சனி, 4 அக்டோபர், 2014

வனிதா தயாரிக்கும் ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்‘

சென்னை: நடிகை வனிதா தயாரிக்கும் படத்தில் அவரது பாய் பிரண்ட் ராபர்ட் ஹீரோவாக நடிக்கிறார்.விஜயகுமார்-மஞ்சுளா மகள் வனிதா. ஆகாஷ் என்பவரை மணந்தார். பின்னர் அவருடன் விவாகரத்து பெற்றார். இதையடுத்து ராஜன் ஆனந்த் என்பவரை மறுமணம் செய்தார். அவருடன் பிரச்னை ஏற்பட்டு பிரிந்தார். விஜய் ஸ்ரீஹரி, ஜெனிதா ஆகிய குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். வனிதாவுக்கும் நடன இயக்குனர் ராபர்ட்டுக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இருவரும் ஜோடி சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றனர். ஏற்கனவே ‘அழகன்‘ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார் ராபர்ட். தற்போது அவரை ஹீரோவாக வைத்து சொந்த படம் தயாரிக்கிறார் வனிதா. அப்படத்துக்கு ‘எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதுபற்றி வனிதா கூறியது:

அமித் ஷாவுக்கு எதிராக புகார் பதிவு செய்த போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் ! இது திருந்தாது ?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கையை தயார் செய்த போலீஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, உ.பி. மாநில பாஜக பொறுப்பாளராக இருந்த அமித் ஷா மீது வெறுப்பை உமிழும் வகையில் பேசியதாக புகார் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 10-ம் தேதி அமித் ஷா மீது போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் செப்டம்பர் 11-ம் தேதி அமித் ஷா மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்த கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் சுந்தர் லால் அதை போலீஸாருக்கு திருப்பி அனுப்பிவிட்டார். இந்திய தண்டனைச் சட்டம் 173 (2)-க்கு உட்பட்டு குற்றப்பத்திரிகை தயாரிக்கப்படவில்லை என மாஜிஸ்திரேட் கூறியிருந்தார். /tamil.thehindu.com/i

பாலியல் வன்கொடுமை 3 வயது சிறுமி பலி:17 வயது மாணவன் கைது~! திருப்பூரில் வெளிமாநில குடும்பத்துக்கு நேர்ந்த கொடுமை !

 திருப்பூர் வாசுகி நகரில் உள்ள வளையங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 12-ஆம் வகுப்பு மாணவன் விக்ரம் (வயது-17), இவரது வீட்டிற்கு அருகில் பிகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலைபார்த்துவரும் அவர்களின் 3-வயது பெண்குழந்தை கடந்த 18-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது, தனியே அழைத்துச்சென்ற விக்ரம் அந்தக் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அங்கிருந்த யாருக்கும் தெரியாமல் இருந்தது.பாலியல் வண்கொடுமைக்கு உள்ளன அந்தச் சிறுமிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், பெற்றோர்கள்  குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ராமதாஸ்: ஜெயலலிதாவின் அமைச்சர்களை போல நீதிமன்றங்களும் சட்டங்களும் அவரின் அடிமைகளல்ல!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவ ித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் வன்முறைகளும், போராட்டங்களும் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன. கட்சித் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்டுவதாக நினைத்துக் கொண்டு போராட்டம் என்ற பெயரில் அ.தி.மு.க.வினர் அரங்கேற்றும் கேலிக்கூத்துக்கள் நீதித்துறையின் மாண்பை குலைப்பதாக உள்ளன. >ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சொத்துக்கள் உள்ளிட்ட பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சேதப்படுத்திய அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் சேலம் உள்ளிட்ட நகரங்களில் பேரூந்துகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.ஜெயலலிதா முன் அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் எப்படி கைகட்டி, வாய்பொத்தி நிற்கிறார்களோ? அதேபோல் சட்டங்களும், நீதிமன்றங்களும் நிற்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.

அம்மா போராட்டம் : எரிச்சல், காமெடி காட்சிகளால் களைகட்டும் தென் மாவட்டங்கள்!

தங்கள் தலைவி சிறைக்கு சென்றதை தாங்க முடியாமல் அ.தி.மு.க.வினர் நடத்தி வரும் போராட்டங்கள், ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ‘’அவர்கள் செய்வது  நியாயம்தானே..’’ என்று இரக்கத்தை பெற்றுத்தந்தாலும், தொடர்ச்சியாக போட்டி போட்டுக்கொண்டு கட்சியினர் பண்ணும் அட்ராசிட்டிகளை பார்த்து "நல்லா சீன் போடுறாங்காப்பா...’’ என்று மக்கள் எரிச்சல் படும் வகையில் அ.தி.மு.க.வினரின் போராட்டங்கள் தற்போது சென்று கொண்டிருக்கின்றன.
நாம் போராட்டம் நடத்துவது ஜெயா டிவியில் தெரிந்தால் போதும், எப்படியும் வருகின்ற தேர்தலில் ஒரு சீட் வாங்கிவிடலாம் என்ற நினைப்பு கட்சியினர் எல்லோரிடமும் இருப்பதால், போராட்டங்கள் உணர்ச்சிகராமாக இல்லாமல், சிவாஜித்தனமாக உள்ளது.

மெட்ராஸ் - சினிமா விகடன் விமர்சனக் குழு

வட சென்னையின் ஒரு ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள சுவரை யார் பிடிப்பது என்ற போட்டி நிலவுகிறது. மறைந்த லோக்கல் அரசியல்புள்ளியின் உருவப்படம் பிரமாண்டமாக வரையப்பட்ட சுவரை, எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பது கார்த்தியின் நண்பன் கலையரசனின் கனவு. அதகள ரணகளத்தில் கலையரசன் கொல்லப்படுகிறார். நண்பனின் மரணத்துக்கு பழிவாங்க கார்த்தி அலையும்போது, சதிவலையின் விஷ வேர் தெரியவருகிறது. தலைமுறைகளாக ரத்தம்பூசிய அந்த ஒற்றைச் சுவர் என்ன ஆனது என்பது திக்திக் கிளைமாக்ஸ்.
விலக்கப்பட்டவர்களாக, விளிம்பில் வாழும் சென்னையின் பூர்வீகக் குடிமக்களை, அவர்களை ஆட்டுவிக்கும் அரசியலை அசலாக, அழுத்தமாக, அட்டகாசமாகப் பதிவுசெய்திருப்பதற்கு... சலாம் ரஞ்சித்!

சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கொள்ளை வெற்றிகரமாக தொடர்கிறது !

சிதம்பரம், அக்.3- சிதம்பரம் நடராஜன் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீட்சதர்களின் கைகளுக்குள் சென்று விட் டது; இனி அவர்கள் பாடு தான் வேட்டைதான் கொள்ளையோ கொள்ளை தான்.
செயல் அலுவலர் நிய மனத்தை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் 2014 ஜன., 6ம் தேதி உத்தரவிட்டதை அடுத்து, சிதம்பரம் நட ராஜர் கோவிலில், அற நிலையத் துறையால் வைக் கப்பட்ட உண்டியல்கள்,  அகற்றப்பட்டுள்ளன.
தீட்சதர்கள் தீட்சதர்கள் நிர்வாகத் தில், முறைகேடு நடக்கிறது என்று கூறி, இக்கோவி லுக்கு அறநிலையத் துறை செயல் அலுவலரை நிய மிக்க, 1987ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, தீட்சிதர்கள் சார்பில், பல்வேறு நீதி மன்றங்களில் தொடரப் பட்ட வழக்குகளின் முடிவாக, ஜன., 6ஆம் தேதி, உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில், செயல் அலுவலர் நியமனம் ரத்து செய்யப்பட்டதுடன், கோவில் நிர்வாக பணி குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளும் வழங் கப்பட்டன. 

மேலும் ஒரு இங்கிலாந்து நாட்டவர் தலை துண்டித்து படுகொலை ! இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம் !

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். இவர்களின் வளர்ச்சியை தடுக்க தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் அந்நாட்டுக்கு துணை போகும் இங்கிலாந்தை மிரட்ட இரு நாட்டு குடிமகன்களை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர். சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க பத்திரிகை நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த வீடியோக்களை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினர்.

சென்னையில் தூய்மை இந்தியா தொண்டு பணி தொடக்கம் !

சென்னையில் ஆளுநர் மாளிகை உள்பட பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆளுநர் மாளிகை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியில் ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு ஆளுநர் மாளிகை வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், சுத்தப்படுத்தும் பணியை அனைத்து வீடுகளிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரும் தொடங்க வேண்டும். தாங்கள் சார்ந்துள்ள வளாகத்தைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். தூய்மைக்கு எடுத்துக்காட்டாக காந்தியடிகளை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றார்.

பீகார் தசரா விழா கூட்ட நெரிசலில் மிதிபட்டு 32 பேர் பலி:

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று தசரா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். பாட்னா காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற தசரா பண்டிகை கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். இரவு 7 மணியளவில் ’ராவண வதம்’ நிகழ்ச்சி முடிந்ததும், மைதானத்தை விட்டு பொதுமக்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறினர். இதனால், சாலையில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. நிலை தடுமாறி ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் வந்தவர்கள், கீழே விழுந்து கிடந்தவர்களை மிதித்துக் கொண்டு இடறி விழுந்தனர்.
இப்படி, அடுக்கடுக்காக நூற்றுக் கணக்கானவர்கள் கீழே விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 32 பேர் மிதிபட்டும், மூச்சுத் திணறியும் இறந்தனர்.

மத்திய உளவு துறை தமிழகத்தில் நீதித்துறைக்கு எதிரான அசம்பாவிதங்களை அவதானிக்கிறது !

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதித்த பின், தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து, மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தரப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, தமிழகத்தில் கடையடைப்பு, உண்ணாவிரதம், பஸ் எரிப்பு, கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் தொடர்கின்றன. வர்த்தகர்கள், பல்வேறு சங்கங்கள் தனித்தனியாக வேலை நிறுத்தம் செய்து வருகின்றன. மறைமுக நிர்ப்பந்தம் காரணமாகவும் போராட்டங்கள் தொடர்வதாகவும் புகார் உள்ளது. அமைப்புகள் மற்றும் சிறிய அரசியல் கட்சியினர், ஆளும்கட்சியின் அபிமானத்தைப் பெற போராட்டம் நடத்துகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளில், தீர்ப்பைக் கண்டித்தும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன; பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஆட்சியில் இருக்கும் அதிமுகவே தமிழகத்தில் அசம்பாவிதம் பதற்றம் என ஒப்புதல் வாக்குமூலம் ?

இந்த வழக்கில், நீதிபதியிடம் குற்றவாளியே தன் குற்றத்தை ஒப்புகொண்டது போல, அதற்கு பின் ஓரிரு நாட்களில் மம்மிஜிக்காக அவரின் அதிகாரபூர்வ வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஜாமீன் மனுவிலேயே.. இவர்களின் கேடுகெட்ட இந்த ஆட்சியில், தமிழ்நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதையும் அதற்கு முழு காரணமும், மூளை மழுங்கிய உணர்ச்சி வசப்பட்ட அதிமுக கட்சிகாரர்கள் தான் என்பதையும் ஒப்பு கொண்டுவிட்டனர். இன்னும் சொல்ல போனால் எழுதியே கொடுத்து விட்டனர். அவர்கள் அந்த மனுவில் நிலைமையை மேலும் மோசமாக்குவோம் என்று எச்சரிக்கையும் விட்டிருந்தனர்.. அந்த மனுவில் குறிப்பிட பட்டதாவது: "ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அவசியம். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் வன்முறையும், தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன.தற்போது, தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இனியும் தாமதமானால், அசம்பாவிதம் நேரிடும்..." ஆகையால், மத்திய உளவு துறை அந்த ஜாமீன் மனுவை அவர்களின் வாக்குமூலமாகவே எடுத்து கொள்ளலாம். இப்படி ஒரு கட்சியை லோகத்தில பாக்கவே முடியாது.. யாரோட ஆட்சி நடக்குதுன்றதையே மறந்துட்டானுங்க போல.

அதிமுக மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர திமுக ஆயத்தம் !

சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர் குறிப்பாக, இரண்டு விஷயங்களை முன்வைத்து அவர்கள், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். சொத்து குவிப்பு வழக்கை முன்னின்று நடத்திய தி.மு.க.,வுக்கு எதிராகவும், வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் டி.குன்ஹாவுக்கு எதிராகவும், கடுமையான வாசகங்களுடன் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். சென்னை மற்றும் வேலூர் மாநகராட்சிகளிலும், இந்த தீர்ப்பை கண்டித்து, தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதிலும், கருணாநிதியையும், நீதிபதி குன்ஹாவையும் விமர்சித்து இருக்கின்றனர்.
திரட்டுகின்றனர்: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக, எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி யாக இருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்த மாதிரி விமர்சனங்களை ஆதாரத்துடன் சேகரிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார்.  பத்திரிக்கைகள் உண்மையாக தமிழினம் மீது பற்றுள்ளவர்களாக இருந்தால் நீதி மன்றத்தின் தீர்ப்பின் சாரத்தை சொல்லவேண்டும். சொன்னால் மட்டும் போதாது - விவாதிக்கவேண்டும். ஏன் இந்த தண்டனை என்பது புரியும்....

வெள்ளி, 3 அக்டோபர், 2014

கலைஞர் :ஜெயலலிதா மீதான தீர்ப்பு ! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது !

சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டார் ஜெயலலிதா. இத்தீர்ப்பு தொடர்பாக பல்வேறு கட்சிகளும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்த நிலையில், திமுக மட்டும் தொடர்ந்து அமைதி காத்து வந்தது. இந்நிலையில், இன்று இது தொடர்பாக திமுகத் தலைவர் கருணாநிதி கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :- மகத்தான தீர்ப்பு... ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி தாங்கள் எதுவுமே கூறவில்லையே? இந்தத் தீர்ப்பு பற்றி நான் கூறுவதை விட வார இதழ் ஒன்று வெளியிட்ட 'தீர்ப்பு தரும் பாடம்' என்ற தலைப்பில் எழுதப்பட்ட தலையங்கத்தில் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். அது வருமாறு: 'இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

வக்கீலின் கன்னத்தில் ஓங்கி அறைந்த மேனகா காந்தி ! தற்போது மறுக்கிறார் ?

 மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா வக்கீல் ஒருவரை அடித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். உ .பி . மாநிலம் பிசால்பூர் ரோட்டை சேர்ந்தவர் வக்கீல் டி.கே வர்மா. இவர் மாவட்ட போலீஸ் அதிகாரியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: பர்கேதா பகுதியில் எனது வீடு உள்ளது. இங்கு பா.ஜ., கட்சியை சேர்ந்த சிலர் வந்தனர். என்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்றனர். இங்கு முகாமிட்டிருந்த மேனகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இங்கு மேனகா எனது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த அம்மா முன்பு ஒரு முறை விசாரணை கமிஷனின் மேஜை மீதேறி அட்டகாசம் செய்த எமேர்ஜன்சி வரலாறுகள் பல உண்டு . இது ஒரு சொர்ணா அக்காதான்

ஆளுநரிடம் திமுக மனு :தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு: அதிமுகவினரின் வெறியாட்டம் எல்லை மீறுகிறது !

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கக் கோரி, திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு ஒன்று அளிக்கப் பட்டுள்ளது. 18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.  ஜெயலலிதாவிற்கு எதிரான இந்தத் திர்ப்பையடுத்து கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக இன்று திமுக சார்பில் தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மற்றும் மாநகராட்சி முன்னாள் மேயர் மா சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான திமுகவினர், இன்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து இந்த மனு அளித்தனர். அந்த மனுவில், கடந்த 30ஆம் தேதி சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்ற போது, திமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹாவுக்கு கண்டனம் தெரிவித்து மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருவதால் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் திமுக தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
tamil.oneindia.in

யார் இந்த சோ ? ஒரு பார்ப்பன அரசியல் விபச்சாரி ? Beyond any reasonable doubt ?

Jaya With-Choதீர்ப்பு இவ்வளவு கடுமையாக இருக்குமென்று சோ எதிர்பார்க்கவில்லையாம். ஆனால் இந்த எதிர்பார்ப்பு திமுகவிடம் ஏன் இருந்தது? சந்தேகப்படும் அவர், எல் டிபிள் யூ முறையீட்டில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுக்கும் போது, அரசியலில் போயஸ் தோட்டத்து ராணிக்கு கொடுக்கப்படவில்லை என்றால் அதில் ஏதோ சூழ்ச்சி இருக்குமென்கிறார். முக்கியமாக சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் ஜெயா என்பது அவரது நம்பிக்கை மட்டுமல்ல, மற்றவர் நம்பியாக வேண்டிய ஆணை!
கோடிகளை சம்பளமாக வாங்கிய சட்டம் படித்த மேதைகள் உதவியால் வாய்தா மேல் வாய்தாவாக 18 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை ஏதோ ஜெயா தரப்பு உண்மைக்கும், திமுக தரப்பு பொய்மைக்குமான நீதிப் போராட்டம் என்று சித்தரிக்கிறார் சோ. வெண்மணி படுகொலை வழக்கில் “கோபால கிருஷ்ண நாயடு போன்ற மேன்மக்கள் குற்றம் இழைத்திருக்மாட்டார்கள்” என்று சாட்சியை பார்க்காமல், ஆதிக்க சாதி ‘கௌரவ’மாக பார்த்த நீதிபதிகளின் நாட்டில் குன்ஹா எனும் நீதிபதி இப்படி தீர்ப்பளித்திருப்பது சோவாலேயே நம்ப முடியவில்லை.  பார்ப்பனீய நலன்களுக்காக எந்த தூரமும் போகக்கூடிய சோ உண்மையில் ஒரு மோசமான தீய சக்தியே கலைஞரை ராவோடு ராவாக சட்டவிரோதமாக ஜெயா கைது செய்த போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் அப்படி இப்படி என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல்  கலைஞர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியை பச்சை பச்சையாக இந்த பிரகிருதி  கொட்டியதை மறக்க முடியுமா ? பார்பனர்களே வெட்கப்படும் அளவு கேவலமானவக்கிர வல்கர்ஆசாமி !

பெண்கள் ஜீன்ஸ் அணிந்து ஆண்களை கெடுக்கிறார்களாம் ! சேட்டன் ஜேசுதாஸ் கண்டுபிடிப்பு !

திருவனந்தபுரம்: இந்தியப் பெண்கள் ஜுன்ஸ் அணிந்து ஆண்களின் மனதைக் கெடுக்கிறார்கள் என்று பிரபல பின்னணிப் பாடகர் கேஜே யேசுதாஸ் தெரிவித்துள்ள கருத்து பெண்கள் அமைப்புகள் மத்தியில் புயலைக் கிளப்பியுள்ளது.  பல மகளிர் அமைப்புகள் வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு பேசிய யேசுதாஸ், "பெண்கள் ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது என்றார். எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைத்தே இருக்க வேண்டும்," என்றார்.யேசுதாஸ் கருத்தைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் அமைப்பினர் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோழி இறைச்சி பிரியர் பக்தி ததும்ப கச்சேரி செய்கையில் மனசாட்சி குத்தலையோ ? இந்தியாவில் உள்ள அத்தனை மாநில மத்திய அரசுகளின் சலுகைகளையும் பட்டங்களையும் பெற்று கொண்டு அமெரிக்காவில் தனது மகன்மாரை படிக்க வைத்து அங்கேயே செட்டில் ஆக முயற்சித்தது எந்த வகை கலாசாரத்தில் சேர்த்தி ? பதில் சொல்லு தாசு ? அப்புறம் அங்கு ஒண்ணும் சரிவராம போக திரும்பி ஊருக்கு வந்து கலாசாரம் புண்ணாக்கு என்று வாயில் வந்த படி எல்லாம் பேசுறாரு . அது சரி சேட்டா சுமார் இருபது வருஷங்களுக்கு முன்பு வாய்ஸ் பாங்குன்னு ஒன்னு தொடங்குனியே ஞாபகம் இருக்கா ? அது இன்னாச்சு ? ஒரு மகன்மாரையும் உருப்படியா சங்கீத வித்வானக்க முடியல்ல . ரொம்ப கலாசார சமாச்சாரங்கள் உன்வீட்டில் நடக்குது ? முதல்ல உன் வீட்டில கலாச்சாரத்தை பாதுக்காக்க முயற்சித்தால் நல்லது . சும்மா நம்ம வாயை கிளறாதே

மோடிக்கு கமல் : தூய்மை இந்தியா பணியில் 90 லட்சம் பேரை இணைப்பேன் !

சென்னை: சுத்தமான இந்தியாவை உருவாக்க அழைத்து விடுத்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி கூறியுள்ளார். இந்த பணியில் 90 லட்சம் பேரை இணைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அக்டோபர் 2, காந்தி ஜெயந்தியன்று டெல்லியில் ‘சுத்தமான இந்தியா' திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி "சுத்தமான இந்தியாவை உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். மிருதுளா சின்காஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம்தேவ், கமல்ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோருக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்கும் பணியில் இணைய நான் அழைப்பு விடுத்துள்ளேன். அவர்கள் மேலும், 9 பேருக்கு அழைப்பு விடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். சுத்தமான இந்தியாவை உருவாக்குவது என்பது இந்திய மக்களின் பொறுப்பு.

பழைய பன்னீர்செல்வமா உன்னைய பார்க்கணும்னு ஆசைப்பட்டேன் . ஞான் ஆசைபட்டமாதிரியே வந்திருக்கே ?


பன்னீர்செல்வத்துக்கு தினமணி வைத்தி கடும் சவால் ? ஜெயா விசுவாசம் ! நீயா நானா ?

வைத்தி - ஜெயா ஒரு குற்றவாளி குற்றம் செய்து பதவி இழந்து ஒரு அடிமை மூலம் ஆட்சி நடத்தலாம் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் எழுதுகிறார் என்றால் அந்த நாட்டில் ஜனநாயகம் இருக்குமா, பாசிசம் பூக்குமா?
ம்மா’வின் அடிமைகள் அமைச்சர்கள் என்ற பெயரில் இடுப்பு வளைந்து, தலை தாழ்ந்து, கண்கள் பனிக்க, இதயம் துடிக்க ஜெயலலிதாவின் வீட்டு வாயிலில், கோட்டையின் முகப்பில், விமான நிலைய ஓடுகளத்தில் தவித்திருப்பது உலகப் பிரசித்தம். அப்பேற்பட்ட அடிமைகளில் ஏக், தோ, தீன் என்ற எண் படி பேதம் இல்லை.
அடிமைத்தனம் ஒன்றென்றாலும் அமைச்சர்கள் என்று வரும் போது தர வரிசை இருந்தாக வேண்டும். இந்த மரபு இல்லையென்றால் ஓபியோ இல்லை, சொர்ணாக்கா வளர்மதியோ அனைவரும் முடுக்காமலே படியும் விளையாட்டு பொம்மைகள்தான். அதிலும் அடிமைத்தனம் எனும் பாட்டரி சார்ஜர் காலியாகாமல் நீண்டகாலம் ஓடுபவர் ஓ. பன்னீர் செல்வம்.
சொத்துக் குவிப்பு வழக்கின் நெடிய பயணத்தில் சசிகலா நடராஜன் ஏதும் சதி செய்து கட்சியை உடைத்து ஆட்சியை கைப்பற்றி விடுவாரா எனும் பயம் ஜெவுக்கு எப்போதும் உண்டு. மன்னார்குடி கும்பலின் மீது வழக்கு போட்டு அடக்கி வைத்த போது வேறு வழியின்றி ஓ. பன்னீர் செல்வம் நம்பிக்கை வாலாட்டுவதில் நம்பகமானவராக ஏற்கப்பட்டார்.

ஜீவா ! இயக்குனர் சுசீந்திரனுக்கு நிச்சயம் பெருமை சேர்க்கும் படம் !

கிரிக்கெட்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உற்சாகமடையாத ஒருவர் இருக்க முடியுமா என்ன? அதையே தனது கனவாக, தன் லட்சியமாக நினைத்து அதற்காக உழைக்கும் ஒரு இளைஞனின் போராட்டமே ‘ஜீவா’ என்கிற திரைப்படம். சுகங்களும் வலிகளும் நிறைந்ததே வாழ்க்கை. தான் நினைத்த லட்சியத்தை அடைய தன் வாழ்வின் அத்தனை சுகங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கிரிக்கெட்டை தன் மூச்சாக நினைத்து பயணிக்கிறான் ஜீவா. அவன் கனவில் கல்வீசியவர்கள் யார்? அவனுக்கு நம்பிக்கையின் வாசல் திறக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘ஜீவா’ என்கிற திரைப்படம். 

பிஹாரில் அமைச்சரை உயிருடன் எரிக்க முயற்சி: வன்முறையில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு, 6 பேர் கைது

வன்முறை கும்பல் தீவைத்ததில் கொழுந்துவிட்டு எரியும் அமைச்சரின் அரசு கார். | உள்படம்: வினய் பிஹாரி பிஹாரில் நவராத்திரி விழாவில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, ஒரு கும்பல், விழாவில் பங்கேற்ற அமைச்சரை உயிருடன் கொளுத்த முயன்றது. இந்த அதிர்ச்சிகர சம்பவம், பாட்னாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள சசாராம் நகரில் புகழ்பெற்ற தாராச்சண்டி கோயில் வளாகத்தில் நடந்தது.
இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை மாலை கலாச்சார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் மாநில கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் வினய் பிஹாரி பங்கேற்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.கே.ஜா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தன் குமார் குஷ்வாகா உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அமைச்சர் வினய் பிஹாரி, நாட்டுப்புற இசைக் கலைஞர் என்பதால், சில பாடல்கள் பாடி விழாவைத் தொடங்கி வைத்தார்.

ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது ! சீனாவில் இருந்து சுதந்திரம் வேண்டி ......

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஹாங்காங்: தெற்கு ஆசிய பகுதியில் உள்ள ஹாங்காங் நகரம் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் காலனி ஆதிக்கத்தின் கீழ்  இருந்தது. கடந்த 1997ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது சீன அரசால் நியமிக்கப்பட்ட லெங் சுன் யிங், ஹாங்காங் நகரின்  தலைமை நிர்வாகியாக உள்ளார். சீனா சமீபத்தில் ஹாங்காங் நகர தேர்தல் முறைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. மேலும் 2017ல் நடக்கும்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சீன அரசு நியமிக்கும் குழுதான் முடிவு செய்யும் என்றும் அறிவித்தது. இதற்கு ஹாங்காங்கில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தங்களுக்கு ஜனநாயக அடிப்படையில் முழு சுதந்திரம் வேண்டும். தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடக்க வேண்டும் என்று கோரி மக்கள் போராட்டத்தை துவக்கி உள்ளனர். பெரும்பான்மையான மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

தினமலரின் திமுக பற்றிய கவலை : தீர்ப்புக்கு கருத்து சொல்ல அச்சம்: வீரியம் இழக்கிறதா தி.மு.க.,?

ஜெயலலிதாவுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்னு அனுதாப அரசியல், இல்லைன்னா அராஜக அரசியல்.. இது ரெண்டுக்குமே அவர் யூஸ் பண்ணிக்கிறது அவர் கட்சி அப்பாவி, அடிமைத்தன சொம்பனுங்களை தான். நல்லா உசுப்பேத்தி உசுப்பேத்தி அவனுங்களை புண்ணாக்கி விட்டுடுவாங்க மம்மிஜி. ஜெயிலுக்கு போனது ஊழல் பண்ணி கொள்ளை அடிச்சி சொத்து சேர்த்த குத்தத்துக்காக.. ஆனா அவங்க சொமபனுங்க என்னமோ மம்மிஜி 'மக்களுக்காக போராட்டம் பண்ணி' ஜெயிலுக்கு போயிட்டா மாதிரி கதறிக்கிட்டு இருக்கானுங்க. அந்தளவுக்கு அவனுங்க மூளையை மம்மிஜி மழுங்க வைச்சிருக்காங்க. இதையெல்லாம் தெரிஞ்சி தான், ஜெயலலிதாவோட அனுதாபத்துக்கோ, அராஜகத்துக்கோ இடம் கொடுத்திட கூடாதுன்னு திமுகவும் அதன் தலைவர்களும் அமைதியா இருக்காங்க. தவிர எப்ப பேசணும், எங்க பேசணும்னு தெரியாதா கருணாநிதிக்கு? இதையெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு புத்தி அதிமுக அடிமை சொம்பனுங்களுக்கு இருக்கோ இல்லையோ, ஆனா மம்மிஜிக்கு நல்லாவே புரியும்..

 தினமலர்.: சென்னை: ஜெயலலிதா மீது போடப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., தன் தரப்பு கருத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது, வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக, வழக்கு போடப்பட்டு, அவருக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. வழக்கை முதன் முதலில் தாக்கல் செய்தது, பா.ஜ.,வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி. என்றாலும், வழக்கை அப்போதைய தி.மு.க., அரசுதான் எடுத்து நடத்தியது.

ஜெயலலிதா சாதாரண செல்லில்தான் உள்ளார் , சிறையில் வழங்கப்படும் உணவையே உண்கிறார். சிறப்பு வசதி கிடையாது !

பெங்களூரு: ''சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சாதாரண 'செல்'லிலேயே உள்ளார். சொந்த உடையை அணிகிறார். டாக்டர்கள் ஆலோசனைப்படி தினமும் மூன்று வேளை ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது,'' என, கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயசிம்ஹா கூறினார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், கடந்த, 27ம் தேதி மாலை, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவரது ஜாமின் மனு, நிலுவையிலுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து, ஜெயலலிதா சிலரை சந்தித்தார்என்றும், வெளி உணவை உட்கொள்கிறார் என்றும், சிறையின் சீருடையை (வெள்ளை சீருடை) அணிகிறார் என்றும், தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக, பலதரப்பட்ட செய்திகள் வெளியானது.  இது ஜெவிற்கு மனதளவிலும், உடல் நல விஷயத்திலும் பக்குவபடுத்தி கொள்ள சரியான நேரம்....தீவிர அரசியலிருந்து சிறிது ஓய்வெடுப்பது அவருக்கு mentally ஒரு break கை தரும்...இதனால் முன்பை விட துல்லியமாக சிந்தித்து செயல்பட எதுவாக இருக்கும்...உணவு விஷயத்தில் ஜெயில் உணவு சத்து மிக்கது அதனால் அதை சாப்பிடுவதே அவரது உடல் நலத்திற்கு நல்லது......

வியாழன், 2 அக்டோபர், 2014

1995, ஏப்ரல் 1... சுப்பிரமணியம் சுவாமி தொடக்கி வைத்த சொத்துகுவிப்பு வழக்கு ! 27 செப்டெம்பர் 2014 வரை ,,,

17 ஆண்டுகள்... அதிர்வலைகள்!
ஜோ.ஸ்டாலின்
17 ஆண்டுகளைத் தாண்டியும் தடதடத்துக்கொண்டிருந்த ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அதிரடியாக முடித்துவைத்துவிட்டார். வழக்கு கடந்துவந்த 17 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
1. முட்டாள்கள் தின காமெடி!
1995, ஏப்ரல் 1...
அப்போதைய, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ஒருசில பத்திரிகையாளர்களை சென்னையில் தனது அலுவலகத்துக்கு வரவழைத்திருந்தார். சுவாமியின் வழக்கமான அரசியல் செய்தியாக இருக்கும் எனச் சென்றவர்களுக்குக் காத்திருந்தது, இந்தியாவுக்கான ஸ்கூப் நியூஸ்!  ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீது வழக்குத் தொடர, தமிழக ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்துவிட்டார்'' என்ற பகீர் தகவலை சர்வசாதாரணமாகச் சொன்னார் சுவாமி. செய்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும், சுவாமி ஏதேனும் காமெடி செய்கிறாரா என அந்தப் பத்திரிகையாளர்களுக்குச் சந்தேகம். 'இன்று முட்டாள்கள் தினம். அதனால் சுவாமி நம்மை ஏமாற்றுகிறார்’ என்று ஒரு நிருபர் கமென்ட் அடிக்க, ஆளுநர் சென்னாரெட்டி கையெழுத்திட்ட அனுமதிக் கடிதத்தின் நகலை அனைவருக்கும் வழங்கினார் சுவாமி.  சுவாமியை இனி ஜோக்கர் என்று யாரும் சொல்லமுடியாது

மதுரையில் காதல் திருமணம் ! பெண் கவுரவக் கொலை ! பெற்றோரே ஜாதிக்காக மகளை கொலைசெய்த கொடுமை

மதுரையில் பயங்கரம்! காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீலிப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 19) என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

பொள்ளாச்சி மகாலிங்கம் மரணம் ! வள்ளலார் விழாவில் பேசிக்கொண்டு இருக்கையில் மாரடைப்பு !

சென்னையில் நடந்த விழா ஒன்றில் வள்ளலார் குறித்து சொற்பொழிவாற்றியபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பிரபல தொழிலதிபரும், சக்தி குழுமத் தலைவருமான பொள்ளாச்சி நா. மகாலிங்கம் மரணமடைந்தார். மேடையில் மயங்கிச் சரிந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் இன்று மாலை ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் வள்ளலார் குறித்து உரையாற்றினார். பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கிச் சரிந்து விட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே கடுமையான மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 91 வயதான பொள்ளாச்சி நா. மகாலிங்கம், கல்விச் சேவையிலும், ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கியவர். சக்தி குழுமத்தின் தலைவராக இருந்தவர். காந்தியவாதியாகவும், ராமலிங்க அடிகளார், வள்ளளலார் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டவர்.
tamil.oneindia.in

நமது எம்ஜிஆர் ! போலி சந்தா ரசீதுகள் – ஜெ.வளர்ப்பு மகன் திருமணச் செலவு: விவரிக்கும் குன்ஹா தீர்ப்பு

பெங்களூர்: சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பில் ரூ.14 கோடிக்கு கணக்கு காட்டிய ‘நமது எம்ஜிஆர்' பத்திரிகையின் சந்தா தொகை ரசீதுகள் போலியானவை என்று தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தார். அதைத் தொடர்ந்து அவர் அளித்துள்ள தீர்ப்பில், 1991-96ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் ரூ.66.65 கோடி அளவுக்கு எப்படி எல்லாம் முறைகேடாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டது. அதில் சில குறிப்பிட்ட அளவுக்கான செலவு கணக்கை அவர்கள் எப்படி தவறாகவும், போலியாகவும் தயாரித்து காட்டியிருந்தார்கள் என்பதையும் நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் தெளிவாக கூறியுள்ளார்.

ஜெயா சசியின் கரன்சி மூட்டைகளை வங்கிகளில் டெபொசிட் செய்தேன் ! அம்பலப்படுத்திய ஜெயராமன்.. !

