சனி, 9 ஜூலை, 2016

சித்ரவதையை ரசிக்கும் தமிழ் சினிமா எப்போது மாறும்?

theekkathir.in :சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிவந்தது 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் கதாநாயகன் துரத்தி துரத்தி கதாநாயகியான சோனியா அகர்வாலை காதலிப்பார். கதாநாயகன் கிருஷ்ணா வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுவார். பல பெண்களை பாலியல் கண்ணோட்டத்துடன் இம்சை அளிக்கும் நபர். பால் பூத் வரிசையில் நிற்கும் முதியவர்களிடம் தனக்கு சேர்த்து பால் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய மகளையும் மனைவியையும் கரெக்ட் பண்ணுவேன் என்று மிரட்டல் விடுத்து அவர்களை தனது தேவைகளை நிறைவேற்ற வைக்கும் அளவுக்கு கேவலமான நபர்.  ஆனால் பல சமயங்களில் கதாநாயகியை விரட்டி விரட்டி காதல் என்ற பெயரில்  துன்புறுத்துவதை தாங்க முடியாமல் கதாநாயகியால் பொறுக்கி என்று திட்டப்பட்டாலும் கதாநாயகனை ஒரு கட்டத்தில் அவர் காதலிக்க தொடங்கி விடுவார்.

....சுவாதி கொலை வழக்கு....ஆயிரம் குற்றவாளிகள்......ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி தமிழகம் முழுவதையும் அதிர்வலைக்கு உட்படுத்திய ஸ்வாதியின் கொலை மிகவும் கொடூரமான ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கு இல்லை. மறக்கவும் இல்லை. “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது” என்று சட்டம் பயின்ற ஒரு வழக்கறிஞரான எனக்கு கொலை வழக்கின் விசாரணைப் போக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இக்கேள்விகள் எனது தனிப்பட்ட ஐயங்கள் மட்டும் இல்லை. பெரும்பாலான மக்கள் விளக்கம் எதிர்பார்த்து எழுப்பும் சந்தேகங்களும் இவையே.
ராம்குமார் என்ற நபரை கொலையாளி என்று காவல்துறை கைது செய்துள்ளது. உண்மைக்கும் இவர்தான் குற்றவாளி எனில் கண்டிப்பாக இவர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் விசாரணையின் நகர்வுகளைக் காணும் பொழுது உண்மையிலேயே ராம்குமார்தான் கொலையாளியா என்ற சந்தேகம் எழுகிறது.படத்தில் பிலால் மாலிக்கும் சுவாதியின் தந்தையும்

ஜெயலலிதாவை விட பெரிய பெரிய திருடர்கள் எல்லாம் செமஜாலி...அம்மா மட்டும் என்ன பாவம் பண்ணினாங்க?

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சுருட்டி விட்டு செம ஜாலியாக இந்தியாவின் தலை எழுத்தை தங்கள் இஷ்டத்துக்கு எழுதிக்கொண்டு இருக்கும் இந்த பணமுதலைகளை தூக்கி உள்ள போட திராணி இல்லை . பாவம் நம்ப இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை மட்டும் சதா நீதி மன்றம் அலையவிடுவது நல்லாவே இல்லை .அதிலும் பாருங்க பெருவாரியான திருட்டு முதலாளிகள் எல்லாம் குஜராத்திங்க . இப்படிக்கு அம்மாவின் அப்பாவி அடிமைகளில் ஒருத்தி

பாரி(விக்)வேந்தர் பச்சைமுத்து வேந்தர் மூவீஸ் மதனை போட்டு தள்ளி விட்டாரா? வியாபம் ஊழல் கொலைகள் போல SRM ஊழல்.....?

நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தம் உள்ளவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.ம் வாரிசுகளை மருத்துவர்களாக்கிப் பார்த்து விடுவதென்கிற லட்சியவெறியோடு வாழ்ந்துவரும் திடீர்ப் பணக்காரர்களும், அரசு உயரதிகாரிகளும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். முதலாளி ‘பாரிவேந்தர்’ பச்சமுத்து தனக்கும் வேந்தர் மூவீஸ் மதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருப்பதால், அடுத்த ஆண்டு தம் பிள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்க யாரிடம் இலட்சங்களைக் கொடுப்பது என்பதே அவர்களுடைய கவலை.
இந்த ஆண்டு மதனிடம் துண்டு சீட்டு வாங்கியவர்களின் கதை கந்தலாகிவிட்டது. 102 பேரிடம் வாங்கிய பணத்தை வேந்தரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கடிதத்தில் எழுதியிருக்கிறார் மதன். பணம் கொடுத்தவர்கள் பச்சமுத்துவின் வீட்டு வாசலில் நின்று சத்தம் போடவே, அவர்களிடமிருந்து பாரி வேந்தரைக் காப்பாற்ற அவருடைய வீட்டுக்கு மட்டுமின்றி, தெருவுக்கே காவல் நிற்கிறது புரட்சித் தலைவியின் காவல்துறை.

