சனி, 31 ஜூலை, 2021

கலைஞரை காணவந்த 85 வயது பாட்டியின்..... புகைப்படம்

செல்லபுரம் வள்ளியம்மை :
கலைஞர் மருத்துவ மனையில் இருந்த போது  ஒரு பாட்டி (வயது 85) கலைஞரை பார்க்க திருவாரூரில் இருந்து தனியாக சென்னை தெருவில் கண்ணீரோடு நடந்து சென்றார்   

கலைஞரை பார்க்க வந்த 85 வயது திருவாரூர் பாட்டி,, கண்களில் கண்ணீர் நடையில் பதட்டம்
இந்த 85 வயது மூதாட்டி எங்கோ தொலை தூரத்தில் இருந்து வருகிறார்.  பேருந்தில் தட்டு தடுமாறி ஏறி வந்து சென்னை மாநகரின் பெருந்தெருக்களில் தன்னந்தனியாக எதையோ அல்லது யாரையோ தேடி பதட்டத்தோடு ஓட்டமும் நடையுமாக ,,,
 அப்படி என்ன இந்த மூதாட்டியின் தேடல்?
ஆம் கலைஞர் உடல் நலம் குன்றிய செய்தி இவரை கண் துஞ்ச விடாமல் துரத்துகிறது.
அவரென்ன மூதாட்டியின் நெருங்கிய உறவா?
இந்த மூதாட்டியின் சின்னஞ்சிறு உலகத்தில் தமிழகத்தின் வரலாறு தன்னை இனம் காட்டி கொள்ளாமல் மறைத்து கொண்டு கொழுந்து விட்டு எரிகிறது !
அந்த நெருப்பின் சுவாலைதான் அவர் கண்களில் நீராக முட்டி வழிகிறது.
தன் வாழ்நாளில் தமிழகத்தின் அன்றைய தாழ்ந்த நிலையெல்லாம் அவள் மனக்கண்களில் திரைப்படமாக ஓடிகொண்டிருப்பது தெரிகிறது!

ஒரு ஆண் ஆசிரியரை கூட நியமிக்கக்கூடாது: கல்வி அலுவலர்களுக்கு கரூர் ஆட்சியர் உத்தரவு

tamil.samayam.com : குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த பெண் ஆசிரியைகளை நியமிக்க கரூர் ஆட்சியர் உத்தரவு
தமிழக பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டியை அமைக்கவும், அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், ''8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியைகளை நியம்மிக்க வேண்டும் என்றும் கரூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் வரக்கூடும்! அரசு ஆலோசனை .. கொரோனாவின் மூன்றாவது அலை?

 Hemavandhana -   Oneindia Tamil :   சென்னை: தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுன் போட்டுவிடப்படுமோ என்ற கலக்கம் சூழ்ந்து வரும் நிலையில், அரசு தரப்பிலும் அப்படி ஒரு டாக் ஓடியிருக்கிறதாம்..
பிறகுதான் முதல்வர் அந்த முடிவை கைவிட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.. ஒரே நாளில் 1,947 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
அதிலும் 19 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது..
இதில் சென்னைதான் பிரதானமாக உள்ளது.. இப்படி தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்டு 9-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது...
ஆனால் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படவில்லை. இந்த 10 மாநிலங்களுக்கு மிக மிக கவனம் தேவை.. தளர்வுகள் கொடுக்க கூடாது..
முதல்வர் முதல்வர் சென்னையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் முதல்வரின் உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் ஆகஸ்டு 9-ம் தேதி வரை வணிக வளாகங்கள், அங்காடிகள் திறக்க தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிசன் உற்பத்தி நிறுத்தப்பட்டது...

ஸ்டெர்லைட்: ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

மின்னம்பலம்  : கொரோனா இரண்டாம் நிலையின் காரணமாக ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கப்பட்டது. அதாவது ஜூலை 31ஆம் தேதி வரை இந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கக் கோரி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுத் தாக்கல் செய்தது.

130 அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து.. விஜயகாந்த் விஜயதரணி இ வி கே எஸ் இளங்கோவன் ஜி ராமகிருஷ்ணன் ...

 Rayar A -   Oneindia Tamil News  :  சென்னை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் மீதான 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் E.V.K.S. இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், G. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன்,

ஆப்கானிஸ்தான் ஐ.நா செயலகம் மீது தாலிபான்கள் தாக்குதல்

 மாலைமலர் : ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க அரசு படைகளை விலக்கிக் கொள்ள முடிவெடுத்து செயல்பட்டு வரும் நிலையில், அங்கு தலிபான்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது.
காபுல்:  ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே நீண்டகால போர் நடைபெற்று வருகிறது.
இதனை முடிவுக்கு கொண்டுவர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் பல சுற்று முடிவில் உடன்பாடு எட்டப்படவில்லை.
அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது என அமெரிக்க அரசு முடிவு செய்தது. எனினும், திட்டமிட்டபடி கடந்த 1-ம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு பதிலாக தள்ளிப்போனது.  இதன்பின் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

வெள்ளி, 30 ஜூலை, 2021

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் இறந்த சிறுமி: தோண்டி எடுக்கப்பட்ட உடல்

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.

BBC :இலங்கை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிப் பெண்ணாக கடமையாற்றி வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
கொழும்பு - புதுகடை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 26ம் தேதி வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய இந்த சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 16 வயதான சிறுமி வேலை செய்து வந்த நிலையில், மர்மமான முறையில் தீ காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டது.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்தும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், குறித்த சிறுமி கடந்த 15ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கை கோர்க்க தே.மு.தி.க. முடிவு

 மாலைமலர்  :கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் பல நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான வாய்ப்பு ஏற்படாமல் போய் விட்டது.
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க., டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
ஆனால் தே.மு.தி.க.வால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
தே.மு.தி.க. தொடங்கப்பட்ட பிறகு ஒரு சட்டமன்ற தேர்தலை தனித்து சந்தித்தது. 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. அப்போது அந்த கட்சி வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பிடித்தது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

OBC இடஒதுக்கீடு: “திமுக ஆட்சியமைத்த பிறகு சமூக நீதிக்காக கிடைத்த முதல் வெற்றி இது” - முதல்வர் பெருமிதம்!

 கலைஞர் செய்திகள்  : முழுமையான சமூகநீதியை அடையும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓ.பி.சி-க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒன்றிய அரசுப் பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வந்து கால் நூற்றாண்டு ஆன பிறகும் முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு ஆறுதல் தருவதாக உள்ளது. சமூகநீதி வரலாற்றில் முக்கிய நகர்வாக உள்ளது.

அரும்பாக்கம் RK nagar குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிப்பு .. பொதுமக்கள் தெருவில் அவதி

 IsaiarasuAmbedkar IsaiarasuAmbedkar   :   *குடிசை மாற்று வாரியத்தின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்போம்!*
நன்பர்களே,   வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை&எளிய மக்கள் நகரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நகரத்தில் ஏற்கெனவே பெருகியுள்ள வேலையின்மையாலும்,
அப்படியே வேலையிலிருந்தாலும் வேலைக்கேற்ற கூலியின்றி வசிக்கும் வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாததாலும்,
மற்றும்பல காரணங்களாலும் சென்னை நகரத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிசைகளை அமைத்து வசித்துவந்தனர்.
இதனால் நகரங்களில் குடிசைப் பகுதிகள் அதிகரித்துவந்தன.
ஆனால் அந்தப் பகுதிகளில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை.
இதுபோன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை முறைப்படுத்தவும் முறைப்படுத்தமுடியாத பகுதிகளிலுள்ள மக்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரவும் எழுந்த நிர்பந்தத்தின் காரணமாக 1971ல் குடிசை மாற்றுவாரியம் உருவாக்கப்பட்டது.

இசை - இளையராஜா; பின்னணி இசை - தேவா... 90களில் வெடித்த ஆடியோ ரைட்ஸ் சர்ச்சை!

writer sura
நக்கீரன் செய்திப்பிரிவு : எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இளையராஜா இசையமைத்த படத்திற்கு தேவா பின்னணி இசையமைத்தது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...இளையராஜா இசையமைத்த ஒரு படத்திற்கு தேவா பின்னணி இசையமைத்தார். பின்னணி இசையில் இளையராஜா மன்னன். பின்னணி இசையமைப்பதில் இளையராஜாவை யாரும் நெருங்கக்கூட முடியாது. அப்படி இருக்கையில், இளையராஜா படத்திற்குத் தேவா எப்படி பின்னணி இசையமைத்தார். இளையராஜா அதற்கு எப்படிச் சம்மதித்தார்? இளையராஜா படத்தில் தேவா பிண்ணனி இசையமைத்தார் என்பது இந்தத் தலைமுறையினருக்குக் கேட்க நம்பமுடியாததாகத் தெரியலாம். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

கலைஞர் இலவச TV கள் 10 ஆண்டுகளாக குடோனில் முடக்கம் .. மக்கள் வரிப்பணம் வீண் .. ஜெயாவின் மற்றுமொரு அடாவடி

கலைஞர் டிவி

BBC நடராஜன் சுந்தர்  -      பிபிசி தமிழுக்காக  :    கடலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் அதிகமான இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் சமுதாய நலக்கூத்தில் முடங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக அதிமுக தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளதால் இந்த தொலைக்காட்சிகளை என்ன செய்ய உத்தேசித்துள்ளது?
தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின்போது, திமுக ஆட்சி வந்ததும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அதன் கலைஞர்  அறிவித்தார்.
அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டன. கலைஞர் டிவி என்ற பெயருடன் அந்த தொலைக்காட்சிகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருந்தது எனலாம்.

வியாழன், 29 ஜூலை, 2021

தாது வருடப் பஞ்சம் ! தமிழர்கள் சாபிட்டாச்சா சாப்பிட்டாச்சான்னு ஏன் கேட்கிறார்கள்? வரலாற்று பின்னணி

May be an image of 4 people and people standing
May be a black-and-white image of 2 people

பாண்டியன் சுந்தரம்    : மிகப்பெரிய தாது வருடப் பஞ்சம்: நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது ‘சாப்பிட்டாச்சா’ எனக் கேட்டுக் கொள்ளும் வழக்கம் ஆரம்பித்தது பஞ்ச காலத்தில் இருந்துதான்!
வற்றிய உடலும் ஒட்டிய வயிறுமாக, தோல் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகள் என நினைக்குமளவிற்குப் பெரியவர்கள், குழந்தைகள் என ஒருசேர காட்சி தருகிற இந்தப் புகைப்படங்கள் தாது வருடப் பஞ்சத்தின் சாட்சி.
தன் தாயின் வற்றிபோன மார்பகங்களில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டு இருக்கும் குழந்தை, மரப்பொந்தில் எறும்புப் புற்றை தேடி ஏமாந்து போய் நடக்கமுடியாமல் அமர்ந்திருக்கும் சிறார்,
பசியோடு செய்வதறியாது அமர்ந்து இருக்கும் குடும்பம்...
துயரத்தின் வலியை உணர்த்தும் படங்கள்...
நூறாண்டுகள் கடந்தும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் புகைப்படங்கள் ஆப்ரிக்காவிலோ, சோமாலியாவிலோ எடுக்கப்பட்டதல்ல. 1876 முதல் 1878 வரை நம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய தாது வருடக் கொடும் பஞ்சத்தின் போது வில்லோபை வாலஸ் ஹூப்பர் என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.

தலித் கர்ப்பிணி பெண் மீது எச்சிலை துப்பி செருப்பு காலால் எட்டி உதைத்த கொடூரம்

May be an image of 1 person, child, sitting, standing and indoor

Vincent Raj   :  தலித் பெண் மீது தாக்குதல் – எச்சிலை துப்பி செருப்பு காலால் எட்டி உதைத்த கொடூரம்
கலெக்டரும் எஸ்பியும் இணைந்து அபிராமிக்கு ஆறுதல் கூற வேண்டும்
வலியும் அவமானமும் இயலாமையும் கலந்த உணர்வுடன் அபிராமி முன்பு நின்று கொண்டிருந்தேன். நிறைமாத கர்ப்பிணி பெண். இன்னும் சில நாட்களில் ஒரு மகனையோ ஒரு மகளையோ பெற்றெடுக்கும் நிலையில் இருப்பவர்.
என் வீட்டுக்காரு முகத்துல எச்சில துப்பினாங்க சார். டேய் பறப் பயலே உனக்கு இவ்வளவு திமிரா?
என்று கூறிக் கொண்டே செருப்பு காலால் எட்டி உதைச்சாங்க. நான் நிலை தடுமாறி கீழே விழுந்தேன்.
என் முகத்துலயும் எச்சில். என் இரண்டு குழந்தைகளும் தரையில் கிடந்தாங்க.
இவ்வளவு அநியாயம் செய்த ஆட்கள போலீஸ் இன்னும் கைது செய்யவில்லை என்று கூறி கலங்கினார். கவலைப்படாதே அபிராமி விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஆறுதல் படுத்தினேன்.  விசாரணையில் ஈடுபட்டோம்.  

சோனியா – மம்தா சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரள அழைப்பு

  /tamil.indianexpress.com :   Mamata Banerjee rallies parties against BJP Tamil News: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியுள்ளார். Mamata Banerjee news in tamil: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர் காட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார

 May be an image of 2 people, people standing and outdoors

மதுரையில் சமணர் படுக்கைகள் கண்டுபிடிப்பு!

Discovery of Samanar's beds in Madurai!
nakkheeran.in : மதுரை மாவட்டம் கள்ளிக்குடிக்கு அருகில் உள்ள சிற்றூர் கே.வெள்ளாகுளம். இந்த ஊருக்கு மேற்கே இயற்கையான குகைத்தளம் ஒன்று உள்ளது. இதில் சமணத் தடயங்கள் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து , ஆய்வு செய்த பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் ஆய்வு செய்த பின் கூறியதாவது,

 Discovery of Samanar's beds in Madurai!

 இந்த குகைத்தளம் இயற்கையான அமைப்பாகும். இதன் காலம் 1500 முதல் 1800 வருடங்கள். உள்ளே சமணர் படுக்கைகள் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மட்டும் நடந்துள்ளது.

தாலிபான்கள் பயங்கரவாதிகள் இல்லை.. அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது..' இம்ரான் கான் திட்டவட்டம்

  Vigneshkumar  -    Oneindia Tamil  :   இஸ்லாமாபாத்: ஆப்கனில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாலிபான்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, மறுபுறம் தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டன.
இதனால் பல்வேறு இடங்களிலும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தாலிபான்கள் இதுவரை சுமார் 80% ஆப்கன் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறியுள்ளது.
இன்னும் சில வாரங்களில் தற்போதுள்ள ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் தாலிபான்களுக்குப் பின்னால் இருந்து பாகிஸ்தான் உதவுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.

ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு: ஒன்றிய அரசு.. மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டி...

May be an image of 2 people and text that says 'Tweet Vivekanand Singh @Journo_vivek OBC quota in NEET appr ved by the government But the all credit goes to this man @mkstalin. You are a real Bahujan warrior. Salute. #MKStalin #NEET #OBC Tweet your reply'

 மின்னம்பலம் :மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50சதவிகித இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இந்த மருத்துவ இடங்களை ஒதுக்குகின்றன.இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக திராவிடர் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

வ்வழக்கில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது.  நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த ஜூலை 26ஆம் தேதி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பத்திரிகையாளர்கள் மீதான 90 அவதூறு வழக்குகள் ரத்து -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 மாலைமலர் : திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2012 முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
திமுக தேர்தல் அறிக்கையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளை திரும்ப பெறுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.   இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா: ஆபாசப் படம் , கோடிகளில் வாழ்க்கை, சர்வதேச தொடர்புகள்

ராஜ் குந்த்ரா

BBC  :ஆபாச படங்கள் தயாரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா. இந்த வழக்கில் அவருடன் சேர்த்து ரயான் தார்ப் என்பவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.
கடந்த 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை தயாரித்ததாக காவல்துறை தரப்பு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருக்கிறது. அதன் பேரில் அவரை முதலில் 23ஆம் தேதிவரையும் பின்னர் 27ஆம் தேதிவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்த மும்பை நீதிமன்றம், பின்னர் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காலில் வைக்க உத்தரவிட்டது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடி தளங்களில் வெளியாவதற்காக தயாரிக்கப்பட்ட ஏராளமான ஆபாச காட்சிகள் நிறைந்த ஹார்டு டிஸ்குகளை மும்பை காவல்துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.

குறு, சிறு, தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கக் குழு!

 மின்னம்பலம் : குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் முதல்வர் ஸ்டாலின் குழு அமைத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தொழிற் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சிறு, குறு தொழில்களையும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக தற்போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தக் குழு அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதுடன் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன.
இந்நிறுவனங்கள் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப்பட்டு மிகவும் கடினமான சூழலைச் சந்தித்து வருகின்றன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சீர்குலைக்க போகும் சக்திகளை பற்றி ராஜீவ் காந்தியின் தீர்க்க தரிசனம் அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை

செல்லபுரம் வள்ளியம்மை  :  சரியாக முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில்,
1987 ஜூலை 29இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது!
 இந்த ஒப்பந்தம் ஒட்டு மொத்த  ஈழத்தமிழர்களாலும் அன்று வரவேற்று கொண்டாடப்பட்டது.
மக்களின் மகிழ்ச்சியை கண்டு மனம் குமுறும் மனநோயாளிகள் தமிழர்களிடையே உண்டு
நெடுமாறன் வைகோ போன்றவர்களும் அவர்களின் சீடர்களும் இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது உடைத்து எறியவேண்டும் என்று இமை மூடாது சதித்திட்டங்கள் தீட்டினார்கள்
இது பற்றி அமரர் ராஜீவ் காந்தியே அன்று தீர்க்க தரிசனமாக கூறியிருந்தார் :
 அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை :
"இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள்"
வணக்கம்   இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற் பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்...... ராஜீவ் - ஜே ஆர். ஒப்பந்தம் link

புதன், 28 ஜூலை, 2021

9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: படையெடுக்கும் கழகங்கள்!

9  மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்:  படையெடுக்கும் கழகங்கள்!

 minnambalam :தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடங்கியிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு தமிழகம் முழுதும் உள்ளாட்சித் தேர்தல் நடந்த நிலையில், அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 ஆம் ஆண்டோடு முடிந்தது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாரான நிலையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து அதிமுகவில் நிகழ்ந்த அதிகார யுத்தத்தால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போனது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2019 ஆம் ஆண்டு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மாவட்டங்களில் தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

 மாலைமலர் :சென்னை:  தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது.
இந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி உள்ளது.
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோமநாதபுரம் கோயிலும் கஜினி முகமதுவும் .. உண்மையில் நடந்தது என்ன?

May be an image of outdoors and monument
May be an image of 1 person

Prem Raja  :  கஜினி முகமது...  சோமநாதபுரம் கோயிலை இவர்  கொள்ளை அடித்தார்  என  வரலாற்றுப்  பாடத்தில் வருகிறது!
அரசர்கள் ஒரு பகுதியின் மீது படையெடுத்தால்  அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை. கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.
தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர, தீர பராக்கிரமங்களை சிறப்பாக எழுதி விடுவார்கள்.
அவனைப் புகழந்து பாடி  வாங்கித் தின்னும் புலவர்களும் புறப்பட்டு விடுவார்கள். அது பிறகு வரலாறு ஆகிவிடுகிறது!
"இன்றைய குஜராத் அந்தக் காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி. இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.
ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்தது. சொல்லமுடியாத அளவு செல்வம் பக்தர்களால் குவிந்தது.

இலங்கையில் உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது : ரூ.745 கோடி

BBC உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலக்கல் தொகுப்பு வீட்டின் பின்புறம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரத்தினங்கள் அதிகம் காணப்படும் ரத்தினபுரா பகுதியில் உள்ள தமது வீட்டின் பின்புறம் கிணறு தோண்டும்போது தொழிலாளர்கள் இந்தக் கல்லைக் கண்டுபிடித்ததாக கூறுகிறார் ஒரு ரத்தின வணிகர்.
வெளிர் ஊதா நிறத்தில் உள்ள இந்தக் கல்லின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.745 கோடி (இந்திய ரூபாய்) இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்தக் கல்லின் எடை 510 கிலோ. ரத்தினங்களை அளவிடும் முறையில் சொன்னால், 25 லட்சம் காரட். கிணறு தோண்டிக்கொண்டிருந்த நபர் ஏதோ ஒரு அரிய கல் இருப்பதாக எங்களிடம் கூறினார். பிறகு இந்தக் கல் கிடைத்தது என்று  தெரிவித்தார் கல்லின் உரிமையாளர் கமாகே.

தண்டவாளத்தில் ஓடும் சைக்கிள்! இரயில்வே ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

No photo description available.

Veeramani Veeraswami  :  தண்டவாளத்தில் ஓடும் சைக்கிள்! இரயில்வே ஊழியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
உலகில் மிகப்பெரிய இரயில்வே துறையினைக்   கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
ஒரு இடத்தை இரயில் கடப்பதற்கு முன்னதாக தண்டவாளங்களை ஆய்வு செய்து பார்க்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது.
அதேபோல் தண்டவாளங்களில் பழுது ஏற்பட்டால், இரயில்வே ஊழியர்கள் உடனடியாக அவ்விடத்திற்குச்  சென்றாக வேண்டும்.
இந்த இரு பணிகளையும் செய்வதற்கு இரயில்வே ஆய்வு வண்டிகளை (Rail Inspection Cart) ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் இல்லாத பட்சத்தில், இரயில்வே ஊழியர்கள் நடந்துதான் சென்றாக வேண்டும். இது கால விரயத்தை ஏற்படுத்தும்.

கனடாவில் மனைவியை வெட்டி கொன்று வீடியோவை பஞ்சாபில் உள்ள பெற்றோருக்கே அனுப்பிய கணவன் Jalandhar man kills wife in Canada

 
TeamGlobalPunja : இரண்டு நாட்களுக்கு முன்பு கனடா மொன்றியல் நகரத்தில் வசிக்கும் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் மிக   மோசமான குடும்ப வன்முறை இடம்பெற்றுள்ளது
பஞ்சாப் ஜலந்தரை சேர்ந்த இளம் பெண் Rajinder Prabhneed Kaur அவரது கணவரால் Navdeep Ghotra, மோசமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்
அவர்களுக்கு எட்டுவயதில்  ஒரு மகளும் ஐந்து வயதில் ஒரு மகனுமான  இரண்டு குழந்தைகள் உண்டு.
ஏற்கனவே கணவர் மனைவி மீது தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் வெளியே வந்தார்

தனது குழந்தைகளின் கண்முன்னேயே மனைவியையே துடிக்க துடிக்க வெட்டியது மட்டுமல்லாமல் அதை வாட்சாப் வீடியோவாக படம் பிடித்து ஜலந்தரில் உள்ள அவரது பெற்றோருக்கு அனுப்பியும் உள்ளார்
கொலைக்கு பின்பு கணவர் தப்பி ஓடிவிட்டார்
 இன்னும் போலீசார் தேடிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள்
அவர் பிடிபட்டு விட்டதாகவும் சிலர் கூறுகிறார்கள் தெற்காசியர்கள் மத்தியில் இப்படிப்பட்ட குடும்ப வன்முறை என்பது எந்த நாடு சென்றாலும் பாரம்பரியமாக தொடர்வது கவலைக்கு உரியது

செவ்வாய், 27 ஜூலை, 2021

கர்நாடகா புதிய முதல்வர் பசவராஜ்! கர்நாடகா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்!

  Velmurugan P  -  Google Oneindia Tamil :  பெங்களூரு: கர்நாடகாவில் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். சுமார் 17 சதவீதம் இவர்கள் தான் உள்ளனர்.
இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான் கர்நாடகாவில் அதிகம் பேர் முதல்வராக இருந்துள்ளனர். கர்நாடகாவில் பசவராஜ் பொம்யை சேர்த்து, இதுவரை பதவி வகித்த 20 முதல்வர்களில் 8 பேர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நிஸான் மேக்னைட் காரை உங்கள் ஊரில் டெஸ்ட் டிரைவ் செய்ய எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர் - இங்கே க்ளிக் செய்யுங்கள்!
கர்நாடகாவின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள் பி.எஸ்.எடியூரப்பா வீரசைவ-லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்த லிங்காயத் சமுதாயம் தான் கர்நாடகாவில் பாஜகவின் முக்கிய ஆதரவு தளமாக கருதப்படுகிறது. ஒரு சமூகம தான் வரலாற்று ரீதியாக கர்நாடகா மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாடத்திட்ட அறிவுரை குழு உறுப்பினராக பேராசிரியர் சுப வீரபாண்டியன் நியமனம்!

அரசியலுக்கு வர விரும்பும் ரஜினிகாந்த் வரலாற்றை அறிந்து கொள்வது நல்லது -  பேராசிரியர் சுப.வீரபாண்டியன்! | nakkheeran

மின்னம்பலம் :தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவதும், துறைகளுக்கு புதிய முகங்களை அறிமுகம் செய்வதும் அதிகரித்துள்ளது.
அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு அறிவுரை குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை தமிழ்நாடு அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.
சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஊரில் இராம. சுப்பையா விசாலாட்சி என்ற தம்பதிக்கு இரண்டாவது மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தார். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரான சுப.முத்துராமன் இவருடைய அண்ணன்.

கிரிப்டோ கரன்சியை ஏற்றுக்கொள்ள அமேசான் நிறுவனம் மறுப்பு ஒரு போதும் எங்களால் அதனை செய்ய முடியாது.. பிட்காயின் வேண்டாம்.. திட்டவட்டம்..!

 Pugazharasi S -  GoodReturns Tamil  :   கிரிப்டோகரன்சி சந்தையானது அதிக ஏற்ற இறக்கத்தில் இருப்பதனால், பெரும் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பல நிறுவனங்களும், தனி நபர்களும் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
பல பெரும் நிறுவனங்கள் கூட முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் இதனை பெரியளவில் ஏற்றுக் கொண்டுள்ளன.
அமேசானுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை அமேசானுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை
இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம், அதன் பேமெண்டாக பிட்காயினை ஏற்றுக் கொள்ளாது என அறிவித்துள்ளது.
பிட்காயினை தங்களது பேமெண்டாக இந்த ஆண்டின் இறுதிகுள் ஏற்றுக் கொள்ளலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அமேசான் இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினை கொடுத்துள்ளது.

தலிபான்களுக்கு பயந்து ஆப்கான் ராணுவ வீரர்கள் வேறு நாடுகளுக்கு ஓட்டம்

 tamil.news18.com : அமெரிக்க ராணுவம் வெளியேறியதால் அம்போ என்று விடப்பட்ட ஆப்கான் ராணுவத்தினர் தலிபான்களின் பதிலடிக்காகவும் பழிவாங்கலுக்காகவும் அஞ்சி பாகிஸ்தானில் தஞ்சம் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் தற்போது அங்கிருந்து வெளியேறி விட்டன. இதன் காரணமாக அங்கு தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக அண்டை நாடுகளுடனான எல்லை பகுதிகளை கைப்பற்றுவதில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

பரத நாட்டியதத்தில் வைதிக சனாதன வர்ணாசிரமக் (ஜாதீய) கருத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளது

May be an image of one or more people and text that says 'பரதநாட்டியம் ஆடும்போது நால் வர்ணத்தவர்களை உணர்த்த உதவும் முத்திரைகள்: பிரம்மணர்:இரு கைகளிலும் சிகரம் பிடித்து, இடக்கையை மார்பின் நேரே நீட்டி வலக்கையைப் பூணூல் தரிப்பதுபோல் மார்பின் குறுக்கே காட்டி, (இடக்காலைத் தொட்டு வல இடுப்பு மட்டும் பொருந்தும் படியாய்க்) காட்டல் கூத்திரியர் இடக்கையில் சிகரத்தைச் சேர்த்து, வலக்கையில் பதாகத்தைக் (உள்ளங்கை) குறுக்கே காட்டல் வைசியர்:வலக்கையில் கடகாமுகமும் இடக்கையில் அம்சாசியமும் பிடித்தல். சூத்திரர்: இடக்கையில் சிகரமும், வலக்கையில் சூசியும் (கால்களில் அணியும் பாதரட்சை) சேர்த்தல் -அபிநயதர்ப்பணம் எனும் பரதநாட்டிய நூல்'

Dhinakaran Chelliah  :  பரதநாட்டியம் குழந்தைகள் ஜாக்கிரதை
பரத நாட்டிய வகுப்புக்களில் நால் வர்ணம் மற்றும் ஜாதிகளைப் பற்றி சொல்லிக் கொடுக்கப் படுகிறது என்ற எனது பதிவைப் பார்த்து அதிர்ச்சியை வெளிப்படுத்தி யிருந்தார்கள் பலர். உண்மையாகவா? என்றும் சிலர் கேள்வியும் எழுப்பியிருந்தனர்.
இந்தப் பதிவில் அதற்கான ஆவணங்களாக இரண்டு நூல்களில் உள்ளவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.மற்ற நூல்களில் உள்ளவற்றைத் தனிப் பதிவுகளில் எழுத வேண்டும்.அந்த நூல்களையும் இந்தப் பதிவில் சேர்த்தால் மிகப் பெரிய பதிவாகிவிடும்.
கவனமும் பெறாது.
தமிழர்களின் சதிர் ஆட்டமே பரதநாட்டியம் எனும் வரலாற்றைப் பற்றியதல்ல இப்பதிவு. இது நடைமுறையில் பரத நாட்டியம் என சொல்லிக் கொடுக்கப்படும் நாட்டியக் கலையில் உள்ள வைதிக சனாதன வர்ணாசிரமக் கருத்துக்கள் பற்றியது.  

முதல் நூல்: நந்திகேசுவரர் இயற்றிய அபிநயதர்ப்பணம்.டெல்லி,சங்கீத நாடக அகாடமி பொருளுதவியுடன் வெளியிடப்பட்ட நூல்.தமிழ் மொழிபெயர்ப்பு: திரு.வீரராகவையன் அவர்கள்

நடிகை யாஷிகா விபத்தில் பலியான தோழி இவர் தான்: சகோதரியின் உருக்கமான போஸ்ட் வைரல்


tamil.samayam.com : நடிகை யாஷிகா தன் தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த பவானி(28), செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரிக்கு சென்றார். பார்ட்டி பண்ணிவிட்டு அவர்கள் சனிக்கிழமை இரவு காரில் சென்னை திரும்பினார்கள்.
காரை யாஷிகா ஓட்டி வந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் நிலைதடுமாறி தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த யாஷிகா உள்ளிட்ட 3 பேரும் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாஷிகா குடிபோதையில் கார் ஓட்டவில்லை, ஆனால்...
இந்நிலையில் பவானியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பவானி குறித்து அவரின் சகோதரி ஷ்ராவனி சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டுள்ளார்.

வன்னியர்களுக்கு 10.5%: உறுதிப்படுத்திய ஸ்டாலின்

மின்னம்பலம் :  கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடரில், தேர்தல் ஆணையத்தின் சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளிவருவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக, “வன்னியர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி” தீர்மானம் நிறைவேற்றினார்
அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த இட ஒதுக்கீட்டை இப்போது உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டிருக்கிறார் இப்போதைய திமுக ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அப்போதைய திமுக தலைவர் ஸ்டாலின், “திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றால் வன்னியர்களுக்கு எம்பிசி 20% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும்”என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால் அதை அப்போது ராமதாஸ் கடுமையாக விமர்சித்தார்.

திங்கள், 26 ஜூலை, 2021

பீரியட் படம் வந்துறக்கூடாது. நாஸ்டால்ஜியவைத் தூக்கிக்கிட்டு வந்துடறானுக ! ஷார்ப் அடி பரம்பரை, இடி அடி நாயக்கர் பரம்பரை

சார்பட்டா பரம்பரை படத்தை எதிர்க்கும் ஜெயக்குமார்… வரவேற்கும் உதயநிதி…!!  காரணம் இதுதானா..? – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News Online | Latest Update ...

Raja Rajendran Tamilnadu  :  பீரியட் படம் வந்துறக்கூடாது.  நாஸ்டால்ஜியவைத் தூக்கிக்கிட்டு வந்துடறானுக !
ஷார்ப் அடி பரம்பரை, இடி அடி நாயக்கர் பரம்பரையே, சார்பட்டா, இடியாப்ப பரம்பரைகளென மருவியிருப்பதாக நக்கீரன் பிரகாஷ் ஒரு பேட்டியில் சொல்கிறார்.  
ஆளாளுக்கு ஒரு கதை சொல்வதால், நாம் ரொம்ப குழப்பிக்கத் தேவையில்லை !
இதில் சார்பட்டாவையாவது கேள்வி பட்டிருக்கிறேன்.  
மீதி யாவுமே இப்ப இந்தப் படத்தைப் பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன்.  
இதில் சுண்ணம்புகுளம் வேறு வருகிறது.  மக்கள் அதை சுண்ணாம்புக்கால்வாய் என்பார்கள்.  
சுண்ணாம்புச் சூளைக்கருகில் பக்கிங்காம் கால்வாய் ஓடுவதால், இரண்டையும் இணைத்து சுண்ணாம்புக் கால்வாய் !
இந்தச் சுண்ணாம்பு குளம் இப்ப இப்பத்தான் சேரித் தோற்றத்திலிருந்து நகரத்தோற்றத்திற்கு மெல்ல மாறி வருகின்றது.  
2015 பெருவெள்ளத்தில் இந்தப் பகுதி ஆறடி நீருக்குள் மூழ்கி இருந்தது.  அதற்குப் பிரதானக் காரணி இந்தக் கால்வாயில் வந்த வெள்ளம்.  
நதிகளை இணைப்பதில் ஊழிக்காலங்களில் இப்படி அழிவு வாய்ப்பதிகம்!
அகஸ்தியா தியேட்டரில் கட்டப்படும் மீனவ நண்பன் பட எம் ஜி ஆர் பேனரைக் கண்டதும், எனக்கு 32 A பஸ் நினைவுக்கு வந்தது !

கலைக்கப்பட்டது கர்நாடகா அமைச்சரவை... ஆளுநர் அதிரடி.. அடுத்தது என்ன?

 tamil.asianetnews.com  - vinoth kumar  -    முதல்வர் எடியூரப்பாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட நிலையில் அவரது தலைமையிலான கர்நாடக அமைச்சரவையை மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் கலைந்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி எடியூரப்பா 4-வது முறை முதல்வராக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனாலும் 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்வர் பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. இந்நிலையில், எடியூரப்பாவிற்கு எதிராக பாஜக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடந்த சில மாதங்களாக போர்க்கொடி தூக்கி வந்தனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தலைமையும் நெருக்கடி கொடுத்ததால் வேறு வழியில்லாமல் முதல்வர் பதவியை எடியூரப்பா இன்று ராஜினாமா செய்தார்.

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!

மோடியுடன் பன்னீர், எடப்பாடி சந்திப்பு!
minnambalam.com : அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஜூலை 26) காலை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.காலை 11.10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் இருபது நிமிடங்கள் நடந்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர் செல்வத்துடன் அவரது மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன், எடப்பாடியோடு தளவாய் சுந்தரம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்துக்குச் சென்றிருக்கிறார்கள்.

மோடியுடன் நடந்த சந்திப்பில் கோதாவரி-காவிரி இணைப்பு, மேகதாது பிரச்சினை பேசப்பட்டது என்று அதிமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் சசிகலா -தினகரனை அதிமுகவுடன் இணைப்பது தொடர்பாகவே பேசப்பட்டது என்றும் அதுகுறித்து மோடியிடம் பேசியபிறகு இன்று பிற்பகல் அமித் ஷாவையும் இருவரும் சந்திக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் மேற்படிப்பு படிக்க இலகு வழி உள்ளது! இதோ விசா வழிகாட்டி முறைகள்

Study in Canada as an international student - Canada.ca

Nivetha Sathiyan   :   கனடாவில் மாணவர்  விசாவுக்கு விண்ணப்பிக்கும் படிமுறை
1.   முதலில் நீங்கள் கனடாவில் படிக்க விரும்பும் கற்கை நெறியையும், குடியேற விரும்பும் மாகாணத்தையும் கற்க விரும்பும் கல்லூரி/ பல்கலைக்கழகத்தையும்  தெரிவு செய்யுங்கள்
https://www.universitystudy.ca
https://www.univcan.ca
https://www.cicic.ca/851/education.canada
https://www.collegesinstitutes.ca/our.../member-directory/
2.   அந்த கல்வி நிறுவனம் Designated Learning Institution List (DLI) இல் உள்ளதா என உறுதி படுத்துங்கள். உங்கள் கல்வி நிறுவனம் DLI லிஸ்ட் இல் இடம்பெறாவிடில் உங்கள் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இந்த DLI லிஸ்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், CEGEP, Vocational கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகள் (private career colleges) மொழிதொடர்பான கற்கை நிறுவனங்கள் (language schools ) போன்றவை அடங்கும்.

தமிழ் மொழியியல் மூதறிஞர் இரா.இளங்குமரனார் காலமானார்.ஆதித்தமிழ் முறையில் 4,621 திருமணங்களை நடத்திவைத்த ‘செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார்

May be an illustration of 1 person and text that says 'REDMI NOTE 8 AI QUAD CAMERA'

கே.கே.மகேஷ்  :  ஆதித்தமிழ் முறையில் 4,621 திருமணங்களை நடத்திவைத்த ‘செந்தமிழ் அந்தணர்’ இளங்குமரனார்
(2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காமதேனு வார இதழில் வெளிவந்த கட்டுரை)
இரண்டு மணமாலை, இரண்டு துணை மாலை, விளக்கு ஒன்று, தீப்பெட்டி ஒன்று. இவற்றை மட்டுமே வைத்து எளிய முறையில் 4,621 தமிழ் முறைத் திருமணங்களை நடத்திவைத்திருக்கிறார் தமிழறிஞர் இரா.இளங்குமரனார். 91 வயது நிறைந்துவிட்டது அவருக்கு. ஆனாலும், பிப்ரவரி மாதம் வரையில் திருமண அழைப்புகளால் அவரது நாட்குறிப்பு நிரம்பி வழிகிறது.
மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றேன். துணைவியாரும், மகனும் உபசரித்து மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். படிகளைப் பார்த்ததுமே, “இத்தனை படியேறியா அய்யா மாடிக்குச் செல்கிறார்?” என்று வியப்பு ஏற்பட்டது. இதுவரையில் 550 புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர், மேலும் 50 புத்தகங்களை அச்சுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார். கடந்த ஞாயிறன்று ‘திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை’ எனும் 3,000 பக்கங்களைக் கொண்ட (6 தொகுதிகள்!) நூலை வெளியிட்டிருக்கிறார்.

பாதிரியார் பொன்னையா இன்னொரு ஒவைசி .. கன்யாகுமரி நாகர்கோயில் திமுக வாக்குகளை மடைமாற்றிய ஆர் எஸ் எஸ்...

May be an image of 1 person and standing

Ganesan Arivoli   :   கன்னியாகுமரியில் பாஜக வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதற்கும், சென்ற முறை 1,700 வாக்கு வாங்கிய சீமான் இம்முறை 14,100 வாங்கியதற்கும் என்ன காரணம்?
இவையே ஆஸ்டின் தோற்றதற்கு முக்கிய காரணங்கள்...
நாகர்கோவிலிலும் 1800 ஓட்டு வாங்கிய சீமான் இம்முறை 10,800 ஓட்டு.
இங்கு பாஜக வெற்றியை தீர்மானிப்பதை தாண்டி வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி.
திமுக வின் வெற்றி நாங்க போட்ட பிச்சை - பாதிரியார் பொன்னையா
ஆனால் ஓட்டு போட்டது சீமானுக்கு. இப்ப வந்து வெற்றிக்கு உரிமை கொண்டாடுறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மூன்றில் போட்டியிட்டு இரண்டு தொகுதியில் தோற்றது. இவர மாதிரி ஆட்கள் அங்கு RSS religious polarisation செய்ய உதவியதே காரணம்.

இலங்கையின் (அரசியல் வர்த்தக) ஊடக துறை கிங் மேக்கர் ராஜ மகேந்திரன் காலமானார்

 kuruvi.lk  : இலங்கையின் வர்த்தகப்புலி – கிங் மேக்கர் கிளி – என்றெல்லாம் அழைக்கப்பட்ட திரு.ராஜ மகேந்திரன்  இன்று காலமானார். இவர் 1943 மே 19 ஆம் திகதி பிறந்தவர்.
எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கைக்கு வந்த ராஜேந்திரனின் இரண்டாவது மகன் ராஜ மகேந்திரன் .
யாழ்ப்பாணம் – மானிப்பாயை பூர்வீகமாகக்கொண்ட ராஜேந்திரன், எழுபதுகளின் பிற்பகுதியில் தென்னிலங்கைக்கு வந்து மகாதேவா என்பவருடன் இணைந்து, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாக இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரத்தில் ஈடுட்டார்.
இவர்கள் இருவரதும் வர்த்தக சிரத்தையின் பயனாக, எஸ் – லோன் பைப் நிறுவனத்தை எழுபதுகளின் இறுதியில் ஆரம்பித்தார்கள்.
ஜப்பானுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மகாராஜாவின் வர்த்தக பயணத்தில் – எதிர்பாராத ஒரு புள்ளியில் – மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

சர்க்காரியா கமிஷன் .. இந்திராவின் எமர்ஜென்சி கொடூரத்தின் முகமூடி

G. Arivalagan : சர்க்காரியா கமிசன் ஊழலுக்காக போடப்பட்டதா?  100% சத்தியமா இல்லை 1975 எமெர்ஜென்சி நாளிலிருந்து கலைஞரை மிசாவிற்கு ஆதரவு கோரி இந்திரா பலமுறை தூதுவர்கள் அனுப்பியும் கலைஞர் தீவிரமாக எமர்ஜென்சியை எதிர்த்தார் ஸ்டாலின்,மாறன் உட்பட 25000 கட்சிக்காரர்களை கைது செய்தும் கலைஞர் பணியவில்லை இறுதியாக கலைஞரின் புகழை துவம்சம் செய்ய முடிவெடுத்த இந்திரா பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன். 1972 ல் MGR மூலம் பக்தவச்சலம் தயாரித்து கொடுத்த ஊழல் பட்டியலை 1976 ல் தூசித்தட்டி எடுத்து கலைஞரின் மக்கள் செல்வாக்கை துடைக்க பயன்படுத்திய ஆயுதமே சர்க்காரியா கமிசன் கோபாலபுரம் வீட்டிற்கு வருமான வரி அலுவலர்கள் வந்து கலைஞரிடம் துளைத்து எடுத்தனர். பின்னர் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் துழாவி எதுவும் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினர்
முரசொலி அலுவலகம் சென்றனர். சோதனை என்ற பெயரில் நாசம் செய்தனர். எதுவும் கிடைக்கவில்லை
கோபாலபுரம், முரசொலி அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து ரொக்கமாகவோ நகையாகவோ எதுவுமே அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அனைத்து பத்திரிகைகளும், வானொலியும் மாறி மாறி பேசியது கலைஞர் ஊழலில் சிக்கிவிட்டார் என்ற செய்திதான்  Flashback கலைஞர் Vs எமெர்ஜென்சி சர்க்காரியா கமிசன் .. எம்ஜியாரின் வருமான வரி .. மோகன் குமாரமங்கலம் .. பாலதண்டாயுதம்

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் "பிராமண சம்மேளனம்"

K Muralidharan :பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் "பிராமண சம்மேளனம்" மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சமீபத்தில் மிகப் பெரிய பிராமண சம்மேளனத்தை நடத்தி முடித்திருக்கிறது.
அயோத்தியாவில் வேத மந்திரங்கள் முழங்க துவங்கிய இந்த மாநாடு, "ஜெய் பீம், ஜெய் பாரத், ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் பரசுராம்" முழக்கங்களோடு முடிவடைந்திருக்கிறது.
இது தொடர்பாக பிபிசி இந்தியில் செய்தியாளர் சமீராத்மஜ் மிஸ்ரா எழுதி வெளியான கட்டுரையை இந்த லிங்க்கை க்ளிக் செய்து https://www.bbc.com/hindi/india-57951734 படிக்கலாம்.
அதன் சுருக்கமான தமிழாக்கம் கீழே. துவக்கத்தில் பிராமண சம்மேளனம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், ஜாதியின் பெயரால் யாரும் கூட்டங்களை நடத்தக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால், இந்த மாநாட்டின் பெயர் 'ஞானம்பெற்ற வகுப்பினரின் சித்தனை கருத்தரங்கு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஞாயிறு, 25 ஜூலை, 2021

தாலிபான்களிடம் குவியல் குவியலாக 'மேட் இன் அமெரிக்கா' ஆயுதங்கள்.. இது எப்படி சாத்தியமானது?

 Vigneshkumar -  Oneindia Tamil News  :  காபூல்: பல்வேறு அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்கள் பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பலவற்றில் "Property of USA Government" என்ற முத்திரை இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றது எப்படி என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்துதுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் அமெரிக்கப் படைகள் இருந்தன. இந்த காலகட்டத்தில் தாலிபான்களின் ஆதிக்கம் பெருகிவிடாமல் அமெரிக்கப் படைகள் பார்த்துக் கொண்டது.
ஆனால், இப்போது ஆப்கன் நாட்டிலிருந்து, அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவு பார்ட்டி.. அதிவேகமாக காரை ஓட்டிய யாஷிகா ஆனந்த்.. நடிகைக்கு எலும்பு முறிவு?.. நடந்தது என்ன? நள்ளிரவு பார்ட்டி.. அதிவேகமாக காரை ஓட்டிய யாஷிகா ஆனந்த்.. நடிகைக்கு எலும்பு முறிவு?.. நடந்தது என்ன?

மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர்... சட்டமன்ற விடுதியின் சாவியை வழங்கிய அமைச்சர் மா சுப்பிரமணியம்

 நக்கீரன் செய்திப்பிரிவு  :    சென்னையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நிமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்  செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
 "ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உடல்நலம் குன்றிய குழந்தை இசக்கியம்மாள் உடல்நலம் தேறி வருகிறார். எழும்பூர் மருத்துவமனையில் 10 நாட்களாகச் சிகிச்சைப் பெற்று வருகிறார். குழந்தைக்கான அந்த உணவு குழாய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், திரவ வகையான உணவோ, திட வகையான உணவோ உட்கொள்ள முடியாத சூழலில் இருந்தது.

அமைச்சர் கே.என். நேரு : பாகுபாடின்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சரிசமமான வசதி!

 மின்னம்பலம் : முன்னேறிய மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற பாகுபாடு இன்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து’’ - எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு

 puthiyathalaimurai.com  : முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சராக இருந்தபோது வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

கார் விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி

சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி: போஸார் விசாரணை!

கலைஞர் செய்திகள்  : மாமல்லபுரம் அருகே கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த விபத்தில் பிக்பாஸ் நடிகை படுகாயம் அடைந்துள்ள நிலையில், மற்றொரு பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாட்டில் வடஇந்திய பணியாளர்களை வைத்திருக்கும் முதலாளிகளின் பொய் பிரசாரம்

 Kandasamy Mariyappan  :    தமிழ்நாட்டில் ஒருசிலர் வைக்கும் தொடர் குற்றச்சாட்டு..,
தமிழ்நாட்டு மக்கள் இலவசங்களை பெற்றுக்கொண்டு, சாராயக் கடையில் சாராயத்தை குடித்து கொண்டு வேலைக்கு வர மறுக்கிறார்கள் என்பது..!
எனவே எல்லா தொழில் நிறுவனங்களும் வட இந்திய மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றன என்கின்றனர்.!
இது உண்மைதானா..!?
எந்த ஒரு முதலீட்டாளருக்கும் லாபம் மிகவும் முக்கியம். அந்த லாபத்தை பெற குறைவான சம்பளத்தில் தொழிலாளிகளை அமர்த்திக்கொள்வதும் ஒரு யுத்தி.  
உதாரணத்திற்கு 2010 வரையில் BPO நிறுவனங்கள் BSc, BA படித்த நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கே 20,000 ரூபாய் சம்பளம் கொடுத்தன.! ஆனால் இன்று பல லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இருப்பதால் அதே வேளைக்கு 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் தருகின்றனர்.!
இன்னும் கூடுதலான பட்டதாரிகள் வட இந்தியாவிலிருந்து வரும்பொழுது, 5,000 - 8,000 ரூபாய் சம்பளத்தில் வட இந்தியர்களை மட்டுமே அந்த பணியில் அமர்த்துவர்.!
அப்படியென்றால் தமிழ்நாட்டு இன்ஜினியரிங் மாணவர்கள் வேலைக்கு சேர மறுக்கிறார்கள் என்று அர்த்தமா.!?
ஒருவனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் என்ற அடிப்படைத் தேவைகள் (Basic Needs) கிடைத்தால் அவன் அடுத்த நிலையைப் பற்றிதான் சிந்திப்பான்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் !

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்:  முதல்வர் ஸ்டாலின்- Dinamani

கலைஞர் செய்திகள்  -  Prem Kumar“ : தமிழ்நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
“தலைநிமிரும் தமிழகம்" தொலைநோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் பேணிடவும், அங்குப் பாதிப்புக்கு உள்ளானோர்க்கு உதவிடவும், நாடு திரும்பிய வெளிநாடுவாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற ஒரு புதிய துறையை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

சார்பட்டா’ மிக வருத்தமளிக்கிறது...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

நக்கீரன் செய்திப்பிரிவு :   பா. இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், துஷாரா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாடப்பட்டுவருகிறது.
‘சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தமளிப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ''‘சார்பட்டா’ படம் முழுக்க முழுக்க திமுக பிரச்சார படமாகவே இருக்கிறது. எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. கலை மூலம் உண்மைகளை மறைப்பது, வருங்கால தலைமுறைக்குச் செய்யும் துரோகம். விளையாட்டை விடாப்பிடியாக கைக்கொண்ட எம்ஜிஆர், எத்தனையோ வீரர்களை ஊக்குவித்தவர். அவரை தவறாக சித்தரித்துள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

 Karthikeyan Fastura  :   #சார்பட்டா  படம் வந்த அன்று நள்ளிரவில் பார்த்ததற்கு பிறகு நேற்று மீண்டும் ஒருமுறை அந்த படத்தை பார்த்தேன்.
இன்னும் நிறைய முறை இந்த படத்தை பார்க்க படத்தில் அழகான காட்சிகள்,  கதாபாத்திரங்கள் உண்டு.

திமுகவை மேடைக்குமேடை குத்திக்கிழித்த ரஞ்சித் எனும் ஈட்டி மழுங்கிப் போனதா?’ -கொதிக்கும் ஜெயக்குமார்

vikatan.com :பிரேம் குமார் எஸ்.கே.`1980-ம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர்’ - ஜெயக்குமார்
ஜெயக்குமார் - இரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர்கள் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் `சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், தி.மு.கவைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.கவை விமர்சிப்பதாக கருத்துகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. `சார்பட்டா பரம்பரை’ குத்துச்சண்டையை மையப்படுத்திய படமாக இருந்தாலும், படத்தில் ஆங்காங்கே அரசியல் வசனங்களும் காட்சியமைப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வெளிப்படையான அரசியல் அடையாளங்கள் படத்தில் காணப்பட்டது.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரையின் கோச்சாக, ரங்கன் வாத்தியார் என்கிற கதாபாத்தில் நடித்திருக்கும் பசுபதி, படம் முழுவதும் தி.மு.க கரைவேட்டியுடனே வலம் வருவதில் தொடங்கி அப்போது புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கும் எம்.ஜி.ஆரின் பின்னால் மக்கள் அணிதிரளக்கூடாது என்பதை ரங்கன் வாத்தியார் அறிவுறுத்தும் வகையிலான வசனங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. இது தவிர்த்து எமெர்ஜென்சியை மிகக் கடுமையாக எதிர்த்து தி.மு.க ஆட்சியை இழந்ததையும் அக்கட்சித் தொண்டர்கள் சிறைக்குச் சென்றதையும் இந்திரா காந்திக்கு ஆதரவாக அ.தி.மு.க தொண்டர்களின் பாதாயாத்திரை சுவரொட்டிகளையும் நம் பார்வைக்கு `சார்பட்டா பரம்பரை’ மூலம் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இது போன்ற காட்சி அமைப்புகள் தான் தி.மு.கவைத் தூக்கிப்பிடித்து அ.தி.மு.கவை விமர்சிக்கும் வகையில் படம் இருப்பதான கருத்துகள் வந்தது.