சனி, 2 ஏப்ரல், 2016

2ஜி வழக்கு...ஆர்.ராசா.....ரோஹித் வேமுலா தற்கொலை....JNU.கண்ஹையா குமார் தேசதுரோக சேறு....எல்லாம் ஒன்றுதான்


தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் - அது 2ஜி வழக்கு! தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள்.
இப்போது அந்த 'சீசன்' தொடங்கியுள்ளது. 2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள்.

40 சதவிகித கமிஷன் இல்லாமல் எந்தத் திட்டமும் நிறைவேற முடியாது என்பது அரசு விதியாகிய அவலம்....

savukkuonline.com: தேர்தல் களம் – 1 – பேய்களின் அரசு. c302011 ஆண்டின் தொடக்கம் இந்த ஆண்டு போல இல்லாமல், கடும் தேர்தல் பரபரப்புடன் பிறந்தது.    2006ம் ஆண்டு முதல், விளம்பரம் என்ற மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புகளாக இருந்த பெரும்பாலான ஊடகங்கள், திமுகவை வெறித்தனமாக விமர்சிக்கத் தொடங்கின.   திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகங்கள், குறைபாடுகள், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்று அத்தனையையும் ஊடகங்கள் தோண்டி எடுத்து பட்டியலிடத் தொடங்கின. ஜனவரி மாதத் தொடக்கம் முதலாகவே திமுகவின் சரிவு வெளிப்படையாக தென்படத் தொடங்கியது.   ஆனால் இந்த சரிவுகளை உணர மறுத்த திமுக, உளவுத்துறை தெரிவித்த 110 தொகுதிகளில் வெற்றி என்ற பொய்க்கணக்கை நம்பி கொண்டு தேர்தலை எதிர்கொண்டது.

சிறுதாவூர் கன்ட்டெய்னர்கள் ஆந்திரா, கேரளாவுக்கு...இல்லைங்கிறார் ராஜேஷ் லக்கானி...பிரவீன் குமார் போலவே ரொம்பவும் நேர்மையான அதிகாரி ..

விகடன்.com :சிறுதாவூரில் நின்ற கன்ட்டெய்னர்களில் சில ஆந்திராவுக்கும், ஒரு கன்ட்டெய்னர் கேரளாவுக்கும் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ள நிலையில், கன்ட்டெய்னர்களில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக  மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி மறுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பல கன்ட்டெய்னர்கள் நிற்பதாகவும், அதில் பணம் நிரப்பப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளிப்படையாகவே கூறினார். இந்த செய்தி ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து சோதனை நடத்த வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி லக்கானியிடம் மதிமுக சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது.

குவாரிகளில் சகாயம் கண்டு பிடிச்ச எலும்பு கூடு.....எல்லாம் நீதி தேவதையின்....போலி டாக்டர்கள் மாதிரி போலி நீதிபதிகளும்?

1---,கணித மேதை குமாரசாமி மீது முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
2--- மகேந்திரபூபதிக்கு ஒரு எலும்பு துண்டை வீசியிருப்பார்கள். அதான் வாலாட்டியிருக்கிறார்.
3-- மகேந்திர பூபதியை சஸ்பெண்ட் செய்தால் மட்டும் போதாது. அவரைத் தகுதி நீக்கமும் செய்யவேண்டும். 4--புதுக்கோட்டையை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சாந்தி இயற்கையாக பால் மாற்றம் அடைந்ததற்கு அவருக்கு கிடைத்த (அது சாந்தியுடைய தவறே இல்லை என்ற பொழுதும்) பதக்கம் பறிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் இது போன்ற புல்லுருவிகளின் தகுதியை ஏன் அரசும், நீதித்துறையும் ரத்து செய்யக்கூடாது?
5-- பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக அன்சுல் மிஸ்ரா, உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் முன் அனுமதி பெற உத்தரவிடுகிறேன்" - இதுதான் உச்சகட்ட காமடி... இது போன்ற நிதிபதிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும்... நீதித்துறைக்கே அவமானம் இது போன்ற மட்டைகள்...
6-- கிரானைட் முறைகேடு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையை ஜெயாவுக்கு சகாயம் அனுப்பிய போது, அந்த அறிக்கையை 6 மாதம் கிடப்பில் போட்டு வைத்து இருந்தார் ஜெயா...........

நாகலாந்து : நாங்கள் இந்தியரா ? – நாகா மாணவர் ஷிங்லாய் நேர்காணல்...ஹிந்திமக்கள் எங்களை மதிப்பதே இல்லையே?

இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை.வினவு.com :JNU நேரடி ரிப்போர்ட் 7 நாகா மாணவர் ஷிங்லாய் நாகா மாணவர் ஷிங்லாய்ஜே.என்.யு வளாகத்தில் வினவு குழுவினர் பார்த்த மாணவர் விடுதி அறைகளிலேயே அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே புத்தகங்கள் கலைந்து கிடக்கவில்லை. படுக்கை வாரிச்சுருட்டி போடப்பட்டிருக்கவில்லை. மேசையின் மீது பேனாக்கள் சிதறிக் கிடக்கவில்லை. தரை சுத்தமாக பெருக்கித் துடைக்கப்பட்டிருந்தது. பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தன. அந்த அறை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருந்தது. அந்த அறையில் குடியிருந்தவர் பெயர் ஷிங்லாய். மணிப்பூர் மாநிலத்தின் நாகா இன மக்கள் பிரிவைச் சேர்ந்தவர் அவர்.
வட இந்தியர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?

தேர்தல் பிரசாரத்துக்கு விசேஷ பேருந்துகள் தயாராகிறது

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் கட்சியின் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிர சாரத்திற்கு செல்ல விசேஷ வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்த வாகனங்களில் தலைவர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் கட்டில், சோபா, ஏ.சி. சமையலறை, கழிப்பறை என அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் நவீன கேரவன் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சேலம் 5ரோடு தொழிற்பேட்டையில் உள்ள பிரபல கார் தயாரிக்கும் நிறுவனத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, மலையாள நடிகர் பிருத்விராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தற்காக கட்சி நிர்வாகிகள் ஆர்டர் கொடுத்துள்ளதன் பேரில் நவீன வசதியுடன் கூடிய கேரவன் வாகனங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நடிகை பிரதியுக்ஷா பானர்ஜி தற்கொலை....மிகவும் பிரபலமான இவர் பிக் பாஸ் மற்றும் சீரியல்களில்

பிரபல தொலைக்காட்சி நடிகை பிரதியுஷா பானர்ஜி மும்பையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலர்ஸ் டிவியில் ஒளிப்பரப்பான 'பாலிகா வாது' தொலைகாட்சி தொடரில், ஆனந்தி கதாபாத்திரத்தில் அறிமுகமான பிரதியுஷா பானர்ஜி, குறுகிய காலத்தில் பலருக்கும் அபிமான நடிகையாக மாறியுள்ளார். இவர் மேலும் பல தொலைக்காட்சி தொடர்களில் தற்போது நடித்து வந்தார். இந்திய சின்னத்திரை நடிகைகளில் கவர்ச்சிகரமான பெண் நடிகைகள் பலர் உள்ளனர். அதில் துணிச்சலாக கவர்ச்சியாக நடிக்கும் டாப்10 இந்திய டிவி நடிகைகள் பட்டியலில் பிரதியுஷா இடம் பெற்றிருந்தார். பிரதியுஷாவின் பல சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

ம.ந,கூட்டணி தலைவர்களை ஏப்ரில் பூல் ஆக்கிய வி.சு.பி....அந்த 70 தொகுதிகளையும் தரமாட்டமே?

(வி.சு.பி= விஜயகாந்த், சுதீஷ், பிரேமா)  சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூ., 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், நேற்று பகல், 12:00 மணியளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சை நடத்தியுள்ளனர். இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறியதாவது:
மக்கள் நலக்கூட்டணி போட்டியிட விரும்பும், 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம், அதன் தலைவர்கள் கொடுத்தனர். அந்த பட்டியலை பார்த்த விஜயகாந்த்,அதை சுதீஷிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்ற சுதீஷ், தன் அறைக்கு சென்றார். ஐந்து நிமிடங்களுக்கு பின், மீண்டும் விஜயகாந்த் அறைக்கு வந்த அவர், ம.ந.கூ., தலைவர்கள் கேட்கும் தொகுதிகளில், 70 தொகுதிகள், தே.மு.தி.க., போட்டியிட உள்ள தொகுதிகள் என, கூறியுள்ளார்.  பேய்க்கு வாழ்க்கை பட்டால் பிணம் தின்னி தொழில்தான் வாய்க்கும்....அய்யா நல்லகண்ணு அவர்கள் பிறேமலதாவிடம் பேச்சு கப்டனிடம் குட்டு எல்லாம் வாங்கவேண்டி வருமோ?

மும்பை ஐகோர்ட் : கோவில்களில் பெண்கள் நுழைய... 'தடுக்க முடியாது' என உத்தரவு


மும்பை: 'கோவில்களுக்குள் செல்வது, பெண்களின் அடிப்படை உரிமை; அதை மாநில அரசு பாதுகாக்க வேண்டும்' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், மஹாராஷ்டிராவில் உள்ள கோவில்களுக்குள், பெண்கள் செல்வதை எவரும் தடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சனி ஷிங்னாபூர் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, இரு பெண்கள், மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, 'கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பது உறுதி செய்யப்படுமா; இல்லையா என, மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும்' என, மார்ச், 30ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மோடி ஒபாமாவுக்கு : பயங்கரவாதிகளை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அழிக்கவேண்டும் ......ஒரு சுயவிருப்பம்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த
இரவு விருந்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாதிகளை புதிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வேட்டையாட வேண்டும் என வலியுறுத்தினார். பெல்ஜியம் சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 4வது அணு பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் சென்றடைந்தார். மூன்றாவது முறையாக அமெரிக்காவும், இரண்டாவது முறையாக வாஷிங்டனுக்கும் சென்றுள்ள மோடி, முதலில் நியூசிலாந்து பிரதமர் ஜான் கீயை சந்தித்து பேசினார். இவரது சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பதிவில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மோடி பதிவிட்டுள்ளார். அடுத்ததாக லிகோ விஞ்ஞானிகள் குழுவினரை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.

திமுகவில் + கு.மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் தினேஷ் : எங்கள் பணத்தில்தான் தேமுதிக இயங்குகிறது...100 கோடி கொடுத்தோம்...கடனாளியாகிவிட்டோம்

எங்கள் பணத்தை விஜயகாந்தும் பிரேமலதாவும் திருப்பி தரவேண்டும் .தேமுதிக தொண்டர்கள் நிர்வாகிகள் போர்க்கொடி! சட்டசபையில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது. விஜயகாந்தின் இந்த முடிவால் தே.மு.தி.க. நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். நேற்று முன்தினம் தே.மு.தி.க. வடசென்னை மாவட்ட செயலாளர் யுவராஜ் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். 'முடிவு எடுக்கும் முன் விஜயகாந்த் நிர்வாகிகளை கலந்து ஆலோசிக்கவில்லை, கட்சிக்காக பணம் செலவழித்து கடனாளியாகி விட்டேன்' என்று யுவராஜ் குற்றம் சாட்டினார்.மேலும் பல நிர்வாகிகளும் தி.மு.க.வில் இணைவார்கள் என்றும் யுவராஜ் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் தினேஷ் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

ஸ்டாலின் : யாரையும் அழைக்கவில்லை.தானாகவே வருகிறார்கள்....தேமுதிக தானாகவே கரைகிறது.

தே.மு.தி.க.வினரை நாங்கள் அழைக்கவில்லை. அவர்களாக வருகிறார்கள். அந்த கட்சி தானாகவே கரைகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 2 ஆயிரம் பேர் இணைந்தனர்< திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதற்கான விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இங்கு பேசியவர்கள் தி.மு.க.வில் இணைந்ததன் மூலம் தங்களுக்கு விடியல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்கள். தமிழகத்திற்கே விடியல் கிடைக்கப் போகிறது. இன்றைக்கு பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் சேர்வதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.

நத்தம் விஸ்வநாதன் கோஷ்டியிடம் ஒரே நாளில் ரூ.1,200 கோடியை கைப்பற்றியும் கோபம் தணியாத ஜெயலலிதா

விகடன்,com :ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன் மீதான கார்டனின் கோபம் இன்னமும் தணிந்ததாகத் தெரியவில்லை. தொடரும் ரெய்டுகளால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்களின் உறவினர்கள்.

'நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் இருந்து மட்டும் 30000 கோடி ரூபாய் பணத்தை கார்டன் வட்டாரம் பறிமுதல் செய்ததாக' அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. இதுதவிர, 'இவர்கள் இருவரும் எங்கெங்கே பணத்தை முதலீடு செய்தார்கள்' என்பதைப் பற்றியும் அந்த அறிக்கையில் விவரித்திருந்தார் கலைஞர். ஓ.பி.எஸ், நத்தம் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்த கார்டன், இவர்களின் பினாமிகளின் மீது தற்போது பார்வையைத் திருப்பியுள்ளது.
இதன்பின்னணியில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார் உளவுத்துறையின் முன்னாள் உயரதிகாரி ஒருவர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருக்கும் இந்த அதிகாரியின் பெயரைச் சொன்னாலே, நெஞ்சுவலி வராத குறையாக தவிக்கிறார்கள் அமைச்சர்கள். தற்போது, பூசாரி ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் ஓ.பி.எஸ் தம்பியை கிடுக்குப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ். 'தூரத்து சொந்தக்காரங்களைக் கூட விடாம துருவி துருவி விசாரிக்கறாங்களே...' என நொந்து போய் புலம்பி வருகிறார் ஓ.பி.எஸ்.  வருஷக்கணக்கா ஒழுங்கா கமிஷன் கணக்கு காட்டினானே இன்னைக்கு இப்படி கள்ளக் கணக்கு  காட்டுவான்னு நான் ஒருகாலும் நெனைக்கலையே....நெனக்கலையே....சிவாஜி ரேஞ்சுக்கு போயசுல தேம்பல் கேக்குதம்மா  

திமுக - 111, அதிமுக - 107 தொகுதிகள் வரை கைப்பற்றும்: நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பு !

அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு வெளியான நிலையில், தமிழகத்தில் திமுக 107 இடங்கள் முதல் 111 இடங்கள் வரை கைப்பற்றும் என்று நியூஸ் நேஷன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மே 16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.  அதில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என டைம்ஸ் நவ் மற்றும் சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியது.

புரட்சி அண்ணி பிரேமலதா – தமிழகத்தின் புதிய நோய்.....

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று என்ற பெயரில் ஜெயா எதிர்ப்பு வாக்குகளை உடைக்கும் பணி இருப்பது உண்மை என்றாலும், மக்கள் நலக்கூட்டணியோ இல்லை அவர்கள் தூக்கிச் சுமக்கும் கேப்டன் அணியோ தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளை விட கேவலமான முறையில் இருப்பது உண்மையில்லையா? 
தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் “மாற்றம்” என்ற வார்த்தை இப்போது வானாளவ பேசப்படுகிறது. ஆனால் அந்த மாற்றம் குறித்து பேசுக் கட்சிகளும், கூட்டணிகளும் ஒட்டுப் பொறுக்கி அரசியலின் முடை நாற்றத்தை அல்லது இந்த போலி ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்தை மறைக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாதா, இவர்களுக்கு மாற்று கிடையாதா, மாறி மாறி இவர்களையே ஆட்சியில் அமைக்க வேண்டுமா என்பதை மாபெரும் தத்துவ ஞானக் கேள்வியாக டி.வி நிலைய வித்வான்கள் விவாதம் என்ற பெயரில் படுத்தி எடுக்கிறார்கள்.அ.தி.மு..கவில் அவர் பெயர் ஜெயலலிதா! தே.மு.தி.க-வில் அவர் பெயர் பிரேமலதா!

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

Times Now அர்னாப் கோஸ்வாமியின் பச்சை பார்பன பயங்கரவாதம்....கன்னையா குமாரின் பேச்சை திரித்த கிரிமினல்கூட்டம் அம்பலம்



130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது அதிமுக: Times Now டைம்ஸ் நவ்

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுக ஒரு அணியாகும், திமுக-காங்கிரஸ் ஒரு அணியாகவும், தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி ஒரு அணியாகவும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு 20 நாள்களுக்கு மேலாகியும், அரசியல் கட்சிகள் இடையேயான கூட்டணி குழப்பங்கள் இன்னும் முடிவு பெறவில்லை.  

சினிமாங்கிறது தியேட்டருக்கான ஊடகம் என்கிற மதிப்பை நாம.... டிஜிட்டல் ராஜா!

சினிமா படங்களின் டைட்டிலை உற்றுக் கவனிப்பவர் என்றால் உங்களுக்கு ஜி.பாலாஜி என்கிற பெயர் பரிச்சயமானதுதான். ‘டிஜிட்டல் சினிமா டிசைனர்’ என்கிற டைட்டிலுக்கு கீழே இவரது பெயர் இருக்கும். ‘லிங்கா’, ‘ரஜினி முருகன்’, ‘கதகளி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நண்பேண்டா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘தமிழ்ப்படம்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘வழக்கு எண் 18/9’, ‘வல்லினம்’, ‘ஹரிதாஸ்’, ‘தங்க மீன்கள்’, ‘பத்து எண்றதுக்குள்ளே’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ என்று ஏராளமான படங்களுக்கு இவர்தான் டிஜிட்டல் சினிமா டிசைனர். இப்போது ‘இது நம்ம ஆளு’, ‘வெற்றிவேல்’, தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ’பிரம்மோத்சவம்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

கரைந்து போன கிரானைட் வழக்கு... பி.ஆர்.பி வெளியே வந்த கதை!

விகடன்.com :  ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது, சல்மான் கான் வழக்கின் மீதான தீர்ப்பு என சமீபகாலங்களில் இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையை தகர்த்து வரும் நிலையில், பி.ஆர்.பி வழக்கின் தீர்ப்பு  இடியாக இறங்கியுள்ளது. நீதித்துறை மீது எழுந்துள்ள விமர்சனங்களை போக்கும் ஓர் முயற்சியாக மாஜிஸ்திரேட் விசாரிக்கப்பட்டு, சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சொல்லப்படும் கிரானைட் குவாரி மோசடி வழக்கு, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கு. மதுரை மாவட்டம், மேலூரில்தான் இந்த மோசடிகள் பெருமளவில் நடந்தது. மேலூரில் மட்டும் கிரானைட் குவாரி மோசடி தொடர்பாக பதிவான வழக்குகள் 90க்கும் அதிகம்.

திமுகவின் கலரி ரசிகர்களை சேலம் சுஜாதா....


சேலம் சுஜாதா | படம்: எல்.சீனிவாசன்சைக்கிள் செல்லக் கூடிய பாதையில் ஆட்டோவை செலுத்திடும் வல்லமை என்பது அரசியல் களத்தில் மிக முக்கியம். அந்த வகையில், திருச்சியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில், தனக்கு வழங்கப்பட்ட இரண்டு நிமிடத்தில் அசத்தலாக பேசி கவனத்தை ஈர்த்தவர், திமுக பேச்சாளர் 'சேலம்' சுஜாதா. குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் மிமிக்ரி செய்த சுஜாதாவின் அந்தப் பேச்சு, சமூக வலைதளங்களிலும் செம ஹிட். தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராக இருந்தவரை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தோம்.
ஒரே நாளில் இணையப் பிரபலம் ஆகிவிட்டீர்களே?

அதிமுக வேட்பாளர் நேர்காணலை திடீரென்று ரத்து செய்து அதிர்ச்சி வைத்தியம்...போயஸ் கார்டனில்...

சத்தமே இல்லாமல்  அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணலை கார்டனில் வைத்து நடத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, ஏப்ரல் 1 ல் ( இன்று)  நடத்தவிருந்த நேர்காணலை ரத்து செய்து கட்சியினருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்த அதிர்ச்சி வைத்தியம் புதிதல்ல. கடந்த வாரத்தில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியுடன் ஐக்கியமான அன்றும் இப்படித்தான் நேர்காணலை ரத்து செய்து ஷாக் கொடுத்தார். ஆனால், அதை கட்சியினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"அம்மா, மிகுந்த மன உளைச்சல் காரணமாக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார்... இரண்டொரு நாளில் அம்மா பழைய மூடுக்கு வந்து விடுவார். எல்லாம் சரியாகி விடும்" என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு கார்டன் ஏரியாவில் வலம் வந்ததைப் பார்க்க முடிந்தது.

பா.ஜ.க வும் C.P.M. மும் ஒண்ணு. அறியாதவங்க வாயில மண்ணு....மதிமாறன்



ஒரே ஓவரில் மூன்று விக்கெட். பி ஜெ பி ராமசுப்ரமணியன் பேராசிரியர் அருணன் பா ம க பாலு மூன்று பேரிடம் பதட்டத்தை உருவாக்கிய தங்களுக்கு நன்றி இது கூட மாநாட்டின் வெற்றிதான். நன்றி Sivakumar Shanmugam * இந்து மதம்,வேதம்,புராணம் : பா.ஜ.க வும் C.P.M. மும் ஒண்ணு. அறியாதவங்க வாயில மண்ணு

வளர்மதி: ராமஜெயம் கொலை ஒரு கவுரவ கொலை.......

திருச்சி: ராமஜெயம் கொலை எதுக்காக நடந்தது தெரியுமா? அது ஒரு கவுரவக் கொலை என்று அமைச்சர் வளர்மதி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமலும், கொலையாளிகளின் நிழலையும் கூட நெருக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் தடுமாறிக்கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர்தான் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை அனுசரித்தனர் ராமஜெயத்தின் ஆதரவாளர்கள். இந்த அரசியல் கொலைக்கு முன்பகைதான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இல்லை இல்லை தொழிற்போட்டி காரணமாக இருக்கலாம் என பல யூகங்கள் உலா வருகின்றன.

நீதிபதி மகேந்திர பூபதி இடைநீக்கம் பி.ஆர்.பிக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால்....குமாரசாமிய கண்டுக்கல இவன்மட்டும் என்ன பாவம் செய்தான்?

Tamil.BBC ::மதுரை மாவட்டம் மேலூரில், கிரானைட் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக நீதிபதி கே.வி. மகேந்திர பூபதியை சென்னை உயர் நீதிமன்றம் இடைநீக்கம் செய்திருக்கிறது.t; கிரானைட் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்து நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்டிருந்தார். இதற்கான உத்தரவை உயர்நீதிமன்றப் பதிவாளர் அனுப்பியிருக்கிறார். அவருக்குப் பதிலாக பாரதிராஜா என்பவர் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிபதி மகேந்திர பூபதி தவறாகச் செயல்படுவதாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கோ, ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்கும்படி கூறி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் நீதிபதி பி.என். பிரகாஷ் கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று கூறினார்.

தமிழருவி மணியன் (பதட்டபடுகிறார்) :மதுவிலக்கு கொண்டுவருவேன் என்று ஜெயலலிதா அறிவிக்க வேண்டும்....

மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என ஜெயலலிதா உறுதிமொழி வழங்க வேண்டும்: தமிழருவி மணியன்ஜெயலலிதா தன்னுடைய தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என உறுதிமொழி வழங்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேர்தல் களத்தில் நம் அரசியல் கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படுவதே இல்லை.  அவற்றைப் பற்றி வாக்காளர்களும் பெரிதாகக் கவலைப்படுவதும் இல்லை.    தனது  குலதெய்வம் ஜெயலலிதா தோற்றுவிடுவார் என்று  தமிழருவி மணியன் சொல்லொணா துயரம் கொள்கிறார்....ஜெயா டாஸ்மாக் ஒழிப்பேன் என்று ஒரு வார்த்தை சொன்னாதான் வெற்றி பெற முடியும் என்று மண்சோறு சாப்பிடுக்கிறார் கண்ணீர் வடிக்கிறார்....ஒரு அரசியல் அபலையின் கண்ணீர் கோரிக்கை ..

பிரேமலதா : ஓடாதீங்க ஓடாதீங்க நமக்கு நல்ல காலம் வருது....நல்லா கவனிப்போமுங்க.

தே.மு.தி.க.,வை கரைக்கும் வேலைகளை, தி.மு.க., துவக்கி உள்ளதால், விஜயகாந்த் மனைவி பிரேமலதா அலறத் துவங்கியுள்ளார்.சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க., விரும்பியது. தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பலரும், இதே மனநிலையில் இருந்தனர். ஆனாலும், திடீரென மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை தே.மு.தி.க., செய்துள்ளது. யக்காவ் முதல்ல நாவடக்கம் தேவை....கொஞ்சம் கூட மருவாதை தெரியல்ல....  என்னமோ கண்ணகி பரம்பரையில் வந்தது போல் நேற்று வீர வசனம் எல்லாம் பேசீனீக.இன்று தொண்டர்களும் ம. செ இக்களும் அடுத்த கட்சிக்கு ஓடுகிறான் என்றதும் கண்ணீரும் கம்பலையுமாய் நிக்கிரீங்க  கணவன்தான் குடிகாரன். ஆனா நீங்க அதுக்கும்   மேல்  போல் தெரிகிறது,

காங்கிரஸ் திமுக கூட்டணி உடன்பாடு பூர்த்தி....த மா க வுக்கு இடம் இல்லை.....

தி.மு.க., கூட்டணியில் குறைந்தபட்சம், 40; அதிகபட்சம், 50 தொகுதிகள் பெற வேண்டும் என, தமிழக காங்கிரசுக்கு, டில்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
அதுபற்றி, சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை நடந்தது. பொருளாளர் ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலர் கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் பங்கேற்றனர். தீவிர ஆலோசனைக்கு பின், காங்கிரசுக்கு, 32 தொகுதிகள் ஒதுக்கலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த தகவலை, தொலைபேசி மூலமாக, காங்., தலைவர் சோனியாவிடம், கனிமொழி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சோனியாவிடம் இருந்து உடனடியாக பதில் இல்லை.
பங்கீடு பற்றி பேச வந்த, மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத்திடம், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்றும், த.மா.கா., வந்தால், எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்றும், தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.

வைகோவின் லேடஸ்ட் கோரிக்கை ! நேதாஜியின் ஆவணங்களை பிரதமர் ரிலீஸ் செய்யணும்...

மாவீரர் நேதாஜி தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கீர்த்தி மிக்க இடம்பெற்றிருக்கும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைக்கப்பட்ட ஆவணங்களில் மூன்றை மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.கடந்த 1945 ஆகஸ்ட் 18 இல் நேதாஜி பயணம் செய்த ஜப்பான் விமானம் பர்மோசாவில் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்படாத தகவல்தான் இதுவரை பேசப்பட்டு வருகிறது. 

BJP.. 180 நமக்கு, 54 கூட்டணி கட்சிகளுக்கு: இது பாஜக போட்டுள்ள கணக்கு

தமிழக சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 180ல் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பெரு முயற்சி செய்தும் பலனில்லை. இந்நிலையில் தேர்தலை தனியாக சந்திக்கும் அளவுக்கு கட்சி பலமாக இருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 180ல் போட்டியிடுவது என்றும் மீதமுள்ள 54 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதிகளும், புதிய நீதிக்கட்சி 25ம், தேவநாதனின் கல்வி கழகம் 40ம், தேவர் அமைப்புகள் 30ம், அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம் 20 தொகுதிகளும் தங்களுக்கு ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை....ஏனிந்த கொலைவெறி ?

திண்டுக்கல்,மார்ச் 31 (டி.என்.எஸ்) திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேவலமான அரசியல் நடத்துவதாக கூறியுள்ள பிரேமலதா விஜயகாந்த், அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட தேமுதிக சார்பில், தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 2 மாதங்களாக திமுக, அதிமுக என்ற கட்சிகள் தமிழகத்தில் மறக்கடிக்கப்பட்டு வருகிறது. விமர்சனமாக இருந்தாலும், வாழ்த்தாக இருந்தாலும் விஜயகாந்த் என்ற பெயரை தவிர்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

சேறுவாரி வாரி வீசுவதற்காக ஒரு கூட்டணி......கொஞ்சம் திரும்பி பாருங்க சார்



டாஸ்மாக்கை காப்பாற்ற மீண்டும் தேசதுரோக வழக்கு....சிறுமிகள் மீதும்......வெளங்குமா இந்த பொம்பளை?

மூடு டாஸ்மாக் மாநாட்டில் பேசியவர்கள்வினவு.com கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் திருச்சியில் டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தினோம். அதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர். காளியப்பன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், டாஸ்மாக் பணியாளர் சங்க செயலாளர் தோழர். தனசேகரன், உதவும் கைகள் அமைப்பின் ஆனந்தியம்மாள், நாகர் கோவிலைச் சேர்ந்த வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜா ஆகியோர் மீது 124A (தேசத்துரோகம்), 504, 505 – 1B இ.த.ச ஆகிய பிரிவுகளின் கீழ், சுமார் ஒன்றரை மாதத்திற்குப் பின், 26.03.2016 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி, ஐந்தாம் வகுப்பு மாணவி காவ்யாஸ்ரீ ஆகிய சிறுமிகளையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் மட்டுமல்ல, மாபெரும் மனித உரிமை மீறலுமாகும்.

கொல்கத்தா பாலம் திடீரென விழுந்ததில் 17 பேர்


கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கணேஷ் டாக்கிஸ் பஜார் பகுதியில் கே.கே.தாகூர் சாலை மேல் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலத்தின் மேல் புதன்கிழமை சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அந்த மேம்பாலம் நிலைகுலைந்து சரிந்து விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஏராளமானோர் சிக்கினர். 17 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

பிரேமலதா கும்பல் ஆட்சிக்கு வந்தால்...கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் தமிழகம் கோவில்கட்டி கும்பிடும்

ஆர்.மணி இன்று திரும்பிய இடமெல்லாம் கேப்டன் விஜயகாந்த் அணியின் சார்பில் பிரேமலதாதான் நின்று பேசிக் கொண்டிருக்கிறார். தேசிய முற்போக்கு திராவிடர் கழக மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார். தேமுதிக வின் மகளிர் அணித் தலைவர் என்ற முறையில் இந்த முன்னுரிமை 'அண்ணியாருக்கு' - இப்படித்தான் இவரை தேமுதிக தொண்டர்கள் அழைக்கிறார்கள் - கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்தால் நீங்கள் இந்திய அரசியலின் அடிச்சுவடியும், குடும்ப அரசியிலின் அடிப்படைக் கோட்பாடுகளும் கிஞ்சித்தும் அறியாதவர்கள் என்று அர்த்தம். 
கேப்டனின் மனைவி என்ற அந்தஸ்து உள்ளதால் மட்டுமே இந்த முன்னுரிமை ‘அண்ணியாருக்கு' தேமுதிக வில் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் 23ம் தேதி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி உதயமானது. அன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் நாடு பொதுச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ் நாடு பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோருடன் சேர்ந்து காமிராக்கள் முன்னின்று பொது மக்களுக்கு அருள் பாலித்தார் விஜயகாந்த்

வியாழன், 31 மார்ச், 2016

தனுஷ் ஒரு போன் கூட செய்யவில்லை” கிஷோரின் தந்தை உருக்கம்! நன்றி கெட்ட சினிமாக்காரன்.

இறந்த பிறகும் கூட தனது இரண்டாவது தேசிய விருதை வாங்கி பெற்றோர்களுக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார் எடிட்டர் கிஷோர். உண்மையில் நாம் பெருமைப் பட வேண்டிய தருணமிது. இந்நிலையில் அவரது அப்பாவோ வேறு விதமாக மனக் கஷ்டத்தைப் பகிர்ந்துள்ளார்.
பிரபல ஆங்கிலப் பத்திரிகைக்குக் கொடுத்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, ”ஒரு வருடம் கடந்துவிட்டது என் மகன் இறந்து , ஆனால் சினிமாத் துறை எங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை. என் மகன் தேசிய விருது பெற்றிருப்பதை வெற்றிமாறனின் துணை இயக்குநர் போன் செய்து எங்களுக்கு தெரிவித்தார்”. ”ஆடுகளம் உருவான வேளையில் தனுஷும், என் மகனும் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.

2015 இல் 4,000 கோடீஸ்வரர் இந்தியாவை விட்டு வெளியேறி உள்ளனர்

India has seen the fourth biggest outflow of high net worth individuals globally in 2015 with shifting of 4,000 millionaires overseas, says a report
வாஷிங்டன்,மார்ச் 31 (டி.என்.எஸ்) இந்தியாவை விட்டி மில்லியனர்கள் (லட்சாதிபதிகள்) வெளியேறுவது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள ஆய்வறிக்கை ஒன்றி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆய்வு மேற்கொண்ட நியூ வேல்ட் வெல்த் என்ற நிறுவனம் தனது ஆய்வறிக்கையில், உலக அளவில் பிரான்சில் கடந்த ஆண்டு 10 ஆயிரம் மில்லியனர்கள் வெளியேறியதாகவும், முஸ்லீம் கிறிஸ்தவர்களுக்கு இடையே அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

பி.ஆர்.பழனிசாமியை விடுதலை செய்த மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு

மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது 85–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடரப்பட்டு மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் விசாரணை நடத்தி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி கிரானைட் தொடர்பான சில வழக்குகளை மட்டும் விசாரணைக்கு ஏற்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக குறைந்தபட்ச தண்டனை வழங்கக்கூடிய வகையில் இருக்கும் வழக்குகளை மட்டுமே அவர் விசாரிப்பதாக கூறப்பட்டது.

Vasalgel ஆணுறைக்கு பதிலாக ஒரே ஊசி ஒரு வருடம் தாக்கு பிடிக்குமாம் !

Condom Free Sex May Now Be A Possibility With Just One Shot Of This New Injection
மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது பற்றிய ஆராய்ச்சியை, அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான  விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர். இறுதியில், புதிய வகை கருத்தடை மருந்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட்டால் உருவாக்கப்பட்ட அந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில்  மாற்றம் ஏற்பட்டு, ஆண் விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகி விடுமாம்.

திமுகவின் பழிவாங்கும் படலம் ?அன்று ரெய்டு...63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்ததற்கு... இன்று ...?

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவின் கிடுக்குப்பிடியால் வாழ்வா? சாவா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது காங்கிரஸ் கட்சி. கடந்த சட்டசபை தேர்தலில் சிபிஐ மூலம் ரெய்டு உள்ளிட்ட பல அஸ்திரங்களை ஏவி திமுகவை பிழிந்து 63 தொகுதிகளை பெற்ற காங்கிரஸுக்கு இப்போது திமுக தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்து வருகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் முதல் கட்சியாக இடம்பிடித்தது. கடந்த தேர்தலைப் போலவே 63 தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என நினைத்தது காங்கிரஸ். ஆனால் வாசன் பிரிந்து போய் தனிக்கட்சி தொடங்கிவிட்டாரே... எனக் கூறி நிச்சயம் 63 தொகுதி கிடையவே கிடையாது என அடித்துச் சொல்லிவிட்டது திமுக. அத்துடன் முடியவில்லை பஞ்சாயத்து.
காங்கிரஸுக்கு 40 தொகுதிகளாவது திமுக விட்டுக் கொடுக்கும் எனக் கூறப்பட்டது. தற்போதோ 'உங்களுக்கு 25' என்பதே மிக மிக அதிகம்... அதுக்கு மேல உங்களுக்கு கொடுக்கிற அத்தனை தொகுதியும் வேஸ்ட் என்று  பதில் தருகிறது திமுக.  நமக்கென்னவோ இளங்கோவனை குறிவைத்து,... சிதம்பரம் தங்கவேலு கோஷ்டி ஊதிவிடும்  சம்பூர்ண ராமாயண கதையோ என்ற சந்தேகம் வருகிறது 

போர்வாள் அட்டகத்தி ஆன கதை! மக்களுக்குத் தெரியாதது ஒன்றுதான்... உங்களை இயக்கும்--------?

vikatan.com  ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்‘
தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கத் துடிக்க ஆரம்பித்திருக்கிறார். சயனைட் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 1967-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவை ஆட்சியில் அமர்த்த, விருதுநகர் வீதிகளில் கல்லூரிப் பருவத்தில் கால்கடுக்க அலைந்த வைகோ, 50-வது பொதுவாழ்வு பொன்விழாவைக் கண்ட பிறகு வேகாத வெயிலில் விஜயகாந்தை முதலமைச்சராக்க அலையத் தயாராகிவிட்டார். அழகாக ஆரம்பித்த பயணம் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. தவறுகளைச் சத்தமாகவும் நல்லவற்றை மறைமுகமாகவும் செய்யும் இயல்புகொண்ட வைகோ, தே.மு.தி.க-வுக்கு விருப்பம் உள்ள பி.ஆர்.ஓ-வாக மாறிவிட்டார்.

அழுது புரண்ட தேமுதிக தொண்டர்கள்.....ம.ந.கூட்டணியில் விஜயகாந்த் ஏன் சேர்ந்தார்? கட்சிகாரர்கள் போர்க்கொடி!

சென்னை: விஜயகாந்த்தை, திமுக தரப்பில் இருந்து தயாநிதி மாறன் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என்று தேமுதிகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைந்த யுவராஜ் தெரிவித்துள்ளார். தேமுதிகவை எப்படியாவது தங்கள் கூட்டணியில் சேர்க்க திமுக தலைமை தொடர்ந்து முயன்று வந்தது. திரைமறைவில் நடந்த பேச்சுகள் மூலம், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி சந்திப்புகள் நடந்தன. விஜயகாந்த் தங்கள் பக்கம்தான் சாய்வார் என்று நினைத்துதான், திமுக தலைவர் கருணாநிதி இறங்கி வந்து, பல முறை, தேமுதிகவுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார். 'பழம் நழுவி பாலில் விழும்' என்றெல்லாம் பேசினார்
விஜயகாந்த்துடன் பேச்சு பேச்சுவார்த்தை உச்சகட்டத்தில் இருந்தபோது, சென்னைக்கு ஒதுக்குப்புறமாக ஒரு இடத்தில் வைத்து ஊடக அதிபர் கலாநிதி மாறன், விஜயகாந்த்துடன் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் இருந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
சீட்டுகள் இறுதி கலாநிதி மாறன் 63 தொகுதிகள் கொடுக்க முன் வந்ததாகவும், ஆனால் விஜயகாந்த், தனது ராசி எண்ணான 5 வர வேண்டும் என்பதற்காக 59 சீட்டுகள் பெற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சிறுதாவூரில் கன்டெய்னர் லாரிகள் விசாரணை நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவு....சாவகாசமாக பண்ணுங்க.....

சென்னை: ''காஞ்சிபுரம் மாவட்டம், சிறுதாவூர் பங்களா அருகே லாரிகள் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. புகாரில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:சென்னை,
சிறுதாவூரில் பங்களா அருகே கன்டெய்னர் லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பாக, எதிர்க்கட்சிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையில், புகார்மீது உண்மை இருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  நடப்பது  ராமராஜ்ஜியம்  குற்றவாளிகள் கூட சுகமாக தப்பிவிட  வாய்ப்பு அளிக்கப்படுமல.. தேடிபோனோம் அண்ணே பயபுள்ள ஓடிட்டாய்ன்...இதுதானே பதில், 

ஆர்.கே.செல்வமணி : சினிமா இப்போ புரோக்கர்களின் கைகளில்தான்


சினிமாவில் ஒரே நேரத்தில் 14 தொழில்நுட்ப  வேலைகளைச் செய்து கின்னஸ் சாதனை செய்துள்ளவர் பாபு கணேஷ் .அவர்  தன்மகன் ரிஷிகாந்த்தை கதாநாயகனாக அறிமுகம் செய்துள்ள படம் ‘காட்டுப்புறா’. இது தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகள் வாசனைப் படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா தியாகராயர் க்ளப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஆடியோவை வெளியிட்டார்.
விழாவில்  தமிழ் திரைப்பட இயக்குநர்கள்  சங்கத்தின் செயலாளர் ஆர்.கே. செல்வமணி பேசும் போது
” இந்த பாபு கணேஷ் என் நெருங்கிய நண்பர். குடும்பத்துடன் பழகிடும் குடும்ப நண்பர். என் காலத்தில் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர்.

தேமுதிக வானிலை அறிக்கை :18மா.செக்கள், 11 எம்.எல்.ஏக்கள்...இரண்டு பெருநிலப் பரப்புக்களிலும் தாழமுக்கம்...

வட சென்னை தேமுதிக மாவட்ட செயலர் யுவுராஜ், அக்கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட போது பொருளாளர் மு.க.ஸ்டாலினும் உடனிருந்தார்.
சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவை இழுத்து பலமான கூட்டணி அமைக்க முயற்சி செய்தது திமுக. பல கட்ட பேச்சுவார்த்தைகளை ரகசியமாக நடத்தியது. ஆனால் தேமுதிகவோ மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்து விட்டது.
இது திமுகவை மட்டுமல்ல தேமுதிக நிர்வாகிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே தேமுதிக நிர்வாகிகள் திமுகவுக்கு தாவி வருகிற நிலை உருவாகியுள்ளது.
மதிமுக மாவட்ட செயலாளர்களை வளைத்தது போல தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் பலரை தங்கள் பக்கம் இழுக்க 'ஆபரேசன் ஸ்டாலின்' ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம். முதலாவதாக மாட்டியிருப்பவர் வடசென்னை மா.செ. யுவராஜ் என்கின்றனர். விஜயகாந்த்  எல்லா இடத்திலும் பேரம் பேசி பேசி  தனது கட்சிகாரர்களையே வெறும் டம்மி பீசாக்கினதுதான் மிச்சம்...சுடு மணலில் நடக்க கட்சிகாரர்கள இனியும் தயாரில்லைங்கோ .

தமாகவுக்கு 25 தொகுதிகள்....மக்கள் நல கூட்டணி பேச்சு...விஜயகாந்த் தொகுதிகளில் சிலவற்றை

தமிழக சட்டசபை தேர்தலில் பல கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்து விட்டன. ஆனால் தமாகாவின் ஜி.கே.வாசன் இன்னமும் கூட்டணி குறித்த குழப்பத்தில் உள்ளார்.அதிமுக கூட்டணியில் சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.கே.வாசன் தற்போது அதிமுக தொடர்பில் இல்லை என கூறப்படுகிறது. அதிமுக கொடுக்கும் குறைவான தொகுதிகளை பெற ஜி.கே.வாசன் தயாராக இல்லை எனவும், ஜி.கே.வாசன் கேட்கும் தொகுதிகளை கொடுக்க அதிமுகவும் தயாராக இல்லை என கூறப்படுவதால், இந்த கூட்டணி அமைவது சற்று கடினமே என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.  வாசன் சீக்கிரமே இந்த கூட்டணியில் சேர்ந்து வரலாறு படைக்க வாழ்த்துகிறேன்

K.K.S.S.R.ராமச்சந்திரன் ஜெயலலிதாவை சி எம் ஆக்கியதற்கு உரிய பலனை போதும் போதும் என்ற அளவு.....

