சனி, 5 மார்ச், 2016

நடிகர் சரத்குமார்: அதிமுகவின் அவலங்களை முன்வைத்து பிரசாரம் செய்வோம்.

அதிமுக அரசின் அவலங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக சரத்குமார் நேர்காணல் நடத்தி வருகிறார்.
இன்று நேர்காணலுக்கு இடையே நிருபர்களிடம் கூறுகையில், ''சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவெடுக்க உள்ளேன். இவர் பிரசாரம் செய்வோம் என்பதிலும் பார்க்க அரசியலில் .------------ செய்வோம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்

திமுக கூட்டணியில் விஜயகாந்த் வருவதை (தயாநிதி) அழகிரி கடுமையாக எதிர்க்கிறார்

சென்னை: 'திமுகவை ஆட்சியில் அமர்த்துவது புதைகுழியில் கால் வைப்பதற்கு சமம்' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்பு ஒருமுறை அளித்த பத்திரிகை பேட்டியை டிவிட்டரில் ஷேர் செய்து, திமுக-தேமுதிக கூட்டணியா? என கேலியாக கேட்டுள்ளார், திமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் மத்திய அமைச்சரின் மகனுமான மு.க.அழகிரியின் மகன், தயாநிதி அழகிரி. திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறிவந்தார். திமுக வரும் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடையப்போகிறது என்றும், ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம், ஒரு காமெடி என்றும் அழகிரி கூறினார். அழகிரியின் கருத்துக்கள் திமுகவில் குடைச்சலை கொடுத்த நிலையில், அவருக்கும் திமுகவுக்கும் சம்மந்தம் இல்லை என்று அதிரடி அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது திமுக தலைமை.   திமுகவின்  உட்கட்சி  ஜனநாயகம், சுயமரியாதை போன்றவற்றின் வெளிப்பாடாகத்தான் அழகிரியின் அரசியல்  நமக்கு தெரிகிறது...

மாணவிகள் விடுதியில் இரவில் அமைச்சர் சுந்தரராஜ் அத்து மீறல்!


புதுக்கோட்டையில் பள்ளி மாணவிகள் விடுதிக்கு இரவு நேரத்தில் திடீரென சென்ற தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ், மாணவிகளிடம் சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு, அத்துமீறி நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செயல்படும் விளையாட்டு வீராங்கணைகளுக்கான உண்டு உறைவிட பள்ளி மாணவி விடுதிக்கு திடீரென இரவு நேரத்தில் சென்றுள்ளார். அங்கிருந்த மாணவிகளை மிரட்டும் தொணியில் பேசிய அவர், மாணவி ஒருவரின் டிசர்ட்டை தொட்டு பேசியுள்ளார்.

கூட்டணி பேரமா? - கொதிக்கும் கேப்டன் கட்சி! டேய் இது உலக மகா நடிப்புடா சாமி யோவ்


vikatan.com :தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த நொடி வரையிலும் கேப்டன் யாரிடமும் கூட்டணியைப் பற்றி பேசவே இல்லை என்று விஜயகாந்த்தின் தேமுதிக கொதித்தெழுந்து நீண்ட விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக கொள்கை பரபரப்பு செயலாளர் வி.சி.சந்திரகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழக மக்கள் அனைவரும் கேப்டனும், எங்களுடைய தேமுதிக கட்சியும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்கின்ற மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். கேப்டன் தன்னுடைய முடிவை அறிவிப்பதற்கு முன்பே, ஒரு சிலரால் திட்டமிட்டு பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது. அதை பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செய்திகளாக வெளியிடுகின்றன.நாமளும்தான் எவ்வளவு கஷ்டப்படுரோம்ல ..புதிசு  புதிசா  ஏலம்  எகிறி கிட்டு  போறது... பாத்து எண்ணி வாங்க வேண்டாமா? அதுக்குள்ளார கூட்டணி முடிவை ஒப்பான சொல்லவா முடியும்?  

-கேரளா மாணவி: நான் எய்ட்ஸ் நோயாளி... நான் ஏன் படிக்கக் கூடாது?'

vikatan.com :அக்சரா(17). பி.ஏ சைக்காலஜி முதலாமாண்டு மாணவி. சரியாக 13 ஆண்டுகளுக்கு (2003) முன்னால் கேரள மீடியாக்களில் பரபரப்பை கிளப்பினார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கொட்டியூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி அக்சராவுக்கும், அவரது சகோதரனுக்கும் பள்ளியில் படிக்க அனுமதி கொடுக்க மறுக்கின்றனர் என்பதுதான் அந்தச் செய்தி. காரணம், இருவருமே ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதுதான்.
இருப்பினும், 'தன் இரு குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்' என்ற வைராக்கியம் குழந்தைகளின் தாய் ரீமாவுக்கு இருந்தது. பள்ளிகளில் அனுமதி கிடைக்க கடுமையாகப் போராடி வென்றார் தாய் ரீமா.

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து: விஞ்ஞானிகள் தகவல்

dinamalar.com :சென்னையை, கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என, சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் அண்ணா பல்கலையின் புவி அமைப்பியல் துறை இணைந்து, சென்னையில் பெய்த பெருமழை குறித்த, விஞ்ஞானிகளின் இரண்டு நாட்கள் கருத்தரங்கை, அண்ணா பல்கலையில் நடத்தின.கருத்தரங்கில், விஞ்ஞானிகள் பேசியதாவது:  வீட்டிற்கு இருபது லிட்டர் இலவச தண்ணீர் திட்டத்தை மாற்றி , இருபது ஆயிரம் லிட்டர் ஏரி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று மாற்ற வேண்டியது தான் . நாங்களே உங்கள் காரில் நிரப்பி கொடுப்போம் அப்படின்னு போட்டுக்கலாம்

கன்னையா குமாரை கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு: டெல்லியில் போஸ்டர்...சங்பரிவார் அமைப்பின் / பூர்வாஞ்சல் சேனா அமித் குமார்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாரை கொல்பவர்களுக்கு 11 லட்சம் பரிசு அளிக்கப்படும் என டெல்லியில் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லி பிரஸ் கிளப் பகுதியில் வெகு அதிகமாக காணப்படும் இந்த போஸ்டர்கள் சங்பரிவார் அமைப்பின் ஆதரவு இயக்கமான பூர்வாஞ்சல் சேனா தலைவரான அமித் குமார் என்பவரின் பெயரால் வெளியாகியுள்ளது. முன்னதாக, கன்னையாவின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என நேற்று அறிவித்திருந்த உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஒருவர் பா.ஜ.க.,வில் இருந்து இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது maalaimalar.com

கண்ஹையா குமார் ! எந்த பலமும் இல்லாத ஒரு ஏழைவீட்டு நேர்மையான இளைஞன்


nisaptham.com: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் பேசியதை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கேட்கும் வாய்ப்பு மட்டும்தான். புரிந்து கொள்ளவெல்லாம் இல்லை. புரியாத மொழியில் பேசுகிற எல்லோருடைய பேச்சையும் ஆர்வத்துடன் கவனிக்க முடிவதில்லை. ஆனால் புரியாவிட்டாலும் கூட வெகு சிலரைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அடல்பிஹாரி வாஜ்பாயின் பேச்சும் உடல்மொழியும் ஈர்ப்பு மிகுந்தவை. அதன் பிறகு நரேந்திர மோடி. இப்பொழுது கன்ஹையா குமார். முரண்பட்ட வரிசை முறைதான் என்றாலும் எனக்குத் தெரிந்த வரிசை இதுதான்.

BBC : புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மனித உடலில் `நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி' புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்கு படுத்தி புற்று நோயை அழிக்கும் முறைமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புற்றுநோய் உள்ள செல்களுக்கு உள்ளே, இயல்பாகவே இருக்கும் பலவீனம் ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் (யு.சி.எல்) சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உடலில் உள்ள சிறப்பான நோய்த்தடுப்பு செல்களான T- செல்கள், புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்து அழிக்க வழி ஏற்படுத்துவதாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது. இதன் மூலம் நோய் முற்றிய நிலையில்கூட, அதற்கு தனிப்பட்ட வகையில் சிகிச்சை வழங்க முடியும் என்றும், ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

குஷ்புவுக்கு சீட் தரக்கூடாது...ஸ்டாலின் காங்கிரசுக்கு நிபந்தனை?

நடிகை குஷ்புவுக்கு தேர்தலில் போட்டியிட சீட் தரக் கூடாது என காங்கிரஸுக்கு முக்கிய ‘கூட்டணி’ நிபந்தனையாக திமுக விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டசபை தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறது என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் காங்கிரஸுடன் கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. திமுகவை விட்டால் தமிழகத்தில் வேறு கட்சிகள் எதுவும் காங்கிரஸை கூட்டணிக்கு சேர்க்கப் போவதும் இல்லை. இதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு; கறார் தொகுதிப் பங்கீடு என்பது போன்ற வெற்று முழக்கங்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டது காங்கிரஸ். 35 தொகுதிகளில் பேரத்தை தொடங்கி தற்போது 25 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். அத்துடன் திமுக தரப்பில் மற்றொரு முக்கிய நிபந்தனையும் விதிக்கப்பட்டதாம்.

எது தேசதுரோகம் ? வள்ளுவர் கோட்டத்தில் மாணவர்கள் போராட்டம்..JNU...


தோழர்.ஆனந்த்,ஜே.என்.யு மாணவர், TNMடெல்லி.
ஜே.என்.யு வை ஆக்கிரமிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் வடிவமாய் வள்ளுவர் கோட்டம் பதாகைகளாலும், மாணவர்கள், தோழர்களாலும், செங்கொடிகளாலும் நிரம்பியிருந்தது.
rsyf 3.2.2016 demo part 1 (3)
இந்த ஆர்ப்பாட்டத்திற்கென்றே சென்னை, விழுப்புரம், கடலூர், விருதை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தின் இறுதிவரை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருந்தது போலீசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

பா.ஜ.க-வின் தேசத் துரோகம் – WTO தீர்ப்பு !‘உன் நாடு என் காலனி

‘பாரத் மாதா கி ஜே’ மற்றும் ‘வந்தே மாதரம்’ கோசம் போட்டு தேசபக்தியில் ஒரு பிடி ஜாஸ்தி என்று வேடம் போடுவதில் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலை யாரும் விஞ்ச முடியாது. ஆனால் பாரதமாதாவை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொடுத்தவர்கள் இந்தக் காவிக் கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது இந்தியாவிற்கு எதிரான உலகவர்த்தகக் கழகத்தின் தற்போதைய தீர்ப்பு. வினவு.com :உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் சூரியஒளி மின்தகடுகளை இந்தியா பயன்படுத்துவதை விரும்பாத அமெரிக்கா, காட் (GATT-General Agreement of Trade and Tariff) ஒப்பந்தத்தைக் காட்டி தடுத்து நிறுத்தியிருக்கிறது. இது குறித்த உலக வர்த்தக கழகத்தின் (WTO) தீர்ப்பு 25-02-2016 அன்று வெளிவந்திருக்கிறது.
உள் நாட்டில் தயாராகும் சூரிய ஒளி தகடுகளை பயன்படுத்தும் பொழுது தேசிய சந்தை, வேலைவாய்ப்பிற்கான அபிவிருத்திகள், வெளிநாட்டுக் கடன்களை குறைக்க முயல்வது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது என தேசிய பொருளாதாரத்தை கட்டியமைக்கும் இறையாண்மை அம்சம் அடங்கியிருப்பதை பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்தியா  இப்படி உள்நாட்டிலேயே தயாரிப்பதால், தனது நாட்டில் 90% சூரிய ஒளி மின்தகடு ஏற்றுமதியாளர்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என உலகவர்த்தகக் கழக தீர்ப்பாயத்தில் பஞ்சாயத்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா.

தர்மபுரி பஸ் எரிப்பு உணர்ச்சிவசத்தால் நடந்தது தண்டனையை குறைக்க அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள்

ஜெயை தெய்வமாக எண்ணினால் உணர்ச்சி வசப்பட்டால் அந்த கொலைகாரர்கள் மூவரும் தீக்குளித்து சாக வேண்டியதுதானே?அந்த நிலையிலும் தன உயிரை பாதுகாத்துக்கொண்டு அடுத்த வீட்டுப் பெண்களை,தீவைத்துக்கொளுத்துவதில் என்ன உணர்ச்சி பாடல் இருக்கிறது.தான் பூசிக்கும் தலைவிக்கு தன உயிரை கொடுக்காமல் இருப்பதற்காகவே இந்த கொலைகார நாய்களை நடுத்தெருவில் வைத்து தீ வைத்து கொளுத்த வெண்டும்.அப்போதுதான் அரசியல் அடியாட்களுக்கு பயம் வரும் .அடக்கி வாசிப்பார்கள்.இவர்களை மன்னித்து விடுவது.தவறான முன்னுதாரணமாகி விடும். புதுடில்லி: 'மூன்று மாணவியர் பலியாகக் காரணமாக இருந்த, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம், உணர்ச்சிவசத்தால் நடந்தது; திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல' எனக்கூறி, அந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தங்கள் தண்டனையைக் குறைக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்தனர். மாபாதக  குற்றம் செய்துவிட்டு கருணை கேட்கும் பித்தலாட்டம்

அமெரிக்க மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு இந்தியா விசா மறுப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந்திர ஆணைய உறுப்பினர்களுக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க இந்திய அரசு மறுத்துவிட்டது.
 இதுகுறித்து வாஷிங்டனில் அந்த ஆணையத்தின் தலைவர் ராபர்ட் பி. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 இந்திய அரசு அதிகாரிகள், மதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரைச் சந்திக்கும் பொருட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மதச் சுதந் திர ஆணையத்தின் 3 உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) முதல் ஒரு வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், எங்கள் ஆணைய உறுப்பினர்களுக்கு இந்திய அரசு நுழைவு இசைவு வழங்குவதற்கு மறுத்துவிட்டது. 

வெள்ளி, 4 மார்ச், 2016

ஆந்திரா : சிறுவன்(15) சிறுமியை (8) பாலியல் பலாத்காரம் செய்தான்

Visakhapatnam: A seven-year-old girl was allegedly raped by a 15-year-old boy at Yeguvapeta in Bheemunipatnam town in the district, police ...
ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் ஏலூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் துணிக்கடையில் வேலை செய்கிறான். இவன் வீட்டிற்கு அருகில்  3ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி இருக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவளை வீட்டிலேயே விட்டு விட்டு, அவளின் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த சிறுவன், சிறுமியை நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

பாஜக இன்னும் நம்பிக்கை இழக்கலை..தேமுதிக +பாமக கூட்டணி முயற்சி கூட இன்னும் வாய்ப்பு இருக்கிறது?

விஜயகாந்தையும், பா.ம.க.,வையும் வளைத்து தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் தக்கவைக்க டில்லி பா.ஜ., தலைமை புது பார்முலா வகுத்துக் கொடுத்து, கடைசி கட்ட முயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி, 'விஜயகாந்தும், அன்புமணியும் ஆளுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வராக பதவி வகிக்கலாம்' என யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஏற்கனவே அங்கிட்டு 120 சீ  வாங்கிட்டாராம் ! இவங்க அதுக்கும்மேலே  சூட்கேஸ் கொடுகிறதா சொல்றாங்களாம்...ஆனா ரொம்பவும் லேட்டாயுடுத்து என்ன பண்றது? இன்னும் ஒரு குவாட்டர் அடியுங்க சரியாயிடும்

63 வேண்டாம் 59 போதும் என்றார் விஜயகாந்த்...ஜோதிடரின் ஆலோசனையாம்

விஜயகாந்  திமுக பேச்சுவார்த்தையின் போது கலாநிதியிடம் விஜயகாந்த் 63 தொகுதிகள் ஒதுக்கி தரவேண்டும் என்று கேட்டதாகவும், அதை கண்டிப்பாக நான் பெற்றுத் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்த கலாநிதி, இந்த தகவலை கலைஞரிடம் தெரிவித்ததாகவும் தெரிகிறது.இவ்வளவு தொகுதி எப்படி கொடுக்க முடியும் என்று கருணாநிதி கேட்டுள்ளார். தேமுதிக நம் பக்கம் வர வேண்டுமென்றால் விஜயகாந்த் கேட்ட தொகுதிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என்று கலாநிதி கூறியுள்ளார். ஸ்டாலினும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, வேறு வழியில்லாமல் கருணாநிதியும் ஒத்துக்கொண்டாராம்.இப்படியிருக்க, விஜயகாந்த் தரப்பிலிருந்து இன்று ஒருவர் கலைஞரை சந்தித்துள்ளார். அப்போது அவர் ஜோதிடரின் ஆலோசனைப்படி, ராசியில்லாத காரணத்தால், விஜயகாந்துக்கு  63 தொகுதிகள் வேண்டாம் என்றும்,  அதிலிருந்து 4 தொகுதிகள் குறைத்து 59 தொகுதிகள் கொடுத்தால் போதும் என்றும் கூறப்பட்டதாம்.

