சனி, 17 அக்டோபர், 2015

வியாபம் ஊழல்..மத்திய அரசின் பார்வையாளர் மர்ம மரணம்...இவரோடு இதுவரை 45 பேர் கொலை..பாஜகவின் ஆட்சி..

நாட்டையே உலுக்கிய வியாபம் முறைகேடு வழக்கில் மற்றொரு திருப்பமாக வியாபம் தேர்வுகளில் மத்திய அரசின் பார்வையாளராக இருந்தவர் மர்மான முறையில் மரணம்அடைந்துள்ளார் மத்திய பிரதேச தொழில் முறை தேர்வு வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய நுழைவுத் தேர்வுகளில் பல நூறு கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது கண்டறியப்பட்டது. இந்த ஊழலில் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.  இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை கடந்த ஜூலை மாதம் முதல் சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது.

நக்மா மாநாடு ரத்து! இளங்கோவன் விஜயதரணி வரமறுப்பு...பின்னணியில்...குஷ்பூ?

சென்னை: தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உரிய மரியாதை தராததால் தூத்துக்குடியில் இன்று நடைபெறும் மண்டல மாநாட்டை கேன்சல் செய்வதாக தமிழகம், புதுவை மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் நடிகை நக்மா தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை நக்மா தமிழக காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வருவதாக இருந்தது. அவருக்கு மகளிர் காங்கிரஸ் சார்பில் வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.  இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த நக்மாவை வரவேற்க காங்கிரஸார் இரு கோஷ்டிகளாக விமான நிலையம் சென்றனர். அங்கேயே மகளிர் கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதை பார்த்து, நக்மா அதிருப்தியடைந்தார். இந்நிலையில் நேற்று காலையில் நக்மா சத்திய மூர்த்தி பவன் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் இளங்கோவனும், விஜயதாரணியும் வர மறுத்துவிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோகுல்ராஜைக் கொன்றது நான்தான்!- யுவராஜ் ஒப்புதல்.. போலீஸ் விசாரணையில்..

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு தன்னுடன் படித்த மாணவியுடன் வந்த போது அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 17 பேரைக் கைது செய்தனர். இதில் 5 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் (34) 100 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்தார்.

வெள்ளி, 16 அக்டோபர், 2015

மன்சூர் அலிகான் : பெப்ஸிக்கு போட்டியாக என் டாப்ஸி?... நினைக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து அந்த பாடலை பாடி ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜாவாக “அதிரடி” திரைப்படத்தில் வேலை செய்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(05.10.15) நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் செந்திர், நாசர், ஆர் சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். எத்தனை பேர் இருந்தாலும் ஒரே ஆளாக இருந்துகொண்டு விழாவை கலகலப்பாகவும், கடுப்பாகவும் நடத்தி முடித்தார் மன்சூர் அலிகான். சிறப்பு விருந்தினர்களை பேசச் சொல்லிவிட்டு குறுக்கே புகுந்து பேசி பேசி அவர்களையே கடுப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
மன்சூர் அலிகான்; இந்த படம் குடிபழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். குடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தினுடைய இசை வெளியீடு விழாவிற்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடிகர் சங்கத்திற்கு அழைப்பு கடிதம் கொடுத்தேன். ஆனால் யாரும் வரவில்லை எனக்கு இதனால் வருத்தம் ஏதும் இல்லை.

லாலு பிரசாத் மீது விழுந்த மின்விசிறி! பிரச்சார கூட்டத்தின் போது அதிர்ச்சி !


ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இன்று பீகாரில் ஒரு தேர்தல் அணிவகுப்பில் உரையாற்றினார் அப்போது மின்விசிறி ஒன்று அவர்மேல் விழுந்தது. இதில் லாலு பிரசாத் யாதவ் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பினார். பீகார் மாநிலம் மோத்திகாரி மாவட்டத்தில் நடந்த பிரச்சார கூட்ட மேடையில் உட்கார்ந்திருந்த போது இந்த சம்பவம் நடந்தது. வீடியோவில் நாம் தெளிவாக காணலாம், நிலையற்று இருந்த மின்விசிறியை பற்றி லாலு தன் உதவியாளரிடம் கூறுகிறார். அவர் கூறிய சில விநாடிகளிலே மின்விசிறி கீழே அமர்ந்திருந்த லாலு மீது விழுந்தது. எனினும் மின்விசிறி தாக்கிய சம்பவத்தில் லாலு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தப்பினார். உடனடியாக மேடையில் இருந்து மின்விசிறி அகற்றப்பட்டது. இதனால் கூட்டத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. nakkheeran.in

நக்மா:தூய்மையான அரசியலே தமிழகத்திற்கு தேவை...காங்கிரஸ் பொதுசெயலாளர் பதவி ஏற்றபின்....


கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை நக்மாவுக்கு கடந்த வாரம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் நக்மாவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சென்னை வந்துள்ள அவர் இன்று (வெள்ளிக்கிழமை) தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், தூய்மையான அரசியலே தமிழகத்திற்கு தேவை. அத்தகைய அரசியலை கொடுக்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளது. காமராஜர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தூய்மையான அரசியலை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். சிறந்த அரசு இங்கே ஏற்பட வேண்டும். அனைத்துப் பெண்களும் முன்னேற்றம் காண வேண்டும். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள். அதற்காகவே பணியாற்றி வருகிறோம். கட்சியை முன்னேற்றுவது, வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேசி வருகிறோம். எனவே தற்போது யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்த கேள்விக்கு இடமில்லை என்றார்.nakkheeran.in

சவுதி - ரத்தம் குடிக்கும் அல்லாவின் குழந்தைகள்

obama saudi leaderஇன்னும் எத்தனைப் பேரின் கைகளை வெட்டி, கால்களை வெட்டி, தலையைத் துண்டித்து, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, சக முஸ்லிம் சகோதரர்களைக் கொத்துக்கொத்தாக கொல்வதற்கு ஆயுதங்கள் கொடுத்து, இன்னும் எத்தனை எத்தனை அயோக்கியத்தனங்கள் செய்து அல்லாவின் பெயரை காப்பாற்றப் போகின்றீர்கள்?
சவுதி அரேபியா என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது மெக்கா, மதினா பள்ளிவாசல்களே ஆகும். மேலும் சவுதி ஒரு எண்ணெய் வளம் நிறைந்த நாடு என்பதும், அங்கே அரேபியப் பாலைவனம் உள்ளது என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். அப்புறம், பேரிச்சம் பழம், ஒட்டகங்கள், ஷேக்குகள் போன்றவை எல்லாம் சவுதியைப் பற்றி நினைத்தால் நமக்கு உடனே நினைவுக்கு வரும். ஆனால் நம் நினைவுக்கு உடனே வராத ஒன்று, அது அல்லாவின் பெயரால் மனித உயிர்களைத் துள்ளத் துடிக்கக் கழுத்தறுத்துக் கொலை செய்யும் வகாபிகள் உள்ள நாடு என்பது.
 அங்கே இருக்கும் எண்ணெயில் பாதி மனித ரத்தத்தால் ஆனது என்பதும், வானுயர கட்டப்பெற்ற கட்டங்கள் எல்லாம் மனித உயிர்களை அஸ்திவாரமாகப் போட்டு அதன்மீது கட்டப்பட்டது என்பதும் அல்லாவின் மீது ஆணையாக உண்மை!. உங்களால் நம்ப முடியவில்லை என்றால் சவுதிக்குப் போய்வந்த தோழர்களைக் கேட்டுப் பாருங்கள்.

பத்ரி சேஷாத்ரி: நாத்திக, இறைமறுப்பு, சாதிமறுப்பு மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்துகளைப் பரப்பவேண்டிய....

கடந்த இரண்டு ஆண்டுகளில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்ற இரு மராட்டியர்களும் மிகச் சமீபத்தில் கல்புர்கி என்ற கன்னட எழுத்தாளரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை இவர்களைக் கொன்றது யார் என்று துப்பு துலக்கப்படவில்லை. இவர்கள் எல்லாம் தங்களுடைய நாத்திக அல்லது மூடநம்பிக்கைக்கு எதிரான அல்லது இந்துமத விரோதக் கருத்துகளுக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது இதில் தபோல்கர்தான் மிகத் தெளிவாக நாத்திகத்தை முன்வைத்து, மூடநம்பிக்கைக்கு எதிரான குரலைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறவர். இந்தியாவில் இம்மாதிரியான குரல்கள் இதற்குமுன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் கோபராஜு ராமச்சந்திர ராவ் (கோரா), தமிழகத்தில் பெரியார், கேரளத்தில் ஆபிரஹாம் கோவூர் போன்றோர் மத மறுப்பு, நாத்திகம், மூட நம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ பொய் வழக்கு போட்டதற்காக கடும் கண்டனமும்...

புதுடில்லி:தனியார் நிறுவனங்களுக்கு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு குறித்த வழக்கில், தொலை தொடர்பு துறை முன்னாள் செயலர் ஷ்யாமல் கோஷை விடுவித்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. பொய் வழக்கு போட்டதற்காக, சி.பி.ஐ.,க்கு கடும் கண்டனமும் தெரிவித்தது. சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த, முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் விசாரிக்கிறது. முந்தைய காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு, கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதில் நடந்த முறைகேடு உள்ளிட்ட வழக்குகள், இவற்றில் முக்கியமானவை.  ஒரு லட்சத்து எழுபது ஆறு ஆயிரம் கோடி இப்போ வெறும் 840 கோடிக்கு வந்துள்ளது இனி எவ்வளவு நயா பைசா வரை வரும் என்று வெள்ளி திரையில் காண்க.....

மன்மோகன் சிங்கிற்கு சம்மன்அனுப்ப தேவை இல்லை...நிலகரி சுரங்க முறைகேடு.... சிபிஐ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜிண்டால் குழு நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நவீன் ஜிண்டால், தாசரி நாராயண் ராவ் உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் கூடுதல் குற்றவாளியாக சேர்க்க வலியுறுத்தி ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மதுகோடா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அவரு நல்லவரு வல்லவரு பஞ்சாப்காரரு.....?

கோகுல்ராஜ் கொலைக்கு பயன்படுத்திய யுவராஜ் கார் பறிமுதல்

உடுக்க பள்ளிப்பாளையம், காட்டுப்பங்களாவில் இருந்து, கோகுல்ராஜ் கொலைக்கு பயன்படுத்திய, யுவராஜுக்கு சொந்தமான சபாரிகார் ஒன்றும்,  எம்.எம்.540 மகேந்திரா ஜீப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது பிணம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் கிடந்தது.  இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டுகள் ராஜன், வேலன் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது: உச்சநீதிமன்றம்! மத்திய அரசின்....

இந்திய நாடாளுமன்றம் ஏகமனதாக உருவாக்கிய தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் சட்டவிரோதமானது என இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு தமக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய சட்ட அமைச்சர் சதானந்தா கௌடா தெரிவித்திருக்கிறார். இந்திய நாடாளுமன்றத்தின் முழுமையான ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய முறைக்கு நாட்டு மக்களின் முழு ஆதரவும் உள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இதே விவகாரம் தொடர்பாக பிரதமர் மோதி மற்றும் மூத்த தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் நீதிபதிகளை நியமிக்க ஏற்படுத்தப்பட்ட புதிய ஆணையம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி இன்று வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Dasvidaniya ஓடிகொண்டே இருந்தவன் ஒருநாள்

Dasvidaniya  ஓடிக்கொண்டே இருந்தவன் திடீரென்று  ஓட்டத்தை
நிறுத்தவேண்டிய நிலைக்கு ஆளானான். அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அடடே  இவ்வளவு  காலமாக அவன்  ஓடிகொண்டே  இருந்திருக்கிறான், வேறு என்னதான் செய்தான்? எல்லாமே செய்தான் ஆனால் அவனுக்காக அவன் எதுவுமே செய்யவில்லை.
இந்த வாழ்வு முடியப்போகிறதே என்று அவன் கவலைப்படுவது ஒரு பெரிய ஜோக். ஏனென்றால் அவன் இதுவரை வாழவே இல்லை, வெறுமனே ஓடிகொண்டல்லவா இருந்திருக்கிறான்?
வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒருவன் தன்வாழ்வு முடியப்போகிறதே என்று கவலை கொண்டால் அதில் நியாயம் இருக்கும்.ஆனால் இவன்தான் வாழவே இல்லையே இல்லாத வாழ்க்கை இனி இருந்தென்ன போயென்ன? இந்த பிரமாண்டமான கேள்வி அவனை நோக்கி புயலாக அடித்தது,
இனி என்ன செய்யலாம் ?
வாழ்ந்து பார்க்கலாமே?
வாழ்ந்தானா?
அவனுக்கும் எத்தனையோ கனவுகள் இருந்தன. அன்றாட பிரச்சனைகளில் அவன் ஓடிகொண்டே இருந்தான், நாற்பதை கடந்தும்  தனிக்கட்டையாகவே இருந்தான்.
வயோதிப அம்மா ...வாட்டி பிழிந்து எடுக்கும் முதலாளி....வீட்டுக்கும் நாட்டுக்கும் வேலை இடத்து நண்பர்களுக்கும் எல்லோருக்குமே நல்லவன்.
அவன் இந்த வாழ்வை விரும்பி இருந்தானா இல்லையா என்ற கேள்வியும் யாரும் கேட்கவில்லை அவனும் தன்னை தானும் கேட்கவில்லை.
ஓட்டத்திற்கு ஒருநாள் காலக்கெடு விதிக்கப்பட்டது!
ஆடிப்போனவன் முகத்துக்கு நேரே ஒரு கேள்வி கணை வந்து பாய்ந்தது.

