வெள்ளி, 15 மே, 2015

வறுத்து எடுக்கும் வலைதளங்களால் வாடிப்போன அம்மாவும் ஆடிப்போன குமாரசாமியும்

தென்னாட்டு ஊடகங்களை விட வடநாட்டு ஊடகங்களும் அதை விட முக்கியமாக சமுக வலைதளங்களின்  கடும் விமர்சனங்களால் நீதிபதி குமாரசாமியும் மக்களின் முதல்வரும் பெரும் மன உளைச்சலில் உள்ளார்கள். மக்களை இலகுவில் ஏமாற்றி விட முடியாது என்பது புரிய ஆரம்பித்திருக்கிறது உடல் நலக்குறைவு, நீதிபதி குமாரசாமி தீர்ப்பை முழுமையான மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலை, அதை நம்பி முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஆகியவற்றால் ஏற்பட்ட மனக் கவலை ஆகியவை காரணமாகவே தீர்ப்புக்குப் பிறகும் கூட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். கடைசியாக ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறி வெளியுலகில் நடமாடியது 2014, அக்டோபர் 18ம் தேதிதான். அன்றுதான் அவர் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி சென்னைக்கு வந்து சேர்ந்தார். மாலையில் வந்து சேர்ந்த அவர் இரவு வீடு போய்ச் சேர்ந்தார். அதன் பிறகு அவர் தனது போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. இடையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜெயலலிதாவை வீடு தேடிப் போய்ச் சந்தித்தார். ஸ்ரீரங்கம் வேட்பாளராகப் போட்டியிட்ட வளர்மதி போய்ப் பார்த்தார். தேவர் ஜெயந்தி உள்ளிட்ட சில தலைவர்களின் பிறந்த, நினைவு தினங்களின்போது தனது வீட்டிலேயே புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

கனிமொழி : நாடாளுமன்ற வளாகத்திலேயே பெண் பணியாளருக்கு பாதுகாப்பில்லை

திமுக எம்.பி. கனிமொழி (இடது) | நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு (வலது).
திமுக எம்.பி. கனிமொழி (இடது) | நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு (வலது).
நாடாளுமன்ற வளாகத்தில் பணியாற்றும் துப்புரவு பணிப்பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய புகார் தொடர்பாக, தனக்கு உரிய தகவல் அளிக்குமாறு மக்களவைச் செயலரிடம் வெங்கய்ய நாயுடு கோரியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் துப்புரவு பணியாற்றி வரும் பெண்ணை அவரது கண்காணிப்பாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ள சம்பவம் குறித்து நேற்று இரு அவைகளிலும் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக இது குறித்த செய்தியை 'தி இந்து' (ஆங்கில நாளிதழ்- 13.05.2015 பதிப்பு) பிரத்யேகமாக பதவி செய்திருந்தது. 'தி இந்து'வுக்கு அந்தப் பெண் அளித்த பேட்டியில் தனது கண்காணிப்பாளர் தன்னை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்ததாகவும், இது குறித்த தனது புகார் மக்களவை உள்விவகார குழுவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

கேரளா குடும்பம் லண்டனில் தற்கொலை !கணவன் மனைவி இரண்டு பெண்களும்....

A dad found hanged in woodland may have killed his wife and their twin daughters before he committed suicide, it is believed.
Officers called to a flat on Tuesday after neighbours became concerned found Shigi Rethishkumar, 37, and her girls Niya and Neha, 13, dead inside.
The body of Shigi’s husband, ­Pullarkattil Rethishkumar, 44, was found yesterday near a nearby reservoir.
கேரளாவை சேர்ந்த ரெதிஷ்குமார் (வயது 44) என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்தார். இவர்களுக்கு இரட்டையர் மகள்கள் நேஹா, நியா (13) இருந்தனர். கிழக்கு லண்டன் வல்தம்ஸ்டோ பகுதியில் இவர்கள் வசித்த வீடு கடந்த சில நாட்களாக பூட்டியே கிடந்தது. புகாரின்பேரில் ஸ்காட்லாந்து போலீசார், வீட்டுக்குள் புகுந்து பார்த்தபோது ஷிகி, நேஹா, நியா ஆகியோர் கொல்லப்பட்டும், ரெதிஷ்குமார் தற்கொலை செய்தபடியும் பிணமாக கிடந்தனர்.

வியாழன், 14 மே, 2015

இந்திய உயர்நீதி மன்றங்கள் ஊழலின் சாக்கடை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பணக்காரர்களும் அதிகாரம்

இந்திய நீதித்துறைஜெயா – சசி கும்பலை ‘கணக்கு’ போட்டு விடுவித்த நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைத்திருந்த பலர்  – தமிழ்நாட்டைப் போலவே இந்தியாவின் பிற பகுதிகளிலும் – கசப்புடனும், ஆத்திரத்துடனும் எதிர்வினை ஆற்றியிருக்கின்றனர். பல்வேறு ஆங்கில இணைய தளங்களில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்ட சில கருத்துக்களை இங்கு தொகுத்து தருகின்றோம். ‘அம்மா’ அவர்களின் விடுதலை இப்படியாக மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இனி நீதிமன்றம்தான் இறுதி நம்பிக்கை எனும் ஆசுவாசமெல்லாம் மக்களிடம் எடுபடாது. சூப்பர்மேன்களும், சூப்பர்வுமன்களும் –  by vorpal on May 12, 2015 07:51 PM ரீடிஃப்

அரசு விளம்பரங்களில் மாநில தலைவர்களின் படங்கள் கூடாது ! உச்சாநீதிமன்றம் தீர்ப்பு! மாநில உரிமைக்கு???

உச்ச நீதி மன்றத் தீர்ப்பு மாநில உரிமைகளுக்கு எதிரானது!: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை: ’’ நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்; முதலமைச்சர் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதியின் படங்களையும், குடியரசுத் தலைவரின் படங்களையும் வெளியிடலாம், மாநில முதலமைச் சர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயலாகும்.

ஆலோசனைக் கூட்டத்தில் தூக்கம்: வட கொரிய ராணுவ அமைச்சருக்கு மரண தண்டனை?

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கியது, அதிபர் கிம் ஜாங் உன்-னிடம் எதிர்த்துப் பேசியது உள்ளிட்டவற்றுக்காக வட கொரிய ராணுவத் தலைமை அமைச்சர் ஹ்யோன் யாங் சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
 இந்தத் தகவலை தென் கொரிய நாடாளுமன்றக் குழு ரகசியக் கூட்டத்தில் அந்த நாட்டு உளவுத் துறை தெரிவித்ததாக அதில் கலந்துகொண்ட எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.  அடிமைத்தனம் நிறைந்த இனங்களில் இருந்துதான் சர்வாதிகாரிகள் உருவாகிறார்கள்.  கொரியர்களிடம் மட்டும் அல்ல தமிழர்களிடமும் இந்த அடிமைதனமும் அதன் விளைவாக உருவான சர்வாதிகார தலைவர்களையும் தான் பார்க்கிறோமே 

வடிவேலு அரசியலுக்கு வருகிறார்? நிச்சயம் வருகிறார் ! ரஜினியின் வரும் ஆனால் வாராது புலுடா அல்ல?

வருகிற தேர்தலில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறதா?’’, என்ற கேள்விக்கு நடிகர் வடிவேல் பதிலளித்தார். ‘‘என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’, என்று அவர் கூறினார். ‘எலி’ ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வடிவேல் கதாநாயகனாக நடித்திருக்கும் 4-வது படம், ‘எலி’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சதா நடித்திருக்கிறார். யுவராஜ் தயாளன் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வடிவேல் கலந்துகொண்டு நிருபர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சமீபகாலமாக நான் எங்கே சென்றாலும், ‘‘நீ ஏன் படத்தில் நடிக்கவில்லை?’’ என்று கேட்டு ஜனங்கள் என்னை திட்டுகிறார்கள். அவர்கள் கெட்ட வார்த்தையால் திட்டாத குறைதான். ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி? என்று கேட்கிறார்கள்.இருந்து பாருங்கள் இந்த ஆள் ஒரு நாள் சட்ட சபையில் அல்லது மத்தியில் உட்கார போகிறார் ,

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
 இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுதுபோக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள்பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறெந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன. முதல்ல மந்திரிங்க வீட்டுல மக்களின் முதல்வர் வீட்டுல எல்லாம் ரெயுடு பண்ணுங்க நிறைய பேரு மாட்டுவாய்ங்க,

காட்டாட்சி நடத்தும் ஸவுதிஅரேபியா உலகெல்லாம் பரப்பும் வெறிபிடித்த வஹ்ஹாபி-ஸலாஃபிய ஸுன்னிமுதல்வாத

al-nimrothisaivu.wordpress.com : உலகளாவிய அளவில் மிக மதிக்கப்படவேண்டிய  இஸ்லாமியத் தலைவர்களில், ஸவுதிஅரேபியாவில் வசிக்கும் இந்த நிம்ர் பக்ர் அவர்களும் ஒருவர்; ஆனால், எனக்குத் தெரிந்தவரை – நம் செல்லத் தமிழகத்தில் ஒரு குளுவானும்  கேள்வியேகூடப் பட்டிராத பெயரும் இதுதான் – ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால், ஒரு மெத்தப் படித்த நண்பருக்கும் நிம்ர் பக்ர் அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இத்தனைக்கும் அவர் – இஸ்லாம், அரேபிய வரலாறு, புவியியல் பற்றியெல்லாம் திட்டவட்டமாக, கறாராக ஏகோபித்த கருத்துகளை வைத்திருப்பவர், அங்கிருக்கும் பிரச்சினைகளைப் பற்றித் துப்புரவாக அறிந்துள்ளதாகத் தளும்பிக் கொண்டிருப்பவர் (=”அங்கிருக்கும் பிரச்சினைகள் அனைத்திற்கும், அமெரிக்காதான் காரணம்!”)  – பாவம், ரொம்பவும் கிண்டல் செய்யக்கூடாது – அவர் சிலபல விஷயங்களை அறிந்தவர்தான்!
… ஆனால், இவரேகூட ஸவுதிஅரேபிய உள்நாட்டுப் பிரச்சினைகளில் இந்த ஸுன்னி-ஷியா, ஸுன்னி-‘நாடோடி’ குறுங்குழுக்கள்  இடியாப்பச்சிக்கல்களைப் பற்றி, தொடரும்  அநியாய ரத்தக் களறிகளைப் பற்றி ஒரு எழவையும் அறிந்தாரில்லை!

புதன், 13 மே, 2015

Jeyalalithaaவும் உச்சாநீதிமன்றமும்? பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவன பாதுக்கக்கவேண்டும்?

உச்சநீதிமன்ற அமர்வு
பிராமணன் கொடிய குற்றம் செய்தவன் ஆயினும் அவனைக் கொலை செய்யாமலும், துன்பப்படுத்தாமலும் அவனுக்குப் பொருளைக் கொடுத்து அயலூருக்கு அனுப்ப வேண்டும்” என்ற பார்ப்பன நீதிப்படிதான் உச்சநீதி மன்றம் நடந்து வருகிறது.
ர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடந்துவரும் ஜெயா-சசி கும்பல் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கைத் தமிழக அரசு நியமித்ததை ரத்து செய்யக் கோரி தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு (டிவிஷன் பெஞ்ச்) அவ்வழக்கில் நீதி வழங்கப்பட்டதைப் போல ஒரு ஜோடனையைக் காட்டியிருக்கிறதேயொழிய, உண்மையில் அந்த அமர்வு பணம், அதிகாரம், பார்ப்பன சாதி செல்வாக்கு கொண்ட குற்றவாளியான ஜெயாவிற்குச் சாதகமான தீர்ப்பைத்தான் அளித்திருக்கிறது.

ஜெயலலிதா பதவி ஏற்பில் குழப்பம்! பம்முகிறது அதிமுக வட்டாரம்! பன்னீரு கேவி கேவி அழுதுகிட்டிருக்காரோ?

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, விடுதலை பெற்றதை அடுத்து, ஐந்தாவது முறையாக, முதல்வர் பதவி ஏற்கவிருக்கிறார், ஜெயலலிதா. எந்த தேதியில், அவரது பதவியேற்பு என்பது பற்றி குழப்பமான தகவல்கள், அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.>கடந்த 2011 தேர்தல் வெற்றிக்கு பின், மே 16ம் தேதி, அவர், நான்காவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு, செப்., 27ம் தேதி பதவி இழந்தார். தற்போது, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக, அவர் மீண்டும் பதவியேற்க தகுதி பெற்றுள்ளார்; அதனால், அவர் ஐந்தாவது முறையாக பதவியேற்கும் நாளை குறிப்பதில், ஜோதிடர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்டு வருகிறது. வரும் 17ம் தேதி, அமாவாசை தினம் என்பதுடன், தற்போதைய ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு துவக்க நாள் என்பதாலும், அந்த நாளில், அவர் பதவியேற்கக் கூடும் என, முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது, 'அந்த நாள், ஜெயலலிதாவுக்கு உகந்த நாள் அல்ல' என்ற தகவல் சொல்லப்பட்டு உள்ளது; 17 என்றால், கூட்டுத்தொகை எட்டு வருகிறது; அது, அவருக்கு ராசியற்ற எண் என்பதால், 17ம் தேதி பதவியேற்பு இருக்காது என்கிறது, ஆளுங்கட்சி வட்டாரம்.

நீதிபதி குமாரசாமி எவ்வளவு லஞ்சம் வாங்கினார்? சொத்து குவிப்புக்கு விலை என்ன?சவுக்கின் சாட்டை அடி?

எஷ்டு தொகண்டிதிரி குமாரசாமி ? என்னடா சவுக்கில் புரியாத தலைப்பில் கட்டுரை வருகிறதே என்று பார்க்கிறீர்களா ?  இது கன்னடம்.    குமாரசாமிக்கு புரியும்படி எழுத வேண்டுமானால் கன்னடத்தில்தானே தலைப்பு வைக்க வேண்டும் ?
தலைப்புக்கு என்ன பொருள் என்றால் எவ்வளவு வாங்கினீர்கள் குமாரசாமி ?
பச்சையாக ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை எவ்வளவு லஞ்சம் வாங்கினீர்கள் என்று கேட்கும் அளவுக்கு அப்படி என்ன துணிச்சலான ஆதாரம் சவுக்கிடம் இருக்கிறது என்ற கேள்வி எழக்கூடும்.  அந்த கேள்விக்கான விடை, இக்கட்டுரையின் இறுதியில்.

சரி.   விஷயத்துக்கு போவோம்.  நாடே எதிர்ப்பார்த்த ஒரு தீர்ப்பு இன்று நொடியில் வழங்கப்பட்டுள்ளது. ஒரு புறம், அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட மறுபுறம், அரசியல் நோக்கர்களும், எதிர்க்கட்சிகளும், ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்துள்ளன.
ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு, இந்தியாவில் மற்ற எல்லா சொத்துக் குவிப்பு வழக்குகளுக்கும் ஒரு உதாரணம்.   இது போன்ற ஒரு வழக்கே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்த வழக்கு அனைத்து வழக்குகளுக்கும் உதாரணமாக இருந்தது.   ஏனென்றால், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பின்படி,
சோதனைக்காலம் தொடங்குகையில்
ஜெயலலிதாவின் சொத்து (30.04.1996)             55,02,48,215.00
சோதனைக் காலத்தில் ஜெயலலிதாவின்
செலவு                                         8,49,06,833,00
மொத்தம்                                       63,51,55,048.00
சோதனைக் காலத்தில் ஜெயலலிதாவின்
வருமானம்                                      9,91,05,094.00

நயன்தாராவை பேயாக்கி விடாதீர்கள் ஏற்கனவே கோபத்தில் உள்ளார்

நயன்தாரா தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் வருகிற 29-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இன்று இப்படக்குழு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் படக்குழுவினரிடம் படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டனர். ஒரு கேள்வியில், இந்த படத்தில் சூர்யாவை பேயாக காட்டியுள்ளீர்கள். அதுபோல் நயன்தாராவும் இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறாரா? என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு, இயக்குனர் வெங்கட் பிரபு அப்படியெல்லாம் கிடையாது. சூர்யா இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை. அது படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்று மழுப்பலாக பதில் சொல்லி வந்தார்.

செவ்வாய், 12 மே, 2015

நீதிபதி குமாரசாமி – நீதிபதி தத்து எவ்வளவு வாங்குனீங்க ?

நேற்று தீர்ப்பை ஒட்டி நடந்த விவாதங்களில் அருவெறுப்பான ஜால்ராச் சத்தம் தந்தி டி.வியின் பாண்டேயின் வாயிலிருந்து இடைவிடாமல் வந்து கொண்டே இருந்தது.
பத்திரிகையாளர் ஞாநியிடம் கேள்வி கேட்ட பாண்டே தான் 900 சொச்சம் பக்கங்களை படித்து விட்டதாக கூறி மடக்கிக் கொண்டே இருந்தார். ஞாநியும் வேறு வழியின்றி பொய்களையே அதிரடியாக கூறும் பாண்டேவிடம் புலியிடம் சிக்கிய ஆட்டுக் குட்டி போல மாட்டிக் கொண்டார். பாண்டே உரைத்த பொய்களில் முதன்மையானது ஜெயாவும் அவரது பினாமிகளும் வங்கிகளில் வாங்கிய கடன் தொகை. அதை வரவு என்று வைத்து சொத்து குவித்ததாக வழக்கு போட்டு தவறு செய்து விட்டார்கள் என்ற தொனியில் பாண்டே அலறலைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.

ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கோர ஆச்சாரியா திட்டம்!

பெங்களூரு: ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில், கடன் தொகை தவறாக மதிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த அடிப்படையில், கோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம்கோர்ட்டில் இடைக்கால தடை வாங்க தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக அரசு வக்கீல் ஆச்சாரியா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நீதிபதியே குறிப்பிட்ட கடன் தொகையை கூட்டி பார்த்தால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய் தான் வரும். Stay of the judgment is a ஆனால் நீதிபதியோ, இதன் கூட்டுத் தொகை 24,17,31,274 ரூபாய் என்றும், இந்தக் கூட்டுத் தொகையின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு 66 கோடி ரூபாய்க்கு தொடுத்தது தவறு என்றும் கூறியுள்ளார்.

வினவு: கொள்ளைக்காரி ஜெயா விடுதலை ? போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம்

ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு என்று அழைக்கப்படும், திருட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளையும் விடுதலை செய்து தீர்ப்பளித்து விட்டார் குமாரசாமி. சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் சற்று நம்பிக்கை ஊட்டப்பெற்றிருந்த திமுகவினரும் பிற எதிர்க்கட்சிகளும் இந்த தீர்ப்பினால் பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல, அசைக்க முடியாத ஆதாரங்கள் இருப்பதால், தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு சாதகமே அமையவே முடியாது என்று கருதிய பலருக்கும் இது அதிர்ச்சிதான். ஆனால், 18 ஆண்டு காலம் நடைபெற்ற இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் அனுபவம் என்ன? குன்ஹாவின் தீர்ப்பையும், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அரிதான சில தீர்ப்புகளையும் தவிர்த்து, மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் போயஸ் தோட்டத்தின் செக்யூரிட்டியாகவே நீதித்துறை, குறிப்பாக உச்ச நீதிமன்றம் இருந்து வந்திருக்கின்றது.