டெல்லி: தந்தை ஜெயராமால் எந்த அளவுக்கு ஜெயலலிதா சந்தோஷமடைந்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஜெயராமன் என்ற பெயர் கொண்ட ஒருவரால்தான் இன்று பரப்பன அக்ரஹாரா சிறையில் வாடும் நிலைக்கு அவர் போய் விட்டார். போயஸ் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர்தான் இந்த ஜெயராமன். இவர் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்தான் சொத்துக் குவிப்புவழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்தது. ஜெயராமனும், போயஸ் தோட்டத்தின் இன்னொரு ஊழியரான ராம் விஜயன் என்பவரும்தான் ஜெயலலிதாவுக்கும், சசிகலா உள்ளிட்டோருக்கும் எதிரான வலுவான ஆதாரமாக மாறிப் போய் விட்டார்கள். போயஸ் தோட்டத்திலிருந்து போன 'பண மூட்டைகள்'.. அம்பலப்படுத்திய ஜெயராமன்.. ! போயஸ் கார்டன் ஜெயராமன் ஜெயலலிதா முதல் முறையாக முதல்வர் பதவியில் இருந்தபோது போயஸ் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர் இந்த ஜெயராமன். அதேபோல பணியாற்றி வந்த இன்னொரு ஊழியர் ராம் விஜயன். 'எடுப்பு' வேலைகள் ஜெயலலிதா வீட்டில் சசிகலா உள்ளிட்டோர் ஏவிய வேலைகளைச் செய்து வந்துள்ளனர் இருவரும். ஏவிய வேலைகள் என்றால் சாதாரணமான வேலை இல்லை பாஸ்.. பண மூட்டைகளைக் கையாளுகிற அதி பயங்கரமான வேலை. வங்கிகளுக்குப் போன பண மூட்டைகள்

ஜெ.வை வெளியே விட்டால் மீண்டும் பிடிக்க முடியாது.! அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு..

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் டிவிஏசி எனப்படும் ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிமுக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாம். ஜாமீனில் விடக் கூடாது என்று கூறியதோடு நில்லாமல், ஜெயலலிதா பிரபலமான அரசியல் தலைவர். அவரை இப்போது வெளியே விட்டு விட்டால் மீண்டும் கைது செய்ய முடியாது. அவர் சாட்சிகளைக் கலைக்க முயலலாம் என்றும் டிவிஏசி கூறியுள்ளது அதிமுக தரப்பை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான தமிழக அரசின் டிவிஏசி இப்படி ஒரு கடுமையான அபிடவிட்டைத் தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பும் கூடியுள்ளது. இந்த அபிடவிட்டானது ஜெயலலிதாவுக்கு எதிராக பாதகமான நிலையை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.  இதுவுல எதினாய்ச்ச்சும் உள்குத்து இருக்குமோ ? கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கவேணும்  மாபியாகூட்டத்தில இதெல்லாம் சகஜமுங்கோ

CM பன்னீர்செல்வம் : நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் ! சாதிச்சுட்டீங்க முதல்வரே !

வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால் அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று தர்மம் நிலைநாட்டப்படும் என்று ஆயுதபூஜை வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- நவராத்திரி> வாழ்விற்கு வளம் சேர்க்கக்கூடிய அறிவை அளிக்கும் கலைமகளாகவும், செல்வத்தைத் தரும் திருமகளாகவும், துணிவைத் தரும் மலைமகளாகவும் விளங்கும் அன்னையை, பெண்மையை போற்றி வணங்கும் விழா நவராத்திரி திருவிழா. மக்களின் துன்பம் நீக்க எண்ணிய அன்னை 9 நாட்கள் மகிஷாசுரன் என்ற அரக்கனுடன் போரிட்டு அவனை வதம் செய்த நாள் விஜயதசமி திருநாள்.  வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது என்று ஒரு சுயமுன்னேற்ற  புத்தகம் எழுதக்கூடிய தகுதி தற்போது தமிழகத்திலேயே உங்களுக்கு மட்டும்தான்  இருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம்அவர்களே !

தமிழகத்தை பாலைவனமாக்கும் சீமை கருவேலை மரங்கள் ! அதிக நைட்ரஜன் மற்றும் கார்பன்டை ஒக்சைட்டை வெளியிட்டு ....

வேலியே பயிரை மேயுது’ என்பார்களே அதற்கு மிகச்சரியான உதாரணம் சீமைகருவேல். ஊழல், தீவிரவாதம், எதிரி நாட்டு படையெடுப்பு மட்டுமே ஒரு நாட்டுக்கு மிகவும் ஆபத்தான விஷயம் என்ற கருத்து உங்களுக்கு இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். சீமைகருவேல் மரங்கள் போதும் எவ்வளவு வளமான நாட்டையும் பசுமை பாலைவனமாக்கி விடும். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு தமிழ்நாடு. இதன் ஆபத்தை உணர்ந்த உலகநாடுகள், தங்கள் பகுதிக்குள் எதிரிகளை நுழைய விடாமல் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறார்களோ அதே உணர்வில்தான் சீமைகருவேலையும் பார்க்கிறார்கள். அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகள் இதை நச்சு தாவரமாக அறிவித்திருக்கின்றன. இவ்வளவு ஏன் நமது அண்டை மாநிலமான கேரளாவில் சீமை கருவேல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருந்த மரங்களை முற்றிலுமாக அழித்து, புதிதாக வளராத வகையில் பாதுகாத்து வருகிறார்கள். அப்படியென்னதான் இருக்கிறது இந்த தாவரத்தில்..?
பயிருக்கு வேலியாகவும், விறகு பயன்பாட்டுக்காகவும் 1950 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன சீமைகருவேல் விதைகள். தமிழகத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் காமராஜர், அவரது ஆட்சி காலத்தில் தொலைநோக்கு பார்வையில்லாமல் கொண்டுவரப்பட்டது தான் சீமைகருவேல் என்பது கசப்பான உண்மை.

ஜெயா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீ ரங்கம் செண்டிமெண்ட் தான் காரணமாம் ! தஞ்சை பெரிய கோவில் போன்ற சமாசாரம் ?

ஜெயலலிதா மீதான பெங்களூரு சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு தமிழகத்தில் பெரும்பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டது. ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள், கடையடைப்புகள், உண்ணாவிரதம், மவுன ஊர்வலம் என போராட்டங்கள் அடுத்தடுத்து அதிகரித்துக் கொண்டுதான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் ஜெயலலிதா முதல்வர் பதவியிழந்ததற்கும், சிறையில் அடைக்கப்பட்டதற்கும்  திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதி சென்டிமெண்ட் தான் காரணம் என்கிற 'டாக்' பரவலாக எழுந்துள்ளது. 
இது குறித்து விசாரித்தோம்.  " ஸ்ரீரங்கம் தொகுதியில் ஒருகாலத்தில் காங்கிரஸ் அதிகமுறை வெற்றி பெற்று இருந்தாலும், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை ஆரம்பித்தபிறகு இன்றுவரை ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
இடையில் ஒருமுறை ஜனதாதளமும், ஒரு முறை தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஸ்ரீரங்கத்தில் அதிக செல்வாக்கு உள்ள கட்சி என்றால் அ.தி.மு.க.தான்.
ஆனால் இந்த தொகுதியின் சென்டிமென்ட்  என்னவென்றால் ஒருமுறை இந்த தொகுதியில்  நின்று வெற்றி பெற்றவர்களின் அரசியல் வாழ்வு, அதன்பிறகு அவ்வளவு பிரகாசமானதாக இல்லை என்பதுதான் வேதனை.

சுப்பிரமணியம் சுவாமி : 356-யைப் பயன்படுத்த வேண்டிவரும் ! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இப்படியே சீர்குலைந்தால் அரசை டிஸ்மிஸ் செய்யும் நிலைமை .....

ஜெயலலிதாவுக்கு உதவப் போறீங்களான்னு மோடிகிட்ட கேட்டேன்!'
சுப்பிரமணியன் சுவாமி சொல்லும் சீக்ரெட்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் கதாநாயகன் சுப்பிரமணியன் சுவாமி. இவர்தான் முதலில் புகார் தந்தவர். ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 27-ம் தேதி சுவாமியும் பெங்களூரில்தான் இருந்தார். அவருடன் தொடர்புகொண்டு பேசினோம்.

