பாலி:உலக வர்த்தக மாநாட்டில் வேளாண் உற்பத்தி பொருட்கள்
வர்த்தகத்துக்கு இந்தியாவை தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் எதிர்ப்பு
தெரிவித்ததை அடுத்து மாநாடு படுதோல்வி அடைந்தது.உலக வர்த்தக கூட்டமைப்பு
கடந்த 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது முதல் பல்வேறு
சந்தர்ப்பங்களில் இந்த நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து உலக வர்த்தக
விதிமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றனர். ஆனால், ஒரு முறை கூட மிகப்
பெரிய அளவில் ஒருங்கிணைந்த ஒப்பந்தம் எதையும் நிறைவேற்ற இயலவில்லை.
இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உலக வர்த்த அமைப்பு உறுப்பு
நாடுகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் 159 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சனி, 7 டிசம்பர், 2013
சங்கரராமன் கொலை வழக்கு! ‘நக்கீரன்’ செய்தி
நக்கீரன்’செய்தியை தமிழக அரசின் பார்வைக்கு வைக்கிறோம்! கி.வீரமணி அறிக்கை!
காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலேயே அதன் முக்கிய பக்தர்களில் ஒருவரான சங்கரராமன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அக்கொலைபற்றி
முதலில் ‘போலிக் குற்றவாளிகளை’ கைது செய்து, பிறகு உண்மையான குற்றவாளிகள்
இவர்கள்தான் என்று கண்டறிந்து காவல்துறையின் ஆழ்ந்த புலன்
விசாரணைக்குப்பின், காஞ்சி மடாதிபதிகள் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரும்,
அவரது அடுத்த சீடரான விஜேயேந்திரரும், இதில் குற்றவாளி ஒன்று, குற்றவாளி
இரண்டு என்று கைது செய்யப்பட்டு மற்றும் பலருமாக 25 பேர்மீது குற்றப்
பத்திரிக்கை தரப்பட்டது.
கொலைக் குற்றத்திற்காக, இந்த இரண்டு சங்கராச்சாரியார்களும் சிறையில் சில காலம் இருந்து, பிணையில் (ஜாமீனில்) வெளி வந்தனர்!
இந்து
அறநிலையப் பாதுகாப்புத்துறை, மடங்களையும் கோயில்களையும் கண்காணிக்கும்
துறை என்ற நிலையில், இவ்விருவரும் மடாலயப் பொறுப்புகளிலிருந்து
விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்; அது ஏனோ நடைபெறவில்லை!
காஞ்சி மடத்தின் சொத்து 6,000 கோடி (1.2 பில்லியன் டாலர்கள்) காக்க . . . காக்க. . .கிரிமினல் காக்க”
திருவாடுதுறைக்கு 1,500 கோடி, மதுரை ஆதீனம் 1,000 கோடியாம்! சமீபத்தில் முளைத்து வளர்ந்த மாதா அம்ருதானந்தா மாயிக்கு 1,600 கோடியாம்! இன்னும் பங்காரு அடிகள், சாயிபாபா, கல்கி, வைணவ ஜீயர்கள், ரவிசங்கர்ஜி, சிவசங்கர் பாபா, பலவகையான ‘ஆனந்தா’க்கள் இருக்கிறார்கள். சேலம் குட்டி சாமியார் மூக்கு வெளுப்பதற்குள் 300 கோடியாவது சேர்ந்து விடுவார்.
2004 – ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை)
ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி, சங்கரராம அய்யர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முதல் குற்றவாளியாகக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லாப் பண்டிகை நாட்களிலும் அதிகாலையிலேயே தொலைக்காட்சியில் தோன்றி, தனது ஊத்தைத் திருவாய் மலர்ந்து அருளும் இந்தக் கபட சந்நியாசி ஒரு “கிரிமினல்” என்பதைத் தமிழக அரசே பிரகடனம் செய்திருக்கிறது.இ. பி. கோ.-302 (கொலை), 201 (சாட்சி/குற்றவாளியை மறைப்பது), 205 (குற்றத்தை மறைக்க ஆள்மாறாட்டம் செய்தல்), 213 (குற்றத்தை மறைக்கப் பணம் தருதல்), 34 (கிரிமினல் நோக்கத்துக்காகக் கூடிச் செயல்படுதல்), 120-பி (கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல்) ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்த ஜெகத்குரு.
கொலைக்கு முன்னும் பின்னும் கூலிப்படையுடன் சங்கராச் சாரி நடத்திய செல்ஃபோன் உரையாடல், சங்கரமடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஜெகத்குரு தனது பிரசாதமாகக் கொலைகாரர்களுக்கு வழங்கிய பணம், பொய்க் குற்றவாளிகளுக்குக் கொடுத்த பணம், சங்கராச்சாரிக்கு கொலைவெறியைத் தூண்டிய சங்கரராமனின் இறுதி எச்சரிக்கைக் கடிதம் போன்ற பல அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.
கொலை நடந்தவுடனேயே இதில் சங்கராச்சாரியின் தொடர்பை சூசகமாக அம்பலப்படுத்தியது ‘நக்கீரன்’. தன் மீதான சந்தேகம் வலுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்து கொண்டு அதைத் திசை திருப்புவதற்காக சங்கராச்சாரி “நக்கீரன்” இதழுக்கு அளித்த பேட்டி சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்திருந்தது.
“என்னுடைய பக்தர்கள் யாரேனும் சங்கரராமனைக் கொலை செய்திருக்கக் கூடும்” என்று ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் பேட்டியில் திமிராகவும் அலட்சியமாகவும் கூறியிருக்கிறார் சங்கராச்சாரி. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்றே சங்கராச்சாரியை போலீசு கைது செய்திருக்க வேண்டும்.
இந்தியாவில் பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் அப்புறம்தான் அத்தனை தலைகளும்
வெல்ல முடியாத வீரம்:ஆய்வாளர் அறிஞர் தலைவர் டாக்டர் அம்பேத்கர்
வே.மதிமாறன்
தன் கொள்கையை தன்னுடைய ஆதரவாளர்களிடமும்,
தன்னைப் போலவே கொள்கையாளர்களிடமும் திரும்ப திரும்ப சொல்வதும் கைதட்டு
வாங்குவதும் பெரிய விசயமல்ல, அதன் பயன் பேசுகிறவர்களுக்கு மட்டும்தான்.
தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களிடம் அதைப்
பற்றி பேசுவதற்கும் அவர்களிடம் விவாதிப்பதற்கும் நேர்மையும் துணிச்சலும்
எதிர்பார்ப்பற்ற அர்பணிப்பும் வேண்டும்.
அப்படி செயல் பட்ட தலைவர்கள் இந்திய அளவில் டாக்டர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் தான்.
தன் கொள்கைகளுக்காக செருப்பு வீச்சை
சந்தித்தப் பிறகும் அவமானப்படுத்துவார்கள் என்று தெரிந்தே, இன்னும்
தீவிரமாக செயல்பட்டார் பெரியார்.
டாக்டர் அம்பேத்கரும், தன் கொள்கையின்
எதிரி யாரோ அவர்களிடம் நேரடியாக மோதுவார். எந்த செல்வாக்கான பின்னணியும்
இல்லாமல் தன் அறிவின் தயவிலும் தன் கொள்கையின் உறுதியிலும் அந்த துணிச்சல்
அவரிடம் நிரம்பி வழிந்தது.
அதிகார வர்கத்திடமே நேருக்கு நேர் அதைச்
செய்தார். வெள்ளை ஆளும் வர்கத்திடம் மட்டுமல்ல, காந்தி போன்ற மிகப் பெரிய
ஆளுமைகளை எதிர்த்தும், விவாதங்களில் ‘ரணகள’ படுத்தியிருக்கிறார்.
வட்டமேசை மாநாட்டில் அவர் கையாண்ட விவாத முறை நினைத்துப் பார்த்தாலே… சிலிர்க்கிறது.
மிகைப்படுத்தப்பட்ட சினிமா கதாநாயகனைவிட பல மடங்கு சக்தி மிக்க ஒரு நபராகவே அதில் அவர் காட்சித் தருகிறார்.
பாலிவுட்டில் பிரபு தேவாவை திட்டித் தீர்க்கும் விமர்சகர்கள்!
இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா..., இது படமல்ல - பெரும்
தலைவலி..., இதுக்கு மார்க்கே கிடையாது... வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம்,
இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா இயக்கத்தில்
நேற்று வெளியான ஆர் ராஜ்குமார்.
ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்க, பிரபு தேவா இயக்கியுள்ள படம் ஆர்
ராஜ்குமார்.
பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும்
விமர்சகர்கள்!
நேற்று உலகமெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு, கடுமையான விமர்சனங்கள்
வந்துள்ளன.
இந்தப் படத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது என கூறியுள்ள ஒன்இந்தியா,
ஒன்றரை ஸ்டார்கள் தந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரசோ, 2013-ம் ஆண்டின் படுமோசமான திரைப்படம் என்றால் அது
ஆர் ராஜ்குமார்தான் என்று காய்ச்சியுள்ளதோடு, ஜீரோ மதிப்பெண்களை
வழங்கியுள்ளது.
பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும்
விமர்சகர்கள்!
உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மட்டுமே இந்த மாதிரி படங்களைப்
பார்க்க முடியும். வேஸ்ட் படம், என திட்டியுள்ளது ஜீ நியூஸ்.
பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளன்டர் ஆர் ராஜ்குமார் என குறிப்பிட்டுள்ளது
இந்துஸ்தான் டைம்ஸ்.
பாலிவுட்டில் படு ப்ளாப்பான பிரபு தேவா படம்... திட்டித் தீர்க்கும்
விமர்சகர்கள்!
என்டிடிவி இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனத்தைத் தந்துள்ளதோடு, ஒரு
ஸ்டார் மட்டுமே வழங்கியுள்ளது.
சமீப நாட்களில் ஒட்டு மொத்த மீடியாவும் கூட்டாக கண்ட மேனிக்குத்
திட்டியுள்ள படம் என்றால் அது அநேகமாக ஆர் ராஜ்குமாராகத்தான் இருக்கும்.
அவ்வளவு மோசமாவா இருக்கு?!
tamil.oneindia.in/
tamil.oneindia.in/
இந்தியாவின் கலாச்சார உயரடுக்கின் பெண் வெறுப்பு
(கவிதா பானோட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)
சென்ற வாரம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்தேறி இருக்கிறது. அதிகாரமும் செல்வாக்கும் மிக்க தனது மேலதிகாரியை எதிர்த்துக் குரல் எழுப்பிய ஒரு பெண்ணின் துணிச்சலின் விளைவாக அதிகம் படித்த நவநாகரிகமான, நகர மயமாகிய, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கலாசாரத்தைத் தழுவிய வர்க்கம் முதன் முறையாக, தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ளும்படி, வெகுகாலமாக, தான் அடைகாத்து வரும் ஆணாதிக்கத்தையும் பெண்கள் மீதான காழ்ப்பையும் எதிர் கொள்ள நேரிட்டிருக்கிறது.பல ஆண்டுகளாக இதே வர்க்கம் தான், தங்களை விட இளைத்த வர்க்கங்களிடையே நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையை – காவல் துறையினர், மத அடிப்படைவாதிகள், பண்படாத அரசியல்வாதிகள், உழைக்கும் வர்க்க புலம் பெயர் தொழிலாளி, அல்லது தெருவில் பெண்களிடம் வம்பிழுக்கும் காலிகள் – இவர்களையெல்லாம் ஓயாது கண்டித்தும், ஏளனம் செய்தும், தோலுரித்துக் காட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த உயர்ந்த வர்க்கத்தினரைச் சேர்ந்த ஆண்கள் ஒரு போதும் பெண்கள் மீதான தங்களது கண்ணோட்டத்தைச் சுயபரிசீலனை செய்து கொண்டதில்லை. போலவே இவ்வர்க்கத்தின் பெண்களும் இவர்களின் ஆணாதிக்கப் பார்வையைப் பல வழிகளில் அனுமதித்து வருவதோடல்லாமல், கண்டும் காணாமலும் செல்வதுமான தங்கள் குற்றத்தை உணர்ந்ததுமில்லை.
இந்தச் சம்பவமோ அதற்கு ஷோமா சௌத்ரியின் எதிர் வினையோ எனக்குச் சிறிதும் வியப்பளிக்கவில்லை. நான் பார்த்த வரை மிகவும் முற்போக்கான, பரந்த நோக்குள்ளதாகக் கருதப்படும் ஆங்கில ஊடகங்களிலும், கலை இலக்கிய உலகிலும் பெண்களைப் பற்றி மிகவும் பிரச்னைக்குரிய பார்வைகள் ஆழமாகப் பதிந்திருப்பதையும், அது குறித்து எந்த ஆணோ பெண்ணோ கேள்வி எழுப்பாமலிருப்பதையும் எப்போதோ கண்டு கொண்டேன்.
சல்மான் ருஷ்டி முதல் இந்தத் தலைமுறையைச் சார்ந்த சமித் பாசு, பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா வரை ஆண் எழுத்தாளர்களின் பலரது படைப்பில் இதைக் காணலாம். அவர்களது பெண் பாத்திரங்கள் (நாயகிகள்) பெரும்பாலும் பக்குவப்படாத கற்பனை மிஞ்சிய உருவங்களே ஒழிய முப்பரிமாணமும் கொண்ட பெண்களாக இருப்பதில்லை.
1 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் காயங்களுடன் மீட்பு 4 பேரிடம் விசாரணை
புதுச்சேரி:புதுவையில் ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட அடகு கடை அதிபரின் மகன் உயிரோடு மீட்கப்பட்டான். இதுதொடர்பாக காவலாளி உள்பட 4 பேரிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது.புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்தவர் மனீஷ்குமார் ஜெயின். அடகு கடை வைத்துள்ளார். இவரது மகன் நீரஞ்ஜெயின் (10). 4ம் வகுப்பு படிக்கிறான். இவனை ரூ.1 கோடி கேட்டு நேற்று முன்தினம் மர்ம கும்பல் காரில் கடத்தியது. பல கட்ட பேரம் நடந்த நிலையில் நேற்று மாலை திடீரென காமராஜர்நகர் - வாஞ்சிநாதன் வீதி சந்திப்பில் மாணவனை கடத்தல் கும்பல் விட்டு சென்றது. ரோட்டில் நின்ற சிறுவனை கேபிள் டிவி ஆபரேட்டர் ராஜி, மாஜி கவுன்சிலர் தமிழரசி மகள் சித்ரா ஆகியோர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரியை தாக்கிய குற்றவாளி கைது
பெங்களூருவில்
ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி ஜோதி உதய் என்பவரை துப்பாக்கியை காட்டி
மிரட்டி, அரிவாளால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து
சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த
சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யக்கோரி கர்நாடக மாநில அரசு
உத்தரவிட்டது. இதையடுத்து அம்மாநில போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க
தீவிர முயற்சி எடுத்து வந்தனர். குற்றவாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு
போலீசார் பரிசுத் தொகையும் அறிவித்திருந்தனர். குற்றவாளியின் புகைப்படத்தை
அனைத்து காவல்நிலையத்திற்கும் போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்தநிலையில்
அந்த குற்றவாளி தும்கூரில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் கர்நாடக
மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன
மத கலவரத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை: மத்திய அரசு அதிரடி
புதுடில்லி: 'வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா நிறைவேறினால், மத
கலவரங்களில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும்' என, மத்திய அரசு
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வகுப்புவாத வன்முறை சட்ட மசோதாவுக்கான வரைவுகளை, மத்திய அரசு, உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவில், சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, மத கலவரத்தில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மத கலவங்களை தூண்டும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான, வழக்கின் விசாரணையும், குற்றம் நடந்த மாநிலத்திலிருந்து, வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரஙகள் தெரிவித்தன.
முன் ஜாமின் கிடையாது:சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில்,"தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கும், முன் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யும் உரிமை இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar.com
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வகுப்புவாத வன்முறை சட்ட மசோதாவுக்கான வரைவுகளை, மத்திய அரசு, உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவில், சில முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, மத கலவரத்தில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மத கலவங்களை தூண்டும் வகையில் பிரசாரம் செய்வோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பான, வழக்கின் விசாரணையும், குற்றம் நடந்த மாநிலத்திலிருந்து, வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும். இவ்வாறு, மத்திய அரசு வட்டாரஙகள் தெரிவித்தன.
முன் ஜாமின் கிடையாது:சுப்ரீம் கோர்ட்டில், ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான, "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில்,"தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கும், முன் ஜாமின் கோரி, மனு தாக்கல் செய்யும் உரிமை இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamalar.com
Ex திமுக அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
டெல்லி: முன்னாள் திமுக அமைச்சர்கள் மூவர் சொத்துக்குவிப்பு வழக்கில்
இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு, மேல்முறையீட்டு மனுவை
தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்களுக்கு
உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 1996-2001 ஆண்டுகளில் நடந்த தி.மு.க. ஆட்சியின்போது,
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர்கள்
கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் மீது தமிழக அரசு வழக்கு
தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை,
முன்னாள் அமைச்சர்களை விடுவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு
மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஜே.எஸ்.கேகர் ஆகியோர்
கொண்ட பெஞ்ச், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றம்
சாட்டப்பட்ட கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி ஆகியோர் விளக்கம்
அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
வெள்ளி, 6 டிசம்பர், 2013
23 ஆண்டுகள் கழித்து மருத்துவமனை துப்புரவு பணியாளருக்கு நிரந்தர பணி ! ஏழைகளுக்கு நீதி என்பது வெகு தூரம்
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய மருத்துவமனை,
நெல்லிக்குப்பத்தில் உள்ளது. அந்த மருத்துவமனையின் துப்புரவு பணியாளராக
எம்.கிருஷ்ணவேணி (வயது 53) 1-12-89 அன்று பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில், நாள்
முழுவதும் நான் அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாற்றுகிறேன்.
மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்துவது எனது பணியாகும். எனது
பணி, பகுதி நேரப்பணியல்ல. ஆனால் 23 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனது பணியை
அரசு வரைமுறை செய்யவில்லை. இதுசம்பந்தமாக அரசுக்கு விண்ணப்பங்கள்
கொடுத்தும் அது கவனிக்கப்படவில்லை. எனவே எனது பணியை வரைமுறை செய்ய வேண்டும்
என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். 10 ஆண்டுகளுக்கும் மேல் அவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி இருப்பதால், கிருஷ்ணவேணியின் பணியை நான்கு வாரங்களுக்குள் வரைமுறை செய்ய வேண்டும் என்று 5-10-12 அன்று உத்தரவிட்டார்.
இந்த மனுவை நீதிபதி டி.ராஜா விசாரித்தார். 10 ஆண்டுகளுக்கும் மேல் அவர் அந்த மருத்துவமனையில் பணியாற்றி இருப்பதால், கிருஷ்ணவேணியின் பணியை நான்கு வாரங்களுக்குள் வரைமுறை செய்ய வேண்டும் என்று 5-10-12 அன்று உத்தரவிட்டார்.
நெல்சன் மண்டேலா! ஆபிரிக்காவில் ஒரு விடிவெள்ளி
ஜோகன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன்
மண்டேலா உடல்நலக் குறைவால் காலமானார் என்று அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி
ஜேக்கப் ஜுமா அறிவித்துள்ளார்.
நெல்சன் மண்டேலா.. 20ஆம் நூற்றாண்டின் விடுதலைக் குறியீடுகளில் ஒருவரு..
தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில்
இருந்தார். சிறையின் பெரும்பாலான காலத்தை ராபன் தீவில் சிறிய அறையில்
கழித்தார். தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா!
1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கா
குடியரசு மலர்ந்தது. பின்னர் நெல்சன் மண்டேலா 1994 ஆம் ஆண்டு
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.
எடியூரப்பாவுக்கு அழைப்பு: பாஜக மேலிடம் முடிவு!
கர்நாடக ஜனதா கட்சித் தலைவர் எடியூரப்பாவை பாஜகவில்
மீண்டும் சேரும்படி முறைப்படி அழைப்பு அனுப்ப அக் கட்சித் தலைவர் ராஜ்நாத்
சிங் முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார், கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தேசிய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் வியாழக்கிழமை தில்லி வந்தனர்.
அவர்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது அவர்கள் ராஜ்நாத் சிங்கிடம் கூறியது:
இது தொடர்பாக தில்லியில் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக பொதுச் செயலர் அனந்த் குமார், கர்நாடக பாஜக தலைவர் பிரஹலாத் ஜோஷி, மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, தேசிய செயற்குழு உறுப்பினர் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் வியாழக்கிழமை தில்லி வந்தனர்.
அவர்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். அப்போது அவர்கள் ராஜ்நாத் சிங்கிடம் கூறியது:
வதேராவின் புகழுக்கு கெம்கா களங்கம் விளைவித்து விட்டாராம் ! அசோக் கேம்காவுக்கு குற்றப்பத்திரிகை ! நீதிக்கு தண்டனை ?
சண்டிகார்,
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர்,
அரியானா மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் கொடுத்து
வாங்கி, பத்திரப்பதிவு துறையை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சம்பாதித்ததாக
ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா குற்றம் சாட்டினார். மேலும் ராபர்ட்
வதேராவுக்கும், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை
ரத்து செய்தார். இதனை அடுத்து அவர் அத்துறையில் இருந்து இடமாற்றம்
செய்யப்பட்டார். இதற்கு பாரதீய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தன.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அரியான மாநில காங்கிரஸ் அரசு ராபர்ட் வதேராவின் புகழுக்கு அசோம் மெக்கா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அரியானா அரசு, அசோம் மெக்காவிற்கு நேற்று மாலை 7 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அனுப்பியுள்ளது. நிர்வாக சீர்கேடு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரி அம்மாநில முதல்-மந்திரி பூபிந்தர் சிங் கோடா உத்தரவிட்டதை அடுத்து இரண்டு மாதங்களாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் சட்ட விரோதமாக ஒப்பந்ததை ரத்து செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 15 நாட்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அசோம் மெக்காவிற்கு அரசு உத்தரவிட்டுள்ளது
dailythanthi.com
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அரியான மாநில காங்கிரஸ் அரசு ராபர்ட் வதேராவின் புகழுக்கு அசோம் மெக்கா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
அரியானா அரசு, அசோம் மெக்காவிற்கு நேற்று மாலை 7 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அனுப்பியுள்ளது. நிர்வாக சீர்கேடு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரி அம்மாநில முதல்-மந்திரி பூபிந்தர் சிங் கோடா உத்தரவிட்டதை அடுத்து இரண்டு மாதங்களாக குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டது. அதில் சட்ட விரோதமாக ஒப்பந்ததை ரத்து செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 15 நாட்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அசோம் மெக்காவிற்கு அரசு உத்தரவிட்டுள்ளது
dailythanthi.com
ராயல தெலுங்கானா திட்டம் வாபஸ்: தனி தெலுங்கானா அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்
ஆந்திராவில் ‘ராயல தெலுங்கானா’ திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ராயல தெலுங்கானா
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து ‘தெலுங்கானா’ தனி மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய கமிட்டியும், அதைத்தொடர்ந்து மத்திய மந்திரிசபையும் முடிவு செய்தன. இதற்கு ஆந்திராவின் இதர பகுதிகளான கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் கர்நூல், அனந்தப்புரம் ஆகிய 2 மாவட்டங்களை தெலுங்கானாவுடன் சேர்த்து, ‘ராயல தெலுங்கானா’ என்ற தனி மாநிலமாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு தெலுங்கானா பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி.க்களும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
பாலில் கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
உத்தரபிரதேசம், மேற்கு
வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால்
குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்
கடந்த 2011ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை
செய்வது கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் அந்த மனுவில்
சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இந்த
மனுவை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட
அமர்வு விசாரித்து, பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை
விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள்
சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும்,
அவர்களுக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும்
அதிகபட்ச தண்டனையான 6 மாத சிறைத்தண்டனை போதாது என்றும் நீதிபதிகள் தங்கள்
தீர்ப்பில் கூறினர்.nakkheeran.i
தூங்கிக்கொண்டிருந்த 5 சிறுமிகள் சுட்டுக்கொலை ! சொத்து தகராறு
பீகார்
மாநிலம் கயா மாவட்டம் சோனாப் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 5 சிறுமிகள்
சுட்டுக்கொல்லப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு வியாழக்கிழமை காலை தகவல்
கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 5 சிறுமிகளின்
சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். சுட்டுக்கொல்லப்பட்ட
5 சிறுமிகளும் 5 வயதிலிருந்து 13 வயதுக்கு உட்பட்டவர்கள். நள்ளிரவில்
அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 5 சிறுமிகளும் 3 குடும்பங்களைச்
சேர்ந்தவர்கள்.
சொத்து
தகராறு ஒன்றில் இந்த மூன்று குடும்பத்தினர் மீது ஒருவர் போலீசில் புகார்
கொடுத்துள்ளார். இதனால் மூன்று குடும்பத்தினரும் தங்கள் பிள்ளைகளை ஒரே
வீட்டில் தங்க வைத்துவிட்டு தலைமறைவானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்து
புகார் கொடுத்தவர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பாரா அல்லது இருதரப்புக்கும்
வேண்டாதவர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்ற கோணத்தில் போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்nakkheeran.in
வியாழன், 5 டிசம்பர், 2013
ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை பறிப்பது யார்? தமிழ்நாட்டு மக்கள் வெற்றி பெறுவார்களா ? எமக்கு நம்பிக்கையில்லை
தருண் தேஜ்பால் :Shoma வின் சம்மதத்துடனேயே நடந்தது ! பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி நடக்கவில்லை
பனாஜி: சக பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி நடக்கவில்லை என்றும்
அவரது சம்மதத்துடனேயெ அனைத்தும் நடந்தது என்று டெஹல்கா முன்னாள் ஆசிரியர்
தருண் தேஜ்பால் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
கோவா ஹோட்டல் ஒன்றில் பெண் பத்திரிகையாளரிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டார்
தருண் தேஜ்பால் என்பது புகார். இதைத் தொடர்ந்து தருண் தேஜ்பால் கைது
செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
போலீஸ் கஸ்டடியில் தருண் தேஜ்பாலிடம் 2 முறை ஆண்மை பரிசோதனையும்
நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண் பத்திரிகையாளரிடம் தாம் அத்துமீறி
நடக்கவில்லை என்றும் இருவரது சம்மதத்துடனேயே எல்லாம் நடந்தது எனவும்
போலீசிடம் தருண் தேஜ்பால் கூறியுள்ளார்.
அத்துடன் விசாரணைக்கு தேஜ்பால் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிப்பதாகவும்
கோவா போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அப் பெண்ணிடம் பாலியல்
ரீதியாக தாம் அத்துமீறி நடக்கவில்லை என்பதையே தேஜ்பால் மீண்டும், மீண்டும்
வலியுறுத்துவதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
டெல்லி ஆம் ஆத்மி அரவிந்த் கேஜ்ரிவால்... அசாதாரணமான எழுச்சி... ஆச்சரியகரமான வளர்ச்சி!
டெல்லி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில், அன்னா ஹஸாரேவுடன் இணைந்து
போராட்டங்களை நடத்தி பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து
வந்து ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கி இன்று டெல்லி சட்டசபைக்குள்
நுழையப் போகும் அரவிந்த் கேஜ்ரிவாலின் கட்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு
பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தலி்ல கேஜ்ரிவாலின் கட்சிக்கு 17 இடங்கள் வரை
கிடைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
அனைத்தும் கூறியுள்ளன.
கேஜ்ரிவால் கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த வரவேற்பு அனைவரையும் திரும்பிப்
பார்க்க வைத்துள்ளது. இது நடந்தால் நிச்சயம் அது கேஜ்ரிவாலுக்கு அது
சாதனையான விஷயம்தான்
ஐந்து எக்ஸிட் போல்களில் கேஜ்ரிவால் கட்சிக்கு 17 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அதை விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தலைநகரை ஆண்டு
கொண்டிருக்கும், நாட்டின் முதுபெரும் கட்சியான காங்கிரஸுக்குச் சமமாக
நேற்று பிறந்த கேஜ்ரிவால் கட்சியும் வெற்றி பெறவுள்ளதாக கூறப்படுவதுதான்.
கல்விக் கொள்ளையன் வேல்டெக் ரங்கராஜனை கைது செய் !
துண்டுச் சீட்டுக் கூட கொடுக்காமல் பல லட்சங்களை
டொனேசன், கேபிடல் பீஸ், கட்டணம் என்ற பெயரில் மாணவர்களிடம் கொள்ளையடிக்கும்
பிரபலமான பொறியியல் கல்லூரிகளின் வரிசையில் இருப்பதுதான் ஆவடியில் உள்ள
வேல்டெக் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியின் தாளாளர் ரங்கராஜனை கல்வி
வள்ளல்களில் ஒருவராக சித்தரிக்கிறது அரசு. இந்த கல்வி வள்ளலின் யோக்கியதை
அவ்வப்போது வெளிவந்தாலும் அது ரங்கராஜனின் பணபலம், அதிகார பலத்தால் மூடி
மறைக்கப்படும்.
ஆனால் இப்போது பெண் பேராசிரியைகளை அடுத்தடுத்து இழிவுபடுத்தி – மிரட்டி சட்டவிரோத வேலைநீக்கம் செய்ததன் மூலம் வேல்டெக் ரங்கராஜனின் அட்டூழியங்களும், அராஜகங்களும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்காக உழைத்த பேராசிரியர்களை சட்டவிரோத வேலை நீக்கம் செய்துவிட்டு, சம்பளத்தையும், சான்றிதழ்களையும் தர மறுக்கும் வேல்டெக் ரங்கராஜனின் அயோக்கியத்தனங்களை சென்னை நகரம் முழுக்க சுவரொட்டி மூலம் நாறடித்து அக்கல்லூரி பாடம் புகட்டும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறது பு.மா.இ.மு. போராட்டம் தொடரும். vinavu.com
ஆனால் இப்போது பெண் பேராசிரியைகளை அடுத்தடுத்து இழிவுபடுத்தி – மிரட்டி சட்டவிரோத வேலைநீக்கம் செய்ததன் மூலம் வேல்டெக் ரங்கராஜனின் அட்டூழியங்களும், அராஜகங்களும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரிக்காக உழைத்த பேராசிரியர்களை சட்டவிரோத வேலை நீக்கம் செய்துவிட்டு, சம்பளத்தையும், சான்றிதழ்களையும் தர மறுக்கும் வேல்டெக் ரங்கராஜனின் அயோக்கியத்தனங்களை சென்னை நகரம் முழுக்க சுவரொட்டி மூலம் நாறடித்து அக்கல்லூரி பாடம் புகட்டும் போராட்டத்தை தொடங்கியிருக்கிறது பு.மா.இ.மு. போராட்டம் தொடரும். vinavu.com
ஆசாராம் பாபுவின் மகன் பிடிபட்டார் ! 6 செல்போன்… 32 சிம்கார்ட் சகிதம் 70 நாட்கள் ஒழித்திருந்தவரை அமுக்கிய போலீஸ்!!
சண்டிகர்: பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசராம்பாபுவின்
மகன் நாராயணசாய் செவ்வாய்கிழமை இரவு சண்டிகர் அருகே கைது செய்யப்பட்டார்.
எலியை பூனை துரத்துவதைப் போல டெல்லி - சண்டிகர் தேசிய நெடுஞ்சாலையில் 72
மணிநேரம் விரட்டிய போலீசார் நாராயண சாயை கைது செய்துள்ளனர். அப்போது அவர்
போர்டு எகோ ஸ்போர்ட் காரில் சிங் போல வேடமிட்டு சென்று கொண்டிருந்தனர்.
அவருக்கு சமையல் செய்ய ஒரு சிறுவனும் உடன் இருந்தான். கடந்த 2 மாதகாலமாக
போகும் வழியெங்கும் கார்களை மாற்றி உபயோகித்து வழியிலேயே சமைத்து
சாப்பிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளான்.
கடந்த அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த சகோதரிகள்,
ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம்
செய்ததாக காவல்துறையில் புகார் செய்தனர்.
சென்னை பள்ளிகளில் ஜனவரி 7 முதல் கண்காணிப்பு கேமரா
சென்னை பள்ளிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ஆம்
தேதிக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட
வேண்டும் என காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து விவரம்: சென்னையில் 153 அரசு உதவி பெறும் பள்ளிகள், 298
மெட்ரிக் பள்ளிகள், 50 சி.பி.எஸ்.சி. பள்ளிகள், 314 மாநகராட்சி பள்ளிகள் என
மொத்தம் 1,330 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 8 லட்சம்
மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சென்னையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளை பணத்துக்காகவும், முன் பகையின் காரணமாகவும், குடும்பப் பிரச்னைக்காகவும் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெறுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில பள்ளிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பதும் கடத்தலுக்கு ஏதுவாக உள்ளது என கருதப்படுகிறது.
சென்னையில் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளை பணத்துக்காகவும், முன் பகையின் காரணமாகவும், குடும்பப் பிரச்னைக்காகவும் கடத்தப்படும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெறுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் சில பள்ளிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருப்பதும் கடத்தலுக்கு ஏதுவாக உள்ளது என கருதப்படுகிறது.
நவீன சரஸ்வதி சபதம் ! லாஜிக்குகளை எல்லாம் கேலி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள் !
சித்த
மருத்துவரின் வாரிசு ஜெய். அவர் தன் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து
திருமணத்துக்காக காத்திருக்கிறார். அரசியல்வாதியின் மகன் சத்யன். அடுத்த
எம்.எல்.ஏவாக தயாராகி கொண்டிருக்கிறார். ராஜ்குமாருக்கு சினிமாவில் ஹீரோவாக
வேண்டும் என்கிற ஆசை. வெங்கட்பிரபுவின் அடுத்த படத்துக்கு தேர்வாகி
காத்திருக்கிறார். பெண் தாதாவின் கணவரான விடிவி கணேஷுக்கு மனைவியிடமிருந்து
விடுதலை வேண்டும். இந்த நால்வரும் நண்பர்கள். நால்வருக்கும் இப்படி
ஆளுக்கொரு கமிட்மென்ட் இருக்கிறது. இந்த நிலையில் ஜெய்யின் பேச்சிலர்
பார்ட்டியை கொண்டாட பாங்காக் போகிறார்கள். அங்கு ஒரு பாரில் விடிய விடிய
குடிக்கிறார்கள். காலையில் பார்த்தால் மனித நடமாட்டமே இல்லாத ஒரு தீவில்
கிடக்கிறார்கள்.அந்த தீவிலிருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
கருத்து கணிப்பு ! ம பி ,ராஜஸ்தான் சதிஷ்காரில் BJP வெற்றி ? டெல்லியில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லை
புதுடெல்லி,
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,
சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா கட்சி ஆட்சியை கைப்பற்றும்
என்றும், டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும் தேர்தலுக்கு
பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
5 மாநில சட்டமன்ற தேர்தல்
டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில
சட்டமன்ற தேர்தல்கள் நேற்றுடன் நடந்து முடிந்தன. பாராளுமன்ற தேர்தல்
அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால், அதற்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல்
முடிவுகள் அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில்
நிலவுகிறது
எனவே, இந்த தேர்தல் முடிவுகளை அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.
5 மாநில சட்டசபை தேர்தலும் முடிவடைந்துவிட்ட நிலையில் ‘இந்திய டுடே’
இணையதளம் உள்ளிட்ட பல்வேறு தனியார் அமைப்புகள், மத்திய பிரதேசம்,
ராஜஸ்தான், சத்தீஷ்கார், டெல்லி ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய
கருத்துக்கணிப்புகளை, நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன. அதன் விவரங்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் அட்டைபாடியில் உள்ள தமிழர்களை அகதிகளாக்கும் கேரளா அரசு !
கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின்
நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அபகரித்து, அகதிகளாக்கி வெளியேற்றும்
முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாக, குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில்,
மன்னார்காடு தாலுகாவில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில்,
அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. கேரள
மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்
அதிகம் வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுர கி.மீட்டர். இங்கு
இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். அட்டப்பாடி
மலை <உச்சியிலுள்ள மல்லேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது;
சிவராத்திரியின்போது, விழாக்கள் களைகட்டும்; கணக்கிலடங்கா சுற்றுலா பயணிகள்
கூடுவர்.அட்டப்பாடிக்கு இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. இங்கு, தமிழர்கள்
அதிகளவில் வசிக்கின்றனர். தலைமுறை, தலைமுறையாக இங்கு வசிக்கும்
தமிழர்களுக்கு வீடு, விவசாய நிலம், வியாபார கடைகள் உள்ளன.
அட்லாண்டிக் கடலில் 100 அடி ஆழத்தில் சிக்கித்தவித்தவர 3 நாட்களுக்கு பிறகு மீட்பு !
அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த மே மாதம் வீசிய பலத்த காற்றுக்கு நைஜீரியா
அருகே சென்ற விசைப்படகு ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கடலுக்கு அடியில்
சென்றுவிட்டது. இதில் இருந்த 12 பேரும் அப்போது தண்ணீருக்குள் மூழ்கினர்.
இதையடுத்து நீர்மூழ்கி மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை
தொடங்கினர்.
அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துபோன 4 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்கள்
அனைவரும் இறந்து இருக்க கூடும் என்ற நம்பிய நிலையில், மூன்றாவது நாளும்
நீர்மூழ்கி வீரர்கள் கடலுக்குள் தேடினர்.
அப்போது கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்திற்குள் கிடந்த படகில் ஒரு கை
மட்டும் தெரிவதை நீர் மூழ்கி வீரர் ஒருவர் கண்டார். உடனே அந்த கையை அந்த
வீரர் பிடித்து இருக்கிறார். அப்போது அந்த கையானது வீரரின் கையை இறுக
பற்றிக்கொண்டது. இதனால் அந்த வீரர் பயமும் அதிர்ச்சியும் அடைந்தார்.
இருப்பினும், தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அவர், தனது பணியை தொடர்ந்தார்.
அப்போது தனது கையை பிடித்தது உயிர் பிழைத்த நைஜீரிய சமையல் கலைஞர் ஹாரிசன்
ஓட்ஜெக்பா ஓக்னெ என்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த அவர்
பத்திரமாக மீட்கப்பட்டு வெதுவெதுப்பான நீரில் வைக்கப்பட்டும் போதுமான
ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டும் காப்பாற்றப்பட்டார்.
புதன், 4 டிசம்பர், 2013
அஜீத்தின் வீரம் 1,800 பிரிண்டுகள் ! உலகம் முழுவதும் ஒரேநாளில்
எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டு பிள்ளை, நம்நாடு, சிவாஜிகணேசன் நடித்த வாணி ராணி உள்பட 72 படங்களை தயாரித்தவர், நாகிரெட்டி. இவருடைய நூற்றாண்டையட்டி மகன் வெங்கட்ராமரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில், வீரம் படம் தயாராகியிருக்கிறது.இதில், அஜீத்குமார் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருடன் முதல்முறையாக தமன்னா ஜோடி சேர்ந்து இருக்கிறார். சிறுத்தை சிவா டைரக்டு செய்துள்ளார். பாரதி ரெட்டி தயாரித்து இருக்கிறார். இந்த படம், பொங்கலுக்கு முன்பே (ஜனவரி 10-ந்தேதி) திரைக்கு வருகிறது. வீரம் படம், உலகம் முழுவதும் ஒரேநாளில் வெளியிடப்படுகிறது. இதற்காக, 1,800 பிரிண்டுகள் போடப்படுகின்றன. அஜீத்குமார் நடித்த படங்களிலேயே மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்படும் படம் இதுதான்.
தருண் தேஜ்பாலும் சோமா சௌத்ரியும் ஏற்கனவே ஒரு ரோமன்ஸ் நட்பில் இருந்தவர்களா ? benefit of doubt
குஜராத் கலவர உண்மைகளையும் பாஜகவின் ஆயுதபேர ஊழல்களையும் இன்னும் இது போல பலவித சமுக குற்றங்களை மிக துணிவோடு அம்பலபடுத்தியதில் தருண் தேஜ்பால் ஏராளமான எதிரிகளை சம்பாதித்துள்ளது யாவரும் அறிந்ததே. அவர் தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பாலியல் வன்முறை குற்றச்சாட்டு இந்தியாவை மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களை உலுக்கி உள்ளது என்றே கூறவேண்டும்.
மிக வேகமாக ஆக்கிரோஷத்தோடு tehelka ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பலரும் சேறு வாரி தூற்றுவதை நாம் காண்கிறோம்
அவர்களின் அந்தரங்கம் மீது சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது ,
குற்றம் சாட்டி உள்ள சக பத்திரிகையாளரான சோம சௌத்ரி அவர்கள் தருண் தேஜ்பால் உடன் பல ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி உள்ளார்கள்.
வயது வித்தியாசம் இருந்தாலும் மிகவும் நட்புடன் இருந்திருக்கிறார்கள்.
இருவருக்கும் இடையில் உள்ள உறவு சக பத்திரிகையாளர்கள் என்பதையும் தாண்டி ஒரு ஆண் பெண் நட்பு அல்லது அதற்கும் மேலாக சில எல்லைகளை கடந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம். அதாவது கடந்த காலங்களில் . தற்போது அந்த கொடுக்கல் வாங்கல்கள் அற்று போய் இருக்கலாம் . வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த கருத்து சொல்லப்பட்டதாக தோன்றக்கூடும்,
இதுவரையில் தருண் ஒரு காமவெறி பிடித்தவராகவோ அல்லது ஒரு கிரிமினல் ஆகவோ இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை,
மிக அதிகமாக பழக கூடிய வாய்ப்பு உள்ள ஒரு ஆணும் பெண்ணும் சம்பத்தப்பட்ட விடயம் இது , வெறும் தெருவில் நடந்து சென்ற பெண்ணாய் பாலியல் பலாத்காரம் செய்வது போல பலர் இதை சித்தரிக்கிறார்கள் . உண்மையில் இது ஒரு நீண்ட காலத்து கதையாக இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. நடந்ததாக கூறப்படும் சம்பவம் ஒரு காதலர்களின் ஊடல் தகராறாக இருப்பதற்கு சான்ஸ் உண்டா இல்லையா ? கோபம் கொண்ட பெண்ணின் சாதுர்யமான செய்கையாகவும் கூட இதை நோக்கலாம் ?
மிக வேகமாக ஆக்கிரோஷத்தோடு tehelka ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது பலரும் சேறு வாரி தூற்றுவதை நாம் காண்கிறோம்
அவர்களின் அந்தரங்கம் மீது சந்தேகம் வருவது தவிர்க்க முடியாதது ,
குற்றம் சாட்டி உள்ள சக பத்திரிகையாளரான சோம சௌத்ரி அவர்கள் தருண் தேஜ்பால் உடன் பல ஆண்டுகள் ஒன்றாக பணியாற்றி உள்ளார்கள்.
வயது வித்தியாசம் இருந்தாலும் மிகவும் நட்புடன் இருந்திருக்கிறார்கள்.
இருவருக்கும் இடையில் உள்ள உறவு சக பத்திரிகையாளர்கள் என்பதையும் தாண்டி ஒரு ஆண் பெண் நட்பு அல்லது அதற்கும் மேலாக சில எல்லைகளை கடந்திருக்க கூடிய வாய்ப்பு இருந்திருக்கலாம். அதாவது கடந்த காலங்களில் . தற்போது அந்த கொடுக்கல் வாங்கல்கள் அற்று போய் இருக்கலாம் . வெறும் ஊகத்தின் அடிப்படையில் இந்த கருத்து சொல்லப்பட்டதாக தோன்றக்கூடும்,
இதுவரையில் தருண் ஒரு காமவெறி பிடித்தவராகவோ அல்லது ஒரு கிரிமினல் ஆகவோ இருந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை,
மிக அதிகமாக பழக கூடிய வாய்ப்பு உள்ள ஒரு ஆணும் பெண்ணும் சம்பத்தப்பட்ட விடயம் இது , வெறும் தெருவில் நடந்து சென்ற பெண்ணாய் பாலியல் பலாத்காரம் செய்வது போல பலர் இதை சித்தரிக்கிறார்கள் . உண்மையில் இது ஒரு நீண்ட காலத்து கதையாக இருப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. நடந்ததாக கூறப்படும் சம்பவம் ஒரு காதலர்களின் ஊடல் தகராறாக இருப்பதற்கு சான்ஸ் உண்டா இல்லையா ? கோபம் கொண்ட பெண்ணின் சாதுர்யமான செய்கையாகவும் கூட இதை நோக்கலாம் ?
அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராகுல் கடும் முயற்சி ? ஜெயாவின் கூட்டணி Flashbacks கொஞ்சம் பாருங்க ! உருப்படவிடமாட்டாய்ங்க ! பச்சோ
சென்னை: தமிழகத்தில் இலை கட்சி தலைமையிலான கூட்டணி அமைப்பதற்கான
அனைத்து வித முயற்சிகளையும் காங்கிரஸ் துணைத் தலைவரான இளவரசர் ராகுல்
காந்தி மேற்கொண்டுவருவதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
அண்மையில் கோட்டை தலைமை ஒரு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டது அனைவரையும்
ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அந்த சந்திப்பால் அமைச்சரவையில்பெரிய மாற்றம்
இருக்கும் என்றே தகவல்கள் பரவின.
ஆனால் அப்படிஒன்றும் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றவில்லை. கடந்த சில
மாதங்களாகவே அந்த அதிமுக்கிய நபரை மையமாக வைத்து வலம் வரும் கூட்டணி
விவகாரம்தான் இப்போதைய சந்திப்பிலும் பிரதானமாக இருந்ததாக சொல்லப்படுகிறது ஜெயலிதாவுடன் சேர்ந்தால் என்ன நடக்கும் என்று நிறைய பேரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் ஆனால் ராகுல் கேட்கிற ஆள் இல்லையே !அதனால் தெரிய வாய்ப்பில்லை அவரு சின்ன புள்ளே ! பட்டு தெளியட்டும்
டெல்லி Exit Poll பாஜக 29, காங் 23, ஆம் ஆத்மி கட்சி 17 டெல்லி சட்டசபை யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது
டெல்லி: டெல்லியில் இன்று நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் டைம்ஸ்
நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் அங்கு எந்தக் கட்சிக்கும்
பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.
டைம்ஸ் நவ்- சி வோட்டர் ஆகியவை டெல்லி தேர்தலில் மதியம் 1 மணி வரை பதிவான
வாக்குகளை அடிப்படையாக வைத்துள்ள வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில்,
டெல்லி சட்டசபையில் மொத்தமுள்ள 70 இடங்களில் இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு
29 இடங்களும், காங்கிரசுக்கு 23 இடங்களும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்
ஆத்மி கட்சிக்கு 17 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது- பாஜக 29, காங் 23, ஆம் ஆத்மி
கட்சி 17
இதன்மூலம் டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு
ஆட்சியை இழக்கிறது. அதே நேரத்தில் பாஜகவும் அங்கு தனித்து ஆட்சியை அமைக்க
முடியாது.
ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சி யாருடன் கூட்டு
சேருகிறதோ அந்தக் கட்சியே ஆட்சியை அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
ஆனால், தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவாகும் என்பதால் அங்கு அந்தக்
கட்சியே ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளது.
amil.oneindia.in/
amil.oneindia.in/
கள்ளுக்கு தடை சாராயத்திற்கு வரவேற்பு ! டாஸ்மாக் அரசுக்கு எதிராக கள் இயக்கம் போராட்ட அறிவிப்பு
திருச்சி:திருச்சியில், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் கள்ளுக்கு தடை இல்லை. தமிழக அரசால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தடை உலகளாவிய நடைமுறைக்கு எதிரானது. மதுவிலக்கு மற்றும் மதுக் கொள்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட எந்த ஒரு குழுவும் கள்ளுக்கு தடை விதிக்க சொல்லி அரசுக்குப் பரிந்துரைக்க வில்லை.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நோக்கில் கள் இறக்குவதும், குடிப்பதும் அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உரிமை என்ற அடிப்படையில் வரும் ஜனவரி 21ம் தேதி தமிழகம் முழுவதும் பனை மற்றும் தென்னையில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யும் போராட்டம் நடத்த கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு எந்த தடை வந்தாலும் தடையை மீறி கள் இறக்கி விற்பனை செய்யப்படும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.
tamilmurasu.org
போராடி மீட்ட சிதம்பரம் கோவில் மீண்டும் தீட்சதர்களிடமே செல்கிறது ? பார்பன ஆட்சியில் இதுவும் நடக்கும் ?
தமிழக அரசு நிர்வாக அதிகாரியை வாபஸ் பெறா விட்டால், நீதிமன்றம் தமிழக அரசுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்” என்று சுப்பிரமணியசாமி பேட்டியளித்திருக்கிறார்.
அன்பார்ந்த தமிழ் மக்களே,
போராடி மீட்டெடுக்கப்பட்ட தில்லைக்கோயில், மீண்டும் தீட்சிதர்களின் பிடிக்கே சென்று விடாமல் தடுக்கும் பொருட்டு, உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்தின் மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியாகப் போராடி வருகிறோம்.
