மின்னம்பலம் :நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்குத் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடந்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீதுர்கா என 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில்,
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும்” என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை ஆகியவை குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சனி, 5 ஜூன், 2021
நீட் விலக்கு ! முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு! நீட் தேர்வு சட்டப்படி செல்லாது .. அன்றே விரிவாக கூறியவர்
தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
மாலைமலர் :தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது.
இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
கலைஞரை தவறாக காட்டி முகநூல் பதிவு .. அதிமுக பிரமுகர் கைது- (அதிமுக ஐ டி விங் ரவுடி?)
LRJ : இந்த செய்தியையும் கைதுசெய்யப்பட்ட நபரின் சம்பந்தப்பட்ட Facebook பதிவையும் ஒரு நண்பர் அனுப்பி இந்த கைது சரியா என்று கருத்துக்கேட்டார்.
கேட்டவர் ஊடகர். கருத்துசுதந்திர பார்வையை முன்வைத்த கேள்வி அது.
சம்பந்தப்பட்ட Facebook பதிவு வக்கிரம் நிறைந்தது பொதுவில் பகிரத்தக்கதல்ல என்பதால் இங்கே பகிரவில்லை.
கைதாகியிருப்பவர் அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப்பிரிவின் இணைசெயலாளர் என்று இந்த செய்தி சொல்வதால்,
இவரை இந்த விவகாரத்தில் ஒரு அரசியல்வாதியாகவே அணுக முடியும் என்பதால்.
இந்த விவகாரத்தை ஒரு அரசியல் வினை எதிர்வினையாக பார்ப்பதே சரி என்றேன். ஆனால் அந்த ஊடகர் அதை ஏற்கவில்லை.
பேச்சினூடே இவரது பதிவைவிட மிக மோசமாக முன்னணி செய்திப்பத்திரிகைகளான குமுதமும் விகடனும் கலைஞரைப்பற்றியும் அவர் குடும்பத்து பெண்கள் பற்றியும் அட்டைப்படக்கட்டுரைகளே வெளியிட்டதை சுட்டிக்காட்டி,
“கவிஞர் தஞ்சை இராமையாதாஸ்" பிறந்ததினம்இன்று. ( 05 ஜூன் 1914 )
Sundar P : தஞ்சை இராமையாதாஸ் .. (சூன் 5, 1914 - சனவரி 15, 1965)
கவிஞர், திரைப் பாடலாசிரியர், வசனகர்த்தா....
ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பாமரர்களும் இரசிக்குமாறு எளிமையான பாடல்கள் மூலம் சமுதாயத் தத்துவக் கருத்துகள் கொண்ட பாடல்களை இயற்றியிருக்கிறார்.
தஞ்சை இராமையாதாஸ் சூன் 5, 1914 இல் தஞ்சாவூர், மானம்பூச்சாவடியில், நாராயணசாமி - பாப்பு ஆகியோருக்குப் பிறந்தார்.
இவருக்கு தாயராம்மாள், அரங்கநாயகி என்று இரண்டு மனைவிகள்...
இராமையாதாஸ் தஞ்சை புனித பீட்டர் பள்ளியில் படித்து பின்னர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்றார். தஞ்சாவூரிலேயே கீழவாசல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
திரைப்படத்துறையில் கொண்ட ஈடுபாடு காரணமாக
ஜெகந்நாத நாயுடு என்பவரின் நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பின்னர் தானே "ஜெயலட்சுமி கான சபா" என்ற நாடகக் குழுவை ஏற்படுத்தி தானே நாடகங்களை எழுதி நாடெங்கும் மேடையேற்றினார்.
ஒன்றிய அரசு என்ற ஒற்றை வார்த்தையில் அதிரடி .. முரசொலி முழக்கம்
tamil.oneindia.com :சென்னை: ஒன்றிய அரசு.. இந்த வார்த்தைதான் இன்று கடும் விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது சிலரிடம்.
இது தவறு, பிரிவினைவாதப் போக்கு இது என்றெல்லாம் பாய்ந்து கொண்டுள்ளனர்.
இந்த ஒற்றை வார்த்தை குறித்து முரசொலி ஒரு தலையங்கத்தை தீட்டியுள்ளது. அதை இப்போது பார்ப்போம்.
'ஒன்றிய அரசு' என்று உச்சரித்துவிட்டாராம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மொத்தமாக சொறிந்து கொண்டு இருக்கின்றன பிரிவினை மூளைகள்!
மக்களை மதத்தால், சாதியால், நிறத்தால், பணத்தால், வர்க்கத்தால், சிந்தனையால், உடலால், உடையால், உணவால், உணர்வால் நித்தமும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் கூட்டத்துக்கு 'ஒன்றியம்' என்று சொல்வது கூட பிரிவினைச் சொல்லாகத் தெரிகிறது.
ஒன்றியம் என்பதே ஒற்றுமைச் சொல். ஒற்றுமையை ஏற்படுத்தப்பயன்படும் சொல்.
அவர்கள் மொழியில் சொல்வதானால் ஒருமைப்பாட்டை உருவாக்க ஒன்றியம் என்ற சிந்தனையால்தான் முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1957 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே 'இந்திய யூனியன்' என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் யூனியன் என்ற சொல்லை அண்ணாவே சொல்லவில்லை, கலைஞரே சொல்லவில்லை என்று சிலர் வரலாறு அறியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.
பத்திரிகை, ஊடகத்துறையினரை முன்களப்பணியாளராக அங்கீகரித்து அரசாணை வெளியீடு : முதல்வர் மு.க.ஸ்டாலின்
கலைஞர் செய்திகள் :பத்திரிகை, ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அதற்கான சலுகை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை பின்வருமாறு “பத்திரிகை, ஊடகப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 4-ம் தேதி அறிவித்தார். இதன்படி, பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றி வரும் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு பணியாளர்கள், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர் அட்டை அல்லது பிரஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும்.
பேஸ்புக் - அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் Facebook
தினத்தந்தி :அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் பேஸ்புக்
அரசியல்வாதிகளுக்கான விதிவிலக்குகளை முடிவுக்கு கொண்டுவரும் பேஸ்புக்
அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
நியூயார்க், உலகின் பிரபலமான சமூக வலைத்தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்று பேஸ்புக். உலகம் முழுவதும் பல கோடி பேர் பேஸ்புக் பயனாளர்களாக இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்கள் பலரும் மக்களுக்கும் தங்களுக்கும் இடையிலான ஒரு பாலமாக பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக்கை பயன்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு பல்வேறு விதிவிலக்குகளை வழங்கியுள்ளது.
அதன்படி அரசியல்வாதிகள் பேஸ்புக்கில் வெளியிடும் கருத்துக்கள் மற்றும் அறிக்கைகள் வன்முறை மற்றும் சர்ச்சைக்குறியதாக இருந்தாலும் கூட இயல்பாகவே அது ஒரு செய்தி மற்றும் பொதுநலன் உடையாதாக கருதப்படுகிறது. இந்த கொள்கையை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கடந்த 2016-ல் கொண்டு வந்தார்.
