சனி, 25 மே, 2024

இந்தியா கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கும் ஒரே பிரதமர்தான்! ஆண்டுதோறும் மாற்று யோசனை இல்லை

 தினத்தந்தி  : இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு பிரதமரா? காங்கிரஸ் விளக்கம்
5 ஆண்டுகளுக்கும் ஒரே நபர்தான் பிரதமராக இருப்பார். தேர்தல் முடிவு வெளியான 3 நாட்களுக்குள் பிரதமர் பெயர் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
சண்டிகார்,
'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருவர் வீதம் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்கள் பதவி வகிப்பார்கள் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், சண்டிகாரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வெள்ளி, 24 மே, 2024

வடக்கே காங்கிரஸ் ஆதரவு அலை? பாஜகவின் '400' கனவு அம்போ? பாஜக மேலிடத் தலைவர்களே ஒப்புதல் வாக்குமூலம்?

 tamil.oneindia.com - Mathivanan Maran :  டெல்லி: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கும் 400 தொகுதிகளில் வெல்வோம் என்ற கனவு நிச்சயம் நடக்காது ஒன்றுதான் என பாஜகவின் மேலிடத் தலைவர்கள் சிலரே பகிரங்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
18-வது லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. 6-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இறுதி மற்றும் 7-வது கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1-ந் தேதி நடைபெறும்.

ISIS உறுப்பினர்களுக்கு உதவியவர் அதிரடி கைது; மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்

tamil mirror :    இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ISIS உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவரான மொஹமட் நுஃப்ரான், பாரிய போதைப்பொருள் வியாபாரியான பொட்ட நௌபரின் இரண்டாவது திருமணத்தின் மகன் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை ISIS உறுப்பினர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பண்ணை வீட்டு பார்ட்டி .. பிரபலங்கள் பலர் மாட்டி பெங்களூருவில்

 மாலை மலர் :  பெங்களூருவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பார்ட்டி நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அந்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது இந்த பார்ட்டியில் ஏராளமான பிரபலங்கள் ஈடுபட்டதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
போதையில் இருந்து அனைவரும் போதைபொருட்கள் பயன்படுத்தினார்களா? என்பது அறிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட 86 பேர் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது.

பாஜக தோற்றாலும் சுலபமாக வெளியேறாது! நிர்மலா சீதாராமனின் கணவர் கடும் எச்சரிக்கை ஜூன் 4க்கு பின்பு ..(அரக்கலயா?)

 tamil.oneindia.com - Shyamsundar I சென்னை: பாஜக தோற்றாலும் சுலபமாக வெளியேறாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார்.
மனைவி பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர் என்றாலும் கணவர் பாஜக ஆட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
Nirmala Sitharaman s husband already warned that PM Modi and BJP won t leave the ruling seat easily
சமீபத்தில் தி வயர் ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்காது. மெஜாரிட்டி எண் 272. அதை பாஜக பெற வாய்ப்பே இல்லை. அந்த கட்சிக்கு 200- 220 இடங்கள் கிடைக்கும். ஆனால் அதில் கூட 220 என்பது அதிகபட்ச நம்பர்.

வியாழன், 23 மே, 2024

எச்சில் இலை மீது உருளும் வேண்டுதல் - தனிமனித உரிமையா? சமூக பிரச்னையா?

எச்சில் இலை மீது உருள்தல்

BBC News தமிழ் - பிரம்மேந்திர சபா - சாரதா வி : கரூர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் எச்சில் இலைகளில் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கியுள்ள தீர்ப்பில்,
 "சமூக விருந்தில் பங்கேற்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற வாழை இலைகளில் உருள்வது அவருக்கு ஆன்மீக பலனைத் தரும்" என்ற நம்பிக்கை,
அந்தத் தனிப்பட்ட நபரின் "ஆன்மீக தேர்வு" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன சடங்கு?
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நேரூர் கிராமத்தில் உள்ளது, ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி. அவர் ஜீவ சமாதியான நாளை அவரது பக்தர்கள்   ஆறு நாள் விழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

மோகன்லாலுக்கு மரியாதையே கிடையாது" - நடிகை சாந்தி வில்லியம்ஸ் ஆவேசம்!