பூலோக சொர்க்கத்தின் நரக புள்ளி விவரங்கள் !

life-expectancyஉலக சுகாதார நிறுவனத்தின் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் நிகழும் வன்முறைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுகள் அமெரிக்காவில் நிகழ்கிறது.அமெரிக்காவிற்கும், ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளுக்குமிடையேயான தனி நபர் சராசரி ஆயுட்கால வேறுபாடு ஏன் என்பதற்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நிகழ்த்திய ஆய்வில் பதில் உள்ளது. ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாண்ட்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய வளர்ந்த நாடுகளுடைய புள்ளி விவரங்களை ஒப்பிட்டு அதனடிப்படையில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது இந்நிறுவனம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையிலான அதன் ஆய்வறிக்கையை அமெரிக்க மருத்துவ சஞ்சிகையில்(The American Journal of Medicine) வெளியாகியுள்ளது.

விஜயதாரணி மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர்...அகில இந்திய மகிளா காங்கிரஸில் புதிய பதவி

சென்னை; காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆக விஜயதாரணி எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதாரணியை, தமிழக காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சி மேலிடம் நியமித்தது.< இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வாயிலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் இருந்த விஜயதாரணியின் படத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய

இந்தியாவில் இருந்து அல்ல; இந்தியாவுக்குள் விடுதலை வேண்டும்: கண்ணைய்யா குமார்

இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை; இந்தியாவுக்குள் விடுதலை கேட்கிறோம் என விடுவிக்கப்பட்ட மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் கூறியிருக்கிறார். கண்ணைய்யா குமாரின் பேச்சைக் கேட்க 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டிருந்தனர். அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து கூட்டம் நடத்தியபோது இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாகக் கூறப்பட்டு, தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் வியாழக்கிழமையன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட கண்ணைய்யா குமார், கைதுசெய்யப்படுவதற்கு முன்பாக எங்கு பேசினாரோ அதே இடத்தில் மீண்டும் உரை ஒன்றை நிகழ்த்தினார். இதனைக் கேட்க 3000க்கும் மேற்பட்டவர்கள் அங்கே திரண்டிருந்தனர்.

தமிழ்நாட்டிற்கு மே 16ம் தேதி தேர்தல்: மே 19-ம் தேதி ரிசல்ட்...அரசு புதிய உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது

தேர்தல் நடத்தை விதிகள் அமல் :
 தமிழக அரசு புதிய உத்தரவுகள் எதையும்
 பிறப்பிக்கக்கூடாது: ராஜேஷ் லக்கானி

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தார். அப்போது அவர், ‘’தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது ’’ என்று அறிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன.

பிச்சைகாரன் படத்தை தடை செய்ய பார்ப்பனர் சங்கம் கோரிக்கை

“பிச்சைக்காரன்” திரைப்படத்தை தடை செய்ய கோரி பார்பனர்கள் (பிராமணர்கள்) சங்கத்தினர் புகார் கோவை, அகில இந்திய பார்பனர்கள் சங்க தேசிய செயலாளர் இராமநாதன் மற்றும் நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி நடித்து, அவரது தயாரிப்பில், “பிச்சைக்காரன்” என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.

அதிகாரத்தை கைப்பற்ற அணி திரட்டினாரா ஓபிஎஸ்...?


vikatan.com :தமிழகத்தின் ஆளும் கட்சியான அஇஅதிமுகவின் உட்கட்சி பூசல்கள் கடந்த சில நாட்களாக தலைப்புச் செய்திகளாக மாறிப்போயுள்ளன. காணும் இடமெல்லாம் முதல்வர் ஜெயலலிதாவின் இதயமாக வலம் வரும்  அமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்குள் ஓரங்கப்பட்டுள்ளார். அவரின் ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார்கள்.  இந்த நீக்கல் நடவடிக்கைகைகள் மேலும் தொடரும்.என்பதெல்லாம் அதிமுகவின் இப்போதைய ஹாட் நியூஸாக இருக்கிறது.
எதேச்சையாக சந்தித்துக் கொள்ளும்  அதிமுகவினர்கூட அம்மாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று தீவிர விவாதத்தில் இறங்கிவிடுகின்றனர்.

பேரம் படிந்தது: 8 ம் தேதி முறைப்படி கூட்டணி அறிவிப்பு !

தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி பேச்சில் நீடித்த இழுபறிக்கு, கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலதிபர் தலையீடு காரணமாக, தீர்வு கிடைத்துள்ளது. அதனால், வரும், 8ம் தேதி, கருணாநிதியை, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்  முறைப்படி சந்தித்து, கூட்டணியை உறுதி செய்கிறார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தலைமையில் அமையும் கூட்டணிக்கு, தே.மு.தி.க.,வை இழுக்க, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தொடர் பேச்சு நடத்தினர். ஆனாலும், எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
இந்நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேடகர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ., உடன் கூட்டணி அமைக்க விஜயகாந்த் தரப்பில், மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது,
* அ.தி.மு.க.,வுடன் எந்த உறவும் கிடையாது என, பா.ஜ., மேலிடம் அறிவிக்க வேண்டும் அதெப்படிங்க முடியும் ஏராளமான கொடுக்கல் வாங்கல்கள் இருக்கு...அவிங்ககிட்ட  41 எம்பீக்கள் இருக்கிறாய்ங்க, பகைசுகிட்டா மோடியால  ஆட்சியே  நடத்த முடுயாதுலே? இதெல்லாம் தெரிஞ்சுகிட்டே சும்மா கட்சிய  ஏலம்  விட்டீங்க.ஏரியா விற்பனை ஜோர் ..சரியான காரிய  கோமாளி நீங்க .

Tamil Nadu solar scam....Explosive allegations made by Adani’s own lawyer Kabilan Manoharan could blow

Adani group’s proposed 648MW solar power plant in Ramanathapuram district in Tamil Nadu is in the eye of a controversy yet again, and this time, the group’s own lawyer is threatening to expose alleged regulatory and land-purchase violations by the Adani group.
In July 2015, Adani group had signed a contract with Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) to set up a solar power plant and supply power to the state at the rate of Rs. 7.01 per unit.
Recently the Adani group, in an unusual petition to the Madras High Court, sought to gag its own lawyer, Kabilan Manoharan of Ms KabiLaw Attorneys-at-law, after he threatened to publicize illegalities in the project unless his remuneration was increased. Taking cognizance of Adani group’s argument that all the information shared with Kabilan fell under attorney-client privilege, Justice KK Sasisharan of the HC ordered an interim injunction gagging the lawyer from speaking out against the client, noting that this was indeed prima facie blackmail by the lawyer.
Ironically, the interim order by the judge also contained the “fraudulent and illegal acts” listed out by the lawyer in his letter to Adani while seeking an increase in remuneration. In effect, all the alleged violations are now in the public domain.

அதானி குழுமம் + தமிழக அரசு 23 ஆயிரம் கோடி,648 மெகாவாட் ஊழல் ! வழக்கறிஞர் கபிலன் மனோகரன் அதானியை பிளாக் மெயில் செய்கிறாராம்? எப்படீஈஈ ?

13103PJuly-04---B-BIGExplosive allegations made by Adani’s own lawyer could blow lid off Tamil Nadu solar scam - thenewsminute.com/
 savukkuonline.com
:மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நாகலசாமி, இந்த ஒப்பந்தம் நடந்தபோதே, இந்த ஒப்பந்ததினால் அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு 23 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என்று கூறினார் ஜுலை 2015ல், அதானி நிறுவனத்துடன், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது முதலாகவே இத்திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன.  தற்போது புதிதாக எழுந்துள்ள சர்ச்சை, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் விதத்தில் உள்ளது. 4 ஜுலை 2015 அன்று தமிழக அரசு,அதானி குழுமத்துடன் 4536 கோடி ரூபாய் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில்  25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது.     இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தபோதுதான் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

வியாழன், 3 மார்ச், 2016

ஈரோடு சார்பு நீதிபதி செல்வம் :எனது உள்ளாடகைகளை ஏன் சரியாக துவைக்கவில்லை பெண் ஊழியரிடம்....

ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி செல்வம்   தன் உள்ளாடைகளை ஒழுங்காக துவைக்காத அலுவலக பெண் ஊழியர் வசந்திக்கு மெமோ கொடுத்ததாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.
அப்படி கொடுக்கப்பட்ட மெமோவில், '' உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? " என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த மொமோ கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு அந்த அலுவலக பெண் உதவியாளர் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொடுத்த மெமொவுக்கு 4-ம் தேதி  மன்னிப்பு கேட்டு கொடுத்த கடிதமும் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. விகடன்,com

திமுக 150; தேமுதிக 59; காங். 25: தொகுதிப் பங்கீடு... ஆட்சியில் பங்கு இல்லை! அறிவிப்பு வரும்?

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக- 150; தேமுதிக- 59; காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதிப் பங்கீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுகவை வீழ்த்த ஒரு வலுவான கூட்டணியை அமைக்க திமுக போராடி வருகிறது. தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் திடீரென திமுக- பாஜக இடையே கூட்டணி உருவாகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பு முடிந்தவுடன் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியாக நீண்டு கொண்டிருந்தது. 

ரூ.1.65 கோடி மோசடி....சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் ....நடிகர் சங்கம் புகார்

சென்னை : நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக முன்னாள் தலைவர் சரத்குமார் மீது நடிகர் சங்கம் சார்பில் சென்னை, கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2015ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடிகர் சரத்குமார். நடிகர் சங்க கட்டட விவகாரம் பூதாகரமாக வெடிக்க, 2015ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் களம் இறங்கினர். இதில் விஷாலின் பாண்டவர் அணியினர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நடிகர் சங்க பொறுப்பை கைப்பற்றினர்.

விஜயகாந்த்:கூட்டணி வதந்திகளை நம்பவேண்டாம்!

தினமணி.com :தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியே என அதன் தலைவர் விஜயகாந்த் கூறினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், ரூ.1.77 கோடி மதிப்பிலான பணிகளை தொடக்கிவைத்து விஜயகாந்த் பேசியதாவது" தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியாகும். கூட்டணி குறித்து பகிரங்கமாகவே அறிவிக்கப்படும். கூட்டணிக்காக எவ்வித பேரத்திலும் ஈடுபடவில்லை. நான் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்படவில்லை. அதை இரண்டையும் நான் ஏற்கெனவே சம்பாதித்துவிட்டேன் என்றார் விஜயகாந்த்....சூட்கேஸ் போதாதோ? பணம் அதிகம் சம்பாதித்தவனுக்கு தான் பணத்தில் ஆசை அதிகம் என்பது உலகத்துக்கே தெரியும் 

மன்னார் குடி+ஜாதி கூட்டணியின் நம்பிக்கை : அவர் நிச்சயம் சிறை செல்வார்!

நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி
விகடன்.com :சென்னை கோட்டையில் கால்நடைத்துறை அமைச்சர் அலுவலகத்தில் எப்போதும் போல வருகைப் பதிவேடு இன்றும் (மார்ச் - 3, 2016) களை கட்டிக் கொண்டிருந்தது. தேடி வந்தவர்களைப் பார்த்து பேசி அனுப்பி விட்டு சாப்பிட மேசை முன் மந்திரி டி.கே.எம். சின்னையா அமர்ந்த போது பகல் 2.30 மணி. செய்தித் துறையிலிருந்து பேசிய ஒரு குரல், "சார், சானலை மாத்தாமல், 'அம்மா', டி.வி. சானலை பாருங்க" என்றது. அப்போதுதான் மந்திரி சின்னையாவுக்கு முதல் கவளம் உணவு உள்ளே போய் இருந்தது. முதல் செய்தியாக, 'மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து மந்திரி சின்னையா விடுவிப்பு' என்றது டி.வி. அறிவிப்பு. அடுத்த கவளத்துக்கு இடைவெளி விட்டு விட்டு டி.வி.யையே பார்த்துக் கொண்டிருந்த சின்னையா, கலக்கத்துடன் எழுந்து கையைக் கழுவ, அதே நிமிடத்தில் அவரை மந்திரி பதவியிலிருந்தும் நீக்கி தலைமை 'கை' கழுவியிருந்த செய்தி டி.வி.யில் திரும்பத் திரும்ப கேட்க ஆரம்பித்தது.

Texas பல்கலைக்கழகத்தில் இனி துப்பாக்கி தூக்கலாம் ! பூலோக சொர்கத்தின் கேவலம் பாரீர்!

us-allow-gun-in-college-1வினவு.com :அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இனி மாணவர்கள் புத்தகப் பைகளோடு துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு வரலாம். நீங்கள் அதிர்ச்சியடைந்தாலும் இது உண்மைதான். செனட் மசோதா 11-ன் படி 21 வயது பூர்த்தியடைந்து துப்பாக்கிக்குரிய லைசன்ஸ் பெற்ற மாணவர்கள் கைத்துப்பாக்கியோடு கல்லூரி வரலாம். இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்ட எட்டாவது மாநிலம் டெக்சாஸ்.  வரும் அகஸ்டு மாதம் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
பொதுவில் அமெரிக்கச் சட்டமானது ஆயுதம் வைத்துக் கொள்வதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்து உள்ளது.

கும்பகோணம் பார்ப்பனீய கட்டுகதை இலாகாவின் கண்டுபிடிப்பு. மலசல குளியல்? ஒரே நாளில் 10 லட்சம் பேர் குளித்தால்?

 வினவு.com ஒரே நாளில் 10 லட்சம் பக்தர்கள் தீர்த்தமாடி, பாவத்தின் ஓவர் லோடில் மகாமக் குளமே காவியாகி விட்டது. கடந்த பத்து நாட்களாக 45 லட்சம் பக்தர்கள், ‘பரம’ சாதுக்கள், நவீன செல்போன் அசரீரியுடன் ஆசி வழங்கிய அகோரிகள், நெய்யால் தொந்தி வளர்த்து பொய்யால் சமயம் வளர்த்து, ஊரான் வீட்டு கையால் கோயில் நிலத்தில் பக்தி வளர்த்து குலநாசம் செய்து சிவன் சொத்து சேர்த்த தகத்தாய மடாதிபதிகள், முற்றும் துறந்த சங்கராச்சாரிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அடியார்க்கும் அடியார்கள் என கும்பகோணமே குலுங்கிவிட்டதாக பூரிக்கின்றன ஊடகங்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட ஒன்பது நதிகளும் பரமசிவனிடத்தில் போய், “மக்கள் கொடிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் மூழ்கி, பாவங்களை இறக்கிவிட்டு போய்விடுகிறார்கள், இதைப் போக்கிக் கொள்ள நாங்கள் என்ன செய்வது?” என்று முறையிட, பரிகாரமாக சிவன், “கும்பகோணத்தில் தென்கிழக்கு தீர்த்தமான மகாமக குளத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாசி மாத மகாமக நாளன்று குளித்தீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்!’’ என்று கூறியதாகவும் எனவே அந்நாளில் போய்க் குளித்தால் சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி புண்ணியம் கிடைக்கும் என்று புராணம் எழுதி வைத்திருக்கிறது. பார்ப்பனீய கட்டுக் கதை இலாகா கம்பெனி.

விஜய் மல்லையாவை கைது செய்க! தீர்ப்பாயத்தில் முறைப்பாடு - 7000 கோடியை முழுங்கிட்டான்

வங்கிகளில் ரூ 7800 கோடி கடனை வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் என்று பாரத் ஸ்டேட் வங்கி தேசிய கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது. மதுபானத் தொழிலில் கொடிகட்டிப் பறந்த விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.7,800 கோடியை கிங் பிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது. எஸ்.பி.ஐ - 1,600 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி - 800 கோடி, ஐ.டி.பி.ஐ வங்கி - 800 கோடி, பாங்க் ஆஃப் இந்தியா - 650 கோடி, பாங்க் ஆப் பரோடா - 550 கோடி, செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 410 கோடி, யுகோ வங்கி - 320 கோடி, கார்ப்பரேஷன் வங்கி - 310 கோடி என்ற அளவில் கடன் வழங்கியிருந்தன. மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் - 150 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 140 கோடி, ஃபெடரல் வங்கி - 90 கோடி, பஞ்சாப் சிந்து வங்கி - 60 கோடி, ஆக்சிஸ் வங்கி - 50 கோடி என்ற அளவிலும் கடன் கொடுத்திருந்தன.  கடன் கொடுத்ததும் மோசடி அதற்காக கைது கோரிக்கையும் புலுடா. விஜய மல்லையா மட்டும் அல்ல இன்னும் பலர் அரசு வங்கிகளை கொள்ளை அடித்து பெரிய மனிதர்களாக உலா வருகிறார்கள் இந்த பார்ப்பான் ராஜ்ய சபா எம்பியாகவும் இருக்கிறான் .