வெள்ளி, 4 ஜூன், 2021
கொரோனா Task Force தலைவர் பூர்ணலிங்கம்! ( அதிரடி அதிகாரி) கொரோனாவை வெல்லப்போகும் நாள் தொலைவில் இல்லை
உதயசூரியன் : இன்று முதலைமச்சர் ஸ்டாலின் தேர்வு தான் இந்த ஒரு மாதத்தில் அவர் எடுத்த மிகச்சிறந்த தேர்வு எனலாம்.
தலைமை செயலாளர் இறையன்பு, உதயச்சந்திரன் IAS (தனி செயலாளர்), ஷங்கர் ஜிவால் IPS தேர்வுகளை காட்டிலும் இன்றைய திரு பூர்ணலிங்கம் IAS தேர்வு மிகச்சிறந்த ஒன்று. அதிகம் பேசப்படவில்லை. ஆனால் கட்டாயம் பேசப்பட வேண்டிய ஒன்று...
திரு பூர்ணலிங்கம் IAS - இன்று தமிழ்நாடு அரசின் கொரோனா Task Force தலைவராக அறிவிக்கபட்டுள்ளார்.
யார் இவர்.? இவரை தேர்ந்தெடுக்க காரணம் என்ன.? இவருக்கும் திமுக அரசிற்குமான இணக்கம் என்ன.? பார்ப்போம் வாருங்கள் !
தமிழ்நாடு மருந்து பொருள் சேவை (TNMSC) தொடங்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அந்த அமைப்பால் செயல்பட முடியாத சூழல். அந்த நேரம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தலைவர் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றார்..
எல் ஆர் ஜெகதீசன் :சமூக ஊடக ரௌடிக்கூட்டமே கொஞ்சம் பொறுங்கள். உங்கள் energyயை விரயமாக்காதீர்கள்.
LRJ : “மத்திய அரசுக்கு அடிமையா நடந்தா என்ன தப்பு? அவங்களை அனுசரிச்சி போயி மக்களுக்கு நன்மை செய்தா சரிதானே ப்ரூ?” எடப்பாடி பாறைகள்.
“உதய்னாவுக்கு ஜால்ரா அடிச்சா என்னங்க தப்பு? அவர் மூலமா மக்களுக்கு நல்லது நடந்தா சரிதானே புரோ?”
உதயநிதி ரசிகர் மன்ற உறுப்பினர்கள்.
இதுல ஈயத்தைப்பார்த்து இளிச்சதாம் பித்தாளைன்னு இதுக அதுகளைப்பார்த்து அடிமைக்கூட்டம்னு பேசுதுக. கெரகம்.
பகுத்தறிவு, குறைந்தபட்ச சுயமரியாதை, உட்கட்சி ஜனநாயகம் எல்லாம் அடுத்தவனுக்குன்னா ஆயிரத்தெட்டு உபதேசம்.
ஆனா அதுவே நம்ம வீட்டு அராத்து எந்தவித அதிகாரமும் இல்லாமல் முடிசூடாத முதல்வராக வலம் வந்தா அது மக்கள் சேவை. அதுல என்னா தப்புன்னு வியாக்கியானம். மக்களுக்கு நல்லது தானேன்னு நியாயப்படுத்தல். எம்பூட்டு தெளிவு. எம்பூட்டு தெளிவு.
தமிழ்நாடு ... ஒன்றியம் .. இன்றைய உரிமை முழக்கம்?
1. இங்கு 9 விமான நிலையங்கள் உள்ளது, அதில் 4 சர்வதேச விமான நிலையங்கள்.
2. 36,000-க்கும் அதிகமான பெரிய கம்பெனிகள் உள்ள மாநிலம்.
3. உலகில் இன்றளவும் நிலைத்திருக்கும் மிகப்பழைய மாநகரம் இங்கு தான் உள்ளது.
4. உலகில் உள்ள மிகப்பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.
5. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.
6. உலகிலேயே முதலில் கடல்வழி வணிகம் தொடங்கியது இந்த மாநிலம் தான்.
7. உலக தகவல் பரிமாற்றங்கள் மிக விரைவாக செயல்பட காரணமான இ-மெயில் கண்டுபிடித்தவர் இந்த மாநிலத்தை சார்ந்தவர்தான்.
8. உலக வரைபடத்தை வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.
செங்கல்பட்டு HLL (Hindustan Lifecare Limited) மருந்து உற்பத்தி பொதுத்துறை நிறுவனத்தை பாஜக மூடிய வரலாற்றின் பின்னணியும்,
அதை மீட்கப் போராடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் முயற்சிகளும்.
1966ல் இந்திரா காந்தி அம்மையார் முதன்முறை பிரதமராக இருந்தபோது,
அவரது அமைச்சரவையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் மருத்துவர் சுசீலா நய்யார்.
மருத்துவர் சுசீலா நய்யார், அண்ணல் காந்தியடிகளின் மருத்துவர் ஆவார்.
இவரது காலகட்டத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்தை தவைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே இந்த HLL நிறுவனம் ஆகும்.
HLL பயோடெக் நிறுவனமானது, HLL லைப்கேர் (HLL Lifecare) என்ற கேரள அரசுக்கு சொந்தமான (State owned) ஒன்றியப் பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும்.
இந்த HLL லைப்கேர் நிறுவனம் என்பது முன்னாள் ஹிந்துஸ்தான் லேடக்ஸ் (Hindustan Latex Limited) நிறுவனமே ஆகும்.
நிரோத், உஸ்தாத், மூட்ஸ், மாலா-டி (Mala-D) போன்ற கருத்தடை சாதனங்கள் இந்த HLL-ன் புகழ்பெற்ற தயாரிப்புகளே.
5 ஜி ஸ்பெக்ட்ரமுக்கு வழக்கு! நடிகை ஜூகி சாவ்லாவுக்கு .20 லட்சம் ரூபாய் தண்டப்பணம் டெல்லி உயர்நீதி மன்றம்
தினத்தந்தி : 5ஜி தொழில்நுட்பம் தொடரபாக டெல்லி ஐகோர்ட்டில் நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ரூ.20 லட்சம் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
புதுடெல்லி உலகம் முழுவதும் அடுத்த சில வருடங்களில் தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூகி சாவ்லா டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அவர் மனுவில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என அத்தனையும் இந்தக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் என்றும், இன்றைக்கு இருப்பதை விட 100 மடங்கு அதி தீவிரமாக இவை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யவே முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது - வெளியான அதிர்ச்சி தகவல்
மாலைமலர் : தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மும்பையில் தமிழ் பட நடிகைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 3 பேர் கைது - வெளியான அதிர்ச்சி தகவல்
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட நடிகைகளை போலீசார் மீட்டு அழைத்து வந்த போது எடுத்த புகைப்படம்
தானே மாவட்டம் நவ்பாடா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் போலி வாடிக்கையாளரை அனுப்பி சோதனை நடத்தினா். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
அனைத்து துறைகளிலும் தமிழ் யூனிகோடு: தலைமை செயலாளர்!
ஊரடங்கில் சற்று தளர்வு?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
மாலைமலர் :கொரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை தளர்வுகள் இன்றி தொடரலாம் என்ற கருத்துக்களை நிபுணர்கள் கூறினார்கள்.
சென்னை: கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. அந்த மாத இறுதியில் அதன் தாக்கம் மிகவும் அதிகரித்தது.
இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதையடுத்து பல மாநிலங்களில் பொது முடக்கம், ஊரடங்கு என கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டிலும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.
BBC பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி
பிபிசி ;"பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது," என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா.
இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன.
"இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் எங்கு செல்ல வேண்டும்?," "புவி வெப்பமயமாதலின் பாதிப்புகளை விவரிக்க முடியுமா?" - இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாகவும், இயல்பாகவும் பதில் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் நாகையில் இந்த வானொலி நிலையத்தில் பணியாற்றி வரும் நிகழ்ச்சி வழங்குநர்கள்.
பருவநிலை மாற்றம், புயல் அபாயம், கன மழை என இயற்கையாக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தீர்வை தரக்கூடியவர்களாக நாகப்பட்டினத்தில் உள்ள சுமார் 20 கிராமவாசிகள் காணப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதில் சத்தமில்லாமல் ஒரு விழிப்புணர்வை இந்த வானொலி சேவை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 11 வழித்தடத்தில் தனியார் ரெயில் விரைவில் இயக்கம்
மாலைமலர் : தமிழ்நாட்டில் 11 வழித்தடத்தில் தனியார் ரெயில் விரைவில் இயக்கம்
தனியார் ரெயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் நிறைவடைய உள்ளன.
ஆனால் இந்த திட்டத்துக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது.
இதன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் தனியார் ரெயில்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்காக 100 வழித்தடங்களை ரெயில்வே வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த வழித்தடங்களில் 150 தனியார் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 11 ரெயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை-மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மும்பை, மங்களூர், செகந்தராபாத், டெல்லி ஆகிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
“மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
.kalaignarseithigal.com : “மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தென்சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, திருநங்கைகள் - மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
“மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்” : அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு 6 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:-
“"உலகிலே எந்த முதல்வரும் பெற்றிராத பெருமையைக் கொண்டவர் தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர்,
சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர்,
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர்,
வியாழன், 3 ஜூன், 2021
திமுக எதிர்ப்பையும் கலைஞர் எதிர்ப்பையும் கட்டி எழுப்பியது (புலி ஆதரவு) பெரியார் இயக்கங்களே!
அப்படினா தமிழ்நாட்ல இருக்கற பல ஆயிரம் பேர் கூட திமுக எதிர்ப்பு பேசீட்டு இருக்காங்க,,,அதுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் எதிரினு டிக்லர் பண்ணுவீங்களா ??
அதுலயும் எவ்வளவு வன்மம் பாருங்க,,,சிலோன் தமிழர்களாம் !!
எத்தனை ஆயிரம் உயிர்கள் ஈழம் என்ற அடையாளத்திற்காக போராடியிருப்பார்கள் ??
ஆனால் அவர்களை சிலோன் தமிழர்கள் என சிங்களத்திடம் ஒப்படைப்பதில் அப்படி என்ன சந்தோசம் ?? ஆதரவு மனநிலையில் இருப்பவர்களை கூட எதிர் பக்கம் தள்ளி விடுவது தான் இது போன்ற கோமாளிகளின் வேலை !!
செல்லபுரம் வள்ளியம்மை : இலங்கை தமிழர்கள் எல்லோரும் திமுகவுக்கு எதிராகவே இருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்வது இந்த அஷோக் போன்ற ஐ டிகளின் தொழில்
அதற்கு தேவையான ஒரு விளம்பரமாகத்தான் இந்த அடாவடி குரூப் ஈழத்தமிழர்களை பயன்படுத்துக்கிறது
இவர்கள் உண்மை நேர்மை ஏதாவது கொஞ்சமாவது இருந்தால் இவர்கள் முதலில் புலிகளை அளவு கணக்கிலெல்லாமல் கொம்பு சீவிவிட்டு தங்கள் அரசியலை நடத்திய பெரியார் இயக்கங்களை அல்லவா முதலில் திருத்த வேண்டும்?
பெரியார் இயக்கங்களும் திராவிட இயக்கங்களும்தானே சீமான்களை உருவாக்கிய பிதாமகர்கள்?
இன்னும் கூட திமுகவிலேயே எக்கச்சக்கமான புலி ஆதரவாளர்கள் இருக்கிறார்களே?
புலியின் சகோதர படுகொலைகளை விமர்சித்தால் பல திமுக தொண்டர்களுக்கும் சில தலைவர்களுக்கும் கூட வேப்பங்காயாக இருக்கிறதே?
இல்லையென்று கூற முடியுமா? பெயர் விபரங்களும் தேவையா?
யாரவது ஒரு ஈழத்தமிழர் திமுக ஆதரவாளராக இருந்துவிட்டால்,
இவர்களுக்கு வருமே ஒரு கோபம் ..... ? அளவு கடந்தது .
இங்கேதான் இவர்கள் ஒழிந்து கொண்டு இருக்கிறார்கள்
திமுகவுக்கு எதிராக இருக்கும் புலி ஆதரவாளர்களை சமாளிக்கிறேன் என்பதுதான் இவர்களின் தொழில்.
அகர்தலா கோவிட் பாதித்த 225 கர்ப்பிணிகள், ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பு,
தினமலர் : அகர்தலா: கோவிட் பாதிக்கப்பட்ட 225 கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திரிபுரா மாநில அகர்தலா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜெயந்தா ரே தெரிவித்துள்ளதாவது:கோவிட் முதல் அலையின்போது, தொற்று பாதித்த 198 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடைபெற்றது.
அதில் 60 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்தது.
கோவிட் 2வது அலையின்போது 27 பேருக்கு சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.
மருத்துவமனையில் பெருந்தொற்று காலத்தில் குறைந்தபட்சம் தொற்று பாதித்த 225 கர்ப்பிணிகள் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். 225-covid -pregnant
மாநில பாடத்திட்டத்தின் பிளஸ்-2 பொதுத்தேர்வு? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
தினத்தந்தி : மாநில பாடத்திட்டத்தின் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இன்று முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பிளஸ்-2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக இன்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி வருமாறு:-
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பிளஸ்-2 தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது தொடர்பாக, நான் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
கலைஞர் பிறந்தநாளில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் அதிநவீன பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கருணாநிதி பிறந்தநாளில் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
சென்னை:
முன்னாள் முதல்வர் கலைஞரின் ன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
தலைவர் கலைஞர் அவர்கள். தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்து, நல்லாட்சி நடத்தியவர் -
சீர்மிகு திட்டங்களை பார்போற்றும் வகையில் தீட்டிச் செயல்படுத்தியவர் - ஒடுக்கப்பட்ட மக்களின் ஒப்பற்றத் தலைவராக விளங்கியவர் - பெரியாரின் சலியாத உழைப்பும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் அயராத தொண்டும், பேரறிஞர் அண்ணா அவர்களின் பரந்த உள்ளமும் தன்னகத்தே கொண்டிருந்தவர் - உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் - தன் அரசியல் அனுபவங்கள் அனைத்தையும், அடித்தட்டில் வாழ்கிற மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டவர்.
