சனி, 5 மே, 2018

அனிதா பெயரில் சிறிய செயற்கை கோள் நாளை மெக்சிகோவில் இருந்து விண்ணிற்கு பாய்கிறது .. ஓவியா வில்லேட் சாதனை

.ietamil.com :திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த +2 மாணவி வில்லட்
ஓவியா உருவாக்கிய சிறிய ரக செயற்கை கோள் மெக்சிகோவில் இருந்து நாளை விண்ணில் ஏவப்படுகிறது..
இதில் அதிசயம் என்னவென்றால் நீட் தேர்வினால் உயிரை மாய்த்த அனிதாவின் நினைவாக அந்த செயற்கை கோளிற்கு "அனிதா" என பெயரிட்டுள்ளார் வில்லட் ஓவியா..நாளை தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் அதே நாளில் செயற்கை கோளாய் விண்ணில் பாய்கிறாள் அனிதா..

தமிழக பள்ளி மாணவி கண்டுப்பிடித்த ‘அனிதா சாட்’ என்ற மினி  சாட்லைட் தனது கவுன்ட் டவுனை எண்ணிக் கொண்டிருக்கிறது. திருவெறும்பூர் தொகுதியை சேர்ந்த +2 மாணவி வில்லட் ஓவியா உருவாக்கியுள்ள செயற்கை கோள், மெக்சிகோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சித் தளத்தில் இருந்து, மே மாதம் 6 ஆம் தேதியன்று, விண்ணில் ஏவப்படவுள்ளது. இந்த சாட்டிலைட்  குறைந்த எடை கொண்டது.

வெடிகுண்டு மிரட்டல் .. எடப்பாடி ரஜினி வீடுகளுக்கு மோப்ப நாய்கள், குண்டு நிபுணர்கள்.. EdappadiPalaniswami & Rajinikanth .. BombThreat.

மாலைமலர் :தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரது வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு சென்னை: தமிழகத்தின் முதல்வராக இருந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இவரது வீடு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தகவல் கிடைத்தது. விசாரணையில், கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முதல்வர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த அதே நபரே இவரது வீட்டுக்கும் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20 காவலர்கள் இட மாற்றம்

‘ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20 காவலர்கள் அதிரடி மாற்றம்விகடன்: ‘ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20
காவலர்கள் அதிரடி மாற்றம் கர்நாடக-தமிழக எல்லையான ஓசூரில் அமைந்துள்ள கக்கனூர், டிவிஎஸ், அந்திவாடி, பூனப்பள்ளி, ஜூஜூவாடி ஆகிய 5 செக்போஸ்ட் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களைச் சோதனை செய்து, கட்டாய வசூல் செய்த 20 காவலர்களை இடமாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளார் கிருஷ்ணகிரி எஸ்.பி., மகேஸ்குமார்.
பெங்களூருக்கு, கட்டுமானப்பொருள்கள், உணவுப் பொருள்கள், காய்கறிகள், பூக்கள் என எல்லாமே ஓசூரில் இருந்துதான் பெரும்பகுதி செல்கின்றன. அப்படிச் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ஐந்நூறு, ஆயிரம் என்று கட்டாய வசூல் செய்து பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளனர் செக்போஸ்ட் காவலர்கள். இதுகுறித்த புகார், எஸ்.பி.,மகேஸ்குமாரிடம் செல்லவே, 5 செக்போஸ்ட்களிலும் பணியாற்றும் 20 காவலர்களையும் வரவழைத்து விசாரணை செய்துள்ளார்.
அப்போது, ‘சார், நாங்க என்ன செய்ய முடியும். ஓசூர் டி.எஸ்.பி விஜய் கார்த்திக்ராஜ் ஒரு நாளைக்கு ஒரு செக்போஸ்ட்டுக்கு 4,000 வீதம், 5 செக்போஸ்ட்டுக்கு 20,000 மாமூல் கொடுத்தால்தான் செக்போஸ்ட் டூட்டி போடுகிறார்.

கந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவன தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்! ஸ்காட்லாண்டு போலீசை விட பலமடங்கு பணக்காரர்கள்

கந்துவட்டி, டிராவல்ஸ், நிறுவனங்களில் முதலீடு: தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்!இன்னைக்கு இவனுக காட்டுலதான் மழை, சமூக விரோதிகளிடம் கைகோர்த்து மாமூல் வாங்கி கொட்டோ கொட்டு என்று கொட்டி பினாமி பெயரில் வீடு பங்களா என செல்வ செலுப்பில் உள்ளார்
தினமலர் :தொழிலதிபர்களாக மாறிய போலீஸ்! திருப்பூரின் பாதுகாப்போ, 11 லட்சம் மக்களுக்கு, 600 போலீசார் என்ற விகிதாச்சார அவலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலை போதாதென்று, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரில் சிலர், வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்து, பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், திருப்பூரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. திருப்பூர் மாநகரில் வசிக்கும் மக்கள் தொகை ஏறத்தாழ 11 லட்சம் இங்குள்ள, 7000 நிறுவனங்களின் மூலமாக கடந்தாண்டில் மட்டும், 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அந்நியசெலாவணி ஈட்டப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த, நான்கு லட்சம் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். வேலைவாய்ப்பில் இந்நகரம் எந்தளவிற்கு பெருமை பெற்றிருக்கிறதோ, அதே அளவிற்கு விபத்து, குற்றங்கள் அதிகரிப்பிலும் முதன்மையாக உள்ளதை, மாநில குற்ற ஆவணக்காப்பக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