வியாழன், 15 அக்டோபர், 2015

கி.பி. 2030களில் தமிழன் பெயர் எப்படி இருக்கும்?

பிரமிதன் த/பெ. சுப்ரித் புஸ்லஹனி த/பெ சவர்ந்தன் வனிசந்தி த/பெ ஹரித்தீஸ் அஸ்வத்தா த/பெ நிசாகுலன் அவீனசியா த/பெ அசோதின் வசந்தியா த/பெ ஹனிஷான், அஸ்வத்தன் த/பெ னிஷான் முஸ்கன் த/பெ ஷகுந்
கலையரசு, முகிலன், இனியன், கலைமணி இப்படி தேன்போல இனிக்கும் நல்ல தமிழ்ப் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைத்து அகமகிழ்ந்தார் மாரிமுத்து.நல்ல பெயர்களைக் கொண்டு வளர்ந்து ஆளான பிள்ளைகளிடம் தந்தையிடமிருந்த அந்த மொழிப் பற்று ஓரளவு இருந்தாலும் அவர் களின் பிள்ளைகளுக்கும் ஸ்தேவா, பிரியா, பவனியா சந்தோஷன் என் றெல்லாம் பெயர் வைத்தனர். பிள்ளைகளுக்கு வாய்த்த மனைவி மார்கள் சோதிடத்திலும் எண் கணிதத்திலும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்ததே இதற்கான காரணமாக இருந்தது.தமிழுணர்வோடு நல்ல தமிழ்ப் பெயர்களை, பிள்ளைகளுக்கு வைக்க விரும்புகிறவர்கள் எண் கணிதம் ஜோதிடம் என்று போகக் கூடாது. காரணம் அவற்றால் தமிழப் பெயர் களை அமைத்துத் தர முடியாது.சோதிடம், எண் கணிதம் ஒரு நம்பிக்கையே. இவர்கள் பரிந்துரைக் கும் பெயர்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் எந்த மாறுதலையும் ஏற்படுத்தி விடாது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. அண்மையில்  ஊடகங்களில் வெளியான ஒரு செய்தியைக் குறிப்பிடலாம். மலேசிய சிறைச்சாலைகளில் இருப்போரில் 49 விழுக்காட்டினர் தமிழர்களாம். சிறைச் சாலைகளில் அடைபட்டுக் கிடக்கும் இவர்கள் அனைவருமே சோதிடம் பார்த்து பெயர் சூட்டப் பட்டவர்கள்தானே. பிறகு ஏன் இப்படி?

தமிழர்களை புறக்கணிக்கும் அமேசான்: காவல்துறை ஆணையரிடம் மோசடி புகார்

கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் நாள்தோறும் தங்கம் வெல்லும் தகுதி தமிழகத்துக்கு இல்லை 
அமேசான் இணையதள வர்த்தக நிறுவனம் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புதன்கிழமை மாநகரக் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளிக்கப்பட்டது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் புதன்கிழமை கோவை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தமிழகத்தில் வெளிவரும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் கடந்த இரு தினங்களாக அமேசான் என்ற இணையதள வர்த்தக நிறுவனம் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்துள்ளது.
அந்த விளம்பரத்தில் அமேசான் இணையதள செயலி மூலமாக பொருள்களை வாங்குங்கள், நாள்தோறும் ஒரு கிலோ தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை பெறுங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: கல்லூரி மாணவி பலாத்கார வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேருக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகில் உள்ளது சந்தாபுரம். இந்த ஊரைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
காவேரிப்பட்டணம் பக்கமுள்ள வேலம்பட்டியை சேர்ந்தவர் சேரன் (வயது 25). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரும், சந்தாபுரத்தைச் சார்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18.7.2014 அன்று மாலை மாணவி, கல்லூரி முடிந்ததும், தனது காதலன் சேரனை சந்தித்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் ஒரு காரில் ராயக்கோட்டைக்கு வந்தனர். அங்கு கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் போடம்பட்டி பிரிவு சாலை பக்கமுள்ள மலைப்பாதைக்கு சென்றனர்.
காதலன் முன்பு பாலியல் பலாத்காரம்
அங்கு காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் 4 பேர் அங்கு மது குடிப்பதற்காக வந்தனர். அவர்கள் காதலர்கள் 2 பேரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்றனர். 4 பேர் கொண்ட கும்பல் எதிர்பாராவிதமாக சேரனை தாக்கினர். இதை சற்றும் எதிர்பார்க்காத கல்லூரி மாணவி அதிர்ச்சியில் அலறினார்.

2ஜி வழக்கு: 3 நிறுவனங்கள் விடுவிப்பு : மற்றும் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் விடுவிப்பு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 நிறுவனங்களையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2ஜி முறைகேடு தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்தத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.846.44 கோடி இழப்பை ஏற்படுத்திவிட்டதாக சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் தெரிவித்திருந்தது.
தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய, முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் நிறுவனங்களையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று உத்தரவிட்டுள்ளார். 2G வழக்கு திமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கைதான்.அதிலும் ராசாவையும் கனிமொழியையும் குறிவைத்து தாக்குவது நிச்சயமாக உள்நோக்கம் கொண்ட செயல்தான் 

மானாட மயிலாட...கீர்த்தி விலகுகிறார்...ட்விட்டரில்...

சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மானாட மயிலாட நிகழ்ச்சியின் ஆஸ்தான தொகுப்பாளர் கீர்த்தி, அந்த பொறுப்பிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார் கீர்த்தி. மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி. இதுவரை 10 சீசன்களை கடந்துள்ளது. நடன இயக்குநர் கலா இயக்கும் இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாடினர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் பிரபலம். நடுவர்களாக குஷ்பு, ரம்பா, நமீதா, பிருந்தா, பிரசாந்த், மீனா, ஸ்ரீகாந்த் என பிரபலங்கள் பங்கேற்று மதிப்பெண் போடுவார்கள். நமீதாவின் மச்சான் கமெண்ட் பிரபமானது. பத்து சீசன்களை வெற்றிகரமாக தொட்டுள்ள இந்த நிகழ்ச்சியை சஞ்சீவ், கீர்த்தி தொகுத்து வழங்கி வருகின்றனர்.

மகாராஷ்டிரா டான்ஸ் பார்களுக்கு கோர்ட் அனுமதி

மும்பை : மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் ஆடம்பர பார்களில் நடக்கும் டான்ஸ் நிகழ்ச்சிக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது . மகாராஷ்ட்டிராவில் பாரில் ஆடும் பெண் டான்சர்கள் 75 ஆயிரம் பேர் வரை வசித்து வந்தனர் . இவர்களுக்கு மாத சம்பளம் மற்றும் ஆட்டத்தின் போது பாராட்டி கிடைக்கும் டிப்ஸ்கள் என நல்ல வருமானம் இருந்து வந்தது .இந்நிலையில் கடந்த 2014 ல் டான்ஸ் பார்கள் நடத்த தடை போடும் சட்டத்தை மாநில அரசு இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து நட்சத்திர ஓட்டல் அதிபர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையில் இன்று பார்களுக்கு மாநில அரசு விதித்த தடைக்கு தடை விதித்தது . 
சென்னையில் உள்ள பார்கள் என்ன பாவம் செய்தன ? தமிழ் நாட்டு பெண்கள் துபாயில் டான்ஸ் ஆடுகின்றனர்.

வலைவீசி தேடிய போலீசும் வாட்ஸ்அப்பில் கலக்கிய கோகுல்ராஜும்....அம்புலிமாமா வெளியீடு காணத்தவறாதீர்கள்!


சகாயம் குழுவிற்கு 5 வாரம் அவகாசம்....கிரானைட் முறைகேடு குறித்த அறிக்கை... ஐகோர்ட்..

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, கிரானைட் முறைகேடு புகாரை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியான சகாயத்தை நியமித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட்டு கூறி இருந்தது. இதை தொடர்ந்து சகாயம் தனது விசாரணையை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கினார்.

புதன், 14 அக்டோபர், 2015

விஷால்: சரத்குமார் மோதலுக்கு வரலக்ஷ்மி காரணம் அல்ல....

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் இடையிலான மோதலுக்கு சரத்குமாரின் மகள் வரலட்சுமி தான் காரணம் என்று பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கும் சரத்குமாருக்கும் இடையிலான மோதலுக்கு வரலட்சுமியும் நானும் கொண்டிருக்கும் நட்பு காரணமல்ல என்று விஷால் தெரிவித்து இருக்கிறார். நாங்கள் இருவரும் பண்பட்ட நிலையில் இருக்கிறோம். அதனால் எனக்கும், வரலட்சுமிக்கும் இடையிலான நட்பை நடிகர் சங்கத் தேர்தல் பாதிக்காது.

சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

சென்னை மெரீனா சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலையை அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். nakkheeran.in

சென்னை: பெண்ணைக் காத்து உயிரை கொடுத்த இளைஞர்...பலாத்காரம் செய்ய முயன்ற நான்கு பேரோடு...

சென்னை பல்லாவரம் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் முயன்ற கும்பலுடன் நடத்திய போராட்டத்தில் ஜான்சன் (20) என்ற இளைஞர் குத்திக் கொல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் கூறியது:
மறைமலைநகர் பாபா கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சன் (20). தினக்கூலியான இவர் பெயின்டிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த திங்கள்கிழமை இரவு மறைமலை நகர் செல்வதற்கான ரயிலை பிடிப்பதற்காக பல்லாவரம் ரயில் நிலையம் மேம்பாலம் கீழே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றிருக்கிறார். அப்போது ஒரு இளம் பெண்ணின் அபயக் குரல் கேட்டிருக்கிறது.
குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையை பிடித்து இழுத்து தகராறு செய்து கொண்டிருந்ததை கவனித்திருக்கிறார். இதையடுத்து, ஜான்சன் உடனடியாக அப்பெண்ணுக்கு உதவி செய்துள்ளார்.

ஆஸ்திரேலியா 20 லட்சம் காட்டுப்பூனைகளைக் கொல்ல தீர்மானம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுப்பூனைகளில் சுமார் 20 லட்சம் பூனைகளைக் கொல்ல அரசு எடுத்திருக்கும் முடிவை ஆஸ்திரேலிய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் சுமார் 2 கோடி காட்டுப்பூனைகள் இருக்கின்றன. இவைகள் நாட்டிற்கு சொந்தமான, அழிவின் அபாயத்திலிருக்கும் சுமார் 120க்கும் மேற்பட்ட விலங்கினங்களை அச்சுறுத்துவதாகவும் அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அரசு கூறுகிறது.
பிரெஞ்சு நடிகை பிரிஜிட் பார்தோவும் பிரிட்டிஷ் பாடகர் மோரிசியும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு ஒரு "விலங்கினப் படுகொலை" என்று பிரிஜிட் பார்தோ வர்ணித்திருந்தார்.
இந்த பூனைகளைக் கொல்லும் முடிவு ஒரு "முட்டாள்தனமானது" என்று கூறிய மோரிசி, இந்த பூனைகள் ஜிம்பாப்வேயில் சமீபத்தில் அமெரிக்க வேட்டைக்காரர் ஒருவரால் கொல்லப்பட்ட செசில் என்ற சிங்கத்தின் குட்டி வகை விலங்கினம்தான் என்று கூறியிருந்தார்.

நடிகர் சங்க பிரச்சனையில் நடிகர் விஜய் சூரியாவும் இருவரும் நிழல் யுத்தம்? தினமலர்.....

