சீனிவாசன் நாடறிந்த ஊழலை செய்தவர்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் இங்கே கிரிக்கெட் எந்த இலட்சணத்தில் இருக்கும் என்பதை யாரும் தனியே விளக்கத் தேவையில்லை.
டிஎன்சிஏ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 83-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது. இதில் கிரிக்கெட் சங்கத் தலைவராக என். சீனிவாசன் தொடர்ந்து 12-வது முறையாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் போல துணைத் தலைவர்கள், இணைச் செயலர், உதவி செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.