீவ் காந்தியை ஒரு ஊழல் பேர்வழி என்று பொதுமக்களை நம்பவைத்ததில் இவரின் நச்சு எழுத்துக்கு பெரும் பங்கிருக்கிறது  
இவரின் ஒவ்வொரு  எழுத்தையும்  பெரிய பிரசார ஆயுதமாக தலைமேல் சுமந்தவர் திரு வை கோபாலசாமியாகும்.
chitra subramaniam duella

இவர்  1958 ஆம் ஆண்டில்  ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்தார்.
தில்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் இதழியலில் முதுகலை டிப்ளோமாவும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 1989 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தேர்தல் தோல்விக்கு இவர் எழுதிய போபோர்ஸ் கதைதான் பெரிய அளவில் பயன்பட்டது என்று கூறப்படுகிறது.
திரு ராஜீவ் காந்தி காலத்தில் நடந்த போபர்ஸ்- ஹோவிட்சர் bofors howitzer பீரங்கி  ஒப்பந்தம் பற்றி ஒரு நாள் சுவீடன் வானொலியில் ஒரு செய்தி வெளியானது

ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதா கிருஷ்ணன் நேரத்திற்கு ஒரு ஆடை சினிமா நடிகன்!

May be an image of 7 people and text that says 'மிக்ஜாம் புயல்: பொதுமக்களுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை! HEW ம பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ராதாகிருஷ்ணன் புதிய தகவல் TWE'

சாவித்திரி கண்ணன் : பெருமழை காலத்தில் களத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் தான் சொல்லி ஆச்சரியப்பட்டனர்! கடுமையான புயல், மழை சமயங்களில் கூட இவரால் எப்படி நாளொன்றுக்கு மூன்று உடைகள் மாற்றிக் கொள்ள முடிகிறது!
முதலமைச்சர் வெள்ள நிவாராணப் பணிகளை பார்வையிட வருகிறார் என்றால், அந்த இடத்தில் ஒரு டிரஸுடன் ஆஜர் ஆகிறார்!
வேறொரு இடத்தில் அமைச்சர் மா.சு வருகிறார் என்றால், அங்கு ஒரு டிரஸ் மாற்றி வந்துவிடுகிறார்.
மாலை பிரஸ் மீட் தருகிறார் என்றால், அப்போது முற்றிலும் வேறொரு உடை!
நடிகர்கள் கூட தோற்றுவிடுவார்கள்! ஐம்பது வயதை கடந்த அடையாளத்தை அழகாக மேக் அப்பில் சரி செய்து தோற்றப் பொலிவுடன் வந்துவிடுவார்!