ஆந்திராவில் மணல் இலவசம்....கட்டுமான பணிகளுக்கு அரசே இலவசமாக

கட்டுமான துறையில் அத்தியாவசிய பொருளாக கருதப்படும் மணலை அரசு குவாரிகள் மூலம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் விற்பனை செய்து வருகின்றன. ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக ஆந்திர அரசு, இலவசமாக மணல் வினியோகம் செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில், மணலை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்து தேவையான மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதில் புதிய மணல் கொள்கை வகுக்கப்பட்டதுடன், இதை தவறாக பயன்படுத்தாமல் தடுக்கவும், வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தலை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

மலேசிய தைப்பூசம் இந்துத்வாக்களின் அட்டகாசத்தால் களையிழந்து கொண்டுவருகிறது

மலேசியாவில் தைப்பூச கொண்டாட்டங்கள் ஒரு இந்து சமய விழாவாக மட்டும் இல்லாமல் பல தேசிய இனங்களும் கலந்து கொள்ளும் ஒரு கலாசார விழாவாகவே இதுவரை காலமும் இருந்து வந்துள்ளது. அதற்கு இப்போது பெரும் அழிவு நேர்கிறது. அதை வெறுமனே ஒரு இந்து காவிகளின் நிகழ்வாக மாற்றும் கொடுமை நடக்கிறது, அதீதமான கட்டுப்பாடுகள் ஆசார வைதீக கோட்பாடுகளை பாதுகாத்தல் என்ற போர்வையில் காவி கலாச்சாரம் அங்கு தலைவிரித்து ஆடுகிறது. இதன் பின்னணியில் மேட்டு குடி தமிழர்களும் இதர அரசியல்வாதிகளும் உள்ளனர் என்று தெரியவருகிறது. விரைவில் இது பல கலாச்சார மக்களுக்கும் தமிழர் கலை கலாச்சாரத்தை அறிமுக படுத்தும் விழா என்ற அந்தஸ்தை இழந்து விடும்.

ஜெயலலிதா மாஸ்டர் ஸ்ட்ரோக் ? குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435ன் கீழ் விடுதலை?

Savukku · com :முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு தமிழகர்களை விடுவிக்க மத்திய அரசின் கருத்தைக் கோரி கடிதம் எழுதியதன் மூலம், ஆங்கிலத்தில் “மாஸ்டர் ஸ்ட்ரோக்” என்று சொல்லும்படி ஒரு அற்புதமான அரசியல் காய் நகர்த்தலை செய்திருக்கிறார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ராஜீவ் கொலையாளிகள் அனைவரையும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 435ன் கீழ் விடுதலை செய்யப்போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார் ஜெயலலிதா.  அந்த அறிவிப்பில் சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசை கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும், மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கவில்லை என்றால், மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி ட்ரம்ப் Trump?....ஜனநாயக கட்சி ஹிலாரி Hillary?

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தலில், 'சூப்பர் செவ்வாய்' எனப்படும், 12 மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில், ஹிலாரி கிளிண்டன், டொனால்டு டிரம்ப், தலா ஏழு மாகாணங்களில் வென்று முன்னிலையில் உள்ளனர்.
அமெரிக்க அதிபராக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக் காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், இந்தாண்டு நவ., 8ல் நடக்க உள்ளது.அதற்கு முன்னதாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் சார்பில், அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பிரைமரி மற்றும் காகஸ் தேர்தல், மாகாணம் வாரியாக கடந்த மாதம், 1ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.

JNU மாணவர் கண்ணையா குமாருக்கு ஜாமீன்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையாவை ஜாமினில் விடுவித்தது டெல்லி உயர்நீதிமன்றம். 22 நாள் சிறைவாசத்துக்கு பிறகு இன்று வெளியே வருகிறார் மாணவர் கண்ணையா குமார். ரூ.10,000 ரொக்க ஜாமினில் கண்ணையா குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். தேசத்துரோக குற்றச்சாட்டில் 22 நாளுக்கு முன் கண்ணையா குமார் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாக புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட கண்ணையா குமார் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் ஆவார். 6 மாத காலத்துக்கு இடைக்கால ஜாமினில் கண்ணையா விடுவிக்கப்பட்டு உள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கண்ணையா குமாருக்கு பேராசிரியர் உத்தரவாதம் தர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஜாமினில் விடுவிக்கக்கூடாது என்ற போலீஸ் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. dinakaran.com

தினமும் தேநீர் அருந்தினால் மாரடைப்பு 35 வீதம் குறையும்...பால் சேர்க்க கூடாது


தினமும் ஒரு கோப்பை தேநீர் அருந்தினால், மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் குறைவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டின் "ஜான் ஹாப்கின்ஸ்' மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இதுகுறித்து அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், மாரடைப்பை ஏற்படுத்தும் கால்சியம் ரத்தக் குழாய்களில் தங்குவதை தேநீர் கட்டுப்படுத்துவதால், தேநீர் அருந்தாதவர்களைவிட தினமும் தேநீர் அருந்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 35 சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரிவித்தனர். தினமணி.com

தே.மு.தி.க.,வுடன் கூட்டணி இழுபறி ஏன்? விஜயகாந்த் நிபந்தனை; ஸ்டாலின் முரண்டு

ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் தி.மு.க., -தே.மு.தி.க., இடையே, கூட்டணி உறுதியாவது, தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பரபரப்புகள் அதிகரித்துள்ளன. தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு இழுக்க, தி.மு.க.,- - பா.ஜ., -- மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகின்றன.கடந்த மாதம், 28ம் தேதி, மத்திய அமைச்சர் ஜாவடேகர், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை சந்தித்து, கூட்டணி பேச்சு நடத்தினார்.தி.மு.க., தரப்பில், திரைமறைவு பேச்சு அரங்கேறி வருகிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், வேட்பாளர் நேர்காணலில், தி.மு.க., கூட்டணி தொடர்பாகவே, கேள்வி எழுப்பிஇருந்தார்.

பாகிஸ்தான்: மகள் கோமல் பீபீயை சுட்டு கொன்ற தந்தை..கௌரவ கொலைகள்

Investigators said Mohammad Rehmat, who is now on the run, killed Komal Bibi in Lahore, Pakistan on Monday in an apparent 'honour killing'.லாகூர் : பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்தவர் கோமல் பீபி (18). இவர் வெளியே சென்று விட்டு தாமதமாக வந்ததால் அவரது தந்தை பீபியை கண்டித்துள்ளார். பின்னர் தாமதமாக வீடு திரும்பியதற்கான காரணத்தை கேட்டார். அதற்கு அவர் கூறிய காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே தனது மகள் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். எனவே வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். பாகிஸ்தானில் இது போன்ற கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடந்து வருகின்றன.

மும்பை மதுபான அழகிகளின் நடனத்துக்கு அனுமதி...உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது


மராட்டியத்தில் மதுபான விடுதிகளில் அழகிகளின் நடனத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அழகிகள் நடனம் மராட்டியத்தில் விடிய– விடிய மதுபான விடுதிகளில் நடைபெறும் அழகிகளின் நடனத்தை கலாசார சீரழிவாக அரசு கருதியது. மேலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு மராட்டிய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மதுபான விடுதி உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, சில நிபந்தனைகளுடன் மதுபான விடுதியில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்தது.

புதன், 2 மார்ச், 2016

திமுக + தேமுதிக கூட்டணி உடன்பாடு ஓகேயாம்....கலாநிதி மாறன் உபயமாம்...இன்னும் என்னன்ன கூத்தோ?

திமுக தரப்பு : தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம். கலாநிதி தலையீடு தமிழக சட்டமன்ற தேர்தலின் முக்கிய திருப்புமுனையாக திமுக- தேமுதிக கூட்டணி உடன்பாடு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது இதுகுறித்து திமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை இறுதிநிலையை அடைந்துவிட்டது.விரைவிலேயே இரு கட்சிகளுக்குமிடையே  கூட்டணி குறித்த முடிவு வெளியாகும் என கூறினார்.
“ அவர்கள் 90 சீட்டுகள் வரை கேட்டனர். ஆனால் நாங்கள் 54 முதல் 59 சீட்டுகள் வரை தருவதாக ஒப்பு கொண்டுள்ளோம். ஒன்றிரண்டு நாட்களில் சீட்டுகள் சம்பந்தமான இறுதி முடிவுக்கும் வந்துவிடுவோம்” என கூறினார்.
இந்த கூட்டணியை உறுதிபடுத்த கலாநிதி மாறனும் நேரடியாகவே விஜயகாந்திடம் பேசி சம்மதிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

அண்ணன் சதாசிவம் காட்டிய வழியில் தம்பி தத்து!

தத்துவும் சதாசிவமும்
modi_judges
இன்று மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தத்து தேர்வு! தத்துவும் சதாசிவமும்பா.ஜ.க.வின் அருண் ஜெட்லி 2012-ல் எதிர்கட்சித் தலைவராக இருந்த பொழுது “நீதிபதிகளும் தலைமை நீதிபதிகளும் அதிக சம்பளம், குறைந்த பொறுப்பு என கவுரவமிக்க பதவிகளை அரசிடமிருந்து பெற்றுவிடவேண்டும் என அரசுக்கு ஆதரவாகப் பல தீர்ப்புகளை அளிக்கத் தொடங்கிவிடுவார்கள்; நீதிபதிகளில் இரண்டு வகை. சட்டங்களை நன்றாக தெரிந்துவைத்திருப்பவர்கள். இன்னொரு வகை சட்ட அமைச்சரை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்” என கிண்டலடித்தார். ஜெட்லி சொன்னது இன்று நடைமுறை உண்மையாகி கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதாவது ஜெட்லியின் கட்சிதான் அப்படி நீதிபதிகளை ‘வளைத்து’ வருகிறது.

கூட்டணி இழுபறி...பதற்றத்தில் தேமுதிக நிர்வாகிகள்

திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று பெரும்பான்மை யான தேமுதிக நிர்வாகிகள் விரும் பும் நிலையில், விஜயகாந்தின் மவுனம் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. >இது தொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என் பதில் தேமுதிக உறுதியாக உள்ளது. பாஜகவுடனோ, ம.ந.கூட்டணியுடனோ இணைந்து தேர்தலை சந்தித்தால், தேமுதிக வெற்றி பெற முடியாத நிலை உருவாகும். தனித்துப் போட்டி யிடுவதும் வாக்குகளை பிரிக்கவே உதவும். இவை அதிமுக வுக்குதான் சாதகமாக அமையும். எனவே, தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுக கூட்டணியில் இணை வதே சிறந்தது என்ற மனநிலையில் உள்ளனர்.
கடந்த 2 மாதங்களில், இதை கட்சித் தலைமையிடம் பல்வேறு தருணங்களில் எடுத்துக் கூறி வருகின்றனர்.

கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து பேராசிரியர்கள் போராட்டம்சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியில் (அரசு உதவிப் பெறும் கல்லூரி) பணியாற்றுகின்ற, கல்லூரி பேராசிரியர்களான அகிலாதேவி, வெண்ணிலா, சுஜாதா ஆகிய முவருக்கும் கல்லூரியில் பணியாற்றிதற்கான ஊதியத்தை தராமல், நிர்வாகம் அலைகழித்து வருகிறது. போராசிரியர்களை கல்லூரி நேரம் முடிந்த பின்னரும் வீட்டுக்கு செல்ல அனுமதிப்பதில்லை. அரசு விடுமுறை நாட்களில் கல்லூரியை வைப்பதோடு அல்லாமல் தேர்வுகளையும நடத்துகின்றனர்.

மக்களே மக்களே மொத்த மாட்டரும் இவ்வளவுதாய்ன் மக்களே

இந்த விளக்கம் போதாவிட்டால் அடுத்த  விளக்கத்தையும் வேல மெனகெட்டு பாருங்கோள்..ரொம்பவும் நல்லாருக்குன்னு சண்முகபாண்டியன் சொன்னான்.இனி அவன்தான் சொல்லணும் .பின்னே அவன்தானே அடுத்த துணை முதல்வனு ...

டேய் லூசு! பொத்தடா வாயை!! சீமான் தந்தி டிவியில் பேராசிரியர் அருணனுக்கு அருச்சனை!


டேய் லூசு! பொத்தடா வாயை!!  : செந்தமிழன் சீமான்  செம்மொழியில் செப்புகிறார்  கேளுங்கோ!!சீமான்  தமிழக முதல்வராக வந்து..    தமிழகத்தை ஆட்சி செய்ய போகிறாராம்!? பொது அரங்கில் இப்படி பேசுகிறார்கள்  என்றால் வீட்டில் இவர்கள் எப்படி பேசுவார்கள்?? பண்பாடாக, மரியாதையாக  எப்படி பேசுவது என்பதை; செந்தமிழன் சீமானிடமிருந்துதான் தமிழக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

வைகோ :கருணாநிதியின் மாஜி குமாஸ்தா நான்.... நிறைய தகவல்களை லீக் செய்வேன்....துரோகத்திலும் ஒரு பெருமையா?

கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. தமிழர் வரலாறு துரோகி என்று தன்னை பழிக்குமே  என்ற குற்ற உணர்வு  கூட இல்லாமல் தரப்பட்ட ஒரு ஒப்புதல் வாக்குமூலம் இது .   இவர் ( 78 இல் இருந்து 96 வரை) பதினெட்டு ஆண்டுகள் திமுகவின் ராஜ்யசபா எம்பியாக திமுகாவால் தெரிவு செய்யப்பட்டவர் .   சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் குமாஸ்தாவாக இருந்தவன் நான்.. தேர்தல் நேரத்தில் பல தகவல்களை வெளியிடுவேன் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார். வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியின் 3-வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று ஆவடியில் தொடங்கியது. அங்கு வைகோ பேசியதாவது கருணாநிதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒரு குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் கருணாநிதி எந்த கூண்டிலும் நிற்க மாட்டார்.

செவ்வாய், 1 மார்ச், 2016

Asianet தொகுப்பாளினி சிந்து சூரியகுமாருக்கு கொலை மிரட்டல்...அமைச்சர் ஸ்மிருதி இராணியின் மகிசாசுரன் பேச்சு விவகாரம்

மகிஷாசுரன் பல பழங்குடி மக்களால் வழிபாடு செய்யப்படும் அவதாரமாகும் . அவர்களின் தெய்வ நம்பிக்கையை  கேவலப்படுத்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி  பாரத மாதா மகிசாசுரனை வதம் செய்தார் என்று பேசியதை விமர்சித்து  ஏசியாநெட் தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதத்தை ஒழுங்கு செய்த சிந்து சூரியகுமரனுக்கு இந்துத்வா வெறியர்கள் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் விடுத்த வண்ணம் உள்ளனர்.நாட்டில் மதவெறியை தூண்டி விட்டு ஆட்சியை பிடித்த பாஜகவின் சுயரூபம் ஒவ்வொரு மாநிலங்களிலும் பல விதத்தில் வெளிபட்டு கொண்டே இருக்கிறது 
 திருவனந்தபுரம்: கேரளாவில் மலையாள டி.வி.சானல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் சிந்து சூரியகுமார் என்ற பெண் மீது கடந்த மாதம் டி.வி.யில் ஒளிபரப்பான விவாத நிகழ்ச்சியின் போது பெண் கடவுள்களை அவமதித்ததாக போலி புகார் எழுந்தது.

அதிமுக ஸ்டிக்கர் பற்றி ஜவடேகர் பேசியதற்கு அதிமுக பார்லியில் பழிவாங்கல்?

சென்னையில், தங்கள் கட்சியை விமர்சனம் செய்த, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, மறைமுக பதிலடி தரும் வகையில், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், லோக்சபாவில், நேற்று அமளியில் இறங்கி, அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். நேற்று லோக்சபாவில், பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்வதற்காக எழுந்து நின்றார். அப்போது, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கண்டித்து, காங்., - எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். யாரும் எதிர்பாராத விதமாக, அ.தி.மு.க., - பார்லி., குழு தலைவர் வேணுகோபால் தலைமையில், அக்கட்சி எம்.பி.,க்களும் எழுந்து நின்று, கோஷங்கள் எழுப்பினர். மத்திய அரசுடன், பார்லிமென்ட்டில் நட்புடன் இருந்து வரும் அ.தி.மு.க.,வும், அமளியில் இறங்கியது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்தில்  தூங்கி கொண்டிருந்த நமக்கு வாய்த்த 37+4 எம்பீக்களையும் எழுப்பி விட்ட பிரகாஷ் ஜவ்தேஹருக்கு நன்றி.ஏமாற்றம். கூட்டணிக்கு தன்னிடம் கெஞ்சுவார்கள், தான் போடும் கட்டளைகளுக்கு அடிபணிவார்கள் என்ற எதிர்பார்ப்பு, பெங்களூருவில் நடக்கும் வழக்கை சற்றே ஆறபோடுவார்கள் என்ற நினைப்பு, கேட்டது உடனே கொடுக்கப்படும் என்ற விருப்பம், இதெல்லாம் பிஜேபியிடம் நடைபெறவில்லை . உடனே தங்கள் ஆயுதத்தை இறக்கி பார்லிமெண்டில் ஒரு ஆர்பாட்டம் உண்டாக்கி எச்சரிக்கை கொடுக்கிறார். 

