பிரபல கவிஞர்
தாமரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறிய கணவர்
தியாகுவிற்கு எதிராக தனது மகன் சமரனோடு தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.சென்னை
சூளைமேடு பெரியார் சாலையில் இருக்கும் தியாகுவின் தமிழ்த் தேசிய விடுதலை
இயக்கத்தின் அலுவலகம் முன்பாக, இந்த தர்ணா போராட்டத்தை வெள்ளிக்கிழமை
மேற்கொண்டார்.தர்ணா
போராட்டம் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கவிஞரும் திரைப்படப்
பாடலாசிரியருமாகிய நான் இன்று உங்கள் முன் வேறொரு செய்தியோடு நின்று
கொண்டிருக்கிறேன். 'சொல்லொண்ணாத் துயரம்' என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
குறிப்பிட்டிருந்தேன். ஆனாலும் அவற்றை உங்கள் முன் வெளிப்படுத்தவில்லை.
ஆனால் இன்று அத்தகைய சூழல் நேர்ந்து விட்டது. மிகவும் கசப்பான சூழ்நிலைதான்
என்றாலும், இதில் என் சொந்த நலன் மட்டுமல்லாது இன்னும் பலரின் வாழ்க்கை,
தமிழ் இளைய தலைமுறையின் எதிர்காலம் போன்ற பொதுநலனும் கலந்திருப்பதால்,
நியாயம் கோரி மக்கள் முன் வரத் துணிந்தேன். நல்ல காலம் இதுவும் கலைஞரின் சூழ்ச்சி என்று இவர் சொல்லவில்லை தாமரையின் அரசியல் பேச்சுக்களில் நேர்மை இல்லையே? கலைஞரை இல்லாத பொய்யெல்லாம் சொல்லி சேறு பூசி அதில் குளிர்காய்ந்து பிரபாகரனை போற்றுவதுதான் வாழ்வில் முன்னேற ஒரே வழி என்று காலத்தை வீணாக்கிய உங்களை பார்க்க பரிதாபம் . இனியாவது நேர்மையாக இருங்கள் . நல்லதே நடக்க வாழ்த்துகிறோம், அற்ப லாபங்களுக்காக பொய்யான அரசியல் பண்ணாதீங்க. முன் செஞ்ச வினைன்னு ஒண்ணு இருக்கில்ல ?
சனி, 28 பிப்ரவரி, 2015
எஸ்ஸார் குழும சலுகைகளை அனுபவித்த கட்காரி, ஜெய்ஸ்வால், திக்விஜய்சிங்.. அதிர வைக்கும் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
மத்திய அரசின் ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை
செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் ஸ்டீல் மற்றும்
எரிசக்தி துறையின் முன்னணி நிறுவனமான எஸ்ஸார் குழுமத்தின் சலுகைகளை
அனுபவித்த அரசியல் தலைவர்கள் பட்டியல் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி
விவரம்:
பொதுநலன் வழக்குகளுக்கான மையம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர
உள்ளது. எஸ்ஸார் குழுமமானது எப்படியெல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள்,
பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள் வழங்கி வளைத்துப் போட்டது என்பதற்கு
ஆதாரங்களாக எஸ்ஸார் குழுமத்தின் இ மெயில்கள், சுற்றறிக்கைகள்
இணைக்கப்பட்டுள்ளன.
வெள்ளி, 27 பிப்ரவரி, 2015
அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா
கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய
அமெரிக்கரான இவரது பூர்வீகம் கொல்கத்தா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்
குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் யோகா குரு பிக்ரம் சவுத்ரி, தன்னிடம் யோகா கற்க வந்த பெண்களை
பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, 6 பெண்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து
கற்பழித்து விட்டதாக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்களின் சொத்து விபரங்கள் அறிய தடை! மோடி அரசாங்கத்தின் சுயரூபம் அம்பலம் ,
மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் நடைமுறைக்கு பிரதமர் அலுவலகம் தடை
மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்களை பகிரங்கமாக வெளியிடும் நடைமுறைக்கு, பிரதமர் அலுவலகம் தடை விதித்துள்ளது.
கடந்த 2010ஆம் அண்டில் இருந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது குடும்பத்தினரின் தொழில் விவரங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு வந்தன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய தலைமை தகவல் ஆணையரின் உத்தரவின்பேரில் இதுவெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த மாதம் மத்தியிலிருந்து இந்த விவரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பாஸ்வேர்டு இருந்தால்தான் இந்த விவரங்களை காண முடியும். பிரதமர் அலுவலகத்தின் இந்த முடிவுக்கு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கே உள்ளது. ஆனால் இந்த பதவி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காலியாக இருக்கிறது.nakkheeran.in
சாந்த சிகரம் தமன்னாவுக்கு வந்ததே கோபம் ....