நீட் தேர்வு ... கூறப்படும் காரணங்கள் எதுவுமே சரியானது அல்ல

Annamalai Arulmozhi : இந்தியாவிலேயே அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலத்தில் இருந்து
ஒரே ஒரு மாணவர் கூட
எதற்காக வேறு மாநிலத்திற்குச்
சென்று தேர்வு எழுத வேண்டும் ??
என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா
பிஜேபி அரசிடம் ??

மாணவர்கள் அவரவர் மாநிலத்தின் மூன்று மையங்களில் தான் விருப்பம் தெரிவிப்பார்கள்.
அதைத்தாண்டி வேறு மாநில மையங்களை மாணவர்கள் எப்படி விருப்பப்பட்டு கேட்பார்கள்..?
ஒன்று தமிழ்நாட்டில் அனைத்து மையங்களும் நிறைந்து விட்டது என்று விண்ணப்பம் பதிவுசெய்யும் போது அறிவிக்கப்படும். அப்படிச் செய்திருந்தால் அதுவும் மோசடியே. மையம் என்பது சென்னை மதுரை திருச்சி கோவை என்ற நகரங்களையே குறிக்கும். அந்த நகரங்களை தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு எழுதும் அறைகள் அதிகரிக்கப்படும். (அதிகரிக்கப்பட வேண்டும்.)

நீட் தேர்வு மையங்களால் மன உளைச்சலில் மாணவர்கள்; திகைத்து நிற்கும் பெற்றோர்


மாணவர்கள்
மாணவர்கள்BBC :அபர்ணா ராமமூர்த்தி - பிபிசி :
தமிழ் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் தமிழக மாணவர்களுக்கு `நீட்’எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்காக ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளத்துக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது தமிழ்நாட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வரும் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தகுதி தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் பத்து தேர்வு மையங்கள் உள்ளன. இச்சூழலில், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்களுக்கு அண்டை மாநிலமான கேரளாவிலும், வடமாநிலமான ராஜஸ்தான், வடகிழக்கு மாநிலமான சிக்கிமிலும் தேர்வு மையங்களை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? அவர்களது பெற்றோரின் மனநிலை என்ன? உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா தமிழக அரசு? என மக்கள் மனதில் இருக்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேட முயற்சித்தது பிபிசி.

தமிழகத்தின் மீது தொடர்ந்து காறி துப்பும் மத்தியஅரசும் உச்ச நீதிமன்றமும் ..

வினவு :மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை
தமிழகத்தின் மீது காறித் துப்பியுள்ளன. ஒரு நதியின் கீழ்ப்பகுதிக்கும் அதன் டெல்டா பகுதிகளும் அந்நதியின் நீரில் உள்ள நியாயமான பங்கை தனது இறுதித் தீர்ப்பில் மறுத்ததன் மூலம் ஏற்கனவே தமிழகத்தின் மீது எச்சில் துப்பியது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவையும் தனது இறுதித் தீர்ப்பில் குறைத்து அறிவித்தது.
அவ்வாறு குறைக்கப்பட்ட அளவிலான நீரைத் தமிழகத்திற்கு வழங்குவதற்கான முறையையும் தெளிவாக விளக்கவில்லை. மேலாண்மை வாரியம் என நேரடியாக குறிப்பிடாமல் “ஸ்கீம்” என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி மத்திய அரசு வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவதற்கான கதவைத் திறந்து வைத்த உச்ச நீதிமன்றம், பற்றாக்குறை காலத்தில் தண்ணீர்ப் பகிர்வு குறித்தும் தனது தீர்ப்பில் விளக்கவில்லை.

அநீதியான அந்தத் தீர்ப்பாவது அமல்படுத்தப்பட்டால் தாகத்தைத் தீர்க்க முடியா விட்டாலும் தொண்டையையாவது நனைத்துக் கொள்ளலாம் என தமிழகம் எதிர்பார்த்தது. காவிரி நீர்ப் பகிர்வுக்கான வரைவுத் திட்டமொன்றை மத்திய அரசு சமர்பிப்பதற்கு வழங்கப்பட்ட 6 வார கால அவகாசத்தில் ஏதும் செய்யாமல் இறுதி நேரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடிய மோடி அரசு, “ஸ்கீம்” என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனக் கேட்டு மீண்டுமொரு முறை தமிழகத்தின் மேல் எச்சில் துப்பியது.

மாமல்லபுரம் சுற்றுலா டிக்கெட்டில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது .. இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே ..

சுற்றுலா டிக்கெட்: தமிழ் புறக்கணிப்பு!மின்னம்பலம்: புகழ்பெற்ற மாமல்லபுர சுற்றுலாத் தலங்களுக்கான டிக்கெட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே டிக்கெட் வழங்கப்படுகிறது.
யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோயில் மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டுவருகின்றன. புராதனச் சின்னமாக விளங்கும் இந்த கடற்கரைக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. மேலும், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, குடவரை மண்டபங்கள் ஆகிய புராதன கலைச் சின்னங்களும் உள்ளன. மாபெரும் யானைகள், குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவற்றின் உருவங்களும் பாறைகளில் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கனிமொழி :நீட் தேர்வு மைய வழக்கில் தமிழக அரசு ஏன் எந்த மூத்த வழக்கறிஞர்களையும் அனுப்பவில்லை?

பெரிய அளவில் பார்க்க கிளிக்
tamilehindu : நீட் தேர்வு மையங்கள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு எந்த மூத்த வழக்கறிஞரையும் அனுப்பவில்லை என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
நீட் தேர்வெழுதும் தமிழக மாணவர்கள் பலருக்கு ராஜஸ்தான், கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு குறித்து, தமிழக அரசு எவ்விதமான முன்னேற்பாடுகளை செய்யாததோடு, இவ்விவகாரத்தை கவனக்குறைவோடு கையாண்டுள்ளது. மணல் அள்ளும் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போதெல்லாம், மூத்த வழக்கறிஞர்களை அனுப்பும் தமிழக அரசு. நீட் தேர்வு மையங்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது எந்த மூத்த வழக்கறிஞரையும் அனுப்பவில்லை. இதுதான் தமிழக அரசுக்கு மாணவர்கள் மீதான அக்கறை. வழக்கம் போலவே, மத்திய அரசு தமிழக மாணவர்கள் விவகாரத்தில் எவ்விதமான அக்கறையும் செலுத்தவில்லை  என்பது வேதனைக்குரியது” என கனிமொழி பதிவிட்டுள்ளார்.<

நாளை நீட் தேர்வு - தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு பயணம்

நாளை நீட் தேர்வு - தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு பயணம்

மாலைமலர் :நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். திருச்சியில் இருந்து எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்ற மாணவ-மாணவிகள்;
சென்னை: மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை சேர்ப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் வகையில் நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.
இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) இந்த தேர்வை பொறுப்பேற்று நடத்துகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
இதற்காக இந்தியா முழுவதும் 136 நகரங்களில் 2 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1 லட்சத்து 7480 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குட்கா வழக்கை திசைதிருப்ப திமுவினரை கைது செய்த எடப்பாடி அரசு

tamilthehindu :கோவையில் சட்டவிரோதமாக குட்கா ஆலை இயங்கிய விவகாரத்தில்
திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கை திசை திருப்பும் செயல் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை கண்ணம்பாளையத்தில் செயல்பட்ட ரகசிய குட்கா ஆலையில் போலீஸார் சோதனை நடத்தினர். இதுகுறித்த தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அதில் 7 பேரைக் கைது செய்தனர். குட்கா ஆலை நிர்வாகத்துக்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் உடந்தையாக இருந்ததாகவும் போலீஸார் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், திமுகவினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய கம்பனியிடம் இருந்து லஞ்சம் பெற்ற இலங்கை அதிகாரிகள் கைது ... அதிபர் மைத்திரிபாலாவின் செயலக உயர் அதிகாரிகள்

Officials of the Commission to Investigate Allegations of Bribery arrested I.H.K. Mahanama(Left), the president's chief of staff, and P. Dissanayake, the head of the State Timber Corporation.
தினமலர் :கொழும்பு: இந்திய தொழிலதிபரிடமிருந்து ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை லஞ்சமாகப் பெற்ற இலங்கை அதிபர் சிறிசேனாவின் தலைமை உதவியாளர் ஐ.எச்.கே.மகாநாமா, மரவளர்ச்சி ஆணைய தலைவர் பியதசா திசநாயகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை திரிகோணமலையில் கந்தளாய்  சர்க்கரை ஆலை உள்ளது. 25 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கவில்லை. இதை மீண்டும் இயங்கச் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை ஏற்று நடத்த இந்திய தொழிலதிபர் ஒருவர் முன்வந்துள்ளார்.ஆனால் அவருக்கு ஆலையை தருவதற்கு அதிபர் சிறிசேனாவின் முதன்மை உதவியாளர் ஐ.எச்.கே.மகாணாமா 540 மில்லியன் இலங்கை ரூபாய்களை லஞ்சமாகக் கேட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் 100 மில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் , ஸ்டாலினுடன் யஸ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா திடீர் சந்திப்பு! ,, பாஜக அதிருப்தி தலைவர்கள் ..


Yashwant sinha meets karunanidhi and stalin
Yashwant sinha meets karunanidhi and stalin tamil.oneindia.com- aravamudhan.: சென்னை: பாஜக அதிருப்தி தலைவர்கள் யஸ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கூட்டணிகள் அமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இதனிடையில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். Yashwant sinha meets karunanidhi and stalin கடந்த வாரம் சென்னை வந்த சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இது தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு மோதல்

தினத்தந்தி :உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனத்தில், சுப்ரீம் கோர்ட்டுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு, பகிரங்கமானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகளை கொண்ட கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. மத்திய அரசு பரிசீலித்து முடிவு எடுக்கிறது. ஆனால் இதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை நியமிக்க கொலிஜியம் செய்த பரிந்துரையை 3 மாதங்களுக்கு பிறகு சமீபத்தில் மத்திய அரசு திருப்பி அனுப்பியது நினைவுகூரத்தக்கது. இந்த நிலையில் உயர்நீதித்துறை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் தலைமையில் நேற்று விசாரணை நடைபெற்றது.
நீதிபதிகளிடம் மத்திய அரசின் தலைமை வக்கீல் கே.கே. வேணுகோபால், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் 40 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளபோது, கொலிஜியம் 3 பேரை மட்டுமே பரிந்துரைத்து இருப்பதாக கூறினார்.

வெள்ளி, 4 மே, 2018

"ஹே பையா!!! எங்கே போற?".. டாக்டர் நார்த் இண்டியன் சர்மா. ரொம்ப ஆச்சாரமானவர்".

கிளிமூக்கு அரக்கன் : நீட் விசயத்தில் பார்ப்பன பாஜக / அடிமை அதிமுக ஆதிக்கத்தை முறியடிக்காவிட்டால் என்ன நடக்கும் :-
அரியலூர் அரசு மருத்துவமனை - 10/4/2025
பிரபாகரன் மருத்துவத்திற்காக செல்கிறார். அவரைத் தடுத்த வாசலில் உள்ள ரங்கராஜ் பாண்டே அசப்பில் இருக்கும் பிஹாரி வாட்ச்மேன்.
"ஹே பையா!!! எங்கே போற?"
"டாக்டரைப் பார்க்க போறேன்"
"அதுக்கு இப்டியே போகக்கூடாது. சட்டையை கழட்டிட்டு தான் போகனும்"
"மருத்துவமனையில எதுக்கு சட்டையை கழட்டனும்?"
"உடம்புல த்ரெட் இருந்தா கிட்ட போய் பார்க்கலாம் இல்லனா தூரமா நின்னு பார்த்துட்டு வந்துடனும்".
"இது என்னடா புது ரூல்"
"டாக்டர் நார்த் இண்டியன் சர்மா. ரொம்ப ஆச்சாரமானவர்".
"டேய் இது சமூகநீதி வளர்ந்த இடம்டா."
"இந்தா கிழக்கு பதிப்பகம் போட்டிருக்க 30நாளில் இந்தி புக்கை வாங்கிட்டு போ. டாக்டருக்கு தமிழ் தெரியாது"
"இங்கிலிஷாவது வருமா"
"மிஷனரி ஏஜேண்டா நீ, கிறிஸ்டியன் லாங்குவேஜ் கேக்குற, உனக்கு ட்ரீட்மெண்டே கிடையாது ஓடிடு"

நீட் பயிற்சி மையங்கள்... கோழிப் பண்ணைகள் ஒரு நீட் பயிற்சி மையத்தோடு கூட்டணி அமைத்தார்கள்.

Shankar A : சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதுபவர்களுக்குத் தெரியும். நேர்முகத்
Click to see bigger
தேர்வுக்கு சிறந்த பயிற்சி நிலையம் டெல்லியில் வாஜிராம் என்று சொல்லுவார்கள்.
சில மாதங்கள் முன்பு வரை, க்ரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு சிறந்த நிலையம், அப்போல்லோ மையம் என்பது தேர்வாளர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த நிலையம், சைதை துரைசாமியின் பினாமி நிறுவனம்.
தற்போது, தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 39 மட்டுமே. இவர்கள் அனைவரும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்.
தனியார் பள்ளி மாணவர்களின் கதையே வேறு. அவர்களில் ஒருவர் பாக்கியில்லாமல், அத்தனை பேரும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவர்களே.
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் வரை, நாமக்கல்லில், கோழிப் பண்ணைகள் போல பள்ளி நடத்தி வந்தவர்கள், ப்ளஸ் ஒன் பாடத்தையே கற்றுக் கொடுக்காமல், இரண்டு வருடங்கள், ப்ளஸ் டூ பாடத்தை விடாமல் நடத்தி, மாணவர்களை 1150க்கு மேல் மதிப்பெண் பெற வைத்து, அரசு மருத்துவக் கல்லூரிகளின் அத்தனை இடங்களையும் ஆக்ரமிப்பார்கள்.
நீட் தேர்வு இந்தக் கோழிப் பண்ணைகளுக்கு பெரிய ஆப்பு வைத்தது. கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வந்தவர்கள், இழந்த தங்கள் வருமானத்தை அத்தனை எளிதில் தியாகம் செய்து விடுவார்களா என்ன ?
இவர்களுக்கு வாராது வந்த மாமணிதான், நீட் பயிற்சி மையங்கள். இந்த தனியார் கோழிப் பண்ணைகள், அத்தனையும், ஒரு நீட் பயிற்சி மையத்தோடு கூட்டணி அமைத்தார்கள். இதிலும் சில கில்லாடி கோழிப் பண்ணை உரிமையாளர்கள், தாங்களே நீட் பயிற்சி மையத்தை தொடங்கினார்கள்.

NEET.. 5500 தமிழ்நாட்டு மாணவர்களும் 10000 மேற்பட்ட பெற்றோர்களும் வெளிமாநிலங்களுக்கு ...

Any #NEET (6/5/18) going student near sathyamangalam having centres in Kerala can use my car (4 students can travel comfortably) travel for free..I shall arrange driver too... No fuel charges needed...Pls pass this msg for needy poor students.. #WA DR.T.R.SUDHARSAN 9659837577
 
Troll Trousers 2.0 :· இதோ, விருப்பம் இருந்தா போயி எழுதுங்க, இல்லேன்னா 5500
தமிழ்நாட்டு மாணவர்களும் அரியலூர் அனிதா மாதிரி தூக்கு மாட்டி சாவுங்கன்னு நேரடியாகவே சொல்லிட்டானுங்க காவி மத்திய அரசும், அடிமை அதிமுக அரசும். இனிமேல், இந்த இரண்டு கேடுகெட்ட அரசுகளுக்கும் கருமாதி பண்ணக்கூடிய நாளை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.!
Vijaya Rajan : தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத அயல் மாநிலங்களுக்கு வரும் மாணவ மாணவியருக்கு அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்று தங்கும் வசதி,உணவு ஏற்பாடு செய்து கொடுத்து ,சென்டர்செல்லும் வழியை காட்டி ,பின்னர் அவர்களை வீடு திரும்ப உதவி செய்து தரும்படி வந்தாரை எல்லாம்  வாழவைத்த தமிழர்கள் சார்பில் இன்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
Karuppu Neelakandan :சென்னை சவுகார் பேட்டையை சுற்றி தனிச்சுற்றுச்சுவர் (Compound wall) கட்டிக்கொள்ள தமிழகத்தை சுரண்டிக்கொழுத்துக் கொண்டிருக்கும் மார்வாரிகளும் குஜராத்தி சேட்டுகளும் அதிகாரத் துணையோடு அனுமதிக் கேட்டுக்கொண்டிருக்க, நமது தலித்/பி.ப./ சிறும்பான்மையின பிள்ளைகள் ராஜஸ்தானுக்கு நீட் எழுதப் போகணுமாம் ரெண்டுத் திருட்டுப் பயல்களும் உதவி செய்வானுங்களாம்..... டேய் ஊர்ல ஒதைப்பட்டுதான் சாவிங்க போல....

சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன் போராட்டம் .. வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்.

tamiloneindia :சென்னை: தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. நாளை மறுநாள் நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்படாததால் எஞ்சிய மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு மையம் கூடுதலாக அமைக்கப்படாதததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினரும் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேல்முருகன் :கர்நாடக வாகனங்களைச் சிறை பிடிப்போம்..

மின்னம்பலம்: ‘உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி கர்நாடக அரசு
தமிழகத்துக்கு நான்கு டிஎம்சி காவிரி நீரைத் திறந்து விடாதபட்சத்தில், தமிழகத்துக்கு வரும் கர்நாடக வாகனங்களைச் சிறை பிடிப்போம்’ எனத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நேற்று (மே 3) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மேலும் கால அவகாசம் கோரியது மத்திய அரசு. இதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அரசியல் காரணம் காட்டி கால அவகாசம் கோரக் கூடாது. இந்த மாதம் வழங்க வேண்டிய நான்கு டிஎம்சி நீரைத் தமிழகத்துக்குத் திறந்துவிட அறிவுறுத்தியது.

ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி : சிறுமி உயிரிழப்பு!

ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி : சிறுமி உயிரிழப்பு!மின்னம்பலம் :ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி உயிரிழந்ததையடுத்து உடலை வாங்காமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கோபி - லோகேஸ்வரி தம்பதியினரின் மகள் தனிஷ்கா(5). கொளத்தூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். அவருக்கு 5 வயதில் போட வேண்டிய அம்மை தடுப்பூசி போடுவதற்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கடந்த 2 ஆம் தேதி பெற்றோர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

கர்நாடகா தொகுதியின் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் l இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர்

