ராதா மனோகர் : திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை..
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால் அதில் எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும் இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு தொடங்க பட்டுவிட்டது .
இந்த ரசிகர் அமைப்புக்களின் தலைமை பொறுப்புக்களில் இருந்தவர்கள் எல்லாம் ஒரு அசல் கம்பனி இயக்குனர்கள் போல செயல்பட்டனர்.
அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் அல்ல சி இ ஒ போன்று ஆர் எம் வீரப்பனோ அல்லது முசிரிபுத்தனோ இருந்தார்கள்.
பலரும் எம்ஜியாரின் ரசிகர்கள்தான். அவர்களில் பலருக்கும் செலவு மட்டும்தான் இருக்கும் . வேறு ஒரு இலாபமும் இருக்காது .
ஆனால் ரசிகர் மன்றங்களின் பொறுப்புக்களின் இருப்பவர்களுக்கு அது பல சமயங்களிலும் அது ஒரு வருவாய் தரும் தொழிலாக இருந்திருக்கிறது.