சென்னையின் அழிவில் நீதிபதிகளின் பங்கு !

கூவம் ஆக்கிரமிப்புஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டுமல்ல. கூவத்தைக் குடிசைகள் மட்டுமா ஆக்கிரமித்திருக்கின்றன? நீர்நிலைகளின் முக்கியத்துவத்தில் இயற்கையும் செயற்கையும்
பக்கிங்காம் தீர்ப்பு வந்த அதே ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஏரிகளை ஒழித்துக் கட்டுவதற்காகவே, இன்னொரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதையும் தமக்குச் சாதகமாக இந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டியிருந்தார்கள் (பாரா 22). அந்த தீர்ப்பின் சாராம்சம்என்னவென்றால். “இயற்கையாக அமைந்த குளங்களைப் பாதுகாப்பது சட்டப்படி மிக அவசியமாகிறது, ஆனால் செயற்கையாக அமைக்கப்பட்ட குளங்கள் அப்படிப்பட்ட சட்டப்பூர்வ பாதுக்காப்பு பெறத் தகுதியானவை இல்லை”.

பிரிகால் இரட்டை ஆயுள் தண்டனை: முதலாளிகள் – நீதிமன்றம் கூட்டுச் சதி !

பிரிக்கால் - பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
கோவை பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து சென்னை-ஆவடியில் பு.ஜ.தொ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம்.
வேலைக்கு அமர்த்து, துரத்து (Hire and Fire) தொழிலாளி வர்க்கத்தின் மீதான பகைமையையும் வெறுப்பையும் அப்பட்டமாகப் பறைசாற்றும் வகையில், பிரிக்கால் நிறுவனத்தின் 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை அமர்வு நீதிமன்றம் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதியன்று தீர்ப்பளித்திருக்கிறது.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்றத்தால் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டுள்ள பிரிக்கால் தொழிலாளிகள்: (இடமிருந்து) குணபாலன், மணிவண்ணன், ராஜேந்திரன், ராமமூர்த்தி, சம்பத்குமார், சரவணகுமார், சிவகுமார், வேல்முருகன்.
 கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதியன்று கோவையிலுள்ள பிரிக்கால் நிறுவனத்தின் மனித வளத்துறை துணை அதிகாரியான ராய் ஜார்ஜ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 22-ஆம் தேதியன்று மாண்டு போனார்.

அக்காவின் ஜெபங்களோ, மாமாவின் ஊழியங்களோ எதுவும் வேலைக்காகவில்லை

Esther sister-2இந்த பெந்தெகொஸ்தே சபைக்காரனுவ கிட்ட பளக்கம் விட்டா நம்மள கிறுக்காக்கி விட்ருவானுவ. நீ அவனுவ சொல்றானுவன்னி இதெல்லாம் நம்பிக்கிட்டு அலையாத..எஸ்தர் அக்கா அலங்கரிக்கப்பட்டிருந்தாள். முகத்தின் சுருக்கங்கள் அறியாதபடிக்கு ஏதோ களிம்பைப் பூசியிருந்தார்கள். பட்டுப்புடவை ஒன்றை அவள் மேனியின் மேல் சுற்றி வைத்திருந்தனர். தலையை அழகான வெள்ளை நிற ரீத் அலங்கரித்தது. முன்பென்றால் இத்தனை அலங்காரத்திற்கும் கழுத்தெல்லாம் நகையாக போட்டு நிறைத்திருப்பாள்… ஆனால், சவப்பெட்டிக்குள் கிடத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில் அதை அவளே கூட விரும்பியிருக்க மாட்டாள்.
“எல்லாம் வல்ல எங்கள் பிதாவே.. எங்கள் சகோதரி எஸ்தரை உமது சமூகத்தில் ஒப்புக் கொடுக்க வந்துள்ளோம் அய்யா…”
வெட்டி வைக்கப்பட்ட குழியின் வலது பக்கமாக அச் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது – சுற்றிலும் உறவினர்கள் அடைத்துக் கொண்டு நின்றனர். பெட்டியின் அருகே கோயில்குட்டியார் நின்று எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

ஃப்ரீடம்-251 போனுக்காக வசூலிக்கப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும்....நம்புறோம் ?

dinamani:குறைந்த விலையில் வழங்கப்படும் ஃப்ரீடம் போனுக்காக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட  பணம் ஒரு வாரத்துக்குள் திரும்ப அளிக்கப்படும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம், ரூ. 251 விலையில் ஃப்ரீடம் என்ற பெயரில் 'ஸ்மார்ட் போன்' வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து போட்டிப் போட்டுக் கொண்டு கோடிக்கணக்கானோர் மலிவு விலை போனை பெறுவதற்காக முன்பதிவு செய்தனர். மேலும், பலர் பணமும் செலுத்தினர்.

பாஜக உத்தரவால் ராஜ்யசபாவை முடக்கிய அதிமுக.... குலாம்நபி ஆசாத் பாய்ச்சல்

டெல்லி: ப.சிதம்பரம் விவகாரத்தை முன்வைத்து ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உத்தரவால்தான் ராஜ்யசபாவை அதிமுக எம்.பி.க்கள் முடக்கியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் சாடியுள்ளார். முன்னதாக ராஜ்யசபா துணைத் தலைவரான பிஜே குரியனும் அதிமுகவின் பொறுப்பற்று நடந்து கொள்வதாகவும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதாகவும் அதிமுக எம்.பி.க்களைப் பார்த்து சீறியிருந்தார். நாடாளுமன்றத்தில் சமீபகாலங்களாக தமிழக பிரச்சனைகளுக்காக மல்லுக்கட்டாத அதிமுக இன்று திடீரென ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கோரி தொடர்ச்சியான அமளியில் ஈடுபட்டது. இதனால் ஒட்டுமொத்தமாக நாடாளுமன்றத்தின் இருசபைகளுமே முடங்கிப் போனது.ஜெயலலிதாவின்  பூதாகரமான கோரிக்கையான  வழக்கை  ஊத்தி மூடுங்க என்ற கோரிக்கையால்  மனம் உடையும் அளவுக்கு வாஜ்பாயி பாடம் படித்தார். அதே பாடத்தை இன்றைய பாஜகவும் படிக்க போகிறது. ஜெயாவின் 41(எம்பீ ) நமக்கு வாய்த்த அடிமைகளும் ஜெயாவின்  முழு பூசணிக்காயை அளவு  சொத்தை...சோத்தில அமுக்கு அமுக்கு என்பதே இன்றைய கூச்சலின் அர்த்தம். தற்போது காங்கிரசுக்கு எதிராக  மோடி இதை பயன்படுத்துகிறார், ஆனால் அவரே   விரும்பினாலும் ஜெயாவின் வழக்குகளை ஊத்தி மூட  முடியாது....ஆனாலும் எதோ முயற்சி செய்கிறார்கள். அதான் இந்த கூச்சல் குழப்பம் எல்லாம்.  

பாராளுமன்றத்தில் அதிமுக எம்பீக்கள் கூச்சல் குழப்பம் பாராளுமன்றம் முடக்கம்


முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரது சொத்துக்கள் பற்றி ‘பயோனியர்’ ஆங்கிலப் பத்திரிகையில் செய்தி வெளியாகி இருந்தது. 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்து இருப்பதாகவும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்திகளை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில் இன்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சினையை கிளப்பினார்கள். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் சொத்துக்கள் பற்றி விசாரிக்க வேண்டும் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் – செல் மேக்சிஸ் விவகாரம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினார்கள். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்திருந்தனர். தங்களது கோரிக்கையை அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று கிளப்பினார்கள்.

விகடன்: கார்த்தி சிதம்பரம் சொத்து குவித்தாரா? பயோனியர் ஆங்கில நாளிதழ் பொய் சொல்கிறதா?

