
savukkuonline.com :
மோடி

உள்ளிட்ட பிஜேபி தலைவர்கள், அறிவியலுக்கு புறம்பாக, வாய்க்கு வந்ததை
எல்லாம் உளறுவது ஒன்றும் புதிதல்ல. இந்த முட்டாள்த்தனமான உளறல்களுக்கு
அடிப்படை அமைத்துக் கொடுத்ததே மோடிதான்.

அக்டோபர் 2014ல், பிரதமராக ஒரு நிகழ்ச்சியில்
பேசிய மோடி, “மகாபாரதத்தில் கர்ணன் அவர் தாயின் வயிற்றிலிருந்து
பிறக்கவில்லை. மகாபாரத காலத்திலேயே, ஜெனடிக் அறிவியல் வளர்ந்திருந்தது.
அந்த அடிப்படையில்தான் கர்ணன், அவரின் தாயின் வயிற்றில் பிறக்காமல்
வெளியில் பிறந்தார்.
நாம் அனைவரும், பிள்ளையாரை வணங்குகிறோம். அந்த
காலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யும், அறுவை சிகிச்சை நிபுணர்
இருந்ததால்தான், மனிதனின் உடலில் யானையின் தலையை வைக்க முடிந்தது”
என்றார். மோடி இவ்வாறு பேசியது, மும்பையில் மருத்துவர்களின் இடையே என்பது
குறிப்பிடத்தக்கது.
பிஜேபி எம்.பி பிரக்யா தாக்கூர், பசு மாட்டின்
மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும் என்றார். ஜனவரி 2019ல், இந்திய
அறிவியலாளர்கள் மாநாட்டில் பேசிய, ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்
ஜி.நாகேஸ்வர ராவ், மரபணு ஆராய்ச்சி மற்றும், செயற்கை கருத்தரிப்பு
மூலமாகத்தான், மகாபாரதத்தில் கவுரவர்கள் 100 பேர் ஒரே தாய்க்கு
பிறந்தார்கள் என்றார். திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், மகாபாரத
காலத்திலேயே இண்டெர்னெட் இருந்தது என்று கூறினார்.
இப்படி இவர்கள்
உளறுவது புதிதல்ல என்றாலும், இத்தகைய முட்டாள்த்தனங்களுக்கு, அங்கீகாரம்
அளித்து, மக்கள் வரிப் பணத்தில் இது குறித்து ஆராய்ச்சி செய்வது, இப்போது
தொடங்கியிருக்கிறது.