சனி, 30 மார்ச், 2019

எண்ணெயும் கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த மருத்துவ அரசியல்.


Sundar P : இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல... உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும் கொலஸ்ட்ராலும்தான்.
அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய் பயன்பாட்டில்?
பண மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம் புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ் பெற்றுக்கொண்டது.
மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள் உருவாகவும், கொழுப்பு பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி கமிட்டியின் (USDA) அறிவிப்புதான்.
நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும் அளவுக்கு `கொலஸ்ட்ரால் உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல் நிபுணர்கள், தலைகீழாக பல்டியடித்தார்கள்.
அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன.
முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். கொழுப்பு பற்றிய அச்சத்தை அமெரிக்காதான் உலகம் முழுவதும் பரவச்செய்தது.

BBC : சிவகங்கை மக்களவை தொகுதி.. கார்த்தி சிதம்பரம் தேறுவாரா? தொகுதி வரலாறு ..

(வரவிருக்கும் மக்களவை தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் பற்றிய பிபிசி தமிழின் பார்வை) தற்போதைய
ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து சீவகங்கை சீமை என்ற பெயரில் கடந்த 1984ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம், 1997இல் தற்போதைய சிவகங்கை என்ற பெயரை பெற்றது.
1967ஆம் ஆண்டு, அதாவது நாட்டின் நான்காவது மக்களவை தேர்தல் நடந்தபோது சிவகங்கை மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போது 15,29,698 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை மக்களவை தொகுதியின் கீழ் வருகிறது.
சிவகங்கையின் தற்போதைய மக்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த செந்தில்நாதன் இருந்து வருகிறார்.

சிதம்பரம் : முட்டாள் அரசாங்கம் மட்டுமே ராணுவ ரகசியத்தை வெளியிடும்

முட்டாள் அரசாங்கம் மட்டுமே ராணுவ ரகசியத்தை வெளியிடும்: ப.சிதம்பரம்zeenews.india.com/tamil : மிஷன் சக்தி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்!!
நேற்று முன் தினம் பிரதமர் மோடி மிஷன் சக்தி திட்டம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா சாதனையை படைத்துள்ளது என்று மோடி குறிப்பிட்டார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன. மோடி தனது உரையில் கட்சியின் பெயரையோ, அல்லது சின்னத்தின் பெயரையோ பயன்படுத்தவில்லை என்பதால் இது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

சுப்பர் டீலக்ஸ் .. திருநங்கையரை நோகடித்து விட்டது! சமுக செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம்

priya babuநக்கீரன் : எட்டு ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார். மேலும் சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்களும் படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அதில் ஒன்றாக திருநங்கையான பிரியா பாபு என்கிற சமூக செயற்பாட்டாளர் தனது ஃபேஸ்புக்கில் இந்த படம் குறித்து எழுதியது.
“எனக்கான கோபம்... அதிர்ச்சி... நேற்று தியேட்டரில் நானும் , சோலுவும் கூனிகுறுகிப் போனோம். திரு. விஜய்சேதுபதி அவர்கள் புடவை கட்டிக்கொண்டால் மட்டுமே திருநங்கையர் ஆகி விட மாட்டார். நீங்கள் அவர் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பது முக்கியம்.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா... தயவு செய்து திருநங்கையரை குறித்து புரிந்து கொண்டு படம் எடுங்கள். தமிழ் திரை உலகம் இன்னும் திருநங்கையரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தான் உங்கள் படம் உணர்த்துகிறது.

துரைமுருகன் இல்லத்தில் இருந்து 10 இலட்சம் பறிமுதல் .. பழிவாங்கும் நடவடிக்கை?

தினத்தந்தி :வேலூர், வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தினர். அவர்களுடன், தேர்தல் பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டது. துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
 இதேபோன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் 7 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது. துரைமுருகனுக்கு சொந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டனர். இதனுடன் அவரது மகன் மற்றும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என வருமான வரி துறை தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து அவரது கல்லூரி, பண்ணை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தராசு சியாம் :மோடி தோற்றுவிட்டால் சொந்த கட்சியினரே பழிவாங்குவார்கள் என்று மோடிக்கு தெரியும்

*இந்த தேர்தல் ஒரு சிக்கலான தேர்தல்!*
இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். மற்ற தேர்தல்களை போல் இல்லாமல் இந்த தேர்தலில் இரண்டு லேயர் இருக்கிறது. இதை நாம் சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே இதில் நாம் வெல்ல முடியும்.

*முதல் லேயர்:*
2014ல் முதல் முறையாக இந்துத்துவ நாஜிகள் பெருபான்மை பெற்று ஆட்சி அமைத்தனர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் நாஜிகளால் என்ன செய்ய முடியுமோ, முடிந்தவரை செய்தும்விட்டனர்.
இப்போது மீண்டும் ஆட்சி அமைத்து இந்தியாவை நாஜி ஜெர்மனி போல் உருவாக்க துடித்துக்கொண்டு இருக்கின்றனர். அதற்கு பல்வேறு தில்லு முல்லுகள் செய்ய முயர்ச்சி செய்வார்கள்.
*இரண்டாம் லேயர்:*
இதுதான் மிகவும் ஆபத்தான லேயர்.
2014ல் முதல் முறையாக இந்துத்துவ நாஜிகள் பெருபான்மை பெற்று ஆட்சி அமைத்தாலும் அதற்கு முழுக்க முழுக்க காரணம் மோடிதான். நாஜிகளுக்கு ஒரு விற்கும் முகம் தேவைபட்டது அது மோடியாக அன்றைக்கு உருவெடுத்தது.
ஆனால் மோடி முழுக்க முழுக்க ஒரு இந்துத்துவ நாஜியா? என்றால் அப்படி சொல்ல முடியாது.
மோடி ஒரு பாசிஸ்ட் தான் அதிகாரத்துக்கு வர நாஜிகளை பயன்படுத்திக் கொண்ட பாசிஸ்ட் அவவளவுதான்.

குஜராத்... சுதந்திர இந்தியாவின் மிக பெரிய பொருளாதார குற்றங்கள் . நிதி துறை கொள்ளைகள் அனைத்தும் குஜராத்தியார்களே ...

வாட்சபில் வந்த ஒரு செய்தி .. ஆனால் சிந்திக்க வைத்த செய்தி.
ஒவ்வொரு  பாயிண்ட்களை கேட்டால் முற்றிலும் சரியாக இருக்கின்றது)
1. மோடியின் மரபணு (டிஎன் ஏ) , மோடியின் மரபணு இந்தியாவுக்கு நல்லது செய்யுமா என்றால் ஒருபோதும் செய்யாது. அதற்கு முதல் காரணம் இந்தியாவை ஆக்கிரமிக்க வந்த டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள், முஹலாயர்கள், குர்துக்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் எல்லாருமே குஜராத்தின் வழியாகத்தான் இந்தியாவை பிடித்து இருக்கின்றார்கள். குஜராத்திகளின் மூலமே வந்தார்கள், குஜராத்திகளே அவர்களுக்கு ஆதரவளித்து அடிமை சேவகம் செய்தார்கள். ஆயிரம் ஆண்டு வரலாற்றைப் புரட்டினால் இந்த ஆதாரங்கள் உங்களுக்கு கிடைக்கும்..

2.1947க்கு முன் தேச விடுதலைக்காக 7.5 லட்சம் உயிர்தியாகங்கள் நடந்துள்ளன். அதில் ஒருவர்கூட குஜராத்தி கிடையாது.

3.1947 முதல் இன்று வரை நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களின் சடலங்களில் ஒன்று கூட குஜராத்துக்கு சென்றதில்லை. நாட்டின் பாதுக்காப்பு வீரராக குஜராத்திகள் சேர்வதே இல்லை என்றால் உடல்கள் எப்படி போகும். தேச பாதுகாப்பில் குஜராத்திகள் பங்கு இருந்ததே இல்லை.

4. நான்காவது முக்கியமான அபாயகரமான விஷயம், மோடியின் மரபணுவை அறிய வேண்டியது, மோடியே அமெரிக்காவில் சென்று அதை உறுதிபடுத்தியும் உள்ளார், அமெரிக்காவில் சென்று மோடியே சொன்னார், என் ரத்ததில் வியாபாரம் கலந்துள்ளது. நான் ஒரு வியாபாரி என்று. ஒரு வியாபாரி ஒருநாளும் அரசியல் தலைவராக மக்கள் பிரதிநிதியாக வரமுடியாது.

கமலின் பிரசார பயணம் நிறுத்தம் .. போதிய கூட்டம் இல்லையாம்

maalaisudar.com : சென்னை, மார்ச் 29:
 மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் பிரச்சார பயணம் திடீரென ரத்தாகி உள்ளது. தென்சென்னை தொகுதி வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து நேற்று மாலை பிரச்சாரத்தை துவக்கிய போது கூட்டம் இல்லாததால் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ள நிலையில், தென்சென்னை தொகுதி மநீம வேட்பாளர் ரங்கராஜனை ஆதரித்து நேற்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை துவக்கினார். சைதாப்பேட்டை, சின்னமலை, அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்து டார்ச்லைட் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். இருப்பினும் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் போது எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.

பிரியங்கா காந்தி : நான் ஏன் வாரணாசியில் போட்டி இடக்கூடாது .. மோடியின் தொகுதில் போட்டியா? • NDTV.Com :ரேபரேலியில் தொண்டர்களிடம் பிரியங்கா இதனை கூறியுள்ளார்.
 • தேர்தலில் போட்டியிட தயார் என ஏற்கனவே கூறியிருந்தார்.
 • உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 • உத்தரபிரதேச கிழக்குப் பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி அந்த மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக வியாழனன்று அவர் தனது தாய் சோனியா காந்தியின் ரேபரேலியில் தொகுதயில் கட்சி தொண்டர்களை சந்தித்தார்.
  அப்போது, தொண்டர்கள் அவரது தாய் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளனர். அப்போது, பிரியங்கா காந்தி நான் ஏன் வாரணாசியில் போட்டியிடக்கூடாது என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில், பிரியங்கா காந்தி போட்டியிடவா என கிண்டலாக கேட்டது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  சமீபத்தில் இதேபோல், காங்கிரஸ் கட்சி விரும்பினால் மக்களவை தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தனது விருப்பத்தை தெரிவித்து பரபரப்பை கிளப்பினார் பிரியங்கா காந்தி.

  மு,க,அழகிரி ஆதரவாளர்கள் ஸ்டாலின் அணிக்கு ஆதரவு ...

  tnakkheeran.in - sakthivel : தி.மு.க.விலிருந்து ஓரம் கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் ஓரளவுக்கு இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அதோடு விளையாட்டுப் போட்டி வைத்தும், கேக் வெட்டியும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருவது வழக்கம். அந்த அளவுக்கு அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலுமே கடந்த ஐந்த வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார்கள்.
  இந்த நிலையில் தான் கடந்த 27ம் தேதி தேனி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும்,  பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களான சரவணக்குமார், மகாராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தேனி வந்தார் ஸ்டாலின்.
  இப்படி வந்த ஸ்டாலின் தேனியில் உள்ள பிரபல லாட்ஜில் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு எடுத்துக்கொண்டு கட்சிப் பொறுப்பாளர்களையும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களையும் சந்தித்து தேர்தல் களம் குறித்து ஆய்வு செய்து வந்தார்.

  தூத்துக்குடியில் 108 கிலோ தங்கம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை

  தினத்தந்தி : சென்னை, தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையின்போது வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கம் சிக்கியது. உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
  தங்கத்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஹரிஹரனிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தை கொண்டு செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு வாகனத்தில் வந்த தங்கத்தை தபால் தந்தி அலுவலகம் அருகே வாகன சோதனையில் பிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

  ராமதாஸின் ஜாதி நிறத்தை மாற்றியதே திருமாதான்!'

  ராமதாஸ்vikatan.com - vijayanand.a : 93-ம் ஆண்டில் மதுரைக்கு ராமதாஸை அழைத்துச் சென்று கூட்டம் நடத்தியிருக்கிறார் திருமாவளவன். அப்போதெல்லாம் ராமதாஸ் யார் என்றே மக்களுக்குத் தெரியாது.சி
  தம்பரம் தொகுதி முழுக்க பானைச் சின்னத்தைக் கொண்டு செல்லும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் வி.சி.க. தொண்டர்கள். `திருமாவளவன் குறித்து ராமதாஸ் பேசிய கருத்துகளுக்குப் பிரசாரத்தில் பதில் கொடுத்து வருகிறோம். சொல்லப் போனால், சாதி முத்திரையிலிருந்து ராமதாஸின் நிறத்தை மாற்றியதே திருமாதான்' என்கின்றனர் வி.சி.க நிர்வாகிகள்.
  மூப்பனார்தி.மு.க கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தையும் சிதம்பரம் தொகுதியில் பானைச் சின்னத்தையும் முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். உதயசூரியன் சின்னம் என்பதால், வி.சி.க வேட்பாளர் ரவிக்குமாருக்கான செலவுகளை தி.மு.க கவனித்துக் கொள்கிறது. சிதம்பரம் தொகுதியில் தேர்தல் செலவுகளை மேற்கொள்வதில் நெருக்கடிகள் இருப்பதால், கட்சித் தொண்டர்களிடம் நிதி உதவி கோரியிருக்கிறார் திருமாவளவன். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், `தேர்தல் என்பது எத்தகைய சவால்கள் நிறைந்த களம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவற்றில் முதன்மையானது பொருளாதார நெருக்கடியே ஆகும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள உங்களின் மகத்தான பங்களிப்பும் தேவை என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன்.

  புதிய இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: மோடி

  புதிய இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: மோடிமின்னம்பலம் :புதிய இந்தியாவை நோக்கிய பயணத்தில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தெலங்கானா மாநில மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
  மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகத் தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தனக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களையும், சுமத்தப்பட்ட குற்றங்களையும் தாண்டி, மக்களின் பேராதரவுடன் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். மக்களின் ஆதரவால்தான் இந்த அரசாங்கத்தைத் தன்னால் சிறப்பாக நடத்தமுடிவதாகக் கூறிய அவர், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் ராசிப்பலன் தொடர்பான நம்பிக்கையை விமர்சனம் செய்தார். சென்ற ஆண்டில் சந்திரசேகர ராவ் வெற்றிபெற்றவுடன் அமைச்சரவையைக் கூட்டுவதில் சந்திரசேகர ராவ் மிகவும் தாமதித்துவிட்டதாக மோடி குற்றஞ்சாட்டினார்.

  பாலியல் கொடூரத்தை வளர்த்த சினிமாக்களும் மதங்களும்


  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை ஒரு கட்டுக்கு அடங்காத சமுக பயங்கரவாதமாக தலைவிரித்து ஆடுகிறது.
  சமுகத்தை பிடித்திருப்பது மிகபெரும் நோய் .. காலாரவை விட நூறு மடங்கு கொடூரமான நோய் .. 
  இதன் ஊற்று கால் எதுவென்று இன்னும் கூட யாரும் தீவிரமாக சிந்திப்பதாக் தெரியவில்லை. வெறும் பொதுப்புத்தி விமர்சனங்கள்தான் அதிகமாக கேட்கிறது .. 

