சனி, 13 டிசம்பர், 2014

அய்யர்களின் எச்சில் இலைமீது உருண்டு புரள தடை! உச்ச நீதிமன்றம் கர்நாடகாவில் ......


நேற்று முக்கியமான ஒரு நிகழ்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. உருளு சேவா. கேள்விப்பட்டிருக்கக் கூடும். கர்நாடகாவின் கடற்கரையோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடக்கும் உற்சவம். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பிராமணர்களுக்கு பந்தி வைப்பார்கள். அவர்கள் வரிசையாக அமர்ந்து போஜனம் முடித்தவுடன் எச்சிலையை எடுக்க மாட்டார்கள். அப்படியே வரிசையாகக் கிடக்கும் இந்த இலைகளின் மீது பிராமணர் அல்லாதவர்கள் படுத்து உருள்வார்கள். இது வேண்டுதல். பிரம்மஹத்தி தோஷமோ அல்லது பாம்பைக் கொன்ற தோஷமோ இருந்தால் விலகிவிடுமாம். இந்தப் பாவங்களினால் உருவாகும் தோல் நோய்களிலிருந்து விடுபடவும் இந்த நேர்த்திக்கடன் முக்கியம் என நம்புகிறார்கள்.

முல்லைப்பெரியாறு அருகே கேரளா புதிய அணை? ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி!

சென்னை: முல்லைப்பெரியாறு அருகே கேரளா புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதற்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முல்லைப்பெரியாறு அணையில், கேரளா புதிய அணை கட்டுவதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு இருக்கும் நிலையில், புதிய அணை கட்டுவது தொடர்பான ஆய்வுக்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் வன உயிரின வாரிய நிலைக்குழு அனுமதி அளித்திருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறும் செயல். எனவே ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதிய அணை கட்டுவது தொடர்பான கேரள அரசின் எந்தவொரு கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்கக்கூடாது என கூறியுள்ளார். தினமலர்.com

பொது சிவில் சட்டம் அமுலாக்கப்படும் ! சதானந்த கவுடா ,

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்கு முன்னதாக அதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் டெல்லி மேல்-சபையில் மத்திய சட்ட மந்திரி சதானந்த கவுடா கூறினார். டெல்லி மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, பொதுசிவில் சட்டம் தொடர்பான பிரச்சினையை கிளப்பி, அந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள இந்த தேசம் தயாராக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து சட்ட மந்திரி சதானந்த கவுடா பேசுகையில் கூறியதாவது: இந்திய அரசியல் சாசனத்தின் 44-வது பிரிவு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வகை செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது. சமுதாயத்தில் பெண்களின் அந்தஸ்து உயர இந்த சட்டம் உதவியாக இருக்கும்.

அலிகாரில் மதமாறும் முஸ்லிமுக்கு 5 லட்சம் கிறிஸ்துவருக்கு 2 லட்சம்! சமய ஜகரன் சமிதி அறிவிப்பு


அலிகாரில் வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் நடத்தப்பட உள்ள மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சிக்கு நிதி திரட்டவதற்காக வழங்கப்பட்டு வரும் பிரசுரம்.
அலிகாரில் வரும் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் நடத்தப்பட உள்ள மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சிக்கு நிதி திரட்டவதற்காக வழங்கப்பட்டு வரும் பிரசுரம்.
உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில், இந்துதுவ அமைப்பு நடத்த இருக்கும் மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சிக்கு நிதி திரட்டும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் அலிகாரில், கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகப் பெரிய 'மறு மதமாற்ற' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக இந்துத்துவ அமைப்பின் உத்தரப் பிரதேச கிளையான சமய ஜகரன் சமிதியின் பொறுப்பாளர் ராஜேஷ்வர் சிங் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதுக்கான நிதி திரட்டும் ஏற்பாடுகளை அந்த அமைப்பு நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கிறிஸ்துவரை மதமாற்றம் செய்ய ரூ.2 லட்சம், முஸ்லிமுக்கு ரூ.5 லட்சம்
அலிகாரின் வரலாற்றை மீட்டு கொண்டு வர விலைமதிப்பிட முடியாத 'கர் வாப்சி' என்ற மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் பணம் சம்பாதித்தை தவிர வேறு என்னதான் செய்தார்?

நடிகர் ரஜினிகாந்தின் 64வது பிறந்த நாள்... திருவிழாவைப் போல ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.. இதே நாளில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம் வெளியாகி இருக்கிறது.. இதனால் இரட்டை மகிழ்ச்சியில் துள்ளித் திரிகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.. வழக்கம் போல விடிய விடிய முழித்திருந்து அத்தனைவித அபிஷேகங்கள் மூலமாக "தங்கள் தெய்வத்துக்கு" "வழிபாடு" நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.. அனேகமாக "கண்ணா! இத... இதத்தான் எதிர்பார்த்தேன்" என்பதுதான் ரஜினியின் எதிர்க்குரலாகவும் இருக்கலாம்.. தலையங்கம்: ரஜினிகாந்தின் திரை உலகப் பயணம் நீண்டது... இத்தனை ஆண்டுகாலம் உயர உயரப் பறந்து கொண்டே இருக்கிறார்.. இதனாலேயே அவரது சம்பளமும் பட வசூலும் "நூறுகள்" கோடிகளை தாண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது..காவிரி பிரச்சனையில்  முழுதமிழகமும் திரையுலகமும் சேர்ந்து நடத்திய  போராட்டத்தை ஊத்தி மூட தனியாக உண்ணாவிரத டிராமா அரங்கேற்றிய Fake நாயகன் .

திமுக உட்கட்சித் தேர்தல் விரிவான அலசல் ரிப்போர்ட்! யாருக்கு செல்வாக்கு? யாருக்கு அதிருப்தி?

திமுக உட்கட்சித் தேர்தலில் கோஷ்டிப் பிரச்சினைகளால், பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் மூத்த விசுவாசிகளும் நிர்வாகிகளும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிலையை விளக்கி அறிவாலயத்திலும், கோபாலபுரம் இல்லத்திலும் மனுக்கள் அளித்து வருகின்றனர். திமுக உட்கட்சித் தேர்தல் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. கிளை, வட்டம், பகுதி, ஊராட்சி, பேரூர், நகராட்சி, ஒன்றியம் எனப் பல கட்டப் பதவிகளுக்கும், தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள சுமார் 15 மாவட்டங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனுக்கள் பெறப்படுகின்றன. இந்நிலையில், மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒன்றிய, பகுதி உள்ளிட்ட பதவிகளில் குறிப்பிட்ட கோஷ்டிகளுக்கு மட்டுமே பதவிகள் கிடைத்துள்ளதாகக் கூறி ஸ்டாலின் ஆதரவாளர்களே வேதனை தெரிவிக்கின்றனர்.அதிமுக தேமுதிக போன்ற அடிமைகள் கூடாரங்களில் வெறும்  ஜால்ரா பஜனைகள் மட்டுமே இடம்பெறும்,திமுகவிலும்  அப்படி பஜனைகளை  உருவாக்கி.....

நோபல் பரிசு விழா கண்காட்சியில் மலாலாவின் ரத்தம் படிந்த சீருடை


ஆஸ்லோ நகரில் நடந்த கண்காட்சியில் பாகிஸ்தானில் மலாலா சுடப்பட்ட போது அணிந்திருந்த பள்ளி சீருடை பார்வைக்கு வைக்கப்பட்டது. அதைக் கண்டதும் மலாலா தேம்பி தேம்பி அழுதார்.
ஆஸ்லோ-நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற நோபல் பரிசு விழா கண்காட்சியில், பாக். சிறுமி மலாலாவின் ரத்தக்கறை படிந்த சீருடை பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளாகியும் தொடர்ந்து பெண் குழந்தை கல்விக்காக போராடும் அவரை நினைத்து தலைவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

15 சதவீத மின் கட்டண உயர்வுகட்சி தலைவர்கள் கடும் கண்டனம் -வாபஸ் பெற வலியுறுத்தல்

சென்னை-தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை மின் கண்டன உயர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் இன்று முதல் 15 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வுக்கான உத்தேச பட்டியல் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அப்போதே திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில், உத்தேச கட்டணத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் 3 இடங்களில் எண்ணெய் வளம்! ரஷிய விஞ்ஞானிகள் 30 பேர் நடத்திய ஆய்வில்......

ராமநாதபுரம், மண்டபம் கடல் பகுதியில் 3 இடங்களில் எண்ணெய் வளம் இருப்பது ரஷிய விஞ்ஞானிகள் 30 பேர் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இயற்கை எரிவாயு ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் முதல் மண்டபம் வரையிலும் உள்ள கடல் பகுதியில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் கடலுக்கு அடியில் இயற்கை எரிவாயு உள்ளதா என்று கடந்த 2010-வது வருடம் முதல் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக மிதவைக் கப்பல் ஒன்று அதிநவீன கருவிகளுடன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. அதி நவீன கருவிகள் மூலமாக கடலுக்குள் கிணறுகள் போன்று துவாரமிட்டு கடலுக்குள் 2,600 அடி ஆழத்தில் ஆயில் உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணி தற்போது முடிந்துள்ளது. ஆய்வில் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் கடலுக்கு அடியில் எண்ணெய் வளம் உள்ளதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக மத்திய அரசின் கனிமவளத்துறை கண்டுபிடித்தது.

ரகுராம் ராஜன்:மோடியின் தயாரிப்பு துறையை மையப்படுத்தும் கோஷம் ஆபத்தானது!

புதுடில்லி: ''தயாரிப்பு துறையை மட்டும் மையப்படுத்தி, 'இந்தியாவில் தயாரித்தல்' என்ற கோஷத்தை முன்வைப்பது ஆபத்தானது,'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.பிரதமர் மோடி, கடந்த சுதந்திர தின விழாவில், உலக உற்பத்தி பொருட்களின் மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்றார்.இதுகுறித்து, டில்லி யில் நிகழ்ச்சி ஒன்றில், ரகுராம் ராஜன் சூசகமாக கூறியதாவது: தயாரிப்பு துறையை மட்டும் ஊக்கப்படுத்துவது ஆபத்தாக முடியும். அது, சீனாவில் சாத்தியமானது. ஆனால், இந்தியாவின் நிலை வேறு. நாம் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும். சீனா, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை ருசி பார்த்தது. ஆனால், அது இந்தியாவிற்கு ஏற்புடையதாக இருக்குமா என்பது எனக்கு தெரியாது. அது, அவ்வளவு சுலபமானதும் அல்ல.   அருமையாக சொல்லி யுள்ளார்... கமல் மாதிரி நடிக்க போறேன்னு ஒரு 100 கோடி படத்தை நம்ம பவர் ஸ்டாரை வைத்து படம் எடுக்க போகிறேன் என்று ஒருவர் பூஜை போட்டால் நம்ம அவரை எப்படி பாப்போம்...சீன ஒரு சர்வாதிகார நாடு ..அங்கு நிலங்களில் எழுபது சதவிகிதம் அரசாங்கத்திடம் உள்ளது..எந்த அரசு முடிவையும் எந்த ஒரு கோர்ட்டும் நிறுத்த முடியாது... அரசாங்க முடிவை முட்டுக்கட்டை போட அங்கு எதிர்கட்சிகள் இல்லை...எனவே ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க ஒரு சாலை போட , ரயில் திட்டம் போட நிலம் ஒதுக்குவது மிக மிக எளிது... இங்கு இவைகளை நினைத்து பார்க்க முடியாது...எனவே சீனா வழி செல்வது புலியை பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட மாதிரிதான்...நம் நாட்டிற்கு , நம் அரசியல் அமைப்பு க்கு தகுந்தாற்போல் திட்டம் தீட்டி நாட்டை வள படுத்துங்கள் ... ஒரு 2.5 பில்லியன் டாலர் இந்திய பொருளாதாரத்தை மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரமாக இந்திய சூழ்நிலையிலேயே மாற்றி போர்லாதாரத்தில் விளிம்பில் இருந்த இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றி உள்ளார்கல்.. இப்போது போல அவர்கள் வழியிலேயே செல்லுங்கள்...

துரைமுருகன் சமாதானமானார் ! வாரிசுகளுக்கு பதவி இல்லையென ஸ்டாலின் எடுத்துரைத்தார்!

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த துணை பொதுச் செயலர் துரை முருகன், கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக கட்சித் தலைவர் கருணாநிதியிடம் சொல்லிச் சென்றதாக கூறப்பட்டதை அடுத்து, கட்சியின் முன்னணித் தலைவர்கள் அனைவரும் அதிர்ந்தனர்.இதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி ஆகியோர், துரைமுருகனுடன் கருணாநிதியின் தூதுவர்களாகப் பேசி, அவரை சமாதானமடைய வைத்துள்ளனர். இதனால், தி.மு.க.,வில் இருந்து விலகி, வீர வன்னியர் பேரவையை துவக்க திட்டமிட்டிருந்த துரைமுருகன், அதை கைவிட்டு, தி.மு.க.,விலேயே நீடிப்பதாக, அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதனால், வீர வன்னியர் பேரவை துவக்கம் தொடர்பாக, துரைமுருகனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட வன்னிய இனத்தின் பிரதிநிதிகள், துரைமுருகன் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.    

சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரம் குறைக்கப்படுகிறது ! மத்திய அரசு தீவிரம்

புதுடில்லி : சி.பி.ஐ., இயக்குனரின் அதிகாரத்தை, குறைப்பதற்கான நடவடிக்கையை, மத்திய அரசு துவக்கி உள்ளது. இதன்மூலம், சி.பி.ஐ.,யில் வழக்குகளை கையாளும் பிரிவின் இயக்குனரை, தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க உள்ளது.மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யின் இயக்குனர், பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய, மூவர் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்.அதேநேரத்தில், சி.பி.ஐ.,யில் வழக்குகளை கையாளும் பிரிவானது, கடந்த ஆண்டு வரை, மத்திய சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது. அதனால், இந்தப் பிரிவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, சி.பி.ஐ.,க்கும், மத்திய அரசுக்கும் இடையே, நீண்ட நாட்களாக மோதல் நிலவியது.  முதலில் ஒரு சி.பி ஐ இயக்குனர் மாத்திரம் சம்பாதித்தார் . இனிமேல் இரண்டு சி.பி.ஐ இயக்குனர்கள் சம்பாதிப்பார்கள் .

வெள்ளி, 12 டிசம்பர், 2014

கிறிஸ்துவமிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக் ! மதம் மாற்று நிதி வருவது எப்படி?

சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

நடிப்பிசை புலவர் கே ஆர் ராமசாமி The Man who started the Trend... first actor politician


கே.ஆர்.இராமசாமி நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு நிகழ்வில் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உரை
சென்னை,டிச.10- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு எனும் தலைப்பில் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு  உரையாற்றினார். நூற் றாண்டு விழா நாயகராக வரலாற்றில் இடம் பெற்றுள்ள நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ஆர். என்றழைக்கப்படும் கே.ஆர்.இராமசாமி இப்போதுள்ள மோடி மாதிரி தந்திரம் தெரியாதவர். வெளளை மனசுக்காரர் என்று திருநாவுக்கரசு தம் உரையில் குறிப்பிட்டார்.

வனத்துறையினரும் ராணுவமும் பந்தாடும் பழங்குடி மக்களின் வாழ்க்கை

ஆச்சரியமாக, இருந்தது அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டபோது. இவ்வளவு பெரிய காட்டில் பஸ்தரின் ஆயிரக் கணக்கான பழங்குடிகளுக்கு மிகப் பெரிய வாழ்வாதாரம், மஹுவா மரம் உதிர்க்கும் பூக்கள்!
பஸ்தரில் நூற்றுக் கணக்கான இனங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மரங்கள் உண்டு. பஸ்தர் காடுகளில் வளரும் தேக்கு மரங்களும் சால் மரங்களும் இந்திய அளவில் அவற்றின் தரத்துக்காகப் பெரும் கிராக்கியோடு வாங்கப்படுபவை. அதேபோல, இந்திராவதி நதிக்கரை மூங்கில்களும் பேர் போனவை. ஆனால், பஸ்தர் பழங்குடிகள் தங்கள் வயிற்றை - வருடத்தில் சில மாதங் களேயானாலும் - முழுவதுமாக நிரப்பிக்கொள்ள மஹுவா மரங்களே உதவுகின்றன. இந்த மரங்களில் பூக்கும் மஹுவா பூக்கள் அவர்களுடைய வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை.
மஹுவா பூக்கள் இனிப்பை உள்ளடக்கியவை. நல்ல சத்தும்கூட என்கிறார்கள். பசி நேரத்தில் வேறு உணவு கிடைக்காத வேளைகளிலெல்லாம் மஹுவா பூக்களே இவர்களுக்கு உணவாகின்றன.

தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்

சென்னை ஒரகடம் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் லட்சக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டி துப்பப்படும் இடம்.
ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊரில் வாழ்வாதாரங்களை தொலைத்த உழைக்கும் மக்கள் இங்கு வந்து சேர்கின்றனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களின் வாழ்க்கை எப்படி, தமிழினவாதம் குறித்து என்ன கருதுகிறார்கள் இவற்றை அறிய ஒரகடத்தில் இயங்கும் ஞாயிற்றுக் கிழமை சந்தையில் பொருள் வாங்க வரும் தொழிலாளர்களிடமும், வியாபாரிகளிடமும் பேசி தகவல் திரட்டினோம்.
கொல்கத்தா தொழிலாளர்கள்நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை முன்பு வந்த தொழிலாளர்கள் 4 பேரை நிறுத்தி பேசினோம்.
நேரம் தவறாமல் திறக்கப்பட்டிருந்த ஒரு டாஸ்மாக் கடை
“கொல்கத்தா சணல் தொழிற்சாலையிலிருந்து சென்னைக்கு பிய்த்து எறியப்பட்டோம்”
அவர்கள் கொல்கத்தா ஜூட் (சணல்) ஆலையில் வேலை பார்த்தவர்கள். ஆலை மூடப்பட்ட பிறகு தெரிந்தவர் மூலம் இங்கு வந்திருக்கிறார்கள். அப்பல்லோ தொழிற்சாலையில் துப்புரவு பணி செய்கிறார்கள். மாதம் 9,900 ரூபாய் சம்பளம். அதில் 7,000 ரூபாய் ஊரிலுள்ள குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள். 5,000 ரூபாய் வாடகைக்கு எடுத்த வீட்டில் 11 பேர் தங்கியிருக்கின்றனர்.
தமிழர் அல்லாதவரை வெளியேற்ற வேண்டும் என்று சொல்வதைப் பற்றிக் கேட்டதும், “அதெல்லாம் தெரியாதவங்க பேசுற பேச்சு. எல்லாரும் சேர்ந்துதான் வேலை செய்யணும்” என்றார்கள்.
“பொழுதுபோக்காக தொலைக்காட்சி இல்லை, ஆனால் மொபைலில் படம் பார்ப்போம்” என்றார்கள். மொழி புரியாத மண்ணிலும் அவர்களது ஓட்டை செல்பேசி மூலம் திரைப்படங்களை பார்க்கும் வசதியை தொழில் நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

பாரதிக்கு ஓவர் அங்கீகாரம் ? கம்யுனிஸ்டுகளும் பாரதியும் பார்ப்பனீய பாதுகாவலர்கள்?

1403598_729218937156657_5482782967106153859_oஇது என்ன நியாயம்? ‘மகாகவிக்குக் கிடைக்க வேண்டிய தேசிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கிடைக்கவில்லை’ என்ற தலைப்பில் இன்று (11-12-2014) புதியதலைமுறையில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில், விவாதம் நடைபெற இருக்கிறதாம். பாரதியாருக்கு கிடைத்திருக்கிற இந்த அங்கீகாரம் அவரின் தகுதிக்கும் திறமைக்கும் மீறிய கொண்டாட்டம்.
தமிழ் நாட்டிலேயே அவர் அளவிற்குக் கொண்டாடப்படுகிற கவிஞர்கள் அல்ல, தலைவர்களே கிடையாது.
இந்து அமைப்புகள், கம்யுனிஸ்டுகள், நவீனங்களிலிருந்து முற்போக்கு, பிற்போக்கு எல்லா வகையான இலக்கியவாதிகள், பெரியார்-அம்பேத்கர் பற்றிப் பேசுகிற கல்வியாளர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், வைதிகப் பார்ப்பனர்கள், கருத்து சுதந்திரப் பார்ப்பனர்கள், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்கள், புரட்சிகரப் பார்ப்பனர்கள், இயக்கங்கள், ஜாதி அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், தலித் அரசியல் பேசுகிறவர்கள், திராவிட இயக்க கண்ணோட்டம் கொண்டவர்கள், இஸ்லாமிய அறிவாளிகள் இப்படி எல்லாத் தரப்பினராலும் போற்றப்படுகிற ஒரே நபர் பாரதியார்.ஈழத்தமிழர்களை பற்றிய சிந்தனை கொஞ்சம்கூட இல்லாமல் சிங்களதீவு என்று பாடியவர்பாரதி வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து பாரதியின் புதுமை பெண் போன்ற பிரசார கவிதைகளுக்கு உதாரணமாகவே வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை பற்றி எந்த இடத்திலும் பாரதி குறிப்பிடாமைக்கு  அவரின் உள்ளத்தில் ஒழிந்திருந்த ஜாதி துவேஷம் தான்  
http://namathu.blogspot.com/2012/12/blog-post_7852.html

சீனர்களை Online திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் பலரை காணவில்லை!

சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை.கிராமப்புறங்களில் உள்ள வறிய சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் போலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.
இந்த பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவியை பெண் கல்யாணத் தரகரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த திருமண ஏற்பாடுகளுக்காக இந்த தரகர் ஒவ்வொரு பெண்ணுக்கும் 16,000 டாலர்கள் வரை தரகுப் பணம் பெற்றிருக்கிறார்.
இந்தப் பெண்கள் ஒட்டுமொத்தமாக காணாமல் போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மாகாண அதிகாரி ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
சீன ஆண்கள், சீனப் பெண்களை திருமணம் செய்வதாயின் அவர்களுக்கு நிறைய பணத்தை கொடுத்தாக வேண்டுமாம். அதனால், பல வறிய ஆண்கள் வெளிநாடுகளில் இருந்து பெண்களை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.

பப்பு யாதவ் :மருத்துவர்களுக்கு எதிராக பீகாரை போலவே தமிழ்நாட்டிலும் வந்து போராடுவேன்!


பிஹாரில், கிரிமினல் அரசியல்வாதிகள் என குறிப்பிடப்படுபவர்களில் ராஜீவ் ரஞ்சன் யாதவ் எனப்படும் பப்பு யாதவுக்கு முதன்மையான இடமுண்டு. சுயேச்சை மற்றும் வெவ்வேறு கட்சிகள் சார்பில் நான்கு முறை எம்.பி.யாக இருந்தவர். தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் மதேபுரா தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
‘பிஹாரில் மருத்துவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தும், தேவைக்கு அதிக மாக மருந்துகளை எழுதிக் கொடுத்தும் மக்களிடமிருந்து கொள்ளையடிக் கின்றனர்’ எனக் குற்றம்சாட்டும் இவர், தனது தொகுதியில் மருத்துவர்கள் குறைந்தபட்ச கட்டணம்தான் வசூலிக்க வேண்டும் என ‘மிரட்டி’ வைத்தி ருக்கிறார்.
மருத்துவர்கள் ’பணத்துக்காக உயிர்களை கொல்பவர்கள்’, ‘மனித சதைகளை உண்ணும் பேய்கள்’ என கடுமையாக விமர்சிக்கும் பப்பு மீது இந்திய மருத்துவர் சங்கம், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் புகார் அளித்துள்ளது.

வடிவேலு ! சினிமாவில் இருக்கும் ஒரே ஒரு நல்லவர் இவர்தாய்ன்! ஒரு கிராமத்தையே தத்தெடுக்க விரும்புகிறார்.

‘‘என் மகனுக்கு, நான் ரகசியமாக திருமணம் நடத்தவில்லை. ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக எடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்’’ என்று நடிகர் வடிவேல் கூறினார்.
திருமணம் நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கும், திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரிக்கும், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு, நடிகர்–நடிகைகள், சினிமா உலக பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

லிங்கா சமையல் குறிப்பு :பாத்திரம் அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும் ரஜினி மசாலாவின் பழைய ஸ்டாக் இருந்தா ......

லிங்கா சமையல் குறிப்பு:
தேவையான பொருட்கள்:
1. உருத்திராட்ச கொட்டை - 1 ( அருணாசலத்தில் வருவது போல )
2. பாம்பு - 1 ( தம்பிக்கு எந்த ஊரு முதல் படையப்பா வரை )
3. கவுத்து வைத்த அண்டா - ( சிவ லிங்கத்திற்கு ) - ( அருணாசலத்தில் வருவது போல )
4. அசட்டு காமெடியன்கள் - 2 ( ரஜினி நடக்கும் போது வலது இடது பக்கம் நடக்க  பாட்சாவில் ஜனகராஜ் மாதிரி )
5. துண்டு - 1 ( ஏழையான பிறகு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு பாட்டு பாட )
6. கண்ணாடி - அதிகமான அளவு ( விதவிதமாக ஸ்டைல் செய்ய)
7. ரஜினி - திகட்டும் அளவு
8. ஹீரோயுன் - தேவையான அளவு.
9. கே.எஸ்.ரவிகுமார் - கடைசியாக தாளித்துக்கொட்ட.

மேலே கூறிய பொருட்களில் முதலில் ரஜினியியை நண்றாக ஆட வைத்து கைத்தட்டல் சத்தம் எல்லாம் ஓய்ந்த பின் அசட்டுக் காமெடியன்களை கொண்டு காமெடி செய்ய வேண்டும். ஹீரோயின் வந்த பிறகு அவருடன் காமெடியை தொடர வேண்டும். அப்போது விதவிதமாக கலர் கலர் டிரஸ் போட்டுக்கொண்டு ஒரு பாட்டு பாட வைக்க வேண்டும்.  கதை ஜவ்வு போல நல்ல வெந்த பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் ஆறவைக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில்( கொஞ்சம் ஓல்டு பாத்திரமாக இருந்தால் நல்லது)

ஸ்டாலினுடன் மோதல்: துரைமுருகன் ராஜினாமா?

வேலுார் மாவட்ட உட்கட்சி தேர்தல் தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கும். மூத்த துணை பொது செயலர் துரைமுருகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, துரைமுருகன், தன் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் பரவிஇருக்கிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., உட்கட்சி தேர்தல் தொடர்பாக, மாவட்ட வாரியாக, கோஷ்டி பூசல் வெடித்துஉள்ளது. வேலுார் மாவட்ட தி.மு.க.,வில், மாவட்ட செயலர் காந்தி, துரைமுருகன் கோஷ்டி என, இரு கோஷ்டிகள் செயல்படுகிறது. இந்நிலையில், கட்சி யின் வேலுார் மத்திய மாவட்ட செயலராக கதிர் ஆனந்தை கொண்டு வருவதற்கு, உட்கட்சி தேர்தலில் துரைமுருகன் ஆதரவாளர்கள் பாடுபட்டனர். கட்சியின் கீழ் நிலை தேர்தல்களில் போட்டியிட்டு, துரைமுருகன் ஆதரவாளர்கள் நிறைய எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர்.இதனால், மாவட்ட செயலர் பொறுப்புக்கு தேர்தல் நடத்தும் பட்சத்தில், கதிர் ஆனந்த் எளிதாக வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்தது. இந்நிலையில், அவர் மாவட்ட செயலர் பொறுப்புக்கு திறமையானவர் இல்லை; அதனால், அவர் மா.செ., தேர்தலில் போட்டியிட வேண்டாம் என, துரைமுருகனிடம், ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.இதைதொடர்ந்து, கட்சி பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித் தலைவர் கருணாநிதியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது தினமலர்.com . கொஞ்ச நஞ்சம் ஸ்டாலினுக்கு பயப்படாமல் பேசக்கூடியவரும் வெளியேறுவது   திமுக இன்னொரு அதிமுகவாகி வருவதன் அடையாளம் , அங்கே ஜெயலலிதா அடிமைகள் இங்கே ஸ்டாலின் அடிமைகள்
-

முஷராப் : இந்தியாவை பழிவாங்கவே கார்கில் படையெடுப்பு! பங்களாதேஷ் உருவாக்கத்தில் இந்தியாவின் .......

கராச்சி: வங்கதேசம் உருவாக்கத்தில், இந்தியாவின் பங்களிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே கார்கில் போர் நடைபெற்றது. அனைத்து முனைகளிலும், பழிக்கு பழி கொள்கையில் தான் உறுதியாக இருந்ததாக, பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரப் கொக்கரித்துள்ளார். கடந்த 1999ல், இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடந்தது. இதற்கு, முக்கிய மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தானின் அப்போதைய ராணுவ தளபதியாக இருந்த முஷாரப். பாகிஸ்தானை 9 ஆண்டு காலம் ஆட்சி செய்த இவர், தற்போது, தேசத்துரோக குற்றத்திற்கான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முஷாரப், மேலும் கூறியதாவது: வங்கதேச உருவாக்கத்தில், இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது. அதேபோன்று, சியாச்சினை கைப்பற்றவும் இந்தியா முயற்சி மேற்கொண்டது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பழிதீர்க்கும் விதமாகவே, கார்கில் போர் நடத்தப்பட்டது.  இந்தாளுக்கு தமிழ்நாட்டு அரசியல் அத்துப்படின்னு நினைக்கிறேன். நம்ம அரசியல்வாதி போலவே பேசுறாரு. இப்படி பீலா விட்டால் திரும்பவும் அங்கே ஆட்சி நாற்காலியில் உட்காரலாம் என நினைப்பு.
அம்மா அப்பா வெச்ச பரமேஸ்வரன்குற பேர் பர்வேஷ் ன்னு மாத்தி வெச்சுகிட்டு லோலாயிதனத்த பாருங்க

ரஜினியை விமர்சித்ததால் முகநூல் Facebook கணக்கு முடக்கமா? BBC யில் அருண் பேட்டி!

