சனி, 17 ஆகஸ்ட், 2024

2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

 கலைஞர் செய்திகள்  -Lenin :  தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தலைமையில் இன்று (16.8.2024) சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை பின்வருமாறு :-
நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, ஆற்றல்மிகு மாவட்டச் செயலாளர்களுக்கும் - தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும் - வாழ்த்துகளையும் - மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

டாக்டர் வன்புணர்வு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கக்கோரி மம்தா பானர்ஜி பேரணி

 மாலை மலர்  :  மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமான வகையில் பாலியல் வன்புணர்வு செய்து  கொலை செய்யப்பட்டார். நீதி வேண்டி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவி  பாலிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிஐ வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் (18-ந்தேதி) முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்திருந்தார்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

2026 திமுக 200 தொகுதியில் போட்டி.? காங்கிரஸ்க்கு செக்? பல்டி அடிக்க காத்திருக்கும் கதர்

 tamil.asianetnews.com  -  Ajmal Khan  :  தமிழகத்தில் திமுகவும் காங்கிரசும் பல ஆண்டுகளாகக் கூட்டணியில் இருந்து தேர்தல்களைச் சந்தித்து வருகின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குக் குறைந்த தொகுதிகளே ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் பல ஆண்டுகாலமாக பயணம் மேற்கொண்டு வருகிறது. பலவித ஏற்றம்  இறக்கங்கள் இருந்தாலும் இந்த கட்சிகள் தேர்தலை ஒற்றுமையாக சந்தித்து வருகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருந்தது. அப்போது 2 ஜி வழக்கில் திமுக நிர்வாகிகளுக்கு கடும் நெருக்கடியை அமலாக்கத்துறை கொடுத்தது. ஆ.ராசா மற்றும் கனிமொழி அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

நான்தான் செஞ்சேன்.. என்னை தூக்கில் போட்டாலும் பிரச்சனையில்லை.. கொல்கத்தா கொடூரன் ஷாக் வாக்குமூலம்

kolkata

tamil.oneindia.com - Shyamsundar I :   கொல்கத்தா: கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அதோடு அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 33 வயதான சஞ்சோய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராயின் கடந்தகால நடத்தை, முந்தைய திருமண வாழ்க்கையில் மனைவியை கொடுமை செய்தது மற்றும் ஆபாச வீடியோக்கள் பார்த்தது ஆகியவை அவருக்கு மனநல ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்கிறார்கள்.
இவர் அங்கே தன்னார்வலராக போலீஸார் உடன் இணைந்து செயல்பட்டு உள்ளார். இவர் வெறும் தன்னார்வலர்தான். ஆனால் போலீஸ் குழுக்களில் இருக்கிறார், அங்கே கிடைத்த காண்டாக்ட் மூலம் போலீஸ் கமிட்டி ஒன்றிலும் கூட கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.

கொல்கத்தா பெண் மருத்துவர் உடலில் 150mg விந்துக்கள் : கொலையில் அதிர்ச்சியூட்டும் தகவல் !

 கலைஞர் செய்திகள் - KL Reshma  :  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் என்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவியாக பயிற்சி பெற்று வந்துள்ளார் 31 வயது பெண் மருத்துவர். இந்த சூழலில் இவர் கடந்த ஆக.8-ம் தேதி மருத்துவமனைக்கு இரவு நேர்ப்பணியில் இருந்துள்ளார்.
அப்போது இரவு சாப்பாடு சாப்பிட்ட பின்னர், சுமார் அதிகாலை 2 மணியளவில் தனக்கு அதிகமாக தூக்கம் வருவதாக கூறி அருகில் இருக்கும் வளாகத்திற்கு தூங்க சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை சக மாணவர்கள் வந்து பார்க்கையில், மருத்துவ மாணவி அந்த அறையில் அரை நிர்வாணமாக இருந்துள்ளார்.

1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ தமிழ்நாட்டில் முதற்கட்டமாக திறக்கப்படும்

 கலைஞர் செய்திகள் Chennamani : நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று (15.08.2024) தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
விடுதலை திருநாள் நிகழ்வில், சென்னை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தியிருக்கக் கூடிய நம்முடைய முதலமைச்சர் அறிவித்திருக்கக்கூடிய மிக முக்கியமான அறிவிப்புக்களில் ஒன்று
“முதல்வர் மருந்தகம்” என்கின்ற பெயரில் தமிழ்நாட்டில் மருந்தாளுநர்கள் பயன்பெறத்தக்க அளவில், கூட்டுறவு அமைப்புகள் பயன்பெறத்தக்க அளவில்,
1000 மருந்தகங்கள் தமிழ்நாட்டில் முதற்கட்டமாக திறக்கப்படும்.

Woman doctor rape case/பெண் டாக்டர் கும்பல் பலாத்கார வழக்கு மேற்கு வங்கம்

தினத்தந்தி :  கொல்கத்தா ஐகோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோர் அதிர்ச்சி தகவல்
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில், கும்பல் பலாத்காரம் மற்றும் கொலை நடந்ததற்கான அடையாளங்கள் தெளிவாக உள்ளன என அவருடைய பெற்றோர் மனுவில் தெரிவித்து உள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார்.

கலைஞர் உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழா! ராஜ்நாத் சிங் . அண்ணாமலை பங்கேற்கிறார்கள்

 tamil.oneindia.com -  சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர்  உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தான் பங்கேற்க இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த விழாவுக்கு வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னை அழைத்ததாக அண்ணாமலை கூறி உள்ளார்.
வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி கலைஞர்  நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞர்  நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதன், 14 ஆகஸ்ட், 2024

குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்!

 ignesh Selvaraj - Oneindia Tamil சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் மகளிர் நல மேம்பாட்டுத்துறை குஷ்புவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

16 வயதான சிறுமியை அதிபர் மாணவர்கள் - 22 பேர் தொடர் பாலியல் வன்முறை .. தனமல்வில இலங்கை

ilakkiyainfo.com :  16 வயதான சிறுமியை மாணவர்கள் 22 பேர் தொடர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: 17 மாணவர்கள் கைது
பாடசாலை அதிபர், ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை
தணமல்வில பகுதியில் 16 வயதான சிறுமியை பாடசாலை மாணவர்கள் 22 பேர் தொடர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர், பாடசாலை ஆசிரியர் மற்றும் இரண்டு ஆசிரியைகளும் அடங்குகின்றனர்.
சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதான அதிபர் மற்றும் ஆசிரியைகள் மூவர் இன்றையதினம் (14) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க கனடா எல்லையில் 115 கிலோ கோக்கையின் .. பிடிபட்ட இலங்கை தமிழர்

May be an image of 1 person

Rahu Kathi  :  ஜூலி சபேசன் சத்தியசீலன் என்னும் 42 வயதான இலங்கைத் தமிழர் 266 இறாத்தல் கொக்கெயின் போதை வஸ்துடன் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு சார்ணியா ஒன்ராறியோவிற்குள்  வைத்து கனேடியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று மில்லியன் டொலர்கள் பிணைப்பணமாகக் கோரப்பட்டுள்ளது.
இவர்கள் செய்யும் வேலைகளால் சாதாரண அப்பாவி ட்ரக் சாரதிகள் பலத்த சோதனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. சமீப காலங்களில்   ட்ரக் செலுத்தும் இலங்கையர்கள் இந்தியர்கள் அமெரிக்க கனேடிய எல்லைகளில் நுழையும்போது தடுக்கப்பட்டு கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள்

தேவநாதன் யாதவ் கைது : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

 minnambalam.com  -  - christopher :  பாஜக கூட்டணி தலைவரான தேவநாதன் இன்று (ஆகஸ்ட் 13) நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் பழமை வாய்ந்த ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.

ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீம் கைது.. போதைப்பொருள் கடத்தல் வழக்கு:

 மாலை மலர் :   போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைத்தனர்.
போதைப்பொருள் கடத்தல் ஆயிரக்கணக்கான கோடியில் சர்வதேச அளவில் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

Ukrainian பற்றி எரிந்த ரஷிய அணுமின் நிலையம்.. ரஷியவுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள்

 மாலை மலர்:   ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.
ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன.
எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

ஸ்வஸ்திக் தமிழரின் எழுத்து! - மஞ்சை வசந்தன்

No photo description available.

ஸ்வஸ்திக் தமிழரின் எழுத்து! - மஞ்சை வசந்தன்
[கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அய்யன் ஏரியில் அகழ்வின்போது  எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்தது பற்றி, 02.08.2017 ‘தமிழ்’ இந்து நாளிதழில் வந்த செய்தியை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை]
 ‘ஸ்வஸ்திக்’ உலகில் பலப் பகுதிகளில் பலரால் பயன்படுத்தப்பட்டாலும் அதன் உரிமையாளர் தமிழர் என்ற ஆணித்தரமான உண்மை பெரும்பாலோர் அறியாதது என்பது மட்டுமல்ல, இதை அறியும்போது அவர்கள் வியப்பும் அடைவர்.
 இந்தக் குறியீடு “ஸ்வஸ்திக்” என்று பின்னாளில் அழைக்கப்பட்டாலும், இது இரு தமிழ் எழுத்துக்களின் கூட்டெழுத்து. தமிழில் கூட்டெழுத்து எழுதுவது 40 ஆண்டுகளுக்கு முன்புகூட வழக்கில் இருந்தது. வயதானவர்கள் இன்றைக்குக்கூட கூட்டெழுத்தில் எழுதுவதைக் காணலாம். க்+கு இரண்டையும் சேர்த்து ஒரே எழுத்தால் எழுதுவது வழக்கில் உள்ளது.
அதுபோல, ஓ+ம் என்ற இரு எழுத்துகளைச் சேர்த்து எழுத  இந்த வரி வடிவ எழுத்தைப் பயன்படுத்தினர்.

Whistles Blower என்பதற்கு உரிய சரியான தமிழ் சொல் எது?

 Rubasangary Veerasingam Gnanasangary :  சங்கு ஊதுவது.
Sriskandakumar Kumar :  துரோகி.
Kulitalai Mano :  முதல் குரலோன்  புரட்சி ஏற்படுத்துதல்
Thirumalai Nambi :  உண்மை விளம்பி
Radha Manohar  : Whistle Blower விசில் ப்ளோவர் என்பதற்கு உரிய சரியான தமிழ் சொல் இல்லை என்றே தோன்றுகிறது
பல சொற்கள் அருகருகே நிற்கின்றன .. ஆனால் அவை எல்லாம் Whistle Blower என்ற சொல்லுக்கு உரிய உணர்வை கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது
தமிழர்களின் வாழ்வியலில் இந்த விடயமே மிக அரிதாகவே உள்ளது
அதன் காரணமாக கூட புழக்கத்தில் எந்த சொல்லும் Whistle Blower என்ற பொருளை தரவில்லை என்றெண்ணுகிறேன்
எங்காவது அநியாயம் நடக்கின்ற பொழுது அதற்குள் இருந்து அங்கு நடப்பது சரியல்ல என்று கூறுவதற்கு மிக துணிச்சல் வேண்டும்
தமிழர்களின் வாழ்வியலில் இது ஏன் அருகி போனது?

ஹிண்டன்பா்க் அறிக்கை : அதானி முறைகேடு நிறுவனங்களில் செபி தலைவருக்குப் பங்கு:

 தினமணி :  அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறாா். எனவேதான், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை’ என்று அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.
‘செபி தலைவா் மாதபியுடன் எங்களுக்கும் எந்த வணிக உறவும் இல்லை’ என்று அதானி நிறுவனமும், ‘ஹிண்டன்பா்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது’ என மாதபியும் மறுப்பு தெரிவித்துள்ளனா்.

ஷேக் ஹசீனா : அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்!

 hindutamil.in :  அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
புதுடெல்லி: அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.
இது கலவரமாக மாறியதால், கடந்த 5-ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அவர் அளித்த நேர்காணலில் கூறியதாவது: