சனி, 29 ஜூலை, 2017

அக்சாரா கமலகாசன் பௌத்த மதத்தை தழுவினார்

அன்புக்கு எந்த மதமும் கிடையாது...புத்தமதம் மாறிய மகளுக்கு கமலஹாசன் வாழ்த்து!
கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் புத்த மதத்திற்கு மாறியதற்கு, கமல் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என கடவுள் நம்பிக்கை குறித்து தன் கருத்துக்களை முன் வைத்து வரும் கமல், தன் மகள் விஷயத்தில் எப்படி இருப்பார் என்று சொல்லவா வேண்டும் ?.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விவேகம் படத்திற்கான புரமோஷன்களில் அதில் நடித்துள்ள அக்‌ஷரா ஹாசன் பங்கேற்று வருகின்றார்.
அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அக்‌ஷரா ஹாசன், “நான் முதலில் நாத்திகராக இருந்தேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, இருப்பினும் கடவுளை நேசிப்பவர்களை நான் மதித்து வந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். அதில் வாழ்வியலோடு கலந்த பல விஷயங்கள் உள்ளதால் அதில் என்னை இணைத்துக் கொண்டேன்.” என தெரிவித்திருந்தார்.

மீனவர்கள் 77 பேர் பொதுமன்னிப்பு விடுதலை .. நானள மறுதினம் தமிழகம் திரும்புகிறார்கள்

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. 77 மீனவர்களும் எதிர்வரும் 31-ந் திகதி காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர். எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 160-க்கும் மேற்பட்ட படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில் இலங்கை அரசு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் (மொத்தம் 77 மீனவர்கள்) விடுதலை செய்துள்ளது.  ada derana

குஜராத் கூவதூரில் 20 எம்.எல்.ஏ.க்கள்.... மாநிலங்களவை எம்.பி.யை இழக்கிறது காங்கிரஸ்?

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் சிறைவைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை தேர்தல் வரை இவர்கள் கர்நாடகாவில் பாதுகாப்பாக சுற்றுப்பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தலைமை செய்துள்ளது. குஜராத்தில் இருந்து மாநிலங்கவைக்கு 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வரும் 8-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாரதிய ஜனதா சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி, காங்கிரசில் இருந்து தாவிய பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேலுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் வெற்றிபெறமாட்டார் என அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா பொதுச்செயலாளராக நீடிக்கலாம்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்க தடை விதிக்க கோரியிருந்தார். மேலும் அந்த மனுவில், சசிகலா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். ஆனால் அவரது ஆலோசனையின்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் செயல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க சசிகலா உடன் ஆலோசித்ததாக ஆளும் கட்சி வெளிப்படையாக அறிக்கை வெளியிடுகிறது. ஆளும் கட்சியின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானது. ஊழலுக்கு எதிரான சட்டங்களை அவமதிக்கும் செயல். எனவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நீடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

குஜராத் கூவத்தூர் .... குஜராத் எம்.எல்.ஏ-க்கள் சொகுசு விடுதியில் சிறை!

கூவத்தூர் பாணியில் குஜராத் எம்.எல்.ஏ-க்கள்!குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலர், ஆளுங்கட்சியான பாஜக-வுக்கு தாவி வருவதால், தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போல, குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரிலுள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களைவை தேர்தலில் குஜராத் மாநிலத்தில் 3 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இரண்டு இடங்களுக்கு பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித்ஷாவும், மத்திய அமைச்சர் ஸ்ருமிதி இராணியும் போட்டியிடுகின்றனர். மூன்றாவது இடத்துக்கு காங்கிரஸ் சார்பில் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் போட்டியிடுகிறார். இதற்கிடைய காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வகேலா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். வரும் நவம்பர் மாதத்தில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்று வரை காங்கிரஸ் கொறடா பல்வந்த் சிங் ராஜ்புத் உள்பட 5 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக-வில் இணைந்தனர். இதில் காலியாகவுள்ள மூன்றாவது ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு அகமது பட்டேலை எதிர்த்து பல்வந்த் சிங் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 காலியிடங்களுக்கு 4 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆட்சி மாற்றம் எப்படி வரும்?

thetimestamil :சரவணன் சந்திரன்: விகடனில் கமல் பேட்டி படித்தேன். அவர் இதுவரை ஆற்றிய செய்யுளுக்கு வெள்ளைவாரணர் மாதிரி உரை இயற்றியிருக்கிறார். வேறொன்றுமில்லை. பொதுவாகவே படித்தவர்கள் நாலும் தெரிந்தவர்கள் யூகங்களை நம்ப மாட்டார்கள். ஜோதிடங்கள் மீது நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.
ஆனால் இந்த ஆட்சி அதுவா கலைஞ்சிரும் என்கிற ஜோதிடத்தை எப்படி நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதெப்படி கலையும் சொல்லுங்கள். நீங்கள் ஆயிரம் சொல்லலாம். அந்த நூத்தி இருபத்துச் சொச்சம் பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பூனை போல் எழுந்து நின்றார்களே? ஒட்டு மொத்த பொது மனசாட்சியே அவர்களை உலுக்காத போது வேறெது உலுக்கி விடும்.
அவர்களுக்குத் தெரியும். அடுத்த எலெக்‌ஷனில் பலர் நிற்கவே மாட்டார்கள். தோற்றாலும் பரவாயில்லை. மூன்று தலைமுறைக்கும் சேர்த்து சம்பாதித்து விடுவோம் என்பதைச் சொல்லி விட்டார்கள். இந்த விஷயத்தில் நீர் அடித்து நீர் விலகாது என கட்டிப்பிடித்துக் கொள்வார்கள்.

பனாமா லீக் .. பதவி இழந்த பாகிஸ்தான் தலை நவாஸ் ஷெரிப் ... ஆட்சியை பிடித்த இந்திய பெருச்சாளிகள்!

Panama Papers: Two months after Adani brother set up firm in Bahamas, a request to change name to Shah
prakash.jp. பனாமா லீக்ஸ்சில் (வெளிநாடுகளில் போலி கம்பனிகள் பெயரில் பணத்தை பதுக்குவது) தொடர்பு என்ற குற்றசாட்டின் அடிப்படையில், விசாரணையை நடத்தி முடித்து, பாகிஸ்தான் பிரதமரை பதவிலிருந்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் நீக்குகிறது.. ஆனால், இங்கு இந்தியாவிலோ, பனாமா லீக்சில் தொடர்புடைய அதானி குழுமத்துக்கு முழுநேர மார்கெட்டிங் செய்கிறார் நாட்டின் பிரதமர் மோடி.. என்ன செய்வது குஜராத்தின் அதானி குழுமத்துக்கும், குஜராத்தின் முதல்வராக பல ஆண்டுகள் இருந்த மோடிக்கும் அப்படியான "நெருக்கம் & தொடர்பு"...
//Panama Papers: Two months after Adani brother set up firm in Bahamas, a request to change name to Shah//
Months after the formation of the Adani Group’s flagship company Adani Exports Limited —
 now Adani Enterprises Limited — in 1993, industrialist Gautam Adani’s elder brother Vinod Shantilal Shah Adani set up a company in the Bahamas in January 1994. Vinod looks after the Adani Group’s overseas operations and his son Pranav is a director of Adani Enterprises Limited. Panama Papers India, Part 2: Politician, industrialist, jeweller Corporate service provider Mossack Fonseca’s records, accessed by The Indian Express, show that GA International Inc was incorporated in the Bahamas by Vinod S Adani on January 4, 1994. Watch | Panama Papers:

திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்)

Kirushnavel.T,S : திருப்பதி கோயில் – அதிகம் தெரியாத உண்மைகளும் வரலாறும் – பகுதி- 3
இந்த மூன்றாம் பகுதிக்குள் செல்லும் முன், ஒருவாரத்திற்கு மேல இடைவெளி ஏற்பட்டதிற்கு நண்பர்கள் என்னை மன்னிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன், நானும் வீட்டு வாடகை, கரண்டு பில் எல்லாம் கட்டவேண்டும் அதற்கு வேலையும் செய்யவேண்டும், அதனால் தான் இந்த இடைவெளி. முடிந்த அளவுக்கு அடுத்த பகுதிகளை விரைவில் பதிவிடுகிறேன்
திருப்பதி கோயில் உண்மையில் ஒரு புத்த மத விகாரம் (புத்தகோயில்), என்றோம் பின் முதலிரு பகுதிகளில் அது தொடர்பான இந்து மத பின்னணி புராண இதிகாச கதைகளையும், இலக்கியங்களில் சான்றுகளையும் அதில் உள்ள புரட்டுகளையும் பார்த்தோம்.
முன்னரே சொன்னது போல திருப்பதி கோயில் ஒரு புத்தர் கோயில் என்ற வாதத்திற்கான தகவல்கள் நான்கு மற்றும் ஐந்தாம் பகுதிகளில் வரும். இந்த மூன்றாம் பகுதியில் வரலாற்று சான்றுகளில் திருப்பதி கோயில் விஷ்ணு கோயில் அல்ல என்பதன் சான்றுகளை பார்ப்போம்
வரலாற்று சான்றுகளை பார்க்கும் முன் சுருக்கமாக இந்திய வரலாற்றை மேலோட்டமாக பாப்போம்.
வட இந்திய வரலாறை நாம் உற்று நோக்கினால், நாம் அறியும் மன்னர் வம்சங்கள்
1. முதலில் சிந்துசமவெளி காலம் – சுமார் கிமு 3000, பிறகு
2. பிரத்யோதய வம்சம் (c. 779 BCE–544 BCE)
3. ஹர்யாங்க வம்சம் (c. 544 BCE–413 BCE)
4. சிசுநாகர் வம்சம் (c. 413 BCE–345 BCE)
5. நந்தர்கள் வம்சம் (c. 345 BCE–321 BCE)

மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு

புதுடில்லி: மதபோதகர் ஜாகிர் நாயக்கை தலைமறைவு குற்றவாளியாக என்.ஐ.ஏ .அறிவித்துளளது. வங்கதேச தலைநகர் தாகாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 22 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரு பயங்கரவாதிகள், மும்பையை சேர்ந்த பிரபல மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது. இவர் மீது இந்தியாவில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. துபாய் சென்றிருந்த ஜாகிர் நாயக் இன்னும் இந்தியா திரும்பவில்லை.ஜாகிர் நாயக், மலேசியா ,சவுதி அரேபியா நாடுகளின் குடியுரிமை பெற்றதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் நேற்று மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவுப்படி , ஜாகிர்நாயக் தலைமறைவு குற்றவாளி என அறிவிக்கப்பட்டது. அவரது சொத்துகள் முடக்கப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. dinamalar

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விவகாரம்: முடங்கியது மாநிலங்களவை!

எம்.எல்.ஏ. விவகாரம்: முடங்கியது மாநிலங்களவை!
minnambalam : நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை முற்றிலுமாக முடங்கியது.
ஜூலை 28ஆம் தேதி நேற்று காலை மக்களவை கூடியபோது, கேள்வி நேரத்துக்குப்பிறகு, தொழிலாளர் ஓய்வூதியம் தொடர்பான தனிநபர் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில், “1995ஆம் ஆண்டு கொண்டுவந்த தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவானது, ஓய்வூதிய திட்டத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் ஆய்வு செய்து, சீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில், 58 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.

கமலஹாசன் எம்ஜியார் சந்திப்பு .. லாஜிக் உதைக்கிறதே .. ?

gokul.prasad: விகடனில் கமல்ஹாசன் பேட்டி வாசித்தேன். என் கோலத்தில் இல்லாத புள்ளிகளை நீங்களாகவே சேர்க்காதீர்கள் மாதிரியான வரிகள் க்ளாஸ். ஒரே ஒரு விஷயம் உறுத்தியது.
ஆஸ்கருக்கு நாயகன் தேர்வானதாகவும் அதை தெரிவிப்பதற்காக எம்ஜிஆர் வீட்டிற்கு சோபாவில் அமர்ந்தால் தரைக்கு கால் எட்டாத சிறுபிள்ளை ஷ்ருதியையும் அழைத்துச் சென்றதாகவும் தொப்பி இல்லாத எம்ஜிஆரை யாரென அடையாளம் தெரியாததால் 'ஐயா வணக்கம்' சொல்லாத ஷ்ருதி, 'இப்ப பாரேன்' என எம்ஜிஆர் கெட் அப் பொருத்திக் கொண்டு வந்தவுடன் வணக்கம் சொன்னதாகவும் கமல்ஹாசன் சொல்கிறார்.
1987 தீபாவளிக்கு நாயகன் வெளியானது. ஆஸ்கர் தேர்வுகள் டிசம்பர் இறுதியில் தான் அறிவிக்கப்பட்டன. 1987 டிசம்பர் 24ல் எம்ஜிஆர் இறந்துவிட்டார். உடல்நலமில்லாமல் இருந்த எம்ஜிஆரை டிசம்பரில் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. சிவாஜி கணேசனை பார்த்து விட்டு ஞாபகப்பிசகினால் எம்ஜிஆர் என மாற்றிச் சொல்கிறார் என வைத்துக் கொண்டால் கெட் அப் கதை பொருந்தாது.

தோழர் திவ்யாவுக்கு கொலை மிரட்டல் பாலியல் இழிவு தொலைபேசிகள் .. டாக்டர் கிருஷ்ணசாமியின் பதில் என்ன?


என் கண்ணில் பட்ட இந்த பதிவையும் பகிர்ந்து நகர்கிறேன்:
புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியின் பதில் என்ன? கக்கூஸ் பட இயக்குநர் தோழர் திவ்யாவிற்கு கொலை மிரட்டல் விடும், எச்சரிக்கை செய்யும், பாலியல் ரீதியில் இழிவு செய்யும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சில நிமிடங்களுக்கு ஓர் அழைப்பு என்பதாக நிலைமை இருக்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர் அழைத்ததாகவும் தகவல் இருக்கிறது. மென்மையாகப் பேசிய அவர், பின்னர் மிகக் கேவலமாகப் பேசியிருக்கிறார்.
என்ன பிரச்சனை?
தேவந்திர குல வேளார் அல்லது பள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்களும் மலம் அள்ளும் தொழிலில் இருக்கிறார்கள் என்று கக்கூஸ் படத்தில் பதிவு செய்ததை நீக்க வேண்டும் என்றும், அதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசிவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
இன்றைய நிலையில் பல சாதிகளைச் சேர்ந்தவர்களும் மலம் அள்ளும் வேலையில், வறுமையின் காரணமாக, மிகக் கொடூரமான நிலையில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறகிறார்கள் என்ற சமூக யதார்த்தத்தை கக்கூஸ் படம் பதிவு செய்திருந்தது. இந்த அவலத்தை நீக்க அரசு கொண்டுவந்த சட்டத்தை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.

கர்நாடகத்தில் லிங்காயத்துக்கள் இந்து மதம் அல்ல .. தனியான மதமாக அறிவிக்க கோரிக்கை .. வீரசைவ மரபு ..

Lingayat Mutts split over separate religion issue, Congress stands to gain the most The demand had resulted in several BJP leaders stating that Lingayats are Hindus and that a separate religion status is not require
பெங்களூரு: பிறப்பின் அடிப்படையில் ஏற்ற தாழ்வை திணிக்கும் மனுதர்மத்தையும் இந்துத்துவாவையும் ஏற்காத முற்போக்கான அறிவியல் பூர்வமான மதம்தான் லிங்காயத்துகளின் வீரசைவம் என கர்நாடகா அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளார்.
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள லிங்காயத்துகளை லிங்காயத்துகள்- வீரசைவர்கள் என தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. கர்நாட்காவில் ஆளும் காங்கிரஸ் அரசும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.இது தொடர்பாக கர்நாடகா மாநில அமைச்சர் பசவராஜ் ராயரெட்டி கூறியதாவது: 12-ம் நூற்றாண்டில் பசவேஸ்வராவால் நிறுத்தப்பட்ட தனி மதம்தான் வீரசைவம்- லிங்காயத் என்பது. இது இந்துமதத்தின் ஒரு பகுதியே அல்ல.
மனித விழுமியங்களுக்கு எதிரான மனுஸ்மிருதியை வீரசைவம் எதிர்க்கிறது. இந்துக்களின் கலாசாரத்தை எதிரொலிப்பவர்களாக லிங்காயத்துகள் இருந்தாலும் இந்துமதத்தின் ஒரு அங்கம் அல்ல.

வெள்ளி, 28 ஜூலை, 2017

சீமானுக்கும் குறி? திருமுருகன் காந்தி, வளர்மதியைத் தொடர்ந்து...

Mathi o Oneindia Tamil சேலம்: 
தமிழர் உரிமைகளுக்காக போராடிய திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரைத் தொடர்ந்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழ் உணர்வாளர்கள் பலரையும் அச்சுறுத்தி வருகிறது குண்டர் சட்டம். முதலில் திருமுருகன் காந்தி, பின்னர் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சீமான் மீது வழக்கு கதிராமங்கலத்தில் போராடிய பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் மீதும் குண்டர் சட்டம் பாயலாம் என கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் சேலம் போலீசார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ் தேசிய இன மக்கள் சந்திக்கும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியினர் கடந்த 4-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பேசிய சீமான், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்;

இந்துமத பட்டியலில் பௌத்தர்களை விடுவிக்க கோரிக்கை! அக்டோபர் 14 மாநாடு!

கடந்த 12-05-2017 அன்று இலங்கையில் நடைபெற்ற
14வது விசாக தினத்திற்கு (புத்த பூர்ணிமா) இலங்கை _கொழும்புவிற்கு சென்றிருந்த இந்திய பிரதமர் Mr.நரேந்திர மோடி ஆற்றிய உரை.
"புத்தர் காட்டிய வழி நம் அனைவருக்கும் இப்போது பொருத்தமாக உள்ளது!
அமைதியான வாழ்க்கை வாழ புத்த மதம் சிறந்த வழி என்றும் கூறினார்"
இதனை அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
எங்களுடைய கேள்வி:
இதே செய்தியை அவர் இந்தியாவில் சொல்ல முடியுமா??
அமைதியாக வாழ புத்த மதம் சிறந்த வழி என்றால் பிறகு நீங்கள் வளர்க்கும்,மனிதனை மிருகமாக்கும் இந்து முன்னணி அமைப்புகள் எதற்கு?
இந்து மதம் எதற்கு??தூக்கி குப்பையில் போட வேண்டியது தானே?
மாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கும் உங்கள் RSS மற்றும் BJP போன்ற அமைப்புகள் எதற்கு?
உன் இரட்டைவேடம் எல்லாம் இந்தியாவில் செல்லுபடியாகாது என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறோம்.

விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை

இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். இதைத் தடுப்பதுதான் இந்தியாவைத் தேவையில்லாமல் வறுமையில் வைத்திருப்பதாக் குமறுகிறார்கள், ஆளும் வர்க்க அறிவாளிகள். விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் !
ஃபோர்ப்ஸ் – அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் பத்திரிகை. சமீபத்தில் ம.பி., மகாராட்டிரா விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அந்தப் பத்திரிகை வெளியிட்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
ந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.
அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தி திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.

தோழர் மதிமாறனின் காப்பி + கமலஹாசன் பற்றிய அபத்தங்கள் .. ...?


காப்பி ஏதோ பார்ப்பனர்களின் சாதி சான்றிதழ் என்பது போல தோழர் மதிமாறன் பேசி உள்ளார்.  பிரெஞ்சு மக்கள் காப்பி அதிகம் அருந்துவார்கள். பிரித்தானியர்கள்  தேநீர் அதிகமாக அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். காப்பி, தேநீர் , குளிர்பானங்கள் அல்லது வைன் போன்றவை எல்லாம் அந்தந்த நாட்டு மக்களின் சீதோஷ்ண நிலை மற்றும் உணவு பழக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவையாகும். எல்லாவற்றையும் பார்ப்பனீயத்தோடு தொடர்பு படுத்தி பார்க்கவேண்டியதில்லை. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போன்ற சிந்தனை பார்பநீயத்துக்கு எதிரான பார்வையை கேலிக்கு உரியதாக்கி விடும்,
அடியேன்  எல்லாவிதமான மாமிசங்களையும் உண்டிருக்கிறேன் அப்பொழுதெல்லாம்  எனக்கு உண்மையில் தேநீர் மிகவும் விருப்பமாக  இருந்தது, ஆனால்  வெறும் தாவர உணவை மட்டுமே உண்ணும் பொழுதெல்லாம் எனக்கு காப்பியே மிகவும் விருப்பமான தேர்வாக இருந்திருக்கிறது . காப்பியில் அதிகம் பித்தம் இருக்கிறது. தாவர உணவுகளில் பித்தம் குறைவு .வாய்வு கபம் போன்றவையே அதிகம் .. மாமிச உணவு பித்தம் நிறைந்தது அதை உண்ணும்பொழுது தேநீர் மிகவும் நன்று, உணவை சீரனமாக்கும் தன்மை தேநீருக்கு மிக அதிகமாக உண்டு,
  மேலும் அதே பேச்சில் கமலஹாசனின் பெயரில் காணமல் போன A எனற எழுத்தை குறிப்பிட்டு தோழர் மதிமாறன் பேசி உள்ளார் . நியு மாராலாஜி நம்பிக்கை காரணமாக அது நேர்ந்து இருக்கலாம் என்று கூறியுள்ளார். இருக்கலாம்! ஆனால் அதற்கு வேறு ஒரு காரணம் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.   கமலஹாசன்  மத்திய கிழக்கு நாடுகள் பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுக்கு தான் ஒரு இஸ்லாமியன் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாகவே kamal hassan என இரண்டு முஸ்லிம் பெயர்கள் தனது பெயரில் மறைந்திருப்பதை பயன்படுத்துகிறார்.அது அவரது வியாபாரம் அதை அடியேன் விமர்சிக்கவில்லை . தங்களின் கவனத்துக்கு கொண்டு வந்தேன் அவ்வளவுதான்..

அட்டைக்கத்தி நந்திதா வணங்காமுடியிலும் ...

அட்டகத்தி' படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நந்திதா. அதன் பிறகு `இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் குமுதா கேரக்டர் மூலம் பிரபலமானார். செல்வராகவன் இயக்கத்தில் உருவான `நெஞ்சம் மறப்பதில்லை' படத்திலும் நடித்திருக்கும் இவர் தற்போது இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகவுள்ள `வணங்காமுடி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
பெரிதாக தமிழ் படங்கள் கமிட் ஆகாததால், தெலுங்கில் கவனம் செலுத்தினார். அதுகுறித்து, நமது மின்னம்பலத்திற்கு அளித்துள்ள பேட்டியின் கேள்வி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது 'வணங்காமுடி' படத்தில் மதுரைப் பெண்ணாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் அரவிந்த்சாமியின் மனைவியாக ரித்திகாசிங்கும், அவரின் தோழியாக சிம்ரனும் நடித்துள்ளார்கள். நந்திதா மதுரைப் பெண்ணாகவும் , சாந்தினி தூத்துக்குடி பெண்ணாகவும் நடித்துள்ளார்கள்.

2 லட்சம் புத்தகங்கள் விற்பனை! புத்தகத் திருவிழா!

தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பாக, சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் சென்னை புத்தகத் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை,21) தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை சேய்யப்பட்டுள்ளதாக தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமத்தின் அறங்காவலர் ஆர்.எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே நிலையங்களை திருமண மண்டபங்களாக பயன்படுத்த ஆலோசனை!

ரயில் நிலையங்களில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ரயில்வேத்துறை ஆலோசித்து வருகிறது.
ரயில்வேத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கேட்டரிங் மற்றும் சேவைகளுக்கு புதுக் கொள்கையை வகுப்பது, ரயில் நிலையங்களைத் தனியாருக்கு ஏலம் விடுவது போன்ற முயற்சிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வருமானத்தை உயர்த்துவதே இதன் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.
தற்போது பயணிகள் மற்ற வகை போக்குவரத்தை நாடிச் செல்வது அதிகரித்துள்ளதால் ரயில்வேயின் வருவாய் குறையத் தொடங்கியுள்ளது. எனவே பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் அல்லாமல் வேறு வகையாகவும் ரயில்வேயின் வருவாயை உயர்த்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. எனவே அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள ரயில்வே நடைபாதைகளைத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோசடி வழக்கு : தயாநிதி மாறன் ஆஜர்!

மோசடி வழக்கு : தயாநிதி மாறன் ஆஜர்!
பி.எஸ்.என்.எல். இணைப்பு தொடர்பான மோசடி வழக்கில் தயாநிதி மாறன் இன்று ஜூலை 28ஆம் தேதி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்தியத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல். இணைப்புகளை தங்களது நிறுவனத்துக்கு முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறியிருந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக + நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி !

பீகார் முதல்வராக நேற்று ஜூலை 27ஆம் தேதி காலை பதவியேற்றுக் கொண்ட நிதீஷ் குமார், பீகார் சட்டசபையில் இன்று ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியுடன் முதலமைச்சராக அவர் பதவியில் நீடிப்பார்.
பீகாரில் நிதிஷ்குமாரின் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது,நடைபெற்ற ஊழல் தொடர்பாக கடந்த ஜூலை 7ஆம் தேதி சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது . அதைத்தொடர்ந்து, துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதையடுத்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் என்று முதல்வர் நிதீஷ் குமார் கால அவகாசம் கொடுத்தார். அதைத்தொடர்ந்து கூட்டணியில் விரிசல் தோன்றியது. இதனால் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஜூலை 26ஆம் தேதி மாலை ஆலோசனை நடத்திய பின்னர், கவர்னர் மாளிகைக்குச் சென்று, கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாகத் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தேர்வு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டு புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். 
தற்போது பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஷாபாஸ் ஷெரீப் இருந்து வருகிறார். பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பனாமா நாட்டின் மொசாக் பொன்சேகா சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐதராபாத் பல்கலை.யில் கார்கில் நினைவு சின்னத்தை இடித்ததால் பரபரப்பு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கார்கில் நினைவு சின்னத்தை பல்கலைக்கழக நிர்வாகிகள் இடித்து தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத் பல்கலை.யில் கார்கில் நினைவு சின்னத்தை இடித்ததால் பரபரப்பு ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது ஐதராபாத் பல்கலைக்கழகம். பாகிஸ்தானுக்கு எதிராக கார்கிலில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கார்கில் விஜய் திவாஸ் என ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு, கார்கில் விஜய் திவாஸ் நாடு முழுவதும் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

BBC: இலங்கை யானைகள் கடலுக்கு...? அபாய அறிகுறி? இயற்கையில் எங்கேயோ தவறு நடக்கிறது?


இலங்கையில் காட்டு யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது என்பது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ்  ஃபெர்ணான்டோ கூறியுள்ளார்.
கிழக்கு கடலில்   இந்த மாதம் 12 ஆம் மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில், கடலில் நீந்திச் சென்ற மூன்று யானைகள் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களும் சூழல் மாற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் அல்லது இயற்கை அனர்தத்தின் முன் அறிவித்தலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
"இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கடற்படை தரப்பிலிருந்து கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார் பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ

BBC :பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்! கறுப்பு பண விவகாரம்!

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீஃப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீஃப் பதவி விலகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம் சேர்த்தார் என்றும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள், எஜாஸ் ஹசன், எஜாஸ் அஃப்சல், சயீத் ஷேக், ஆசிஃப் சயீத் கோசா மற்றும் குல்ஜார் அகமத் ஆகியோர் அடங்கிய ஐந்து உறுப்பினர் சட்ட அமர்வு நவாஸ் ஷெரீஃப் குற்றம் செய்திருப்பதாக தீர்ப்பு வழங்கியது. கோசா மற்றும் குல்ஜார் அகமத் ஆகிய இருவரும் பனாமா ஆவணக் கசிவு விவகாரத்தின் முதல்கட்டத்திலேயே நவாஸ் ஷெரீஃப் குற்றவாளி என்று கூறிவிட்டார்கள். இருந்தாலும், மீதமுள்ள மூன்று நீதிபதிகளும் மேல் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர். தற்போது நவாஸ் ஷெரீஃப் தவறிழைத்ததாக ஐந்து நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளனர். நவாஸ் ஷெரீஃப் தவிர அவரது மகள் மற்றும் மருமகனும் தவறிழைத்திருப்பதாக நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மணல் திருடர்களால் காணமல் போன சோழாவரம் ஏரி!

ந.பா.சேதுராமன் :ம;ணல் திருடர்களால் சென்னைக்கு அருகிலுள்ள சோழவரம் ஏரி மொத்தமாய்ச் சுரண்டப்பட்டிருக்கிறது. காணாமல் போயிருக்கிறது..

.காலியாக இடம் இருந்தால் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்… காய்ந்துகிடக்கும் ஆறு, ஏரி என்றால் மணல் திருட்டில் ஈடுபடுகிறார்கள். கரைகளைப் பலப்படுத்தி மராமத்துப் பணிகளை மேற்கொள்வதில் அரசு மெத்தனம் காட்டியதால், சோழவரம்போலவே பல ஏரிகளும், ஆறுகளும் மேம்பாலத்துக்கு நடுவில் தெரியும் பொட்டல் சாலைகளாகி இருக்கின்றன. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், புழல் போன்றவை இப்போது முற்றிலும் வற்றிக்கிடக்கின்றன.
கொள்ளையர்களின் பிடியில் சோழவரம் ஏரி
சோழவரம் ஏரிதான் இப்போது மணல் கொள்ளையர்களின் புகலிடமாகிப் போயிருக்கிறது. சென்னையைச் சுற்றியுள்ள இந்த நான்கு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. இந்தப் பட்டியலில், ‘நான் மட்டுமே 880 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டவன்’ என்று சொல்லிக்கொள்ள சோழவரம் ஏரியிடம் இப்போது எந்த அடையாளமும் இல்லை.

அந்த குட்டி ஆட்டு கண்களில் இருந்து என்னால அவ்வளவு எளிதில் மீண்டு வரமுடியவில்லை

வாசுகி பாஸ்கர் ஆடு, மாடு, கோழியை கொன்று உண்கிற போது, உண்மையிலேயே உங்களுக்கு அந்த உயிர் உங்க உணவுக்காகவே படைப்பட்டது ன்னு நினைக்கிறீங்களா? அந்த உயிர் மேல உங்களுக்கு அன்பு இல்லையா? - என் நண்பர் கேட்ட கேள்வியும், அவருடன் நடந்த ஒரு விவாதம்.
ஈசிஆரில் ஒரு தாபா உணவகம் உண்டு, இரவு ஒரு ஒன்பது மணி வாக்கில் தாபாவுக்கு போய் சில ரொட்டிகளை ஆர்டர் செய்து விட்டு தொட்டுக்கொள்ள சுக்காவும், சிக்கன் கிரேவியும் சொல்லிட்டு, அந்த தாபாவில் ஆடு, கோழி, வாத்து வளர்ப்பு இருக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். லேசான மழை, மழைக்காக ஆடுகள் எல்லாம் ஒரே இடத்தில் ஒதுங்க, ஒன்றின் மேல் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருந்தது, ஒரே ஒரு குட்டி ஆடு மட்டும் தனியாக அமர்ந்திருந்தது, அதன் அம்மா ஆடு மழையில் நனைந்த படி ஓடிவர, இந்த குட்டி ஆடு ரெண்டடி முன்னால் போய் அம்மாவை வரவேற்று அந்த அம்மா ஆடு அமர்ந்ததும், அதன் பக்கத்திலேயே குளிருக்கு அடக்கமாக அணைத்துபடி புதைந்து அமர்ந்தது.
இதை பார்த்துட்டு இருந்த கொஞ்ச நேரத்தில என்னவோ மாதிரி ஆகிடிச்சி, இறைச்சியை சாப்பிடுறதை விட்டுடலாமா ன்னு கூட அந்த நேரத்தில தோணுச்சு, அந்த குட்டி ஆட்டு கண்களில் இருந்து என்னால அவ்வளவு எளிதில் மீண்டு வரமுடியவில்லை. உணவு தயாராகி விட்டதாக வெய்ட்டர் வந்து சொல்ல, போய் சாப்பிட அமர்ந்தோம்.

தமிழகத்தில் ஏழு மாதங்களில் 30 தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்!
minnambalam :‘தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் 30 தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்’ என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நேற்று (ஜூலை 27) திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்துக்குப் பிறகு இரவு கடலூரில் நடைபெற்ற அம்பேத்கரின் 125ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய திருமாவளவன், “அம்பேத்கருக்கு முன்னுரிமை கொடுத்த மாநிலம் மகாராஷ்டிராதான். லண்டனில் அம்பேத்கர் தங்கிய வீட்டை வாங்கி பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒருநாள் அம்பேத்கரின் காலடி இங்குதான் பட்டது என்று அவரது காலடி தடத்தை தேடி அலையும் காலம் வரும்.

பார்ப்பானின் திருப்பதியை காப்பி அடித்து விடாதீர்கள் .. அல்லலோயா காமடியைவிட அது மோசம்!

Vijay Bhaskarvijay :நிம்மதியாக வாழ்வதற்கு சில வழிகள்...
1.வீட்டுக்குள் வந்து இந்த கோவிலுக்கு இது செய்தா நல்லது, அந்த கோவிலுக்கு அப்படி நேர்ந்துகிட்டா நல்லது என்று சொல்லும் உறவினர்களை உடனே எதையாவது பேசி “எனக்கு இதில் நம்பிக்கையில்லை” என்று நிறுத்திவிடுங்கள்.
2. உங்கள் முகத்தைப் பார்த்து குறிசொல்லும் ஒரு மொக்கை ஆசாமி ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார். அவரையெல்லாம் பக்கத்திலேயே அண்ட விடாதீர்கள்.
3.உங்கள் மகனுக்கோ மகளுக்கோ ஜாதகம் எழுதாதீர்கள். உங்கள் அம்மா அப்பா ஜாதகம் எழுதியிருந்தால் வாங்கி வந்துவிடுங்கள். ஒருவேளை அவர்களிடம் இருந்தாலும் உங்கள் அனுமதியின்றி அதை எந்த ஜோசியரிடமும் காட்டக்கூடாது என்று சொல்லிவிடுங்கள்.
4.அந்தரங்கமான மூடநம்பிக்கைகள் உங்களுக்குள் இருக்கும். அதை உங்களுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள். வெளியே குடும்பத்தில் சொல்லாதீர்கள். சொல்லும் போது அது பயத்தைக் கொடுத்து குடும்ப மூட நம்பிக்கையாக ஆகிவிடும்.

பாஜக சாதனை மலர் ... காவிப்பண்டாரங்கள் புடுங்கிய புல்லு கட்டுகள்!

பா.ஜ.க சாதனை மலர்.. பிஜேபி & மோடி செய்து கிழித்த சாதனைகள்!
தமிழக அளவில் செய்த சாதனைகள்:-
1. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது!
2. காவிரி நீரை தமிழகத்திற்கு கிடைக்க விடாமல் செய்தது!
3. தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாமல் அவர்களை நிர்வாணமாக போரட வைத்துது!
4. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்ப்பையும் மீறி அனுமதியளித்தது!
5. ஜல்லிகட்டு போராட்ட மாணவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்து தடியடி நடத்த வைத்தது!
6. மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கியது!
7. காவிரி போராட்டதின் போது கர்நாடகாவில் தமிழர்களை தாக்கியது!
8. கீழாடி அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் நாகரிகம் தெரியாமல் இருக்க கீழாடி பணிகளை முடக்கி மண் அள்ளி மூடியது!
9. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கோவையில் கலவரத்தை ஏற்படுத்தியது!
10. தமிழக மீனவர் படுகொலையை நியாயபடுத்தியது!
11. தொடர்ந்து தமிழக நலனிற்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றுவது!
12. நீயுட்ரினோ ஆய்வு மையம் மற்றும் கெயில் குழாய் பதிப்பது!
13. எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திற்கு நிராகரித்தது!
14. மாநில ஆட்சியில் தலையிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது!
15. கட்டாய ஹிந்தி சமஸ்கிருத திணிப்பு!

நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் ! ரிமூட் கண்ட்ரோல் மூலம் குதிரை ஓடிய ஏஜெண்டுகள்!

தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.
ரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.சி பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவர்களை மோத விடுவது தான் “சம வாய்ப்பு” என விளக்கம் அளித்தது மத்திய அரசு.
இந்நிலையில், பள்ளிக்கூடத்துக்கு வெளியே நீட் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு செலவு செய்த மேட்டுக்குடி குலக்கொழுந்துகள், அதுவும் போதாமல் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.

வந்தே மாதரம் ! நீதித்துறையில் RSS ஊடுருவல்.. இது தான் நீதி வழங்கும் முறையா?

போலி தேசபக்தியின் போர்வையில் அசல் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல்...
TET தேர்வில் தான் அளித்த விடைக்கு ஒரு கூடுதல் மதி பெண் வழங்க வன்னெடும் என்பது வழக்கு அது நீதிபதி முன்பு வருகிறது. நியமாக அதற்க்கு மட்டும் தானே தீர்ப்பு வழங்க வேண்டும்??? ஆனால் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் "தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி நிறுவனங்களிலும் வாரம் ஒரு முறை (திங்கள் (அ) வெள்ளி) வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். மாதம் ஒரு முறை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். அனைத்து இணையதளங்களிலும் வந்தே மாதரம் பாடலை வெளியிட வேண்டும். இது தொடர்பான தலைமை செயலாளர் நான்கு வாரத்தில் வெளியிட வேண்டும். மனுதார்ருக்கு உரிய மதிப்பெண் வழங்கி அவருக்கு நான்கு வாரத்தில் பணி வழங்க வேண்டும் என எதற்காக உத்தரவிட்டார்??   - முகநூல் வெளி

தலித் இளைஞர் சாதிவெறியர்களால் வெட்டி படுகொலை.புளியரம்பாக்கம் .. திருவண்ணாமலை மாவட்டம்

செய்யாறு அருகே தலித் இளைஞர் சாதிவெறியர்களால் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே புளியரம்பாக்கம் தலித் மாணவர்கள் இளைஞர்கள் 23.7.2017 அன்று சித்தேரியில் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த செலலபெருபுலிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தலித் மாணவர்களை தாக்கிவிட்டு சென்றுள்ளனர். மீண்டும் 4 மணிக்கு தலித் பகுதிக்கு வந்த செல்லபெரும்புலிமேடு வாலிபர்கள் தலித் மக்களிடம் தகறாரு செய்துள்ளனர். அங்கிருந்த மக்கள் அவர்களை காவல்நிலையத்தில்
. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஜோதி அலட்சிய போக்குடன் நடந்ததன் விளைவு தங்கள் கிராமத்திற்கு சென்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களுடன் தலித் பகுதிக்குள் புகுந்து கண்ணில் பட்ட அனனவரையும் தாக்கியுள்ளனர். இதில வெங்கடேசன், ஆதிகேசவன் த/பெ மாதவன் அடித்து இழுத்துச்சென்று இறந்து விட்டார் என்று தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். வெங்கடேசன் சென்னை அரசு மருத்துவமனையில் இறந்துள்ளார். இச்சம்பவத்தில் வீடுகள், மளிகை கடை, இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தினர்.

பட்டைய கிளப்பும் "குண்டாசு குண்டாசு ஸ்டூடன்டுக்கு குண்டாசு :வியாழன், 27 ஜூலை, 2017

குளங்களை தூர் வார யார் யாருக்கு எவ்வளவு கமிஷன்? பட்டியல் லீக் ... ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Amudhavalli Oneindia Tamil
சேலம்: எடப்பாடி தொகுதிக்குட்பட்ட கட்சராயன்பாளையம் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி கோவையில் இருந்து கார் மூலம் செல்ல முயன்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட அவர் மாலையில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, திமுக ஆறு குளங்களை தூர் வாரும் பணிகளை ஆரம்பித்த பிறகு, அரசு சார்பில் அதிமுக கட்சிக்காரர்களுக்கு மட்டும் பணிகளை ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி இருக்கிறார்களே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், "ஊழல் செய்ய, கமிஷன் வாங்க, லஞ்சம் வாங்க அதையெல்லாம் செய்கிறார்கள். அதற்காக ரூ. 300 கோடி அறிவிக்கப்பட்டது.

நான் சட்டமன்றத்தில் பேசியபோது கூட, "300 கோடி ரூபாய் அறிவித்து உள்ளீர்களே, எங்கெங்கு பணிகள் நடந்திருக்கின்றன?
 எத்தனைப் பணிகளை முடித்தீர்கள்?

கோவையில் ஸ்டாலின் கைது!

கோவையில் ஸ்டாலின் கைது!
மின்னம்பலம் :சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் திமுக சார்பில் தூர்வாரப்பட்ட கட்சராயன் ஏரியை பார்வையிட சென்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோவையில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடியிலுள்ள, கொங்கணாபுரம் கட்சராயன் ஏரியை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பார்வையிட செல்வதாக நேற்று அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், 'திமுகவினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரிய கட்சராயன் ஏரியில் நுழைந்த அதிமுகவினர், அங்கு சீரமைக்கப்பட்ட கரைகளை உடைத்து சட்ட விரோதமாக மண் அள்ளி சென்றுள்ளனர். மேலும் நான் திமுக-வினர் தூர்வாரும் ஏரிகளை பார்வையிட்டு வருகிறேன். அதன்படி கட்சராயன் ஏரியை நாளை(இன்று) பார்வையிடுவேன்'என்று தெரிவித்திருந்தார்.

ஜேஎன்யுவில் பீரங்கி: இந்திய பல்கலைக் கழகங்கள் மீது போர் ! அதே பீரங்கி யார் கைகளிலாவது சென்று விட்டால்?

thetimestamil : கார்கில் தினத்தை நினைவுகூரும் அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேஎன்யு துணை வேந்தர், ஜேஎன்யுவுக்கு தற்போது பயன்பாட்டில் இல்லாத ராணுவ பீரங்கிகள் வாங்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இரண்டு தேஜமு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மாணவர் மத்தியில் ராணுவத்தின் மீதான பற்றை வளர்த்தெடுக்க அது போன்ற ஒரு பீரங்கி தேவை என்று அவர் சொன்னார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர், ஜேஎன்யுவை கைப்பற்றியதற்காக தற்போதைய அரசாங்கத்தை பாராட்டியதுடன் அடுத்து மற்ற பல்கலை கழகங்களையும் கைப்பற்றுவது பற்றி பேசினர்.

தேஜஸ்வி யாதவ் : ஆளுநர் ஒரு ஜனநாயக கொலைக்கு உடந்தை .. எல்லாம் நாடகம் ... குதிரைபேர பாஜக...


பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, கவர்னரை சந்தித்து பெரும்பான்மையை நிருபிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். மேலும் நிதிஷ் கட்சியினருக்கு தைரியம் இருந்தால் தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். பீகாரில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இன்று காலை 10 மணிக்கு நிதிஷ் குமார் பா.ஜ., முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நள்ளிரவில் கவர்னர் இல்லமான ராஜ்பவனை நோக்கி ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, தனது கட்சியினருடன் ஊர்வலம் சென்றார். செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், தங்களை ஆட்சியமைக்க அழைக்கும் படி கவர்னரை வலியுறுத்த உள்ளதாக கூறினார். மேலும் இது ஜனநாயக படுகொலை எனவும் பா.ஜ.,வை சாடினார்.

கலாம் மணிமண்டபம் .. மோடி திறந்து வைத்தார் (கலாம் சிலையா சரஸ்வதி சிலையா?)

ராமேஸ்வரம் அருகே முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. (கலாம் அய்யா மகா சிறியவாவிடம்  கோமிய விஞ்ஞான பாடம் கேட்கிறாரோ)

BBC :17 வயது பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவு; இது பாகிஸ்தான் தண்டனை

Village elders in Pakistan ordered the rape of a 17-year-old girl after her brother was accused of raping another girl. Twenty people have been arrested by police following the two assaults, which took place last week in the town of Muzaffarabad, close to Multan in south Pakistan,
பாகிஸ்தானில் உள்ள முல்தானில், பதின்ம வயது பெண் ஒருவரை பாலியல் வல்லுறவு செய்ய உத்தரவு பிறப்பித்த சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் வேறு ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரு பெண்களின் குடும்பத்தாரும் முன்பே அறிந்தவர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இரு குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க கூட்டாக இணைந்து விசாரணை ஒன்றை நடத்தியுள்ளனர். ''ஜிர்கா எனப்படும் கிராம சபை ஒன்று, 16 வயது நிரம்பிய பெண்ணை தண்டிக்கும் விதமாக அவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். காரணம், அப்பெண்ணின் சகோதரர் ஒரு 12 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளார்'' என்று போலீஸ் அதிகாரி அல்லா பாக்ஷ் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமாரின் 18 எம் எல் ஏக்கள் போர்க்கொடி .. பதவி ஏற்ற நிதிஷ் + பாஜக கூட்டணி அரசு சிக்கலில்!


முதல்வராக பதவியேற்றார் நிதீஷ்பீகார் மாநிலத்தில் நடைபெற்று வந்த கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முதல்வர் பதவியை நேற்று ஜூலை 26ஆம் தேதி ராஜினாமா செய்த நிதீஷ் குமார், பாஜக ஆதரவுடன் இன்று ஜூலை 27ஆம் தேதி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். துணை முதல்வராக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் இருந்தார். இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் பதவி விலகும்படி நிதீஷ் குமார் காலஅவகாசம் கொடுத்தார். ஆனால், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வந்த நிலையில், முதல்வர் நிதீஷ் குமார் திடீரென நேற்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கவர்னரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

கீழடி நாகரிகம் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - கனிமொழி கேள்விக்கு பதில்!

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று திமுக எம்.பி. கனிமொழியின் கேள்விக்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். கீழடியில் மிகப்பழமையான நாகரிகத்துக்கு சொந்தமான தமிழர்கள் வாழ்ந்ததாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அங்கு நடைபெற்ற ஆய்வுகளைச் சீர்குலைக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழர்களின் நாகரிகத்தை திரித்து வரலாற்று குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று தமிழ் அமைப்புகள் சந்தேகத்தை எழுப்பின. இந்நிலையில், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2,160 ஆண்டும், மற்றொரு பொருள் 2,220 ஆண்டுக்கும் முற்பட்டவை என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்விக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா பதில் அளித்துள்ளார். கீழடியில் கிடைத்த 2 பொருளையும் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.நக்கீரன்

சென்னை திருவள்ளூரில் திமுக மனிதசங்கிலி .. நீட் தேர்வுக்கு நிரந்தர தடை கோரி போராட்டம் (படங்கள்)

நக்கீரன் :நீட் தேர்விற்கு தமிழகத்தில் தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் அக்ககட்சியினர் அண்ணா சாலையில் ஆரம்பித்து தேனாம்பேட்டை அன்பகம் வரை நீண்ட வரிசையில் நின்று மத்திய,     மாநில  அரசுகளுக்கு என் எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் தயாநிதி மாறன்   ஜெ.அன்பழகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.வட சென்னையில் கூட்டணி தலைவர்களுடன் பேராசிரியர்.க.அன்பழகன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.திருவள்ளுரில் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் மாவட்ட செயலாளர் நாசர் பரந்தாமன், திருவள்ளுர் எம்எல்ஏ ராஜேந்திரன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் கலந்து கொண்டனர். இது தவிர காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிதம்பரம், சமத்துவ மக்கள் கழகம், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் அமைப்புகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

'நீட்' தேர்வின் கொடுமை எனக்குப் புரியவில்லை" கமலஹாசன் என்றெரு நடிகன் கூறவருவது ...

கேள்வி:
"நான் பள்ளிப்படிப்பை முடிக்காததால் 'நீட்' தேர்வின் கொடுமை எனக்குப் புரியவில்லை", என்கிறாரே கமல் ஹாசன்?
பதில்:
நான் ஆண் என்பதால், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையின் தீவிரம் எனக்குப் புரியவில்லை.
நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்காததால், எனக்கு சாதிய வன்கொடுமையின் கொடூரம் புரியவில்லை.
என் காதல் திருமணத்திற்கு எனது பெற்றோர் தடையாக இல்லை என்பதால், எனக்கு சாதி ஆணவக்கொலையின் விபரீதம் விளங்கவில்லை.
நான் விவசாயி இல்லை என்பதால், காவிரி டெல்டா விவசாயிகளின் போராட்டம் எனக்குப் புரியவில்லை.
நான் படிக்காமலேயே வணிகம் செய்து செழிப்பாக வாழ்வதால், எனக்கு பட்டதாரிகளின் வேலையில்லா திண்ணாட்டம் பற்றிப் புரியவில்லை.
என்னுடைய கிராமத்தில் தண்ணீருக்குப் பஞ்சமில்லாததால், எனக்கு சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு புரியவில்லை.

பார்ப்பன தேசம் இது! IAS ல் பார்ப்பனர்கள் := 72% IPS ல் பார்ப்பனர்கள் := 61%

அலைகள் வெளியீட்டகம் தோழர் சி்.இளங்கோ அவர்களின் பதிவு.
 ----- ----- ----- ----
லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%
ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%
பார்ப்பன கவர்னர்கள் := 50%
பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%
மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பன...54%
இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%
பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன...70%
பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%
சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%
ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%
வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%
பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பன...மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%
வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%
ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் := 61%
IAS ல் பார்ப்பனர்கள் := 72%
IPS ல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%
CBI மற்றும் Custom சில் பார்ப்பனர்கள் := 72%
*பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*
*(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பன..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பன..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.

பன்னீர்செல்வத்தின் கிணறு வாங்கியவர் பொதுமக்களுக்கு இலவசமாக தருகிறார்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம், இங்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு சொந்தமான நிலத்தில் 200 அடி கிணறு உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய கிராம மக்கள், கிணற்றை கிராமத்திற்கு எழுதி தர வேண்டும் என வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடந்த 13ம் தேதி லட்சுமிபுரம் கிராம முக்கிய பிரமுகர்களுடன் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரச்சனைக்குரிய நிலத்தை கிராம மக்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண்டார். இதனால் நிலத்தை வாங்குவதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடப்பதற்கு முதல் நாளே புஷ்பராஜ் என்பவருக்கு அந்த நிலத்தை ஓபிஎஸ் விற்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இன்று முதல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.

தூர்தர்ஷன்: சின்னத்தை மாற்ற ... பொதுமக்களுக்கு அழைப்பு!


லோகோவை மாற்றும் தூர்தர்ஷன்: பொதுமக்களுக்கு அழைப்பு!தூர்தர்ஷன் தனது லோகோவை மாற்ற முடிவு செய்துள்ளது. சிறந்த லோகோவை வடிவமைப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பார்தியின் ஒரு பிரிவாக தூர்தர்ஷன் செயல்பட்டு வருகிறது. கடந்த 1959ஆம் ஆண்டு தூர்தர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 57 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறது. தற்போது 23 சேனல்களை தூர்தர்ஷன் ஒளிபரப்பி வருகிறது.

நிதிஷ்குமார் காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். பாஜக கூட்டு அரசு !

பாட்னா: பீகார் முதல்வராக நிதிஷ்குமார் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். நிதிஷ் மற்றும் சுஷில் மோடி இருவர் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளனர்.சமீபத்தில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, லாலு பிரசாத்தின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வியுடன் இணைந்து ஆட்சியை செயல்படுத்த விரும்பாததால், பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார், நேற்று ராஜினாமா செய்தார். தொடர்ந்து பா.ஜ.,வுடன் கூட்டணி அணைத்து ஆட்சி அமைக்க பீகார் கவர்னர் திரிபாதியை சந்தித்து ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோரினார். 132 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பட்டியலையும் அளித்தார்.இந்நிலையில் இன்று(ஜூலை 27) மாலை 5 மணிக்கு முதல்வராக நிதிஷ் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 10 மணிக்கே முதல்வர் பதவியேற்க உள்ளார். இதனை பா.ஜ., மாநிலத் தலைவர் சுஷில் மோடி தெரிவித்தார். மேலும் நிதிஷ்குமார், சுஷில் மோடி ஆகிய இருவர் மட்டுமே இன்று பதவியேற்க உள்ளனர்.முன்னதாக லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சி இன்று காலை 11 மணிக்கு கவர்னரை சந்திக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. தினமலர்

பார்ப்பனீயம்... திருமுருகன் காந்தியை கைது செய்தது!. மத்திய மாநில கிரிமினல்களின் கூட்டு...

கொஞ்ச நாள் முன்ன என் அண்ணன் என்கிட்டே கேட்டார்,
"திருமுருகன் காந்தியை ஏன் கைது செய்தாங்கன்னு நினைக்குற தம்பி?"ன்னு
ஒரே பதில் "பார்ப்பனீயம்"
திருமுருகன் காந்தி வெறும் அரசு எதிர்ப்பு போராட்டத்திற்காக கைது செய்யப்படவில்லை, மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து போராடுகிறார் என்று கைது செய்யப்படவில்லை, அவர் எல்லா பிரச்னைகளோடும் சேர்த்து தைரியமாக பார்ப்பனிய அரசாங்கத்தை எதிர்க்க தயங்கியது இல்லை, பாஜக வை சுட்டி காட்ட தயங்கியது இல்லை, தொலைக்காட்சிகளில் தோன்றி ஈயம் பூசியதை போல பேசவில்லை, பெரியாரை சுட்டி காட்டாமல் இருந்ததில்லை, ஈயம் பூசியும் பூசாத மாதிரி பாஜகவின் சாதி இந்துத்துவ அரசியலை மேலோட்டமாக விமர்சித்து சாதி இந்துத்துவத்தின் நிழலாக இருக்கும் டமில் தேக்ஸ் தம்பிகளை போல அல்லாமல், அவர் தலைவனை போல அல்லாமல், மிக உக்கிரமாக தன் விமர்சனங்களை வைத்ததால் மட்டுமே திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்.

பாரதியின் உள்ளத்தில் இருந்தது சமஸ்கிருதம்தான் .. பழ கருப்பையா


பழ.கருப்பையா: என்னைப் பொறுத்த வரையில் பரிதிமாற் கலைஞர் என்ற பார்ப்பனரைத் தவிர வேறு எந்த பார்ப்பனரும் தமிழை, தமிழர் உணர்வை மதிப்பவராக நான் கருதவில்லை. பாரதியைக் கூட நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பாரதி நல்ல கவிஞன் என்பது வேறு; அவன்தான் இந்து மதத்தைப் புகழ்ந்து பாடினான்; பாரத மாதாவைப் பாடினான். பாரத மாதாவுக்கு திருப்பள்ளி யெழுச்சி பாடியவன் பாரதி. பாரத மாதாவுக்கு தமிழகத்தில் என்ன வேலை? நாங்கள் தமிழ்த் தாய் என்ற ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். நாங்கள் எப்படி பாரத மாதாவுக்குப் பிறந்தவர்களாக இருக்க முடியும்? ‘பாரத மாதா’ வேண்டுமானால் எங்களுக்கு மாற்றாந்தாயாக இருக்கலாம்.
பாரதி சமஸ்கிருதத்தைப் போற்றினான். என்னதான் தமிழைப் பாடினாலும் கூட அவன் உள்ளத்தில் அடிநாதமாக இருந்த உணர்வு சமஸ்கிருதம் தான். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாடுகிறான். நான் கேட்கிறேன், “தமிழ்நாட்டுக்கும் வேதத்துக்கும் என்ன தொடர்பு?”
தமிழுக்கு இலக்கணம் வகுத்ததே ஆரிய மைந்தன் அகத்தியன் என்கிறான் பாரதி. அகத்தியனை ஆரிய மைந்தன் என்கிறான். அகத்தியன் வந்து இலக்கணம் வகுக்கும் வரை, தமிழ் ஆடையின்றி அம்மணமாகவா நின்றது?

தொல்லியல் துறையில் 24 புராதன சின்னங்களை காணவில்லை! திட்டமிட்ட சதியா?

Subashini Thf · இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள 24 புராதனச் சின்னங்கள் காணவில்லை என பிபிசி செய்தியில் நேற்று கேட்டேன். பத்திரிக்கைகளும் இன்று அதனை விவரிக்கின்றன. அதில் பாதிக்கு மேல் உத்திரப் பிரதேசத்தில் இருந்தவை எனக் கூறப்படுகின்றன. காணாமல் போன புராதனச் சின்னங்களுள், பாறைக் குறியீடுகள், பெருங்கற்காலச் சின்னங்கள், பவுத்த விகாரைகளின் சிதலமடைந்த பகுதிகள், இந்து கோயில்களின் சிதலமடைந்த பகுதிகள் ஆகியவையும் அடங்கும். என்ன நடக் கின்றது?? மேலதிக விபரங்களை இங்கே வாசிக்கலாம்.

பீகாரின் முதுகில் குத்திய நிதீஷ்குமார் .. பாஜக கூட்டணி ஆட்சி! கயமைத்தனத்தின் எல்லை!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பீகார் மக்கள் "பாஜக வை தோற்கடிக்க வேண்டும் / நிராகரிக்க வேண்டும் " என்ற தீர்ப்பை வழங்கினர். எனவே தான்,
JD (U), RJD, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகா கூட்டணி பீகாரில் ஆட்சியில் இருந்தது.
எனினும் செல்லாத நோட்டுப் பிரச்சினை, குடியரசு தலைவர் தேர்தல் ஆகிய விஷயங்களில் நிதிஷ் பாஜக விற்கு ஆதரவு அளித்தார்.

"மனசாட்சி உறுத்துகிறது, RJD கட்சி சார்ந்த துணை முதல்வர் தேஜஸ்வியின் ஊழலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை"
என்று ராஜினாமா நாடகம் நடத்திய ஐக்கிய ஜனதா தளம் முதல்வர் நிதிஷ் குமார் பாஜக ஆதரவுடன் நாளை முதல்வராகிறார்.
மொத்தம் உள்ள 243 இடங்களில்
JD (U) விற்கு 71 MLA க்கள், பாஜக விற்கு 53 என மொத்தம் 124 என ஆதரவு உள்ளது.

மீண்டும் நிதிஷ்குமார் முதல்வர் .. துணை முதல்வராக பாஜக சுசில் குமார் மோடி ..28 அமைச்சரகள் நாளை பதவி

பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து வழங்கினார். ராஷ்டீரிய ஜனதா தலைவர் லாலுபிரசாத் யாதவுடன் நடந்த மோதலையடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.
லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடுகள் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்த புகார்களில் தற்போது துணை முதல்வராக உள்ள, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி உள்ளது. இதனால் தேஜஸ்வி பதவி விலக நெருக்கடி கொடுக்கப்பட்டது. தேஜஸ்வி பதவி விலக நிதிஷ் கெடு விதித்திருந்தார். ஆனால் லாலு, தேஜஸ்வி பதவி விலகமாட்டார் என்றார்.