விஷால், சரத்குமார் இடையிலான நடிகர் சங்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள பின்னணியில், நடிகர் விஜய் - நடிகர் சிவகுமார் குடும்பங்களுக்கு இடையே உள்ள பகை தான் உள்ளது என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.அந்த வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
நடிகர் சங்க தேர்தலில், நடிகர் விஜய் களத்துக்கே வரவில்லை; இருப்பினும், அவர் இந்த பிரச்னையில் எங்கிருந்து வருகிறார் என்பதை விளக்கமாக சொன்னால் தான் புரியும். இந்த பிரச்னையில், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, நுழைந்த பின்னணியில், விஜயின் நெருக்கடி உண்டு.நடிகர் ரஜினியை வைத்து, 'கபாலி' படத்தை தாணு தயாரித்து வருகிறார். இதையடுத்து, தாணு எடுக்க இருக்கும் புது படத்தில் நடிக்க, விஜய் ஒப்புக் கொண்டுள்ளார். சிவகுமார் குடும்பத்தினரின் பின்புலத்துடன் நடிகர் சங்க தேர்தலில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும் விஷாலை எதிர்க்க, நடிகர் விஜய் சார்பில், தாணு முன் வந்துள்ளார். விஷால் அணிக்கு எதிராக தாணு உள்ளதை எதிர்த்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குரல் எழுப்பினார். இவர், நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி படங்களை தயாரிப்பவர். நடிகர் சிவகுமார் குடும்பத்தினரால், சினிமாவில் வளர்க்கப்பட்டவர். தாணு, சரத்குமார் அணியை ஆதரிக்க முன் வந்ததும், ஞானவேல் ராஜா, விஷால் அணியை வெளிப்படையாக ஆதரிக்கிறார். 

இளையராஜாவுக்கு புரியாத தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே....


அர்த்தம் இல்லாத பாடல் வரிகளை கூட  இசை அமைப்பாளர்கள் அர்த்தம் உடையதாக ஆக்கி விடுகிறார்கள் என்று இளையராஜா கூறியுள்ளார்
அதற்கு உதாரணமாக   நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் "தாமைரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
அதையே MSV அவர்களின் இசையில் எவ்வளவு அர்த்தம் உள்ளதாக தெரிகிறது என்று  இளையராஜா ஒரு மேடையில் கூறியுள்ளார். கவிஞர்கண்ணதாசனை எவ்வளவு குறைவாக இந்த  ராகதேவன் எடைபோட்டுவிட்டார்?
தாமரை மலருக்கு பதிலாக தாழம்பூவில் என்று எழுத கண்ணதாசனுக்கு தெரியாதா?
தாமரையின் தனி குணம் அது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீரோடு ஒட்டாது என்பதுதான் .
அதுபோலவே இந்த உலகத்தில்  இருந்தாலும் அதனோடு ஒட்டாமல் தன்மனதை தனியே வைத்திருந்தேன் என்று கதாநாயகி குறிப்பிடுவதாக அந்த அர்த்தம் உள்ளது.
நெஞ்சம் மறப்பதில்லை கதாநாயகி பூர்வ ஜென்ம காதலில் மனதை பறிகொடுத்து இந்த ஜென்மத்திலும் இங்கு ஓட்டமுடியாமல் தன்மானத்தை மட்டும் போனஜென்ம நினைவிலேயே வைத்திருக்கிறாள் என்று அற்புதமாக கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கம்போல மேடை நாகரீகம் இன்றி வாயில் வந்ததை வாந்தி எடுத்துள்ளார் இளையராஜா . 

செவ்வாய், 13 அக்டோபர், 2015

கோவிலுக்கு செல்லும் ஸ்டாலின் ஆற்காட்டார் ஜெ.அன்பழகன்....என்னய்யா நடக்கிறது திமுகவில்?

சென்னை: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு ஸ்டாலின் போனலும் போனார் சமூக வலைத்தளங்களில் போட்டு திமுகவை வறுத்தெடுத்து வருகின்றனர் வலைஞர்கள். எல்லாம் டிராமா என்கிறது நமது எம்ஜிஆர். ஆனால் அதெல்லாம் இல்லை திமுகவில் இந்துக்கள் அதிகம் இருக்கின்றனர் என்று அறிக்கை விடுகிறார் ஸ்டாலின், இதற்கும் பெரியார் சீடர்கள் பதிலடி தருகிறார்கள். அதைவிட முக்கியமான விசயம், ஸ்டாலின் கோவிலுக்குப் போய் பாதை காட்டியதன் விளைவாக திமுகவினர் பலரும் கோவில்களுக்கு படையெடுத்து வருகின்றனர். திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததற்காக, அப்போது திமுகவில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அதே பாணியில், தற்போது கோவிலுக்கு போகும் திமுகவினரை கட்சியை விட்டு நீக்குவாரா தலைவர் கருணாநிதி என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திரா ஆசிரியையின் கொடுரம்.. சிறுநீர்கழித்த 4 வயது சிறுமியை சூடான இரும்பு சறுக்கத்தில்...

ஆந்திராவில் பள்ளியில் சிறுநீர்கழித்த 4 வயது சிறுமியை சூடான இரும்பு சறுக்கத்தில் உட்காரவைத்து ஆசிரியை தண்டனை வழங்கியது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மாநிலம் எழுருவில் உள்ள தனியார் பள்ளியில், வகுப்பறைக்குள் தெரியாமல் சிறுநீர்கழித்துவிட்ட சிறுமியை ஆசிரியை கொடூரமான முறையில் தண்டித்து உள்ளார். 4 வயதான சிறுமியை, மதிய வேளையில் சூடாக இருந்த இரும்பு சறுக்கத்தில் உட்காரவைத்து தண்டித்து உள்ளார். சிறுமியை அதிக நேரம் இரும்பு சறுக்கத்தில் இருக்க வைத்ததால் அவரது அந்தரங்க உறுப்பானது மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.  ஆசிரியர் மீது பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பெற்றோர்களின் புகாரை நிர்வாகம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஸௌதியில் பிரித்தானிய முதியவருக்கு 350 கசையடி....வைன் தயாரித்ததாக...


குடும்பத்தினரை விட்டு தனியே சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த எழுபத்து நான்கு வயது முதியவர், சொந்தமாக ஒயின் என்கிற மதுபானத்தைத் தயாரித்தமைக்காக அவருக்கு முந்நூற்று ஐம்பது கசையடியை தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனத்துக்காக பணிபுரிந்து வந்த இங்கிலாந்துக்காரர் கார்ல் ஆந்த்ரே (74), கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சட்டவிரோதமாக ஒயின் தயாரித்ததாக கருதப்பட்டதால் கைது செய்யப்பட்டார். மூன்று முறை புற்றுநோயாலும், தற்போது ஆஸ்துமாவாலும் பாதிக்கப்பட்டுள்ள கார்லுக்கு, ஒராண்டு சிறை தண்டனையும், 350 கசையடியும் வழங்குமாறு இந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கார்ல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஒராண்டு சிறை தண்டனைக்குப் பின்னர் வழங்கப்பட இருக்கும் கசையடியை நிறைவேற்றக் கூடாது என அவரது மகன் மன்றாடி வருகின்றார். இந்த காட்டு மிராண்டி நாட்டுக்கு இவனுக ஏன்தான் சப்போர்ட் பண்றாய்ங்களோ தெரியல்ல..

