சனி, 16 ஜூலை, 2011

சங்கிலியன் சிலை விவகாரத்தை விஷமாக்கும் புலிப்பினாமிகளின் பரப்புரைகள்!

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குடாநாட்டிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இறுதியாக நடைபெற்ற மாநகர பொதுக்கூட்டத்தில் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னனின் சிலையை உடைத்து புதிய சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த நிலையில் இந்த சிலையை முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் மாநகரசபையால் சங்கிலியனின் சிலை அகற்றப்பட்டு சிலை இருந்த பகுதி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.சரணபவனின் செய்தி
கடந்த 30 வருட கால யுத்தத்தில் குண்டுகள், சன்னங்கள் பட்டு சிலை உருக்குலைந்து விட்டது என்றும் – இதனால் சிலையை புனருத்தாரணம் செய்கின்றமை சாத்தியப்படாது என துறை சார்ந்த வல்லுனர்கள்  தெரிவித்துள்ள நிலையில் இந்திய சிற்ப கலைஞர்களால் புதிய சிலை வடிவமைக்கப்பட உள்ளதாக உண்மை நிலையினை ஆணையாளர் எடுத்துரைத்தார்.
ஆணையாளரின் விளக்கங்கள் இளவரசருக்கு பூரண திருப்தியை கொடுத்து உள்ள நிலையில்  சங்கிலியின் சிலை விவகாரம் தொடர்பாக புலிப்பினாமிகளால் முடுக்கிவிடப்பட்டுள்ள இணையத்தள பிரச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையில் இளவரசருக்கு மாநகர சபை ஆணையாளரால் அளிக்கப்பட்ட விளக்கம் அமைந்துள்ளது.
மாநகரசபை முதல்வரின் செய்தி

நல்லூர் முத்திரைச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை இடித்து நொருக்கப்படுவதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். இந்தியாவின் பிரபல சிற்பக் கலைஞரான புருஷோத்மனின் கைவண்ணத்தில் சங்கிலியன் சிலையை மீள வடிவமைக்கவுள்ளதாகவும், இதற்கென ஒன்றரை இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் அது உயிரோட்டத்துடன் புதிதாக உருவாக்கப்படவிருப்பதாக யாழ் மாநகரசபை உறுப்பினரும், சுகாதாரக்குழுத் தலைவருமான மங்கள நேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னனான சங்கிலியனின் உருவச்சிலை உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதனாலும், வீதி பெரிதாக்கும் பணிகளிற்கு இடையூறாக உள்ள காரணத்தினாலும், இந்தச் சிலையை புதிதாக நிர்மாணிக்கவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.
குட்டையைக் குழப்பும் செய்திகள்
சங்கிலியனின் சிலை தொடர்பான உண்மையான செய்திகள் இவ்வாறு அமைந்திருக்க புலிப்பினாமிகளால் நடத்தப்படும் இணையங்கள் சங்கிலியன் சிலை திட்டமிட்டு ஸ்ரீலங்கா அரசினால் இடிக்கப்பட்டது. தமிழரின் வரலாற்று சின்னங்களை அழிப்பது என்பது தமிழரின் அடையாளத்தை அழிப்பது, தமிழர்களின் வரலாற்றை, தமிழர்களின் அடையாளத்தை அழிப்பது,என ஸ்ரீலங்கா அரசு திட்டமிட்டுச் செயற்படுகின்றது. ஈபிடிபி துணைநிற்கின்றது.. சங்கிலியினின் வாள் அகற்றப்படவுள்ளது. சங்கிலியினின் வாளை அகற்றுவதானால் ஸ்ரீலங்காவின் தேசியக்கொடியிலுள்ள சிங்கம் ஏந்தி நிற்கும் வாளையும் அகற்றவேண்டுமே.. இப்படி ……ஒன்றல்ல பல்லாயிரம்…..  அவர்களின் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அவர்களது மனதில் வந்ததையெல்லாம் செய்திகளாக… கட்டுரைகளாக….. பவனி வர விட்டுள்ளார்கள்…
வதந்திகளை இணையத்தளங்கள் மூலம் உலகெங்கும் பரந்து வாழும் புலம் (புலன்) பெயர் தமிழர்களுக்கு பரப்பியே பழக்கப்பட்டுப் போனவர்கள் இந்த சிலை விடயத்தையும் விட்டு வைக்கவில்லை.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களுக்கு சமாதி கட்டுவதற்கு எப்படி எப்படி எல்லாம் புலம்பெயர்நாடுகளில் தமது பரப்புரைகளைக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்தார்களோ (உலைத்தார்கள்) அப்படியே இன்றும் இந்த சங்கிலியின் சிலை விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கி தமிழர் சின்னம் அளிக்கப்பட்டு விடுகின்றது , தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன  என்று உச்சாரத்தொனியில் கூப்பாடு போடுகின்றார்கள். இந்தக் கூப்பாடுகளை இவர்கள் இங்கிருந்து போட்டுவிட்டு தத்தம் புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிரஜைகளாக வலம் வருகின்றார்கள்.அங்குள்ளவர்களோ தங்கள் வாழ்க்கை நிலையினை நகர்த்திச் செல்ல அவஸ்தைப்படுகின்றார்கள்.அவர்களுக்கு சிலையிருந்தால் என்ன  வாள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன….?
அவ்வப்போது இந்த பிரச்சாரப் பரப்புரைகளை முடுக்கிவிட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் புலன்பெயர்ந்த மக்களுக்கு புலிப்பூச்சாண்டி, விடுதலை உணர்வு, தமிழ்த்தேசியம் என்றெல்லாம் உசுப்பேத்தி விடுவதில் இவர்கள் பலே கில்லாடிகள். ஆனால் இங்கு வாழும் இவர்களோ தமிழ்க்கலாச்சாரத்தையே கழற்றிவிட்டு மேற்கத்தைய நாகரீக மோகத்தில் தாமும் தம் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது தமிழ்த்தேசியத்தையும் புலிக்கொடியையும் பிடித்து ஆட்டுவதற்கு விழைகின்றார்கள். இந்தப் பரப்புரையாளர்களின் இளந்தலைமுறையினர் எத்தனை பேருக்கு தம் தாய்மொழி தமிழ் தெரியும் என்று கேட்டுப்பாருங்கள். அதற்குக் கூட பதில் அவரவர் வாழும் புலம்பெயர் நாட்டு மொழியில் தான் வரும்.
சங்கிலியின் சிலை விவகாரத்தை தீனியாக்கும் பரப்புரை செய்திகளை செய்திகளின் உண்மைத்தன்மை கண்டு வெளிக்கொணருங்கள். மீண்டும் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அங்கு வாழும் எமது மக்களைத் கொண்டு போய் தள்ளுவதற்கு முண்டியடிக்காதீர்கள். நீங்கள் விடுமுறைக்குச் சென்று பார்த்து வருவதற்கு சங்கிலியின் சிலை தேவைப்படுவதற்காய் ஆக்ரோஷமாக கத்துகின்றீர்களோ தெரியவில்லை.அல்லது உங்கள் வாரிசுகளுக்கு உங்களது அடையாளமாக நல்லூரிலுள்ள சங்கிலியன் சிலையை மட்டும் தான் சொல்லி வைத்துள்ளீர்களோ தெரியவில்லை.
புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது எந்த தமிழ் தேசிய அடையாளத்தை பேணிப் பாதுகாத்து வைத்திருக்கின்றோம் என்ற வினாவுக்கு நாம் என்ன விடை பகிரலாம்……? ஒன்றுமே இல்லை… நாட்டில் வாழும் சொந்தங்களின் நலன்களில் அக்கறை கொள்ளுங்கள். அவர்களுக்கு இருப்பிடம், கல்வி, மருத்துவம் இந்த வகையில் உதவுவதற்கு உங்களது பரப்புரைகளை பயன்படுத்துங்கள். அதனை விட்டு பொய்யான செய்திகளை பரப்பி அவற்றுக்கு கட்டுரைகளும் புனைந்து கதையளந்து வாழும் வாழ்க்கையை விட்டு விடுங்கள். அங்குள்ளவர்கள் உங்களைக் கேட்டார்களா சங்கிலியன் சிலையை காப்பாற்றித் தாருங்கள்…அது தான் எங்களுக்கு சோறு போடும் . தேசியத்தைக் காக்கும் என்று……..
இனியாவது புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் உண்மைகளை உணர்ந்து இங்கு வாழும் புலியின் எச்சங்கள் வீசி எறியும் பரப்புரைகளுக்கு துணைபோகாமல் முள்ளிவாய்க்காலில் சிதறிப்போன நம் சொந்தங்களின் நல்வாழ்வுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிரத்தையுடன் சிந்தித்து செயற்படுவோம்.
புலம்பெயரும்போது நீங்கள் அனாதரவாக விட்டு வந்த சங்கிலியனின் சிலை புதுப்பொலிவுடன் மீண்டும் நல்லூர் முத்திரைச் சந்தையில் அமர்த்தப்படும். அடுத்த கோடைகால விடுமுறைக்கு செல்லும்போது நீங்கள் அதனைப் பார்த்து தமிழ்த்தேசியத்தின் அடையாளம் சிலை வடிவில் சிதைக்கப்படவில்லை என்பது உணர்ந்து கொள்வீர்கள். சங்கிலியன் சிலையில் வாள் வைக்கப்படவில்லை என்றால் நீங்கள் போகும் போது பவுணில் ஒரு வாளைச் செய்து கொண்டு போய் வைத்துவிட்டு வாருங்கள். தமிழ்த்தேசியத்தை காக்க காலம் காலமாய் புலம்பெயர்நாடுகளில் பவுண் கொடுத்தவர்கள் வரிசையில் உங்கள் பெயரும்  இடம்பெறலாம்.
-நல்லூரான்

சர்வதேச சக்திகளுக்கு வடக்கு, கிழக்கு மக்களே வழங்கும் தீர்ப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு இலங்கைக்கு எதிரான சர்வதேச சக்திகளுக்கு சிறந்ததொரு பதிலை அளிக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலை 5ம் கட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் ரீதியில் வடக்கு தமிழ் மக்கள் தற்போது மாறிவருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைராக்கியத்துடன் அரசியல் செய்பவர்கள் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மத்தியில் தோற்றுப்போயுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ் விஜயம்

வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வை யிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட் டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
18ஆம் திகதி புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.
அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்

பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா

நித்யானந்தா தியான பீடத்தில் குரு பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த  குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்தார் பிறகு நித்யானந்தா அவருக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக  பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய  உட்கார்ந்தபடி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று  அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். இதனையடுத்து நித்யானந்தாவிடம் ஒருவர்  சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில்  ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா

நடிகை விஜயலட்சுமி சீமானுடன் குடும்பம் நடத்தியற்கு ஆதாரங்கள் :

நடிகை விஜயலட்சுமி விஸ்வரூபம் எடுத்துள்ளார்.   கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் இவர்   திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
தன்னை காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார் சீமான் என்று போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் தற்போது,   3 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்துவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் தனது வீட்டில் சீமான் காதலர் தினம் கொண்டாடிய படங்களை வெளியிட்டுள்ளார்.



வக்கீல்கள் எதிர்ப்பு... உயர்நீதி மன்ற விழாவுக்கு வராமல் தவிர்த்த ஜெயலலிதா

சென்னை: வக்கீல்கள் எதிர்ப்பு காரணமாக உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமையவுள்ள மாற்றுமுறை சமரச தீர்வு மையத்துகான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை முன்வைத்து, உயர் நீதிமன்ற விழாவில் அவர் பங்கேற்கக் கூடாது என திமுக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் அவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட, பதிலுக்கு அதிமுக வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், அடிக்கல் நாட்டு விழாவுக்கு வராமல் விட்டுவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.

உச்ச நீதிமன்ற நீதிபதி அல்டமாஸ் கபீர் அடிக்கல் நாட்டினார். அரசு சார்பில் செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் செந்தமிழன் கலந்துகொண்டு பேசினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

ராம்கி - நிரோஷா வீடுகள் அடுத்த மாதம் ஏலம்!

ராம்கி - நிரோஷாவின் வீடுகள் ஆகஸ்ட் மாதம் ஏலத்துக்கு வருகின்றன. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செந்தூரப்பூவே படத்தில் ஜோடியாக நடித்தனர் ராம்கியும் நிரோஷாவும். தொடர்ந்து பல படங்களில் இவர்கள் ஜோடியாக நடித்தனர். அதில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஜெமினி பார்சன் அபார்ட்மெண்ட் குடியிருப்பில் கணவன்- மனைவியாக வசித்து வருகிறார்கள்.

இந்த அபார்ட் மெண்டில் இவர்களுக்கு இரண்டு வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை அடமானம் வைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், கார்ப்பரேஷன் வங்கியிலும் பல லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றனர். ஆனால் அதற்கு வட்டி செலுத்தவில்லை. இதனால் பாங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை கோடியை தாண்டியது.

இதையடுத்து வீடுகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளன அந்த வங்கிகள். நிரோஷா-ராம்கி வீடுகள் அடுத்த மாதம் 18-ந்தேதி பகல் 1 மணிக்கு பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஏல கேட்பு தொகை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கனிமொழி: எனக்காக யாரிடமும் கையேந்த வேணாம்பா!'-

மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற வேண்டாம் என்றும், தனக்காக ஜாமீன் கேட்டு யாரிடமும் கையேந்த வேண்டாம் என்றும் தனது தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதில் ஒரு திமுக அமைச்சர் கூட இடம்பெறவில்லை. திமுகவும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் பிரதமரோ தான் திமுகவுக்கு 2 இடத்தை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், எப்பொழுது கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அப்போது கனிமொழி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி உதவவில்லை என கருணாநிதி வருத்தப்பட்டுள்ளார்.

அதற்கு பிரணாப் பதிலளிக்கையில், "எனக்கே காங்கிரஸ் தலைமை செக் வைத்துள்ளது. எனது அலுவலகமே உளவு பார்க்கப்படுகின்றது.

இன்னும் சொல்லப்போனால், கருப்பு பண விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு மேலே என் துறையை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவை நீதிமன்றம் நியமித்துள்ளது", என்று பதிலுக்கு பிரணாப் தனது வேதனையை வெளிப்படுத்தினாராம்.

இந்த நிலையில் 2 ஜி விவகாரத்தில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி.யும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தனது தந்தைக்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.

"இனி எனக்காக நீங்கள் யாரிடமும் போய் கையேந்தி நிற்க வேண்டாம். எனக்கு ஜாமீன் கிடைக்க யாரையும் கெஞ்ச வேண்டாம். நமக்கு உதவி செய்யாத மத்திய அரசில் நம் கட்சிக்கு அமைச்சர் பதவியும் வேண்டாம்," என்று கூறியுள்ளாராம்.

இதனால் தான் மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெறவில்லை என திமுக தலைவர்கள் கூறுகின்றனர்.

ஸ்டாலினுடன் கடும் வாக்குவாதம்..கலைஞர் கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார்.

அறிவாலயத்தில் கருணாநிதி - ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்... அறிவாலயத்திலிருந்து வெளியேறிய கருணாநிதி!!

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கும் அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததில் இருந்தே திமுகவிற்கு நேரம் சரியில்லாமல் உள்ளது. 2ஜி ஊழல் பூதாகரமாக வெடித்து ராசாவும் கனிமொழியும் திஹார் சிறையில் உள்ளனர். தயாநிதி மாறனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.

சன்டிவி, கலைஞர் டிவி போன்றவையும் சிக்கலில் உள்ளன. இன்னொரு பக்கம் நில அபகரிப்பு வழக்கில் தினமும் ஒரு திமுக நிர்வாகி கைதாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை திமுக தலைமையகத்தில் கட்சித் தலைவர் கருணாநிதிக்கும், அவரது மகன் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே சூடான வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கடுப்பான கருணாநிதி தலைமையகத்தைவிட்டு வெளியேறியதாக செய்தி வெளியாகியுள்ளது,

2ஜி விவகாரம் கையாளப்படும் விதம் குறித்து ஸ்டாலின் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எப்பொழுதும் கட்சியினர் புடைசூழச் செல்லும் கருணாநிதி நேற்று ஈசிஆர் ரோட்டில் உள்ள கடற்கரை வீட்டிற்கு தனியாகச் சென்றுள்ளார். அவரது செயலாளர் கே. சண்முகநாதனும், பாதுகாவலர்கள் சிலரும் மட்டுமே அவருடன் சென்றுள்ளனர்.

குடும்ப அரசியலால் தான் சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்தது என்று கட்சியினரே அதிருப்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ஜெயலலிதாவைச் சுற்றிய சொத்துக் குவிப்புக் கொக்கி, மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்துவிட்டது.

''முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றிய சொத்துக் குவிப்புக் கொக்கி, மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்துவிட்டது. முதல் முறை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதா மீது பதிவான வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 'ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால், சொத்துக் குவிப்பு வழக்கு அம்பேல் ஆகிவிடும்’ என்று தி.மு.க-வினரே நினைத்தனர். ஆனால், அதற்கு மாறாக, வழக்கு வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்று சில வாரங்களுக்கு முன்னால் நான் சொல்லியது ஞாபகம் இருக்கிறதா? வரும் 27-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 'முதல்வர் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டுள்ளார்.''

''எத்தனையோ சம்மன்கள் பார்த்தாச்சே... அதோடு இதுவும் ஒன்றுதானே?''

''இல்லை என்கிறார்கள், பெங்களூரு நீதித் துறை வட்டத்தினர். 'எத்தனையோ தடவைகள் கோர்ட் உத்தரவுகளை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீறியுள்ளனர். இதனால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கோபத்தில் இருக்கிறார். அவரது வலுவான வாதங்களைப் பார்த்துதான் நீதிபதி இம்மாதிரியான ஆஜர் உத்தரவைப் போட்டார்’ என்கிறார்கள். ஒரு முறை ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து, 'இப்படி ஒரு வழக்கு இங்கு நடப்பது உங்களது பெட்டிஷனருக்குத் தெரியுமா?’ என்று நீதிபதியே கேட்டார். அந்தக் கோபம்தான் இன்று வெடித்துள்ளது.''

''ஓகோ!''

''அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, 'இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், நேரில் ஆஜராகவே இல்லை. இந்திய கிரிமினல் சட்டம் 313-ன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று சொன்னதும், ஜெ. தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்வர ராவ், 'ஆடிட்டர் பாலாஜியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு ஹைகோர்ட்டில் நாங்கள் போட்ட மனு விசாரணையில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சொல்லக் கூடாது’ எனக் கேட்டாராம். 'ஒருமுறைகூட ஜெயலலிதா ஆஜராகாதது, கோர்ட்டை அவமதிக்கும் செயல்’ என்று ஆச்சார்யா சொல்ல... 27-ம் தேதி என்று நாள் குறித்துள்ளார் நீதிபதி. 'கோட்டையில் உட்கார்ந்து​கொண்டு கோர்ட் படி ஏறுவதா?’ என்று ஜெ. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்துள்ளதாம்.'

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 5

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் - 5
5. புலிகளின் முகாமில் எனது முதல் சிறைவாசம்
Ltte prisonபுலிகளின் புலனாய்வுப் பிரிவினருடன் நான் வீட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர், கடைசியாக ஒரு தடவை எனது மனைவி அவர்களிடம் “அவரை எப்ப விடுவியள்?” என வினவினார்.
அதற்கு அவர்கள் “இன்று இரவுக்குள்ளை அல்லது நாளைக்கு காலையிலை வந்திடுவார்” எனப் பதிலளித்தனர்.
இது முழுக்க முழுக்கப் பொய் என எனக்குத் தெரியும். ஏனெனில் பொதுவாக அப்போது நான் கேள்விப்பட்ட வகையில், புலிகள் ஒருவரை விசாரணைக்கென அழைத்துச் சென்றால், அது பாரதூரமான பிரச்சினையாக இல்லாவிட்டாலும் கூட, இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்வது வழமையில்லை என அறிந்திருந்தேன். இருந்தாலும், அவர்கள் பொய்யாகத்தன்னும் எனது மனைவிக்கு அவ்வாறு கூறியது, அவருக்கு ஒரு மன ஆறுதலை அளிக்கும் என நம்பினேன்.
வீட்டைவிட்டு வீதிக்கு வந்ததும் நான் அவர்களிடம், “சரி, இப்ப எண்டாலும் எனக்கு உண்மையைச் சொல்லுங்கோ, என்னுடைய விசாரணை எப்ப முடியும்?” என வினவினேன்.
அதற்கு சின்னவன், “அது உங்கடை விசாரணையைப் பொறுத்தது” எனச் சுருக்கமாகப் பதிலளித்தான். அது சம்பந்தமாக வேறு எதுவும் அவன் என்னுடன் பேச விரும்பவில்லை என்பது தெரிந்தது. அதன் பின்னர் சின்னவன் கூட வந்த ஜெயந்தன் என்பவனிடம் ஏதோ சொல்லி சொல்லிவிட்டு, என்னை அவனது சைக்கிளில் ஏறும்படி கூறினான். ஆனால் ஜெயந்தன் சற்றுத் தயங்கி நின்றான். அதைக்கண்ட சின்னவன், “அவர் பிரச்சனையான ஆளில்லை. நீ பயப்பிடாமல் கொண்டு போ” என அவனுக்கு உத்தரவிடுவது போலச் சொன்னான்.
அதன்பின்னர் ஜெயந்தன் என்னைத் தனது சைக்கிளில் ஏற்றிக்கொள்ள, சின்னவனும் அவனுடன் கூட வந்த மற்றவனும் வேறு ஒரு வீதியில் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
ஜெயந்தன் என்னை ஏற்றிக்கொண்டு நல்லூர் கந்தசாமி கோவில் பின் வீதியால் சென்று கொண்டிருந்தான். அப்பொழுது முதல்நாள் நத்தார் பண்டிகையை ஒட்டி, நத்தார் தாத்தா வேடம் தரித்த ஒருவருடன் சில இளைஞர்களும் சிறுவர்களும் அவ்வீதி வழியால் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களைக் கண்ட ஜெயந்தனுக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. அவர்களுக்குக் கேட்காமல் எனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக, அவர்களை இதில் எழுதமுடியாத தூசண வார்த்தைகளால் திட்டினான். அவனது வசையின் சாராம்சம் இதுதான்: “பேய்ப் .....மக்களே நாங்கள் கஸ்டப்பட்டு ஆமியோடை சண்டை பிடிச்சுச்சாக, உங்களுக்கு முசுப்பாத்தியும் கொண்டாட்டமுமோடா”.
அதன்பின்னர், அவன் என்னை நல்லூர் கோவிலுக்கு அருகிலுள்ள பண்டாரக்குளம் ஒழுங்கையால் கொண்டு சென்று, அங்கிருந்த ஒரு இரண்டு மாடி வீட்டுக்குள் நுழைந்தான். அந்த வீட்டுக்குள் நுழைவதற்குத் திரும்பும் போது, அதற்கு முன்பாக, அந்த ஒழுங்கையில் இருக்கின்ற எனது நெருங்கிய உறவினர் ஒருவர் வேறு ஒருவருடன் கதைத்துக்கொண்டு நிற்பதைக்  கண்டேன்.
எனக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்ற, அவரை நோக்கிக் கையை அசைத்தேன். ஏனெனில் அவர் என்னைக் கண்டுவிட்டார் என்றால், பின்னர் புலிகள் என்னைக் கைதுசெய்ததை அறியும் போது, இந்த வீட்டுக்குள்தான் அவர்கள் என்னைக்கொண்டு சென்றார்கள் என்பதை எனது வீட்டாருக்கு அவர் தெரிவிக்க வாய்ப்பாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் எனது தூரதிஸ்டம், அவர் என்னைக் கவனிக்கவேயில்லை. அத்துடன் என்னைக்கொண்டு சென்றவனும் நான் அவருக்குக் கைகாட்டியதை அவதானித்துவிட்டு, வேகமாக என்னை உள்ளே கொண்டு சென்றுவிட்டான்.
என்னைக் கொண்டுசென்ற முகாம், புலிகளின் புலனாய்வுப்பிரிவு முக்கிய நபர்களில் ஒருவனான ‘பைப்’ என்பவனின் பொறுப்பில் உள்ள ஒரு முகாம் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். புலிகளின் புலனாய்வுப் பிரிவிலுள்ள ஒவ்வொரு முக்கிய நபர்களின் பொறுப்பிலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகாம்கள் இருப்பது வழமை என்பதை நான் முன்னரே கேள்விப்பட்டிருந்தேன்.
இப்பொழுதுதான் என் வாழ்நாளில் முதல்தடவையாக நான் புலிகளின் ஒரு முகாமுக்குள் செல்கின்றேன். இதற்கு முன்னர் ஆயுதப்போராட்ட இயக்கங்களைப் பொறுத்தவரையில், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் ஓரிரு முகாம்களுக்கு மட்டுமே பொதுமக்களின் சில பிரச்சினைகள் சம்பந்தமாகச் சென்றிருக்கிறேன்.
மாலை மங்கும் அந்த நேரப்பொழுதில், நாம் அந்த முகாமுக்குள் சென்ற போது, அந்த இருமாடிக் கட்டிடத்திற்கு முன்னால் உள்ள வட்டவடிவமான ஒரு திறந்த கொட்டிலுக்குள், ஒருவன் ஒரு LMG துப்பாக்கியை வாசலை நோக்கிக் குறிபார்த்தபடி காவல் கடமையில் ஈடுபட்டிருந்தான். அவன் என்னை மிகவும் கூர்மையாகவும், ஒரு விரோத மனோபாவத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நோக்குவதை நான் அவதானித்தேன்.
என்னைக் கொண்டு சென்றவன், அந்தக் கட்டிடத்தின் விறாந்தையிலுள்ள ஒரு வாங்கில் இருக்கும்படி எனக்குச் சொல்லிவிட்டு, காவல் கடமையில் இருந்தவனை நோக்கி “ இவர் இங்கை இருக்கட்டும். சின்னவன் அண்ணை இரவு வந்து பொறுப்பெடுப்பார்” எனக் கூறினான்.
“என்னெண்டாலும் ஆளை அறைக்குள்ளை விடு” என காவல் கடமையில் இருந்தவன் பதிலளித்தான்.
“அவர் பிரச்சனையான ஆள் இல்லை. இதிலை இருக்கட்டும்” என என்னைக்கொண்டு சென்றவன் திரும்பவும் கூறினான்.
“வேண்டாம், வேண்டாம். உவங்களை நம்பேலாது. நேற்று உப்பிடித்தான் ஒருதனை இருக்க விட, கம்பி நீட்டீட்டான். ஆனபடியாலை உள்ளுக்கைதான் விட வேணும்” என்று காவலில் நின்றவன் மீண்டும் திட்டவட்டமாகக் கூறினான்.
அதன் பின்னர் இன்னொருவன் வந்து, என்னை வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று, அறையொன்றைத் திறந்து உள்ளே போகும்படி கூறினான். மிகச்சிறிய அந்த அறையைத் திறந்ததுமே, நான் ஒருபோதுமே அனுபவித்திராத, சகிக்க முடியாத ஒரு துர்நாற்றம் மூக்கைத் துளைத்து தலைசுற்ற வைத்தது.
முதலில் அறைக்குள் இருந்த ஒன்றும் எனது கண்களுக்கு தெளிவாகப் புலப்படவில்லை. பின்னர் அறையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த சிறிய மண்ணெண்ணெய் கைவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில், நான் அங்கு கண்ட காட்சி என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது!
தொடரும்


தி.மு.க., செல்லாக்காசு : இளங்கோவன்.அதிமுக வில் சேர போகிறாரா?

தி.மு.க..வுடன் கூட்டணி தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலில் காங்., ஜெயிக்க முடியாது. ஏனெனில், தி.மு.க., செல்வாக்கற்ற கட்சியாக, செல்லாக்காசாக போய்விட்டது'' என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கடுமையாக விமர்சித்தார்.

தூத்துக்குடியில் நேற்று அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டாக தமிழக அரசு உத்தரவுப்படி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால், அவரது பிறந்த நாளான இன்று(நேற்று) அதுபோல கடைபிடிக்கவில்லை. நிதி ஒதுக்காததுதான் இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இதுவருந்தத்தக்கது. எனவே, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட அரசு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காத அதிகாரிகள் மீது முதல்வர் ஜெ., நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிதி ஒதுக்கி பள்ளிகளில் இதை கொண்டாட வேண்டும்.
தனித்துபோட்டியிட வேண்டும்: சட்டசபை தேர்தலுக்குமுன்னரும், தேர்தலின் போதும், தற்போதும் தி.மு.க., - காங்., கூட்டணி தொடர்கிறது. தி.மு.க.,வுடன் கூட்டணி வேண்டாம் என கடந்த தேர்தலின்போதே காங்., தலைமையிடம் வலியுறுத்தினோம். ராகுலிடமும் கூறினோம். கூட்டணி தொடரும் என அப்போது மேலிடம் கூறிவிட்டதால் அதன் முடிவுபடி செயல்பட்டோம். ஆனால், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணியில்லாமல் காங்., தனித்தே போட்டியிடவேண்டுமென வலியுறுத்துகிறோம். இல்லையெனில் தி.மு.க., அல்லாத மற்றகட்சிகளுடன் கூட்டணி சேரவேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
செல்லாக்காசாகிவிட்டது: இந்தியாவில் ஊடகங்கள் ஆட்சிதான் நடப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது 100க்கு 100 உண்மைதான். அந்த "டிவி'யில்தான் சுவாமி நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பதுபோல ஒளிபரப்பி அவமானப்படுத்தப்பட்டனர். தி.மு.க..வுடன் கூட்டணி தொடர்ந்தால் உள்ளாட்சி தேர்தலில் காங்., ஜெயிக்க முடியாது. இதுவே ஒட்டுமொத்த காங்., தொண்டர்களின் கருத்து. ஏனெனில், தி.மு.க., செல்வாக்கற்ற கட்சியாக, செல்லாக்காசாக போய்விட்டது. தமிழக காங்., தலைவரை விரைவில் மேலிடம் நியமிக்கும். யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர் தமிழகத்தில் காங்.,கை ஆட்சியில் அமர்த்துவதற்கும், கட்சியை வளர்ப்பதற்கும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தருவர். ஆனால், அவர் தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளுக்கு "ஜால்ரா' போடுபவராக இருக்கக்கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. தற்போது போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதில்லை. அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு உரியவர்களிடம் தருவதற்காக போலீசில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது, என்றார்.
மீண்டும் துவக்கம்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் காங்., கூட்டணி தொடரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்திய இளங்கோவன், தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். பின்னர், அக்கட்சியுடன்தான் கூட்டணி தொடருமென மேலிடம் அறிவித்ததால் அமைதியானார். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதையொட்டி, மீண்டும் அவர் தி.மு.க.,வை விமர்சிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Dol Tappi Maa - NRI,இந்தியா
இந்த கொசு தொல்லை தாங்க முடியல்லப்பா !!
ஈயத்தைப் பார்த்து பித்தளை இழித்ததாக ஒரு பழமொழியுண்டு. காங்கிரசை, திமுகவைத்தவிர யாரும் கூட்டணிக்கு அழிக்கப்போவதில்லை. நிலைமை அப்படியிருக்க இவர் திமுகவை செல்லாக்காசு என்று சொல்கிறார்
 
Nava Mayam - newdelhi,இந்தியா
திராவிட கட்சிக்கு ஜால்ரா போடக்கூடாது என்கிறார் அடுத்த வரியிலேயே அதிமுக விற்கு ஜால்ரா அல்ல தண்டையே அடிக்கிறார் ! அதிமுக ஆரியர் கட்சியாகிவிட்டது என்று முடிவுசெய்துவிட்டாரா !
KULOTHUNGARAJA.VIJAY - CHENNAI,இந்தியா
2011-07-16 01:02:01 IST Report Abuse
திமுக்கவிற்கு வடிவேல் எப்படியோ, காங்கிரசுக்கு நம்ம இளங்கோவன்.. இந்த கொசு தொல்லை தங்க முடியலப்பா.. ஈரோட்ட்லயே நிக்க வச்சு (தோர்க்க) அடிச்சாலும், இன்னும் பினாதிட்டே இருக்குதுப்பா.. எனகென்னமோ இளங்கோவன் அதிமுகாவில் கொள்கைபரப்பு செயலாளர் பதவி வாங்கிட்டார் போல தெரியுது.. ரொம்ப கழுவுறாரே.. அப்புறம் காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தல்ல தனிச்சு நின்னு ஜெயிக்குமாம்.. இந்த பெரியார் பேரன், கலைஞர் காலில் விழுந்த போது "செல்லாக்காசு "னு தெரியல.. பப்பூ..பூ.. கீ... சிரிப்பு வருதுப்பா நினச்சாலே.. வீரப்பபம்பாளையம் சடையப்பன் 33ஏக்கர் நிலத்த பத்தி ஒன்னும் தெரியாது எங்களுக்கு.. ஜெயலலிதா காதில் விழுந்தா என்ன நடக்கும்..
 

ஊழல் வழக்கில் சம்மன் பெற்ற ஜெயலலிதாவுடன் நீதிபதிகள் அமர்வது தவறான முன்னுதாரணம்

சென்னை : உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறவுள்ள மாற்றுமுறைத் தீர்வு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வதற்கு வக்கீல்கள்  எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்ற இளம் வக்கீல்கள் கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல்கள் இளம்பரிதி, ராஜ்குமார், ஜெயப்பிரகாஷ், சுகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான வக்கீல்கள் நேற்று உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் விமலாவிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:

நீதித்துறைதான் நாட்டை ஒளிமயமாக மாற்றுகிறது. கிரேக்க, ரோமானிய இதிகாசங்களிலும் இப்படித்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் வாழ்க்கையில் மரியாதையும் நீதியும் பிரிக்க முடியாதவைகளாக உள்ளன. மனு சாஸ்திரத்திலும் இதேதான் கூறப்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தின் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா 16ம் தேதி (இன்று) காலை 10.30 மணியளவில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாநிலத்தின் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. விழா அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அந்த வழக்கில் பொங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

ஜெயலலிதா மீதான வழக்கின் விசாரணை தமிழகத்தில் நடைபெற்றால், விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற காரணத்தினாலும், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கின் போக்கை அவரால் மாற்ற முடியும் என்ற காரணத்தினாலும்தான் வழக்கு விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

 குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ள ஒருவர், முதலமைச்சரக இருந்தாலும்கூட உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அமர்ந்திருக்கும் மேடையில் அவர்களுக்கு சமமாக மேடையில் அமர்ந்தால், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குக்கு அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.

நீதிபதிகள் அமரும் மேடையில் குற்றம் சாட்டப்பட்டவரும் அமர்வது ஏற்கக்கூடியதாக இருக்காது. அந்த மேடையில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள முதல்வருடன் அமர்வதை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் தவிர்க்க வேண்டும். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதாவது ஜெயலலிதாவிடம் நீதிபதி கேள்வி கேட்கும் நடைமுறை வந்துள்ள நிலையில் நீதித்துறையின் மாண்பை காக்க வேண்டியது தர்மமாகும். கறைபடிந்த அரசியல்வாதிகளுடன் ஒரே மேடையில் நீதிபதிகள் அமர்வது நல்ல நடைமுறை அல்ல.

எனவே, இந்த மனுவை பரிசீலித்து தற்போது எழுந்துள்ள இந்த அசாதாரணமான சூழலை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் போலி சாமியாரை வெளியேற்றுங்கள்


தூத்துக்குடி : தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வரும் நித்யானந்தாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தூத்துக்குடி வக்கீல் திருவாண்டி கூறியதாவது: கடந்த ஆண்டு சினிமா நடிகையுடன் படுக்கை அறையில் இருந்த நித்யானந்தா குறித்து பல்வேறு ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. இதனால் தலைமறைவான நடிகையும், கைது செய்யப்பட்ட போலி சாமியார் நித்யானந்தாவும் இன்று வெட்கமில்லாமல் தமிழகத்துக்குள் வந்து பேட்டியளிக்கின்றனர்.

தமிழக அரசு தனக்கு துணை நிற்கும் என நினைத்து, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க வைக்கும் முயற்சியிலும் நித்யானந்தா ஈடுபட்டுள்ளார். நித்யானந்தா ஆபாச காட்சிகள் ஊடகங்கள் மற்றும் இன்டர்நெட்டில் வெளிவந்தபோது எந்த கருத்துக்களையும் தெரிவிக்காத இன்றைய ஆட்சியாளர் களும் அவர்களின் கைப்பா வைகளும் இப்போது அவருக்கு வக்காலத்து வாங்குவது தவறான செயலாகும். தமிழக அரசு உடனடியாக நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு திருவாண்டி கூறினார்.

வக்கீல் ஆனந்த் கேப்ரியேல் ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அரசியல் ரீதியாக சில பழிவாங்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதில் ஆபாச சாமியார் குளிர்காய நினைக்கிறார். இதற்கு தமிழக அரசு துணை நிற்பதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 15 மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட செய்திக்கு தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறும் நித்யானந்தா இத்தனை காலம் போலீசில் புகார் அளிக்கவில்லை.

நீதிமன்றத்திலும் முறையிடவில்லை. அவரது சிடி உண்மையானது என கர்நாடக சிஐடி போலீசார் நிரூபித்துள்ளனர். தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் நித்யானந்தாவை உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இவ்வாறு ஆனந்த் கேப்ரியேல் கூறினார்.

அழகிரி ஆதரவாளர் அட்டாக் பாண்டி கைது

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.
மதுரையில்   திருமலை நாயக்கர் மகாலுக்கு எதிரில் ஈஸ்வரர் லால் என்பவருக்கு சொந்தமான கடை ஒன்றை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அத்துமீறி கைப்பற்றினார் அட்டாக் பாண்டியனின் கூட்டாளி திருச்செல்வம்.
கொலை மிரட்டல் விடுத்ததன் மூலம் ஈஸ்வரர் லால் இத்தனை நாளும் புகார் கொடுககாமல் இருந்தார்.

 தற்போது மதுரை போலீஸில் புகார் கொடுத்தார்.
மதுரை தினகரன் தீ வைப்பு சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் அட்டாக் பாண்டியின் வழக்கு நிலையில் இந்த புகார் வந்ததால் போலீசார் அதிரடியாக களம் இறங்கினர்.
திடீரென்று இன்று மாலை அட்டாக் பாண்டி வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.   தற்போது ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

குற்றச்சாட்டுக்களை மறுத்து வாதாட விரும்பவில்லை,ராஜா

ஸ்பெக்ட்ரம் ராஜா அதிரடி முடிவு

புதுடில்லி: "2ஜி' வழக்கில் என் மீதான சி.பி.ஐ., விசாரணை முடியும் வரை குற்றச்சாட்டுக்களை மறுத்து எனக்காக வாதாட விரும்பவில்லை' என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, சிறப்பு கோர்ட்டில் தெரிவித்தார். "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்கள், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டபின், குற்றச்சாட்டுகள் மீதான விவாதங்கள் அடுத்த வாரம் துவங்க உள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா , நீதிபதி ஓ.பி.சைனியிடம் கூறியதாவது: குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை வரும் போது, நான் எனக்காக வாதாட மாட்டேன். நான் அப்படி வாதாடும் பட்சத்தில் நான் தெரிவிக்கும் தகவல்களை வைத்து , சி.பி.ஐ.,. மூன்றாவது குற்றப்பத்திரிகையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, சி.பி.ஐ., விசாரணை முடியும் வரை நான் எனக்காக வாதாட மாட்டேன். இவ்வாறு ராஜா கூறினார்.

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்கு,இமானுவல் பெயரும் இந்த பட்டியலில்

புலி ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் ஐந்து நிறுவனங்களைச் சேர்ந்த 20 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் பற்றிய தகவல்கள் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளோபல் தமிழ் போரம் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய இமானுவல் அடிகளாரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வாயில் 24ற்கும் குறைவாக பற்கள் உள்ளவரை பக்கவாத நோய் தாக்குவதற்கு 60 சதவீத வாய்ப்பு


பக்கவாத நோயைத் தடுக்கும் வாழைப்பழம்

மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. தினமும்3வாழைப்பழங்களை சாப்பிட்டால், பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்றுதினம் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால், போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது.

இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் இரத்த உறைவை தடுக்கமுடியும். பிரித்தானியா மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். தினமும்1600 மில்லி கிராம் பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல்ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசிய அளவு இரத்த அழுத்த அளவை குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. இதேவேளை, வாயில் 24ற்கும் குறைவாக பற்கள் உள்ளவரை பக்கவாத நோய் தாக்குவதற்கு 60 சதவீத வாய்ப்பு அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பல் ஈறில் ஏற்படும் நோய் தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள ஹ்ரோஷிமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 358 நோயாளிகளை ஆய்வு செய்து இதை கண்டறிந்தனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் உள்ள பக்கவாத நோயாளிகளுக்கு பற்கள் குறைவாக இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்தது.

தெய்வ திருமகள் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள்

கண்களைவிட்டு அகல மறுக்கும் இயற்கை காட்சிகள், மனதை வருடும் இசை, எந்த இடத்திலும் இயல்பு மீறாத நடிகர்கள், இறுதிக் காட்சி முடிந்த பிறகும் இருக்கையோடு கட்டிப் போடும் திரைக்கதை, மனதின் நெகிழ்ச்சியை கண்களில் வழிய வைக்கும் உயிர்ப்பான இயக்கம்...

-நாம் பார்ப்பது தமிழ் சினிமாதானா என்று ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது, தெய்வத் திருமகள் படம் முடிந்ததும்.

ஹாட்ஸ் ஆஃப் விஜய்... . படத்துக்குப் படம் அதிகரிக்கும் சினிமா மீதான உங்கள் காதலை, ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே தர வேண்டும் என்ற உங்கள் வைராக்கியத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

'ஐ யாம் சாம் என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல்தான் இந்த தெய்வத் திருமகள் என்றாலும், தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படம். வக்கிர அழுக்கும் மசாலா தூசும் நிறைந்த கோடம்பாக்கத்தில் பொலிவுறத் துடைத்தெடுத்து வந்த ரவிவர்மா ஓவியம் மாதிரி அத்தனை நேர்த்தி இந்தப் படத்தில்.

மனவளர்ச்சி குன்றிய கிருஷ்ணா (விக்ரம்) வுக்கும், அவரது காதல் மனைவிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அந்தக் குழந்தை பிறக்கும்போதே தாய் இறந்துவிட, மகளை வளர்க்கும் பொறுப்பு மனதளவில் குழந்தையாகவே உள்ள விக்ரமுக்கு. நிலா எனப் பெயரிட்டு வளர்க்கிறார்.

மகள் பள்ளி செல்லும் போது வருகிறது பிரச்சினை. ஒருநாள் திடீரென்று அந்த செல்ல மகளை கிருஷ்ணாவின் பணக்கார மாமனார் தூக்கிக் கொண்டு போய்விடுகிறார். மனவளர்ச்சி குன்றியவனுடன் குழந்தையை விட முடியாது என நியாயம் பேசுகிறார்.

வழக்கறிஞர் அனுராதா துணையுடன் நீதிமன்றம் போகிறான் கிருஷ்ணா. மகளைப் பார்க்க முடியாமல் தவி்க்கிறான். இந்த பாசப் போராட்டத்திலும் சட்ட யுத்தத்திலும் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை நெகிழ வைக்கும் விதமாய் சொல்லியிருக்கிறார் விஜய்.

தமிழில் இதற்கு முன் இதே மாதிரி பெற்றால்தான் பிள்ளையா, சின்னக் கண்ணம்மா என மிகச் சில படங்கள் இப்படி வந்திருந்தாலும், இந்தப் படம் அவற்றிலிருந்து ரொம்பவே வித்தியாசப்படுகிறது. காரணம், கதையின் நாயகன்.

மனப் பிறழ்வு (autism) நோயால் பாதிக்கப்பட்ட தந்தையாக விக்ரம். இவரது நடிப்பை வர்ணிப்பது, 'இனிப்பு இனிப்பாக இருக்கிறது' என்பதைப் போன்றதுதான். தனது அடுத்த பரிமாணத்தை கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் தந்திருக்கிறார் மனிதர். இந்தக் காட்சி, அந்தக் காட்சி என பாகுபடுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு அசத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சஸன்!!

இவருக்கு அடுத்து நடிப்பில் இதயத்தைத் திருடுவது குழந்தை சாரா. அழகும் விவேகமும் நிறைந்த இந்தக் குழந்தை உண்மையிலேயே தெய்வத் திருமகள்தான் போங்கள்!

அனுஷ்காவுக்கு அருமையான வாய்ப்பு இது. அவரும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க இன்னொருவர் நம்ம சந்தானம். ஒரு வசனம் கூட எல்லைமீறாத அளவுக்கு அவரை சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.

குழந்தையின் சித்தியாக வருகிறார் அமலா பால். அழகாக வந்து போகிறார். எம்எஸ் பாஸ்கர், நந்தகுமாராக வரும் கிஷோர், சச்சின் கெடேகர், குறிப்பாக நாசர் என அனைவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.

நீதிமன்றக் காட்சிகள் வெகு யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. கடைசி காட்சியில் நாசரின் முடிவான பதிலுக்காக பக்பக் இதயத்தோடு நீதிபதியே காத்திருக்க, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், அப்பாவும் மகளும் சைகையால் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் காட்சியில் அழாத கண்களில் கண்ணீர் வற்றிவிட்டதென்று அர்த்தம்!

ஜீவி பிரகாஷின் இசை உண்மையிலேயே பிரமாதம். இப்போதுதான் அவர் காட்சிகளை உணர்ந்து இசை தருகிறார். தந்தை பாடும் தாலாட்டில் இசையும் முத்துகுமாரின் வரிகளும் அற்புதம். அந்த கதை சொல்லும் பாடலை படமாக்கிய விதம், விஜய்க்குள் இருக்கும் சூப்பர் ஆக்ஷன் பட ஆர்வத்தைக் காட்டுகிறது.

விஜய்யின் இன்னொரு வலது கரமாக நீரவ்ஷா. ஏசி இல்லாத தியேட்டரில் கூட ஊட்டியின் குளிரை வரவழைத்துவிடுகிறார் நீரவ்.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால்.... காட்சிகள் மெதுவாக நகர்வது, முதல் பாதியில் வரும் நீளமான சில காட்சிகள். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே படம் பார்க்கும் ரசிகனை கதைக்குள் ஈர்த்துவிடுகிறார் விஜய். அதன்பிறகு அந்த ரசிகன் எழுந்திருப்பது 'எ பிலிம் பை விஜய்' என்ற எழுத்துக்கள் ஒளிரும்போதுதான்.

அந்தக் காட்சியில் அத்தனை பேரும் பேதமின்றி கைதட்டியது, விஜய்யின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.

கமர்ஷியல், க்ளாஸிக் என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்!

வெள்ளி, 15 ஜூலை, 2011

Jaffna யுவதியை கத்தியால் குத்தி, தீயிட்டு கொளுத்திய இளைஞன்!

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பாடசாலையின் ஆரம்ப பிரிவுக்கு முன்னால் யுவதி ஒருவரை இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி தீ மூட்டி கொலுத்தியுள்ளார். பாடசாலையில் கல்வி கற்கும் உறவினரின் பிள்ளையை அழைத்து வருவதற்காக இன்று பிற்பகல் 2.10 மணியளவில் பாடசாலைக்கு குறித்த யுவதி சென்றுள்ளார்.

இதன் போது அங்கு வந்த இளைஞன் அருகில் இருந்த கடையில் உள்ள கத்தியை எடுத்து யுவதியின் வயிற்றில் குத்தியுள்ளதோடு கழுத்தையும் அறுத்துள்ளார்.
இதனையடுத்து நிலத்தில் வீழ்ந்த யுவதியை தான் கொண்டு வந்த பெற்றோலை ஊற்றி தீயிட்டு கொளுத்தி தானும் அந்த உடல் மீது வீழ்ந்து எரிந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 28 வயதுடைய அகிலா என்ற குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ளதாகவும், பெண்ணின் காதலான மற்றைய நபருக்கும் இடையிலான வாக்குவாதத்தின் இறுதியில் அந்தப் பெண் கத்தியால் வெட்டப்பட்டே எரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 
அவர்களில் மிகமோசமாக எரிந்த நிலையில் காணப்பட்ட பெண் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடிவேலு -செல்வகுமார் மிரட்டல் - மோசடி :

நடிகர் வடிவேலுவின் மேனேஜர் சங்கர் நேற்று முன் தினம் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார்.

அப்புகார் மனுவில்,’ரூ.45 லட்சம் பணம் கேட்டு, வடிவேலுவை  ஒரு இணையதள ஆசிரியர்  செல்வகுமார்  போனில் பேசி மிரட்டுகிறார். மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடத்த ஒப்புக்கொண்டுவிட்டு வரவில்லை என்றும் இதற்காக பணம் தரவேண்டும்.


இல்லாவிட்டால் இணைய தளத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் அந்நபர் அடிக்கடி மிரட்டுகிறார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வடிவேலு மீது இணையதள ஆசிரியர் செல்வகுமார் மோசடி புகார் மனு அளித்துள்ளார்.

அப்புகார் மனுவில், ‘’நடிகர் வடிவேலு மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவுக்கு வருவதாக முன்பணம் பெற்றார். 2007-ம் ஆண்டு மலேசியாவை சேர்ந்த மைக்கேல் கானாவிடம் ரூ.4 லட்சம் வாங்கினார். அந்த பணத்தை இன்றுவரை திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்.

இந்திய தூதரகம் மூலமும் வடிவேலுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும் பயன் இல்லை. கலைநிகழச்சிக்கு வடிவேலு போகாததால் ரூ.1 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வடிவேலு மீது புகார் அளிக்க எனக்கு பொது அதிகாரபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் புகார் அளிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

புலன்பெயர்ந்ததுகளுக்கு முரளிதரன் கண்டனம்!இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?

 தங்களது சுயநலத்துக்காக, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் போய் தஞ்சமடைந்துள்ள சிலர், தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக நடந்து வருகின்றனர். இவர்களது வலியுறுத்தலுக்குப் பயந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தால் கடும் விளைவுகளை கிரிக்கெட் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

  இலங்கைக்கு கிரிக்கெட் ஆடப் போகக் கூடாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை அங்குள்ள தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் பயணத்தை ரத்து செய்வது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுயள்ளது.

2வது தி ஏஜ் பத்திரிக்கை நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பு. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்குப் போகலாமா என்று கேட்டு வெளியான அந்தக் கருத்துக் கணிப்பில், 81 சதவீதம் பேர் போகக் கூடாது என்று  தெரிவித்துள்ளனர். இதனால்தான் இலங்கைக்குப் போவதை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.

ஆகஸ்ட்6ம் தேதி தொடங்கவுள்ள தொடரில் ஐந்து ஒரு நாள் போட்டி, 2 டுவென்டி 20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், முரளிதரன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் புறக்கணிப்பு முடிவு குறித்து முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதேசமயம், ஒரு நாட்டுடனான கிரிக்கெட் உறவைத்

துண்டிப்பது, புறக்கணிப்பது என்பது தவறான முடிவாகவே இருக்கும்.அதனால் பல கடுமையான விளைவுகளை அந்த விளையாட்டு சந்திக்க நேரிடும்.

அரசியல் வேறு, விளையாட்டு வேறு. இன்று இலங்கை, நேற்று பாகிஸ்தான், ஜிம்பாப்வே என்று ஆஸ்திரேலியா அணி தனது புறக்கணிப்பை தொடருமானால், நாளை அது சில நாடுகளுடன் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதனால் கிரிக்கெட் செத்துப் போகும். ஐபிஎல் போட்டிகள் தலை தூக்கி முன்னணி இடத்தைப் பிடிக்கும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும், சில தமிழர்களே இந்த செயல்களுக்குப் பின்னணியில் உள்ளனர். தாயகத்திற்குத் திரும்ப முன்வராத அவர்கள் தங்களது சொந்த நாடான இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். சுயநலத்துடன் அவர்கள் செயல்படுகின்றனர்.

இலங்கை அணி இங்கிலாந்தில் விளையாடியபோது மைதானத்திற்குள்ளும் புகுந்து அவர்கள் பிரச்சினை ஏற்படுத்தினார்கள். மைதானத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தினர்.

ஆனால் இவர்கள் எல்லாம் தங்களது சுயநலத்திற்காக செயல்படக் கூடியவர்கள். இவர்களால் இலங்கைக்கு எந்தவிதப் பிரச்சினையும் வராது என்றே நான் கருதுகிறேன். வேறு ஒரு நாட்டில் புகலிடம் பெற்று வாழ்ந்துவரும் இவர்கள் சொந்த நாட்டுக்கு எதிராக செயல்படுவது கண்டனத்துக்குரியது என்றார் முரளிதரன்.

இதற்கிடையே, இலங்கை பயணம் குறித்து ஆஸ்திரேலிய அரசிடம் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எனது தம்பிகளுக்கும் நீ உடன்பட வேண்டும் என்று கூறினார் எனது கணவர்.சித்திரவதைக்குள்ளான இரு பெண்கள் போராட்டம்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்களது கணவர்களின் தம்பிகள் கொடுத்த செக்ஸ் தொல்லையைப் பொறுக்க முடியாத இரு பெண்கள் இணைந்து போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கடையை அடுத்த மணியாரங்குன்று பகுதியை சேர்ந்தவர் ராஜையன். இவரது மூ்த்த மகன் பெயர் தாஸ். இவருக்கும், 27 வயதான இந்து என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்புதிருமணம் நடந்தது. ஆனால் 6 மாதத்திலேயே பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்த நிலையில் தனது சீர்வரிசைப் பொருட்களை கணவர் வீட்டாரிடமிருந்து மீட்டுத் தரக் கோரி புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் இந்து. இது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தாஸின் தம்பி சேகருக்கு, சுஜி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். இவர்களின் திருமண வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 20 நாள் கூட ஆகாத நிலையில் கணவரை விட்டுப் பிரிந்தார் சுஜி.

இந்த நிலையில் இந்தஇருவரும் சேர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் தங்களது கணவர் வீட்டார் மீது பரபரப்பு செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். நேற்று மாலை இந்துவும், சுஜியும் புதுக்கடை மணியாரங்குன்றுக்கு சென்று தங்கள் கணவன்மார்களின் வீடு முன்பு திடீர் சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இரு பெண்களின் உறவினர்களும் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் குறித்து இந்து கூறுகையில்,

எனது கணவருக்கு 3 தம்பிகள் உள்ளனர். அவர்களுடன் சேர்ந்து நல்லபடியாக குடும்பம் நடத்த வேண்டும் என்று கல்யாணத்திற்குப் பின்னர் கூறினார்.நானும் கூட்டுக் குடித்தனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் பின்னர்தான் தெரிந்தது, தன்னைப் போலவே தனது தம்பிகளுடனும் நான் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் என்று. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

எனது கணவரின் தம்பிகளும் என்னை அண்ணியாக நினைக்காமல் தவறாக நடக்க முயன்றனர். இதுகுறித்து கணவரிடம் கூறியபோது அதில் என்ன தவறு உள்ளது என்றார். இருந்தால் இரு, இல்லாவிட்டால் போய் விடு என்று மிரட்டினார். அவரது தம்பிகளும், அவர்களின் தங்கை பிரியாவும் சேர்ந்து என்னை அடிக்கவும் செய்தனர்.

இதையடுத்து எனது பெற்றோரிடம் முறையிட்டேன். அவர்கள் பெரியவர்களுடன் வந்து சமரசம் செய்து வைத்தனர். ஆனால் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே எனது கணவரின் 3வது தம்பி என்னை பலவந்தப்படுத்த முயற்சித்தார். ஆடைகளை கிழித்தார். இதனால் கத்தி சத்தம் போட்டேன். அக்கம் பக்கத்தினர் கூடியதால் ஓடி விட்டார்.

இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே மாவட்டஎஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அதற்கும் பலன் இல்லை என்றார்.

சுஜி கூறுகையில், முதலிரவின்போது எனது தம்பிகளுக்கும் நீ உடன்பட வேண்டும் என்று கூறினார் எனது கணவர். இதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். மறு நாள் அவரது தம்பி விஜி என்னிடம் அசிங்கமாகப் பேசினார். வெளியில் நின்றால் யாருக்காக காத்திருக்கிறாய் என்பார். கேவலமாக பேசினார். எனது கணவரும் அவருடன் இணைந்து என்னை அசிங்கமாகப் பேசினார். இதனால்தான் நான் பிரிந்து வந்து விட்டேன்.

எங்களது சீர்வரிசைப் பொருட்களை அவர்கள் தர வேண்டும்.அது வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்றார். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

sai samadhi open சாய்பாபா மகாசமாதி திறப்பு: குவியும் பக்தர்கள்



புட்டபர்த்தி: பிரஷாந்தி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சத்யசாய் பாபாவின் மகாசமாதி பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. பாபாவின் சமாதியைப் பார்க்க பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஸ்ரீ சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி உயிர் இழந்தார். அவரது ஆசிரமமான பிரஷாந்தி நிலையத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மகாசமாதி கட்டப்பட்டுள்ளது.

சாய்பாபா உயிரோடு இருக்கையில் ஒவ்வொரு குருபூர்ணிமா தினத்தன்றும் பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கம். அதனால் பாபாவின் மகாசமாதி குருபூர்ணிமா தினமான இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

பாபாவின் சமாதியை தரிசிக்க பெருந்திரளான பக்தர்கள் வந்திருந்தனர். அப்போது சமாதி அருகே ஒரு பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாம்பு சிறிது நேரத்தில் தானாகவே சென்றுவிட்டது.

முன்னதாக சாய்பாபா இறந்த அன்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சபாயாவின் வீட்டுக்கும் ஒரு பாம்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாபாவின் சமாதி திறக்கப்பட்டதில் இருந்தே அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா சாய்பாபா பற்றி ஒரு படம் எடுக்கிறார். அவர் இன்று புட்டபர்த்தியில் படபிடிப்பைத் துவங்குகிறார்.

Japan closing nuclear அணு மின்சாரம் கைவிட ஜப்பான் முடிவு

ஜப்பானில் புகுஷிமா அணுஉலைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது. விபத்து 4 ஆண்டுகளான பிறகும், கதிரியக்க கசிவு நின்றபாடில்லை. இதனால் சுவாசிக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கூட கதிரியக்கம் கலந்து உள்ளது.

இதனால் அணுமின் நிலையங்களை மூடுவது என்ற முடிவுக்கு ஜப்பான் பிரதமர் கான் வந்து விட்டார். இதை அவர் புகுஷிமா அணுஉலைக்கூடத்துக்கு சென்றபோது தெரிவித்தார்.

அணுமின் உற்பத்தியை ஜப்பான் கைவிடுவது என்று தீர்மானித்து உள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அணுஉலைக்கூடங்களே இருக்காது என்று அவர் தெரிவித்தார்.

ஜப்பானில் மொத்தம் உள்ள 54 அணுஉலைக்கூடங்களில் 35 கூடங்கள் மூடப்பட்டு விட்டன. மீதி நிலையங்களையும் மூடி விட்டால் மின்சார பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் கூறினார். அணுசக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்போது அதில் நிறைய அபாயம் உள்ளது.

அதை பாரம்பரிய பாதுகாப்பு முறைகளை கொண்டு தடுக்க முடியாது. அதனால் நாம் அணுமின்சக்தியை நம்பி இருக்காத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அணுமின்சக்தி இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு கால கெடு எதுவும் விதிக்க முடியாது.என்றும் அதை படிப்படியாக தான் கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார்.

விவசாயிகள் மீது தடியடி : ஜெ’வின் பேயாட்சி!

விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்-3 அல்லவா!
விவசாயிகளின் மீது தடியடி - ஜெயலலிதாவின் பேயாட்சி
விவசாயிகளின் மீது தடியடி - ஜெயலலிதாவின் பேயாட்சி
திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் விளையும் நெல்லை விற்பனை செய்யப் போதுமான அளவிற்கு நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையங்கள் அம்மாவட்டங்களில் திறக்கப்படுவ தில்லை. இதனால், அம்மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் வேறு வழியின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாகத்தான் நெல்லை விற்று வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல்லுக்கு அரசு நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை கிடைக்காது. வியாபாரிகள் கூட்டணி கட்டிக்கொண்டு தீர்மானித்துச் சொல்லும் விலையில்தான் நெல் மூட்டைகளை விற்க முடியும். சட்டபூர்வமாக நடந்துவரும் இந்தக் கொள்ளையை விவசாயிகள் தட்டிக் கேட்க முயன்றால், போலீசின் குண்டாந்தடியும் பொய் வழக்கும்தான் அவர்கள் மீது பாயும். இந்த அநியாயம்தான் கடந்த ஜூன் மாதம் 2ஆம் தேதி விழுப்புரத்திலும் நடந்தது.
விழுப்புரம் நகரில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினமும் ஏறத்தாழ 2,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த ஜூன் 2 அன்று வழக்கத்தைவிட அதிகமாக நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. 75 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 750 ரூபாயிலிருந்து 825 ரூபாய் வரை விற்பனையாகும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அன்று 75 கிலோ மூட்டைக்கு ரக வாரியாக 360 ரூபாய் முதல் 639 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் அறிவித்தனர்.
தவிட்டின் விலையைவிட நெல்லின் விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதைக் கேட்ட விவசாயிகள் கொதித்துப் போனார்கள். நெல் மூட்டைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, அதிகாரிகளும் வியாபாரிகளும் கூட்டணி கட்டிக் கொண்டு தம்மிடம் பகற் கொள்ளை அடிக்க முயலுவதைப் புரிந்து கொண்ட விவசாயிகள், நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீசு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்திறங்கிய போலீசு பட்டாளம், பிரச்சினையைப் பேசித் தீர்ப்பதற்கு முயலாமல், விவசாயிகளை அடித்துத் துரத்தியது.
விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் நெல்லை, வியாபாரிகள் அதிகாரிகள் துணையோடு நேரடி கொள்முதல் விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடிக்கும் மோசடித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், விவசாயிகள் விழிப்பு உணர்வு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன். “திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 30 இலட்சம் டன் நெல்லை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் கொள்முதல் செய்கின்றனர். சராசரியாக ஒரு குவிண்டாலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட 200 ரூபாய் குறைவாக விலை வைத்தாலே, விவசாயிகளுக்கு 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக’’க் கூறுகிறார், அவர். விவசாயிகளுக்கு ஏற்படும் இந்த இழப்பு வியாபாரிகளுக்குக் கொள்ளை இலாபமாக, அதிகாரிகளுக்கு இலஞ்சமாகப் போய்ச் சேருகிறது.
ஜெயா பதவியேற்றவுடனேயே, “விவசாய உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்து, விவசாயத்தில் மகத்தான மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக” அறிவித்தார். ஆனால், விழுப்புரத்தில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி போராடிய ‘குற்றத்திற்காக’ ஆறு விவசாயிகள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் தள்ளியிருக்கிறது, அவரது அரசு.
விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர், “இது ஒன்னும் பழைய காலம் இல்லடா” எனச் சொல்லி அடித்தாராம். ஆம், இது இருண்ட காலம் அத்தியாயம்3 அல்லவா!

கோவையில் கல்லால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள், நட்ட நடு ரோட்டில் 4 குடிகாரர்கள் சேர்ந்து



கோவையில் பட்டப்பகலில் நட்ட நடு ரோட்டில் 4 குடிகாரர்கள் சேர்ந்து இன்னொரு சக குடிகாரனை ஓட ஓட விரட்டி கல்லால் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்தக் காட்சியும் அங்கே இருந்த காவல்துறையின் விடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. அருகில் சிக்னலில் காத்திருக்கும் மக்கள் அப்படியே பார்த்தவாறு கடந்து செல்கிறார்கள். குண்டு வெடிப்பையும், கலவரத்தையுமே கடந்தவர்களாயிற்றே?!
இறந்த போன குடிகாரரின் குடும்பத்தினர் அரசு உதவித் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கேட்டும் கோரிக்கை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அரசு வேலை என்றால் – டாஸ்மாக்கிலா?! வர வர நம்ம மக்களின் எதிர்பார்ப்புக்கு எல்லையே இல்லாமல் போய் விட்டது. குடிகாரக் கும்பலுக்குள் அடித்துக் கொண்டதில் சாராயம் விற்ற குற்றத்திற்காக அரசு நஷ்ட ஈடும், வேலையையும் வழங்க வேண்டுமா? நாக்கு வெட்டி வேலை வாங்கியதற்கும் சற்றும் குறைவில்லாத கோரிக்கை இது!
ஊடகங்களையும் இந்த விஷயத்தில் குற்றம் சாட்ட வேண்டும். காவல்துறை விடியோவை அப்படியே ஒளிபரப்பி பரபரப்பைக் கூட்டிக் கொண்டிருக்கின்றன. சினிமாவை விட டி.வி.க்கு தான் சென்சார் தேவை போலருக்கிறது

வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி ‘வாய்தா ராணி’இந்த முறை என்ன செய்ய?

போன தடவை ஆட்சியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக பிசாத்து 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 27-ம் தேதி கர்நாடக கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடவே உடன்பிறவாச் சகோதரியையும் அழைத்துச் செல்ல வேண்டுமாம். இது நாள் வரை பல காரணங்களை புதிது புதிதாக கண்டுபிடித்து வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி ‘வாய்தா ராணி’ என்ற பெயரும் புகழும் பெற்று விட்ட ஜெ. இந்த முறை என்ன செய்யவிருக்கிறார் என்று பார்ப்போம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 87 பேர் பல்டியடித்தனர்.ஜெயலலிதா வருமானத்துக்கு மீறி ஸி66 கோடி சொத்து

பெங்களூர் கோர்ட்டில் 27ம் தேதி ஆஜராக ஜெயலலிதாவுக்கு சம்மன்



சென்னை : ஆட்சியில் இருந்தபோது வருமானத்துக்கு மீறி ஸி66 கோடி சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. ஜெயலலிதா 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார். அப்போது, வளர்ப்பு மகனுக்கு ஆடம்பர திருமணம், அப்போதைய அமைச்சர்கள் சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ஜெயலலிதா முதல்வராக இருந்த 5 ஆண்டு காலத்தில் ஸி66 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குத் தொடர்ந்தனர். ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன்பின் 2வது குற்றவாளியாக சசிகலா, 3வது குற்றவாளியாக இளவரசி, 4வது குற்றவாளியாக சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்த, சென்னையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன்பின், 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அதைத் தொடர்ந்து அரசு சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 250 பேர், தொடர்ந்து பல்டி அடித்து வந்தனர்.

இதனால் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், 2003ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில், டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கிய, உச்சநீதிமன்றம் பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, 2004 பிப்ரவரி 14ம் தேதி பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக பச்சாபூரே இருந்தார்.

இதற்கிடையில் நீதிபதி பச்சாபூரே பதவி உயர்வு பெற்று சென்றார். பின் மனோலி என்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது. கடைசியாக இப்போது நீதிபதி மல்லிகார்ஜூனா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு சாட்சிகள் பல்டி அடித்ததாலும், பலர் இறந்து விட்டதாலும் முக்கியமான 45 சாட்சிகளிடம் மட்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. இப்போது வழக்கின் விசாரணை முழுவதும் முடிந்து விட்டது. இதன்மூலம் 14 ஆண்டு பயணத்துக்கு பின்னர் சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மட்டும் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313வது விதிப்படி அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று அரசு வக்கீல் ஆச்சார்யா மனு தாக்கல் செய்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 36 முறை மனு செய்துள்ளனர். அவர்கள் ஆஜராகாமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்று ஆச்சார்யா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று இவ்வழக்கு விசாரணை துவங்கியதும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஸ்வரலு நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவிடம் மனு அளித்தார். அதில், இவ்வழக்கில் தொடர்புடைய ஆடிட்டர் பாலாஜியிடம் மறுவிசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நாங்கள் அளித்த மனு மீதான விசாரணையில் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. அத்தீர்ப்பு இவ்வழக்கு விசாரணைக்கு முக்கியமானதாக கருதுகிறோம். எனவே, விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டுமென்று கோரினார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமார் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால் சாட்சிகள் மறுவிசாரணை செய்யப்பட வேண்டும். எனவே, இவ்வழக்கு விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதற்கு அரசு வக்கீல் ஆச்சார்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கை தாமதப்படுத்த வேண்டுமென்றே எதிர்தரப்பினர் இவ்வாறு கூறுகின்றனர் என்றார். வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி 313&1(பி) பிரிவில் அவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறவேண்டியுள்ள நிலையில்தான் தற்போது வழக்கு உள்ளது என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டுமென்று உத்தரவிட்டார்.

கடந்த மாதம் நடந்தது என்ன? வழக்கை முடக்க நடந்த முயற்சி முறியடிப்பு

பெங்களூர் : பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கை முடக்க எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு நீதிதேவதையின் பார்வை வழக்கில் திரும்பியுள்ளதாக வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்தன. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியாக சம்பந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவிடம் அவர் சீலிடப்பட்ட உறையை அளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் 173(8) பிரிவின்கீழ் மறுவிசாரணை நடத்த வேண்டும். அதற்கு அனுமதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார்.அரசு வக்கீல் கவனத்துக்கு கொண்டுவராமல் இதுபோன்று நேரடியாக நீதிபதியிடம் கோரிக்கை கடிதம் அளித்தது ஏன் எனக்கேட்ட நீதிபதி அதுகுறித்து விளக்கமளிக்க சம்பந்தத்திடம் உத்தரவிட்டார்.

ஜூன் 18ம் தேதி அதுகுறித்து விளக்கமளித்த விசாரணை அதிகாரி நேரடியாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது தவறு எனக்கூறி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நீதிபதி விசாரணை அதிகாரியை கண்டித்து அவர் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்தார்.  ஜெயலலிதா மீதான ஓட்டல் வழக்கு ஒன்றில் மறுவிசாரணை ஏற்கப்பட்டு அவ்வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டும் வழக்கறிஞர்கள் அதுபோன்ற முயற்சியே பெங்களூர் தனிநீதிமன்றத்திலும் நடந்தது. ஆனால், வழக்கை முடக்க எடுத்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. ஜெயலலிதா ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டதன்மூலம் நீதி தேவதையின் பார்வை வழக்கின் பக்கம் திரும்பியுள்ளது என்கின்றனர்.


சொத்துக்குவிப்பு வழக்கு இன்று வரை

= வழக்கு ஆவணங்கள் கேட்டு ஜெயலலிதா தரப்பில் 2010 மார்ச் 23ம் தேதி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

= அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, வழக்கு தொடர்பான ஆவணம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் முக்கிய சாட்சிகளுக்கு 1997லேயே வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் வழங்க வேண்டிய அவசியமில்லை. வழக்கை தாமதப்படுத்த குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில், பல குறுக்கு வழிகள் பின்பற்றப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளாமல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, விசாரணையை விரைவில் முடிக்க வழி காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

= சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்கள் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்துள்ளதில் குளறுபடி உள்ளதால், மறு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

= ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு ஆவணங்கள் தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பல தவறுகள் இருப்பதால், மறு மொழி மாற்றம் செய்ய வேண்டும். மொழி மாற்றம் செய்த பின் அரசு வழக்கறிஞர், எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகள் முன்னிலையில் பரிசீலனை செய்து அவர்கள் ஏற்றுகொண்ட பின்னால் சாட்சிகள் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

= ஆவணங்கள் மொழி மாற்றம் செய்துள்ளதில் சில இடங்களில் லேசான தவறு நடந்துள்ளது உண்மை தான். அதற்காக மொத்த ஆவணங்களையும் மறு மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. தவறு நடந்துள்ளதை சரிப்படுத்த வசதி செய்யப்படும். தவறுகளை சரி செய்ய திறமையான மொழி பெயர்ப்பாளர் நியமனம் செய்யப்படும். அவர்களுடன் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் சாட்சிகளை உடன் வைத்து ஒப்புதல் பெறப்படும் என்று கூறி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ரூ.66.65 கோடி சொத்து விவரம்

1. கோடநாடு நிலம்
2. ஐதராபாத் தோட்டம்,
கட்டிடம்
3. சிறுதாவூர் நிலம், பங்களா
4. நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சேராகுளம், மீரா குளம் அருகே சொத்து
5. தி.நகர்
6. அண்ணாநகர்
7. அபிராமபுரம்
8. மயிலாப்பூர்
ஆகிய இடங்களில் அசையா சொத்துக்கள். தவிர நகைகள், கார்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள பொருட்கள்.

1500 சாட்சிகள்

சொத்து குவிப்பு வழக்கில் மொத்தம் 1500க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 259 பேர் மட்டும் விசாரிக்கப்பட்டனர். 2வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் 87 பேர் பல்டியடித்தனர். அதனால் வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பின் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 87 பேர் பட்டியல் என்பது 45 ஆக குறைக்கப்பட்டது. அதில் 25 பேர் அரசு ஊழியர்கள். மற்றவர்கள் சொத்துக்களை விற்பனை செய்தவர்கள்.

விசாரணை காலம் நீண்டது

 பெங்களூர் தனி நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு மே 3, 7, 25ம் தேதிகளிலும் ஜூன் 2, 14, 26ம் தேதிகளிலும் வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உடல்நலம் உள்ளிட்ட காரணங்களை காட்டி விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் வழக்கின் விசாரணை காலம் நீண்டது.


14 ஆண்டுகளாக நடக்கும் வழக்கு

1991முதல் 1996ம் ஆண்டுவரை நடந்த ஆட்சியின்போது சொத்து சேர்த்த வழக்கு இது. 1997ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு வழக்கு நடந்து வந்தது. 2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின் 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விசாரணை தொடங்கியது. அதன்பின் பல முறை அவர்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி மனு தாக்கல் செய்த வண்ணம் இருந்தனர்.

அதில் 7 ஆயிம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தமிழில் மாற்றித் தரவேண்டும் என்றனர். அதற்கும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. பின் வக்கீல் மாறியதால், தள்ளி வைக்க வேண்டும், உடல் நிலை சரியில்லை என்று பல்வேறு காரணங்களைக் காட்டி தள்ளி வைக்கப்பட்டே வந்தது. இப்போது இறுதியாக ஜெயலலிதா ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவு போட்டபின் விவாதம் இல்லை ஜெயலலிதா வக்கீல் கோரிக்கை நிராகரிப்பு

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து விளக்கம் பெறவேண்டிய சட்டப்பிரிவு குறித்து விவாதம் நடத்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அது நிராகரிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 27ம் தேதி ஆஜராக தனிநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்பார்க்காத எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜெயலலிதாவை மட்டுமாவது ஆஜராவதிலிருந்து தவிர்க்க வைக்க அவர்கள் தீவிரமாக முயன்றனர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், Ôஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து விளக்கம் பெறுவது குறித்த 313&1(பி) பிரிவு குறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் சில திருத்தங்களை கூறியுள்ளது. அது எங்களுக்கும் பொருந்தும். அதுகுறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும்Õ என்றார். Ôகுற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக உத்தரவு பிறப்பித்த நிலையில் இதுபோன்று விவாதிக்க அனுமதிக்க முடியாது. மேலும், விவாதத்துக்காக நீங்கள் முறையாக விண்ணப்பிக்கவில்லை. எனவே, இதனை ஏற்கமுடியாதுÕ என்று நீதிபதி தெரிவித்தார்.

45 பேரிடம் மறு விசாரணை

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 259பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் 45 பேரிடம் மறு விசாரணை நடத்த வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.  அவர்களிடம் மார்ச் 18ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை மறு விசாரணை நடைபெற்றது. 45 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். ஒருவரிடம் விசாரணை தேவையில்லை என்று அரசு தரப்பே நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனவே, 42 பேரிடம் மட்டுமே மறுவிசாரணை நடந்தது. தினமும் ஐந்துபேரிடம் மறுவிசாரணை நடைபெற்றது. பெங்களூரில் விசாரிக்கப்பட்ட முக்கிய சாட்சிகள் விவரம்:

எஸ்.ராதகிருஷ்ணா, எம்.சுப்பையா, எம்.வேலாயுதம், மாரியப்பன், ஏ.ஜெயபால், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, ஜெரால்ட் வில்சன், ஆர்.ராஜேந்திரா, பார்த்தசாரதி, வீரபாகு, வி.பாஸ்கரன், முகமது யாசூப், ஜெயராமன், என்.கிருஷ்ணமூர்த்தி, திருத்துவராஜ், எஸ்.எஸ்.ஜவஹர், கே.டெல்லிராஜன், கே.கதிரேசன், அமானுல்லா மரைக்காயர், சி.சிவா, வி.அய்யாதுரை, ஜேம்ஸ்பெட்ரிக், எம்.எம்.ஜெ.நேசமணி, சோமசுந்தரம், பிரசாத், நாகேஷ்வரராவ், சிவாஜிராவ், ஜி.கோபிநாத், மணி (எ)மாறன், மதன்லால், மோகன், சுப்பராஜ், ஜி.என்.கோபால்ரத்தினம், எம்.ஸ்ரீஹரி, ஆர்.ரமேஷ், ஏ.வின்சன்ட், சலபதிராவ், கிரிசந்திரன், அஜீத் அகமது, எம்.வி.பாலாஜி, அனந்தபத்மநாபன்.

விடுவிக்க கோரிய மனுக்கள் தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி கேசவநாராயண் 2010 மார்ச் 18ல் தள்ளுபடி செய்தார். பெங்களூர் தனி நீதிமன்றத்தில் இதேகோரிக்கையை வைத்த ஜெயலலிதாவின் மனு 2010 ஏப்ரல் 22ல் தள்ளுபடியானது.

மொழிபெயர்ப்பு குளறுபடிகள்

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சாட்சி ஆவணங்கள் மொழிபெயர்ப்பில் குளறுபடி உள்ளதாக கூறப்பட்டு விசாரணை நீட்டிக்கப்பட்டது.
2010 ஜூலை 21ல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆவணங்கள் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றை சரிசெய்ய கோரிக்கை விடப்பட்டது. இம்மனுவை தனி நீதிமன்றம் நிராகரித்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு செய்து மொழிபெயர்க்க அனுமதி பெறப்பட்டது.

வழக்கு ஆவணங்களை தமிழில் பெயர்க்க வழக்கறிஞர் ராஜ்கோபால் நியமிக்கப்பட்டார். செப்.23ம் தேதி முதல் அவர் பணிகளை துவக்கி 2011 ஜனவரியில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். அதில் 17 சாட்சிகளின் மொழிபெயர்ப்பில் தவறு உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மீதமுள்ள சாட்சியங்களை  பரிசீலிப்பதற்காக அவகாசம் கோரினார். அதற்கு அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. வழக்கு விசாரணையின்போது சிறுசிறு தவறுகளை சரிசெய்ய வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்ட யோசனையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மார்ச் 9 முதல் விசாரணை தொடர்ந்தது.

ஹோம் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுகோள்

புதுமுகங்கள் நடிக்கும் `ஒரு சொல்' என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று காலை நடந்தது. விழாவில், வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

விழாவில், சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் `கலைப்புலி' ஜி.சேகரன் பேசும்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்து சில கோரிக்கைகளை படித்தார். அந்த கோரிக்கைகள் வருமாறு:
கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கி, ஏழை-எளியவர்களுக்கு உதவியும், தனியார் ஆதிக்கத்தை ஒழித்தும், திரைப்படங்களை கள்ளத்தனமாக வெளியிடும் அடித்தனத்தை தகர்த்தெறிந்ததற்காக, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பந்தாவான பாராட்டு விழாக்கள் வேண்டாம் என்று மறுத்து, வீண் ஆடம்பரங்கள், வெட்டி செலவுகள், கால விரயம் தேவையில்லை...அவரவர் தொழிலை செம்மையாக செய்யுங்கள் என்று அறிவுறுத்திய `அம்மா'வுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
கடந்த ஒருமாத காலமாக திரையிட்ட படங்களுக்கு வரிச்சலுகை சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை இருப்பதால், `சுயதொழில்' போல் ஹோம் தியேட்டர்களை நகர்ப்புறங்கள் மற்றும் கிராமங்களில் அமைக்க அனுமதி தந்து, சிறிய தயாரிப்பாளர்கள், சிறிய வினியோகஸ்தர்கள், சிறிய திரையரங்க உரிமையாளர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று& பேசினார்.

வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு பசில் ராஜபக்ஷ அழைப்பு!

தமிழ் மக்களின் சுபீட்சத்தி லும், விமோசனத்திலும் உண் மையான அக்கறை கொண் டவர்கள் என்றால் புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் முதலீடுகளை செய்ய முன்வரவேண் டும் எனத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், நெல்லியடி சந்தை திறப்பு உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குடிநீர் மற்றும் மின்விநியோகத் திட்டங்கள், வீதி அபிவிருத்தி வேலைகள் என்பவற்றையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள யாழ்ப்பாணம் உள்ளிட்ட முழு வடமாகாணத்தையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சகல வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில் சகல உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். இதற்காக அவர்கள் நிதி முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்நாட்டு தமிழ் மக்களின் சுபீட்சத்திலும், விமோசனத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் எனின் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் இங்கு முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது அம்மக்களின் வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்தும். இதனை எவரும் மறுக்கமுடியாது.
இதைவிடுத்து தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிநாடுகளில் கூறித்திரிவதால் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது. இதனை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து செயற்படுவது மிக அவசியம்.
அரசாங்கம் தனது பொறுப்புக்களை நன்கு உணர்ந்து செயற்பட்டு வருகிறது. இந்தவகையில் பலகோடி ரூபா முதலீட்டுடன் உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அடிப்படையிலான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன.
உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட்டுவிட்டது. அப்பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளன.நெல்லியடி சந்தை மிக விரைவில் பொருளாதார மத்திய நிலையமாக மேம்படுத்தப்படும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதி, கல்வியைப்போன்று விவசாயத்துக்கும் புகழ்பெற்ற பிரதேசமாகும். யாழ்ப்பாணம் வெங்காய உற்பத்தியில் தன்னிறைவுகண்டு வருகிறது.
யாழ். குடாநாட்டின் திராட்சை, வெங்காயம் மற்றும் மரக்கறி வகைகளை தென்பகுதி சந்தைக்கு அனுப்பி வைப்பதற்கான பிரதான நிலையமாக நெல்லியடி சந்தை மாற்றியமைக்கப்படும். இந்நடவடிக்கை அடுத்துவரும் ஓரிரு வருட காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும்.
சமாதான சூழல் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப்போது வடபகுதியில் தேர்தல் நடக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஓரிரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களை ஒன்றுபடுமாறும், தங்கள் ஒற்றுமையை உலகிற்குக் காட்டுமாறும் கூறி மக்களை பிழையான வழியில் இட்டுச்செல்ல முயற்சிக்கின்றனர்.
1977 ஆம் ஆண்டு முதல் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளுக்கு தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதற்கென பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அச்சந்தர்ப்பங்களை எல்லாம் வேண்டுமென்றே அவர்கள் நழுவவிட்டார்கள்.
என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இதுதான் தமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் எனக்கூறி மக்களை தவறாக கூறி வழிநடத்தியதால்தான் தமிழ் மக்கள் அழிவுகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இந்த அழிவுகளிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் குறிப்பாக தமிழ் மக்களையும் அரசாங்கம் மீட்டெடுத்திருக்கின்றது.
அம்மக்களின் சுபீட்சத்துக்கான வேலைத்திட்டங்களையும் அரசு முன்னெடுத்திருக்கின்றது. ஆகவே இச்சந்தர்ப்பத்தில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி தமிழ் மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் இந்நிகழ்வில் அமைச்சர் பசில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

Somalia அகதிகள் குவிகின்றனர் : பசி, பட்டினியால் சாகும் அவலம்

மொகதிசு : "உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர்' என ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வறட்சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். கென்யாவில் தடாப் என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில், இந்நாடுகளைச் சேர்ந்த மக்கள் வருகின்றனர். இந்த முகாமை பார்வையிட்ட ஐ.நா.,விற்கான அகதிகள் உயர் கமிஷன் தலைவர் அன்டோனியோ கட்டர்ரஸ் கூறியதாவது: கென்யாவில் தடாப்பில் உள்ள அகதிகள் முகாமில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர். முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந்தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்துவிட்டார். முகாமில் இருப்பவர்கள் பரம ஏழைகள். 50 சதவீத குழந்தைகள் சத்து குறைபாட்டால் நோஞ்சானாக உயிருடன் போராடி, பல குழந்தைகள் இறக்கின்றன. சத்து குறைபாட்டால், பல குழந்தைகள் தோலுரிந்து காணப்படுகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளியேறி வருகின்றனர். இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவதற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்திருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா எல்லைகளில் உள்ள இடங்கள் அதிகளவில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்களும் நிறைந்துவிட்டதால், முகாம்களுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது. இவ்வாறு கட்டர்ரஸ் கூறினார். ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவு திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா.,விற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது

வியாழன், 14 ஜூலை, 2011

ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது

சென்னை : நித்யானந்தாவுடன் இருக்கும் சிடி குறித்து நிருபர்களின் சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல திணறிய நடிகை ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார். சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒரே அறையில் நெருக்கமாக இருந்த சிடிக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட பின்னர் ஒன்றரை ஆண்டுகளாக சென்னைக்கு வராமல் இருந்த ரஞ்சிதா, நேற்று திடீரென்று சென்னை வந்தார். போலீஸ் கமிஷனரை சந்தித்தார். இரவில் தி.நகர் நட்சத்திர ஓட்டலில் பேட்டியளித்தார்.

ரஞ்சிதா வந்து அமர்ந்தவுடன், எழுந்து நின்று போஸ் கொடுக்கும்படி போட்டோகிராபர்கள் கேட்டனர். 'இப்படி சொல்லி சொல்லியே என்னை தெருவுக்கு கொண்டு வந்திட்டீங்க’ என்றார் ரஞ்சிதா. பின்னர் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி என்னை பற்றி வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அதனால் எனது சுதந்திரம் பறிபோய் விட்டது. அந்த காட்சிகளை வெளியிட்ட டிவி, பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.

நான் ஒரு சாதாரண குடும்ப பெண். நடிப்பது என் தொழில்.
இவ்வாறு ரஞ்சிதா கூறினார். பின்னர் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்:

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது திடீரென ஏன் புகார் கொடுக்க தோன்றியது?

அதற்கான சூழ்நிலை இப்போதுதான் அமைந்தது. எனக்கு சட்டம் தெரியாது.

சிலருடைய தூண்டுத லின் பேரில்தான் புகார் கொடுத்ததாக பேச்சு நிலவுகிறதே?

அப்படி இல்லை.

சன் டிவி மீது சிலர் வேண்டுமென்றே புகார் கொடுக்கின்றனர். அதை பயன்படுத்தி நீங்களும் ஆதாயம் தேட முயற்சிக்கிறீர்களா?

அப்படி இல்லை.

 நித்யானந்தாவுடன் நீங்கள் இருந்த வீடியோ காட்சி உண்மை இல்லை என்கிறீர்களா?

ஆமாம். அது ஜோடிக்கப்பட்டது.

சிடியும், அதில் உள்ள காட்சிகளும் உண்மைதான் என்று கர்நாடகா நீதிமன்றத்தில் அந்த மாநில போலீஸ் நிரூபித்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதே?

அது சரியல்ல.

நீதிமன்றம் பொய் சொல்கிறது என்கிறீர்களா?

அந்த சிடியில் இருப்பது நான் இல்லை.

உங்களை பின்னால் இருந்து இயக்குவது யார்?

நானாகத்தான் இயங்குகிறேன்.

முதல்வரை சந்திக்க போகிறீர்களா?

வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன்.

உங்கள் புகாரின் நோக்கம் என்ன?

அதையெல்லாம் சொல்ல முடியாது. கமிஷனரிடம் கூறிவிட்டேன். அவர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ரஞ்சிதா கூறினார். 

இதன் பின்னரும் சிடி குறித்தும் புகார் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்டதால் அப்செட் ஆன ரஞ்சிதா பேட்டியை பாதியில் முடித்துக் கொண்டு வெளியேறினார்.

ரஞ்சிதா புகார் பின்னணி என்ன?

பேட்டியை முடித்து ரஞ்சிதா வெளியேறிய பின்னரும், அவரை பற்றிய விவாதமே நிருபர்கள் மத்தியில் நீடித்தது. சன் டிவி குழுமத்தை மட்டுமே குறை சொல்லும் நோக்கத்தையும், அதற்காகவே இவர் சென்னை வந்துள்ளதையும் புரிந்து கொண்ட  நிருபர்கள், கடந்த ஆண்டில் ரஞ்சிதா பற்றி பல தரப்பிலும் வெளியான செய்திகள் குறித்து அலசித் தீர்த்தனர்.

சாமியார் நித்யானந்தா & ரஞ்சிதா தொடர்பான சிடி கடந்த ஆண்டு டிவி சேனல்களிலும், நாளிதழ்கள் மற்றும் வாரப் பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ் சேனல்களான ஜெயா, ஜெயா பிளஸ், விஜய், ராஜ், மக்கள், பாலிமர், வசந்த், கலைஞர் டிவிகள்  மற்றும்  ஒரு டஜன் தெலுங்கு, கன்னட டிவிகளிலும், ஆங்கில சேனல்களான சிஎன்என்&ஐபிஎன், ஹெட்லைன்ஸ் டூடே, டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் நக்கீரன், தினமலர் இணையதளத்திலும் இந்த சிடி காட்சிகள் வெளியானது.

 இதில் குறிப்பாக டி.வி.9 என்ற சேனலில் ரஞ்சிதாவின் படுக்கை அறைக் காட்சிகள் பற்றிய ஒரு முழுமையான செய்தி தொகுப்பே ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதில் நடிகையின் செயல் குறித்து பலர் தெரிவித்த கடுமையான விமர்சனங்களும் இடம்பெற்றன. இவர்களை பற்றியெல்லாம் வாய் திறக்காத இந்த நடிகை, சன் டிவி குழுமம் மீது மட்டும் குறி வைத்துள்ளதை பார்க்கும்போது, யாரோ எழுதிக் கொடுத்த புகாரை எடுத்து வந்துள்ளது மட்டுமல்ல; எங்கிருந்தோ இயக்குபவர்களின் வலையில் விழுந்துள்ளார் என்பதும் தெரிகிறது.

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற தனியார் பஸ் விபத்து!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று பகல் விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.ஈரற்பெரியகுளத்திற்கு அருகில் உள்ள அவுசதப்பிடிய எனும் இடத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடாபி பதவி விலக தயார்!

லிபியா: லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதங்களாக போராட்டம் நடைபெற்றுவருகிறது.பெங்காசியை மையமாக கொண்டு போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மக்களை பாதுகாக்க நே ட்டோ படைகள் லிபியா சென்றுள்ளன.மேற்கத்திய படைகளின் தாக்குதலை எதிர்த்து வந்த கடாபி இப்போது பதவி விலக தயாரா உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து கடாபியின் அதிகாரிகள் தூதரக அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.