இலங்கையில், தற்போது இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இதை
பயன்படுத்தி, பிரச்னையை தீர்க்கலாம். ஆனால், தமிழகத்தில் இப்பிரச்னையை
பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி தான் நடக்கிறது. இதில் அரசியல்
செய்வதையே தமிழகத்தில் சில கட்சிகள் வாடிக்கையாக கொண்டுள்ளன. இப்படி
இருந்தால், எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்? குறிப்பாக, இலங்கை தமிழர்
பிரச்னையில், வைகோவால் பிரச்னைகள் தான் ஏற்படுகின்றன. பிரச்னையை புரிந்து
கொள்ளாமல், உணர்ச்சிகரமாக பேசுகிறார். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு
வெடிக்கிறார்; அழுகிறார். எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் நடந்தால், என்ன
செய்வது? எப்படி பிரச்னையை தீர்க்க முடியும்?
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், 10 கட்சிகளின் பிரதிநிதிகள்
குழு, டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்தபோது பேசப்பட்ட விஷயங்கள் பற்றிய
பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன இதுபற்றிய,
விவரம் வருமாறு:டில்லியில், பிரதமரை அவரது அலுவலகத்தில், தமிழக
பிரதிநிதிகள் குழு சந்தித்தபோது, முதலில், குரூப் போட்டோ எடுக்கப்பட்டது.
அது முடிந்ததும், தாங்கள் வந்திருக்கும் நோக்கம் குறித்து, பிரதமரிடம்
விஜயகாந்த் சில நிமிடங்கள் பேசினார். பின், கொண்டு வந்திருந்த மனுவை,
பிரதமரிடம் அளித்தார்.காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டும்
முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, தி.மு.க., பிரதிநிதிகள்
கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் அடுத்தடுத்து வலியுறுத்தினர்.