  இந்த நிலை எப்படி உருவானது?
  குறிப்பாக இந்திய மக்கள். அதிலும் தமிழக மக்கள் சினிமாவோடு மிகவும் ஒன்றிப்போய் விட்டவர்கள் .
  சினிமாவுக்கும் மனிதர்களின் மனதிற்கும் உள்ள தொடர்புகள் பற்றி இன்னும் கூட மக்கள் சிந்திக்க வில்லை .அல்லது மக்களை சிந்திக்க ஊடகங்கள் விடவில்லை ..

  ஒரு புறம் மதங்களின் போலி கலாசார காவல் கொடுரம். 
  மனிதர்களுக்கு  அடிப்படை தேவையான காதல்  காமம் போன்றவற்றை சமுகம் அனுமதிப்பதில்லையே.
  அது மட்டுமல்ல அவற்றை ஒரு குற்றமாக கருதப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறது. 
  அப்படி மறைத்து மறைத்து வைத்திருக்கும் முட்டாள்தனம் . 
  அதையே திரையில் அளவுக்கு அதிகமாக அதுவும் வன்முறையோடு கலந்து கொடுப்பது.  செயற்கையாக  உண்டாக்கிய தாகத்திற்கு குடிப்பதற்கு சாரயம் கொடுப்பது போல வக்கிர காம காட்சிகளை சினிமா வழங்குகிறது.  
  காதல் காட்சிகள் என்ற பெயரில் தொண்ணூறு வீதமான படங்களில் காட்டப்படும் காட்சிகள் எல்லாமே மிகவும் வக்கிரமான வெறித்தனமான காமத்தை தூண்டும் காட்சிகளே . 

  பாஜகவுக்கு 117.. .உளவுதுறை லீக்ஸ் . பாஜக #RSS தலைகிழாக நின்று தண்ணி குடித்தாலும் எந்த பருப்பும் வேகாது

  வடக்கு :18/32
  கிழக்கு : 21/144
  மத்தி : 50/168
  மேற்கு : 21/69
  தெற்கு :7/130
  மொத்தம் : 117/543
  splco.me/tam : உளவுதுறை லீக்ஸ் சுட்டி காட்டி ஆட்சி மாற்றம் கணிக்கிறார் ஸ்பெல்ஷல் கரஸ்பாண்டெண்ட் அய்யாசாமி
  தரைவழி , வான்வழி , விண்வெளி எல்லாம் பயன்படுத்தியும் பாஜகவினர் பலமுறை கிண்டலடித்த பப்புவிடம் எதும் வேகவில்லை என்ற செய்தி உண்மையா என நமது செய்திதளத்தில் நிருபர்கள்  பேசியதை ஒட்டு கேட்டவாறே  அய்யாசாமி ஸ்பெல்கோ செய்தி தளத்தில் உள்ளே நுழைந்தார்  .. நுழைந்தவுடன் “வேலை இருக்கு சீக்கிரம் நோட்ஸ் எடுத்துகோ” என உதிர்த்த முத்துக்கள் இவை: 
  தலைகிழாக நின்று தண்ணி குடித்தாலும் எந்த பருப்பும் வேகாது என ஹிந்து பெல்ட் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன என்று சொல்லியவாறே வெயில் சூட்டை தணிக்க தண்ணீர் குடித்தார் ஸ்பெல்ஷல் கரஸ்பாண்டெண்ட்  அய்யாசாமி ..
  மத்திய இந்தியாவில் சென்ற  முறை(2014) பாஜகவுக்கு 72 இடங்கள் தந்த உத்திர பிரதேஷ் மற்றும் 22 இடங்கள் இடங்கள் பெற்ற பிஹார் இரண்டையும் சேர்தாலும் இந்த முறை 22 சீட் கூட வருவது கடினம் .,
  என உளவுதுறை ரீப்போர்ட் தந்த அறிக்கையால் மட்டும் அல்ல .,
  வடகிழக்கு மற்றும் கிழக்கு 144 தொகுதியில் 25 வந்தால் கூட அதிகம் என்கிறார்கள் காரணம் அங்கேஅனைத்து கூட்டணி கட்சியும் பிய்த்து கொண்டு ஒடியது எனவும்  காரணத்தை அடுக்கியதாம்  உளவுதுறை..
  ஐந்து மாநிலங்கள் ஒரு யூனியன் கொண்ட  தெற்க்கில் கேக்கவே வேண்டாம் 130ல் இந்த முறை 10 வந்தால் பெரிய விஷயம் எனபது உள்ளங்கை நெல்லிகனி என்றும் …
  ஆக மொத்தத்தில் இது தான் தற்போது நிலையில் பாஜக கூட்டணி பெற போகும் நிலவரம் என போகிறாதாம்  உளவுதுறையின் லீக்ஸ் :

  துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை .. பாஜகவின் தேர்தல் நடைமுறை ..

  துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தவந்த அதிகாரிகள்.vikatan.com ; - லோகேஸ்வரன்.கோ ச.வெங்கடேசன் : காட்பாடியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் அதிகாரிகள் குழு சோதனை நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானவரித் துறை என்றும், தேர்தல் பார்வையாளர்கள் என்றும் அந்த அதிகாரிகள் முரண்பட்டுப் பேசியதால், தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில், அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை எதிர்த்து, தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டுக்கு 29-ம் தேதி நள்ளிரவு மனோஜ், முரளிதரன், சதீஷ் என்கிற மூன்று பேர் கொண்ட குழுவினர் ‘வருமானவரித் துறை அதிகாரிகள்’ என்றுகூறி, சோதனை நடத்த வந்தனர். அப்போது, துரைமுருகன் வீட்டில் இல்லை. அவர் வருவதற்குள், வீட்டில் இருந்தவர்களின் அனுமதியுடன் அந்த அதிகாரிகள் ஹாலில் சென்று அமர்ந்திருந்தனர். வீட்டிற்கு வந்த துரைமுருகனிடம், தங்களை வருமானவரித் துறை அதிகாரிகள் என்றும், சோதனை நடத்தப்போகிறோம் என்றும் அந்த குழு கூறியது. உடனடியாக, தன்னுடைய வழக்கறிஞர்களை துரைமுருகன் வரவழைத்தார்.

  படப்பிடிப்பில் வெடி விபத்து - இரு பெண்கள் உயிரிழப்பு.. .. Woman, Her 5-year-old Daughter Killed During Shooting of Film Stunt in Bengaluru

  மாலைமலர் :பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்ற ‘ரணம்’
  திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 வயது சிறுமி உள்பட இரு பெண்கள் உயிரிழந்தனர்.
  பெங்களூரு படப்பிடிப்பில் வெடி விபத்து - இரு பெண்கள் உயிரிழப்பு பெங்களூரு: வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் இன்று நடைபெற்றது.
  காட்சி அமைப்பின்படி கார் மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது.
   இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(8) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  துப்பாக்கி முனை ..தமிழ் சினிமா கொண்டாட தவறின படம்

  Nanda Kumaar : தமிழ் சினிமா கொண்டாட தவறின படம்னு போன வாரமே எழுதி இருந்தேன். ஆனாலும் யாரும் பாத்த மாதிரி தெரியல அதுனால படத்துல
  இருக்கு சில நல்ல விசயங்களை மட்டும் சொல்லலாம்னு தான் இந்த போஸ்ட்.
  படத்துல கதைனு பெருசா ஒன்னும் இல்ல. இருந்தாலும் நல்ல திரைக்கதையால அதை சமாளிச்சு இருந்தாங்க. கதையை விட அதை சொல்லும் விதத்துல இருந்த அரசியல் மிகப்பெரியது.
  கதை இதான் மும்பையில சதா என்கவுண்டர் பண்ணிட்டு இருக்க ஹீரோவுக்கு வேலை போகுது, அம்மா, காதலினு எல்லாரும் விட்டு போய்டுறாங்க. யாருமே இல்லாம தனிமையில போற ஹீரோவோட வாழ்க்கையில மீண்டும் ஒரு வழக்கு வருது.
  ஒரு பதினைஞ்சு வயசு பொண்ணை பாலியல் வன்புணர்வு செஞ்சு கொல்லப்பட்ட வழக்குல ஒரு பானிபூரி விக்குற பிஹாரி கைது செய்யப்பட்டு இருக்க அவன் ஒரு நக்சல் என்ற விசயமும் காவல்துறைக்கு தெரியவருது. அது உண்மையானு கண்டுபுடிச்சு அவனை என்கவுண்டர் பண்ணி கேஸை முடிக்க சொல்லி ஹீரோ கிட்ட சொல்ல அவர் என்ன செஞ்சார் என்பது தான் கதை.

