bbc.com - எழுதியவர், திலீப் குமார் : பதவி, கெளஹாத்தியில் இருந்து பிபிசி இந்திக்காக
அருணாச்சலப் பிரதேசத்தில் பாயும் சியாங் நதியின் ஓட்டத்தில் சமீப ஆண்டுகளாக வித்தியாசமான மாற்றங்கள் காணப்படுகின்றன.
சியாங் ஆற்றின் விசித்திரமான நடத்தை காரணமாக சில சமயங்களில் அதில் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக அதிகரிக்கிறது.
இதனால் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன. நதி முற்றிலும் வறண்டு கிடப்பதையும் பலமுறை பார்க்க முடிகிறது.
கிழக்கு சியாங் மாவட்டத்தின் மெபோ தாலுகாவில் வசிக்கும் டாக்டர் டாங்கி பர்மா, சிறுவயதிலிருந்தே சியாங் ஆற்றின் இந்தப்போக்கை கவனித்து வருகிறார்.
ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவர் மிகவும் கவலையாக இருக்கிறார்.
"முன்பு சியாங் நதியின் நீர் மிகவும் தெளிவாகவும் நீல நிறமாகவும் இருந்தது. ஆனால் இப்போது சில ஆண்டுகளாக இந்த நதியின் நீர் சேறும் சகதியுமாக உள்ளது," என்று அவர் கூறுகிறார்.
சனி, 16 செப்டம்பர், 2023
பிரம்மபுத்திராவில் மெகா அணை - சீனாவின் திட்டத்தை சமாளிக்க இந்தியா என்ன செய்யப் போகிறது
தமிழ்நாட்டில் 'அரபி வகுப்பு' என்ற பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ்.சுக்கு ஆள் சேர்ப்பா? என்.ஐ.ஏ. கூறுவது என்ன? BBC tamil
bbc.com - எழுதியவர், ச.பிரசாந்த் : கோவையில் கடந்த ஆண்டு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதிலும் 25 இடங்களுக்கு மேல் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவிலின் முன்பாக கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள், ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த, 11 பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
NIA Raid சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்களில் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - ஹார்டு டிஸ்க், மொபைல் சாதனங்கள்...
மாலை மலர் : கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த இவர் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 13 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரோகிணியும் ஆண்ட்ரியாவும் நீதிக்காக போராடும் போது அவர்கள் தனியாக நிற்கவில்லை!
சுமதி விஜயகுமார் : Witness திரைப்படத்தின் போஸ்டர் வெளியான போது அந்த திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
பிறகு மறந்து போனது. சில வாரங்களுக்கு முன்னர் நினைவிற்கு வர, படத்தை பார்த்தேன்.
செழியனையும் பார்க்க அழைத்தேன். முழு படத்தையும் பார்க்க மாட்டான் என்று தெரியும்.
ஆனாலும் பார்க்கிற வரை பார்க்கட்டும் என்று இருவரும் பார்க்க துவங்கினோம்.
முதல் காட்சி முடிந்து, ரோகினி கைகளில் இரண்டு விளக்கமாறுகளை வைத்துக் கொண்டு மற்ற பெண்களுடன் சேர்ந்து ரோடை கூட்டிக் கொண்டிருப்பார்.
அதை பார்த்ததும் செழியன் என்னிடம் கேட்டது 'Is this even a job in India?' . அப்படி கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
'இது பரவாயில்லை. அந்த பெண்ணின் மகன் என்ன வேலை பார்ப்பான் என்று பார்' என்றேன்.
வெள்ளி, 15 செப்டம்பர், 2023
ஒருநாளுக்கு முன்னதாகவே வந்த மகளிர் உரிமை தொகை!
மின்னம்பலம் - christopher : கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கப்படும் நிலையில், ஒருநாளுக்கு முன்பாகவே தங்களது வங்கி கணக்கில் ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் வெளியிட்டார். கடந்த 2 மாதமாக விண்ணப்பங்களை பெற்று பயனாளர்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
நேற்று வந்த ஆயிரம்!
