சனி, 18 மார்ச், 2023

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ரூ.25 ஆயிரம் கோடியில் கை வைத்த ஒன்றிய அரசு: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி

 tamil.samayam.com  : தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024 வரும் திங்கள் கிழமை (மார்ச் 20) சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று டெல்லியில் முக்கிய சந்திப்புகளை நிகழ்த்தினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய நிதித்துறை செயலாளரை சந்தித்தார்.
தமிழக நிதி நிலைமை சரிவிலிருந்து மீள்கிறதா?
அதன் பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
 “வரும் திங்கட்கிழமை தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தமிழகத்தின் நிதி நிலைமை முன்னர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

உரிமம் பெறாத லிப்டில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு டெல்லியில்

 மாலைமலர் : டெல்லியில், கமலா மார்க்கெட் பகுதியில் உள்ள கட்டிடத்தின் திறந்த லிப்டில் இருந்து தவறி விழுந்து 29 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், " சம்பவ இடத்தை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆய்வு செய்தனர். அங்கு இரும்பிலான திறந்தவெளியில் லிப்ட் ஒன்று பொருட்களை ஏற்றி இறக்க பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த லிப்ட் பாதி வழியில் நின்ற நிலையில் அந்த நபர் கீழே படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
இதை கவனித்த உரிமையார் மற்றும் சிலர் இளைஞரை மீட்டு லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட லிப்ட் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்று கூறினார்.

திமுக பூங்கோதை ஆலடி அருணாவை தோற்கடிக்க ஹரி நாடருக்காக வேலை செஞ்சுருக்கோம் ஒரு அதிர்ச்சி ஒப்புதல் வாக்குமூலம்

 கிளாடியஸ் கிளாடிஸ் :   இல்லை புரியல இப்படிப்பட்டவருக்கு

முட்டு கொடுக்கவேண்டிய தேவை என்ன? என்ன அவசியம் வந்தது?
பிரசாந்த் கிஷோர் ஐ திமுக காரன்னு சொல்லிட முடியுமா?
ஏதாவது லாபத்துக்காகத்தான்னா சொல்லிட்டு செய்வதில் விமர்சனம் இல்லை.
தன் வாழ்நாள் முழுவதும் எதிரிகளை விட துரோகிகளால் காயம் பட்டுக்கொண்டே இருந்த அந்த ஒற்றை மனிதன் கலைஞரையும் அவர் வளர்த்த கட்சியையும் நம்புகிற எந்த உண்மையான தொண்டனும் இதுக்கு விமர்சனம் செய்யத்தான் செய்வான்.(அப்படிப்பட்ட தொண்டனிடம் நல்லி எலும்பன் எல்லாம் தனியா மாட்னா.)
அப்படிப்பட்டவனுக்கு தனியா பெயர் வச்சி கூப்பிட்டா அல்லது அவனை விமர்சித்தால் விமர்சிப்பவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்.
அப்புறம் களம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்று தீர்க்கமாய் நம்பும் உடன்பிறப்புகளுக்கு..
90%களத்தில் களமாடாத கட்சிதான் இன்று நாட்டை ஆள்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்..

ரஷிய அதிபர் ;விளாடிமிர் புட்டினுக்கு கைது வாரண்ட் ..உலக குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்ற அறிவிப்பு

மாலை மலர் :  மாஸ்கோ உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.
போர் விதிகளை மீறி ரஷியா பல்வேறு கொடூரச் செயல்களை அரங்கேற்றி வருகிறது என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷிய அதிபர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக புதிய புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.

வெள்ளி, 17 மார்ச், 2023

திருச்சி சிவாவை நேரில் சந்தித்த கே.என். நேரு

நக்கீரன் : நேற்று முன்தினம் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஆகியவை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சிவா, ''கட்சி தான் முக்கியம் என நினைப்பதால் இந்த விஷயங்களை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இருப்பினும் இந்த நிகழ்வு எனக்கு மன வேதனை அளிக்கிறது.

புதுசேரி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

 மாலைமலர் : . புதுச்சேரி: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.
 இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சேர்ச்சுக்கு வரும் பெண்களுடன் ஆபாச வீடியோ: கன்னியாகுமரி மதபோதகர் தலைமறைவு


தினத்தந்தி : கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ வெளியானதால் மதபோதகர் தலைமறைவாகி விட்டார்.
நர்சிங் மாணவி புகாரை தொடர்ந்து அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஆபாச வீடியோ கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர் (பாதிரியார்) ஒருவர் பணியாற்றி வந்தார்.
அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார்.
முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார்.
தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

துக்ளக் சோ flashback : மோடி தான் பிரதராக வேண்டும்.. அத்வானி முன்மொழிய வேண்டும்: நாம் சொன்னால், மோடி கேட்க மாட்டார் என்ற பயம் பாஜக தலைவர்களுக்கு உள்ளது.

