அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக
குடியரசுக் கட்சியில் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு
எதிர்ப்புத் தெரிவித்து நியூயோர்க் உட்டபட 7 நகரங்களில் பாரிய
ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றிக்கு எதிராக
ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அவருக்கெதிரான வாசகங்கள்
எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் அமெரிக்க கொடியை எரித்தும்
ட்ரம்பின் கொடும்பாவியை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நியூயோர்க், சிக்காக்கோ, போர்ட்லாண்ட்,
பொஸ்டன், பிலடெல்பியா, நியூஒர்லியன்ஸ், சியாட்டல் ஆகிய நகரங்களில்
ட்ரம்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
இதேவேளை, வெள்ளை மாளிகைக்கு முன்னாள் மொழுகுவர்த்திகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரார்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக