சனி, 17 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் கலவரங்கள் சர்வதேச ஊடகங்களின் பார்வையில் ...Hundreds defy restrictions, join protests in Kashmir.. இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன.



Hundreds defy restrictions, join protests in Kashmir By ASHOK SHARMA and EDITH M. LEDERER --apnews.com : Kashmiri Muslims shout pro-freedom slogans during a demonstration after Friday prayers amid curfew like restrictions in Srinagar, India, Friday, Aug. 16, 2019. Hundreds of people have held a street protest in Indian-controlled Kashmir as India's government assured the Supreme Court that the situation in the disputed region is being reviewed daily and unprecedented security restrictions will be removed over the next few days. (AP Photo/Dar Yasin)

BBC : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து


டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க 36 தீயணைப்பு வண்டிகள் போராடி வருகின்றன.
இதில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவரவில்லை.
மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மாலை 5:22 மணியளவில் தீ விபத்து குறித்து தங்களுக்கு தகவல் வந்ததாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்தததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வண்டிகள் அனுப்பப்பட்டன.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சோதனை கூடங்கள் உள்ள teaching block-ல் முதலில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த கட்டடம் தீவிர கண்காணிப்பு பிரிவுக்கு அருகில் உள்ளது. இந்த கட்டடத்தில் நோயாளிகள் யாரும் வைக்கப்படவில்லை. எனினும் தீப்பற்றிய இடத்திற்கு அருகே இருந்த நோயாளிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.

மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!

மோட்டார் வாகன நிறுவனங்கள் மூடல்: அனைவருக்குமான எச்சரிக்கை!

மின்னம்பலம் : பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் உடன் ஒரு நேர்காணல்! மதரா
நாட்டின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வேலை நாள்களை குறைத்து வருகின்றன. மூன்று நாள்களிலிருந்து சில நிறுவனங்கள் 20 நாள்கள் வரை தங்கள் தொழிற்கூடங்களை மூடுகின்றன. வியாபார மந்தநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அனைத்து நிறுவனங்களும் தெரிவிக்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட , தொழில்வளர்ச்சி பெற்ற நாட்டில் மோட்டார் வாகன சந்தை வீழ்ச்சியை நோக்கி செல்வது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுபற்றிய விரிவான தகவல்களைப் பெற பொருளாதார வல்லுநர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
வியாபார மந்தநிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
விற்பனையை ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுவர், அல்லது இந்த காலாண்டை இதற்கு முந்தைய காலாண்டோடு ஒப்பிடுவர். இப்படி பார்க்கும் போது கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு இப்போது மோட்டார் வாகன விற்பனை குறைந்துள்ளது. அதிலும் கடந்த 15லிருந்து 20 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மக்கள் நல கூட்டணி .. தமிழ்நாட்டின் இன்றைய அவலங்களுக்கு முக்கிய காரணம்?

LRJ : தமிழ்நாட்டின் தனித்துவமான சமூகநீதியுடனான வளர்ச்சியின்
முதுகெலும்பு அதன் தற்சார்பு பொருளாதார வல்லமை. அதை படிப்படியாக திட்டமிட்டு உருவாக்கியவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் காமராஜர்.
அந்த முதுகெலும்பு இன்று சுக்கல் சுக்கலாக நொறுங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கான பல காரணங்களில் முதன்மையானது 2016 ஆண்டில் நடந்திருக்க வேண்டிய தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்தை தங்களின் கடைந்தெடுத்த சுயநலத்துக்காக, மு க ஸ்டாலினை பழிவாங்கும் வெறிக்காக பலிகொடுத்த மநகூ என்கிற ஐந்தாம் படை அமைத்த அரசியல் அடியாள் கும்பல்.
அவர்கள் எல்லோருமே இன்றைய தமிழ்நாட்டின் எல்லா பேரவலங்களுக்கும் பொருளாதார பேரழிவுக்கும் முதன்மையான குற்றவாளிகள்.
இவர்களில் யாருக்கேனும் கொஞ்சமேனும் குற்ற உணர்ச்சியும் மனசாட்சியும் மிச்சமிருக்குமானால் தமிழ்நாட்டுக்கு தாங்கள் செய்த வரலாற்று துரோகத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோரவேண்டும்.
குறைந்தபட்சம் தாங்கள் செய்தது மறக்கமுடியாத மறக்கவும் கூடாத வரலாற்றுப்பெரும்பிழை என்பதையேனும் பொதுவில் ஒப்புக்கொள்ளவேண்டும்.

ஈரான்.. தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடும் ஈரானிய ஜிம் பயிற்சியாளர்கள் மாம்பழமாம் மாம்பழமாம் .. வீடியோ

  மாலைமலர் : ஈரானில் ஜிம் ஒன்றில் காலை நேர உடற்பயிற்சியில் பிரபல தமிழ் பாடல் ஒன்றுக்கு சிலர் நடனம் ஆடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இன்று காலை, ஈரான் நாட்டில் உள்ள ஜிம் ஒன்றில் பிரபல தமிழ் பாட்டிற்கு ஆடியபடி வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். ஈரானில் உள்ள, ஜிம் ஒன்றில் விஜய் நடிப்பில் வெளியாகி சக்கப்போடு போட்ட போக்கிரி படத்தின் ‘மாம்பழமாம் மாம்பழம்’ பாடலை காலை உடற்பயிற்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் பாடலை ஓடவிட்டு இதற்கு ஏற்றபடி நடன அசைவுகளை ஜிம்மின் பயிற்சியாளர் வாடிக்கையாளர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
இந்த வீடியோவை அனு சேகல் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடவே, அதனை ஆனந்த் மகேந்திரா பார்த்து விருப்பப்பட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