 துக்ளக் ஆண்டுவிழாவில் சோ :  மோடி தான் பிரதராக வேண்டும்.. அத்வானி முன்மொழிய வேண்டும்:
பாஜகவில் அருண் ஜேட்லி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா போன்ற தலைவர்களுக்கு பிரதமராகும் எண்ணம் உள்ளது என்றாலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு மட்டுமே பிரதமராகும் தகுதி உள்ளது.
 நாம் சொன்னால், மோடி கேட்க மாட்டார் என்ற பயம் பாஜக தலைவர்களுக்கு உள்ளது.
15 january 2013
tamil.oneindia.com  :  சென்னை: மத்தியில் திமுக அதிகாரத்துக்கு வரக் கூடாது, அதிமுக தான் வர வேண்டும். பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியின் பெயரை அத்வானி முன்மொழிய வேண்
டும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறினார்.
துக்ளக் பத்திரிகையின் 43வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.
காங்கிரஸ் ஊழல்வாதிகள்.. பாஜகவில் 'நேர்மைவாதிகள்':

வியாழன், 16 மார்ச், 2023

நடிகை மீனாவை தனுஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாரா? கொளுத்திப் போட்ட பயில்வான் ரங்கநாதன்!

 tamil.filmibeat.com  Mari S  : சென்னை: சினிமா நடிகர்களின் அந்தரங்க விஷயங்கள் பற்றி தொடர்ந்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
மூத்த சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான இவர் தற்போது கொளுத்திப் போட்டிருப்பது ஒட்டுமொத்த கோலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கணவரை இழந்து வாடி வரும் நடிகை மீனாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் தனுஷ் என்கிற வெடி குண்டை தூக்கிப் போட்டு ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!

 minnambalam.com - Kavi  : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனைச் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மார்ச் 16) சந்தித்து நலம் விசாரித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், டெல்லி சென்று கட்சித் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நேற்று மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி சம்பவங்கள் ... பஹ்ரைன் நாட்டிலுருந்து திரும்பிய திருச்சி சிவா பேட்டி

மாலைமலர் : திருச்சி: பக்ரைன் நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய திருச்சி சிவா எம்.பி. இன்று எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற குழு அனுப்பிய 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்று விட்டு இன்று திரும்பி இருக்கிறேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போதைக்கு நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன்.
தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை நான் பெரிது படுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம்தான் முக்கியம் என வளர்ந்தவன், இருப்பவன்.

நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

 tamil.oneindia.com - Shyamsundar  : அன்காரா; நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்
இதனால் பல்வேறு கட்டிடங்கள், வீடுகள் இடிந்தன. ஆனால் இதனால் பெரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. அதேபோல் பிலிப்பைன்சில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

 மாலைமலர் : சென்னை: சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வென்றார்.
இதனைத்தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்< அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயவியல் மருத்துவ நிபுணர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதன், 15 மார்ச், 2023

திருச்சி சிவா அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அடிதடி வன்முறை: முக்கிய நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

மாலை மலர் :  மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.
 திருச்சியில் இன்று அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
திருச்சி சிவா வீட்டில் சிலர் தாக்குதல் நடத்தினர்.
அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருச்சி காவல் நிலையத்திலும் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

ஈரானில் பொதுவெளியில் நடனமாடிய பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!


வீரகேசரி :  ஈரானில் பகிரங்கமாக நடனமாடிய யுவதிகளின் பாதுகாப்பு குறித்து கரிசனைகள் எழுந்துள்ளன. ஹிஜாப் அணியாமலும் இப்பெண்கள் காணப்பட்டனர்.
தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியான எக்பதானில், உயர்ந்த கட்டடங்கள் அருகிலிருந்து யுவதிகள் ஐவர் நடனமாடியுள்ளனர். இவர்கள் நடனமாடும் காட்சி அடங்கிய வீடியோ டெலிகிராம் மற்றும் டுவிட்டரில் வெளியாகின. நைஜீரிய பாடகர் ரேமாவின் ‘காம் டவ்ன்’ எனும் பாடலுக்கு இவர்கள் நடனமாடினர்.
சர்வதேச மகளிர் தினமான கடந்த 8 ஆம் திகதி இந்த வீடியோ டிக்டொக் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் வேகமாக பரவின.
ஈரானில் பெண்கள் பகிரங்கமாக நடனமாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தலையை மறைக்கும் ஹஜாப் ஆடை அணியாமல் பொது இடங்களில் காணப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

கொலையாளியை காட்டிக்கொடுத்த நாய் 4 KM மேடுபள்ளங்களில் ஓடி சென்று கட்டிலுக்கு கீழ் படுத்திருந்த கொலையாளியை கவ்வியது . இலங்கை


