வெள்ளி, 3 ஜூலை, 2020

தமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்திய அதிகார வர்க்கம்

சாந்தி நாராயணன் : ஆயிரம் பேருக்கு எத்தனை மருத்துவர்கள் ?!
ஜெர்மனி -4.3
இத்தாலி - 4
தமிழ் நாடு - 3.95
ஸ்பெயின் - 3.9
ஆஸ்திரேலிய - 3.7 . சிறந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள்
தமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர்
டெல்லியில் 334 பேருக்கு ஒரு மருத்துவர்
கர்நாடகாவில் 507 பேருக்கு ஒரு மருத்துவர்
கேரளா 535 பேருக்கு ஒரு மருத்துவர்
கோவா 713 பேருக்கு ஒரு மருத்துவர்
மருத்துவர்கள்
மோசமான /பற்றாக்குறை எண்ணிக்கயில் உள்ள மாநிலங்கள்
ஜார்கண்ட் 8180 பேருக்கு ஒரு மருத்துவர்
ஹரியானா 6037 பேருக்கு ஒரு மருத்துவர்
சட்டிஷ்கார் 4338 பேருக்கு ஒரு மருத்துவர்
உத்தர பிரதேசம் 3767 பேருக்கு ஒரு மருத்துவர்
பீகார் 3207 பேருக்கு ஒரு மருத்துவர்.
உண்மையில் நீதியுள்ள ஒரு மத்திய அரசு,
தமிழகத்துக்கு இணையாக பிற வட மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இங்கு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகள் , அதிலும் திமுக மருத்துவ கல்லூரிகளை மாவட்டத்துக்கு மாவட்டம் ஏற்படுத்தி இந்தியாவின் சிறந்த மட்டுமல்ல, உலகின் மூன்றாவது சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள நாடாக தமிழகத்தை உருவாக்கி உள்ளனர்.
மத்திய அரசோ, இங்குள்ள மருத்துவ இடங்களை நீட் என்ற பெயரால் கொள்ளை அடிக்கிறது.

பெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்றது என்பதை அறியாமலே சென்று விட்டார்

Devi Somasundaram : பெனிக்ஸ்கள் .
சாத்தான்குளம் அதிகார படுகொலை.உள்ள போவதற்கு முன்
சாத்தான்குளத்தில் என்ன நடந்தது என்று ஒரு ஷார்ட் நோட்.
ஆய்வாளர் ரவுண்ட்ஸ் வந்து இருக்கார்.விதிகளை மீறி நேரம் தாண்டி கூட்டமாய் நின்றவர்களை ஏன் நிக்கறிங்கன்னு கேட்டு இருக்கார்.அவர்கள் சம்பளம் வாங்க நிக்கறோம்னு சொல்லவும் நேரத்தோட வாங்கிட்டு போக வேண்டியது தானே என்று கடுமையாய் திட்டிவிட்டு போய் இருக்கார்.பெனிக்ஸின் அப்பா ஜெயராஜ் போலிஸ்ன்னா கொம்பா, சம்பளம் வாங்க தான நிக்றோம்னு சொல்ல வேண்டியது தான என்று சத்தம் போட அதை அங்க இருந்த போலிஸ் ரைட்டர் காதில் வாங்கி ஆய்வாளர்கிட்ட போட்டுத்தரார். போலிஸுக்கு தன் அதிகாரம் பறிபோகும் பதட்டம் . ஜெயராஜை அரெஸ்ட் செய்து கொண்டு போக.தன் தகப்பனை ஸ்டேஷன் வாசலில் ஜீப்பில் இருந்து தள்ளுவதைக் கண்டு பெனிக்ஸ் போலிஸை எதிர்த்து இருக்கார்.போலிஸ் இருவரையும் பிடித்துக் கட்டி வைத்து தனக்கு துணையா சிலரைச் சேர்த்துக் கொண்டு அடித்து அது கொலையில் முடிந்து இருக்கின்றது. அதன் பிறகு நடந்தது அறிவோம்.
இதில் ஜெயராஜ் ஒரு அதிமுக ஆதரவாளர்.பெனிக்ஸ் ஒரு நாதக ஆதரவாளர் (அவர் நாதக வ ஆதரிக்கவில்லை என்று சில பதிவுகள் பார்த்தேன்.அவர் நாதக வ விமர்சிச்சு எந்த பதிவும் போடவில்லை.நாம் தமிழரின் சாதியவாத,இன வாத கருத்துகளைஅவர் விமர்சிக்கவோ,எதிர்க்கவோ இல்லை.மாறாக அதே வரலாறு அறியாத தப்பும் தவறுமான தமிழில் பதிவுகள் ) .

பரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் பாதுகாப்பு கேள்விகுறி?

தினமலர் : பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது.
இதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும்
பீதியடைந்துள்ளார்.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
சிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது.

சிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் வெட்டிக்கொலை .. தூத்துக்குடி


மாலைமலர் : திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 42). இவர்களுக்கு ஆத்திமுத்து, விக்னேஷ் ராஜா (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் ராஜா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்கத்து ஊரான பொட்டல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நேற்று இரவில் விக்னேஷ் ராஜா தன்னுடைய உறவினரான அருணுடன் (21) சிவகளை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று விக்னேஷ் ராஜா, அருண் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.அப்போது அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய விக்னேஷ்ராஜா தனது வீட்டுக்கு ரத்தம் சொட்ட, சொட்ட ஓடி வந்தார். உடனே லட்சுமணன், முத்துபேச்சி ஆகிய 2 பேரும் தங்களுடைய மகன் விக்னேஷ்ராஜாவை காப்பாற்றி சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ

சாத்தான்குளம்: சாத்தான்குளம்
இரட்டை கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற கடைசி வரை அமைச்சர் கடம்பூர் செல்வராஜ்  முயற்சி செய்துள்ளார். சிபிசிஐடி விசாரணையின் போதும் அமைச்சர் பெயரை கூறி ஸ்ரீதர் தப்பிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் பரிந்துரையை புறக்கணித்து ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது. போலீஸ் நண்பர்கள் குழுவினரை காப்பாற்ற முயலும் இயக்கத்தின் முயற்சியை உடைக்குமா சிபிசிஐடி என்று கேள்விகள் எழுந்துள்ளது

சாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சிகள் மீட்பு ..காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு


தினதந்தி : தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவலர் முத்துராஜ்ஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. மேலும், இந்த சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக யாரும் அப்ரூவர் ஆகவில்லை என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் அறிவித்துள்ளார்

சேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப்பரெட் சங்கிக்களின் வேட்டை நாய்கள்?

சல்வா ஜுடும்... இந்தப் பெயரைக் கேள்விப்
பட்டிருக்கிறீர்களா..
தொண்ணூறுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரு மழைக் காடுகள் எல்லாம் 'டாடா', 'எஸ்ஸார்' போன்ற கார்ப்பொரேட்டுகளின் லாப வேட்டை க்குத் தாரை வார்க்கப்பட்டன. கனிம வளங்களைக் கொள்ளையிடச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அக்காடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.
வாழ்முறையிலேயே ஆயுதபாணிகளான பழங்குடிகள் அமைப்பாகத் திரண்டு, அரசுக்கும், கார்ப்பொரேட்டுகளுக்கும் எதிராகச் சமர் செய்தனர்.
பழங்குடிகளைத் தன் ஆயுத பலத்தாலும், படை பலத்தாலும் வெல்ல முடியாத மத்திய, மாநில அரசுகள் 2005-ல் மிகக் கீழ்த்தரமாக, வஞ்சகமானதொரு திட்டத்தைச் செயல்படுத்தினர். 
அதாவது... பழங்குடிகளுக்கிடையிலே உள்ள கருப்பு ஆடுகளை இனம் கண்டு... அவர்களை அமைப்பாக்கி... ஆயுதங்களையும், பயிற்சியையும் கொடுத்துப் போராடும் பழங்குடி மக்களுக்கு எதிராக ஏவி விட்டு நர வேட்டையாடினர்.
அரசின் சட்டப்பூர்வமான இராணுவம், போலீஸ் போன்ற ஆயுதப் படைக்கே ஒரு கூலிப்படை.... அதன் பெயர்தான் 'சல்வா ஜுடும்'.

சாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. கொலைகளுக்கான மோடிவ் என்ன?

பெரிய அரசியல் புள்ளியின் அந்தரங்க ரகசியம் தெரிந்தவர்கள் இந்த இருவரும்
சாத்தான்குளம் கொடூரத்தின் பின்னணி:
* சாத்தான்குளம் ஊரில் கோனார்களும் உண்டு, நாடார்களும் உண்டு
* SI ஸ்ரீதர் கோனார் சாதியை சேர்ந்தவர். திவீர சாதிப்பற்று உடையவர்.
* நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெளிப்படையாகவே தன் சாதிக்காக உழைத்திருக்கிறார். நாடார்கள் மீதான வெறுப்புக்கு உள்ளாட்சி தேர்தல் மேலும் தூபம் போட்டிருக்கிறது.
* கிறித்துவ நாடார்கள் மீதான வெறுப்பிற்கு தூபம் போட்டது சேவா பாரதி அமைப்பு.
* SI பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேவா பாரதி அமைப்புடன் நெருக்கம் உள்ளவர்கள்.
* சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு இன்பார்மர்களாக இருப்பவர்கள் இந்த சேவா பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள்தான்
* ஜெயராஜ் பென்னிக்சின் கொலைக்கு இருவாரங்களுக்கு முன், இந்த இன்பார்மர்களில் ஒருவரை நாடார்கள் நான்கு பேர் கொலை செய்துவிடுகின்றனர்.
* இதை விசாரிக்க பேய்க்குளம் போன ரகு, கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரின் தம்பியை, காவல் நிலையத்திற்கு கூட்டிவந்து விடிய விடிய அடிக்கிறார். அதில் மூன்று நாள் கழித்து அந்த நபர் இறந்து விடுகிறார்.

கனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடும் தண்டனை வழங்க வேண்டும்:


 தினகரன் :  சென்னை: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க” – கதறும் நேரடி சாட்சி!

`ரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க” – கதறும் நேரடி சாட்சி!  விகடன் :  சாத்தான்குளம்; உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன. ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சை மரணம் தொடர்பாக மாவட்ட நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் ஆகியோர் கிளைச்சிறையில் இருப்போரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கெனவே இதே சாத்தான் போலீஸாரால் தாக்கப்பட்ட பனைகுளத்தைச் சேர்ந்த ராஜாசிங் மூலமாகக் கசிந்திருக்கும் `திடுக்’ தகவல்கள் பதற வைக்கின்றன.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன.
”போலீஸ்காரங்க அடிச்சதுல ராஜாசிங்கோட உடல் முழுக்க உள்காயங்களா இருக்கு. உடல்வலி அதிகம் இருக்கறதா சொன்னார். ”ராஜாசிங், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்தப்போதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ரெண்டு பேரையும் அங்கே கொண்டு வந்திருக்காங்க. சிறைக்குள்ளே என்ன நடந்துச்சுன்னும் என்கிட்ட விரிவா ராஜாசிங் சொன்னார்.

புதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ஒருவர் கைது


BBC : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகூரான். இவரது ஏழு வயது மகள் ஜெயபிரியா புதன்கிழமையன்று மதியம் காணாமல் போனார்.
இது குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பின் நடந்த தேடுதலில் கிளவிதம் ஊரணி பகுதியில் புதர்களுக்கிடையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையை அடுத்து, சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான 29 வயதுடைய ராஜா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறுமி அப்பகுதி வழியே செல்லும்போது அவரை தூக்கிச்சென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் சிறுமி கத்தி கூச்சலிட்டதால் ராஜா அந்தக் குழந்தையை அடித்துக் கொன்றதாகவும் தெரிகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, "இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளா

சாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம் பேரா. பாத்திமா பாபு .. வீடியோ

சாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலையும் கைது செய்யவேண்டும்


ஆன்டனி வளன் : பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலை கைது செய்வாரா அதை உருவாக்கிய தற்போதைய சிபிசிஐடி தலைவர் பிரதீப் பிலிப்..
காவல் ஆய்வாளர் துணை ஆய்வாளர்கள் தலைமை காவலர் மற்றும் இன்னும் சிலர் கைதாகி இருக்கிறார்களே என்று அலட்சியமாய் இருந்து விடாமல்
இன்னும் மிக முக்கியமாய் சாத்தான்குளம் வழக்கில் நாம் பேச வேண்டியது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குண்டர்கள் இந்த கொலைவழக்கில் கைது செய்யப் பட வேண்டும் என்பது பற்றியும் தான்..
சிபிஐ கைக்கு இந்த வழக்கு செல்லும் வரை சிபிசிஐடி போலீசார் இதை விசாரிக்கணும் என்று சொல்லப்பட்டு விசாரணை சென்று கொண்டிருக்கையில்
சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் கைதாகி கொலை வழக்கில் சிக்கும் போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சல்லிப் பயலுக மட்டும் இன்னும் ஏன் கைது செய்யப்படல என்பது மக்களுக்கு புரியணும்..
இந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உருவாக்கியவர் பிரதீப் பிலிப் ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி.
ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் மூலம் இன்றும் அதற்கான பல்வேறு நலன்களை இந்த பிரதீப் என்ற காவல்துறை அதிகாரி அனுபவித்து வருகிறார்.
உதாரணமாக ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்க்கு ஆண்டுதோறும் அரசு ஒதுக்கும் நிதி அவர்களுக்கு அளிக்கப் படாமல் அது ப்ரதீப் பிலிப் பாக்கெட்டுக்கு செல்வதான குற்றச்சாட்டு உண்டு.

வியாழன், 2 ஜூலை, 2020

மண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர் மு கருணாநிதி, இயக்கம் விஷ்வநாத் பிரதாப் சிங்.

Muralidharan Pb : வசந்த காலம் - 9
சமூக நீதிக் காவலர்கள். மண்டல் கமிஷன் வரலாறு.
கலைஞர், விபி சிங் இருவரும் சரித்திரம் படைத்த இன்றியமையா சாதனை மண்டல் கமிஷன் அமல்படுத்தியதே. மண்டல் கமிஷன் கேள்வியுற்றிருப்போம்.
அது ஏன் ? எதற்கு ? எப்படி நிறைவேற்றம் பெற்றது என்று சற்று விரிவாக பார்த்தால் தான் தெரியும் இந்த இருவர் அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு பெரிய உரிமையைக் கொடையாக கொடுத்துச் சென்றுள்ளார்கள் என்பதை உணரமுடியும்.
சமூக நீதி என்பது திமுகவின் உயிர்நாடி. மண்டல் கமிஷன் அமைக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பாக 1973ல் அக்டோபர் திங்கள், அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவர் பேசியது.
"மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் அமல்படுத்த மத்திய அரசு முன்வந்து அதற்காவான செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிக் கிடக்கும் மக்களை தனி ஒதுக்கீடுகள், சிறப்பு திட்டங்கள் மூலமாக கைதூக்கிவிட மண்டல் குழுவின் பரிந்துரையை திமுக, 1989ல் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களில் அதாவது 12/5/1989ல் சட்டப்பேரவையில் முன் மொழிந்தது, சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியது.

நாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. திமுக நிச்சயம் குரல் கொடுக்கும்..

Kathir RS : கேள்வி: பெனிக்ஸ் நாம் தமிழர் ஆதரவாளராமே? கலைஞர் ஸ்டாலின் உதயநிதி ஆகியோரை கிண்டல் செய்து நிறைய பதிவு
போட்டிருக்கிறாராமே .முன்பே தெரிந்திருந்தால் திமுக தலையிட்டிருக்காதோ..? ஹாஹாஹா!
பதில்: பிறந்த குழந்தை மீதும் இறந்த மனிதன் மீதும் சாதி மதத்தை மட்டுமல்ல அரசியலைத் திணிப்பதையும்  எதிர்ப்பவர்கள் பகுத்தறிவாளர்கள்.
தந்தை மகன் இருவரும் கொல்லப்பட்டதை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் முதன் முதலாக பதிவு செய்து நியாயம் கேட்டவர் மு.க.ஸ்டாலின் தான்.அப்போது இந்த பிரச்சனை அரசியல் மட்டத்தில் கூட விவாதப் பொருளாகவில்லை.இரண்டு நாட்கள் கழித்துதான் சுசித்ராவின் ஆங்கில வீடியோ வந்தது. அதைக்கூட அதிகம் தங்கள் டைம் லைனில் பதிவிட்டவர்கள் பரப்பியவர்கள் திமுகவினரே. அந்த வீடியோ பகிரப்பட்ட போது #சுச்சிலீக்ஸ் என கிண்டல் செய்தவர்களை எதிர்த்து சண்டை செய்தவர்களும் திமுகவினரே. என்ன எல்லாத்துக்கும் திமுக என்று சொல்கிறேன் என்று நீங்கள் கருதலாம்..நான் சொல்வது முற்றிலும் உண்மை.
தமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களும் அதிமுக ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட சரிபாதி..தமிழக மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் அவர்களே ஆவர்.மீதமுள்ளவர்கள்தான் இந்த சங்கிகளும், யானைக்குட்டிகளும்,ஆமைகுஞ்சுகளும்.
ஆளுங்கட்சியினர் இதை பேச வில்லை..சங்கிகள் இதற்கு மாறாக எதிராக
பேசினர்.

தமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தாரை வார்க்கும் அதிமுக ஆட்சி

Kandasamy Mariyappan : · மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிச்சாமி
அவர்களே, 110 ஆண்டுகால திராவிட இயக்க போராட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன்களை அறிந்த ஒருவனின் வேண்டுகோள்..... காவல்துறை உங்களது அமைச்சரவையில்தான் உள்ளது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தயவுசெய்து உத்திரப்பிரதேசம், பிஹார் போன்று தமிழ்நாடு மாறாமல் இருக்க, Friends of Police என்ற RSS சேவாபாரதி அமைப்பை உடனடியாக கலைத்து விடுங்கள். இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து

Venkat Ramanujam : தொடங்கிய கிளைஅமைப்பு சேவாபாரதி எப்படி மத்திய பாஜக ஆட்சியில் friendsofpolice ஆனார்கள் என் இன்று பத்திரிகை மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியனரும் கேக்க தொடங்கி உள்ள்னரே ... ரத்தம் வர வர அடித்தே கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ரத்த உறுவினர்கள் அளித்த பேட்டியில் மட்டுமல்ல அவர்களின் புகாரின் சேவாபாரதி friendsofpolice குழுவினரும் சேர்ந்தே அடித்தார்கள் என கூறியுள்ளது முக்கியம் பெறுவதையும் யாவருமே காணலாம் ..

லாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டம்.. அமித்ஷாவுக்கு கனிமொழி கடிதம்

tamil.oneindia.com : சென்னை: லாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீசாரின் கொடூர தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே லோக்சபா எம்.பி. கனிமொழி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு கொடுத்திருந்தார்.

தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.. சாத்தான் குளம் .. நீதிமன்ற உத்தரவு


BBC : சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் குறப்படும் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என தென்மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபினபு, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்குப் பிறகு தென் மண்டல ஐஜி முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்பது ஒரளவுக்கு உண்மைதான்.

இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி

   மாலைமலர் : கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.
இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி
ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில், இந்தியாவில் மட்டும் 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்களை காணவில்லை. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

ஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வேண்டும், காவலர் ரேவதிக்கும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் பாதுகாப்புத் தர வேண்டும்.. வீடியோ


News18 Tamil : சாத்தான்குளம் வழக்கில் ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
ஜெயராஜ் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் தமிழக அரசு சிக்கிக் கொண்டதாகவும், இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்து தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார் எனவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் மட்டுமின்றி, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானதை நாடே பார்த்ததாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகர்களும் பார்த்துக்கொண்டு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளா

சென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சிறுமி, அயனாவரம் சிறுமி, தேனி சிறுமி ராகவி, சிவகாசி பிரித்திகா, சேலம் பூங்கொடி,... சிறுமிகள் மீது பாலியல் பயங்கரவாதம்

புதுக்கோட்டையில் 7வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரம்! மின்னம்பலம் : தமிழகத்தில் பெண்களுக்குக் குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சிறுமி, அயனாவரம் சிறுமி, தேனி சிறுமி ராகவி, சிவகாசி பிரித்திகா, சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பூங்கொடி, திருச்சி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி என தமிழகத்தில் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதை என்பதையும் தாண்டி சாதாரணமாகிவிட்டது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்தால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு போக்சோ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த போதும் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் 30ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ஆடியோ

போலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம் முக்கிய சாட்சி ... பாதுகாப்பு கேட்கிறார் ..

மாலைமலர் :  எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சாட்சியம் அளித்த ஏட்டு ரேவதி வேண்டுகோள் சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் சம்பவம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விசாரிக்க கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை நியமித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த தினத்தில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தபோது, போலீசார் விடிய, விடிய ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் ஏட்டு ரேவதி, சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமியிடம் மனு வழங்கினார். பின்னர் போலீஸ் ஏட்டு ரேவதி நேற்று முதல் மருத்துவ விடுப்பில் சென்றார்.
இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு ரேவதி கூறியதாவது:-

ரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் ? பொதுமக்கள வாக்கெடுப்பு ...

ரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின்மின்னம்பலம் : ரஷ்ய வாக்காளர்கள் 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினை ஆட்சியில் அமர்த்த அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றங்களை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்திருப்பதாக உலக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன.
கொரொனா வைரஸ் காலத்திலும் ஏற்கனவே செர்பியா தேர்தலை நடத்திய நிலையில், முக்கிய நாடான ரஷ்யாவில் அரசியலைப்பை மாற்றியமைத்து, ‘புடின் இல்லாமல் ரஷ்யா இல்லை’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஏப்ரல் 22 ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு, மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க ரஷ்ய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வார காலமாக வாக்கெடுப்பு நடந்தது. கடந்த ஒரு வாரம் நடந்த வாக்கெடுப்புக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 1 தொடங்கியது.

சாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-

தினத்தந்தி : சாத்தான்குளம் சம்பவம்: எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.
தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது! சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:..

சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கு:காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது தினத்தந்தி : சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

சாத்தான்குளமும் தூத்துக்குடியும் கூறுவதென்ன? இந்துத்வாக்களின் நச்சு கரங்கள் ...

சாத்தான் குளம் காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு
கொடுமையாக கொலை செய்யப்பட்ட திரு ஜெயராஜும் அவரது மகன் பெனிக்சும் உலகத்திற்கு  மிக முக்கியாமான   செய்திகளை கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
அரச பயங்கரவாதம் என்பது தமிழ்நாட்டிலும் வந்து விட்டது என்ற முக்கிய செய்தி இவர்களின் கொலையில் இருந்து அழுத்தமாக தெரிய வந்துள்ளது .
நாட்டின் எந்த சட்டஒழுங்கு முறைக்கும் அடங்காத ஒரு  சமுகவிரோத சக்தியின் நச்சு கரங்கள் அரசு நிர்வாக பொறி முறைக்குள் காலூன்றி விட்டது தெரிய வந்துள்ளது.
சேவாபாரதி அல்லது  friends of police என்பது அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட .  எதற்கும் துணிந்த ஒரு சமுக விரோத வன்முறை  இயக்கமாக காவல் துறைக்குள்ளேயே ஊடிருவி விட்டிருக்கிறது .
இது நாசிகளின் தன்மையை ஒத்திருக்கிறது .
சாத்தான் குளத்தில் தங்கள் உயிரை கொடுத்து இந்த உண்மையை மக்களுக்கு ஓங்கி உரைத்துள்ளார்கள் தந்தை செல்வராஜும் மகன் பெனிக்சும்.
இவர்கள் ஒரு திருப்பு முனையின் அடையாள சின்னமாகி விட்டார்கள்.
தம்பி பெனிக்ஸ் தமிழ் பற்றாளராகும் .
இந்த இளைஞர் போன்ற பலரின் தமிழ் உணர்வை பயன்படுத்தி இவர்களை தவறான பாதையில் தள்ளி விட்டுள்ளது நாம் தமிழர் இயக்கம் .
இந்த தம்பியும் தனது முகநூலில் திமுக பற்றியும் ஸ்டாலின் உதயநிதி பற்றியும் பல கேலிகளை பதிவேற்றி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் வரலாறு பற்றி இந்த தம்பி போன்றவர்கள் அறிந்ததெல்லாம் சீமான் கூறியவே . அவற்றில் எள்ளளவும் கூட உண்மை கிடையாது.

அமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள் ..

Hema Sankar : அமெரிக்காவில் ‘முதல் முறையாக’ வழக்காக மாறியுள்ளது அவ்வளவு தானே தவிர, இது முதல்முறை நடக்கும் சம்பவம் அல்ல.
1. அப்பட்டமாக சாதிக்கு சங்கங்கள் இங்கு இருக்கிறது
2. மொழி வாரியாக இங்கு சங்கங்கள் இருக்கிறது. ( தமிழ் சங்கம், தெலுங்கு சங்கம், குஜராத்தி, ராஜஸ்தான் etc ). இவைகளில் பெரும்பாலான சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் ஏதோ ஒரு புள்ளியில் சாதிய ரீதியில் இணைக்கபடுகிறார்கள்.
3. நண்பர்கள் குழுக்கள் இருந்தாலும் அதிலும் ‘ South Indians’ ‘North Indians’ தனித்தனித் குழுவாக தான் இருப்பார்கள்.
4. வட இந்தியர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட privileged சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் ( mostly vegetarians ). வட இந்தியாவில் பீகார், ஒரிசா, north East போன்ற இடங்களில் இருந்து வருபவர்களிடம் நட்பு பாராட்டுவதில்லை.
5. பெரும்பாலும் இஸ்லாமியர்களிடமும் நட்பு வைத்துக்கொள்வதில்லை
6. தெலுங்கு சங்கங்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். அவர்களின் எண்ணிக்கை அதிகமும் கூட. சாய் பாபா கோவில்களில் இருந்து ஆபிஸ் லாபியிங் வரை தெலுங்கு பேசுபவர்களுக்கு ஒரு circle இருக்கிறது.

லண்டனில் தமிழ் சிறுமி கொலை! தாயார் தற்கொலை முயற்சி!

சிறுமி கொடியோடு
ceylonmirror.net லண்டன் மிச்சம் பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தயார் காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். நேற்று மாலை லண்டன் மிச்சம் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தை அடுத்து காயப்பட்ட இருவரும் ஏயர் அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட போதும் நான்கு வயது மகள் உயிரிழந்துவிட்டார்.
இது பற்றி தகவல் அளித்த ஸ்கொட்லன்ட் யாட் இக்கொலை தொடர்பாக தாங்கள் வேறு யாரையும் தேடவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி தாயாரையே கொலைக்குக் காரணம் எனக் கருதுகின்றனர்.
சில வாரங்களுக்கு முன் லண்டன் இல்பேர்ட் பகுதியில் இரு குழுந்தைகளைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம்
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனில் தயார் பிள்ளைகளைக் கொலை செய்து தன்னையும் தற்கொலை செய்ய முயற்சித்த இரு சம்பவங்கள் லண்டன் தமிழ் சமூகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

கும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி"&

பா.ஜ.க நிர்வாகி சரவணன்
பா.ஜ.க சரவணன்
கொலை செய்யப்பட்ட கோபாலன்
கொலை செய்யப்பட்ட கோபாலன்
`வருமானமும் போச்சு.. கடையும் போச்சு!’ -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி.
vikatan.com - கே.குணசீலன் : கொலை< கும்பகோணத்தில் கடையைக் காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரமுகரின் தந்தை ஒருவர் பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலன் (68) இவருடைய மகன் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அப்பகுதியின் மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ ஸ்ரீ 108 அபினவ உத்திராதி மடத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமடத்தின் தலைமை அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த மடத்திற்கு என நாச்சியார்கோயில் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதன், 1 ஜூலை, 2020

உத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக்க வந்த பெண்ணுக்கு .. வீடியோ


Hemavandhana - tamil.oneindia.com : லக்னோ: ஒரு பெண் தனக்கு பிரச்சனை என்று புகார் தர ஸ்டேஷனுக்கு வந்தால், அந்த பெண்ணை முன்னாடி நிற்க வைத்து கொண்டே சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார் ஒரு போலீஸ்காரர்! உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் என பெருகி பெருகி வருகிறது. இங்கு டியொரியா என்ற மாவட்டத்தில் ரொம்ப கேவலமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பாட்னா என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது.. அதனால் பாட்னா ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர சென்றார். அப்போது ஸ்டேஷனில் பீஷ்ம் பால் சிங் என்ற போலீஸ்காரர் இருந்தார்..
பெண்ணிடம் புகாரை பெற்று கொண்டு, தனது அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து கொண்டு நின்றிருக்கிறார்.. பிறகு சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்< இதை பார்த்ததும் அந்த பெண் தனது கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளம்பி சென்றுவிட்டார்..

உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்


மாலைமலர் : பெங்களூருவில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு 50 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. முடிவில் அவர் ஆஸ்பத்திரி வாசலிலேயே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
 பெங்களூரு: பெங்களூரு எஸ்.பி. ரோடு அருகே நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது நபர். தொழில் அதிபரான இவர் சொந்தமாக ஆஸ்டின் டவுன் பகுதிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த மாதம்(ஜூன்) 27-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை, அவருடைய உறவினர் ஒருவர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்.

சாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது

காவலர் ரேவதி 
thoothukudinakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில்  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பதவியேற்றார். பதவியேற்றவுடன் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர்.
எஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் செல்லவில்லை. மற்றவர்கள் சென்றுள்ளனர். இதில் மற்றவர்களை அனுப்பிவிட்டு எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந்தர் அய்யர்) Cisco மீது வழக்குப் பதிவு

சுந்தர அய்யர்

ரமணா கொம்பெலா
tamil.samayam.com:: அமெரிக்காவில் தலித் ஊழியர் மீது பாகுபாடு காட்டியதாக சிஸ்கோ நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. க்ரிட்டிக் விமர்சனம்" ;அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வரும் சிஸ்கோ
நிறுவனத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர் மீது ஜாதி ரீதியான பாகுபாட்டு காட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் ஒரு தலித் என்று கூறப்படுகிறது.
இவ்விவகாரத்தில் சிஸ்கோ நிறுவனம் மீது கலிபோர்னியா மாகாண அரசு வழக்கு தொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. சிஸ்கோ நிறுவனத்தை சேர்ந்த இரு மேலாளர்களின் பெயர்கள் இம்மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதி ரீதியான பாகுபாடுகள் அமெரிக்காவுக்கு புதிதல்ல. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் தலித் ஊழியர்களில் 67 விழுக்காட்டினர் நியாயமாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும், இந்த ஜாதி பாகுபாடு பிரச்சினைகள் குறித்து இத்தனை ஆண்டுகளாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவில் கைது 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு

பிந்திய செய்தி : காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செயப்பட்டார் .. 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு . இரு காவல் ஆய்வாளார்கள் மற்றும் 4  police  ரவுடிகள் மீதும் சி பி சி ஐ டி யினர் கொலை வழக்கு பதிவு

தினகரன் : சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு வழக்கை இரட்டை  கொலை வழக்காக பதிவு செய்ய சிபிசிஐடி முடிவு?
 தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயராஜ் குடும்பத்தினர், பெண் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

மகிந்தா - கோத்தபாயா கசமுசா ? தேர்தலுக்கு பின் நானே ஆட்சி செய்வேன் .. மகிந்தா!

சிலோன் மிரர்  : எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் அதிகாரத்தை தான்
கையில் எடுக்க போவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கூறியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக கலந்துரையாடலின் போதே மகிந்த இதனை கூறியதாகவும் பொன்சேகா குறிப்பட்டுள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டார். இதனையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த இடமாற்றத்தை செய்தார். அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாமல் ராஜபக்சவின் நண்பர்.
நாமல் ராஜபக்ச இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்லும் போது அவருக்கு பாதுகாப்புக்காக செல்லும் நபர். தன்னை இடமாற்றம் செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி, நாமலிடம் கூறியுள்ளார்.

ஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்! – பின்னணி என்ன?