 மின்னம்பலம்  - indhu  :   கடந்த அன்னையர் தினத்தை (மே 12) முன்னிட்டு நாம் திரைப்படங்களில், தொலைக்காட்சியில், பொதுவாழ்க்கையில் கண்ட சில அன்னையருக்கு நமது மின்னம்பலம் சார்பாக ‘Super Mom awards – 2024′ என்கிற விருதை வழங்க வேண்டும் என்கிற முன்னெடுப்பை எடுத்தோம்.
அதில் நாம் விருது தந்த ஒருவர் தான் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இந்த நிகழ்வில் அவர் வாழ்க்கையில் கடந்து வந்த பல அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதில், அவரது வாழ்க்கையில் முக்கிய பங்காக இருந்த சில திரைப் பிரபலங்களின் புகைப்படங்களை காட்டி அவர்கள் குறித்த சாந்தியின் அனுபவத்தை பகிரும்படி கேட்டுக்கொண்டோம்.

பிரதமர் மோடிக்கு முத்திடுச்சு : நான் பயாலஜிக்கலாக பிறக்கவில்லை . டைரெக்ட்டாக பரலோகத்தில் இருந்து வருகிறேன்

 நக்கீரன் :“நான் மனிதப் பிறவியே இல்லை” - பிரதமர் மோடி
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சாதாரண மனிதர்களைப் போல நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறிய கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அதானியுடன் கூட்டணி வைத்து அ.தி.மு.க. செய்த மற்றொரு மோசடி அம்பலம்!

 கலைஞர் செய்திகள் Chennamani  : அதானியுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால், அதிமுக ஆட்சி காலத்தில் களவாடப்பட்ட ரூ. 6,000 கோடி. மக்களின் உயிர்களும் கேள்விக்குறியான அவலம்.
மோடியின் மிக நெருக்கமான பணக்கார நண்பராக இருக்கும், அதானி செய்த மற்றொரு மோசடி இது.
கடந்த ஆண்டு, அந்நிய முதலீடுகளை பெறுவதில், விதிமுறைகளை மீறியிருக்கிறது அதானி குழுமம் என மோசடியை தோலுரித்துக் காட்டிய Financial Times,
தற்போது, அதானி குழுமத்தின் மற்றொரு மோசடியை தோலுரித்துள்ளது. ஆனால், இம்முறை பாதிக்கப்பட்டுள்ளது இந்திய அரசு, தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள்.
இந்த மோசடி தொடங்கப்பட்டதும், பா.ஜ.க ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஆண்டான 2014-ல் தான்.

பாலஸ்தீனை ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து அங்கீகரிப்பதன் ரகசியம் என்ன ??..

May be an image of 2 people, the Oval Office and text

Annesley Ratnasingham  :  எதற்க்காக ஸ்பெயின் (Spain ) மற்றும் அயர்லாந்து ( Ireland ) என்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் ரகசியம் என்ன ??..
இத்துடன் நோர்வே ( நோர்வே ),  Slovenia வும் Malta வும் இவர்களுடன் இணைகின்றன ..
இவர்களுடன் பிரான்ஸ் ம் இணைகிறதாம் ..
ஸ்பெயின் (Spain ) பாலஸ்தீனத்தை ஆக்கிக்கரிப்பதற்கு ஒரு சரித்திர காரணம் உண்டு .
அதாவது ஸ்பெயின் (Spain ) க்கு அரபு நாடுகளுடன் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது அதோடு Maghreb region என்று சொல்லப்படும் western and central North Africa, including Algeria, Libya, Mauritania, Morocco, and Tunisia. The Maghreb also includes the disputed territory of Western Sahara ஆகியவைகளுடன் Franco dictatorship ( (1939-1975) காலத்தில் இருந்தே  மிக நீண்ட ஒரு வர்த்தக ,கலாசார தொடர்பு உள்ளது ..

புதன், 22 மே, 2024

ஸ்ரீமதியின் தாய் : பணத்தை வாங்கி கொண்டு சவுக்கு சங்கர் இழிவாக பேசியுள்ளார் பிரின்சிபாலின் அறையிலே கண்டாம்கள்

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதியின் தாயாரின் இன்றைய பேட்டி! எவ்வளவு கொடிய குற்றவாளிகள் அந்த பள்ளிக்கூடத்தின் அதிபர் பொறுப்பில் இருக்கிறார்கள்?    பிரின்சிபாலின் அறையிலே கண்டாம்கள் அதுவும் விதவிதமான வெளிநாட்டு காண்டம்கள் இந்த ஆசிரிய குற்றவாளிகள் தூக்கில் தொங்க வேண்டியவர்கள்தான் அதைவிட இன்னும் ஒரு படி மேலே சவுக்கு சங்கர் என்ற ஊடக குற்றவாளி! ஆட்சி மாறினாலும் இன்னும் கூட எல்லா துறைகளிலும் எம் எல் எம் கட்சியின் வியாபாரிகளும் அவர்களால் அமர்த்தப்பட்ட அதிகார வர்க்கமும்தான் கோலோச்சுவது போல் தெரிகிறது இந்த குற்றவாளிகளை தப்பிவிட அனுமதிக்க வேண்டாம்! கொஞ்சம் கூட கூசாமல் அந்த பெண் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார் என்று காசுக்கு கூவினான் .

EVM - ஒரு தொகுதிக்கு 28 ஆயிரம் ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம்: தேர்தல் ஆணையத்தின் தரவு விளையாட்டு- காங்கிரஸ் கேள்வி!

 மின்னம்பலம் -indhu :  வாக்குப்பதிவு தொடர்பான தரவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏன் ஏற்படுகிறது என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் செய்தி மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா இன்று (மே 22) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பகுதிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் சென்ற  தேர்தல்களில்,  
தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு நடைபெற்ற அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெளியிடப்பட்டது.
ஆனால், இந்த வருடம் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், அதற்கான தரவுகள் 11 நாட்களுக்கு பிறகும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த 4 நாட்களுக்குப் பிறகும், 3 மற்றும் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து முறையே 4, 8 நாட்களுக்கு பிறகே தரவுகள் வெளியிடப்பட்டது.

ஒடிஷா பாண்டியன் IAS மீது மோடியும் அமித்ஷாவும் ஏன் வன்மத்தை கக்குகிறார்கள்?

May be an image of 1 person and smiling
May be an image of text that says 'Awards and recognition 1. National award from the President of India, for the rehabilitation of Persons with Disabilities (PWDs) 2. Helen Keller Award 3. National Award for Working for Persons with AIDS, from the Ministry of Health and Family Welfare. 4. National Award for NREGS (2 times) for the best district in the country- Ganjam by Prime Minister India 5. President's Award by the International Hockey Federation for his contribution to the promotion of hockey.'

Vasu Sumathi :  யார் இந்த பாண்டியன் IAS?
ஏன் அவர் மீது மோடியும் அமித்ஷாவும் அவ்வளவு வன்மத்தை கக்குகிறார்கள்?
1999 ல் பாரடிப் புயலினால் அப்போதுதான் பேரழிவை சந்தித்திருந்தது ஒடிசா.
அந்த சூப்பர் சூறாவளியில் 10000 பேர் பலியனார்கள்.
அதே ஓடிஷாவில் மிக கடினமான நேரத்தில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, மிக கடுமையான உழைப்பாளியான பாண்டியன் 2000 ஆம் ஆண்டு IAS அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2002 ஆம் ஆண்டில், அவர் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தரம்கரின் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார், அங்கு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரையும் ஒருங்கிணைத்து பெரும் பங்காற்றினார்.
2004 இல், ரூர்கேலாவில் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டாக, அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திவாலாகியிருந்த ரூர்கேலா மேம்பாட்டு முகமைக்கு (RDA) தலைமையேற்றார்.  பாண்டியனின் தலைமையில், ஆர்.டி.ஏ., 15 கோடி உபரி லாபம் பார்த்தது. அவர் பொறுப்பேற்ற ஐந்து மாதங்களில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்த மக்களுக்கு அவர்கள் பணத்தை திருப்பித் தர முடிந்தது.

எஸ்.ஆர்.சேகரிடம் (BJP) இரண்டு மணி நேர விசாரணை! நயினாரை கை கழுவிய அண்ணாமலை. 4 கோடி விவகாரத்தில் நடப்பது என்ன?