''தீர்ப்பு தினத்தன்று எதற்காக பெங்களூருக்கு வந்தீர்கள்?''
''ஏதாவது அவசர சூழ்நிலை ஏற்பட்டு புகார்தாரர் என்ற முறையில் திடீரென்று என்னைச் சிறப்பு கோர்ட் ஜட்ஜ் குன்ஹா அழைத்தால்...? இதற்காகவே, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் 'இந்தியன் ஐடென்டி' என்ற தலைப்பில் பேச ஏற்பாடு செய்தேன். மதியம் ஒரு மணி அளவில் ஏர்போர்ட்டில் வந்து இறங்கி, காரில் போகும்போது, 'ஜெயலலிதா குற்றவாளி’ன்னு தகவல் சொன்னாங்க. அப்பத்தான் ஜட்ஜ் மீதிருந்த மதிப்பு ஒரு படி உயர்ந்தது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நான் இத்தனை வருடங்களாகக் கண்காணித்து வந்தேன். ஏதேதோ காரணம் சொல்லி இழுத்தடிச்சாங்க. நிறைய பொய் சொல்லி கோர்ட்டுல மாட்டிக்கிட்டாங்க. எழுதி வெச்சுக்கங்க. ஜெயலலிதா மாதிரியே ஊழல் பண்ணிய குற்றத்துக்காக, சோனியாவும் ராகுலும் நிச்சயமா ஜெயிலுக்குப் போவாங்க. நான் போக வைப்பேன்.''
''தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தீர்களா?''
''ஒரு ரூபாய்தான் அரசாங்க சம்பளம் வாங்கினார் ஜெயலலிதா. ஆனா, 66 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துச் சேர்த்தாங்க. எங்கேயிருந்து பணம் வந்துச்சுன்னா... நாலு வருஷமா அவங்களோட ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்துல கிடைச்ச வருமானம்னு சொன்னாங்க. ஒரு ஹெக்டேர் நிலத்துல திராட்சை உற்பத்தி அவ்வளவு வருமா? அப்படி உலக அளவுல சாதனை பண்ணிய விவசாயி ஃபிரான்ஸ்ல இருக்கார். அவர் எவ்வளவு உற்பத்தி செஞ்சாரோ, அதைவிட 10 மடங்கு அதிகமா ஜெயலலிதா கணக்குக் காட்டினாங்க. அதுதான் பெரிய காமெடியே. இதை நான் ஆரம்பத்திலேயே கோர்ட்ல சொன்னேன். அதன்பிறகுதான், கோர்ட் நடவடிக்கைகள் துரிதமாச்சு.

கலைஞரை வெளியே வரவேண்டாம் என்று தேசியபாதுகாப்பு படை அதிகாரி வேண்டுகோள் ! NSG ஐ பேசாம கலைத்து விடலாம் வரிப்பணம் மிச்சமாகும் !

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், 'எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி (என்.எஸ்.ஜி.,) ஆலோசனை கூறியுள்ளார்.சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதியை நேற்று முன்தினம் மதியம், என்.எஸ்.ஜி., படையின் எஸ்.பி., சந்தித்து, 'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை சீரடையும் வரை, நீங்கள் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்; வெளியே வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ரவுடிகளை அடக்க துப்பில்லை   ..தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு இந்த லட்சணத்தில் இருந்தால் சாமான்யன் கூட தெருவில் நடமாட முடியாது,  மத்திய உள்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் கவலை தரும் விஷயம்

புதன், 1 அக்டோபர், 2014

நான் பொன்னொன்று கண்டேன்‘ பட ஹீரோயின் அனாமிகா. !

சென்னை: தேனி பஸ் நிலையத்தில் சுற்றி வந்தார் மிஸ் போபால்.‘நான் பொன்னொன்று கண்டேன்‘ பட ஹீரோயின் அனாமிகா. போபால் மிஸ் அழகி பட்டமும், மிஸ் மத்திய பிரதேசம் பட்டங்கள் வென்றவர். அவர் கூறியதாவது:இனிமையான தமிழ் பாடல் ஒன்றை நினைவுபடுத்தும் தலைப்பாக இதன் டைட்டில் அமைந்துள்ளது என்னை கவர்ந்தது. இப்படத்துக்காக தேனி, கம்பம் பகுதி பஸ் நிலையங்களில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்றேன். அப்போது மக்களின் யதார்த்தமான வாழ்க்கையை அறிந்து கொண்டேன். பணக்கார வீட்டு பெண்ணான என்னை பஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் ஹீரோ அஸ்வின் ராஜ் காதலிக்கிறார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் ? மீண்டும் சமுக விரோத சக்திகளுக்கு ஆக்சிஜன் ?

ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி, சசிகலா
கண்டன அறிக்கை :கிரிமினல் ஜெயலலிதா கும்பலை வெளியே விடுவது, இந்த தீர்ப்பை ஒன்றும் இல்லாமல் செய்யவும், மீண்டும் முதல்வராக தமிழகத்தை கொள்ளையடிக்கவும், அ.தி.மு.க காலிகள் வெறியாட்டம் போடவுமே வழிசெய்யும்.
:ஜெயலலிதா வகையறாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.
1991-96 ல் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது கர்நாடக சிறப்பு நீதிமன்றம்.
ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி, சசிகலா
இந்த தண்டனை கூட சாதாரணமாக கிடைத்து விடவில்லை. உழைத்து வாழும் சாமானிய மக்கள் ரயிலில் வெள்ளரிக்காய் விற்றால் சட்டவிரோதமான செயல் என்று கூறி விசாரணையின்றி உடனே சிறை. இதே ஜெயலலிதா அரசால் எவ்வித குற்றமும், விசாரணையும் இன்றி அரசியல் பழிவாங்குதலுக்காக எத்தனைபேர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நாடே பார்க்க பகிரங்கமாக நடந்த பகற்கொள்ளைக்கு 18 ஆண்டுகள் கழித்த பிறகே தீர்ப்பும், தண்டனையும். இந்த காலங்களில் மீண்டும் 2 முறை முதல்வராகி பல ஆயிரம் கோடிக்கு சொத்துக்களை குவித்துள்ளார்.

அம்மாவுக்கு வெயிட்டா எதுனா வாங்கிக் கொடுக்காம வுடமாட்டாரு ராம் ஜெத்மலானி ! அவுரு வாய்கொழுப்பு அப்படி ?

jethmalani-vandu-jayaவாய்தா ராணி என்பது 18 வருசம் அம்மா கஷ்டப்பட்டு உழச்சி வாங்கின பட்டம். எப்பிடியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சி கலர் கலரா காரணம் சொல்லி வாய்தா வாங்கினாங்க!
தமிழ் மொழிபெயர்ப்பு வேணும், செராக்ஸ் காப்பி சரியில்லை, பில்டர் காப்பி சரியில்லை, வயிறு சரியில்லை..! இவுங்க அடிச்ச அடியில நீதிபதியெல்லாம் தெனாய்ஞ்சில்ல போனாய்ங்க. வாய்தா சப்ஜெக்டை வச்சி மட்டுமே நூறு பேர் பி.எச்டி பண்ணலாமே.
அப்பேர்ப்பட்ட வாய்தா ராணிக்கு டக்குன்னு பெயில் கொடுத்துட்டா மரியாதையா இருக்குமா? ஆனா ரெண்டு வாய்தாவுக்குள்ளேயே ர.ர க்களுக்கு மூச்சு வாங்குது. 7-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வச்சவுடனே, இது அநியாயம், அக்கிரமம், அநீதின்னு கத்துனாங்களாம் தமிழ்நாட்டுலேர்ந்து போன அம்மா வக்கீலுங்க. ஜெத்மலானி முந்தாநாள் லண்டன்லேர்ந்து ஒரு லா பாயின்டை எடுத்து விட்டாரு. தண்டனை பத்து வருசத்துக்கு உள்ளே இருந்தால், அரசு தரப்பு கருத்தை கேட்காமலேயே பெயில் கொடுக்கலாம்னு சி ஆர்பிசி யில இருக்குதாம். அரசு தரப்பை விசாரிக்காமலேயே குற்றவாளியை விடுதலை செய்யலாம்னு கூட சிஆர்பிசி யில எங்கனா இருக்கும். பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் மனுநீதியில இல்லாத பரிகாரமெல்லாம் சிஆர்பிசி யில இருந்தாகணுமே!

டாக்டர் கிருஷ்ணசாமி :அதிமுகவினர் நீதிபதிகளை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்

அஇஅதிமுகவினர் நீதிபதிகளை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற தலைப்பில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி 01.10.2014 புதன்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்து குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அந்த வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக 6 நீதிமன்றங்கள் 90 நீதிபதிகள் முன்பாக விசாரணை நடைபெற்று இறுதியாக பெங்களுர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பும் கூறப்பட்டுவிட்டது.சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பும் கூறியுள்ளார். இதேபோன்று அவரது சகாக்களான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.;ஆனால், இந்த தீர்ப்பை மறியல், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் மேற்கொள்ளப்படும் காவல்துறை நடவடிக்கையைப் போன்று சித்தரித்து அஇஅதிமுகவினர் கடந்த 4 தினங்களாக நடத்திவரும் போராட்டங்கள் அனைத்து ஜனநாயக மாண்புகளையும், தவிடு பொடியாக்குபவையாக உள்ளன.