மாநிலம் முழுவதும் மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.06 கோடி பயனாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
நீங்கள் ஏன் பா.ஜ.கவில் இணையக்கூடாது ? செந்தில் பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை- கபில் சிபில் குற்றச்சாட்டு
மாலைமலர் : நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரிய வழக்கு தொடர்பாக புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என்று விசாரணையின்போது அமலாக்கத்துறை கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மலையகத்தில் ஒரு சுயமரியாதை முழக்கம்! அமைச்சர் ஜீவன் தொண்டமான் : எங்கள் மக்களுக்கு சுயமரியாதை தேவை!
ராதா மனோகர் : இலங்கையில் சுயமரியாதையை ஓங்கி ஒலிக்கும் ஓரே ஒரு தமிழ் தலைவர்
அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான்! .
இந்த காணொளியில் இவர் பல விடயங்களை முன்வைத்திருக்கிறார்
அவற்றில் அவற்றை பற்றிய ஒரு முன்னோட்டம்தான் இது
முழு காணொளியையும் பாருங்கள்!
திரு ஜீவன் தொண்டமான் : நெறைய பேர் மலையகத்தின் வறுமையை மட்டும்தான் காண்பிக்கிறாங்க
மலையகத்தின் பெருமையை ஏன் காண்பிக்கலை?
நான் எப்படி வரமுடியும்?
உங்களுக்கு தெரியுமா மலையகத்தில் இருந்து படிச்ச 35 பேர் இன்னைக்கு வெளிநாட்டில உயர்ந்த பதவில இருக்காங்க.
தோட்டத்தில உள்ள பிரச்சனை காண்பியுங்க நான் இல்லைன்னு சொல்லல
ஆனா நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கோம்ன்னு சொல்லுங்க
மலையகத்தில சௌமியமூர்த்தி தொண்டமான் இல்லைன்னா இன்னைக்கு மலையகத்தில் ஆசிரியர்கள் வந்திருக்க முடியுமா?
இந்திய கூட்டணி கட்சிகள் 14 செய்தி தொகுப்பாளர்களை புறக்கணிக்கிறது பட்டியல் வெளியீடு
மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டப்பின் இந்த குழு கூடியது. அடுத்தப்படியாக தொகுதி பங்கீடுதான் முக்கிய இலக்கு என தெரிவித்து இருந்தது.
இது தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதோடு இந்தியா கூட்டணி சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியை புறக்கணிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடைசி பந்தில் இலங்கை அணி 'த்ரில்' வெற்றி! வெளியேறியது பாகிஸ்தான்
தினமலர் : கொழும்பு: ஆசிய கோப்பை 'சூப்பர்-4' போட்டியில், கடைசி பந்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற, பைனல் வாய்ப்பை இழந்தது பாகிஸ்தான் அணி. இதனையடுத்து வரும் 17ம் தேதி நடக்கும் பைனலில், இந்தியாவுடன், இலங்கை அணி மோத உள்ளது.
இலங்கையில் நடக்கும் ஆசிய கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் நடக்கும்'சூப்பர்-4' போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன..
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளி பெற்றிருந்தன. இப்போட்டியில் வெல்லும் அணி பைனலுக்கு முன்னேறலாம் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கின.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன் உள்ளிட்டோரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை- ஒன்றிய அரசு தகவல்
முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு. பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட 4 பேரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி வழக்கு தொடர்ந்தார்.
விஷ ஊசி போட்டு கொலை செய்த பாட்டியின் அதிர்ச்சி வாக்கு மூலம்.
திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விடுதி அறையில் இருந்து 12 வயது சிறுமி சடலமாகவும் 55 வயதான பெண்ணொருவர் சுயநினைவற்ற நிலையிலும் செவ்வாய்க்கிழமை (12) மீட்கப்பட்டனர்.
சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின் உடல்நலம் தேறிய நிலையில் அவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்,
லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியது
மாலை மலர் : திரிபோல மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
வியாழன், 14 செப்டம்பர், 2023
ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது வி எச் பியை சேர்ந்த இவர் அம்பேத்கர் திருவள்ளுவர் பற்றி அவதூறு பேசியதால்
மாலைமலர் : சென்னை மாம்பலம் ராஜம்மாள் தெருவில் வசித்து வருபவர் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன்.
84 வயதான இவர் மாம்பலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.