 மின்னம்பலம் -   Aara :  வைஃபை ஆன் செய்ததும் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திய தகவல்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “ஏப்ரல் 6 ஆம் தேதி பாஜகவின் நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் ரொக்கத்தை, தேர்தல் பறக்கும் படையும், தாம்பரம் போலீஸும் சேர்ந்து கைப்பற்றியது.
சில நாட்களில் இந்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனிடம் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில், அடுத்து பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக ஒரு பொய் ஒழிந்துகொண்டிருக்கிறது

ராதா மனோகர்   :  ஈழத்து இலக்கிய உலகில்  நீண்ட காலமாக ஒரு பொய் ஒழிந்துகொண்டிருக்கிறது. ஈழத்து கவிஞர்கள் அல்லது புனை கதைகளை படைக்கும் இலக்கியவாதிகள் பெரும்பாலும் யுத்தம் அது தந்த வலி பற்றி எழுதுவதே ஒரே நோக்கமாக கொண்டிருப்பது போல தெரிகிறது  அது தவறு என்று கூறவில்லை . ஆனால் அதில் உண்மை இருக்கவேண்டும்.
இராணுவ தாக்குதல்கள் காரணமாக மக்கள் அடைந்த துன்பத்தை இலக்கிய தளத்தில் முன்வைப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு போராட்டத்தின் மறுபக்கத்து விளைவுகளையும் பாரபட்சமின்றி இலக்கிய தளத்தில் முன்வைக்கவேண்டும்.
ஏறக்குறைய எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு காவியம் படைக்கும் ஒரு வெறுமை அல்லது பொய் கண்முன்னே தெரிகிறதே?
எனக்கு தெரிந்தவரையில் தமிழ் மக்களால் ஜீரணிக்கவே முடியாத ஒரு அதிர்ச்சியையும் துன்பத்தையும் தந்தது எந்த நாட்டு இராணுவமும் அல்ல.
ஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு இயக்கம் தம்பி இன்னொரு இயக்கம்  என்று இருந்தன அந்த நாட்கள்.
எல்லா இயக்கங்களும் எங்கட பொடியள் என பாசமாக மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த அந்த நாட்களை வெகு சுலபமாக கடந்து போய்விடலாம் என்று அராஜகவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் கருதலாம்.

ஈ வி கே எஸ் இளங்கோவன் : “முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி”

 nakkheeran.in  : ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் கலந்தூ கொண்டு பேசியபோது,
 “நாட்டில் 10 வருட காலமாக ஆட்சி செய்யும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் நமது இப்போதைய நோக்கமாகவும் உள்ளது.
இதற்கு யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்து அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டும்.
மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு இருக்காது.

அமரர் ராஜீவ் காந்தி கொலையால் இலாபம் அடைந்தவர்கள் பட்டியல்

 Ilango Manivannan :  ராஜீவ்காந்தி கொலையால் லாபம் அடைந்தவர்கள் யார்?
ராஜீவ்காந்தி  கொல்லபட்டபோது
சந்திரசேகர் பிரதமர்,
சுப்ரமணியம் சுவாமி சட்ட அமைச்சர், N.K சிங் IAS ஒன்றிய உள்துறை செயலர், M.K நாராயணன் மத்திய உளவுத்துறை தலைவர்,
R.K ராகவன் தமிழ்நாடு காவல்துறை தலைவர்.
இதில் N.K சிங்கும், R.K ராகவனும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான
ராஜீவ்காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தவர்கள்.
இதில் N.K நாராயணன், மே 20, 1991 அதாவது ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட நாளுக்கு முந்தைய நாள், ராஜீவ்காந்திக்கு
SPG பாதுகாப்பு கேட்டு N.K சிங்'க்கு கடிதம் எழுதுகிறார். அன்று ஞாயிற்றுக்கிழமை. மறுநாள் திங்கள்கிழமை ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்.

செவ்வாய், 21 மே, 2024

குஜராத்தில் கைது செய்யப்பட்ட 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்!

 tamil.asianetnews.com  - Ajmal Khan  ;   நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயரங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த 4 பேரும் இலங்கையர்கள்  என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் 5 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. 6 மற்றும் 7வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்  குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் ஒருவர் உயிரிழப்பு - என்ன நடந்தது?