ஒரு ரூபாய் கூலியில் அம்மாவின் மலையளவு சொத்துக்கள் ! கொள்ளையர்களை வணங்கும் குருட்டு கலாசாரம் !

ஜெயா - சசி
ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல்!தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம். அரசு வெளியிட்ட சொத்து பட்டியலே இவ்வளவு என்றால் ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

சொத்துக் குவிப்பு – ஊழல் குற்றவாளிகள் சசிகலா, ஜெயலலிதா
போயஸ் தோட்டம், சென்னை
காதர் நவாஸ்கான் சாலைகதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்

காதர் நவாஸ்கான் சாலை
அண்ணா சாலை, சென்னை
  1. 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14
  2. எண் 602 இல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 இல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.
காதர் நவாஸ்கான் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை
  1. ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.
  2. கதவிலக்கம் 14இல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5இல் 523 சதுர அடி கட்டடம்.

Dr.ராமதாஸ் : ஜெயலலிதா கொள்ளை அடித்தது மக்கள் வரிப்பனத்தைதான் ! தமிழக அரசே திரையுலகுக்கு அழுத்தம் கொடுத்து போராட வைக்கிறது !

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் ஏற்க வேண்டும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை.
மாறாக, ஊழல் செய்ததற்காகத்தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக தேர்தல் அதிகாரி 144 பிரவீன் குமார் மாற்றம் ! தேர்தல் ஆணையம் ஒப்புதல் !

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா 2010–ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து பிரவீன்குமார் தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அதிமுகவின் வெற்றிக்கு சாதகமாக மிகவும் பாரபட்சமாக செயல்பட்டு வந்த பிரவீன்குமார் 2012–ம் ஆண்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டிருந்தார். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, பிரவீன்குமார் மீது சில அரசியல் கட்சிகள் புகார் கூறின. இதையடுத்து தேர்தல் முடிந்ததும் தன்னை பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரவீன் குமார் மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து பிரவீன் குமாரை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அவர் மாற்றப்படுகிறார். ம்ம்ம் ஒருவழி பண்ணிட்ட உப்பு தின்னவன் தண்ணி  குடிக்கிறகாலமும்  வரும், ஒரு தேர்தல் அதிகாரி எந்த அளவு  மோசமாக  நடக்கலாம்னு படம் காட்டி......

ஜெயலலிதா ! மீடியாக்களின் புண்ணியத்தில் தெய்வதாய் ஆக்கப்பட்ட ஒரு வாய்தா / ஊழல் ராணி!

J
சட்டத்துக்கு விரோதமான முறையில் சொத்துகள் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ள பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்திருக்கிறது.   இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலா, வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் அளிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் முதல்வர் பதவியைப் பறித்து அவரைச் சிறையிலும் தள்ளியுள்ள இந்தத் தீர்ப்பு வழக்கத்துக்கு மாறான சில எதிர்வினைகளையும் அசாதாரணமான ஒரு சூழலையும் இங்கே ஏற்படுத்தியிருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது?
1) நிலப்பிரபுத்துவ மனோபாவம்
அஇஅதிமுக மீது பெரிதளவு பற்றோ ஆர்வமோ இல்லாத   திரளான மக்களும்கூட (குறிப்பாக, பெண்கள்) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜெயலலிதா இழைத்த குற்றங்கள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டபிறகும்   அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு அவரைக் கொண்டாடாடும் மனோபாவமும் அவர் தண்டிக்கப்பட்டவுடன் உடைந்து அழும் மனநிலையும் நீடிப்பதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்?
நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டம் நம் சமூகத்தில் வலுவாக வேறூன்றியிருப்பதன் விளைவே இது.

ஜெ., அவசர ஜாமீன் மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு : மீண்டும் ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் ஜாமீன் மற்றும் மேல்முறையீட்டு மனு மீது நேற்று  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.  வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார்இதையடுத்து ஜெயலலிதாவின் சார்பில், நாளையே ( இன்று) விசாரணை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதன்படி இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  ஜெயலலிதா உட்பட 4 பேரின் மனுக்களுக்கும் இதே நிலைதான் இருந்ததுஇன்று காலை 10.30 மணிக்கு இந்த மனு விசாரணை வந்தது.  இரு தரப்பு வழக்கறிஞர்களும் விசாரணைக்கு தயாராக இருந்தனர்.  ஆனால்,   இந்த மனுவை நீதிபதி விசாரணை செய்ய மறுத்தார்.

ஜெயாவின் அண்ணன் தங்கையோ வறுமையில் ! ஜெயாவோ சொத்து குவிப்பில் !


பெங்களூரு: "எங்களை, ஜெயலலிதா புறக்கணித்தாலும், அவரை சிறையில் அடைத்தது அதிர்ச்சியாக இருக்கிறது,” என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகா, ஸ்ரீரங்கராஜபுராவில் வசித்து வருபவர் வாசுதேவன், 78. இவர், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவின் மகன். இவருடன் பிறந்தவர் ஷைலஜா. ஜெயலலிதாவின் தாயார் சந்தியா. இவர் ஜெயராமின் இரண்டாவது மனைவி. ஜெயலலிதா உடன் பிறந்தவர் ஜெயகுமார். இவர்களில், ஷைலஜா பெங்களூரில் வசிக்கிறார்.
தன் நினைவுகள் பற்றி வாசுதேவன் கூறியதாவது:ஜெயகுமார் பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. எங்களுடைய தாத்தா ரங்காச்சார், மைசூரு அரண்மனையில், நான்காம் கிருஷ்ணராஜ உடையார் மன்னராக இருந்த போது, அரண்மனை வைத்தியராக இருந்துள்ளதாக தெரிவித்தனர்.ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், கணக்கில் காட்டப்பட்ட நகைகளில், சில நகைகள், என் தாயார் திருமணத்தின்போது, கிருஷ்ணராஜ உடையார் அன்பளிப்பாக கொடுத்தது. நாங்கள், வறுமையில் வாடுவது அவருக்கு தெரியும்.நாங்கள், ஜெயலலிதாவின், உறவினர்கள் என்பது பத்திரிகை மூலம் வெளியில் தெரிந்தபோது, எங்கள் மீது, மானநஷ்ட வழக்கு ஒன்றை, சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் தொடர்ந்ததால், மேற்கொண்டு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.என் மகன் விபத்து ஒன்றில் இறந்ததையடுத்து, என் மனைவியும் இறந்து விட்டார். தற்போது, கிராம மக்கள் உதவியுடன் தனிமையில் வசிக்கிறேன். கர்நாடகா அரசு, மாதந்தோறும் அளிக்கும், 400 ரூபாய் பென்ஷனில் காலம் தள்ளி வருகிறேன்.  சொந்த அண்ணன் அவர்களுக்கு ஏதும் செய்யாமல் தத்து பிள்ளை உடன் பிறவா சகோதரி மற்றும் அவரின் அருவடிகள் எல்லாம் உங்களின் பலனை அனுபவித்ததை நினைத்தால் கொடுமையா இருக்கிறது...என்னதான் தாய் வேறு ஒருவராக இருப்பினும் அவரும் உங்கள் ரத்தத்தின் ரத்தம் தான்...உணர்வீராக  ஜெயாவுக்கு ஒரு சொந்த தஙகை இருக்கிறார் அவரின்  விபரங்களுக்கு  namathu.blogspot.com/2014/07/blog-post_150.html

அதிமுகவினரின் அராஜகம் மக்களின் பொறுமையை சோதித்து விட்டது !


சிதம்பரத்தில் நடந்த வன்முறையில் சேதமடைந்த அரசு பேருந்து| படம்:டி.சிங்காரவேலு.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து அதிமுகவினரின் சோகமும் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதமும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமல்லாது நடுநிலையாளர்களுக்கும் வருத் தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே சமயம் எந்தவித சோதனை யிலிருந்தும் மீளும் துணிச்சலும் ஆற்றலும் பெற்ற ஜெயலலிதா சிறையில் இயல்பாக இருக்கிறார். ஆனால், இங்குள்ள அவரது கட்சியினரோ நிதானம் தவறி நடந்து அவருக்கு பெருத்த ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தல்களிலும் பத்திரிகைப் பேட்டிகளிலும் இதைப் பொய் வழக்கு என்றும், சட்டம் தெரியாமல் நீதிபதி தீர்ப்பளித் தார் என்றும் கடுமையான வார்த்தை களைப் பயன்படுத்துகின்றனர்.
இது நீதித் துறையில் இருப்பவர் களை சினம் கொள்ளச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் கருது கின்றனர்.

