சனி, 14 அக்டோபர், 2017

“பதினொரு மாத பெண்குழந்தை இரண்டு மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு...

வெளிப்படையாய் பேசித்தான் ஆக வேண்டும். கலவியியல் ஆபாசம் என ஒதுக்கி வைப்பது தான் பல பாலியல் வன்புணர்வாளர்களை உருவாக்குறது. இவற்றை எதிர்த்து இன்று நாம் பேசவில்லை எனில், நாளை உன் வீட்டு பச்சிளம் குழந்தையும் இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் 11 மாத பெண் குழந்தையைப்போல வன்புணர்வுக்கு ஆளாகும். இது பெண் இனத்துக்கே ஒரு கடும் எச்சரிக்கை.
Lulu Deva Jamla  :  “பதினொரு மாத பெண்குழந்தை இரண்டு மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான கொடூரம்” செய்தி
முகு:- இந்த பதிவுக்கு தயவு செய்து கோப ரியாக்‌ஷன் குடுக்காதீங்க. அப்டி குடுத்தா அந்த செய்தியை இல்ல, இந்த பதிவை எதிர்க்கிறீங்கன்னு அர்த்தம். நிறைய கோப ரியாக்‌ஷன் கிடைக்கும் பதிவுகள் ஃபாலோவர்ஸ் ஹோம் பேஜ்களில் மேலே தெரிவதில்லை.
*பாலியல் அடிமைத்தனம்*
//பெண்ணியம் பேசுறோம் ங்கிற பேர்ல ஆபாசத்தை கடை விரிக்கிற முண்டங்கள் தத்தமது கணவர்கள் கூட இருக்கதை எல்லாம் வரி விடாம எழுதுதுங்க.. இப்படி முகநூலில் வரி வரி கவிதையாக அதை எழுதுவதற்கு பதில் அப்படியான பெண்கள் அவர்களின் உற்றார் உறவினர் பெற்ற பிள்ளைகள் முன்னாடி ஸீன் பை ஸீனா படுக்கையறை காட்சிகளை விவரிச்சு சொல்லுங்களேன். குறைந்த பட்ச நாகரீகம் கூட தெரியாத இப்படியான டேஷ் களை பார்த்தாலே எரிச்சளாகுகிறது...! பெண்ணியம் என்பது ஆபாசத்தை கடை விரிச்சு காட்டுவதில் இல்லை; அது பெண்களை சரியாக புரிந்து மதிப்பதில் இருக்கிறது என்பது ஜொள்ளுக்காக எழுதும் இந்த முண்டங்களுக்கு எப்போதும் புரியாது! அதுக்கும் நாலு ஈனப் பயலுக போயி வாவ், ஆஸம் டோலி, முற்போக்கு கருத்து னு ஜொள்ளு விடுறானுங்க...//
இப்டி ஒரு பதிவு இங்க சுத்திகிட்டு இருக்கிறத பார்த்தேன்... அதுக்கு நான் குடுத்த பதில் இது தான்:-

இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !

வினவு :பல்கலைக் கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் தொடங்கி நீதிமன்றங்கள் வரை எல்லா அமைப்புகளிலும் காவிப்படையினரை நிரப்புவதன்மூலம் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் நடைமுறையில் இல்லாமல் ஆக்கும் திசையில்தான் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கிறது.
குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்ற இளம் பெண்ணை போலி மோதல் படுகொலை செய்த காவல் துறை அதிகாரிகள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நேர்மையான நீதிபதி  ஜெயந்த் படேல் தலைமை நீதிபதியாகிவிடாதபடி மத்திய அரசால் பழிவாங்கப்பட்டதையும், அதை தட்டிக்கேட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் துஷ்யந்த் தவே-விற்கு பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி மிரட்டுவதையும் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 10.10.2017 ‍ செவ்வாய்கிழமையன்று மதியம் ஒரு மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெங்கு - அரசுக் கட்டமைப்பின் ஒட்டுமொத்தத் தோல்வி .. மாயையும் உண்மையும்! :

காவிரி வினவு : நியூஸ் என்னும் செய்தி தொலைக்காட்சியில் ‘8 திசை’ என்னும் நிகழ்ச்சியில் நடந்த விவாதமிது. “டெங்கு: நிலவேம்பு நிவாரணமா?” என்ற பெயரில் அந்த விவாத நிகழ்ச்சியை நெறியாளர் தமிழினியன் ஒருங்கிணைத்தார்.
டெங்கு மற்றும் நிலவேம்புக் குடிநீர் ஆகியவை குறித்த இந்த விவாதத்தில் பொதுநல மருத்துவர் ராஜேந்திரன் (அலோபதி), மருத்துவர் சக்திவடிவேல் (கொசுக்கள் மற்றும் அதன் மூலம் பரவும் நோய்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்பவர், அலோபதி), குழந்தைகள் நல மருத்துவர் ரெக்ஸ் (அலோபதி), மருத்துவர் சாம்ராஜ் (சித்த மருத்துவர்) ஆகியோர் பங்கேற்றனர்.

நெறியாளர் தமிழினியன்
இந்த விவாதம் சாராம்சமாக,  நிலவேம்பு போன்ற சித்தமருத்துவ முறைகளின்  உண்மைத் தன்மை, நவீன மருத்துவத்தின் சிகிச்சை முறை, டெங்கு கொசு வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு – உடல் மாற்றங்கள், டெங்கு மரணங்களுக்கான காரணங்கள், டெங்கு பரவுவதற்கான் காரணங்கள்,  தடுப்பு மருந்து குறித்த நிலவரங்கள்  ஆகியவற்றை அறிவியல் ரீதியில் அலசியிருக்கிறது.

சாரு நிவேதிதா : தோழியோடு இரண்டு மணி நேரம் டான்ஸ் ஆடினேன். தப்பான ஒரு டச் இல்லை.

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் என்னை பெருசு என்று குறிப்பிட்டார்.  விளையாட்டாக எடுத்துக் கொண்டேன்.  பொருட்படுத்தவில்லை.  இரண்டு நாட்கள் கழித்து மீண்டும், உங்களுக்கு வயதாகி விட்டது என்றார்.  பிறகு இன்றும் அதே பேச்சை அவரிடமிருந்து கேட்க நேர்ந்தது.  ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்பதால் அவருக்கு நான் நேரடியாக பதில் சொல்ல விரும்பவில்லை.  அறுபதுக்கு மேல் ஆனால் வயதாகி விட்டது என்பது ஒரு அணுகுமுறை.  ஆனால் 90 வயது ஆனாலும் வயதாகாது என்பது இன்னொரு அணுகுமுறை.  எங்கள் ஊரில் 70 வயது ஆனவர்கள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிக் குழந்தை பெற்றுக் கொண்ட ஒருவரிடம் ஒரு இளைஞன்  தாத்தா, உங்க குழந்தை உங்க ஜாடையில் இல்லையே என்று கேட்க, டேய் பைத்தியாரா, உன் குழந்தையோட ஜாடையும் என் ஜாடையும் ஒண்ணா இருக்கே, அதைப் பத்தி என்னிக்காச்சும் யோசிச்சு இருக்கியா என்று ஊருக்கே தெரிந்த ரகசியத்தைப் போட்டு உடைத்து அவனை மான பங்கம் செய்தார்.

சிவன் சொன்னான்.. நான் பிச்சை எடுக்கிறேன்.. புது சாமியார் !பேட்டிக்கே பணம் வாங்கிய ரஷ்ய இளைஞர்!

Gajalakshmi Oneindia Tamil : சிவனின் உத்தரவால் பிச்சை எடுக்கிறேன்-ரஸ்ய இளைஞர்-வீடியோ சென்னை: சிவபெருமான் உத்தரவிட்டதால் தான் பிச்சை எடுப்பதாகவும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சென்னையிலும் பிச்சை எடுத்த போது பிடிபட்ட ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் தெரிவித்துள்ளார். ஏடிஎம்கார்டு முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் போனதாக காஞ்சிபுரத்திற்கு சற்றுலா வந்த ரஷ்ய இளைஞர் இவாஞ்சலின் பெர்ன்கோவ் குமரக்கோட்டம் முருகன் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தார். இந்த தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி உதவி ஆய்வாளர் துளசி அவரிடம் விசாரணை நடத்தி ரூ. 500 பணம் கொடுத்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ரஷ்ய இளைஞர் பிச்சை எடுத்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இவாஞ்சலின் ரஷ்யா செல்ல அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றார்.   சீக்கிரம் இவனையும் பேட்டி எடுத்து  ஒரு  பெரிய சாமியாராக  விகடன்  குமுதம் போன்ற ஊடகங்கள் மக்கள் தலையில்  மிளகாய்   அரைப்பார்கள்

வெடிகளைக் குறைப்போம்: செடிகளை நடுவோம்!

மின்னம்பலம் :தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ‘வெடிகளைக் குறைப்போம், செடிகளை நடுவோம்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் திருச்சியைச் சேர்ந்த தண்ணீர் என்னும் சமுக அமைப்பு நடத்திவருகிறது.
வருகின்ற 18ஆம் தேதி தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளியன்று வெடிவெடித்து கொண்டாடி மகிழலாம் என்ற உற்சாகத்தோடு இருப்பார்கள்.
தீபாவளியை வெடி வெடித்துக் கொண்டாடும்போது, சுற்றுச்சூழல் 30 சதவீதம் கூடுதலாக மாசடைகிறது. இதனால் தீபாவளியன்று வெடிகளைக் குறைத்து, நகர் முழுவதும் செடிகளை நடுவோம் என்று, திருச்சியில் இயங்கிவரும் தண்ணீர் சமூக அமைப்பினர், மாநகரில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிலையங்கள், பள்ளிகள் என பல்வேறு இடங்களிலும் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

பிரணாப் முகர்ஜி : ஜெயேந்திரர் கைது என்னை கோபப்படுத்தியது ... அசல் பாப்பானின் ஒப்புதல் வாக்குமூலம்!

ஜெயேந்திரர் கைது: பிரணாப் உடைத்த ரகசியம்!மின்னம்பலம் : ஜெயேந்திரர் கைதுசெய்யப்பட்டது கோபத்தை ஏற்படுத்தியது என்று முன்னாள் ஜனாதிபதியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். ‘கூட்டணி ஆட்சி ஆண்டுகள்:1996-2012’ என்ற தலைப்பில் தான் எழுதியுள்ள சுய சரிதை நூலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நூல் நேற்று (அக்.13) வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன் 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். சங்கர மடம் மற்றும் ஜெயேந்திரர் ஆகியோருக்கு எதிராகத் தொடர்ந்து சங்கரராமன் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தநிலையில் தான் இந்தக் கொலை நடைபெற்றது. எனவே இதன் பின்னணியில் ஜெயேந்திரர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

டெங்கு 40 பேர் இறந்தது பெரிதல்ல! மத்திய மருத்துவ குழு ! .. ஸ்டாலின் கடும் கண்டனம்!

tamilthehindu : "12 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 40 பேரின் மரணம் ஒன்றும் பெரிதல்ல", என்று தமிழகம் வந்திருக்கும் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டியளித்து இருப்பதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை பீதியடைய வைக்கும் வகையில் பேட்டியளித்த மருத்துவர் அஷ்தோஸ் பிஸ்வாஸை, மத்திய குழுவில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், "டெங்கு காய்ச்சலை ஒழிப்பது அரசின் கைகளில் இல்லை", என்று தமிழகத்தில் டெங்கு பாதிப்பை பார்வையிட வந்திருக்கும் மத்திய குழுவில் இடம்பெற்றுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் அசுதோஷ் பிஸ்வாஸ் பேட்டியளித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பெண் கைதியை, ஆண் கைதி அறையில் தனிமையில் விட்ட சிறை காவலர்கள்


நக்கீரன் : புதுச்சேரி மத்திய சிறையில் முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் கைதான பெண் கைதி ஒருவரை, ஆண்கள் சிறையில் உள்ள பிரபல தாதாவை தனிமையில் சந்திக்க அனுப்பி வைத்ததாக ஜெயில் துணை சூப்பிரண்டு மற்றும் 3 காவலர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசம் காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 600 ஆண் கைதிகளும், 100 பெண் கைதிகளும் தனித்தனியாக உள்ளனர். கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப் பொருட்களை கொடுத்து உதவியதாக அண்மையில் சில சிறைக்காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறை வரலாற்றில் முதல்முறையாக சினிமாவில் வருவது போல, ஆண்கைதி ஒருவர் விரும்பி அழைத்ததால் பெண் கைதி ஒருவரை அழைத்துச்சென்று சிறைக்குள் தனிமையில் சந்திக்க வைத்த நூதன சம்பவம் அரங்கேறி இருக்கிறது. புதுச்சேரி முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட பெண் தாதா எழிலரசி தற்போது காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் விஷால் கட்டளையிடுவதா? அபிராமி ராமநாதன் சாடல்!

நக்கீரன் :திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் கட்டளையிடுவது போல் விஷால் பேசுவதா? என திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் விஷாலை சாடியுள்ளார். இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சின்னபடங்களுக்கும், பெரிய படங்களுக்கும் ஏற்ப டிக்கட் கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது அதற்காக அரசிற்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஏதோ கமிட்டி அமைத்து எங்களை ஆய்வு செய்யப்போவதாக விஷால் தெரிவித்துள்ளார். இதில் எங்களுக்கு என்ன மனவருத்தம் என்றால், அவர்களுக்கு என ஒரு சங்கம் இருக்கிறது. எங்களுக்கும் ஒரு சங்கம் இருக்கிறது. இருவரும் இணைந்து பேசி எதையும் முடிவு செய்யலாம். அதை விட்டுவிட்டு கட்டளையிடுவது போல் உத்தரவு போட்டால் இது என்ன நியாயம்? திரையரங்க உரிமையாளர் சங்கம் என ஒன்று இருப்பதை விஷால் மறந்துவிட்டாரா?

தகுதிநீக்க வழக்கு : டெல்லியில் சொல்லப்பட்ட யோசனை!

minnambalam : முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும், கொறடாவின் பரிந்துரையின் பேரில், சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையில், திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், சபாநாயகரிடம் சரமாரியாக நான்கு கேள்விகளை முன்வைத்தார். பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்ததால், வழக்கு வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக மீனவர் பிரச்சனை .. மத்திய கால்நடை அமைச்சர் ராதா மோகன், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இன்று பேச்சுவார்த்தை

tamilthehindu :தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய - இலங்கை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண டெல்லியில் கடந்த ஆண்டு நவ.2-ம் தேதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையும், அதைத்தொடர்ந்து நவ.5-ம் தேதி இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக் கூட்டமும் நடைபெற்றது. அதில், இரு நாடுகளுக்கு இடையிலான மீன்வளம் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி பேசி முடிவு எடுக்க கூட்டு செயல்திட்ட குழு கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறையும், இரு நாடுகளின் மீன்வளத்துறை அமைச்சர்கள் கூட்டத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறையும் கூட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் 7-ம் தேதி இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள், மீன்வளத்துறை, கடற்படை, கடலோர காவல்படை பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டாவது பேச்சுவார்த்தை கொழும்பில் நடைபெற்றது.

கெளரி லங்கேஷ் பத்திரிக்கை மீண்டும் வருகிறது

nakkeeran : சுட்டுக்கொல்லப்பட்ட கன்னட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் பத்திரிகையை தொடர்ந்து நடத்த அவருடைய நண்பர்களும் ஊழியர்களும் உறுதி எடுத்திருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பெங்களூருவில் தனது வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபர்களால் கௌரி சுட்டுக் கொல்லப்பட்டார். புரட்சிகரமான பத்திரிகையை நடத்தி வந்த அவர் மதவெறியர்களால் பலமுறை அச்சுறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் நடத்தி வந்த கௌரி லங்கேஷ் என்ற வார பத்திரிகை மறுநாள் வந்தது. அதன்பிறகு அவருடைய மரணச் செய்தியோடு செப்டம்பர் 12 ஆம் தேதி வெளிவந்தது. அதன்பிறகு இதழ்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் கௌரிக்கு அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது வழங்கப்பட்டது. கௌரியின் பத்திரிகை அலுவலகத்தில் நிருபர்கள் மற்றும் ஊழியர்கள் என்று மொத்தம் 35 பேர் வேலை செய்தனர். ஆனால், பத்திரிகையின் பெரும்பாலான வேலைகளை கௌரியே முடிவு செய்வார்.

முச்சந்தியில் பன்னீர், நன்றி கொன்றவர்களை கெட்டவர்கள் கூட சேர்ப்பதில்லை!

www.savukkuonline.com:நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி என்ற சித்தர் பாடல் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே பொருந்தும். தர்மயுத்தம் என்று ஒரு பிரம்மாண்டமான ஓரங்க நாடகத்தை ஆறு மாதத்துக்கு நடத்தி விட்டு, தொடங்கிய புள்ளியை விட மோசமாக பின்தங்கிய நிலையை அடைந்துள்ளார்.
பல்வேறு பிஜேபி தலைவர்களுக்கே சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காமல் புறக்கணிக்கக் கூடிய ஒரு நபரான நரேந்திர மோடி, தன்னை ஒரே வாரத்தில் நான்கு முறை சந்தித்ததும், பன்னீர்செல்வம் வானத்திலேயே பறக்கத் தொடங்கினார். மோடி வாரத்துக்கு நான்கு முறை சந்திக்கும் வகையில் நாம் அத்தனை முக்கியத்துவம் பெற்றவரா என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். காரியம் ஆகும் வரை, எதையும் செய்ய தயங்காதவர் மோடி என்பதை இப்போதாவது பன்னீர் உணர்ந்து கொண்டாரா என்று தெரியவில்லை.

BBC: கோராக்பூர் மருத்துவமனையில் 3 மாதங்களில் 1000 குழந்தைகள் உயிரழப்பு ,, உத்தர பிரதேசம்

குமார் ஹர்ஷ்-- பிபிசி-:  ; அனைத்து விடயங்களுக்கும் ஒரு எல்லையோ முடிவோ இருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், சிலவற்றுக்கு விதிவிலக்கும் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் நேர்மறையாக மட்டுமே இருப்பதில்லை.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் இறந்து போவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இது முடிவில்லாத அவலமாகத் தொடர்கிறது.
பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் மரணிப்பது 30 ஆண்டுகால தொடர் நிகழ்வாக இருந்தாலும் தற்போது அது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.
மூன்று மாதங்களில் சுமார் 1000 குழந்தைகள் மரணம்
இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 378 குழந்தைகள் இறந்தனர்.

உடலின் அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். ,,.... ஒன்று குறைந்தாலும் மனிதன் நோயாளி ஆகிறான்.

Sarav.Urs: ஒரு நாள் இரவு நார்மலா தூங்க போறீங்க. ஆனா காலையில் நீங்க கண் விழிக்கவில்லை. எல்லோரும் அரண்டு போய் பார்க்கிறாங்க, உங்க இதயதுடிப்பும் மூச்சும் சீராக இருக்கிறது. ஆனால் உங்களை விழிக்க வைக்க முடியவில்லை....! உங்கள் மூளை லிட்டரல்லி ஷட் டவுன் ஆகி கிடக்கு... !!! எப்படி இருக்கும்... ??
2017'ல் உடலியலுக்கான நோபல் பரிசு, நம் உடலினை முழுதுமாக கன்ட்ரோல் செய்யும் உடலின் Bio Rhythm குறித்த ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்காக Jeffrey C. Hall, Michael Rosbash and Michael W. Young ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாம எத்தனை மணிக்கு சாப்பிடனும், எப்போ தூங்கனும், எப்போ எழுந்திரிக்கனும்ன்னு முடிவு செய்யும் உடலின் Circadian Rhythm குறித்த ஆராய்ச்சிக்கு தான் இந்த பரிசு...
நீங்க ஆரோக்கியமா இருப்பது இந்த ரிதம் கையில் தான் இருக்கு. தூக்கம், பசி, நீர் பிரிதல், மலம் பிரிதல், வியர்த்தல், உணவை செறித்தல், மூச்சு விடுதல், இதயம் துடித்தல், வேலை நேரத்தில் கவனமாக /ஆக்டிவாக இருத்தல், ஓய்வு நேரத்தில் ரிலாக்சாக இருத்தல்ன்னு எப்போ எங்க என்ன செய்யனும்ன்னு மொத்தமா முடிவெடுத்து உங்களை கேக்காமல் செய்துட்டே இருக்கும் ஒரு அற்புத ஆட்டோ மெக்கானிசம் இந்த ரிதம். மேலே சொன்னதுல ஒன்னு நடக்கலைன்னாலும் மனிதன் நோயாளி ஆகிறான்.

ஆழ்ந்த உறக்கத்தில் திமுக இணைய பொறுப்பாளர்கள் .. 2 ஜி ஸ்பெக்ட்ரம்


மார்ட்டின் சந்தர் கிங் · தொலைக்காட்சி/பத்திரிகைகளில் வந்த தவறான தகவலின் அடிப்படையில் "2G spectrum scam" என்ற விக்கிப்பீடியா பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 2g யை விட அதிக இழப்பு இருப்பதாக சிஏஜி அறிக்கை கூறிய பின்பும் 3g மற்றும் 4g scamக்கு எந்த பக்கமும் இதுவரை உருவாக்கப்படவில்லை. 2g பக்கத்தில் உண்மைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும் ஸ்பெஷல் கோர்ட் முடிவு செய்யும் முன்பே இது ஊழல் என்றும் வாட்டர்கேட் ஊழலுக்கு அடுத்தது என்றும் சிலர் சீறிய மெனக்கெடலோடு(??) இந்த பக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். உண்மைத்தன்மைக்கு ஏற்றவாறு இதை திருத்தி அமைக்க என்ன முயற்சி எடுத்திருக்கிறது திமுகவின் ஐடி விங்?
வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் இழுத்தடிப்பார்கள். ஆனால் 2ஜி வழக்கை இழுத்தடிப்பது நீங்கள்தான் -- வழக்கு பதிவு செய்த சிபிஐ யின் வழக்கறிஞரிடம் நீதிபதி ஷைனி, கடும் தாக்கு...

வெள்ளி, 13 அக்டோபர், 2017

உத்திர பிரதேசம் 180 தலித் குடும்பங்கள்.. சிலைகள்,படங்களை ஆற்றில் தூக்கி எறிந்தனர்

உத்திர பிரதேசம் மாநிலத்திலுள்ள ஷ்ரஹான்பூர்,மொரடாபாடு,ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் ,அங்குள்ள ஆதிக்க சாதி இந்துக்களாலும் ,உள்ளூர் போலீசாராலும் தொடர்ந்து சாதி கொடுமைகளுக்கு ஆளாவதால் , பௌத்தத்தை தழுவ போவதாக அச்சுறுத்தியுள்ளனர். இதன் ஒரு தொடக்கமாக ,இந்து மத கடவுள்களின் சிலைகள்,காலண்டர்கள்,புகைப்படங்களை ஆற்றில் தூக்கி எறிந்தும்,கரைத்தும் இருக்கிறார்கள். அதன்பின்,இந்த நிலையிலிருந்து விடுபட பௌத்தம் தழுவ போவதாக உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள். பார்பணீயத்தின் ஆதிக்கம் எங்கு அதிகரிக்கிறதோ! அங்கு பௌத்தம் பெரும் பலத்துடன் அவதரிக்கும்!

இனிமேல் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள் ? கருத்துக் கணிப்பு

தமிழ் ராக்கர்ஸ் – 
டொரண்ட் – 
செல்பேசி 
தொலைக்காட்சிகள் 
 மல்டிபிளக்ஸ் திரையரங்குகள்
சாதாரண திரையரங்குகள் 
பார்க்க மாட்டேன்
வினவு :காசு இருந்தால்தான் கல்வி, மருத்துவம், மின்சாரம் என்றான பிறகு சினிமாவையும் அப்படி ஆக்கி விட்டார்கள். ஆனால் மற்றவற்றை இணையத்தில் பெற முடியாது! சினிமாவைப் பெற முடியுமே! இனிமேல் நீங்கள் சினிமாவை எப்படிப் பார்ப்பீர்கள்?
சினிமா கிசுகிசு செய்திகள் இல்லையென்றால் தமிழகத்தில் பல பத்திரிகைகள் மூடப்பட்டிருக்கும். சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு கிசுகிசுக்கள் எப்போதாவதுதான் பேசு பொருளாக மாறுகின்றன. மற்றபடி சினிமா விமர்சனங்கள், சினிமா உலகின் சங்கப் பிரச்சினைகள் இப்போது கடைசியாக கட்டண உயர்வு போன்ற  செய்திகள் அதிகம் பேசப்படுகின்றன.
இணையத்தின் காலத்தில் டொரன்ட் தரவிறக்கம் பரவலாக பயன்பாட்டிற்கு வந்த பிறகு சினிமா தொழில் சுருங்கி விட்டதாக சினிமா துறையினர் புலம்புகின்றனர். மறுபுறம் மக்களோ மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பார்க்கிங், பாப்கார்ன், அதிக விலை கட்டணம் என குடும்பமாக படம் பாரக்க முடியாத அளவு கட்டணங்கள் அதிகம் என்று புகார் செய்கின்றனர்.