சென்னையில் போதை சாக்லெட்,கஞ்சா, பிரவுன் சுகர், ஓபியம், குட்கா, அபின், கேட்டமைன்.. சௌகார் பேட்டை?

முதல்வர் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தண்டையார் பேட்டை. இங்குள்ள பள்ளியில் மாணவன் ஒருவன் கடந்த (ஜூலை- 2016) 4-ம் தேதி பள்ளிக் கூடம் அருகே கடையில் வாங்கிச் சாப்பிட்ட சாக்லெட்டால், மயங்கி கீழே விழ, அந்த நிமிடம் தொற்றிய பரபரப்பு தமிழகம்  முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகராட்சி மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள், ஆர்.கே.நகரின் சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று அரசு சக்திகள் மொத்தம் திரண்டு, மாணவனின் மருத்துவ சிகிச்சைக்கு ஆளாய்ப் பறந்தது.போதை சாக்லெட்டைச் சாப்பிட்டு விட்டு சிகிச்சையில் இருந்த மாணவன் சாக்லெட் சாப்பிட்ட அன்றிலிருந்த அதே மயக்க நிலையிலேயே தொடர்ந்து மருத்துவ மனையில் இருந்து வருகிறான் என்கிறது மருத்துவமனை வட்டாரம்.& ஒரு சம்பவம் நடந்து முடிந்த பின்னரே, அதுகுறித்த விழிப்புணர்வு, ரெய்டு என்றெல்லாம் களத்தில் இறங்கும் அதிகாரிகள் , இந்த விவகாரத்திலும் 'மாணவன் சுருண்டு விழுந்த' பின்னர், நடத்திய ரெய்டில் பெரும்பாலான கடைகளில் 'ஜாலி சாக்லேட்' இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

700 போலீசார் அதிகாரிகளின் வீட்டில் துணி துவைத்தல் போன்ற வீட்டு பணிகளை செய்கிறார்கள்

700 policemen deputed in non-policing duties at VIPs homes in Chennai
Almost 3 percent of Chennai's constabulary is engaged in non-policing `duties' like carrying out household chores for serving and retired IPS and IAS officers, and in some cases even for their in-laws. According to the Times of India, the revelation came from none other than the state director general of police Ashok Kumar at a recent law and order review meeting convened by chief secretary P Rama Mohana Rao. A source said Kumar was prompted to reel out statistics on wastage of police personnel when Chennai city police commissioner T K Rajendran attempted to deflect criticism for the worsening image of the city police by blaming it on shortage of staff. Asked about the additional strength required for the city, the commissioner demanded 600 policemen.

பிராமணராகப் பிறப்பது அரிதினும் அரிதானது.... விஜய மல்லியா கூட பார்ப்பாந்தாய்ன்

உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”
கால்நடை மேய்ச்சலும் விவசாயமும் கலந்த பொருளாதாரத்தைக் கொண்ட அரை நாடோடிகளாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தார்கள்.– வரலாற்றாசிரியர் டி. என்.ஜா ஆரியரிடமிருந்து அவர்களுக்கே உரித்தான பாண்டங்கள், கருவிகள், ஆயுதங்கள் என எதுவும் இல்லை. ஆரியர்கள் தாம் தொடர்புகொள்ளும் மக்களிடம் இருந்து தமக்கு ஒத்துப்போகும் எதையும் ஏற்றுக்கொண்டார்கள். மரபணு ரீதியாகவோ, உடல் அமைப்பு ரீதியாகவோ அவர்கள் ஒரேவிதமானவர்களாய் இருக்கவில்லை. இனக்குழுவிற்குள் புதியவர்களை ஏற்றுக்கொள்வதென்பது, போர் வெற்றி மூலமோ ஆரியமாக்கப்பட்டிருந்த பிற மக்களுடன் குறிப்பிட்ட அளவு கலப்புமணம் புரிவதன் மூலம் அடிக்கடி நடந்தது. ஆரியரின் மண்டை ஓட்டு வடிவம் என எதுவும் மெய்ப்பிக்கப்படவில்லை. – வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி.  நாம் ஏன் வரலாறு தெரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்கலாம். ஆதாரங்கள் இல்லாத எதிர்வினைகள் வெறும் அவதூறுகளாகவே எஞ்சிவிடுகின்றன. அதனால் ஆதாரங்கள் தருகிறோம். மென்பொறியாளர் ஸ்வாதியின் படுகொலை, அவர் பெண் என்பதற்காக, பொதுவெளியில் வைத்து படு பயங்கரமாக கொல்லப்பட்டார் என்பதற்காக அவருக்கு நீதி கோருவதை விடுத்து, அவர் சார்ந்த பிராமண சாதியை வைத்து அதிகம் விவாதிக்கப்படுகிறார்.

கர்நாடகா.. மூட நம்பிக்கை தடை சட்டம்: பீதியால் நிறுத்திய முதல்வர்

பெங்களூரு:'கர்நாடகா பலி மற்றும் இதர அவல நடைமுறைகள், அகோரி நடைமுறைகள் மற்றும் மாயமந்திரத்தை நிர்மூலமாக்கும் சட்டம் - 2016' மசோதாவுக்கு அமைச்சர் களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. கர்நாடக அமைச்சரவை கூட்டம், முதல்வர் சித்தராமையா தலைமையில், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. இதில், 'கர்நாடக பலி மற்றும் இதர அவல நடைமுறை கள், அகோரி நடைமுறைகள் மற்றும் மாய மந்திரத்தை நிர்மூலமாக்கும் சட்டம் - 2016' தொடர்பாக, விரிவாக விவாதித்து அனுமதி பெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. இவ்விஷயம், நேற்றைய அமைச்சரவை கூட்டத் தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களின் பட்டியலிலும்இடம் பெற்றிருந்தது. ஆனால், இந்த சட்டத்துக்கு பொது மக்கள், மடாதிபதிகள் உட்பட, மற்ற துறைகளின் முக்கியஸ்தர்களிடமிருந்து பரவலாக எதிர்ப்பு கிளம்பியதால், இச்சட்டம் பற்றி விவாதிக்க அமைச்சரவை முன்வரவில்லை.  பகுத்தறிவு கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பு இருந்தே தீரும் ஆனாலும் அவற்றை அமுல் படுத்த வேண்டும். மதவெறியர்களுக்கு அடிபணியக்கூடாது 

யுவகிருஷ்ணா :இங்கே இந்தியைத் திணிப்பது வடக்கத்தியர்களுக்கு கவுரவப் பிரச்சினை

எஸ்.வி.சேகர் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர். சிறுவயதிலிருந்தே அவருக்கு ரசிகனாக இருக்கிறேன். எங்கள் ஊர் பிரின்ஸ் ஸ்கூலில் அவர் நடிப்பில் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ பார்த்தபிறகு, கிட்டத்தட்ட அவரது அனைத்து நாடகங்களையும் சென்னை அரங்குகளில் நேரிலேயே கண்டிருக்கிறேன். பிற்பாடு ஆடியோ கேசட்டுகளாக அவை வந்தபோது அத்தனையையும் வாங்கினேன். ‘அல்லயன்ஸ் பதிப்பகம்’ பதிப்பித்திருக்கும் அவரது நூல்கள் எல்லாமே என்னிடம் உண்டு. எஸ்.வி.சேகர் நடித்த சினிமாப்படங்களையும் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே பார்த்திருக்கிறேன். ‘வறுமையின் நிறம் சிகப்பு’, ‘சிம்லா ஸ்பெஷல்’ படங்களில் அழுத்தமான நடிப்பில் கலக்கியிருப்பார். இராம.நாராயணன் படங்களில் எஸ்.வி.சேகர் நடித்த காலம் தமிழ் சினிமா காமெடியின் பொற்காலம். எந்தளவுக்கு எஸ்.வி.சேகரை பிடிக்குமென்றால், அவரது மகன் நடித்தார் என்கிற ஒரே காரணத்துக்காக ‘வேகம்’ என்கிற ரொம்ப சுமாரான படத்தைகூட முதல் நாளே தியேட்டருக்கு போய் பார்த்தேன்