அப்போது அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் பற்றி அவதூறு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை கூறியுள்ளார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-
அம்பேத்கர்தான் அரசியல் அமைப்பை கொடுத்தார்னு பல பேரு எழுதிகிட்டு இருக்காங்க.. பேசிகிட்டு இருக்காங்க.. இப்ப இருக்கிற ஆட்சியாளர்களும் இதையே சொல்லிகிட்டு இருக்காங்க.. துதி பாடிகிட்டு இருக்காங்க.
செங்காந்தள் (Gloriosa superba) புற்றுநோய் செல்களை அழிக்கும் வேதிப்பொருள்! கோவை பேராசிரியர்கள் காப்புரிமம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் செங்காந்தள் (Gloriosa superba) என்னும் தாவரத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் வேதிப்பொருள் இருப்பதாகக் கண்டறிந்து அதற்கு காப்புரிமம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கு (tuber) பகுதியில் இருக்கும் கொல்கிசின் (Colchicine) எனப்படும் வேதியியல் மூலக்கூறு புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 31 அன்று மத்திய அரசு இதற்கு காப்புரிமம் வழங்கியுள்ளது. இது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை.. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்: வழிகாட்டு நெறிமுறைகள்!
கலைஞர் செய்திகள் : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு:-
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
லிபியாவில் வெள்ளம் 5,300 பேர் பலி, 10,000 பேரை காணவில்லை - என்ன நடந்தது? - BBC News தமிழ்
bbc.com : லிபியாவில் சுனாமி போன்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 5,300 பேர் உயிரிழந்ததாகவும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போனதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் இருந்து மேன்மேலும் சடலங்கள் வெளியேறிக் கொண்டே இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று டேர்னா நகரில் டேனியல் புயல் தாக்கியபோது 2 அணைகளும் 4 பாலங்களும் இடிந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கிவிட்டன.
எதிர்வரும் 5 மாநில தேர்தல்களில் பொதுவேட்பாளர்! இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்
minnambalam.com: இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?
மின்னம்பலம் -Selvam : இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என்சிபி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நிறைவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் உறுப்பினர் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை ஒருங்கிணைப்பு குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
புதன், 13 செப்டம்பர், 2023
ரணில் விக்கிரமசிங்க மம்தா பானர்ஜி துபாயில் சந்திப்பு! இந்தியா’ கூட்டணி தலைவர் நீங்களா? மம்தாவிடம் ரணில்!
இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணிக்கு தலைவர் நீங்களா?
என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கேட்
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன.
இந்த கூட்டணி சார்பில் 3 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
சமீபத்தில் மும்பையில் நடந்து முடிந்த 3வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழுக்கள் அமைக்கப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் :பாஜகவின் ரபேல் ஊழலும், அதானி முறைகேடுகளையும் திசை திருப்பும் முயற்சியை முறியடிப்பீர்
எந்த ஒரு பிரச்சனையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.
நாட்டில் நடைபெறும்-பற்றி எரியும் எந்தப் பிரச்சனைக்கும் வாய் திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள்.
இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லி சரத்பவார் வீட்டில் இன்று!.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
Dr. Kafeel kha வாழ்வை முடக்கிய உ.பி. அரசு; வாழவைக்கும் தமிழ்நாடு அரசு! கோராக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்
nakkheeran.in : கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. மருத்துவர் கஃபீல்கான் எழுதிய 'The Gorakhpur Hospital Tragedy: A Doctor's Memory of a Deadly Medical Crisis' என்ற நூலின் தமிழாக்கமான 'கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம்:
ஒரு மருத்துவரின் நினைவலைகள்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மோடியின் ஒன்றிய அரசு, பல்வேறு குளறுபடிகளைச் செய்தது. சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தாமல் கொரோனா பரவலுக்கு வழிவகுத்தது, இஸ்லாமியர்களின்மீது பழியைத் தூக்கிப்போட்டது,
திடுதிப்பென லாக்டௌனை அறிவித்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாடுமுழுக்க நடக்கவிட்டுப் பலர் மரணிக்கக் காரணமானது.. என அடுக்கிக்கொண்டே போகலாம்.
மாலத்தீவில் 'இந்தியாவே வெளியேறு' முழக்கம்: சீனாவுக்கு ஆதரவு பெருகுவது ஏன்? - BBC News தமிழ்
bbc.com -, அபிஜித் ஸ்ரீவஸ்தவா : பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மாலத்தீவு, புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது. இதனால் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகளை இந்தியா அளித்து வருகிறது.
இந்நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்த சீனாவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாலத்தீவில் இந்தியா வெளியேற வேண்டும் என்ற பிரசாரம் பெருகி வருவது உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செவ்வாய், 12 செப்டம்பர், 2023
இயற்கைக்கு சிங்களவன் தமிழன் பேதமெல்லாம் கிடையாது . சுனாமியும் போர் அழிவும் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...
ராதா மனோகர் ; இயற்கை அழிவுகள் கூட உங்கள் மனங்களில் இருந்துதான் ஆரம்பம் ...
Collective Consciousness ... become Collective Unconsciousness. Then it will create material realities
தனி மனிதர்களுக்கு இருக்கும் மன நிலை அவர்களை வாழ்வை தீர்மானிக்கும் என்பதை பற்றி பல தடவைகள் எழுதி உள்ளேன்.
அவற்றை பலரும் ஏற்றுகொண்டாலும் ஏற்று கொள்ளாவிட்டலும் அதுதான் உண்மை.
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போன்று மனமே வாழ்க்கையை உற்பத்தி செய்கிறது. இங்கே நான் சொல்ல வரும் விடயம் அது அல்ல.
உலக வரலாற்றில் எங்கெல்லாம் இயற்கை அழிவுகள் நடக்கின்றதோ அங்கெல்லாம் அதை தொடர்ந்து அல்லது அதற்கு முன்பாகவே மக்கள் அமைதி இழந்து நாட்டில் குழப்பங்கள் நிலவுவதை காணலாம்.
இதை ஒரு தற்செயலான நிகழ்வு என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் .
சீமான் மீது வன்கொடுமை தடைச்சட்டத்தில் கீழ் வழக்கு. போலீசில் இன்னும் ஆஜராகவில்லை
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதை தொடர்ந்து விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனையையும் மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணைக்கு வருமாறு அவருக்கு நேரில் சம்மனை வழங்கினார்கள். அதில் 10-ந் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) வளசரவாக்கம் போலீசில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
AR Rahman: `இனி மறக்குமா நெஞ்சம்?!' - களேபரமான விழா ; சிக்கிய முதல்வர் வாகனம்; போலீஸ் விசாரணை!
vikatan.com - ரா.அரவிந்தராஜ் : கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஈ.சி.ஆர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் `மறக்குமா நெஞ்சம்?' இசைக் கச்சேரி மழை காரணமாக கடைசி நேரத்தில் தடைப்பட்டு, தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனி எப்போது மறு தேதி அறிவிக்கப்படும் என்று காத்துக்கொண்டிருந்தனர். அந்த நிலையில்தான், `மழை வந்தாலும், வராவிட்டாலும் நாம் இசை கச்சேரி நடத்துவோம்' எனக் கூறி, செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி நடக்கும் என நாள் குறிக்கப்பட, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால், முன்பு `கச்சேரி நடக்கவில்லையே!'... எனக் கொந்தளித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம், இன்று `இதெல்லாம் ஒரு கச்சேரியா... இப்படியா நடத்துவீர்கள்?' எனக் கடும் கோபத்தோடு குமுறிக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது?
ஜி 20 உச்சி மாநாடு நடத்த 300 மடங்கு அதிக செலவா? வெடித்த சர்ச்சை!
tamil.oneindia.com - Mani Singh S : டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு நடத்த 300 மடங்கு அதிக செலவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. ஜி 20 உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாடு ஜி 20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு இந்தோனேசியா ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டை ஏற்று நடத்தியது. கடந்த இரு தினங்களாக ஜி 20 மாநாடு நடைபெற்றது. ஜி 20 மாநாட்டை சிறப்பாக நடத்த பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டது.
கேரளா முதலமைச்சர் திரு பினராயி விஜயன் செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று இலங்கை வருகிறார்
thinakaran.lk - Rizwan Segu Mohideen : கேரளா முதலமைச்சர் திரு பினராயி விஜயன் செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏஏற்றார்
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயனை சந்தித்தார்.
கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று (11) திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் 1970ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள மலையக மக்களில் 1480 குடும்பத் கேரளாவில் மீள்குடியேற்றப்பட்டனர். இவர்கள் R.P.L. (Rehabilitation Plantation limited) நிறுவனத்திலும், கேரளா வன அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திலும் தொழில்புரிகின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிர்சசினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
திங்கள், 11 செப்டம்பர், 2023
உதயநிதியின் கொசுவர்த்தி சுருள் சனாதன கொசுக்களை விரட்டுமா? புதிய அதிரடி
தினமலர் : சென்னை: சனாதன தர்மத்தை கொசுவை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது சர்ச்சையான நிலையில், சமூக வலைதளத்தில் கொசுவை விரட்டுவதை உணர்த்தும் வகையில் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது 'கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்டவேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்யவேண்டிய முதல் பணி' எனப் பேசியிருந்தார்.
இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
15 துறைகளில் தமிழ்நாடுதான் முதலிடத்தில்! ஒன்றிய அரசின்National Import-Export Record for Yearly Analysis of Trade அறிக்கை
:; சென்னை: வடமாநிலங்கள் ஏதாவது துறையில் முதல் இடத்திலிருந்தால் பலரும் வாய் பிளந்து பேசுவார்கள்.
ஆனால், அதற்கு நிகராக தமிழ்நாடு பல துறைகளில் முதல் இடத்தில் வெற்றி நடைபோட்டு வருகிறது.
ஆனால், அவை எந்தெந்த துறை என்பது தமிழர்களுக்கேத் தெரியாது.
உண்மையில் எந்தெந்த துறையில் வீரநடை போட்டு வருகிறது என ஒன்றிய அரசின் 'NIRYAT' (National Import-Export Record for Yearly Analysis of Trade) அறிக்கை பட்டியல் போட்டுக்காட்டி உள்ளது.
அதைத் தொகுத்துத் தருகிறது இந்தக் கட்டுரை. இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடுதான் நம்பர் 1. ஆகவேதான் தமிழ்நாட்டைத் தோல் ஏற்றுமதியின் தலைநகரம் என்கின்றனர்.
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் களிர் பயன்பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியிருப்பதவாது:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15-ஆம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது.
அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் நடைபெற இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் - ஆயிரம் ரூபாயை மாதாமாதம் - ஆண்டு தோறும் பெறப் போகிறார்கள்.
பாரதியும் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞர் வாலிகளும்
ராதா மனோகர் : இன்று மகாகவி பாரதியாரின் நினைவு நாள்!
தமிழ் கவிதைகளை பற்றி பேசும்போது தவிர்க்கவே முடியாதபடி பல கவிஞர்களை பற்றி பேசியே தீரவேண்டி இருக்கிறது!
கவிஞர் கண்ணதாசன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிஞர் வாலி இன்னும் பல உன்னத கவிஞர்கள் தமிழுலகை வளப்படுத்தி உள்ளார்கள்!
உண்மையில் பாரதியாரை விட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் கண்ணதாசனும் கவிஞர் வாலியும் பல நல்ல கவிதைகளை படைத்துள்ளார்க்ள
ஆனால் அவர்களை வெறும் சினிமா கவிஞர்கள் என்று மட்டுப்படுத்தி விட்டு,
மகா கவி பாரதியை விமர்சனங்களுக்கு அப்பால் பட்ட ஒரு தெய்வீக கவிஞர் என்ற ரீதியில் தொடமுடியாத உயரத்தில் வைத்துவிட்டது பார்ப்பனீயம்!
ஆமாம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஊடக வெளியில் எல்லையற்ற ஆதிக்கத்தை செலுத்திய பார்ப்பனர்களால் ள் திட்டமிட்டு கட்டி எழுப்பப்பட்ட ஒரு மகா பிம்பம்தான் பாரதி!
மீண்டும் சொல்கிறேன் பாரதி ஒரு நல்ல கவிஞர்தான் அதில் மாற்று கருத்தில்லை
ஆனால் ஒரு பாரதியை உயர்த்தவேண்டும் என்பதற்காக பாரதியை விட சிறந்த கவிஞர்களை எல்லாம் வெறும் சினிமா கவிஞர்கள் என்று மலினப்படுத்தியதை எப்படி ஏற்று கொள்ளமுடியும்?
உண்மையில் பாரதி இன்றிருந்தால் எனது இந்த கருத்தை ஏற்றுக்கொள்வார்.
