சனி, 14 மே, 2022

இந்த இருவரிடம் இருப்பதை விட தெருநாய்களிடம் பாதுகாப்பாய் இருப்பேன்: சின்மயி

 indiaglitz.com  : இந்த இருவரிடம் ஒரு அறையில் தனியாக இருப்பதை விட தெரு நாய்களுடன் ஒரு அறையில் தனியாக இருப்பது பாதுகாப்பானது என பாடகி சின்மயி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாடகி சின்மயி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது திடீரென பாலியல் குற்றச்சாட்டு கூறினார் என்பதும், அதேபோல் நடிகர் ராதாரவி மீதும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் ஒரு பெண், ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய வீடியோ வைரல் ஆகிய நிலையில் அந்த வீடியோவுக்கு பிரியாணிமேன் என்பவர் அளித்த பதிலுக்கு சின்மயி பதிலடி கொடுத்துள்ளார்.

என் கன்னித்தன்மையை சீரழித்து மகளை நடிகையாக்கினார்” – நடிகை Pooja Mishra பரபரப்பு புகார்

மாலைமலர் : :  நடிகர் சத்ருகன் சின்கா என்னுடைய கன்னித் தன்மையை விற்றுதான் தனது மகளை (சோனாக்ஷி சின்ஹா)  நடிகையாக மாற்றினார் என்று கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சத்ருகன் சின்காவின் மகள் நடிகை சோனாக்ஷி சின்கா. ஆடை வடிவமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர். இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனனிவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. சோனாக்ஷி சின்கா, தமிழில் 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த லிங்கா படத்தில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், சோனாக்ஷி தந்தை குறித்து நடிகை பூஜா மிஸ்ரா வைத்துள்ள குற்றச்சாட்டில் பாலிவுட்டில் கடும் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு

 மாலைமலர் : ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு
புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சயீத்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

டெல்லி வணிக வளாக தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

 மாலைமலர் : தீப்பிடித்த வணிக வளாக கட்டிடத்தில் இருந்து 70 பேர் மீட்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
பல வணிக நிறுவனங்கள் இயங்கி வந்த நான்கு மாடி கட்டட வளாகத்தில், மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக 24 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.  இந்த விபத்தில் உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத்துறை துணை தலைமை அதிகாரி சுனில் சவுத்ரி தெரிவித்தார்.

அதிமுக மாநிலங்கள் அவையில் நடிகை விந்தியா - செம்மலைக்கு வாய்ப்பு

கருணாநிதி குடும்பத்திற்கே தனி சிறை வேண்டுமே: நடிகை விந்தியா நக்கல் |  Karunanidhi family needs a separate prison: Actress Vindhya - Tamil Oneindia

zeenews.india.com :  நடிகை விந்தியாவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி : இ.பி.எஸ். ஆதரவில் முன்னேறுகிறார்
மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ள  திமுகவைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேரின் பதவிக்காலம் நிறைவுபெறுகிறது. இந்த 6 பேரை உள்ளடக்கி நாடு முழுவதும் காலியாகும் 57 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜுன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் ஜுன் 10 ம் தேதி தேர்தல் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

ஓடும் பேருந்தில் நடத்துநர் அடித்துக் கொலை! அரசு பேருந்து.... சென்னை விழுப்புரம் சாலையில்

நக்கீரன் : சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த தகராறில் போதையிலிருந்த பயணி தாக்கியதில்.
 அரசு பேருந்து ஓட்டுநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும்
இதனால் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்து புதிய அரசுக்கான ஆதரவை தெரிவித்தனர்

 மின்னம்பலம் : இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியான நிலையில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே நேற்று (மே13) இந்தியா உள்ளிட்ட முக்கிய வெளிநாடுகளின் இலங்கைக்கான தூதர்களை சந்தித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளின் இலங்கைக்கான தூதர்களை ரணில் விக்கிரமசிங்கே சந்தித்தார்.
இது குறித்து கொழும்பில் இருக்கும் இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்த உயர் ஸ்தானிகர் நல்வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்திருந்தார். அத்துடன் இலங்கையின் சகல மக்களினதும் நல்வாழ்வை நோக்கிய ஜனநாயக செயற்பாடுகள் ஊடாக இலங்கையில் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இந்தியா மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 13 மே, 2022

நித்தியானந்தாவின் பரிதாப நிலைக்கு காரணம் என்ன? அதிரவைக்கும் கைலாசாவின் உண்மைகள்

 தினத்தந்தி : கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறி இருக்கும் நித்யானந்தா அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றி வருகிறார்.
பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.
ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது, அமைச்சர் கே.என்.நேரு அதிருப்தி?

tamil.samayam.com  :  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது, அமைச்சர் கே.என்.நேரு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றிப் பெற்றதை அடுத்து, தமிழக முதலமைச்சராக, முதன் முறையாக, கடந்த ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி, அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். தொடர்ந்து, அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றது.
அப்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஊரக வளர்ச்சித் துறை என, இரண்டு துறைகளாக, உள்ளாட்சித் துறை பிரிக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக, திமுக மூத்தத் தலைவர் கே.என்.நேரு நியமிக்கப்பட்ட நிலையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக, பெரிய கருப்பன் நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

 மாலைமலர் ஷேக் கலீஃபா ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.
இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம்

தினத்தந்தி : இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்வைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. கட்சி அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்திருந்தது.

இலங்கை மக்கள் கண்டிப்பா உப்பு போட்டு தான் சாப்பிட்டு இருக்காங்க... சமூகவலையில் ...

PM Modi To Hold Virtual Bilateral Summit With Sri Lankan PM Mahinda  Rajapaksa

Venkat Ramanujam  :  இந்தியாவை விட காஸ் சிலிண்டர் விலை குறைவாக உள்ள இலங்கையில் மக்கள் போராட்டத்தின் காரணமாக அந்த நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளாரே
அவர் மானஸ்தன்.. சோற்றிலே / சப்பாத்திலே  சிறிது அளவாவது  உப்பு சேர்த்து சாப்பிடுபவர் போல

சரவணப்பெருமாள்  :  சிலிண்டர் கேஸ் விலை 5000 வந்த பிறகு போராடிய இலங்கை மக்கள்
1000 என்று வந்திருந்த நிலையிலேயே போராடி இருந்தால் 5000 வரை செலவழித்து இருக்க தேவைபட்டிருக்காது
மக்கள் கண்ணை 5000 ஆகும் வரை மறைத்தது இன ஜாதி மத வெறுப்பு அரசியல்
கடைசில சோத்துக்கு திண்டாடும் நிலை வந்துவிட்டது
ராஜபட்சே ராஜினாமா Srilanka
வரும் முன் காப்போம்

Nagapan Sivaraja  :  மானஸ்தர் தான் ராஜினாமா செய்வார்.

இலங்கையை மீட்டெடுப்பேன்!" உறுதியாக சொல்லும் ரணில் விக்ரமசிங்கே.. இந்தியா குறித்தும் கருத்து

Vigneshkumar Oneindia Tamil  :  கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கொரோனா பரவல், விவசாய துறை வீழ்ச்சி என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
கொரோனா கட்டுக்குள் வந்த பின்னரும் கூட இலங்கை பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. பொருளாதார பாதிப்பு காரணமாக இலங்கையின் அந்நிய செலாவணி கடுமையாகச் சரிந்தது.
இதனால் அங்கு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்தது. காய்கறி, பழம், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மறுபுறம், அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால் எரிபொருளைக் கூட இறக்குமதி செய்ய முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.

வியாழன், 12 மே, 2022

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயார் என அமெரிக்க தூதுவர் டிவீட் tweet

Ambassador Julie Chung  - @USAmbSL
Look forward to working w/ @RW_UNP. His appointment as PM, and the quick formation of an inclusive government, are first steps to addressing the crisis & promoting stability. We encourage meaningful progress at the IMF & long-term solutions that meet the needs of all Sri Lankans.
8:11 AM · May 12 இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு அமெரிக்க தூதுவர் Julie Chung வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது நியமனமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவதும் நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதற்படி என Julie Chung ட்வீட் செய்துள்ளார்.

“சாப்பிட காசு கேட்ட 6 வயது சிறுவன் கழுத்து நெரித்து கொலை” - மத்திய பிரதேச காவலர் ரவி "ஷர்மா" வெறிச்செயல் !

 கலைஞர் செய்திகள் :யாசகம் கேட்ட 6 வயது சிறுவனை போலிஸார் ஒருவர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் தலைமை காவலராக இருப்பவர் ரவி சர்மா. இவர் சில நாட்களுக்கு முன்பு தாட்டியா மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது சாலையில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தபோது, 6 வயது சிறுவன் அங்கு வந்து அவரிடம் 'தனக்கு பசிக்கிறது காசு இருந்தால் கொடுக்குமாறு' யாசகம் கேட்டுள்ளார்.
இதற்கு போலிஸார் காசு எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

கௌரவ ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பு .. ஒற்றை எம்.பியாக தெரிவாகி பிரதமரான வரலாற்று சாதனையாளர்

BBC tamil :  இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. இவற்றைத் தடுக்க ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியாகக் கூறி பொதுமக்கள் இலங்கையின் பல நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த வேளையில், மஹிந்த மட்டும் கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை நடத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிறார் .. நெருக்கடியை தவிர்க்குமுகமாக இடைக்கால பிரதமாராக 6 ஆவது முறையாக .. ?

May be an image of 1 person

சமூக வலைத்தளங்களில்  வரும் பிரேக்கிங் நியூஸ் :6 ஆவது தடவை பிரதமராக பதவியேற்கிறார் ரணில்!*
 இலங்கை அரசியல் வரலாற்றில் ஐ.தே.க. புதிய சாதனை*
 இரண்டாக உடைகிறது சஜித் அணி! வெளியேறினார் ஹரின்*
 அரசியலில் ரணில் கடந்து வந்த பாதை (1970-2022)*
*தனது அரசியல் வாழ்வில் தடைக்கற்களையெல்லாம் படிக்கற்களாக மாற்றி, சவால்களை முறியடித்து சோதனையைக்கூட சாதனையாக மாற்றியமைக்கும் அரசியல் த(ம)ந்திரம் கற்றுவைத்துள்ள -  ரணில் விக்கிரமசிங்க, 6 தடவையாகவும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றிரவு வெளியிடப்படும்.*
*பிரதமர்  பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகி, இரு நாட்கள் கடக்கவுள்ள நிலையிலும், புதிய பிரதமரின்கீழ் ஆட்சி அமையவில்லை. இந்நிலைமை நீடித்தால் இலங்கை பொருளாதாரம் மேலும் வங்குரோத்தடையும். அதேபோல இராணுவ பிரசன்னமும்  அதிகரிக்கப்பட்டால் சர்வதேச உதவிகள் தடைபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.*

புதன், 11 மே, 2022

சாணி காயிதம் ...லாஜிக் , திரைக்கதை , ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அராத்து

Saani Kaayidham Review | சாணி காயிதம் | Yessa ? Bussa ? | Keerthi Suresh |  Arun | Filmibeat Tamil - YouTube

Araaathu R :  சாணி காயிதம்.  ராக்கியும் இப்படித்தான் எடுத்திருந்தார். லாஜிக் , திரைக்கதை , ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. இதையும் அப்படியே எடுத்திருக்கிறார்.என்ன ? படத்தில் செல்வராகவன் , கீர்த்தி சுரேஷ் இருப்பதாலும், படம் ஓடிடியில் கிடைப்பதாலும் உலக்கை  சினிமா ரசிகர்களும் , விஜுவல் லாங்க்வேஜ் ரசிகர்களும் லேசாக சிலிர்த்துப் பார்க்கிறார்கள்.

கேஸ் டீசலை பதுக்கி வைத்திருந்த ஆளும் கட்சி குண்டர்கள்” - அதிரடியாக மீட்டு பகிர்ந்தளித்த போராட்டக்காரர்கள் !

 கலைஞர் செய்திகள் : ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் வீட்டில் பதுக்கி கேஸ் சிலிண்டர்கள், ரசாயன உரம், டீசல், பருப்பு போன்ற ஏராளமான அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு போராட்டக்காரர்கள் பகிர்ந்தளிப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சே திடீர் சந்திப்பு .. இலங்கை நெருக்கடி நிலையில் திருப்பம்?

The Gota-Ranil Pact: Revealed - Colombo Telegraph

BBC Tamil :  இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்து பேசி வருகிறார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அமைதியற்ற சூழல் தொடர்கிறது. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார். தொடர் வன்முறை சம்பவங்களில் 9 பேர் வரை இறந்துள்ளனர்.
நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தலைநகர் கொழும்புவில் ராணுவ கவச வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசி வருகிறார்.
இதைத் தொடர்ந்து இன்று இரவு 9 மணிக்கு மக்களுக்கு விஷேட உரையாற்ற திட்டமிட்டுள்ளார்

அரவிந்தரின் மறுபக்கம் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் மனைவியை கைவிட்டு பிரெஞ்சு பெண்ணோடு குடும்பம் நடத்தியவர் ....

பேராசிரியர் சுப வீரபாண்டியன் : வரலாற்றாசிரியர் ஆர்.ஆர். திவாகர் எழுதியுள்ள ‘மகாயோகி’ (Mahayogi) என்னும் ஆங்கில நூலும், பிரேம் நாத் பசாஸ் எழுதியுள்ள நூலின் தமிழாக்கமான ‘இந்திய வரலாற்றில் பகவத் கீதை’ யும் அரவிந்தர் பற்றிய ஏராளமான செய்திகளை நமக்குத் தருகின்றன.
அரசு மருத்துவரும், சிறந்த பகுத்தறிவாளருமான கிரு­ஷ்ணதாஸ் கோஷ் மகனாக அரவிந்தர் (1872 - 1950) கல்கத்தாவில் பிறந்தார். ஆறாவது வயதிலேயே இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அவர் படித்தது முழுவதும் ஐரோப்பாவில்தான். மேலை நாட்டுக் கல்வி, மேலை நாட்டுப் பண்பாடு என்னும் சூழலில்தான் அவர் வளர்ந்தார். லண்டனில் நடைபெற்ற ஐ.சி.எஸ். தேர்வில், குதிரையேற்றப் பயிற்சியில் தோற்றதால், அப்பட்டத்தைப் பெற முடியவில்லை. ஆங்கிலேயர்களின் அந்தத் தேர்வு முறையின் மீது அவர் கடுங்கோபம் கொண்டார்.

ஆக்கிரமிப்பு அகற்றம் .. மார்வாடிகளின் அபார்ட்மெண்ட் நிலங்கள் பெரிதும் குளம், குட்டைகளாக இருந்த சீலிங் லேண்ட்கள்தான்...

May be an image of 1 person and outdoors

தமிழ் மறவன்  :  வேளச்சேரி முழுக்க பல இலட்சக்கணக்கான பார்ப்பனர்களின் குடியிருப்புக்கள் சதுப்புநில காடுதான்
சென்னையில் பெரிய, பெரிய அபார்ட்மென்ட்கள் மார்வாடிகளால் நிறைந்திருப்பவை அனைத்தும் ஒரு காலத்தில் குளம், குட்டைகளாக இருந்த சீலிங் லேண்ட்கள்தான்,
பல இலட்சங்களை கொட்டி பட்டா ஆவணங்களாக மாற்றப்பட்டிருக்கிறது.
அமைந்தகரையில் ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு என நூறாண்டுகளாக வசித்த மக்களை வெளியேற்றிய இடிப்புப் பணி SKYWALK எனும் அருண் ஓட்டல் கட்டிடம் வரை வந்து அதை இடிக்காமல் விட்டுவிட்டனர்.

செவ்வாய், 10 மே, 2022

பிரதமர் மகிந்த ராஜபக்சே தப்பியோட்டம்?: நேற்று நடந்த கலவரத்தில் 7 பேர் பலி; 231 பேர் படுகாயம்

 தினகரன் : கொழும்பு: இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியானதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பியோட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் அங்கு பதட்டநிலை நீடிக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி போராட்டம் நடத்தி வந்த நிலையில, இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது.
பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில்,

இலங்கை கலவரம்... சொத்துக்களை சேதப்படுத்தினால் சுட்டுத்தள்ள உத்தரவு!

 நக்கீரன் : இலங்கையில்  விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
போராட்டத்தின் பலனாக  ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து குருநாகல்லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதனால் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதேபோல் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவின் வீட்டிற்கும் தீவைக்கப்பட்டது.

இலங்கை வன்முறை- துப்பாக்கியால் சுட்ட எம்.பியை அடித்து கொன்ற போராட்டக்காரர்கள்

 மாலைமலர் : நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது. மொரட்டுவை மேயரின் வீட்டிற்கு தீ வைத்ததால் பதற்றம் நீடிக்கிறது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.

மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை: கொலையாளியின் வாக்குமூலம்!

மின்னம்பலம் : தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதி கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (58). இவரது மனைவி அனுராதா (55). இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும், சஸ்வத் என்ற மகனும் உள்ளனர். சுனந்தா திருமணமானவர். கணவருடன் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார். சஸ்வத்தும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
சுனந்தாவுக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்திருக்கிறது. இதனால் குழந்தையைப் பார்ப்பதற்காக ஸ்ரீகாந்த், அனுராதா இருவரும் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்கா சென்றனர்.

திங்கள், 9 மே, 2022

இலங்கை கலவரம் - மேயர் வீட்டுக்கு தீவைப்பு... ஆளுங்கட்சி எம்.பி உயிரிழப்பு... Breaking News (09-05-2022) newsfirst lk

 நக்கீரன் செய்திப்பிரிவு    :  இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. பால், மாவு,பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்திவந்த போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே  தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதம் குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்ன முடிவெடுப்பார் என்ற யூகங்கள் அங்கு கிளம்பியுள்ளது.  நாளை அல்லது நாளை மறுநாள் புதிய இடைக்கால அரசு நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மயிலாப்பூர் கன்னையா உயிரிழப்பு - கூடுதல் மனச் சுமையுடன் பங்கேற்கிறேன்.. இதுவே கடைசி சம்பவமாக இருக்கட்டும்” : பேரவையில் முதல்வர் உருக்கம்!

 கலைஞர் செய்திகள்  ஜனனி  :: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது தொடர்பான விவாதத்தின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறித்தும், அதில் கண்ணையா என்பவர் தீக்குளித்து இன்று காலையிலே உயிரிழந்திருக்கிறார் என்பது குறித்தும், சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை வருவாய்த் துறை அமைச்சர் இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தில் ஆளும் கட்சி எம்பி அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழப்பு

sunnews tv

 Mathivanan Maran  -  e Oneindia Tamil  : கொழும்பு: இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளரான அமரகீர்த்தி அத்துகோரள எம்.பி, போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
இலங்கை தலைநகர் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டு ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
இருப்பினும் இலங்கை மக்களின் கோபம் தணியவில்லை. இலங்கையின் பல நகரங்களில் அரசியல்வாதிகளின் கார்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன. நிட்டம்புவ, கடவத்தை மற்றும் மினுவாங்கோவில் பேருந்துகள் மற்றும் சொகுசு கார்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் -தமிழக அரசு

 மாலைமலர் : சென்னை ஆர்.ஏ.புரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: மயிலாப்பூர், மந்தைவெளியில் மாற்று வீடுகள் -தமிழக அரசு
தீக்குளித்து கண்ணையா இறந்ததை கண்டித்து ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று கிரீன்வேஸ் சாலை ரெயில் நிலையம் முன் போராட்டம் நடத்தினார்கள்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு பக்கிங்காம் கால்வாயையொட்டி உள்ளது. இந்த தெருவில் இருந்த 625 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பக்கிங்காம் கரையோரம் இருந்த 366 வீடுகள் அகற்றப்பட்டது.
மீதி உள்ள 259 வீடுகளை உடனடியாக அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருவாய்த் துறை சார்பில் அங்குள்ள வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே ராஜினாமா

 மாலைமலர் : இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்‌ஷே வீட்டின் முன்பு கலவரம் வெடித்ததை தொடர்ந்து இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிறப்பித்தார். இதனால் போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். எனினும் மக்கள் போராட்டம் ஆங்காங்கே தீவிரமாக நடைபெறுகிறது.

கேரளாவில் தூள் கிளப்பும் முன்னாள் முஸ்லீம் அஸ்கர் அலியை தாக்கிய குடும்பத்தினர் .. வழக்கு பதிவு

 hindutamil.in  : திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி(24). இவர் கேரளத்தில் உள்ள இஸ்லாமிய மையம் ஒன்றில் மதம் சார்ந்த 12 வருட படிப்பு பயின்றார். பின்னர் முஸ்லிம் மதத்தில் இருந்தும் வெளியேறும் முடிவை எடுத்தார்.
முற்போக்கு சிந்தனையுடன் இயங்கத் தொடங்கிய அஸ்கர் அலியை, கொல்லத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேச, முற்போக்கு சிந்தனைவாத அமைப்பு அழைப்புவிடுத்தது. அங்கு பேச செல்லக்கூடாது என அஸ்கர் அலியை அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் தடுத்தனர். அதையும் மீறி அஸ்கர் அலி செல்லவே, அவரது குடும்பத்தினரும், பகுதிவாசிகளும் கொல்லம் சென்றனர்.
போலீஸார் மீட்பு   

அஸ்கர் அலி தங்கியிருந்த விடுதிக்குச் சென்றவர்கள், அவரை கொல்லம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த காரில் ஏறச் சொல்லி கட்டாயப்படுத்தினர். அதில் வேறு சிலர் இருந்தனர். காரில் ஏற மறுத்ததால், அஸ்கர் அலி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது அழுகை சத்தம் கேட்டு கடற்கரையில் கூட்டம் கூடியதால் போலீஸார் வந்து அவரை மீட்டனர்.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தார்

hindu tamil : திருச்சி: திமுக எம்.பி.யான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைய போவதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளார். இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:
தந்தை ஏற்கவில்லை
கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் கட்சிப் பணியாற்றி வருகிறேன். ஆனால் இதுவரை எனக்கான எந்த அங்கீகாரமும், முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. நான் கனிமொழி ஆதரவாளர் என்பதால், கட்சித் தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்.

சென்னை ஆர் ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து முதியவர் தீக்குளிப்பு

தினத்தந்தி : சென்னை, சென்னை ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 60 வயதுமிக்க கண்ணையா என்ற நபர் ஒருவர் அவரது வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிக்கப்படுவதை கண்டித்து தீடிரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே சம்பவ இடத்தில் இருந்த போலீசார் கண்ணையாவை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணையா தீக்குளித்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞர்கள் அங்கிருந்த அரசு வாகனங்கள், புல்டோசரின் மீது கற்களை எரிந்து அடித்து உடைத்தனர்.

ஞாயிறு, 8 மே, 2022

மோடி அரசால் நிறைவேறாமல் போன ஒரு ஊழல் முயற்சி.. லட்சுமி மிதத்தல் கம்பனியோடு சேர்ந்து போட்ட திட்டம்

 ராதா மனோகர் : பிரதமர் மோடியின் நிறைவேறாமல் போன ஒரு பெரிய ஊழல் கதை ஒன்றுள்ளது.
இது பற்றி இந்திய ஊடகங்கள் வழமை போல கனத்த மௌனத்தை கடைப்பிடித்தன  .. இன்றுவரை ஒரே மௌனம்தான்
இந்த ஊழலை முறியடித்ததில் பெரும் பங்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனையே சாரும்( இப்படி சொன்னால் அவருக்கு புகழ் போய்விடும் என்று கிளப்பி ஹவுசில் சிலர் வகுப்பு எடுக்கிறார்கள் .. அது வேற கதை இருக்கட்டும்)
 சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு   ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார் .
பின்பு அதை அறுபத்து  அய்யாயிரமாக உயர்த்தினார்

ஷவர்மா இறைச்சி உணவுக்கு தடை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

 Rajkumar R  -  Oneindia Tamil :    கள்ளக்குறிச்சி : ஷவர்மா உணவு வகையை தடை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது ஏன் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த அதிநவீன அவசர சிகிச்சை மையம் கட்டிடத்தை திறந்து வைத்து அதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய நேரில் பார்வையிட்டனர்.

மகிந்த ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை திங்கள் இராஜினாமா ?

 இலக்கியா .நெட் :பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் பதவி விலகவுள்ளதுடன், முழு அமைச்சரவையும் பதவி விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள்,உறுப்பினர்களை நாளை மாலை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக சுயாதீன தரப்பினர் குறிப்பிட்டனர்.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளாந்தம் தீவிரமடைந்து வருகின்ற நிலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதர மற்றும் அரசியல் பாதிப்பு,சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

பட்டினப் பிரவேசத்திற்கு தடை நீக்கம்- மயிலாடுதுறை கோட்டாட்சியர் அனுமதி

 மாலைமலர் : தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதித்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது என மயிலாடுதுறை கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடையை நீக்கும்படி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

விக்னேஷ் காவல் நிலைய மரணம்: ஆறு காவலர்கள் கைது

விக்னேஷ். படம்: ஊடகம்

tamilmurasu.com  :  சென்னை: சென்­னை­யில் விசா ரணைக் கைதி விக்­னே­ஷின் மர­ணம் தொடர்­பாக ஆறு காவலர் ­க­ளைச் சிபி­சி­ஐடி காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர்.
சென்னை கீழ்ப்­பாக்­கத்­தைச் சேர்ந்­த­வர் விக்­னேஷ். இவரைச் சோதித்­த­போது கஞ்சா வைத்திருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.
இதை­ய­டுத்து, சென்னை தலை­மைச் செய­லக காவல்­நி­லைய விசா­ ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப்பட்ட விக்­னேஷ், சிறை­யில் அடைக்கப்­பட்­டார். அதன்­பி­றகு அவ­ருக்கு வலிப்பு ஏற்­பட்­ட­தா­க­வும் இதை­யடுத்து மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட நிலை­யில் அவர் கடந்த 19ஆம் தேதி உயி­ரிழந்­து விட்டதா­க­வும் காவல்துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

பெண்கள் முழுவதுமாக பர்தா அணிய வேண்டும் - தாலிபான்கள் அடாவடி

 .கலைஞர் செய்திகள் : ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது.
இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது. />வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள் என்றும் தலிபான்கள்

ஜிப்மர் - இனி ஹிந்தி மட்டுமே!" ஆங்கிலத்திற்கு நோ சொன்ன புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர்! ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனை

  Vigneshkumar  -   Oneindia Tamil   :  சென்னை: புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது ஜிப்மர் மருத்துவமனை எனப்படும் ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்.
புதுச்சேரியில் இந்த ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 

 இணையத்தில் விமர்சனம்

 பொதுவாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் அலுவலர் ரீதியான பயன்பாட்டிற்கு இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படும்.