வெள்ளி, 8 ஜூலை, 2016

திருப்பூரில் 100 ஐ எஸ் பயங்கரவாதிகள்? மே.வங்கத்தில் கைதானவன் வாக்குமூலம்

திருப்பூர்: மேற்கு வங்கத்தில் பிடிபட்ட, ஐ.எஸ்., ஆதரவு பயங்கரவாதி, திருப்பூரிலுள்ள நிறுவனங்களில், 100 பேரை வேலைக்கு அமர்த்தியிருப்பதாக, 'திடுக்' தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது முஸ்ருதீன், 27, திருப்பூர், ஆண்டிபாளையத்தில் மளிகை கடை நடத்தி வந்தான். சமீபத்தில், கோல்கட்டா சென்ற இவனை, மேற்கு வங்க மாநில போலீசார் கைது செய்தனர். ஆவணங்கள் பறிமுதல் : சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.,சுடன் இவனுக்குள்ள தொடர்பை, மேற்கு வங்க போலீசார் உறுதி செய்தனர். இவனிடமிருந்து துப்பாக்கி, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, திருப்பூரிலுள்ள அவனது வீடு மற்றும் மளிகை கடையை நேற்று முன்தினம் சோதனையிட்ட புலனாய்வு பிரிவினர், வாள், டைரி, 'லேப் டாப்' மற்றும் சில ஆவணங்களை கைப்பற்றினர். கைதான முஸ்ருதீன், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின், இந்திய பிரிவு பொறுப்பாளருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தது குறித்தும் விசாரணை நடத்தினர்.

விஷ்ணுப்பிரியா டி எஸ் பி ..ஒரு நிஜ ஹீரோயின் .. ஆங்கிலத்தில் அசத்தியவர்.. சகல உயிரினங்களிலும் ஆழமான அன்பு கொண்டவர்

திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கை தமிழக போலீஸ் விசாரித்தால், நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த விஷ்ணுப்ரியா குடும்பத்தினர், நீதிமன்றம் படியேறினர். அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று தமிழகம் முழுக்க பலத்த குரல் எழுந்தது. இந்த நிலையில், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே நேரம், 'போலீஸ் வேலைக்கே விஷ்ணுப்ரியா லாயக்கு இல்லை, கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டார்' என்ற விமர்சனத்தையும் ஒருதரப்பினர் பரப்பினார்கள். வழக்கு விபரங்களையெல்லாம் தாண்டி, விஷ்ணுப்ரியா சக மனுஷியாக எப்படி என்பது குறித்த தகவல்கள் இங்கே... * டி.எஸ்.பி ட்ரைனிங்கில் எல்லோருக்கும் ரன்னிங் காம்படீஷன் நடப்பது வழக்கம். அதில் பெண்கள் பெண்களோடும், ஆண்கள் ஆண்களோடும் சேர்ந்து தனித்தனியாகத்தான் போட்டியில் பங்கேற்பார்கள். ஆனால், விஷ்ணுப்ரியா ஆண்களோடு மோதி வெல்வார்.

Times Now மோடியின் காலை நக்கிய அர்னாப் கோஸ்வாமி..


ஊடகவெளியை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அர்னாப் கோஸ்வாமியை தெரிந்திருக்கும். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர். அன்றாடம் இரவு 'இந்தியா அறிய விரும்புகிறது' (India Wants to Know) என முழங்குபவர். தமிழ்நாட்டு மக்களுக்கு எளிதில் புரியும்வகையில் சொல்லவேண்டும் என்றால், தந்தி தொலைக்காட்சியின் ரங்கராஜ் பாண்டேவுக்கு 'அண்ணன்' என்று வர்ணிக்கலாம். அவ்வளவு தூரம் விவாதங்களில் அவரது 'சுருதி' காதைக் கிழிக்கும்.
கடந்த வாரம், பிரதமர் மோடியை நேர்காணல் செய்தார். ஆட்சியின் இரண்டாம் நிறைவு விழா முடிந்திருக்கும் நேரத்தில் கொடுக்கப்படும் நேர்காணல் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன.  தலித்துக்களை பேட்டி காணும் போது நாய் மாதிரி எகிறி எகிறி குதிக்கும் இந்த பார்ப்பான்... பாருங்கள் எவ்வளவு மென்மையாக பம்மி  பதுங்கி பேசுகிறான்?

போதை பொருள் கடத்தலில் ஆளுநர் ரோசாவின் மகன்?

வருமான வரித்துறையினர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் உள்ள பான், குட்கா, மசாலா தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் வீடுகள், கடைகள், சேமிப்பு கிடங்குகளில் சோதனை நடத்தினர். சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சென்குன்றம் பகுதியில் மட்டும் 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்படிருப்பதும், சட்டத்துக்கு விரோதமாக பல கிடங்குகளும், நிறுவனங்களும் நடைபெற்று வருவதும் கண்டறியப்பட்டது. இதில், தெலங்கானா மாவட்டத்தில் சோதனை நடத்தப்பட்ட போதைப்பொருள் கிடங்கு ஒன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவின் மகனுக்கு சொந்தமானது என்று தகவல்கள் வருகிறது.

டல்லாஸ் துப்பாக்கி சூடு 5 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை Dallas shooting: 5 police officers killed during protest

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் போலீசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டினத்தின் போது ஸ்னிபர் தாக்குதலில் (மறைந்திருந்து துப்பாக்கியால் சுடுதல்) 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் பேட்டன்ரூஜ் நகரில் கடந்த 5-ந் தேதி ஆல்டன் ஸ்டெர்லிங் (வயது 37) என்ற கருப்பர், வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். மறுநாள் மின்னசோட்டா மாகாணத்தில் செயிண்ட் பால் என்ற இடத்தில் பிலாந்தோ காஸ்டைல் என்ற கருப்பரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவ்விரு சம்பவங்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போது மூடப்பட்ட டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு

நந்தினியின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு. | படங்கள்: க.ஸ்ரீபரத் நந்தினியின் இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலையில் இருந்த டாஸ்மாக் கடைக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு. | படங்கள்: க.ஸ்ரீபரத் நந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை நேற்றைய தினம் மூடப்பட்டது. பட்டினப்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை நந்தினி, கொள்ளையனை துரத்தியபோது ஏற்பட்ட விபத்தில் கடந்த 4-ம் தேதி மரணமடைந்தார். கொள்ளையனை பொது மக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்தின் போது, கொள்ளையன் மது அருந்திய நிலையில் இருந்ததை காவல்துறை உறுதி செய்தது.

அகந்தை, அறியாமையின் ஆபத்தான கலவை ஸ்மிருதி இரானி... மோடியின் கண்டுபிடிப்பல்லவா? வேறெப்படி இருக்கும்?

ராமச்சந்திர குஹாமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டஸ்மிருதி இரானி, அகந்தை மற்றும் அறியாமையின் ஆபத்தான கலவை என வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கருத்து தெரிவித்துள்ளார்.
யேல் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் விரிவுரையாற்றியிருக்கும் ராமச்சந்திர குஹா, ஸ்மிருதி இரானி தன்னுடைய அமைச்சகத்தின் நம்பகத்தன்மையை கணிசமான அளவு சீர்குலைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். என்டிடீவி செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.; மூத்த பேராசிரியர்களை ஸ்மிருதி இரானி நடத்திய விதம் குறித்து நினைவுகூர்ந்த குஹா, “கூட்டமொன்றில் ஐஐடி இயக்குனர்கள் ஒருவர், ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு ஸ்மிருதி இரானி என்ன சொன்னார் தெரியுமா? ‘நீங்கள் என்ன டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரா இப்படியெல்லாம் கேட்கிறீர்கள்?’ என்றார்”.

எங்களுக்கு நியாயம் கிடைக்கணும்”: ராம்குமாரின் தங்கை


ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் குடும்ப தரப்பில் இருந்து அவருடைய தங்கை முதன்முறையாக பேசியிருக்கிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில்,
“என் அண்ணன் எங்களை எப்போதும் படி படி என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார். எங்களை ஐஏஎஸ் ஆக்கணும் என்று ஆசைப்பாட்டார். அவரும் அப்படித்தான் புத்தகமும் கையுமாக படித்துக் கொண்டிருப்பார். இந்த அளவு செய்து இருப்பார் என்று நம்பவில்லை. கொலையை திசைதிருப்ப இந்த வேலை நடக்கின்றது.
நாங்கள் வழக்கறிஞரை இன்னும் முடிவு செய்யவில்லை. உள்ளூர் வழக்கறிஞரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.” என்றவர், ராம்குமார் கைதின்போது தங்களை பொறுப்பில்லாமல் விரட்டிய ஊடகங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

நான் நிறைய பேச வேண்டியுள்ளது: ராம்குமார் குமுறல்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லையை சேர்ந்த இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்து பேசினார். பிநிதானமாக பேசிய ராம்குமார், மிகுந்த பதற்றத்தில் உள்ளார். ராம்குமாரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காவல்துறை கடுமையாக சித்ரவதை செய்திருக்கிறது. மேலும் காவல்துறை தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்திருக்கிறார்கள் என கூறி ராமராஜனும் பரபரப்பை ஏற்படுத்தினார்.மேலும், நான் நிறைய பேச வேண்டியிருக்கிறது சார். ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். ஃபேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார்.

வியாழன், 7 ஜூலை, 2016

உடல் உறுப்புகளுக்காகக் கொல்லப்படும் அகதிகள் - முன்னாள் கடத்தல்காரர்


சொந்த நாடுகளை விட்டு வெளியேறும் அகதிகள் உடல் உறுப்புகளாகக் கொல்லப்படும் அவலம் பற்றி முன்னாள் கடத்தல்காரர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ஆப்பிரிக்காவின் பல நாடுகளில், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் வாழ இடம் தேடி நகர்கின்றனர். பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுக்கே செல்கிறார்கள். அவர்களை அழைத்துச் செல்வதற்கு சட்டவிரோதமான வழிகள்தான் அதிகமாகக் கையாளப்படுகிறது..வ்வாறு சட்டவிரோதமாக அழைத்துச் சென்று பல நாடுகளில் விடுவதற்கு ஏராளமான பணம் செலவாகிறது. அகதிகளாக செல்வதற்குத் தர வேண்டிய பணம் இல்லை என்று கைவிரிப்பவர்களைக் கொன்று அவர்களின் உடல் உறுப்புகளை விற்று விடுவோம் என்று வெகபிரேபி அட்டா என்ற முன்னாள் கடத்தல்காரர் கூறியுள்ளார்.

அப்போலோ மருத்துவ மனையில் சிறு நீரக விற்பனை... ஆடித்தள்ளுபடி???

டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் நடந்து வரும் சிறுநீரக மோசடி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மக்களின் வறுமையை பயன்படுத்தி  சில லட்சங்களை விட்டெறிந்து சிறுநீரகங்களை பிடுங்கிக்கொள்ளும் கொடூரம் தெரியவந்துள்ளது.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக அப்பல்லோவின்  மூத்த சிறுநீரக பிரிவு மருத்துவர் ஒருவரின் உதவியாளர்கள் சைலேஷ் சக்சேனா, ஆதித்யா சிங் ஆகிய இருவர்  மற்றும் மருத்துவமனையிலிருந்த  மூன்று இடைத்தரகர்களான சிக்தர், மவுலிக், பிரகாஷ்  உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீரக பிரிவு மூத்த மருத்துவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள டெல்லி அரசு இதை விசாரிக்க 5 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. டெல்லியிலுள்ள மேலும் இரண்டு பெரிய தனியார் மருத்துமனைகள் மற்றும் அப்பல்லோவின்  சில ஊழியர்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த அநீதியை விளக்கும் வீடியோ செய்தித் தொகுப்பு  vinavu.com

ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ்... அப்படி என்னதான் நோக்கம்?

கௌதம சித்தார்த்தன்ஆதிக்க அந்தணர்களின் பெரும் தெய்வங்களால் அழித்தொழிக்கப்படும், கபளீகரம் செய்யப்படும் அல்லது கொச்சைப்படுத்தப்படும் நாட்டார் தெய்வங்களின் தொன்மங்கள் பற்றியும் 2000 ஆண்டுகளாக தமிழ்ச்சூழலில் போராடிவரும் நாட்டார் தெய்வங்களின் அடையாள அரசியல் பற்றியும் எவ்வித அடிப்படையும் அறியாமல் உளறியிருக்கிறார் யூர்ஸ்னார். தமிழ் கலைஇலக்கிய தளத்தில் செயல்படுபவன் முட்டாள். மேலைநாட்டுக்காரன் மட்டுமே மாபெரும் அறிவு சீவி… என்பது போன்ற உணர்வை மேலைநாட்டு இலக்கியப் போக்கு தொடர்ச்சியாக உருவாக்கி தமிழ் எழுத்தாளனிடம் ஒரு தாழ்மையுணர்ச்சியை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. தமிழ் நவீன இலக்கியத் தளத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு இலக்கியங்கள் என்ற பெயரில் என்ன கஸ்மாலங்கள் வந்தாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வது. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது..
கௌதம சித்தார்த்தன்: கௌதம சித்தார்த்தன் சமீபத்தில், ‘அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை துவங்கவேண்டும் அதற்கு ஆதரவும் நிதியும் தாருங்கள்..’ என்ற குரல்கள் தமிழ்நாட்டில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.  (www.prearyan.blogspot.com)