விகடன்.com :அதிமுகவின் நிறுவனரான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அணி, ஜானகியம்மாள் அணி என்று அதிமுக இரண்டாக உடைந்து,  அரசியல் களம் அதகளப்பட்டுக்கொண்டிருந்தபோது,; ஜானகியம்மாளுக்கு ஆதரவாக இருந்தவர் ஆர்.எம். வீரப்பன். ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட அவர் தலைமையில் பல தலைவர்கள் கச்சைகட்டிக்கொண்டிருந்தபோது,  ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்து அவரை அரசியலில் காலுான்றச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருநாவுக்கரசர், நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன்.   31 அதிமுக MLA களை இவர் வடநாட்டுக்கு விமானத்தில் கூட்டி சென்று ஹோட்டல்களில் அடைத்து வைத்து ஜெயலலிதாவின் அரசியல் பலத்தை பாதுகாத்து ஜானகி அணியை கவிழ்ப்பதற்கு பெரும் உதவி  செய்தார். மாட்டுக்கார வேலன் என்ற பட்டத்தை அதன் மூலம் பெற்றுகொண்டார். ஜெயலலிதாவை அரசியல் அரங்கிற்கு தனது சுயநலம் கருதி கொண்டுவந்ததற்கு இவர் தமிழ்நாட்டு மக்களிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும் .....ஜெயலலிதாவிடம் நன்றி என்ற வார்த்தையே கிடையாது அதனால்தானோ என்னவோ அவரால் பயன்பெற்ற எல்லோருமே அவரின் காலை வாரப் போகிரர்கள்...வரலாறு அதையும் காணத்தான் போகிறது  

துணை முதலமைச்சராகமாட்டேன் : வைகோ உறுதி....வைகோ மட்டுமா உறுதி ?

கோவில்பட்டியில்  பிரச்சாரத்தில் தேமுசிக சார்பில் பேசிய எல்.கே.சுதீஷ், அமைச்சரவையில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி அரசில் வைகோவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று சாத்தூர் பிரச்சாரத்தில் பேசிய வைகோ, ‘’ கூட்டணி ஆட்சியில் எனக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று சகோதரர் சுதீஷ் சொன்னார். சுதீஷ் எல்லை மீறிய உணர்ச்சிவயப்பட்டு அப்படி பேசிவிட்டார். விஜயகாந்த் முதலமைச்சர் ஆனபிறகு கூட்டணிக்கட்சிகள் எல்லாம் அமைச்சரவையில் இடம்பெறும். எந்தெந்த இலாக்காக்கள் என்பது அவர் முடிவு செய்யவேண்டியது. துணை முதலைமைச்சர் என்ற பொறுப்போ அல்லது அவையில் அமைச்சர் என்ற பொறுப்போ என் கற்பனையில் கூட இடம்பெறமுடியாது.  வேணாம் வலிக்குது அழுதுருவேன்...... 

புதன், 30 மார்ச், 2016

கெயில் தீர்ப்பு : ராமன் (பார்பன) பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!

ளியவர்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம்தான் என முதலாளித்துவ ஊடகங்களாலும், அறிவுத் துறையினராலும் முன்னிறுத்தப்படும் அந்த இரட்சகன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை எரிவாயு குழாய் பதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது. தமிழகத்தின் மேற்கே அமைந்துள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களையும், அவ்வூர்களைச் சேர்ந்த 5,842 சிறு விவசாயிகளை நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான மக்களை மறைமுகமாகவும் பாதித்து, அவர்களின் நிகழ்கால சேமிப்புகளையும், எதிர்கால வாழ்க்கையையும் ஒருசேர நிர்மூலமாக்கவுள்ள இத்தீர்ப்பில், தேசிய நலனின் முன்னே விவசாயிகளின் உணர்ச்சிகளுக்கெல்லாம் இடங்கொடுக்க முடியாது” என ஞான உபதேசம் செய்திருக்கிறார்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

டாஸ்மாக் எழவு நாட்டில் தேர்தல் திருவிழாவா ?

வினவு.com :நீங்களும் வாங்க… இந்தச் சனியனை ஒழிக்க ! மூடு டாஸ்மாக்கை ! பொதுக்கூட்டம் – பாகம் 2 shutdown-tasmac-virudhai-meeting-poster-1விருத்தாசலம் வானொலி திடலில் 27-3-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் க. இளமங்களம் தப்பாட்ட குழுவினரின் இசை முழக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது. தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தோழர் கணேசன் உரை
தமிழகத்தில் இன்று ஒரு திருவிழா களைகட்டத் தொடங்கி இருப்பதாக அனைத்துப் பத்திரிகைகளும் எழுதுகின்றன. அதுதான் ’தேர்தல் திருவிழா, ஜனநாயகத்திருவிழா’. இது யாருக்கானது? தமிழக மக்களுக்கானதா? ஒரு ஊரில் சாவு நடந்துவிட்டால் அந்த ஊரில் எவ்வளவு முக்கியமான விழா என்றாலும் அந்த சாவை எடுத்துவிட்டுத்தான் மறு வேலையைப் பற்றி யோசிப்பார்கள். டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானது இல்லையா?

குற்றவாளிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அவனின் அனுமதியை நீங்க பெறவேண்டும்...... ஊழல் ராணியின் புதியசட்டம்

வாழவைக்கும் ஊழலுக்கு ஜே! – ஜெயலலிதாவின் புதிய அரசாணை
ஊழல் முறைகேடுகள்“வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்பது தமிழ் மக்களின் காதில் புளித்துக் கிடக்கும் அடுக்குமொழி வசனங்களில் ஒன்று. அவ்வசனத்தில் சிறியதொரு திருத்தம் செய்து, வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது ஊழலாக இருக்கட்டும்” என்று புதியதொரு வசனத்தை வழங்கி யிருக்கிறார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் ஜெ., “நான் பட்ட துன்பத்தை எதிர்காலத்தில் ஒரு டவாலி கூட அனுபவிக்கக் கூடாது” என்று தாயுள்ளத்துடன் சிந்தித்து, பிப்ரவரி 2-ஆம் தேதியன்று ஒரு அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார். இனி, எந்த அரசு ஊழியர் மீது புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படாது என்பதால், ஊழல் குற்றம் சாட்டுவோர் மீதான அவதூறு வழக்குகளும், முத்துக்குமாரசாமி போன்றோரின் தற்கொலைகளும்தான் அதிகரிக்குமே தவிர, ஊழலை பொறுத்தவரை அது அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடும்  ரேப் பண்றவன் கிட்டேயே போயி போலீசில சொல்லவான்னு பெர்மிஷன் வேணும்னு கேட்கிற சட்டம் இது.....இப்பவே நரபலி பழனிசாமி ஆமானப்பட்ட சகாயம் போட்ட கிடுக்கி பிடியையே உடைக்க தொடங்கிட்டாய்ன்? 

ஜெ.வை விடுதலை...நீதிபதி குமாரசாமி நீதியை சிதைத்துவிட்டார்- சு.சுவாமி....அன்பழகன் தரப்பு வாதம் தொடரும்

டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடகா உயர்நீதிமன்றம் (நீதிபதி குமாரசாமி) நீதியை சிதைத்துவிட்டது; ஜெயலலிதாவுக்கு தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம் (நீதிபதி குன்ஹா) தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார். ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மற்றும் திமுக பொதுச்செயலர் அன்பழகன் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இதன் மீதான விசாரணை 9-வது நாளாக நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடைபெற்றது. Karnataka HC commits miscarriage of justice, says swamy

திருநாவுக்கரசர் : எமக்கு தரவேண்டிய தொகுதிகளை குறைக்க கூடாது...தமாக சேர்ந்தாலும்.....?

டெல்லி: திமுக அணியில் ஜி.கே.வாசனின் த.மா.கா. சேருவதில்லை பிரச்சனை இல்லை; அதற்காக காங்கிரஸ் கட்சியின் தொகுதிகளை குறைக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசிய செயலர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. த.மா.கா.வும் வரக் கூடும் என்பதால் காங்கிரஸ் தொகுதிகளைக் குறைப்பதாக திமுக கூறி வருகிறது. Cong. demands more seats in DMK allaince ஆனால் இதை காங்கிரஸ் ஏற்கவில்லை. இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ராகுல் - இளங்கோவன்...திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரசுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச கடந்த வாரம் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்து திமுக தலைவர் கலைஞரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக தலைவரின் கருத்துக்களை காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவிப்போம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். அவர், இன்று காங்கிரஸ் துணைத் தவைர் ராகுல் காந்தியை சந்தித்தார்.  காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாக்கு வங்கியை குறைத்து மதிப்பிட்டால் திமுக மிக பெரும் தவறு இழைப்பதாகவே கருதவேண்டும்

சீட் வேண்டாம் கட்சிப் பதவியே போதும்...மாட்டிகிட்ட ர ராக்கள் அலறல்

விகடன்.com :அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் என்பது ஏறக்குறைய முழுமைக்கு வந்து விட்டது. நாளையோ (31.03.2016)  அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ வேட்பாளர் பட்டியலும், கூடவே தேர்தல் அறிக்கையும் சேர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத  நேர்காணலாக இந்த நேர்காணல் அமைந்ததற்கு, கட்சித் தலைமையின் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மந்திரிகளே காரணம் என்று கூறப்படுகிறது.  ''ஒரு மந்திரிக்கு தலா மூன்று மாவட்டங்களில் ஆதரவும், செல்வாக்கும் என்ற நிலை தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. செல்வாக்கு பெற்ற அவர்களை தவிர்த்து விட்டு ஒதுக்கப்பட்டவர்களாய் மூலையில் முடங்கிக் கிடந்தவர்களை''  வரச் சொல்லுங்கள் என்றுதான் இந்த முறை நேர்காணலுக்கு சொல்லி விட்டிருக்கிறார், கட்சியின் பொ.செ.வான ஜெயலலிதா.

பி.ஆர்.பழனியை (நரபலி) விடுவித்த நீதிபதியின் செயல் நேர்மையான அதிகாரிகளை அச்சுறுத்தும்... நீதிபதி மீது நடவடிக்கை சிபிஎம் வேண்டுகோள்

நேர்மையான அதிகாரிகளை இது அச்சுறுத்தும், குற்றவாளிகளை ஊக்குவிக்கும் என்று சுட்டிக்காட்டுகிறோம். ஏற்கனவே இம்மாதம் 24ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம், கிரானைட் கொள்ளை வழக்குகளில் தம் உத்தரவை மீறி செயல்படுவதாக, இந்த நடுவரின் பேரில் குற்றம்சாட்டி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இவர் மீது தொடரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அனைத்தையும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்தும்,  அதை மீறி, பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலேயே மிகச் சிறிய வழக்கை மட்டும் எடுத்து நடத்தி, மற்றவற்றை நிலுவையில் தன் நீதிமன்றத்திலேயே மேலூர் நீதித்துறை நடுவர் வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வழக்கில் தான் தற்போதைய உத்தரவை வழங்கியிருக்கிறார்.

காங்கிரஸூக்கு 25, தாமாகாவுக்கு 25? திமுக முடிவு....காங்கிரஸ் அதிர்ச்சி... மீண்டும் அதிமுக அழைத்தால்...வாசன் ரெடி

0a1wதமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் தமாகாவுக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது. அதைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி (மமக), எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளும் இணைந்தன. இதில் முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக வேகம் காட்டி வருகிறது. வாசன் ஒரு வெறும் டப்பா......இவரின் வண்டவாளம் தெரிந்துதான் ஜெயலலிதா இவரை கழற்றி விடுகிறார்  

ரயில், பஸ்களில் திடீர் சோதனை ராஜேஷ் லக்கானி அறிவிப்பு...TN Election..... Of the Admk for the Admk by the Admk?

சென்னை:''ரயில் மற்றும் பஸ் மூலம், பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட வாய்ப்புள்ளதால், ரயில் நிலையம் மற்றும் பஸ்களிலும், திடீர் சோதனை நடத்தப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
பணம் பறிமுதல்:
தேர்தலில் வாக்காளர்களுக்கு, பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்கப்படுவதை தவிர்க்க, தேர்தல் கமிஷன், மாநிலம் முழுவதும், 702 பறக்கும் படை, 702 நிலை கண்காணிப்பு குழு அமைத்து, வாகன சோதனை நடத்தி வருகிறது.சோதனையின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.  வைகோ :ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னரில் கட்டுக் கட்டாக பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது  திடீர் சோதனை எல்லாம் மக்களுக்குத்தான் அதிமுகவுக்கு அல்ல....

பாஜகவுக்கு அதிமுக மேல் ஏன் திடீர் கோபம்? எல்லா கதவும் அடைபட்டுவிட்டதே....வராதா? நம்பி இருந்தாய்ங்க....

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அ.தி.மு.க., - பா.ஜ., இடையே, கடும் மோதல்ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., மேலிட தலைவர்கள் பிரகாஷ் ஜாவடேகர், முரளிதரராவ் போன்றோர், 'அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி' என, விமர்சித்து வருகின்றனர். அ.தி.மு.க.,வை விமர்சிக்காத, மாநில தலைவர்களை, மேலிடம் சமீபத்தில் கண்டித்துள்ளது. பா.ஜ., சமூக வலைத்தள பிரிவோ, ஒருபடி மேலே போய், ஜெயலலிதாவையும், சசிகலாவையும் விமர்சித்துக்கா, பெரிய அக்கா ,
'சின்னபொம்மலாட்டம்' என, கார்ட்டூன் வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியது. 'பா.ஜ.,வுக்கு பதில் அளிக்க வேண்டாம்' என, பொறுமை காத்த, அ.தி.மு.க., தலைமை, மத்திய அமைச்சர் பீயுஷ் கோயலின் புகாருக்கு, ஓ.பன்னீர்செல்வம் மூலம் பதில்தந்தது.