ஐஸ்வர்யா ராய் ஹாலிவூட் தயாரிப்பாளரிடம் இருந்து தப்பினார்?

Siva  - Oneindia Tamil லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராய் மீதும் கை வைக்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. ஹாலிவுட் பட தயாரிப்பாளரான ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த நடிகைகளை பலாத்காரம் செய்தது, அவர்கள் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்தது, அவர்களை கண்ட இடத்தில் தொட்டது என்று அட்டகாசம் செய்துள்ளார். இந்நிலையில் அவர் ஐஸ்வர்யா ராய் மீதும் கண் வைத்தது தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ராயின் டேலன்ட் மேனேஜராக இருந்த சிமோன் ஷெப்ஃபீல்டு வெயின்ஸ்டீன் பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிமோன் s சிமோன் நான் ஐஸ்வர்யா ராயின் மேனேஜராக இருந்தேன். வெயின்ஸ்டீன் ஐஸ்வர்யா ராயை தனியாக சந்திக்கத் துடித்தார். அதை அவர் என்னிடம் தெரிவித்தார்.

13,000 கோடி ‘யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவே’ஐ 2.500 கோடிக்கு விற்கிறது ஜேபி இன்ஃப்ரா!

ஹைவே கட்டுமான செலவு
ரியல் எஸ்டேட் Tamilarasu GoodReturns Tamil இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜேபி உச்ச நீதிமன்றத்திடம் டெல்லியை இணைக்கும் முக்கிய யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயை விற்று விட்டு வீடுகளை டெலிவரி செய்ய முடியாத 30,000 நபர்களின் பணத்தினைத் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளதா கூறியுள்ளது.
ஜேபி இன்ஃப்ராடெக் நிறுவனம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் ஹைவேயை 2,500 கோடி ரூபாய் கொடுத்து வாங்க முன்வந்துள்ள நிறுவனத்திற்கு அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஜப்பான் தமிழன் !!! தவில் வித்வான், தமிழக மாப்பிள்ளை...Thavil and Tamil: the twin passions of a Japanese

நக்கீரன் :உலகமே அவரவர் அடையாளங்களைத் தேடி அணிந்துகொண்டிருக்கும்
காலமிது. மொழி, இனம், தேசம்  என பற்றுகள் அளவுக்கு மீறித்  தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது, பிறப்படையாளத்தை  மறந்து, தேசம் கடந்து, தனக்குப் பிடித்த இன்னொரு மொழி கற்று, கலை கற்று, திருமணம் செய்துகொண்டு  அங்கேயே வாழும் மனம் அரிதானதே.
ஜப்பான் தமிழன்" ஹிடனோரி இஷி... இவரை நான், எனது  பள்ளிப்பருவத்தில் தஞ்சையில்  இருந்த பொழுது,  தவில் வித்துவான் கோவிந்தராஜன் அவர்களின் வீட்டு வாசலில் தான்  சந்தித்தேன். அவரது  முகவரி தேடி அங்கு  நின்று கொண்டிருந்தார். நான் பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது  தவில் வித்துவானின் வீடு எங்கே என்று  என்னிடம் ஆங்கிலத்தில் விசாரித்தார்.  ஆச்சரியமடைந்த நான், சிரிப்பை அடுக்கிக்கொண்டே   நானும் பின்னால் தான் என்று ஒரு தடுமாற்றத்துடன் சொன்னேன்.

யுனெஸ்கோ இல் இருந்து அமெரிக்க இஸ்ரேல் விலகுகிறது

மின்ம்பலம் :யுனேஸ்கோ அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளன.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல், மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ இஸ்ரேலுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வந்தது. இந்நிலையில், அந்த அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்கா நேற்று (அக்.12) அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துணிச்சலான மற்றும் அறம் சார்ந்த முடிவு எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல் தானும் விலகுவதாக அறிவித்துள்ளது. யுனெஸ்கோ அமைப்பு அபத்தத்தின் கூடாரமாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவு ஐ.நா. குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என யுனெஸ்கோவின் தலைவர் இரினா பொகொவா தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மைக்கு இழப்பு என்றபோலும் யுனென்கோவிற்கு அமெரிக்காவோ, அமெரிக்காவுக்கு யுனெஸ்கோவோ முக்கியமானதாக இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உயரும் சினிமா டிக்கெட் விலை

மின்னம்பலம் :ஒருவழியாக முடிவுக்கு வந்தது கேளிக்கை வரி பிரச்சினை. 10 சதவிகித கேளிக்கை வரியை 8 சதவிகிதமாகக் குறைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழக அரசு.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதம் கேளிக்கை வரி வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதற்கு திரைத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அந்த கோரிக்கையை அரசு ஏற்க மறுத்த நிலையில் கடந்த மூன்று நாட்களாகத் திரைத் துறையினருக்கும், அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்ந்து பிச்சை எடுப்பேன்: ரஷ்யர் சூழுரை !