மகேஷ்குமார் அகர்வால்இடமாற்றப்பட்ட கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் vikatan.com - எஸ்.மகேஷ் : ;
சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுப் புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி இடமாற்றம்: தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேற்றிரவு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
“சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருந்த சுனில்குமார், மனித உரிமை கமிஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய டேவிட்சன் ஆசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஏடிஜிபி operation – ஆக இடமாற்றப்பட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றிய எம்.ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபி operation – ஆக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. விசாரணைக்கு பிறகே முடிவு- சிபிசிஐடி ஐஜி பேட்டி

விசாரணைக்கு பிறகுதான் முடிவு
வழக்கு பதிய ஏன் தாமதம்? விமர்சனங்கள்   tamiloneindia.comcom  :தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக, காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வது பற்றி விசாரணைக்கு பிறகுதான் முடிவு செய்யப்படும் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியானதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று முதல் சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தனர். பிறகு ஜெயராஜ் வீட்டுக்குச் சென்று, அவர், குடும்பத்தாரிடம், நடந்தவை குறித்து கேட்டறிந்தனர் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணை நடத்திக் கொண்டிருக்க கூடிய மதுரை ஐகோர்ட் கிளை, தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அடிப்படையில் பார்த்தால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

என்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த தொழிலாளர்கள்..


நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.  காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாலைமலர் :நெய்வேலி 2வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 7 பேர் பலியான சம்பவத்தில் முதன்மை பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்.எல்.சி. விபத்து - 2வது அனல்மின் நிலைய பொது மேலாளர் சஸ்பெண்ட் என்எல்சி விபத்து நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் பல தொழிலாளர்கள் சிக்கினர். இவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் காவலர் - யார் இவர்?

BBC : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
சமூகத்தின் அனைத்து தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
யார் இந்த ரேவதி? அவர் அளித்த சாட்சியம் என்ன?
சாத்தான் குளம் தந்தை - மகன் ஆகியோர் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், கோவில்பட்டி நீதித் துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த விசாரணை அறிக்கையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லையென்றும் மரியாதைக் குறைவாகவும் மிரட்டு வகையிலும் நடந்துகொண்டார்கள் என்றும் நீதித் துறை நடுவர் கூறியுள்ளார்.
நீதித்துறை நடுவரிடம் தலைமைக் காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம், சம்பவ தினத்தன்று நடந்த விவகாரங்களை விரிவாக விவரிக்கிறது.
"கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும் அதில் லத்தி மற்றும் டேபிளில் கரை படிந்துள்ளதாகவும் அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் உடனடியாக அதனைக் கைப்பற்ற வேண்டுமென்றும் கூறினார்.

அரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை

தந்தை, மகன் மரணம்- அரசு மருத்துவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை
அரசு மருத்துவர் வெண்ணிலா
மாலைமலர்: தந்தை, மகன் மரணம் தொடர்பாக அரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்தந்தை, மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய அடித்ததாக மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தததால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை மேற்கொண்டார். ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

ஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என்கவுண்டர் செய்யப்பட வேண்டியவர்கள் ....

JP Terry   ": எங்கள் பகுதியில் இருக்கும்​ கிராமபுற​ மக்களும் விளிம்புநிலை மக்களும் செல்போன் வாங்குவது, ரீஜார்ஜ் செய்வது இவற்றிற்கெல்லாம் தம்பி பெனிக்ஸ் கடையை தான் நாடுவார்கள்.
காரணம் மிக​ எளிய​ தவணையில் வட்டியில்லாமல் பொருட்களை அவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு உதவுவான் தம்பி. சாதி,மதம் கடந்து அனைவருக்கும் இந்த​ உதவியை செய்து வந்தான். தவணை பணம் கட்ட​ முடியாதவர்களை பணம் கட்டச்சொல்லி ஒருபோதும் அவன் வற்புறுத்தியதில்லை. உங்களுக்கு முடியும் போது கட்டுங்கள் என்று கூறுவான் தம்பி.
தான் படித்த​ Master of Social work படிப்பிற்கேற்ப​ இந்த​ சமூகத்திற்கு உதவி செய்து வாழ்ந்தான் தம்பி! இறந்த​ பிறகும் தனக்கு நேர்ந்த​ இந்த​ கொடுமை வேறு யாருக்கும் நடக்கூடாது என்று போராடி கொண்டிருக்கிறான் தம்பி.

"லுங்கிகள்" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. விடை தெரியாத கேள்விகள்.. அத்தனைக்கும் யார் பொறுப்பு?

RSS-ன் சேவாபாரதிதான் இன்றய Friends of Police- என்ற அமைப்பு . இது பற்றி பல பயங்கர செய்திகள் உலா வருகிறது . விரைவில் எல்லா செய்திகளும் வெளியே வரும் . இவர்களின்  குற்ற பின்னணி  மிகவும் அதிர்ச்சிகரமானவை .. tamil.oneindia.com  :சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. அத்தனை சீக்கிரம் யாராலும் ஜீரணிக்க முடியாத மிக கொடுமையான சம்பவம்.. 
குமரி முதல் டெல்லி வரை அத்தனை பேருமே பதறிப் போய் விட்டார்கள்.. இந்த கொடூர சம்பவத்தில் ஒவ்வொருவரிடமும் கேள்விகள்தான் அதிகம் இருக்கிறது. எந்த கேள்விக்கும் முறையான பதில் இல்லாமல் அத்தனை பேரும் துடித்து போயுள்ளனர். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் ஏகப்பட்ட ஓட்டைகள். ஊரடங்கு காலத்தில் வணிக நிறுவனங்களை திறந்து வைப்பதில் சில கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. அதை கடைப்பிடித்து மக்களும், வியாபாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். இதில் குழப்பமே இல்லை. ஆனால் சில இடங்களில் கடைகளை மூடுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதற்கேற்ப போலீஸாரும் ரோந்து வாகனத்தில் சென்று கடையை மூடுங்க என்று எச்சரிக்கிறார்கள். இதிலும் குழப்பமில்லை. இதுவும் இயல்பானதே.

மாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி! வீடியோ


மின்னம்பலம் : மாஸ்க் அணிந்துகொண்டு பேச வேண்டும் என்று கூறிய பெண் ஊழியரை ஆந்திர சுற்றுலாத் துறை துணை மேலாளர் கொடூரமாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சுற்றுலாத் துறை விடுதியில் துணை மேலாளராகப் பணியில் இருப்பவர் பாஸ்கர் ராவ். அதே விடுதியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்யும் உஷாராணியிடம் பேச வந்துள்ளார். அப்போது முகத்துக்குக் கவசம் அணிவதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அணியாமல் தன்னிடம் பேசக் கூடாது என்றும் உஷாராணி கூறியிருக்கிறார்.

சாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's George Floyds': Father-Son Death in Police Custody Sparks Outrage


hkhkhhkh

.nytimes.com/ :CHENNAI — Outrage at the death of a father-son duo in the custody of Indian police earlier this week mounted on Saturday, with thousands on social media comparing the incident to the death of George Floyd in the United States.
J Jayaraj, 59, and Bennicks Immanuel, 31, were subjected to a brutal thrashing, which resulted in rectal bleeding and eventual death, according to a letter to government officials written by Jayaraj's wife J Selvarani. The letter, based on eyewitness testimony and reviewed by Reuters, seeks action against the police officers involved.
Police in Sathankulam, a town located 50 km (31 miles) south of the port city of Thoothukudi in southern Tamil Nadu state, said in a first information report (FIR) reviewed by Reuters that Jayaraj and Bennicks were picked up on Friday, June 19 for breaching coronavirus lockdown rules.
Bennicks died on Monday after complaining of breathlessness and Jayaraj died Tuesday, Chief Minister Edappadi Palaniswami, who oversees the police in the state, said in a statement on Wednesday. Two policemen involved in the incident had been suspended, he added.

ஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட இல்லையே?

JP Terry : கேள்வி:    சாதி பெயரை குறிப்பிட்டு காங்கிரஸ் டீவிட்
செய்திருக்கிறதே! இது சரியா?
பதில்: சரியே! தற்போது நாடு இருக்கும் சூழ்நிலையில் இந்த​ டீவிட் சரியே! காரணங்கள் இதோ:
நாடார்களில் பலர் சங்கிகளாக​ இருக்கிறார்கள். மோடி கொட்டாவி விட்டாலே "வாவ்! அதிரடி ஜீ" என்று பதிவு போடுவார்கள் நாடார்கள் சங்கிகள். ஆனால் இந்த​ நாடார் சங்கிகள் சாத்தான்குளத்தில் நடந்த​ படுகொலைகளை பற்றி மூச்சே விடாமல் இருக்கிறார்கள்.
ஒருமுறை பிஜேபியை சேர்ந்த​ பார்ப்பான் "கிஷோர் கே சுவாமி" என்னும் கஞ்சா போதை பல்லிக்கும் எனக்கும் நடந்த​ முகநூல் விவாதத்தில் அந்த​ பல்லிக்கு முட்டு கொடுத்தவர்கள் நாடார் சங்கிகள். சாத்தான்குளத்தில் பலியானவர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் "கிஷோர் கே சுவாமி" எப்படி கொச்சையாக​ பேசுகிறான் என்பது நீங்கள் அறிந்ததே!
சாத்தான்குளத்தில் போலீஸ் அராஜகத்தால் பலியான அப்பாவிகள் மீது மதரீதியாக​ வன்மம் கக்கும் வேலைகளை பார்ப்பான்கள் மட்டும் செய்யவில்லை, நாடார் சங்கிகளும் செய்கிறார்கள்.
"பாசிச​ பிஜேபி ஓழிக​" என்று விமான நிலையத்தில் (விமானத்தில் கூட​ அல்ல​, விமானநிலையத்தில் தான்) குரல் ஏழுப்பிய​ பெண்ணை சிறையில் அடைத்து பழிவாங்க​​ எப்படியெல்லாம் தமிழிசை முயன்றார் என்பது அனைவருக்கு தெரியும். அந்த​ பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்க​ தமிழிசை கடும் முயற்சி செய்தார். ஆனால் சாத்தான்குளம் கொடுமையை கண்டும் காணாமல் கள்ளமவுனமாக​ தமிழிசை இருக்கிறார்.

செவ்வாய், 30 ஜூன், 2020

உயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் "காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரிக்கலாம்"

BBC : சாத்தான் குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ் - புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான அரசுத் தரப்பு கூடுதல் வழக்கறிஞர், ஒருவார காலமாக இருந்த மன அழுத்தத்தின் காரணமாக சில சம்பவங்கள் நடந்துவிட்டதாகவும் வழக்கு தற்போது சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால், இந்த வழக்கில் ஒரு விநாடியைக்கூட வீணாக்க விரும்பவில்லையென தெரிவித்த நீதிபதிகள், சி.பி.ஐ. இந்த வழக்கைப் பொறுப்பேற்கும்வரை, வழக்கை நெல்லை காவல்துறை விசாரிக்கலாம் எனக் கூறினர். பிறகு இந்த வழக்கு, பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது  வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை அறிக்கை, நீதித் துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் நெல்லை மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் வழக்குப் பதிவுசெய்து விசாரணையைத் துவங்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.