  BBC News தமிழ் - ஜோயல் கிண்டோ, சைமன் ஃப்ரேசர்
லண்டனில் இருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் சிங்கப்பூர் செல்வெவேண்டிய அந்த போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் நிலை திடீரெனத் தாழ்வானதாகவும், மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

ALS ஏ எல் சீனிவாசன் கலைஞர் எம்ஜியார் ஜெயலலிதா -மூன்று முதல்வர்களுக்கும் சம்பளம் கொடுத்த திரை முதலாளி

May be an image of 2 people
May be an image of 2 people

Chandran Veerasamy :   நூறாண்டு தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த பத்துப் படைப்பாளுமைகள் எனப் பட்டியலிட்டால் கவியரசர் கண்ணதாசனுக்கு நிச்சயம் இடமுண்டு.
அவரைப் பற்றி உரையாடி, நினைவு கூர்கிற அளவுக்கு, அவருடைய குடும்பத்திலிருந்து வந்து திரையுலகில் சாதனைத் தடம் பதித்தவர்கள் குறித்து நாம் பேசுவதில்லை.
கண்ணதாசனின் உடன்பிறந்த அண்ணன் ஏ.எல். கண்ணப்பனின் மகன் பஞ்சு அருணாசலம் ஒரு வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக விளங்கினார். பாடலாசிரியராகவும் கவனிக்க வைத்தார். ஆனால், இவர்கள் அனைவருக்கும் பாதை போட்டுக் கொடுத்தவர் ‘ஏ.எல்.எஸ்’ என்று கம்பீரமாக அழைக்கப்பட்ட ஏ.எல்.சீனிவாசன். தமிழ் சினிமா தயாரிப்பிலும் தமிழ் சினிமாவுக்கு தேசிய அரங்கில் கவனம் பெற்றுக் கொடுத்ததிலும் பல முன்மாதிரிகளை உருவாக்கியவர்.

ஈரான் அதிபர் மரணத்துக்கு சதி காரணமா? - புதிய தகவல்கள்

 தினத்தந்தி :  தெஹ்ரான் ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி (வயது 63). இவர் நேற்று அண்டை நாடான அசர்பைஜான் சென்றார். ஈரான் - அசர்பைஜான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள அணையின் திறப்பு விழாவில் அசர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியோவ் உடன் இப்ராகிம் ரைசி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண கவர்னர் மாலிக் ரஹ்மதி மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குபின் அதிபர் ரைசி உள்பட அனைவரும் நேற்று மாலை ஈரான் புறப்பட்டனர். அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர் உள்பட முக்கிய தலைவர்கள் ஒரு ஹெலிகாப்டரிலும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகள் மேலும் 2 ஹெலிகாப்டரிலும் ஈரான் புறப்பட்டனர்.

மனைவியை அடித்து துன்புறுத்திய தாய், சகோதரி- தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்:

article-image

மாலைமலர் : மனைவியை அடித்து துன்புறுத்திய தாய், சகோதரி- தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்:
“உத்தரப் பிதேச மாநிலம் எட்டா மாவட்டத்தில் உள்ள ஜெய்த்ரா என்கிற பகுதியில் தாயும், உடன் பிறந்த சகோதரியும் மனைவியை தரையில் தள்ளி அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதை தடுக்காமல் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோ காட்சியில், பெண்ணை தரையில் தள்ளிய கணவரின் சகோதரி அவரின் வயிற்றில் உதைக்கிறார்.
இதனால் அந்த பெண் வலியில் துடித்து கத்த ஆரம்பிக்கிறார். மருமகளை அடிக்கும் மகளை மாமனார் பலமுறை தடுக்க முயற்சிக்கிறார்.

உடலை போற்று .. உடலை பேணு ... உடலை அழகுபடுத்து ! அதுதான் என்றும் உன்னோடு இருக்கும்.

ராதா மனோகர்   :  உங்களது  உடலைவிட  வேறு பெரிய சொத்து உங்களுக்கு கிடையாது.
இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  
இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  
உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.

திங்கள், 20 மே, 2024

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

 தினமணி : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு
“ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார்.
அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்ட இப்ராஹிம் ரைசி, அதன் பின்னர் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு புறப்பட்டார்.
அவருடன் ஈரான் வெளியுறவு மந்திரி உசைன் அமிரப்டோலாஹியன் மற்றும் மூத்த அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

வள்ளலார் உயர் ஆய்வு மையம் அரசு இப்போதும் திட்டமிட்டு ஆரம்பித்த அதே இடத்தில் வேண்டும் !