கோபாலசாமி நாயுடு பச்சை தலைப்பாகையை கைவிட்டார்...காரணம் கூற மறுப்பு .. சபாஷ் நாயுடு!

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தான் அணிந்த பச்சை தலைப்பாகையை சொன்னபடி  தேர்தலுக்குப்பின் அணியாதது ஏன் என்ற கேள்விக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளிக்க மறுத்துவிட்டார். அண்மையில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, தூத்துக்குடி மாவட்டம்,  விளாத்திக்குளம் புதூரில் நடந்த கூட்டம் ஒன்றில், பச்சைத் தலைப்பாகை அணிந்து தோன்றினார் வைகோ. அப்போது பேசிய வைகோ, "நான் இந்த பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, அவர்களோடு எப்போதும் இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றப் போவதில்லை" என்று உருக்கமாக பேசினார். தொடர்ந்து எல்லா பிரசாரக் கூட்டங்களிலும் இதைப் பேசி கைதட்டல் பெற்றார்.

மதவெறியன் ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு வங்காளதேசம் கோரிக்கை

டாக்கா, ஜாகிர் நாயக் பேச்சுக்களை ஆய்வு செய்யுமாறு இந்தியாவிடம் வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது. வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் வெளிநாட்டினர் வந்து செல்கிற பிரபல ஓட்டலில் 1–ந் தேதி இரவு பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அதிரடிப்படையினர் வந்து அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலின்போது, பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த 22 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். இந்நிலையில் 22 பேர்களை கொன்ற பயங்கரவாதிகளில் ஒருவனை பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் ஊக்குவித்ததாக செய்தி வெளியாகியது. இந்நிலையில் அவரது பேச்சுக்களை ஆய்வுசெய்யுமாறு இந்தியாவிற்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்து உள்ளது. வங்காளதேச தகவல் தொடர்பு துறை மந்திரி ஹசானுல் ஹக், “ஏற்கனவே அவருடைய (ஜாகிர் நாயக்) போதனைகள் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இல்லை என்று புகார் உள்ளது.

சென்னைக்கு அருகே கி.மு. 30,000 - கி.மு. 10,000 வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்

சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள்கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, இந்த ஆண்டில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது.

நாயை மாடியிலிருந்து வீசிய மருத்துவ மாணவர்கள் கைதாகி ஜாமீனில் விடுதலை


சென்னை அருகே தெரு நாய் ஒன்றைய மாடியிலிருந்து தூக்கி வீசிய விவகாரத்தில் தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். கவுதம் சுதர்சனன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகிய அந்த இரு மாணவர்களையும் குன்றத்தூர் போலீசார் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இளைஞர் ஒருவர் தெருநாய் ஒன்றை மூன்றாவது மாடியிலிருந்து தூக்கிப் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

கொலம்பஸ் அமெரிக்காவை ஆக்கிரமித்தான் ... கண்டுபிடிக்கவில்லை !

500 வது கொலம்பஸ் டே - 1992 ல் நியுயார்கில் நடைபெற்ற ஊர்வலம்1992-ம் ஆண்டில் கொலம்பஸ் கண்டுபிடிப்பு 500-வது ஆண்டுவிழா கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல; நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். கொலம்பஸ் கண்டுபிடிப்பின் 500-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை ஒட்டி எழுதப்பட்ட முக்கியமான புதிய கலாச்சாரம் கட்டுரை . அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை’ என்று கூறினால் வாசகர்கள் அதிர்ச்சியடையக்கூடும் அல்லது சுப்பிரமணியசாமி வெளியிடும் பரபரப்பு அறிக்ககை’யுடன் ஒப்பிட்டு ஒதுக்கிவிடவும் கூடும். புதிதாக யோசனை சொல்பவர்களை “இவரு பெரிய கொலம்பஸ் – கண்டு பிடிச்சிட்டாரு” என்று கேலி செய்ததை இன்றோடு நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை.

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ உயிரிழப்பு!

தமிழகத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காவல்துறையினரும், பொதுமக்களும் மரணிக்கும் நிகழ்வுகள் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. ஒசூரில் காவலர் முனுசாமி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு பலியான நிலையில், சென்னையில் ஒரு கொள்ளையன் தாக்கி ஆசிரியை நந்தினி பலியானார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வேலூரில் செயின் பறிப்பு சம்பவத்தின்போது கொள்ளையர்களால் தாக்கப்பட்ட எஸ்.ஐ. செல்வாம்பாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேலூர், கஸ்பாவைப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வாம்பாள் (40) , கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றிய இவர், கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று வேலூரில் இருந்து அணைக்கட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

பெண்களை பயமுறுத்தும் அம்மா அடிமை + Ex போலீஸ் + அதிமுக எம்பி நடராஜ்...

 மீண்டும் மீண்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் ஆலோசனைகள் சொல்லப்படுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாற்றாக, ஆண்களுக்கு ஆலோசனை சொல்லலாம். பெண்களை சமமாக நடத்தும்படியும், உடைமைப் பொருளாக நினைக்காமல், தாவர, சங்கம சொத்துக்களாக மதிப்பிடாமல் ரத்தமும் சதையும் உயிரும் உள்ள சக மனுஷியாக, மனிதப்பிறவியாக நினையுங்கள் என்பதை வலியுறுத்தலாம். அதை விடுத்து பாதுகாப்பு என்று பெண்ணை வீட்டுக்குள் முடக்கும் நடைமுறைகள் எரிச்சலூட்டுகின்றன.
படங்களைப் பதிவிடும்போது அதை யார் பார்க்கலாம் என்ற விதிமுறைகளைப் பெண்கள் பின்பற்றினால் போதும். படங்களையே பதிவிடாதீர்கள், அப்படி பதிவிட்டால் மார்ஃபிங் செய்வார்கள்தான் என்று அவர்கள் தரப்புக்கு வரிந்து கட்ட வேண்டாமே. ஒரு முன்னாள் காவல் துறை அதிகாரியாக பொறுப்புணர்வுடன் பேசுவதை விடுத்து, ஆதிக்க மனோபாவம் கொண்ட ஆணாக வெளிப்படுகின்றன இவரது கருத்துகள். தற்போது ஆளுங்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருக்கும் திரு. நடராஜ் அவர்கள், ஆளுங்கட்சியைப் பாதுக்காக்கத்தான் நினைக்கிறாரே தவிர, பெண்களின் மன உணர்வுகளை அவர் பெரிதாக மதிக்கவில்லை..

சுவாதி கொலை வழக்கு ஒரு சுப்பர் ஸ்பெசாலிட்டி வழக்கா?

ஒரு கொலை நடந்தால்...போலீஸ் விசாரணையை அவனது மனைவி இடமிருந்துதான் தொடங்குவார்கள் ...அவளுக்கு கள்ளக்காதல் இருந்து அதற்காக இந்த கொலை நடந்திருக்கோமோ என்ற கோணத்தில் தான் விசாரணை தொடங்கும்... அய்யோ அவளே கணவனை பறிகொடுத்துவிட்டு நிற்கிறாள்..அவளை கொச்சைப்படுத்தி மேலும் துன்புறுத்த வேண்டாம் என்று போலீசார் நினைப்பதில்லை..விடுவதுமில்லை.. அதுபோல ஸ்வாதி கொலையிலும்...போலீஸ் தனது வழக்கமான பாணி பின்பற்றக்கூடாது என்று அவரின் பெற்றோர்களும் உறவினர்களும் போலீசுக்கு நிபந்தனை விதிக்கிறார்கள்..எங்களை போலீஸ் கேள்விகள் கேட்டு தொல்லை தரக்கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கைவைத்ததாகவும் செய்திகள் வருகின்றன... அதன் விளைவு... இன்று பேட்டி அளித்த காவல்துறை உயர் அதிகாரி...ஸ்வாதியின் பெற்றோர்கள் விசாரணைக்கு மிகவும் ஒத்துழைத்தார்கள் என்று அவர்களுக்கு நன்றி நன்றி என்று திரும்ப திரும்ப சொல்கின்றார் ? அப்படி நன்றி சொல்ல வேண்டிய நிர்பந்தம் என்ன ?