சனி, 29 ஏப்ரல், 2023

இறந்த மகளுக்கான ஜீவனாம்ச பாக்கியை பெற தாய்க்கு உரிமை உண்டு.. சென்னை உயர் நீதிமன்றம்

 Kalaignar Seithigal  - Lenin :  இறந்து போன மகளுக்கான ஜீவனாம்ச பாக்கியைப் பெற அவரது தாயாருக்கு உரிமையுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுராந்தகம் பகுயியை சேர்ந்த அண்ணாதுரை - சரஸ்வதி ஆகியோர் கடந்த 1991ல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர்களுக்கு செய்யூர் நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு விவாகரத்து வழங்கியது.
ஜீவனாம்சம் கேட்டு சரஸ்வதி 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மதுராந்தகம் நீதிமன்றம், மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாயை 2014ம் ஆண்டு முதல் வழங்க வேண்டும் என 2021ல் உத்தரவு பிறப்பித்தது.

காவிரியில் கழிவுநீர் கலப்பதை கர்நாடகா தடுத்து நிறுத்த வேண்டும்- தலைமை செயலாளர் கடிதம்

 மாலைமலர் : காவிரியில் கழிவு நீர் அதிகளவில் கலப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு, தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காவிரியில் நடப்பு ஆண்டு 2022-23ல் நீர் வழங்கும் காலத்தில், இதுவரை 658 டி.எம்.சி., நீர், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த நீரளவை காட்டிலும், இது 484 டி.எம்.சி கூடுதல். நீர் வழங்கும் தவணை காலம் முடிவதற்கு மே வரை அவகாசம் உள்ளது.
 இந்நிலையில் பெங்களூரு நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், நேரடியாக காவிரி ஆற்றில் விடப்படுகிறது.

சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அதிகார போட்டியே இலங்கை தமிழ் தேசியம்!

  ராதா மனோகர்   :   சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் நினைவு நாள்
கட்டுரை  31 March 1898 – 26 April 1977!
சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அதிகார போட்டியே இலங்கை தமிழ் தேசியம்!
 21 மே 1895 -  தஞ்சாவூர் சுப்பையா பிள்ளை நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் முன்னாள் அமைச்சர்!  
தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையாவுக்கும்  தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இரா : மசாமிப்பிள்ளையின்  மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார் நாகநாதன் பிள்ளை!
இவர் சட்டம் பயின்று மிகவும் இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார்.
பின்பு  முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் வடமொழியும் சைவ சித்தாந்தமும் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய  சாகுந்தலாவை தமிழில் சாகுந்தலா காப்பியம் என்ற பெயரில் எழுதினார் ..
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் சகோதரர்களுக்கு தமிழகத்தில் இருந்த அருள் பரானந்த சுவாமிகளிடம் நெருக்கம் இருந்தது. இவர் மூலம் இலக்கணம் ராமசாமி பிள்ளையின் குடும்பத்தோடு  ராமநாதன் சகோதர்களுக்கு அறிமுகம் கிட்டியது

அமைச்சர் செந்தில்பாலாஜி: தானியங்கி மது விற்பனை

 tamil.samayam.com  :  தானியங்கி மது விற்பனை குறித்து பொய் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட அந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டப்பேரவை கூட்டத்தில் உறுதி அளித்தார்.
இது தமிழக பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில், ‘‘சென்னை, கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கிய டாஸ்மாக் நிர்வாகம்.
இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு,
ஏடிஎம் இயந்திரம் போல் மது மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் மையம்’’ என பிரபல ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து திமுக அரசை நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

தமிழகத்தில் 9 கட்சிகளுக்கு மட்டுமே மாநில கட்சியாக அங்கீகாரம்- பா.ம.க., ம.தி.மு.க., வி.சி.க. இடம் பெறவில்லை

 மாலைமலர் : தேசிய கட்சிக்கான தகுதியைப் பெற வேண்டுமெனில், 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான தலைமை அலுவலகம் உள்ளிட்ட விவரங்களைக் கோரும் பணியில் மாநிலத் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எவை எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற, தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதத்தையோ அல்லது வெற்றியையோ கட்சிகள் பெற்றிருக்க வேண்டும்.
மாநில கட்சிகளாக அங்கீகாரம்பெற வேண்டுமெனில்,
நான்கு நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி..விரைவில் ..சென்னை மேயர் பிரியாவின் அறிவிப்பு

 tamil.oneindia.com - Jeyalakshmi C : மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி..விரைவில் நடைமுறைக்கு வரும் சென்னை மேயர் பிரியாவின் அறிவிப்பு
சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 14,650 மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் நிர்பயா திட்டத்தில் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார்
அதன்படி அந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
சென்னை மாநகரை பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாற்ற நிர்பயா திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கர்நாடகாவில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசப் பயணம்! திராவிட மாடல் அறிவிப்பை வெளியிட்ட ராகுல்!

 நக்கீரன் : கர்நாடகாவில் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தற்போது அங்கு ஆட்சியிலிருக்கும் பாஜகவும், எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில்,
இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் - மின்னல் தாக்கி 27 பேர் உயிரிழப்பு

 மாலைமலர் : கொல்கத்தா மேற்கு வங்காளம் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. கொல்கத்தா, ஹவுரா, வடக்கு 24 பர்கனாஸ், புர்பா பர்தாமான், முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல தெற்கு வங்காள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், மூன்று மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் 4 பேரும், முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு 24 பர்கானாஸில் 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
மேலும் பஷிம் மிட்னாப்பூர், ஹவுரா ரூரல் பகுதிகளில் தலா 3 பேர் என மொத்தம் 14 பேர் பலியாகினர் என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். அவர்கள் வயல்களில் வேலை செய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர் என்றார்.

வியாழன், 27 ஏப்ரல், 2023

அமித் ஷா கேட்ட 20 இடங்கள்!.. அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி பழனிசாமி .. டெல்லியில் நடந்தது என்ன? விபரம்

 மாலைமலர் : அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று முதன் முதலாக டெல்லி சென்றதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் உரசல் ஏற்பட்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி-அமித்ஷா சந்திப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மற்ற கட்சிகளும் ஆவலுடன் உற்று நோக்கின.

தமிழ்நாட்டில் ஏற்படும் கேவலமான ஃபாசிச ஆட்சியை ஏற்றுக்கொள்வதில் எந்த சிரமமும் இருக்காது!

 Kandasamy Mariyappan :  மரியாதைக்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. M. K. Stalin அவர்களுக்கு,
கடந்த சில நாட்களாக திமுக மீதும் அதன் அமைச்சர்களில் ஒருவரான திரு. Palanivel Thiaga Rajan மீதும் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.!
அந்த தாக்குதல்களை தொடர்ந்து நிதியமைச்சர் மாற்றப்படுவார் என்ற யூக செய்திகளும் வலம் வருகின்றன.!
ஆனால்,
இன்றுவரையில் திமுக தலைமையிடமிருந்தோ, திமுக செய்தி தொடர்பாளர்களிடமிருந்தோ திரு. தியாகராஜனுக்கு ஆதரவாகவோ, யூக செய்திகளை மறுத்தோ எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டதாக அறியவில்லை!
திரு. தியாகராஜன் மீதான தாக்குதல் என்பது திமுக மீதான தாக்குதல் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
திரு. தியாகராஜன் அவர்கள் சமீபகாலமாக கட்சிக்கு  ஒரு Image builderஆக உருவெடுத்துள்ளார்.!
அகில இந்திய அளவில் கட்சியின் முகமாக வெளிப்பட்டுள்ளார்.!
இந்த Digital உலகில் அந்த Image கட்டாயமாக கட்சிக்கு முக்கியம் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.!

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி உறுதி... டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்புக்கு பின் அறிவிப்பு!!

 tamil.asianetnews.com -Narendran S  :  டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜக மூத்த தலைவர் அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில்,
 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்

புதன், 26 ஏப்ரல், 2023

சிங்கப்பூர்: கஞ்சா வழக்கில் தூக்கிலிடப்பட்டார் தங்கராஜு சுப்பையா - கடைசி நேரத்தில் என்ன நடந்தது? -

BBC News தமிழ் :  சிங்கப்பூரில் கஞ்சா கடத்தியதாக தமிழர் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை வேண்டாம் என்று ஐ.நா. உள்பட உலகம் முழுவதும் இருந்து வந்த வேண்டுகோள்களை சிங்கப்பூர் அரசு புறந்தள்ளிவிட்டது.
தங்கராஜூ சுப்பையா(46) என்கிற அந்த நபருக்கு சாங்கி சிறைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கூறினர்.
பலவீனமாக சாட்சிகள், விசாரணையின் போது மிகக் குறைந்த சட்ட உதவி ஆகியவற்றைக் கொண்டே அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதாக மரண தண்டனைக்கு எதிரான ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பிளாக்மெயில்... அது என் குரல் அல்ல: ஆடியோ குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

 மாலைமலர் : சென்னை திமுக அரசின் ஊழல் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் விஏஓ வெட்டிக் கொலை – பின்னணியில் மணல் மாஃபியா!

BBC tamil : தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை அவரது அலுவலகத்துக்குள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.
இந்த படுகொலை சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத மணல் மாஃபியாக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
இன்று காலையில் லூர்து பிரான்சிஸ் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது, அவரது அலுவலகத்துக்குள் புகுந்த இரண்டு பேர் அரிவாளால் லூர்து பிரான்சிஸை சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அருகே இருந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தங்கராஜு சுப்பையா: விடிந்தால் தூக்கு – சிங்கப்பூர் தமிழருக்கு எதிரான கஞ்சா வழக்கில் என்ன நடந்தது?

BBC : சிங்கப்பூரில் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மரண தண்டனை, நாளை கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டில் வாழும் தமிழர் ஒருவருக்கு நிறைவேற்றப்பட உள்ளது.
அவரை காப்பாற்ற கடைசி கட்ட முயற்சியாக கருதப்படும் கருணை மனு மறுஆய்வு சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மனு நிராகரிக்கப் பட்டுள்ளதால் தங்கராஜு சுப்பையா என்ற அந்த தமிழரின் தண்டனை நிறைவேற்றம் உறுதியாகியிருக்கிறது.
மரணத்தின் கடைசி நேரத்தை அந்த நபர் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், பலவீனமான சாட்சியங்கள் அடிப்படையில் தங்கராஜு சுப்பையா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

சூடான் போர் 500 இந்தியர்கள் மீட்பு

 Dinamalar : புதுடில்லி: சூடானில் மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் சவுதி அரேபியா ஜெட்டாவுக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
சூடானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் ராணுவத் தளபதி அப்தல் பதா அல் புர்ஹான் தரப்பும், துணை ராணுவப் படையாக ஆர்எஸ்எப் பிரிவும் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான திட்டத்தில் மீட்கப்பட்ட இந்தியர்களில் முதல் கட்டமாக 278 பேர் சவுதி அரேபியா ஜெட்டாவுக்கு இந்திய கடற்படை கப்பல் சுமேதா மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் விரைவில் இந்திய அழைத்து வரப்பட உள்ளனர்.

நாசி வதை முகாம்களாகும் பாடசாலைகள் – யாழில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை !

 தேசம்நெட் : தந்தை, உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த, குறித்த மாணவனே நேற்று (24) இரவு இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் .
குறித்த மாணவனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையிலேயே மாணவன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமதி கனிமொழி கருணாநிதிக்கு தமிழ்நாட்டின் முதல் உலக அரசியல் தலைவர் அந்தஸ்து டுவிட்டர் கிரே குறியீடு

மாலைமலர் : பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது. நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறிகளை டுவிட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது.

திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் டுவிட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.
பிரபலங்களுக்கு வழங்கும் அடையாள குறியை டுவிட்டர் நிறுவனம் அண்மையில் மாற்றியது.
இதன்படி, நீலம், கிரே மற்றும் தங்க நிறத்தில் அடையாள குறி வழங்கி வருகிறது.
கிரே நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அவ்வகையில், கனிமொழி எம்.பி.யின் டுவிட்டர் கணக்கிற்கு, கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது. இதன்மூலம் கிரே டிக் பெற்ற தமிழ்நாட்டின் முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகியுள்ளார்.

திங்கள், 24 ஏப்ரல், 2023

12 மணி நேர வேலை சட்டமுன்வடிவு செயலாக்கம் நிறுத்திவைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 Kalaignar Seithigal  - Lenin  : நாட்டில் தொழிற்சாலைகள் பெருகுவதற்கு அங்கு தொழில் அமைதி மிக அவசியமானது.
தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதெல்லாம் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே செயல்பட்டு வந்துள்ளது.
தற்போது அதே சிந்தனையைத் தாங்கி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்துத் தந்த பாதையில், அதன் அடியொற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதுமே தொழிலாளர் சமுதாயத்தின் தோழனாக, தொண்டனாக, காவல் அரணாக என்றென்றும் விளங்கும் என்பதற்கு கீழ்க்காணும் திட்டங்களே சான்றாகும்.

தமிழக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காப்பி அடித்துதான் இலங்கை தமிழ் தேசியம் உருவானதா?

ராதா மனோகர் :  இலங்கையில் தமிழ் தேசியம் என்பது ஒரு வெறுப்பு அரசியலாக மட்டுமே உருவானது ..
மக்கள் நலம் சார்ந்த எந்த கோட்பாடும் இலங்கை தமிழ் தேசியவாதிகளிடம் கிடையாது
தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் கூறுகளை மட்டும் காப்பி அடித்து,
 இலங்கையில் அதை சிங்கள இனத்திற்கு எதிராக ஒரு வெறுப்பு அரசியலாக கட்டமைத்தார்கள்.
திராவிட சித்தாந்தவாதிகள் முன்வைத்த சுயமரியாதை சமூகநீதி போன்ற கோட்பாடுகளை மறந்தும் கூட தொட்டு பார்க்காமல் வெறும் வெற்று தமிழ் தேசியத்தை முன்னெடுத்தார்கள்.

தமிழ்நாட்டில் இருந்த ஏழு கோடி தமிழர்களின் பின்பலத்தை நம்பி இலங்கையில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்களை எதிரிகளாக உருவாக்கினார்கள்
சிங்கள மக்களும் தமிழ்நாட்டு பெரும்பான்மையை எண்ணி பயந்தார்கள்.
இப்போதும் இதுதான் நிலைமை.
அதனால்தான்  சீமான் போன்றவர்கள் மூலம் இன்னும் தமிழ்நாட்டில் சிங்கள பெரும்பான்மை இனத்திற்கு எதிராக வன்மம் விதைக்கிறார்கள்.

நெடுந்தீவு 5 பேரை கொன்ற கொலையாளி கைது

கொலை சந்தேக நபர்
 Maalaimalar  :  :இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த கார்த்தி கேசு நாகசுந்தரி என்பவரது வீட்டில் 51 வயது மதிக்கத் தக்க ஒருவர் வாடகைக்கு குடியிருந்தார்.
சம்பவத்தன்று நாகசுந்தரியின் உறவினர்கள் 4 பேர் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தனர். அப்போது வாடகைக்கு இருந்தவர் அவர்கள் 4 பேரையும் கொடூரமாக கொலை செய்தார்.
அவர்கள் சத்தம் கேட்டு அருகில் உள்ள சுப்பிரமணியம் மகாதேவா (75) என்பவர் ஓடி வந்தார்.
அவரும் கொலை செய்யப்பட்டார்.
பின்னர் கொலையாளி வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். கொலையுண்ட 5 பேரும் இலங்கை தமிழர்கள் ஆவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம்- தமிழக அரசு

 tamil.oneindia.com - Vishnupriya R :  சென்னை: திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை அமைச்சக செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம்.

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

வேங்கை வயல் விவகாரம்; குற்றவாளிகளை நெருங்கும் சிபிசிஐடி

 நக்கீரன் :புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் என பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
முதலில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் குறிப்பிட்ட சிலரிடம் விசாரணை நெருங்கிய நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளிகளாக்க நினைக்கிறது

PTR Audio: ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

tamil.asianetnews.com : திமுகவை திகைக்க வைத்து இருக்கும் சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப் குறித்து தமிழ்நாடு  நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
திமுகவை திகைக்க வைத்து இருக்கும் சர்ச்சைக்குரிய ஆடியோ கிளிப் குறித்து தமிழ்நாடு  நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில் கூறியுள்ள பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "நான் பேசியதாக வெளியான 26 வினாடி ஆடியோ தீங்கிழைக்கும் நோக்கில் ஜோடிக்கப்பட்டது என்று" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த ஆடியோவின் பகுப்பாவு அறிக்கை ஒன்றையும் இணைத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஆடியோ

முதல்வர் ஸ்டாலினுடன் அமர்ந்து ஐபிஎல் போட்டியை பார்த்த தனுஷ்.. புகைப்படம் வைரல்

 மாலைமலர் : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு ஐபிஎல் கிரிக்கெட்டின் 29-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.
இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்த ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன்
இந்த போட்டியை ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்,

12 மணி நேர வேலைச் சட்டம்: தனி மனித வாழ்க்கையில் ஆடும் ஆட்டம்

 மின்னம்பலம் : தனியார் தொழில் நிறுவனங்களில் 12 மணிநேர வேலையை கட்டாயமாக்கும் சட்ட மசோதாவை நேற்று (ஏப்ரல் 21) சட்டமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது திமுக அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் போன்ற திமுகவின் கூட்டணிக் கட்சிகளே வெளிநடப்பு செய்தன.
இந்த நிலையில் அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல்… மக்களும் இந்த சட்டத்துக்கு எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்கள்.
இதுகுறித்து பல்வேறு கோணங்களில் சமூக தளப் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
அவற்றில் திருப்பூரைச் சேர்ந்த சம்சுதீன் ஹீராவின் பதிவு இந்த சட்டம் ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்தை எப்படி சிதைக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்துக் காட்டுகிறது.
இதோ அந்த பதிவு…
”12 மணிநேர வேலைன்னா 9.00 – 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.
திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா?
9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்டுக்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.

நெடுந்தீவில் 5 பேரின் சடலங்கள் வெட்டுக் காயங்களுடன் மீட்பு

 வீரகேசரி :  யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வெட்டுக் காயங்களுடன் ஐவரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை (22) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 3 பெண்களும் 2 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நெடுந்தீவு, மாவளி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே இன்று காலை வெட்டுக்காயங்களுடன் குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.