புதுடில்லி : புதிய ரூபாய் நோட்டுகள் நிரம்பும் பணி நிறைவடைந்து இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. அத்துடன் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் பெறலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காக கடந்த இரு நாட்களாக ஏ.டி.எம்.,கள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகளை நிரப்பும் பணி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அனைத்து ஏ.டி.எம்., சேவை மையங்களும் இன்று காலை 10 மணி முதல் செயல்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இன்று முதல் பொதுமக்கள் ஏ.டி.எம்., மையங்களில் 50 ரூபாய் நோட்டுகளையும் எடுக்கலாம் என வங்கிகள் தெரிவித்துள்ளன.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக