மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை முடித்து வைத்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா சில, பல முடிவுகளை பாசிச ரசனையோடு அறிவித்திருக்கிறார்.
போலீசாருக்கான ரொக்கப்பரிசு உயர்த்தப்படுதல், போலீஸ் அதிகாரிகளுக்கு இடையே வீடியோ கான்பரன்சிங் ஏற்படுத்துதல், சிறை கைதிகளை அழைத்து வரும் போலீசாருக்கான செலவுத் தொகையை உயர்த்துதல், மத்திய சிறைச்சாலைகளில் ஸ்கேன் கருவிகள் வாங்குதல், போலீசுக்கு உதவும் பொருட்டு மாவட்டம் தோறும் சட்ட அதிகாரி நியமித்தல் என்று போலிசாருக்கு ஏராளம் சலுகைகள் வசதிகளை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். இவற்றில் முக்கியமானது குண்டர் சட்டம் குறித்த அறிவிப்பு!
ஏற்கனவே இருக்கும் குண்டர் சட்டத்தில் தொழில்முறைத் திருடர்கள், ரவுடிகள், போதை பொருள் கடத்துபவர்கள், திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் – விற்பவர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிடிக்காத அரசியல்வாதிகள் குறிப்பாக தி.மு.க தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வந்தனர். எங்கள் தோழர்கள் கூட முன்னரும் இப்போதும் இப்படி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சட்டப்படி கைது செய்யப்படுபவர்கள் யாரும் ஒரு வருடம் வரை சிறையில் இருந்தாக வேண்டும், பிணை கிடையாது. வழக்கு, விசாரணை தாமதம் என்று எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.  சுத்தி வளைப்பானேன் சகல எதிர்கட்சிகளையும் ஆதரிப்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என்று சட்டம் கொண்டுவாருங்கள் மாம் .  அனுபவ அறிவு நன்றே தமிழ்நாட்டு மக்களுக்கு இது அனுபவ அறிவு பெறுங்காலம்