Karnataka election: Polls at Jayanagar constituency likely to be postponed
மாலைமலர் :பெங்களூர்: கர்நாடக மாநிலம்
ஜெயநகர் தொகுதிக்கான வாக்கெடுப்பு மட்டும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜெயநகரில் பாஜக அறிவித்து இருந்த வேட்பாளர் மரணம் அடைந்து உள்ளதால், தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஜெயநகரில் இருந்து பாஜக கட்சிக்காக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வானவர் விஜயகுமார். தற்போது அந்த பகுதியின் எம்எல்ஏவாக அவர் இருக்கிறார். இந்த நிலையில் அதே தொகுதியில் தேர்தலில் 3வது முறையாக பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் நேற்று ஜெயநகரில் 4வது பிளாக்கில் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அதிகாலை 1 மணிக்கு மரணம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த தொகுதியில் பாஜக கட்சி இனி போட்டியிட முடியாது. வேட்பாளர் பதிவிற்கான காலக்கெடு எப்போதோ முடிவடைந்துவிட்டது. இதனால் பாஜக புதிய வேட்பாளரை அந்த தொகுதிக்கு அறிவிக்க முடியாது. பாஜக எந்த கூட்டணியிலும் இல்லை என்பதால் பிற வேட்பாளர்களையும் ஆதரிக்க முடியாது.

மன்சூர் அலிகான் : விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது

எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான் ஆவேச பேச்சு
maalaimalar.com :சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். சேலம்: சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர்அலிகான் நேற்று கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரிக்கு வந்தார். அங்குள்ள பரிசலில் சென்று ஏரியை சுற்றிப்பார்த்தார். பின்னர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர் மரக்கன்றுகளை நட்டார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் மத்திய, மாநில அரசுகள் இவற்றை செயல்படுத்தக்கூடாது. மேலும் அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன்.

உபி ராஜஸ்தான் புழுதி புயல்.. 103 பேர் மரணம் .. மின்கம்பங்கள் சாய்ந்து மரங்கள் வீழ்ந்து ...

புழுதி புயல்,Storm,Uttar Pradesh,Weather,உத்தரபிரதேசம்,புயல்,மழை,வானிலைஉ.பி., ராஜஸ்தானை புரட்டியெடுத்தது புழுதி புயல் பல இடங்களில் மின் கம்பம், மரங்கள் சாய்ந்து பாதிப்பு தினமலர்: புதுடில்லி : உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று முன்தினம் இரவு வீசிய, பயங்கரமான புழுதிப் புயலுக்கு, 103 பேர் பலியாகினர். ஏராளமான வீடுகள் சேதம் அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், பல மாவட்டங்களில், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு, முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ராஜஸ்தான், உ.பி., உட்பட வட மாநிலங்கள் முழுவதும், கடுமையான வெயிலால், மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அனல் காற்று வீசியதால், மக்கள் வீடுகளை விட்டு, வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்நிலையில், உ.பி., ராஜஸ்தான், டில்லி, பஞ்சாப், ம.பி., ஆகிய மாநிலங்களில், நேற்று முன்தினம் இரவு, திடீரென மழை பெய்ய துவங்கியது.

ராமநாதபுரத்தில் தலித் வீட்டில் நிர்மலா சீதாராமனுக்கு வாழை இலை ..

Troll Trousers 2.0 :இப்டியெல்லாம் மானங்கெட்டு போய்தான் இந்த தமிழிசை சௌந்தரராஜன் வாழனுமா? பாப்பாத்திக்கு மட்டும் வாழை இழை... தமிழிசைக்கு சில்வர் தட்டு....
Nirmala Sitharaman Visits Dalit Houses tamil.oneindia.com/authors/mathi. ; ராமநாதபுரம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்கி, சாப்பிட்டு மத்திய அரசு நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஆந்திராவில் செட்டிலானவர் நிர்மலா சீதாராமன். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனால் காவிரி நதிநீர் பிரச்சனையில் தன்னை ஒரு கன்னடராகவே நினைத்துக் கொண்டு கர்நாடகா எம்.பி.க்களுடன் இணைந்து செயல்படுகிறவர். காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் சொன்னதால் தமிழகத்தில் நேற்று கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் நிர்மலா.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர் கலையூர் தலித் கிராமத்தில் இரவு தங்கினார்.

ஸ்டாலின்: நீட் தேர்வு முடிவினை உடனடியாக கைவிட வேண்டும்

தினத்தந்தி :ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம்
என்ற முடிவினை உடனடியாக கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று, மாநில உரிமைகளின் மீது தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. மத்திய அரசு அறிவித்து, அதை அ.தி.மு.க. அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவக்கல்விகளில் நீட் நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றமே ஒருமனதாக மசோதா நிறைவேற்றி, அதை ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தும், அ.தி.மு.க. அரசு இரட்டைவேடம் போட்டு இப்படி ஒப்புதல் வழங்கியிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜஸ்தான் நீட் தேர்வுக்கு தமிழக ..... தமிழ் மாணவர்களை குறி வைத்து தாக்கும் மத்தியரசு?

Arunachalam sivakumar: நீட் தேர்வு மே 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
இனி முன் பதிவு ரயில் பயணம் சாத்தியமில்லை.
இன்றைய நிலையில் விமானக்கட்டணம்: ரூ.18000/-
இருவருக்கு ரூ.36000/-
மிக குறைந்தபட்ச தங்கும் செலவு: ரூ.2000/- (2 நாட்களுக்கு)
உணவு - ரூ.1000/-
உள்ளூர் போக்குவரத்து - ரூ.1000/-

மொத்த செலவு - ரூ.40000/-
உங்களை விடுங்கள், உங்கள் உறவுகளில் எத்தனை பேரால் இந்த பணம் செலவு செய்ய முடியும்?
முன்பதிவு செய்தவர்கள் 2200 கிமீ பயணம் செய்ய வேண்டும்.
36 மணி நேர தொடர் பயணம்.
என்ன தான் புத்திசாலியாகயிருந்தாலும் உங்கள் குழந்தைக்கு இந்த பயணம் திணிக்கப்படுவதை ஏற்பீர்களா?

திடீர் கோடீஸ்வரனான மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்... அம்பானிகளுக்கு பலத்த போட்டியாளர்?

savukkuonline.com: போர் தொடங்கட்டும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைப் போல, மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் இன்று முதல் வெளியிடப்படுகின்றன.  கூடுமான வரை, மொழி நடை உறுத்தாமல், எளிய தமிழில் கட்டுரைகளை தருவதற்கு முயன்றுள்ளோம்.   குறைகளையும், நிறைகளையும் சுட்டிக் காட்டவும்.
எங்களது இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவு மட்டுமே உத்வேகம், பலம், ஊக்கம் எல்லாமும்.  உங்கள் கருத்துக்களை, சமூக வலைத்தளங்களிலும், இந்தத் தளத்திலும் தாராளமாக வழங்குங்கள். இக்கட்டுரைகளின் இணைப்பை பகிருங்கள்.   இந்த தரவுகளை பலரிடம் கொண்டு சேர்ப்பது, நம் அனைவரது கடமை.
எங்கள் பிழைகளையும், குறைகளையும் திருத்திக் கொள்ள திறந்த மனதுடன் உள்ளோம்.    உங்கள் ஆதரவு மட்டுமே எங்களுக்கான ஊக்கம்.
#PackUpModi தொடரின் முதல் கட்டுரையை உங்களுக்கு வழங்குவதில் சவுக்கு பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.

தமிழ் மாணவர்களுக்கு மட்டுமே வெளிமாநில நீட் தேர்வு மையம் .. மத்திய அரசின் மாநில வெளியுறவு கொள்கை?.. தமிழ்நாடு தனிநாடா?

விகடன்:  இரா.தமிழ்க்கனல்: நீட் தேர்வையே முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும்
எனப் போராடிவரும் தமிழக மாணவர்களுக்கு, வெளி மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள மையங்களில் தாம் தேர்வை எழுதியாக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று ஆணை இட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மாநில உரிமையும் சமூக நீதியும் பறிக்கப்பட்டுள்ளது என்றும் மாணவர்களுக்குக் கடும் சிரமங்களைக்கூட உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தலைவர்களின் கருத்துகள்:
எல்லாத் தரப்பிலும் இருந்தும் சமூக அநீதி - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
``தமிழ்நாட்டு மாணவர்கள் 90 ஆயிரம் பேர் தேர்வு எழுத, தமிழ்நாட்டில் மையங்கள் அமைக்க முடியாது; மற்ற வெளிமாநிலங்களுக்குத்தான் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது சமூகநீதிக்கு விரோதமான எவ்வளவு பெரிய அநீதித் தீர்ப்பு? இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் வழங்கவும் – கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம்

விகடன் : மே மாதத்துக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீர் வழங்க வேண்டும்
என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆணையை மீறும்பட்சத்தில் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நீர்ப் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், காவிரி வழக்கில் வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விரைவு திட்டம் தயாராக இருக்கிறது. அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது.

வியாழன், 3 மே, 2018

பாமக ஒருபுறம் திமுகவை திட்டி அறிக்கை ... மறுபுறம் கூட்டணிக்கு தூது ..

minnambalam : “மின்னம்பலத்தின் மதியம் 1 மணி பதிப்பில், ‘திமுகவுடன்
கூட்டணி கிடையாது’ என்ற தலைப்பில் முதல் செய்தியாக வெளியாகியிருந்த பாமக மாநிலத் துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் அறிக்கையை வாசித்தேன். அந்த அறிக்கையின் பின்னணி பற்றி சொல்வதற்கு முன்பு, ஏப்ரல் 26ஆம், தேதி டிஜிட்டல் திண்ணையில் நான் சொன்ன தகவலின் ஒரு பகுதியை நினைவுபடுத்துகிறேன்.
’தனித்துப் போட்டியிட்டு தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியை இனி பிடிக்க முடியாது என்பது அன்புமணிக்கும் தெரியும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி என்பதுதான் சரியாக இருக்கும் என அன்புமணி வெளிப்படையாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறார். அதில் அடுத்த கட்டமாக, துரைமுருகனிடம் இது சம்பந்தமாகவும் பேசியிருக்கிறார்கள். ‘நான் தளபதிகிட்ட பேசிட்டு சொல்றேன்..’ என துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.
கூட்டணிக்குள் பாமக வர ரெடியாக இருக்கிறது என்ற தகவல் துரைமுருகன் மூலமாக ஸ்டாலின் கவனத்துக்கும் போயிருக்கிறது. ‘அவங்க அப்பா தினமும் ஒரு அறிக்கை விட்டு நம்மை திட்டி தீர்த்துட்டு இருக்காரு. இதுல எங்கே கூட்டணிக்கு வருவாங்க?’ என்று கேட்டாராம் ஸ்டாலின்.