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிங்கப்பூர், துபாய், லண்டன் நகரங்கள் உள்பட  உலகின்14 இடங்களில் முதலீடு செய்துள்ளதாக பயோனீர் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ள பரபரப்பான கட்டுரையை அடிப்படையாக கொண்டு அதிமுக இன்று நாடாளுமன்றத்தில் பிரச்னையை எழுப்பியதை தொடர்ந்து, ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதான ஏர்செல்- மேக்சிஸ் விவகாரம் மீண்டும் வில்லங்கத்தை கிளப்பி உள்ளது.
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் வருமானவரித்துறையும் அமலாக்கத்துறையும் இணைந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் அலுவலங்களில் நடத்திய கூட்டு சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இருந்து இந்த செய்தியை பயோனீர் பிரசுரித்துள்ளது.
பரபரப்பை கிளப்பி உள்ள பயோனீர் பத்திரிகையின் மொழியாக்க கட்டுரை இங்கே...  கார்த்தி சுத்தமா ஜெயலலிதா சுத்தமா மோடி சுத்தமா என்பதை விட தமிழக தேர்தல் நேரத்தில் பாஜகவின் ஊதுகுழல் பத்திரிக்கை பயோனியர் இதை வெளியிட்டு இருப்பதுதான் சந்தேகத்தை வரவழைக்கிறது ...காத்திருந்ததுபோல அதிமுக இதையிட்டு பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பி அதை முடக்கியது ஏன்?

சசிகலா ஒரத்தநாடு தொகுதியில் போட்டி?

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதி, இந்தத் தேர்தலில் அனைவரது கவனத்தையும் பெறும் வகையில் விவிஐபி தொகுதியாகப் போகிறது என்ற பேச்சு தற்போது பரவலாகக் கேட்கிறது. கடந்த 2001 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் அதிமுக வசம் உள்ளது. தற்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் இங்கு 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது முதல்வர் ஜெய லலிதாவின் தோழி சசிகலா, இந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக தொகுதி முழுக்க பேசிக் கொள்கிறார்கள். இதுகுறித்து உள்ளூர் அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘சசிகலா போட்டியிடப் போவதாக பேச்சு இருப்பது உண்மைதான். ஆனால், கட்சித் தலைமையிடம் இருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. ஒரத்தநாட்டில் சசிகலா போட்டி யிடுவதாக இருந்தால் தஞ்சாவூர், மன்னார்குடியில் உள்ள அவரது உறவினர்களும், கட்சிக்காரர்களும் இந்நேரம் களத்தில் இறங்கி யிருப்பார்கள். அப்படி எந்த அறிகுறியும் இல்லை’’ என்றார்.

இரோம் ஷர்மிளா விடுதலை....மணிபூர் ஆயுதப்படை சட்டத்தை நீக்க கோரி ...

இம்பால் : மணிப்பூரில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா, நீதிமன்ற காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பும், தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
மணிப்பூர் தலைநகர் இம்பால் அருகிலுள்ள கிராமம் ஒன்றிற்குள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு (2-11-2000) நுழைந்த அசாம் ஆயுதப்படை பிரிவினர், நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பலியாயினர். இதனையடுத்து இரோம் ஷர்மிளா எனும் இளம்பெண், பலிக்கு காரணமான மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

நீதிபதி கர்ணனுக்கு எதிராக விசாரணை.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி .....ஜாதி ஜாதி ஜாதி

டெல்லி: சர்ச்சைக்குரிய நீதிபதி சி.எஸ். கர்ணனுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். இவரது செயல்பாடுகள் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. இவர் பிறப்பித்த அதிரடி உத்தரவுகளால் நீதித்துறையே பரபரப்பில் மூழ்கியது. சமீபத்தில் இவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் இவர் அதிரடியாக தடை விதித்தார்.  இந்த நிலையில் இவருக்கு எந்த வழக்குகளையும் ஒதுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் உத்தரவிட்டார்.

”Thank you Switzerland!” அகதிகளுக்கு எதிரான வாக்கெடுப்பு தோல்வி....சுவிஸ்

சுவிஸ் அகதிகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட வாக்கெடுப்பை படுதோல்வி அடையச்செய்த குடிமக்களுக்கு அந்நாட்டு பத்திரிகைகள் ஒன்றாக இணைந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன குற்றம் புரிந்த அகதிகளை நாடுகடத்த நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அகதிகளுக்கு ஆதரவாக 58.9 (19,66,976) சதவிகித குடிமக்களும், அகதிகளுக்கு எதிராக 41.1 (13,75,058) சதவிகித மக்களும் வாக்களித்தனர். இதன் மூலம் சுவிஸ் மக்கள் கட்சி கொண்டு வந்த வாக்கெடுப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு சுவிஸ் மக்கள் கட்சிக்கு கிடைத்த மிக மோசமான முதல் தோல்வியாகும்.

திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஆஸ்கர் விழாவில் ஹாலிவுட்டின் நிறவெறியை வெளுத்த க்றிஸ் ஹாரிஸ்

 Oscars: The best five jokes from Chris Rock’s monologue உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த ஆஸ்கர் விருது விழாவைத் தொகுத்து வழங்கும் பணியை இரண்டாவது முறையாகப் பெற்ற ஹாலிவுட்டின் பிரபல காமெடி நடிகர் க்றிஸ் ஹாரிஸ், வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல, ஹாலிவுட்டில் நிலவும் நிற வெறியை தோலுரித்துக் காட்டிவிட்டார். இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுப் பட்டியலில் கருப்பினத்தைச் சேர்ந்த எந்தக் கலைஞருக்கும் விருதளிக்கப்படவில்லை. விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியானதிலிருந்தே பலரும் முணுமுணுத்த இந்த விஷயம், விழா நெருங்க நெருங்க பெரும் விவாதமாகவே மாறிவிட்டது. 

கனிமொழி; facebook கில் கலைஞர் மீதான மோசமான கமெண்ட்டுகளை நீக்கவேணாம் என்று கேட்டுகொண்டார்

சென்னை: தனது முகநுாலில் வந்த கீழ்த்தரமான விமர்சனங்களை நீக்காமல் அப்படியே விட்டுவிடுமாறு திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்ததாக கனிமொழி கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கு சமூக வலைத்தளங்கள் பங்களிப்பு என்பது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி,  சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி, கலந்துகொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, “தமிழக மக்கள் இன்று சுயமரியாதையோடு வாழ பெரியாரும் திராவிட இயக்கமும்தான் காரணம். ஆனால் திராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று சமூக வலைத் தளங்களில் தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. இது தி.மு.க வை அழிக்க நினைப்பவர்கள் செய்யும் பிரச்சாரம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில்தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டன. கூகுள் செய்து பார்த்தாலே இது தெரிந்து விடும்.

குமரி முத்து ஒரு போராளி கலைஞர்...சுயமரியாதையாளர், சமுகநீதியாளர்....நடிகர் சங்கத்தின் முதல் களப்பலி இவர்தான்.


கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூர் கிராமத்துக்கு அப்போது' பாவைக்கூத்து ' நடத்த ஒரு பிரபலமான ஒரு நாடகக் குழு வந்திருந்தது. அன்றைய தினம் அதே கிராமத்தில் மற்றொரு நாடகமும் நடந்தது. அதனை பார்க்க பாவைக்கூத்துக் குழுவும் அமர்ந்தது. நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிற்காக திரைக்குப் பின்னாலிருந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒருவர் குரல் கொடுத்துப் பாடினார் . அவர் பாடிய முறை அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் குரல் கொடுத்த நடிகரை அழைத்து பாராட்டிய அவர்கள், அவரையும் தங்கள் குழுவில் இணைத்துக் கொண்டனர்.அப்போது  நாடக உலகுக்கும்,  பின்னாளில் திரையுலகுக்கும் திறமையான நடிகர் ஒருவர் கிடைத்தார். ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றி நாடக அனுபவம்பெற்ற அவர்தான் பின்னாளில் வெடிச்சிரிப்பால் ரசிகர்களை அதிர வைத்த குமரி முத்துவாக மாறினார்.தனது வாழ்நாள் எல்லாம் திமுக பிரசாரகராகவே இருந்தார்.பதவி சுகம் அனுபவித்த பலரும் எங்கெங்கோ ஓடிய பொழுதும் இவர் இறுதிவரை கலைஞரின் தொண்டராகவே இருந்தார்