
Sundar P : கார்த்திக் முத்தையா
நேற்று நேஷனல் ஜியாகரபிக் வைல்ட் சேனலில், அவலமிக்க ஓர் ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது.
முதலில் உஸ்பெகிஸ்தான் நாட்டைக் காட்டினார்கள்.
கடுமையான வறட்சியில் இருக்கும் ஒரு பெரும் பாலைவனம். வெண்மணல்திட்டுக்கள்.
சிறுவர்கள் அம்மணல் திட்டுகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
காமெரா அப்படியே கழுகு பறக்கும் உயரத்துக்குப் போகிறது. அடடா
உஸ்பெகிஸ்தானின் சகாரா போல என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே, சரேலென
பாலைவனத்தில் இருந்த சில குவியலான பொருட்கள் மீது காமிராக் கோணம்
குவிக்கப்பட்டு இறங்கியது.
அவையெல்லாம் ஓட்டை ஒடிசலான துருப்பிடித்துப் போயிருந்த பெரிய பெரிய படகுகள்.
பாலைவனத்தில் ஏது படகுகள் ?
ஆய்வாளர் அப்போதுதான் சொல்கிறார், இது மாபெரும் ஏரியாய் இருந்த இடம்.
என்ன? பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா என்கிறீர்களா ?
இல்லை.... வெறும் முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர்கள் பரந்து, ஒரு கடல் போல் இருந்த ஏரி இது.