சனி, 6 ஜூலை, 2019

வைகோ, மற்றும் திமுக வேட்பாளர்கள் ஸ்டாலின் முன்னிலையில் மனுத்தாக்கல்.. மாநிலங்களவை தேர்தலில் ..

தினகரன : சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ, மற்றும் திமுக வேட்பாளர்கள் வில்சன், மற்றும் சண்முகம் ஆகியோர் தலைமை செயலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), டி.ராஜா (சிபிஐ), உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

காத்தான்குடியில் ஷரியா கொலைகள் ..20 பேர் கொலை;ஆதாரம் இருப்பதாக அபேதிஸ்ஸ தேரர்


காத்தான்குடியில் 20 பேர் கொலை;ஆதாரம் இருப்பதாக கூறுகிறார் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்இலக்கியா : ஷரியா சட்டத்திற்கு ஏற்ப காத்தான்குடியில் இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர்,இதற்கான ஆதாரங்களும் தரவுகளும் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். வகாப் அடிப்படைவாதத்துக்கு எதிரான மாநாடு ஒன்று நுகேகொடையில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்தபோதே அபேதிஸ்ஸ தேரர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் விசேட தகவல் ஒன்றை வெளியிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தேன். அதாவது, காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ரயில்வே காவல் துறையினர் பிடியில் முகிலன்?

பா. சந்தோஷ் நக்கீரன் : சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, தமிழக சிபிசிஐடி காவல் துறையினர், ஆந்திரா மாநில காவல்துறை உதவியை கோரியுள்ளனர்.  ஆந்திர மாநில காவல்துறையை தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது. முகிலனை பார்த்ததாக கூறிய சண்முகம் தான் திருப்பதியில் உள்ள ரயில் நிலையத்தில் முதல் மேடையில் முகிலனை ஆந்திர காவல் துறையினர் அழைத்து சென்றதாகவும், ஆனால் தான் பயணித்த ரயில் புறப்பட்ட அவரிடம் பேச இயலவில்லை என தெரிவித்தார்.
சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதி ரயில்வே காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வீடியோ வெளியானது.இது தொடர்பாக தமிழக சிபிசிஐடி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் விரைவில் ஆந்திர மாநிலம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமஸ்கிருதத்தை தமிழோடு சமமாக வைத்து வைரமுத்து பேசியது மிகப்பெரும் தவறு..


ஆலஞ்சியார் : தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள்.. சென்றாண்டு நிர்மலா சீதாராமனோடு ஒரு மேடையில் அமர்ந்து கவிபேரரசு பேசினார் ..
நிதிநிலை அறிக்கையில் சங்கத்தமிழோடு தொடங்கிய நிர்மலா ..
அவருக்கு புரிந்திருக்கிறது சமஸ்கிருதத்தில் சொல்ல ஏதுமில்லை என ஆனால் நம்மவர்களுக்கு தான் இன்னமும் புரியவில்லை ..தமிழை தொடர்ந்து புறந்தள்ளும் மத்திய அரசிற்கெதிராக அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் .. இந்த ஒப்பீடே தவறானது .. உலகின் மூத்தமொழி தமிழ் .. அதை எந்தவிதத்தில் தடையலாம் வலுவிலக்க செய்யலாமென கருதிகிறார்கள் ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது ..
சமஸ்கிருதம் வேதமொழியென்றும் அது கடவுளுக்கான மொழியென்று பண்டைய இந்தியாவில் பேசபட்ட மொழியென்றும் சொல்லி வருகிறவர்கள் ஏன் வழக்கொழிந்து போனதென்பதை சொல்லமுடியவில்லை.. சமஸ்கிருத மொழி இந்திய துணைக்கண்டத்தில் மொழி அல்ல ஆரியர் வருவிற்கு பிறகே வந்ததென்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதற்கு அவர்கள் கூறும் தரவுகள் /காரணிகள் ஈரான் நாட்டிலிருந்து நம்மிடைய வந்தது வேதகால வடமொழியானது
ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் அவெஸ்தன் மொழி கூறகளை கொண்டது.. அதற்கான இலக்கணங்கள் ஏதுமில்லை.. மாறாக பார்ஸீய மற்றும் யூதமொழி வடிவங்களை கொண்டது .. தனித்துவ அடையாளங்கள் ஏதுமில்லாத மொழிகளின் வரிசையில் சமஸ்கிருதம் அடங்கும் ..

துயரம் தாளாமல் சிரிக்க முயன்று சிரிக்க முடியாமல் ... ஒரு அகதி சிறுமியின் ...


சுமதி விஜயகுமார் : ஒரே வயதை ஒத்த மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை நிம்மதியாக உறங்கிக்கொண்டும், ஒரு குழந்தை சிரித்தபடி விளையாடி கொண்டும், இன்னொரு குழந்தை ஏதோ ஒரு வருத்தத்தில் அழுது கொண்டிருந்தால் முதலில் எந்த குழந்தையை அள்ளி எடுத்து அனைக்க தோன்றும்? நிச்சயமாய் அழுது கொண்டிருக்கும் குழந்தையை தான் தூக்கிக்கொள்ள தோன்றும். நண்பர்களுடன் இருந்து விட்டு வீட்டுக்கு வந்ததும் நம் வேலைகளை பார்க்க துவங்கி விடுவோம். ஒரு வேலை அந்த நண்பர் ஆழ்ந்த துயரத்தில் இருந்தாலோ வீட்டுக்கு வந்தும் அவரையே நினைத்து கொண்டிருப்போம். துக்கத்தை போல் உயிரினங்களை பாதிப்பது வேறெதுவும் இல்லை.
ஒருமுறை ஒரு புலி ஒரு குரங்கை பசிக்காக கொன்று விட்டது. அது இறந்தவுடன் தான் அதன் வயிற்றில் இறுக்க அனைத்த படி அதன் குட்டி இருந்தது . அதை பார்த்த புலி தன் பசியை மறந்து அந்த குரங்கு குட்டியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அன்று இரவு முழுவதும் அதற்கு பாதுகாப்பாக அந்த குட்டி குரங்கை அதன் அருகிலேயே வைத்து பாதுகாத்து கொண்டிருந்தது. துக்கம் என்பது மனித மொழி மட்டும் அல்ல . அது உலக மொழி.

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு - மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்மாலைமலர் : நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க கொண்டு வரப்பட்ட தமிழக அரசின் இரு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு இன்று தெரிவித்தது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது இந்நிலையில், நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்து உடனே நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முகிலன் ஆந்திர காவல்துறை பிடியில் ...வீடியோ .. social worker mugilan stay at tirupati at andhra pradesh police


பா. சந்தோஷ் - nakkeeran : சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். இது குறித்து தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன.
இது தொடர்பாக சிபிசிஐடடி விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகிலனின் பள்ளித்தோழர் சண்முகம் ஆந்திராவில் உள்ள திருப்பதியில் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார். திருப்பதி ரயில் நிலையத்தில் உள்ள முதல் மேடையில் முகிலனை பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
தாடி வளர்த்திய படி முகிலன் கோஷமிட்டு சென்றதாக தெரிவித்தார். அவர் தற்போது முகிலன் ஆந்திர காவல்துறை பிடியில் உள்ளதாக சண்முகம் தெரிவித்தார். இதனால் காவல்துறை விரைவில் ஆந்திரா விரையும் என தகவல் வெளியாகியுள்ளது<

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு நிராகரிப்பு .... மறைத்த எடப்பாடி அரசு ..

LRJ : ஒட்டுமொத்த மாநிலமும் ஓர் குரலில் மாநில சட்டமன்றத்தில்
நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்த செய்தியே நீதிமன்ற வழக்கில் தான் வெளிவருகிறதென்றால் தமிழ்நாட்டில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா என்பது முதல் கேள்வி. மத்திய அரசு இந்த நிராகரிப்பை எப்போது செய்தது?
எந்த காரணுங்களுக்காக செய்தது?
அந்த நிராகரிப்பு உத்தரவை மத்திய அரசாங்கம் தமிழக அரசில் யாருக்கு அனுப்பியது?
அந்த நிராகரிப்பு குறித்து மத்திய அரசோ மாநில அரசோ ஏன் இன்றுவரை இந்த விவரங்களை இன்றுவரை வெளியிடவில்லை? இரண்டு அரசாங்கங்கள் இவ்வளவு தூரம் அப்பட்டமான மோசமான கூட்டுக்களவாணித்தனத்தில் ஈடுபடலாமா?
என்று ஏகப்பட்ட துணைக்கேள்விகள் எழுகின்றன. இதற்கான பதில்களை சொல்வது யார்?

பொள்ளாச்சியில் மீண்டும் பாலியல் வன்முறை .. சிறுமியை சீரழித்த காதலன் உட்பட 9 பேர் ! அதிர்ச்சி சம்பவம்

pollachi  வெப்துனியா : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, போலிஸார்,  குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.இந்நிலையில் தற்போது காதலனால் காரில் கடத்திச் சென்று பலாத்தாரம் செய்ய்யப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர், அடுத்தடுத்து தன் நண்பர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 5 ஆம் தேதி பொள்ளாச்சியில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில், 16 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என அச்சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்."
இந்த புகார் குறித்து வழக்குப்பதிந்த போலீஸார், சிறுமியுடன் நெருங்கிப்பழகியதாக அமானுல்லா என்ற இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கடந்த 4 ஆம் தேதி சிறுமியை காதலிப்பதாகக் கூறி , காரில் கடத்திச் சென்று வன்புண்ர்வு செய்துள்ளார்,. பின்னர் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தால் பிரச்சனை உண்டாக்லும் என்று கருதி, வால்பாறை சாலையில் தனியாக விட்டுச் சென்றுள்ளார்.

தமிழக வியாபாரிகளைப் பாதிக்கும் பட்ஜெட்!


மூலப்பொருளுக்கான வரிப் பிடித்தம்
உயர்த்தப்பட்டுள்ளதற்குத் தமிழக உணவு தானிய வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, இந்த முடிவைத் திரும்பப் பெறும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 5ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில், ஆண்டு ஒன்றுக்கு ஒரு வங்கிக் கணக்கில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுக்கும் போது அதற்கு 2 சதவிகித
தமிழக வியாபாரிகளைப் பாதிக்கும் பட்ஜெட்!டிடிஎஸ் (மூலப்பொருளுக்கான வரிப் பிடித்தம்) விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவானது விவசாயிகளிடமிருந்து பணப் பயிர்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையைப் பாதிக்கும் என்று தமிழக உணவு தானிய வியாபாரிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே இந்த முடிவைத் திரும்பப் பெறும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதுகுறித்து தமிழ்நாடு உணவு தானிய வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவரான எஸ்.பி.ஜெயப்பிரகாஷம், டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “தொழில் ரீதியிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது அரசின் இந்த முடிவு பலரை வெகுவாகப் பாதிக்கும். குறிப்பாக விவசாயிகளிடமிருந்து பணப்பயிர்களைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது இதில் விவசாயிகளுக்கு மட்டும் விலக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பட்ஜெட்டுக்கு அமெரிக்க கார்ப்பரேட் துறை வரவேற்பு!

பட்ஜெட்டுக்கு அமெரிக்க கார்ப்பரேட் துறை வரவேற்பு!மின்னம்பலம் :
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (ஜூலை 5) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு பலதரப்புகளில் எதிர்ப்பும், ஆதரவும் ஒருபுறமிருக்க அமெரிக்க கார்ப்பரேட் துறை ஆதரவளித்துள்ளது. இந்த பட்ஜெட் அனைவருக்குமானதாக இருப்பது மட்டுமல்லாமல் அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இருப்பதாக அமெரிக்க கார்ப்பரேட் தொழிற்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இந்திய கூட்டணி மன்றத்தின் தலைவர் முகேஷ் அகி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பட்ஜெட்டின் அம்சங்கள்
அனைவருக்குமானதாக உள்ளது. கொள்கை முடிவுகள் அமெரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளன. ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் நற்செய்திகள் உள்ளன. இந்திய சந்தையை மேலும் வெளிப்படையாக்கி அமெரிக்க நிறுவனங்கள் முதலீட்டை அதிகரிக்க பட்ஜெட் ஊக்குவித்துள்ளது. அதே சமயத்தில் சமூகத்தில் அனைத்து பிரிவினருக்கும் வளர்ச்சியை உறுதி செய்கிறது. கட்டமைப்பு ரீதியாக நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவர பட்ஜெட் முயல்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

முகமதுஜான் அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்... எப்படி ?

muhamed johnnakkheeran.in - raja.: அதிமுகவில் உள்ள கழக சிறுபான்மை நலப்பிரிவின் இணை செயலாளராக இருப்பவர் முகமதுஜான் தற்போது மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
முகமது ஜான் வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்தை சேர்ந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2011ல் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் முகமதுஜான். அதோடு வேலூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அப்போது ஜெயலலிதா அமைத்த 5 பேர் கொண்ட கட்சி கமிட்டியில் ஓ.பி.எஸ். இருந்தார். அவரது கைங்கர்யத்தால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமைச்சராகவுள்ள வீரமணியும் இருந்தார் என்றும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவினார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. எம்.எல்.ஏ.வாக இருந்தும் அடங்கியே இருந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சீட் கேட்டவருக்கு தரப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவினரே எதிர்பாராத விதமாக முகமதுஜான்க்கு ராஜ்யசபா எம்.பி பதவி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.

ராஜேந்திர சோழனுக்கு கம்போடிய அரசு சிலை அமைக்கிறது .. கம்போடியாவில் அடுத்த ஆண்டு திறப்பு விழா

rajendra chozhan statue to be build in cambodiaநக்கீரன் :கம்போடியாவை சேர்ந்த கலை பண்பாட்டுத் துறை மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகிய அமைப்புகள்  இணைந்து காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்கள் மற்றும் புராதன இடங்களில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் முடிவில் கம்போடியா நாட்டின் கெமர் பேரரசுக்கும், தமிழகத்தை சேர்ந்த பல்லவ மற்றும் சோழ பேரரசுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கம்போடிய நாட்டு அரசு அதிகாரிகள், "கம்போடிய நாட்டு பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் பல்லவ மற்றும் சோழ பேரரசுகளின் வரலாற்றை பாடமாக வைக்கவும், திருக்குறளை கெமரில் மொழியில் பெயர்த்து பள்ளிகளில் பாடமாக வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கும், இரண்டாம் நந்திவர்மனுக்கும் சிலை வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அச்சிலைகளின் திறப்புவிழா கம்போடியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும்" என்று கூறினார்கள்.