தொடர்ந்து பிச்சை எடுப்பேன்: ரஷ்யர்!காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்யரை போலீசார் சென்னைக்கு அனுப்பிவைத்த பிறகும், நான் தொடர்ந்து பிச்சை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ் (24) என்பவர் தகுந்த பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன், செப்டம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவுக்கு வந்தார். அவர் அக்டோபர் 10 காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்குச் சென்றுள்ளார். அங்கு, சில கோயில்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்த அவர், மேற்கு ராஜ வீதியிலுள்ள குமரக்கோட்டம் என்ற கோயில் அருகேயுள்ள ஏடிஎம் மையத்துக்குப் பணம் எடுக்கச் சென்றபோது பணம் வரவில்லை. இதையடுத்து, அவருடைய ஏ.டி.எம். அட்டையின் ரகசிய எண் முடக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதையடுத்து, சிவகாஞ்சி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். ரஷ்யத் துதரகத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை செல்வதற்குப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர். சென்னைக்கு வந்த அவர், தியாகராய நகரில் சுற்றிவந்தார்.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு!

மின்னம்பலம் :முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் டெங்கு சேர்க்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
தமிழ்நாட்டில் ஏழை மக்கள், உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்யும் திட்டமாகும்.

10 அமைச்சர்கள், 40 எம்.எல்.ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு - தங்க தமிழ்செல்வன் பேட்டி

வெப்துனியா :அதிமுக கட்சி தற்போது சசிகலா கையில்தான் இருக்கிறது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார்.உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா.அப்போது அவரை தினகரன் ஆதரவாளர்கள் மட்டும் நேரில் சந்தித்து பேசினர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவரை சென்று சந்திக்கவில்லை. ஆனால், பல அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அவரிடம் தொலைப்பேசியில் பேசினர் எனக் கூறப்படுகிறது. அதன் பின் பரோல் முடிந்து அவர் சிறைக்கு திரும்பிவிட்டார்."
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “சசிகலாவை பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்தனர். அதை பார்க்கும் போது கட்சி இன்னும் அவர் பக்கம்தான் இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. இதை அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், மாவட்ட செயலாளர்களும் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

கிழக்கு கடற்கரை - 7 பேர் வன்புணர்வு : பவுஞ்சூர் அருகே : மூன்று பேர் கைது

தினமலர் :பவுஞ்சூர்: காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, பவுஞ்சூர் அருகே, இளம் பெண்ணை, ஏழு பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்; நான்கு பேர் தலைமறைவாகி உள்ளனர்.
பவுஞ்சூர் அடுத்துள்ள, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், தன் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருக்க, ஒதுக்குப் புறமான இடத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த, அப்பகுதியை சேர்ந்த ஏழு பேர், அந்த பெண்ணை ரகசியமாக பின் தொடர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில், அந்த பெண்ணின் ஆண் நண்பரை தாக்கி, விரட்டி அடித்துள்ளனர். பின், ஏழு பேரும், அந்த பெண்ணை மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூரம், இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று, அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். உடனே தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கொடூர குற்றத்தில் ஈடுபட்ட, மூவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றவர்களை, தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிராமப்புறத்தில் நிகழ்ந்த இந்த குற்றத்தால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ஜெயலலிதா கைரேகை.! மருத்துவர் பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Vikatan  கார்த்திக்.சி :ஜெயலலிதா கைரேகை விவகாரம் தொடர்பாக மருத்துவர் பாலாஜி அக்டோபர் 27-ம் தேதி நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த வருடம் சிகிச்சைக்காக மருத்துவமனையிலிருந்தபோது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் பி.பாமில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் விவகாரமாகி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

BBC : பிகார் .. கருத்தடைக்கு போராடி வெற்றி பெற்ற நிர்மா தேவி

சரோஜ் சிங்.. : 200க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடைகளைப்பற்றி பேசவும், பயன்படுத்தவும் ஊக்கமளித்துள்ளார் நிர்மா தேவி இந்தியாவில் கருத்தடை என்பது வெளிப்படையாக விவாதிக்க தயக்கம் காட்டப்படும் தலைப்பாக உள்ளது. இதுவே அதிக குழந்தை பிறப்புக்கும் காரணமாகிறது. இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான, பீகாரில், பெண்களுக்கு சராசரியாக மூன்றுக்கு மேற்பட்ட மேல் குழந்தைகள் உள்ளன. ஆனால், அங்குள்ள ஒரு குக்கிராமத்தில், ஒரு பெண் இதை மாற்ற முயலுகிறார்.
"ஆமாம், நான் கருத்தடைகளை பயன்படுத்துகிறேன்" என்று கூறுகிறார், இரண்டு குழந்தைகளுக்கு தாயான, 29 வயதாகும் நிர்மா தேவி. "என் மாதவிடாய் காலங்களில், சிவப்பு மாத்திரையையும், பிற நாட்களில் கறுப்பு நிற மாத்திரையையும் பயன்படுத்துகிறேன். அதில் பக்கவிளைவுகள் இல்லை என்று எனக்கு தெரியும்."

சேகர் ரெட்டி ,,, ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 9

மின்னம்பலம் : ஆரா: ஒரு பொம்மலாட்டத்தின் கதை - 9சேகர் ரெட்டி இது ஏதோ தெலுங்கு மசாலா படத்தில் வரும் வில்லன் பெயர் அல்ல. தமிழகத்தின் பொதுப்பணித் துறையில் கோலோச்சிய காண்ட்ராக்டர். தமிழக அமைச்சர்களுக்கு நெருங்கியவர். குறிப்பாகப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீருக்கும், பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கிற எடப்பாடி பழனிசாமிக்கும் வருடக்கணக்கில் சேகர் ரெட்டியோடு டச் உண்டு என்பதை உணர்ந்தது டெல்லி.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே தனது தமிழகத் தாண்டவத்துக்கு ஏற்ற ஆட்டக்காரர் இவர்தான் என்பதை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, மத்திய உளவுத்துறை ஆகியவற்றின் மூலம் டிக் அடித்துவிட்டது டெல்லி.
டிசம்பர் 5 ஜெயலலிதா இறப்பு அறிவிக்கப்படுகிறது. டிசம்பர் 9 அறிவிக்கப்படாமல் சேகர் ரெட்டியைக் குறிவைத்து மத்திய வருமான வரித்துறை பாய்கிறது.
ஜெ மறைவுக்குப் பின்னர் ஆட்சி நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு எல்லாமாக இருந்தது சேகர் ரெட்டிதான் என்பதை அனைத்துப் பத்திரிகைகளும் எழுதின.
135 சட்டமன்ற உறுப்பினர்களைக்கொண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்திவந்த அதிமுக என்ற கட்சி, இத்தனை எம்.எல்.ஏ.க்களில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வை மட்டுமே இழந்துவிட்டது.

