சனி, 2 ஜனவரி, 2021

போராட்ட களத்தில் விவசாயி தற்கொலை!... என் தியாகம் வீண் போகக் கூடாது

minnambalam : கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்ப நிலை டெல்லியில் நிலவி வருகிறது. குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்குச் சென்ற போதிலும் கடும் குளிரில் எதனையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் இன்றுடன் 38ஆவது நாளை எட்டியிருக்கிறது.

அதேசமயத்தில் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளுக்கு நாள் மற்ற மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. தங்களது கோரிக்கை நிறைவேற்றப் படும் வரை வீடு திரும்புவதில்லை என உறுதியாக இருக்கின்றனர். இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ளது. ஆனால் அவை விவசாயிகளின் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. மின்சார கட்டண உயர்வு மற்றும் வைக்கோல்போர் எரித்தல் போன்றவற்றில் மட்டும் 6ஆவது கட்ட பேச்சுவார்த்தையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எனினும் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தல் போன்றவற்றில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.

கலையரசி நடராஜன் வீட்டில் திருடிய மதன் ரவிச்சந்திரன், வெண்பா கீதாயன்(வளர்மதி Kalaiarasi Natarajan Blast Interview | Madhan Ravichandran


Sadhu Sadhath : · 

வணக்கம் நண்பர்களே பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்கள் பெயர் தான் மதன் ரவிச்சந்திரன், வெண்பா கீதாயன்(வளர்மதி). சென்னை
சுற்றுப்புறத்தில் வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்களாக தேடி சென்று, தாங்கள் Youtube சேனல் தொடங்கி உள்ளதாகவும் அதில் நீங்க பேட்டி கொடுக்குமாறும் வற்புறுத்தியும் வீடு புகுந்து நகைகளை கொள்ளை அடிப்பதாக புகார் வந்துள்ளது.
அதுவும் கீழ் உள்ள புகைப்படத்தில் இருக்கும் தோழி பிரபல எழுத்தாளர் ஜெய மோகன் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது கூடுதல் தகவல். Friends இத முடிஞ்ச அளவுக்கு சென்னை ஐ சுற்றியுள்ள உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு share செய்யுங்கள் .

வவுனியா : நீர் நிலையில் விழுந்து உயிருக்கு போராடும் யானை!

veerakesari :நீர் நிலையில் விழுந்து யானை ஒன்று உயிருக்கு போராடும் சம்பவம் வவுனியா பெரியகட்டு பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா கண்னாட்டி பெரியகட்டு காட்டு பகுதியில் உள்ள நீர் நிலையில் கால்கள் இயலாத காரணத்தினால் எழுந்து நடக்கமுடியாமல் நீர்நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் யானையினை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.          இதனையடுத்து வன  திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டு குறித்த யானையினை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது

ஸ்டாலின் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் .. அமைச்சர் வேலுமணி ஆதரவு பெண் தகராறு

BBC :திமுக சார்பில் கோவையில் இன்று நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசியபோது தகராறு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து திமுக - அதிமுக இரு கட்சிகளும் போட்டியாகப் போராட்டங்களும் நடத்தின. >கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத்தொகுதியில் உள்ள தேவராயபுரம் பகுதியில் திமுக சார்பில் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
அமைச்சர் வேலுமணியும் அதிமுக பூங்கொடியும் (மகளிர் அணி)

இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட கோவையில் ஊழல் அதிகமாகவுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் அதிமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களை செய்து வருகின்றனர். அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஆவணங்களோடு நிரூபிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அடுத்த நான்கு மாதங்களில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி செய்த ஊழல்களை நிரூபித்து தண்டனை பெற்று தருவோம்" என்றார்.

மாரிதாஸ் அரசியலில் இருந்து விலகுகிறாராம்

Velmurugan Balasubramanian
: · அரசியலில் இருந்து விலகுகிறேன் - மாரிதாஸ் திமுகவை வேரறுப்போம் என்று சொன்னவர் பட்டியலில் மற்றுமொருவர் தற்போது விடைபெறுகிறேன் என்று ஒதுங்குகிறார். மாரிதாஸ் விதைத்த நஞ்சு கொஞ்சமல்ல. தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் கூட்டியும் காட்டியும் கொடுக்கும் வேலையை கடந்த 4 வருடங்களாக செய்து வந்தார். போராடிய விவசாயிகளை நக்சலைட்டுகள் என்றார்
போராடிய மாணவர்களை தீவிரவாதிகள் என்றார்
போராடிய அரசு ஊழியர்களை ஊழல்வாதிகள் என்றார்
கம்யூனிஸ்டுகளை சீனக் கைக்கூலிகள் என்றார்.
முஸ்லீம்களை பாகிஸ்தான் ஏஜெண்ட்டுகள் என்றார்
பெரியாரிஸ்டுகளை கிருத்தவ கைக்கூலிகள் என்றார்.
குணசேகரன்களையும், செந்தில்குமார்களையும் திமுகவின் ஏஜென்டுகள் என்றார்.

1980 முதல் இன்றுவரை பாஜக ஆர்எஸ்எஸ் இந்துத்துவ அமைப்பினர் படுகொலை செய்த இஸ்லாமியர்கள் பட்டியல்

ManjaiVasanthan பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊடுருவியுள்ள அனைத்து வெகுஜன தொடர்பு, திரைப்படம் உள்ளிட்ட அனைத்துமே தீவிரவாதிகள் என்றாலே இஸ்லாமியர்கள் என்ற ஒரு பார்வையை உருவாக்கிவிட்டது, ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்பதை கீழே உள்ள புள்ளிவிபரங்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

1. ராஜஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2006

2. மக்கா மசூதி குண்டுவெடிப்பு அய்தராபாத் 2006

3. சம்ஜோதா விரைவு ரயில் குண்டுவெடிப்பு 2006

4. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2006

5. மாலேகாவ் குண்டுவெடிப்பு 2007

கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா? கிரிப்டோகரன்சிஇந்தியாவில்சட்டபூர்வமானதா?

நிதி ராய் பிபிசி செய்தியாளர், மும்பை A பங்குச் சந்தைகள் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இந்த ஆண்டில், முதலீட்டு உலகில் பிட்காய்ன்கள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் மீண்டும் பரந்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, பிட்காய்ன் மதிப்பு ஒரு யூனிட்டின் மதிப்பு ரூ.16 லட்சத்தை (22 ஆயிரம் டாலர்கள்) எட்டியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். மார்ச் மாதம் 5900 டாலர்கள் என்ற நிலையில் இருந்தது. இப்போது 22 ஆயிரம் டாலர்களாக அதிகரித்துள்ளது. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு யூனிட் ஒரு லட்சம் டாலர்கள் முதல் 3.18 லட்சம் டாலர்களை தொடும் என அறிக்கைகள் கூறுகின்றன.

பிட் காயின்

கிரிப்டோ கரன்சி என்பது அரசால் ஒழுங்குபடுத்தப்படாத டிஜிட்டல் பணமாகக் கருதப்படுகிறது. அது ரூபாய் அல்லது டாலர்களாகக் கிடையாது. ஆனால் சரக்குகள் மற்றும் சேவைகள் விற்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

கிரிப்டோ கரன்சியின் இந்த அபாரமான வளர்ச்சி காரணமாக, புதுடெல்லியில் மக்கள் தொடர்பு பணியில் ஈடுபட்டிருக்கும் 34 வயதான ரித்திகா கர் இதில் முதலீடு செய்யும் எண்ணம் பெற்றார். நான்கு மாதங்களுக்கு முன்பு அவர் கிரிப்டோ கரன்சியில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து பிட்காயின்கள் வாங்கினார்.

மீனவர் பிரச்னைக்கு கூட்டு ரோந்து இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை

latest tamil news
dhinamalar :கொழும்பு: தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக ரோந்து மேற்கொள்ள தயாராக உள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  இலங்கை கடலோர காவல் படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள், 40 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின், ஆறு படகுகள் சிறை பிடிக்கப்பட்டன. வீடியோ கான்பரன்ஸ்இதையடுத்து, தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கும்படி, இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்திஉள்ளது.
இது தொடர்பாக, சமீபத்தில், இந்தியா - இலங்கை அதிகாரிகள், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேச்சு நடத்தினர்.    இது குறித்து, இலங்கை மீன்வளத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கை கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைவதால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்., 7 சட்டசபை தேர்தல்...?

தமிழகத்தில்   ஏப்., 7 சட்டசபை தேர்தல்...?
dinamalar : தமிழகத்தில், ஏப்ரல், 7ல் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், ஏப்., 24க்குள் முடிவுகளை அறிவிக்கும் வகையில், ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம் வந்து, விரைவில் அரசியல் கட்சியினருடன் பேச்சு நடத்த உள்ளார்.

இந்த ஆண்டு, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிகிறது. தமிழகத்தில், 15வது சட்டசபையின் பதவிக்காலம், மே, 24ல் முடிவடைகிறது. அதற்குள், 16வது சட்டசபைக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை, தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த, 2016 சட்டசபை தேர்தல், மே, 16ல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை, மே, 19ல் நடைபெற்று, 23ல் பதவி ஏற்பு விழா நடந்தது. 'அக்னி'யில் தவிர்ப்பு!

திமுக சின்னத்தில் போட்டியிடமாட்டோம் – வைகோ அறிவிப்பு!

  webdunia : வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிடும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட திமுக கூட்டணியில் இரண்டு சீட்களைப் பெற்று போட்டியிட்டு வென்றது. ஆனால் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. திமுகவில் இருந்த மற்ற சிலக் கட்சிகள் கூட திமுக சின்னத்தில் போட்டியிட்டன. இந்நிலையில் இப்போது சட்டமன்ற தேர்தலில் மதிமுக தங்கள் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார் பொதுச்செயலாளர் வைகோ.

RSS க்கு இரையாக போகும் ஆர் எஸ் எஸ் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், அர்ஜுன் சம்பத், இளையராஜா, பொ.ராதா....