பணமும் போய் படமும் போய் சிம்புவின் பரிதாப நிலை? திமிர்? பொறிக்கித்தனம்? நம்பிக்கை துரோகம்?அரைவேக்காட்டு .....

அவருடைய இந்த நிலைக்கு யார் காரணம்? அவர் நடித்து கடைசியாக வெளியான படம் போடாபோடி. அதற்குப் பிறகு வரவேண்டிய வாலு இன்னும் வந்தபாடில்லை. வாலு படத்தைத் தயாரிக்கும் நிக்ஆர்ட்ஸ் நிறுவனத்திலேயே வேட்டைமன்னன் என்று இன்னொருபடம் செய்வதாக இருந்தது. அதையும் ஒழுங்காக எடுக்கவில்லை. வாலு படத்தை எடுத்து முடிக்கவே தயாரிப்பாளர் நிறையச் சிரமப்பட்டதாகச் சொல்லப்பட்டது. தயாரிப்பாளரிடம் பணம் இல்லாதததால் வாலு தாமதமாவதாகச் சொல்லப்பட்டது. இதனால் சொந்தநிறுவனத்திலேயே பாண்டிராஜை இயக்குநராக்கி இதுநம்மஆளு என்கிற படத்தைத் தொடங்கினார்கள். அந்தப்படத்தையாவது வேகமாக முடித்தார்களா என்றால் இல்லை.

ஜெயாவுக்கு வாழ்த்து தெரிவித்த வைகோ ,மோடி,வாசன்,ஆளுநர் ரோசையா பாஜக ராசா ....இவிங்க எல்லாம் இனி ..

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, பிரதமர் மோடி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, பூங்கொத்து ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ்: ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி ! மக்கள் பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம்

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இவ்வழக்கில் குறுக்கிட்டு ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்படும் பவானிசிங்கை சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமித்தது. இது ஒரு நீதிப்படுகொலை
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி. இரண்டையும் காப்பாற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: PMK wants Karnataka govt to appeal against Jaya verdict வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி வரை அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

தீர்ப்பு சாதகம்? யாருக்கு? அமைச்சர் அருண் ஜெட்லி குற்றவாளி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த ரகசியம் இதுதான்

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஜெ, விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தருகிறது (திமுக தலைவருக்கும் அப்படிதான் இருக்குமென்று யூகிக்கிறேன்). இந்திய நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளக்கூடிய நிலை இன்று நிச்சயமாக இல்லை. பலகீனமான நீதித்துறை என்று ஜெ.வுக்கு தண்டனை அளித்தபோது நாம் விமர்சித்தபோது
நம்மை திட்டித் தீர்த்தவர்கள், இன்று அதை ஒப்புக் கொள்வார்கள். பதினெட்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்கு செல்லுமேயானால் இறுதித் தீர்ப்பினை பெற இன்னும் நூற்றி எண்பது ஆண்டுகள் கூட ஆகலாம். இந்தியாவில் ‘நக்சல்பாரிகள்’ உருவாவதற்கான அத்தனை நியாயங்களையும் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களுமே உருவாக்கி வைத்திருக்கின்றன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டுகள் கூட முழுமையாக இல்லாத நிலையில் வந்திருக்கும் குமாரசாமியின் தீர்ப்பு, தமிழகத்தில் எந்தெந்த கட்சிகளுக்கு என்னமாதிரியான சாதகபாதகங்களை ஏற்படுத்தக்கூடும் என்று பார்ப்போம். இது, அதிமுகவுக்கு ஆதரவான தீர்ப்பாக அதிமுகவின் அடிமைகள் (தொண்டர்கள் என்கிற சொல், இக்கட்சியைப் பொறுத்தவரை சரியான பொருளில் வராது) எண்ணலாம். மாறாக, இத்தீர்ப்பால் அதிக பலன்களை அறுவடை செய்ய இருப்பது திமுகவே என்று தோன்றுகிறது.

என் 58 ஆண்டுகால அனுபவத்தில், இது போன்ற ஒரு தீர்ப்பை நான் பார்த்ததில்லை! அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா

பெங்களூரு: "தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து, தீர்ப்பளித்துள்ள தீர்ப்பின் பிரதி கிடைக்கும் வரை, இது தொடர்பாக, எதையும் கூற முடியாது,” என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்தார்.கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர், ஜெயமஹால் எக்ஸ்டென்ஷனில் உள்ள தன் அலுவலக இல்லத்தில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தீர்ப்பின் பிரதியை முற்றிலுமாக படிக்காமல், எதையும் கூறுவது சாத்தியமில்லை. எதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம், இந்த தீர்ப்பை அளித்தது என்பது தெரியவில்லை. வழக்கு தொடர்பான, அனைத்து சாட்சிகளையும் தாக்கல் செய்துள்ளோம். இவைகளை பரிசீலித்து, சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 27ம் தேதி அளித்த உத்தரவில், அரசு வழக்கறிஞர் பவானி சிங் தரப்பு வாதத்தை ரத்து செய்துவிட்டு, புதிய அரசு வழக்கறிஞரை நியமித்து, எழுத்துபூர்வ வாதத்தை எடுத்துரைக்க கூறியது. ஒரு நாள் அவகாசத்தில், என்னை, கர்நாடக அரசு நியமித்தது. கூடுதல் அவகாசம் கொடுத்திருந்தால், அரசு தரப்பு வாதத்தை எடுத்து கூறுவதற்கு, வசதியாக இருந்திருக்கும். இந்த வழக்கை, பொறுத்த வரையில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வாதம், முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.காசு பணம் துட்டு மணி காசூ  பணம்

திங்கள், 11 மே, 2015

பன்னீர்செல்வம் ராஜினாமா! இன்றுமாலை ஆளுனரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை......இதாய்ன் கேவி கேவி அழுதாரோ?

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று மாலை சந்திக்கும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளிப்பார் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஆளுநரை சந்திக்கும் ஜெயலலிதா, ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று தெரிகிறது. பின்னர் வரும் 17-ந்தேதி ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது புதிய மந்திரிகளும் பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என்று தெரிகிறது. இதனிடையே வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வரும் கூட்டணி கட்சி தலைவர்கள், அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையினரும் இன்று மாலை ஜெயலலிதா விடுதலையை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.maalaimalar.com

ஜெயலலிதா : புடம் போட்ட தங்கமாக நான் வெளிவர இந்த தீர்ப்பு காரணமாகிறது!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் ஒருநாள் அட்ரஸ் இல்லாமல் அதுவும் பெட்டி வாங்க தொடங்கிடும் இன்றைய தேதியில்  அநேக நீதிபதிகள் மகா மகா கோடீஸ்வரர்கள் ஆவது இப்படிதாய்ன் .
நீதியரசர் திருவாளர் குமாரசாமிக்கு மிக்க நன்றி. அம்மா பதவியேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அம்மாவை "நேரடியாவும்" வாழ்த்தி, ஆசிகள் வழங்குதல் வேண்டும்..
ஜெயலலிதா விடுதலையை விட எளிமைக்கு பெயர் போன " திருமதி சசிகலா மற்றும் திருவாளர் தொழிலதிபர் சுதாகரன் விடுதலை ஆனதுதான் தமிழக மக்களை மிக்க மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.. இது தமிழக மக்கள் செய்த புண்ணியம்..
 இன்று (11.5.2015) கர்நாடகா உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. என் மீது சுமத்தப்பட்ட அவதூறை நீக்கிய தீர்ப்பு இது.  என் மீது எனது அரசியல் எதிரிகளால் சுமத்தப்பட்ட பழியினைத்  துடைத்திட்ட தீர்ப்பு இது. நான் எந்த தவறும் செய்யாதவர் என்பதை உறுதி செய்த தீர்ப்பு இது.  புடம் போட்ட தங்கமாக நான் மீள இந்தத் தீர்ப்பு வழிவகை செய்துள்ளது. 
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்குப் பிறகு என் மீது மாறாப் பற்றும், அன்பும் கொண்ட தமிழக மக்கள் இறைவனிடம் வேண்டியதற்கு, இறைவன் அளித்த வரம் இது.

ஆச்சர்யா :4 பேரும் குற்றவாளிகள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன:

எங்களைப் பொறுத்தவரை 4 பேரும் குற்றவாளிகள் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளன: ஆச்சர்யா சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி 11.05.2015 திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளீர்களா என்று நீதிபதி குமாரசாமி, கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை நோக்கி கேட்டார். இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் கலந்து முடிவு எடுக்கப்படும் என்று ஆச்சார்யா தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆச்சார்யா, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் எதிராக போதுமான ஆதாரங்களை அரசுத் தரப்பு அளித்துள்ளது. அந்த ஆதாரங்கள் அனைத்தும் ஆவணங்களாகவே உள்ளன. அவற்றை ஆய்வு செய்து சரியென ஒப்புக்கொண்டே விசாரணை நீதிமன்ற நீதிபதி 4 பேருக்கும் தண்டனை வழங்கினார்.

EVKS.இளங்கோவன்: இந்திய நீதித்துறைக்கு ஒரு கருப்பு நாள்! ஜெயா வழக்கில் நீதித்துறை விமர்சனத்திற்கு உட்பட்டதே

ஜெயலலிதாவை நிரபராதி என கூறி விடுதலை: நீதித்துறை வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதாவை நிரபராதி என்று கூறி, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்துள்ளார். இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா கடந்த செப்டம்பர் 27, 2014 அன்று 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனால் முதலமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா விலக வேண்டிய நிலை ஏற்பட்ட து. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஏழு மாதங்கள் கழித்து இன்று வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதாவை நிரபராதி என்று கூறி, சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்துள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்கு உள்நோக்கம் தான் கற்பிக்கக் கூடாதே தவிர, விமர்சிக்கிற உரிமை உண்டு. இந்திய நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள்'' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.nakkheeran.in

ஜெயலலிதா விடுதலை ! அந்த 150 முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுவிட்டனவா? குமாரசாமிக்கு கலைஞர் கேள்வி!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 150 முடிச்சுகளைப் போட்டிருப்பதாக கூறியிருந்ததை நீதிபதி குமாரசாமி அகற்றிவிட்டாரா எனவும் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக உயர் நீதி மன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அவர்கள் ஜெயலலிதா குறித்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியிருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்பு இதே நீதிபதி குமாரசாமி என்னென்ன சொன்னார் என்பது தான் நினைவுக்கு வருகிறது. அன்று விசாரணையின் போது, நீதிபதி குமாரசாமி சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து, "சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதி மன்ற நீதிபதி; குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை" என்று கூறினார். இந்த குமாரசாமி ஆரம்பத்தில் இருந்தே  தமிழ் சினிமா பற்றியும் எம்ஜியார் பற்றியும் பொழுது போக்கு அலம்பல் பண்ணிய போதே தெரிந்து விட்டது இது கழிசடை ,வாங்கிய காசுக்கு சேவகம் பார்க்கும்

ஆந்திரா போலீசாருக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்- வைகோ

ஆந்திரா மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் சார்பில் உண்மை அறியும் குழு அங்கு சென்று விசாரித்தது. அதன் களஆய்வு அறிக்கை வெளியீட்டு கருத்தரங்கம் மதுரையில் நடந்தது. கள ஆய்வு அறிக்கையை மும்பை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி சுரேஷ் வெளியிட்டார். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 குடும்பங்களை சேர்ந்தவர்களும், அந்த சம்பவத்தை நேரில் பார்த்த 3 சாட்சிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 20 குடும்பத்தினருக்கும் மற்றும் 3 சாட்சிகள் என மொத்தம் 23 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். கருத்தரங்கில் வைகோ பேசியபோது, ‘’ஆந்திர அரசு 20 தமிழர்களை படுகொலை செய்ததன் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளன.

அரபு பெயர்களை தடைசெய்யும் இஸ்லாமிய நாடு தாஜிகிஸ்தான்

தஜிகிஸ்தான் நாட்டில் இளைஞர்கள் மசூதிகள் மற்றும் சர்ச்சுகளில் தொழுகை, ஜெபம் செய்ய அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார். மேலும் இஸ்லாமியர்கள்  அரபு பெயர்கள் வைப்பதுவும் தடை செய்ய பட்டுள்ளது. நாட்டின் பாரம்பரிய வரலாறு கலாசாரம் போன்றவற்றை பாதுகாக்க அரபி மயப்படுத்தலை தடை செய்வதாக அதிபர் அறிவித்துள்ளார். தஜிகிஸ்தான் நாட்டு அதிபராக கடந்த 1992ம் ஆண்டு முதல் இமோம் அலி ரகுமான் உள்ளார். நேற்று அவரது அமைச்சரவையில், பெற்றோரின் பொறுப்பு என்ற பெயரிலான புதிய மசோதாவிற்கு அதிபர் அனுமதி வழங்கி கையெழுத்திட்டார். அதன்படி, நாட்டில் பரவிவரும் மதம் சார்ந்த அடிப்படை தன்மைகளை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. நாட்டின் 98 சதவீதம் மக்கள் முஸ்லீம்களாக உள்ளனர். இந்நிலை அதிகரி்க்காத வகையில், 18 வயதிற்கு குறைந்த வயதினர், மசூதிகள், கிறிஸ்துவ ஆலயங்கள் உள்ளிட்ட மதத் தலங்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. In what is seen as an extension in an anti-Islam campaign, Tajikistan is deliberating on a legislation that, if passed, would see ‘Arabic-sounding’ names for newborns banned in the Muslim-majority country. The drive has already resulted in men being forced to shave their beards and women who wear hijab being labeled as prostitutes.இதற்கு மக்களிடம் வரவேற்று உள்ளதா? 

முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷின் குடிபோதை கார் விபத்து வலுவான சாட்சியம் இருந்தும் ஊத்தி மூடி...


இந்தியாவின் முதன்மைப் பணக்காரரும், பெரும்  தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் செய்த கார் விபத்து. சாட்சியங்கள் மற்றும் தடயங்கள் என்று அனைத்தும்சரியாகவும், பொருத்தமானதாகவும் இருந்தும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, தான் நிகழ்த்திய  கார் விபத்தில் இருந்து கெத்தாக வெளியே வந்தார்.இது இன்னமும் பலரின் மனதில் பெரும் கேள்விகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விபத்து கடந்த 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. நிறைந்த குடிபோதையில் ஆகாஷ் அம்பானி தனது வெளிநாட்டு கார் ஒன்றில் மும்பைத் தெருக்களில் இரவு உலா வந்துள்ளார்.அப்போது கண்மண் தெரியாமல் பக்கத்தில் சென்ற 'ஆடி'  சொகுசு  காரில்  மோதியிருக்கிறார். இதில் நல்ல வேளை யாருக்கும் உயிர் சேதமில்லை.சாட்சியம் கூறும் பெண்ணின்  நேர்மையை பாராட்டவேண்டும் .சட்டம் வழமை போல காசுக்கு கால்கழுவுகிறது 

ஜெயலலிதா வழக்கு இன்று 11:00 மணிக்கு கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு!