இந்தியா இந்துஸ்தான் என்றால் அமெரிக்கா கிருஸ்துஸ்தான் ! மோடியின் RSS சுயரூபம் அமெரிக்காவில் அரங்கேற்றம்

மோடி! மோடி! என்று மகிமை உண்டாக்க அரும் பாடுபட்டு அமெரிக்காவை ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆட்டிவைக்கப் பார்த்தனர். குஜராத்தியர் நல்ல வியாபாரிகள். அனைத்துத் தந்திரங்களையும், மந்திரங் களையும் பயன்படுத்தினர். கூட்டத்தையும் சேர்த்தனர். அரசியல்வாதிகளையும் கொண்டுவந்து படம் காட்டினர்.
மோடி ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதிதானவர் அல்லர். 1990ஆம் ஆண்டுகளிலேயே அமெரிக்காவின் பல நகரங்களிலே பலருடன் தங்கியிருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வளர்த்தவர். நியூயார்க்கைத் தளமாகப் பயன் படுத்தி வாழ்ந்தவர்.
மோடி, தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை நன்கு வெளிப்படுத்தினார். பேச்சில் "பாரத்" "இந்துஸ்தான்"தான்  மிகுதி. "இந்தியா"வையேக் காணோம்.

சிறுவனை நாய் கூண்டுக்குள் அடைத்த தனியார் பள்ளியை மூட கேரள அரசு உத்தரவு

 திருவனந்தபுரத்தின் புறநகர் பகுதியான குடப்பனகுன்னு என்னுமிடத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுவன் ஒருவன் யு.கே.ஜி. படித்து வந்தான். கடந்த மாதம் 25–ந் தேதி அவன் வகுப்பு நேரத்தில் அருகில் இருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வகுப்பு ஆசிரியை அந்த சிறுவனை பள்ளிக் கூடத்தில் இருந்த நாய் கூண்டுக்குள் 3 மணி நேரம் அடைத்து வைத்தார். இதையறிந்த குழந்தைகள் நல ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகி சசிகலா கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாதத்தை வேரறுக்க தொலைநோக்குத் திட்டம்: இந்தியா - அமெரிக்கா வெளியீடு

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுக்கும். பேரழிவு ஆயுதங்கள் பரவலை இரு நாடுகளும் இணைந்து தடுக்கும்'' என்று இந்தியா-அமெரிக்கா சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபட்ச, நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வாஷிங்டனுக்கு மோடி செவ்வாய்க்கிழமை வந்தார். ஒபாமாவுடன் விருந்து நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பதற்கு முன்னதாக இந்தியா - அமெரிக்கா சார்பில் தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. 

ஜெ. மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம்

ஜெ., சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமனம் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு பிறப்பித்து உள்ளது.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில், பெங்களூர் தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி ரத்தினகலா முன்னிலையில் அந்த மனு விசாரணைக்கு வந்தது.

கஞ்சா வழக்கிலாவது கலைஞரையும் ஸ்டாலினையும் கைது செய்ய அதிமுக அரசு முழு முயற்சி !

தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல், கடைகளை அடித்து நொறுக்குதல், சிலைகளை உடைத்தல் என, பல்வேறு ரூபங்களில், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள, சென்னை கோபாலபுரத்திற்கு, அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் திரண்டு வந்து, வீட்டை நோக்கி கல் வீசினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், அங்கு தயாராக இருந்த தி.மு.க.,வினர், எதிர் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில், அ.தி.மு.க., தரப்பில் ஒருவருக்கு, மண்டையில் கடும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.  சு சாமியையும் கஞ்சா வழக்கு அல்லது பலாத்கார வழக்குன்னு எதையாவது போட்டு  கைது செய்ய முயற்சிக்க வேன்டியது தானே?அதுக்கு  துப்பில்லை ! அவர்  பார்ப்பான் வேற !

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

53 கோடியே 60 லட்சம் ரூபாய் முறைகேடாக சம்பாதிக்கப்பட்டது! கணக்குச் சொன்ன நீதிபதி குன்ஹா!


ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் 'ஆபரேட்டிவ் போர்ஷன்’ என்று சொல்லப்படும் தீர்ப்பின் சாராம்சத்தை நீதிபதி குன்ஹா இப்படித்தான் தொடங்கினார்... ''66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் 53 (53,60,49,954 ரூபாய்) கோடி ரூபாய் வருமானம் முறைகேடான வழிகளில் சம்பாதிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது.  இந்த வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர், பொது ஊழியராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. அவருடைய இந்தச் செயல் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (i)(e)-ன் படி தண்டனைக்குரிய குற்றம். முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர், இரண்டாவது (சசிகலா),  மூன்றாவது ( சுதாகரன்), நான்காவது (இளவரசி) குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு குற்றம் புரிந்துள்ளதும் நிரூபணமாகி உள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம், பிரிவு 120 (b)-ன் படி 'கூட்டுச்சதி (criminal conspiracy)’  செய்தல் குற்றமாகும்.
இந்த வழக்கில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளவர்கள், முதல் குற்றவாளி செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டம் 109-ன் படி 'குற்றத்துக்கு உடந்தை (aiding and abet)’  என்பதும் குற்றமாகிறது. எனவே, நான்கு பேரும் குற்றவாளிகள் என்று இந்த நீதிமன்றம் அறிவிக்கிறது.

பிரியாமணி காதல் வசப்பட்டுவிட்டார் ! விரைவில் அறிவிப்பார் !

சென்னை: பிரியாமணி தனது ரகசிய காதலனின் முதல் எழுத்தை வெளியிட்டார்.‘பருத்திவீரன், ‘மலைக்கோட்டை, ‘தோட்டா, ‘சாருலதா போன்ற படங்களில் நடித்திருப்பவர் பிரியாமணி. கடந்த 2 வருடமாக தமிழ் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். கன்னடம், மலையாள படங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன் என்று அவரிடம் கேட்டபோது,‘மனதுக்கு பிடித்த வேடம் வரவில்லை. அப்படியே வந்தாலும் எல்லாமே கிராமத்து பாணியிலான கதாபாத்திரமே வருகிறது. ஒரே சாயலில் நடிக்க விரும்பாததால் ஒதுங்கி இருக்கிறேன் என்றார். இதற்கிடையில் பிரியாமணி மலையாள நடிகர் பத்ம சூர்யாவை காதலிப்பதாக தகவல் வெளியானது. அதை பிரியாமணி மறுத்தார்.

ஜெயலலிதாவுக்கு நாளை ஜாமீன் கிடைக்கும் ?

ஜெயலலிதா ஜாமின், மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்க வேண்டும் என்று விடுமுறை கால நீதிபதிக்கு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.100 கோடி அபாராதம் அளித்தும் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜெயலலிதா சார்பாக கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமின் கோரியும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரியும் மேல்முறையீட்டு மனு அளிக்கப்பட்டது. தசரா பண்டிகையையொட்டி நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், இந்த மனுக்கள் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும், விடுமுறை கால நீதிபதி ரத்னகலா நாளை விசாரிப்பார் என்று கூறினார். நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா ?

தயாநிதி அழகிரி அதிரடி : திரையுலகினருக்கு அண்டா அண்டாவா பயம் மட்டும்தான் இருக்கு ! சுயமரியாதை இல்லை !

தமிழ் திரையுலகினருக்கு பயம் மட்டும்தான் அண்டா அண்டாவாக இருக்கிறது: தயாநிதி அழகிரி வாரணம் ஆயிரம்', 'மங்காத்தா' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.  இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து வருகிறார்கள். இதனைத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் கடுமையாக சாடியுள்ளார்.அவர்,  ‘’இன்று தமிழ் திரையுலகினர் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மேற்கொள்கிறார்களா? அல்லது நீதிமன்றத்தைக் கண்டித்து போராடுகிறார்களா?வரி விதிப்பு மற்றும் 'தலைவா', 'விஸ்வரூபம்' போன்ற படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் போராட்டம் மேற்கொள்வதற்கு முன் ஞாபகம் வைத்திருக்க வேண்டும். தமிழ் திரையுலகினருக்கு இந்த சிந்தனையில்லை. பயம் மட்டும் தான் அண்டா அண்டாவாக இருக்கிறது. ஹா ஹா ஹா’’என்று தயாநிதி  தெரிவித்துள்ளார். nakkheeran.in  அப்படி போடு கண்ணா போடு

அம்மா கிளிசரின் ! அழுதுவிடு இல்லையேல் பேருந்துகளைக் கொளுத்தி கடைகளை உடைத்து கல்லால் அடித்து அழ வைக்கப்படுவாய்!

ஜெயா - திரைத்துறைஅழு!
இல்லையேல்
அழ வேண்டி வரும்.
எதை நினைத்தாவது
எங்களோடு சேர்ந்து
அழுதுவிடு.
இல்லையேல்
பேருந்துகளைக் கொளுத்தி
கடைகளை உடைத்து
கல்லால் அடித்து
அழ வைக்கப்படுவாய்!
கண்ணையாவது கசக்கிவிடு…
இல்லையேல்
காவல் தெய்வம்
உன்னைக் கசக்கிவிடும்!