சனி, 15 அக்டோபர், 2022

2022 இல் உலக உணவு தட்டுப்பாடு! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா மக்களுக்கு எச்சரிக்கை

ranil wickremesinghe: Sri Lankan president Ranil Wickremesinghe reviews  progress on Indian projects - The Economic Times

jaffnamuslim.com :2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சி அரசியலுக்கு அப்பால் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.  
உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறை குறித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கிவிட்டேன்" - முதல்வர் ஸ்டாலின்

 minnambalam.com  -  christopher :   சென்னையில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டதை அறிந்து நொறுங்கி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த13ஆம் தேதி சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்ற வாலிபரால் ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் சுற்றி திரிந்த சதீஷை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொலையாளி சதீஷ் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சத்யா கொலை. -ஆணாதிக்கமா ஹீரோயிசம்? தமிழ் திரையுலகம் மாறுமா? காதலை மறுக்க பெண்ணுக்கு உரிமையில்லையா?

 tamil.oneindia.com  -  Veerakumar  : சென்னை: தலை முதல் கால் வரை ஆணாதிக்க மனோபாவம் கொப்பளிக்கும் மற்றொரு நபரால் தமிழகத்தில் மற்றொரு இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கொலை சம்பவம், தமிழகத்தை மட்டுமல்லாது நாடு முழுவதையும் உலுக்கி போட்டுள்ளது.
பெண்ணை பின்தொடரும் ஸ்டாக்கிங் (Stalking) சினிமாவில் ஹீரோயிசமாக காட்டப்படுவதுதான் இதுபோன்ற "மனநிலை பிறழ்வுக்கு" பெரும் காரணம் என்ற நீண்டகால குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் நடைபெற்ற படுகொலை.
20 வயது இளம்பெண் சத்யா, பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் வேகமாக வந்த ரயில் முன்பாக வெறி கொண்ட ஒரு வாலிபரால் தள்ளி பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

”ரிசைன் பண்ணிடுவேன்”- அமைச்சர்களுக்கு ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!

 மின்னம்பலம -Aara  :  வைஃபை ஆன் செய்ததும்  ஃபேஸ்புக் மெசஞ்சரில், ‘ஸ்டாலின் பொதுக்குழு பேச்சு ஆளுங்கட்சியான திமுகவுக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும், ஏன் திரைத்துறையிலும் கூட பேசப்பட்டு வருகிறதே…” என்ற தகவல் வந்து விழ, அதற்கு பதிலாக ஒரு எமோஜியை அனுப்பிவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய  ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசிய பேச்சு அரசியல் கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, மக்கள் மத்தியிலும் பேசுபொருளாகிவிட்டது.
மின்னம்பலம் சார்பில் மக்களிடையே  கருத்து கேட்கப்பட்டபோது கூட அமைச்சர்களின் தான் தோன்றித் தனமான கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியது கட்சிகள் தாண்டி மக்கள் மத்தியிலும்  விவாதமாகியிருக்கிறது.
அமைச்சர் துரைமுருகனும், அமைச்சர் மா.சுப்பிரமணியனும் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியிலுள்ள பொன்னை கிராம ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆய்வு செய்யச் சென்றனர்.
அப்போது துரைமுருகன் அங்கிருந்த சீனியர் டாக்டர்களிடம் எரிந்து விழுந்தார்.  மருத்துவ கட்டடங்கள் பழுதாகியிருப்பதற்கு மருத்துவர்களே காரணம் என்றும், பாம்புக்கடி மருந்து இல்லாமையை காரணம் காட்டியும் டாக்டர்களை கன்னியாகுமரிக்கு தூக்கியடியுங்கள் என்று சொன்னார்.
அதுவும் அவர் அன்று மருத்துவர்களிடம்  நடந்துகொண்ட அணுகுமுறை வீடியோ காட்சிகளாக பரவியது.
அதுமட்டுமல்ல… ஆய்வுக்குப் பின் துரைமுருகனும், மாசுவும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர்.

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் - பிரியங்கா காந்தி அதிரடி பிரசாரம் ஆரம்பம்

minnambalam.com -  monisha : இமாச்சல் தேர்தல்: பிரியங்கா காந்தியின் புது திட்டம்!
இமாச்சல் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று (அக்டோபர் 14) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.
இமாச்சல் பிரேதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2023 ஜனவரி 8 ஆம் தேதி நிறைவுபெற உள்ளது.
இதையடுத்து, அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று (அக்டோபர் 14) அறிவித்தார்.
இந்நிலையில் இமாச்சலுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாம்பாட்டி கையில் இந்திய பொருளாதாரம்... ஸ்பானிஷ் கார்ட்டூனை எதிர்க்கும் பாஜக

India's economy in snakeman's hands... BJP opposes Spanish cartoon

nakkheeran.in  :  கரோனா பாதிப்பு, எரிபொருள் விலையேற்றம் என உலக அளவிலான பல்வேறு சிக்கல்களுக்கு பிறகும் இந்திய பொருளாதாரம் உயர்வையே எட்டிவருதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என பல்வேறு தரப்புகளிலிருந்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
குறிப்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம் கரோனா காரணமாக உலகநாடுகள் பல வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகிறது எனக் கூறி ஆளும் தரப்பினர் சொல்லி வருகின்றனர்.

வெள்ளி, 14 அக்டோபர், 2022

பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ. 2-ம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் தமிழ் மொழி பாடம் கட்டாயம்- உயர் கல்வித்துறை உத்தரவு

மாலை மலர்  : \தமிழக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பிகாம், பிபிஏ, பிசிஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாடத்திட்ட தேர்வு இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நடைமுறையை பின்பற்றக்கூடிய வகையில் இந்த மூன்று பாடப்பிரிவுகளிலும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம்பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த பாடப்பிரிவுகளில் முதலாமாண்டில் தமிழ் பாடத்தேர்வு இருக்கிறது. இரண்டாம் ஆண்டில் கிடையாது.

பெலாரஸ் நாட்டை விழுங்கும் ரஷியா படைகள் .. ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட பெலாரஸ் தலைவர் சுவெட்லானா Sviatlana Tsikhanouskaya

 ராதா மனோகர் : ரஷியாவின் பெலாரஸ் ஆக்கிரமிப்பு பற்றி பெல்லரசின் எதிர்க்கட்சி தலைவர் சுவெட்டலான ஷிகாணோஷ்கயா ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி
பெலாரஸ் நாட்டில் ரஷ்ய படைகளை நிரந்தரமாக நிறுத்தி வைக்கும் ஆக்கிரமிப்பு முயற்சியில் ரஷ்யாவும் அதன் அடிவருடி பெலாரஸ் ஆட்சியாளர்களும் ஈடுபடுகிறார்கள்
பெல்லரசின் அடையாளத்தை சிதைத்து  பெல்லரசுக்கும் ஐரோப்பியாவுக்கும் இடையே நிலவும் தொடர்புகளை துண்டித்து பெல்லரசின் சமூக வாழ்வை நாசமாக்கும் வேலையை ரஷியா செய்கிறது.
பெல்லர்ஸில் ரஷ்ய ராணுவத்தை நிறுத்துவதன் மூலம் உக்கிரேன் போலாந்து லிதுவேனியா மற்றும் முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் இதர நேட்டோ நாடுகளையும் பயமுறுத்துகிறது
ஐரோப்பிய ஒன்றியம் எங்கள் நாட்டில் உண்மையான ஜனநாயகத்தையும் எங்கள் அடையாளத்தையும் ஐரோப்பியவுடன் உள்ள உறவையும் தொடர உதவவேண்டும்
பெல்லர்ஸில் உள்ள ரஷிய போலி அரசை தூக்கி எறியவேண்டும் 

Kerala 2வது நரபலிக்கு பின்.. பேஸ்புக்கில் குற்றவாளி போட்ட அந்த போஸ்ட்.. ஷாக்கான போலீஸ்! B

tamil.oneindia.com -   Shyamsundar  ;    திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பெண்களை நரபலி கொடுத்த கும்பலை சேர்ந்த நபர் பேஸ்புக்கில் செய்திருந்த போஸ்ட் ஒன்று மிகப்பெரிய அளவில் சந்தேங்களை கிளப்பி உள்ளது.
கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பத்மா மற்றும் ரோஸ்லி. இவர்கள் இருவருமே அங்கு லாட்டரி சீட்டு விற்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும்தான் சாபி என்ற இளைஞரால் நரபலி கொடுக்கப்பட்டுள்ளனர்.
பகவான் சிங் மற்றும் லைலா தம்பதிகளுக்காக இந்த நரபலி நடந்துள்ளது. இந்த நரபலி பற்றிய கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் பத்மா கடந்த செப்டம்பர் மாதமும், ரோஸ்லி ஜூலை மாதமும் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பத்மா தமிழ் பெண் ஆவார்.

கேரளாவில் மேலும் 26 பெண்கள் நரபலி? அதிர்ச்சி தகவல்கள்

 தினகரன் : திருவனந்தபுரம்: கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்,
ள நிலையில், மேலும் பல பெண்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரி, பென்னாகரத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லி ஆகிய 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனர்.
இது  தொடர்பாக கைது செய்யப்பட்ட மந்திரவாதி முகமது ஷாபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் எர்ணாகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

”திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது” - - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மின்னம்பலம் : என் அம்மாவை திருநங்கைதான் பார்த்துக் கொள்கிறார்: அன்பில் மகேஷ்
”திருநங்கைகளின் கல்வி எந்த காரணத்திற்காகவும் தடைபடக்கூடாது” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நிகழ்வு இன்று(அக்டோபர் 13) நடைபெற்றது.
இதில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாட நூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ”திருநங்கைகளுக்கு தனி நலவாரியத்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.

ஆ.ராசா மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் மனு!

 மின்னம்பலம் - Prakash :  இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா “நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும்வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும்வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சமன். இந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.

70களில்தான் முதல் தலைமுறை பட்டியலின மக்கள் படித்து சுயமரியாதையை...

May be an image of 4 people and text that says 'PA Ranjith- கும் Director Ameer கும் மேடையில் கருத்து மோதல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Director PA Ranjith R'

Kandasamy Mariyappan  :  1. பெரியார் சாதியை ஒழிச்சிட்டாரா..!?
வலதுசாரி கும்பல் மற்றும் ஊதா, பச்சை, மஞ்சள், வெள்ளை சங்கீஸ்.!
பெரியார் எப்படா/டீ சாதியை ஒழித்தேன் என்று கூறினார்.!
இந்த கருமம் பிடித்த சாதி ஒழியனும் என்றுதானே கடைசி வரையில் போராடினார்டா/டீ.!
கடவுள் பெயரால் இந்த சாதிய கட்டமைப்பை உறுதி படுத்துறானுக, எனவே அந்த கடவுளே இல்லேங்கிறேன் என்றார்டா/டீ.!
2. ஒவ்வோரு கிராமத்திலும் காலனி, தனி சுடுகாடுன்னு இருக்கு.,
இப்படி சாதியை ஒழிக்காம நாமெல்லாம் தமிழன், தமிழனாக ஒன்று கூடுவோம் வாங்க, திராவிடர்கள்னு எங்களை ஓட்டுக்காக ஏமாற்றுகிறீர்கள்.!
RSS வளர்க்கும் ஊதா சங்கீஸ்.!
என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.!
நாளையிலேர்ந்து எல்லா கிராமங்களிலும்
ஒரு வேளாளர் வீடு, அடுத்து முக்குலத்தோர் வீடு, அடுத்து உடையார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து கோனார் வீடு, அடுத்து நாடார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து ஒரு அய்யர் வீடு, அடுத்து ஒரு செட்டியார் வீடு, அடுத்து பறையர்/பள்ளர் வீடு, அடுத்து ஒரு வலையர் வீடு, அடுத்து ஒரு வன்னியர் வீடு, அடுத்து ஒரு நாயுடு வீடு, அடுத்து ஒரு பறையர்/பள்ளர் வீடு என்று அடுக்கி விடலாமா.!
இதைத்தான் கலைஞர் சமத்துவபுரம் என்று 1996ல் ஆரம்பித்தார்.!
100 கிராமங்களை அமைத்தார்.!
2001 மற்றும் 2011ல் நீங்கள் தேர்ந்தெடுத்த ஜெயலலிதா 15 ஆண்டுகளாக கிட்ப்பில் போட்டார்.!