வெட்கம் துளியும் இல்லாத ஆட்சியும் அரசியல்வாதிகளும் ... கூடவே கும்மி அடிக்க துடிக்கும் நடிகர்கள்

நக்கீரன் :  வாக்காளர்களான மக்கள் ஒன்றும் செய்ய முடியாதபடி, தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் பிணைக் கைதிகளாகத் தவிக்கிறார்கள். அதிகாரிகள் உண்டு, மந்திரிகள் உண்டு, இந்த இருதரப்பும் இருக்கும்போது லஞ்சமும் உண்டு என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அடையாளத்திற்கு ஒரு அரசாங்கம் இருக்கிறது என்பதை நிரூபிப்பது லஞ்சம் மட்டுமே. அரசு விழாக்களும் மந்திரிமார்களின் விழாக்களே, மக்களின் விழாக்கள் அல்ல. ஜெயலலிதா காலத்திலும் இதுதான் நிலைமை. இதே நிலைமை தொடர வேண்டும் என்பதற்காகத்தான் அ.இ.அ.தி.மு.க.வினர் "அம்மா கட்சி, அம்மா ஆட்சி' என்று கரடியாகக் கத்துகிறார்கள். "மக்களே உங்களுக்கு விடிவுகாலம் இல்லை...' என்பதையே இந்தக் கூச்சல், கூப்பாடுகள் உணர்த்துகின்றன.

மகராஷ்டிரா கார்பரேஷன் தேர்தல் காங்கிரஸ் பெருவெற்றி 71 , பாஜக 4, சிவசேனா 1 , .

nanded-waghala municipal corporation elections, nanded-waghala elections, nanded polls, congress wins nanded polls, congress victory, india news, indian express n://indianexpress.com   Ashok Chavan after the Congress’s victory in the Nanded municipal polls on Thursday. (Express Photo: Prashant Nadkar) In a significant morale-booster ahead of the crucial assembly polls in Gujarat and Himachal Pradesh, the Congress on Thursday swept the municipal polls in Maharashtra’s Nanded, defeating the BJP in a keenly contested battle.
While the Congress has been in power in the civic body for nearly two decades now, with Nanded remaining loyal to the Congress even during the 2014 Lok Sabha and assembly polls, the shot in the arm for the party came from the magnitude of Thursday’s win.
The Congress won 71 out of the total 81 seats in the Nanded-Waghala municipal corporation, improving its previous tally of 41. The BJP, which had two corporators in the previous House, stood a distant second, winning five.
In another significant development, the Asaduddin Owaisi-led All India Majlis-e-Muslimeen (AIMIM), which had bagged 11 seats last time, failed to win a single seat this time. “Muslims have understood that the AIMIM cannot be an option to the BJP. They voted for the Congress,” said Maharashtra Congress president and former chief minister Ashok Chavan, the architect of the party’s impressive victory.

"வடகொரிய வர்த்தக கப்பல்கள் மற்ற நாடுகளின் துறைமுகத்துக்கு செல்ல ஐ.நா. தடை

UN bans 4 ships from global ports for violating N Korea sanctions ... maalaimalar: :வடகொரியாவின் 4 வர்த்தக கப்பல்களும் உலக நாடுகளின் எந்த துறைமுகத்துக்கும் செல்லக் கூடாது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்துள்ளது.
 நியூயார்க்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்த பல்வேறு பொருளாதார தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணை சோதனையையும் வெற்றிகரமாக நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

குழந்தைகள் அருந்தும் அமுல் பாலும் இனி அமெரிக்க பதஞ்சலி ரசாயன கூட்டுத்தான் ,,,

alwar.narayanan.: எதோ ஒரு ஆங்கில தினத்தாள் பத்திரிகையில் பொட்டி
செய்தியாக போட்டுவிட்டார்கள். இந்த குறுஞ்செய்தியின் பொருளை உள்வாங்கி புரிந்துகொண்டால் வரும் நாட்களில் உங்கள் சந்ததியர் எப்படிப்பட்ட கார்ப்பரேட் வலைப்பின்னலில் பிணைக்கப்படுவீர்கள் என்பது புரியும். கற்பனை வளமற்ற அடிமைகள் கடந்துசெல்லலாம்.
செய்தியின் சாராம்சம் இதுதான் :
ஆயுர்வேத கம்பெனி என்று வரிகட்டாமல் சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பதஞ்சலி கம்பெனி ஆயத்த உணவு மற்றும் ஒப்பனை சந்தையை கைப்பற்றியபிறகு தற்போது நவீன மாட்டுத்தீவனத்தில் நுழைந்திருக்கிறது. நீங்கள் உபயோகிக்கும் அமுல் பால் பண்ணைகளுக்கு (மரபணு மாற்றப்பட்ட) அமெரிக்க சோளத்திலிருந்து Silage எனப்படும் ஒருவகை தீவனத்தை விற்க ஆர்டர் பிடித்திருக்கிறது. இது சோளத்தை செடியோடு காற்றில்லாமல் புழுங்கவைத்து எடுக்கப்படும் புளிக்கவைக்கப்பட்ட, அதிக ஈரப்பதம் இல்லாத சேமிக்கப்பட்ட தீவனமாகும். எந்திரங்களால் வைக்கோல் அமுக்கப்படும்போது அது எடைமிகுந்து, வெடிக்கும் நிலையில் ஆபத்தான வடிவத்தை பெறுகிறது.

வியாழன், 12 அக்டோபர், 2017

அர்விந்த் கேஜ்ரிவாலின் கார் திருடப்பட்டு உள்ளது

தினத்தந்தி : புதுடெல்லியில் தலைமை செயலகம் முன் நிறுத்தப்பட்டு இருந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி, புதுடெல்லியில் தலைமை செயலகம் முன் நிறுத்தப்பட்டு இருந்த முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் திருடப்பட்டு உள்ளது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் எப்போதும் பயன்படுத்தும் வேகன் ஆர் காரை தலைமை செயலகத்தில் இருந்து யாரோ திருடுவிட்டனர் என போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாலை 3:30 மணி அளவில் எங்களுக்கு புகார் வந்தது, இது தொடர்பாக விசாரிக்கிறோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லி டிஜிபி மான்தீப் ரந்தாவா பேசுகையில், கார் திருட்டு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது,

இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் கேரளா அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம்! வீரமணி கோரிக்கை!


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை!
மின்னம்பலம் :இந்தியா முழுவதும் ஒரே சட்டம் என்பதால், கேரளாவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆகமக் கோயிலின் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் நாடு அரசும் அதனைப் பின்பற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரள அரசைப் பாராட்டியுள்ள அவர் தமிழக அரசுக்கு இது தொடர்பாகக் கோரிக்கை விடுத்த்துள்ளார்.

ஆருஷி கொலை வழக்கு: பெற்றோர் விடுதலை ... பணம் கொடுத்து வாங்கப்பட்ட தீர்ப்பு?

மாலைமலர் :டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்தவர் ராஜேஷ் தல்வார். இவரது மனைவி நூபுர் தல்வார். பல் மருத்துவர்களான இவர்களின் 14 வயது மகள் ஆருஷி தல்வாரும், வீட்டு வேலைக்காரர்
ஹேம்ராஜும் கடந்த 2008ம் ஆண்டு வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

சசிகலா பரப்பன அக்கிரகாரம் வந்து சேர்ந்தார் !

நக்கீரன் :சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கவனிப்பதற்காக வந்த சசிகலாவுக்கு 5 நாள் பரோல் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை டி.நகரில் தங்கியிருந்த அவர் இன்று காலை பெங்களுரு புறப்பட்டார். சசிகலா புறப்படும்போது அவரது ஆதரவாளர்கள் அந்தப் பகுதியில் திரண்டிருந்தனர். படங்கள்: ஸ்டாலின், குமரேஷ், அசோக்

டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நக்கீரன் : டிசம்பர் 31க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்த சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு ஏப்ரல் 12 தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக அம்மா அணியின் சார்பில் டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் திரைப்பட பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ் கட்சி சார்பில் லோகநாதன் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். ஏப்ரல் 12 தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மெர்சல் மட்டுமல்ல.. பொய் வசூல் கணக்குகள் .. பொய்யான பில்ட் அப்புகள் .

southindianvoice.com :  ஒவொரு படம் ரிலீசாகும்போதும் பில்டப் ராஜாக்களான விஜயும்,அஜித் ம் முந்தைய ரஜினி படத்த தாண்டிடுச்சு,தாவிடுச்சினு கோழி கூவுறமாதிரி  கூவி,கூவி பத்திரிக்கைகள்(ஒன்லி மணி நோ ரியல்)    மூலமா  100குரோர்கிளப்ல ஜாய்ன் பன்னிடுச்சுனு புளுகு மூடையா அவிழ்த்து விடுவாங்க
அலாஸ்கா,அண்டார்டிகானு கவுண்டமணி  என்ன மாப்ள கொஞ்சம் கூட  கூச்சபடாம சொல்றனு கேக்குறமாதிரி உலகப்பொய்யன் கோயாபல்ஸே வெட்கப்படும் அளவு பொய் புளுகர்ள் புளுகித்தள்ளுவாங்க
ஆனா சிவகார்த்திகேயன்கிட்ட சுவற்றில் அடிபட்டு ஒட்டிக்கொண்ட பல்லி மாதிரி வாங்கு வாங்க. ஆனா ஓப்ப்னிங்கிங்னு 10 வருஷமா பத்திரிக்கைகளில் பில்டப் கொடுக்கப்படுப‌வரும்,வசூல் வெல்லவர்த்தி (சக்ரவர்த்தியெல்லாம் கிடையாது)  என்று  வெட்டிகதை பேசுபவர்களும் இன்னும் சூர்யாவின் பிஸினஸையே தாண்டவில்லை என்பதே களநிலவரம்.

ஆனா படம் வரும்போது பத்திரிக்கைகளில் 100கோடிபட்ஜெட்,(100 குரோர்னு கிளப்புகுள்ள நுழைந்ச உடனே பட்ஜெட் போட்ருவாங்கபோல)னு சொல்லிட்டு இப்ப வியாபாரம் 100 கோடிய தொட்டுடுச்சினு செய்திய போடுறாங்க ஏம்ப்பா 100 கோடி கிளப்புல சாதாரணமா சம்மர் சால்ட் அடிச்சி நுழையுறவுங்க ஏம்ப்பா 100 கோடி வியாபரம்னு சொல்றீங்க என்ன செய்யுறது ஏதாவது தமிழன்,தல மாஸ் ஓப்பனிங்,வசூல் வெல்லவர்த்தி,100 கோடி வியாபாரம்,படத்துக்குதடை,

ஒரு ஊழியருக்கு சம்பளம் ரூ 13000 / இன்னொருத்தருக்கு 225000 எந்த வகை சமூக நீதி ?


Damodaran : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு -- ஒரு அநீதி அக்கிரமம். தமிழ் நாட்டில் பாதி பேருக்கு மேல் வேலை இன்றி திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
சாப்பாட்டுக்கும் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் இல்லாமல் வாடுகிறார்கள்
விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நெசவாளர்கள் நாளும் அரைப்பட்டினி , ஏழை நடுத்தர குடும்பங்கள் பற்றாக்குறையால் நரகவேதனை அனுபவிக்கும் இந்த காலகட்டத்தில் .... எம்.எல்.ஏ./எம்.பி.க்களுக்கு மந்திரிகளுக்கு ஊழலுக்கு உதவி செய்யும் அரசு உயர் அதிகாரிகளுக்கு
மாதம் ஒன்றுக்கு இலட்சக்கணக்கில் சம்பளம் .....
இது ஒரு பெரிய பகல் கொள்ளை அல்லவா ?
ஆசிரியர் அரசு ஊழிழர்களுக்கு
அளவுக்கு அதிகமான சம்பளம் படிகள் வழங்குவது
அநீதி, மனிதாபிமானமற்ற ,இரக்கமற்ற செயல்.
இதுவும் போதாது இன்னமும் பல மடங்கு ஊதியம் கேட்டு நடத்தும் போராட்டங்கள் நியாயமா ?
இவர்களின் சம்பளத்துக்கு ஒரு உச்ச வரம்பே இல்லையா ?