  வெள்ளி, 29 மார்ச், 2019

  நடிகர் நாசரின் தம்பி பேட்டி.. மக்கள் மைய வேட்பாளர் கமிலா நாசர் மீது குற்றச்சாட்டு

  மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…


  மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை  உலக ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.
  vinavu.com - anitha : கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி நேரலையில் தோன்றி வான்வெளியில் செயற்கைகோள்களை அழிக்கும் வல்லமை பெற்ற எலைட் நாடுகளின் பட்டியலில் இந்தியா சேர்ந்துள்ளதாக பெருமிதத்தோடு அறிவித்தார். ‘மிஷன் சக்தி’யை ‘ஒப்பிடமுடியாத சாதனை’ என அவர் வர்ணித்தார்.
  பத்து நிமிடங்கள் நீண்ட உரைக்குப் பிறகு, மோடி தனது ட்விட்டரில், ‘செயற்கைகோள்களை அழிக்கும் ஏவுகணை தொழிற்நுட்பத்தை வைத்துள்ள நான்காவது நாடாக இந்தியா பெருமை பெற்றுள்ளது. வான்வெளி ஆற்றலுடன் உயர்ந்து நிற்கிறது’ என தெரிவித்தார்.
  இந்திய ஊடகங்கள் மோடியின் பெருமிதத்தில் கலந்து கொண்டிருக்க, சர்வதேச ஊடகங்களை இந்தச் செய்தியை சாதாரணமாகவே அணுகின.  இந்த செய்தி மேலும் விரிவடைந்து கொண்டிருக்கையில், சில ஊடகங்கள் இதுபோன்று கடந்த காலங்களில் நடந்த சில ஏவுகணை சோதனை நிகழ்வுகள், வான்வெளியை ஆயுதமாக்குதலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தின என்பது குறித்து கவலைப்பட்டன.

  திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு .. உயிருக்கு அச்சுறுத்தல் .

  tnakkheeran.in/author/kathiravan : உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர் திருமாவளவன் உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்துள்ளார்.
  திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், சிதம்பரம் மக்களவை தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் அவர்,  கடந்த 2016ம் ஆண்டு முதலே தனது  உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், தனக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு  வேண்டும் என்றும், தேர்தல்  பரப்புரை இருப்பதால் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.> திருமாவளவன் தாக்கல் செய்துள்ள இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

  இரண்டு கருப்பை: முதல் குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்

  வெப்துனியா :வங்க தேசத்தில் குறைப் பிரசவத்தில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு, மீண்டும் ஒரு மாதத்திற்குப் பிறகு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.<அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் இத்தகவலை பிபிசியிடம் தெரிவித்தார்.20 வயதான அரிஃபா சுல்தானாவிற்கு, கடந்த பிப்ரவரி மாத இறுதியில் குழந்தை பிறந்தது. ஆனால், அதற்கு 26 நாட்கள் கழித்து, மீண்டும் வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது, அவர் கர்பமாகவே இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
  அவரது இரண்டாவது கருப்பையில் இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளன. உடனடியாக அவருக்கு அவசர சிகிச்சை அளிப்பட்டது.அக்குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருந்தன. அரிஃபாவும் எந்த ஒரு சிக்கலுமின்றி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.'அதிர்ச்சி அடைந்தோம்'கிராமப்புற பகுதி ஒன்றில் வசிக்கும் அரிஃபா, தனது முதல் குழந்தையை குல்னா மாவட்டத்தில் உள்ள குல்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெற்றுக் கொண்டார்
  .26 நாட்களுக்கு பிறகு, மீண்டும் வயிற்று வலி வந்து ஜெஸ்சோர் மாவட்டத்தில் உள்ள அத்-தின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  திருமண நாளன்று வாந்தி- கன்னித்தன்மை பரிசோதனை .. மணமகனை உதறிய மணப்பெண்

  திருமண நாளன்று வாந்தி- கன்னித்தன்மை பரிசோதனை செய்ததால் கணவரை உதறிய மனைவிமாலைமலர் : கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர்: வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலை பார்த்து வந்தார். இவர் திருமணத்துக்காக திருமண தகவல் அலுவலகம் மூலம் பெண் தேடினார். அப்போது தனது பகுதியை சேர்ந்த ரக்‌ஷா (26) என்ற பெண் பொருத்தமான வரனாக அமைந்தது. அவரும் எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்தார்.
  இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.
  திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.
  ஆனால் சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

  சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சிக்கு ஆயுள் தண்டனை .. உச்ச நீதிமன்றம் உறுதி .. வீடியோ


  தினத்தந்தி :தொண்ணூறுகளின் இறுதியில் துவங்கிய ஒரு கூடா நட்பு 2001ல் கொலையில் முடிகிறது. சரவணபவன் ஓட்டலில் ஜீவஜோதி என்ற பெண் பணிக்குச் சேர ராஜகோபாலுக்கு அவர் மீது ஏதோ ஈர்ப்பு ஏற்பட ராஜகோபால் வாழ்க்கை தடம் மாற தொடங்கியது. ஜீவஜோதியின் அப்பாவும் அதே ஓட்டலில் வேலை பார்த்தவர் என்ற அடிப்படையில் ஜீவஜோதிக்கும் அங்கு வேலை உறுதியானது. ராஜகோபால் ஜோதின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராக இருக்க, ஜீவஜோதியை திருமணம் செய்தால் வாழ்நாள் முழுக்க தன் செல்வாக்கும், பணபலமும் நிலைத்து மேலும் பெருகும் என்ற நம்பிக்கையை ஒரு ஜோதிடர் சொன்னதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து ஜீவஜோதியை மணம் முடிக்க அவர் முடிவு செய்ததாக அப்போது கூறப்பட்டது. இதற்கு உடன்பட மறுக்கவே ஜீவஜோதியை அன்பாகவும் மற்ற வகைகளிலும் ராஜகோபால் மிரட்டியதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை .. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறைமாலைமலர் ;ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. புதுடெல்லி: கடந்த 2006-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டது.< இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் இதற்கு உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

  தேனியில் தங்கத்தமிழ் செல்வனும் பன்னீர்செல்வமும் வாரி இறைக்க .. இளங்கோவன் ... ?

  /tamil.oneindia.com - hemavandhana.: : மும்முனை போட்டியில் தேனி தொகுதி-
  சென்னை: முதலமைச்சர், துணை முதல்வர், அரசியல் பலம், பண பலம், செல்வாக்கு, புகழ்... என இத்தனை துணை இருந்தும் ஓ.பன்னீர்செல்வம் தேனி வீதிகளில் குடும்பத்துடன் தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
  முதல்வருக்கு இந்த முறை சேலம் தொகுதி வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஓபிஎஸ்சுக்கு தேனி தொகுதியும் முக்கியம்! தன்மான பிரச்சனை, கவுரவ பிரச்சனை!
  கட்சி வேட்பாளர் தோற்பது வேறு, பெத்த மகனே தோற்பது வேறு. அதனால் இருக்கும் மற்ற தொகுதிகள், வேட்பாளர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டுதான் தேனிக்குள்ளேயே ரவுண்டு கட்டி வருகிறார் ஓபிஎஸ்.

  அதிமுக ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங்க கம்பனி ?.. கட்சிகளால் கம்பனிகளை வெல்லமுடியுமா?

  அரசியல் கட்சிகள் ஒரு மல்டி லெவல் மார்க்கெட்டிங் அமைப்பாக இயங்கினால் அதை தோற்கடிப்பது மிகவும் கடினம்.
  ஏனெனில் அந்த மல்டி லெவல் மார்கெட்டிங் நிறுவனம் அதில் பங்கு பற்றும் எல்லோருக்கும் ஒரு கமிஷன் இலாபம் தரும் அமைப்பாக இருப்பதால் அதில் ஈடுபட்டுள்ள பங்காளிகள் மிகவும் சிரத்தையோடு கருமமே கண்ணாக இருப்பார் . அவர்களுக்குதான் அதில் உடனடி வருமானம் கிடைக்குமே?
  மாறாக அரசியல் கட்சிகள் மீது கொள்கை அடிப்படைலான ஆதரவாளர்களாக இருப்போர் ஒரு வகையான பகுதிநேர வேலை போன்றுதான் தங்கள் அரசியல கவனிப்பார்கள்.
  அதுதான் அவர்களது குடும்பத்தை தாங்கி பிடிக்கும் வருமான வழியல்லவே?
  இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் சிஸ்டத்தை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்து வைத்த பெருமை மறைந்த முதல்வர் எம்ஜி ஆரையே சாரும்.
  அவர் தன்னோடு ரசிகர் மன்றத்தில் இருந்த ஏறக்குறைய அத்தனை பேரையும் ஏதாவது பதவியும் கொடுத்து அது மட்டுமல்லாமல் வியாபர காண்ட்ராக்ட் போன்றவற்றையும் கொடுத்து ஒரு அரசியல் வர்த்தக முதலாளிகளை உருவாக்கி விட்டிருந்தார் .

  எம்ஜியார் தனது ரசிகர் மன்றத்து அடியாட்களை அரசியலிலும் பின்பு அவர்களுகு உருவாக்கி கொடுத்த சுய நிதி கல்வி நிறுவனங்களும் கொஞ்ச நஞ்சமா? 
  ஜேப்பியார் , சாராய உடையார். விஸ்வநாதன் .எ சி சண்முகம் ,.. இன்னபிற  

  பின்னால் வந்த ஜெயலலிதாவுக்கு இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் கம்பனி அரசியல் மிகவும் வசதியாக அமைந்து விட்டது.
  ஜெயலலிதாவுக்கு பின்பு வந்த பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தினகரன் போன்றோருக்கு இடையில் உள்ள பிரச்சனைகள் எல்லாம்  பங்கு பிரிப்பதில் உள்ள சண்டை மட்டும்தான் 

  பேட்டால் சிறுவனை அடித்து கொன்ற சீனியர் மாணவர்கள்... பிஸ்கட் திருடியதால் அடித்து கொன்றனர்

  NDTV.COM :டேராடூன் :உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 7-ம்வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றுள்ளனர். இந்த கொலையை மறைப்பதற்காக அவனது சடலத்தை எரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
  பள்ளி அதிகாரிகளும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சிறுவனின் சடலம் பள்ளி வளாகத்திற்குள்தான் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  உயிரிழந்த சிறுவனது பெற்றோர் ஹாப்பூர் என்ற இடத்தில் உள்ளனர். இது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கடந்த 10-ம்தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
  பள்ளியில் அந்த சிறுவன் சில பிஸ்கட்டுகளை திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவனை தண்டித்துள்ள பள்ளி நிர்வாகம் அவன் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று உத்தரவிட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, சீனியர் மாணவர்கள் சிலர் சிறுவனுக்கு தொல்லை அளித்துள்ளனர்.

  ரகுராம் ராஜன் எதிர்கட்சிகளின் நிதி அமைச்சர் பதவிக்கு தயாராகிறார்?

  தினமலர் :  புதுடில்லி: எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மத்திய நிதி அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ரகுராம் ராஜன் காங்.,கிற்கு ஆதரவானவர் என்று கூறப்படுவது உண்டு. காங்.,கின் தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் ரகுராம் பங்கேற்றார் என்கிறார்கள். காங்., அறிவித்த விவசாய கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச வருவாய் திட்டம் போன்றவை ரகுராமின் யோசனைப்படி சேர்க்கப்பட்டவை.< ஆனால் இவற்றை விட, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்ற மோடியின் திட்டம் சிறந்தது னெ ரகுராம் கருதுகிறார்.
  விவசாயத்திற்கு ஆதரவாகவும், புதிய தொழில்நுட்பங்களையும் புகுத்தினால் தான் விவசாயிகளின் பிரச்னை தீரும். அதற்கு மோடியின் திட்டம் உதவி செய்யும் என்கிறார் ரகுராம்.

  ஆந்திரா பிரமாண்ட வெற்றியை நோக்கி ஜெகன் மோகன் ரெட்டி ? சந்திரபாபு நாய்டு தோல்வி முகம்?


  தினமலர் :லோக்சபா தேர்தலில், ஆந்திராவில், ஜெகன்மோகனின், ஒய்.எஸ்.ஆர்.காங்., பெரும்பாலான இடங்களை வாரி சுருட்டும் என, கருத்து கணிப்புகளில் தெரியவந்துள்ளன. அதனால், தெலுங்கு தேசம் கட்சி நடுக்கத்தில் உள்ளது.
  ஆந்திராவில் உள்ள, 25 லோக்சபா தொகுதிகளில், 2014ம் ஆண்டு தேர்தலில், தெலுங்கு தேசமும், பா.ஜ.,வும் கூட்டணியாக போட்டியிட்டன. தெலுங்கு தேசம், 15; பா.ஜ. 1 இடம் பெற்றது. ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்., எட்டு இடங்களையும், காங்., ஒரு இடத்தையும் பிடித்தன. இந்த தேர்தலில், பா.ஜ., கூட்டணி உடைந்து விட்டது. அதனால், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்., - பா.ஜ., மற்றும் காங்., என, நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதில் தெலுங்கு தேசம் கட்சிக்கு செல்வாக்கு சரிந்து வருவதால், அந்த இடத்தை பிடிக்க, ஒய்.எஸ்.ஆர்.காங்., பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இதற்கு நல்ல வெற்றியும் கிடைத்து உள்ளது.

  தினகரன் கட்சிக்கு பரிசு பெட்டி தேர்தல் சின்னம் ... தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்புதினத்தந்தி :டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
  புதுடெல்லி, தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அ.ம.மு.க. போட்டியிடுகிறது. கட்சி பதிவு செய்யப்படாத நிலையில், இந்த கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. பொது சின்னம் வழங்கலாம் என தேர்தல் ஆணையத்திடம் கூறியது.

  நீட்டை விட மகா கொடூர சதித்திட்டம்.. கேள்வி தாள்கள் கொடுமை ..கல்வி கட்டமைப்பை தகர்க்கும் முயற்சி

  சர் வின்ஸ்டன் சர்ச்சில் : · நீட்டை விட மஹா கொடூர சதித்திட்டம்
  நேற்று முன்தினம் மார்ச் 25 அன்று 10ம் வகுப்பு கணிதம், மார்ச் 7 அன்று +2 கணிதம். அண்ணா பல்கலையின் B.E. செமஸ்டர் தேர்வுகளில் நடப்பு கல்வி ஆண்டு முதல் கணிதத்தேர்வுகள் அனைத்திலும் குறிவைத்து கைவைத்து இருக்கிறார்கள்.
  கேள்வித்தாள்கள் மகா கொடுமை. உளவியல் ரீதியான தாக்குதல். இது நீட்டை விட கோரமான சதித்திட்டம் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது.
  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்விக்கட்டமைப்பை குலைத்து நாசமாக்கி இனி எழ முடியாத நிலைக்கு தள்ளும் திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
  எடப்பாடி பழனிசாமி தலமையில் உள்ள அதிமுக அரசாங்கம் இதற்கு பரிபூர்ண ஒத்துழைப்பைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
  இது போதாததற்கு 5ம் வகுப்பு 8ம் வகுப்பு பள்ளித்தேர்வுகள் பொதுத்தேர்வுகளாக நடத்தப்படும் என்று சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.
  தேர்தல் நேரத்தில் தான் இந்த தேர்வு தில்லுமுல்லுகளை செய்ய முடியும் என்று நினைக்கிறது காவித்துவ கொடூர சிந்தனை வில்லன்கள் முகாம். இந்த விபரீதம் தெரியாமல் எல்லாரும் தேர்தல் குதூகலத்தில் இருக்கிறார்கள்.

  வியாழன், 28 மார்ச், 2019

  தமிழக காதலனை தேடி சென்னை வந்த இலங்கை பெண் தூக்கில் .. தற்கொலையா கொலையா?

  தினகரன் :சென்னை: சமூக வலைதளம் மூலம் தமிழக வாலிபரை காதலித்த இலங்கை பெண் காதலனை காண சென்னை வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி.
  இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அவினாஷ் என்ற சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் வாலிபரை சமூக வைலதளம் மூலம் பழகி காதலித்து வந்தார். கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் சமூகவலைத்தளம் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
  இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை வந்தார். மலர்மேரியை அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார். இந்த ஜோடி சென்னையில் பல இடங்களுக்கு ஒன்றாக மகிழ்ச்சியாக சென்று சுற்றி வந்துள்ளனர்.

  உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்கு.. . பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் கூட்டம்


  news 18.com :தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவருவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
  தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்காக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது என்று புகார் கூறப்பட்டது.

  3 தொகுதிகளுக்கும் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையம் ...திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம்

  தினமலர் :புதுடில்லி : திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்த முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் பதிலளித்துள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது, 3 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த முடியாது. சரியான காலம் வரும் போது தான் தேர்தல் நடத்த முடியும். அவசர கதியில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் கமிஷன் பதிலளித்தது. ஏப்ரல் 18 க்கு பிறகு கூட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம் என திமுக சார்பில் வாதிடப்பட்டது. இதனைக் கேட்ட சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷனின் கோரிக்கையை ஏற்றது. மேலும், 3 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது.

  காஷ்மீர் தனிநாடா ? பேஸ்புக் நிறுவனத்தின் பட்டியல் .. தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது

  மின்னம்பலம் : காஷ்மீரை தவறுதலாக தனிநாடு என பட்டியல் இட்டதற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
  பேஸ்புக் நிறுவனம் மார்ச் 27ஆம் தேதி போலித்தனங்களை ஊக்குவிக்கிற செயல்பாடுகளைக் கொண்ட 513 பக்கங்கள், குழுக்கள் மற்றும் கணக்குகளை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஈரானிய குழுக்களால் செயல்பட்டு வந்தவை. இத்தகைய செயல்பாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா, எகிப்து மற்றும் இந்தோனேசிய நாடுகளும் இடம்பெற்றிருந்தன. அதே சமயத்தில் காஷ்மீரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
  காஷ்மீர் தனிநாடு இல்லை என்பதால் தவறுதலாகப் பதிவேற்றப்பட்ட இச்சம்பவத்துக்கு பேஸ்புக் நிர்வாகம் பொறுப்பேற்று மன்னிப்பு கோரியுள்ளதோடு, காஷ்மீர் பெயரை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியும் உள்ளது. இதுகுறித்து பேஸ்புக் இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஈரானிய குழுக்களைச் சார்ந்தவர்கள் உள்ள பகுதிகள் மற்றும் நாடுகளை எங்கள் வலைதளத்தில் பட்டியலிடும்போது அதில் தவறுதலாகக் காஷ்மீரும் இடம் பெற்றுவிட்டது. அதற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

  கமலஹாசன் : ஏழைகள் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்வார்கள்; பணக்காரர்கள் அரசியலில் ஊழல் செய்யமாட்டார்கள் !


  LR Jagadheesan : “வருமானமில்லாத ஏழைகள் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்வார்கள்; பணக்கார செல்வந்தர்கள் அரசியலில் ஊழல்
  செய்யமாட்டார்கள்” கமலஹாசனின் புதிய கண்டுபிடிப்பு.
  சுதந்திர இந்தியாவில் முதல் முதலில் ஊழலுக்காக மத்திய அமைச்சர் பதவியை இழந்தவரின் பெயர் டி டி கிருஷ்ணமாச்சாரி. சுதந்திர இந்தியாவில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு நீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட ஒரே தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா. இரண்டுபேருமே ஏழைகளும் அல்ல. படிக்காதவர்களும் அல்ல.
  மல்லையா முதல் மோடி வரை அரசு வங்கிப்பணம் பல்லாயிரம் கோடிகளை ஆட்டையை போட்டுவிட்டு வெளிநாட்டில் சொகுசுவாழ்க்கை வாழ்ந்துவரும் யாருமே ஏழைபாழைகள் அல்ல. கோடீஸ்வரர்கள். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் ஏழைகள் அல்ல.
  உண்மை வரலாறு இப்படியிருக்க இந்த அரைவேக்காட்டு உளறலை அம்பி எப்படி இப்படி கூசாமல் வாந்தியெடுக்கிறது? எந்த தைரியத்தில் அடிப்படையில் மொத்தமாக ஏழைகளை குற்றவாளிகளாக்கி கூனிக்குறுக வைக்கிறது?
  “ஏழைகளே நீங்கள் வாக்கு மட்டும் போடுங்கள்; அரசியல் ஆண்டைத்தனம் பண்ணும் வேலையை பணக்காரர்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்கிறாரா?
  இவர் சொல்லும் இலக்கணப்படி ஏற்கனவே தொழில்செய்து சம்பாதித்த பின் அரசியலுக்கு வந்த மாஃபா பாண்டியராஜன் என்பவர் அரசியலில் செய்த மக்கள் நல சேவைகள் என்ன? NEETஐ திணித்து அனிதாக்களை சாகடித்ததைத்தவிர.

  வங்காளதேசம் - அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 பேர் உயிரிழப்பு ..

  மாலைமலர் : வங்காளதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  டாக்கா: வங்காளதேசம் நாட்டின் தலைநகரமான டாக்காவில் அமைந்துள்ளது பனானி பகுதி. இங்குள்ள 22 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ மற்ற மாடிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க முயன்ற சிலர் மாடிகளில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 17 பேர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணியில் அந்நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 35 பேரை பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். கடந்த மாதம் டாக்காவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 70 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

  பீட்டர் அல்போன்ஸ் : தேர்தல் ஆணையம் பிரதமரின் ஆளுகைக்குள் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது"

  tamil.thehindu.com : மிஷன் சக்தி குறித்து பிரதமர் மோடி அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமுறை மீறலாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. பிரதமரின் ஆளுகைக்குள் தேர்தல் ஆணையம் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன் காட்டமாகப் பேசினார்.
  பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை(இஸ்ரோ) மிகப்பெரிய மைல்கல் சாதனையாக, செயற்கைக்கோளை பாதுகாக்கும் முயற்சியில் எதிரிநாட்டு செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளதைக் குறிப்பிட்டார். இந்த மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமாக செய்யப்பட்டது என்று பெருமிதம் அடைந்தார்.
  தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தை விதமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது பிரதமர் மோடி இதுபோன்ற மக்களிடம் உரையாடுவது விதிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பீட்டர் அல்போன்ஸ்  தி இந்து தமிழ்திசைக்கு (ஆன்-லைன்) பேட்டி அளித்தார்

  கருணாஸ் :தமிழிசை கற்ற பரம்பரை அல்ல, தமிழர் உரிமைகளை விற்ற பரம்பரை

  tamil.thehindu.com : இந்த நாடாளுமன்றத்தேர்தலில் தமிழிசையின் கற்றப்பரம் பரைக்கு தமிழர்களின் கற்பிதம் என்னவென்று தெரியும், தெரியவைப்பார்கள் யார் கற்றப்பரம்பரை, யார் குற்றப்பரம்பரை என்று என கருணாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  நேற்று வேட்புமனு பரிசீலனை பிரச்சினையில் நான் குற்றப்பரம்பரை அல்ல கற்றப்பரம்பரை என சர்ச்சைக்குரிய ட்வீட்டை தமிழிசை பதிவு செய்து பின் எதிர்ப்பு காரணமாக நீக்கினார். ஒரு நாள் கழித்து நான் திமுகவைத்தான் குற்றப்பரம்பரை என்றுச்சொன்னேன் என மீண்டும் பதிவிட்டுள்ளார். தமிழிசையின் சர்ச்சைப்பதிவை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கண்டித்துள்ளார்.