ஜெயலலிதா அரசு கோயிலிலிருந்து அறநிலையத்துறை அதிகாரியை வெளியேற்றப் போகிறது என்று சுப்பிரமணியசாமி அறிவித்தவுடன், திங்கள்கிழமை காலை சிவனடியார் ஆறுமுகசாமியுடன் எமது வழக்குரைஞர்களும் உறுப்பினர்களுமாக 30-க்கும் மேற்பட்டோர் தில்லைக் கோயிலுக்குள் சென்றனர். “தில்லைக்கோயிலை தமிழக அரசு தீட்சிதர் வசம் ஒப்படைத்தால் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடியபடியே உயிர் துறப்பேன்” என்று அறிவித்தார் ஆறுமுகசாமி. கொட்டும் மழையில் அவர் வழிபாடு தொடங்கியது, போராட்டமும் தொடங்கியது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு தோழர்கள் சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுச் சொத்தான கோயிலை தீட்சிதரின் தனிச் சொத்தாக மாற்றுவதற்கு அறநிலையத்துறை ஆணையர் தீட்சிதர்களோடு சேர்ந்து நடத்தும் கூட்டுச் சதியை இப்போராட்டம் கேள்விக்குள்ளாகியது. ஆணையரிடமிருந்து பதில் இல்லை. போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டங்களின் விளைவாக அரசாணையை திரும்பப் பெறும் தனது சூழ்ச்சியை மறைத்துக் கொண்டு சுப்பிரமணிய பிரசாத் என்ற கூடுதல் அட்வகேட் ஜெனரலை நேற்று உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக அரசு.
“தமிழக அரசு வாதாடியது” என்று கணக்கு காட்டுவதற்காக அவர் நேற்று பதினைந்து நிமிடம் நேரம் நீதிமன்றத்தில் பேசினார். அவ்வளவுதான். ஆனால் “TN Justifies appointment of E.O for Chidambaram temple” என்று தலைப்பு போட்டு இந்து நாளேட்டில் இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. தீட்சிதர்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு காட்டியதைப் போல ஒரு நாடகம்!
பாஜகவிற்காக டுபாகூர் வேலை செய்யும் வதந்திக் கம்பெனிகள் !
அந்தப் புகைப்படத்தில் இருந்தது ஒரு பேருந்து நிறுத்தம். நல்ல பளபளப்பான சாலையும், பயணிகள் காத்திருப்பதற்கான ஏற்பாடுகளும் தேர்ந்த ஓவியரால் வரையப்பட்ட சித்திரம் போல் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. அந்தப் புகைப்படத்தின் கீழே இவ்வாறாக எழுதப்பட்டிருந்தது – “இது என்ன சிங்கப்பூரா? இல்லை சார், இது புனர் நிர்மாணிக்கப்பட்ட (இந்த வார்த்தையை MODI-FIED என்று எழுதுகிறார்கள்) அகமதாபாத். இதற்காகத்தான் குஜராத் மக்கள் (இந்துக்களும் முசுலீம்களும்) கூலிக்கு மாரடிக்கும் பத்திரிகைகள் சொல்வதற்கு மாறாக மோடியை மதிக்கிறார்கள்”
மேற்படி புகைப்படம் முகநூலில் பல லட்சம் பேர்களால் பகிரப்பட்டது. அசகாய சூரர் மோடியின் இந்த சாதனையை பல்லாயிரக்கணக்கானோர் பின்னூட்டங்கள் மூலம் விதந்தோதிக் கொண்டிருந்தனர். எல்லாம் ’சிறப்பாக’ போய்க் கொண்டிருந்த போது பலூன் பட்டென்று உடைந்தது. அந்தப் புகைப்படத்தில் இருப்பது அகமதாபாத் இல்லையென்றும் சீனத்தின் குவாங்சௌ மாகாணத்தில் உள்ள பேருந்து நிலையமென்றும், இங்கே செய்யப்பட்டிருப்பது மலிவான ‘வெட்டி ஒட்டும்’ வேலை என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமானது.
பிரேமானந்தாவுக்கு தண்டனை ஜெயேந்திரனுக்கு விடுதலை; இது கம்யுனிஸ்ட் கட்சி ஸ்டைல்.
பிரேமானந்தா என்கிற கொடியவனை
அம்பலப்படுத்தி அவனுக்குத் தண்டைனை வாங்கித் தந்ததில், சிபிஎம் கட்சியைச்
சேர்ந்த முன்னணி தோழர்களால் நடத்தப்படுகிற ஜனநாயக மாதர் சங்கத்துக்கே
அந்தப் பெருமை சேரும்.
ஆனால் அவர்கள் ஜெயேந்திரன், சங்கரராமனை
கொலை செய்தபோதும், பல பெண்களோடு பாலியல் விவகாரங்களில் தொடர்புபடுத்தி
செய்திகள் வந்தபோதும், பிரேமானந்தாவை எதிர்த்து தீவிரமாக இயங்கியதை போல்
ஜெயேந்திரனை எதிர்த்து இயங்கவில்லை. ஒரு சிறிய எதிர்ப்போடே நின்றுபோனது.
இத்தனைக்கும் ஜெயேந்திரன் கொலை செய்வதற்கு
முன், ‘முறையான’ துறவியாக இருந்தபோது, வேலைக்குப் போகிற பெண்களை
விபச்சாரிகள் என்று சொன்னதாக ஞாபகம்.
ட்விட்டரில் வடிவேலு. ஹலோ டுவிட்டர் பேன்ஸ்... எல்லாருக்கும் வணக்கm
வடிவேலுவைப் பற்றி ஆயிரம் செய்திகள். ஆனால் ஒன்றிற்கும் மனுசன் பதில்
தருவதாக இல்லை. அவரும் அமைதியாகப் படித்துவிட்டு அடிப்பொடிகளுடன் கமெண்ட்
அடிப்பதோடு சரியாம்.
இந்த நிலையில்தான், வடிவேலு மீண்டும் சிங்கமுத்துவுடன் சமாதானமா
போயிட்டார்.. அதிமுகவுக்கு போகப் போகிறார், என்று ஒரு செய்தி.
ஆனால் அதிமுக மேடையில், 'இல்லையில்லை... வடிவேலுதான் தானா இறங்கி வந்து
என்கிட்ட தூதுவிட்டார். நான் அதை நான் ஏத்துக்கலை,' என்று சிங்கமுத்து
பதிலளித்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
'ந்தா, அக்கவுண்டை ஓபன் பண்ணியாச்சு...' - ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல
வீடியோ!
பெரிய பத்திரிகைகளுக்கு மட்டும்
ஆனால் எதற்குமே வடிவேலு தரப்பிலிருந்து பதிலில்லை. மீடியாவின் தொடர்பு
எல்லைக்குள்ளும் அவரில்லை. பெரிய பத்திரிகைகள் என்ற போர்வையில் அவரை
நாறடித்தவர்களையே தேடிப் போய் பேட்டியும் ஸ்பெஷல் ஸ்டில்களும் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்
நயன்தாராவுடன் சுத்தாதே! தேர்தல் வர்ற நேரத்துல கேட்ட பேர் வாங்கி தராதே !
நயன்தாரா, உதயநிதியுடன் இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றபோது, நயன்தாரா, உதயநிதி, இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரோப் காரில் உதயநிதியும் நயன்தாராவும் ஒன்றாக ஏறிப் போனார்கள்.
கோயிலுக்கு நயன்தாரா வந்திருக்கிறார் என்கிற செய்தி காட்டுத்தீ போல் பரவியதும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் மொத்தமும் அவர்களை சூழ்ந்து விட்டார்களாம். இதை பார்த்த நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்புடன் காரில் ஏறி பறந்து விட்டார்களாம்.
இந்த செய்தி அப்படியே சென்னையிலிருக்கும் உதயநிதி உடைய தாத்தாவின்(கருணாநிதி) காதிற்குச் சென்றிருக்கிறது. உடனே அவர் ‘தேர்தல் வர்ற நேரத்துல இப்படியெல்லாம் சுத்தறது கட்சிக்கு கெட்டப்பேரை வாங்கித் தரும். தவிர்க்கலாமேப்பா’ என்றாராம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றபோது, நயன்தாரா, உதயநிதி, இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் பழனி முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரோப் காரில் உதயநிதியும் நயன்தாராவும் ஒன்றாக ஏறிப் போனார்கள்.
கோயிலுக்கு நயன்தாரா வந்திருக்கிறார் என்கிற செய்தி காட்டுத்தீ போல் பரவியதும், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கூட்டம் மொத்தமும் அவர்களை சூழ்ந்து விட்டார்களாம். இதை பார்த்த நயன்தாரா, உதயநிதி ஸ்டாலின் அவசர அவசரமாக சாமி தரிசனம் செய்துவிட்டு பலத்த பாதுகாப்புடன் காரில் ஏறி பறந்து விட்டார்களாம்.
இந்த செய்தி அப்படியே சென்னையிலிருக்கும் உதயநிதி உடைய தாத்தாவின்(கருணாநிதி) காதிற்குச் சென்றிருக்கிறது. உடனே அவர் ‘தேர்தல் வர்ற நேரத்துல இப்படியெல்லாம் சுத்தறது கட்சிக்கு கெட்டப்பேரை வாங்கித் தரும். தவிர்க்கலாமேப்பா’ என்றாராம்.
கேரள அரசு அதிர்ச்சி : பேஸ்புக்கில் கைதிகள் வெளியிட்ட படம்
திருவனந்தபுரம்:
கோழிக்கோடு சிறைக்குள் இருக்கும் கொலை குற்றவாளிகள் 6 பேர், செல்போனில்
எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டது சர்ச்சையை
ஏற்படுத்தியிருக்கிறது. கோழிக்கோட்டை சேர்ந்தவர் டி.பி.சந்திரசே கர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2
ஆண்டுகளுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி ஆர்.எம்.பி. என்ற புதிய
கட்சியை தொடங்கினார். இதனால், அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து
ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில், கடந்த ஆண்டு பைக்கில்
வீட்டுக்கு சென்ற சந்திரசேகரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை
செய்தது.
கடற்படை தளபதி : இந்தியாவில் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து ?
டெல்லி: இந்தியப் பெருங்கடல் பகுதியில் 140 தனியார் பாதுகாப்பு
நிறுவனங்கள் செயல்படுவதால் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து
உள்ளதாக கடற்படை தளபதி ஜோஷி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடற்படை தினத்தையொட்டி கடற்படை தளபதி டி.கே.ஜோஷி டெல்லியில் நேற்று
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வணிகக்கப்பல்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பயணம் செய்கின்றனர். இவர்களில்
பலரும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைகின்றனர். இது தீவிரமான பாதுகாப்பு
அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்தியாவில் கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்து - கடற்படை
தளபதி எச்சரிக்கை
இத்தகைய கப்பல்கள் மூலமாக தீவிரவாதிகள் ஊடுருவும் ஆபத்தும் உள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கடல் மார்க்கமாக
தீவிரவாதிகள் வந்து தாக்குதல்கள் நடத்தியுள்ள நிலையில் இப்படிப்பட்ட
ஆயுதம்தாங்கிய காவலர்களின் நடமாட்டம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக
அமைந்துள்ளது.