பாஜகவிற்கு எதிராக முடிவெடுத்த திமுக, ஆதரவளித்த அதிமுக.. சேலம் உருக்காலை ....

dmkநக்கீரன் : தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து  சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் இதனை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

கர்நாடகத்தில் மேலும் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- குமாரசாமி அரசு கவிழ்கிறது

கர்நாடகத்தில் மேலும் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- குமாரசாமி அரசு கவிழ்கிறதுமாலைமலர் : கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சிகளைச் சேர்ந்த 11 எம்எல்ஏக்கள் இன்று ராஜினாமா செய்திருப்பதால், குமாரசாமி தலைமையிலான அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை உள்ளது. பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை. பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க 38 எம்.எல்.ஏ.க்களை கொண்ட ஜே.டி.எஸ். கட்சியும், 79 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளனர்.
சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரின் ஆதரவும் இந்த கூட்டணி அரசுக்கு உள்ளது. அவர்கள் 2 பேரையும் குமாரசாமி, மந்திரிகளாக நியமித்தார்.

யாழ் - மதுரை விமான சேவை செப்டெம்பரில் இருந்து ஆரம்பம் .. பலாலி சர்வதேச விமான நிலையம்

உதயன் : யாழ்ப்பாணத்தில் இருக்கும் பலாலி  விமான நிலையத்தின்மூலம்
இந்தியாவுக்கு மிகக் குறுகிய நேரத்தில் பயனம் செய்வதற்கான வழி கிடைத்துள்ளது.
பலாலி விமானத்தளம் இதுவரை விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருந்துவந்த நிலையில் இனிமேல் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு மையமாக விளங்கும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலாலி விமானத்தளம் இலங்கையின் போருக்கு முன்னரும் சர்வதேச விமானத் தளமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ள பலாலி விமான நிலையத்தை சர்வதேச வானூர்தித் தளமாக மாற்றும் அரச வேலைத்திட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

1000 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தினகரன் : சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பாக  சைதை சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்துவதற்காக  1000 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைப்பதற்கான தொடக்க விழா சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் நேற்று மாலை நடந்தது.இந்த விழாவில் கலந்துகொண்டு மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் தலைமை  தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திட்டத்தினை தொடக்கி வைத்து பேசியதாவது: மழை நீர் சேகரிப்பு திட்டம் அருமையான திட்டம். குடிநீர் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும் திட்டம். ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய வேலையை எதிர்கட்சியான திமுக  செய்து கொண்டிருக்கிறது.

30 நாட்கள் விடுப்பில் வெளியே வரும் நளினி!!.. ராஜீவ்காந்தி கொலை வழக்கு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 30 நாட்கள் பரோலில் வெளியே வரும் நளினி!!zeenews.india.com/tamil :சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் அந்த 7 பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் தமிழக அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுநர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தாமதமாகி வருகிறது.
இந்தநிலையில், ஏழு பேரில் ஒருவராகிய நளினி, மகள் திருமணத்துக்காக 6 மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மேலும் நேரில் ஆஜராகி வாதிடவும் அனுமதி கேட்டிருந்தார். அதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பரோல் சம்பந்தமான வழக்கை, இன்று விசாரித்தது.

நடிகை கஸ்தூரி :டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம்

“தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை" எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே! நடிகை கஸ்தூரி டுவீட்Kasturi Shankar (நடிகை கஸ்தூரி)  : எண்ணையை தடவிக்கிட்டு மனல்ல புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் - பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறதுதான் கிட்டும். - புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே
தினத்தந்தி :தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை, எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சென்னை, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தி.மு.க ஆட்சி காலத்தில் 2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. 2009-ல் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியது. தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என  சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு நீதிமன்றத்தில் வைகோ கோரிக்கை வைத்தார். வைகோவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், ஒரு ஆண்டு  சிறை தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்து ஓட்டு இந்துத்துவ ஓட்டு என்று காட்டப்படும் பூச்சாண்டிகளுக்கு பயப்படாதீர்கள்.

Anthony Fernando : உதயநிதிக்கு ஒர் அறிவுரை!
இப்ப நிறைய அல்லக்கைங்க உங்களிடம் வந்து, "தம்பி உங்க தாத்தா அப்பாவை போல ரொம்ப இந்துத்துவ எதிர்ப்பு பேசி இந்து ஓட்டுக்களை திமுகவிற்கு எதிராக திருப்புகிற வேலைகளில் ஈடுபட வேண்டாம். அதோடு அப்பப்ப கோவில் கும்பாபிசேகங்களுக்குப் போய் கலந்து அங்கே பரிவட்டம் கட்டிக் கொண்டால் இந்து ஓட்டுக்களை கவரலாம்" என்று அறிவுரை சொல்வாங்க. அவனுங்களையும் அவனுங்களோட அப்படியான அறிவுரைகளையும் கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு துரத்தி விடுங்க....
ஏனென்றால் தமிழகத்தின் எதார்த்தம் வேறு மாதிரியானது.... இங்கே இந்து ஓட்டுக்கள் என்று ஒரு ...யிரும் கிடையாது ... அது எம்பாட்டன் பெரியாரின் உழைப்பினால் சாத்தியமானது. அதனால் தான் உங்க தாத்தா எம்பாட்டன் கலைஞர் தீவிர இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்களை பேசிய காலத்தில் தான் தமிழக மக்கள் அவரை தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர வைத்தார்கள். ராசராசன் கட்டிய பெரிய கோவிலில் பரிவட்டம் கட்டிக் கொண்ட போது அதே மக்கள் தான் அவரை நிராகரிக்கவும் செய்தார்கள்.
உங்களுடைய தந்தை ஸ்டாலினும் "திமுகவினரில் 80% இந்துக்கள் தான்" என்று பேசிய போது தோல்வியை பரிசாக கொடுத்த மக்கள், அவர் சனாதன இந்துத்துவ எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி வந்த பிறகு அடுத்த வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரை இமாலாய வெற்றியடையச் செய்தார்கள்....

அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!

 டிஜிட்டல் திண்ணை : அதிருப்திக் குரல்... உதயநிதியின் சமரசப் பயணம்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி நிர்வாகிகளோடு ஆலோசனைகளைத் தொடங்கிவிட்டார். மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்று ஆலோசனைகளை நடத்தத் திட்டமிருக்கிறது. அதேநேரம் அறிவாலயத்திலேயே இருக்கும் சீனியர்கள் உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் இப்போது இந்த நியமனம் தேவையா என்ற கேள்விக் குரல் கேட்கிறது. ‘நீங்கதானய்யா ஒவ்வொரு மாவட்டமா தீர்மானம் போட்டு அனுப்பினீங்க?’ என்று கேட்டால், அதற்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார்கள் மாசெக்கள். ‘அது அன்றைக்கு அன்பில் மகேஷ் ஒவ்வொரு மாசெவுக்கும் போன் போட்டு தலைவர் வீட்லேர்ந்து சொன்னதாக சொன்னாரு. அதனாலதான் அந்தத் தீர்மானம் போட்டோம்’ என்கிறார்கள்.
உதயநிதி கட்சிக்குள் வருவதை சில மாசெக்கள் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஆனால் சீனியர்களோ வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறார்கள்.

4 சதவீதம் தான் தொல்லியல் ஆய்வு நடந்துள்ளது... ’ -அமெரிக்க தமிழ் மாநாட்டில் ஸ்டாலின் குணசேகரன்

snakkheeran.in - jeevathangavel : தமிழர் வரலாற்று ஆய்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென" இன்று அமெரிக்காவில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை நிகழ்வில் கலந்து கொண்ட ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உரை நிகழ்த்தினார்.
;வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 32 ஆம் ஆண்டுத் தமிழ்விழா, 10ஆவது உலகதமிழ் ஆராய்ச்சி மாநாடு, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 50 ஆவது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் நிகழ்வுகள் அமெரிக்கா நாட்டின் சிகாகோ நகரத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்திலிருந்து இலக்கியவாதிகள், கட்டுரையாளர்கள், பேச்சாளர்கள் என பல துறை வல்லுனர்கள் பலர் கலந்துள்ளனர்.
;இம்முப்பெரும் நிகழ்வின் தொடக்க நாளில் கலந்து கொண்ட  ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் 'தமிழ்... தமிழர்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். இவரது உரை நான்குநாள் நிகழ்வுகளின் முதல் சொற்பொழிவாக இருந்தது.

வெள்ளி, 5 ஜூலை, 2019

எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதி மந்திரிகள் சி - பேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் - ப.சிதம்பரம் விமர்சனம்

தினத்தந்தி :  சூட்கேசுக்குப் பதில் சிவப்புத்துணியால் மூடப்பட்ட பைலில் பட்ஜெட் கொண்டு
வந்தது குறித்து எதிர்காலத்தில் காங்கிரஸ் நிதி மந்திரிகள் சி - பேடில் பட்ஜெட் தாக்கல் செய்வார்கள் என்று ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 'மத்திய பட்ஜெட்'டை தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் தாக்கல் குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சாமானியர்களின் குரல்களுக்கோ, அறிவார்த்த பொருளாதாரவாதிகளின் குரல்களுக்கோ செவிமடுக்காத ஒரு பட்ஜெட் என்றும் இந்த பட்ஜெட்டை ‘சுவையற்றது’ என்று விமர்சித்த ப.சிதம்பரம் பரவலான எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்து விட்டது என்றார்.

வரவு செலவு திட்டம் பற்றி கருத்து கூற சுப்பிரமணியம் சாமி திணறல்

sswamyதினமணி : இந்திய அரசியலில் தனக்கு மனதில்பட்ட கருத்தை பட்டென பளிச்சென பதில் கூறி சர்ச்சைகளில் சிக்கும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், பாஜக மாநிலங்களை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து வழக்கம்போல் சர்ச்சையான கருத்தையே தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் குறித்து, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். பொருளாதார நிபுணர்களும், அரசியல் ஆலோசகர்கள் பலரும் மத்திய பட்ஜெட்டின், சாதக, பாதகங்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், சுப்பிரமணியன் சுவாமியோ, பட்ஜெட் குறித்து டுவிட்டர் பக்க பதிவில், நான் எந்த மக்கள் பக்கம் இருந்து இந்த பட்ஜெட் குறித்து கருத்து கூறுவது? ஒரு பொருளாதார பேராசிரியராக அணுகுவதா? அல்லது கட்சியின் எம்.பி. என்ற ரீதியில் இந்த பட்ஜெட்டை பார்ப்பதா? எந்தப் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது? என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

உதயநிதியை ஏன் அங்கீகரிக்க வேண்டும்?

உதயநிதியை ஏன் அங்கீகரிக்க வேண்டும்?
மின்னம்பலம் : டி.எஸ்.எஸ். மணி பண்ணை ஆதிக்க உறவுகள் நிலவும் இந்தியச் சூழலில், நாடாளுமன்ற அரசியல் என்பது, அதை வலுப்படுத்தவே வந்திருக்கிறது. வாக்காளர்கள் பண்ணையடிமை தன்மையோடு இருப்பதால், பிரபலமானவர்கள் எளிதில், அரசியல் கட்சிகளை வலுப்படுத்த உதவுவார்கள் என்பதை உணர்ந்தால், அந்தக் கட்சிகளையோ, அவற்றின் தலைமைகளையோ, ஜனநாயகப்படுத்த முயல்வது என்ற முட்டாள்தனமான பார்வையில் நின்று, யாரும் பேச மாட்டீர்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைமையேற்கலாமா, பிரியங்கா வரலாமா,அது குடும்ப வாரிசுதானே? என்று கேள்வி கேட்காமல், யதார்த்த நிலவரத்தை அறிய முற்படுவீர்கள். சுட்டுப் போட்டாலும் உங்களால் இந்த அரசியல் கட்சிகளை ஜனநாயகப்படுத்த முடியாது என்பதை புரிந்துகொள்வீர்கள்.
ஆகவே இழிவான சூழலை தக்க வைக்க வந்துள்ள அரசியல் கட்சிகளின் பலத்தைக் கூட்ட, நேரு-இந்திரா- ராஜிவ் வாரிசுகள்தான் காங்கிரசை வலுவாக்க உதவுவார்கள். கெஜ்ரிவாலால்தான் ஆம் ஆத்மி கட்சியை வழிநடத்த உதவ முடியும். பிரஷாந்த் பூஷனும், யோகேந்திர யாதவும் தொடுத்த அம்புகள் வீணாகப் போகும்.

