புதன், 9 நவம்பர், 2016

மோடி வந்தா சேஞ்ச் வரும் என்னாங்க .. இப்ப சேஞ்சுக்கே அலையற சேஞ்ச் வரும்னு தெரியலையே தெரியல்லையே ..

பெட்ரோலை என் தலையில ஊத்து!”  “என் பொண்டாட்டி அடிச்சே கொன்னுறுவா!ஐநூறு, ஆயிரம் செல்லாது என்று பிரதமர் அறிவித்தாலும் அறிவித்தார்..  டீ கடையிலிருந்து டாஸ்மாக் கடை வரையிலும், பப்ளிக் படும் பாடு சொல்லி மாளாது.  “நாட்டின் நலனுக்காக மக்கள் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று பிரதமர் மோடி சொன்னாலும், பலரும் “அட போங்கப்பா.. நீங்களும் உங்க நாடும்..” என, அலுத்துச் சலித்து முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு எரிச்சலையும் கோபத்தையும் வெளிப்படுத்தியபடியே இருக்கிறார்கள். அதுவும், பெட்ரோல் பங்குகளிலும் டாஸ்மாக் பார்களிலும் பொது ஜனத்தின் பேச்சு ரகளையாகத்தான் இருக்கிறது. அந்த இரண்டு ஏரியாக்களிலும் நாம் பார்த்ததை, கேட்டதை அப்படியே ‘லைவ்’ ஆக தந்திருக்கிறோம்.
 பெட்ரோல் பங்க் ஒன்றில் பம்ப் ஆபரேட்டருக்கும் டி.வி.எஸ்.50-ல் வந்தவருக்கும் இடையில் நடந்த காரசார விவாதம் -அண்ணே.. 500 ரூபாய நீட்டுறீங்க..  வேணும்னா 500 ரூபாய்க்கும் டேங்க் ஃபுல் பண்ணிட்டு போங்க.. அம்பது நூறு சில்லறையெல்லாம் எங்ககிட்ட இல்ல.
“என்னப்பா நீ? டி.வி.எஸ்.50-ன்னா 4 லிட்டர்தான் பிடிக்கும்னு தெரியாதா?
ஏற்கனவே 1 லிட்டர் டேங்க்ல கிடக்கு.. மூணு லிட்டர் ஊத்தினா போதும்.”">“பார்த்தீங்களா? நிலவரம் தெரியாம பேசுறீங்க? பைக் கொண்டு வாங்க.. இல்லைன்னா கார் எடுத்துட்டு வாங்க.. கொடுத்த பணத்துக்கு அப்படியே போட்ருவோம்.. அதை விட்டுட்டு டி.வி.எஸ்.50-ய வச்சிக்கிட்டு எங்க உசிர ஏன் வாங்குறீங்க?”"
“தம்பி.. நீ ஓவரா பேசுற.. மொதல்ல பெட்ரோல் போடு..
“பாக்கி சில்லறை இல்ல..”
;“ஏம்ப்பா.. ஐநூறு ரூபாய்ன்னா ஏழரை லிட்டர் போடணும்.. 3 லிட்டர் போட்டுட்டு.. பாக்கி நாலரை லிட்டர அமுக்க பார்க்குறியா? 
நாடு நல்லா இருக்கணும்னு மோடி சொல்லுறாரு.. அவரு அறிவிப்ப வச்சு நீங்க கொள்ளையடிக்கிறீங்களே?” 

அண்ணே.. வார்த்தைய விடறீங்க.. இது நல்லா இல்ல.. 500 ரூபாய்க்கும் ஊத்துறதுக்கும் நான் ரெடி.. அதுக்கு உங்க டூ வீலர்ல இடம் இல்லியே?”
யப்பா ராசா.. மீதி நாலரை லிட்டர என் தலையில ஊத்து.. ஒரேயடியா போயிடறேன்.. உனக்கு புண்ணியமா போகும்..
“ஏன்ணே இப்படி? என்னை கொலை கேசுல மாட்டி விட பார்க்குற? பின்னால நிக்கிற கஸ்டமருக்கு வழி விடுண்ணே.. உனக்கும் புண்ணியமா போகும்..  போயி சில்லறை மாத்திட்டு வா.. நீ கொடுக்கிற பணத்துக்கு பெட்ரோல் ஊத்துறேன்..”
;பெட்ரோல் போடாமல் முணுமுணுத்தபடியே டி.வி.எஸ்.50 காரர் ஸ்டார்ட் பண்ண.. பின்னால் நின்ற ஆக்டிவா காரர் 500 ரூபாயை நீட்டினார்.

“இந்த வண்டி 5 லிட்டர்தான் பிடிக்கும்.. உங்களுக்கு எத்தனை லிட்டர் போடணும்?” 

“நாலு லிட்டர் போடுப்பா..”

“பாக்கி சில்லறையெல்லாம் இல்ல சார்..”

“என்னப்பா இது? கொடுமையால்ல இருக்கு..”

“திரும்பவும் மொதல்ல இருந்தா?” 

இப்படித்தான் எல்லா பெட்ரோல் பங்குகளிலும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். 


டாஸ்மாக் ஒயின் ஷாப் ஒன்றில் குடிமகனும் சேல்ஸ்மேனும் –

“சார்.. வேணும்னா 500 ரூபாய் பெறுமான சரக்கு வாங்கிக்கங்க.. குவார்ட்டர் போக மீதிக்கெல்லாம் சில்லறை இல்ல..”

“அப்ப என்னை ஃபுல் வாங்கச் சொல்லுறியா? ஃபுல்ல முழுசா குடிச்சா நான் செத்து போயிருவேன்.”

“யாருய்யா உன்ன சாகச் சொன்னா? குடிக்கிறத குடிச்சிட்டு மீதிய வீட்டுக்கு எடுத்துட்டு போ சாமி..”

“பிராந்தி பாட்டில வீட்டுக்கு எடுத்துட்டு போனா.. என் பொண்டாட்டி என்னை அடிச்சே கொன்னுறுவா..”

“அதுக்கு நாங்க என்ன பண்ணுறது? சரக்கு வேணும்னா சில்லறை நோட்டோட வா..”

“நான் கோர்ட்ல கேஸு போடுவேன்.. இந்த 500 ரூபாய் தாள்ல ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்து போட்டிருக்காரு.. சட்டப்படி இது செல்லும்டி.. மோடி சொல்லிட்டா செல்லாம போயிருமா?”

“நாங்க செல்லாதுன்னு சொல்லல.. இப்ப எங்ககிட்ட சில்லறை இல்ல..”

“நேத்து வரைக்கும் சில்லறை கொடுத்துட்டு இருந்தீங்கல்ல.. அதெல்லாம் இப்ப எங்கே போச்சு?”

“அய்யா சாமி..  ஆளை விடு.. உனக்கு பதில் சொல்லுறதுக்கு எங்ககிட்ட தெம்பு இல்ல..”

“யேய்.. தெம்பு இல்லாதவன் எதுக்கு டாஸ்மாக் வேலைக்கு வர்ற?”

“தப்புத்தான்.. இந்த வேலைக்கு வந்தது தப்புத்தான்.. போங்க சார்.. ப்ளீஸ்.. போங்க சார்..”

“இப்ப வா வழிக்கு.. சார்ன்னு இப்ப மரியாதையா பேசுறல்ல.. கிவ் ரெஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்பெக்ட்.. போயிட்டு சில்லறையோட வர்றேன்.. சில்லறை கிடைக்கலைன்னா இதே 500 ரூபாயோடு திரும்பவும் வருவேன்.. ஆமா.. நான் எங்கே போயி சில்லறை வாங்குவேன்? நீ சொல்லு.. நீ சொல்லு..”

“வேணாம் சார்.. அழுதுருவேன்..”  
“அடப் போய்யா.. இதுக்கெல்லாம் போயி அழுதுக்கிட்டு.. அதான் பாட்டில் பாட்டிலா சரக்கு வச்சிருக்கல்ல.. இன்னிக்குத்தான் கூட்டம் இல்லைல்ல.. என்ஜாய் பண்ணு ராசா.. இல்லைன்னா.. நீ போயி சில்லறை வாங்கிட்டு வா.. நான் கடைய பார்த்துக்கிறேன்..”

டாஸ்மாக் சேல்ஸ்மேன் கையெடுத்துக் கும்பிட, நடையைக் கட்டினார் அந்தக் குடிமகன். 

பெட்ரோல் பங்க் மற்றும் டாஸ்மாக் கடைகளில் நம்மிடம் “சார்.. நல்ல கஸ்டமருங்கதான்.. இப்ப அக்கப்போரு பண்ணுறாங்க.. இப்ப எல்லாரு கையிலயும் ஐநூறு, ஆயிர ரூபா நோட்டாத்தான் இருக்கு.. இதான் சமயம்னு கள்ள நோட்டை கொடுக்கிறவங்களும் இருக்காங்க.. ரொம்பவும் பார்த்து வாங்கணும்.. இல்லைன்னா எங்க கதி அதோ கதிதான்.. எங்களுக்கு ஒரு சந்தேகம்.. உண்மையிலேயே மோடி இந்த மாதிரி பண்ணுறது.. நல்லதா? கெட்டதா?” என்று வினவினார்கள். 

“சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்புதான்!” இது நம்ம பிரதமரே சொன்னதுங்க!

-சி.என்.இராமகிருஷ்ணன்
படங்கள்: ஸ்டாலின், செண்பக பாண்டியன்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: