சனி, 21 ஆகஸ்ட், 2010

நீங்க ரொம்ப லைக் பண்ற "சாங்'க கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபி

தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
ஹாய் வியூவர்ஸ், இன்னைக்கு நம்ப ஷோவுக்கு வந்திருக்கிற கெஸ்ட் யாருன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸப் இருக்கும். ப்ளீஸ், இப்ப ரெடியா இருங்க அவங்கள வெல்கம் பண்ண. அதுக்கு முன்னாடி சின்ன கிளாப் பண்ணுங்க'
 "நீங்க ரொம்ப லைக் பண்ற "சாங்'க கேட்கிறதுக்கு முன்னாடி, இப்ப சிட்டியோட டிராபிக் கண்டிஷனைப் பார்ப்போம்.
 ஒகே. டா. ஈவ்னிங் மீட் பண்ணலாம். கண்டிப்பா பிலிம் போறோம். ஒகே.வா. பை!
 மேற்குறிப்பிட்ட உரையாடல்கள் தமிழகத்தில் செம்மொழியின் பெருமைக்குரியவர்களான நாம் பேசும் அன்றாடப் பேச்சுகளே. தொலைக்காட்சிகளில், பண்பலை வானொலிகளில், நண்பர்களுடனான உரையாடல்களில் புழங்கும் தமிழுக்கு உதாரணங்கள்.
 "உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.
 நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும் சம்ஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சுவழக்காகவும், இலக்கிய வழக்காகவும் இருந்தது. மொழிக்கலப்பை எதிர்த்து ஓர் இயக்கமே உருவான பெருமையும் சிறுமையும் தமிழுக்கே உரியது.
தனித்தமிழ் இயக்கத்தை மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழின்மேல் இருந்த தீராக் காதலால் கட்டியமைத்தார்கள். தனித்தமிழ் இயக்கமும் திராவிட இயக்கமும் தமிழில் இருந்து சம்ஸ்கிருதத்தைப் பிரித்தெடுத்தது. இன்று சம்ஸ்கிருதத்தின் இடத்தில் ஆங்கிலம் வந்து உட்கார்ந்துவிட்டது. ஸ்ரீதரன் எல்லாம் திருக்குமரன் ஆனார்கள். மீண்டும் இப்பொழுது விக்கியும், மிக்கியுமாக நம் பிள்ளைகள்.
 உலகம் முழுவதும் வாழும் இனத்தினர் தங்களுக்குள் தாய்மொழியில்தான் பேசிக்கொள்கிறார்கள். படித்த தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொள்கிறார்கள்.  தாய்மொழியில் பேசிக்கொள்வதும், மொழியைக் கலப்பின்றிப் பேசுவதும் ஏன் நாகரிகக் குறைவான செயலாக, படிக்காதவர்களின் பழக்கமாகப் பார்க்கப்படுகிறது?
 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் தொடக்கவிழாவில் பேசிய தமிழறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி ஒரு கருத்தை வலியுறுத்தினார். ""உலகில் உள்ள 6,000 மொழிகளில் 6 மொழிகளுக்கு மட்டுமே செம்மொழித் தகுதி உள்ளது. 6 மொழிகளிலும் தமிழ் மட்டுமே இன்றும் மக்கள் பேசும் மொழியாக உள்ளது'' என்று.
 கடந்த இருபதாண்டுகளில் தமிழின் பேச்சுவழக்கு படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. பேச்சின் வழியாகவே ஒவ்வொரு குழந்தையும் மொழியை உள்வாங்கிக் கொள்கிறது. பேச்சின் மூலமே  ஒரு மொழியை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள முடியும். இன்றைக்குப் பிறந்து வளரும் ஒரு குழந்தை நம் மொழியை எப்படி உள்வாங்கிக் கொள்ளும் என்று நினைத்துப் பார்த்தால் ஆழ்பள்ளத்தில் விழுகிறார்போல் கிடுகிடுவென நடுங்குகிறது நெஞ்சம்.
 நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் உள்ள குடும்பங்களில் அம்மா-அப்பாவின் பேச்சுகளைக் கேட்கும் நேரத்தைவிட, ஒரு குழந்தை, தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் குரலைக் கேட்கிறது. ஒளி - ஒலி ஊடகத் தொகுப்பாளர்களுக்கு நல்ல தமிழ் தெரியக்கூடாது என்பதுதான் முதல் தகுதியாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.
 தமிழை அவ்வளவு வேகமாக உச்சரிக்கவே முடியாது. ஆங்கிலத்தை உச்சரிக்கும் லாவகத்துடன், தமிழை விழுங்கி உச்சரித்து தமிழே நாவின் அடியில் அமுங்கிப் போகிறது.
 ஊடகங்களில் லட்சக்கணக்கான மக்களை இன்னும் தங்கள் பிடியில் வைத்திருப்பவை செய்தித்தாள்கள். வெகுஜன ஊடகங்களில் அன்றாடச் செய்திகளுக்காக மக்கள் இன்னும் தினசரிகளையே சார்ந்திருக்கிறார்கள். கிராமத்து அரசமரத்து தேநீர்க் கடை தொடங்கி, அலுவலகங்கள்வரை செய்தித்தாளின் இருப்பு மிக முக்கியமானது. ஆங்கிலக் கலப்பில்லாத தலைப்புகளையும், செய்திகளையும் ஒருகை விரலுக்குள் அடங்கிவிடக்கூடிய எண்ணிக்கையிலான பத்திரிகைகள் மட்டுமே வெளியிட்டு வருகின்றன.
 அநேகப் பத்திரிகைகளின் தலைப்புகளைப் பார்த்தால் நாம் படிப்பது தமிழ் நாளிதழ்தானா என்ற குழப்பமே மிஞ்சும். "மந்திரிசபை டிஸ்மிஸ், மாஜி அமைச்சருக்கு கல்தா, கைதிக்கு வாரண்ட்' இந்தத் தலைப்புகள் சொல்லும் உண்மை என்ன? நாம் தமிழில் சிந்திப்பது குறைந்து ஆங்கிலத்தில் சிந்திக்கத் தொடங்கி விட்டோம் என்பதா?
 தொலைக்காட்சிகளில் எத்தனை தொலைக்காட்சிகளுக்குத் தமிழில் பெயர் உள்ளன? பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க ஒரு காலவரையறை வைத்ததைப்போல்,திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்க ஊக்கத்தொகை வழங்கியதைப்போல்  தொலைக்காட்சிகளுக்கும் பெயர் மாற்றம் செய்யலாமே? நிகழ்ச்சிகள் பெரும்பான்மைக்கு ஆங்கிலப் பெயர்கள்.
 படித்த, நடுத்தர, உயர்நடுத்தரக் குடும்பங்களில் தமிழில் உரையாடுவது அருகி வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களின் பல தனியார் அலுவலகங்களுக்குச் சென்றால் அத்தனையும் ஆங்கிலம்.
அமெரிக்கத் தூதரகத்துக்கோ, பிரிட்டிஷ் தூதரகத்துக்கோ வந்துவிட்ட திகைப்பு. தமிழர் தமிழ்நாட்டுக்குள் பேசிக்கொள்ள ஆங்கிலம் தேவைப்படுகிறது என்பது நம் இனத்துக்கு நேரும் அவமானமல்லவா? "தமிழர் என்றோர் இனமுண்டு. தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்பது இதுதானோ?
 பரவலாகிவிட்ட ஆங்கிலவழிக் கல்விதான் மொழிக் கலப்புக்கான அடிப்படையா என்று யோசித்தால், தமிழகத்தில் உள்ள மொத்த மாணவர்களில் 20 சதவீதம் மாணவர்களே ஆங்கில வழியில் கல்வி கற்கிறார்கள். மீதமுள்ள 80 சதவீத மாணவர்கள் தமிழ் வழியில்தான் பயில்கிறார்கள்.
 தமிழகத்தில் உள்ள ஆங்கிலக் கல்வியின் தரம் சொல்லிக்கொள்ளும் அளவுக்குக் கிடையாது. "வாட்' மா? "டெல்' மா, "ரீட்' பண்ணு, "ரைட்' பண்ணு போன்ற அரைகுறை வாக்கியங்கள்தான்.
  தமிழிலும் புலமை பெறாமல், ஆங்கிலத்திலும் புலமை பெறாமல் இரண்டுங்கெட்டானாகி விடுகிறார்கள் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள். மாநகரங்களில் உள்ள சில பள்ளிகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.
 எந்த மொழியின் கலப்பின்றியும் நம்மால் பேச முடியாதா? எழுத முடியாதா? நிச்சயம் முடியாது. இனக்குழுக்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கும்பொழுதே மொழியின் கலப்பு உருவாகியிருக்கக்கூடும். வணிகத்தின் பொருட்டு உலகம் முழுவதும் இருந்த மக்கள் இப்பூமிப் பந்தைச் சுற்றத் தொடங்கியபொழுதே, பொருள்களுடன் அவர்கள் மொழியையும் பண்டமாற்றுச் செய்திருப்பார்கள்.
நம் வழக்கத்தில் இல்லா பொருள்களை பிற நாடுகளிடம் இருந்து பெற்று, பயன்படுத்தத் தொடங்கியபொழுது, அப்பொருளுடன், அப்பொருளுக்கான அம்மொழியின் பெயரையும் சேர்த்தே பெற்றிருப்போம்.
 தமிழிலிருந்து வெளிச்சென்ற பொருள்களும் நம் தமிழ்ச்சொற்களுடன் சேர்ந்துதான் போயிருக்கும். உலகம் முழுக்க உள்ள தொன்ம மொழிகளில் பல சொற்களுக்கான வேர்ச் சொல்லாகத் தமிழ் இருப்பதை இன்றைய ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
இஸ்லாமியர்கள், மராத்தியர்கள், ஆங்கிலேயர்கள் போன்றவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழுக்கு நிறைய கொடுக்கல் - வாங்கல்கள் இருந்தன. மொழிசார்ந்தும் கலாசாரம் சார்ந்தும் தமிழ் பல மாற்றங்களை உள்வாங்கியது. ஆங்கிலேய ஆட்சி நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்தது.
ஆங்கிலேயர்களுடன் நமக்கு நிறைய இயந்திரங்களும், போக்குவரத்து வசதிகளும் வந்தன. தண்டவாளம் வந்தது. ரயில் வந்தது. தபால் வந்தது. வந்த புதிதில் நாம் அப்படியே ஆங்கிலச் சொற்களுடன்தான் ஏற்றுக் கொண்டோம். பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க அச்சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன.
நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "ரேடியோ' பிடித்திருக்கிறது. பொருளின் வேர்ச்சொல்லோடு கூடிய சொற்களைப் பயன்படுத்துவது எப்பொழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இக்கலப்பு மொழியை வளப்படுத்தும், ஆங்கிலம் மிகச்சிறந்த உதாரணம்.
 கலைச்சொற்களுக்காக, தொழில்நுட்பப் பெயர்களுக்காக நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து நிற்பதுகூட நமக்கு இழுக்கென அறிவியல் தமிழ்ச்சொற்கள் உருவாக்கும் தமிழறிஞர்கள் வேதனைப்படுகிறார்கள். நாமோ அன்றாட உரையாடல்களிலேயே அன்னிய மொழியை அனுமதிக்கிறோம்.
 தமிழை ஆங்கிலத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் நாம் எல்லோரும் நிற்கிறோம்.
 "மம்மி'களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஒருபோதும் "அம்மா'க்களை "மம்மி'யாக்க அனுமதியோம். "ம்மா' மொழியின் ஒற்றைச் சொல் அல்ல. ஐயாயிரம் ஆண்டு தமிழ் வாழ்வின் தொடர்ச்சி. உலகின் கடைசி மனிதன் வாழும் வரை, தமிழன் தமிழைச் சரியாக உச்சரிக்க மொழியைக் காப்போம்.
Dinamani

ஊழலை வெளிப்படுத்தியவரை கொன்ற பாஜக எம்பி?

அகமதாபாத்: குஜராத் [^]தில் சுரங்க ஊழலை வெளிப்படுத்தியவரை பாஜக எம்பியின் உறவினர், போலீஸ்காரர் உதவியுடன் கூலிப் படையை வைத்து கொலை செய்துள்ளார்.

குஜராத் மாநில பாஜக எம்.பி தினு போகா சோலங்கியின் குடும்பத்தினர் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் கிர் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டி இருப்பதாக புகார் [^]கள் வந்தன.

இது குறித்து சமூக சேவகர் அமீத் ஜேத்வா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அரசிடம் தகவல் கேட்டிருந்தார்.

இந் நிலையில் அமீத் ஜேத்வா கடந்த மாதம் 20ம் தேதி அகமதாபாத் ஹைகோர்ட் அருகே சென்றபோது சுட்டு கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை சுட்டு கொன்று விட்டு தப்பினர்.

இது குறித்து கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை [^] நடத்தியதில் பகதூர் சிங் வதேர் என்ற போலீஸ்காரரை கைது செய்தனர்.

இவரது உத்தரவின் பேரில் பச்சன் சிவா, சைலேஷ் பாண்யா ஆகியோர் அமீத் ஜேத்வாவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைதான போலீஸ்காரர் பகதூக் சிங் வதேரிடம் சிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோது, எம்பி சோலங்கியின் உறவினரான சிவா சோலங்கி தான் அமித் ஜேத்வாவை கொலை செய்யச் சொன்னதாகவும், இதற்காக ரூ.11 லட்சம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் இப்போது சிவா சோலங்கியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தக் கொலையில் எம்பி சோலங்கிக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடமும் விரைவில் விசாரணை நடக்கும் என்று தெரிகிறது

இந்தக் கொலையில் பாஜக எம்பிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை குஜராத் முதல்வர் [^]நரேந்திர மோடி காப்பாற்ற முயல்வதாகவும் கொலை செய்யப்பட்ட அமித் ஜேத்வாவின் தந்தை புகார் கூறியுள்ளார்
பதிவு செய்தவர்: மக்களே உஷார்
பதிவு செய்தது: 21 Aug 2010 8:17 pm
குஜாரத் அரசு போல வருமா ? நார தே..வு..டியா மவன் மோடி போல வருமா என்று கொடுத்த காசுக்கு மேல கூவிய சாம்பார் கூட்டமே இதோ வெளுக்குது உங்க மோடியோட சாயம் , மோடி ஜட்டியோடு மக்களால் அடித்து துவைக்கபடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பதிவு செய்தவர்: மோடி
பதிவு செய்தது: 21 Aug 2010 7:28 pm
இது எல்லாம் வெறும் வதந்திகள்.. இந்த செகுலர் பத்திரிகைகளுக்கு வேறு வேலை வெட்டி கிடையாது.....

ஒரே நாளில் 111 வழக்குகளுக்கு தீர்ப்பு சொன்ன நீதிபதி; கோர்ட் நேரத்தை சேமித்து

மங்கலகிரி: நாட்டில் சுமார் 3 கோடி வழக்குகள் தேக்கம் அடைந்து கவலை தருகின்ற நிலையில் ஒரு நீதிபதி, ஒரே நாளில் 111 வழக்குகளை பைசல் செய்திருக்கிறார் என்றால் உண்மையிலே பாராட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறது. சமீபத்திய நீதி துறையின் சாதனையாக இந்த நீதிபதி செயல்பட்டுள்ளார்.

காலம்தாழ்த்திய நீதி யாருக்கும் பயன் தராது என்பர் இதனால் இந்திய அளவில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என சுப்ரீம்கோர்ட் மற்றும் சட்ட அமைச்சகம் அவ்வப்போது தமது கருத்துக்களை வெளியிடுவது உண்டு. இந்த கனவின் துளி அளவிலான செயலாக்கத்தை ஆந்திராவில் உள்ள நீதிபதி ஒருவர் வடிவம் கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி. இவர் ஒரே நாளில் பல்வேறு வழக்குகளை முடிக்க திட்டமிட்டார். இதன்படி உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கும் படியான நீண்ட காலம் பெண்டிங்கில் உள்ள கேஸ் கட்டுக்களை தூசி தட்டி கோர்ட் மையத்துக்கு கொண்டு வர உத்தரவிட்டார். இதன்படி தூங்கி இருந்த கேஸ் கட்டுக்கள் நீதிபதி மேஜையில். ஒவ்வொரு வழக்காக விவரத்தை கேட்டு முடிக்கும் தருவாயில் உள்ள 111 வழக்குகள் மீது தீர்ப்பளித்து பைசல் செய்தார்.

இவர் வழங்கிய தீர்ப்புகள் எல்லாம் அபராதம் வழங்கியதாகவே இருந்தது. அதாவது திருட்டு, தெருச்சண்டை, மற்றும் சாலை விபத்து என111 வழக்கில் யாருக்கும் ஜெயில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 78 வழக்குகளில் இவர் விதித்த அபராதம் மூலம் ரூ. 99 ஆயிரம் அரசு கஜானாவுக்கு கிடைத்தது . மொத்தம் 33 பேர் குற்றமற்றவர்கள் என விடுவித்தார். ஏனெனில் தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொணடு திருந்துவதாக கூறிய சிலருக்கு மன்னிப்பும் வழங்கினார் நீதிபதி. பொது தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட ரூ. 4 லட்சத்தை அரசு கஜானாவில் சேர்க்கவும் உத்தரவிட்டார்.இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் : நீதிபதியாக இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து இந்த கோர்ட்டில் நிலுவையாக இருந்த ஆயிரத்து 850 வழக்குகள் தற்போது ஆயிரத்து 350 ஆக குறைந்துள்ளதாம். இந்த மாவட்ட ஜூனியர் சிவில் நீதிபதியாக கடந்த மே மாதம் பதவியேற்ற நாளில் இருந்து சுமார் 500 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார் இது பெரும் சாதனைதான் என பிரபல வக்கீல் சஞ்சீவரெட்டி புகழ்ந்துள்ளார்.

இதற்கு முன்பு சில நீதிபதிகள் ஒரே நாளில் அதிகப்பட்சமாக 80 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்னர். ஆனால் இந்த நீதிபதி 111 வழக்கை முடித்திருக்கிறார் என்பது நீதி துறைக்கு பெரும் வரப்பிரசாதம் .

தாமரைச்செல்வன் - தோஹா,கத்தார்
2010-08-21 14:24:08 IST
நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி உங்கள் சேவை வளர்க. நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...
ஷிஹா - குவைத்,இந்தியா
2010-08-21 14:18:12 IST
வாழ்த்துக்கள்.....
Brindasri S - Coimbatore,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-21 13:52:23 IST
Our Best wishes to you. Let all other people learn from you and make India, the best country in the world......
சுவாமிநாதன்.S - CHENNAI,இந்தியா
2010-08-21 13:48:13 IST
REALLY GREAT!!!!!!!! TRY IMPLIMENT "MUDALVAN" FILM SYSTEM EVERY WHERE....
siva - pune,இந்தியா
2010-08-21 13:33:48 IST
கும்பிடுறேன் சாமி ! நல்லா இருங்க!...
Tamilan - Chennai,இந்தியா
2010-08-21 13:18:54 IST
முடியும் உங்களால் ஆனால் செய்ய மாட்டீர்கள் ..... இருந்தாலும் நன்றி !!! நீதிபதி அவர்களே ...... முன்பே செய்திருக்கலாம் .... இப்போவாவது கண் திறந்தீர்களே....
ஹே ராம் - பெங்களூரு,இந்தியா
2010-08-21 13:13:36 IST
இந்த நீதிபதி திருவாளர் சத்யநாராயணா மூர்த்தி-ஐ உயர் நீதி மன்றத்தில் தூக்கி, பெரும் பதவியில் போடவேண்டும் .. மின்னல் வேகத்தில் தீர்ப்புகள் வழங்கி சாதனை புரிவார் .. அரசு மற்றும் நீதி மன்றங்கள் இவரை உரிய முறையில் பாராட்ட வேண்டும் .....
M . துரைவேல் - Tiruchirappalli,இந்தியா
2010-08-21 12:53:37 IST
Hearty Congratulations to the Judge of Junior Civil Court of Guntur Mr SathiyaNarayana Murthy for his endeavour in clearing the cases . Keep it up and many more achievements in closing the old cases wherever you are assigned. It is appealed to all the Jury in all courts as well as the Junior , Senior advagates to take a vow in expedeting the cases to make the proceedings in a faster way to bring down the pending cases in the respective area so that the public also benefitted in getting the faster Judgement .. M Duraivel , Tiruchirappalli....
அன்புச்செல்வன் - லாஸ்ஏஞ்சலஸ்,யூ.எஸ்.ஏ
2010-08-21 12:43:42 IST
நீதிபதி சத்தியநாராயண மூர்த்தி போல நிறைய நீதிபதிகள் நம் நாட்டிற்க்கு தேவை. இவரைப்போல அனைத்து நீதிபதிகளும் நடந்து கொண்டால் அப்பாவி மக்கள் கோர்ட கேஸ் என அழைந்து அல்லல் படுவது குறையும். வாழ்த்துக்கள்!...
அனுசுயா - சென்னை,இந்தியா
2010-08-21 12:43:41 IST
வாழ்த்துக்கள் , இதேபோல் அனைவரும் செயல்பட வேண்டும்...
aaaa - chennai,இந்தியா
2010-08-21 12:41:18 IST
வெரி குட்...
SR George Fernandaz - DubaiUAE,இந்தியா
2010-08-21 12:27:34 IST
Wow .........! Realy great . I am salute you. If we have like this 10௦ Judges in our India , we can finish all pending cases with in few months ... Realy good .. and thanks Mr. Sathyanarayana Moorthy. S R George Fernandaz Dubai ....
p.manimaran - VAYALAIKEERANUR,இந்தியா
2010-08-21 12:23:13 IST
இவர் ஒரு முன்மாதிரி , சோம்பேறி நீதிபதிகள் திருந்துவார்களா...
ரபியுதீன் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-21 12:22:21 IST
வாழ்த்துக்கள் சத்யநாராயண மூர்த்தி. உங்களைபோல் உள்ள நீதிபதிகள்தான் இந்திய நாட்டிற்கு முதல் தேவை....
சூரன் - மதுரை,இந்தியா
2010-08-21 12:18:56 IST
இருவருக்கு சண்டை என்றால், வழக்கு நடக்கிறது. தவறு நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அபராதம் போட்டு அரசு வசூலிக்கிறது. பாதிக்கப்பட்டவனுக்கு என்ன கிடைக்கும். அந்த அபராதம் அவனுக்கு அல்லவா போக வேண்டும்....
வை சுந்தரமகாலிங்கம் - சூளைமேடுசென்னை,இந்தியா
2010-08-21 12:14:52 IST
இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களுகு எல்லாம் ஏன் உடனடி முடிவு எடுக்க கூடாது. அப்படி இருந்தால் வழக்கு தேக்கம் இருக்காது தானே....
snatarajan - chennai,இந்தியா
2010-08-21 12:02:30 IST
இந்த ரூட்டில் , இன்டியா முழவதும், ஆயிரம் நீதிபதிகள் வேலை செய்தால், எல்லா கேஷ்களும் ஒரு வருடத்தில் முடிக்கலாமே !!...
ராஜேஷ் குமார் - பரமக்குடி,இந்தியா
2010-08-21 11:57:06 IST
இந்த மாதிரி நீதிபதிகள் இருந்தால் வாய்தா என்பதற்கு வேலை இல்லை....
மதன் - UAE,இந்தியா
2010-08-21 11:55:05 IST
எச்செல்லேன்ட்! Thiru. முர்த்தி. இந்தியா நீட்ஸ் பெர்சன் லைக் யு....
vasu - hsinchu,தாய்லாந்து
2010-08-21 11:42:18 IST
நன்றிகள்.....சார். இதேபோல் எல்லோரும் செயல் பட முன் வாருங்கள் அதிகாரிகளே......அப்பதான் நம் நாட்ட முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்..... இவண், த.வாசு....
சோமன் - தோஹா,கத்தார்
2010-08-21 11:33:01 IST
அய்யா சாமி, உங்களுக்கு தமிழ் தெரியுமோ தெரியாதோ? தினமலர் படிப்பீங்களோ, மாட்டீங்களோ தெரியாது... ஆனா மனசார குளிர்ந்து கைய தலைக்கு மேல தூக்கி கும்புடுறேன் சாமி. நீங்க இன்னும் பல வருஷம் நல்லபடியா இருந்து நல்ல தீர்ப்ப குடுத்து, உங்க பாதைல இன்னும் பலரை கொண்டு வாங்கய்யா..பாரத மாதா நல்ல புள்ளைங்களையும் பெத்திருக்காப்பா. சந்தோசமா இருக்கு படிக்கவே....

