விகடன் : தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை(செப். 30) பொறுப்பேற்கிறார்.
உதயநிதி துணை முதல்வராவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில் அவர் பொறுப்பேற்க உள்ளார்.
மேலும், சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
புதிய அமைச்சர்கள்
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.எம். நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோரையும் புதிதாக ஆர். ராஜேந்திரன், கோ.வி. செழியன் ஆகியோரையும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
சனி, 28 செப்டம்பர், 2024
துணை முதல்வர் உதயநிதி! நாளை பொறுப்பேற்பு, செந்தில் பாலாஜியும் அமைச்சராகிறார்
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு
தினமணி : ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெய்ரூட்டில் நேற்றிரவு நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியிருந்தது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா தலைவர் குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
தமது தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா அமைப்புஉறுதிப்படுத்தியுள்ளது. அவர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் இறந்துவிட்டார் என்று குழு உறுதிப்படுத்தியது,
மாணவனை நரபலி கொடுத்த பள்ளி உரிமையாளர்... மூடநம்பிக்கையால் நடந்த கொடுமை - Hathras Human Sacrifice பின்னணி என்ன?
zeenews.india.com - Sudharsan G : கடந்த 2020ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் பெண் ஒருவர் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார்.
நான்கு பேர் இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அந்த பெண்ணை தாக்கியதில் முதுகு தண்டில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக 15 நாள்கள் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதேபோல், கடந்த ஜூலை மாதம் ஒரு ஆன்மீக நிகழ்வில் கூட்ட நெரிசல் காரணமாக 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் ஹத்ராஸில் நடந்தது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தற்போது மீண்டும் ஒரு மனதை கனக்கவைக்கும் சம்பவம் ஒன்று ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்துள்ளது.
கண்டெய்னர் லாரிக்குள் இருந்த வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை
தினமணி : காரில் வந்து கண்டெய்னரில் திரும்பும் வடமாநில கொள்ளைக் கும்பல்: காவல்துறை
நாமக்கல்: ஹரியாணாவிலிருந்து, 7 பேர் கொண்ட கும்பல், மூன்று குழுக்களாகப் பிரிந்து தனித்தனியாகவே கேரளம் வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சேலம் சரக டிஐஜி உமா தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களை குறிவைத்து, கொள்ளையடித்துவிட்டு, பணத்துடன் ஹரியாணா தப்பிச் செல்ல முயன்ற வடமாநில கும்பல் நாமக்கல் மாவட்டத்தில் பிடிபட்டது குறித்து சேலம் சரக டிஐஜி உமா செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
பள்ளிக்கூட நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்! இலங்கை புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா அதிரடி
File video :
ஹிரு நியூஸ் : பள்ளிக்கூட நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துங்கள்! இலங்கை புதிய பிரதமர் ஹரிணி அமரசூரியா அதிரடி
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது முறையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 27 செப்டம்பர், 2024
பிகார் ஆற்று நீரில் மூழ்கி 45 பேர் உயிரிழப்பு! ஜீவித் புத்திரிகா நிகழ்வின் போது விபத்து
சங்கரன் கோவில் கொலை வழக்கு- 4 பேருக்கு மரண தண்டனை
தினகரன் : நெல்லை: திருவேங்கடத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கில் 11 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் தண்டனை விவரங்களை நீதிமன்றம் அறிவித்தது.
குற்றவாளிகள் பொன்னுமணி, குருசாமி, காளிராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு 2 ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வியாழன், 26 செப்டம்பர், 2024
மலையக சமூகத்தை பிச்சைக்கார சமூகமாக உலகிற்கு காட்டி ஏமாற்றுவது
இதை லைக்குக்கும், கொமண்டுக்கும், பகிர்வுக்கும் பெயர் வாங்கி கொள்ள,
இந்த Sri Vidya முகநூலில் பதிவு செய்து மலையக சமூகத்தை பிச்சைக்கார சமூகமாக உலகிற்கு காட்டி ஏமாற்றியது கொண்டிருப்பது மிக வேதனையானது.
உங்களுக்கு ஜீவன் தொண்டமான் சொத்துகளை ஏன் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால்,
ஏன் முழு மலையக சமூகத்தையும் பிச்சைக்கார சமூகமாக உலகிற்கு காட்ட வேண்டும்.
இன்று குறையும் களுசானையும் உடுத்தி கொண்டு தோட்டங்களை விட்டு வெளியே வந்து தொழில் புரியும் நிலமையையும்,
அடையாள அட்டை எடுத்து பாஸ்போட் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளில் தொழில் புரிகிறீர்களே அதையும் இ.தொ.காவும் தொண்டமான்களும் உருவாக்கி கொடுத்தது.
இல்லை என்றால் இன்றும் தோட்டங்களில் வேலையும் இல்லாமல் வெட்டியும் இல்லாமல் தோட்டங்களை விட்டு வெளியேற முடியாமல் கல்வி கற்க தோட்ட பாடசாலைகளை தவிர வேறு பாடசாலை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
14 வயது பள்ளிக்கூட மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!