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு மீது, இன்று காலை, 11:00 மணிக்கு, கர்நாடகா ஐகோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் வழக்கு என்பதால், இந்த தீர்ப்பு, தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெ.,யின் தோழி சசிகலா, அவரின் உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், 18 ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஜெயலலிதா உட்பட நான்கு பேருக்கும், தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா, 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இன்று நாட்டில் நீதித்துறையின் மீது அவநம்பிக்கை நிலவுகிறது . அதை நீருபிக்க கூடிய விதமாகவே தீர்ப்பு அமையும் என்பது பொதுவான  அபிப்பிராயம் ?

ஞாயிறு, 10 மே, 2015

ஊழல் அதிகாரிகள் 10 பேர் பட்டியல் வெளியிட்ட கான்ட்ராக்டர்கள்! ரமணா பட பாணியில்....

சென்னை: பணிகளை லஞ்சம் பெற்றதாகக் கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 10 அதிகாரிகளின் பெயர்ப்பட்டிலை வெளியிட்ட தமிழ்நாடு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒப்பந்ததாரர் சங்கத்தினர், இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் புகார் அளித்துள்ளனர். ரமணா திரைப்பட பாணியில் ஊழல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்படும் என்று சென்னை எழிலகம் அருகே வைக்கப்பட்ட பேனர்களால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் அதிகாரிகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர் ஒப்பந்ததாரர்கள். அதில், ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகக் கூறி அதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளனர். புகாருக்குள்ளான ஊழல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

மகனுக்காக நெப்போலியன் குடும்பத்தின் போராட்டம்!

என் பிள்ளை நடக்கணும்!’’- ஓர் அன்னையின் பிரார்த்தனை!
ஜெயசுதா நெப்போலியன் ‘அன்னையர் தின’ சிறப்புப் பேட்டி!

‘‘எல்லோரையும் போலத்தான் என் மூத்த பிள்ளையும் ஆரோக்கியமாக பிறந்து, நார்மலான குழந்தையாக வளர்ந்தான்... ஸ்கூல் போக ஆரம்பிச்சான். நான்தான் தினமும் கொண்டுபோய் விட்டுக் கூட்டிட்டு வருவேன். நாலரை வயசில்தான் எனக்கு அந்த வித்தியாசம் தெரிஞ்சது... அவன் நடை, மத்த குழந்தைங்க மாதிரி நார்மலா இல்லைங்கிறதை உணர்ந்தேன்... நடக்கிறப்போ ஏதோ ஒரு அசாதாரணம் தெரிஞ்சுகிட்டே இருந்துச்சு. என் கணவர்கிட்ட சொன்னதோடு, மனசுக்குள்ள அதைப் போட்டுக் குழம்பிக்கிட்டே இருந்தேன்’’ & மென்மையாக, இயல்பாகப் பேசத் தொடங்குகிறார் ஜெயசுதா. பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியனின் மனைவி. தன் மகனுக்காகவே அமெரிக்காவில் போய் செட்டில்லாகிவிட்டது இவர்கள் குடும்பம்.

திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று அதிமுக ஆடிப்போய் இருப்பது உண்மையா? விகடன் கழுகார் அப்படித்தாய்ன்......

‘மதுரையில் அழகிரியும், பி.ஆர்.பி-யும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கடந்த 6-ம் சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் வீட்டுத் திருமண நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சிக்கு பி.ஆர்.பி சென்றிருக்கிறார். அவர் அங்கே சென்ற சற்று நேரத்தில் அழகிரியும் உள்ளே வந்திருக்கிறார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘போன்ல பேசுங்க!’ என்று சொல்லிவிட்டு அழகிரி கிளம்பிவிட்டாராம். அந்தக் காட்சிகள் இப்போது வாட்ஸ்அப்பிலும் வலம் வருகின்றன.’’
‘‘தி.மு.க-தான் அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றனவே?”
‘‘இந்த விஷயத்தில் அ.தி.மு.க கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. உளவுத் துறை அதிகாரிகளோ, ‘தி.மு.க-வினர் திட்டமிட்டு தமிழ்நாடு முழுக்க கருத்துக்கணிப்பில் வாக்களித்​துள்ளனர். அவர்கள் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்துவதுபோல அ.தி.மு.க கவனம் செலுத்துவது இல்லை. அ.தி.மு.க-வின் ஐ.டி விங்க்கில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். அதற்குள் வேறு யாரும் நுழைய முடியாதபடி முட்டுக்கட்டை போடுவது இரண்டு அமைச்சர்கள்தான்.