தமிழ் மிரர் : திருமணமான 27 வயதான இளம் பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்டு சேற்றுக்குள் புதைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டி அலவத்துகொடவில் அண்மையில் இடம்பெற்றிருந்தமையை யாவரும் அறிவீர்கள்.
அந்த கொலையாளியை கண்டுப்பிடிப்பதற்கு வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கழற்றி“ஏகல்”   வழிகாட்டிகொடுத்தது என்று அஸ்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் -புக்கர் பரிசு போட்டிக்கு தேர்வு

 மாலை மலர் : புதுடெல்லி இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை கொண்ட விருது.
எழுத்தாளருக்கும், மொழி பெயர்த்தவருக்கும் இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'பைர்' நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் எம்.எம்.அப்துல்லா இடையே நடந்த மோதல்! முழு விவரம்!

Abdulla , soniya arunkumar

abdulla affair . 'கைக்கு அஞ்சு! வாய்க்கு பத்து!' அர்த்தராத்திரியில் தன்னிலை மறந்த ஆபாச  எம்.பி அப்துல்லா
 Mohan Raj kathir.news :  அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பொதுவெளியில்  ராஜ்யசபா  எம்.பி அப்துல்லா தரை லோக்கலாக இறங்கி பேசிய விவகாரம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில அரசியல்வாதிகள் கெட்ட வார்த்தைகளை பேசுவதையே பெருமையாக நினைத்துக்கொண்டு பேசுவார்கள்,
அதனையும் பெருமையாக வேறு சட்டை காலரை தூக்கி ‘எப்படி பேசிட்டோம் பார்த்தியா, நாமெல்லாம் யாரு?’ என பெருமையாக கூறுவார்கள்,
அதனை கேட்டுகொண்டு  தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்,  தொண்டர்கள் குஷியாகி விசிலடிப்பார்கள்.

செவ்வாய், 14 மார்ச், 2023

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்...'' - ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்

 Hindu Tamil  : ''நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் என்னவெனில்...'' - ரகசியத்தை உடைத்த உதயநிதி ஸ்டாலின்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியினை வழங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அரியலூர்: அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்துக்கு அனிதா பெயர் சூட்டப்படுவதால் கல்வி பயில வரும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு இருந்த எதிர்ப்பு குறித்து அறிந்து கொள்வார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது

 மாலை மலர் :  திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள தடையை மீறி சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The Elephant Whisperers: “ஆஸ்கர் விருது பெற்ற முதல் தமிழ் படம் ... யானை ரகு கூட இல்லையே!” – நெகிழும் பொம்மன்-பெள்ளி

பிபிசி , KARTIKIGONSALVES :நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதியின் கதையைக் கொண்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றியது இந்த குறு ஆவணப்படம்.
"ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது கொடுக்கும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. இவை அனைத்திற்கும் இயக்குநருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

திங்கள், 13 மார்ச், 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அசுர சாதனை! நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி...

May be an image of 1 person and car

Manoharan Ashok  :  நாட்டைக் காப்பாற்றி விட்டாரா ரணில் ?
இவ்வளவு பயங்கரமான முறையில் திவாலாகிப் போன நாட்டை ஐந்து மாதங்களுக்குள் மீட்டெடுத்த தலைவரோ, அவ்வாறு மீண்டுவிட்ட நாடுகளோ உலகில் இல்லை. நாடு முழுமையாக இன்னும் மீட்கப்பட்டில்லை, ஆனால் ஆபத்தான கட்டங்களை நிச்சயமாக நாடு கடந்துவிட்டது. ICU வுக்குள் இருந்த நோயாளி தற்போது சாதாரண Ward க்கு மாற்றப் பட்டிருப்பதைப் போலத்தான் நாடு தற்போது உள்ளது.
கிரேக்கம் திவாலாகி பன்னிரெண்டு வருடங்கள் ஆகின்றன. அந்த நாடு ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராக இருந்தாலும் பொருளாதார ரீதியாக இன்னும் மீளவில்லை.
இலங்கை மக்களைப் போலவே, வெனிசூலாவின் மக்களதும் பொய்ப் பகட்டின், கிறுக்குத்தனத்தின் காரணமாக, ஹியூகோ சாவேஸ் வெனிசுலாவின் ஜனாதிபதியாகி, நாட்டை முற்றாக அழித்து, இன்று வெனிசுலா மக்கள் வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள், மற்றொரு பகுதி மக்கள் பசியால் வாடுகிறார்கள்.  பணவீக்க விகிதம் 300% வரை உயர்ந்துள்ளது.

CM சார் தேங்க்ஸ் .. பிரஷாந்த் கிஷோர் சொன்னதுமே.. பின்னாடியே வந்துட்டாரு ராஜீவ் காந்தி.. அடடே சீமான்

tamil.oneindia.com  -  Hemavandhana : ஐபேக் நிறுவனத்தின் பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: சீமான் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியதையடுத்து, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. இதற்கு பிரசாந்த் கிஷோர் முதல்வருக்கு நன்றி சொல்லியுள்ள நிலையில், திமுக தரப்பு அதை வரவேற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார்.. அதில் வடமாநில தொழிலாளர்களை சீமான் மிரட்டுவதாக சர்ச்சைகள் கிளம்பின.
இந்த விஷயத்தில் திடீரென என்ட்ரி தந்தார் பிரசாந்த் கிஷோர்.. சீமான் பேசிய அந்த வீடியோவை, ட்விட்டரில் வெளியிட்டு, அதை சுட்டிக்காட்டியும் இருந்தார்.

பட்டாசு வெடித்ததால் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்தது! அமைச்சர் கே கே ஆர் ஆர் எஸ்

Minister's car window broken due to firecracker explosion virudhunagar

நக்கீரன் : பட்டாசு வெடித்தால் கார் கண்ணாடி உடையுமா என்று கேட்டால்  “அதான் அமைச்சரின் கார் கண்ணாடி உடைந்துவிட்டதே...” என்று டென்ஷனாகச்  சொல்கிறார்கள் ஆளும்கட்சியினர்.     
விருதுநகர் – சூலக்கரையில் பகுதி நேர நியாய விலைக் கடையைத் திறந்து வைக்க வந்திருந்தார் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன். 30 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் நியாய விலைக்கடை கிடையாது.
 2 கி.மீ தள்ளியிருந்த ரேசன் கடையில்தான் மக்கள் பொருட்கள் வாங்கி வந்துள்ளனர்.

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது தெலுங்கு இசைமையப்பாளர் கீரவாணியின் இசையில்

மாலை மலர் : அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான (Writing (Original Screenplay)) ஆஸ்கர் விருதை ஆல் குயிண்ட் 'எவ்ரி திங்க் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' (Everything Everywhere All at Once) திரைப்படத்திற்காக எழுத்தாளர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் வென்றனர்.

13 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற முடிவு- மல்லிகார்ஜுன கார்கே அதிரடி திட்டம்

 மாலைமலர் : புதுடெல்லி: பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே இதற்காக பல புதிய திட்டங்களையும் வியூகங்களையும் அமல்படுத்த ஆலோசித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக குஜராத், மராட்டியம், டெல்லி, உத்தரகாண்ட், நாகாலாந்து, திரிபுரா, அசாம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட 13 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
புதிய தலைவர்களின் கீழ் மாநிலங்களில் புதிய நிர்வாக குழுவை ஏற்படுத்தவும் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து வருகிறார்.
புதிய நிர்வாக குழுவில் அனைத்து தரப்பினரும் இடம் பெறச்செய்ய வேண்டும் என்பதிலும் அவர் ஆர்வம் காட்டுகிறார்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ.. நடிகர்களை வைத்து வீடியோ எடுத்த YouTuber மேல் வழக்கு !

 Kalaignar Seithigal  -  Praveen  : இந்தியா தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்பட்டதாக வீடியோ.. நடிகர்களை வைத்து வீடியோ எடுத்த YouTuber மேல் வழக்கு !
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும் வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் கோவை சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

ஞாயிறு, 12 மார்ச், 2023

அங்கீகரிக்க முடியாது'.. தன்பாலின திருமணத்திற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் கறார்!

 tamil.oneindia.com  - 'Halley Karthik :  தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது
டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் இந்து திருமண சட்டம், வெளிநாட்டு திருமண சட்டம் என சில திருமண சட்டங்கள் இருந்தாலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து எவ்வித உறுதியான சட்டமும் தற்போதுவரை கிடையாது. திருணம் கூட இரண்டாவதுதான், ஆனால் அதற்கு முன்னாள் தன்பாலின சேர்க்கை என்பதையே இந்திய சமூகம் தொடக்கத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2018ம் ஆண்டுதான் இதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது.
The central government has filed an affidavit in the Supreme Court regarding same-sex marriage

பிரதமர் மோடி : எனக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது!

 மாலை மலர் : பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவுக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரூ.8 ஆயிரத்து 480 கோடியில் தேசிய நெடுஞ்சாலை எண்.275ல் பெங்களூரு- மைசூரு இடையே 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை மண்டியா மாவட்டம், மத்தூரில் இருந்து பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து மைசூரு- குசால்நகர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் தார்வாருக்கு சென்றார். அங்கு நடைபெறும் விழாவில் தார்வார் ஐ.ஐ.டி. நிறுவன கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பா.ஜ.க.விடம் ஒருபோதும் பணிய மாட்டேன் - லாலு பிரசாத் யாதவ் தாக்கு

 மாலை மலர் :   பாட்னா:காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார்.
அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.