இலங்கையில் விதவைகளாக 68,000 தமி்ழ்ப் பெண்கள்!

 68,000 தமிழ்ப் பெண்கள் கணவனை இழந்த விதவைகளாக வாழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக சண்டை நடந்தது. இதில், தமிழ் இளைஞர்கள் பலர் உயிர் இழந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் போர் முடிவுக்கு வந்தது.இதை தொடர்ந்து தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை அரசு தோராயமான கணக்கெடுப்பு நடத்தியுள்ளது.இதில், 68,000 பெண்கள் விதவைகளாக இருப்பது தெரிய வந்தது.இவர்களது கணவர்களை இலங்கை ராணுவம் போரில் கொன்று குவித்துள்ளது. மேலும், கடந்த 2004ம் ஆண்டு எற்பட்ட சுனாமியிலும் பல ஆண்கள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முழுவதும் நடந்த கணக்கெடுப்பில் தமிழர்கள் பகுதியில்தான் மிக அதிக அளவில் விதவைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இங்கு தோராயமாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மிக துல்லியமாக கணக்கெடுப்பு நடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

விதவைகளுக்கு ரேஷன் மற்றும் தொழிற்பயிற்சி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
பதிவு செய்தவர்: பிளாஷ்லைட்
பதிவு செய்தது: 21 Aug 2010 7:43 pm
வெண்ணுடை தரித்து, மொட்டையடித்து, ருசியான சாப்பாடு கொடுக்காமல், வேறு தரையில் படுத்து தூங்க சொல்லி, இந்த கொடுமை எல்லாம் செய்யாமல். . மறுமணம் செய்து அப்பெண்களுக்கு வாழ்வு கொடுக்க ஆண்கள் முன் வரவேண்டும்.புலிகள் தவறா? ராஜபக்ஷே தவறா? இந்திய அரசு இப்படி பண்ணிடுச்சே என கூக்குரல் இடாமல் ஆகவேண்டிய வேலையை பார்க்க வேண்டும்.

இந்திய குடியுரிமை பெற இலங்கை அகதிகள் விருப்பம்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டாலும், கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் 90,000 இலங்கை தமிழ் அகதிகள் தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்புவதாக தமிழக அரசின் மறுவாழ்வுத்துறையின் இயக்குநர் எம் கலைவாணன்  தெரிவித்தார்.
இவர்களில் பலர் இந்தியர்களை திருமணம் செய்து கொண்டிருப்பதும், படிப்பைத் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள் எனவும் அவர் கூறினார்.   இதற்கு அப்பாற்பட்டு இலங்கையில் இன்னும் முழுமையான இயல்பு நிலை திரும்பவில்லை என்கிற கருத்தும் அவர்களிடையே நிலவுகின்றது எனவும் கலைவாணன் கூறுகிறார்.
தமிழகத்தில் தங்கியுள்ள சுமார் ஒரு லட்சம் இலங்கை தமிழ் அகதிகளில் பத்து சதவீதமானவர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவதற்கு விரும்புகிறார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
அதற்கான முன்னெடுப்புகளை இவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்புடன் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை இயக்குநர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
‘இலங்கையிலேயே இன்னமும் பலர் தங்களது சொந்தப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை இருக்கும் போது, எம்மால் எப்படி அச்சமில்லாமல் திரும்பிச் செல்ல முடியும்” என சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம்,   தாரமங்கலம் பகுதியில் இருக்கும் அகதிகளில் முகாம்களில் உள்ள பலர் கேள்வி எழுப்பினர்.
எனினும் இலங்கையில் இயல்பு நிலை முற்றாக திரும்புமாயின் தாங்கள் திரும்பிச் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்திலேயே பல ஆண்டுகளாக தங்கிவிட்ட இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்

இலங்கை – தமிழக மீனவர்களிடையே இருதரப்பு பேச்சுவார்த்தை : தமிழக மீனவரைச் சுடக்கூடாது எனப் பரிந்துரைக்க முடிவு!


இலங்கை – தமிழக மீனவர்களிடையே உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களைச் சுடக்கூடாது என்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாக். வளைகுடாவில் இணக்கமான மீன்பிடித் தொழில் செய்தல் என்ற தலைப்பில் இந்திய-இலங்கை மீனவர்களிடையே சென்னை பரங்கிமலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இந்தப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 23ஆந் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறுகையில்,
“இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியவை.
எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது? அதை எப்படித் தடுப்பது? மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறோம்.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை.
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களைச் சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.
கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் அது இலங்கைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இப்பகுதியைப் பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளைக் காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. ஆனாலும் அவர்கள் மீன் பிடிப்பதில் மீனவர்களான எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றவை. அவற்றுக்கு இலங்கையில் தடை விக்திக்கப்பட்டுள்ளது” என்றார்

போதை மருந்து விவகாரம்: பிரபல நடிகைகள் சிக்குகிறார்கள்

கோகைன் போதை மருந்து வாங்கும்போது தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு முன்னணி நடிகைகள் சிலரும் போதை மருந்து பயன்படுத்துவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் கேளிக்கை, பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய ஓட்டல்கள், பஃப்கள் ஏராளமாக உள்ளன. சில முக்கிய பஃப் களுக்கு வரும் வி.ஐ.பி.க்கள், நடிகர், நடிகைகளுக்கு கோகைன் போன்ற போதை மருந்து ரகசியமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக இதுபற்றி ஐதராபாத் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பஃப் மற்றும் ஆடம்பர ஓட்டல்களை போலீசார் மாறுவேடங்களில் கண்காணித்து வந்தனர். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கிரீன் மாஸ்க் அருகே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவரிடம் வாலிபர்கள் போதை மருந்து வாங்கினர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். கோகைன் போதை மருந்து விற்றவர்கள் நைஜீரியாவை சேர்ந்த சிமா கிளமன்ட் (எ) விக்டர், அவரது நண்பர் நரேஷ் என்பதும், அவர்களிடம் கோகைன் வாங்கியவர்கள் பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் ரகுநாத ராஜு என்ற ரகுபாபு (34), பரத் ராஜு (36) என்பது தெரிந்தது. அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறியதாவது,

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வந்தது. பிரபல ஹீரோயின்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள், வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 65 பேர் கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை உபயோகிப்பதாக தெரியவந்தது.

நகரின் பல இடங்களிலும் 9 பெரிய பஃப்களிலும் இது விற்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. பஃப்களில் போதை மருந்து மட்டுமில்லாமல் மது மற்றும் போதை மாத்திரைகளை பெண் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். உகாண்டா, தான்சானியா போன்ற நாடுகளிலிருந்து வந்தி ருக்கும் சிலரும் போதை மருந்து விற்பதாக தெரியவந்துள்ளது. அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். போதை மருந்து கும்பல் விரைவில் பிடிபடும் என்றார்.

போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இன்று காலை போகம்பர சிறைச்சாலை கைதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கைதி சிறையிலிருந்து தப்பியோட முயற்சித்த வேளை சிறை காவலர்களால் சுட்டுக்ககொல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

நடிகை அஸ்மிதா கன்னத்தில் அறைந்துவிட்டார் டைரக்டர்களஞ்சியம்

கன்னத்தில் அறைந்தார் டைரக்டர்:
கதறி அழுதார் நடிகை


‘பூமணி’, ‘பூந்தோட்டம்’ போன்ற படங்களை இயக்கிய மு.களஞ்சியம் ‘கருங்காலி’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். சீனிவாசன் ஹீரோ. அஞ்சலி, சுனிதா வர்மா, அஸ்மிதா ஆகிய 3 பேர் ஹீரோயின்கள்.
இதில் இயக்குநரிடம் புது முக நடிகை அஸ்மிதா கன்னத்தில் அறை வாங்கியதாகக்  பரபரப்பு கிளம்பி உள்ளது.
இது குறித்துட் அஸ்மிதா, ‘’முதலில் சிரிப்பு.. அடுத்த ஷாட்டிலேயே அழுகை என எக்ஸ்பிரஷன் காட்ட வேண்டிய காட்சி. நான் கொஞ்சம் சொதப்பி விட்டேன்.
 ‘நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய கேரக்டரை சொதப்புகிறாயே..’ என்று கத்தியபடி கன்னத்தில் அறைந்துவிட்டார் டைரக்டர். எனக்கு அவமானம் தாங்கவில்லை. ஒரு ஓரமாக போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதேன். அதை அப்போதே மறந்து விட்டேன்.

நான் சொன்னதை வைத்து இப்போது பரபரப்பு கிளப்புகிறார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் களஞ்சியம் இந்த விவகாரம் குறித்து,  ’’ படத்துக்காக மெனக்கெட வேண்டி இருப்பதால் சைக்கோ போல நடந்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். திட்டியது, கன்னத்தில் அடித்தது உண்மைதான். அது தொழிலுடன் சேர்ந்த ஒரு கண்டிப்பு. அவ்வளவுதான்” என்று முடித்துக் கொண்டார்.

தஞ்சை பெரியகோயிலுக்கு ஆபத்தா?

புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின்
ஆயிரமாவது ஆண்டு விழா அரசு விழாவாக அடுத்த மாதம் 25,26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில் கோயிலின் பிரம்மாண்ட கோபுரத்தின் தென்கிழக்கு பகுதியில் 40 அடி தூரத்தில் சுமார் 400 அடி ஆழத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆழ்குழாய் கிணறுதோண்டப்பட்டிருக்கிறது.
இந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து நீர்மூழ்கி மோட்டார் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டால்,  நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு,  அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்த வெற்றிடம் ஏற்பட்டு,  அந்த வெற்றிடத்தின் காரணமாக மண் சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மண் சிதைவு ஏற்படும் போது இந்த பிரம்மாண்ட கோபுரத்தில் விரிசல் ஏற்படவும்,  வாய்ப்புள்ளது.இதனால் இந்த ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு
தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினரால் தஞ்சை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒடடப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்கள் வரலாற்று சிறப்புமிக்க இந்தகோயிலுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று
கோரிக்கை குரல் எழுப்புகின்றனர்.

அதிசய வாழை வாரிவாரி காய்களைக் குவித்திருக்கும் அதிசயத்தைக்

வாழை வாழவும் வைக்கும்.... தாழவும் வைக்கும்...’’ கிராமத்து வாழை விவசாயிகளிடம் இப்படியொரு சொலவடை உண்டு.ஆனால் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அரு கிலுள்ள எழுவரைமுக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாத்துரையை வாழை ஓகோவென உயரத்தில் தூக்கி உட்கார வைத்துவிட்டது.இவரது தோட்டத்து வாழைகள்   வாரிவாரி காய்களைக் குவித்திருக்கும் அதிசயத்தைக் காண படையெடுத்து வருகிறார்கள் அக்கம்பக்க விவசாயிகள்.
நான்கு ஏக்கர் நிலத்தில் கற்பூரவள்ளி, நாடு, கோழிக்கூடு, ரோபஸ்டா என நான்கு வகையாக 4000 வாழைகளைப் பயிரிட்டிருந்தார் அய்யாத்துரை. அதில் கற்பூரவள்ளி மட்டும் இரண்டாயிரம் வாழைகள்.அந்த கற்பூரவள்ளிதான் அய்யாத்துரைக்கு இப்போது பெயரும் பெருமையும் சேர்த்துக் கொடுத்திருக்கிறது. வழக்கமாக கற்பூரவள்ளி  வாழைத் தாரில் சராசரியாக 9-ல் இருந்து 15 சீப்புகள் வரை இருக்குமாம். ஆனால், அய்யாத்துரையின் தோட்டத்து கற்பூரவள்ளி வாழைகளில் ஏறத்தாழ எல்லாமே  சராசரியாக 20-ல் இருந்து 30சீப்புகள்வரை காய்த்திருக்கிறது. அதிகபட்சமாக ஒருசில வாழைகளில் 35சீப்புகள் வரை உள்ளது. சீப்புக்கு ஏறத்தாழ 19காய்கள் என மொத்தத்தில் ஒவ்வொரு வாழைத்தாரும் 500 காய்களை அள்ளித் தந்திருக்கிறது.
அந்த கற்பூரவள்ளிப் பழங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி வாழை மரங்கள் 20 அடியிலிருந்து 25 அடி உயரம் வரை வளர்ந்து இருப்பதால், ஒரு  வாழை மரத்துக்கு ரூ.410 என விலை பேசி சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், புன்னையடியில் உள்ள அவரது சொந்தக் கோயிலில் தோரணம் கட்டு வதற்காக  33 வாழை மரங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்.
இது எப்படி சாத்தியமானது? அய்யாத்துரையிடம் கேட்டோம். “எனக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது!’’என்று நமக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி தந்த அவர், ‘வாழையைப் பற்றி ஒன்றும் தெரியாத இவன் முதல் தடவையே 4000வாழைகளைப் போட்டிருக்கிறானே’என்று சிலர் கேலி செய்ததால் நாம் தோற்றுவிடக்கூடாது என் பதில் உறுதியாக இருந்தேன்.
களை இருந்தால் வாழையைத் தின்றுவிடும் என்பதால் வாழையைச் சுற்றி களையெடுப்பதற் காகவே 10பெண்களை நியமித்தேன்.அதேபோல மற்றவர்களைப் போல ஒரு மாதம் அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை உரம் வைப்பதற்குப் பதில் 15நாட்களுக்கு ஒருமுறை யூரியா மற்றும் டி.ஏ.பி. உரங்களைக் கலந்து, ஒரு வாழைக்கு 300  கிராமுக்கு குறையாமல் உரம் வைத்தேன்.வஞ்சகம் இல்லாமல் தண்ணீரும் பாய்ச்சினேன். அதுதான் விளைச்சலுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்’’ என்றார் அவர்  உற்சாகமாக.
இதுபற்றி ‘தமிழ்நாடு வேளாண் துறையின் தூத்துக்குடி மாவட்ட இணை இயக்குநர் ரஞ்சித் சிங்கிடம் கேட்டோம்.“கற்பூரவள்ளி வாழைத் தார்களில் 20சீப்புகள் வரை இருப்பது அதிசயம்.அதிலும் அய்யாத்துரையின் தோட்டத்தில் எல்லா வாழைகளிலும் 20-க்கும் மேற்பட்ட சீப்புகள் இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.
இயற்கையாக நிலத்தில் சக்தி வாய்ந்த உரம் மக்கி இருந்து அதில் விவசாயம் செய்தால் இப்படி அபரிமிதமான விளைச்சல் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், அய்யாத்து ரையின் தோட்டத்தில் ஏற்கெனவே இரண்டு முறை வாழை பயிரிடப்பட்டிருந்தும் இந்த முறை இப்படி காய்த்துத் தள்ளியிருப்பது ஆச்சரியம்தான்.
களைகளை வளரவிடாமல் தடுத்து அதிக உரம் வைத்துப் பராமரித்ததால் அய்யாத்துரையின் வாழைகள் சாதா வாழைகளாக இருந்தும் இப்படி சாதனை புரிந்திருக்கின்றன. இந்த மாதிரி அபரிமித விளைச்சலுக்கு என்ன காரணம் என ஆராய்ந்து பரீட்சார்த்த முறையிலஅதை மற்ற இடங்களிலும் செய்ய இருக்கிறோம்’’ என்றார் அவர்.
எஸ். அண்ணாதுரை

ராஜீவ் பேச்சைக் கேட்டிருந்தால் ஈழத் தமிழர்கள் அழிந்திருக்க மாட்டார்கள்-கார்த்தி சிதம்பர

ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள்இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும் என்று பேசியுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பர் டூ கோஷ்டியின் தலைவரான கார்த்தி சிதம்பரம் .
கூட்டம் போடாமல் வளர முடியாது:
சென்னை மந்தைவெளியில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கார்த்தி பேசியதாவது:
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடத்த தயங்கி வருகிறது. பொதுக்கூட்டம் நடத்தாமல் காங்கிரஸ் கட்சியால் தமிழ்நாட்டில் வளர முடியாது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சர்ச்சையை கண்டு அஞ்சக்கூடாது. தங்கள் நிலையை விளக்க வேண்டும்.
தமிழும், சிங்களமும் இணைந்து இருக்க முடியாதா?
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இலங்கை பிரச்சினையை பற்றி பேசுவதே கிடையாது.    இந்தியாவில் பல மொழிகள் பேசுபவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதுபோல, இலங்கையில் தமிழ், சிங்களம் ஆகிய 2 மொழிகள் பேசும் மக்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாதா? என்று ராஜீவ்காந்தி கூறினார்.  இதில் என்ன தவறு இருக்கிறது.
ராஜீவ்காந்தி பேச்சை கேட்டிருந்தால், இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேர் அழிந்திருக்க மாட்டார்கள். இலங்கையில் 18 ஆண்டுகளுக்கு முன்னரே அமைதி திரும்பி இருக்கும். இலங்கை பிரச்சினை பற்றி பல ஆண்டுகள் மவுனமாக இருந்ததால் தான் தற்போது நம்மீது சர்ச்சையை கிளப்பி விடுகிறார்கள்
Comments poopathi:  
இந்த உண்மை புலிகளைத்தவிர ஏனையோருக்கு மிக நன்றாகவே தெரியும். புலிகளுக்கும் அவர்தம் தொண்டர் குண்டர் மற்றும் ரசிகர்களும்தான் தெரியவில்லை. நல்லவர்கள் சொல்வதை கேட்பதில்லை என்பதே ஈழத்தமிழர்களின் தாகம். சதா புகழ்மாலை பாடுவதே தமது தேசிய கடமையாக எண்ணி நல்ல சந்தர்பங்களை எல்லாம் தட்டி கொட்டி குட்டிச்சுவராக்கிய தவிர வேறு எதைத்தான் செய்தார்கள்?

பாரிய எரிபொருள் கொள்ளை அம்பலம்: 17 பேர் கைது!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாப னத்திலிருந்து விநியோகிக்கப்படும் எரி பொருட்களை பல்வேறு வழிமுறைகளில் சட்ட விரோதமாக பெற்று சேகரித்து வைத்துள்ள இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பொலிஸ்மா அதிபரின் நேரடி உத்தரவுக்கமைய விசேட அதிரடிப் படையினரும் புலனாய்வுத் துறையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்புகள் மூலம் இவை கைப்பற்றப்பட்டன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான எரிபொருள் மற்றும் எண்ணெய் வகைகளை திருடி நிலத்துக்கு அடியில் குதங்களை அமைத்து சேகரித்து வந்துள்ளனர். இவர்கள் தரக்குறைவான எண்ணெய் வகைகளை கலவை செய்து இலங்கை முழுவதும் விநியோகித்து வந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடவத்தஇ சிரிமெட்டியாகார, தெஹிலவத்த, அத்துருகிரிய போன்ற பகுதிகளில் இவ் வாறான சட்டவிரோத எரிபொருள், எண்ணெய் களஞ்சிய சாலைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் நிலத்துக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குதங்களும், சில இடங்களில் வெளியே பாரிய எண்ணெய்க் குதங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. நீண்ட காலமாக செய்து வந்த பாரிய எரிபொருள், எண்ணெய் மோசடி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி எண்ணெய்க் குதங்கள் கைப்பற்றிய இடத்தில் தரக் குறைவான எண்ணெய் வகைகளை கலப்படம் செய்ததற்கான சான்றுகள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சொலிக்கினம் (களுதெல்) மற்றும் டீசல் உட்பட பெருந்தொகையான எரிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜே. பி. பி. பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரும்இ குற்றத் தடுப்பு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

www.neruppu.com

டப்பிங் டார்ச்சர்,ராதாரவி கலெ‌க்சனைப் பார்த்தோ என்னவோ

சைலண்டாக பல ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு நாளும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் டப்பிங் ஆர்ட்டிஸ்டுகள். நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் ஒருவர் ஒருசில படங்களில் நடித்துவிட முடியும். ஆனால் டப்பிங் யூனியனில் நீங்கள் உறுப்பினராகாமல் ஒரு வ‌ரியைக்கூட பேசிவிட முடியாது.

உதாரணமாக ஒருவருக்கு வித்தியாசமான குரல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவரை தனது படத்தில் பயன்படுத்த இயக்குனர் விரும்புகிறார். ஆனால் அத்தனை எளிதில் அந்த ஆசை நிறைவேறாது. அதாவது குறிப்பட்ட நபர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே அவரது குரலை பயன்படுத்த முடியும்.

இந்த‌க் கறாரான கட்டுப்பாடு காரணமாக, மிஸ்டர் சௌத்‌ரி, யு ஆர் அண்டர் அரெஸ்ட் என அரை வ‌ரி டயலாக் டப்பிங் பேசும் ஆட்களே பல ஆயிரம் ரூபாய் தினமும் சம்பாதிக்கிறார்கள். இந்த யூனியனுக்கு தலைவராக இருப்பவர் ராதாரவி.

கலெ‌க்சனைப் பார்த்தோ என்னவோ, தனது வீட்டின் ஒருபகுதியை டப்பிங் தியேட்டராக்கியிருக்கிறார். வரும் 21 ஆம் தேதி முதல் இந்த டப்பிங் தியேட்டர் செயல்பட உள்ளது.

இப்போது துரோகிப் பட்டியலில் பிரபா கணேசனைச்சேர்த்திருக்கிறார்கள்.

தியாகிகளும் துரோகிகளும்
-கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்  
யார் துரோகிகள்? யார் தியாகிகள்? என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியாகத் தமிழர்கள் இப்போது துரோகிப் பட்டியலில் பிரபா கணேசனைச்சேர்த்திருக்கிறார்கள். அதேபோலத் தியாகிப் பட்டியலில் ஜே.வி.பிசேர்க்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தோடு இணைந்ததற்காக பிரபா கணேசன் தூற்றப்படுகிறார். தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பதைப் போல நாடகமாடும் ஜே.வி.பி பாராட்டப்படுகிறது.அதற்கு இப்போது யாழ்ப்பாணத்தில் வரவேற்பும் அளிக்கப்படுகிறது. இந்தப்பாராட்டுக்கான அடிப்படையே அது அரசாங்கத்தை இப்போது எதிர்க்கிறது என்பதுதான். ஆனால், வடக்குக் கிழக்கை சட்டபூர்வமாகப் பிரித்தது ஜே.வி.பியே என்பதைபலரும் மறந்து வருகிறார்கள். இந்தப் பிரிப்புத்தான் நிர்வாக நடைமுறைகளையும்பிரித்து நடைமுறை ரீதியான நிரந்தரப் பிரிவாக்கியிருக்கிறது.  இது எவ்வளவுஆபத்தானது என்று இவர்கள் சிந்திப்பதாகவேயில்லை. முன்னாள் துரோகிகள் பின்னாளில் தியாகிகள். முன்னாள் தியாகிகள் பின்னாளில் துரோகிகள். இப்படியே கழிந்து கொண்டிருக்கிறது தமிழர்களின் அரசியல் வரலாறு என்று சொல்லிச் சிரித்தார் ஒரு நண்பர். இவர் கடந்த முப்பதாண்டுகளாக தமிழர்களின் அரசியற் போராட்டங்களில் ஈடுபட்டவர். அதனால் தமிழர்களின் அரசியற் போக்குப் பற்றிய கொழுத்த அனுபவம் இவருக்குண்டு. ஆனால், துரோகி தியாகிஎன்ற பிரிப்புகளில் நம்பிக்கையற்றவர். தியாகிகளாலும் எதையும் செய்ய முடியவில்லை.
துரோகிகள் என்றுசொல்லப்பட்டவர்களாலும் வரலாற்றை முன்னகர்த்த முடியவில்லை. ஆனால், துரோகிப்பட்டங்களாலும் தியாகிப் பட்டங்களாலும் காலந்தான் வீணாகிக் கொண்டிருக்கிறது என்பது நண்பரின் நிலைப்பாடு. நண்பர் சொல்லும் இந்த விசயம், முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. தமிழ்ச் சூழலின் மனப்பாங்கு ஏறக்குறைய இவ்வாறு இரண்டு பக்கமும் உயர்த்தப்பட்டசுவர்களுக்குள்ளால்தான் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. துரோகி – தியாகி என்றஇரண்டு பெரிய சுவர்களுக்குள்ளேயே தமிழ்மக்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதைக் கடந்து அவர்களால் வெளியுலகத்தைப் பார்க்க முடியாது. இன்னொரு நண்பர் சொன்னதைப் போல தமிழர்களுக்கு எப்போதும் ஒரு கட்டப்பொம்மனும் எட்டப்பனும ்பண்டாரவன்னியனும் காக்கை வன்னியனும் தேவையாக இருக்கிறது. எப்போதும்கதாநாயகனும் வில்லனும் தேவை. அவர்கள் எம்.ஜீ.ஆரையும் நம்பியாரையும் இந்தப்பரிச்சயத்தோடுதான் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் இங்கே கவனிக்கவேண்டியது. ஆனால், இந்தத் துரோகி – தியாகிப் பிரிப்புகளை ஈழத்தின் முக்கியமான அரசியல்ஆய்வாளர் இருவர் முற்றாகவே நிராகரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ‘யாரும்யாருக்காகவும் தியாகங்களைச் செய்யத் தேவையில்லை. அப்படித் தியாகஞ்செய்வது என்பது ஒருவரின் எல்லையற்ற உழைப்பிலும் வாழ்விலும் பிறர் தங்களுடைய வாழ்வைக்கட்டியெழுப்பவே வழிசெய்யும். இதுவும் ஒரு வகையான கொடுமையே.
அதாவது  தியாகத்தின்பேரால் தம்முடைய வாழ்வை இழக்கும் ஒரு தரப்பை மற்றத் தரப்பு சுரண்டுவதாகவே அமையும். இதை ஏற்கக் கூடாது. ஆனால், பொதுவாழ்வுக்கு வருவோர், போராட்டத்திலும் அரசியலிலும் ஈடுபடுவோர்தங்களை கூடுதலான அளவுக்கு அர்ப்பணித்தால் போதும். அந்த அர்;ப்பணிப்பானது சமூகத்துக்கானதாக, எதிர்கால மக்களுக்கானதாக இருந்தால் போதும் என்பதாகும். ஏறக்குறைய இத்தகைய நிலைதான் இன்று உலகத்தின் பொதுப்போக்காக இருக்கிறது. இதுதான் பல விசயங்களைச் செய்யவும் பலவற்றைப் புரிந்து கொள்ளவும் உதவும். இவ்வாறான ஒரு புரிதலும் நடைமுறையும் அமையும்போதுதான், எதிரிகளைக் கையாளக்கூடிய, நண்பர்களை அரவணைக்கக்கூடிய ஒரு நிலை ஏற்படும். இந்த மாதிரி ஒரு போக்கு வளர்ச்சியடைந்தால்தான் இராசதந்திரம் என்ற அரசியற் பொறிமுறை சாத்தியமாகும்.அதன் சாதனைகள் எட்டப்படும். இதுவே ஒரு வகையில் ஜனநாயகத்தை மலர்விக்கவும ்உதவும். மட்டுமல்ல இத்தகைய சூழலில்தான் பல அரசியற் சக்திகள் செயற்படவும்மக்கள் சுயாதீனமாகத் தமக்கான தேர்வுகளைச் செய்யவும் உதவும். ஆகவே,  தமிழர்கள் முதலில் இந்தத் துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தல்களில் சிறைப்படுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதுவொருஅறிவியல் முடிவு. அனுபவத் தெளிவு.
நண்பரும் ஆய்வாளருமான நிலாந்தன் குறிப்பிடுவதன் சாராம்சத்தை இங்கே மீளவும் நினைவூட்டலாம். எதையும் பிரித்துப் போடும் கறுப்பு வெள்ளைப் பெட்டிகள் இனிவேண்டாம். கறுப்பு வெள்ளை அரசியலின் காலம் முடிந்து விட்டது. அது நமக்குப்பெற்றுத் தந்தது கண்ணீரையும் இரத்தத்தையும் முடிவில்லாத அவலங்களையும் தோல்விகளையுமே. ஆகவே, புதிய அரசியற் பண்பாட்டுக்குச் செல்லவேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அது கறுப்புமல்லாத வெள்ளையுமல்லாத கிறே பொலிற்றிக்ஸ்.அதைப் பற்றியே நாம் இப்போது சிந்திக்க வேண்டியுள்ளது. நமது அத்தனை அனுபவங்களையும் பிடி சாரமாக்கி, நாம் புதிய வீரியத்தைப் பெறவேண்டியிருக்கிறது. இருக்கும் நிலைமைகளின் சரிபிழைகளைப் பற்றியே எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பதைவிடவும் இருக்கவேண்டிய புதிய நிலைமைகளைப் பற்றிச் சிந்திப்பதே இப்போதுமுக்கியமானது. ஏனெனில், நாம் எதிர்கொள்ளவுள்ளது எப்போதும் அடுத்துவரும் கணங்களையே. இந்தக் கணம் என்பது எப்போதும் முடிந்து கொண்டிருப்பது. ஆகவே,எதிர்வரும் கணங்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலையே கூட முறியும்: இளங்கோவன்

காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறினார்.நான் மனதில் பட்ட கருத்தை பேசுகிறேன். அதை தவறாக கருதி டில்லிக்கு கோள்மூட்டி விடுகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லை. சோனியா, ராகுல் கரத்தை வலுப்படுத்துவதே என் நோக்கம். கட்சிக்கு கடுமையாக உழைப்பேன். மனதில் பட்டதை நான் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருப்பேன். என்னைத் தடுக்க முடியாது. சென்னையில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆண்டுகள் பலவாகியும் இன்னும் கட்டப்படவில்லை. அரசிடம் பணம் இல்லையா அல்லது கொடுக்க மனமில்லையா? அரசிடம் பணம் இல்லை என்றால் நாங்களே பணம் வசூலித்து கட்டிக் கொள்கிறோம்.

வலி என்கின்றனர். வலி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. நல்ல காரியத்தை செய்தால் வலி எப்படி ஏற்படும். கூட்டணி தொடரும் என்றால் எப்படி தொடரும். இந்தக் கூட்டணி இன்று மாலை வரை நிரந்தரமாக இருக்கலாம். நாளை என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது.அம்மையார், யாருடன் கூட்டணி வைக்கச் சொன்னாலும் நாங்கள் கூட்டணி அமைப்போம். நான், அம்மையார் என்று சொன்னது சோனியாவை என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்தால் சரியாக இருக்கும் என்று நாங்கள் மேலிடத்திற்கு சொல்லி வருகிறோம். வரும் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

ஜியாவுதீன் - Riyadh,சவுதி அரேபியா
2010-08-21 05:16:05 IST
அதோட மத்திய அரசு இன்று மாலையே கூட கவிழும்னு ஒரு வரி சேர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும். தான் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் என்கிற ரீதியில் ஆளாளுக்கு உளறிக்கொட்டி பத்திரிகைகளுக்கு தீனி போட்டு காமெடி பண்ணுகிறார்கள். சென்ற முறை மத்திய மந்திரி. தன் வாய்க்கொழுப்பால் தேர்தலில் தோற்று நாடாளுமன்ற உறுப்பினராகக்கூட முடியவில்லை. இந்த லட்சணத்தில் தன்னை தமிழக காங்.தலைவர் போல காட்டிக்கொண்டு தனது கோஷ்டியை பலப்படுத்த இயக்கத்தையே பலிகடா ஆக்க முயலுகிறார் இந்த இளங்கோவன்....
மரைக்கார் eastham லண்டன். - london,யுனைடெட் கிங்டம்
2010-08-21 05:13:16 IST
ஏதோ தன் வாலை விட்டு ஆழம் பார்க்குமாம். அதுமாதிரி காங்கிரஸ் இளங்கோவனை விட்டு ஆழம் பார்க்கிறது. காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியாகத்தான் இருக்கிறது. சுமுகமாகவே இருந்துக்கொண்டிருந்தால் கூட்டணி சீட்டு பேரம் சரியாக வராது. திமுக கொடுப்பதை அப்படியே வாங்கிகொண்டு போகவேண்டியதுதான். கொஞ்சமாவது முறுக்கிக்கொண்டு போனால்தான் தான் நினைக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை பெறமுடியும். இதற்காகத்தான் இந்த டிராமா. காங்கிரஸ் மேலிடத்திற்கும் இதெல்லாம் தெரிந்துதான் கண்டும்கானாததுபோல் இருக்கிறது. பழம் தின்று கொட்டையை போடும் சாணக்கியர் கலைஞர் அவர்களுக்கும் இது புறியும். தேர்தல் நேரத்தில் கலைஞர் போடும் கணக்கே தனி. இப்போதைக்கு joker இளங்கோவன் உளறலுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கவேன்டியதில்லை.... 
 
தமிழன் - சென்னை,இந்தியா
2010-08-21 05:03:10 IST
மறுபடியும் வந்துட்டான்யா. இந்த ஆளுக்கு என்ன பேசுரதுருதுன்னு கூட தெரியலியே. இவன் ஒரு பெரியவன்னு ஏன்டா பேச வைக்கிரீங்க...
பில்லா பெரியசாமி - கரூர்,இந்தியா
2010-08-21 04:38:20 IST
இந்த ஆளுக்கு ஏதாவது கிறுக்குப் பிடிச்சுப் போச்சா..! நேதாஜி வழியிலெ போவாங்களாமே.! நேதாஜியைப் பத்தி நினைப்பதற்குக்கூட இவர்களுக்கு தகுதி உண்டா..? இவருடைய கோரிக்கையைப் பாருங்கள். மக்கள் நலத் திட்டங்கள் ஏதாவது இருக்கா.? சொல்றபடி இவர் வெளிப்படையாகப் பேசுவது உண்மைதான்.! இவர் ஜோக்கர் இல்லை..கிறுக்கன்தான் என்று நல்லாவே தெரியுது...!...
ஜெயக்குமார் - இருண்டபாளையம்,இந்தியா
2010-08-21 04:15:03 IST
டேய் செவல... தாவுடா தாவு........
ரங்கராஜ் - லாஸ்ஏஞ்சில்ஸ்யு.எஸ்.ஏ.,இந்தியா
2010-08-21 03:39:13 IST
இலங்கோவநேல்லாம் கருணாநிதிக்கு பேதிக்கு கொடுக்கிறார்..என்ன கொடுமை சார் இது ?தங்கபாலு வுக்கு சரியாக காது கேட்பதில்லை.;கண்ணும் கொஞ்சம் வீக்;;அவரால் என்ன செய்ய முடியும் ? முதல் வர வழக்கம் போல் சோனியாவுக்கு மடல் எழுதுங்களேன் .அப்போதாவது இந்த கொசு தொல்லை ஒழியுதா .பார்ப்போம்....
KARUPPIAH சத்தியசீலன் - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-08-21 03:23:46 IST
இளங்கோவன் சொல்வது மிக அருமை.தங்கபாலு விற்கு தான்,புரியவில்லை....
raj - ooty,இந்தியா
2010-08-21 03:11:13 IST
நீங்க எல்லாரும் சேர்ந்து தாத்தாவுக்கு இரத்த கொதிப்பு உண்டாக்கிறிர்களே. பாவம்யா கலைஞர் தாத்தா....
ரமேஷ் சுப்புராஜ் - போஸ்டன்,யூ.எஸ்.ஏ
2010-08-21 02:53:59 IST
இளங்கோவன் பின்னிடீங்க போங்க!!! Congratulations...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-21 02:35:59 IST
ஹஹஅஹஹா... செம சிரிப்பு. யோவ் இளங்கோவா... சூப்பர் யா. நீயும் அம்மாவும் சேந்து அவருக்கு வலிய கொடுக்குறீங்களோ இல்லியோ, கிலிய நல்லாவே கொடுக்குறீங்க. அம்மான்னு நான் சொன்னது அந்தம்மாவன்னு நீ புரிஞ்சுக்கணும். ஷப்ப்பா... அரசியல் நடத்துறது ரொம்ப கஷ்ட்டமடா. மஞ்சதுண்டோட நிலைமைல இருந்து பாரேன். இனி ஒரு, ஒரு வருசத்துக்கு இவனுக கொடுக்கிற பீதியெல்லாம் தாண்டி, தினம்தினம் பேதி ஆகி, படுக்கைலையே கழிஞ்சு, இவனுகள சமாளிச்சு, அசிங்கமா பேசி, அறிக்கை விட்டு, ஜெயிச்சு ஆட்சிய புடிக்கிரதுக்குள்ள தாலியே அந்து போவும் போல இருக்கே. ஷப்ப்பா... நல்ல வேலடா சாமி. நாமெல்லாம் இந்த கருமம் புடிச்ச அரசியல்ல இல்ல. இப்படி தெனம் தெனம் செத்து பொழைக்கிரதுக்கு, நாலு தெருவில அண்டாவுக்கு ஈயம் பூசி பொழச்சுக்கலாம்....
zamir - chennai,இந்தியா
2010-08-21 02:32:29 IST
Mr.EVKS, Did you forget great leader Kamaraj, Rajaji? Why you are so much after the alliance. Do not follow the path of Vaiko. You dont have followers and dont spoil your future...
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-08-21 02:07:51 IST
யோவ் இளங்கோ நீ,வாசன்,சிதம்பரம்,தங்கபாலு தனி தனி கோஷ்டியாக இருக்கும் வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையாது? உங்கள் நால்வரையும் கட்சியை விடு தூக்கினால் இந்த தடவை அம்மா,அய்யா காலில் விழ தேவையில்லை.அம்மா கொடநாட்டில் இருந்து வீசும் பிச்சைக்கு விலை போய்விடாதே,இத்தாலியில் பிறந்தவர்களுக்கு இந்தியாவில் ஆட்சி அமைக்க அதிகாரம் கிடையாது ன்னு சொன்னிச்சு, ஜாபகம் வருதா?அம்மாவிடம் நிறைய கருப்பு பணம் பீர் மன்னன் மல்லையா கொடுத்தது கோடி கணக்கில் இருக்கு.கோடியை வாங்கிக்கிட்டு காங்கிரஸ அடமானம் வைத்துவிடாதே.நல்ல இளைஞ்ர்கள் சேர்ந்து காங்கிரஸ் ஐ வலுவான காங்கிரஸ் உருவாகனும்.நல்ல வாய்பு,ராகுல் கவனிப்பாரா?...
ராஜவன்னியன் - குவைத்,குவைத்
2010-08-21 01:47:24 IST
அடங்க matiya evk? enna than unn arasiyal selvakku nu varum therthal therimudi? vaikanum...
Sathiya USA - USA,இந்தியா
2010-08-21 01:37:15 IST
True..True...True... Ilangovan & Vaiko are the one of few good politicain that TN has now....
Bhushan - Adelaide,இந்தியா
2010-08-21 01:32:08 IST
நினைப்பு தான் பொளைப்ப கெடுத்துச்சான் இளங்கோவா ! என்ன செய்ய டெல்லி கைப்புள்ள வேலய பண்ணி காலம் ஓட பழகிபோச்சு ...! ஐயோ ! ஐயோ !...
பார்த்திபன் - சென்னை,இந்தியா
2010-08-21 01:31:41 IST
ஐயோ, என்னா ஒரு பூரிப்பு முகத்துல! மேல இருந்து கிரீன் சிக்னல் குடுக்காமலா இப்படியெல்லாம் ஆடுறீங்க. திமுக-வுடன் இருந்தால் தேர்தல்ல நீங்க தோக்கப் போறது உறுதி - போன தடவையே பக்காவா தெரிஞ்சுகிட்டீங்க! அதான் இந்த வாய்ச்சவடால்! ஆனாலும், பெரிசு எந்த ரூபத்தில் பழிவாங்கும்னு யாருக்கும் தெரியாது - என்ன மாதிரி பொது ஜனங்களுக்கு உற்சாகமா இருக்கு!...
காண்டீபன் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-21 01:27:41 IST
நல்லாதானே போயிட்டு இருந்துச்சு? ...................... மானம் கேட்ட பொழப்பு, இந்த அரசியல்வாதிகளோடது....
குமார் - எட்டையபுரம்,இந்தியா
2010-08-21 01:24:18 IST
இளங்கோவன் உங்க தில் எனக்கு பிடிக்கிறது!!! ஆனால் கொஞ்சமாவது உங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலாவது உங்களால் முடிந்த மக்கள் நலப் பணிகளை செய்தால்தான் நீங்கள் அரசியலில் யாரையும் சாராமல் ஜெயிக்க முடியும். சும்மா விஜயகாந்த் சினிமா டயலாக் பேசுவதில் ஒரு அர்த்தம் இல்லை!! இது பரபரப்புக்கு மட்டும் தான் தீனி போடும்!!!...

ஜெயலலிதா மீது அழகிரி பாய்ச்சல்

சேலத்தில் மத்திய அமைச்சர் அழகிரி:
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியின் திட்டங்களை எல்லாம் இழிவுபடுத்தும் வகையில் ஒரு அம்மா, ஊருக்கு ஊரு போய், "மைனாரிட்டி' அரசு என்று பேசி வருகிறார்.முதல்வர் கருணாநிதி 4 மணிக்கு எழுந்து, பேப்பர் படித்து, முரசொலிக்கு எழுதுகிறார்; கட்சிக்காரர்களை பார்க்கிறார்; பின், தலைமைச் செயலகத்துக்கு சென்று, மக்களுக்கு திட்டங்களை தீட்டுகிறார்; தினந்தோறும் மக்களை சந்திக்கிறார்.ஆனால், அவரோ (ஜெயலலிதா) ஊட்டிக்கு போய் விடுகிறார். கட்சி அலுவலகத்துக்கு வரும் தலைவருக்கு வரவேற்பு கொடுக்கும் கட்சி அ.தி.மு.க., மட்டுமே. தெய்வத்தாய், பராசக்தி, தர்மத் தாய் என்றெல்லாம் கட்-அவுட் வைப்பவர்கள், ஜெயலலிதாவை, "கன்னித்தாய்' என்று குறிப்பிட்டு கட்-அவுட், போஸ்டர் அடிக்க முடியுமா? அது போன்று அவரை அழைக்கவாவது முடிகிறதா? இவ்வாறு அழகிரி பேசினார்.

பாபு வெங்கடராமன் - சென்னை,இந்தியா
2010-08-21 05:43:17 IST
அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளது என்று சொல்லுவார்கள். அந்த வார்த்தையை மு.க.அழகிரி இன்று நிரூபித்துள்ளார். ஒருவனுக்கு ஒருத்தி என்றுதான் சட்டம் சொல்கிறது. அதுவும் அரசுப் பணியாற்றும் ஒருவருக்கு கட்டாயம் இச்சட்டம் பொருந்தும். தமிழக முதல்வர் என்கின்ற வகையிலும், தமிழக அரசின் மாத சம்பளம் பெரும் ஊழியர் என்கின்ற முறையிலும் உங்கள் தந்தைக்கும் இச்சட்டம் பொருந்தும். ஊரறிய ஒரு தவறு செய்தால் அது "வீரச்" செயல் ஆகாது. மத்திய அமைச்சரவையிலே மந்திரி பதவி பெற்ற பிறகு எத்துனை முறை நீங்கள் பாராளுமன்றத்திற்கு சென்றீர்கள், உங்கள் இலாகா சம்பந்தப்பட்ட எத்துனை கேள்விகளுக்கு நீங்களே ஆஜராகி பதில் சொல்லியிருக்கிறீர்கள் என்று புள்ளி விவரத்துடன் பேச முடியுமா?? அரசு விழாக்களுக்கு செல்லும்பொழுது ஒரு மனைவி, உண்ணாவிரதம் இருக்கும்பொழுது ஒரு மனைவி, திரைப்படத்துறை விழாக்களில் கலந்துகொள்ள என்று இப்படி மனைவியையும், துணைவியையும் அழைத்துக்கொண்டு சுற்றும் உங்கள் தந்தைக்கு தயவு செய்து "வக்காலத்து" வாங்க வேண்டாம். தங்களுக்கு அளித்துள்ள மத்திய அமைச்சரவைப் பதவிக்கு முக்கியத்துவம் அளித்து அதற்குப் பதில் பேசுங்கள். வெட்கக்கேடான விசயம், சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊதிய உயர்வு. உங்கள் "லாவணி" சண்டைகளுக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை. மக்கள் நலனில் நீங்கள் காட்டப்போகும் "அக்கறைக்குத்" தான் வாக்களித்துள்ளோம். முதலில் இதனை உணர்ந்துகொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துகொள்ளுங்கள்....
ஜெயக்குமார் - இருண்டபாளையம்,இந்தியா
2010-08-21 04:13:38 IST
யு மீன் விர்ஜின்???...
karuppiah சத்தியசீலன் - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-08-21 03:42:01 IST
சர்க்காரிய கதாநாயகன்,வீராணம் வீரர்,குடமுருட்டி குண்டு,கோதுமை பேர உழல் மன்னன்,பூச்சி மருந்து தெளிப்பு உழல் விஞ்ஜானி,என்று பெயர் தி தீ சக்திக்கு வைக்கலாம்....
தமிழன் - USA,யூ.எஸ்.ஏ
2010-08-21 03:30:40 IST
அண்ணே ரொம்போ தெளிவா பேசறோம்னு வாய்க்கு வந்தது அல்லகைகள் சொல்றத கேட்டு பேசிடாதிங்க. அப்புறம் அவங்க திரும்பி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க? சோ கொஞ்சம் அடக்கி வாசிங்க....
உணர்வில் தமிழன் - chennai,இந்தியா
2010-08-21 03:28:43 IST
பெண்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி இதை விட கேவலமாக வேறு யாரும் விமர்சிக்க முடியாது ! அதுவும் ஒரு முன்னால் முதல்வரை பற்றி,காசு கொடுத்து ஒட்டு வாங்கி ஜெய்த்து பாராளுமன்றத்தில் ஒரு வருடத்திற்கு "ஒன்றை நாள்" மட்டுமே வருகை தந்த "மாண்புமிகு மானங்கெட்ட மத்திய அமைச்சர்" பேசி இருப்பது - தமிழ்நாட்டுகே பெருத்த அவமானம்! இவரோட அப்பாவும்,குடும்ப உறுபினர்களும் "கூடி சேர்ந்து கோடி சேர்த்த" கொள்ளைகளை கேள்வி கேட்டதற்கு பதில் சொல்ல தெரியாமல்,இப்படி தனது "தன்மான அப்பாவை" போல தனயன் "நாகரிகமாக" விமர்சனம் பண்ணி இருப்பதை எந்த ஒரு தி.மு.க அடிவருடிகள் கூட ஏற்றுகொள்ள மாட்டார்கள்!...
குமார் - கோயம்புத்தூர்,இந்தியா
2010-08-21 03:24:26 IST
மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒருதரம் நிரூபித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நாட்டிற்கு இதை விட பெரிய பிரச்சினை எதாவது உண்டா?...
செந்தில் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-08-21 03:04:31 IST
முதலில் எப்படி பேச வேண்டும் என்று கற்று கொள்ளுங்கள். what ever it is. you should know how to comment about woman. being in such a responsible position, you should control your tongue....
rajasji - munich,ஜெர்மனி
2010-08-21 02:43:38 IST
கன்னித் தாய் என்ற புனித வார்த்தையை நீ கண்ணியமற்ற முறையில் பயன்படுத்தியதற்க்காக...எனது ஆழ்ந்த வருத்தத்தையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! அடுத்து நீ சுத்த கூமுட்டை !!! புரட்சித் தலைவிய பராசக்தி என்று சொன்னதற்கு அர்த்தம் சொன்னால் உனக்கு புரியாது ! வாயப் பொத்திக்கிட்டு பேசாமப் போ !!! @ rajasji...
2010-08-21 02:33:24 IST
அழகிரி உனக்கு நாவடக்கம் தேவை. இல்லை என்றால் சந்திக்க வேண்டி வரும்...
பிரவீன் kumar - coimbatore,இந்தியா
2010-08-21 02:09:31 IST
Unga appa rmpa nallavaru...ramanuku next DR.Karunanithi dan.....Manaiviyar matrum thunaiviyar......semai cmdy minister sir...Don't talk too much....
சோமன் - தோஹா,கத்தார்
2010-08-21 02:02:42 IST
அடடடடா......என்னா வில்லத்தனம்... என்னா வில்லத்தனம்...சபாஷ் புலிகேசி.......
senthilkumar - TUTICORIN,இந்தியா
2010-08-21 01:34:51 IST
MR M K YOU DONOT KNOW WHAT WAS HAPPEND IN TUTICORIN. AL READY THEY DONE THAT MISTAKE & PUNISHED BY PEOPLE OF TUTICORIN.SO THEY NEVER DO THE SAME MISTAKE . ( ALREADY THEY IMPOSED ON VIRGIN MARY IN TUTICORIN A I D M K GOT VERRY GOOD PUNISHMENT)...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-21 01:26:07 IST
பெண்கள இழிவா பேசாதே. இன்னிக்கு கூட்டம் கூட்டமா மக்கள் அந்தம்மா பின்னால ஓடுறத பாத்து வயிதெரிச்ச்சள்ள பொது இடத்தில இவளோ கேவலமா பேசுற நீ, நாளைக்கே தேர்தல்ல தோத்து போய்ட்டா ஒட்டு போடலேன்னு எங்க ஊட்டு பொண்ணுகள கேவலமா பேச மாட்டேன்னு என்ன நிச்சயம்?. இன்னிக்கு எங்க பொம்பளைங்க ஒட்டு போடுறாங்க, நீ வந்தா ஆரத்தி எடுக்கிறாங்க, நீ ஜெயிச்சுட்ட, அதனால அவங்கள பத்தி ஒன்னும் பேச மாட்டேன்கிற. நாளைக்கே பொம்பளைங்க ஒட்டு கம்மியா போயி தோத்து போய்ட்டா, அப்போ எங்களையும் இப்படிதான் எங்க போன, எவன் கூட போனான்னு கேவலமா பேசுவியா? இன்னிக்கு அந்தமாவ இவளோ கேவலமா பேசுற நீ, நாளைக்கே உனக்கு ஒட்டு போடுற பொம்பளைங்கள அசிங்கபடுத்த மாட்டேன்னு என்ன நிச்சயம்? சொல்லு. அது சரி, எங்கள கேவலமா பேசின குஷ்பூ கூட உறவு வெச்சுக்கிட்ட ஆளுங்கதான நீங்க. அப்புறம் உங்ககிட்ட வேற என்னத்த எதிர்பாக்க முடியும். இங்க இவளோ பெண் வாசகிகள் இத படிக்கிறீங்களே, உங்களுக்கெல்லாம் சொரனையே இல்லியா? எதாச்சும் சொல்லுங்களேன் பார்ப்போம். பொம்பள நெனச்ச பிரபஞ்சத்தையே மாத்த முடியும்ன்னு வாய்கிழிய பேசுறீங்களே, எதாச்சும் சொல்லுங்க. ஆயிரம்தான் இருந்தாலும் ஒரு பெண்ணை இப்படி தரகுறைவா பேசுவதை ஒத்துக்குறீங்களா? சொல்லுங்க. நீங்களும் ஒரு பொம்பளதான. வாயத்தொறந்து சொல்லுங்க. அட ச்சை, பரவல்ல, கடைசிக்கு ஓட்டு சீட்லயாச்சும் சொல்லுங்க....
கூலி - saakkadai,இந்தியா
2010-08-21 01:25:26 IST
அய்யா அழகிரி! நான் ஒரு கட்சியும் சாராதவன்! ஆனாலும் தங்கள் பேச்சில் ஒரு மத்திய மந்திரிக்கான நளினம் இல்லை அய்யா. தயை கூர்ந்து தங்களின் மதிப்பை உயர்த்தி கொள்ளுங்கள்.. நீங்கள் இப்படியே பேசினால் உங்கள் ஒருத்தர் மூலமாகவே அனுதாப அலை பெற்று அந்த அம்மையார் பதவி பெறுவது உறுதி!...
Arsath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-21 01:24:24 IST
மத்திய அமைச்சருக்கு பொதுமக்கள் சார்பாக ஒரு வேண்டுகோள் . 'அமைச்சராக இருக்கிறீர்கள் கொஞ்சம் கண்ணியமாக பேசுங்கள் , உங்கள் அப்பாவை போல் கண்ணிய குறைவாக யாரையும் பேசாதீர்கள் '. ஓ இதுதான் 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் ' கதையா ? ரொம்ப கேவலமா இருக்கு . இவர்கள் பேச்சை கேட்டால் காதை பொத்திக்கொள்ள வேண்டியது தான் ....
ஜெய் - தூத்துக்குடி,இந்தியா
2010-08-21 01:14:35 IST
அழைத்தால் அன்றே கட்டம் ரெடி ஆய்டும்...
Arsath - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-21 01:04:23 IST
ஒரு மத்திய அமைச்சர் இவ்வளவு இழிவாக ஒரு பெண்ணை பேசுவது மிகவும் கண்டிக்க தக்கது . என்ன செய்வார், இவர் வந்த குளம் அந்த மாதிரி . அதான் மந்திரி இப்படி புலம்புகிறார் ....
Guru - Tuticorin,இந்தியா
2010-08-21 00:59:48 IST
Mr Alageri, Please speak properly in the public meeting and learn how to speak from your Father and go for some spoken english class, It will help you for your Job. Please don't spoil your Father's name....
மஸ்தான் - வில்லிர்ஸ்லேபெல்,பிரான்ஸ்
2010-08-21 00:41:02 IST
எது எப்படியோ மேடையில் கொஞ்சம் நாகரிகமாக பேசினால் நல்லது. என்ன இருந்தாலும் அவர் ஒரு தலைவர் மற்றும் முன்னால் முதல்வர்....

குமுதம் பிரச்சினை ஓய்ந்தது!- கருணாநிதிக்கு 'இந்து' ராம் நன்றி !

குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக தீர்ந்துவிட்டதாகவும், இதற்கு வழிகோலிய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார்.

குமுதம் குழுமத்தை ஆரம்பித்த எஸ் ஏ பி அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு, அந்தக் குழுமத்தின் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நிர்வாக ஆசிரியராகவும், உரிமையாளராகவும் இருந்தார் அவரது மகன் டாக்டர் எஸ் ஏ பி ஜவஹர் பழனியப்பன். அமெரிக்காவில் மருத்துவராகவும் பணியாற்றுகிறார் இவர்.

குமுதத்தில் பதிப்பாளராக இருந்த பி வி பார்த்தசாரதியின் மகனான என் வரதராஜனுக்கு நிர்வாக இயக்குநர் பதவி அளித்து, நிறுவனத்தை அவரது பொறுப்பில் விட்டிருந்தார் ஜவஹர். அவருக்கு சம்பளமாக ரூ 6.25 லட்சம் அளித்து வந்தார்.

ஆனால் குமுதம் நிர்வாகத்திலும், ஆசிரியர் குழு விவகாரங்களிலும் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சுமூகமான உறவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கூறி வந்தனர்.

டாக்டர் ஜவஹர் பழனியப்பன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரதராஜன் மீது புகார் கொடுத்தார். அதில் குமுதம் அலுவலகத்தில் வரதராஜன் பெரும் நிதி மோசடி செய்து விட்டதாகவும், தனக்கு வழங்கப்பட்ட ரூ 6.25 லட்சம் சம்பளத்தைத் திருத்தி ரூ 10 லட்சமாக மோசடி செய்து பெற்று வந்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். ரூ 25 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்ததாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து வரதராஜன் கைது செய்யப்பட்டார். ஆனால் முதல்வர் கருணாநிதியின் தலையீட்டின்பேரில், அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, குமுதம் பிரச்சினை சுமூகமாகத் தீரவேண்டும் என்பதற்காகவே வரதராஜனை பிணையில் விடுவிக்கச் சொன்னதாகக் கூறினார்.

இதற்கிடையே குமுதம் விவகாரத்தில் ஜவஹருக்கும் வரதராஜனுக்கும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சி அரசின் ஆதரவுடன் தொடங்கியது. கடந்த நான்கு மாதங்களாக இந்த முயற்சி நடந்து வந்தது.

இருவருக்கும் பொது நண்பரான இந்து நாளிதழ் முதன்மை ஆசிரியர் என் ராமின் இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று இறுதிச் சுற்று சமரசப் பேச்சு நடந்தது. இதில் ஜவஹர் மற்றும் வரதராஜன் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.

இதன் முடிவில் இரு தரப்புக்கும் சுமூகமான ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதில் இருவரும் கையெழுத்திட்டு ஏற்றுக் கொண்டனர்.

இதன்படி குமுதம் குழுமத்தின் இரு இதழ்கள் வரதராஜன் மற்றும் டாக்டர் பி. ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும், மீதம் உள்ள ஏழு இதழ்களின் உரிமை டாக்டர் பழனியப்பன் மற்றும் அவரது தாயார் கோதை அண்ணாமலை ஆகியோருக்கும் என முடிவு செய்யப்பட்டது.

குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து என் ராம் ஒரு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

அதில், குமுதம் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காணப்பட்டுவிட்டதாகவும், இந்த விவகாரத்தை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தது மட்டுமின்றி, அதற்கான தீர்வுக்கு வழியமைத்துத் தந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் கோடியை திமுக செலவிட்டாலும் அதிமுக வெல்வது உறுதி-வைகோ

நாகர்கோவில்: திமுக எத்தனை ஆயிரம் கோடியைச் செல்வு செய்தாலும் வெல்லப் போவது அதிமுக கூட்டணிதான் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக அரசு மீது எல்லா தரப்பு மக்களுக்கும் வெறுப்பு வளர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்கள் [^] வெறுப்படைந்து போய் உள்ளனர். இதன் வெளிப்பாடாகதான் கோவை மற்றும் திருச்சி [^]அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நடத்திய போராட்டத்தில் மக்கள் குவிந்தனர்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுகவின் நிலைப்பாடுதான் தமிழ்நாட்டுக்குரிய நியாயத்தை கிடைக்க விடாமல் செய்கிறது.

தமிழ்நாட்டில் அதிமுக அணி மிக வலுவாக உள்ளது. இந்த அணியில் மேலும் கட்சிகள் சேருமா? என்பது போன்ற யூகங்களுக்கு ஜெயலலிதாதான் பதிலளிக்க வேண்டும்.

ஆனால், சட்டமன்றத் தேர்தலில் திமுக எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் அதிமுக அணி தான் வெற்றி பெறும் என்றார் வைகோ.

பதிவு செய்தவர்: dsds
பதிவு செய்தது: 21 Aug 2010 3:40 am
அதிமுக 190 வெற்றி பெறும்

பதிவு செய்தவர்: aks
பதிவு செய்தது: 21 Aug 2010 2:06 am
திமுக எத்தனை ஆயிரம் கோடியைச் செல்வு செய்தாலும் வெல்லப் போவது அதிமுக கூட்டணிதான் - ஆமா அந்த கூட்டணியில உங்க கட்சிக்கு சீட் உண்டா

புலிகளுக்கு வங்கியில் கடனெடுத்துக் கொடுத்துவிட்டு குமறிக்கொண்டிருப்பவர்கள

Mr.thamingiland  பிச்சையெடுக்க வாறார் கவனம்.
முள்ளிவாய்க்காலில் புலிகள் முடிந்து போனபின் புலம்பெயர்நாடுகளில் காசு சேர்த்துக்கொண்டிருந்த புலிப்பினாமிகளுக்கு தலையில் இடிவிழுந்ததுபோலிருந்தது. உழைக்காமல் வேலைக்குப்போகாமல் சும்மா இருந்து மக்களிடம் போராட்டத்தைச்சாட்டி காசு சம்பாதித்து சொகுசாக இருந்த புலிப்பினாமிகளுக்கு ஒரே யோசனை. சனத்திடம் காசு கேட்கப்போவதற்கு என்ன சாட்டு சொல்லலாம் என தலையைப்போட்டு பிச்சுக்கொண்டிருந்தார்கள். போதாதிற்கு நெடியவன் கே.பி சண்டை வேறு.  இந்த நிலமையில் இலங்கை அரசாங்கம் கே.பிக்கூடாக புலம்பெயர் புலிகளை அழைத்து சந்திக்க வைத்தது.
அப்பாடா பிழைப்பதற்கு ஒரு வழி கிடைத்து விட்டது. கே.பி ஒரு புனர்வாழ்வு அமைப்பை நிறுவியுள்ளார். நாடியை தடவிக்கொண்டு காசுக்கு என்ன வழி என்று இருந்த புலிகளுக்கு சுவாசிக்க ஒரு ஒட்சிசன் கிடைத்து விட்டது. புலிகள் ஓகொ என்றிருந்த காலத்தில் புலிகளோடு ஒட்டி காசு பார்த்த bogus fellows  தற்போது கே.பியுடன் சேர்ந்து மீண்டும் புலம்பெயர் மக்களிடம் பிச்சையெடுக்க கிளம்பி விட்டார்.
என்னவொரு ஈனத்தனமான பிழைப்பு. ஊனமுற்றவர்களைத்தான்  சமூகம் பிச்சையெடுக்கின்ற நிலைமைக்குத் தள்ளி விடும். கை;குழந்தையை வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பவர்களும் இருக்கிறார்கள். கையில் அல்லது காயில் புண்ணை வைத்துக்கொண்டு அதனை மாற்றாமல் அதை வைத்துக்கொண்டு பிச்சையெடுப்பார்கள்.
கடந்தகாலங்களில் புலிகள் தமிழ்மக்களை வைத்து பிச்சையெடுத்தார்கள். அது மிரட்டல் பாணிப் பிச்சை. இவ்வளவு போடு என்கிற மிரட்டல். தமிழ்மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால் புலிப்பினாமிகள் புலி முக்கியஸ்தர்களுக்கு ராஜவாழ்க்கை கிடைத்தது. இப்போ அகதிகளாக அல்லப்படும் மக்களைச்சாட்டி பிச்சையெடுக்க வருகிறார்கள்.
முன்பு போலில்லாமல் கணக்கு கேளுங்கள். சுனாமிக்கு சேர்த்த பணத்திற்கு இந்த புலிப்பினாமிகள் தமிழ்மக்களுக்கு கணக்கு காட்டவில்லை. புனர்வாழ்வோ அல்லது அபிவிருத்தியோ கணக்கு காட்டாத எவனுக்கும் பணம் கொடுக்கக்கூடாது. ஏனென்றால் தாங்கள் உழைக்காமல் மக்களின் பணத்தில் மசாச்சுக்குப் போகிறவங்கள் இவங்கள் கவனமாக இருக்க வேண்டியது உங்கள் கடமை. புலிகள் தமிழ்மக்களின் கோவணம் வரை உருவியெடுத்தாங்கள். உங்களிடம் மிஞ்சியிருப்பது கோவணம் மட்டும்தான். அதையும் இவங்கள் உருவாமல் பார்த்துக்கொள்வது உங்கள் கடமை.
முக்கிய குறிப்பு:
புலிகளுக்கு தொகையாக வங்கியில் கடனெடுத்துக் கொடுத்துவிட்டு குமறிக்கொண்டிருப்பவர்கள் சுவிஸ் நாட்டில் அதிகம். எதற்கும் அவர்களிடம் சென்று தற்போதைய அவர்களின் நிலமைகளை அறிந்துகொண்டால் விழித்துக்கொள்ளலாம்.
thanks.www.teavadai.wordpress.com

கொக்குவில் பகுதியில் மலிவு விலைகளில் இராணுவத்தினரின் உதவியுடன் வர்த்தகர்கள் வியாபாரம

கொக்குவில் பகுதியில் இராணுவத்தினரின் உதவியுடன்  வர்த்தகர்கள் மீண்டும் வியாபாரம்>கொக்குவில் பிரம்படி ஸ்ரேசன் றோட் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சிங்கள வர்த்தகர்கள் மீதான தாக்குதலை அடுத்து ஸ்தம்பித நிலையிலிருந்த வியாபாரம் நேற்று மீண்டும் இராணுவப் பாதுகாப்புடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது நேற்றுக்காலை தொடக்கம் மாலை வரை 6 இற்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து மலிவு விலைகளில் பொருள்களை விற்றுள்ளனர்.
இவர்களது வியாபாரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் அந்தப் பகுதியில் இராணுவத்தினரும் கடமையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தின் பின்னர் கொக்குவில் பகுதிகள் எங்கும் இராணுவத்தினர் சோதனை,காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிங்கள வர்த்தகர்கள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதும் குறிப்பிடத்தக்கது

kilinochchi G.A, காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென

இடம்பெயர்ந்தோர் காணிகளை வெளியார் கைப்பற்றும் நிலைமை கிடையாது : அரச அதிபர

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை வெளியார் அடாத்தாகக் கைப்பற்றும் நிலைமை எதுவும் கிடையாதென மாவ ட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். காணி உரிமையுள்ள மக்கள் உண்மை யான உறுதிகளுடன் வருவார்களேயானால் அவர்கள் தமது சொந்தக் காணிகளில் குடியமர அனுமதிக்கப்படுவார்களென்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லையென்றும் அரசாங்க அதிபர் கூறினார்.
தமது சொந்தக் காணியை எவராவது அடாத்தாகக் கைப்பற்றியிருந்தால், பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் ஊடாக அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சிக்குத் தென் பகுதியிலிருந்து செல்லும் சிலர் மக்களின் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை நிராகரித்த அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன், அவ்வாறான தகவல்களோ முறைப்பாடுகளோ தமக்குக் கிடைக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.
கடந்த சமாதான முன்னெடுப்பு காலத் தில் காணிகளை விற்றவர்கள், அதற்கான உரிமை மாற்றத்தைக் காணி உறுதிகளில் மேற்கொள்ளத் தவறியிருக்கிறார்கள். இதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டிருக் கின்றன. அவ்வாறு சிக்கல்களை எதிர் நோக்குபவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அரச அதிபர் கூறினார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்தும் இன்னமும் மீளக்குடியமர முடியாமல் முகாமில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களைத் திரட்டி வருவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர், அவர்கள் என்ன காரணத்தினால் மீளக்குடியமர முடியாதுள்ளார்கள் என்பதை ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முழுமைப் படுத்தப்படாமையினாலும் பாதுகாப்புக் காரணங்களாலும் சில குடும்பங்கள் மீளக்குடியமர்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தவிரவும், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்துவதற்குத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட அரச அதிபர் தற்போது வெளி மாவட்டங்களில் தங்கியிருந்து மீளவும் வருபவர்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். நேற்றைய தினம் கரைச்சி பகுதியில் 70 குடும்பங்கள் மீளக் குடியேறியதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், திருகோணமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தற்போது சொந்த இடம் திரும்பி வருவதாகவும் அவர் சொன்னார்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

3 இடியட்ஸில் தமன்னா?

3 இடியட்ஸில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஷங்கர் அலுவலக வட்டாரம் கூறும் செய்தி வேறு விதமாக இருக்கிறது.

ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் 3 இடியட்ஸை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயா‌ரிக்கிறது. இரு மொழிப் படத்தையும் ஷங்கர் இயக்குகிறார். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.

3 இடியட்ஸ் ‌‌ரீமேக்கில் த்‌ரிஷா அல்லது இலியானா நடிப்பார்கள் என முதலில் கூறப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவல்... இவர்கள் இருவருக்கும் பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட உள்ளாராம். தமன்னாவை தேர்வு செய்தது ஷங்கர் எனவும் கூறப்படுகிறது

யாழ் குடா நாட்டின் தரைக்கீழ் நீர் வளம் - பாகம் 01

(பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்)
தரைக்கீழ் நீர் வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வடமாகாணத்தின் மொத்த குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ் குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர் வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத் தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசீன் காலச் சுண்ணாம்புப் பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும்.

சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புக விடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது.

உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர் நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ்வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்கின்றது.

ஆகக்கூடிய தடிப்பு 100110 வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர் நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.

சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்ற மேற்பாகத்திலும் காணப்படுகின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது.

மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாக காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.
(தொடரும்.)