May be an image of 2 people

Neyveli Ashok   : ஆன்மீக கலகக்காரர் வள்ளலார் - பெருவெளி பகுதியில் கண்டிப்பாக உயராய்வு மையம் வேண்டும் :
பிபிசி போன்ற பன்னாட்டு முதலிகளின் ஊடகங்களும் இப்போது வடலூர் பகுதியை பினம்தின்னி கழுகு போல வட்டம் அடிக்கிறது.
எப்படியாவது திராவிட கருத்துகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய உதவ வேண்டும் என.....
ஆன்மீக கலகக்காரர் வள்ளலார் அவர்களை சனாதன தர்மத்தின் உச்ச  நட்சத்திரம் என்று ஒரு பார்ப்பான் கூறியபோது நெஞ்சை நிமிர்த்தி அதை எதிற்காத புரட்சி ( குள்ளநரி) கூட்டங்கள்,
தற்போது திராவிட மாடல் அரசின் நாயகன் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சன்மார்க்க சபை அருகே ஒரு வள்ளலார் உயர் ஆய்வு மையம் கொண்டு வர வேலை ஆரம்பித்த உடன் நெஞ்சை நிமிர்த்தி வருகிறது குறைக்க....
யார் இவர்கள் ?

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது - என்ன நடக்கிறது?

  BBC News தமிழ் :இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.
இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியனும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக கூறப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைவதில் சிக்கல் நீடிப்பதாக இரான் உள்துறை அமைச்சர் அஹ்மத் வாஹிதி கூறினார்.
ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை, இன்னும் எந்த தொடர்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிறு, 19 மே, 2024

சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் : தவறை உணர்ந்துவிடேன்

 ‘நக்கீரன்  : தவறை உணர்ந்துவிடேன்’ - மன்னிப்பு கேட்ட சவுக்கு சங்கர்
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக திருச்சி முசிறி டிஎஸ்பி யாஸ்மின்  அளித்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவதூறாக பேசியது உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து வரப்பட்டு திருச்சி மகிளா நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது கோவையில் இருந்து அழைத்து வந்த பெண் போலீசார் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் அளித்தார்.

காங். கட்சிக்கு 200 உறுதி? 220 சீட்டு வென்றாலும் பாஜக ஆட்சிக்கு வராது? அடித்துச் சொல்கிறார் ஷ்யாம்

 tamil.oneindia.com - Kadar Karay   : சென்னை: நாளை 8 மாநிலங்களில் 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அது குறித்து தராசு ஷ்யாம் தனது பார்வையை முன்வைத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இதுவரை 4 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 381 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
நாளை 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. இதில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மொத்தம் 8 மாநிலங்களில் இந்த வாக்குப் பதிவு நடக்க உள்ளது.
நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களும் பாஜகவுக்குச் சாதகமாக இல்லை என்பது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் பாஜகவின் பிரச்சார யுக்தி மக்களிடம் எடுபடவில்லை. வகுப்புவாத அரசியலை மட்டுமே பேசி வருகிறார் பிரதமர் மோடி. அவரிடம் நாட்டின் வளர்ச்சி குறித்த எந்தப் புதிய திட்டங்களும் இல்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மோடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

 கலைஞர் செய்திகள்  - Lenin  :  தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்டதும் பெண்களது வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் விடியல் பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தியதை அடுத்து பெண்கள் இலவசமாக மகிழ்ச்சியாக பேருந்துகளில் சென்று வருகிறார்கள்.
இதனால், சராசரியாக பெண் ஒருவருக்கு மாதம் ரூ.800 சேமிக்க உதவுகிறது. இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு சத்தான உணவுகளை வாங்குவது முதல் பல அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இல்லத்தரசிகள், முறைசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மாணவிகள், தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினரும் விடியல் பயணத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்தியா கூட்டணி அறிவிப்பு ; எங்களின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டோம்!

 zeenews.india.com - Sudharsan G   :  PM Candidate INDIA Bloc: 18வது மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தற்போது வரை ஏப். 19, ஏப். 26, மே 7, மே 13 ஆகிய தினங்களில் முதல் நான்கு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.
ஐந்தாவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஜம்மு காஷ்மீர், லடாக் என 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.