Image may contain: 3 people
Kandasamy Mariyappan : · நெல்லை திரு. கண்ணன்:!!! 2011 தேர்தல் நேரம், Channelஐ மாற்றும் பொழுது, நெல்லை திரு.கண்ணன் பேசுவதை கேட்க நேர்ந்தது. கலைஞரை அப்படி வசைபாடி கொண்டிருந்தார். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் மிகவும் கண்ணியமான வார்த்தை, "இந்த கருணாநிதி இருக்கானே மகா அயோக்கிய பய, திருட்டு பய" இதுமட்டுமே. மற்றவைகள் எப்படி இருந்திருக்கும். எனது கோபத்தில் TVஐ உடைக்க வேண்டும் என்று தோன்றியது. TVஐ Switch off செய்து விட்டேன் இன்று நெல்லை திரு. கண்ணனின் நிலை!!!???. யார் காப்பாற்றுவார்!!!???
RSSன் பின்னால் செல்லும் சூத்திர சங்கிகளின் கவனத்திற்கு,
நீங்கள் RSS மனது நோகாமல் நடந்து கொள்ளும் வரையில்தான் உங்களுக்கு ஏதோ மரியாதை கிடைப்பது போன்று இருக்கும். சற்றே விலகினால் அது உங்களை காலிலேயே போட்டு மிதிக்கும்.
சூத்திர சங்கி நடிகர் திரு. சிவக்குமார் இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம் பற்றி  சிலாகித்துக் கொண்டிருந்த வரையிலும், ஆகா ஓகோ பேஷ் பேஷ் என்று ஷொன்ன RSS கூட்டம்
ஒருமுறை, ஒரே முறை மாற்றிப் பேசியதும் சிவக்குமாரை வீதியிலேயே போட்டு மிதித்தது.

குஜராத் பொய் பிரசாரங்கள் .. தமிழ்நாடு 40179 ... குஜராத் 11715.. மருத்துவ மனைகளின் படுக்கை எண்ணிக்கை!

Image may contain: ‎3 people, ‎text that says '‎யோசிங்க ஏமாறாதீங்க! தமிழ்நாடு N ה குஜராத் 40179 படுக்கைகள் 11715 படுக்கைகள் கிராமப்புற மருத்துவமனைகளில் படுக்கைகளின் எ ண் ணி எண்ணிக்கை க் திராவிடம் அறிவோம் sivasenaapathy KSivasenap karthikeyasivasenapathy‎'‎‎

Karthikeya Sivasenapathy : · இந்திய மாநிலங்களில் குஜராத்தைப் போல ஒரு மாநிலமும் இல்லை                      திரு. மோடியைப் போல ஒரு சிறந்த நிர்வாகியுமில்லை என்ற ஒரு அப்பட்டமான பொய்யை இந்திய ஊடகங்கள் தூக்கிப்பிடிக்கின்றன.            விளைவு இன்று நம் நாடு சந்தித்து வரும் அவலம் நாம் அனைவரும் அறிந்தது.                      வரும் நாட்களில் திரு.மோடி அவர்களின் குஜராத் பொய் பிம்பங்கள் அனைத்தும் புள்ளி விவரங்களுடன் தோலுரிக்கப்படும்.               மக்களுக்கு அடிப்படைத் தேவையான அரசு மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையில் கூட நம்மை எட்ட முடியாத இவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிப் பேசலாமா?

முதலிரவு அந்தரங்கத்தை சமூக ஊடங்களில் லீக் செய்த கணவர் ... திருப்பதி கோயில் உதவி நிர்வாகி

Hemavandhana - tamil.oneindia.com : ஹைதராபாத்: சொந்த மனைவியை ஒருத்தர் விபச்சாரியாக மாற்றிவிட்டார்.. தங்களது பெட்ரூமில் நடந்த அத்தனை அந்தரங்க வீடியோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.. 

இப்படி ஒரு கேவலமான காரியத்தை செய்தது திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர் என்பதுதான் பெருத்த அதிர்ச்சியே! ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்த்து வருபவர் ரேவந்த்.. இங்கு ஜூனியர் அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்க்கிறார்..                         இவரது மனைவி பெயர் நிரோஷா.. திருப்பதி அருகே உள்ள திம்மா நாயுடு பள்ளியை சேர்ந்தவர். நிரோஷாவை லவ் பண்ணியே ரேவந்த் 4 மாசத்துக்கு முன்பு கல்யாணம் செய்தார்..                          இரு வீட்டு பெற்றோரும் இந்த கல்யாணத்துக்கு சம்மதமும் தந்திருந்தனர்.. நிரோஷாவின் பெற்றோர் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை வரதட்சணையாக ரேவந்த்துக்கு தந்தனர். கல்யாணம் ஆகி ஒரு மாசம்தான் இவர்கள் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.. 

கடத்தல் வண்டியை பத்திரமாக அனுப்பி வைத்த காவல்துறை” : ஆளும் கட்சி துணையுடன் ரேஷன் அரிசி கடத்தல்!

“கடத்தல் வண்டியை பத்திரமாக அனுப்பி வைத்த காவல்துறை” : ஆளும் கட்சி துணையுடன் ரேஷன் அரிசி கடத்தல்!
kalaignarseithigal.com : திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பெரும்புகளூர் கிராமத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில், ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

பின்னர் லாரியை சோதனை செய்தபோது, வாகனத்தில் சுமார் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் இந்தக் கடத்தல் குறித்து நன்னிலம் போலிஸாருக்கு தகவல் அளித்தனர்.   தகவல் கிடைத்த போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, ரேஷன் அரிசி கடத்தல் நடந்திருப்பது உறுதியானது. ஆனால், விசாரணையின் முடிவில் போலிஸார் கடத்தல் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்யாமல், கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தை அரிசியுடன் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் 17 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

dinamalar.com : சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, 100 படுக்கைகள் உள்ள, கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கொரோனா தடுப்பு பணியை, உலக சுகாதாரநிறுவனம் பாராட்டி உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, இன்று முதல், சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய, ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில் நடைபெற உள்ளது.இதற்காக, 47 ஆயிரத்து, 200 கொரோனா தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், 21 ஆயிரத்து, 170 சுகாதார பணியாளர்களுக்கு, தடுப்பூசிக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு மணி நேரத்தில், 25 நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.  ஒத்திகை நடைபெறும் இடங்கள்!

* சென்னை: ராஜிவ் காந்தி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை; நகர ஆரம்ப சுகாதார நிலையங்கள் - சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல்

* நீலகிரி:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, ஊட்டி; குன்னுார் அரசு மருத்துவமனை; நிலக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்

"வனிதா மதில்" வரலாறு படைக்கட்டும்... 1 January 2019 across Kerala .

2019 கேரளாவை அதிரவைத்த வனிதா மதிலுகள் . ஆர் ஆர் எஸ் இன் பெண்ணடிமை கருத்துக்களுக்கு எதிராக கேரளா முழுவதும் பெண்கள் நடத்திய மனித சங்கிலி போராட்டம் அவ்வளவு சுலபத்தில் மறந்து விடமுடியாதது . . வனிதா மதிலுகள் நிகழ்வின் எழுச்சியை குறித்து பல பாடல்கள் வெளியானது . அவற்றில் இந்த பாடல் மிகவும் உத்வேகம் ஊட்டுவதாக இருக்கிறது . கேரளாவில் பெண்கள் மீது நிலவிய கொடிய அடக்கு முறைகளை மீண்டும் கொண்டுவர முயலும் சனாதனவாதிகளுக்கு சம்மட்டி அடியாக இந்த பாடல் அமைந்துள்ளது . அந்த கொடுமைகளை மீண்டும் "திரிச்சு கொண்டு வராண்டா"...... .

 

Sivakumar Nagarajan : · இன்று கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் "வனிதா மதில்" என்னும் மாபெரும் நிகழ்வு நடைபெற உள்ளது...! நீதியற்ற முறையில், சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள் போன்ற வெவ்வேறு காரணங்களால் ஒடுக்கபட்டு நீதிமறுக்கப்பட்ட ஒரு பிரிவினரை, அந்த அநீதியிலிருந்து விடுவிக்க நடக்கும் முயற்சிகள் அனைத்தும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்...! ஜாதிய ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் என்ற முறையிலும், பெண்கள் என்ற முறையிலும் இந்த கொடுமைகளை மிக அதிகமாக அனுபவித்து வரும் நிலை இந்தியாவில் இந்த நவீன காலத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது சமூக வளர்ச்சிக்கு முரணான விஷயங்கள் ஆகும்...

ஒரு காலத்தில் கேரளாவில்...இத்தகைய கொடுமைகள் இந்தியாவின் மற்ற பகுதிகளை விடவும் அதிகமாக இருந்து வந்தன...
ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, சட்டம்பி சாமிகள், அய்யா வைகுண்டர் போன்றோர் இத்தகைய அநீதிகளுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடிகளாக செயல்பட்டனர்...

சென்னையில் ஊழியர்களை உயிரோடு கொளுத்த முயற்சி.. வெளியானது சிசிடிவி.. மக்கள் அலறல்

 Velmurugan P  - //tamil.oneindia.com :   சென்னை: சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் இரவில் கடையை அடைக்கும் நேரத்தில் வந்தவர்கள் கேக் கேட்ட போது தராமல் பேக்கரியை மூடியதால், உரிமையாளரை கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பல். காலையில் கடையை பெட்ரோல் உற்றி கொளுத்தி அராஜகம் நடத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருபவர் முருகன்(45) இவர் நேற்றிரவு 10.19 மணியளவில் கடையை மூடிக் கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் வாங்க நான்கு பேர் கடைக்கு வந்திருக்கிறார்கள். புத்தாண்டு என்பதால் 10 மணிக்குள்ளாக கடையை மூட வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருந்துள்ளார்கள்.

பொருள் இல்லை இதனால் இந்த இளைஞர்களுக்கு பொருட்கள் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியிருக்கிறார். அத்துடன் கடையை அடைக்க முயன்றுள்ளார். அப்போது இளைஞர்கள் எப்படி பொருள் இல்லை என்று சொல்லலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி; அவசர கால பயன்பாட்டுக்கு பரிந்துரை

thinathanthi ": கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.                                             முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, ஓராண்டுக்கு முன்பாக சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்திவருகிற கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா இன்னும் போராடுகிறது.                             உலகளவில் அமெரிக்காவை தொடர்ந்து, கொரோனாவின் மோசமான கோரப்பிடியில் சிக்கியுள்ள 2–வது நாடு என்ற பெயரை இந்தியா பெற்றுள்ளது. ஆனாலும், இந்த ஓராண்டு காலத்தில் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான போராட்டத்தால், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.                                நல்ல சுகாதார கட்டமைப்புகளை கொண்டு, தரமான சிகிச்சைகள் அளிக்கப்படுவதால் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. >நேற்றைய நிலவரப்படி, 130 கோடிக்கு மேல் மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில், கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை வெறும் 2.54 லட்சம்தான் என்பது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது.

எம்ஜியார் அம்பிகா - ராதா சகோதரிகளுக்கு 40 ஏக்கர் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ... அதுதான் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டுடியோ

Image may contain: 13 people, people standing

தலபுராணம்-மெட்ராஸில் இருந்த பிற ஸ்டூடியோகள்… - Kungumam Tamil Weekly  Magazine

Kuttimani Thala : · குறை சொல்ல வில்லை ஆனால் நிகழ்வை சொல்லவேண்டும் அல்லவா !! நிறைய மக்கள் கேட்கிறாங்க. சரி. எம்ஜியார்க்கு கிட்னி பிரச்சனையாகி திடீரென்று மயக்கமாகி விட்டார்.      அப்போது இப்போது போல் பெரும் மருத்துவ வசதி கிடையாது. முண்ணனி நரம்பியல் நிபுணர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஜப்பானில் இருந்து டாக்டர் கானு வரவழைக்கப்பட்டார். அவர் மிக பிஸியான டாக்டர்       இப்போது போல் அடிக்கடி விமான வசதிகளும் கிடையாது. ஆர் எம் வீரப்பன் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடம் சொல்லி, சிங்கப்பூர் - இந்தியா விமானம் மூன்று மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு, டாக்டர் கானு ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் வந்து, அந்த விமானம் பிடித்து சென்னை வந்து எம்ஜியாருக்கு, சிகிச்சையளிக்க, எழுந்து உட்கார்ந்தார் எம்ஜியார்.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

திமுக கூட்டணியில் ஒவைசி ? .. மாநாட்டில் பங்கேற்றுகிறார்

Image may contain: 2 people, text that says 'புதிய தலைமுறை உண்மை டனுக்குடன் NALANDA INTL.PUBLIC SCHOOL CBSE RESIDENTIAL -NATIONA RANK KRISHNAGRL 428212547 HOSUMPL 99252123151 VETTURPA N2I2RIET திமுக மாநாட்டில் பங்கேற்கிறார் ஓவைசி! ஜன.ல் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இதயங்களை இணைப்போம் மாநாட்டில் AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்பு on 01|01|2021 www.puthiyathalaimurai.com follow'
  nakkeeran :திமுக மாநாட்டிற்கு ஓவைசி வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் நிறுவனரும்,  நாடாளுமன்ற  உறுப்பினருமான ஓவைசியை திமுகவின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் மாநிலச் செயலாளர் மஸ்தான் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் 'இதயங்களை இணைப்போம்' என்ற திமுகவின் மாநாட்டிற்கு வருகை தருமாறு திமுக சார்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட ஓவைசி அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 6-ஆம் தேதி 'இதயங்களை இணைப்போம்' என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. இதன்மூலம், தமிழக அரசியலிலும் ஓவைசியின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளைத் திறக்கலாம்!" - பினராயி விஜயன் அறிவிப்பு!

nakkeeran : கேரளாவில் ஜனவரி 5-ஆம் தேதி முதல், திரையரங்குகளைத் திறக்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுமதியளித்துள்ளார்.    
kerala

கேரள மாநிலத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா  தடுப்பு  நடவடிக்கை காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டிருந்த  நிலையில், தற்போது கேரள முதல்வர் பல்வேறு தளர்வுகளை இன்று (01.01.2021) வெளியிட்டுள்ளார். ஜனவரி 5-ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்களில் வழிபாடு, கலை நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடத்தினால், 100 பேரும், வெளியே நிகழ்ச்சிகள் நடத்தினால், 200 பேரும் பங்கேற்கலாம் என்பன உட்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கோவிஷீல்டு?

விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கோவிஷீல்டு?
minnambalam : இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டுக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.    இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமீப நாட்களாகக் குறைந்து வருகிறது. அதேசமயத்தில் 3 தடுப்பூசி நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஒப்புதல் கேட்டு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.     மாடர்னா, பிஃபைசர், கோவிஷீல்டு என மூன்று தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கேட்டு அந்தந்த மருந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்தியாவில் உள்ள குளிர் கிடங்குகளில் சேமிக்க வசதியாக இருப்பதாகக் கூறி கோவிஷீல்டுக்கு முதலில் ஒப்புதல் வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாகத் தகவல்கள் தெரிவித்தன.

கொரோனாவை கட்டுப்படுத்திய கபசுரக்குடிநீர் – ஆராய்ச்சி முடிவு!

 puthiyamugam.com :ஆபத்தான தொற்று நோய்கள் பரவும் சமயத்தில் எல்லாம் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் என்ற பரிந்துரைகளை கேட்க முடிந்தது. சிக்கன்குனியா, கோவிட் அல்லது கொரோனா தொற்று நோய்கள் பரவியபோது இதைக் கேட்க முடிந்தது. கொரோனா தொற்றுக்கு கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தபோது ஆங்கில மருத்துவ மேதைகள் கேலி செய்தார்கள். அது பயனளிக்காது என்றுகூட சிலர் சொன்னார்கள்.  ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கபசுர குடிநீரை நோய் எதிர்ப்பு சக்திக்காக அரசாங்கமே மக்களு வழங்கியது. அதுதான் தமிழகத்தில் நோய் பாதிப்பிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்று கூறப்பட்டது.

நித்தியானந்தா கைலாசா இருப்பது Vanuatu Island! . காட்டிக்கொடுத்த வீடியோ! அரெஸ்ட் எப்போது?

Indian godman Nithyananda running his account from Vanuatu? |

nakkheeran.in - தாமோதரன் பிரகாஷ் L கைலாசா நியாபகமிருக்கா? கரோனா காலத்தில் மறந்து போயிருந்ததை, லாக்டவுன் தளர்ந்து, விமான சர்வீஸ்கள் மெல்ல தொடங்கி, தடுப்பூசிகளும் வரும் நேரத்தில் கைலாசாவை மீண்டும் நினைவூட்டியிருக்கிறார் நித்யானந்தா.   சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.                              அதில், ‘கைலாசா நாட்டிற்கு வர விரும்புவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். கைலாசாவிற்கென தனியாக 'விசா' எடுக்கத் தேவையில்லை. இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்ல ஒருவார 'விசா' எடுத்தால் போதும். கைலாசாவிற்கு வருவதற்காக முன்பதிவு செய்தவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்தால் அங்கிருந்து 'கருடா' எனப்படும் தனியார் விமான சர்வீஸ்கள் மூலம் அவர்கள் கைலாசாவிற்கு அழைத்துவரப்படுவார்கள்.                             அப்படி வருபவர்கள் கைலாசாவில் மூன்று நாட்கள் தங்கலாம், சிவபெருமானை (நித்திதான்) நேரடியாகச் சந்திக்கலாம்’ என்று அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை வழக்கில் நித்யானந்தா குற்றவாளி.                        அவரை இந்திய நீதிமன்றங்கள் விசாரணைக்கு அழைத்து வாரண்ட்டுகள் பிறப்பித்துள்ளன. ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடித்துக் கொண்டுவர ‘ரெட் கார்னர்' நோட்டீஸ் எனப்படும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வேதேச போலீஸ் உதவியும் நாடப்பட்டுள்ளது.

வியாழன், 31 டிசம்பர், 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இ பி டி பி கூட்டணி மணிவண்ணன் யாழ் மாநகர புதிய மேயராக வெற்றி பெற்றார்

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட்டை விட ஒரு மேலதிக வாக்குகளைப் பெற்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவாகியுள்ளார். 

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன், 21 வாக்குகளைப் பெற்று முதல்வராகத் தெரிவானார். எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான ஆனல்ட் 20வாக்குகளைப் பெற்றார். யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 45 உறுப்பினர்களில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் மகாலிங்கம் அருள்குமரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் 3 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்.             மீதமான 41 உறுப்பினர்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 10 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் உட்பட 21 உறுப்பினர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவு வழங்கினார்கள். 

பிகாரில் ஆளும் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 17 எம் எல் ஏக்கள் தேஜஸ்வி யாதவின் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தாவுகிறார்கள் . பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்கிறது

ஆளும் நிதிஷ்குமாரின் JD (U)  ஜன தளத்தை சேர்ந்த 17 எம் எல் ஏக்கள் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜன தளத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது . 

இது நடந்தால் பிகாரில் நடக்கும் பாஜக நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து போகும் . புதிய ஆண்டில் பிகாரில் புதிய ஆட்சி உருவாகும் சாத்திய கூறுகள் உள்ளது

அதிமுக விளம்பரமும் சன் டிவியும்.. தமிழகத்தின் நம்பர் ஒன் டிவி ய முடக்குவது தான் அவர்கள் டார்கெட்?