சாந்தமானவர்
எத்தனை டேக் சொன்னாலும் கோபப்படாமல் நடிப்பவர் என்று தமன்னாவுக்கு
இன்டஸ்ரியில் நல்ல பேர் இருக்கிறது. ஒரு குரூப் படுத்திய பாடு அவரை
கோபத்தில் கொப்பளிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. டோலிவுட் படமொன்றின்
வெளிப்புற படப்பிடிப்பில் சமீபத்தில் பங்கேற்றார் தமன்னா. பாடல் காட்சியில்
தற்போது பெண் மற்றும் ஆண் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமன்னா
பங்கேற்ற பாடல் காட்சிக்காக மாடல்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அழகு
தேவதைகளாக வந்திறங்கிய மாடல்களுடன் அவர்களது பாய்பிரண்ட்கள் ச¤லரும்
வந்திருந்தனர். வெளிப்புற படப்பிடிப்பு என்றுகூட பார்க்காமல் அவர்கள் ஜோடி
ஜோடியாக நின்றுகொண்டு சேட்டையில் ஈடுபட்டனர். இதை கண்டும் காணாமல்
இருந்தார் தமன்னா.
ரயில்வே பட்ஜெட்: உடனடி தகவல்கள்
- கடற்கரை வழியாக நாகர்கோவிலுக்கு இணைப்பு வசதி செய்து தரப்படும்.
- பட்ஜெட் அளவு ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
- 970 தரைப்பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.
- லெவல் கிராஸிங் பாதுகாப்புக்கு 6,581 கோடி ரூபாய் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
- மிகவும் பின் தங்கிய, தொலை தூரங்களுக்கு ரயில் இணைப்பு வழங்க திட்டம்
- ரயில் பெட்டிகளில் தீ விபத்து குறித்து எச்சரிக்கும் கருவி பொருத்தப்படும்.
- மாநிலங்களுடன் இணைந்து கூடுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
- அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில்சேவை துவங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும்
- தேர்வு செய்யப்பட்ட 4 பல்கலைக்கழகங்களில் ரயில்வே ஆய்வு மையம் ஏற்படுத்தப்படும்.
வியாழன், 26 பிப்ரவரி, 2015
ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ.225 கோடி சொத்துக்கள் முடக்கம்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தற்போது ரூ.225 கோடி மதிப்புள்ள அவரது சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கி உள்ளனர்
நிலம் கையகப்படுத்தும் சட்டம் பாஜகவின் வாட்டர் லு
உணவளித்து
அனைவரையும் காக்கும் விவசாயிகளின் வாழ்வாதரமான விளை நிலங்களை, வெளிநாட்டு
கம்பெனிகள் லாபத்திற்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் மா பாதக
செயலுக்கு, நாடு முழுவதும் கட்சி பாகுபாடின்றி கடும் எதிர்ப்புக்
கிளம்பியுள்ளது.
ஆனால் தாம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை நிறைவேற்றுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் இருந்து பின்வாங்கும் கருத்துக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி விடாப்பிடியாக இருக்கிறார். காப்பறேட்டுக்களிடம் வாங்கின காசுக்கு சத்தம் கொண்டு வரவேண்டிய கட்டாயம் இருப்பதாக குற்றம் சுமத்தினால் அதை மறுத்து நிருபிக்க முடியுமா மிஸ்டர் மோடி ?முஷரப்: ஆப்கான்., தலிபானுடன் கைகோர்க்க வேண்டும், இந்தியாவை தடுக்கவேண்டும்
ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்பட வேண்டும் என்று விரும்பினால், அரசு,
தலிபான்களுடன் அதிகாரத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், இந்தியாவின்
ஆதிக்கத்திற்கு தடைசெய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் ராணுவ
ஆட்சியாளர் பர்வேஷ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
தேச துரோக குற்ற சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ்
முஷாரப் தற்போது ஜாமீனில் உள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்
பத்திரிக்கையில் பர்வேஷ் முஷாரப்பின் பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. பர்வேஷ்
முஷாரப், கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, அரசு
மற்றும் தலிபான் மற்றும் பிற குழுக்களுடன் சமரசம் செய்துக் கொள்ள
ஒருவாய்ப்பை வழங்கினார். அஷ்ரப் கானி சமச்சீரான மனிதர், அவர் சிறப்பான
நம்பிக்கை கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். பாகிஸ்தான் மற்றும்
இந்தியா முற்றிலும் விலகியிருக்க வேண்டும். மறைமுகப் போரை ஊக்குவிப்பதை
தவிர்க்க வேண்டும். தன்தலையை காப்பாத்த பாகிஸ்தானை தீராத படுகுழியில் தள்ள நினைக்கிறார். இதேபோலத்தான் மறைந்த ஜியாவுல் ஹக்கும் முஜஹீதின்களை வளர்த்து விட்டு நாட்டையே குட்டி சுவராக்கினர் . தாலிபான்களால் கடத்தபட்ட இந்திய விமான சம்பவத்தில் இந்த ஆளை இன்னும் விசாரிக்காம இருக்கிறாங்க .அப்போது இவருதான் தாலிபானுக்கு ரொம்ப நெருங்கி இருந்தவர்.
700 கோவில்களில் அதிமுகவினர் ஜெயாவின் விடுதலைக்காக மரம் நட்டனர்! ஜோதிடர் குறிந்த நேரத்தில் ...
ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி, அவரது நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை
நடத்துவது அ.தி.மு.க.,வினரின் வழக்கம். அதில், ஆண்டுதோறும் ஏதாவது ஒரு
விஷயத்தை புதியதாக சேர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர். இந்த வைபவத்திற்காக தான் சட்டசபையை 4 நாளோடு முடிச்சிக்கிட்டாங்க போல....இந்த ரேட்டில் போனால் விரைவாக கிமுவுக்கு போய்விடலாம் . இதுதான்யா time travel ங்கிறது
இந்த ஆண்டு பிறந்த நாளான நேற்று முன்தினம், குறித்து தரப்பட்ட நல்ல நேரத்தில், மாநிலம் முழுவதிலும் உள்ள, 700 சிவன் கோவில்களில் மரக்கன்றுகளை அ.தி.மு.க.,வினர் நட்டுள்ளனர். என்ன வகை மரக்கன்றுகள், எந்த நேரத்தில் அதை நட வேண்டும் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும், போயஸ் தோட்டத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களுக்கு, 23ம் தேதியே போய் சேர்ந்துள்ளது. அதை சத்தமின்றி ஆளுங்கட்சியினர் செய்து முடித்துள்ளனர். இந்த வைபவத்திற்காக தான் சட்டசபையை 4 நாளோடு முடிச்சிக்கிட்டாங்க போல....இந்த ரேட்டில் போனால் விரைவாக கிமுவுக்கு போய்விடலாம் . இதுதான்யா time travel ங்கிறது
பன்னீர்செல்வம் படித்த 75 நிமிட பதிலுரை முழுக்க முழுக்க தவறான தகவல்கள்
சட்டப்பேரவையில்
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தவறான தகவல்களை பதிவு செய்வதை அறிந்து
திகைத்து போனதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில்
குறிப்பிட்டுள்ளார். அதில்,நடந்து
முடிந்த சட்டப் பேரவையில் முதலமைச்சர் திரு பன்னீர்செல்வம் அவர்கள் படித்த
75 நிமிட பதிலுரையைக் கேட்டு கொண்டிருந்த போது, எவ்வளவு தவறான தகவல்களை
சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் பதிவு செய்கிறார் என்பதை எண்ணி திகைத்து
போனேன். 2011 ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், 4640 மெகாவாட்
மின்சாரம் கூடுதலாக கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு தற்போது கிடைத்து
வருகிறது என்று சொன்னவர், அதன் தொடர்ச்சியாக " மொத்தம் 22 ஆயிரத்து 440
மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது "
என்றார்.ஆனால்
அதிமுக அரசு பொறுப்பேற்ற பின், புதிய மின்திட்டங்கள் மூலம் ஒரு மெகாவாட்
மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்பது தான் உண்மை.தனியார்
நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதிலேயே குறியாக
இருக்கிறது அதிமுக அரசு.
டில்லியில் மின் கட்டணம் 50 சதவீதம் குறைப்பு:
டில்லி: டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி
ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, 'நாங்கள்
ஆட்சிக்கு வந்தால், மின் கட்டணத்தை குறைப்போம்' என, ஆம் ஆத்மி கட்சி
வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்கு, 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, இந்த கட்டண குறைப்பு பொருந்தும். இந்த சலுகை, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாதத்துக்கு, தலா, 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வினியோகிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார் தினமலர்.com
இந்நிலையில், நேற்று நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில், மின் கட்டணத்தை, 50 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு மாதத்துக்கு, 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு, இந்த கட்டண குறைப்பு பொருந்தும். இந்த சலுகை, அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. மேலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும், மாதத்துக்கு, தலா, 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் இலவசமாக வினியோகிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார் தினமலர்.com
சூப்பர் சிங்கர் உண்மையான வாக்குவிபரம் இதுவாமே? நெசமாலுமா?
சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை யாரும்
மறந்திருக்க மாட்டோம். எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம்
இப்போட்டிக்கு உலக தமிழர்கள் அமோக வரவேற்பு தந்தனர். ஈழத்து சிறுமி
ஜெசிக்கா பங்கேற்றதால் இப்போட்டிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்தது. மக்களின் வலிகளை கண்ணீரை தங்களது சொந்த இலாபத்திற்காக மலிவான விலையில் விற்றனர். உலக தமிழர் வாக்குகள் அவர் இலங்கை தமிழர் என்பதால் கிடைத்தது என்பது எவ்வளவு அவமானகரமானது என்பது புலம்பெயர் மாக்களுக்கு புரியவே புரியாது
. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர்.
தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு..
Jessica
1,03,53,440
Anushya
21,03,555
Spoorthi
13,11,630
Srisha
11,02,017
HariPriya
5,06,221
Bharath
4,63,309
Total Votes: 1,58,40,172
. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளர் அறிவிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பலர் கூறிவந்தனர்.
தற்போது இந்நிகழ்ச்சியில் பணியாற்றிய சிலர் மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்களித்துள்ளனர் என பட்டியலை வெளியிட்டுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் வெளியிட்ட பட்டியல் பின்வருமாறு..
Jessica
1,03,53,440
Anushya
21,03,555
Spoorthi
13,11,630
Srisha
11,02,017
HariPriya
5,06,221
Bharath
4,63,309
செவ்வாய், 24 பிப்ரவரி, 2015
அரசியலில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவா?- மூத்த தலைவர்கள் மீது அதிருப்தியால்.....
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலை யில், அதில்
பங்கேற்காமல் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு ராகுல்
காந்தி வெளிநாடு பறந்து விட்டார்.
முக்கியமான நாடாளுமன்றத் தொடரை அவர் புறக்கணித்துள்ளதால், அரசியலிலிருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளாரா எனக் கேள்வியெழுந்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அதற்குப் பிறகு
நடைபெற்ற தேர்தல்களை கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின்
வழிகாட்டுதலின்படியே காங்கிரஸ் சந்தித்தது. ஆனால், எல்லாவற்றிலும்
அக்கட்சிக்குப் படுதோல்வியே கிடைத்தது.
இதனால், தேர்தலில் ராகுல் பிரச்சாரம் செய்தால், பாஜக வுக்கு வெற்றி
நிச்சயம் என கிண்ட லடிக்கும் அளவுக்கு ராகுலின் தலைமை மீது விமர்சனம்
எழுந்தது.
மாலைதீவு முன்னாள் அதிபர் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், போலீஸ் அதிகாரிகளால் கோர்ட்டிற்கு தரதரவென இழுத்து செல்லப்பட்டார்
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் (வயது 47). இவர் தற்போதைய
எதிர்க்கட்சி தலைவர் ஆவார். இவர் கடந்த 2012 பிப்ரவரி மாதம் அதிபர்
பதவியில் இருந்தபோது, அந்த நாட்டின் குற்றவியல் நீதிபதி அப்துல்லா முகமதுவை
கைது செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து முகமது நஷீத்துக்கு எதிராக
போராட்டங்கள் நடைபெற்றன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்தது. 2013-ம்
ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த
நிலையில் முகமது நஷீத்தை போலீசார் கைது செய்தனர்.
சிலுவையில் தன்னை தானே அறைந்த ஹுசெனிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி ஊக்குவித்தார் !
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கராத்தே வீரர் ஹூசைனிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் நான் மீண்டும் முதல்-அமைச்சர் ஆவதற்காக, நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு சிலுவையில் அறைந்து
கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை தாண்டி
இதுபோன்று உங்களை வருத்திக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்னிடம் காட்டிய கருத்தினைக்கு நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கைக்கு அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார் இது எப்படி இருக்குது தெரியுமா ஆபாசமாக ப்ளூ படம் எடுப்பவர்கள் காட்டவேண்டியதை எல்லாம் காட்டி விட்டு இறுதியில் ஒரு மசேஜ் சொல்லி தங்கள் ஆபாச படத்துக்கு ஒரு மோரல் கிரவுண்டு காட்டுவார்கள் . பேசாமல் இந்த ஆளை பிடித்து ஜெயிலில் போடவேண்டும், ஒரு நேர்மையான அரசாங்கமும் தலைவரும் அதைதான் செய்யவேண்டும்,
ட்ராபிக் ராமசாமி : அதிமுகவினர் தாக்கவருபோது போலீசார் வேடிக்கை பார்த்தனர்
போலீசார் முன்பே என்னை அதிமுகவினர் தாக்க வந்தனர்: நடவடிக்கை எடுக்கவில்லை: டிராபிக் ராமசாமி புகார்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை ஆஜராகி,
வேளச்சேரி பகுதியில் சட்ட விரோதமாக ஆளும் கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அங்கு நான் நேரில் சென்று பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால், போலீசார் சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், பேனர்களை வைத்த அரசியல் கட்சியினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர்.
அப்போது, போலீசார் கண் முன்பாகவே ஆளும் கட்சியினர் என்னை தாக்க வந்தனர். என் வாகனத்தை அடித்து சேதப்படுத்தினர். ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், வேளச்சேரியில் நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு பிளீடருக்கு உத்தரவிட்டனர் nakkheeran.in
ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டுதல்: சிலுவையில் அறைந்து ஹுசைனி பிரார்த்தனை
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுதல்' என அறிவித்து,
பிரபல கராத்தே மற்றும் வில் வித்தை வீரர் ஹுசைனி தன்னைத்தானே சிலுவையில்
அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
சென்னையில் தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொள்ளும் பிரார்த்தனையில்
ஈடுபட்ட அவர், உடனடியாக முதலுதவிக்குப் பிறகு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்
மூலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது
ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தன் கைகளில் ஆணிகள் அடித்த பிறகு, "ஜெயலலிதா முதல்வரானால் மட்டுமே
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிக்க முடியும்" என்று உரக்கச்
சொன்னார். இந்த மாதிரி காட்டு மிராண்டிதனமான ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா ? மனிதர்களின் புத்தியை மழுங்கடித்து அவர்களை உளவியல் ரீதியாக ஒரு அடிமைகளாக்கும் இந்த அதிமுக நிச்சயம் தடை செய்ய படவேண்டிய அமைப்புதான்
திங்கள், 23 பிப்ரவரி, 2015
தபோல்கருக்கு நேர்ந்த கதிதான் உனக்கும்! என்று கடிதம் அனுப்பி, கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்த ...
தும்ச்சா தபோல்கர் காரு’ (நரேந்திர தபோல்கருக்கு
நேர்ந்த அதே கதிதான் உனக்கும்!) என்று அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியவாறே,
கோவிந்த பன்சாரேவின் உயிரையும் பறித்துவிட்டன பாசிச மதவெறி சக்திகள்.
மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூர் நகரைச் சேர்ந்த கோவிந்த பன்சாரே (82)
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர்.
மூடநம்பிக்கைகளுக்கும் மதவாதத்துக்கும் எதிரான மகத்தான போராளியான பன்சாரே,
தனது மனைவி உமாவுடன் கடந்த திங்கட்கிழமை காலை நடைப்பயிற்சியை
முடித்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைய இருந்த நேரத்தில், இருசக்கர
வாகனங்களில் வந்த மர்ம ஆசாமிகள் இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
பன்சாரேவின் உடலுக்குள் மூன்று குண்டுகள் பாய்ந்தன. அவரது மனைவியின்
தலையின் இடது பக்கத்தைத் துளைத்தது மற்றொரு குண்டு. அக்கம்பக்கத்து
வீட்டார்கள்தான் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்தார்கள்.
மருத்துவர்களின் இடைவிடாத சிகிச்சை முயற்சிகளையும் மீறி பன்சாரேவின் உயிர்
வெள்ளியன்று பிரிந்துவிட்டது. உமா சிகிச்சையில் இருக்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற முறையில்தான் இந்துத்துவ வெறியர்கள்
புணேவில் நரேந்திர தபோல்கரின் உயிரைப் பறித்தார்கள்.
கி .வீரமணி : வடநாட்டை பாருங்கள்! சகல கட்சித்தலைவர்களும் விழாக்களில் பரஸ்பரம் பண்போடு பழகுகிறார்கள் (photos)
வடநாட்டில்
உள்ள அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது
அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில்
துக்க வீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும். தயங்கும் நிலை அல்லவா
இங்கு இருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணச் சடங்கு ஒன்றில்
பிரதமர் நரேந்திர மோடியும், லாலு பிரசாத்தும், முலாயம்சிங் யாதவும் கூடி
மகிழ்கின்றனர். வடநாட்டில் நிலவும் இந்த நனி நாகரிகத்தை தமிழ்நாட்டின்
தலைவர்களும், பிரமுகர்களும் பின்பற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத்
தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினவிழாவில் அதிபர் மைத்திரிபாலாவை கொல்ல ராணுவத்தில் ஒரு பிரிவு சதி ?.கடைசி நிமிட அணிவகுப்பு ஏற்பாடு மாற்றம் .....
கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சுதந்திர தின அணி
வகுப்பு மரியாதையின் போது கொலை செய்ய சதித்திட்டம் நடந்துள்ள சம்பவம்
அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் கடந்த 4ஆம்தேதி, அந்நாட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு அருகில் நடந்த விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா
மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மிக எளிமையாகவும், விரைவாகவும்
சுதந்திர தின விழா நடத்தி முடிக்கப்பட்டது.
சுதந்திர தின விழாவின் போது அதிபர் மைத்திரி பால சிறிசேன உட்பட முக்கிய
பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும்,
இதனையடுத்தே பலத்த பாதுகாப்புடன் எளிமையாக விழா நடத்தி
முடிக்கப்பட்டதாகவும் தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ள
சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்கள்
1981ஆம் ஆண்டு எகிப்து ஜனாதிபதி அன்வர்சதாத் அந்நாட்டு ராணுவ அணிவகுப்பை
பார்த்தபோது ராணுவ வீரர்களில் சிலர் தங்கள் வாகனங்களில் இருந்து திடீரென்று
குதித்து அன்வர் சதாத்தை சுட்டுக்கொன்றனர்.
ஆஸ்கார் விருது பெற்றவர் விபரம் youtube: Academy Awards (Oscars) 2015 Live Stream
ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள்
வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. 87-வது ஆஸ்கர் திருவிழாவில் 2015-ன்
வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...
* சிறந்த எடிட்டிங் - டாம் க்ராஸ் (விப்லாஷ் | Whiplash)
* சிறந்த ஒளிப்பதிவு - இம்மானுவெல் லூபெஸ்கி (பேர்ட்மேன் | Birdman)
* சிறந்த புரொடக்ஷன் டிசைன் - ஆடம் ஸ்டாக்ஹவுஸன், அன்னா பின்னாக் (தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)
* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - பிக் ஹீரோ 6 | Big Hero 6
* சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஃபீஸ்ட் | Feast (பாட்ரிக் ஆஸ்பர்ன், கிறிஸ்டினா ரீட்)
ரூ.16,350 கோடி மின் திட்டங்கள் என்ன ஆயிற்று? கலைஞர் ஆதரங்களுடன் கேள்வி ?
நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்திறன் கொண்ட சில்லஹல்லா
நீரேற்று புனல் மின் திட்டம் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மின்
நிலையங்கள் மற்றும் மின் தொடர் பாதைகள் அமைக்கும் திட்டம் 8 ஆயிரம் கோடி
ரூபாய் மதிப்பீட்டிலும், 20 ஆயிரம் புதிய மின் மாற்றிகள் அமைக்கும் திட்டம்
500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 15 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு
மின் வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக
மொத்தம் 16,350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
என்றும், இந்த நடவடிக்கைகள் மூலம் தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக
மாறும் என்பதோடு, மின் நுகர்வோருக்கு தடையற்ற சீரான மின்சாரம் வழங்குவது
உறுதி செய்யப்படும் என்றும் அறிவித்தார். என்ன ஆயிற்று இந்த அறிவிப்புகள்?.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அரசுத் தலைமை வழக்குரைஞர் கையெழுத்திட்ட ஆவணத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு நஷீத் அதிபராக இருந்தபோது, மூத்த நீதிபதியைக் கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளபோதிலும், அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் கைதாகும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்டது.
இது தொடர்பாக அரசுத் தலைமை வழக்குரைஞர் கையெழுத்திட்ட ஆவணத்தில், கடந்த 2012-ஆம் ஆண்டு நஷீத் அதிபராக இருந்தபோது, மூத்த நீதிபதியைக் கைது செய்ய உத்தரவிட்டது தொடர்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளபோதிலும், அது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் கைதாகும் காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பட்டது.
16 வயதினிலே ராஜ்கண்ணுவின் மகன் மிதுன்குமார் களத்தூர் கிராமத்தில் அறிமுகம்
சென்னை,பிப்.21 (டி.என்.எஸ்) பாராதிராஜா இயக்கத்தில், ரஜினி, கமல்,
ஸ்ரீதேவி நடிப்பில் 1977ஆம் ஆண்டு வெளியான '16 வயதினிலே' படத்தை தயாரித்த
எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் மகன் மிதுன்குமார் 'களத்தூர் கிராமம்' என்ற படத்தின்
மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.மிதுன், இயக்குனர்
மகிழ்திருமேனியிடம், 'தடையற தாக்க' படத்தில் தாவிய இயக்குனராக
பணியாற்றியுள்ளார். மேலும் '16 வயதினிலே' படத்தின் டிஜிட்டல் பதிப்பின்
இயக்குனராகவும் பணியாற்றினார். இளையராஜா இசையமைப்பில் உருவாகும்
இப்படத்தை சரன்கே அத்வைதன் இயக்குகிறார். இவர் 'சின்னதாய்' புகழ் கணேஷ்
ராஜியிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.
ஜமீன் ஜாம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
இப்படத்தில் ஆடுகளம் கிஷோர், ஏக்னா செட்டி, ரஜினி மகா தேவய்யா, தருண் சத்ரியா மற்றும் முன்னணி கன்னட நடிகர்கள் நடிக்கிறார்கள்.
தமிழ்
மற்றும் கன்னடத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
வைகுண்டராஜனை காப்பாற்றும் தமிழக அரசு – HRPC கண்டனம்
19.02.2015 அன்று தமிழக சட்டப் பேரவையில் தாதுமணல்
கொள்ளை தொடர்பான ஆய்வுக்குழு அறிக்கை வெளியிடப்படாதது குறித்து
தி.மு.க.வினர் கேள்வி எழுப்பியபோது
தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில்
நிலுவையில் உள்ளதாகவும், அவ்வழக்கில் விதிக்கப்பட்ட தடை காரணமாக வருவாய்த்
துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான ஆய்வை நிறுத்தி
வைத்துள்ளதாகவும், இதனால்தான் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்
வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்க இயலாதது போலவும்
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இக்கூற்று முழுப் பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு ஒப்பானது.
தலிபான்களால் கடத்தப்பட்ட பாதிரியார் எட்டு மாதங்களுக்கு பின் விடுவிப்பு
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் திங்கள்கிழமை டெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆப்கானிஸ்தானிலிருந்து தம்மை விடுவிக்க நடவடிகை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
8 மாதங்களுக்கு பின்னர் பிரேம்குமார் விடுவிக்கப்பட்டிருப்பதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரேம்குமார் விடுவிக்கப்பட்ட தகவலை அவரது தந்தை அந்தோணி சாமியிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதனை பிரேம்குமார் சகோதரர் ஜான்ஜோசப் செய்தியாளர்களிடம் கூறினார்.nakkheeran.in மதமாற்ற பிரசாரம் செய்யாம இவிங்களால இருக்க முடியாது ? கண்டமேனிக்கு ஆளுங்களை போட்டு தள்ளாம அவிங்களாலையும் இருக்க முடியாது ? வேற வேலை இல்லையா கல்வி பணிக்கு சென்றவர் பிரசங்கம் செய்தால்...பொறுத்துக்கொள்ள அப்கானிஸ்தான் என்ன இந்தியாவா ?
ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015
பிரெஞ்சு பெண்ணின் தமிழிசைக் காதல் Emmanuelle Martin - Raaga Tapasya
இசைக்கு மொழி கிடையாது என்பார்கள். பிரான்ஸைச் சேர்ந்த இமானுவல் மார்ட்டினைப் பொறுத்தவரை அது நூறு சதவீதம் உண்மை.
பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணாவிடம் இவர் கர்னாடக இசையைக்
கற்றுக்கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல தன் கச்சேரியில் தமிழ்ப்
பாடல்களைப் பாடி ரசிகர்களை அசத்திவருகிறார். இவரது குரல் பாம்பே
ஜெயஸ்ரீயின் குரலைப் போல முறுக்கேறிய மென்மையான குரல்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் கர்னாடக இசை மீது ஆரம்பத்தில் பெரியளவில்
ஈடுபாடில்லாத மார்ட்டின், ஒரு கட்டத்தில் அந்த இசையைப் பயில்வதற்காகவே
இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவுக்கு வருவதற்கு முன் அவருக்குத் தாய்மொழி
பிரஞ்சு மட்டுமே தெரியும். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் தமிழைக்
கற்றுக்கொண்டார்.
இப்போது அழகாகத் தமிழ் பேசுகிறார். சுவையாக இஞ்சி டீ போடுகிறார். இசையைப்
போலவே அவரது மனதைத் தொட்டதாம் இஞ்சியின் நறுமணம். தன்னந்தனியாக
இந்தியாவுக்கு வந்து, பத்து ஆண்டுகள் உழைத்து கற்றுக்கொண்ட கர்னாடக இசை,
ஆன்ம அமைதியைத் தந்ததாக மெய்சிலிர்க்கிறார்.
Fire In Dubai Skyscraper துபாயின் 1105 அடி கட்டிடத்தில் பெரும் தீ ! உலகின் உயரமான கட்டிடங்களில் இதுவும் ....
துபாய்,பிப்.21 (டி.என்.எஸ்) துபாயில் 1105 அடி உயர அடுக்குமாடி
குடியிருப்பு கட்டிடத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அங்கு
வசிக்கும் மக்கள் பதட்டம் அடைந்தனர்.துபாயின் மரினா நகரில் 79
மாடிகளை கொண்ட டார்ச் என்ற வானளாவிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
உலகின் மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இந்த குடியிருப்பின் 50-வது
மாடியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சில
நொடிகளுக்குள் அதிகாலை 2 மணிக்கு தீ அலாரம் அடித்து பொதுமக்களை
உஷார்படுத்தியது. உடனே குடியிருப்பில் வசிக்கும் மக்கள் தங்கள்
குழந்தைகளுடன் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
மேலும்
அப்பகுதியில் இருந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. 12க்கும் மேற்பட்ட
தீயணைப்பு வண்டிகளில் வந்திறங்கிய தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை
கட்டுக்குள் கொண்டுவந்தனர். நம்ப சங்கர் படம் போல பெரிய பில்டப் பீலா அல்லாம் விட்டு கட்டுனாங்க !
அரவிந்தர் ஆசிரம சகோதரிகள் 3 பேர் உண்ணாவிரதம்! ஆசிரமத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்
பீகார் மாநிலம் பொகாரா பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் (86). இவரது மனைவி
சாந்திதேவி. இவர்கள் தங்களது மகள்களான ஜெயஸ்ரீ (54), அருணாஸ்ரீ (52),
ராஜஸ்ரீ (49), நிவேதிதா (42), ஹேமலதா (39) ஆகியோருடன் புதுச்சேரி
அரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து அங்குள்ள விடுதியில் நீண்ட காலமாக
தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் ஆசிரமத்தில் முறைகேடுகள் நடப்பதாக ஜெயஸ்ரீ உள்ளிட்ட 5
சகோதரிகளும் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு
தொடர்ந்தனர். ஆசிரம நிர்வாகத்தினர் நீதிமன்ற தீர்ப்பை வைத்து கடந்த
டிச.17-ம் தேதி சகோதரிகள் 5 பேரையும் ஆசிரம விடுதியில் இருந்து போலீஸார்
மூலம் வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராடினர்.அரவிந்தர் ஆஸ்ரம மாபியாவை ஏன்தான் இன்னும் விட்டு வச்சிருக்காங்க ? காசு பணம் துட்டு மணி
நான் பதில் சொல்லும் அளவுக்கு 'ப.சி.யும், கா.சி.'யும் ஒன்றும் பெரிய ஆட்கள் இல்லை: ஈவிகேஎஸ்
சென்னை: தான் பதில் அளிக்கும் அளவுக்கு ப. சிதம்பரமும் ,அவரது மகனும்
பெரிய ஆட்கள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.
இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சனிக்கிழமை
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில்
அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஆவணங்கள் மாயமாகியபோது அவர் உடனே
பதவி விலக வேண்டும் என பாஜக தெரிவித்தது. தற்போது மத்திய அரசு ஆவணங்கள்
திருடு போயுள்ளதால் முன்மாதிரியாக மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய
வேண்டும். மோடி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்பதை தெரிவிக்க வேண்டும்
என்றார் இளங்கோவன்.tamil.oneindia.com/ காங்கிரசில் சுவாரசியமாக பேசக்கூடிய ஒருவராவது இருக்கிறாரே
பன்றி காய்ச்சலுக்கு 700 பேர் பலி : சபாநாயகர், எம்எல்ஏ பாதிப்பு: காஷ்மீரில் ஐபிஎஸ் அதிகாரி சாவு -
புனே:
நாடுமுழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் 700 பேர் வரை
பலியாகி உள்ளனர். குஜராத்தில் சபாநாயகர், மகாராஷ்டிராவில் பெண் எம்எல்ஏ
ஒருவரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஐபிஎஸ்
அதிகாரி ஒருவர் உயிர் இழந்தார்.நாடு முழுவதும் பன்றி காய்ச்சல் நோய்
தீவிரமாக பரவி வருகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட
மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 மாதத்தில் பன்றி
காய்ச்சல் நோய் பாதிப்பு காரணமாக 700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 11,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானாவில் பரவி வரும் பன்றி காய்ச்சல் காரணமாக ஐதராபாத்தில் உள்ள
ஐபிஎஸ் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி எடுத்து வரும் அதிகாரிகள் 6
பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கையின் கற்பை காக்க தந்தையை கொன்ற அக்கா? மதுவை ஒழிக்காமல் மடிகணினி கொடுத்து .......
பெண்களை இழிவுப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும் மட்டுமே நம்
கண்களுக்குத் தெரிகிறது. கலாச்சாரத்தில் சிக்குண்டு எல்லா வற்றுக்கும்
பலியாவது பெண்கள் சமுதாயம்தான். தவறுகளை யார் செய்தாலும் எல்லாமும் அவர்கள்
தலையிலேயே விழும்.
செய்தித்தாள்களில் நாள்தோறும் தவ றாமல் இடம்பெறும் ஒரே செய்தி பாலியல்
குற்றங்களும், வன்முறைகளும்தான். படிக்கவே பதறுகிற செய்திகள், காதில்
கேட்கவே பிடிக்காத அருவருப்பான செயல்பாடுகள். இவை எல்லாம் சமுதாயத்தை
எதிர்காலத்தில் எங்கே போய் கொண்டுவிடும் எனத் தெரியவே இல்லை.
அருணாச்சல பிரதேசம் சென்றது சரியல்ல: பிரதமர் மோடிக்கு சீன அரசு கண்டனம்
பீஜிங்: அருணாச்சல பிரதேசத்தில், மக்கள் நல திட்டங்களை துவக்கி வைத்த
பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், அது, இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும்
என்றும் எச்சரித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை, தங்களுக்கே சொந்தமானது என, சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
இந்தியாவிற்கு சொந்தமான இந்தப் பகுதிகளை, சீனா தன் வரைபடத்தில் இணைத்து
வெளியிட்டு உள்ளதோடு, இந்தப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் அவ்வப்போது
ஊடுருவி, பிரச்னையையும் ஏற்படுத்தி வருகின்றனர்.தலாய்லாமாவின் திபெத் அரசுக்கு நிலமும் கொடுத்து அரசியல் பொருளாதார ஆதரவும் கொடுத்து சீனாக்காரனின் எரிச்சலை வாங்கினால் பதில் எரிச்சலும் வரும்தானே? தலாய்லாமாவுக்கு வேறு இடமா கிடைக்கலை ? அந்த பிரச்சனைக்கு ஏன் இந்தியா ஏன் அக்கறை?
மத்திய அமைச்சகங்களில் திருடப்பட்ட ஆவணங்கள் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
டெல்லி பெட்ரோலிய துறை அமைச்சக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் அறைகளில்
திருட்டுத்தனமாக புகுந்து, பெட்ரோலிய பொருட்கள் விலை நிர்ணயம், இறக்குமதி
தொடர்பான முக்கிய கொள்கை ஆவணங்கள் களவாடப்பட்டு, பிரபல நிறுவனங்களுக்கு
விற்பனை செய்யப்பட்டுள்ள ஊழல், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி
உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)