110 ஆண்டுகளுக்குப்பின் வேலூரில் மிக கனமழை: அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்:

hindutamil.in : வேலூரில் 110 ஆண்டுகளுக்குப்பின் அதிக அளவில் மழை பொழிந்துள்ளது. வெப்பச்சலனம், மேலடுக்குச் சுழற்சி காரணமாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது. மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு வெதர்மேன் அவரது முகநூலில் வானிலை குறித்து காணொலி ஒன்றை பேசி பதிவிட்டுள்ளார்.
அவரது காணொலியில் தெரிவித்ததாவது:
“பொதுவாக வேலூரில் வெப்பம் அதிகமாக காணப்படும் ஆனால் தற்போது ஊட்டி கிளைமேட் உள்ளது. வேலூரில் மிக கனமழை பெய்துள்ளது. கிட்டத்தட்ட 110 ஆண்டுக்குப்பின் நல்ல மழை பெய்துள்ளது. 110 ஆண்டுக்கு முன் ஒரு நாளில் 106 மி.மீ மழை பெய்தது. அதற்குப்பின் 110 ஆண்டுக்குப்பின் ஆகஸ்ட் மாதத்தில் இன்று 166 மி.மீ மழை பெய்துள்ளது. காலையில் பெய்த மழை அரிதான ஒன்று என சொல்லலாம்.
அதிகாலை 3 மணியிலிருந்து 7 மணி வரை மிக கனமழை பெய்துள்ளது.

வசூல் வேட்டையில் அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!

டிஜிட்டல் திண்ணை:  அமைச்சர்களை மிஞ்சும் கலெக்டர்கள்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டை இரண்டு அமர்வுகளாக தலைமைச் செயலகத்தில் நடத்தினார். அப்போது தமிழக அரசின் திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை சென்று சேர்ந்துள்ளதா, சேரவில்லை என்றால் ஏன் சேரவில்லை, அதற்கான வழிமுறைகள் என்ன, அதை எப்படி வேகப்படுத்துவது என்பது குறித்தெல்லாம் கலெக்டர்களுடன் விவாதித்தார் முதல்வர்.
கலெக்டர்கள்தான் தமிழக அரசின் முகமாகவும், கண்களாகவும், கரங்களாகவும் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் திட்டம், பொது விநியோகத் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம், குடிநீர் விநியோகம், வீட்டுமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்குதல் அம்மா திட்டம் உள்ளிட்ட நேரடியாக மக்களோடு தொடர்புடைய அடிப்படைத் திட்டங்கள் பற்றி மாதா மாதம் தனக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜக.. வழக்கறிஞர் சரவணன் அண்ணாத்துரை மீது ,,

திமுக சரவணனை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும்: பாஜகமின்னம்பலம் : காஷ்மீர் விவகாரத்தில் ரிபப்ளிக் டிவியில் தான் கூறிய கருத்து திரிக்கப்பட்டு, தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம் சரவணனை இது தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என்று பாஜக தரப்பு கோரியுள்ளது.
ஆகஸ்டு 12 ஆம் தேதி பாஜக ஆதரவு சேனலான ரிபப்ளிக் டிவி நடத்திய காஷ்மீர் தொடர்பான விவாதத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சரவணன் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் பேசிய சரவணன், ‘காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்ததில்லை’ என்று குறிப்பிட்டார். ஆனால் நிகழ்வை ஒருங்கிணைக்கும் அர்னாப் கோஸ்வாமி, ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியில்லை என்று சரவணன் கூறிவிட்டார். திரு ஸ்டாலின் அவர்களே.. இதுதான் திமுகவின் நிலைப்பாடா? இதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் இந்தியாவில் நீங்கள் கட்சி நடத்த முடியுமா?’ என்றெல்லாம் பொரிந்து தள்ளினார். தன் குரல் அங்கே எடுபடாத நிலையில் மைக்கை கழற்றிப் போட்டுவிட்டு நிகழ்வில் இருந்து வெளிநடப்பு செய்தார் சரவணன்.
இதை ஒட்டி திமுக மீதும், சரவணன் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் பாஜக தரப்பால் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (ஆகஸ்டு 17) இது தொடர்பாக விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சரவணன்.

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் - சையது அக்பருதீன் கருத்து

ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் - சையது அக்பருதீன் கருத்து
 தினத்தந்தி : ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் என ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் கருத்து தெரிவித்துள்ளார். நியூயார்க், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசியல் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்பட்டது, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இப்போதும் அதே நிலை நீடிப்பதாகவும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் சையது அக்பருதீன் கூறுகையில், “இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டம் இயற்றும் அமைப்புகளால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும்” என்று தெரிவித்தார்.

வடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. பொருளாதார தடையை நோக்கி ?

மிக மோசம்
தானாக மோசம் tamil.oneindia.com - shyamsundar சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா 
டெல்லி: அணு ஆயுதத்தை பயன்படுத்தும் கொள்கையை மாற்றிக்கொள்ள தயார் என்று இந்தியா கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இந்தியாவிற்கு எதிராகவே திரும்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் பிரச்சனை நிமிடத்திற்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டே செல்கிறது.
இன்று காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டம் ரகசியமாக நடக்க உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல் சரியா தவறா என்று முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ், அமெரிக்கா ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தியா தனது அணு ஆயுத கொள்கையை மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் அணு ஆயுத கொள்கை மாறலாம். அணு ஆயுத பயன்பாடு இல்லை என்பதுதான் இப்போது கொள்கை. எதிர்காலத்தில் அது மாற வாய்ப்பு இருக்கிறது, என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியாவின் இந்த அறிவிப்பை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. இன்று நடக்கும் பாதுகாப்பு கவுன்சில் மாநாட்டில் சீனா இது குறித்து கண்டிப்பாக மற்ற 4 நாடுகளிடமும் கூறும். இந்தியா அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்காது என்று சீனா எச்சரிக்கை விடுக்கும்.

வீராசாமி நாகமுத்து கயானா பிரதமர் .. உலகின் ஒரே தமிழ் பிரதமர் ..


பாண்டியன் சுந்தரம் : கயானா நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோசசு வீராசாமி நாகமுத்து உலகில் பிரதமராக இருக்கும் ஒரே
தமிழர்..ஆனால்..
மோசசு வீராசாமி நாகமுத்து... இந்திய வம்சாவளித் தமிழரான இவர் கயானாவின் பிரதமராக 2015 மே 20 அன்று பதவியேற்றார்.இன்று வரை பதவியில் இருந்து வருகிறார்.கயானா தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் அமைந்துள்ள அழகிய நாடு.
நாகமுத்து கயானாவின் பெர்பிசு மாவட்டத்தில் இந்தியக் கொடிவழித் தமிழ் குடும்பத்தில் விம் என்ற ஊரில் 1947 நவம்பர் 30-ஆம் தேதி பிறந்தார். ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றிய இவர் பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
1964 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1992 ஆம் ஆண்டில் அக்கட்சியின் சார்பில் கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தகவல்துறை அமைச்சராகவும், உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார்.
செட்டி ஜெகன், சாம் ஐன்ட்சு, ஜனெட் ஜெகன், பாரத் ஜாக்தியோ ஆகிய ஜனாதிபதிகளின் அமைச்சரவைகளில் உறுப்பினராக இருந்தார். 2000 ஆம் ஆண்டில் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
2008 ஆகத்து 2 இல் நடைபெற்ற மக்கள் முன்னேற்றக் கட்சியின் 29வது காங்கிரசு மாநாட்டில் ஐந்தாவது அதிகப்படியான வாக்குகள் 595 -ஐபெற்று கட்சியின் மத்திய குழுவுக்குத் தெரிவானார். 2011 ஆம் ஆண்டில் மக்கள் முன்னேற்றக் கட்சியில் இருந்து விலகும் வரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.

காஷ்மீர்-‘நள்ளிரவில் சிறுவர்கள் கைது’! -‘மானபங்கம் படுத்தபடும் பெண்கள்’-காஷ்மீரின் களநிலவரம் .. வீடியோ


newscap.in : தமிழகத்தை சேர்ந்த சிபிஐ கட்சியின் சமூக பெண் ஆர்வலர் கவிதா கிருஷ்ணன், பிரபல பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரெஸ் மற்றும் எய்ட்வாவின் (AIDWA ) மைமூனா மொல்லா ஆகியோர் ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை அரசாங்கம் ரத்து செய்து மாநிலத்தை பிளவுபடுத்திய பின்னர் காஷ்மீரின் உண்மை நிலவரம் கண்டறிய கடந்த ஆகஸ்ட் 7 முதல் 13 வரை5 நாட்களுக்கு காஷ்மீரில் முகாமிட்டிருந்தனர்.
கீழுள்ள ஆக்கம் பிரபல ஆங்கில நாளிதழான ஹஃ ப்பிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியானது.கீழுள்ள செய்தி கவிதா கிருஷ்னன் மற்றும் நிருபருக்கு மத்தியில் நடந்த உரையாடலாகும் .
அவர் அங்கு கண்ட காட்சிகளை  ..
காஷ்மீர் ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட ஈராக் அல்லது பாலஸ்தீன பகுதியை போன்று காட்சி அளித்தது” என்று வர்ணித்துள்ளார்.
அங்கு நீங்கள் கண்டதை வர்ணியுங்கள் ? காஷ்மீரில் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது . ராணுவ முற்றுகையின் கீழ் மக்கள் உள்ளனர்.

நாகாலாந்தில் தனிக்கொடியுடன் சுதந்திர தின கொண்டாட்டம் ... வீடியோ

ஏசியாவில் செய்திப்பிரிவு : இந்திய அரசுக்கு எதிராக இந்த விழா கொண்டாடப்படவில்லை, மாறாக எங்கள் தனித்துவம், அடையாளம், கலாச்சாரம், வரலாறு மற்றும் உரிமையைக் கொண்டாடவே இது கொண்டாடப்பட்டது. >நாகாலாந்தில் மிகுந்த செல்வாக்குள்ள அமைப்புகளில் ஒன்றான நாகா மாணவர்கள் கூட்டமைப்பு நாகா தேசியக் கொடியை ஏற்றி 73வது நாகா சுதந்திர தினத்தை நாகாலாந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேற்று கொண்டாடியுள்ளனர். >1947-ம் ஆண்டு நாகாலாந்தைச் சேர்ந்த பல பழங்குடிகள் ஒன்று சேர்ந்து தங்கள் நாகா தேசியக் கொடியை அந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அறிமுகப்படுத்தினர். நாகாலாந்துக்கு 1963-ம் ஆண்டு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வு இப்போது நாகாலாந்து மாநிலத்தின் தலைநகரான கோஹிமாவில் நடந்தது. இந்தியாவில் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, சுதந்திரத்திற்கான தங்களது உரிமையைப் பறைசாற்றவே நாகா தேசியக் கொடியை அவர்கள் அறிமுகப்படுத்தினர்.

செஞ்சிகொட்டை .. இருளர் குடும்பங்கள் .எந்த அடையாளங்களும் அற்று ... ஆதார் , ஜாதி சான்றிதழ் ,வோட்டர் ஐ டி ..ஒன்றுமே இல்லை ...

Yuvan Swang : செஞ்சிக்கோட்டையை ஒட்டியவாறு பன்னிரெண்டு இருளர்
குடும்பங்கள்.. அவர்கள் இந்த உலகில் பிறந்து வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
ரேஷன் கார்ட் இல்லை, வோட்டர் ஐடி இல்லை,சாதிச்சான்றிதழ் இல்லை,ஆதார் அட்டை இல்லை, வீட்டுமனைப்பட்டா இல்லை,வீடு இல்லை.
பக்கத்தில் இருக்கும் வயலுக்கு சொந்தக்காரரின் கொட்டகையில் மழைக்காலத்தில் ஒதுங்கி வாழ்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு பிள்ளை கூட பள்ளிக்கூடம் செல்லவில்லை.
செஞ்சி நகரத்தின் எல்லையில் வசிக்கிறார்கள்,பக்கத்திலேயே பல பெரிய குடியிருப்புகள்.ஒருவருக்கும் இவர்கள் மீது அக்கறை எழவில்லையா என்பதை நினைக்கும் போது ஏமாற்றமாக இருந்தது...
நிலவுக்கு ராக்கெட் விட்ட தேசத்தில் இன்னமும் இப்படிப்பட்ட அவலநிலையில் வாழும் மனிதர்களா....நான் பார்த்த பழங்குடி இருளர் குடியிருப்புகளில் மிகவும் மோசமான ஒன்று இது.
இந்த இடத்தின் பெயர் என்ன என்று கேட்டேன்...பெயர் சொல்ல தெரியவில்லை...முகவரி இல்லா மனிதர்களுக்கு கடிதமா வரப் போகிறது முகவரி இருக்க....

தி.மு.க எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாது...பாஜகவின் .....

bjpbjpநக்கீரன் : கிருஷ்ண bjpபரமாத்மாவையும்
அர்ஜுனனையும் அமித்ஷாவோடும் மோடியோடும் ஒப்பிட்டு, ரஜினி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்கா பேசப்பட்டு வருகிறது. இது பற்றி விசாரித்த போது, ரஜினிக்கு அமித்ஷாவும் மோடியும் தொடர்ந்து முக்கியத்துவம் தர்றாங்க. அதனாலதான், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் "லிசனிங் லேர்னிங் அண்ட் லீடிங்' அப்படிங்கிற புத்தக விழாவிலும் பேசும் வாய்ப்பைக் கொடுத்தாங்க. விழாவில் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுச்சுனு சொல்லப்படுகிறது.  எப்படியாவது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி, ரஜினியைத் தீவிர அரசியலுக்கு கொண்டுவந்துடணும்னு பா.ஜ.க. நினைச்சி வியூகம் வகுக்குது.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

விடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. .வீடியோ

Velmurugan P - tamil.oneindia.com :   காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவரான அத்திவரதர் அருள்பாலிக்கும் வைபம் இன்று மாலை இனிதே நிறைவு பெற்றது. 
இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள். காஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித தலங்கள் நிறைந்த ஊர். இங்கு உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மூலவரான அத்திவரதர் தான் 40 வருடங்களுக்கு ஒருமுறை பொது மக்களுக்கு அருள் பாலிப்பார். 
இந்த விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. முதல் 31 நாள்கள் சயனகோலததில்(படுத்த கோலம்) காட்சி அளித்தார் அத்தி வரதர். 
கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். அவரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். 
இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் கடந்த 48 நாளும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் போராட்டம்; இந்தியர்களுடன் கைகலப்பு


தினமணி : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவர்கள் இந்தியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றம் உண்டானது. அரசியல் சட்டப் பிரிவு 370-ன் வாயிலாக ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா சமீபத்தில் ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்து சட்டங்களை நிறைவேற்றியது. இதற்கு அண்டைநாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சீனாவின் ஆதரவுடன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் செய்துள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் முன்பு பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவர்கள் இந்தியர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டதால் பதற்றம் உண்டானது.

ஜெ.தீபா என்ன பாத்து டிரைவர்னு சொல்லிட்டா... குமுறும் ராஜா!

வெப்துனியா : ஜெ தீபா புகார் அளித்த ராஜா என்பவர் தனக்கும் தீபாவுக்கு
இடையேயான நட்பு குறித்து பேசியுள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா சமீபத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், டிரைவர் ராஜா என்பராலும், அவரைச் சார்ந்த நபர்களாலும் எனக்கும், எனது கணவர் மாதவன் ஆகிய எங்களின் இருவரின் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது என பேசியிருந்தார். இந்நிலையில் இது குறித்து ராஜா பேசியிருக்கிறார். ராஜா கூறியதாவது, ரொம்ப கஷ்டமா இருக்குதுங்க. தீபாவை சின்னப் பொண்ணு பருவத்துல இருந்து எனக்கு தெரியும். நாங்க ஃப்ரெண்ட்ஸ். ஆனா என்னைய இப்போ டிரைவர்ன்னு சொல்றப்ப மனசு காயப்படுது, இதயம் வலிக்குது. என்னை ரொம்பக் காயப்படுத்துராங்க இப்படி சொல்லி. அவர் சொல்லும் எந்தப் புகார்களுக்கும் ஆதாரமில்லை. எல்லாமே பொய் குற்றச்சாட்டு என தன் தரப்பு நியாத்தை வெளிப்படுத்தியுள்ளார்

டிவிஎஸ்ஸை தொடர்ந்து ஹீரோ: பணியிழக்கும் ஊழியர்கள்!