Image may contain: 2 people, text that says '#வெற்றிநடை போடும்_ தமிழகம் #Vetrinadai Podum Thamilagamae #Admk_Song #Admk_ part 2 Press toe ifull screen 0:58 1:00 தமிழகம்'
Devi Somasundaram : அதிமுக விளம்பரமும் சன் டிவியும்.. நேற்று எடப்பாடி அரசு விளம்பரம் சன் டிவில வந்துச்சுன்னு பொங்கின சில நடுனிலைகள்.. திமுகவுக்கு ஒன்னும் தெரியாது,அல்லது திமுகவை விட தனக்கு எல்லாம் தெரியும்னே அட்வைஸ் இந்த தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் சந்துல சிந்து பாடும் ஆட்கள் தொல்லை மிடில.... அட்லிஸ்ட் நாம பேசும் டாபிக் என்ன, அதை உள் விவரம் என்னன்னு அறிந்தாவது பேசலாம் ..ஆனா நானும் போராளி தான்னு காட்டிக்க பேசும் அரசியல் தான் காமடி . சரி இப்ப விளம்பரத்துக்கு வருவோம்...தரப்படுவது அரசு விளம்பரம் .அதை போட முடியாதுன்னு சொன்னா அதை காரணம் காட்டி அரசு கேபிள் சன் டிவிய தடை செய்ய முடியும்.
அரசு கேபிள் தான் அதிகம் மக்களை சென்றடைகிறது ..இப்ப மறுத்து சானலை ப்ளாக் செய்யப்பட்டா தேர்தல் சமயத்தில் திமுக விளம்பரங்களை சாணக்கியா டிவி போடுமா ? .
வீம்பிற்கு எதையாவது செய்து, தெர்தல் நேரத்தில் அடிமைகள் சேனலை மொத்தமா பிளாக் பண்ணிட்டா நம்ம வீராப்பு வீராசாமிகள் எல்லா வீட்டுக்கும் நேரில் போயி, திமுக விள்ம்பரத்தை எல்லாம் லைவ்வா நடிச்சுக் காட்டிட்டு வருவாங்களா.? .

காப்பரேட்டு விவசாயம்... பெட்ரோல் விலை தினமும் ஏறுவது போல விளைபொருட்கள் விலைகளும் உயரும் .. பஞ்சாப் விவசாயிகள் போராட காரணம் இதுதான்

No photo description available.
கார்ப்பரேட் விவசாய பொருட்கள்
kalidasan Swaminathan : · படத்தில் நீங்க பார்ப்பது அம்பானி ரிலையன்ஸ் ஜியோ jio பருப்பு மூட்டை. வெயில் மழை என்று பாராமல் விதைத்து அறுவடை செய்து விற்க சென்றால் தரம் சரியில்ல, நிறம் சரியில்லை, விலை போகாது என்று கூறி குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்க கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் அடுத்த விளைச்சலுக்கு என்ன விதைக்க வேண்டும், அதையும் எங்கு வாங்க வேண்டும், எப்படி விதைக்க வேண்டும் என்று உத்தரவு போடும் அளவிற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயத்தில் தலைதூக்கியுள்ளது.  இதை சட்டரீதியாக அனுமதிப்பது தான் வேளாண் சட்டம்.  இது போதாதென்று அனைத்து விதைகளுக்கும் காப்புரிமை என்ற பெயரில் அடிமைப் படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது கார்ப்பரேட் நிறுவனங்கள். காப்புரிமை பெற்ற விதைகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த விவசாயிகளுக்கு அனுமதி கிடையாது. மீறினால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்கள் மற்றும் கோடிக்கணக்கில் நஷ்டஈடு கேட்டு வழக்கும் தொடர்வார்களாம்.

சன் டிவி குழுமம் மீது திமுக ஆதரவாளர்கள் கடுமையான விமர்சனம் ! ... உங்க பூஜாரிதனமும் வேண்டாம் ..பொங்கச்சோறும் வேண்டாம் .

Image may contain: 1 person, text that says 'நல் ஆளுமையில் No.1 மாநிலம் மா லை முரசு செய்திகள் 31.12.2020 சன் தொலைக்காட்சிக்கு திமுக எம்.பி. கண்டனம் ஒன்று தொழில் செய்யுங்கள், இல்லை கட்சிக்கு விசுவாசமாக இருங்கள், உங்கள் செயலை தொண்டர்கள் இலேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சன் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அதிமுக விளம்பரத்திற்கு திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார் கண்டனம் artત dishtv 556 146 ww.malaimurasu.com 566 556 60 AKSHATA JAK 112 172 109 195'
Elengovan K Dev : சன்டிவியில் அதிமுக விளம்பரமா? உடன்பிறப்புகளின் ஆதங்கம் அரசு விளம்பரத்தை வாங்க மறுத்தால் அரசுகேபிளில் பின்னுக்கு தள்ளப்படலாம் அதைவிட சன்டிவியின் பங்குகள் பொதுவில் இருப்பதால் பாதிக்கப்படலாம் என்பதை மறுப்பதற்கில்லை. சன்குழுமம் வியாபார நிறுவனம் லாபம் நோக்கே பிரதானம் இருந்துவிட்டுப்போங்கள் ஆட்சிக்கட்டிலில் வந்தவுடன் உங்கள் நெருக்கத்தை காட்டாதீர்கள.... குங்குமம் வார இதழில் இலவசபொருட்கள் கொடுத்து உங்கள் வியாபாரத்தை பெருக்க ஒட்டுமொத்த வார இதழ்களையும் திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள்.... தினகரன் இதழை வாங்கி நாடார்இன ஓட்டுக்களை திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள் அதைவிட ஒரு ரூபாய்க்கு விற்று உங்கள் வியாபாரத்தை உயர்த்தி ஒட்டுமொத்த தினசரி நாளிதழ்களை திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள் ..
சன்டிவி மூலம் ஒட்டுமொத்த தொலைக்காட்சி நிறுவனங்களையும் திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள் ..
சன்பிக்சர்ஸ் ஆரம்பித்து ஒட்டுமொத்த சினிமாத்துறையையும் திமுகவிற்கு எதிராக திருப்பினீர்கள். 
திமுக ஆட்சிக்கட்டிலில் இல்லாதபோது சன்பிக்சர்ஸ் எத்தனைபடங்களை எடுத்தீர்கள்? தொடர் சன்பிக்சர்ஸ் தயாரிப்பு விளம்பரத்தால் மக்களையே திமுகவின்பால் முகம்சுழிக்கசெய்தீர்கள்
கலைஞர் எடுக்கவேண்டாம் என்று கூறியும் கருத்துகணிப்பு நடத்தி மதுரை தினகரன் எரிப்பு சம்பவத்தால் ஆட்சிக்கு கெட்டபெயர் உருவாக்கினீர்கள் ...
2ஜி பொய்பிம்பத்தை ஊதி பெரிதாக்கி திமுகவிற்கு இழிவை ஏற்படுத்தினீர்கள் ...
திமுக ஆட்சிகட்டிலை பிடிக்க உள்ளநிலையில் ஓஓடி தளத்தை ஆரம்பிக்கபோகிறீர்கள் அதில் உங்களின் அதிகாரத்தால் மீண்டும் திமுகவிற்கு கெட்டபெயரே வரும்...

பாகிஸ்தானில் கோவிலை தீ வைத்து எரித்து, இடித்து அழித்த ஜமாத் உலேமா இ இஸ்லாம் எஃப் கும்பல்

maalaimalar.com :பாகிஸ்தானில் உள்ள ஒரு இந்து மத கோவில் தீ வைத்தும் இடித்தும் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. இந்து மத கோவிலை தீ வைத்து எரித்து, இடித்து அழித்த கும்பல் - பாகிஸ்தானில் தொடரும் கொடூரம்
இந்து மத கோவில் தீ வைத்து எரிப்பு, இடிப்பு
லாகூர்: பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களை அந்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் ஆதரிக்கின்றன.
இதற்கிடையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கரக் மாவட்டம் தெறி என்ற கிராமத்தில் இந்து மத கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் அப்பகுதியில் வசித்துவரும் இந்துக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துப்புரவு தொழிலாளி!

minnambalam : துப்புரவு தொழிலாளியாகப் பகுதி நேர வேலை பார்த்து வந்த பெண் தற்போது பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பதானபுர ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி அலுவலகத்தையும் அங்குள்ள நாற்காலிகளையும் இதுநாள் வரை சுத்தம் செய்து வந்த ஆனந்தவள்ளி(46) என்ற பெண் தற்போது பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆனந்தவல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் அதே அலுவலகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு, 2011ல் ரூ.2,000 ஊதியத்துக்குப் பகுதி நேர துப்புரவுத் தொழிலாளியாக பணியில் சேர்ந்தார். இதையடுத்து சம்பளம் ரூ.6,000மாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் பஞ்சாயத்துத் தலைவராக வெற்றி பெற்று கேரளா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

காவல் நிலையத்திலேயே திருட்டு: பெண் போலீஸ் கைது!

minnampalam :பொதுவாக வெளியில் எங்கேயாவது திருட்டு சம்பவம் நடந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்... ஆனால் காவல் நிலையத்திலேயே திருடு போனால் எங்கே சென்று புகார் அளிப்பது....
காவல் நிலையத்திலேயே திருட்டு: பெண் போலீஸ் கைது!

கூடங்குளம் காவல் நிலையத்தில் திருடிய பெண் போலீஸ் தனது கணவருடன் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கூடங்குளம் காவல் நிலையத்தில் இருந்து திருட்டு போனதாக புகார் எழுந்தது.

காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை .. வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுபாடு தளர்வு

maalaimalar :தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார். வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுபாடு தளர்வு: காணும் பொங்கலுக்கு கடற்கரைகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளங்களுடன் அமலில் இருந்து வருகிறது தமிழக இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

திராவிட கருத்தியல் பேசும் பக்கங்களை முடக்கும் ஃபேஸ்புக்” - தி.மு.க தலைவருக்கு ‘We Dravidians’ கடிதம்!

”திராவிட கருத்தியல் பேசும் பக்கங்களை முடக்கும் ஃபேஸ்புக்” - தி.மு.க தலைவருக்கு ‘We Dravidians’ கடிதம்!
.kalaignarseithigal.com : ஃபேஸ்புக் நிறுவனத்தின் சங்பரிவார அணுகுமுறை குறித்தும், பா.ஜ.கவிற்கு எதிரான கருத்தியல் பேசும் ஃபேஸ்புக் பக்கங்கள் முடக்கப்படுவது குறித்தும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ‘வீ திராவிடியன்ஸ்’ முகநூல் ஏடு சார்பாக கடிதம் எழுதியுள்ளனர்.

‘வீ திராவிடியன்ஸ்’ குழுமத்தின் கதிர் ஆர்.எஸ் எழுதியுள்ள இக்கடிதத்தில், "நாங்கள் வீ திராவிடியன்ஸ் என்ற ஆங்கில முகநூல் ஏட்டை கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இவ்வேட்டின் தமிழ் தெலுகு கன்னடம் மலையாளம் இந்தி ஆகிய பதிப்புகள் தங்களை நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைப் பெற்று கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வேடு மேலும் வளர்ந்து தற்போது மராட்டி பெங்காலியையும் சேர்த்து மொத்தம் 8 மொழிகளில் செயல் படுகிறது. திராவிட கருத்தியலைப் பரப்பும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு எந்த லாப நோக்கமுமின்றி இயக்கப் பற்றுள்ள பல மாநில இளைஞர்களின் உதவியுடன் இந்தியாவில் திராவிட கருத்தியலுக்காக தேசிய அளவில் செயல்படும் ஒரே ஏடாக திகழ்கிறது வீ திராவிடியன்ஸ் ஏடு.

நூலக உரிமை மறுக்கப்பட்ட மனிதர்கள் . தமிழக அகதி முகாம்களில் வாழும் இலங்கை ..

sramakrishnan.com : நூலக மனிதர்கள் : மறுக்கப்பட்ட புத்தகங்கள் சிறைச்சாலையில் கூடப் புத்தகம் படிக்க அனுமதி தரப்பட்டிருக்கிறது. சிறிய நூலகங்கள் இயங்குகின்றன. ஆனால் அதை விடக் கொடுமையாக முகாமில் இருந்தவர்களுக்குப் படிக்க வசதியில்லை. பொதுநூலகங்களும் அவர்களை அனுமதிக்கவில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலை இரண்டு பேர் எங்கள் கிராமத்தின் நூலகம் முன்பாக நிற்பதைக் கண்டேன். அப்போது நூலகம் திறக்கப்படவில்லை. காலை ஏழு மணியிருக்கும். இருவருக்கும் இருபதை ஒட்டிய வயது . மெலிந்த தோற்றம். பொருத்தமில்லாத மேல்சட்டை தொளதொளவெனத் தொங்கிக் கொண்டிருந்தது. ஒருவன் அடர்ந்த தாடி வைத்திருந்தான்.
கிராம நூலகம் என்பதால் அதைத் தூய்மைப்படுத்தி வைக்கும் பொறுப்பு மாரியம்மாள் என்ற பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது வீட்டில் தான் நூலகத்தின் சாவி இருக்கும். அவர் காலையில் நூலகத்தைக் கூட்டிப் பெருக்கி துடைத்துப் போவார். சில நாட்கள் அவரே காலையில் நூலகத்தைத் திறந்து வைத்துவிடுவார்.

மழைக்காக ஹோமம்,வேள்வி, யாகம், அபிஷேகம், ஜபம், திருமஞ்சனம்.. ... அப்பட்டமான பொய்கள்!

Image may contain: text that says 'ஹோமம் செய்து பாடல் பாடி மழையைத் தருவிக்க இயலுமெனில்.உலகின் உலகின் பல பாகங்களில் உள்ள பாலைவனப் பகுதிகளை சோலை ஆக்கியிருக்கலாமே?! குறைந்த பட்சம் வறண்டு போன இராமநாதபுரம் மாவட்ட தண்ணீர் பிரச்சனையையாவது போக்கியிருக்கலாமே?'
Dhinakaran Chelliah :· #மழைக்காக வருண யாகம் பொய் மழைக்காக ஹோமம், வேள்வி, யாகம், அபிஷேகம், ஜபம், திருமஞ்சனம், பதிகம் எனும் அப்பட்டமான பொய்! “மழைக்காக வருண யாகம் : சிவனுக்கு ருத்ராபிஷேகம் விஷ்ணுவுக்கு திருமஞ்சனம் - அறநிலையத் துறை ஆணை” எனும் அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையால் வெளியிடப்பட்டது. இதற்காக இதுவரை எத்தனை கோடிகள் செலவிடப்பட்டதோ தெரியவில்லை.முக்கியமாக மழை வரவழைக்க வேண்டி தனியாக எந்த ஒரு ஹோமமோ,யாகமோ, வேள்வியோ, யக்ஞமோ,மந்திரமோ, ஸ்லோகமோ ஏதும் இல்லை. யாராவது அப்படியொரு மந்திரம் யாக வேள்வியின் போது சொல்லப்படுவது இருந்தால், நூலின் ஆதாரத்துடன் தெரியப் படுத்தவும். இது ஒரு புறம் இருக்க, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள ஹோமம் வேள்வி, யாகம் அபிஷேகம், ஜபம் எதிலும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் அதன் அர்த்தங்களையும் பார்ப்போம்.பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள்!
முதலில் வருண ஜபம் அல்லது வருண காயத்ரி மந்திரம் பற்றிப் பார்ப்போம்:
Aum Jalbimbaye Vvidmahe
Nila Purushaye Dhimahi
Tanno Varunah Prachodayat
Translation:
Om, Let us meditate on the reflection of water
O person of ocean blue, give me higher intellect
And let the God of water illuminate my mind

புதன், 30 டிசம்பர், 2020

நேர்மை எனும் பொய் ! தமிழருவி மணியனின் பயந்தாங்கொள்ளித்தனம் என்பது ஒழுக்கமோ நேர்மையோ அல்ல

Image may contain: 1 person

Abilash Chandran : · நேர்மை எனும் பொய் தமிழருவி மணியன் தான் ஒரு நேர்மையாளர், ஒழுக்கசீலர் அதனால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்கிறார். இது உண்மையெனில் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வரும் டீலிங்கில் அவருக்குப் பின்னிருந்த இயக்கியவர்கள் யார் என வெளிப்படையாக சொல்லட்டும். காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் பாஜகவின் அர்ஜுனமூர்த்தியும் எப்படி ஒரே கட்சியில் இருவேறு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட முடியும் என விளக்கட்டும். அவர் செய்ய மாட்டார். 

ஏனென்றால் ரகசியங்களைப் பாதுகாப்பதே அவரைப் போன்ற அரசியல்வாதிகளின் பிரதான லட்சியம். ரகசியத்திற்கும் நேர்மைக்கும் தூரத்து உறவு கூட இல்லை. காந்தி ஒரு உதாரணம். அவர் எதையும் மறைத்ததில்லை, தனது பாலியல் விழைவுகளைக் கூட பிரசுரித்தார். மணியன் போன்றவர்களோ திரைமறைவு வேலைகளை செய்து அதிகாரத்தைப் பிடிப்பது, அது குறித்த உண்மைகளை வெளியே சொல்லாமல் காப்பது என இருக்கிறார். காந்தி இருந்திருந்தால் ஒரு பிய்ந்த நெருப்பை எடுத்து இவரை சாத்தியிருப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.....

அதானி, அம்பானிக்கு சொந்தமான 1,500 ... செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கிய விவசாயிகள்!!

Image may contain: one or more people, text that says 'இந்தியா X அதானி, அம்பானிக்கு சொந்தமான 1,500க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கிய விவசாயிகள்! 11:18 am Dec 29, 2020 |dotcom@dinakaran.com(Editor) f G fio जियो से जुड़ें বिলा अपला बदले செல்போன் கோபுரங்கள் அதானி அம்பானி'

 dinakaran  : சண்டிகர் : டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அம்மாநிலத்தில் உள்ள 1500க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 விவசா ய சங்கங்களை சேர்ந்தவர்கள் டெல்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தது.

இதனிடையே டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப்பில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், அதானி, அம்பானி போன்றவர்களின் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான செல்போன் கோபுரங்களை அடித்து நொறுக்கி வருகின்றனர். வேளாண் சட்டங்களால் பெருநிறுவனங்களுக்கே லாபம் என குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், தங்கள் கோபத்தை அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளிகளின் மீது காட்டுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் பிரச்சாரத்திற்கு அழைத்துவரப்பட்ட பழனியம்மாள் 65 வயது மூதாட்டி மரணம்

முதல்வர் பிரச்சாரத்திற்கு அழைத்துவரப்பட்ட பெண் பலி : இழப்பீடு வழங்க கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
kalaignarseithigal.com:  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு வந்து உயிரிழந்த 100 நாள் வேலைத்திட்டப் பயனாளி குடும்பத்திற்கு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்குக் கட்டாயப்படுத்தி அழைத்துவரப்பட்டபோது விபத்தில் உயிரிழந்த 100 நாள் வேலைத்திட்டப் பயனாளி குடும்பத்திற்கு அ.தி.மு.க சார்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரு தினங்களாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

நடிகை சித்ரா விவகாரம்! ஹேம்நாத் ரவியின் அப்பா காவல் ஆணையரிடம் கொடுத்த பரபரப்பு புகார்!

ddd

nakkeeran - தாமோதரன் பிரகாஷ் - அரவிந்த் : நடிகை சித்ராவின் தற்கொலை, மர்ம மரணம் என்கிற திசையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. ஈ.வி.பி ஃபிலிம் சிட்டிக்கு எதிரே உள்ள “"பிரசன்ட்ஸ் ஸ்டெ' ஹோட்டலில் சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் காணப்பட்டார். இந்தச் சம்பவம் நடந்தது சரியாக இரவு 2.45 மணிக்கு என போலீசாரால் சொல்லப்படுகிறது நெடுஞ்சாலையை ஒட்டி அந்த ஹோட்டல் இருந்தாலும், உள்ளே செல்வதற்கு 30 அடி சாலை உள்ளது. அந்த 30 அடி சாலையில் சென்றால் தனித்தனி குடியிருப்புகளாகக் கட்டப்பட்ட ஹோட்டல் அறைகள் வரும். நாள் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் என வாடகை வசூலிக்கப்படும் அந்த அறைகளில் நடப்பவை வெளியே இருக்கும் யாருக்கும் தெரியாது.

 2.45 மணிக்கு நடந்த இந்த மரணத்தைப் பற்றி விசாரிக்க 45 நிமிடம் கழித்துத்தான் போலீசார் வந்திருக்கிறார்கள். சித்ரா எத்தனை மணிக்கு அந்த ஹோட்டலுக்கு வந்தார் என்பதற்கு எந்தப் பதிவும் இல்லை.     சித்ராவின் அறையிலிருந்து ஹேம்நாத் எத்தனை மணிக்கு வெளியே சென்றார் என்பதற்கான பதிவு எதுவும் இல்லை. சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பதை ஹேம்நாத்தும் அந்த ஹோட்டல் மேனேஜரான கணேஷ் என்பவரும்தான் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் சித்ராவை தூக்கில் இருந்து கழட்டி இறக்கியிருக்கிறார்கள். இதுவே சட்டவிரோதம் என்கிறார்கள் காவல்துறையைச் சார்ந்தவர்கள்.

இலங்கையின் 117 வயது மூதாட்டி காலமானார் - "மூத்த தாய்" என அரசால் சான்றளிக்கப்பட்டவர்

வேலு பாப்பானி
BBC :வேலு பாப்பானி இலங்கையின் மிகவும் வயதான பெண் என அறியப்பட்ட வேலு பாப்பானி என்பவர் 117ஆவது வயதில் நேற்று செவ்வாய்கிழமை (29ஆம் தேதி) மரணமடைந்தார். களுத்துறை மாவட்டம் - தெடம்கொட பிரதேச செயலகத்திலுள்ள க்ளோடன் தோட்டத்தின் ஹெதரலியா பிரிவில் இவர் வசித்து வந்தார். உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக நேற்று 29ஆம் தேதி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றிரவு 7 மணியளவில் அவர் மரணம் அடைந்தார்.      வேலு பாப்பானியின் தேசிய அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டையில் உள்ள தகவலின் பிரகாரம், அவர் 1903ஆம் ஆண்டு மே மாதம் 03ஆம் தேதி பிறந்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்களை பாதிக்கும் ஸ்மார்ட் கார்டு திட்டம் ரத்தாகும் : துரைமுருகன் பேச்சு

 dhinakaran :பொன்னை:வேலூர் அடுத்த காட்பாடி தொகுதி முத்தரசிகுப்பம் கிராமத்தில் நேற்று, அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற திமுக மக்கள் சபை கூட்டம் பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் கருணாகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:   ரஜினி தனது உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டுதான் அரசியல் கட்சி துவங்கும் முடிவை கைவிட்டு இருக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழக அரசு பொங்கலுக்கு ₹2,500 வழங்கும் திட்டத்தை திமுக தடுக்கவில்லை. மக்கள் பணியாற்றக்கூடிய அரசு ஊழியர்கள் மூலமாகத்தான் வழங்க வேண்டும், பொங்கல் தொகையாக ₹5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றுதான் திமுக வலியுறுத்தி வருகிறது.

அரசியலில் ஈடுபட மாட்டேன்"- தமிழருவி மணியன் அறிவிப்பு!

Image may contain: 1 person, text that says 'புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் தற்போது இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் -தமிழருவி மணியன் வமுறை NALANDA Puthiya Thalaimurai PTTVOnlineNews INTL.PUBLIC NALANDANT.PUBLICSCHOOL SCHOOL CBSE- ishtv) SUN VOeocon KRISHNAGIRI 1556 PuthiyaTalalmuralmagazine ச Puthiyathalaimurai 30/12/2020 www.puthiyathalaimurai.com'

nakkheeran.in - பா. சந்தோஷ் : காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. தி.மு.க.வில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்;    நான் போகிறேன்; வர மாட்டேன். 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொது வாழ்க்கைப் பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம்." இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.,,, நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதில்லை என்று நேற்று அறிவித்த நிலையில், தமிழருவி மணியனும் அரசியலில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார்..... முன்னதாக அரசியல் கட்சித் தொடங்குவேன் என அறிவித்திருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு இரண்டு கண்கள்; ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி: அர்ஜுன மூர்த்தி பேட்டி

i-have-two-eyes-one-is-modi-the-other-is-rajini-arjuna-murthy
hindutamil.in : எனக்கு இரண்டு கண்கள். ஒன்று மோடி, மற்றொன்று ரஜினி என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார். பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார். தான் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு அர்ஜுன மூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் ரஜினி.இதற்கிடையே தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரபூர்வமாக நேற்று அறிவித்தார் ரஜினி. அதில் அர்ஜுன மூர்த்திக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அர்ஜுன மூர்த்தி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ''எனக்கு இரண்டு கண்கள். ஒன்று மோடிஜி மற்றொன்று ரஜினி. ஏனெனில் இவர்கள் இருவருமே இந்திய மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள். தற்போது மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார். இதை எதிர்த்தோ, மறு கருத்துக் கூறியோ, விமர்சனமோ செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

பறையிசையோ ஒப்பாரியோ எம் மக்களிசையல்ல,அது ஆதிக்க அடக்குமுறையின் குறியீடு ?

தலித்துகள் அனைவரோடும் போட்டிபோட்டு வளர்ந்துவிட்டாலும்கூட அவன்மீது தொடர்ச்சியாய் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து அவனையும் நம்பவைக்கும் முயற்சி.நீ டாக்டராயிருக்கலாம் வக்கீலாய் இருக்கலாம் ஏன் கட்சித்தலைமையாய்க்கூட இருக்கலாம் ஆனால் நீ கொட்டடித்த கூட்டம்தான் என்று தொடர்ச்சியான பிம்பத்தை அவன்மீது ஒட்டுவதற்கு வசதியாய் அதேசமயம் அவன் அதுபற்றிப் பெருமிதப்படும் வகையின் அவன் சார்ந்த கூட்டத்தையே பயன்படுத்தும் சங்கிகள் உக்தி என்றே படுகிறது.
Image may contain: outdoor

Kalidoss Tamilmani : · இப்பவும் சொல்கிறேன், பறையிசையோ ஒப்பாரியோ எம் மக்களிசையல்ல,அது ஆதிக்கம் எம்மீது சுமத்திய அடக்குமுறையின் குறியீடு.அதை ஏதோ எம்மக்களின் பெருமித வாழ்க்கைபோலக் காட்டி நிறுவமுயல்வதென்பது மலம் அள்ளுவோர் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மோடி எழுதிய புத்தகத்துக்குச் சமமானது.பறையிசை என்பது போர்களில்,வேட்டையாடப்போகையில்,திருவிழாக்களில் பூசாரி முதற்கொண்டோருக்கு சாமி(!) வரவழைப்பதற்காய் என மனிதனுக்குள்ளிருக்கும் மிருகத்தனத்தை வெளிப்படுத்தி வெறியேற்றப் பயன்படுத்திய ஒரு வெறியிசை அவ்வளவுதான்,அதேபோல் ஆதிக்கக்கூட்டத்து வீட்டுச் சாவுகளில் அழுவதற்குக்கூட சேரிப்பெண்கள் தேவைப்பட்டார்கள் பிற்பாடு இவ்வகை ஒப்பாரிப்பெண்கள் ஜெயலலிதாவின் சிறைப்பயணங்களுக்கு பூவை கூட்டத்தால் வாடகைக்கு விடப்பட்டார்கள்.....

துரைமுருகனிடமிருந்து ஸ்டாலினை காக்க வேண்டும்!- வீடியோ!

minnambalam : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மீதும், அவரது மகனான வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் தொடுத்து 40 நிமிடங்களுக்கு மேல் ஓடக் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பிரமுகரான குடியாத்தம் குமரன்.

 திமுகவின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளராகவும், தலைமைக் கழகப் பேச்சாளராகவும் இருந்த குடியாத்தம் குமரன் வேலூர் எம்பி தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றிபெற்ற சில நாட்களில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டார்.                        கலைஞர் மறைந்த சில நாட்கள் கழித்து அவருக்கு வேலூரில் இரங்கல் கூட்டம் நடந்தபோது அதில் குடியாத்தம் குமரன் பேச முயன்றிருக்கிறார். ஆனால் அவர் பேசவேண்டாம் என்று துரைமுருகன் சொல்லிவிட்டார். ஆனபோதும் குமரன் அந்த நிகழ்வில் கலைஞர் பற்றிப் பேசியிருக்கிறார். தன்னை துரைமுருகன் பேச விடாமல் தடுத்த கோபத்தில் அன்று இரவு சக நிர்வாகியிடம் செல்போனில் பேசும்போது துரைமுருகனைப் பற்றி கடுமையாகப் பேசியிருக்கிறார் குமரன்.                   அந்த நிர்வாகி அதை அப்படியே ஒலிப்பதிவு செய்து கதிர் ஆனந்துக்கு அனுப்பி வைத்துள்ளார். கதிர் ஆனந்த் இதை தன் அப்பா துரைமுருகனிடம் போட்டுக் காட்ட கோபமான துரைமுருகன் அதை அப்படியே பத்திரமாக வைக்கச் சொல்லியிருக்கிறார்.

அறந்தாங்கி சிறுமி பாலியல் குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை... 6 மாதத்தில் தீர்ப்பு!

பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனை: 6 மாதத்தில் அதிரடி தீர்ப்பு!

minnambalam.com பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனை: 6 மாதத்தில் அதிரடி தீர்ப்பு! புதுக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்தால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு போக்சோ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது. எனினும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் ஜூன் 30ஆம் தேதி புகார் அளித்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ராம்மோகனராவின் லேப்டாப்பில் கள்ளக் காதலியின் நிர்வாண படங்கள்

Image may contain: 1 person, text

Balasubramania Adityan T : · *சேகர் ரெட்டி அலுவலக ஹாட் டிஸ்க் மற்றும் ரகசிய டைரியில் அடுத்ததாக சிக்கப்போகும் அதிமுக புள்ளிகள் ரெய்டுக்கென ஐஆர்எஸ் அதிகாரிகள் மற்றும் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக தகவல்* ------------------- *வரை முறை மற்றும் பாரபட்சமே இல்லாமல், அதிமுக முக்கிய புள்ளிகள் மற்றும் அனைத்து மட்ட அதிகாரிகள் என மிகப் பெரிய அளவில் சூறையாடலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதையே ராமமோகன் ராவ் வீடுகளில் சிக்கிய தங்கக் குவியலும் சேகர் ரெட்டியின் பணம் மற்றும் தங்கக் குவியல் முறைகேடாக சம்பாதிததை வெளிக்காட்டுகிறது. 

சிபிஐ மற்றும் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய எடப்பாடி. பழனிச்சாமி, அன்புதான், செந்தில் பாலாஜி, நத்தம் விஸ்வநாதன் ஞானதேசிகன், சேகர் ரெட்டி, ராமமோகன ராவ், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், லோதா அண்ணாநகர் சேட்டு, ரமேஷ், சேலம் இளங்கோவன், ஆகியோர்களை தொடர்ந்து வருமானவரித்துறை மற்றும் சிபிஐ -யின் வளையத்தில ரெட்டியின் நேரடி மற்றும் நெருங்கிய அரசியல் வட்டாரத்தில் உள்ள அடுத்ததாக சிக்கப் போகும் அரசியல் முக்கிய புள்ளிகளான விஜயபாஸ்கர் எஸ் ஆர் விஜயகுமார், உள்பட பல அதிமுக புள்ளிகள் மற்றும் 12 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இந்த ரகசிய டைரியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*

தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்.. சிறுதெய்வ வழிபாடு தமிழ்ப் பண்பாட்டு அசைவு – ஆய்வாளர்களே!

Mathimaran V Mathi : · சிறுதெய்வ வழிபாடு தமிழ்ப் பண்பாட்டு அசைவு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் * அது ஒரு நகரம். அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் – கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற பார்ப்பனர்கள்தான் அந்தக் கோயிலிலும் கடவுளுக்கான தகவல் தொடர்பு கருவியாக இருந்தார்கள். பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சைவப் பிள்ளைகள், நாட்டுக் கோட்டை செட்டியார்கள், உடையார்கள், முதலியார்கள் உட்பட இதர ஜாதி இந்துக்களான சூத்திரர்களும், அவர்களால் தீண்டப்படாதவர்களாக நடத்ப்படும் தலித் மக்களும் அருகருகே, நின்று உரசிக்கொண்டு சிவனை வழிபட்டு பிறகு கலைந்து, தங்கள் தங்கள் கிராமத்துக்குப் போக, பிதுங்கி வழியும் பேருந்தில் முண்டியடித்து ஏறி, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, தூங்கி விழுந்து ஊர் போய் சேர்ந்தார்கள்.
ஆம், பார்ப்பனர்களைத் தவிர வேறு ஜாதி-வேறுபாடுகள் அற்ற சமூகம்.
காட்சி மாறுகிறது உள்ளூர்த் திருவிழா, ஆய்வாளர்களின், அறிவாளிகளின், தமிழினவாதிகளின் வார்த்தையில் சொல்வதென்றால், சிறுதெய்வ வழிபாடு அல்லது தமிழ்த் தெய்வ வழிபாடு, தமிழனின் அடையாளம்.
ஊரே திருவிழா உற்சாகத்தில். ஆத்தா பல பேர் மீது இறங்குவதும், மலையேறுவதுமாக இருக்கிறாள். சாமி ஆடிக்கொண்டு இருக்கிறது அந்த ஊர். ‘சாமி’ வந்து ஆடும் அளவிற்கு ‘அருள்’ இல்லாதவர்கள், சாராயம் குடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.

இந்திய சினிமாத்துறைக்குள் உடுருவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள்

Thamizh Ezhil : அடிப்படைவாத இஸ்லாமிய சக்திகள் மிகத் திட்டமிட்ட முறையில், எவ்வித சந்தேகமும் வராத விதமாக இந்திய சினிமாத் துறைக்குள் ஊடுருவலை மேற்கொண்டுள்ளன. ஜமாதி இஸ்லாமி இந்தியாவின் முதல் பயங்கரவாத இயக்கம் இது 

இஸ்லாத்திற்கும் குரானும் ஹதீஸும் போதாது என்ற நிலையை பின் வந்த முல்லாகள் உணர்ந்தார்கள் அதன் காரணமாக நுழைக்கப்பட்டது இஜ்திஹாத் -இஜ்திஹாதின் உருவாக்க படவில்லை என்றால் இன்றைய நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.

உச்சகட்ட வெறுப்பு.. நடுரோட்டில் பேனரை கிழித்து எரித்து.. தாறுமாறாக திட்டிய ரஜினி ரசிகர்!

 

சாய் லட்சுமிகாந்த் : பாஜகவிற்கு தற்போதுள்ள மிகப்பெரிய நெருக்கடி என்ன?? தேனியில் ஓட்டு மெஷினை மாற்றியதை போல் திமுகவுக்கு விழுந்த ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை எல்லாம் ரஜினி பெயர்ல எழுதினா சந்தேகம் வராதுனு நினைச்சு தான் ரஜினியை கூட்டி வர பிரம்மபிரயத்தனம் பன்னாங்க. ஆனா இப்ப ஓட்டு மெஷினை மாற்றி வைத்து தனக்கு தான் இவ்வளவு ஓட்டு விழுந்ததுனு சொன்னா ஒரு பய நம்ப மாட்டான். மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம... பாவம்யா... தோல்வியை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதுவும் தேர்தல் முடிவின் போது அவர்கள் டெப்பாசிட் கூட வாங்க இயலாது போகும் போது ரொம்பவே கேவலப்பட்டு தான் போவார்கள்.

 
Velmurugan P - tamil.oneindia.com ; திருச்சி: ரஜினியின் அறிவிப்பைக் கேட்டு கோபமடைந்த ரஜினி ரசிகர் - நடுத் தெருவில் ரஜினி பேனரை எரித்ததுடன் திட்டிவிட்டுச் சென்றார். நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கி, அரசியலுக்கு வருவார் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 'உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கட்சித் தொடங்கவில்லை, அரசியலுக்கு வரமாட்டேன்' என அறிவித்தார் 
 நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், என்‌ உயிர்‌ போனாலும்‌ பரவாயில்லை, நான்‌ கொடுத்த வாக்கை தவற மாட்டேன்‌, நான்‌ அரசியலுக்கு வருவேன்‌ என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால்‌ நாலு பேர்‌ நாலுவிதமா என்னைப் பற்றிப் பேசுவார்கள்‌ என்பதற்காக என்னை நம்பி என்‌ கூட வருபவர்களை நான்‌ பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால்‌ நான்‌ கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. இதை அறிவிக்கும்‌ போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்‌ தான்‌ தெரியும்‌

51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொன்ற 28 வயது கணவன்

  maalaimalar :திருவனந்தபுரம்: கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்த ஷஹாகுமாரி மற்றும் அருண் என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது. 51 வயதான ஷஹாகுமாரிக்கும் 28 வயதான அருணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் - மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்துவந்துள்ளனர். இதற்கிடையில், இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமார் தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார். மேலும், இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.

செவ்வாய், 29 டிசம்பர், 2020

மருத்துவர்களை அம்பட்டர்களாக அழைத்த பார்ப்பனீய மனு அநீதி! அம்பட்டர், நாவிதர், பரியாரி போன்ற .

Barber workers with no income as salon shops and beauty salons are not open  || சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படாததால் வருவாய் இன்றி தவிக்கும்  முடிதிருத்தும் ...
Sundar P · யார் அம்பட்டர்? அம்பட்டர், நாவிதர், பரியாரி போன்ற சொற்களால் அழைக்கப்படும் ஒரு சாதியினர் அவ்வவ்வட்டாரத்தில் மருத்துவர்களாகவும் மருத்துவச்சிகளாகவும் இருந்தனர், இருக்கின்றனர். இந்த மருத்துவரையும் மருத்துவச்சியையும் சூத்திரராக்கிய பெருமை வர்ணாசிரம தர்மத்திற்கே உண்டு, வர்ண தர்மத்தின் படி மருத்துவ தொழில் என்பது தீட்டு, அதாவது தீண்டத்தகாத தொழில். ஐரோப்பியர்கள் இந்தியாவிற்குள் வந்த பின் ஏற்பட்ட கல்வி கொள்கையின் அடிப்படையில் பிறாமணர்கள் இந்த தீண்டத்தகாத தொழிலான மருத்துவத்தை கைப்பற்றிக்கொண்டனர்.
அம்பட்டர் என்ற சொல் அம்பஷ்ட என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது என்று சொல்லுகின்றனர்,
ஆனால் அம்பஷ்ட என்றால் பிறாமண ஆணுக்கும் வைஷ்ய பெண்ணிற்கும் பிறந்த பிள்ளை என்று பொருள்,
பனிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் எழுத்துக்களில் அம்பட்டர் என்பது ஒரு பொருளாழமிக்க தமிழ் சொல் என்று குறிக்கப்பட்டுள்ளது.
”அம்பட்டர் -> (அம் = அழகிய, பட்டர் = தொழிலாளி => அழகுக் கலைத் தொழிலாளி அல்லது பிறரை அழகுபடுத்தும் தொழிலாளி)” என்று குறிப்பிட்டுள்ளார்.

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: கள்ள சாவி போட்டு எடுத்தது அம்பலம்

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: கள்ள சாவி போட்டு எடுத்தது அம்பலம்

dailythanthi.com 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இருந்த பெட்டகத்தை கள்ள சாவி போட்டு எடுத்தது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் அம்பலமானது.   சென்னை, சென்னையில் சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினார்கள். சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.

மீன்பிடி பிரச்சினைக்கு நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்திய இலங்கை மீனவர்கள் விருப்பம்.. மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

 


tamil.theleader.lk :குறுகிய கடல் மீன்பிடித்தல் தொடர்பான பல தசாப்தங்களாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அரசாங்கங்கள் நிரந்தர தீர்வைக்பெற்றுக் கொ டுக்காமையினால்  இப்பிரச்சினையை திர்ப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நேருக்கு நேர் கலந்துரையாடலுக்கு இரு நாட்டு மீனவர்களும் விருப்பம்தெரிவித்துள்ளனர்.  இதற்கான அறிவிப்பை இரு நாட்டு மீன்பிடி தலைவர்களும்  வெளியிட்டுள்ளனர்

இந்தியாவின் தெற்கு முனை மற்றும் இலங்கையின் வடக்கு முனையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கும் பாக்கு நீரிணையைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் மீன் இருப்புக்கள் குறைந்துவிடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கை கடற்கரையில் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல் இரு நாடுகளுக்கும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.

பிஹாரில் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைக்கத் தயாராகும் நிதிஷ்குமார் . JDU - BJP உறவுக்கு லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல்

bjp

hindutamil.in : பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக உறவிற்கு லவ் ஜிகாத் சட்டத்தால் சிக்கல் உருவாகி உள்ளது. இதனால், தம் முதல்வர் பதவியை பாஜகவிடம் ஒப்படைத்து விட்டு தேசிய அரசியலில் தீவிரம் காட்டத் தயாராகிறர் நிதிஷ்குமார்.   நாடு முழுவதிலும் நடைபெறும் காதல் திருமணங்களில் இந்து பெண்களை மணமுடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மீது ‘லவ் ஜிகாத்’ புகார் எழுந்துள்ளது. இதனால், பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்தை தடுக்க மதமாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகி வருகிறது.   முதல் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் அமலானதை அடுத்து, மத்தியபிரதேசமும் இச்சட்டத்தை அமலாக்குவதில் இறங்கியுள்ளது. தொடர்ந்து இந்த சட்டம், பாஜக ஆதரவில் ஆளும் பிஹாரிலும் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.

சசிகலா ஜனவரி 27-ந்தேதி சிறையில் இருந்து விடுதலை!

maalaimalar :சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின் போது சிறையில் இருந்துள்ளதால் அந்த காலத்தை தண்டனையில் இருந்து கழித்துக்கொள்ள வேண்டும் என அவரது வக்கீல்கள் சார்பில் சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அதற்கு சிறை நிர்வாகத்தில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில் சசிகலா இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் 2017-ம் ஆண்டில் இருந்து இதுவரை முன் கூட்டியே விடுதலையானவர்களின் பெயர் பட்டியலை உதாரணம் காட்டியுள்ளார்.
மற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்தது போல் சசிகலாவையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார்.

திமுக ஆட்சி வந்த உடன் மக்கள் கொடுத்த மனுக்களை தூசுதட்டி தீர்த்து வைப்போம்: முக ஸ்டாலின்

Velmurugan P - tamil.oneindia.com : திருவண்ணாமலை : "மக்கள் மனு கொடுத்தால் குப்பைத் தொட்டியில் போடுவது பழனிசாமியின் பழக்கமாக இருக்கலாம்; நாங்கள் அரசிடம்தான் கொடுத்தோம்; தி.மு.கழக அரசு அமைந்தவுடன் அந்த மனுக்களைத் தூசுதட்டி எடுத்து குறைகளைத் தீர்த்து வைப்போம்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்தார். "கொள்கை சார்ந்த அரசாகவும் - மக்கள் நலத்திட்ட உதவிகளைச் செய்யும் அரசாகவும் விளங்கும் தி.மு.க. அரசு அடுத்து அமைந்தவுடன் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்றும் ஸ்டாலின் கூறினார். திருவண்ணாமலை 'தமிழகம் மீட்போம்' கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், கொரோனா காலத்தில் 'ஒன்றிணைவோம் வா' என்ற அடிப்படையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்தோம்! அரசாங்கம் செய்ய வேண்டியதைப் பொதுமக்கள் மனுக்களாக எங்களிடம் கொடுத்தார்கள். 

இரும்புக் கடையில் பாடப்புத்தகங்கள்: கல்வித் துறை ஊழியர் கைது!

 இரும்புக் கடையில் பாடப்புத்தகங்கள்: கல்வித் துறை ஊழியர் கைது!

miinambalam :தமிழக பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி ஊழியர் மற்றும் இரும்பு கடை உரிமையாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   மயிலாடுதுறை அருகே முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்குச் சொந்தமாகப் பழைய இரும்பு கடை உள்ளது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது.

மூட்டை மூட்டையாகப் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து கோட்டாட்சியர் மகாராணி தலைமையிலான குழு இரும்புக் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது.    இதில் அங்கு 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டிற்குரிய, 6-12 ஆம் வகுப்பு வரையிலான 5 ஆயிரம் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.

ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா!

 ரஜினியின் வீடு முன்பு ரசிகர்கள் தர்ணா!

Image may contain: 11 people

minnambalam :ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவர் அரசியலுக்கு வரக்கோரி ரசிகர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.            30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வர வேண்டுமென அழைத்துக் கொண்டு இருந்தனர். ஆனால், அப்போதெல்லாம் அரசியலுக்கு வரும் நிலைப்பாட்டை எடுக்காத ரஜினிகாந்த் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி கட்சி ஆரம்பிக்கிறேன் என அறிவித்தார். ஆனால், கடந்த மூன்று வருடங்களாக அதுதொடர்பான பணிகள் நடைபெறவில்லை.    

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் கொரோனா பாதிப்பு கருதி அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், மக்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகத் தெரிவித்தார் ரஜினி.  சமீபத்தில் சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கொரோனா தாக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாதென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த ரஜினிகாந்த், மக்கள் மன்றம் செயல்படும் எனவும் கூறினார்.

பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன

maalaimalar : பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜாவுக்கு சொந்தமான 160 பொருட்கள் 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டன. பிரசாத் ஸ்டூடியோவை காலி செய்தார் இளையராஜா - 2 லாரிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன

>சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனி அரங்கத்தில் தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார்.இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டூடியோ அரங்கை பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதன் பிறகு இளையராஜாவை எந்த பிரச்சினையும் இன்றி அங்கு எப்போதும் போல செயல்பட 

அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரசாத் ஸ்டூடியோ முன்பு போராட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பிரசாத் ஸ்டூடியோ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி இளையராஜா இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.,,,,, 

நடிகர் ரஜினிகாந்த் : கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை ! அதிரடி அறிவிப்பு வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!"

Image may contain: 7 people, text that says 'SUN NEWS எனக்கு ஆண்டவன் கொடுத்த எச்சரிக்கை "என் உடல்நிலை கருதி தயாரிப்பாளர் திரு திரு.கலாநிதி மாறன் அவர்கள் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்தி வைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் ணம் என்னுடைய உடல்நிலை -ரஜினி SUNNEWSTAMIL SUNNEWS SUNNEWSLIVE.in BREAKING 29-DEC-20'

nakkheeran.in - பா. சந்தோஷ் ": இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் மூன்று பக்கங்களைக் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.              அதில் கூறியிருப்பதாவது; "என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம், ஜனவரியில் கட்சித் தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி 'அண்ணாத்த' படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றேன். 

கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கரோனா பரிசோதனை செய்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தி, முகக்கவசம் அணிவித்து, மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தி வந்தோம். இவ்வளவு கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கரோனா இருக்கிறது என்று தெரிய வந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்வித்தார். எனக்கு கரோனா நெகட்டிவ் வந்தது. ஆனால் எனக்கு இரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. 

கர்நாடகா துணை சபாநாயகர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Image may contain: 1 person, text that says 'NEWS TAMIL #BIGNEWS 29 DEC 2020 BREAKING 니 கர்நாடக மாநில துணை சபாநாயகர் தற்கொலை! கர்நாடக மாநில துணை சபாநாயகர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை; சிக்மகளுரு அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு, தற்கொலை கடிதமும் சிக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்! AAADHAR AKSHAYA JAK VKDIGITAL SUN 036 191 071 105 082 026 051 www.news7tamil.live FOLLOW US ON TACTV@ TCCL NETWORK กಿ 147 056 207 AMNG 109 TATA Dsinet 1546 783 AppStore'


webdunia :கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் தர்மே கவுடா என்பவர் சற்றுமுன் ரயில் முன் பாய்ந்து  மரணம் அடைந்ததாகவும், அவரது சடலமாக மீட்கப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவலால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு அருகே ரயில் பாதையில் கர்நாடக சட்டமேலவை துணை சபாநாயகர் அவர்களின் தர்மே கவுடா சடலம் கிடந்ததாகவும், சடலத்துடன் கடிதம் ஒன்றையும் மீட்டு போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது                     .மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர் தர்மே கவுடா அவர்கள் கடந்த 15ஆம் தேதி சபாநாயகர் இருக்கையில் தர்மே கவுடா அமர்ந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பதும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சபாநாயகர் இருக்கையில் அமர மறுத்துவிட்டதால் தர்மே கவுடா அமர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.....    ஆனால் தர்மே கவுடாவை வலுக்கட்டாயமாக காங்கிரஸ் உறுப்பினர்கள் அப்புறப்படுத்தினர் என்றும், இதனால் அன்றைய தினம் கர்நாடக சட்டமேலவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது