சனி, 9 டிசம்பர், 2023
நிவாரண தொகையை ரொக்கமாக கையில் தர தமிழ்நாடு அரசு தீர்மானம் .. பல இடங்களில் ஏ டி எம்கள் வேலை செய்யவில்லை
சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையால் பாதிக்கப்பட்டோருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண தொகையை ரேஷன் கடைகள் மூலம் தருவது ஏன் என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து, மக்களின் இயல்பு வாழ்க்கையையே முடக்கிப் போட்டது.
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்… படிப்புக்கு தடை போட்ட மணமகனுக்கு சாத்துப்படி
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதன் விவரம் வருமாறு:-
சித்ரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா தாலுகாவை சேர்ந்த மஞ்சுநாத்துக்கும், சல்லகெரே தாலுகாவை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் பேசப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்திற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
இந்நிலையில், 6-ந்தேதி மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. மறுநாள் காலை திருமணத்திற்காக மணமகனும், மணமகளும் தயாராகினர். சம்பிரதாயங்கள் முடிந்த நிலையில், மணமகன் மஞ்சுநாத் தாலிகட்ட நெருங்கி வந்தபோது, திடீரென திருமணம் செய்து கொள்ள மணமகள் ஐஸ்வர்யா எதிர்ப்பு தெரிவித்தார்.
கஸ்மாலம் கஷ்மாலம் என்ற சொற்கள் சேரி மக்களின் சொல் அல்ல அவை பார்ப்பன சொற்களே வடமொழி ஆதாரம்
கஸ்மாலம் அல்லது கஷ்மாலம் என்ற சொற்கள் சென்னை சேரி மக்கள் பேசும் சொற்கள் என்பதாக துக்ளக் சோ எஸ் வி சேகர் கிரேசி மோகன் போன்றவர்களின் மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அடிக்கடி கேட்டிருக்கிறோம்
ஆனால் இது உண்மையில் பகவத் கீதையில் இருக்கும் ஒரு வடமொழி சொல்லாகும்
இச்சொற்கள் உண்மையில் பார்ப்பனர்களின் மொழிதான்
கீதை உண்மை உருவில் என்ற நூலில் இருக்கிறது
தோழர் கிரிஷ் மருது அவர்கள் இதை ஆதாரத்தோடு வெளிக்கொண்டு வந்திருக்கிறார்
மன்சூர் அலிகான் திரிஷா, குஷ்பு நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்ட வழக்கு
மாலை மலர் : நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார்.
இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.
துரை தயாநிதிக்கு மூளை பகுதியில் 6 அடைப்புகள் அகற்றம்?
tamil.asianetnews.com - Manikanda Prabu : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதிக்கு மூளை பகுதியில் 6 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகனும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி. இவர் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் காலை அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. சென்னையில் உள்ள தனது வீட்டில் அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மே வங்க MP மஹுவா மோஹத்ரா பாஜகவை நோக்கி அதிரடி! : உங்களின் முடிவு ஆரம்பம்!
மஹுவா மோஹத்ரா : பஞ்சாபி சிந்து மராத்தா திராவிட உத்கல(ஒடிஷா) வங்கா...
இன்று பஞ்சாப் உங்களுடையது அல்ல
சிந்து எங்களுடையது அல்ல( பாகிஸ்தானில்)
மராட்டா உங்களுடையது அல்ல
திராவிடா உங்கள்குடையது அல்ல
உத்கல் உங்களுடையது அல்ல
வங்கா உங்களுடையது அல்ல ...
... இது உங்களுடைய முடிவின் ஆரம்பம்
முதல்வர் மம்தா : மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து நீக்கியது பாராளுமன்ற ஜனநாயக துரோகம்!
மாலை மலர் : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பெற்றுக்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக கேள்விகள் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
மக்களவை உறுப்பினருக்கு லாகின் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை வெளியில் உள்ள நபருக்கு வழங்கி பாராளுமன்ற இணைய தளத்தைப் பயன்படுத்த அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது. அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே, மதிய உணவிற்கு பிறகு பாராளுமன்றம் கூடியபோது சபாநாயகர் ஓம் பிர்லா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
வெள்ளி, 8 டிசம்பர், 2023
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறித்தார் சபாநாயகர்
இதுதொடர்பாக மக்களவை நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, சுமார் 500 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில் மொய்த்ராவின் செயல் மிகவும் ஆட்சேபணைக்குரிய, நெறிமுறையற்ற, கொடூரமான மற்றும் குற்றவியலானது எனவும், அவரை எம்.பி. பதவியில் இருந்த நீக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
வியாழன், 7 டிசம்பர், 2023
சென்னையில் மீண்டும் இன்றிரிரவு 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை .. வானிலை அறிக்கை
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “இரவு 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது.
சாலை வழுக்கும் தன்மையுடன் இருக்கும். சில இடங்களில் வாகன நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதம் ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.” என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் போரில் இலங்கை கப்டன் ரனிஷ் உட்பட 3 இராணுவத்தினர் உயிரிழப்பு
ரஷ்ய அரசாங்கப் படைகளால் “கறுப்பு எதிரி” என்று அழைக்கப்பட்ட கேப்டன் ரனிஷ் ஹேவகே ரஷ்யர்களால் ஒரு இலக்காகவும் குறிவைக்கப்பட்டிருந்தார்
அவர் இலங்கை காலாட்படை மற்றும் கொமாண்டோ படையில் பயிற்சி பெற்ற பின்னர் அதிலிருந்து விலகி , உக்ரேனிய இராணுவத்தின் வழக்கமான உறுப்பினராக மார்ச் 2022 இல் சேவையில் சேர்ந்துள்ளார்.
சென்னை ஏரிகளை கல்வி வியாபாரிகளுக்கு தாரை வார்த்த எம்ஜிஆர் .
இது எத்தனை பேருக்கு தெரியும்.
போரூர் ஏரி -உடையார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
பொத்தேரி - பச்சமுத்து SRM கல்லூரி
கூவம் ஆறு - ஏ.சி.சண்முகம் மருத்துவக் கல்லூரி
பல்லாவரம் ஏரி - ஐசரி கணேஷ் வேல் பல்கலைக்கழகம்
ஜேப்பியார் - சத்தியபாமா பல்கலைக்கழகம்
நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
சென்னையை சீரழித்த பெருமை எம்ஜிஆரையே சாரும்.
நன்றி மாணவ நேச
புதன், 6 டிசம்பர், 2023
செந்தில்குமார் MP: இந்தி பேசும் மாநிலங்கள் கோமூத்திர மாநிலங்கள்- நாடளு மன்றத்தில் புயல் கிளப்பிய தருமபுரி திமுக
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், வட மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. மறுமுனையில் தென் மாநிலமான தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.
சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு!
இந்நிலையில், கடந்த டிசம்பர் 4 அன்று துவங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் டிசம்பர் 5 கூட்டத்தில் இதுகுறித்து பேசிய திமுக எம்.பி செந்தில்குமார், “இந்தி நிலத்தில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் உங்களால் ஒருநாளும் நுழைய முடியாது”, என தெரிவித்தார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “இந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் ‘கோ மூத்திர மாநிலங்கள்’ என்று அழைப்போம். அங்கு நடக்கும் தேர்தல்களில் மட்டுமே பாஜகவுக்கு வெற்றி கிடைக்கிறது” என சர்ச்சைக்குரிய வகையிலான கருத்து ஒன்றையும் எம்.பி செந்தில்குமார் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச விமான நிலையத்தை ரஷ்ய - இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானம்!
hirunews.lk : இலங்கை மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையம் ரஷ்ய - இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க படுகிறது!
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், அதன்படி இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாலாசா வல்லவன் பெரியாரை அவமான படுத்தினார்? பிரபாகரனோடு ஒப்பிட்டார்?
Suhan Kanagasabai i: "பிரபாகரனையும் பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது
கண்டிக்கத்தக்கது "என்கிறார் வாலாசா வல்லவன்.
இவர் கண்டிக்காவிட்டாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிராக அடையாளப் படுத்தப்பட்டுக்கொண்டேயிருப்பார்கள்.
உண்மையில் வாலாசா வல்லவனின் கூற்று பெரியாரை அவமானப்படுத்தும் ஒன்று.
பிரபாகரனைப் பின்பற்றினால் மட்டுமே இப்படி மூடத்தனமாக உளறவேண்டியிருக்கும்.
பெரியார் காந்தியம் -சமூகநீதி -கம்யூனிச சிந்தனைகள் இவற்றிலிருந்து உருவாகிவந்த பேராளுமை .
இன்றும் பெண்ணியச் சிந்தனைகள் ,ஆதிக்கக் கலாசார மறுப்புச் செயற்பாடுகள் இவற்றிற்காக சர்வதேச அளவில் அறியப்படுகிறார்.
பிரபாகரன் சுத்த இராணுவவாதி.
பிரபாகரன் சிந்தனைகள் என எதுவும் இல்லை. பிரபாகரனுக்குப் பின் புலிகள் அமைப்புமில்லை.
பெரியாருக்குப் பின் பெரியார்காலத்திலிருந்தே அவரை முன்னிறுத்தி தனித்துவமாக உருவான அமைப்புகள் இன்றுவரை இயங்குகின்றன.
தனது அமைப்பிற்குள் வன்முறையை மருந்துக்கும் அனுமதிக்காதவர் பெரியார்.
தங்கர் பச்சான் : பேரிடர் கால உதவிகள் வழங்கி கொண்டிருப்பவர்களை தூற்றாதீர்கள்.. கட்சி பேதம் கடந்து கைகொடுங்கள்
மாலை மலர் : மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள்.
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.
தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மாலை மலர் : :; தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஐதராபாத் தனியார் ஓட்டலில் நேற்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதலமைச்சரை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
செவ்வாய், 5 டிசம்பர், 2023
லஞ்ச வழக்கில் ED அமலாக்கத்துறை அதிகாரி ஜாமீன் மனு தள்ளுபடி
மாலைமலர் : திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு.
இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டாக்டர் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்ட நிலையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் எடுத்து தாங்கள் விசாரிக்க இருப்பதாகவும், விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டுமானால் ரூ.51 லட்சம் தர வேண்டும் என மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த அங்கிட் திவாரி கூறியுள்ளார்.
அதன்படி 2-வது தவணையாக ரூ.20 லட்சத்தை பெற்றுக் கொண்டு திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பிச் சென்றபோது விரட்டிச்சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை கைது செய்தனர். 15 மணி நேர விசாரணைக்கு பின்பு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தியா திரும்பிய இந்திய வம்சாவளி மக்கள் மீண்டும் இலங்கைக்கு- அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை?
மலையோரம் செய்திகள் : நாடு கடத்த பட்ட இந்திய வம்சாவளி மக்கள் மீண்டும் இலங்கைக்கு.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தத்தளிக்கும் சென்னை.. வெள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சியின் ஆக்ஷன் பிளான் இதுதான்.. செம!
tamil.oneindia.com - Mani Singh S : சென்னை: சென்னை மாநகரை மிக்ஜாம் புயல் பதம் பார்த்து விட்டு சென்ற நிலையில், தற்போது எங்கு பார்த்தாலும் வெள்ள நீராக சூழ்ந்துள்ளது.
தற்பொது மழை குறைந்துவிட்ட நிலையில் மழை நீரை வெளியேற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
மக்களின் இயல்பு வாழ்க்கையை அப்படியே முடக்கிப்போட்டது இந்த மிக்ஜாம் புயல்.
தற்போது மிக்ஜாம் புயல் சென்னையை கடந்துவிட்டபோது நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்றும், தற்போதில் இருந்தே மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
திங்கள், 4 டிசம்பர், 2023
சென்னை பெருங்குடி.. புரட்டிப் போட்ட 50 செ.மீ. மழை- மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்!
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: சென்னை பெருங்குடியில் 50 செ.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டியது.
இன்றும் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பெருமழை கொட்டித் தீர்த்தது. தற்போது சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் விலகி இருந்தாலும்,
சில மணிநேரங்கள் மழை நீடிக்கும் எனவும் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Cyclone Michaung: Chennai Perungudi receives 50 CM Heavy Rain
சென்னையில் இன்று காலை 8.30 மணிவரையில் பெரும்பாலான பகுதிகளி 21 செ.மீ முதல் அதிகபட்சமாக 29 செ.மீ வரை மழை பதிவாகி இருந்தது.
சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவர்கள்!
மாலை மலர் :விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
சரியாக படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள்.
ஆசிரியர் அடித்தால் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சில மாணவர்கள் ஆசிரியரை தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியரை மாணவர்கள் அரிவாளால் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொருளாதாரத் துறை ஆசிரியர் கடற்கரை (வயது 12). இவர் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார துறை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 11-ம் வகுப்பு மாணவர்கள் இருவரை படிக்கும்படி கண்டித்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இருவரும் ஆசியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு கமல்நாத்தின் பிடிவாதம் மட்டும் காரணம் அல்ல
Kandasamy Mariyappan : மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விக்கு கமல்நாத்தின் பிடிவாதமே காரணம் என்று பல அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.!
நான் மாறுபடுகின்றேன்.!
கமல்நாத், அசோக் போன்றவர்கள் RSS/ காங்கிரஸ்வாதிகள்.! அது மட்டுமே நமது கவலை.!
ஆனால்.,
மத்தியபிரதேசத்தில் அகிலேஷ் ஆட்சியமைக்கப் போவதில்லை.!
இன்றைய சூழலில், அங்கே போட்டியிடுவதால் அகிலேஷ் சாதிக்கப் போவது ஏதுமில்லை.!
2024ல் INDIA கூட்டணிக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குவது எப்படி என்ற சிந்தனையே அகிலேஷுக்கு இருந்திருக்க வேண்டும்.!
அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள எல்லையோர மாவட்டங்களில் திமுக போட்டியிட்டால் 10-15% வாக்குகளை பெற முடியும். அதனை வைத்து தமிழ்நாட்டில் உங்களுக்கு பங்கு வேண்டும் என்றால், அந்த மாநிலங்களில் எங்களுக்கு 10 சீட் கொடுங்கள் என்று காங்கிரஸ், கம்யூனிஸ கட்சிகளிடம் பேரம் பேசலாம்.!
அதனால் திமுகவிற்கு எந்த பலனும் இல்லை.!
சென்னையில் 14 சுரங்கப்பாதைகள் மூடல்- சென்னை புறநகர் அனைத்து ரெயில்களும் நிறுத்தம்
மேலும், சாலையின் சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சென்னை பெருநகர காவல்துறைக்கு உள்பட்ட மாநராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் கணேசபுரம், கொங்கு ரெட்டி, பெரம்பூர், வில்லிவாக்க், ரங்கராஜபுரம், அரங்கநாதன், துரைசாமி உள்ளிட்ட 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
திண்டுக்கல் கைது... திக் திக் CBI க்கு மாறுகிறதா ED அதிகாரி கைது வழக்கு?
Minnambalam - Selvam : திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை அவரது கோட்டூர்புரத்தில் உல்ள இல்லத்துக்கே சென்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் டிசம்பர் 2-ஆம் தேதி காலை நேரில் சந்தித்தார்.
சமீப நாட்களாக துரைமுருகன் அமைச்சராக இருக்கும் நீர்வளத்துறையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் வேட்டை தீவிரமாக இருக்கிறது. நீர் வளத் துறை முதன்மைப் பொறியாளர் முத்தையாவை கடந்த நவம்பர் 20, 21 தேதிகளில் அழைத்து விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
மேலும் இது தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் கொடுக்க, அதற்கு நீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
துரைமுருகனுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே அவ்வப்போது சில மன வருத்தங்கள் வருவதும் மறைவதும் தொடர்ந்து நடக்கும் சங்கதி தான். ஏற்கனவே இ.டி. ரெய்டு குறித்து முதல்வரே அமைச்சர் துரைமுருகனுக்கு போன் செய்து எச்சரித்திருந்தார். இதற்கிடையே திண்டுக்கல்லில் இ.டி. அதிகாரியை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
1,37,000 தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு .. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மதுரை நீதிபதி
ராதா மனோகர் : ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீமா இந்திரா காந்தி ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா 6 இலட்சம் பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கி இருக்கவேண்டும்
ஆனால் இந்தியா இதுவரை 4.6 இலட்சம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கி உள்ளது ’
நன்றி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
33 ஆண்டுகளாக அகதிகளாக இருந்து இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய 70 வயது முதியவருக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
"இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய ஆறு லட்சம் பேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டிய கடமை உள்ளது
ஆனால் இன்றுவரை 4,61,639 பேர்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது"!
அண்மையில் மதுரையில் நடந்த ஒரு வழக்கில் நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இதுபற்றி குறிப்பிடுகையில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51வது பிரிவு, ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் கையாள்வதில் உடன்படிக்கைக் கடமைகளுக்கு மதிப்பளிக்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார்
இதன் படி இன்னும் 1,37,000 பேர்களுக்கு இந்தியா குடியுரிமையை வழங்க வேண்டும்
தெலுங்கானா மாநில உருவாக்கத்தில் பெரும் பங்களித்த சந்திரசேகர ராவை மக்கள் ஒதுக்கியது ஏன்
மாலை மலர் : தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடந்து வருகிறது.
அதில், மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 60 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ் 40 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிரிய சமிதி ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
தெலுங்கானா உருவாக உண்ணாவிரதம் இருந்த சந்திரசேகர் ராவுக்கு மக்கள் ஓட்டளித்து ஆட்சியில் அமர வைத்தனர். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.
ஞாயிறு, 3 டிசம்பர், 2023
பில் கேட்ஸ் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
hirunews.lk : பில் கேட்ஸ் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு!
உலகின் முன்னணி செல்வந்தர்களுள் ஒருவரும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனருமான பில் கேட்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் நடைபெறும் கொப் 28 எனப்படும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின்போது, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம், விவசாய நவீனமயமாக்கல், தரவு அமைப்புகள் மற்றும் காலநிலை நிபுணத்துவம் ஆகியவற்றுக்கு தமது ஆதரவை வழங்குவதாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
தாழமுக்கம் வலுவடைந்து யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது!
hirunews.lk : தாழமுக்கம் வலுவடைந்து யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது!
தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான தாழமுக்க மண்டலம் வலுவடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இது வடக்கு கடற்கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு நகர்கிறது.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிக்ஜாம்.. சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிக கனமழை!
tamil.oneindia.com - Vigneshkumar :சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் முக்கிய அலர்ட்டை வெளியிட்டுள்ளது.
Cyclone Michaung Very heavy rain predicted in Chennai and neighbor districts chennai meteorological dept
வானிலை மையம்: அதன்படி சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று (02-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (03-12-2023) காலை 0530 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்று, 1130 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் - ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக- LIVE
மாலைமலர் : நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
வியூகம் வகுத்த விஜிலென்ஸ் இயக்குனர் அபய்குமார்... அமலாக்கத் துறைக்கு ’அபாய’ குமார்
கடந்த பத்து ஆண்டுகாலமாக அமலாக்கத் துறையினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் மாநில அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடுநடுங்கிபோய் இருந்தனர், ஆனால் இப்போது திண்டுக்கல் விஜிலென்ஸ் போலீஸார் அமலாக்கத்துறையை அலறவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக இருந்துவரும் டாக்டர் சுரேஷ்பாபு மீது 2018 இல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ரெய்டு செய்து வழக்கு பதிவு செய்தனர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார்,
மிக்ஜம் புயல்: தமிழ்நாட்டில் எப்போது, எங்கு கரையைக் கடக்கும்? எச்சரிக்கை?
BBC News தமிழ் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பல பகுதிகளில் அதி தீவிர கன மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் எந்த இடத்தில் கரையைக் கடக்கப் போகிறது?
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் புகுதியால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
அடுத்துவரும் நாட்களுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் – விகாரையிலிருந்த 13 வயதான பிக்குவை காணவில்லை !
இலக்கியா இன்போ : இலங்கை -புலத்சிங்கள ஹல்வத்துர சுதம்வர்தனராம விகாரையில் உள்ள பயிற்சி பெற்ற 13 வயதான பிக்கு ஒருவர் காணாமல் போயுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போனவர் அமரகெதர தேவசிறி என்ற 13 வயதுடைய பிக்கு மாணவராவார்.
இவர் கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி கோவின்ன ரட்டியால பிரிவேனாவில் கல்வி கற்க சென்ற நிலையில் விகாரைக்கு திரும்பவில்லை என விகாராதிபதி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.