G Cruz Antony Hubertt : மீனவர்களுக்கு எப்போதுமே எம்.ஜி.ஆர் என்றால் உயிர். அதிலும் படகோட்டி, மீனவ நண்பன் போன்ற திரைப்படங்களுக்கு பின் அவர் மீனவர்களுக்கு தங்களுள் ஒருவராகிப் போனார். கடற்புரத்தில் அவருக்குப் பெயர் "பப்பா". பப்பா என்றால் தாத்தா.
"ஏக்கி! பப்பா படம் போட்டிருக்கான்" என்றுதான் பெண்களும் பேசுவார்கள். இன்று வரை மீனவர்களிடம் பெரும் ஓட்டு வங்கி அதிமுகவுக்கு உண்டு.
அவர் மீனவர்களுக்கு கொடுத்த முதல் அடி 1982 ம் ஆண்டு நடந்த மண்டைக்காடு கலவரத்தின் போது. ஏராளமான மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். அரசு தரப்பில் இரண்டு, மூன்று என கணக்கு சொல்லப்பட்டது.
மீனவ கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப் பட்டு அவர்களுக்கான உணவு பொருட்கள் கிடைக்காமல் செய்யப் பட்டது. குடிநீர்க் கிணறுகளில் டீசலும், மனிதக் கழிவுகளும் கொட்டப் பட்டன. இவை அனைத்தும் காவல் துறை உதவியுடன் நடந்தது.
அடுத்த அடி 1985ம் ஆண்டு.
சனி, 4 டிசம்பர், 2021
எம்ஜியாரின் வாக்குவங்கியாக இருந்த மீனவர் சமூகத்திற்கு... அவரிழைத்த வரலாற்று ....
ஆஸ்ட்ராசெனீகா கொரோனா தடுப்பூசி: அரிய ரத்தம் உறைதலுக்கு காரணம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
ஜேம்ஸ் கலேகர் - சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் : ஆஸ்ட்ராசெனீகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ஏற்படும் ரத்தம் உறைதல் பிரச்னையை தூண்டும் காரணி குறித்து கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கார்டிஃப் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆய்வுக் குழு தடுப்பு மருந்தின் முக்கிய கூற்றில் ரத்தத்தில் உள்ள புரதம் எவ்வாறு ஒட்டிக் கொள்கிறது என்பதை நேர்த்தியாக விளக்கியுள்ளனர்.
இது நோய் எதிர்ப்பு அமைப்பை உள்ளடக்கிய ஒரு தொடர் வினைக்கு வித்திடுகிறது அதுவே ஆபத்தான ரத்தம் உறைதலுக்கு காரணம் என அவர்கள் எண்ணுகின்றனர்.
இந்த தடுப்பு மருந்து பல லட்சம் மக்களின் உயிரை கொரோனாவிலிருந்து காப்பாற்றி உள்ளது.
`அக்கா... எந்தப் பாவி உன்னைக் கொலை செஞ்சான்?!’ - இடுகாடுவரை கதறி நடித்த கொலையாளி சிக்கியது எப்படி?
விகடன் : அன்னலட்சுமியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட சாகுல்ஹமீது “ஐயோ.. அக்கா… உன்னை எந்தப் பாவி கொலை செஞ்சான்?” என்று பலவும் கூறி கதறி அழுதார்.
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் தானபிள்ளை வீதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி அன்னலட்சுமி (42). இவரை நேற்று முன்தினம் யாரோ படுகொலை செய்து கழிவுநீர் கால்வாயில் வீசியிருந்தனர்.
தகவலறிந்த போலீஸார் அன்னலட்சுமியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
Bitcoin crackdown: ஒரு மணிநேரத்தில் 10,000 டாலர் சரிவு.. முதலீட்டாளர்கள் ரத்த கண்ணீர்..
Prasanna Venkatesh - GoodReturns Tamil : ஒமிக்ரான் வைரஸ் பரவல் வேமாகி வரும் வேளையில், அமெரிக்கப் பெடர்ல் ரிசர்வ் தனது பத்திர கொள்முதல்-ஐ குறைக்கவும், வட்டியை வரைவாக உயர்த்த முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் பரவி வந்த ஒமிக்ரான் தற்போது இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பரவிய நிலையில், முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் பங்குச்சந்தையில் இருந்து முதலீடுகள் வேறு முதலீட்டுத் தளத்திற்குச் செல்லும் வேளையில் அமெரிக்காவில் பிற முதலீட்டுத் தளத்தில் இருக்கும் முதலீடுகள் குறிப்பாகக் கிரிப்டோசந்தையில் இருக்கும் முதலீடுகள் பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி
தினத்தந்தி : கூட்டுறவு சங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை, ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த நிதி நிலை அறிக்கையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையான 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இலங்கையர் சித்திரவதை செய்யப்பட்டு எரித்துக் கொலை இஸ்லாமிய மதவாதிகள் வெறியாட்டம்
வீரகேசரி :ல சியால்கோட்டில் ஒரு கும்பல் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சித்திரவதை செய்து அவரது உடலை எரித்து கொன்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சியால்கோட்டில் உள்ள வசிராபாத் வீதியில் அமைந்துள்ள, தனியார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரியும் ஊழியரே, ஏனைய ஊழியர்களினால் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாகி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளி, 3 டிசம்பர், 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல்: வேட்புமனு கேட்டு வந்தவருக்கு அடி உதை.. இ பி எஸ் .. ஓ பி எஸ் நாளை மனுதாக்கல்
தினமலர் : சென்னை: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்க வந்தவருக்கு நிர்வாகிகள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக மீடியாவிற்கு பேட்டி அளிக்க வந்த போது, அங்கிருந்த தொண்டர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை முன்மொழியவும், வழிமொழியவும் ஆட்கள் இல்லாததால் வேட்புமனு வழங்கவில்லை என அதிமுக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.
அ.தி.மு.க., செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம்(டிச.,1) நடந்தது. கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அடிப்படை உறுப்பினர்களால், ஒற்றை ஓட்டின் வாயிலாக இணைந்தே தேர்வு செய்யப்படுவர் என, கட்சி சட்ட விதிகளில் திருத்தம் செய்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடன் கேட்டுத்தான் ராஜா போகக்கூடாது; வாய்ப்பு கேட்டு போகலாம்..." - சிவசங்கர் மாஸ்டருடனான 'திருடா திருடி' அனுபவம் பகிரும் சுப்ரமணியம் சிவா!
நக்கீரன் செய்திப்பிரிவு : நடன இயக்குநராகவும் நடிகராகவும் அறியப்பட்ட சிவசங்கர் மாஸ்டர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அண்மையில் காலமானார். இந்த நிலையில் இயக்குநர் சுப்ரமணியம் சிவா, சிவசங்கர் மாஸ்டருடனான தன்னுடைய திருடா திருடி பட நாட்களின் அனுபவங்களை நக்கீரனிடம் பகிர்ந்து கொண்டார்.
"இரு முரண்பட்ட கதாபாத்திரங்களுக்கு இடையேயான படம்தான் திருடா திருடி. படம் முழுவதுமே ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கும். மொத்த படமுமே திருச்சியில்தான் எடுத்தோம். துள்ளுவதோ இளமை முடித்துவிட்டு காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருந்தார்.
தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் -அரசாணை வெளியீடு
மாலைமலர் : தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது;
அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
மம்தா அதானியோடு சந்திப்பு! காங்கிரஸ் மீது பாய்ச்சல்! நிறம் மாறுகிறார்?
மின்னம்பலம் : ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்பதே தற்போது இல்லை என்றும் ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்றுகொண்டே இருக்கிறார் என்றும் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி பேசியிருப்பதற்கு காங்கிரஸிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொடர் அழைப்பு விடுத்து வருகிறார். டெல்லியில் சில வாரங்கள் முன்பு அவர் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டினார்.
சிவகாசி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! - பேராசிரியர் கைது!
நக்கீரன் - அதிதேஜா : விருதுநகர் மாவட்டம்-ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் டென்சிங் பாலையா. சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர்,
இதே கல்லூரியில் தேசிய மாணவர் படை (NCC) அமைப்பையும் நிர்வகித்து வருகிறார்.
தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவிக்கு சில மாதங்களாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கல்லூரி பேராசிரியர் டென்சிங் பாலையா விசாரிக்கப்பட்டதில், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது.
மழைநீர் பராமரிப்புக்கு ஒதுக்கிய 5900 கோடியில் 50 வீதம் அதிமுகவுக்கு 40 வீதம் பாஜகவுக்கு 10 வீதம் அதிகாரிகளுக்கு .. அன்வர் ராஜா
Source : "விகடன்" via Dailyhunt
இரவு நேரத்திலும் வெளியான `நீக்கம்' அறிவிப்பு... திமுக செல்கிறாரா அன்வர் ராஜா?!
1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியதில் இருந்து அக்கட்சியில அங்கம் வகித்து வந்தவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.
மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர். அ.தி.மு.க என்று பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததோ அன்று முதலே கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்தார் அன்வர் ராஜா.
சென்னை துணை நகர திட்டம் கைவிடப்பட்டது.! சென்னையின் இன்றைய குடிப்பரம்பல் நெருக்கடிகளுக்கு விதை போட்ட பாமக அதிமுக September 3, 2006
September 3, 2006 -- Oneindia Tamil : சென்னை: பாமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அறிவுரையை ஏற்று சென்னைக்கு அருகேதுணைநகரம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னைக்கு அருகே வண்டலூர்-கேளம்பாக்கம் இடையே 30,000 ஏக்கர்பரப்பளவில் துணை நகரம்அமைக்கப்படும் என முதல்வர் கலைஞர் கருணாநிதி சட்ட மன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தேர்தல் அறிக்கையிலும் இது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே திமுகவின் கூட்டணிக் கட்சியான பாமககடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இத்திட்டத்தால் 44 கிராம மக்கள் கடும்பாதிப்படைவர். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றக்கூடாது. மீறி நிறைவேற்றமுயன்றால் கிராம மக்களைதிரட்டி நானே போராட்டத்தில் குதிப்பேன் என பாமகநிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.
இதற்கு ஒருபடி மேலே போன சம்பந்தப்பட்ட கிராமக்கள் அடங்கிய செங்கல்பட்டுபாமக எம்.பியான ஏ.கே.மூர்த்தி, உயிரைக் கொடுத்தாவது இத்திட்டத்தை தடுப்போம்.திட்டம் தொடர்பாக கணக்கெடுக்க வரும் அதிகாரிகளை கட்டிப் போடுங்கள் என்றும்கிராம மக்களிடையே முழங்கினார்.
வியாழன், 2 டிசம்பர், 2021
அண்ணன் கோ சி மணி..தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்..
ஆலஞ்சியார் : அண்ணன் மணி..
தஞ்சையை திமுகவின் கோட்டையாக்கிய கலைஞரின் போர்வாள்.. தஞ்சை பகுதியில்
பண்ணையார்களும் நிலக்கிழார்களும் (மிராசுதார்கள்) காங்கிரஸை தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த காலத்தில் தஞ்சையை திமுகவின் பக்கம் கொண்டுவர அரும்பாடுபட்டவர்.. ஓய்வில்லாத உழைப்பிற்கு சொந்தக்காரர்.. ஒவ்வொரு கிளைக்கழகத்தை சேர்ந்தவர்களையும் பெயர் சொல்லி அழைக்கும் உரிமையோடு கடிந்துக்கொள்ளும்.. அதே போல் அவர்களையும் உரிமையோடு பேச சொல்லி ரசிக்கும் திமுகவின் மாபெரும் தலைவர்..
ஒருமுறை எங்கள் கிராமத்திற்கு வந்து கொடி ஏற்றுவதாக ஒத்துக்கொண்டார்.. நேரமாகிக்கொண்டே போகிறது மக்கள் சலசலக்க தொடங்கிவிட்டனர்.. அமுல்ராஜ்தான் கிளைக்கழக செயலர்.. கோபமாக திட்ட ஆரம்பித்துவிட்டார்.. அவர் திட்டிக்கொண்டிருக்கும் போதே ஜீப்பில் வந்திறங்கி அமுல் கோச்சிக்காதடா வரவழியில வண்டி பஞ்சர் அதான் லேட்டாயிடுச்சு என்றவுடன் தொண்டை கிழிய கத்துகிறார் அமுல்ராஜ்.. மாவீரன் கோ.சி.மணி வாழ்க..கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.. கோபத்தை மறந்து உணர்ச்சி மேலிட வானம் அதிர்கிறது கரவோசத்தால்.. எந்த வித கோவமும் கொள்ளாமல் அமுல்ராஜை அணைத்துக்கொண்டே பேசுகிறார்.. கட்சியின் அடிமட்ட தொண்டனையும் அறிந்து வைத்திருந்த மாவட்ட செயலாளர் அதனால் தான் கடைசிவரை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது..
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை! லஞ்ச குற்ற சாட்டுக்கள் காரணம்?
மின்னம்பலம் : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் ஏ.வி.வெங்கடாசலம்.
இவர், 14.10.2013 முதல் 29.07.2014 வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உறுப்பினர் செயலாளராக இருந்தபோதும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக 2017-2018 ஆகிய காலகட்டங்களில் இருந்தபோதும், 27.09.2019 முதல் 2021 செப்டம்பர் வரை மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்தபோதும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
அமரர் கோ சி மணி! வைகோ திமுக சின்னத்தை முடக்க முயன்றபோது கலைஞரின் தளபதியாக செயல்பட்ட சாதனை ஆளுமை
LR Jagadheesan : Of the many contributions of Ko Si Mani,
one of the strongest DMK stalwarts, conducting DMK’s general council meeting during the most turbulent time when Vaiko split the party and tried to freeze its election symbol in Tanjore was an important one.
That general council meeting was conducted with military precision.
Every minute detail is meticulously planned and executed. Media was allowed.
Everything was recorded. It went all the way to Indian Supreme Court and established the DMK’s rightful ownership to Kalainjar. In that judgement, the SC praised the DMK’s inner-party democratic set-up and conduct. Ko Si Mani was a rooted politician (with his feet firmly on the ground) and committed party man with unwavering loyalty towards the party and its leadership.
There are hardly any more such politicians left in the DMK or TN politics. We have left with minions, time servers, chameleons and outright looters.
கலைஞர் என்பவர் அடிப்படையில் தலைவர்.
திமுக என்கிற கட்சிக்கு மட்டுமல்ல, அதையும் கடந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும். ஒரு உண்மையான தலைவன் இருந்தால் தான் உறுதியான தளகர்த்தர்கள் உருவாக முடியும்.
அதுவே அரசியல் இயங்கியலின் அடிப்படை இலக்கணம்.
அதனால் தான் கலைஞருக்கு கோ சி மணி போன்ற மிகச்சிறந்த தளகர்த்தர்கள் வாய்த்தார்கள்.
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது 'அணை பாதுகாப்பு மசோதா'-தமிழக எம்.பிக்கள் எதிர்ப்பு
நக்கீரன் : கடந்த 29 ஆம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அணை பாதுகாப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா குறித்த பேச்சு வந்தபொழுதே இதை நிறைவேற்றக்கூடாது என்றும், நாடாளுமன்ற சிறப்புக்குழு ஒன்றை உருவாக்கி அணை பாதுகாப்பு மசோதாவைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை வைத்திருந்தார்.
முகநூல் பயன்படுத்தும் பெண்கள் நரகத்திற்கு போவார்கள்.. இமாம் சம்சுதீன் தாலிபான் டைப் வியாக்கியானம்
Shahul Hameed : இவர் பெயர், சம்சுதீன் காசிமி.. சென்னை பெருநகரில்,மக்கா பள்ளி வாசலில் தலைமை இமாம் என்ற பொறுப்பில் இருந்தவர்.. ஏதோ
குற்றச்சாட்டு காரணமாக இவரை, பள்ளி வாசல் நிர்வாகம் பணி நீக்கம் செய்து வெளியேற்றப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது!
இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்று தெரியவில்லை.. சரி, அது போகட்டும்.
அண்மையில், இவர் பேசிய வீடியோ ஒன்றில்,
பெண்கள், முகநூல்/இன்ஸ்டாகிராம் போன்ற
இணைய தளங்களில், வந்தால்,அந்த பெண்கள் நரகத்திற்கு தான் போவார்கள் என்று,குறிப்பிட்ட அவர்,கூடவே, மற்றொன்றையும் கூறுகிறார்.......
"இணையத்தில் பங்கு பெறும் பெண்கள்
#விபச்சாரம் செய்பவர்கள்" என்று மிகவும் தெளிவாக குறிப்பிடுகிறார்,அவர்...
உணவும் சமையலும் சின்னச்சிறு துணுக்குகள் .
Pranavan Sp : வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!!
*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.
*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.
*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.
*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
போயஸ் கார்டன் வேதா இல்லம்: அதிமுக மேல்முறையீடு!
மின்னம்பலம் : வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கேட்டு அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசுடைமையாக்கிக் கடந்த ஜனவரி மாதம் அதிமுக அரசு திறந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் கடந்த நவம்பர் 24ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்றும் வீட்டுச் சாவியை மாவட்ட ஆட்சியர் மனுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி சேஷசாயி உத்தரவிட்டார்.
அதிமுக கட்சி விதிகள் அதிரடி மாற்றம்! ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள்
மாலைமலர் : அதிமுக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சட்ட திருத்தத்திற்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நிபந்தனையாகும்.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.
சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது ஆலோசித்தனர்.
பன்னாட்டு விமானப் பயணங்களை இந்தியா தொடங்குவதில் தாமதம்
தினமலர் : புதுடில்லி: ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக, டிச.,15ம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து சேவை துவங்குவது என்ற முடிவை மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ) ஒத்தி வைத்தது. மீண்டும் துவங்குவது குறித்த முடிவு பின்னர் அறிவிக்கப்படும்.
கோவிட் பரவல் காரணமாக இந்தியாவில், கடந்த 2020ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து, வரும் டிச.,15ம் தேதி முதல் துவங்கும் என டிஜிசிஏ அறிவித்தது. இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கோவிட் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. 'ஒமைக்ரான்' என பெயரிடப்பட்ட இந்த வைரஸ், அச்சுறுத்தல் மிக்கது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.
புதன், 1 டிசம்பர், 2021
மட்டக்களப்பு மாவட்ட ஊர்களின் பெயர்கள் பட்டியல்
soodram con : மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற மொத்த ஊர்களின் பெயர் விவரங்கள் இதில் இருக்கின்றது இதில் தவறுதலாக ஏதாவது கிராமங்கள் விடுபட்டிருந்தால் அந்த கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த இடத்தில் இருக்குது என்பதை பின்னூட்டங்கள் t மூலம் தெரியபடுத்துங்கள்)
மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் 346 கிராம சேவகர் பிரிவுகளையும் கொண்டது. இதில் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு கிராம சேவகர் பிரிவாகவும் ஒரு கிராமம் பல கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களின் அல்லது ஊர்களின் பெயர்கள் பின்வருமாறு
1)மட்டக்களப்பு
2)மாங்கேணி
3)காயாங்கேணி
4)புணாணை
5)பனிச்சங்கேணி
6)வட்டவான்
7)வாகரை
ஒமிக்ரான் உயிர் இழப்பை தவிர்க்க தடுப்பூசி போட்டுகொள்ளுங்கள் சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
மாலைமலர் : பொதுமக்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். 1.25 கோடி பேர் முதல் தவணையும், 25 லட்சம் பேர் 2-வது தவணையும் போட வேண்டியுள்ளது.
இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் விரைவாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இலங்கையில் வெடிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் . உயிரிழப்புக்களும் விபத்துக்களும் தொடர்கிறது
பிபி சி தமிழ் : இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன.
வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, தற்போது நாடு முழுவதும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை, அம்பாறை, ஹட்டன், புத்தளம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் நாளாந்தம் பதிவாகி வருவதை காணக் கூடியதாக உள்ளது.
ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க சரத்பவார்-மம்தா எதிர்ப்பு
மாலைமலர் : மத்தியில் வலிமையான மாற்றுத் தலைமை தேவை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மும்பை: மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை உருவாக்கும் நடவடிக்கையில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரினாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக மும்பையில் இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவர் சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இவரும் விவாதித்தனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
இன்றைய ஜால்ராக்களுக்கு தெரியாத திமுகவின் சுயமரியாதை கரைவேட்டிகள்
Kandasamy Kandasamy : உங்கள் நாகரீக அரசியலில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற.
சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரியவர் எப்பொழுதும் திமுக கரை வேட்டி அணிந்து கொண்டுதான் இருப்பார்.. சில மாதங்களுக்கு முன் கரையில்லாத வெள்ளை வேட்டி அணிந்து இருந்தார் என்னவென்று விசாரிக்க......
திமுக கரைவேட்டி சலவைக்கு போட்டிருந்தேன் திருப்பி வாங்க காசு இல்லை
எவ்வளவு என்று கேட்க 240 ரூபாய் என்று சொன்னார்
அதற்கு அடுத்து சொன்ன செய்தி வயசாகிப் போச்சு எவ்வளவு வெல
தெரியல மொத்தமா போட்டுட்டேன்
மூன்று பிரிவாகப் பிரித்து போட்டிருந்தால் சலவைக்கு போட்ட வேட்டியை வாங்கியிருப்பேன்
அதற்கு மேல் அவருக்கு பேச நா எழவில்லை
என்னிடமும் அந்த காசு இல்லை
நினைத்துப் பாருங்கள் திமுக தான் அவர்களுடைய அடையாளம் அந்த கரைவேட்டி தான் அவருடைய அடையாளம்
ஏறத்தாழ 40 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன் அவர் பெயர் தெரியாது
NEET 2447 சீட்ல அரசுபள்ளிகளில் படிச்சு கவர்மென்ட் காலேஜ்ல சேர்ந்தவங்க மொத்தமே இரண்டே பேர்தான்
Sadhu Sadhath : எதால அடிவாங்கினாலும் திருந்தாத ஜென்மங்கள் உண்டெங்கில் அது ஈ தமிலன்ஸ்தான் ...
NEET வந்த போது எதெல்லாம் நடக்கும்னு பயந்தேனோ அதெல்லாம் அப்படியே கூட இல்ல வேற லெவலுக்கு நடந்துகிட்டு இருக்கு ..
நீட்ட ஆதரிச்சவனெல்லாம் என்ன சொன்னானுவனா நீட் பாஸ் செஞ்சாதான் தரமான டாக்டர் கிடைப்பாங்கனு சொன்னானுவ ..
போன வருசம் கிட்டதட்ட 115000 பேர் நீட் எழுதி அதுல 39.6% பேர் நீட் பாஸ் ஆனாங்க அதாவது கிட்டதட்ட 45000 பேர்... இத்தனை ஆயிரம்பேர் நீட் பாஸ் செஞ்சாச்சே டாக்டர் சீட் கொடுத்தானுங்களானா அதுவும் இல்லை ..
ஏன்டா கொடுக்கலனா மொத்தமே 2447 சீட்டு தான் இருக்குங்குறான் .. இதுல என்ன பெரிய கொடுமைனா இந்த 2447 சீட்ல அரசுபள்ளிகளில் படிச்சு கவர்மென்ட் காலேஜ்ல சேர்ந்தவங்க மொத்தமே இரண்டே பேர்தான் ... ஆண்ட பேண்ட சாதி அத்தனையும் சேர்த்து இரண்டே பேர்தான் ... எஸ்டி பிரிவுல மேனேஜ்மென்ட் கோட்டாவுல கூட ஒருத்தருக்கும் சீட் கிடைக்கல
செவ்வாய், 30 நவம்பர், 2021
மதுரை சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
தினத்தந்தி : மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையில் வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண் உள்பட5 ஊழியர்கள் கடை உரிமையாளருடன் சம்பவத்தன்று செல்லூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து நள்ளிரவில் 1 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இளம்பெண்ணை கடைக்காரர் தனது மோட்டார் சைக்களில் அழைத்து சென்றார்.
அப்போது நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர், கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள்?
நீங்கள் இருவரும் யார்? என்று கேட்டுள்ளார். பின்னர் அவர் இளம்பெண்ணை தான் பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக அழைத்து சென்றுள்ளார்.
மு க அழகிரி தற்போது என்ன செய்கிறார்? மிக மிக அமைதி .கிரிக்கெட், பழைய படங்கள் . நண்பர்களுடன் வேடிக்கை பேச்சு ..
Arsath Kan - Oneindia Tamil : மதுரை: திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஒரு காலத்தில் கோலோச்சிய மு.க.அழகிரி இப்போது அரசியல் நடவடிக்கைகளில் துளியும் ஆர்வமின்றி அமைதியை மட்டுமே விரும்புகிறாராம்.