மலையோரம் செய்திகள் : பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்!
வவுனியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவருக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது மாணவனை குறித்த ஆசிரியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொற்றோரின் முறைப்பாட்டின் படி, குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் ! நிபந்தனைகள் என்னென்ன?
vikatan.com = Antony Ajay R, பிரேம் குமார் எஸ்.கே.: ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன.
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.
மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.
முன்னதாக, ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன.
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் ஒட்டுமொத்த அரசியல் களமே காத்திருக்கும் தீர்ப்பு இன்று
சவுக்கு சங்கர் பிணையில் விடுதலை! மதுரை மத்திய சிறையில் இருந்து
tamil.oneindia.com -Velmurugan P : மதுரை: கோவை சிறையில் எனது கையை உடைத்து விட்டார்கள்..
அரசின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியதற்காக, என் மீது பொய்யாக கஞ்சா வழக்கு போடப்பட்டது. அரசு பற்றி உண்மைகளை ஏறக்குறைய எட்டு மாதங்களாக எடுத்துக் கூறியதன் காரணமாகத்தான் சவுக்கு மீடியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன..
ஆனால் மீண்டும் அதே வீரியத்துடன் நிச்சயம் செயல்படுவேன் என சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் பேட்டி அளித்தார்.
மதுரை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான பின் சவுக்கு சங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
புதன், 25 செப்டம்பர், 2024
பத்திரப்பதிவில் முறைகேடு.. டிஐஜி ரவீந்திரநாத் கைது - சிபிசிஐடி போலீஸ் அதிரடி
மாலைமலர் : சேலம் மற்றும் மதுரை பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் நிலத்தை காந்தம்மாள் என்பவர் பெயருக்கு போலி ஆவணங்கள் மூலம் மாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் தென் சென்னையில் பணியாற்றியபோது தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவரணம் மூலம் மாற்றியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரிப்பு
தினகரன் : இஸ்ரேல்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 569ஆக அதிகரித்துள்ளது.
லெபனானில் 50 குழந்தைகள் உட்பட 569பேர் உயிரிழந்த நிலையில் 1,835 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராகிம் முகமது கோபிசி மரணம் அடைந்துள்ளார்.
செவ்வாய், 24 செப்டம்பர், 2024
துரை தயாநிதி மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பினார் 10 மாதங்களின் பின் பூரண நலம்
மின்னம்பலம் - Kavi : முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து இன்று (செப்டம்பர் 24) வீடு திரும்பினார் .
கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு துரை தயாநிதி மாற்றப்பட்டார்.
இலங்கை புதிய ஜனாதிபதி அநுர திஸாநாயகே அரசின் அதிரடி அறிவிப்புகள்
Dew Dew : ஜனாதிபதி அநுர அரசாங்கத்தின் அதிரடி மாற்றங்கள்!
1. 36% முதல் 24% வரை வரி செலுத்துங்கள்.
2. உணவுப் பொருட்கள், சுகாதாரத் துறை சேவைகள் மற்றும் கல்விப் புத்தகங்களுக்கு VAT விலக்கு அளிக்கப்படும்.
3. ஒரு அமைச்சர்/எம்.பி.க்கு ஒரு வாகனம்.
4. முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் அல்லது வாகனங்கள் வீடுகள், பாதுகாப்பு போன்றவை இல்லை.
5. அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளைக் குறைத்தல்.
6. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் குடும்பம்/நன்பர்கள் /உதவியாளர்களுக்கு இடமளிக்கப்படாது.
7. அனைத்து சுற்றுப்பயணங்களும் ஒதுக்கப்பட்ட இலக்குகளில் உள்ளன.
8. 25 அமைச்சகங்கள் மட்டுமே.
லெபனான் உயிரிழப்பு எண்ணிக்கை 500- இஸ்ரேல் கடும் தாக்குதல்:
தினத்தந்தி : லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கடுமையான தாக்குதலால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1,200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்ப் பதற்றம் மென்மேலும் வலுத்துள்ளதால், தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
திங்கள், 23 செப்டம்பர், 2024
கொடூரனின் பிடியில் இருந்து 6 வயது சிறுமியை காப்பாற்றிய குரங்கு கூட்டம்
மாலை மலர் ல் உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் முயற்சியை குரங்குகள் கூட்டம் சரியான நேரத்தில் வந்து தடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் உள்ள தௌலா கிராமத்தில் கடந்த வெள்ளியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குற்றவாளி இப்போது தப்பி ஓடிவிட்டார், மேலும் அவரைப் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, சம்பவ இடத்திற்கு வந்த குரங்குகள் அவரை தாக்கியது. குரங்கின் தாக்குதலுக்கு பயந்து அவர் சிறுமியை விட்டுவிட்டு ஓடினார் என்று தெரிவித்தனர்.
திமுக திடீர் நிபந்தனை. திருமாவளவன் அதிர்ச்சி ! முறிவை நோக்கி கூட்டணி?
மின்னம்பலம் - christopher : கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி தி.மு.க-வின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.
இதனை அறிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.
திருமாவளவன் முதலமைச்சராக ஆகக்கூடாதா?
மும்பாய் சிறுமிகள் பலாத்கார குற்றவாளி என்கவுண்டர் கொலை
மாலை மலர் : மும்பை அருகே பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து,
நகரம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. பத்லாபூர் ரெயில் நிலையத்தில் உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கிய நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி அக்சய் ஷிண்டே [23 வயது] போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்துள்ளான்.
ஏழைகளின் தட்டுச்சோற்றை தட்டிவிட்ட சக்திகளின் சூழ்ச்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி
Perumal Ganeshan : நவீன இலங்கையின் சிற்பியும்... ஏழையின் ஒரு பிடி சோற்றையும் தட்டிவிட்ட வஞ்சகமான பணக்காரர்களும்.
உலகம் 21 ஆம் நூற்றாண்டில் பெற்றெடுத்த மாபெரும் தலைவர் . 2022 ல் இலங்கை பொருளாதாரத்தில் மீளுமா உணவு மருந்து சாதாரண இயல்பு வாழ்வு என ஒவ்வொரு இலங்கை பிரசையும் தவித்த வேளை நானுங்களை கரை சேர்ப்பேன் என தன்நம்பிக்கை ஊட்டி இரண்டரைக்கோடி மக்களை தன் பிள்ளைகளாக சுமந்த தலைவர் ரணில் விக்ரமசிங்க.
இவர்மீது இனவாதம் மதவாதம் முலாம் பூசப்பட்ட போதும் நரி என தமிழ்மொழியினரும் சிங்களமொழியினரும் சேறு எறிந்தபோதும் அவை மழலைகளின் திட்டலாக காதால் வாங்கி காதால் உதிர்த்த புண்ணியவான்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுரா திஸாநாயக்காவுக்கு வாழ்த்து செய்தி! : இலங்கையின் 20 மில்லியன் டொலரை 5.7 பில்லியன் டொலராக உயர்த்தியுள்ளேன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா :
“அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே,
நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை
உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”
- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஞாயிறு, 22 செப்டம்பர், 2024
லெபனான் பேஜார் வெடிப்புக்கு பின்னணியில் கேரளா வயநாட்டுக்காரர்
மின்னம்பலம் - Kumaresan M : லெபனான் பேஜார் வெடிப்புக்கு பின்னணியில் கேரளா வயநாட்டுக்காரர்? அதிர வைக்கும் தகவல்கள்!
லெபனான் நாட்டில் கடந்த செப்டம்பர் 17 அன்று பேஜர்கள் வெடித்ததில் 12 பேர் பலியாகினர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் மட்டுமல்ல, பொதுமக்கள் வைத்திருந்த பேஜர்களும் வெடித்துள்ளன.
பேஜர்கள் வெடித்த அதிர்ச்சி அடங்குவதற்குள், செப்டம்பர் 18 ஆம் தேதி வாக்கி டாக்கிகளும் வெடித்து சிதறின. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் மட்டுமல்லாமல், பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளனர்.
திருப்பதியின் தமிழ்/தமிழர் தொடர்பு படிப்படியாக மறைகிறது. மறைக்கப்படுகிறது!
LR Jagadheesan : “கும்பகோணம்” முதல் “திருப்பதி லட்டு” வரை
தெலுங்கு மொழியில் ஏமாற்றுதல், சுத்துமாத்து செய்தல் என்பதற்கு அவர்கள் இன்னமும் பயன்படுத்தும் வார்த்தை “கும்பகோணம்”.
தெலுங்கில் “கும்பகோணம் சேஸினாடு” என்றால் (திட்டமிட்டு) ஏமாற்றிவிட்டான் என்றுபொருள்.
தெலுங்கு ஊடகங்களில் கூட அந்தவார்த்தையை இன்றுவரை அந்த அர்த்தத்தில் சகஜமாக பயன்படுத்துகிறார்கள்.
அதற்கொரு வரலாறு இருக்கிறது. தேவைப்படுவோர் தேடிக்கொள்ளுங்கள்.
இதோ இப்போது திருப்பதி லட்டுக்கு நெய்யை விற்ற விவகாரத்தில் நம் தமிழ்நாட்டு நெய் வர்த்தகர் மீது திருப்பதி தேவஸ்தானம் பொதுவில் சுமத்தும் குற்றச்சாட்டு உண்மையானால் அது அந்த கடந்தகால “கும்பகோண பெருமைமிகு வரலாற்றில்” இன்னொரு மைல்கல்லை உருவாக்குவதாக அமையும்.