முல்லைதீவில் புதைத்து வைத்த பாரிய கொண்டு வெடித்தது

IMG_0321_1600x1067 முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில் மக்கள் அதிர்ச்சி!! விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0321 e1562328917878
IMG_0343_1600x1067 முல்லைத்தீவில் குண்டு வெடித்து சிதறியதில் மக்கள் அதிர்ச்சி!! விடுதலைப் புலிகள் புதைத்து வைத்ததா?? IMG 0343 e1562328975680இலைகியா :முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரம்படி வயல்வெளியில் நேற்று  இரவு 9.00 மணியளவில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது இதன் வெடி சத்தம் அருகில் உள்ள  பகுதிகளானா முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு,மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை வரையான கிராமங்களில் உள்ள மக்களால் உணரப்பட்டுள்ளதுடன் மக்களின் வீடுகள் அதிர்ந்துள்ளன. அருகில் உள்ள கேப்பாபிலவு மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.< இது தொடர்பில் தெரியவருகையில் கேப்பாபிலவு பிரம்படி வயல் வெளியினை துப்பரவு செய்த தனியார் ஒருவர் இயந்திரம் கொண்டு துப்பரவு செய்துவிட்டு குப்பைகளுக்கு நெருப்பு மூட்டிவிட்டு சென்றுள்ளார். இதன்போது போரில் பயன்படுத்தப்பட்ட நிலத்தினுள்  புதைந்திருந்த பாரிய  குண்டு ஒன்று நெருப்பின் வெப்பத்தினால் வெடித்து சிதறியுள்ளது. இக்குண்டுவெடிப்பால் சுமார் ஒரு மீற்றர் ஆழத்திற்கும் இரண்டும் மீற்றர் அகலத்திற்கும் அப்பகுதியில்  கிடங்கு தோன்றியுள்ளது.
இச் சம்பத்தினால் கோப்பாபிலவு மக்கள் அதிர்ந்து அச்சமடைந்துள்ளார்கள்.
சம்பவத்தினை தொடர்ந்து  119 பொலிஸ் அவசர இலக்கத்துக்கு கேப்பபுலவு மக்களால் முறையிடப்பட்டதை தொடர்ந்து  முள்ளியவளை  பொலிசார் மற்றும் கோப்பாபிலவு படைமுகாமினை சேர்ந்த படையினர் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன் தீயினை அணைத்துள்ளார்கள்.

உதயநிதியின் அடையாளம் என்ன? ஒரு மூத்த பத்திரிகையாளரின் பார்வை

LRJ : கடந்த சில ஆண்டுகளில் திராவிட சார்பாளர்கள் பலர் திராவிடம் 2.0 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணையத்திலும் களத்திலும் உருவாக்கி செயற்பட்டு வருகிறார்கள்.
அதில் ஈடுபட்ட, இணைந்து பணியாற்றிய, அதனால் ஈர்க்கப்பட்டவர்களில் 90% பேர் இளைஞர்கள்; இளைஞிகள். அவர்கள் அனைவருமே கலைஞர் என்கிற 90 வயது கிழவனின் கொள்கையால், ஆட்சியால், ஆளுமையால், தலைமையால் ஈர்க்கப்பட்டவர்கள்.
கலைஞரைவிட இளையவரான அவரது மகன் மு க ஸ்டாலினால் ஈர்க்கப்பட்டவர்கள் இவர்களில் குறைந்தது 10% முதல் அதிகபட்சமாக 25% பேர் வரை இருக்கக்கூடும். மீதி 75% பேரை ஈர்த்தவர் கலைஞர் என்கிற முதுபெரும் கிழவர். அதுவும் நடக்க முடியாத சர்க்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடிய காலகட்டத்தில்.
எனவே இளைஞர்களை ஈர்க்க ஒருவரின் வயது தடை என்பது எந்தவித ஆதாரமும் அற்ற, ஆனால் பொதுவெளியில் பலரும் நம்பும் ஒரு கருத்துரு.
இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு. இந்த திராவிட சார்பு அமைப்புகள் எதிலும் உதயநிதியின் பங்களிப்பு இருந்ததாகவோ அல்லது அவற்றின் நிகழ்ச்சிகளில் அவர் ஒரு பார்வையாளராகவேனும் கலந்துகொண்டதாகவோ எனக்குத் தெரிய எந்த தகவலும் இல்லை. இருந்தால் தெரிவியுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
எனவே திராவிட கொள்கையால் ஈர்ப்பக்கப்பட்டு திமுக பக்கம் வந்த/வரும் இளம் தலைமுறை கூட்டத்திலேயே இன்றுவரை கலைஞரால் ஈர்க்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமே தவிர ஸ்டாலினால் ஈர்க்கப்படும் கொள்கைசார் இளைஞர் கூட்டம் இன்னும் குறைவாகவே இருந்து வருகிறது. இதுவே கசப்பான யதார்த்தம்.

நேபாளம் - ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக 4 வயது மகளை கொன்ற தந்தை கைது

வெப்துனியா : நேபாளம் நாட்டில் 25 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை அடையும்
நோக்கத்தில் பெற்ற மகள் என்றும் கருதாமல் 4 வயது சிறுமியின் கழுத்தை நெரித்துக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
காத்மாண்டு: நேபாளம் நாட்டில் இரண்டாவது மாகாணத்துக்குட்பட்ட சிராஹா மாவட்டத்தை சேர்ந்த மவுலாபூர் நகராட்சி பகுதியில் உள்ள ஒரு குட்டையில் கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 4 வயது மதிக்கத்தக்க சிறுமியின் பிரேதம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தபோது அந்த சிறுமியின் கழுத்தை யாரோ நெரித்துக் கொன்றது தெரியவந்தது இதுதொடர்பாக இறந்த சிறுமியின் தந்தையான ராம் கிஷோர் யாதவ் என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர் தனது 4 வயது மகள் லட்சுமியின் பெயரால் வங்கியில் இன்சூரன்ஸ் கணக்கு தொடங்கியுள்ளார். இந்த இன்சூரன்ஸ் கணக்குக்கான முதல் தவணையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாயையும் செலுத்தினார்.

பட்ஜெட் 2019-20 முக்கியத் தகவல்கள்: பான் இல்லாதவர்களுக்கு ஆதார், பணமாக எடுத்தால் வரி

BBC : இந்திய அரசின் 2019-2020ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் சில முக்கியத் தகவல்கள்:
 • 2013-14 6.38 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் நேரடி வரி வருவாய், 78% அதிகரித்து 2018-19இல் 11.37 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
 • பான் அட்டை இல்லாதவர்கள் ஆதார் எண்ணை தெரிவித்து வரிகளை செலுத்தலாம்.
 • ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய மதிப்புகளில் புதிய நாணயங்கள் வெளியிடப்படும்.
 • இரண்டு கோடி முதல் ஐந்து கோடி மற்றும் ஐந்து கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் உள்ளவர்களுக்கு சர்சார்ஜ் முறையே 5% மற்றும் 7% ஆக உயர்த்தப்படுகிறது.
 • பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்படுகிறது.
 • தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த கனிமங்கள் மீதான கலால் வரி 10%இல் இருந்து 12.5% ஆக உயர்த்தப்படுகிறது.
 • தொழில் நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் 2% வரி பிடித்தம் செய்யப்படும்.
 • பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1,50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
 • ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் 2019-2020இல் 1,05,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
 • 80,250 கோடி ரூபாய் மதிப்பில் 1,25,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

வைகோ ராஜ்யசபா செல்ல முடியும்.. தடை இல்லை! .. வழக்கறிஞர் பேட்டி..

மின்னம்பலம் : வைகோ மீதான தேச துரோகக் குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டு அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்திருக்கும் நிலையில் இந்த தண்டனை அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதை தாக்கத்தை ஏற்படுத்துமா?
இதுபற்றி மதிமுக வழக்கறிஞரும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருமான புதுக்கோட்டை செல்வம் பேசுகையில்,
“ இரு வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால்தான் வகிக்கும் பதவியை இழக்கும் நிலையோ, தேர்தலில் போட்டியிட முடியாத நிலையோ ஏற்படும். ஆனால் மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டிருப்பதால் ராஜ்யசபாவுக்கு அவர் செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது. வேட்பு மனு தாக்கலில் இந்த வழக்கு விவரத்தையும் சேர்க்க வேண்டும் அவ்வளவுதான்.
மேலும் ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்பட்டது சரியானது அல்ல என்பது மேல் முறையீட்டில் உறுதிப்படுத்தப்படும். எனவே வைகோவுக்கு இந்தத் தீர்ப்பு பாதகத்தை ஏற்படுத்தாது” என்று கூறினார்.