நடிகர் ரஜிகாந்த்தை விமர்சித்து பேஸ் புக் எனப்படும் முகநூலில் பதிவுகள் எழுதியதால் தனது முகநூல் பக்கத்தின் கணக்கு திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டதாக, தமிழ் ஸ்டுடியோ என்கிற மாற்று சினிமாவுக்கான இயக்கத்தின் நிறுவனர் எம் அருண் புகார் செய்திருக்கிறார். ரஜினிகாந்த்தை விமர்சித்து தான் இரண்டு முகநூல் பதிவுகளை எழுதியதாகவும், அந்த இரு பதிவுகளுக்கும் எதிராக ஆயிரக்கணக்கான புகார்கள் சில மணி நேரங்களில் தமக்கு வந்ததாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்ததாகவும், இப்படி ஆயிரக்கணக்கான புகார்கள் ஒரே சமயத்தில் வரும் அளவுக்கு ஒரு தனி நபரின் முகநூல் கணக்கு இயங்க முடியாது என்றும் அதை ஒரு பிரபலஸ்தர் அல்லது ஒரு நிறுவனத்துக்கான முகநூல் பக்கமாக மட்டுமே இனி அருண் தொடர்ந்து நடத்தமுடியும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பிபிசி தமிழோசைக்கு அருண் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

வியாழன், 11 டிசம்பர், 2014

பொன்னியின் செல்வன் அனிமேஷன் திரைப்படமாகிறது !

வரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது.இப்படைப்பை இன்றைய தலைமுறைக்கு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் இதை 2டி அனிமேஷன் திரைப்படமாக எடுக்கிறார்கள். இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. ஒரு தொண்டு நிறுவனமான வளமான தமிழகம் ஆதரவுடன் 'பைவ் எலிமெண்ட்ஸ்'  நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பவர் பொ. சரவணராஜா.

மாறன் சகோதரர்களிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை ! ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில்...

தயாநிதி மாறன், கலாநிதி மாறன் | கோப்புப் படம்ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.
ஏற்கெனவே அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், இருவரிடம் இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தன.
இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "மாறன் சகோதரர்களுடனான விசாரணையின்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர்கள் கூறிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட வாய்ப்பு உண்டு.
இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான தனிப்பட்ட மற்றும் நிர்வாக ரீதியில் அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த சில ஆவணங்கள் மோசடியானவை" என்று அவர்கள் தெரிவித்தனர்.

நந்தினிக்கு சீனமருத்துவ கல்லூரி சீட் தந்தது! இலங்கை அகதி மாணவியின் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு....

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா (வயது 45). பெயிண்டர். 1990–ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக வந்தார். இவருக்கு மனைவி மற்றும் நந்தினி (18), அனுசியா (17), நவீன் (15) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் நந்தினி அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்–2 பொதுத் தேர்வில் 1200–க்கு 1170 மதிப்பெண் பெற்றார். மருத்துவ கட்–ஆப் 197.5 ஆக இருந்தது. மெடிக்கலுக்கு படிக்க தகுதியானவராக இருந்தார்.
இதையடுத்து சென்னை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு சென்றார். ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திட்டபடி அகதியான நந்தினிக்கு எம்.பி.பி.எஸ். படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. என்ஜினீயரிங் வேண்டுமானால் படிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி ஒப்புக்கொள்ளவில்லை.

சொத்து குவிப்பு வழக்கை சீக்கிரமே முடிக்க ஜெயலலிதா கோரிக்கை! ஊத்தி மூட ஏற்பாடுகள் பூர்த்தி?

டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முன் கூட்டியே நடத்தக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. இந்த மனு மீது திட்டமிட்டப்படி வரும் 18ம் தேதியே விசாரணை நடைபெறும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் செப்டம்பர் 27ம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் இதர மூவருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது பெங்களூர் நீதிமன்றம். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை முன்கூட்டியே நடத்த ஜெ. கோரிக்கை- சுப்ரீம் கோர்ட் மறுப்பு! இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ. பதவியை ஜெயலலிதா இழந்தார். இதனால் முதல்வர் பதவியையும் அவர் பறிகொடுக்க நேரிட்டது. இதன் பின்னர் ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

ஜெயலலிதா ஜாமீனுக்கு லஞ்சம் வழங்கபட்டதா? சுமார் 800 கோடி? ட்ராபிக் ராமசாமி பேட்டி ! Traffic Ramasamy About Jaya Bail



புதிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும்: மாநிலங்களவையில் கனிமொழி

"மத்திய அரசு கடைப்பிடிக்கும் மும்மொழிக் கொள்கையை மறுஆய்வுக்கு உள்படுத்தி, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய புதிய மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும்' என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில் "கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் மொழிக் கொள்கை' என்ற தலைப்பில் கனிமொழி பேசியதாவது:
"மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தின் ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் சம்ஸ்கிருத வாரம் கடைப்பிடிக்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதன் தொடர்ச்சியாக ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்' என்று மத்திய அரசு மாற்றியது. இது பற்றி பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக் கிளம்பிய போது, அரை மனதுடன் மத்திய அரசு மன்னிப்பைக் கோரியது.

அஞ்சலி1 கோடி சம்பளம் கேட்டு தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்தார் -

கோலிவுட்டில்< இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தியோடு சண்டைபோட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்றார் அஞ்சலி. ஒன்றிரண்டு படங்கள் நடித்தாலும் ஹிட்டாக அமைந்தது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு வாய்ப்பு குவியவில்லை. தம் கட்டிப்பார்த்தும் பாச்சா பலிக்காததால் மீண்டும் கோலிவுட் பக்கம் பார்வையை திருப்பி இருக்கிறார். இதற்கிடையில் அனுஷ்கா நடிப்பதாக இருந்த ‘பாகமதி' டோலிவுட் படத்தில் அவருக்கு பதிலாக அஞ்சலியை நடிக்க கேட்டனர். அனுஷ்கா நடிக்கவிருந்த வேடம்னா சூப்பராகத்தான் இருக்கும் என்றவர் எதைப்பற்றியும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் நலவிரும்பிகள் அவர் காதை கடிக்கத் தொடங்கினர்.

தி.மு.க.வில் உருவாகும் வர்த்தக அணி:

தமிழகத்தில், பல கட்சி களிலும் இருக்கும் வர்த்தக அணி போல, தி.மு.க., விலும் உடனடியாக அந்த அணியை ஏற்படுத்த வேண்டும்; அது சட்ட சபைத் தேர்தலுக்கு, பெரும் உதவியாக இருக்கும் என, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வலியுறுத்தி சொல்லியுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.கடந்த லோக்சபா தேர்தலில், கட்சி படுதோல்வி அடைந்ததும், கட்சியை சீரமைத்து பலப்படுத்துவதற்கென்று, ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு தலைமைக்கு ஏகப்பட்ட பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, 34 மாவட்டங்களாக இருந்த தி.மு.க., நிர்வாக அமைப்பு, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கட்சித் தோல்விக்கு காரணமானவர்கள் என, கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையையும் ஏற்று, கட்சித் தலைமை, பலரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது.

ஜெ.,வுக்கு ஏன் ஜாமின் தரப்பட்டது? மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

மிகவும் அவசரமான கதியில் , 19 ஆண்டுகளாக வழக்கை இழுத்து அடித்த குற்றவாளிகளுக்கு , ஒரே நாளில் உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியது மிகவும் ஆச்சரியமானது. குற்றத்தின் தன்மை, அது சமுதாயத்தில் ஏற்படுத்த கூடிய கேடுகள் பற்றி ஆராயப்படவில்லை. இதன் பின்னணியில் அ.தி.மு.க , பி. ஜே .பி கள்ள உறவு அல்லது பணி ஓய்வுக்கு பின் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் பெற போகும் உயர் பதவிகளும் காரணமாக இருக்கலாம். அரசியல் , பண பலம் உள்ள குற்றவாளிகளுக்கு என தனி சலுகைகள் வழங்கும் அரசு நிர்வாகமும் , நீதி மன்றங்களும் இந்தியாவில்தான் மிகவும் சாதரணமாகிவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை பெற்ற, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமினை, மறுபரிசீலனை செய்திடக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த, சொத்துக்குவிப்பு வழக்கின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும், சிறை தண்டனை வழங்கப்பட்டது. தங்களை, ஜாமினில் விடக்கோரி, நான்கு பேரும் தாக்கல் செய்த மனுவை, கர்நாடகா ஐகோர்ட் நிராகரித்து விட்டது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில், நான்கு பேருக்கும் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தத்து, நீதிபதி லோக்கூர், சிக்ரி ஆகியோர், கடந்த அக்டோபர் 17ம் தேதி, ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

ஏழைப்பெண்ணை மருமகளாக்கிய நடிகர் வடிவேலு

மதுரை: தன் கடந்த கால ஏழ்மையை மனதில் வைத்து, கூரை வீட்டில் வசித்த பெண்ணை, தன் மகனுக்கு மணம் முடித்தார், நடிகர் வடிவேலு.தமிழ் சினிமாவில், சிரிப்பு நடிகராக, கொடி கட்டிப் பறப்பவர், வடிவேலு. கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,விற்காக பிரசாரம் செய்து, எடுபடாமலும், சினிமாவில் ஓரங்கட்டப்பட்டாலும், இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். சினிமா வாய்ப்பிற்கு முன், மதுரை விரகனூரில் வசித்த வடிவேலு, ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர். சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை. சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகள் திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது.
மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்துக்கள்... பணத்தை கண்டு மயங்காத வடிவேலுக்கும் பாராட்டுக்கள்....

புதன், 10 டிசம்பர், 2014

உலக நாயகனும் – ஒட்டுண்ணி நாயகனும் !

கமல்ஹாசன்பெரிய ப்ளக்ஸ் பேனரில் ஒரு டி.வி. சேனலுக்கான விளம்பர வாசகம் இது, “ஜீவ நதிகளை எல்லாம் கூவ நதிகளாக்கிவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாலேயே குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை!” கீழே “பொறுப்பும் பொதுநலனும்” என்ற தத்துவமுழக்கத்தோடு நியூஸ்7 என்ற விளம்பரம்.
பொறுப்பு, பொதுநலன்னா டன் என்ன விலை என்று கேட்கும் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் நியூஸ் ரீல்தான் மேற்கண்ட சேனல். இந்தத் தத்துவத்துக்கு கைகட்டி கம்பீரமாக மேலே போஸ் கொடுப்பது ‘க்ளீன் இண்டியா’ கமல்ஹாசன்! உலகத்தில் ஒரு கொசு பறந்தாலும் அதன் உள்ளடி வேலைகளை கண்டு விண்டு தனது கலைப் பசியை அப்டுடேட் செய்துகொள்ளும் உலக நாயகனுக்கு, உள் ஊரில், மூன்று மாவட்டத்தின் கடற்கரையையே உருக்குலைக்கும் கொலைப்பசி கொண்ட தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜனின் இயற்பகை பற்றி ஏதும் தெரியாது என்று சொல்லமுடியுமா?
இயற்கையைச் சூறையாடும் மாஃபியாவுக்கு ஏத்தம் போட்டு போஸ் கொடுக்கும் உலகநாயகனுக்கு என்ன வேண்டியிருக்கிறது மரியாதை?
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி மோடி வெளக்கு மாரைத் தந்தாலும் போஸ் கொடுப்பேன், இயற்கையின் குலை வாங்கிய வைகுண்டராஜன் சேனல் விளம்பரத்திற்கும் போஸ் கொடுப்பேன்! என்று பிழைக்கும் கலையில் உண்மையிலேயே ‘அண்ணன்’ விஸ்வரூபம் தான்.

கீதையை என்கவுண்டர் செய்ய துடிக்கும் மோடி அரசாங்கம் ?கீதையைக் காப்பாற்றுங்கள்!

தொடர்ந்து வாசிக்கப்பட்டும் பல விதமான கோணங்களில் விவாதிக்கப்பட்டும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உட்படுத்தப் பட்டும்வரும் ஒரு நூலை உயிருள்ள நூல் என்று சொல்லலாம். ஒரு நூல் எந்த மொழியில், எந்த நோக்கத்துக்காக, எந்த தத்துவப் பின்புலத்துடன் எழுதப்பட்டாலும் பல்வேறு தத்துவப் பார்வையைச் சேர்ந்தவர்களின் கவனத்தையும் அது கவர்கிறது என்றால், அவர்கள் அதுபற்றிப் பேசுவது தவிர்க்க இயலாததாகிறது என்றால், அதை உயிருள்ள நூல் என்று சொல்லலாம்.
அந்த நூலை வழிபடுபவர்களும் படித்துப் பரவசமடைபவர்களும் கோபமடைபவர்களும் வியப்படைபவர்களும் அதிலிருந்து பாடம் கற்பவர்களும் அதை அபாயமானது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள் என்றால், அதை உயிருள்ள நூல் என்று சொல்லலாம்.
இத்தகைய ஒரு நூல் எப்போது தன் உயிரை விடும்? அந்த நூலை ஏற்காதவர்களால் ஒருபோதும் அதைக் கொல்ல முடியாது. ஆதரிப்பவர்கள் மட்டுமின்றி மறுப்பவர்களும் தொடர்ந்து அதைப் பற்றிப் பேசுவதன் மூலம் அதை வாழவைத்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு நூலை எப்படியாவது முடக்கிப்போட வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்? சுஷ்மா ஸ்வராஜைக் கேட்டால், அருமையான யோசனையைச் சொல்லுவார். அந்த நூலைத் தேசிய நூலாக அறிவித்து, அதைப் புனிதப்படுத்தி முடக்கிவிடலாம் என்பார்.

Roots ஸ்வேதா பாசு : மீடியாக்காரர்களே. என் வாழ்க்கையை சிதைத்து நியாயம்தானா?

மீடியாக்காரர்கள் என் மொத்த வாழ்க்கையையும் சிதைத்து விட்டார்கள். இது நியாயம்தானா? என்று கேட்டு ஒரு பெரிய கடிதம் எழுதியுள்ளார் சமீபத்தில் விபச்சார வழக்கில் கைதாகி, சிறையிலிருந்து. விடுதலையாகி வந்துள்ள நடிகை ஸ்வேதா பாசு. அவர் எழுதியுள்ள கடிதத்தில், தான் சொல்லாத விஷயங்களை மீடியாக்களே இட்டுக்கட்டி எழுதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையை சிதைத்த மீடியாக்காரர்களே.. இது நியாயம்தானா? - ஸ்வேதா பாசுவின் கடிதம் அந்த கடிதம்: எனக்கு சின்ன வயதிலிருந்தே பத்திரிகைகாரர்கள் மீது மரியாதை உண்டு. எங்கோ எல்லைப் பகுதியில் இருந்தபடி போர்ச்செய்திகளைத் தரும், மோசமான கால நிலையில் இருந்தபடி இயற்கைச் சீற்றங்களைப் பற்றி செய்திகள் தரும், பயங்கரவாதத்தின் நுனியில் நின்றபடி, அதன் கோரங்களைப் படம் பிடிக்கும் அந்த செய்தியாளர்களை என் வாழ்க்கையின் ஹீரோக்களாக நினைத்தேன். அதனால்தான் பத்திரிகைத் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பட்டமும் பெற்றேன். ஆனால் அதே பத்திரிகையாளர்கள்தான் என் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டனர்.

கள் இயக்க நல்லசாமி :முத்ததிற்கு ஆதரவான குஷ்புவை தண்டிக்கவேண்டும்? முத்தம் கூடாது? கள் ரொம்ப ரொம்ப நல்லது?

தஞ்சை:முத்தப் போட்டியை ஆதரிக்கும் குஷ்புவை தண்டிக்க வேண்டும் என்று கள் இயக்கம் கூறியுள்ளது.கள் இயக்க தலைவரும், தமிழக விவசாயிகள் சங்க  கூட்டமைப்பு செயலாளருமான நல்லசாமி, தஞ்சையில் கூறியதாவது:காவிரியின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகளை கட்டுவதை தடுத்து நிறுத்தும் பொறுப்பு,  கடமை மத்திய அரசுக்கு உண்டு. கள்ளுக்கான தடையை நீக்கி இனிக்கும் கள்ளையும், மணக்கும் கள்ளையும் தமிழ் மக்களுக்கு கொடுக்கவும், ஏற்றுமதி  செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை மரங்களை காக்கும் விதத்தில் மதுவிலக்கு மற்றும் மது கொள்கையை  மாற்றியமைக்க வேண்டும். கரும்பு கட்டுப்பாட்டு ஆணையை நீக்கி இந்தியாவில் உள்ள 560 சர்க்கரை ஆலைகளையும் கூலி அரவை ஆலைகளாக மாற்ற வேண்டும். நடிகை குஷ்பு  முத்தப்போட்டி நடத்துவதில் என்ன தவறு என்று பகிரங்கமாக பேசி வருவது தமிழருடைய தன்மானத்துக்கு விடுக்கும் சவால். குடும்ப வாழ்க்கையும் கூட்டு  குடும்ப உறவும் இந்தியாவில் நிலைத்திருக்க ஆளும் அரசும், வாழும் மக்களும், குஷ்பு போன்றவர்களை கண்டிக்க வேண்டியதும், தண்டிக்க வேண்டியதும்  காலத்தின் கட்டாயம். இவ்வாறு நல்லசாமி கூறினார். - See more at: tamilmurasu.org

தினத்தந்தியின் 17-வது பதிப்பு துபாயில் ! முதல் தமிழ் பத்திரிக்கை .


துபாய், ‘தினத்தந்தி’ யின் துபாய் பதிப்பு தொடக்க விழா நடந்தது. . 17-வது பதிப்பு தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்திருக்கிறது. ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூர், மும்பை, திருப்பூர் ஆகிய 16 நகரங்களில் இருந்து ‘தினத்தந்தி’ வெளி வருகிறது. 17-வது பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ‘தினத்தந்தி’ பெற்றுள்ளது.

கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்? வசூல் சூதாட்டம்? லோக்சபாவில் ஆவேசம்!

புதுடில்லி : ''கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற கிராமப்புற விளையாட்டுகளுக்கு கொடுக்க மறுப்பது ஏன்?'' என, பா.ஜ., எம்.பி., வீரேந்திர சிங் எழுப்பிய கேள்வியால், லோக்சபாவில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.உ.பி., மாநிலம் பதோகி லோக்சபா தொகுதியிலிருந்து பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட்ட, வீரேந்திர சிங் நேற்று பேசியதாவது:
நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் தான், அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது; மற்ற விளையாட்டுகளுக்கு குறிப்பாக, கிராமப்புற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமோ, போதிய நிதி உதவியோ தரப்படுவது இல்லை. கிராமப்புற விளையாட்டுகள் புறக்கணிக்கப்படுகின்றன.தங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமான புகழ் மற்றும் பணத்தால், கிரிக்கெட் வீரர்கள் தங்களை கடவுளாக நினைக்கின்றனர். மற்ற விளையாட்டு வீரர்கள், அவர்களின் சேவகர்களாக நடத்தப்படுகின்றனர்.  கிரிக்கெட் போல மற்றவற்றில் சூதாட்டம் அவ்வளவு எளிதல்ல. கிரிக்கெட்டில் மட்டும்தான் அதனை நடத்தும் வாரியமே அரசு நிறுவனமில்லை அல்லது அரசின் கட்டுபாட்டில் இல்லை. எனவே போர்டு பதவியிலிருப்பவர்களே ஜாலியாக பல்லாயிரம் கோடி சூதாட்டம் மூலம் சம்பாதிக்கின்றனர்.ரசிகர்களைக் கவர ஆபாச நடனம் வேறு இதற்கு ஒரே தீர்வு கிரிகெட்டை விளையாட்டே இல்லை சினிமா போல பொழுதுபோக்கு என அறிவித்து கேளிக்கை வரி விதிக்கவேண்டும் அந்த வரியைக் கொண்டு மற்ற விளையாட்டுக்களை வளர்க்கலாம்

பகவத் கீதை தேசிய நூலானால் ஜாதி காப்பாற்றப்படும், Corporate தொழிலாளர் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வார்கள்?

கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!தீண்டாமையை அமல்படுத்து, சூத்திரனை அடிமைப்படுத்து, பெண்களை வெளியே விடாதே போன்ற நல் முத்துக்களை எல்லாம் கீதையில் படித்து ...?
 கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!
கவத் கீதையை தேசியப் புனித நூலாக விரைவில் அறிவிப்போமென இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பகவத் கீதை எழுதப்பட்டு, இல்லையில்லை பகவானால் அருளப்பட்டு 5,151 வருடம் ஆகிவிட்டதாம். இப்படி ஒரு புராண புரட்டுக்கு வரலாற்று அனிமேஷன் செய்து விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய புதுதில்லி நிகழ்ச்சியில் சுஷ்மா இதனை குறிப்பிட்டார்.
பகவத் கீதை ஏற்கனவே மோடி அரசால் கவுரவிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நூல் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் பாக்கி என்றும் கூறினார் சுஷ்மா. அதற்கு உதாரணமாக அமெரிக்கா சென்ற மோடி ஒபாமாவை சந்தித்த போது பகவத் கீதையை பரிசளித்ததை குறிப்பிட்டார். அலெக்ஸ் ஹேலியின் “ரூட்ஸ்” நூலை படித்திருக்கும் அமெரிக்க மக்கள் கீதையின் உண்மையான பொருளை அறிய வரும் போது காறித்துப்புவார்கள்.

BJP நிர்மலா சீதாராமன் (அய்யங்கார்) தமிழக முதலமைச்சர் வேட்பாளராகிறார்?

தமிழகத்தில், 2016ல் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ., தலைமை, கட்சியின் முதல்வர் வேட்பாளராக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, களம் இறக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக, பிரதமர் மோடியின் ஒப்புதலுடன், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சியின் முக்கியத் தலைவர்களிடம் பேசி, கருத்துக்களைப் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., ஆட்சியை ஏற்படுத்த, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.அதற்கேற்ற வகையிலேயே, மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடும் இருக்கிறது. அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், ஒவ்வொரு மாநில மக்களையும் குறிவைத்தே செய்யப்படுகிறது.தமிழர்களுக்கு இருக்கும் பிரதான பிரச்னைகள் அனைத்தையும், விரைந்து தீர்க்கும் முயற்சியில், தற்போது மத்திய அரசு இறங்கி செயல்பட்டுக் கொண்டிருப்பது, அந்த வகையில் தான். A Tamil Iyengar Brahmin from Trichirapalli, Nirmala is the daughter of Narayanan Sitaraman, a railway employee, and Savitri. She graduated in economics from Seethalakshmi Ramaswami college in Trichi before she headed to JNU to do her master's and doctorate in economics. Parakala, a Telugu Brahmin from Narsapur in coastal Andhra, is the son of Seshavataram, a veteran communist who later gravitated to the Congress and served as a five time minister in AP. Parakala could not pursue politics successfully in the footsteps of his father and joined JNU to study economics. தினமலர் ஆசைப்படுதாக

செவ்வாய், 9 டிசம்பர், 2014

SpiceJet 1,800 விமான சேவைகள் ரத்து


விமான சேவையை வழங்கி வரும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், சுமார் 1,800 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. சன் குழுமத்துக்கு உரிமையான ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனம் காத்மாண்டுவில் இருந்து நேபாளம் செல்லும் சேவை மற்றும் உள்ளூர் விமான சேவைகள் என டிசம்பர் 31ம் தேதி வரையிலான 1,861 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. மேலும், விமான சேவைக்கான முன் பதிவையும் ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.dinamani.com

சதீஷ்காரில் முழு அளவு ராணுவ கெடுபிடி? மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான முழு யுத்தம்?

பச்சைப் புல்வெளியில் சீறி வந்து நிற்கிறது கொஞ்சம் வயதான அந்த டிரக். தடதடவென இறங்குகின்றன பூட்ஸ் கால்கள். தொடர்ந்து ஆயுதங்கள் இறங்குகின்றன. பஸ்தர்வாசிகள் கலக்கமாகப் பார்க்கிறார்கள். பஸ்தர் ஒரு பெரும் போருக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் அலுவலகம், உள்துறை, சத்தீஸ்கர் அரசு, அங்குள்ள பாதுகாப்புப் படைகளைத் தாண்டி தெரிந்துவைத்திருக்கும் குடிமக்கள் அவர்கள் மட்டும்தான். இந்தியாவின் பெரும்பான்மைச் சமூகம் எப்போதுமே அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை அல்லது அவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. பஸ்தருக்குப் புதிதாக 3,000 படையினர் வந்திருக் கிறார்கள். இன்னும் 8,000 பேர் விரைவில் வரவிருக் கிறார்கள். அரசாங்கம் படையினர் எண்ணிக்கையை இப்படி ஆயிரங்களில் குறிப்பிடுவது இல்லை. பட்டாலியன் கணக்குதான். ஒரு பட்டாலியன் = 1,000 பேர்.

சுப்பிரமணியன் சுவாமி: பாஜக கூட்டணியிலிருந்து பாமகவும் விலக வேண்டும்:

பாஜக கூட்டணியிலிருந்து மதிமுக விலகியுள்ள நிலையில் பாமகவும் விலக வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "கூட்டணியில் இருந்து கொண்டே பிரதமர் மோடியின் ஆட்சியை வைகோ விமர்சித்து வருகிறார் எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலக வேண்டும்" என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வந்தார். கருத்து மோதல்கள் வலுத்துவந்த நிலையில் மதிமுகவும் நேற்று பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது. கூட்டணியிலிருந்து விலகுவதற்கான காரணங்களாக இலங்கையுடன் மத்திய அரசு கைகோத்து செயல்படுகிறது, இந்துத்துவா கொள்கைகளை திணிக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை வைகோ முன்வைத்தார்.
இந்நிலையில், தற்போது பாமகவும் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என அவர் கூறியுள்ளார். பாமக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி வரும் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக கூட்டணியில் இருந்து பாமகவும் வெளியேற வேண்டும்" என கூறியுள்ளார். tamil.thehindu.com/

கீதை - யாருக்குப் புனித நூல்? இந்தியர்களுக்கா, இந்துக்களுக்கா அல்லது பார்ப்பனர்களுக்கா? சுபவீ .

-சுப வீரபாண்டியன் வாரம் ஒரு சிக்கலை உருவாக்குவது, மத்திய அரசின் தொடர் வேலைத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மற்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்காக இப்படிச் செய்யப்படுகிறதோ என்று எண்ண எல்லா வாய்ப்புகளும் உள்ளன. ஸ்மிருதி ராணியின் சமஸ்க்ருத வாரம் முடிந்து, அருண் ஜேட்லியின் கறுப்புப் பண வாரம் முடிந்து, நிரஞ்சன் தேவியின் ராமர் வாரம் நடந்து கொண்டிருக்கும்போதே, இப்போது சுஷ்மா சுவராஜின் பகவத் கீதை வாரம் தொடங்கி விட்டது! கீதை - யாருக்குப் புனித நூல்?: சுபவீ சிறப்புக் கட்டுரை பகவத் கீதையின் 5161ஆம் ஆண்டு விழா என ஒன்று கொண்டாடி, அதில் அசோக் சிங்கால் ஆற்றியுள்ள 'வரலாற்றுப் புகழ் மிக்க' உரையில், அவர் கீதை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 'இந்துக்களின் புனித நூலான' கீதையை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளார். அவ்விழாவில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தன் பொன்மொழிகளை அங்கு உதிர்த்துள்ளார். "எப்போது ஒபாமாவைச் சந்தித்தபோது கீதை நூலை மோடி அவரிடம் கொடுத்தாரோ, அப்போதே அது இந்தியாவின் தேசிய நூல் என்றாகிவிட்டது. அறிவிக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி," என்கிறார் சுஷ்மா. இனிமேல், பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது எவற்றை எல்லாம் எடுத்துச் செல்கிறார் என்று நாம் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு வெளிநாட்டு அதிபருக்கு அவர் ஒரு பொம்மையைப் பரிசாகக் கொடுத்தால், அது இந்தியாவின் தேசியப் பொம்மையாகி விடும்!  போகட்டும்... அது என்ன 5161ஆம் ஆண்டு விழா? அதற்கு ஏதேனும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா? வாய்க்கு வந்த வருடத்தைச் சொல்லி வைப்பதுதான் வரலாறா?

சமூக வலைதளங்களில் மிக மோசமாக விமர்சிக்கப்படும் அஞ்சான் / லிங்குசாமி.

பேட்டியில் விமர்சனங்கள் குறித்து பேசிய லிங்குசாமி “ரசிகர்களுக்கு நம்மிடம் என்ன பகை இருக்கிறது? எந்த நிலத் தகராறும் கிடையாதே. என்னிடம் அதிகமாக எதிர்பார்த்து, என்னிடம் அதிகமான மரியாதை வைத்தது என்னுடைய பொறுப்பை அதிகப்படுத்துகிறது. 'நம்மை திட்டுபவர்களைத்தான் நாம் அதிகம் திருப்திபடுத்த வேண்டும்' என சமீபத்தில் கமல் என்னிடம் கூறினார். அதைநான் தற்போது செய்துவருகிறேன். என் படங்களைத் தொடர்ந்து ரசிப்பவர்களை நான் ஏமாற்றியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, அடுத்ததாக சிறந்த படத்தை தர விரும்புகிறேன். ;எனது கடந்தகாலத்தை பார்த்தே நான் எனக்கு உத்வேகம் சொல்லிக் கொள்கிறேன். 'ஜி' படத்திற்கு பிறகுதான் 'சண்டக்கோழி' படத்தை எடுத்தேன். 'பீமா'விற்கு பிறகுதான் 'பையா' இயக்கினேன்.

கவிப்பேரரசு பன்னீர்செல்வம்:தியாகமே திருவே உருவே தாயே மங்காத்தா சொர்ணாக்கா என்னைக்கும் நானே CM ஆக இருக்க அருள்புரிவாய்....

 தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், 2014-2015 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் துணை மதிப்பீடுகளின் மீதான விவாதத்திற்கு தனது பதிலுரையை அளிக்கும் முன்னர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போற்றி பாடிய கவிதை வருமாறு...
அன்னை தமிழகத்தை, அன்புச் சரணாலயமாய் பூத்துக் குலுங்க வைக்கும், புறநானூற்றின் புதுவடிவே! தாயாகி, தந்தையாகி, தமிழர் குலச் சாமியாகி, யாதுமாகி நிற்கும் எங்கள் தாயுமானவரே!
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று பாடிய நாவுக்கரசரின் திருவாய்மொழிப்படி வாழுகின்ற எடுத்துக்காட்டாய் திகழும் வரலாற்று வடிவே! முன்னிருந்தோர் முடிக்க இயலாப் பெருஞ்செயல்களை முன்நின்று நிறைவேற்றும் முத்தமிழின் திருவடிவே!
வேதனைகளெல்லாம் தமக்கென்றும், விளைகின்ற நலம் எல்லாம் பிறர்க்கென்றும், தமிழகம் செழிக்க தவ வாழ்வு வாழ்கின்ற தியாகத் திருவுருவே!
நிலத்தில் யார்க்கும் அஞ்சா நன்னெறியும், நேருக்கு நேர் நின்று போராடும் நெஞ்சுரமும், தனக்கே உரிமை எனக் கொண்ட தன்மானச் சிங்கமே!
சோழநாட்டுக் கரிகால் பெருவளத்தானும், பாண்டி நாட்டு ராணி மங்கம்மாளும், வாளெடுத்துப் போரிட்டு வரவழைத்த நீராதார உரிமைகளை, வெள்ளைத் தாளெடுத்துப் போரிட்டு வென்று வந்த வீரத்தாயே!

அதிமுக செலவு ரூ.32,19,48,396. வேட்பாளர்கள் செலவு தனி ! தேர்தலை சந்திக்க இவ்வளவு கரன்சியை அதிமுக எங்கிருந்து???

அடுத்து, ஜெயலலிதாவின் ஆகாய செலவுகள். ஜெர்ரி ஜான் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்துதான் ஹெலிகாப்டரை ஜெயலலிதாவுக்காக வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த வகையில் ஹெலிகாப்டர் நிறுவனத்துக்கு ரூ.5.50 கோடி வழங்கப்பட்டிருக்கிறது.  ஏரோ ஏர்கிராஃப்ட், நவயுகா இன்ஜினீயரிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து விமானங்கள் ரூ.2.08 கோடிக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது. 34 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் (ஹெலிபேடு) அமைக்கப்பட்ட வகையில் ரூ.5.80 கோடி ரூபாய் செலவானது. அதாவது, ஹெலிகாப்டர் விமானம் மற்றும் ஹெலிபேடு செலவுக்கு மட்டும் மொத்தமாக ரூ.13.39 கோடி செலவழித்து இருக்கிறது

ராஜபார்ட் ரங்கதுரையை காவியத்தலைவன் போன்ற கழிசடைகளோடு ஒப்பிடவே கூடாது! மதிமாறன் .

M_S_VISWANATH_1281847g
"வே.மதிமாறன்: பி. மாதவன் இயக்கிய, ராஜபார்ட் ரங்கதுரையைப் பலரும் காவியத்தலைவனுடனும் இன்னும் சில நாடகங்களைப் பின்னணியாகக் கொண்ட படங்களோடும் ஒப்பிடுகிறார்கள்.
ராஜபார்ட் ரங்கதுரை, தமிழில் வந்த பல சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும்போது குறைபாடுகள் உள்ளதுதான். ஆனால், சங்கரதாஸ் சுவாமிகள் பாணியிலான நாடகத்திற்கும் அதுபோன்ற நாடகக் குழுக்களில் உள்ள கலைஞர்கள் பற்றிய பின்னணியைக் காட்டியதில் இந்தப் படமே முதன்மையானது. இன்றும் தென் மாவட்டங்களில் நாடக கலைஞர்கள் மத்தியில், ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பெரிய மரியாதை உண்டு.
Rajapart Rangaduraiராஜபார்ட் ரங்கதுரையின் ஒட்டுமொத்த திரைக்கதையில் செயற்கைத் தனம் இருக்கிறது. ஆனால், அதையும் மீறி அந்தப் படத்தில் இந்தியத் தரத்திற்கு இணையாக அல்லது முன் மாதிரியான சில முக்கியத்துவம் உண்டு.
முதன்மையானது,மெல்லிசை மன்னரின் இசை. பாடல்கள். அந்தக் கால நாடகக் காலத்தை இன்றும் காற்றில் நிறுத்தும் பாடல்கள். சங்கரதாஸ் சுவாமிகள் பாணியில் அமைந்த ‘தில்லை அம்பல..’ – ‘வந்தேன் வந்தனம்..’ போன்றவை.
‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்..’ பாடலின் வித்தியாசமான காம்போஸிசன் இந்திய இசை உலகிற்கே புதிது.
சங்கரதாஸ் சுவாமிகளின் பாணியில் பாடல் ஆரம்பித்து, பிறகு அதிலிருந்து தரம் உயர்ந்து, துவங்கும் பல்லவி.
முதல் சரணம் முடிந்து, மீண்டும் பல்லவி வரும்போது, ஒரு பாடலில் இரண்டு மெட்டுக்கள். இரண்டும் ஒன்றொடு ஒன்று தழுவி, உரசல் இல்லாமல்.. இனிய உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.
‘மதன மாளிகையில்..’ ஆண் குரல் பாடிக் கொண்டிருக்கும்போதே, பெண் குரல் அதே வரியை வேறு மெட்டில் ஆண் குரலின் மேல் மெல்லத் தவழ்ந்து செல்லும்.

உலகின் சிறந்த மனிதர் பயாஸ் கோப்பு...பாஜகவினர் இன்டர்நெட்டில் லைக்குகளை அள்ளிவீசி அவித்த TIME டைட்டில்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல "டைம்' வார இதழ் சார்பாக இந்த ஆண்டின் சிறந்த மனிதராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வாகியுள்ளார்.
"டைம்' வார இதழ் சார்பாக, ஆன்லைன் முறையில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் "ஆண்டின் சிறந்த மனிதர்' பற்றிய முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில், மோடி 16 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்வாகியுள்ளார்.
225க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் இத்தேர்தலில் பங்கேற்று வாக்களித்தனர்.இதே பாணியில் முன்பு bbc நடத்திய  இசைபோட்டியில் இதுவரை உலகில் தோன்றிய பாடல்களிலே அதி சிறந்த பாட்டாக அட்ரஸ் இல்லாத ஒரு புலி இயக்க பாடலை தெரிவு செய்தனர். அதை பின்பு புலிகள் பிரசாரத்திற்கு பயன்படுத்தினர். இந்த இண்டர்நஷனல் விளம்பர கூத்துக்களில் தெற்காசிய மக்கள்தான் அதிகம் பங்கு பற்றுபவர்கள் .எல்லாம் Inferiority Complex தான் அல்லது Identity Crisis என்றும் கூறலாம். 

டெல்லி பலாத்கார சம்பவம்: வாடகைக் கார் நிறுவனத்துக்குத் தடை

பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஷிவ் குமார் யாதவ்.
பலாத்கார குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஷிவ் குமார் யாதவ்.
டெல்லியில் கடந்த வாரம் வாடகைக் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட வாடகைக் கார் நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, மக்களவையில் அறிக்கை வாசித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் பெற்றுத் தர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வாடகை காரில் தனியாக வீடு திரும்பிய தனியார் நிதி நிறுவனத் தில் பணியாற்றும் 27 வயது இளம் பெண், கார் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கார் ஓட்டுநர் ஷிவ்குமார் யாதவ் மது ராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகவத் கீதையை தேசியநூலாக்க தமிழகம் கடும் எதிர்ப்பு!

பகவத் கீதை தேசிய புனித நூலாக அறிவிக்கப்படும் என்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுக்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி: மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதும் சமூக ஊடகங்களில் ஹிந்தி, குரு உத்சவ், சம்ஸ்கிருத வாரம் என சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. மத்திய இணை அமைச்சர் ஒருவரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பிரதமரே வருத்தம் கலந்த தொனியில் சமாதானம் பேசுகிற அளவுக்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.

பாஜக கூட்டணியில் இருந்து வைகோ விலகினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது.சென்னையில் நடைபெற்ற மதிமுக கூட்டத்திற்கு பின்னர் வைகோ இதை அறிவித்தார்.மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், முல்லைபெரியாறு விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்துவருகிறது என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது.; இலங்கை அரசுடன் தொடர்ந்து மத்திய அரசு நட்பு பாராட்டுவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.   மேலும் தேசியஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.nakkheeran.in பேசாம மதிமுகவை ஒரு எஞ்சியோவாக மாத்தினால் தேவல . இப்பவே ஓரளவு உலக எஞ்சியோவாக தான் மதிமுக விளங்குகிறது? 

ஸ்டாலின்:அடிக்கத்தானே பாய்கிறாய் அடி! அடிக்க பாய்ந்த அமைச்சர் வைத்திலிங்கம்!

சட்டமன்றத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,  அதிமுக அமைச்சர் வைத்திய லிங்கம் மு.க.ஸ்டாலினை மிரட்டும் வகையில்  தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்ததால் பதற்றம் ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று,  2014, 2015ம் ஆண்டுக்கான செலவுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் நடைபெற்றது.   இந்த விவாத்தில் பங்கேற்றுப்பேசிய திமுக சட்டப்பேரவையின் கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்  110வது விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சுமார் 31 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள துணை நிதிநிலை அறிக்கையில்,  1751 கோடி ரூபாய்க்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  எனவே, ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதி என்ன என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இனி ஏனைய அமைச்சர்களும் இதை பின்பற்றி அம்மாவின் குட் புக்கில் இடம்பெற போட்டி போடுவார்கள் .இனி நிச்சயமாக அடிவிழும்?  ஜெயலலிதா இதைதான் ரசிப்பார்!

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

குஷ்புவை வசைபாடும் கூட்டம் ! மாடுகள் முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை!

காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரவாத அமைப்பு என்று விமர்சித்தார். அதற்குப் பல்வேறு முனைகளில் இருந்து கண்டனமும் எதிர்ப்பும் எழுந்தது. இது இயல்பு. ஆனால் சிலர் நடிகை குஷ்புவின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி, அவரது புகைப்படங்களை சமூகவலைத் தலங்களில் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் தொடர்ந்து வசவுகள் பாடிய வண்ணம் இருக்கின்றனர்.  பொதுவாகவே  புலி ஆதரவாளர்கள்  தராதரமற்ற வார்த்தைகளால் தங்களுக்கு எதிரானவர்களை  விமர்சிப்பது எப்போதும் நடப்பது தான் . அவர்களுக்கு தெரிந்த சொற்களை தானே அவர்கள் கூறமுடியும்? இந்த மாடுகள் முட்டி கோபுரங்கள் சாய்வதில்லை 

ஜெயலலிதா ஜாமீன் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி HL Dattu மீது டிராபிக் ராமசாமி ஜனாதிபதியிடம் புகார்!


சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது சமூக ஆர்வலர்  டிராபிக் ராமசாமி நேற்று ஜனாதிபதியிடம் புகார் அளித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்திய சட்டத்துறை அமைச்சர் சதானந்தா கவுடா  ஆகியோரிடம் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக  உயர் நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி  ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் உத்தரவில் விளக்கமாக  குறிப்பிடாமல் ஒரு வரியில் தலைமை நீதிபதி உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியுள்ளார். பொதுவாக அப்பீல் செய்யும் போது, வழக்கு விசாரணை  நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்தியிருக்க வேண்டும். மேலும், ஜாமீன் கொடுக்கும் போது எந்த நிபந்தனையும் விதிக்காமல் ஜாமீன்  வழங்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Plot allotment row casts shadow on new CJI
A two-decade-old controversy over housing society plot allotments to some of the most prominent members of the Indian judiciary has become relevant once again as Supreme Court judge HL Dattu assumed the most powerful judicial office in the country on Sunday.
New Chief Justice of India Justice Dattu, and two of his Supreme Court colleagues – TS Thakur and V Gopala Gowda – are among the judges who accepted the plots in defiance of a 1995 ruling by the Karnataka high court that judges were ineligible to participate in the land scheme.  hindustantimes.com

லக்ஷ்மி ராயும் எண்கணிதம் ஜோதிடம் எல்லாம் பார்த்து பெயர் மாத்தி ...

கோலிவுட்டில் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருந்த ராய் லட்சுமி சமீபகாலமாக 2வது ஹீரோயின் அல்லது குத்தாட்டத்துக்கு வந்துவிட்டு போகிறார். இளவட்ட ஹீரோயின்களின் பிரவேசம்தான் இவரை ஓரம்கட்டி இருக்கிறதாம். ‘காஞ்சனா‘ படத்தில் லாரன்ஸுக்கு ஜோடி போட்டவர் அவரது அடுத்த படமான ‘முனி பார்ட் 3 கங்கா‘ படத்தில் ஓரம்கட்டப்பட்டார். இதில் லட்சுமிக்கு லாரன்ஸ் மீது கோபம் இருந்து வந்தது. சீக்கிரமே அந்த கோபத்துக்கு மருந்து தடவினார் லாரன்ஸ். ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா‘ படத்தில் மீண்டும் ராய் லட்சுமியை ஹீரோயினாக்கினார். டோலிவுட்டில் கைவசம் ஒரு படம் கூட ராய் லட்சுமிக்கு இல்லாத நிலையில் லாரன்சின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் 'ஒ. டி. ரெ. சினிமா' படம்தான் ராய்லட்சுமிக்கு டோலிவுட் மறுபிரவேசத்துக்கு வழிவகுத்து தந்திருக்கிறதாம். பேர் ராசி பார்த்து தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டவர் மறுபிரவேசத்திலாவது வெற்றி லட்சுமியாக முடியுமா என ஓலைச்சுவடி ஜோதிடரிடம் - tamilmurasu.org/

Jayalalitha 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்களுக்கு நிதி இல்லை! கைவிரித்த மோகன் வர்கீஸ் ,ஷீலா பாலக்ருஷ்ணன் ஜெயாவுக்கு......

மூன்றாண்டுகால  அ.தி.மு.க. ஆட்சியில் 5-வது முறையாக மாற்றப்பட்டிருக் கிறார் அரசின் தலைமைச் செயலாளர். புதிய தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் தேர்வு செய்யப்பட்டதற்கும் தலைமைச் செயலாளர்  பொறுப்பிலிருந்து மோகன் வர்கீஸ் மாற்றப்பட்டதற்கும் அரசின் ஆலோசகரும் முன் னாள் தலைமைச் செய லாளருமான ஷீலா பால கிருஷ்ணன்தான் காரணம் என்று கிசுகிசுத்தது கோட்டை வட்டாரம்.காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டு கூடுதல் விவரம் கேட்டோம். டிசம்பர் 1-ந் தேதி கோட் டையில் நடந்த ஆலோ சனைக் கூட்டம் பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல வெளியே  வந்தன. முதல் வரும் நிதியமைச்சருமான ஓ.பி.எஸ் தலைமையில் நடந்த அந்த ஆலோசனைக் கூட் டத்தில் தலைமைச் செய லாளர் மோகன் வர்கீஸ், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், முதல்வரின் செயலாளர்கள் ராம் மோகன்ராவ், வெங்கட் ரமணன், நிதித்துறைச் செய லாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். டிசம்பர்  4-ந் தேதி சட்ட மன்றக் கூட்டத்தொடரில் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல்  செய்யவேண்டியது குறித்தும், ஜெ. முதல்வராக இருந்தபோது 110 விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீடு மற்றும் கூடுதல் நிதி ஒதுக்கீடு பற்றியும் ஆலோசனை நடந்தது.மாற்றத்துக்குக் காரணமான ஆலோசனைக் கூட்டம் 110 விதியின் கீழ் ஜெ. அறிவித்த 125 திட்டங்களுக்கு இதுவரை 15% நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதும், ஜெ.வின் பதவி பறிபோனதிலிருந்து கடந்த 2 மாதமாக எந்தப் பணிகளும் நடக்கவில்லை என்பதும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைப் பேரவை யில் கிளப்ப ரெடியாக இருப்பது குறித்தும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. அப்போது, 110 விதியின்கீழ் ஜெ. அறிவித்த திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடும்படி தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸுக்கு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. அவரோ, "நிதித்துறையில் நான் விவாதித்தவரை, நிதி நெருக்கடி அதிகமாக இருக்கிறது. அதனால் திட்டங்களுக்கு நிதியை அறிவித்துவிட்டு ஒதுக்க முடியாமல் போய்விடும். எனவே, 110விதியின்கீழ் வெளி யிட்ட பல  அறிவிப்புகளை ரத்துசெய்துவிட லாம்' என்றிருக்கிறார்.

அங்காடித் தெருதான் ஈடுசெய்தது! வில்லு, சர்வம், ஏகன் படங்களின் நஷ்டத்தை.......



மிஷ்கின்  :“தமிழ் சினிமா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியும். நல்ல சினிமா படங்கள் வெளிவர முடியாத சூழ்நிலை உள்ளது. நான் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படமும், ‘அஞ்சாதே’ படமும் மிக கீழ்த்தரமான படங்கள். மூன்றாம் தரமானவை…”
-அடடா… எப்பேற்பட்ட நேர்மை இவருக்கு! இந்த மூன்றாம்தர, கீழ்த்தரமான படங்களை, அவை கீழ்த்தரமானவை என்று தெரிந்தே எடுத்தது ஏனோ… மாய்ந்து மாய்ந்து அவற்றின் சிறப்புக்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லித் திரிந்தது ஏன்? -நந்தலாலா  வெளியாகாமல் போக இன்றைய சூழல்; காரணமில்லை. அய்ங்கரனின் சில தவறான முடிவுகளே காரணம். இதைக்கூட நாம் சொல்லவில்லை. தயாரிப்பாளர் அருண்பாண்டியன் சொன்னது. ‘வில்லு, சர்வம், ஏகன் போன்ற படங்களை, ஹீரோக்களின் கால்ஷீட் கிடைத்ததே என்று கதையைக் கூட யோசிக்காமல் எடுத்ததன் விளைவு, பெரிய நஷ்டத்தைச் சந்தித்தோம்’ என்று அங்காடித் தெரு பிரஸ் ஷோவில் சொன்னார் அருண்பாண்டியன்.
இந்தப் படங்களின் நஷ்டத்தை அவர்களுக்கு அங்காடித் தெருதான் ஈடுசெய்தது என்பதை மறக்கக் கூடாது.-வினோ envazhi.com

கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடசலபதி கிளை (BRANCH) கோவில் கட்டுமானம்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் ரூ.22.50 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கட்டுமானப் பணி ஞாயிற்றுக்கிழமை (டிச.7) தொடங்குகிறது.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் 2010-ஆம் ஆண்டு பிப்பவரி 28-ஆம் தேதி ஸ்ரீநிவாச கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்.
இதைத் தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்ற பகுதியில் திருப்பதியில் இருப்பதைப் போன்று கோயில் அமைக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.
கோயில் கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் தானமாக வழங்கியதைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி பூமிபூஜை நடத்தப்பட்டது. கோயில் கட்டுவதற்கான அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.திருப்பதி கோவில் நல்ல வசூல் தரும் கோவிலாகும் மேலும் பலர் பிரான்சைஸ் முறையில் பல இடத்திலும் ஆரம்பிக்கலாம்  prearyan.blogspot.com/2010/03/tirupati-balaji-is-jain-temple-of.html

பெரியாறு அணை பாதுகாப்பு இனி மத்திய பாதுகாப்பு படையினரிடம் !

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, கேரள போலீசாரிடம் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரிடம் செல்வது உறுதியாகியுள்ளது.பெரியாறு அணையின், இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை, தமிழக பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. அணை பாதுகாப்பு பணிகளை, 1961க்கு முன் வரை, தமிழக போலீசார் கவனித்து வந்தனர். அணையை ஒட்டிய பகுதிகளில், வனவிலங்குகள் அச்சுறுத்தல், அடிப்படை வசதிகள் இல்லாததை காரணம் காட்டி, தமிழக போலீசார் அங்கு பணி செய்ய மறுத்தனர். இதையடுத்து, அணையின் பாதுகாப்பு, தற்காலிகமாக, கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று வரை, அவர்கள் தான், பாதுகாப்பு பணியில் உள்ளனர். அவர்களுக்கான சம்பளத்திற்காக, தமிழக அரசு, ஆண்டு தோறும், 12 லட்சம் ரூபாய் செலவிடுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு பிறகு, அணைக்கு, மத்திய பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு வழங்குவது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் லோக் அதாலத் மூலம் லட்சக்கணக்கான வழக்குகள் ஒரே நாளில் தீர்வு.

சென்னை: நாடு முழுவதும் நேற்று தேசிய, 'லோக் அதாலத்' நடந்தது. தமிழகத்தில், சாதனை நிகழ்வாக, 14.93 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக, 1,390 கோடி ரூபாய், 'பைசல்' செய்யப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாடு முழுவதும், தமிழகத்தில், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் இணைந்து ஆண்டுதோறும், தேசிய, 'லோக் அதாலத்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த, 2013ல், 13.77 லட்சம் வழக்குகளுக்கு, சமரச தீர்வு காணப்பட்டது; பயனாளிகளுக்கு தீர்வுத் தொகையாக, 1,140 கோடி ரூபாய் பெற்றுத் தரப்பட்டது.நடப்பு ஆண்டில், நேற்று, தேசிய, 'லோக் அதாலத்' நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியில், 14 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.