தேசிய திரைப்பட விருது விழாவை 60 பேர் புறக்கணித்தனர் ... ஸ்மிருதி இரானி கையால் வாங்குவதை ஏற்கமுடியாது

- Oneindia Tamil    டெல்லி: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த கலைஞர்களின் இருக்கைகளை டெல்லி விஞ்ஞான் பவனில் இருந்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நீக்கியது. 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.  இந்த விழாவில் விருதுக்கு தேர்வான கலைஞர்கள் 11 பேருக்கும் மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
 இதற்கு கண்டனம் தெரிவித்து 60-க்கும் மேற்பட்டோர் விழாவை புறக்கணிக்கப் போவதாக கூறி டெல்லி அசோகா ஹோட்டலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இந்த விழா விஞ்ஞான் பவனில் தொடங்கியது. விருதாளர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார்.
இந்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து விருதுகளை வாங்க மறுத்து விழாவை புறக்கணித்த திரைக் கலைஞர்களுக்கான இருக்கைகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.

மோடி : கர்நாடக பெண்ணை பாதுகாப்பு அமைச்சராக்கி உள்ளேன் ! கர்நாடகா தலையில் தமிழ்நாட்டு நிர்மலா ...

மோடி தனது குஜராத் உள்வட்டத்தில் இருந்த நிர்மலாவை கர்நாடகா பாஜக எம் எல் ஏக்களை கொண்டு  ராஜ்யசபாவுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு அமைச்சராகவும் வைத்துள்ளார் . இதனால் கர்நாடகா பாஜக  ஏற்கனவே புழுங்கி தவிக்கையில் அவரை வேறு கர்நாடகாவை சேர்ந்தவர் என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சி உள்ளார்
Shyamsundar - Oneindia T பெங்களூர்: கர்நாடகாவில் பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார். 
நிர்மலா சீதாராமனை கன்னட பெண் என்று கூறியது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல்   நடக்க உள்ளது.
Kannadigas trolling PM Modi as he said that Nirmala Seetharaman a Kannadiga in campaign இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது. பிரதமர் மோடியும் கடந்த இரண்டு நாட்களாக அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடகாவில் பல்லாரி தொகுதியில் இன்று பிரச்சாரம் செய்த மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றி தவறான தகவல்களை பேசி சிக்கலுக்குள்ளாகி இருக்கிறார்.

கர்நாடகா அணைகளில் திறந்து விடும் அளவுக்கு போதிய தண்ணீர் இல்லை .. கர்நாடகம் அறிவிப்பு

தினத்தந்தி: கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்கும் அளவிற்கு போதிய நீர் இல்லை, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டம். புதுடெல்லி- காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில்  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
காவிரி வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.வி. சண்முகம் வருகை தந்துள்ளார்.  அதிமுக எம்பிக்கள் நவநீதகிருஷ்ணன், சுந்தரம், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் வருகை தந்து உள்ளனர். காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது. வழக்கு தொடங்கியதும் மத்திய அரசு சார்பில்  காவிரி வழக்கில் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டில்  கால அவகாசம் கேட்டு உள்ளது.
மேலும் வரைவு திட்டம் தயாராகி விட்டது. கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஓப்புதல் பெற முடியவில்லை என தெரிவித்து உள்ளது. தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகவிற்கு  சுப்ரீம் கோர்ட் உத்தரவு  பிறப்பித்து உள்ளது. மேலும்  கர்நாடகா உத்தரவை மீறினால்  கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்  என சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

காவிரி ... உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு மேலும் இருவாரம் கால அவகாசம் அளித்துள்ளது

தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற அரியலூர் விவசாயி தட்சிணாமூர்த்தி. | படம்: வி.வி.கிருஷ்ணன்.- ஆர்.ஷபிமுன்னா THE HINDU TAMIL : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர். இதற்காக, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் தமிழகத்தில் இருந்து டெல்லி வந்திருந்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் மீதான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை எதிர்பார்த்து தமிழகத்தில் இருந்து சில விவசாயக் குழுவினர் டெல்லி வந்திருந்தனர். உச்ச நீதிமன்றத்தின் வளாகத்தினுள் காத்திருந்தவர்கள், தங்களுக்கு சாதகமான உத்தரவு வராததால் அதிருப்தி அடைந்தனர். இதனால், திடீர் என எவரும் எதிர்பாராத வகையில் உச்ச நீதிமன்ற வளாகத்தினுள் போராட்டம் நடத்தினர்.