சனி, 8 மே, 2021
இலவசங்கள் அல்ல அவை ஏணிப்படிகள்! இலவச பேருந்து பயணம்
காலி சிலிண்டர் விற்பனையால் உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பு
Anbarasan Gnanamani - /tamil.oneindia.com மீரட்: உத்தரபிரதேசத்தில் காலி சிலிண்டரை பத்தாயிரம் ரூபாய்க்கு, அரசு மருத்துவமனை ஊழியர் விற்ற நிலையில், சில மணி நேரங்களில் அதை பயன்படுத்திய கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளராக பணிபுரியும் இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து வெள்ளிக்கிழமை அன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
பேரம் பேசிய ஊழியர் குற்றச்சாட்டின் படி, கடந்த வியாழன் அன்று, கொரோனா நோயாளி ஒருவரின் உறவினர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்க ரூ.50,000 கேட்ட சஞ்சய், பேரத்துக்கு பிறகு ரூ.10 ஆயிரத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து இறந்த கொரோனா நோயாளியின் மனைவி மம்தேஷ் தேவி கூறுகையில், போதுமான ஆக்சிஜன் கிடைத்திருந்தால், என் கணவரை நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவர் இறந்த பிறகு சோதித்த போது, அது காலி சிலிண்டர் என்பது தெரியவந்தது" என்றார்.
இதையறிந்த உறவினர்கள், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தியதை அடுத்து, விரைந்து வந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சஞ்சய் கைது செய்யப்பட்டார்
தமிழக மீனவர்களின் உடையில் (T-Shirt) புலிப்படம் .. இலங்கை கடற்படை விசாரணை!
இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், அதில் ஒரு படகில் இருந்தவர்கள் அணிந்திருந்த உடையில் புலிகளின் தலைவரின் பெயரும் படமும் பொறிக்கப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் வானதி சீனிவாசன் கைது! அனுமதி இன்றி தெருவில் போராட்டம்.. மம்தா அரசு அதிரடி
Venkat Ramanujam : : அன்பின் மம்தா திதி. கொரானா காலத்தில் ஸ்டேட் விட்டு ஸ்ட்டேட் தாவி சட்டத்தினை மீறிய எங்க தமிழ் நாட்டு பெண்ணு Vanathi Srinivasan அக்காவை உங்க வங்கத்து ஜெயிலில் அடைச்சி வச்சிகோங்கோ ..
வச்சிருந்து 1 வருஷம் கழிச்சு பத்திரமா திருப்பி அனுப்புங்க ..
இதை மட்டும் செய்ங்க ..காரணம்..
அதிமுக எதிர்கட்சிதலைவர் தேர்வு உட்கட்சி விவகாரத்தில் வானதிக்கா தலையிட்டதால் கடும் கடுப்பில் இருக்கும் #அதிமுக காரங்க பெரு மகிழ்ச்சி அடைவாங்க verified
மாலைமலர் :மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இருப்பினும் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரான சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.
சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி மதுரை, கோவையிலும்... முதல்வர் உடனடி நடவடிக்கை!
சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் மருந்து மற்ற மாவட்டங்களில் கிடைக்காத சூழ்நிலை இருந்துவந்தது. இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற நகரங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வங்கத்தில் ஆட்சியை பிடிக்க.. பாஜக ஒட்டுமொத்த இந்தியாவையே கிட்டதட்ட அழித்துவிட்டது'.. மம்தா!
Vigneshkumar - /tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில், பாஜக அரசு இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அழிவின் விளிம்பிற்கு எடுத்துச் சென்றுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்ததுள்ளது.
அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், அங்குச் சட்டசபை சபாநாயகராக திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிமான் பாண்டியோபாத்யாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது சட்டசபையிலேயே மம்தா, பாஜகவை மிகக் கடுமையாகச் சாடினார்
சட்டசபையில் பேசிய மம்தா, மாநிலத்தில் வகுப்புவாத வன்முறையை தூண்ட முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி தோல்வியடைந்த பாஜக. போலி செய்திகள் மூலம் வன்முறையைத் தூண்ட முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மே 08 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:
-
எண் மாவட்டம்
மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு 1
அரியலூர்
6202
5666
483
53
2
செங்கல்பட்டு
94964
80790
13142
1032
3
சென்னை
383644
345633
32858
5153
4
கோயமுத்தூர்
92579
80904
10925
750
5
கடலூர்
33186
30491
2338
357
6
தர்மபுரி
11246
9765
1407
74
7
திண்டுக்கல்
17908
15932
1746
230
8
ஈரோடு
26016
22005
3839
172
9
கள்ளக்குறிச்சி
13668
12688
862
118
10
காஞ்சிபுரம்
43439
38512
4315
612
11
கன்னியாகுமரி
25091
21994
2740
357
12
கரூர்
9503
7719
1713
71
13
கிருஷ்ணகிரி
17863
15349
2370
144
14
மதுரை
37940
31566
5795
579
15
நாகப்பட்டினம்
15949
13686
2078
185
16
நாமக்கல்
18591
16353
2106
132
17
நீலகிரி
10781
9934
796
51
18
பெரம்பலூர்
3193
2711
452
30
19
புதுக்கோட்டை
14971
13729
1074
168
20
இராமநாதபுரம்
10019
8505
1368
146
21
ராணிப்பேட்டை
23736
21183
2312
241
22
சேலம்
46265
42128
3543
594
23
சிவகங்கை
9580
8645
799
136
24
தென்காசி
13460
12077
1182
201
25
தஞ்சாவூர்
28750
25944
2474
332
26
தேனி
23239
20431
2576
232
27
திருப்பத்தூர்
11480
10176
1130
174
28
திருவள்ளூர்
69476
61312
7284
880
29
திருவண்ணாமலை
25958
23984
1656
318
30
திருவாரூர்
17095
15371
1594
130
31
தூத்துக்குடி
29058
24538
4354
166
32
திருநெல்வேலி
29865
26002
3600
263
33
திருப்பூர்
30529
27245
3032
252
34
திருச்சி
28573
24117
4198
258
35
வேலூர்
30910
27491
2997
422
36
விழுப்புரம்
22031
19245
2647
139
37
விருதுநகர்ர்
22097
20231
1608
258
38
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 1004
997
6
1
39
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்) 1075
1072
2
1
40
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 428
428
0
0
மொத்தம்
13,51,362
11,96,549
1,39,401
15,412