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!

வைகோ கடும் எதிர்ப்பு: தீர்ப்பை திருத்திய நீதிபதி!மின்னம்பலம் : 2019 ஜூலை 5 காலை முதலே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வரவுக்காக ஏராளமான மதிமுக நிர்வாகிகளும், மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் சென்னை எம்.பி,.எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காத்திருந்தார்கள்.
சரியாக 10.20க்கு தேவதாஸ் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் புடைசூழ வந்தார் வைகோ. சட்டெனெ அவரைச் சுற்றி மதிமுக வழக்கறிஞர்கள் பலர் வளையம் அமைத்தனர். தேவதாஸ், நன்மாறன், செந்தில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் சுப்பிரமணி, ஆவடி அந்திரிதாஸ், பொடா அழகு சுந்தரம், தூத்துக்குடி மாசெவான புதுக்கோட்டை செல்வம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் வைகோவை சுற்றி நின்றனர்.
இருபது ஆண்டுகளுக்குப் பின் தங்கள் தலைவர் எம்.பி.யாக முடியுமா என்பதை தீர்மானிக்கும் தீர்ப்பு என்பதால் மதிமுகவினர் ஒவ்வொருவருக்குள்ளும் பதற்றம் மையம் கொண்டிருந்தது. அவர்களை நோக்கித் தனது வழக்கமான புன்னகையை உதிர்த்தபடியே கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் வைகோ.

வைகோவுக்கு நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு . ஓர் ஆண்டு சிறை .. 10000 ரூபாய் அபராதம் .. மேல்முறையீட்டுக்கு ஒரு மாத அவகாசம்

பிந்திய செய்தி .. ஒரு ஆண்டு சிறையும் 10000 ரூபாய் அபராதமும் வைகோவுக்கு தண்டனை! மேல் முறையீடு செய்ய ஒரு மாதம்அவகாசம் .. தண்டனை அறிவிக்கப்பட்டாலும் வைகோ ராஜ்யசபாவுக்கு தெரிவாவதில் சிக்கல் இல்லை என்ற கருத்து பலராலும் தெரிவிக்கபடுகிறது
tamil.indianexpress.com/tamil :இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை அண்ணா மேம்பாலம். அருகே உள்ள ராணி சீதை மன்றத்தில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததாக கூறி வைகோ மீது இந்திய தண்டனை சட்டத்தில் தேச துரோக குற்றம் (123ஏ) மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் செயல்பாடு (153ஏ) ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட்டது
இதற்கிடையில் பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் “ஈழத்தில் நடப்பது என்ன” என்ற தலைப்பில் நடந்த கூடத்தில் பேசியது தொடர்பாக க்யூ பிரிவு வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அந்த வழக்கிலிருந்து வைகோவை 2016 அக்டோபர் 20ஆம் தேதி விடுதலை செய்தது.

நாடாளுமன்ற தேர்தலில் 7 கோடி முஸ்லிம், தலித் வாக்காளர்கள் நீக்கம்… ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ’ஷாக்’ அறிக்கை

7 crore Muslims, Dalits not on electoral rolls tamil.oneindia.com : டெல்லி: லோக்சபா தேர்தலில் 7 கோடி முஸ்லிம்கள், தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்; ஆனால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த விளக்கமும் தரவில்லை என 64 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
  30 ஆண்டுகளில் தற்போதைய லோக்சபா தேர்தல்தான் மிகவும் மோசடியானது என விமர்சித்து தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் ஆட்சிப் பணி அதிகாரிகள் கூட்டறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: 4 கோடி முஸ்லிம்கள், 3 கோடி தலித்துகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
 இதற்கு தேர்தல் ஆணையம் சரியான விளக்கம் தரவில்லை. 20 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மர்மமான முறையில் மாயமாகின.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு இன்னமும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. வாக்குப் பதிவு நாளுக்கு முன்னதாக வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டன.
இது தொடர்பாக ஊடகங்கள் செய்திகள் வெளியாகின. ஆனால் தேர்தல் ஆணையம் போதுமான விளக்கத்தைத் தரவில்லை. பதிவான வாக்குகள், எண்ணப்பட்ட வாக்குகளின் வேறுபாடுகள் குறித்தும் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவிக்கவில்லை.
 வாக்குப் பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளில் எண்ணப்பட்டவை குறித்து எதுவுமே தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. இவ்வாறு ஆட்சிப் பணி அதிகாரிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன்சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ?

வெப்துனியா :காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல்காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதால் தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்ய வேண்டிய அவசியத்தில் அக்கட்சி தற்போது உள்ளது.
காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய கட்சி என்பதால் அனைத்து மாநில மக்களுக்கும் தெரிந்த ஒரு முகம் தலைவர் பதவிக்கு தேவைப்படுகிறது. பிரியங்கா காந்தியை தலைவராக்கினால் மீண்டும் குடும்ப அரசியல் என்ற விமர்சனம் வரும் என்பதாலும், அவர் உத்தரபிரதேச முதல்வர் பதவியை குறிவைத்து அதனை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாலும் பிரியங்கா காந்தியை தலைவராக்க சோனியா காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் விரும்பவில்லை

புரோட்டா சாப்பிட்டுக்கொண்டு போனில் பேசும்போது புரோட்டா தொண்டையில் சிக்கி உயிரழப்பு

puthukottaiவெப்துனியா : புதுக்கோட்டை மாவட்டம் கருவக்குடியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் சூப்பர்வைசராக வேலை செய்துவந்தார்.
இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரி என்பவருட்ம திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்ன சண்முக சுந்தரி, தன் தாயின் வீட்டுக்கு சென்றதாகத் தெரிகிறது. அதனால் நேற்று இரவில் கடையில் புரோட்டா வாங்கிவந்து வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது அவரது மனைவி,சண்முக சுந்தரி அவருக்கு போன் செய்துள்ளார். செல்போனை ஆன் செய்து அவர் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த போது, சூடான புரோட்டா தொண்டையில் சிக்கிக்கொண்டது.

ரயிலில் சுயஇன்பம் செய்தவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு ரூ.34 லட்சம் அபராதம்

zeenews.india.com/tamil : !!
ரயிலில் சுயஇன்பத்தில் ஈடுபட்டவரை வீடியோ எடுத்த பெண்ணுக்கு அபராதம்!!
இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். இந்நிலையில், ரயிலில் சுயஇன்பம் ஈடுபட்டவரை வீடியோ எடுத்த பெண்ணிற்கு நீதிமன்றம் அபராதம் வித்தித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 37 வயதுடைய பெண் நாட்டாச்சா பிராஸ், இவர் பாரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் இருந்த இருக்கையில் ஒருவர் வந்து அமர்ந்துள்ளார். இதை தொடர்ந்து, அந்த நபர் கையை பேண்டிற்குள் விட்டு சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார். சுய இன்பம் அனுபவிக்கும் போது பிராஸை பார்த்துக்கொண்டே இருந்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பிராஸ் நடக்கும் சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக ரெக்கார்டு செய்துள்ளார்.

வேலூர் தொகுதியில் பிரதமர் பிரச்சாரம்: ஏ.சி.சண்முகம் தகவல்!.. EVM இருக்க பயமேன்???

வேலூர் தொகுதியில் பிரதமர் பிரச்சாரம்: ஏ.சி.சண்முகம் தகவல்!மின்னம்பலம் : வேலூர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய நிச்சயம் வருகிறேன் எனப் பிரதமர் மோடி என்னிடம் முன்பே கூறியுள்ளார் என்று ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வருமான வரித் துறை, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து, அதன் நீட்சியாக வேலூருக்கு நடக்க இருந்த தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் வேலூருக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று (ஜூலை 4) அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நேற்று முதல் வேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

துனிசியா நாட்டில் படகு விபத்து; 80க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்

துனிசியா நாட்டில் படகு விபத்து; 80க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
தினத்தந்தி : துனிசியா நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஜெனீவா, துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அதிக எடையால் படகு திடீரென நடுவழியில் கவிழ்ந்தது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி : நாட்டுக்கு அபாயம் ஆரம்பிக்கிறது. இந்தியாவில் தேர்தல் என்பது இனி வெறும் சடங்கு தான்!


A Sivakumar : "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகவேண்டியது மட்டும் தான் இன்னும் மிச்சமிருக்கிறது" என்ற எளிய கருத்தை தான் தன் மிக நீண்ட அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறார் ராகுல்.
- சுயநலமிக்க உட்கட்சி தலைவர்கள்,
- அதிகாரவெறிக்கும், பதவி ஆசைக்கும் பலியாகி கூட்டணிக்கு ஒத்திசையாத பிற கட்சி தலைவர்கள்,
- அர்ப்பணிப்பும் உழைப்பும் செலுத்தாத சொந்த கட்சியினர்,
என அனைவரையும் தன் பண்புமிகுந்த ஒற்றை அறிக்கையில் விளாசியிருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்கு பின் அமைதியாகிவிட்ட அனைத்து தலைவர்களும் இவ்விஷயத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டியவர்கள் என்பதை தான் அவர் சொல்லியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்து அதை தன் அறிக்கையில் வெளிக்காட்டிவிடாமல் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் அவர் பண்பு போற்றத்தக்கது.

சிகாகோ உலகத் தமிழ் மாநாட்டு நிதி உதவியை முடக்கிய பாஜக அரசு


சாவித்திரி கண்ணன் : ரொம்பவும் மகிழ்ச்சியாகத் தான் அறிவித்தார் ரூபாய் 5 கோடியை உலகத் தமிழ் மாநாட்டிற்கு தருவதாக எடப்பாடியார்!
அந்தோ பரிதாபம் ! மத்திய அரசின் விருப்பமின்மையாலும், தடையாலும் தற்போது ஒரு கோடியை மட்டுமே கொடுக்க முடிந்துள்ளது.
எனவே, இந்த ’ஒரு கோடி’ அறிவிப்பை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் மூலமாக அறிவிக்கச் செய்துள்ளார்!
அமெரிக்காவில் வாழும் தெலுங்கர்கள் மாநாடு நடத்தும் போது ஆந்திர அரசு உதவி வருவதை ஏன் தடுக்க முடிவதில்லை.... பா ஜ க அரசால்?
இது போல வேறு எந்த மாநில அரசின் சொந்த விவகாரத்திலாவது மத்திய அரசு தலையிட்டு சண்டியர்த் தனம் செய்ய முடியுமா?
இந்த அற்பத் தனமான செயல் மூலமாக பா ஜா க அரசு ஒரு தமிழ்,மற்றும் தமிழர் விரோத அரசு என்பதை மெய்பித்துவிட்டதாக நாம் கருதுவதற்கு இடமளித்துவிட்டதே...!
இந்த விஷயத்தில் தமிழக பா ஜா கவினராவது மத்திய அரசிற்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்.

பணக்காரர்களில் பார்ப்பனர்கள் 49.9 வீதம் . பிற்படுத்தப்பட்டோர் 15.8 வீதம் . தாழ்த்தப்பட்டோர் 9.5 வீதச,

Rangasamy Rajaraman : "எகனாமிக் டைம்ஸ்" தரும் எச்சரிக்கை
பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் - பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் கொண்டிருக்கும் காரணத்தால் ஒரு தவறான கருத்தைப் பரப்பி வைத்துள்ளனர்.
அய்யோ பாவம் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் சர்வராக வேலை பார்க்கிறார்கள். இடஒதுக்கீடு இருப்பதால் அவர் களுக்குப் படிக்கவும், வேலைக்கு போகவும் வாய்ப்பு இல்லாமல் சதி செய்யப்பட்டு விட்டது என்று உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகிறார்கள். பார்ப்பனர் அல்லாதாரும் இந்த மாயச் சுழலில் சிக்கி தாளம் போடுகிறார்கள்.
இந்தப் பொய்த்திரையை கிழிக்கும் வகையில்தான் "எகனாமிக் டைம்ஸ்" ஏடு (2019 மே 12 - 19) ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விவரங்களைத் தந்துள்ளது.
பணக்காரர்கள் என்று வரும் பொழுது பார்ப்பனர்கள் 49.9 விழுக்காடாகும். பிற்படுத்தப்பட்டோர் 15.8 விழுக் காடாகும். தாழ்த்தப்பட்டோர் 9.5 விழுக்காடாகும்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க பார்ப்பனர் எல்லாம் பரம ஏழைகள் போல பம்மாத்து பிரச்சாரம் நியாயம்தானா? இதனை நம்பும் பார்ப்பனரல்லாத மக்களின் மனநிலையை என்னவென்று சொல்லுவது!

நந்தினிக்கு ஜூலை 5 ந் தேதி திருமணம் நடக்கவேண்டிய நிலையில் தீதிபதி... எஸ் வி சேகருக்கும் ராஜாவுக்கும் ஒரு நீதி

சாவித்திரி கண்ணன் : ஒரு நாள் எதிர்பாரதவிதமாக நண்பர் ஒருவர் தன்னுடன் இரண்டு பேரை என் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
’’இவங்க ரெண்டு பேரும் மது ஒழிப்பு போராளிகள் ஒங்க வீட்ல இன்னைக்கு இரவு தங்க வைக்க முடியுமா? என்றார்.
’’தாரளமாக..தங்கட்டும்’’ என்றேன்.
அன்று தான் அவர்களிடம் பேசி பழகினேன். தந்தை ஆனந்தனும், மகள் நந்தினியும் நான் பேசி உணர்ந்த வகையில், கிஞ்சித்தும் சுயநலமில்லாத , பிரமிக்க தக்க வகையிலான மனஉறுதி கொண்டவர்கள் என உணர்ந்தேன்.
அவர்களுக்கு தனி அறை தந்தேன். அதிகாலை எழுந்து,வெளியே சென்று சோப்பு வாங்கி வந்து குளித்தார்.
’’ஏன் பாத்ரூமில் தான் சோப்பு இருந்ததே’’ என்றேன்.
’’உங்களுக்கு எதுக்கு சிரமம் தரணும்?’’ என்றவாறு குளித்து உடனே புறப்பட்டனர் இருவரும்!
மிகவும் வற்புறுத்தியதால் கொஞ்சமாக சிற்றுண்டி சாப்பிட்டு புறப்பட்டனர்.
’’எங்கே செல்கிறீர்கள்?’’
’’திருவான்மியூர் தொடங்கி திருவல்லிகேணி வரை இன்று பிரச்சாரம் செய்தவண்ணம் நடக்கவுள்ளோம்’’
’’உங்கள் பிரச்சாரத்தை மக்கள் கேட்கிறார்களா?’’

வியாழன், 4 ஜூலை, 2019

பறவை தன் குஞ்சுக்கு உணவு வழங்கும் புகைப்படம் -உலகையே உலுக்கியது .. சிகரெட் துண்டு

வெப்துனியா : தாய் பறவை தன் குஞ்சுக்கு உணவு வழங்கிய புகைப்படம்
தாய் கொடுத்த உணவுடன் குஞ்சுபறவை தன் குஞ்சுக்கு உணவு வழங்கும் புகைப்படம் -உலகையே உலுக்கியது ஏன்?மெரிக்காவில் பறவை ஒன்று தனது குஞ்சுக்கு உணவு வழங்கிய புகைப்படம் பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்கரையில் பறவைகள் பல அழகாக பறந்துக் கொண்டிருப்பது வழக்கம்.  இதனை அழகாக புகைப்படம் எடுக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று  கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் சென்றிருந்தார். வரிசையாக பல பறவைகளின் அசைவுகளை வித்தியாசமாக படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பிளாக் ஸ்கிம்மர் எனும் பறவை தனது குஞ்சிடம் நெருங்கி வந்துக் கொண்டிருந்தது.

இணை ஆணையாளர் பச்சையப்பன் கைது பெண் ஊழியரை குளியல் அறையில் வீடியோ எடுத்ததார்? இந்துசமய அறநிலையத்துறை..

 Bachaiyappan, co-commissioner of Hindu Religious Affairs Department arrested.nakkheeran.in - annal : மதுரை மண்டல இந்துசமய அறநிலைத்துறையில் உதவி ஆணையாளராக இருக்கும் அன்னபூரணியின் அளித்த புகாரின் பேரில் கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடைபெற்றது. அறநிலையத்துறையில் பல்வேறு ஊழல் புகாரில் தொடர்ச்சியாக கண்காணிக்கபட்டு வந்த நிலையில் ஏற்கனவே சதுரகிரி மலையில் மீன் சாப்பிட்டதாக பக்தர்கள் புகார் அளித்ததை பாஜக தேசிய செயலாளர் ஹச்.ராஜா கண்டித்திருந்தார். மேலும் சமீபத்தில் இனை ஆணையாளரின் பிறந்தநாள் அன்று இந்து சமய அறநிலைத்துறையில் அனைத்து ஊளியர்கள் ஏதாவது அன்பளிப்பு வழங்க மறைமுக உத்தரவு போட பிறந்தநாள் அன்று மட்டும் பல லட்சம் பணமும், தங்க ஆபரணங்களும் பரிசாக பெற்றிருக்கிறார். இதுதொடர்பான வீடியோவும் சிக்கிருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையின் துணை ஆணையாளர் பச்சையப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும்

நக்கீரன் : வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும்
என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வேலூர் மக்களவைத் தேர்தல் குறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறுகையில், வேலூரில் ஏற்கனவே நடைபெற இருந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த தொகுதிக்கு தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இந்த தேர்தலை சந்திக்க அஇஅதிமுக தயாராக இருக்கிறது. Vellore ஏற்கனவே அந்த தொகுதியில் கூட்டணி கட்சியில் வேட்பாளராக ஏ.சி.சண்முகம் நிறுத்தப்பட்டிருந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் இதுகுறித்த அறிவுப்பு தலைமை கழகத்தில் இருந்து வெளிவரும்.
இந்த தேர்தலில் அஇஅதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு 9 தொகுதிகளில் வெற்றியை பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.

சாதி அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!”- அலகாபாத் நீதிபதி

அலகாபாத் நீதிபதிஅலகாபாத் நீதிபதி``சாதி அடிப்படையில்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!vikatan.com - ஜெனிஃபர்.ம.ஆ : இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளும் அடங்கிய குழு, புதிய நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கான குழு, அதாவது கொலீஜியம் (collegium) எனப்படும். இந்தக் குழுவே உச்ச நீதிமன்றத்திற்குப் புதிய நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் படைத்தது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங் நாத் பாண்டே இந்த முறையை எதிர்த்து பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

காதலி பேச மறுத்ததால் கொலை .. . தூத்துக்குடி

மகாராணி ஆஸ்பத்திரி tamil.oneindia.com/authors/hemavandhana. : கள்ளக்காதல் விவகாரம்.. பெண் கொலை.. காதலன் சரண்-வீடியோ தூத்துக்குடி: இளவரசனுடன் மகாராணி பேசவே இல்லையாம். அதனால்தான் கொலை செய்துள்ளாராம். கதை இல்லை.. நிஜமாகவே இறந்தவர் பெயர் மகாராணி, கொலையாளி பெயர் இளவரசர்!
தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த தம்பதி நடேசன் - மகாராணி. நடேசன், கல்லாமொழியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தில் என்ஜினீயராக வேலை பார்க்கிறார்.
மகாராணிக்கு 28 வயதாகிறது. இவர்களுக்கு விம்ரித் என்ற 5 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்று, நடேசன் வழக்கம்போல் வேலைக்கு போய்விட்டார். மகனும் ஸ்கூலுக்கு போய்விட்டான். அப்போது, மகாராணியின் தந்தை உலகமுத்து மதியம் மகளை பார்க்க வீட்டுக்கு வந்தபோது, மகாராணி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி உள்ளார். இதை கண்டு அலறிய உலகமுத்து, மகளை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்ல முயன்றார், ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.

மாணவி காரில் பாலியல் வன்கொடுமை 5 மாணவர்கள் கைது .. மங்களூர்

மங்களூரில் கல்லூரி மாணவியை காரில் கற்பழித்த 5 மாணவர்கள் கைது
மாலைமலர் ; மங்களூரில் கல்லூரி மாணவியை காருக்குள் 5 மாணவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ ஒன்று பரவியது.
காரில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணிடம் 5 வாலிபர்கள் தகாத முறையில் ஈடுபடுவதும், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருப்பதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஆபாச வீடியோ மாநிலம் முழுவதும் பெரும் பாலான பகுதிகளில் வாட்ஸ் அப்பில் பரவியது.
அதில் இருக்கும் பெண் யார்? அவரிடம் அத்துமீறி நடந்துகொள்ளும் 5 வாலிபர்கள் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து இந்த இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.
இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் போலீஸ் அதிகாரிகள் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மங்களூர் அருகே உள்ள தச்சினகன்னடா போலீஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.