  திமுக ஐ.டி விங்.. மிக தாமதமாக ஆரம்பித்திருக்கிறது ... இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஐ டியை அறிமுகப்படுத்திய திமுக

  நந்தினி வெள்ளைச்சாமி - tamil.thehindu.com : இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துக்கு என தனிக்கொள்கை வகுத்தது, அரசு துறைகளை கணினிமயமாக்குதல், மென்பொருள் பொறியியல் துறையில் வளர்ச்சி என, தகவல் தொழில்நுட்ப துறையில் பல சாதனைகளை புரிந்தது திமுக. கட்சி ரீதியாகவும், தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்களின் பலத்தை அறிவதற்கு முன்பே, திமுக அதன் நுணுக்கங்களை அறிந்துகொண்டது எனலாம்.
  தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அரசின் வழியாக, ஆட்சிப்பணியில் முன்னோடியாக இருந்த திமுக, கட்சியை தகவல் தொழில்நுட்ப ரீதியாக வளர்த்தெடுப்பதில் இடைப்பட்ட காலத்தில் கோட்டைவிட்டது.

  கோவை 7 வயது சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம்.. கொடுரம்

  கோவை 7 வயது சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம்; அதிர்ச்சி தகவல்தினத்தந்தி :கோவை 7 வயது சிறுமி தொடர்ச்சியாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. கோவை, கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளாள். கடந்த திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு சிறுமி வீடு திரும்பினாள். மாலை 6 மணியளவில் சிறுமியின் பாட்டி தனக்கு வெற்றிலை வாங்கிவரச்சொல்லி கடைக்கு அனுப்பிவைத்தார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. அந்த சிறுமியை எங்கு தேடினாலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இரவு 8 மணியளவில் அந்த சிறுமியின் தாய் தடாகம் போலீசில் புகார் அளித்தார்.

  இயக்குநர் மகேந்திரன் உடல்நிலை கவலைக்கிடம்

  tamilthehindu : ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து ‘உதிரிப்பூக்கள்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘கை கொடுக்கும் கை’ என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். முன்னதாக, ‘சபாஷ் தம்பி’, ‘நிறைகுடம்’, ‘கங்கா’, ‘திருடி’ உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான ‘சாசனம்’ என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

  நிர்மலா சீதாராமனின் கையெழுத்தைப் போட்டு பண மோசடி செய்த முரளிதரராவ் .. பாஜக பொதுசெயலாளர் ,, வழக்கு பதிவு

  நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் போட்டு பண மோசடி செய்ததாக முரளிதரராவ் மீது வழக்கு!View image on Twittertamil.news18.com/ : மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ.க பொதுச் செயலாளராக உள்ள முரளிதரராவ் மத்திய அமைச்சரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்  போல கையெழுத்திட்டு 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் முரளிதரராவ் மீது தெலங்கானா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.< தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலத்தரகர் மஹிபால் ரெட்டியின் மனைவி பிரவர்னா ரெட்டி சரூர்நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், மஹிபால் ரெட்டியை பார்மா எக்ஸில் நிறுவனத்தின் தலைவராக நீடிக்கச் செய்வதாக உறுதியளித்து 2.17 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்டுள்ளது.
  மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் போலியாக கையெழுத்திட்ட போலி நியமனக் கடிதத்தை(appointment letter) அளித்துள்ளார்’ என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், முரளிதரராவ் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறை, 406, 420, 468, 471, 506, 120-b,156 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  சிறார் பாலியல் வன்முறை .. ஒமேகா பள்ளி குழந்தைகள் வழக்கு ஊத்தி மூடப்படுகிறது?

  விகடன் :
  சைல்ட் செக்ஸ் டூரிசம் ! சென்னை கொளப்பாக்கம் அருகே உள்ள இன்டர்நேஷனல் பள்ளி (Lalaji Memorial Omega International School) ஒன்றில், எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை அந்தப் பள்ளியின் பேருந்து உதவியாளர் உட்பட பள்ளியில் தங்கவரும் வெளிநாட்டினர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் கிளம்பியது. இதன் வழக்கு விசாரணை இன்னும் முடியாத நிலையில், “மோசமான வக்கிரத்துக்கு ஆளாகியிருக்கும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை; இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் வெளியே வந்துவிட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளை காவல்துறையே தப்பவைக்கிறது” என்று பெற்றோர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றை கட்டுரையில் மறைத்துள்ளோம்.

  ஜெ.வுக்கு பொட்டாசியம் சோடியம் அளவுக்கு மீறி ஊசி மூலம் செலுத்தியது திட்டமிட்ட சதி? முழு விபரம் ... அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி .. கடும் சந்தேகம் .

  jayathumb
  நக்கீரன் :சிகிச்சையில் இருந்த ஜெ.விடம் 3 தொகுதி தேர்தலுக்காக வேட்புமனுக்களில் பெறப்பட்ட கைரேகை மோசடியானது என்பதை 2016 நவ.02-04 நக்கீரன் இதழிலேயே "கைநாட்டு! தொண்டர்கள் ஷாக்! தொடரும் சிகிச்சையும் சர்ச்சையும்!' என்ற தலைப்பில் அட்டைப் படச்செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதனை அடிப்படையாகக் கொண்டு அ.தி.மு.க. ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என திருப்பரங்குன்றத்தில் போட்டியிட்டு, வெற்றியை பறி கொடுத்த தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், 04-01-2017--ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான செய்திகளையும் நக்கீரன் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
  > ஜெ. மரணத்தில் இருக்கும் மர்மத்தை விசாரிப்பதற்காக நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டதும், முதல் ஆளாக கமிஷனில் ஆஜராகி, ஜெ.வின் கைரேகை குறித்த சந்தேகங்களை கிளப்பினார் சரவணன். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கும் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

  ராகுல் : மிஷன் சக்தி ...பிரதமர் உரை: 'உலக நாடக தின வாழ்த்துக்கள்' ..

  மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமானது குறித்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி குறித்து " உலக நாடக தின வாழ்த்துக்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
  விண்வெளியில் இந்திய செயற்கைக் கோள்களை பாதுகாக்கும் வகையில், விண்வெளியில் எதிரிநாட்டு செயற்கைக் கோள்களை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டத்தை இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு (டிஆர்டிஓ)
  வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.இந்த திட்டம் குறித்து பிரதமர் மோடி
  மக்களுக்கு உரையாற்றினார். அப்போது  "அமெரிக்கா,சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவிடம் செயற்கைக்கோள்களை சுட்டுவீழ்த்தும் திறன் இருக்கிறது. புவியின் குறைந்த நீள்வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை சுட்டுவீழ்த்த
  முடியும். இதை இந்தியா தற்காப்புக்காக மட்டும் பயன்படுத்தும். இது வரலாற்று சாதனை" என்று தெரிவித்தார்.

  திருமாவளவன் : திமுக கூட்டணியை விட்டு வெளிவராமையால் ராமதாஸ் என் மீது சேற்றை வாரி தூற்றி வருகிறார்

  vnakkheeran.in- kalidoss : நடைபெற இருக்கின்ற  சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார்.  இதனையொட்டி சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தொல். திருமாவளவன் செயல்வீரர்களிடம் வாக்கு கேட்டு பேசுகையில்,   ’’இது செயல்வீரர்கள் சமயோசிதமாக செயல்படும் நேரம்.   தேர்தல் நேரத்தில் எப்படி செயல்பட போகிறோம் என்ற அட்டவணையை வகுத்துக்கொள்ள வேண்டும்.  கட்சிப்பணி வேறு, தேர்தல் பணி வேறு. கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைத்து செயல்பட்டால்  40க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

  சேலத்தில் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் வன்முறை .. பொள்ளாச்சி பாணியில் இன்னொரு கொடுரம்

  இளங்கோமணிகண்டன்vikatan.com - எம்.விஜயகுமார் - வீ கே.ரமேஷ் :
  சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினர் 25 பேருக்கும் மேற்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்து வந்து விசாரித்தபோது இந்த  கேங்க் 90-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதையடுத்து 5 பேர் மீது வழக்கு பதிவு செய்வதாகவும், வழக்குக்கு சம்பந்தமில்லாதவர்களிடம் 50,000 முதல் 1,50,000 வரை பேரம் பேசி பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறார்கள்.
  சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தமிழகத்தையே உலுக்கியது. அது பற்றிய பேச்சே இன்னும் அடங்காத நிலையில், சேலத்தில் இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களையும், காதலர்களையும் வழிமறித்து காதலன் கண் எதிரே காதலியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ, புகைப்படம் எடுத்து பணம், செயின் பறித்திருக்கிறது இந்த கேங்க். இவர்கள் பல ஆண்டுகளாக கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள்.
  சம்பந்தப்பட்ட கொண்டலாம்பட்டி காவல்துறைக்கு தெரிந்தும் காசு வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த வாரம் ஒரு பெண் புகார் கொடுத்ததையடுத்து இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இவர்களால் 90-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியே கசிந்துள்ளன.

  தமிழிசை சவுந்தரராஜன் :“நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கற்ற பரம்பரை,, ஜாதிவெறியை தூண்டும் கருத்து


  இ.கார்த்திகேயன் - .vikatan.com -ப.கதிரவன் : “தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை ஆகியோரின் வேட்புமனுக்களை நிராகரிக்க காரணம் இருந்தும் நிராகரிக்கவில்லை. இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இது அப்பட்டமான தேர்தல் நேர்மை மீறல்.” என தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் இயக்குநர். கெளதமன் தெரிவித்துள்ளார்.

  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரிசீலனையில் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி மற்றும் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்

  சீமான் .. கட்சியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் சீட்டு ... சூட்கேஸ் கைமாறியது?


  Anirudha Brahmarayan: வாங்கடா கூமுட்டை தம்பிகளா உங்களுக்காகத் தான் அடுத்த ஸ்பெசல் ஐயிட்டம்.
  இன்றைக்கு நம்ம பார்க்கப்போகும் ஸ்பெசல் ஐயிட்டம் "சாய் வினோத் சனையர்". கேள்விப்படாத பெயராக இருக்கிறதே என்று யோசிக்க வேண்டாம். நாம் தமிழர் கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வினோத் MA,Mphil, Phd தான் "சாய் வினோத் சனையர்".
  இவரது ஒரிஜினல் பெயர் சாய் வினோத். ஆனால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த பிறகு வந்தேறி சாய் பெயரை வைக்க முடியுமா? அதனால் வினோத் ஆகி விட்டார். பிரச்சனை அதுவல்ல. இவர் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்ததே இரண்டு மாதங்களுக்கு முன்பு தான். "பத்து கட்சியில் சேர்ந்து நான் டான் ஆகல; நான் இருந்த பத்து கட்சியுமே டான் தான்" என நாம் தமிழரில் சேரும் முன் பல டான் கட்சிகளில் இருந்துள்ளார். முதலில் கொஞ்ச காலம் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து சுற்றியுள்ளார். பிறகு சகாயம் ஐஏஸ் மக்கள் பாதை. பிறகு இளைஞர் கட்சி என கண்ணில் கண்ட கட்சிக்கெல்லாம் ஆதரவாக இருந்துள்ளார். அதன் பிறகு 2019 பிப்ரவரி மாதம் (போன மாதம்) திடீர் ஞானோதயம் வந்து நாம் தமிழர் கட்சியில் இன விடுதலையை வென்றெடுக்க தம்மை இணைத்துக் கொள்கிறார். உடனடியாக மார்ச் மாதம் சீட் வழங்கப்படுகிறது.
  இவர் நாம் தமிழர் கட்சிக்காக
  கலந்து கொண்ட போராட்டங்கள் - 0,
  ‎ பங்கேற்ற பொதுக் கூட்டங்கள் -0,
  ‎ செய்த நலத்திட்ட உதவிகள் - 0,
  ‎தேர்தல் பிரச்சாரங்கள் -0.
  நாம் தமிழர் பற்றி இந்த பிப்ரவரி மாதத்திற்கு முன் இவர் வாய் திறந்து பேசியது கூட இல்லை.

  புதன், 27 மார்ச், 2019

  நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை :தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு

  தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு - நிர்மலா சீதாராமன் எச்சரிக்கைமாலைமலர் : டெல்லியில் இன்று பேட்டியளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், 'தேர்தல் நேரத்தில் பாஜகவுக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு தொடருவோம் 'என எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி  கடந்த 2016-ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு
  நடவடிக்கையை கொண்டு வந்தார். 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
  அதில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காலத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் புதிய நோட்டுகளை மாற்ற 40 சதவீதம் கமிஷனாக கேட்டது பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த வீடியோ போலியானது என பா.ஜ.க. மறுத்துள்ளது.

  காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி!

  ndtv.com:  'மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
  காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி அமைத்துள்ளனர்.
  ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியை ஆதரித்து மம்தா பிரசாரம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மற்ற சில எதிர்க்கட்சி தலைவர்களும், நல்லெண்ண மற்றும் நட்பின் அடிப்படையில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு பிரசாரம் செய்ய உள்னர்.
  இதுகுறித்து திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''இந்த மாத இறுதிக்குள் மம்தா பானர்ஜி ஆந்திராவுக்கு சென்று அங்கு ஒன்று அல்லது 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்வார். கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அதன் அடிப்படையில் இந்த பிரசாரம் செய்யப்படவுள்ளது'' என்றார்.
  மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதற்கு ஆந்திர முதல்வரும்,தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக மேற்கு வங்கத்தில் கடந்த ஜனவரி 19-ம்தேதி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அரசு ஆஸ்பத்திரிகளில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணிகள் மரணம்

  அரசு ஆஸ்பத்திரிகளில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணிகள் மரணம்
  தினமலர் : அரசு ஆஸ்பத்திரியில் கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை: தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு டாக்டர்கள் மற்றும் சில அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தகுதியற்ற ரத்தத்தை செலுத்தியதன் மூலம் தமிழகத்தில் கடந்த ஜனவரி வரை 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் இன்னும் அதிரவைக்கும் தகவல் என்னவென்றால், முறையான சீதோஷ்ணத்தில் பராமரிக்கப்படாததால் பழையதாகிப்போன ரத்தத்துக்கு, அது பாதுகாப்பானது என்று டாக்டர்கள் சான்று வழங்கியதுதான். இது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.