நீதிமன்ற அவமதிப்பு....கவிஞர் வைரமுத்து மீது வழக்கு பாய்கிறது!

நீதிபதிகளை கவிஞர் வைரமுத்து விமர்சித்து பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் கடந்த மாதம் 12-ந் தேதி மறைந்த நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, சமூகத்தை நீதிமன்றம் கவனிப்பதைப்போல, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை. நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகிய 4 துறைகளும் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும் என நீதித்துறை குறித்து பேசினார்.

நடிகர் கார்த்திக்கின் துப்பாக்கி....விமான நிலையத்தில் சகோதரர் கைது....

 பிரபல நடிகர் கார்த்திக்கின் சகோதரரும், பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகனுமான கணேஷ் என்பவர், விமான நிலையத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் வந்தததால், அவரை போலீஸார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் இருந்து நேற்று முன்தினம் மதுரை வந்த கணேஷ் சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்தார். அவரது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மேல் விசாரணைக்காக கணேசை பெருங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கணேஷ், ‘‘இது என்னுடைய கைப்பை அல்ல. நடிகர் கார்த்திக்கு சொந்ததுப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காகமானது. அவர் கடந்த முறை கொடைக்கானல் வந்தபோது ஓட்டலில் இதனை மறந்து வைத்து விட்டு சென்று விட்டார்.

திருமாவளவன்l:யுவராஜ் என்ன போராளியா.. சரணடைய வைத்து வேடிக்கை பார்க்கிறதே போலீஸ்..?

சென்னை: கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜை ஒரு போராளி போல நடக்க அனுமதித்து, சரணடைய வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போலீஸின் செயல் கண்டனத்துக்குரியது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கலந்தாய்வுக்கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சேலம் கோகுல்ராஜ் படுகொலை வழக்கையும், காவல்துறை அதிகாரி விஷ்ணுபிரியா சாவு வழக்கையும் சி.பி.சி.ஐ.டி விசாரணையிலிருந்து மாற்றி, சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது.

பிரபஞ்சம்/கடவுள்/ஆத்மா! அதை பற்றி எங்களுக்கு என்னதான் தெரியும்? What the bleep do we know?

இந்தப்படம் மிகவும் சவாலான கற்பனையும் கலையும் சேர்ந்த விவரண படமாகும்.
ஏராளமான விமர்சனங்களையும் அதற்கு நிகரான பாராட்டுக்களையும் பெற்று  வசூலிலும் வெற்றி பெற்ற ஒரு அதிசய படமாகும்.
விஞ்ஞானிகளின் கடுமையான விமர்சனம் அதே சமயம் பாராட்டுகள் என்று இரண்டு விதமான கருத்துக்களும் இருந்தாலும் பார்வையாளர்களின்
கோணத்தில் இது ஒரு பெரும் சேவையை செய்த படம் என்று இதை கூறலாம்.
Quantum Science or Quantum Mechanics என்று படித்தவர்களாலேயே  விளங்க முடியாத ஒரு விடயத்தை சாதாரண சினிமா ரசிகர்களுக்கும் விளங்க வைக்கும் முயற்சியை இது செய்தது,
பிரபஞ்சம் அல்லது கடவுள் போன்ற பதில் காண முடியாத கேள்விகள் ஒரு பெண்ணின் மனதில் அலைமோதியது.
அவரோ காது கேளாதவர் அவரின் மௌன உலகத்தில் நாம் சாதரணமாக காணும் காட்சிகள் அவருக்கு கொஞ்சம் வித்தியசாமாக தோன்றியதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.
நாம் காணும் காட்சிகள் உண்மையில் அங்கு நிதர்சனமாக உள்ள காட்சிகள்தானா?
காணும் காட்சிகள் நாம் காண்பதாலேயே அவை காட்சிகள் ஆகின்றனவா? உண்மையில் அங்கு ஒன்றுமே இல்லையா?
இது போன்ற கேள்விகள் உங்கள் தலையை சுற்ற செய்யும்.
அழகான இந்த பிரபஞ்சம் அழகாக இருப்பதற்கும் அல்லது அழகில்லாமல் இருபதற்கும் அதை பார்க்கும் நாம் தான் காரணமா?

திங்கள், 12 அக்டோபர், 2015

இலங்கை பெண் புகாரால் இந்தியா அதிர்ச்சி ! இந்திய வீடமைப்பு திட்டம்.....

டெல்லி: இலங்கை உள்நாட்டு, போரில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தாருக்கு இந்தியா சார்பில், வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றந. இந்த வீடுகள் கட்டுவதற்கு பணம் ஒதுக்க வேண்டுமானால், தன்னுடன், படுக்கையை பகிர வேண்டும், என்று செஞ்சிலுவை சங்க அதிகாரியால் பெண்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து இந்தியா விசாரணையை தொடங்கியுள்ளது. இலங்கையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்களுக்காக, இந்தியா, 50ஆயிரம் வீடுகளை கட்டித் தரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அரசுடன், இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கங்களும், இப்பணியை மேற்பார்வையிட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணம் சென்ற பிரதமர் நரேந்திரமோடி, பாதிக்கப்பட்ட சிலருக்கு வீடுகளை வழங்கினார். இந்நிலையில் இலங்கை பத்திரிகையொன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த பெண் ஒருவர், வீடு வேண்டுமெனில் படுக்கையை பகிர செஞ்சிலுவை சங்க அதிகாரி கட்டாயப்படுத்துவதாக கூறியிருந்தார்.

ஐகோர்ட் நீதிபதிகள் ; தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லை.

சென்னை ஐகோர்ட்டுக்கு தற்காலிகமாக மத்திய படை பாதுகாப்பு தேவை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என நீதிபதி கூறினார். மத்திய படை பாதுகாப்பு கோரிய வழக்கில் தமிழக அரசின் பதிலை ஏற்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கூடுதல் பாதுகாப்பு தரப்படும் என்ற பதிலை தலைமை நீதிபதி கவுல் ஏற்க மறுத்தார். குறைந்தபட்சம் 6 மாதமாவது மத்திய படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் உறுதிபட தெரிவித்துள்ளது. மாநில காவல்துறையுடன் மத்திய போலீசும் பாதுகாப்புக் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மத்தியப் பாதுகாப்பு தொடர்பாக அக்ிடோபர் 30ம் தேதிக்குள் தமிாக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. dinakaran.com

கலைஞரும் குஷ்புவும் மேடையில்....வைரமுத்துவின் விழாவில்...

கடந்த ஆண்டு ஜூன் மாதம்_திமுகவில்  இருந்து விலகிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு ஓராண்டுக்கு பிறகு விழா ஒன்றில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா, சின்னத்திரை என வெற்றிகரமாக வலம் வந்த நடிகை குஷ்பு 2010 ஆம் ஆண்டு திடீரென திமுகவில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். திமுகவில் சேர்ந்த சில நாட்களிலேயே கட்சியில் பிரபலமான குஷ்பு அக்கட்சியின் முன்னனி நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தார். 2011 மற்றும் 2014 ஆண்டு சட்டசபை மற்றும் பாரளுமன்ற தேர்தலில் திமுகவுக்காக தமிழக முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட குஷ்பு திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றார். கருணாநிதியை எந்த நேரத்திலும் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்த குஷ்பு திமுக வின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு தனது சுதந்திரமான கருத்தை வெளியிட்டதில் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கலைஞர்  குஷ்புவுக்காக தென்சென்னை சீட் கேட்டு...  ஸ்டாலினோடு சண்டை போட்டும்.....கெடுகுடி சொற்கேளாது.....

மனோரமாவின் கடைசி உரை - வீடியோமறைந்த ஆச்சி மனோரமா கடைசியாக கலந்துகொண்ட பொது நிகழ்ச்சி இம்மாதம் 7ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சினிமா செய்தியாளர் சங்க விருது வழங்கும் விழா. கமல்ஹாசன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் மனோரமா, உணர்ச்சிகரமாகப் பேசினார். தமது உயிர் அந்த மேடையிலேயே பிரிந்தாலும் சந்தோஷப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கூட்டத்தில், கருணாநிதியால் 1945ம் ஆண்டு அதாவது சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய உரைநடை வடிவிலான கவிதையான 'குடிசைதான் ஒருபுறத்தில்' எனத் தொடங்கும் கவிதையினை ஆச்சி மனோரமா உணர்ச்சிகரமாக பேசினார். webdunia.com

யுவராஜை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நாமக்கல் நீதிமன்றம் அனுமதி

சேலத்தைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ், நூறு நாள் தலைமறைவுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் நகரிலுள்ள சி.பி.சி.ஐ.டி காவல்துறை அலுவலகத்தில் சரணடைந்தார். இரவு 11.00 மணிவரை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பின்னர் நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவரை நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் இன்று காலை மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போலீசார் அவரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி மலர்மதியிடம் அனுமதி கேட்டு மனு செய்தனர். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ஐந்து நாள் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்துக்கொள்ள அனுமதியளித்துள்ளார். இதை தொடர்ந்து நாமக்கல், சேலம் சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சிவசுப்பிரமணியன் nakkheeran,in

சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர்’ - திருமாவளவன் கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உத்திரபிரதேசம், கிரேட்டர் நொய்டா அருகே காவல் துறையினர் தலித் குடும்பத்தினரைப் பொது இடத்தில் நிர்வாணப்படுத்திக் கொடுமை செய்துள்ளனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகிய  அனைவரையும் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் வகையில் பட்டப் பகலில் இந்தக் கொடுமையை அரங்கேற்றியுள்ளனர்.இதனைப் படம் பிடித்த வர்கள் ‘வாட்ஸ் ஆப்’ எனும் சமுக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும்  இக்கொடுமையை இந்திய நாடே அமைதியாக இன்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.மனிதாபிமான அடிப்படையில் கூட இந்த அநாகரிகத்தைக் கண்டிக்கிற துணிச்சல் யாருக்குமில்லை. பத்துபேர் முன்னிலையில் ஆடைகளைக் கழற்றி அவமானப்படுத்துவது படுகொலையை விடவும் கொடுரமானதல்லவா? இந்தக் கேவலத்தை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2015

Fire ! மௌனமாக அடிவாங்கியவர்கள் முதல்முறையாக பேசினார்கள்!

Fire  திரைப்படம் 1996 இல் வெளியானது. கனடா வாழ் இந்திய பெண்மணியான தீபா மெஹ்தா என்பவரால் இயக்கி தயாரிக்கப்பட்டது.
இத்திரைப்படம் இந்தியாவில் பெரும் எதிர்ப்புக்களை எதிர்கொண்டது, திரை அரங்குகள் தீவைத்து கொழுத்தப்பட்டன, படுமோசமான ஒரு சமூகவிரோத திரைப்படம் போன்று எல்லா சமயத்தினரும் இந்த திரைப்படத்தை குத்தி கிளறினார். அவர்களின் கோபத்தை
இவ்வளவு மோசமாக தூண்டிவிடும் அளவு என்னதான் இத்திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டது?
யாராலும் அதிகம் பேசப்படாமல் மறைத்து மறைத்து வைக்கப்பட்ட ஒரு பெரிய உண்மையை இந்த திரைப்படம் போட்டு உடைத்துவிட்டது.
இந்த fire முதலில் கொழுத்த தொடங்கியது சமய அடிப்படைவாதிகளைத்தான், இந்த சமய அடிப்படைவாதிகள் கலாசாரத்தை தங்கள் துணைக்கு அழைத்து கொண்டார்கள்.
இந்திய கலாச்சாரமும் இறைபக்தியும் தங்கள் தலைமேல்தான் இருப்பதாக எண்ணி கொண்டிருந்த இந்த காவலர்கள் இந்த படத்தை பார்த்து பயந்தார்கள் என்பதே உண்மை,
அப்படி பயப்படுவதற்கு காரணமும் இருந்தது,
எந்த எந்த பொய்களையெல்லாம் பெண்கள் மேல் ஏற்றி வைத்து சவாரி செய்தார்களோ அந்த பொய்கள் எல்லாம் வெறும் மண்கோட்டைகள் போன்று தூள் தூள் ஆக்கிவிடும் வலிமை இந்த Fire படத்துக்கு இருந்ததை அவர்கள் சரியாகவே இனம் கண்டு கொண்டார்கள்.

வீழ்த்தப்படும் கவுத்தி மலை - 51 கிராமங்கள் அழிவை நோக்கி! தாதுமணல் கொள்ளை....ஜிண்டால் 99 சதவீதம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கவுத்தி மலை, திருவண்ணாமலையில் இருந்து 8. கி.மீ தொலைவில் உள்ளது. மூலிகைச் செடிகள், வானுயர்ந்த மரங்கள் மற்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரூற்றுகள், அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன. மக்களின் வாழ்வாதாரத்திலும் கவுத்தி மலை முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு பாதுகாக்கப்பட்டு வந்த கவுத்தி மலைக்கு “இரும்புத் தாது” வடிவில் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கவுத்தி மலையில் இரும்புத் தாது இருப்பது அரை நூற்றாண்டுக்கு முன்பே உறுதி செய்யப் பட்டுள்ளது. அதன்பிறகு பல கட்ட ஆய்வுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன. அதன் அடிப்படையில் கவுத்தி மலையில் இருந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பது என்ற முடிவுக்கு அரசுகள் வந்தன. 92.9 மில்லியன் டன் இரும்புத் தாது உள்ள கவுத்தி மலையில் இருந்து 35 மில்லியன் டன் இரும்புத் தாது வெட்டி எடுக்கலாம் என்று உறுதி ஆனது.

நடிகர் சங்க ரகசியங்கள் தானே வெளியாகும்...விஜயகாந்த் சரவெடி.....

சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றினால் மட்டும், தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டு விடுமா,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றி உள்ளனர். இதனால், தமிழகத்தில், மாற்றம் வந்து விடப் போகிறதா? தமிழக போலீசாருக்கு இருக்கும் ஒரே வேலை, முதல்வர் ஜெயலலிதாவை பாதுகாப்பது மட்டுமே.எதிர்க்கட்சித் தலைவராக, நான் இருக்கிறேன். என் பாதுகாப்பு குறித்தோ; மற்ற தலைவர்களுக்கான பாதுகாப்பு குறித்தோ, தமிழக போலீசார் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டு, எனக்கு பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

மாறுவேடத்தில் சரணடைந்த யுவராஜ்....பட்டதாரி கோகுல்ராஜ் கொலைவழக்கில் .....

சேலம் மாவட்டம் ஓமலூரைச்சேர்ந்த என் ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ், போலீசாரால் தேடப்பட்டு வந்தார். 107 நாட்கள் தலைமறைவாக இருந்த யுவராஜ், நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார். இன்று காலை 10.30 மணிக்கு சரணடையப்போவதாக நேற்றே வாட்ஸ் அப் மூலம் தகவல் சொல்லியிருந்தார் யுவராஜ். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் காலையில் இருந்தே சிபிசிஐடி அலுவலகத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர். போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர். 10.30 மணிக்கு எந்த பக்கத்திலிருந்து வருகிறார், எந்த வாகனத்தில் வருகிறார் என்று எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். சிபிசிஐடி அலுவலகத்திற்குள் நுழைந்து சரண்டைவதற்குள் அவரை கைது செய்துவிடவேண்டும் என்று போலீசார் துடித்தனர். ஆனால் அது நடக்கவில்லை. 11 மணிக்கு டிவிஎஸ் - 50 வண்டியில், முன்னால் ஒருவர் டூவீலரை ஓட்டிக்கொண்டு வர, பின்னால் உட்கார்ந்துகொண்டு, மாறு வேடத்தில் வந்து இறங்கினார் யுவராஜ்.லுங்கி கட்டிக்கொண்டு, கறுப்பு நிற டீ சர்ட் போட்டுக்கொண்டு, தலையில் சிகப்பு நிற தொப்பி போட்டுக்கொண்டு வந்திறங்கிய யுவராஜை அவ்வளவாக யாரும் கண்டுகொள்ளவில்லை. வண்டியில் இருந்து இறங்கியதும், லுங்கி, டீ.சர்ட் தொப்பியை அகற்றிவிட்டு, உள்ளே ஏற்கனவே போட்டிருந்த வெள்ளை சட்ட உடையுடன் விறுவிறுவென்று நடந்தார். அவரை அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டு, போலீஸ் பிடியில் சிக்காதவாறு, சிபிசிஐடி அலுவலகத்திற்குள் கொண்டு விட்டனர். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.nakkheeran.in

சென்னையில் பரிதவிக்கும் மு.க,முத்து!

திமுக கலைஞரின் மூத்த மகனும் நடிகரும் பாடகருமான மு.க.முத்து சமீபகாலமாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். திருவாரூரில் வசித்து வந்த இவர், கடந்த மாதம் தஞ்சையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதன் பிறகும் பிரச்சினை இருந்ததால், அவரது மனைவி சிவகாமசுந்தரி அவரை சென்னை அப்பல்லோ மருத்து வமனையில் சமீபத்தில் அட்மிட் செய்தார். அவருக்கு டாக்டர் ராஜ் பி. சிங் தீவிர சிகிச்சை யளித்தார். அப்பல்லோவில் இருந்த முத்துவை கலைஞர் குடும்பத்தினர் எவரும் கண்டுகொள்ளவில்லை. அதிக அன்புகாட்டி வந்த மு.க.அழகிரி கூட கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

ஆம் ஆத்மியின் உட்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்டேன்’ பதவி பறிக்கப்பட்ட டெல்லி மந்திரி தகவல்

ஆம் ஆத்மியின் உட்கட்சி அரசியலுக்கு பலிகடா ஆக்கப்பட்டு உள்ளதாக டெல்லி முன்னாள் உணவுத்துறை மந்திரி ஆசிம் அகமது கான் கூறியுள்ளார்.அதிரடி நீக்கம்
டெல்லி மாநில சுற்றுச்சூழல் மற்றும் உணவுத்துறை மந்திரியாக இருந்தவர் ஆசிம் அகமது கான். இவர் தனது தொகுதியில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்காக, அதன் உரிமையாளரிடம் இருந்து ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இது குறித்த ஒலி நாடா (ஆடியோ டேப்) உள்ளிட்ட ஆதாரங்கள் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவர், ஆசிம் கானை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். இந்த ஆடியோ டேப்பை பத்திரிகையாளர்களுக்கு போட்டு காட்டிய கெஜ்ரிவால், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட்டார்.

நடிகை மனோரமா உடல் நலக்குறைவால் மரணம்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.