Tehelka வின் மறுபக்கம் ! யார் அதன் ஸ்பான்சர்கள் ? பலரின் உண்மை உழைப்பு வீணாகிறதா?
ராமன் கிர்பால்…
‘தெகல்கா’வின் முன்னாள் செய்தியாளர். 2011-ம் ஆண்டு வரையிலும் அதில்
பணிபுரிந்தவர். 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவா இரும்பு தாது ஊழல்
குறித்து ராமன் கிர்பால் எழுதிய புலனாய்வுக் கட்டுரையை தெகல்கா வெளியிட
மறுத்தது. இதைக் கண்டித்து வெளியேறிய அவர் firstpost.com என்ற இணையதளத்தில் இணைந்தார். அங்கு அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டது. இது ராமன் கிர்பாலின் பின்னணி.
மாறாக, ராமன் கிர்பால்
அம்பலப்படுத்தும் தெகல்காவின் கார்ப்பரேட் தொடர்புகள் குறித்த செய்திகள்
விளிம்பில் கிடக்கின்றன. இத்தனைக்கும் அவர் ஒன்றும் தனது முன்னாள் நிறுவனம்
குறித்த காழ்ப்பில் கதையளக்கவில்லை. ஆதாரங்களுடன், ஆவணங்களுடன்
எழுதுகிறார். பெண் செய்தியாளர் மீதான பாலியல் வன்முறை நடந்த ‘கோவா திங்–
2013′ விழாவின் அழைப்பிதழைப் பார்த்தாலே… தெகல்காவின் நன்கொடையாளர்கள் யார்
என்பதை புரிந்து கொள்ளலாம். கோகோ கோலா முதல் மோடியின் டார்லிங் நிறுவனமான
அதானி வரை அனைவரும் தெகல்காவின் புரவலர்கள். ராமன் கிர்பால் தனது
கட்டுரைகளில் இவற்றை வெளிப்படுத்துகிறார். தெகல்கா என்ற நிறுவனம் எவ்வாறு,
‘மொரீசியஸ்’ பாணியிலான போலி நிறுவனங்களை உருவாக்கி, நிதி மோசடியில்
ஈடுபட்டது என்பதை புள்ளி விவரங்களுடன் வெளிக் கொண்டு வருகிறார். அது
தெகல்கா என்னும் கார மிளகாயின் நமத்துப் போன மறு முனையாக இருக்கிறது.
தமிழகத்தில் 8.5 லட்சம் விவசாயிகளை காணோம்'? வேறு வேலை தேடி போய்விட்டார்கள் !
திண்டுக்கல்:தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 8.5 லட்சம் விவசாயிகள்,
உழவுத்தொழிலை விட்டு, வேறு தொழில்களுக்கு மாறியுள்ளது ஆய்வில்
தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள், மானியங்களை
நேரடியாக வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பயிர் மேலாண்மை
திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் மண் மாதிரி
விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. தமிழகத்தில்,
விவசாய அதிகாரிகள் கிராமங்களில் ஆய்வு செய்து விவசாயிகள் பெயர், குடும்ப
பின்னணி, நிலம், பட்டா எண் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஆய்வில்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அதிகாரிகளிடம் உள்ள புள்ளிவிபரமும், ஆய்வில்
சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரமும் மாறுபட்டிருந்தன.விசாரணையில், கடந்த 10
ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 8.5 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு,
வேறு தொழில்களுக்கு மாறியிருப்பது தெரியவந்தது. மேலும், போதிய மழை
இல்லாதது, விவசாய நிலங்களை "பிளாட்'களாக்கி விற்பது இதற்கு காரணமாக
கண்டறியப்பட்டு உள்ளது. தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழகத்தில் கடும்
வறட்சி நிலவுவதால் சாகுபடி பரப்பும் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால்
உணவு உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. dinamalar.com பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம் என்பது போல விவசாயிகள் மறுவாழ்வுத்திட்டமும் சீக்கிரம் போடவேண்டி இருக்கும் போல.
திருமாவளவன்: தலித்துக்களுக்கு எதிராக பாயும் கறுப்பு சட்டங்களை ஒழிக்கவேண்டும்
விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தடுப்புக் காவல் சட்டங்களில்
தலித்து களையும் சிறுபான்மையினரையும் சிறைப்படுத்துவதைக் கைவிடுக! என்று
தமிழக அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்
இது
குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் தனது
சாதியினர் மீதுதான் அதிக அளவில் தடுப்புக் காவல் சட்டங்கள் ஏவப்படுவதாக
அண்மையில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். அதற்குத்
தமிழக அரசின் சார்பில் மறுப்பெதுவும் தெரிவிக்கப்படாத நிலையில் அந்தத்
தவறான செய்தியை உண்மை என்று பொதுமக்கள் நம்புகிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
தடுப்புக்
காவல் சட்டங்கள் என்பவை மக்களுக்கு எதிரான கறுப்புச் சட்டங்கள் அவற்றை
முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகளின் நிலைபாடு. அந்தக்
கோரிக்கையை முன்வைத்து மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து பல்வேறு
போராட்டங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தியிருக்கிறது. பொடா
சட்டத்துக்கு எதிராக இடதுசாரிக் கட்சிகளை இணைத்துப் போராடியிருக்கிறது.
ஏனென்றால் இத்தகைய கறுப்புச் சட்டங்கள் ஆட்சியாளர்களால் ஏழை எளிய
மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதுதான் வரலாறு.
கர்நாடகாவில் போட்டியிடுகிறார் ராகுல் ! அமேதியில் புதிய நெருக்கடி
பாட்டி மற்றும் தாயைப் போல், வரும் லோக்சபா தேர்தலில், இரண்டு
தொகுதிகளில் போட்டியிட, ராகுல் முடிவு செய்துள்ளார். அமேதியுடன்,
தென்மாநிலமான கர்நாடகாவின், ஏதாவது ஒரு தொகுதியில் ராகுலை போட்டியிட
வைக்கும் ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
பா.ஜ., வியூகம்:இதுகுறித்து,
டில்லியில், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த தேர்தலில், உத்தர
பிரதேச மாநிலத்தில் உள்ள, அமேதியில் போட்டியிட்டு, ராகுல் எம்.பி.,யானார்.
அமேதி தொகுதியில், ராகுல், இம்முறை நின்றால், அவரை தோற்கடிக்க, பா.ஜ.,
புதிய வியூகம் வகுத்துள்ளது.அதன்படி, உள்ளூர் ராஜாவான, சஞ்சய் சிங்
என்பவரை, ராகுலுக்கு எதிராக, பா.ஜ., வேட்பாளராக, களம் இறக்க முடிவு
செய்துள்ளது.இவர், அமேதிக்கு அருகில் உள்ள, சுல்தான்பூர் லோக்சபா
தொகுதியின், காங்கிரஸ், எம்.பி.,யாக உள்ளார். இவருக்கு வரும் தேர்தலில்,
காங்கிரஸ் சார்பில், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என
எதிர்பார்க்கப்படுவதால், சஞ்சய் சிங், பா.ஜ.,வுக்கு தாவ
முடிவெடுத்துள்ளார்.தற்போது காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்தாலும், சஞ்சய்
சிங், ஏற்கனவே, பா.ஜ.,வில் இருந்தவர் தான். வி.பி.சிங் போன்றவர்களுடன்
இருந்த இவர், 2009ம் ஆண்டு தேர்தலின் போது தான், மீண்டும் காங்கிரசுக்கு
திரும்பி, எம்.பி., யாகவும் ஆனார். இவரை, அமேதியில் நிற்க வைத்தால்,
ராகுலுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி ஆராய்ச்சி: இந்தியாவுடன் இணைய சீனா தயார்
பீஜிங்:விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம் என சீனா தெரிவித்துள்ளது.
சந்திரனில் கால்பதித்து ஆய்வு நடத்த சீனா தயாரித்துள்ள முதல் ஆளில்லா விண்கலமான சாங் இ-3 நேற்று அதிகாலை 56.4 மீட்டர் உயரமுள்ள லாங் மார்ச்- 3பி ராக்கெட்டின் மூலம் ஷிசாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் பூமியிலிருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது 300 நாள் பயணத்தைத் துவங்கியதற்கு மறுநாள் சீனாவின் சாங் இ-3 விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.இந்த விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அடுத்து, விண்வெளி தொடர்பான விவகாரங்களில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக அண்டை நாடான இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக சீன விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சந்திர விண்கலத் திட்டத்தின் தலைமைத் துணை கமாண்டர் லீ பென்ஜாங் இது குறித்து கூறுகையில், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி போட்டி நோக்கத்தோடு நாங்கள் செயல்படவி்ல்லை. இது தொடர்பாக மற்ற நாடுகளின் ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும். விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்' அதனை மேம்படுத்த வேண்டும் என்றார்.
செவ்வாய், 3 டிசம்பர், 2013
தெலுங்கானாவுடன் அனந்தபூர் கர்னுல் மாவட்டங்களை இணைக்க முடிவு ! TRS க்கு செக் வைக்க திடீர் முடிவு ?