ஏனெனில் பல பார்ப்பனர்களை விட கொஞ்சம் நேர்மையான சிந்தனை பாரதியிடம் இருந்தது.
மொராக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது !
அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.
தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
ஞாயிறு, 10 செப்டம்பர், 2023
ஸ்டாலின்-ஜோ பைடன் சந்திப்பு! பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? வேல்முருகன்
tamil.oneindia.com - Arsath Kan : கடலூர்: இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சருக்கும் கிடைக்காத பெருமையாக அமெரிக்க அதிபரை சந்திக்கும் வாய்ப்பு தமிழக முதலமைச்சருக்கு கிடைத்திருக்கிறது என தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
பத்தோடு பதினொன்றாக டெல்லிக்கு சென்று கும்பிடு போட்டிருந்தால் இந்த மரியாதை கிடைத்திருக்காது என்றும் தனித்துவமான ஆட்சி நிர்வாகத்துக்கும், சமூக நீதி செயல்பாட்டுக்கும் கிடைத்த பெருமை தான் இந்த நிகழ்வு என வேல்முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இராஜராஜனின் தந்தை சுந்தரச்சோழன் கொடுத்த அன்பில் செப்பேடு... ஏடு கொடுத்தவர் பெயர் சூத்திரனாம்!
Marirajan Rajan : 1919 ஆம் வருடம். திருச்சி அருகே உள்ள ஒரு கிராமம். அன்பில் என்பது அக்கிராமத்தின் பெயர்..
அக் கிராமத்தில் ஒருவர் தனது வீட்டை பெரிது படுத்துவதற்காக கடைக்கால் தோண்டுகிறார்..
அதென்ன ஒருவர்..?
அவருக்கு பெயர் இல்லையா..?
நிச்சயம் இருந்திருக்கும்..
ஆனால்....?
அவ்வாறு கடைக்கால் தோண்டும்போது.. பூமிக்கடியில் 11 ஏடுகள் கொண்ட செம்பு பட்டயங்கள் கிடைத்தது.. செப்பேட்டில் எழுத்தும் இருந்தது.
இச்செப்பேட்டுத் தொகுதியை அவ்வூரைச் சேர்ந்த. S..L. இலட்சுமண செட்டியார் என்பவரிடம் கொடுத்தார் அந்த ஒருவர்.
லட்சுமணச் செட்டியார் அந்த செப்பேடுகளை உ.வே.சாமிநாத ஐயரிடம் கொடுத்தார்.
உ.வே.சா, அந்த செப்பேடுகளை தொல்லியல் அறிஞர்
T.a. கோபிநாத ராவ் அவர்களிடம் கொடுத்தார்..
இங்கு மூன்று நபர்களின் பெயர் பதிவாகிறது. ஆனால் அந்த செப்பேட்டுக்கு உரிமையாளரான அந்த ஒருவரின் பெயர் மட்டும் பதிவாகவில்லை..
சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் உத்தரவு
மாலைமலர் : ஆந்திர பிரதேசம் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!
மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் இன்று நாள் முழுவதும் வாதங்கள் நடைபெற்றன.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்...!
மாலை மலர் : இந்தியா ஜி20 மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு இடங்களில், மாநாடுகள் நடைபெற்றன. உச்சி மாநாடு நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இன்றுடன் முடிவடைகிறது.
மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தை தயார் செய்ய சுமார் 2700 கோடி ரூபாய் செலவு செய்ததாக கூறப்படுகிறது. உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். நேற்றிரவு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.
வெற்றிகரமாக மாநாடு நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று பேசுபொருளாகியுள்ளது. காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் குளம்போல் பாரத் மண்டபம் காட்சியளிக்கிறது.
மொராக்கோ நிலநடுக்கம்: 1,037 பேர் பலி; ஆயிரங்களைத் தொடும் என அச்சம் - என்ன நடக்கிறது? -
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.
மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 3:40) நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை
சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று அதிகாலை வரை விசாரணை நீடித்த நிலையில், 3.15 மணிக்கு கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரா பிருந்தாவன விதவைகள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா, பிருந்தாவனில் குடும்பத்தால் கைவிடப்பட்ட விதவைகள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ள னர்.
ஆதரவற்ற நிலையில் அவர்கள் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். மண்டபங்களில் தங்கும் இவர்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர்.