திருநங்கைகளின் தலைமுடியை வெட்டி இளைஞர்கள் அட்டகாசம்!

May be an image of 2 people and text that says 'JUST IN SUN N”WS திருநங்கைகள் மீது தாக்குதல்- காவல்துறை நடவடிக்கை திருநங்கைகளை கடுமையாக தாக்கி, தலைமுடியை கத்தரித்த இளைஞர்கள்; சமூக வலைதளத்தில் பரவும் வீடியோவை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார், அந்நபர்களை கண்டுபிடித்துள்ளனர்! பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் இழைத்தவர்க கண்டுபிடித்துள்ளோம்; சட்ட நீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை ட்வீட் ofo SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 120CT 2022'

Grace Banu  :  தூத்துகுடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த இரண்டு திருநங்கைகள் கடஎத மாதம் 7 தேதி பிச்சையெடுக்க சென்ற பொழுது,
 அதே பகுதியை சார்ந்த நோவாயூபன்(28) மற்றும் விஜய்(27) இருவரும் தொடர்ந்து திருநங்கைகளை கேலி கிண்டல் செய்வதும் கத்தியல் மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் .
கடந்த மாதம் 7 தேதி இரு திருநங்கைகளையும் வழி மறித்து அவர்களை கத்தியால் அடித்த்து அவர்கள் ஆடையை அவிழ்த்து முடியை வெட்டி மிக கொடுரமான தாக்குதலை நடத்தி அதை விடீயோ பதிவு செய்திருக்கின்றனர்.
பாதிக்கபட்ட திருநங்கைகள்  காவல்நிலையம் செல்ல கூடாது,
 மருத்துமனையில் சேர கூடாது என போகிற இடமெல்லாம் அவர்களை மிரட்டி இருக்கிறார்கள் .

வியாழன், 13 அக்டோபர், 2022

ரெயிலில் இருந்து கீழே தள்ளி மாணவி கொலை

மாலைமலர் : ரெயிலில் இருந்து கீழே தள்ளி மாணவி கொலை- குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு
காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் விசாரணை. தலைமறைவான குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலில் இருந்து மாணவியை தள்ளி விட்டதில், கழுத்து துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சதீஷ் என்ற இளைஞர் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், காதலை ஏற்க மறுத்ததால் மாணவியை கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மெட்ரோவில் 100 ரூபாயில் ஒரு நாள் பாஸ்

மாலை மலர்  :  சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தூரத்துக்கு 42 ரெயில்கள் தினசரி காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணியில் இருந்து பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது.
பொதுவாக அலுவலக நேரங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களில் 30 சதவீதம் பேர் செல்போன் உதவியுடன் 'கியூ-ஆர் கோடு' முறையிலும், 70 சதவீதம் பேர் பயண அட்டையும், சிலர் டோக்கன் முறைகளையும் பெற்று பயணம் செய்கின்றனர். இதற்கு 20 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை

தினமலர் :பத்தினம்திட்டா: கேரளா பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன மேலும் 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
கேரள சாலைகளில் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த தமிழகத்தை சேர்ந்த பத்மா, கலடி பகுதிகளைச் சோ்ந்த ரோஸிலின் ஆகியோர் கடந்த ஜூன் மாதத்திலும், செப்டம்பரிலும் காணாமல் போனதாக வந்த புகார்கள் மீது போலீசரார் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரம் தெரியவந்தது.
செல்வம் பெருக நரபலி கொடுக்க வேண்டும் என்று பெரம்பவூரைச் சோ்ந்த முகமது ஷபி என்பவா் கூறியதைக் கேட்டு, திருவல்லாவைச் சோ்ந்த பகவல் சிங் - லைலா தம்பதி, அவா்களின் வீட்டில் வைத்து அந்த இரு பெண்களையும் கொலை செய்து, எலந்தூா் கிராமத்தில் புதைத்துள்ளனா்.

கணவரை கொன்று மந்திரவாதியுடன் சேர்ந்து வாழ திட்டமிட்ட கேரள நரபலி லைலா...

மாலைமலர் : திருவனந்தபுரம்:   கேரளாவில் 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பத்தில் போலீசார் மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்துள்ளனர்.
2 பெண்களை கொலை செய்த மந்திரவாதி முகமது ஷபி வேறு யாரையும் இதற்கு முன்பு கொலை செய்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் முகமது ஷபியும், லைலாவும் சேர்ந்து லைலாவின் கணவர் பகவல் சிங்கை கொலை செய்ய ரகசிய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் இன்று கூறியதாவது:-
பகவல் சிங்கை எப்படியும் செல்வந்தர் ஆக்கி விடுவேன் என்று முகமது ஷபி அவரிடம் உறுதியாக கூறியுள்ளார். இதனை பகவல் சிங் முழுமையாக நம்பி, முகமது ஷபி கூறிய அனைத்தையும் செய்ய தயாராகி உள்ளார்.

காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது.. காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்

ராதா மனோகர்
  :  காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!
காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்
இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994)  இதுதான் காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு !.
மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் காலத்தில்தான் உருவானது
கும்பகோணத்தில் இருந்த மடம்  கிபி 1839 இல் தான்  காஞ்சிபுரத்திற்கு மாறியது..
( sadananda@anvil.nrl.navy.mil (கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில்  , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்) ;

காஞ்சிபுரம், ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!
மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.

திராவிடர்களின் சதிர் நாட்டியத்தை பரதநாட்டியம் என்று மடைமாற்றிய வரலாறு

May be an image of text that says 'Bharat India Natyam Dance Hence Bhavam (expression) Ragam (music) Talam (rhythm) Natyam (dance) = BhaRaTaNatyam Bharatanatyam Bharatanatyam Sourc: Govt. of India Website http://ndianuture.gov.in/stories sadir-attam-bharatanatyam Dream 1 தமிழ்நாடு'
May be an image of 3 people and people standing

ராதா மனோகர்  சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று  நம்மவர்களே நம்புவதை என்ன சொல்வது?
நாங்கள் திராவிடர்கள்  We Dravidians  என்ற முக நூல் போராளிகளே பரதநாட்டியம் என்றால் பாவ ராக தாள நாட்டியம் என்று வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதை பார்க்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
1935 (தைத்திங்கள் முதலாம் நாள் ) இல் அருண்டெல் என்ற வெள்ளைக்காரரின் தமிழ் பார்ப்பன மனைவியான ருக்குமணி என்பவர் இந்த சதிர் கச்சேரியை பரதநாட்டியம் என்று பெயர் மாற்றினார் -  எனது சின்னஞ்சிறு பராயத்தில் கோயில் திரு விழாக்களில் சதிர் கச்சேரி அல்லது சின்னமேளம் என்ற சொற்களை கேட்டிருக்கிறேன் ..
புத்தூர் செட் .. ஆவரங்கால் செட் . கைதடி செட் என்று பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள் .

புதன், 12 அக்டோபர், 2022

திடீரென குறைந்த FaceBook Followers.. பிரபலங்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பின்னணி என்ன ?

kalaignarseithigal.coம்- Praveen  :  உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி உள்ள இன்றைய காலக் கட்டத்தில், சமூக வலைதளங்கள் மிகப்பெரிய அளவில் முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் பேஸ்புக் வந்தபின்னர் உலகம் பெரிய அளவில் மாற்றத்தை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் 2.85 பில்லியன் பயனாளிகள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகமான பேஸ்புக் தளம் குறுகிய காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக இதை உருவாக்கிய மார்க் ஜுக்கர்பெர்க் சாமானியராக இருந்து 4 ஆண்டுகளில் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார்.
அதன் பின்னர் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் பேஸ்புக் பெரும் லாபத்தை ஈட்டத்தொடங்கியது. அதோடு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளை ஒண்றிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனம் உருவாக்கப்பட்டது.

காதலித்து ஏமாற்றிய டீச்சர் - பிளஸ் -2 மாணவர் தற்கொலை

 மாலைமலர் : டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.
அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு டீச்சராக இருந்து வரும் ஷர்மிளாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பள்ளியில் பாடம் நடத்திய பிறகு மாலை நேரத்தில் தனது வீட்டில் வைத்தே மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடம் நடத்தி இருக்கிறார்.
இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் டியூசனில் சேர்ந்து படித்து உள்ளனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் ஆசிரியை ஷர்மிளாவிடம் டியூசனுக்கு சென்று படித்து உள்ளார்.
இந்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியை ஷர்மிளா காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மாணவனுக்கு பள்ளி பாடத்துடன் சேர்த்து காதல் பாடத்தையும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார்.

ஜாதி சான்றிதழ் கேட்டு நரிக்குறவர் தீக்குளித்து தற்கொலை... தானாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்றம்

நக்கீரன் : ஜாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்த நிலையில் அது குறித்து தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
தனது மகனுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதாக காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்த அவர், சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக மீட்ட காவலர்கள், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி வேல்முருகன் உயிரிழந்தார்.

வாடகை தாய் - நயன்தாராவுக்கு உதவி செய்த மருத்துவமனை மீது நடவடிக்கை- நாளை விசாரணை

மாலைமலர் :நடிகை நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்று கொள்வதற்கு உதவி செய்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.
நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரபலமான தனியார் மருத்துவமனையில் பிறந்துள்ளன.
சென்னை: நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷ
இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தடை செய்யப்பட்டிருப்பதாக நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் இந்த சர்ச்சைக்கு வித்திட்டது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன.

தமிழ்நாடு பொது விடுமுறை நாட்கள் 24 - 2023-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல்

 மாலை மலர்  :  சென்னை:  தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் பௌத்தத்திற்கு மதம் மாறினர்.. படங்களை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மீது விசாரணை

தினத்தந்தி :  டெல்லி,   கடந்த 5-ந்தேதி நடைபெற்ற அசோக விஜயதசமி நிகழ்ச்சியில்  ஆயிரக்கணக்கான மக்கள் இந்து மதத்தில் இருந்து புத்த மதத்திற்கு மாறினர்.
இந்த நிகழ்ச்சியில் டெல்லியின் சமூக நலத்துறை மந்திரியாக இருந்த ராஜேந்திர பால் கவுதம் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்,
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதையடுத்து ராஜேந்திர பால் கவுதம் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். தன்னை ராஜினாமா செய்யச் சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை எனவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் பதவியை ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய், 11 அக்டோபர், 2022

கேரளாவில் தமிழக பெண் நரபலி... மருத்துவ தம்பதியின் கொடூர செயல்... விவரிக்கும் பின்னணி

tamil.samayam.com  :  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாகாவதி அணையை சேர்ந்த பத்மா என்ற பெண் கொச்சியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பத்மாவை காணவில்லை என்று அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த சிலதினங்களுக்கு பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பத்மாவின் உடல் கொச்சி பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இறந்த பத்மாவின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த போது அந்த செல்போன் முகவரிடம் இருப்பது தெரியவந்தது.

ராஜஸ்தானில் 108 வயது மூதாட்டி காலை வெட்டிய மர்ம கும்பல்.. வெள்ளி கொலுசுக்காக கொடூரம்..

kalaignarseithigal.com  - KL Reshma  ;  வெள்ளி கொலுசுக்காக 108 வயதுடைய மூதாட்டியின் கால் பாதத்தை வெட்டி கொலுசை திருடி சென்றுள்ள கும்பலின் வெறிச்செயல் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமுனா தேவி. 108 வயதுடைய மூதாட்டியான இவர், தனது மகள் மற்றும் பேத்திகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கமாக திண்ணையில் படுத்து உறங்குவது போல், சம்பவத்தின்றும் மூதாட்டி உறங்கியுள்ளார்.
அப்போது சுமார் காலை 5.30 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கியுள்ளனர். மேலும் அவரை இழுத்து வந்து வீட்டின் வெளிப்புறத்திலுள்ள கழிப்பறையில் வைத்து அவரது பாதத்தை வெட்டி அதிலிருந்த வெள்ளி கொலுசுகளை திருடிச் சென்றுள்ளனர்.

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் தேர்தல் முறைகேடு வழக்கு தொடரும்! உச்ச நீதிமன்றம் அதிரடி !

ஓபி ரவீந்திரநாத் குமார்

tamil.oneindia.com  -   : டெல்லி : தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேர்தல் வெற்றியை செல்லாது என தொடரப்பட்ட வழக்கில், ரவிந்திரநாத்தின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்ததோடு, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவில் அதிகார மோதலில் பின்னடைவை சந்தித்து வரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தற்போது ஆதரவாக நிற்பவர்களில் முக்கியமானவர் ரவீந்திரநாத். ஓபிஎஸ்ஸின் மூத்த மகனான இவர் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 2019ல் நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழக முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் மண்ணைக் கவ்விய நிலையில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் மட்டும் 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக சுயநல சூழலிய வியாபாரிகள்

 Gowtham Raj  :  பரந்தூர் விமானநிலையம் குறித்து சில கருத்துக்களை கூறலாம் என்று நினைக்கிறேன்.
உண்மையிலேயே இங்கிருக்கும் சூழலியல் வாதிகளுக்கு தமிழ்நாட்டில் இருக்கும்  விவசாயம் - பொருளாதாரம்- Demography (மக்கள்தொகையியல்) -நகரமயமாக்கல் பற்றி எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கிறதா என்று தெரியவில்லை.
இவர்களின் வாதம் எல்லாம் half - bakedஆக தான் இருக்கிறது. அச்ச உணர்வை மிகைப்படுத்தி சொல்லும் போக்கு இவர்களிடம் நிரம்பி இருக்கிறது. உலக பிரச்னையை உள்ளூர் தீர்வுகள் மூலம் சரி செய்துவிடலாம் என்று இவர்கள் நம்புகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடப்பது 'Subsistence farming ' அதிலும் பெரும்பாலானவர்கள் இப்போது அதிலிருந்து Dairy farming & Mixed farming நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தில் வசிப்பவர்களில் 35 % குடும்பங்கள் தான் விவசாயம் செய்கிறார்கள். (see first comment)
Agriculture to GSDP ratioவும் இங்கு 4% தான்.
 விவசாயம் தவிர்த்த ஒரு துணை தொழில் தான் இவர்களுக்கு வருவாய் ஈட்டி தரும் ஒன்றாக  இருக்கிறது. வானம் பார்த்த நிலங்களில் இது தான் யதார்த்தம் .

ரஷ்யா Vs யுக்ரேன்: கிரைமியாவை இணைக்கும் பாலத்தை தகர்த்தது யார்?

BBC  tamil  : ரஷ்யாவுடன் கிரைமியாவை இணைக்கும் பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அது எப்படி நடந்தது? பின்னணியில் இருந்தவர்கள் யார்?
இந்த குண்டுவெடிப்புக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வகையான குழப்பமான தகவல்கள் உலா வருகின்றன. அதில் பெரும்பாலானவை நம்பகத்தன்மையற்றவை.
லாரி ஒன்றின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்று சுட்டிக்காட்டுவதற்கு ரஷ்யாவுக்கு நீண்டநேரம் ஆகாது. ஆனால், யார் அதை நிகழ்த்தினர் என்பதை ரஷ்யா சொல்லவில்லை.
பாலத்தை இலக்கு வைத்து தாக்கியது யுக்ரேன்தான் என குற்றம்சாட்டியுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், அதை தீவிரவாத சம்பவம் என்று அழைத்துள்ளார்.
பாலம் வழியாக லாரி செல்வது போன்ற காட்சிகள் அடங்கிய கண்காணிப்பு கேமரா பதிவுகள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

திங்கள், 10 அக்டோபர், 2022

புதிய தலைமுறை, நியூஸ் தமிழ், பாலிமர் போன்ற டிவி மீடியாக்கள் அரசுக்கு எதிராக திரும்பியிருக்கிறது?

ஜெயசீலன் ஐ.ஏ.எஸ்-

Uthayamugam  : கட்சி நிர்வாகிகள் மட்டுமல்ல முதல்வரே, ஆட்சியில் அதிகாரிகள் உருவாக்கும் அவப்பெயரையும் கவனிங்க - உளவாளி
திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பெரிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அவரை தூங்கவிடாமல் தவிக்க வைக்கும் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் குறித்து அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
அவருடைய உரையை கேட்ட கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் முதலமைச்சருக்காக வருத்தப்பட்டார்கள்.
ஆனால், முதலமைச்சர் வேதனையுடன் பேசும்போதே அமைச்சர் பொன்முடி நக்கலாக சிரித்தார். அவர் மட்டுமல்ல, மூத்த நிர்வாகிகளில் பலர் முதலமைச்சரின் உழைப்பை மதிப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனம்.
அதுமட்டுமல்ல, முதலமைச்சரின் உழைப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீராகப் போகுமளவுக்கு, ஆட்சி நிர்வாகத்திலும் மூத்த அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பலமுறை இதுகுறித்து எழுதியுள்ளோம். ஆனால், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்து வெளிவரும் ஊடக செய்திகளை முதலமைச்சருக்கு தெரிவிக்கும் அதிகாரிகள், அதிகாரிகளை குறித்து வெளிவரும் செய்திகளை முதலமைச்சரின் பார்வையிலிருந்து மறைத்துவிடுகிறார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதில் விதிமீறலா? அமைச்சர் விளக்கம்...

தினமணி : விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படும் நிலையில், விதிமுறைப்படி குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டதா? என்று விளக்கம் கேட்கப்படும் என மத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பிறப்பு பற்றி கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றானரா? அதில் விதிமீறல் உள்ளதா? என விளக்கம் கேட்கப்படும் என பதிலளித்தார்.
வாடகைத் தாய் விவகாரத்தில் விதிமீறல் உள்ளதா என்று மருத்துவத் துறை சேவைகள் இயக்குநர் மூலம் விளக்கம் கேட்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தலையில் அடித்துக் கொண்ட CM ஸ்டாலின்.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்து வெறுப்பேற்றிய பொன்முடி

 tamil.asianetnews.com -  Ajmal Khan : தலையில் அடித்துக் கொண்டு அட்வைஸ் செய்த ஸ்டாலின்.. கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் சிரித்து வெறுப்பேற்றிய பொன்முடி
 நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்;
சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும், அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய போது அமைச்சர் பொன்முடி மேடையில் அமர்ந்து கொண்டு சிரித்தது விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
அமைச்சர்கள் பேச்சு- ஸ்டாலின் வேதனை
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து அமைச்சர்கள் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் பேச்சு அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் வெளிப்படையாக தெரியும் சில அடையாளங்கள்

 zeenews.india.com   -RK Spark  :  ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கம் மற்றும் சுறுசுறுப்பற்ற மோசமான வாழ்க்கை முறை தான்.  கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் பல்வேறு ஆரோக்கிய சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது வரும், அதிகமான கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானவை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  
கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்று இருவகைகளுண்டு,
கெட்ட கொலஸ்ட்ரால் மிகவும் ஆபத்தானவை.  உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் மாரடைப்பு, பாக்கவாதம் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.  
நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதை மருத்துவமனை சென்று பரிசோதித்து தான் அறிய வேண்டும் என்பதில்லை நமது உடல் வெளிப்படுத்தக்கூடிய சில அறிகுறிகளை வைத்தும் கண்டறிய முடியும்.  

சீனியர்களுக்கு பயப்படுகிறாரா ஸ்டாலின்?: திமுக அதிமுக மோதல்!

dmk meeting stalin speech create discussion social media

மின்னம்பலம் : திமுக பொதுக்குழுவில் தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசியது தற்போது சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நேற்று (அக்டோபர் 9) சென்னை அமைந்தகரையில் திமுகவின் 15-வது பொதுக்குழு நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி ஒருமனதாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், “அதிக மழை பெய்தாலும், மழையே பெய்யாவிட்டாலும் என்னை தான் குறை சொல்வார்கள்.
ஒரு பக்கம் தமிழக முதல்வர். மறுபக்கம் திமுக தலைவர். மத்தளத்திற்கு இரண்டு பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை.

7 கடல் மைல் நீந்தி தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர்!

7+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%2C+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%21

hirunews.தமிழ்   : 7  கடல் மைல் நீந்தி, தமிழகம் சென்ற தமிழ் இளைஞர்!
24 அகவையைக்கொண்ட இலங்கைத் தமிழர் ஒருவர் பாக்கு நீரிணையில் ஏழு கடல் மைல் தொலைவை நீந்தி தனுஷ்கோடியை அடைந்துள்ளார்.
அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனுஷ்கோடியை அடைந்ததாக தெ ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹசன் கான் என்ற அஜய் என்பவரே தமிழக கரைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மையும் ஐந்து பேர் கொண்ட குடும்பத்தையும் சட்டவிரோதமாக தமிழகத்திற்கு ஏற்றிச் சென்ற படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியபோது தாம் கடலில் குதித்ததாக அவர் தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

திரு முலாயம் சிங் யாதவ் காலமானார் .. சமூக நீதி காத்த தலைவர்

maalaimalar : புதுடெல்லி:  உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு மாதம் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 1-ந்தேதி இரவு அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளுடன் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

கோவை அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வீடியோ.. போலீசார் வழக்கு பதிவு

tamil.oneindia.com -  Yogeshwaran Moorthi    : கோவை: கோவையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி நடைபெற்ற விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் உள்ள தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயிற்சி நடப்பதாக புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இதுமட்டுமல்லாமல் மொத்தமாக 18 பேர் ஆர்எஸ்எஸ் உடை அணிந்து பயிற்சி வகுப்பில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ பரவிய நிலையில், மாநகராட்சி பள்ளியில் பயிற்சி நடத்த அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் இன்று பள்ளியை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளது.

இலங்கை தேர்தல் முறை மாற்றத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் .. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

hirunews.lk  :  சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் - ஜனாதிபதி
தேர்தல் முறை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை முன்மொழிவதாகவும், அந்த தெரிவுக்குழு, அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானம் எடுக்காவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தற்போதுள்ள அரசியல் முறை மையினை நிராகரிப்பதால், அவர்கள் விரும்பிய அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
அதன்படி, அடுத்த தேர்தலுக்கு முன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக குறைக்கப்படும்.
அத்துடன், பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத் தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும்.

நோர்வேயின் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வருகிறார் ..ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று விரைவில்

%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21

hirunews.lk  : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்புக்கு இணங்க நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்புவதற்காக வழங்கக் கூடிய பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் நாட்டுக்கு வரவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் ராஜதந்திரியான எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் வௌிவிவகார ஆலோசகராக கடந்த 2000 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார்.

அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன்... கண்கலங்கிய கனிமொழி!...

 தினமணி : பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து வெற்றிடத்தில் காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக எழுந்து நின்றவர் ஸ்டாலின் என்றும்,  அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறேன் என்று திமுக பொதுக்குழுவில் கண்கலங்கி பேசினார் கனிமொழி.   tamil.oneindia.com   - Shyamsundar :  சென்னை: திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்பி அறிவிக்கப்பட்டதும் இன்று திமுக பொதுக்கூட்டத்தில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
சென்னையில் திமுகவின் 15வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தக் கூட்டத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி எம்.பியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தார்.
ஆக்டிவ் அரசியலில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி இருக்கிறார். அவர் திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.

பாகிஸ்தானில் ஒவ்வொரு வருடமும் 1000 பெண்களாவது அவர்களின் குடும்பங்களாலேயே ஆணவக்கொலை செய்யப்படுகிறார்கள்

  பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாடல் அழகி காந்தீல் அவளது சகோதரனால் ஆணவக்கொலை செய்யப்பட்டார்  
அவள் அந்த கொலைகார சகோதரனுக்காக ஒரு  மொபைல் கடையை அமைத்தபோது, அவன் தனது சகோதரியிடம்  அதற்குரிய பணம் அவளுக்கு எங்கிருந்து  கிடைத்தது என்று கேட்க இல்லை.
அவள் தனது முழு குடும்பத்திற்கும் நிதியுதவி அளித்தபோது, அந்த சகோதரன் அவளது வருமானத்தின் ஆதாரத்தை ஒருபோதும் கேள்வி கேட்கவில்லை.
அவள் தனது குடும்பத்திற்காக முல்தான் நகரில் வாடகை வீடு எடுத்தபோதும் அந்த ஆணவ அல்லது கௌரவ சகோதரன் அந்த  வீட்டிற்கு செலுத்தப்படும் வாடகை பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்கவில்லை.
ஆனால் அந்த கலாச்சார காவல் சகோதரன் அவளை கொன்று விட்டு அவளின்  பணத்தை கொள்ளையடித்து கொண்டு  தப்பியோடினான்
ஆனால் இன்றும் அவன் கூறுவது குடும்ப  கவுரவத்திற்காவே அவளை கொலை செய்தானாம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2022

இந்தியாவிடம் நீதி கேட்கும் காம்பியா தாய்மார்கள். இந்திய இருமல் மருந்தால் , இறந்த 66 குழந்தைகள்

BBC  தமிழ் : மரியம் குயதேவின் வீட்டில் உள்ள ஒரு சிவப்பு நிற மோட்டர்பைக் பொம்மை மீது தூசி படிந்துள்ளது. அது அவருடைய 20 மாதமான மகன் முசாவுக்காக அவர் வைத்திருந்தார். ஆனால், முசா செப்டம்பர் மாதம் உயிரிழந்துவிட்டான்.
காம்பியாவில் இருமல் மருந்து குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 66 குழந்தைகளில் அவரும் ஒருவர். உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த இருமல் மருந்துகள் காரணமாக சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
மரியத்தின் குடும்பத்தினர் யாரும் அந்த பொம்மையைத் தொடுவதில்லை. அது அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்துகிறது. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர், தமது மகனுக்கு என்ன நடந்தது என்று நினைக்கும் போது அழுகிறார்.
காம்பியாவின் மிகப்பெரிய நகரமான செரிகுந்தாவின் புறபுநகர் பகுதியில் உள்ளது அவரது வீடு. அவரது மகனுக்கு முதலில் சளி, காய்ச்சல் ஏற்பட்டது. மருந்துவரிடம் அழைத்து சென்ற பின்னர், மகனை குணப்படுத்த அவரது கணவர் ஒரு மருந்தை வாங்கினார்.

தி.மு.க பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. நியமனம்.. முழு நிர்வாகிகள் பட்டியல்

தி.மு.க பொதுக்குழுவில் துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. நியமனம்.. முழு நிர்வாகிகள் பட்டியல் இதோ!

kalaignarseithigal.com  :  தமிழ்நாடு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15வது பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகுதியுள்ள ஒன்றிய - நகர - நகரிய - பேரூர் - பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் அடங்கிய புதிய பொதுக்குழுக் கூட்டம் இன்று பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடை பெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் கழகத்தின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

''அப்படி நடந்தால் இந்தியா இந்தியாவாக இருக்காது...''-திமுக பொதுக்குழுவில் ஆ.ராசா பேச்சு

நக்கீரன்   சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் இன்று (09/10/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை, உட்கட்சித் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி பொதுக்குழுவில் அறிவித்தார்.
கனிமொழி துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் சிக்கினர் .. ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை

மாலைமலர் : சென்னை:  தமிழகத்தில் நேற்று நடந்த ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர். இதில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கினர். இந்த 13 ரவுடிகள் பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர் என காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள்.
இதில் 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்தன என காவல்துறை தெரிவித்துள்ளது.
பிடிபட்ட மேலும் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது. அவர்கள் அதை மீறினால் 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமை செயலகத்தை சுற்றி வளைத்த பல லட்சம் மக்கள் .. பெரும் பதற்றம்

 Maha Laxmi :  RSS இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் தொழிலாளர் அமைப்பு, RSSன் தலைமையகமான நாக்பூரில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி!
நாக்பூரில் பெரும் பதற்றம்…!
RSS தலைமையகம் முற்றுகை பேரணி…!!
ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை சுற்றி வளைத்த பல இலட்சம் மக்கள்…!!!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளைக் காப்பாற்ற BAMCEF அமைப்பின் துணை அமைப்புகள் நாக்பூர் RSS தலைமையகம் முற்றுகை பேரணி நடத்தியுள்ளது.
RSS FEAR BAMCEF
இந்தச்செய்தி நாட்டின் எந்த மெய்ன் ஸ்ட்ரீம் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் வரவில்லை; ஏன்…?

‘வந்தே பாரத்’ ரயிலுக்கு வந்த சோதனை... எருமை, பசு, இன்று சக்கரம்..

dinamani.com  - vandhe  :  எருமை, பசு, இன்று சக்கரம்.. ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு வந்த சோதனை
லக்னௌ: வந்தே பாரத் ரயில் மூன்றாவது நாளாக இன்றும் செய்தியில் இடம்பெற்றுவிட்டது. புது தில்லி - வாராணசி இடையே இன்று காலை இயக்கப்பட வேண்டிய வந்தே பாரத் ரயிலின் சக்கரம் 'ஜாம்' ஆனதால், பயணிகள் வேறு ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நல்லவேளையாக, பணியிலிருந்த ஊழியர் சக்கரம் ஜாம் ஆகியிருப்பதைக் கவனித்ததால், பாதி வழியில் ரயில் இயக்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. ஒரு வேளை சக்கரங்கள் ஜாம் ஆகியிருப்பது கவனிக்கப்படாமல் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டிருந்தால் பெரும் விபத்து நேரிட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆ.ராசா பேச்சு எதிரொலி! வர்ணம், சாதி தேவையில்லை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

மின்னம்பலம் : சனாதனம் பற்றி கடந்த செப்டம்பர் மாதம் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி பேசிய பேச்சு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகம் தாண்டி இந்திய அளவிலும் ராசாவின் உரைகள் அதிர்வை ஏற்படுத்தின.
இந்த நிலையில், ‘வர்ணம் மற்றும் சாதி ஆகியவற்றை நாம் முற்றிலும் நிராகரிக்க வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசி  கவனிக்க வைத்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில் நேற்று (அக்டோபர் 7) புத்தக வெளியீட்டு விழா நடந்தது.  டாக்டர் மதன் குல்கர்னி மற்றும் டாக்டர் ரேணுகா போகரே எழுதிய  ‘வஜ்ரசூசி துங்க்’ என்ற அந்த புத்தக வெளியீட்டு விழாவில் மோகன் பகவத் பேசினார்.
”சமூக சமத்துவம் என்பது இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும்.  ஆனால் அது மறக்கப்பட்டதால்   மோசமான விளைவுகளுக்கு வழிவகுத்தது. வர்ணம் மற்றும் சாதி அமைப்புகள் அடிப்படையில் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.

காரில் பர்கர் சாப்பிட்ட இளைஞனை சரமாரியாகச் சுட்ட போலீஸ் – அமெரிக்க பகீர் வீடியோ

விகடன்  :காரில் பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்த சிறுவன்மீது, போலீஸ்காரர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில், காரில் பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞன்மீது, போலீஸ்காரர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், மெக்டொனால்டு கார் பார்க்கிங்கில் 17 வயதான எரிக் கான்டு(Erick Cantu) என்பவர் காரில் அமர்ந்துகொண்டு பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

திமுக மகளிரணி மாநில செயலாளர் ரேஸில் 3 பேர்.. கனிமொழி துணைபோது செயலாளர் ஆவதால் ...

ரேஸில் 3 பேர் - ஹெலன் டேவிட்சன்
முன்னாள் அமைச்சர் தமிழரசி
மீண்டும் அமைச்சரானார் பூங்கோதை-ஐடி துறை ஒதுக்கீடு | Poongothai swear in as  IT Minister, மீண்டும் அமைச்சரானார் பூங்கோதை-ஐடி துறை ஒதுக்கீடு - Tamil  Oneindia

tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை : திமுக துணை பொதுச் செயலாளர் பதவி கனிமொழி எம்.பிக்கு வழங்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், மகளிர் அணி செயலாளர் பதவிக்கான ரேஸ் சூடுபிடித்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவியை திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், கனிமொழி வகித்து வரும் மகளிரணி மாநில செயலாளர் பதவியில் அடுத்து யார் வருவார் என்பது தொடர்பான பேச்சுகளும் எழுந்துள்ளன. 3 பேரின் பெயர்கள் இந்த ரேஸில் அடிபடுகின்றன.
திமுக புதிய நிர்வாகிகள்
திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. 

கிளை, ஒன்றிய, பேரூர், நகர, வட்ட, மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் முறையாக அறிவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 72 கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைவர், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க திமுக பொதுக்குழு நாளை கூடுகிறது.