ஐதராபாத் : புதிதாக அமைக்கப்படவுள்ள, தெலுங்கானா மாநிலத்தில், ராயலசீமா
பகுதியில் உள்ள அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைக்க, மத்திய அரசு
முடிவு செய்துள்ளதாக கிளம்பியுள்ள தகவலால், திடீர் திருப்பம்
ஏற்பட்டுள்ளது.தெலுங்கானா மாநிலத்தின் எல்லைகளை உருவாக்குவது
தொடர்பாக, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. ஐதராபாத் உட்பட,
தெலுங்கானாவில் உள்ள, 10 மாவட்டங்கள் மற்றும் ராயலசீமாவை சேர்ந்த
அனந்தப்பூர், கர்னூல் மாவட்டங்களை இணைத்து, "ராயல தெலுங்கானா' என்ற பெயரில்
மாநிலம் அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங்
மற்றும் காங்., தலைவர் சோனியா, இரண்டு மாவட்டங்களை இணைப்பதில் உறுதியாக
உள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில்,
தலா, 21 லோக்சபா தொகுதிகள், தலா, 147 சட்டசபை தொகுதிகள் இருக்கும் சீமந்த்ராவிலிருந்து நெடுந்தொலைவிலுள்ள திருப்பதி,சித்தூர் மாவட்டங்களை
மிக அருகிலுள்ள தமிழ்நாட்டுடன் சேர்க்கலாம்.இதனால் திருப்பதி,சித்தூர்
மாவட்ட மக்களுக்கு கல்வி,பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் மிகவும்
நன்மையாக இருக்கும் .இப்பகுதி மக்கள் சிந்தித்து செயல்பட்டால் பயனடையலாம்.
சிதம்பரம் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி: 200 ஏக்கர் நிலம் 86 கிராம் தங்கம் எல்லாம் எங்கே ?
டெல்லி: சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு
நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழக அரசு சார்பில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுப்பிரமணிய பிரசாத் ஆஜரானார். நடராஜர்
கோயில் நிர்வாகத்தை அரசு மேற்கொள்வதற்கான காரணம் பற்றி விளக்கம் கேட்டனர்.
1986ல் இருந்து நடராஜர் கோயிலில் முறைகேடு நடப்பதாக புகார்கள் வந்தன.
கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் நிலமும் முறைகேடாக விற்கப்பட்டுள்ளது.
கோயிலில் இருந்து 86 கிராம் தங்கம் காணாமல் போய்விட்டதாகவும் புகார்
எழுந்தன. புகார்கள் தொடர்ந்ததால் கோயிலை இந்து அறநிலைய கட்டுப்பாட்டில்
கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. முறைகேடுகள் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு
உள்ளதா என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோயில் முறைகேடு
குறித்து ஏன் வழக்கு பதியவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு
ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.dinakaran.com/
MLM மோசடியில் இருந்து தப்ப அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் அவரின் சொத்துக்களையும் கொள்ளை !
கோவை:
மோசடி வழக்கில் மனைவியை காப்பாற்ற, உதவி கேட்டு வந்த அப்பாவி பெண்ணை
கொன்ற வக்கீல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரையும்,
மனைவியையும் பிடிக்க 2 தனிப்படையினர் சென்னை விரைந்துள்ளனர். கோவை
சுந்தராபுரத்தை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி மோகனா. இருவரும்
வக்கீல்கள்.
இவர்களுக்கு 3 குழந்தைகள். ராஜவேலின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை
அடுத்த ஈங்கூர். கடந்த 11.12.2011 அன்று மனைவி மோகனா உடல்நலக் குறைவால்
இறந்துவிட்டதாக கூறி, ஒரு சடலத்தை வக்கீல் ராஜவேல் வீட்டுக்கு கொண்டு
வந்தார். பின்னர் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் அந்த சடலம் தகனம்
செய்யப்பட்டது.
சடலம் முழுவதும் மூடப்பட்டிருந்ததால் அது மோகனாதான் என உறவினர்களும்,
அக்கம் பக்கத்தினரும் நம்பினர். அதன்பின், மோகனா இறந்ததற்கான இறப்பு
சான்றிதழை ராஜவேல் பெற்றார்.
நிருபர்களிடம் கெஞ்சிய விஜய்: ண்ணா. தயவு செய்து எதிர்மறையா எழுதி காலி பண்ணிடாதீங்க,
செய்தியாளர் சந்திப்பு என்ற பெயரில் பிரியாணித் திருவிழா நடத்தி வந்த விஜய்யிடம், சச்சின் படத்திலிருந்து ஒரு புதிய பழக்கம்... செய்தியாளர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்வு செய்து தன் நீலாங்கரை வீட்டுக்கோ, கோடம்பாக்க அலுவலகத்துக்கோ ரகசியமாக வரவழைத்து, அவர்களிடம் 'மனம்விட்டுப்' பேசி அனுப்புவார். இந்த சந்திப்பைப் போலவே, சந்திப்பு குறித்த செய்திகளும் ரகசியமாகவே இருந்துவிடும்! 'ண்ணா.. தயவு செய்து எதுவும் எழுதிடாதீங்க ப்ளீஸ்' - நிருபர்களிடம் கெஞ்சிய விஜய் நேற்றும் அப்படித்தான்... குறிப்பிட்ட சில நாளிதழ் மற்றும் வார இதழ் நிருபர்களை மட்டும் தனியாக அழைத்த விஜய்யின் மேனேஜர், 'சார் உங்க கிட்ட பர்சனலா கொஞ்சம் பேசனுமாம்... நீங்க மட்டும்
வந்துடுங்க,' என ஒவ்வொருவரிடமும் தனியாகச் சொல்லி வைக்க, முத்து படத்தில் தீபாவளிப் பரிசுக்காக வருவார்களே, அப்படி ரகசியமாகப் போய், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்திருக்கிறார்கள் செய்தியாளர்கள். ஆனாலும் தனித்தனியாகவே சந்தித்திருக்கிறார் விஜய். சந்திப்பின்போது அவர் பேசியது இரண்டே வரிகள்தான், 'ண்ணா... இந்தப் படம் நல்லபடியா ரிலீசாகணும்... தயவு செய்து எதுவும் எதிர்மறையா எழுதி காலி பண்ணிடாதீங்க,' இதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேச மறுத்துவிட்டாராம் விஜய்விஜய் பேட்டி என எதுவும் கொடுக்காததில் கூட வருத்தமில்லையாம் சிலருக்கு. பேஸ்புக்ல போடும் அளவுக்கு படமெடுத்துக்கக் கூட அனுமதிக்கலயே என்றுதான் ரொம்ப அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்! tamil.oneindia.in<
ஒரு வழியாக தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்
சென்னை:
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல்
ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
பிரவீன்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான
இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என்று, கடந்த அக்டோபர் மாதம்
4ம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு
தேதி வெளியான தினத்தில் இருந்து, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை
விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டது.
அண்ணாநகரில் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது
சென்னை போரூரைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 50). தனியார் நிறுவனங்களில் பணத்தை வசூலித்து, பின்னர் அந்த பணத்தை
அந்த நிறுவனங்களின் பெயரில் வங்கியில் செலுத்தும் பணியை சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் செக்யூரிட்டி
நிறுவனம் ஒன்று செய்து வருகிறது. இந்த செக்யூரிட்டி நிறுவனத்தில், செல்வம் பணம் வசூலிக்கும் ஊழியராக வேலை
பார்த்தார்
கடந்த மாதம் 25-ந்தேதி அன்று இதுபோல் வசூலித்த பணம் ரூ.10 லட்சத்தை எடுத்துக்கொண்டு, செல்வம் மோட்டார்
சைக்கிளில் வந்தார். அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பணத்தை கொள்ளை அடித்து சென்று
விட்டனர்.
சென்னை அண்ணாநகர் 11-வது மெயின் ரோடு வழியாக வரும்போது, இந்த கொள்ளைச்சம்பவம் நிகழ்ந்தது.
ஜாக்கி வாசுதேவ் சட்ட விரோதமாக கட்டிய கட்டிடங்களும் தில்லு முல்லுகளும்
ஈஷா விவகாரம் என்னப்பா ஆச்சு... ? கட்டிடத்தை இடிக்கிறாங்களா இல்லையா ?"
"கட்டிடத்தை இடிக்காம காப்பாத்தலாம்னு திருட்டுச் சாமியார் என்னென்னவோ ததிங்கினத்தோம் போட்றாரு.. இதுக்கு முன்னாடி இருந்த கோவை கலெக்டர் கருணாகரன் ஐஏஎஸ், திருட்டுச் சாமியாரோட கைக்கூலியா இருந்தாரு. எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விட்டுட்டு விதிகளை மீறி கட்டிய அந்தக் கட்டிடங்களை இடிக்காம, அந்தக் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று வழங்கினாரு.
இப்போ வந்திருக்கிற புது ஆட்சியர் அர்ச்சனா பட்னாயக், தடையில்லா சான்று குடுக்க தயங்கறாங்க. இது இல்லாம கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் குடியிருப்பவர்கள், கொங்கு பேரவை நிர்வாகிகள் எல்லாரும், மாவட்ட ஆட்சியரை சந்திச்சு, ஈஷா கட்டிடங்களை இடிக்கணும்னு புகார் சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் மீறி தடையில்லா சான்று வழங்கினா அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்துவாங்கன்ற விஷயத்தை மாவட்ட ஆட்சியர் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க
"கட்டிடத்தை இடிக்காம காப்பாத்தலாம்னு திருட்டுச் சாமியார் என்னென்னவோ ததிங்கினத்தோம் போட்றாரு.. இதுக்கு முன்னாடி இருந்த கோவை கலெக்டர் கருணாகரன் ஐஏஎஸ், திருட்டுச் சாமியாரோட கைக்கூலியா இருந்தாரு. எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விட்டுட்டு விதிகளை மீறி கட்டிய அந்தக் கட்டிடங்களை இடிக்காம, அந்தக் கட்டிடங்களுக்கு தடையில்லா சான்று வழங்கினாரு.
இப்போ வந்திருக்கிற புது ஆட்சியர் அர்ச்சனா பட்னாயக், தடையில்லா சான்று குடுக்க தயங்கறாங்க. இது இல்லாம கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் குடியிருப்பவர்கள், கொங்கு பேரவை நிர்வாகிகள் எல்லாரும், மாவட்ட ஆட்சியரை சந்திச்சு, ஈஷா கட்டிடங்களை இடிக்கணும்னு புகார் சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் மீறி தடையில்லா சான்று வழங்கினா அந்தப் பகுதி மக்கள் போராட்டம் நடத்துவாங்கன்ற விஷயத்தை மாவட்ட ஆட்சியர் நல்லாவே புரிஞ்சு வச்சுருக்காங்க
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)