சனி, 27 ஆகஸ்ட், 2022

18 மாத குழந்தையை நரபலி கொடுத்த பெண்..உத்தர பிரதேசம்

 கலைஞர் செய்திகள்  : இந்தியாகுழந்தை நலமாகப் பிறக்க 18 மாத குழந்தையைப் பெண் நரபலி கொடுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்திற்குட்பட்ட மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். அவரது 18 மாத ஆண் குழந்தை திடீரென காணவில்லை. இதையடுத்து குழந்தையைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக ஒருவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை என்று தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது போலிஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கினார்

ரஞ்சன் அருண் பிரசாத்      பிபிசி தமிழுக்காக  : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சரும், இலங்கையின் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) முற்பகல் கையெழுத்திட்டிருந்தார்.
இதையடுத்து, குறித்த ஆவணங்கள் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால், அந்த ஆவணங்கள் சிறைச்சாலை திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகல்! ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

ுதுடெல்லி: காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார்.
அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார். எனினும், ராகுல் காந்தியே நிழல் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் விஷால் நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

hindutamil.in :  தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 21.29 கோடி கடன் கேட்டிருந்தார்.
இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது.
இந்த பணத்தை திருப்பி செலுத்தும் வரையில், விஷால் தயாரிப்பு நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஷால் இதையடுத்து, பணத்தை கொடுக்காமல் விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் வீரமே வாகை சூடும் திரைப்படத்தை திரையில் வெளியிட முயற்சி செய்தது.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

நான் இருக்கும்வரை பரந்தூரில் விமான நிலையம் வராது : சீமான்

மின்னம்பலம்  Prakash  : “நான் இருக்கும்வரையில் பரந்தூரில் விமான நிலையம் வர விடமாட்டேன்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதற்கு அந்த ஊரைச் சுற்றியுள்ள 12 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அதற்கு அம்மக்கள் போராட்டமும் நடத்திவருகின்றனர்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 26) காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்துக்கு நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்,

இந்தியாவின் சிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில்! நீதிக்கட்சி போட்ட விதை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் செய்திகள்  : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.8.2022) கோயம்புத்தூர், பூ.சா.கோ. (PSG) கலை அறிவியல் கல்லூரியின் பவள விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
மூன்று நாள் பயணமாக, இந்த மேற்கு மண்டலத்திற்கு வருகை தந்த நான், பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இயக்கத்தினுடைய நிகழ்ச்சிகள், அதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இப்போது இங்கே வந்திருக்கிறேன், உங்கள் கல்லூரிக்கு வந்திருக்கிறேன்.
இது ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியாக இருந்தாலும் – ஆனால் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. எல்லோலாருக்கும் பொதுவான நிகழ்ச்சியாகத்தான் நான் இதை உணர்ந்து கொண்டிருக்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பாரதிராஜாவிற்கு என்ன பிரச்சனை? நேரில் பார்த்த கவிஞர் வைரமுத்து பேட்டி

 நக்கீரன்  : இயக்குநர் பாரதிராஜா சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாரதிராஜாவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன் கடத்தல்’.. ‘1.5 கோடி அபேஸ்’.. சொந்தக் கட்சி நிர்வாகி?

tamil.oneindia.com  -  Vignesh Selvaraj  : ஈரோடு : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், தன்னை ஒரு கும்பல் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து ரூ.1.50 கோடி பணத்தைப் பறித்துச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஈஸ்வரன், தன்னை ஒரு கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தைப் பறித்து சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியவர்களில் ஒருவர் மட்டும் அடையாளம் தெரிந்ததாகவும், அவர் அதிமுக நிர்வாகி என்றும் அவர் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் பாசி நிதி நிறுவன அதிபர்களுக்கு தலா 27 ஆண்டு சிறை!

 மாலைமலர் : கோவை: திருப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற ஆன்லைன் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிதி நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி, பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை தராமல் ஏமாற்றினர். இது தொடர்பாக புகார் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
விசாரணையில் 58 ஆயிரத்து 571 பேரிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், அவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட (டான்பீட்) சிறப்பு கோர்ட்டில் நடந்தது.

இலங்கைக்கு கடன் வழங்குனர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயார்! சீனா தயாரா?

hirunews.lk  :  இலங்கைக்கு கடன் வழங்குனர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்ய ஜப்பான் தயாராக இருப்பதாக ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையை அதன் மோசமான கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து கடன் வழங்கும் நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு டோக்கியோ தயாராக உள்ளது.
எனினும் அதில் இலங்கையின் முன்னணி கடன் வழங்குனரான சீனா இணையுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அத்துடன் இலங்கையின் நிதி பற்றிய தெளிவின்மை இன்னும் உள்ளதாக ரொயட்டர் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருதரப்பு அடிப்படையில் இலங்கையின் கடன் 6.2 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் தமிழ்நாட்டில் 28 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு! ஒன்றிய அரசின் தமிழகம் மீதான பொருளாதார வன்முறை

 tamil.oneindia.com  : சென்னை  தமிழ்நாட்டில் உள்ள 28 சுங்க சாவடிகளில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் கார், வேன்களுக்கு ரூ.5 டிரக், பஸ், போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.150 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.
ஏற்கெனவே 22 சுங்க சாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 28 சுங்க சாவடிகளுக்கு மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது.
Are you a traveler at the following customs booths? Toll hike at 28 toll booths in Tamil Nadu

நீருடன் நெருப்பை உமிழும் தண்ணீர் பம்பு... மத்திய பிரதேசம் ..குழம்பித் தவிக்கும் கிராம மக்கள்!

நக்கீரன்  : நீருடன் நெருப்பை உமிழும் அடிபம்பு... குழம்பித் தவிக்கும் கிராம மக்கள்!
மக்களால் பயன்படுத்தப்படாத அடிபம்பு குழாயிலிருந்து தண்ணீரோடு தீயும் சேர்ந்து வெளியாகும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் பஜ்வாஹா அருகே உள்ள கச்சார் என்ற கிராமத்தில் அடிபம்பு குழாய் திறக்கப்பட்ட நிலையிலிருந்தது. இந்நிலையில் அதனுள்ளே இருந்து திடீரென தண்ணீர் பீறிட்டுக் கொண்டு வெளிவந்ததோடு அதனுடன் நெருப்பும் சேர்ந்து வெளியானது.
அதுவும் பள்ளி வளாகத்திற்கு அருகிலிருந்த அடிக்குழாயில் நீரும் நெருப்பும் ஒரு சேர வெளியேறியது அந்த பகுதியிலிருந்த கிராம மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு ஒன்றிய மற்றும் குஜராத் அரசுகளுக்கு நீதிமன்ற உத்தரவு

தினத்தந்தி  : பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகள் விடுவிப்பு மத்திய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பில்கிஸ் பானு கற்பழிப்பு குற்றவாளிகளை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பெருமளவில் இனக்கலவரங்கள் மூண்டன. அப்போது சிறுபான்மை இனத்தை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற 21 வயதான கர்ப்பிணியை கற்பழித்து, அவரது 3 வயது மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 7 பேரை படுகொலை செய்த கும்பலை சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி அவர்களது தண்டனைக் காலத்தை குறைத்து குஜராத் மாநில அரசு விடுவித்து விட்டது. இது நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் - கலைஞரை வீழ்த்த ஜெயலலிதா, வைகோ திருமா கம்யூனிஸ்டுகளின் .. யூஸ் அன்ட் த்ரோவான நல்ல மனிதர்

 Pugalendhi Dhanaraj : சில நடிகர்கள் ஷூட்டிங், டப்பிங் சமயங்களில் ஓரிரு டேக்கிற்கு மேல் போய்விட்டால் டென்ஷனாகி விடுவார்கள்,
அதிலும் பப்ளிக்கில் நடக்கும் ஷூட்டிங் என்றால் அவ்வளவு தான்,
அதெல்லாம் டேக் ஓகே தான் நெக்ஸ்ட் ஷாட்டிற்கு போயிடலாம் என இயக்குநரை கட்டாயப் படுத்துவார்கள்,
உண்மையில் அந்த ஷாட் நன்றாகவே வந்திருக்காது, காரணம் பொதுமக்கள் தனக்கு நடிக்கத் தெரியாது என நினைத்து விடுவார்களாம்? டப்பிங் தியேட்டரிலயே இயக்குநரிடம் ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் விஜயகாந்த் அப்படியில்லை, இன்டோரோ, அவுட்டோரோ, டப்பிங்கோ எத்தனை டேக் என்றாலும் இயக்குநர் திருப்தியாகி ஓகே சொல்லும் வரை திரும்ப, திரும்ப செய்து கொண்டே இருப்பார்.
ஷுட்டிங் ஸ்பாட் வந்து விட்டால் ஒவ்வொரு ஷாட்டிற்கும் கேரா வேனுக்குள் புகுந்து கொள்ளும் பழக்கமெல்லாம் இல்லை, ஒரு ப்ளாஸ்டிக் சேரை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கயே உட்கார்ந்து விடுவார்.

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

ஆர்.எஸ்.எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி

May be an image of 1 person and text that says 'Paying homage to the great patriot & Tamil poet Mahakavi Subramania Bharati on his 100th Punyatithi. Inspired by ancient Bharat ideals, Bharathiyar, through his powerful nationalist 'Swadeshi' and other immortal poems and writings aroused the intense pride and emotions for Bharat. A towering social philosopher Bharathiyar's fire in his thoughts and writings was rekindled among youth for the cause of freedom. Nation gratefully remembers and bows before his memory. -Dattatreya Hosabale Sarkaryavah, RSS'

  வாலாசா வல்லவன்.  :   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
 இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போலச் செய்து விட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக்கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

சொத்துக்காக தாயை விஷம் வைத்து கொன்ற மகள்.. - கேரளாவில் அதிர்ச்சி

 கலைஞர் செய்திகள்  : சொத்துக்கு ஆசைப்பட்டு மகளே தாய்க்கு விஷம் கொடுத்த கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை அடுத்துள்ள கீழூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ருக்மணி - சந்திரன் தம்பதியினர். இவர்களுக்கு இந்துலேகா என்ற ஒரு மகள் இருக்கும் நிலையில், மகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், இவர் தனது பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் வாதங்கள் நிறைவு- தீர்ப்பு ஒத்திவைப்பு

 மாலை மலர்  :   சென்னை:   அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.
அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் வாதாடும்போது, யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார் என்றும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்றும் குறிப்பிட்டார். தனி நீதிபதி ஜெயச்சந்திரன்,

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு வழக்கில் இன்று இறுதி விசாரணை

தினத்தந்தி  : சென்னை,அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்,
 "ஜூலை 11-ந்தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

குஷ்பு : மனித குலத்திற்கு அவமானம்: பில்கிஸ் பானு வழக்கு

மின்னம்பலம் : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மனித குலத்திற்கும், பெண் இனத்திற்கும் அவமானம் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தின் போது 21 வயதான பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 11 குற்றவாளிகளுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2002, ஜனவரி 21-ம் தேதி ஆயுள் தண்டனை விதித்தது.
இவர்கள் கோத்ரா கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 15 ஆண்டுகள் இவர்கள் சிறைவாசம் அனுபவித்ததால், தண்டனை குறைப்பு கொள்கையின்படி, குற்றவாளிகள் 11 பேரும் கோத்ரா சிறையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

புதன், 24 ஆகஸ்ட், 2022

இலங்கையில் LGBQT உரிமைகளை அங்கீகரிப்பதற்கான திருத்த சட்டமூலம்


madawalaenews.com : இலங்கையில் LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான  சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் பிரேம்நாத் சி டோலவத்த எம்.பி  சமர்ப்பிக்க உள்ள நிலையில் அதன் நகலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்  அவர் கையளித்துள்ளார்.
அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் LGBTQ+ சமூகம் அனுபவிக்கும் துன்புறுத்தல்களைத் தடுப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலத்தின் மற்றுமொரு நோக்கம் இலங்கையை நவீன உலகிற்கு இணையாக மாற்றுவது எனவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் ., வீட்டு மொய் விருந்தில் ரூ.10 கோடி வசூல்

latest tamil news

தினமலர் : தஞ்சாவூர்: தஞ்சாவூர், பேராவூரணி தி.மு.க., எம்.எல்.ஏ., வீட்டில் நடந்த மொய்விருந்து, காதணி விழாவில் 10 கோடி ரூபாய் அளவிற்கு மொய் பணம் வசூலான நிலையில், அப்பகுதியில் இவ்விவகாரம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு,மாங்காடு,கீரமங்கலம், ஆலங்குடி வரை மொய் விருந்து தடப்புடலாக நுாறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில், வசதிக்கு ஏற்ப உணவு மொய் செய்வார்களுக்கு பரிமாறப்பட்டது. ஆனால் தற்போது மொய் விருந்து என்றால், கிடா வெட்டி கறிக்குழம்பு சமைத்து அசைவ விருந்து வைப்பது தான் முறையாக மாறி விட்டது.

பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !

கலைஞர் செய்திகள் -ரேஷிமா  : 22 வருடமாக பா.ஜ.க மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி கோவையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் முன்னணியில் திமுகவில் இணைந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 50,000 பேர் இணையும் விழா நடைபெற்று வருகிறது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைகின்றனர்.
‘பாஜக ஒரு விஷம்.. அங்க பாதுகாப்பில்லை’ : முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மகளிரணி செயலாளர் !
அந்த வகையில் பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி தற்போது திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்த பிறகு அவர் பேசும்போது, "கடந்த 1999 ஆம் ஆண்டு பா.ஜ.க-வில் மாவட்ட அணியின் பொதுச்செயலாளராக இருந்தேன். இப்படி படிப்படியாக பா.ஜ.க., மாநில மகளிர் அணி செயலாளராக பணிபுரிந்து வந்தேன். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக பாஜகவில் பணபடைத்தவர்களுக்கே பதவி என்று மாறியது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு- கல்வித்துறை தகவல்

மாலைமலர் : சென்னை: பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 வருடமாக மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டன. வேலையில்லாமல் வருவாய் இழப்பு ஏற்பட்டன.
வேலையின்றி வீடுகளில் முடங்கிய கூலி தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் தங்களின் குழந்தைகளை தொடர்ந்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க முடியாமல் மாற்று சான்றிதழை பெற்று அரசு, மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்தனர்.

பாரதிராஜாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ; மருத்துவமனையில் அனுமதி

நக்கீரன் : இயக்குநர் பாரதிராஜா, சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் இயக்கத்தில் கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியானது. இதனையடுத்து தொடர்ச்சியாக வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க முக்கிய ராஜ தந்திரி சமந்தா பவர் இலங்கை வருகிறார்

வீரகேசரி  - லியோ நிரோஷ தர்ஷன்  :  அமெரிக்க உதவி திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இறுதி திகதி உறுதிப்படுத்தப்படாத நிலையில் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் இவரது  விஜயம்  அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதிய பேச்சுவார்தைகள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் மற்றும் சீன கப்பலை அனுமதித்த விவகாரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை  அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள நிலையில் சமந்தா பவரின் விஜயம் அமைகின்றது.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

LGBTQIA PLUS சொல்லகராதியை வெளியிட்ட தமிழ்நாடு அரசு! இந்தியாவிலேயே முதன்முறையாக

மின்னம்பலம் - ஸ்ரீநிவாஸன்  : எல்.ஜி.பி.டி. பிரிவினரை கண்ணியமாக குறிப்பிடும் வகையிலான தமிழக அரசு வெளியிட்டுள்ள  சொல்லகராதியில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும் என  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை  குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது.
 எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 25ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.

திமுக தான் சாதுர்யமான கட்சியா? தலைமை நீதிபதி காட்டம்! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

 மின்னம்பலம் - கலை  : தி.மு.க மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம் என இலவசம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக பேசியிருக்கிறார்.
இலவசங்கள் தொடர்பான வழக்கு!
உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட கட்சிகளும் மனுத்தாக்கல் செய்துள்ளன.  இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி கேள்வி!

விடாத பிடிஆர்.. எதிர்கட்சிங்க இலவசம் தந்தா மட்டும் சட்ட விரோதமா?.. பரபர கேள்வி.. ஆதாரத்துடன் விளாசல்

May be an image of 2 people and text that says '23-08-2022 ஜனியர்'tamil.oneindia.com  -  Shyamsundar :  சென்னை: எதிர்க்கட்சிகள் இலவசங்களை வழங்கினால் மட்டும் அது சட்ட விரோதமா என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் நேரத்தில் இலவச வாக்குறுதிகளை வழங்குவதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் இன்று திமுக வழக்கறிஞர் எம்பி வில்சன் வாதிடும் போது தலைமை நீதிபதி ரமணா குறுக்கிட்டு முக்கிய கருத்து தெரிவித்தார்.
அதில், உங்கள் கட்சியை பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். நீங்கள் மட்டும்தான் புத்திசாலி கட்சி என்று நினைக்கவேண்டாம். நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை என்று நினைக்காதீர்கள். நீங்கள் சொல்வதை நாங்கள் கவனிக்காமல் இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள், என்று குறிப்பிட்டார்.
இதனால் தமிழ்நாட்டில் இலவசங்கள் தொடர்பான விவாதம் தீவிரம் அடைந்துள்ளது.

கரண் தாப்பர் பி டி ஆர் பேட்டி ... பாஜக ஒரு கூலி பட்டாள கட்சி .. ஒன்றியத்தை துவம்சம் செய்த சம்பவம்

கரண் தாப்பர் பி டி ஆர் பேட்டி ... பாஜக ஒரு கூலி பட்டாள கட்சி .. ஒன்றியத்தை துவம்சம் செய்த சம்பவம்

சமையல் எண்ணெயை பேக்கிங் செய்து மட்டுமே விற்க வேண்டும் - தமிழக உணவு பாதுகாப்புத் துறை

மாலை மலர் :  மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். தரமற்ற சமையல் எண்ணெய் டின்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர்.
உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அதிகாரிகள் நேரடியாக மேற்கு மாம்பலத்துக்குச் சென்று அங்குள்ள மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆண் நண்பர்களுக்கு தோழிகள் படுக்கை விருந்து.. ஜாயிண்ட் கலாசாரம் என்ற பெயரில் சீரழிவு!

Govindaraji Rj | Samayam Tamil  :;  கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பெண் தோழிகளை மது விருந்துக்கு அழைத்து அவர்கள் போதையில் இருந்த போது ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய சக தோழியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி “கிப்டி” பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குளச்சல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.கிப்டியின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: - "நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு எனது ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரி தோழிகள் …, … (பெண்களின் நலன் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) ஆகியோருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்த போது அங்கே வந்த எனது பள்ளி தோழன் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த அஜின் வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு தன்னையும் உருட்டு கட்டையால் மண்டையை உடைத்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3 தமிழறிஞர்களுக்கு கலைஞர் செம்மொழி விருது: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

மின்னம்பலம் : 3 தமிழறிஞர்களுக்கு கலைஞர் செம்மொழி விருது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் கலைஞர் செம்மொழி விருது வழங்கும் விழா இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆண்டுதோறும் தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் செம்மொழி விருதினை வழங்கினார்.
அதன்படி 2020ம் ஆண்டுக்கான கலைஞர் செம்மொழி தமிழ் விருது முனைவர் ம.ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது.
2021ம் ஆண்டுக்கான விருது பேராசிரியர் நெடுஞ்செழியனுக்கும், 2022ம் ஆண்டுக்கான விருது பிரான்ஸ் நாட்டின் அறிஞர் ழான் லூயிக் செவ்வியார் ஆகியோருக்கு விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

"Me-Too லாம் பொய், ஆண்கள் அட்ஜஸ்ட்மன்ட்க்கு கூப்டா பெண்கள் காசு வாங்கிட்டு என்ஜாய் தான பண்றீங்க..." நாயகி ரேகா நாயர்

Kingwoods News -   Ram Valmiki  :  ஆண்கள் பணம் கொடுத்தால் சில பெண்களும் அதை ஜாலியா என்ஜாய் பண்ணுவாங்க. ஆனால் இதுவரை என்னை யாரும் அப்படி கூப்பிடவில்லை என ரேகா நாயர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
சமீபத்தில் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்படும் ஒரு பெண்ணாக இருப்பவர் தான் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கிய சிங்கிள் சார்ட் படமான இரவின் நிழல் படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் இவர் நிர்வாணமாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பேமஸ் ஆனார்.
மேலும் இவர் நடித்த அந்த காட்சியும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ராஜபக்சாக்களின் வாக்குவங்கி இன்னும் பலமாக இருக்கிறது?

 Sharmini Nagahawatte Serasinghe வின்  ஆங்கில பதிவின் தமிழாக்கம்
ரணில் விக்கிரமசிங்கா மீது வெறுப்பு கொண்டவர்களின் மகிழ்ச்சிக்கு உரிய சாதனை பட்டியல்
பசில் நாட்டை விட்டு வெளியேறாமல்  போராட்டக்காரர்கள்  தடுத்தனர் .
அவர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் வரவேண்டும் என்பதே பஸிலின்  இப்போதைய திட்டம்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நீதிமன்றத்தின் வழக்கு அவரை நாட்டை விட்டு துரத்துவதைத் தடுக்கிறது.
அரகலயா மொட்டுக்கட்சியின்  வாக்கு வங்கியை அசைத்து கூட பார்க்கவில்லை.
அது இன்னும் மிகவும் அப்படியே இருக்கிறது.
இந்த நாட்டில் இன்னும் பெரும்பான்மையாக இருக்கும்  இனவாதிகளும், கிராமத்தர்களும், படிக்காதவர்களும் தொடர்ந்தும் ராஜபக்சக்களை ஆதரிக்கின்றனர்.
புதிய பணக்காரர்களும் இன்று பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களும் இனவாதிகள்தான்.
அவர்களும் இன்னும் ராஜபக்சே ஆதரவாளர்களே.
எனவே அவர்கள் பெரும்பான்மை உள்ளூராட்சி சபைகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அது ராஜபக்சவுக்கு பாரிய திருப்பமாக அமையும்.

ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் நியமனம் தமிழக அரசின் விதிகள் செல்லும்.. சிவாச்சாரிகளின் வழக்கு தள்ளுபடி .. சென்னை உயர்நீதிமன்றம்

tamil.oneindia.com  - Vigneshkumar  :  சென்னை: தமிழக கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
அனைத்து சாதியினரும் இனி அர்ச்சகர் ஆகலாம்: கலைஞரின் கனவை நிறைவேற்றி..வரலாறு படைத்த ஸ்டாலின் அரசு!
தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை பணி புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.
அதில்,18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை.. காசோலை திரும்பிய வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

மாலை மலர்  : தமிழ் திரையுலகில் 'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. அதன்பிறகு ரன், ஜி, சண்டக்கோழி போன்ற பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 மற்றும் தி வாரியர். திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் எண்ணி ஏழு நாள் என்ற படத்திற்காக பெற்ற கடனை இயக்குனர் லிங்குசாமி திரும்ப செலுத்தவில்லை என கூறி பிவிபி கேப்பிட்டல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

செப்டம்பர் இனி ‘திராவிட மாதம்’! மறக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளை கொண்ட மாதம்

tamil.oneindia.com - Rajkumar R  :   செப்டம்பர் இனி ‘திராவிட மாதம்’!
சென்னை : திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்படும் என திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் அந்த அணியின் செயலாளர் டி ஆர் பி ராஜா எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில மாவட்ட மற்றும் பல்வேறு அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
டிஆர்பி ராஜா

முதல் ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து .பூனாவில் அறிமுகம்

மாலை மலர்  :  முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை மத்திய அறிவியல் மத்திய தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அறிமுகம் செய்து வைத்தார்.
மலிவான மற்றும் தூய்மையான எரிசக்தியில் இயங்கக் கூடிய வகையில் இந்தப் பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:-
பசுமை ஹைட்ரஜன் ஒரு சிறந்த சுத்தமான ஆற்றல்மிக்க எரிசக்தி ஆகும். இந்த எரிபொருள், ஹைட்ரஜன் மற்றும் காற்றைப் பயன்படுத்தி பேருந்தை இயக்குவதற்கு மின்சாரத்தை உருவாக்குகிறது.

Rajapaksa party is likely to command a significant minority with around 20% of the vote... in next election..

PM, Opposition Leader discuss economic recovery, relief for people | Daily  News
The SLPP will not gain a majority in the next election. But it won’t be wiped out either. The Rajapaksa family party is likely to command a significant minority with around 20% of the vote, especially if Mahinda Rajapaksa leads the campaign. The diehard Rajapaksa voters, the kind who sees a national threat in every Tamil and every Muslim (and Christian too), will vote for the SLPP to save the motherland from these encroaching enemy aliens. And their preference will go not to the least objectionable but to the most deplorable.

  Tisaranee Gunasekara - groundviews : “What are we supposed to do when the system consistently yields terrible candidates?” Nanjala Nyabola (The Kenyan Kakistocracy, The Nation, 12.8.2022)
Most politicians have a questionable relationship with reality. The Rajapaksas operate in a reality that is all their own. Asked why brother Gotabaya fled the country, Mahinda Rajapaksa replied, “Who accuses him of fleeing? He went for a medical check-up.”
So the SLPP, that quintessential Rajapaksa party, acts as if the recent popular uprising happened in a parallel universe. As poverty engulfs new swathes of population and malnutrition ravages the young, the SLPP is planning to present a cabinet paper authorising the payment of Rs. 117 million to favoured ex-officials (civilian and military) on the spurious grounds of political victimisation. This in a land where the main children’s hospital is making urgent appeals for orthopaedic surgical supplies.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

2024 பிரதமர் வேட்பாளர் அகிலேஷ் முன்மொழியும் மம்தா சந்திரசேகர ராவ் ஷரத் பவார்?

tamil.oneindia.com - Nantha Kumar R  :  டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த 3 பேரின் பெயர்களை சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்துள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பெயர் இல்லாதது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் வரும் 2024ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை இப்போது இருந்த அரசியல் கட்சியினர் துவங்கி உள்ளன.
குறிப்பாக பாஜக இந்தியா முழுவதும் பூத் கமிட்டிகளை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அடுத்தமாதம் ராகுல்காந்தி தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைப்பயணம் துவங்கப்பட உள்ளது.!

பிரதமர் மோடியை கை கழுவும் NRIக்கள் (புலம்பெயர் இந்தியர்கள்)


ராதா மனோகர் :  75 ஆவது இந்திய சுதந்திர நினைவு நிகழ்ச்சி நேற்று கனடா மான்ரியல் நகரில் நடந்தது  
என்னதான் நடக்கிறது என்று போய் பார்த்தேன்   
கடந்த ஆறு ஏழு வருடங்களாக முழுக்க முழுக்க பனியா பார்ப்பன ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சி நிரலாகவே அது நடக்கும்  தென்னிந்தியா என்றொரு பகுதி இருப்பதாகவே காட்டிக்கொள்ள மாட்டார்கள்
இம்முறையும் அப்படியேதான் நடந்தது  ஆனாலும் ஒரு வேடிக்கையான விடயம் என் கவனத்திற்கு வந்தது
வழக்கமாக காணும் இடம்தோறும் மோடி போஸ்டர்கள் மாசுபடுத்தி கொண்டிருக்கும்
ஆனால் இம்முறை மோடி படத்தை எப்படியாவது தவிர்த்து விடவேண்டும் என்று முயன்றது புரிந்தது  
எங்கோ ஒரு மூலையில் மோடி படம் ..

ரணில் விக்கிரமசிங்கவின் வீடு எரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் சகோதரி துலாஞ்சலியிடம் போலீஸ் விசாரணை

thinakkural.lk  : போராட்ட காலத்தில்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யின் வீட்டுக்கு சிலர் தீ வைத்த சம்பவம் தெரிந்ததே
இது தொடர்பாக பலரும் விசாரணை வளையத்திற்குள் உள்ளனர்  ஏராளமான சி சி டி வி பதிவுகள் உள்ளதால் குற்றவாளிகள் நிச்சயம் பிடிப்படுவார்கள் என்று தெரிகிறது
மேலும் இது தொடர்பாக   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி திருமதி துலங்கலி பிரேமதாசவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவர் மறைந்த ஜனாதிபதி திரு ஆர் பிரேமதாசாவின் மகளாவர்.
பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அவர் அழைக்கப்பட்ட பின்னர், அவரது வாக்குமூலங்கள் சுமார் நான்கு மணி நேரம் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராமஜெயம் கொலை வழக்கு: - ஒரே துப்பு மாருதி சுசூகி வெர்ஸா கார் ...

ramajeyam

தினமணி : கோவை: அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா் ராமஜெயம் கொலை வழக்கில் முக்கிய தடயமாக, கொலையாளிகள் மாருதி சுசூகி வெர்ஷா மாடல் காரைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1,400 பேர் மாருதி சுசூகி வெர்ஷா மாடல் காரை வைத்துள்ளனர்.
இவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கோவையில் மட்டும் 250 பேர் இந்த மாடல் காரை வைத்திருப்பதாகவும்,
அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி கொலைகள் .. அதிர்ச்சி கொடுத்த அருணா ஜெகதிசன் அறிக்கை! சட்டபேரவையில் அறிக்கை வைக்கப்படும் - அமைச்சர் ரகுபதி உறுதி

tamil.oneindia.com  -  Rajkumar R   :  அருணா ஜெகதிசன் அறிக்கை! சட்டபேரவையில் அறிக்கை வைக்கப்படும் - அமைச்சர் ரகுபதி உறுதி
சென்னை : ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்" என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
போராட்டங்கள் நூறாவது நாளை எட்டியதையொட்டி, தூத்துக்குடியில் மே 22-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் அமைதிப் பேரணி நடத்தினர். பேரணியில் சென்றவர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்

ஸ்கெட்ச் போட்டவருக்கே ஸ்கெட்ச்; பா.ஜ.க.வை அதிர வைத்த தி.மு.க

BJP Dr Saravanan turns to DMK after PTR Car issue

நக்கீரன் : வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் நடந்த தள்ளுமுள்ளு வாக்குவாதம், அதை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தேசியக்கொடி போட்ட கார் மீது செருப்பு வீச்சு விவகாரம் பதற்றப் பரபரப்பை உருவாக்கியது. மதுரையில் தி.மு.க.வினர் ரயில் இன்ஜின் மீது ஏறி போராட்டம், ஆங்காங்கே அண்ணாமலை, டாக்டர் சரவணன் படம் எரிப்பு என்று கொந்தளித்தனர். இதையடுத்து, டாக்டர் சரவணன் ஆவேச பேட்டியளித்தார். சில மணிநேரம் கழித்து, சரவணன் தனது மருத்துவமனையின் பின்பக்கம் வழியாக வெளியேறிய தகவல் கசிந்தது. அங்கே பாதுகாப்புக்காக நின்ற பா.ஜ.க.வினரில் ஒருவர் கூட இல்லை.

ஒன்றிய அரசின் வரிச் சலுகைகள் 5 லட்சம் கோடி... தமிழகம் மக்களுக்கு வழங்கும் சலுகை தொகை வெறும் 3823 கோடி மட்டுமே

 Vijayasankar Ramachandran  :  ‘இலவசங்கள்’ குறித்து திரு புகழ் காந்தி ஓர் அருமையான கட்டுரையை ஆங்கில இந்துவில் எழுதியிருக்கிறார்:
அதில் வரும் சில முக்கியமான விவரங்கள்
இந்தியாவின் மொத்த சொத்தில் 22%ஐ மேல் தட்டில் இருக்கும் 1% வைத்திருக்கிறார்கள். அதே போல் 57% சொத்துக்களை மேலடுக்கில் இருக்கும் 10% பேர் வைத்திருக்கின்றனர்.
உயர் ஜாதிக் குடும்பங்கள் தேசிய வருமானத்தின் சராசரியை விட 47% அதிகம் ஈட்டுகிறார்கள்.
பெரும் தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களில் (board members) 93% உயர் ஜாதியினர்.
நடுத்தர, சிறு, குறு தொழில் நிறுவனங்களில் 63% நிர்வாகிகள் உயர் ஜாதியினர்.
தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் வரிச் சலுகைகள் 5 லட்சம் கோடி. இதனால் அரசுக்கு சென்ற வருடம் இழப்பு  1.84 லட்சம் கோடி. அடுத்த வருடம் இது ஒரு லட்சம் கோடியாக இருக்கும். இதன் பலன் பெரும்பாலும் உயர் ஜாதியினருக்குத்தான்.
சரி, தமிழகத்தில் வழங்கப் படும் மூன்று இலவசங்களுக்கான செலவு என்ன?
கலர் டிவி 750 கோடி
பெண்களுக்கான இலவச பஸ் பயணம் 1250 கோடி
மதிய உணவுத் திட்டம் 1823 கோடி
மொத்தம்: 3823 கோடி

பீகார் ஆசிரியர் பாண்டே (பார்ப்பனர்) மகள் மீது பாலியல் வன்முறை.. செல்போனில் பதிவுசெய்து போலீசிடம் கையளித்த மகள்

பீகார் மாநில  பள்ளிக்கூட ஆசிரியர் பாண்டே  (பார்ப்பனர்) தன் மகள் மீது தொடர்ந்து  பாலியல் வன்முறை புரிந்துள்ளார் . இவரை போலீசில் பிடித்து கொடுக்க முடிவு செய்த மக்கள் செல்போனை மறைத்து வைத்து பதிவு செய்து போலீசிடம் கையளித்துள்ளனர்  தற்போது ஆசிரியர் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்
Bihar teacher Pandey (brahmin) raped his own daughter for 6 years, the daughter dared to make a video, then made the viral accused Pandey arrested. The case is of samastipu