திங்கள், 31 ஆகஸ்ட், 2015

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பா.ஜ.க. அரசு கைவிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, உள்கட்டமைப்புகளை மிக வேகமாக மேம்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.
இதற்காக முந்தைய காங்கிரஸ் அரசு கடந்த 2013–ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்தது. அந்த சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பா.ஜ.க. அரசு திருத்தங்கள் செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நாடெங்கும் உள்ள விவசாயிகளை இந்த சட்டத்திருத்தங்கள் பாதிக்கும் என்று கூறி போராட்டங்கள் நடத்தியது. சில எதிர்க்கட்சிகளும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ததை எதிர்த்தன.
இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்த பா.ஜ.க. அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தது. 3 தடவை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. என்றாலும் பாராளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு மத்திய பா.ஜ.க. அரசால் ஒப்புதல் பெற முடியவில்லை.

ஜாக்கி வாசுதேவிடம் நக்கீரன் இதழுக்கு ஏன் இந்த பாசம்? அப்படி ஒரு ஜால்ரா!

சத்குருவின் ஆனந்த சங்கம நிகழ்ச்சி ( படங்கள் ) ஈசா யோகா மையத்தின் சத்குருவின் ஆனந்த சங்கம நிகழ்ச்சி இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. உலக யோகா தினத்தையொட்டி சத்குருவின் வழிகாட்டுதலைன் பேரில் ஈசா தன்னார்வ தொண்டர்கள், இலவச யோகா வகுப்புகளை நடத்தி பல லட்சம் மக்களிடத்தில் யோகாவை கொண்டு சேர்த்தனர். இதில், கடந்த ஜூன் 21ம் தேதி தொடங்கி 60 நாட்களாக குமரி மாவட்டத்தின் பல இடங்களில் நடத்தப்பட்ட யோகா மையத்தின் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 415 பேர் கலந்துகொண்டனர். நக்கீரனின் ஜாக்கி ஜால்ரா படங்கள் பாருங்க ..அப்படி வல்லிய வெளம்பரம்! 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

தனித்துவிடப்படுகிறதா திமுக? பலமான மூன்றாவது அணி உருவாகிறது?

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம். இனி ஒருபோதும் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம்" என திருச்சியில் தேமுதிக நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2016 சட்டப்பேரவை தேர்தல் பரபரப்பு துவங்குவதற்கு முன்னரே திமுக தனித்துவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் தேமுதிகவின் இந்த அறிவிப்பானது இடது சாரிகள் தலைமையிலான மக்கள் நல கூட்டு இயக்கத்துக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. ஏற்கெனவே இந்த கூட்டமைப்பில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் திரண்டுள்ளன.

கன்னட பகுத்தறிவு எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை! பாஜக கும்பலின் வெறியாட்டம்? Kannada writer M.M. Kalburgi shot dead


இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். அண்மையில், அவரது வீட்டிற்கு முன்பாக போராட்டம் நடத்திய பஜ்ரங் தள் அமைப்பினர் அவரது வீட்டில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சிகர கன்னட எழுத்தாளரும், கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்பர்கி மர்மநபர்களால் இன்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பாஜகவின் ஆதரவு அமைப்பான பஜ்ராங்க்தள்  மீதுதான் முதல் சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள தர்வாத்தில் உள்ள எம்.எம்.கல்பர்கியின் இல்லத்திற்கு வந்த மர்மநபர்கள் சிலர், இன்று காலை அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவை திறந்த கல்பர்கி மீது, அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இளங்கோவன்: கருத்து கணிப்புகள் நம்பும் படியாக இல்லை!

நீதிமன்ற உத்தரவுப்படி 4–வது நாளான இன்று தல்லா குளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட காரில் வந்த இளங்கோவனை திரளான காங்கிரசார் மோட்டார் சைக்கிள் புடைசூழ அழைத்து வந்தனர். கையெழுத்திட்டு விட்டு திரும்பிய இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்பில் முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. இந்த கருத்துகணிப்பு சிலரது தூண்டுதலின்பேரில் எடுக்கப்பட்டதாகும். இது நம்பும்படியாக இல்லை. மேலும் இது சரியாகவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஊழல் வழக்குகளை கார்த்தி சிதம்பரம் சந்தித்தே ஆக வேண்டும். அதில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. என் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் டெல்லி சென்று சோனியாவை சந்தித்ததாக கூறுவது தவறு. நான் அதற்காக டெல்லி செல்லவில்லை.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கருணா அளித்த பேட்டி!: