புதன், 18 செப்டம்பர், 2024

பெரியார் பாதையில் பயணிப்போம்” - த.வெ.க தலைவர் விஜய் உறுதி!

 nakkheeran.in  ;தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று பெரியார் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவையொட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

2005 புலிகளை உடைத்தமைக்காக ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை

May be an image of 3 people and text

  jaffnamuslim.com :  புலிகளை உடைத்தமைக்காக ரணிலுக்கு வழங்கப்பட்ட தண்டனை
புலிகள் இயக்கத்தினை இரண்டாக பிளவுபடுத்தியதற்காக விடுதலைப் புலிகளினால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கிய தண்டனை தான் 2005 ஆம் ஆண்டு தேர்தலை பகிஸ்கரிக்கச் செய்தது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (17) மாலை மட்டக்களப்பு கல்லடி மீனிசை பூங்காவில் நடைபெற்றது.

கெஜ்ரிவால் ராஜினாமா.. ஆட்சியமைக்க உரிமை கோரிய அதிஷி

 மாலை மலர் :  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அவரை ஜாமினில் விடுதலை செய்தது.
அதே நாளில் அவர் திகார் சிறையில் இருந்தும் விடுதலை ஆனார்.
கடந்த 15-ந்தேதி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் 48 மணி நேரத்துக்குள் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார்.
 மக்கள் தீர்ப்பளிக்காமல் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரப்போவதில்லை என்று தெரிவித்த கெஜ்ரிவால், சட்டமன்றத் தேர்தலை வருகிற நவம்பர் மாதமே நடத்த வலியுறுத்தினார்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2024

திமுக 75-ம் ஆண்டு பவள விழா, முப்பெரும் விழா-லட்சக்கணக்கில் திரளும் தொண்டர்கள்!

 tamil.oneindia.com - Mathivanan Maran   : சென்னை: திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் பவள விழா மற்றும் திமுக ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழா ஆகியவை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் திமுகவின் முப்பெரும் விழா விருதுகள், மூத்த தொண்டர்களுக்கான பண முடிப்புகள் வழங்கப்பட உள்ளன. மேலும் A1 தொழில்நுட்பத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்த்தும் இடம் பெற உள்ளது.

பாடகர் மனோவின் மகன்கள் தொடர்புடைய வழக்கில் திடீர் திருப்பம்!

  nakkheeran.in :  சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16) இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் கிருபாகரனுக்குத் தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது.

திங்கள், 16 செப்டம்பர், 2024

ராணிப்பேட்டையில் Jaguar Land Rover உற்பத்தி ஆலை : செப். 28ல் அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்!

 kalaignarseithigal.-Lenin :  ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை மற்றும் மெகா காலணி உற்பத்தி பூங்காவிற்கு வரும் செப்டம்பர் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழ்நாடு உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் விளங்குகிறது.

நடிகை ரோகிணி டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளில் வழக்கு

 மாலை மலர்  :  மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து தமிழ் திரை உலகில் பாலியல் புகார்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 6-ந்தேதி அன்று டாக்டர் காந்தராஜ் என்பவர் மீது புகார் அளித்திருந்தார். அதில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள டாக்டர் காந்தராஜ் நடிகைகள் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Donald Trump டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி! துப்பாக்கியால் சுட்ட நபர் பிடிபட்டார்

 dinamani அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினைகொலை செய்வதற்கு மீண்டும் முயற்சி
இடம்பெற்றதாகதாகவும் அதனை முறியடித்துள்ளதாகவும் எவ்பிஐ தெரிவித்துள்ளது.
புளோரிடாவின் வெஸ்ட்பாம் பீச்சில் கோல்வ் விளையாடுவதற்காக டிரம்பை சென்றவேளை கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் காணப்படுவதை அவதானித்த இரகசிய சேவை பிரிவினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்! வெற்றி யாருக்கு? ரணில் ,சஜித், அநுர ? தமிழ் மக்களின் வாக்குகளை யார் பெறுவார்?

May be an image of 1 person and dais

வீரகேசரி -டி.பி.எஸ். ஜெயராஜ்  : இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ‘ மத்திய செயற்குழு ‘ அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்.

Dehlhi Cm முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” : கெஜ்ரிவால் அறிவிப்பு!

 minnambalam.com - christopher  சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், டெல்லி முதல்வர் பதவியை அடுத்த 2 நாட்களில் ராஜினாமா செய்வதாக இன்று (செப்டம்பர் 15) அறிவித்துள்ளார்
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ கைது செய்திருந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
அதனையடுத்து திகார் சிறையில் இருந்து வெளிவந்த அவருக்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு – இலங்கை கப்பல் போக்குவரத்தின் ஆயிரம் ஆண்டு வரலாறு

 BBC tamil  தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் கடல்வழியிலான போக்குவரத்து என்பது சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை தற்போது கப்பல் போக்குவரத்து துவங்கி, நடந்து வருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் விமானத்தின் மூலமே சென்றடைகிறார்கள் என்றாலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில், கப்பல் போக்குவரத்திற்கு முக்கியமான இடம் இருந்தது. தமிழக கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம், மரக்காணம், பூம்புகார், மாமல்லபுரம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.

பேரறிஞர் அண்ணாவை நாம் உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும்.

May be an image of 1 person
May be an image of 2 people

ராதா மனோகர் :  தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின்  சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!
உண்மையில் வரலாற்றை  கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால்தான் பேரறிஞர் அண்ணாவின்  பேராற்றல் எத்தகையது என்று புரியும்.