தீப்பற்றி எரியும் ஓலை குடிசைகள் .. குடிசை மாற்றுவாரியம் கண்ட கலைஞர்
செல்லபுரம் வள்ளியம்மை : இது நம்ம ஆளு படத்தில் ஓலைக்குடிசைகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தோடுதான் அந்த படமே ஆரம்பமாகும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் அகோர வெயிலில் ஓலை குடிசைகள் அடிக்கடி எரிந்து சாம்பலாவதை இப்படம் நினைவுக்கு கொண்டுவந்தது
அந்த கீற்று குடிசைகளில் மக்கள் எரிந்து போவதுவும் கூட அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான்
இந்த நிலையில்தான் கலைஞரின் குடிசை மாற்றுவாரியம் செயல் படத்தொடங்கியது.
இந்த திட்டத்தை கலைஞர் அறிவித்த போது இது எப்படி சாத்தியமாகும்?
அன்றிருந்த ஓலைக் குடிசைகள் தேசத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் என்பது சாதாரண மக்களால் நினைத்து கூட பார்க்கமுடியாத ஒரு பெரும் கனவாகும்.
அதிசயம் ஆனால் உண்மை !
கட்டிடங்கள் எழுந்தன ! ஓலைக்குடில்களில் வசித்தவர்கள் அடுக்கு மாடிக்கு குடிபெயர்ந்தார்கள்!
மழைக்கும் புயலுக்கு வெய்யலுக்கும் மின்னலுக்கும் பயந்து தினம் தினம் செத்து பிழைத்த சென்னை ஓலை குடிசை வாசிகள் மாடிவீட்டு மனிதர்கள் ஆனார்கள்
தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படும்” : நிதியமைச்சர் PTR உறுதி!
கலைஞர் செய்திகள் :மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், “மதுரையில் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது, தற்போது தடுப்பூசியை தவிர அனைத்தும் கட்டுபாட்டுக்குள் உள்ளது.
கொரோனா தொற்று குறைய தொடங்கியது இயற்கையாக நடக்கவில்லை.
மதுரையில் விஞ்ஞான ரீதியாக திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கையால் கொரோனா குறைய தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டது.
ஜக்கியிடமிருந்து என் பெண்களை மீட்பேன் -தந்தைக்கு நம்பிக்கை தந்த ஆட்சி மாற்றம்!
நக்கீரன் :ஜக்கியிடமிருந்து என் பெண்களை மீட்பேன் -தந்தைக்கு நம்பிக்கை தந்த ஆட்சி மாற்றம்!
"ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்கப் போன என் இரு மகள் களான லதாவையும் கீதாவையும் மூளைச்சலவை செய்து ஈஷா யோக மையத்திலேயே வைத்துக் கொண்டார் ஜக்கி வாசுதேவ். அவரிடமிருந்து என் இரு மகள்களையும் மீட்டுக் கொடுங்கள்...' என தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற காமராஜ் பல இடங்களில் புகார் அளித்தார்.
"எங்கள் இரு பெண்களுக்கும் மொட்டையடித்து, சாமியாராக ஆக்கியிருக்கிறார் ஜக்கி. இளம் பெண்களுக்கு மொட்டையடித்ததை பார்த்துக்கொண்டு இந்த பெத்தவயிறு பத்திக்கிட்டு எரியுதுங்கய்யா? அவுங்களை ஜக்கியிடமிருந்து மீட்டு கொடுங்கய்யா. எத்தனையோ இடங்களில் புகாரளித்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை...'' என்றார் காமராஜின் மனைவி சத்யஜோதி.
அவர்கள் நம்பிக்கையுடன் நாடியது நக்கீரனைத்தான். இது குறித்து இப்போது பேசும் காமராஜ்... "எங்கள் இரு பிள்ளை களை மீட்டுக் கொடுங்கள் என அர சாண்டவர்களிடமும், காவல் துறை அதி காரிகளிடமும் சொல்லினோம். எந்த இடத் திலும் எங்கள் அழுகுரல் கேட்கவில்லை. கேட்டது நக்கீரனுக்கு மட்டும்தான். நக்கீரன்தான் எங்களை வெளி உலகுக்கு கொண்டு வந்தது.
புதன், 2 ஜூன், 2021
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி உடனே ஆரம்பிக்கவேண்டும்! மத்தியரசுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''முதல்வர் ஸ்டாலின் முயற்சியால், தமிழகத்தில் கோவிட் தடுப்பூசி பயன்பாடு பெருமளவு உயர்ந்துள்ள நிலையில், ஒன்றிய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டு சூழலைக் கருத்தில் கொண்டு, தமிழகத்திற்குப் போதிய தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்
பசுமை விகடன் இன்னும் எத்தனை பேர காவு வாங்கப் போகுதோ தெரியலை.
Balasubramania Adityan T : பசுமை விகடனை படித்து எழுச்சி அடையாதீர்கள்...
பசுமை புரட்சி என பெயர் வைத்துதான் நம் இயற்கை விவசாயத்தை அழித்தார்கள்.
இப்படி பசுமை என பெயர் வைத்துக் கொண்டு பசுமை விகடன் செய்யும் பிரசுரிப்புகளை வைத்து இளைஞர்கள் பலர் குழம்புகின்றனர்.
இப்படித்தான் 1 வருஷம் முன்னாடி இலை வாழையில் ஏக்கருக்கு 10 லட்சம் லாபம் என போட்டிருந்தாங்க
கூடவே போன் நம்பரும் போட்டிருந்தாங்க.
இதை பார்த்த நம்ம நண்பர் ஒருத்தர் அந்த அக்ரி ஆபிசர்க்கு கால் பண்ணி என்கிட்ட 12 ஏக்கர் இலை வாழை இருக்கிறது. ஏக்கருக்கு 10 லட்சம் எல்லாம் வேண்டாம் 4 லட்சம் கொடுத்துட்டு நீங்களே வச்சுக்கங்க என சொன்னார்.
கடைசியில் அது இதுன்னு மழுப்பி பேசிட்டடு நான் எழுதியது தப்புதான்னு மன்னிப்பு கேட்டு விட்டு போனை கட் பண்ணி விட்டார்கள்.
எங்கேயோ நிம்மதியாக இருக்கவங்களை இந்த பசுமை விகடன் குரூப் அத்தனை லட்சம் இத்தனை லட்சம் கிடைக்கும் என ஆசை காட்டி இந்த தொழில் பண்ண வைத்து போண்டி ஆக்கிட்டு போய் விடுவானுங்க.
இன்றைய நிலையில் விவசாயத் தொழில் நூறில் ஒருத்தங்களுக்கு சக்சஸ் ஆகிறதே பெரிய விஷயம்.
வன்னியர் 10.5% ஒதுக்கீட்டில் சிக்கலா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
tamilmurasu.com. : தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்
சென்னை: தமிழ்நாட்டில் ல் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, நாளை 3ஆம் ேததி முதல் வரும் 6ஆம் தேதி வரை மக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, கொரோனா தடுப்புப் பணிகளில் தொய்வு ஏற்படாது.
சென்னை, கோவை மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
“ஈரோடு, நாகை, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,” என்றாா் அவா்.
மே மாதத்திற்கான தடுப்பூசியே இன்னும் 1.74 லட்சம் மத்திய அரசிடமிருந்து வர வேண்டியுள்ளது என்றும் ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தடுப்பூசி
பருப்பு ஊழல்: விசாரணை வளையத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ்
செவ்வாய், 1 ஜூன், 2021
பாபா ராம் தேவ் ! அன்று சைக்கிள் திரிந்தவரின் இன்றைய சொத்துக்கள் ஆயிரம் கோடிகளுக்கு மேல்
Sundar P : வேட்டியை மடித்துக் கட்டிகொண்டு மார்பில் துண்டை பரப்பிக் கொண்டு சைக்கிள் கேரியரில் ஒரு சாக்கு மூட்டையை கட்டிக்கொண்டு லோடு அடிக்கும் இவரைத் தெரிகிறதா?
ஆம்... சரிதான்.... நீங்கள் நினைப்பது சரிதான்.
பாபா ராம்தேவே தான்.
ராம் கிருஷ்ண யாதவ் என்ற இயற்பெயரைக் கொண்ட ராம்தேவின் இன்றைய சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக ஹரித்துவாரின் தெருக்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த இவர், ஏழாம் வகுப்பு வரைதான் பயின்றார்...
பின்னர் சமஸ்கிருதம் மற்றும் யோகா போன்றவற்றைக் கற்றுக் கொண்டார்.
உலக வாழ்க்கையைத் துறந்து சன்னியாசம் மேற்கொள்வதாக அறிவித்தார்.
அதன் பின் திவ்யா யோக மந்திர் டிரஸ்டு என்ற ஒன்றைத் துவங்கினார்
இன்று 36க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த டிரஸ்டுக்கு சொந்தமாக உள்ளன.
பாபா ராம்தேவ் நடத்தி வரும் பதஞ்சலி ஆயுர்வேதிக் என்ற எப்எம்சிஜி நிறுவனம் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.1,000 கோடியை அடுத்த ஆண்டு முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
வடக்கர்களை தமிழ் நாட்டுள் நுழையவைத்து சூறையாடும் முயற்ச்சியில் பாஜக
Tha Mu : மார்வாடிகள் மெல்ல மெல்ல தமிழ் நாட்டை கையகப் படுத்திக் கொண்டு உள்ளனர்.
நான் மார்வாடிகள் என்று சொல்வது குஜராத்தின் 2 ஆம் நம்பர் வியாபாரம் செய்யும் பணக்கார கூட்டத்தை மட்டும் அல்ல.!
பீஹார், உ.பி, ம.பி யிலிருந்து தமிழ் நாட்டுக்கு பிழைப்புக்காக வந்துள்ள அத்தனை ஹிந்திக் காரனையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
இவர்கள் பணத்துக்காக எதையும் செய்கின்ற கல்லிதயம் கொண்ட இனத்தினர்.!
எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அப்பகுதி மக்களை ஏய்த்துப் பிழைப்பதே இவர்களின் வேலை.!
நேர்மை, ஒழுக்கம், பண்பாடு எல்லாம் இவர்களுக்குத் தங்களின் தொழில் சார்ந்த போலிப் பேச்சுகளில் மட்டுமே இருக்கும்.
"உங்க ATM கார்டு மேலே 16 நம்பர் சொல்லுங்கோ..!" என்று திருடுபவன் எல்லாம் இந்த ஹிந்திக் காரன் தான்.!
இப்பேர் பட்ட நாய்களுக்காக "வட இந்திய இளைஞர்களை நினைத்து பெருமைப் படுகிறேன்" என்று சொன்னவர் தான் நமது மோடி!
மோடியின் சான்றிதழுடன் தமிழ் நாட்டு சங்கிகளின் ஆதரவும் இந்த வடக்கனுக்கு கிடைக்கத் தொடங்கியது.
தமிழ் நாட்டில் நடந்த பல்வேறு கொள்ளைகள், கொலைகளில் எல்லாம் இந்த வட இந்திய நாய்கள் தான் குற்றவாளிகள்.!
சின்மயி போன்ற சாதிவெறிச்சிகளின் எழுச்சியின் போதெல்லாம்.. கவிதா சொர்ணவல்லி!
கவிதா சொர்ணவல்லி : நிறைய யோசித்தே இதை எழுதுகிறேன்.
'இட ஒதுக்கீடு காரணமா என்னோட உறவினர்கள் பாதி பேரோட கனவுகள் நிறைவேறாமலே போச்சு.
Upsc exam எழுத நெனச்ச பாதி பேர் இட ஒதுக்கீடு காரணமா, பரீட்சை எழுதாமலே வெளில போய்ட்டாங்க'
'சென்னைல மின் திருட்டு (அ) மின்சாரத்தை வீணடிப்பது சேரி வாழ் மக்களே'
"மீனைக் கொல்லும் மீனவனைக் கொல்வது தவறில்லை' என்பது உட்பட பல சாதி துவேஷ பதிவுகளை தன்னுடைய டிவிட்டரில் 2010 ல் துப்பியவர்தான் சின்மயி.
இந்த ட்வீட்களை, நான் எழுதவேயில்லை என்று சாவர்க்கர்களின் வாரிசான சின்மயி இப்போது மறுக்கலாம். ஆனால், அன்றைய காலகட்டத்திலேயே, இவ்விவகாரம் குறித்து விமாலாதித்த மாமல்லன் எழுதிய 'சின்மயி விவகாரம்' புத்தகமே, சின்மயியின் பொய்களுக்கும், அதிகார அகங்காரத்திற்கும் எஞ்சி நிற்கும் ஒரே சாட்சி. சின்மயி தாய் பத்மாசினி லால்குடி ஜெயராமன்
மத்தியரசின் ஜி எஸ் டி வரி குறைப்பு குழுவில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆருக்கு இடமில்லையா? தொழில் முனைவோர் கடும் எதிர்ப்பு
Mariathangaraj Jeyapal | Samayam Tamil மத்திய நிதியமைச்சகம் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து அமைத்துள்ள குழுவில் தமிழகத்துக்கு
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “கொரோனா சார்ந்த, மக்கள் உயிர்காக்கும் பொருட்கள் எவை எல்லாம் உண்டோ அவற்றுக்கு மட்டும் சில மாதங்களுக்கு அல்லது சில வாரங்களுக்கு மட்டும் வரிகளை ரத்து செய்யுங்கள். கொரோனா சார்ந்த பொருட்கள், தடுப்பூசி போன்றவற்றுக்கு வரி இருக்க கூடாது.
5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை பூஜ்ஜியமாக்குவதால் பெரிய அளவுக்கு இழப்பு ஏற்படாது மக்களுக்கு நலன் கிடைக்கும்” என்று பேசினார்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகத்திலிருந்து ஜிஎஸ்டி வரி குறைப்போ அல்லது விலக்கோ கொரோனா சம்பந்தப்பட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கொடுப்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் ராஜன் கூறிய பின்னர் அமைக்கப்பட்ட இந்த குழுவில் பிடிஆருக்கு இடமில்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நியாயவிலை கடை நிவாரணத்தை பாராட்டிய நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி
கலைஞர் செய்திகள் : ஏழை, எளிய மக்கள் உடனடியாகப் பயன்பெறும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலம் நிவாரண நிதி அளிப்பது பாராட்டத்தக்க முயற்சி என்று பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்து வருமாறு :-
கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதனால் கட்டுமானம், சிறிய அளவிலான சில்லறை வணிகம் போன்ற சில முக்கியமான துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
கட்டுமானத் துறையானது கடன்களைப் பெறுவதன் மூலமாக தன்னை மீட்டெடுத்துக் கொண்டுமேலே எழுந்திட முடியும்.
ஆனால், பொது முடக்கத்தால் பேருந்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இத்தகைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக பணத்தை அவர்களது கைகளிலேயே கொண்டு போய்ச் சேர்ப்பதே சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் முழு பொது முடக்கக் காலத்தில் நியாய விலைக் கடை களின் மூலம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
திருச்சி போலீஸ் சிறப்பு உதவி ஆய்வாளரின் கமிஷன். கட்டிங். கரப்ஷன்! ஆட்சி மாறினாளாலும் தொடர்ந்து கொடிகட்டி பறக்கும் மாமூல்
நக்கீரன் : திருச்சி கோட்டை சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காவல் நிலையத்தில் இருந்து பணியாற்றுவதைவிட அதிக அளவில் ரோந்து பணியில் ஆர்வம் காட்டுவதோடு அதிகாரிகளிடம் விரும்பி கேட்டு ரோந்து பணியை மட்டுமே வாங்கிக்கொள்ளுவதாகக் கூறப்படுகிறது.
இதன் பின்புலம் குறித்து நாம் விசாரித்ததில், கோட்டை சரகத்திற்கு உட்பட்ட ஓயாமாரி இடுகாட்டுக்கு அருகே காவிரி கரையோரம் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி விற்பனை செய்யும் கும்பலிடமிருந்து கமிஷன் பெறுவதும்,
நூற்றுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி வியாபாரிகளிடம் தினந்தோறும் ஒரு வண்டிக்கு காலை 30 ரூபாய் மாலை 30 ரூபாய் என கமிஷன் பெறுவதும் அவரது வாடிக்கையாம்.
அதுமட்டுமல்லாமல், தினமும் '1848' என்ற மதுபான ரகமும் சிறப்பு உதவி ஆய்வாளருக்குக் கையூட்டாகக் கொடுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
மேலும், கோட்டை சரகத்திற்கு உட்பட்ட டீக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை வஸ்துக்கள் உள்ளிட்டவற்றைப் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்வதில் கமிஷன் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொரு நாள் முறை வைத்து மதுவும் அன்றைய நாளுக்கான கமிஷனும் கொடுத்து இந்த சிறப்பு உதவி ஆய்வாளரைச் சிறப்பாகக் கவனிப்பதால், பல வியாபாரிகள் அவருக்குப் புனைப் பெயர் ஒன்றையும் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் ! தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மின்னம்பலம் : ஆல் பாஸ்: எந்தெந்த வகுப்புகளுக்கு?
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த தேர்வு எப்போது நடைபெறும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், 10, 11ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வுகள் எதுவுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாகத் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார் . பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்கிறார்
/tamil.indianexpress.com : முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றபின் முதல்முறையாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்திக்க டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார்
அதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மே 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றங்களில் அதிரடியான மாற்றங்களை செய்தார். அதிகாரிகள் நியமனங்களில் ஸ்டாலின் நடவடிக்கைகளை பல தரப்பினரும் பாராட்டவே செய்திருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார்!
நக்கீரன் செய்திப்பிரிவு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று (30/05/2021) காலமானார்.
அவருக்கு வயது 81.
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இருந்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவராக இருந்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர் மைதிலி சிவராமன்.
1966- 1968 ஆம் ஆண்டு வரை ஐ.நா.மன்றத்தின் உதவி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துள்ளார். கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் குறித்து மைதிலி சிவராமன் எழுதிய தொடர் கட்டுரை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியானது.
தோழர் மைதிலி சிவராமன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்- மத்திய அரசு தாமதப்படுத்துகிறது
தினத்தந்தி :மத்திய அரசு தாமதத்தால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி முடங்கும் அபாயம் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்கூறி உள்ளார்.
சென்னை , தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன என்றும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்தினார்.
திங்கள், 31 மே, 2021
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை கண்டு ஏன் பதறுகிறார்கள்?
Raj Dev : பி.டி.ஆரை கண்டு ஏன் பதறுகிறார்கள்?
தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார்.
‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்தகாலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது.
அரசியலை பொருளாதார வாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும் புது ஒழுக்காறை அவரது விமர்சனம் கொண்டிருக்கிறது.
அது அரசியல் விமர்சன மரபில் ஒரு புதுச் சிந்தனைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறது.
வானதிக்கு பயன்படுத்திய congenital liar என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
அது ஒரு வழமையான அரசியல் விமர்சனச் சொல் அல்ல.
Congenital என்பது ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்பாக வரும் ஒரு உரிச்சொல். Congenital என்பது Congenital நோய், Congenital குறைபாடு, Congenital ஊனம் போன்ற பயன்பாட்டில் தான் அதிகம் வருகிறது. அதை நேரடியாக பயன்படுத்தினால் உடல் குறைபாட்டை குத்திக் காட்டும் அநாகரிக சொல்லாக மாறி விடும். உரிச்சொல்லான congenital-ஐ பெயச்சொல்லான liar – உடன் இணைத்து ஒரு புது அரசியல் விமர்சனச் சொல்லை உருவாக்குகிறார்.
சமஸ்கிருதம் ஒரு இரகசியக் குறியீடு- (Code) மொழி தான். ஜாவா, கோபால் போன்ற, கணினி குறியீடு ... பேசப்படவே இல்லை
m.dailyhunt.in : சமஸ்கிருதம் ஒரு மொழியா? - சரவணா ராஜேந்திரன்
சமஸ்கிருதம் என்பது, இந்தோ - யூரோப்பியன் மொழிக் குடும்பத்தில், ஒரு மொழியாகக் கருதப்பட்டு வருகிறது. இதிலிருந்து தான் இந்தி போன்ற பல மொழிகள் தோன்றியதாகப் பல காலமாகச் சொல்லப்படுகிறது. இந்த மொழியைப் பற்றி, பலவிதமான முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. தற்போது சில இந்தோ - யூரோப்பியன் மொழியியலாளர்கள், 'சம்ஸ்கிருதம்' என்று ஒரு மொழியே எக்காலத்திலும் இருந்ததில்லை என்ற ஒரு கருத்தை உண்டாக்கியிருக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் முன்வைக்கும் ஆய்வுக்குறிய கேள்விகள்:
எந்த ஒரு மொழியும் தோன்ற, ஒரு இனம் தேவை. இனமில்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக, ஜப்பானியர்கள், ஜப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள். அதுபோல் தமிழர் தமிழையும் ,செர்மானியர், செர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள். சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?
இரண்டாவதாக, எந்த ஒரு மொழியும், பேசப்பட்டால் தான் மொழியாகும். பேசப்படவில்லையென்றால், அது 'குறியீடு' (Code) எனப்படும். எந்த இயல்பான மொழியும், பேச்சில் முதலில் தொடங்கி, பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான், எழுத்து வடிவம் பெறமுடியும். பேச்சு நிலையையே தொடாத எந்த ஒரு இயல் மொழியும், எழுத்து வடிவாகி, ஒரு இலக்கியம் ஆக முடியவே முடியாது!
துக்ளக் சோவும் குருமூர்த்தியும் சீமானுக்கு நாம் தமிழரை சிவந்தி ஆதித்தனிடம் இருந்து வாங்கி கொடுத்த வரலாறு
2011 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் நல்லக்கண்ணு தடை ஆணை பெற்ற நேரம் அவருக்கு ஒரு பாராட்டு விழா தாமிரபரணி அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மார்கெட் திடலில் நடத்தினேன்...
அதில் எனது ஆசான் V.சுந்தரம் IAS அவர்கள் தலைமை தாங்கினார்.
நம்மாழ்வார் ஐயா உள்பட பலர் வந்து இருந்தாலும் வேகமாக பேச ஒரு ஆள் தேவை என்று என் நண்பர்கள் இருவரை சொன்னார்கள்.
அது சீமானும், நெல்லை கண்ணனும். சீமானைப் பற்றி அன்று எனக்கு தெரியாது. அவர் நாடார் சமுதாயம் என்றும் அப்போது எனக்கு தெரியாது. குருமூர்த்தி, சோ பின்னணியில் தினத்தந்தியில் பேசி நாம் தமிழர் இயக்கத்தை இவர் மூலமாக நடத்துகிறார் என்றும்
தெரியாது.
அப்போது சீமான் வைத்து இருந்தது நாம் தமிழர் இயக்கம். கட்சி அல்ல.
நானும் எனது நண்பரும் வளசரவாக்கம் சீமான் வீட்டுக்கு திருநெல்வேலி நண்பர் மூலமாக நிகழ்ச்சிக்கு பேச காலை 11 மணி சென்றோம். என் பெயரை சொன்ன உடன் சீமான் வீட்டில் ஒவ்வொரு அறையாக திறந்து மாடி ஹாலில் அமர வைத்தார்கள்.
சீமான் குளிக்கிறார்.
அமருங்கள் என்றனர்.
நாங்கள் இருவர் மட்டுமே ஹாலில் இருந்தோம்.
நான் உட்கார்ந்து இருந்த சோபாவின் கீழ்,எதிரில் சுற்றிலும் புத்தம் புதிய 3 அடி வீச்சு அரிவாள் கட்டு கட்டாக, ஏராளமான துப்பாக்கிகள்,ரிவால்வர்கள் இருந்தன.
மத்திய அரசுக்கு மம்தா வைத்த ட்விஸ்ட்... இனி அவருக்கு அந்த பதவியே இல்ல..
அங்கு அவரும், மேற்கு வங்க முதல்வரும் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், மம்தாவும் மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததாகவும், வந்தவுடன் கிளம்பிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு,
மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்.
இன்று காலை (31.05.2021) 10 மணிக்கு டெல்லி நார்த் ப்ளாக்கில் பணியில் சேரவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பத்மா சேஷாத்திரி ராஜகோபாலனின் லேப்டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்த போலீஸ்
எஸ்.மகேஷ் - விகடன் : சென்னையில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் செல்போனிலிருந்து அழிக்கப்பட்டமெஸேஜ்களை ரெக்கவரி சாப்ட்வேர் மூலம் சைபர் க்ரைம் போலீஸார் மீட்டிருக்கின்றனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம ஷேசாத்ரி பால பவன் என்ற தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் ராஜகோபாலன்.
59 வயதான இவர், நங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்தப் பள்ளியில் பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வணிகவியல் தொடர்பான பாடங்களை கற்றுக்கொடுத்து வந்த ராஜகோபாலன் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகார்மனு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது.
இதையடுத்து, அந்தப் பள்ளியின் மேலும் சில மாணவிகள் ராஜகோபலனால் தாங்கள் சந்தித்த பிரச்னைகளை பகிர்ந்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்தது- 37 மாவட்டங்களில் பாதிப்பு சரிவு
மாலைமலர் : சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை சதவீதமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது.
இதன் பின்னர் ஏப்ரல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
கடந்த 12-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருந்தது. இதன் பிறகு நோயின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இந்த தினசரி பாதிப்பு கடந்த 20-ந்தேதி அன்று 35 ஆயிரத்தை கடந்தது. அன்று 35,579 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. அதற்கு மறுநாள் (21-ந்தேதி) 36,194 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 26-ந்தேதியில் இருந்து நோயின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.
சாந்தினியா? யாருன்னு எனக்கு தெரியாது.. மறுத்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.. 5 பிரிவில் பாய்ந்தது வழக்கு
Velmurugan P - tamil.oneindia.com : சென்னை: நாடோடிகள் பட நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்பட ஐந்து பிரிவின் கீழ் சென்னை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் சென்னை மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்
நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் சாந்தினி... மலேசியாவை சேர்ந்தவர்.. இவர் இன்று திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்
திருமணம் செய்ய மறுப்பு அந்த புகாரில் சாந்தினி கூறியிருந்ததாவது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, 5 வருஷமாக என்னுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.
தமிழ்நாட்டு வியாபாரங்களை வேட்டையாடும் வடநாட்டு வியாபார முதலைகள்
Karuna Kumuthan : கோயம்புத்தூர் என்றால் இருபெரும் சமுதாய மக்களால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் கல்வி கூடங்கள் மருத்துவமனைகள்தான் நிறைய இருக்கின்றன.
இந்த இருபெரும் சமுதாயத்தை மீறி இந்த மார்வாடிகளால்/பணிகளால் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை இந்த கோவையில் அவர்களால் உருவாக்க முடியவில்லை.
இதை பொறுத்துக்கொள்ள முடியாத கோவையில் வாழும் வட இந்தியர்கள்,
இந்த இருபெரும் சமுதாய ஆதிக்கத்தை அழித்து விட்டு அவர்கள் அந்த இடத்திலேயே வந்த அமர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்
அதற்கு அவர்கள் பயன்படுத்தும் கருவி பாரதிய ஜனதா,
அவர்களின் ஊதுகுழல் வானதி.
அதற்கு அவர்கள் பயன்படுத்தும் அரசியல் ஒரே நாடு ஒரே மதம்
அதற்கு இவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்,
தங்களின் சுய அடையாளத்தை இழக்கிறார்கள் என்றால் அவர்களது தொழிலையும் சேர்த்து தான் இழக்கப் போகிறார்கள்.
RamRaj : அப்படியே சேலத்தில் உள்ள வட நாட்டு வியாபாரிகளையும் சரியாக வணிகவரி கட்டுகிறார்களா என்று சரி பாருங்கள்
Dorairaj Anandaraj : வரவேற்க வேண்டும்.#2 பிசினஸ் மட்டுமல்ல. தரமற்ற பொருட்களை,அதிகவிலைக்கு விற்கின்றனர். அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் பெருத்த இழப்பு.கோவையில் வடநாட்டினர் பல லட்சம் ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர்.
ஆ.ராசாவுக்கு ராகுல் காந்தி:கடிதம் :உங்கள் மனைவி துயரமான காலங்களில் உங்களுக்கு உற்ற துணையாக இருந்தவர்
மின்னம்பலம் :காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசாவுக்கு அவரது மனைவி மறைவு குறித்து இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி நேற்று முன் தினம் (மே 29) காலமான நிலையில் மே 30ஆம் தேதி இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
அதில். “தங்களது மனைவி திருமதி பரமேஸ்வரி அவர்கள் அகால மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். நீங்கள் மிகவும் நேசித்த அவரது இழப்பு உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் துன்பத்தை உணர்கிறேன்.
உங்கள் வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடியான துயரமான நேரங்களில் உங்களுக்கு அவர் உற்றதுணையாக இருந்து வழங்கிய உறுதியான ஆதரவு இப்போது இந்த வலியைக் கடக்க உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
வக்பு வாரிய இடங்களை தாரைவார்க்க முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் முயற்சி! அவரது உதவியாளர் முறையீடு
நிலோபர் கபில் மீது புதுப்புகார்! முன்னாள் வக்பு வாரிய அமைச்சர் மீது முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பல தவறுகள் சரிசெய்யப்படுகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
முன்னாள் வக்பு வாரிய அமைச்சர் நிலோபர் கபில் மீது அவரது உதவியாளரே புகார் கொடுத்துள்ளார். அவருடைய ஊழல்கள் கணக்கிலடங்காதது.
குறிப்பாக வக்பு வாரியத்தில் வாரியத் தலைவா் இல்லாத தருணத்திலும், தலைவரின் வருகைக்குப் பிறகும், அவருடைய எண்ணப்படியே அனைத்தும் நடைபெற்றது.
குறைந்த தொற்று;500 ஐ நெருங்கிய ஒருநாள் உயிரிழப்பு'-தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!
nakkeeran : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,964 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 ஆவது நாளாக தமிழகத்தில் முன்பை விட குறைந்த பாதிப்பு தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில், சென்னையில் ஒரே நாளில் 2,689 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 93 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,05,546 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று 32,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பினோர் எண்ணிக்கை 17,39,280 ஆக அதிகரித்துள்ளது
சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை ? வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு ....
Prakash JP : சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த சிக்ஸர்".!
தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு தளம் எது என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் காட்டிவிட்டது என, திமுக தலைமை நம்புகிறது.
தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு நிதி முதல் பல்வேறு உதவிகளை செய்தது என்று, மாநில உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது.
கலைஞர் இருக்கும் வரை மார்வாடிகளையும், குஜராத்திகளையும் அரவணைத்து சென்றார்.
அவர்களும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தனர்.
ஆனால் மோடியின் இரண்டாவது வெற்றி அவர்களை மாற்றிவிட்டது.
வடநாட்டினர் எந்நேரம் அழைத்தாலும் ஓடிப் போய் உதவி செய்தவர் சேகர்பாபு.,
ஆனால் அவருக்கு இம்முறை வடநாட்டினர் ஓட்டு அளிக்கவில்லை.
சேகர்பாபு பெரிதும் நம்பியிருந்த சௌகார்பேட்டை பாஜக விற்கு அப்படியே மாறிவிட்டது.
இது முதல்வர் ஸ்டாலினையும் அதிகம் யோசிக்க வைத்துவிட்டது.
கோவையிலும் அதிக அளவு வடநாட்டினர் வெளிப்படையாகவே பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டதும் திமுகவை இன்னும் உறுத்தி வருகிறது.
இந்நிலையில்தான் சேட்டுகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு அன்மையில் பேசியது பரபரப்பாகியது.
ஞாயிறு, 30 மே, 2021
கோவையில் ஊடுருவிய சங்கிகளும் தமிழ்நாட்டு எதிர்காலமும்
Nilabharathi : சில சங்கிகளை நாம் வாழும் இடத்திற்குள் அனுமதிப்பதே மாபெரும் தவறு...
வடக்கிலிருந்து வந்து ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை நுழைப்பதுபோல் நுழைந்து எல்லாவற்றையும் நம் உழைப்பிலேயே தின்று செரித்துவிட்டு சுரணையற்று நம்மையே வெறிகொண்டு கடித்துவிட்டுபோகும்.
சொகுசாய் வாழ்வதற்கு நம்போல எவர் உதவியும் உழைப்பும் தேவைப்படும்..
தின்ன சோறு செரிப்பதற்குள்ளாகவே நம்மையும் நம்மைசார்ந்தவர்களையும் எதிர்க்கதொடங்கி முதுகில் குத்திவிட்டு,
எம் வசதிகள் எல்லாம் கடவுள் கொடுத்ததென கூச்சமே இல்லாமல் வழிகாட்டியது கடவுளென்று கூவும்..
கோவையென்ன குஜராத் என்ன சங்கிகள் எப்பவும் ஓநாய் கூட்டமே...
A Sivakumar : வடஇந்தியர்களை சங்கி என்று தெரிந்த பின்னும் தொழில் செய்ய அனுமதிச்சு,
அவனுங்க கூட மூழ்காத ஷிப்பே ப்ரெண்ட்ஷிப் தான்னு பாட்டு பாடினா,
தமிழ்நாடு என்னாகும்ங்கிறதுக்கு கோவை ஓர் நல்ல உதாரணம்.
1950,60,70 களில் US,கனடா,UK,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களே அதிகமாக குடியேறினார்கள் .
Dhinakaran Chelliah : தானம் .. ! 1950,60,70 களில் US,கனடா, UK, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் பிராம்மணர்களே அதிகம்.
‘இதயம் பேசுகிறது’ மணியன் தனது பயணக் குறிப்புகளில் எழுதுவார், அமெரிக்காவில் கண் காணாத ஏதோ ஒரு சிறு கிராமத்திற்கோ, அலாஸ்கா போன்ற பனிப் பிரதேசத்திற்கு போன போதோ அங்கும் ஒரு மாமி வீட்டில் புளிசாதம்,தயிர்சாதம், மாவடுவும் சாப்பிட்டதாகக் குறிப்பிடுவார்.
அவரது பயணக் கட்டுரைகளைப் படிக்கும் போது பரவாயில்லையே, நம்ம ஊர்க் காரங்க அங்கேயெல்லாம் போயிருக்காங்க என எண்ணி மகழ்ந்திருக்கிறேன்.
அதிலும் குறிப்பா ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஏன் பெருமளவில் வேறு நாடுகளுக்கு குடியேறி பேனார்கள் என்ற கேள்வி வெகுநாட்களாகவே இருந்தது.
இதற்கான விடை தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்கள் எழுதிய “என் சரித்திரம்” நூலைப் படித்த போது விளங்கியது.
முதல்வர் ஸ்டாலின் கோவையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளை பார்வையிட்ட பின் கார் அம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்
மாலைமலர் :கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா நோயாளிகளிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கோவையில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கு கீழ் குறைய தொடங்கியுள்ளது.
ஆனால் மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை மற்றும் திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்
மாலைமலர் : பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்
சென்னைமாநகராட்சி அலுவலகத்தில் இன்றுவியாபாரிகளுக்கான மளிகைபொருட்கள் விற்பனைக்கு டோக்கன் வினியோகம் செய்த காட்சி
சென்னை: கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம்.
சசிகலா பேசிய ஆடியோ கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் - தொண்டரிடம் சசிகலா ...
மாலைமலர் : கொரோனா முடிஞ்சதும் நான் வந்துருவேன் - தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோவால் பரபரப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது.
இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:-
ஹலோ லாரன்ஸ் நல்லா இருங்கீங்களா,