மதுரை சத்யசாய் நகரில் வசித்து வரும் அவர் தனக்கு பிடித்த பழைய படங்களையும், கிரிகெட்களையும் பார்த்து நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மேலும், தினமும் நான்கு பேருடன் அதுவும் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் மட்டும் சில மணித்துளிகள் மனம் விட்டு பேசுகிறாராம்.
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த போது பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தவர் மு.க.அழகிரி.
ஒமிக்ரான்: இன்று நள்ளிரவு முதல் விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
மின்னம்பலம் : கொரோனாவின் திரிபு வைரஸான ஒமிக்ரான் 14 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில் இந்தியாவில் அந்த வைரசை தடுப்பதற்காக ஒன்றிய அரசு இன்று (நவம்பர் 30) நள்ளிரவு முதல் சர்வதேச பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி
ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். ஆபத்தான நாடுகள் பட்டியலில் தற்போது இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள அனைத்து 44 நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகியவை அடங்கும்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் RT-PCR சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாது.
டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
மாலைமலர் : ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
கோப்புப்படம்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளர்.
அதன் விவரம் வருமாறு:-
இரும்பு சேரில் ஏறி, வெள்ளத்துக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்..!
வி.ஆர். ஜெயந்தி : தலைவர் அவர்களுக்கு ஒயாத வேலை, 24, 25, 26, 27 தேதிகளில் தொடர் கூட்டங்கள். 27 அன்று செங்கல்பட்டில் மீட்டிங் இரவு 8.30 மணிக்கு முடித்து இரவே அரியலூர் கார் பயணம் மேற்கொண்டார்கள். அரியலூரில் அத்தனை நிகழ்ச்சிகள். தலைவரின்
அம்மாவிற்கு டைபாய்டு காய்ச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அரியலூரில் மீட்டிங் முடித்து, அம்மாவை பார்த்து விட்டு இரவு பயணம் செய்து காலையில் 5 மணிக்கு சென்னை வந்து தயாராகி பார்லிமென்ட் போகிறார்கள். தலைவருக்கு உடல்நலம் சரியில்லை, காலில் வீக்கம் பிரச்சனையிருக்கிறது, ஓய்வில்லை. மக்களுக்காக கடந்த கூட்டத்தொடரில் அடாவடியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்டங்களை எதிர்த்து அவையில் பேசத்தேவையிருக்கிறது.
திங்கள், 29 நவம்பர், 2021
கேரளா - மூளைச்சாவு அடைந்த ஜோசப்பின் கரங்கள் ராணுவ கப்டன் அப்துல் ரஹீமிற்கு பொருத்தப்பட்டது.. பொருத்திய டாக்டர் சுப்பிரமணியம் Abdul Rahim - India's second hand transplantation
பாண்டியன் சுந்தரம் : நெஞ்சம் நெகிழ வைக்கும் புகைப்படம்! கணவனை அன்பு மனைவியும், தந்தையைப் பாச மகளும் அருகிருந்து பார்க்கின்றனர், கைகள் மூலமாக!
இதோ , இந்தப் படங்களின் இடது ஓரத்தில் நிற்கும் இந்த இளம்பெண்.. தன்னைத் தூக்கி வளர்த்த , தன் தலையை பாசத்துடன் தடவிக் கொடுத்த , அள்ளி அரவணைத்து அன்போடு வளர்த்த , தன் அப்பாவின் கைகளைத் தான் நேருக்கு நேர் பார்க்கிறாள். கைகள் மட்டும்தான் இங்கே இருக்கின்றன. ஆனால் அவள் அப்பா , எப்போதோ மரித்துப் போய் விட்டார்.
அந்த இளம்பெண்ணின் மனநிலை இருக்கட்டும்..இதோ, அவள் அருகில் நிற்கும் இந்த இளம்பெண்ணின் தாய்..
அவர் மனநிலை எப்படி இருக்கும் ?
திரைக்கதைகளில் ஸ்க்ரிப்ட் டாக்ட்டரிங் என்றால் என்ன? பட்டுக்கோட்டை பிரபாகர்
Pattukkottai Prabakar Pkp : திரைத்துறையில் எனக்கு அறிமுகமான, அறிமுகமாகாத பலரும் என்னிடம் தங்கள் கதையைச் சொல்லி அதைப் பற்றி என் கருத்தைக் கேட்க வேண்டும் என்பார்கள்.
அந்த ப்ராஜெக்ட்டில் நான் இல்லை என்கிற பட்சத்தில் கூடுமானவரை தவிர்த்துவிடுவேன். தவிர்க்கவே இயலாத முக்கியமானவர்கள் என்றால் மட்டும் தர்மசங்கடத்துடன் ஒப்புக்கொள்வேன்.
வருவார்கள். இரண்டு மணி நேரம் கதை சொல்வார்கள். நன்றாயிருக்கிறது, நன்றாயில்லை என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்ல முடியாது. உடனே மனதில் தோன்றும் குறைகளையும்.. அதை இப்படியெல்லாம் சரிசெய்யலாம் என்றும் கடகடவென்று சொல்லிவிடுவேன்.
ஒமிக்ரான் வைரஸ் - .விளைவுகள் கடுமையாக இருக்கலாம்" -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
நக்கீரன் செய்திப்பிரிவு : தென்னாப்பிரிக்கா நாட்டில் 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளுடன் பி.1.1.529 என்ற புதிய கரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளில், 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் வைரஸின் ஸ்பைக் ப்ரோட்டினில் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் என உலக சுகாதார நிறுவனத்தால் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கரோனா, இதுவரை 13 நாடுகளுக்கு பரவியுள்ளது. மேலும் இந்த கரோனா பரவலால் பல்வேறு நாடுகள், தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அதேபோல் இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டிற்கு வெளிநாட்டினர் வருவதை தடை செய்துள்ளனர்.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இடைநிறுத்தம் -தலைவர்கள் கண்டனம்
மாலைமலர் : எம்.பி.க்கள் மீதான இடை நிறுத்த நடவடிக்கை அவசியமற்றது மற்றும் ஜனநாயக விரோதமானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள், நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவ சேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்பி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்கள் ரத்து .. விவாதங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்த பாஜக! எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
மாலைமலர் : பாராளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
புதுடெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்து இருந்தது.
பாராளுமன்றம் இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர். காங்கிரசை சேர்ந்த பிரதீபா சிங், பா.ஜனதாவை சேர்ந்த ஜியானேஸ்வர் பட்டீல் ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். பிரதீபா சிங் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் இருந்தும், ஜியானேஸ்வர் பட்டீல் மத்திய பிரதேச மாநிலம் கன்வார் தொகுதியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், கல்யான் சிங், செங்குட்டுவன் உள்பட 8 பேருக்கு சபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரம் தொடங்கியதும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
இலங்கையில் பார்பனீய ஜாதியும் மதமும் வேருன்றியது எப்படி?
இந்துபோர்ட் ராசரத்தினம் |
சேர் பொன்.ராமநாதன் |
கலாச்சாரம், சமுகவியைல் என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம் |
மணி அய்யர் |
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம் பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.
விடுதலை போராட்டத்தை பாசிச சக்திகள் ஹைஜாக் பண்ணி முழுக்க முழுக்க ஒரு பாசிச வெறியாட்டமாக ஆடி முடித்த வரலாறு ஒரு பெரிய பாடத்தை உலகுக்கு வழங்கி இருக்கிறது
மாநாடு திரைப்படம் ..அறிவியல் புனை கதையை அதன் இயற்பியல் விதிகளோடு விளக்க தவறினாலும் ரசிக்க முடிகிறது
Karthikeyan Fastura : மாநாடு திரைப்படம் ஒரு நல்ல முயற்சி. படத்தின் Plot க்கு கதாநாயகன் இஸ்லாமியர் ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. எனினும் மக்கள் மத்தியில் சினிமா ஊடகங்கள், பத்திரிக்கை ஊடகங்கள் பரப்பி வைத்திருக்கின்ற பொய்யான பொதுபுத்தி பிம்பத்தை உடைப்பதற்கு இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள் இந்தக் கதையை ஏற்று நடித்த சிம்புவுக்கும் வாழ்த்துக்கள்
எனக்கு இந்தப்படத்தில் குறையாகபடுவது ஒரு அறிவியல் புனைவு கதையை அதன் இயற்பியல் விதிகளோடு விளக்கி அதிலுள்ள புதிர் என்னவென்று கூறி அதை அவிழ்ப்பது போல காட்டுவது சிறந்தது. ஹாலிவுட் மற்றும் பல்வேறு ஐரோப்பிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் வரும் Time loop திரைப்படங்கள் எல்லாவற்றிலும் இதை காணலாம். குவாண்டம் பிசிக்ஸ், Time A-theory பற்றிய கருத்தாக்கங்களை கற்பனைகளை விவரிப்பார்கள்.
ஞாயிறு, 28 நவம்பர், 2021
புலிகள் மீதான தடை தொடரும்! ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உத்தரவு! .. வழக்கு செலவுகளையும் செலுத்தவேண்டும்
tamilnaadi.com - jeya : விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டினை இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டை செய்திருந்தனர்.
இதேவேளை குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டில் தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டது.
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்:
hindutamil.in : பிரபல நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். ‘திருடா திருடி', ‘மகதீரா’, ‘பாகுபலி’ உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
‘மகதீரா’ படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இது தவிர ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுக்கு துட்டு’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவசங்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க பெண் எம்.பி.க்கள் ஆதரவு
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்களில் சிலர் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி வழங்குவதற்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.
சுற்றுலா நாடு என்ற விதத்தில் இலங்கையில் இரவு நேர பொருளாதாரம் அமல்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்று, தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பல்வேறு சந்தர்ப்பங்களில் இதனைத் தெரிவித்திருந்தார்.
இரவு நேர பொருளாதாரம் என்ற பதத்திற்குள், ஹோட்டல் வியாபாரம், உணவகங்கள், மதுபானசாலைகள், பாலியல் தொழில் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.
மஞ்சப்பை’ பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்க புதிய இயக்கம்” : நெகிழிக்கு எதிராக திமுக அரசு அதிரடி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தொடக்கத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படாமல் இருந்தது. அனால், நாட்கள் செல்லச் செல்ல ப்ளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வந்தது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இனி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூபாய் 1 லட்சம், மீண்டும் செய்தால் ரூபாய் 2 லட்சமும், மூன்றாவது தடவையும் செய்தால் ரூபாய் 3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் . மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.
கோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்!
Mathivanan Maran - e Oneindia Tamil : ஷில்லாங்: கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவியதால் இப்போது மேகாலயா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.
மேற்கு வங்க மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மமதா பானர்ஜி, காங்கிரஸ் செல்வாக்கு இழந்த, பலவீனமான மாநிலங்களை குறிவைத்து அடுத்தடுத்து காய் நகர்த்துகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக இருக்கும் மாநிலங்களை குறிவைக்கிறார்.
இந்த வியூகத்தின் முதல் கட்டமாக கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
கனமழை நீடிப்பு... சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
மாலைமலர் : கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்கள் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் பகுதிகளில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அவ்வகையில், கனமழை காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சி.வை.தாமோதரம் பிள்ளை... பழந்தமிழ் சுவடிகளை பதிப்பித்த முன்னோடி .. தொல்காப்பியம் கலித்தொகை, சூளாமணி வீரசோழியம் .... இன்னும் பல
.keetru.com : தமிழ் இலக்கியங்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் கோயில்களிலும், மடங்களிலும், கவிராயர் இல்லங்களிலும், அரண்மனைகளிலும் முடங்கிக்கிடந்த பழந்தமிழ்ச் சுவடிகளை வெளியுலகுக்குக் கொண்டு வந்த பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா ஆகியோரைச் சாரும்!
c vai thamodaram pillaiதமிழறிஞர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாய்மொழியாம் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளனர். ஓலைச்சுவடிகளிலிருந்து பண்டைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கண்டெடுத்து சரிபார்த்து, திருத்தம் செய்து, பதிப்பித்த பெருமை ‘பதிப்புத்துறையின் முன்னோடி’ என்று புகழ்ந்துரைக்கப்படும் சி.வை.தாமோதரம் பிள்ளையையே குறிக்கும்.
தமிழ் இலக்கண, இலக்கியச் சுவடிகள் பதிப்பிக்கத் தொடங்கிய பின்பு தான், தமிழ் மொழியின் பரந்துபட்ட பரப்பு தெரியவந்தது. தமிழ் நூல்களை அழியாமல் காத்துப் பாமர மக்களிடையே பரவலாக்கிய பெருமை தமிழ்ச் சுவடிகளைப் பதிப்பித்த பதிப்பாசிரியர்களையே சாரும். தமிழ்ச்சுவடிப் பதிப்பு வரலாற்றில் ஆறுமுக நாவலருக்குப்பின் சி.வை.தாமோதரம் பிள்ளையின் பதிப்புப்பணி போற்று தற்குரியது. அவர் தமிழ் நூல்கள் பலவற்றை முதன் முதலில் பதிப்பித்து தமிழுலகம் அறியச் செய்தார்.
திமுகவை துவம்சம் செய்த ராஜீவ் காந்தி படுகொலை .. அதிமுக காங்கிஸ் கொலை வெறியாட்டம் Flashback 1991 - May 22
Arumugam Karthikeyan : இன்றக்கு ஈழம் பேசும் குழந்தைகளுக்கு தெரியுமா 29 வருடம் முன் இந்த நாளில் ஈழம் பற்றி பேசிய திமுககாரனுக்கு நடந்த சம்பவத்தை உங்கள் வீட்டுல உள்ளவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க..
ஈழத்துக்காக செத்து பிழைத்தவர்கள் திமுககாரன் தான்...
இன்று மறக்கமுடியாத நாள். அந்த கொடூரமான தாக்குதல் இன்றும் மனதில் நீங்காது இருக்கிறது. அந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து உயிருடன் வெளியே வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு சிறிதும் இல்லை. என் தாயை வணங்கி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து 4 மணி நேரம் கதவை புட்டி ஒரு நாற்காலியை வைத்து முட்டுகொடுத்து தடுத்து நின்றார். அவர் அப்படி தடுத்து எங்களுடன் நிற்கவில்லை என்றால் என் தாய் தந்தை என்னுடன் சேர்ந்து ஏழு உயிர்கள் 29 ஆண்டுகளுக்கு முன்பே பலியாகியிருக்கும் அந்த கொலைவெறி தாக்குதலுக்கு.
200 ஆண்டுகளில் இல்லாத மழை ... களத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
நக்கீரன் செய்திப்பிரிவு : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஆவடியில் அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம், செங்கல்பட்டு, செய்யாறு ஆகிய இடங்களில் தலா 18 சென்டிமீட்டர் மழையும், காட்டப்பாக்கத்தில் 17 சென்டி மீட்டர் மழையும், திருக்கழுக்குன்றத்தில் 16 சென்டி மீட்டரும், மதுராந்தகம், சோழவரம், பரங்கிப்பேட்டையில் தலா 15 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.