டிவிஎஸ்ஸை தொடர்ந்து ஹீரோ: பணியிழக்கும் ஊழியர்கள்!மின்னம்பலம் : முன்னணி மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன் நிறுவனம் நான்கு நாள்கள் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
சுதந்திர தின விடுமுறை மற்றும் வியாபார மந்தநிலை காரணமாக ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நான்கு நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்படுவதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தையில் தேவையை பொறுத்து, உற்பத்தி திட்டமிடலை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிவிஎஸ் லூகாஸ் நிறுவனம் ஏற்கெனவே சில நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்திருந்த நிலையில் தற்போது குறிப்பிட்ட மூன்று பிரிவுகளைத் தவிர்த்து மற்ற பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கு இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 16, 17) வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது.

அத்திவரதரால் ஆட்சிக்கு ஆபத்து! எடப்பாடிக்கு பட்டாச்சாரியார்கள் கொடுத்த ஷாக்!

டிஜிட்டல் திண்ணை: அத்திவரதரால் ஆட்சிக்கு ஆபத்து!  எடப்பாடிக்கு பட்டாச்சாரியார்கள் கொடுத்த ஷாக்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் காஞ்சிபுரத்தைக் காட்டியது.
“கடந்த ஒன்றரை மாதங்களாக அமர்க்களப்பட்ட காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவ தரிசனம் இன்றோடு நிறைவு பெறுகிறது. அத்திவரதரை நாளை மீண்டும் குளத்துக்குள் வைப்பதற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் பட்டாச்சாரியர்களும், மாவட்ட நிர்வாகத்தினரும் ஒருங்கிணைந்து செய்து வருகின்றனர்.
அத்திவரதரைக் காணத் திரண்ட கூட்டம் கடைசி நான்கைந்து நாட்களில் கடுமையாக எகிறியது. இதுவரை தமிழ்நாடு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுமார் ஒரு கோடி பேர் அத்திவரதரை தரிசித்த நிலையில் பல கோடி பேர் இன்னும் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசல், நெருக்கடி என்ற செய்திகளைப் பார்த்தே பலர் தங்கள் பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டுவிட்டனர். இந்த நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்துக்குள் வைக்கக் கூடாது என்று, அவரை மக்கள் தரிசனத்துக்காக வெளியிலேயே வைக்க வேண்டும் என்ற கருத்து கடந்த பத்து நாட்களாகவே உருண்டு திரண்டது. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

காங்கிரஸ் :காஷ்மீர் ஐ.நா. கூட்டம் மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான தோல்வி

காஷ்மீர் விவகாரத்திற்கான ஐ.நா. கூட்டம் மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான தோல்வி: காங்கிரஸ்
மாலைமலர் : காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா. ஆலோசனை நடத்த இருப்பது மத்திய அரசின் ராஜாங்க ரீதியிலான தோல்வி என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், இதுகுறித்து முக்கியமான நாடுகளுக்கு தூதரகம் மூலம் காஷ்மீர் முடிவு குறித்தான விளக்கத்தை தெளிவாக தெரிவித்தது.
பெரும்பாலான நாடுகள் இது உள்நாட்டு விவகாரம் என ஒதுங்கிக் கொண்டது. இது இந்தியாவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இந்த விவகாரத்தை ஐ.நா.வுக்கு கொண்டு சென்றது. இதுகுறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் முறையிட்டது. இதற்கு சீனா ஆதரவு அளித்தனர்.
இன்று இரவு இதுகுறித்து ஐ.நா. ஆலோசனை நடத்துகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. ஆலோசனைக் கூட்டம் நடத்துவது ராஜாங்க ரீதியிலான தோல்வி என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்... ...


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்?...zeenews.india.com :காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு பாகிஸ்தான் வலியுறுத்திய நிலையில் சீனாவும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐ.நா சபையை கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் வேண்டுகோளின் பேரில் காஷ்மீரின் நிலைமை குறித்து ஐ.நா பாதுகாப்புக் குழு (UNSC) வெள்ளிக்கிழமை ரகசிய ஆலோசனைகளை நடத்துகிறது. பாகிஸ்தான் எழுதிய கடிதம் அடிப்படையில் சீனா இந்த முறைசாரா சந்திப்பைக் கோரியுள்ளது.

BBC : இந்தியாவுக்கு பாதுகாப்புப்படைத் தலைவர் அறிவிப்பு: அடுத்து என்ன?

விமானப்படைத் தலைவர் புன்னகைத்தார். கடற்படை தலைவர்
தலையசைத்தார். தரைப்படைத் தலைவர் ஏதும் செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தார். செங்கோட்டையில் பிரதமர் மோதி இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்ட போது, முப்படையின் தளபதிகள் கொடுத்த எதிர்வினையாகும்.
பாதுகாப்புப் படைத்தலைவர் என்று ஒருவர் நியமிக்கபடுவார் என்ற மோதியின் அறிவிப்புதான் அது.
நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று கூறிய மோதி, "பாதுகாப்புப் படைத்தலைவர் என்பவர் முப்படைகளுக்கு தலைவராக விளங்குவதோடு, பாதுகாப்பு சீர்த்திருத்தங்களையும் மேற்கொள்வார்" என்று தெரிவித்தார். பாதுகாப்புப் படைத்தலைவர் என்றால் என்ன? தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையின் தலைவர்களுக்கு மேல் அதிகாரம் படைத்தவராக இருப்பதோடு, அரசாங்கத்திற்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்குபவராகவும் இவர் இருப்பார்.

மூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தின் முழு விபரங்கள்

வெப்துனியா :தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதவியேற்றதன் பின்னர் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என்றும் திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என்றும் பிரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுவதாக இன்று தமிழக முதல்வர் அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 150 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வேலூர் மாவட்டத்தில் 13 சட்டசபை தொகுதிகளும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் இருந்ததால், நிர்வாக வசதி என்பது பெரும் கடினமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த மாவட்டத்தை மூன்றாக பிரிக்க முடிவு செய்த தமிழக அரசு இன்று அதுகுறித்த அறிவிப்பை முறைப்படி அறிவித்தது மூன்றாக பிரிக்கப்பட்டன வேலூர் மாவட்டம் எந்தெந்த தாலுகாக்களில் எந்தெந்த மாவட்டங்களில் வரும் என்பது குறித்த உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது அதை தற்போது பார்ப்போம்
வேலூர் மாவட்டத்துக்கான தாலுக்காக்கள்: 1) வேலூர் 2) அணைக்கட்டு 3) குடியாத்தம் 4) கே.வி.குப்பம் 5) காட்பாடி
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் வரும் தாலுக்காக்கள்: 1) அரக்கோணம் 2) காவேரிபாக்கம் 3) வாலாஜா 4) ராணிப்பேட்டை 5)ஆற்காடு
திருப்பத்தூர் மாவட்டத்துக்கான தாலுக்காக்கள்: 1)பேர்னாம்பட்டு 2)ஆம்பூர் 3)வாணியம்பாடி 4)திருப்பத்தூர் 5)நாற்றம்பள்ளி

பணம் எங்கே உள்ளது? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!

மின்னம்பலம் : பணம் எங்கே உள்ளது? பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி!பிரதமரின் சுதந்திர தின உரையைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ், அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று (ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். அதன் பின்னர் உரை நிகழ்த்திய பிரதமர், பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்களை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதில் விமர்சனங்களை முன்வைத்துள்ளது காங்கிரஸ்.
ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம் என்பது தற்போது உண்மையாகிவிட்டதாகவும், இதற்காக நாடு பெருமிதம் கொள்வதாகவும் பிரதமர் தனது உரையில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்த காங்கிரஸ், “ஒரே தேசம், ஒரே அரசமைப்புச் சட்டம் என்பது மோடி அரசாங்கத்தால் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து எறியப்பட்டுள்ளது.

நீதானே பொண்ணுங்கள அப்படிப் பண்ணுன!’- சிறையில் மோதிக்கொண்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்?

Pollachi rapistjailவிகடன் -எம்.புண்ணியமூர்த்தி - வீ கே.ரமேஷ் : பாதுகாப்பு காரணமாக கோயம்புத்தூர் மத்திய சிறையிலிருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஐந்து பேரும் சிறைக்குளேயே தங்களுக்குள் மோதிக்கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரிப் பெண்கள் சிலரை காதல் என்கிற போர்வையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய அரக்கக் கும்பலை தமிழக மக்களால் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய இந்த வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து பேர் மட்டும்தான் குற்றவாளிகளா? இல்லை வேறு நபர்களுக்கும் தொடர்பிருக்கிறதா? இந்தக் கும்பலில் மொத்தம் எத்தனைபேர் இருக்கிறார்கள்? இவர்களோடு அரசியல் புள்ளிகளின் வாரிசுகளுக்கும் தொடர்பு உள்ளதா?
இப்படி பல சந்தேகங்கள் நிறைந்துள்ள இந்த வழக்கு, லோக்கல் போலீஸ், சிபிசிஐடி என அடுத்தடுத்து கைமாறி இப்போது சிபிஐ வசம் இருக்கிறது. பொள்ளாச்சியில் தங்கி பல்வேறு கோணங்களில் ரகசிய விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ கடந்த மே 24-ம் தேதி, பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்துபேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஓலைச்சுவடி திருமண அழைப்பிதழ்! இலை,தழை,காய்கறி,பழங்கள் கொண்ட அலங்காரங்கள்!


சாவித்திரி கண்ணன் : எத்தனையெத்தனை புதுமைகள்!; ஓலைச்சுவடி திருமண அழைப்பிதழ்! இயற்கையான இலை,தழை, காய்கறி,பழங்கள் கொண்ட அலங்காரங்கள்!
எல்லா நிலைகளிலும் பிளாஷ்டிக் தவிர்த்த அணுகுமுறைகள்!> காதை பிளக்காத மங்கள இசை கச்சேரி!
உணவில் 40% பாரம்பரிய உணவு வகைகள்!
திருமண முறைகளை விளக்கும் புத்தக வெளியீடு!
இப்படியாக ஒரு திருமணத்தை நமது பாரம்பரிய மீட்டுருவாக்கமாக நடத்தி காண்பித்துவிட்டனர். நண்பர் மகேஷும், நமது நண்பர் குழாமும்!
செல்வத்தின் சிறப்பு என்பது செருக்கொழித்து நிற்றலே!
அந்த வகையில் அழைத்த அனைத்து விருந்தினர்களையும் பாரபட்சம் பார்க்காமல் வாசலில் நின்று அழைத்த கனிவும்,பணிவும் சிறப்பான ஒன்று!
பல்லாண்டு நட்பு! பல்லாண்டு இடைவெளி! – எனினும் எந்த விரிசலும் இல்லை!

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

செஞ்சோலை படுகொலைகள் .. உண்மையில் என்ன நடந்தது? எப்படி நடந்தது? சமுகவலையில் விவாதங்கள் ..

  Rubasangary Veerasingam Gnanasangary : செஞ்சோலை படுகொலைகள்.
இந்த துன்பியல் சம்பவம் நடக்கும்போது புலிகளால் கள்ள வாக்குகள் பொறுக்கி பாராளுமன்றம் போன தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கும்பல் என்ன செய்துகொண்டிருந்தது?
தாக்கப்பட்டது புலிகளின் கட்டாய ஆயுத பயிற்சி முகாம் என்பதை ஏன் இந்த முட்டாள்கள் மறந்து விட்டனர். குண்டுத் தாக்குதல் நடத்தப் படுமுன்னர் புலிகளின் வாகன நடமாட்டங்களை இலங்கையின் ஆளில்லா விமானங்கள் படம்பிடித்து ஆதாரங்களை வெளியிட்டு இருந்தன. அங்கு இறந்தவர்கள் புலிகளால் வளர்க்கப்பட்ட அநாதை குழந்தைகள் அல்ல. புலிகளால் கட்டாய ஆயுதப் பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகள். ஏதோ புலிகள் வயல்களில் புல்லுப் புடுங்க அழைத்துச் சென்றமாதிரி அல்லவா கதை விடுகிறீர்கள். அந்த பிள்ளைகளின் உற்றார் உறவினர்களுக்கு எனது உண்மையான அனுதாபங்கள்.

Jeyan Deva பயிற்சி நடைபெறவுள்ள நேரமும் இடமும் புலிகளின் புலனாய்வுத்துறை மூலமாக முன்கூட்டியே இராணுவத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு  விட்டது என வடமராட்சியில் நான் சந்தித்த ஒரு அன்பர் சொன்னார்.

திமுக மிதப்பில் இருந்தால் ஆட்சிக் கனவு அவ்வளவுதான்?!

dmk after vellore elctionnakkheeran.in - ஆதனூர் சோழன் : நாடாளுமன்றத்
தேர்தலில் திமுக அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியும் கடைசியாக கிடைத்த வேலூர் தொகுதி வெற்றியும் திமுக தலைமையை மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக அந்தக் கட்சிக்குள்ளேயே எச்சரிக்கை குரல்கள் எழுந்திருக்கின்றன. சமீபத்திய அறிவாலய நிகழ்வுகளும், தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினர் அணி அணியாக பாஜக பக்கம் ஒதுங்கும் நிகழ்வுகளும் இதை நிரூபிப்பதாக அந்தக் கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அத்திவரதர் தரிசனத்தைப் போல, திமுக தலைவரை சந்திக்க வருபவர்களிடம் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், பணம்படைத்தோர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே ஸ்டாலினின் சிறப்புத் தரிசனம் ஏற்பாடு செய்யப்படுவதாக கட்சிக்காக எதையும் எதிர்பாராமல் உழைத்தவர்கள் குமுறுகிறார்கள்.

தங்கத்தமிழ் செல்வன் 27,200 பேரை திமுகவில் இணைத்தார்

27,200 பேரை திமுகவில் இணைத்த தங்க தமிழ்ச்செல்வன்
மின்னம்பலம் : திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் 27,200 உறுப்பினர்களை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகினார். கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். மேலும், ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர் என்றும் தேனியில் மிகப்பெரிய விழா எடுத்து தன்னுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்கவுள்ளேன் எனவும் கூறியிருந்தார்.
அதன்படி, ஜூலை 21ஆம் தேதி ஸ்டாலினை தேனி மாவட்டம் வீரபாண்டிக்கு ஸ்டாலினை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தி, தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்தார். அப்போது தங்கத்தை வெகுவாகப் பாராட்டிய ஸ்டாலின், அதிமுகவில் இருப்பவர்கள் தாய்க் கழகமான திமுகவுக்கு திரும்ப வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

காஷ்மீர் எல்லைப்பகுதியில் 3 பாகிஸ்தான் வீரர்கள் பலி!

 மாலைமலர் : காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில் 3 பாக். வீரர்கள் உயிரிழந்தனர்.
 இந்திய ராணுவம் பூஞ்ச் காஷ்மீரின் உரி மற்றும் ரஜோரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியா கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வடக்கு ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங் கூறும்போது:- கடந்த சில நாட்களாக, பாகிஸ்தானால் ஊடுருவல்களை தூண்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஊடுருவல் முயற்சிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் ஆதரிக்கப்படுகிறது. இங்கு இந்திய ராணுவம் முற்றிலும் எச்சரிக்கையாக உள்ளது. இதுபோன்ற அனைத்து முயற்சிகளையும் எங்களால் தோல்வி அடைய செய்ய முடிந்தது இவ்வாறு அவர் கூறினார்.

BBC :பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படும்" - சுதந்திர தினத்தில் மோதி பேச்சு முக்கிய அம்சம்கள் ..

பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு
உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோதி. இந்தப் பதவி, முப்படைகளுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, திறமையான தலைமையை வழங்கும் என்று அவர் அப்போது கூறினார்.
இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக தங்கள் அரசு பதவி ஏற்று 70 நாள்களுக்குள் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, முத்தலாக் தடை உள்ளிட்ட பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் மோதி தெரிவித்தார்.
காஷ்மீர் குறித்து பேசிய மோதி, " சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கி உள்ளோம்" என்றார்.

ப.சிதம்பரம் : சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் காஷ்மீரில் 3 முன்னாள் முதல்வர்களுக்கு சிறை ஏன் ?

தினகரன் : ஸ்ரீநகர் : சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில் காஷ்மீரில் 3 முன்னாள்
முதலமைச்சர்களுக்கு ஏன் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது  என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 3 முன்னாள் முதலமைச்சர்களின் சுதந்திரம் ஏன் பறிக்கப்பட்டு இருக்கிறது என்று வினவியுள்ளார். 2 முன்னாள் முதலமைச்சர்களை ஏன் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மற்றொருவரை ஏன் வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதோடு பிரிவினைவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எதிராக போராடிய அரசியல் தலைவர்கள் ஏன் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் சிதம்பரத்தின் கேள்வியாகும். நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த உமர் அப்துல்லா, மெகபூபா முஃதி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலும் வீட்டுக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்...

modi raksha bandhan celebrationsநக்கீரன் : நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன்
விழா கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர். சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த விழா இன்று நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அந்த வகையில் சகோதரத்துவத்தை போற்றும் விதமான இந்த விழா டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டினர்.

முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி!

டிஜிட்டல் திண்ணை: முதல்வர் பதவி: பன்னீர் சபதம்- எடப்பாடி பீதி! மின்னம்பலம்:   மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“பலரும் வெளிநாடு செல்வதாக இருந்தால் மகிழ்ச்சியாகவும், எதிர்பார்ப்பாகவும்தான் இருப்பார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐந்து வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆனாலும் ரொம்பப் பதற்றமாகவே இருக்கிறார்.
முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும்,வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வதற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 28 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படுகிறார். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் என பயணம் முடித்து செப்டம்பர் 9 ஆம் தேதி சென்னை திரும்புகிறார் எடப்பாடி என்பதுதான் இப்போது முடிவு செய்யப்பட்டிருக்கிற பயணத் திட்டம்.

காஷ்மீர் பிரச்சனையில் பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டிஷ்... நாடுகளுடன் கை கோர்க்கும் சீனா

கடந்த வாரம் தனியாக விசாரிப்போம்.. காஷ்மீர் பிரச்சனையில் 5 முக்கிய நாடுகளுடன்  கை கோர்க்கும் சீனா.. ஷாக்கிங்!
tamil.oneindia.com - shyamsundar : பெய்ஜிங்: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை ஐநாவில் உள்ள முக்கிய நாடுகளிடம் முறையிட உள்ளதாக சீனா முடிவு எடுத்துள்ளது. இது தொடர்பாக தனியாக ஆலோசிக்க அழைப்பும் விடுத்துள்ளது.
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அதேபோல் காஷ்மீரை இரண்டாக பிரித்துக் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது பற்றி உலக நாடுகள் பெரியதாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இது உலக அளவில் பிரச்சனையாகி வருகிறது.
இந்தியாவுடன் அனைத்து விதமான வர்த்தக உறவு மற்றும் தூதரக உறவுகளை நிறுத்த போவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு- சுதந்திர தின விழா மேடையில் எடப்பாடி அறிவிப்பு!

eps eps nakkheeran.in/author/kalaimohan : சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதன்பிறகு மக்களுக்காக உரையாற்றினார்.   அனைவருக்கும் 73-வது தின சுதந்திர தின வாழ்த்துக்கள். போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய சுதந்திரத்தை பெற்றுத்தந்த போராட்டத் தலைவர்களை நினைவில் கொள்ளவேண்டிய நாள் இன்று. தமிழக மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றியதில் பெருமிதம் அடைகிறேன்.

சுதந்திர தின உரையில் மோடி .. ஒரே நாடு ஒரே தேர்தல் பாஜகவின் அதிரடி திட்டம்! ( ஒரே EVM ?)

ஜிஎஸ்டி என்ன tamil.oneindia.com-shyamsundar.: டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மக்களின் வரிப்பணம் மிச்சம் ஆகும், இதுகுறித்த விவாதத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திரம் அடைந்தது. இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி ஆறாவது முறையாக டெல்லியில் கொடி ஏற்றியுள்ளார் .
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில், ஜிஎஸ்டி மூலம் நாடு முழுக்க ஒரே வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து இருக்கிறது. இதன் மக்கள் சரியாக வரி கட்ட முடிகிறது. நாட்டிற்கு இதனால் அதிக வருவாய் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி பெரிய வரி சீர்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே திட்டம் என்றால் இப்படித்தான் நன்மைகள் நடக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலும் இப்படித்தான். மக்களின் வரிப்பணம் இதன் மூலம் சேமிக்கப்படும். இதுகுறித்த விவாதங்கள் நடந்து வருகிறது.

ஓவைசி.எம்பி ரஜினிக்கு : இன்னொரு மகாபாரதத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா?’ வீடியோ


ஓவைசிரஜினிகாந்த்
காஷ்மீர்விகடன் -சத்யா கோபாலன் : காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினி பேசியுள்ள கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில் ஹைதரபாத் எம்.பி-யும் ரஜினியின் கருத்தை விமர்சித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டப் பிரிவு 370, 35A சமீபத்தில் நீக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று முன்தினம் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரம் பற்றிப் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. “