சனி, 1 மார்ச், 2025

ஆறு மாதம் தான் பழகினேனா? – சீமானுக்கு விஜயலட்சுமி பதில்!

 மின்னம்பலம் - Selvam : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை 12 மாதங்களுக்குள் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். நேற்று (பிப்ரவரி 28) இரவு காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம், 1.30 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “விஜயலட்சுமியுடன் ஆறு மாதங்கள் மட்டுமே பழகினேன்.
 அவர் என்னுடன் விரும்பி தான் உறவு வைத்துக்கொண்டார்.

டிரம்ப் - ஸெலன்ஸ்கி: கொந்தளிப்பான 10 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது எப்படி?

 பி பி சி தமிழ் : உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஸெலன்ஸ்கி நினைத்தார்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா, யுக்ரேனுக்கு அளித்த ஆதரவிற்காக ஸெலன்ஸ்கி நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், துணை அதிபர் ஜே.டி.வான்ஸும் அறிவித்த பிறகு ஸெலன்ஸ்கி உலக ஊடகங்கள் முன்பு குறைமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டதைப் போல் உணர்ந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாள்! : சென்னையில் தொண்டர்களை சந்திக்கிறார்

 Hindu Tamil :  சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தும் அவர், அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று காலை முதலே அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு’ – நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் ஏன்?

விகடன் : `ரூ.50 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு’ – நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் ஏன்?
கிரிப்டோ கரன்சியில் பல மடங்கு லாபம் கொடுக்கிறோம் என்று கூறி, இந்தியா முழுவதும் சுமார் 50 கோடி வரை கொள்ளையடித்த கும்பலை கைது செய்திருக்கும் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார், இந்த வழக்கு தொடர்பாக நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
கிரிப்டோ கரன்சி டிரேடிங்
புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த அசோகன், முன்னாள் அரசு ஊழியர். சில மாதங்களுக்கு முன்பு `கிரிப்டோ கரன்சியில் உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள்.

திராவிட தலைவர் சர் ஏ டி பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த நாள் இன்று! காணாமல் போன IMPERIAL AIRWAYS HP42 'Hannibal' flight CW197 விமானம்

May be an image of 1 person
May be an image of seaplane

திராவிட தலைவர் சர் ஏ டி பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த நாள் இன்று!
1940 மார்ச் 1  தேதி இங்கிலாந்தில் இந்திய விவகார அமைச்சு செயலாளர் என்ற மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு செல்லும்  வழியில் இவரை ஏற்றி சென்ற ஹனிபால் விமானம் IMPERIAL AIRWAYS HP42 'Hannibal' flight CW197 ஓமான் கடலில் காணாமல் போனது!
நடுக்கடலில் விபத்தை சந்தித்தது சர் ஏ டி பன்னீர்செல்வம் அவர்களின் விமானம் மட்டுமல்ல,   
திராவிட நாட்டுக்கான தீர்மானமும் கூட இந்த விமான விபத்தில் சிக்குண்டது!
இந்த விமானம் திராவிடர்களால் மறக்கவே முடியாத ஒரு விமானம்  
இந்த  விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிட நாடு  அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள்.
சேர் ஏ டி பன்னீர்செல்வத்தின் மறைவை அறிந்து தந்தை பெரியார் சிறு பிள்ளை போல  தேம்பி அழுதார்!

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

இலங்கையில் திமுக பாடகர் எம் நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு நிகழ்வு - ஆளூர் ஷா

jaffnamuslim.coம் உலகறிந்த பாடகர் இசைமுரசு மர்ஹூம் நாகூர் ஈ. எம் ஹனிபா அவர்களின் நூற்றாண்டு நிகழ்வை,
 இலங்கையில் ஜூலை மாதத்தில் சிறப்பாக நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளில் பங்கேற்பதற்காக, தமிழகத்திலிருந்து வருகை தந்த நாகப்பட்டினம் சட்டமன்ற  உறுப்பினர்   ஆளூர் ஷாநவாஸ்  , ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.ஷாஹுல் ஹமீத் சகிதம் ஸ்ரீ லங்கா மீடியா போரம் தலைவர் என்.எம். அமீன் ,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், ஆர்வலர்களோடு கலந்துரையாடியுள்ளார்.

ஜாபர் சாதிக் போதை பணத்தை அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார்:

 hindutamil.in : போதைப்பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகளில் செலுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஜாபர் சாதிக் ஈடுபட்டுள்ளார் என அமலாக்கத்துறை ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவி்த்து உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி அவரை கடந்தாண்டு ஜூனில் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை கடந்தாண்டு ஆகஸ்டில் கைது செய்தனர்.

நடிகர் விஜய்யின் குண்டர்கள் செய்தியாளர்கள் மீது தாக்குதல்... குவியும் கண்டனம்! t

 மின்னம்பலம் -  christopher :  தவெக இரண்டாம் ஆண்டு விழா கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. tvk vijay bouncers attack journalist
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்ரவரி 26) கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அரங்கில் கூடியிருந்த தொண்டர்களின் பலத்த கோஷத்திற்கு இடையே சரியாக 10 மணிக்கு தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோருடன் மேடையேறினார் கட்சியின் தலைவர் விஜய்.

போலீசுக்கு சீமான் சவால்! வெளி மாநிலத்துக்கு தப்ப முயன்றாரா?

    மின்னம்பலம் -  Kavi : நாளை போலீஸில் ஆஜராகாத பட்சத்தில் சீமான் கைதுசெய்யப்பட அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. seeman in police surveillance
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்தார். அவருக்கு எதிர்க்கட்சியான அதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
திராவிட கழகத்தினர், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆகியோர் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! - நடிகை விஜயலட்சுமி விவகாரம்-

 மாலை மலர் : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகிறார்.
சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சீமானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012-ம் ஆண்டு திரும்ப பெற்றுக் கொள்வதாக கடிதம் அளித்திருந்தார்.

இந்திய ஒன்றியம் மனுவாதிகளின் கைகளில் முற்று முழுதாகவே வீழ்ந்து விட்டது?

 ராதா மனோகர் : இன்று இந்திய ஒன்றியம் ஆர் எஸ் எஸ் மனுவாதிகளின் கைகளில்  முற்று முழுதாகவே வீழ்ந்து விட்டது!
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சந்தித்திராத மிக பெரிய காலனி ஆட்சிக்கு கீழ் இந்திய மண்ணின் மைந்தர்கள் அடிமைப்பட்டு விட்டார்கள்!
தாங்கள் ஒரு அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு இருப்பதையே புரிந்து கொள்ள முடியாத அளவு ஆரிய பார்ப்பன பனியா கும்பலின் நிரந்தர சுரண்டலின் கீழ் உள்ளார்கள்!
இந்தியாவின் மொத்த செல்வமும் வெறும் பத்து பதினைந்து வடநாட்டு குடும்பலின் கைகளில் சிக்கி இருப்பது வெறும் தற்செயலான நிகழ்வல்ல!
நீண்ட காலங்களாக திட்டமிட்டு அரங்கேறிக்கொண்டு இருக்கும் அக்கிரமம் இது!
மண்ணின் மைந்தர்களிடம் இருந்து எல்லாவற்றை பறிக்கிறார்கள்!
முகலாய ஐரோப்பிய காலனி ஆதிக்க வாதிகளிடம் இருந்த நேர்மையும் நாணயமும் கூட இந்த மனுவாதிகளிடம் கிடையவே கிடையாது.
sir winston churchill :  “Power will go to the hands of rascals, rogues, freebooters; all Indian leaders will be of low calibre & men of straw. They will have sweet tongues and silly hearts. They will fight amongst themselves for power and India will be lost in political squabbles.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

மகனுக்கு மா செ பதவி கேட்ட துரைமுருகன்!: தலைவர் பதவியை ரிசைன் பண்ணவா? வெடித்த ஸ்டாலின்... அதிர்ந்த சீனியர்கள்

 மின்னம்பலம் -  Aara : “திமுகவில் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. அன்றைக்கு 4 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம், 4 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்  என பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன.
அதற்குப் பின் உடனடியாக அடுத்தடுத்த மாற்றப் பட்டியல்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 18 ஆம் தேதி நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஏற்கனவே இருந்த மூர்த்தி மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சில நாட்களில் பிப்ரவரி 23 ஆம் தேதி தர்மபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மாற்றப்பட்டு, தர்மசெல்வன் மாவட்டச் செயலாளாராக  நியமிக்கப்பட்டார்.

மதுரை விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகள்.. வாரத்திற்கு 140 விமானங்கள்!

 tamil.goodreturns.in - Vignesh Rathinasamy :  மதுரை, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், பண்பாட்டு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும் விளங்குகிறது.
இந்நகரம் சினிமா, வர்த்தகம், கல்வி, மருத்துவம், மற்றும் சுற்றுலாத் துறைகளில் முக்கிய இடம் பெறுகிறது. இன்று, மதுரை விமான நிலையம் விரைவாக வளர்ந்து வரும் விமான நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இந்த விமான நிலையம் ஒரு மணி நேரத்திற்கு 700 பயணிகளை வரவேற்கிறது.

அமெரிக்க கோல்டு கார்ட் - 5 மில்லியன்அமெரிக்க டொலர் கொடுத்தால் நிரந்தர வதிவிட அனுமதி – ட்ரம்ப் அறிவிப்பு

 வீரகேசரி : அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. மெக்சிகோ கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய் மொழியே அல்ல!

 Basupathy Natarajan :  இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய் மொழியே அல்ல.*
தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு
கர்நாடகா- கன்னடம்
மகாராஷ்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
ஹரியானா-ஹரியானி
இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.

புதன், 26 பிப்ரவரி, 2025

திமுக அனைத்துக் கட்சிக் கூட்டம் - தொடர் போராட்டங்களுக்கு திட்டம்

 மின்னம்பலம் = Aara :   “கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில், ‘மோடிக்கு எதிராக ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு’ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
அதில் மாநில உரிமைகள் பறிபோவது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதன் முக்கிய அம்சமாக, அடுத்த வாரம்  முக்கிய அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படியே இன்று  (பிப்ரவரி 25) தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, தானே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது மாநில உரிமைகளை உச்சபட்சமாக நசுக்கும் வகையில் தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகள் 39 இல் இருந்து 31 ஆகக் குறைக்கப்படும் அபாயம் பற்றி விளக்கினார்.

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா – டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் பேசியது என்ன?

 பிபிசி : யுக்ரேன் விவகாரத்தில் எந்தவொரு அமைதி ஒப்பந்தமும் பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பின்னர் அவர் இதனை கூறினார்.
“இந்த அமைதி யுக்ரேனின் சரணாகதியாக இருக்கக் கூடாது. இது பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாத போர் நிறுத்தமாக இருக்கக்கூடாது” என்று டிரம்புடனான சந்திப்புக்கு பின் திங்களன்று இரு தலைவர்களும் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

Movie Makers Council - 1970 இல் உருவான மூவி மேக்கர்ஸ் கவுன்சில்!

May be an image of 11 people

1970 இல் உருவான மூவி மேக்கர்ஸ் கவுன்சில்தான் தென்னிந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட திரை தயாரிப்பாளர்கள் சங்கம்!
குறிப்பாக சிவாஜியின் படங்கள் வரைமுறை இல்லாமல் அடுத்தடுத்து திரைப்படுவதால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்காக சிவாஜி பட தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து அமைத்த அமைப்பு இது.
இதுதான் பிற்காலத்தில் உருவான தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் கூட்டமைப்புக்கு எல்லாம் முன்னுதாரணம்
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் : கே எஸ் கோபாலகிருஷ்ணன்  கே பாலச்சந்தர் ஏவி எம் முருகன்  ராமண்ணா ஸ்ரீதர் ஏ பி நாகராஜன்
இடமிருந்து வலமாக இருப்பவர்கள் : மல்லியம் ராஜகோபால் ஏவி எம் பாலு பி மாதவன் முக்தா சீனிவாசன் கே பாலாஜி

போடிநாயகனுர் மாணவர் விக்னேசு மர்ம மரணம் தொடரும் போராட்டம்!

May be an image of 2 people and text that says 'தேனி -போடி அரசு பொறியியல் கல்லூரி மாணவன் விக்னேசு படுகிகொலை நீதிக்கான போராட்டம் அடுத்த கட்டம் என்ன? கலந்தாய்வுக் கூடடம்! இடம்: கருப்பையா மகால், அல்லிநகரம் நேரம்: 20.02.25, மாலை 4 4.30 மணி ம 9600039031 8526929370'
May be an image of 1 person, slow loris and text that says 'CPIML LIBERATION தமிழக அரசே! உயர்கல்வித்துறையே! நடவடிக்கை எடு, நீதி வழங்கிடு. போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி விடுதியிலேயே இரத்த வெள்ளத்தில் (13. (13.02.2025) இறந்து கிடந்த மாணவர் விக்னேசுவரரனுக்கு நீதி வழங்கு. கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி காப்பாளர்களிடம் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வா! வழக்கு விசாரணையை (CB-CID) தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றிடு! விக்னேசின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத்தொகயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிடு! உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்து.! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, போடி ஒன்றியம்'

Pandikumar Subramani  மாணவர் விக்னேசு மரணம் தொடரும் போராட்டம்!
துணைசெய்ய கலந்தாய்வுக் கூட்டம்!
 தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படித்து வந்தவர்  விக்னேசு. திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் விக்னேசு கடந்த 13.02.25 அன்று மர்மமான முறையில், கல்லூரி விடுதி கழிவறையில் குருதி வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
விக்னேசின் இறப்புக்குக் காரணமான குற்றவாளிகளைத் தப்பவைக்கும் நோக்குடன் காவல்துறை செயல்படுவதாக பெற்றோருக்கும் மற்றும் அரசியல் இயக்கங்களுக்கும் ஐயப்பாடுகள் எழுந்தன.
இதன் காரணமாக, விக்னேசின் உடலை கூராய்வு செய்ய மறுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சீமான் கழுத்தைச் சுற்றும் பாம்பாக பாலியல் வழக்கு - குரல் பரிசோதனை, ஆண்மை பரிசோதனை!

minnambalam.com ; நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது, நடிகை விஜயலட்சுமி விவகாரம்.
2010-இல் சீமான் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு முழுமையான சினிமாக்காரராக இருந்தார். அப்போது சீமானுடன் நடிகை விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், சீமான் நாம் தமிழர் கட்சி தொடங்கிய பிறகு 2011-ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விஜயலட்சுமி ஒரு புகார்  அளித்தார்.

அந்த புகாரில், “நடிகரும் இயக்குனருமான சீமானுடன் நான் திரைத்துறையை சேர்ந்த நடிகை என்ற வகையில் அவருடன் நெருங்கிப் பழகினேன். ஆனால், என்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார். நான் அவரால் ஏழு முறை கருக்கலைப்பு செய்துள்ளேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பாதாள உலக குழுக்கள் பெரும் பிஸி

 இலக்கியா இன்போ : : இலங்கையில் அண்மைக்காலமாக பாதாள உலக குழுக்கள் பெரும் பிஸியாக இருப்பதை காணமுடிகின்றது. சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்ட பல பாதாளஉலக குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூட்டு நடத்தப்பட்டுள்ளது.
ஆயுத வியாபாரம், போதைப்பொருள் வர்த்தகம், ஒப்பந்த கொலை, கடத்தல், கப்பம் வாங்குதல் போன்ற படுபாதக செயல்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் பலர் கடந்த வாரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றில் அநேகமானவை பாதாள உலகக்குழுக்களிடையேயான மோதல்களினால் ஏற்பட்டவை என கூறப்பட்ட போதிலும் நாட்டு மக்களை இச்சம்பவங்கள் பெரும் பீதியடையச் செய்துள்ளது.

தேசியக் கொடிகளை ஏந்தி வந்த மார்வாடி கும்பல் அட்டகாசம்

May be an image of 3 people and crowd

 கி.பிரியாராம் கிபிரியாராம் :  இந்த மார்வாடிகள் தமிழனுக்கு எதிராய் ஒருநாள்  விஸ்வரூபம் எடுப்பார்கள் , உதாரண சம்பவம் ;
இன்று காலை, திடீரென்று கோவிந்தப்ப நாய்க்கன் தெரு, என் எஸ் சி போஸ் சாலை, ரிச்சி தெரு, காசி செட்டித் தெரு போன்ற இடங்களில் தேசியக் கொடிகளை ஏந்தி வந்த மார்வாடி கும்பலொன்று, வந்தேமாதரம் கோஷத்துடன் கடைகளை மூடச் சொல்லி வற்புறுத்தியுள்ளது.  
பணிந்த ஒரு சிலர் சடசடவென ஷட்டர்களை இறக்கியிருந்திருக்கிறார்கள்.  
நம்மாளுக மட்டும் மறுத்திருக்கிறார்கள்.  
உடனே அவர்கள் உனக்கு தாய்நாட்டுப் பற்றில்லையா?
 பாரத் மாதா, ஜெய்ஹிந்த், அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் என்றெல்லாம் சீன் போட,

திங்கள், 24 பிப்ரவரி, 2025

இந்தியா உலகின் ஆங்கிலம் பேசும் இரண்டாவது பெரிய நாடு

May be an image of map and text that says '2nd Largest English Speaking Country Around 10% Of Population More than 13 Crore Speakers'

உலகில் ஆங்கிலம் பேசும் நாடுகள் வரிசை
முதல் நாடு அமேரிக்கா
இரண்டாவது நாடு இந்தியா
மூன்றாவது நாடு நைஜீரியா
நான்காவது நாடு பாகிஸ்தான்
ஐந்தாவது நாடு பிரிட்டன்
ஆறாவது நாடு பிலிப்பைன்ஸ்
ஏழாவது நாடு ஜெர்மனி
எட்டாவது நாடு உகாண்டா
ஒன்பதாவது நாடு பிரான்ஸ்
பத்தாவது நாடு கனடா
பதினோராவது நாடு எகிப்து

மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த தகுதியான பயனாளிகளையும் நீக்கியதாக புகார் - நடப்பது என்ன? |

 hindutamil.in : சிவகங்கை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த தகுதியான பயனாளிகளையும் திடீரென நீக்கியதாகப் புகார் எழுந்தது.
இதனால் பாதிக்கப்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள 21 வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
இதில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளோர், 5 ஏக்கருக்கு மேல் நன்செய், 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்போர், கார் வைத்திருப்போர் விண்ணப்பிக்க முடியாது. தற்போது தமிழகம் முழுவதும் 1.15 கோடி பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலர் மீண்டும் மேல்முறையீடு செய்து ஒன்றரை ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதிக வருமானம் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நாம் தமிழர் கூடாரம் காலியாகிறது! .. எடுத்தெறிந்து பேசிய சீமான்.. அஸ்திவாரமே ஆட காரணமான விஷயம்

tamil.oneindia.com - Shyamsundar : சென்னை: நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடனும், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன், தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும் என்று காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வரிசையாக மூத்த நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர்.
காளியம்மாள் என்று இல்லை.. நாம் தமிழர் கட்சியின் முகமாக.. மாவட்ட அளவில் இருந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். கட்சியின் முக்கிய தலைவர்கள் என்று கருதப்பட்ட பல உள்ளூர் தலைகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். அதிலும் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வெளியேற தொடங்கி உள்ளனர். அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

மலிவு விலைமருந்து - 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் ஒன்றிய அரசு மருந்தகத்தை விட 20% விலை குறைவு

 hindutamil.in :  தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மருத்துவரணி செயலாளர் நா.எழிலன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இங்கு பிற மருந்தகத்தை ஒப்பிடும்போது மருந்துகளின் விலை 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் நடுத்தரக் குடும்பத்தினரின் பொருளாதார சுமை பெரியளவில் குறையும். இத்திட்டத்தில் முதல்வர் மேற்பார்வையில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகம் இணைந்து செயல்படுகிறது. மருந்தகம் அமைக்க விரும்பும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

ஜெர்மனி ஆளும் கட்சி தோல்வி! அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தோல்வியை ஒப்புக்கொண்டார்

 மாலை மலர் :  பெர்லின் ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார்.
இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

இலங்கை அண்டர் கிரவுண்ட் மாபியா கேங்ஸ்! அரசுக்கும் மக்களுக்கும் சவால்?

 வீரகேசரி : “நாங்கள் ஆட்­சிக்கு வந்தால் இரண்டு பௌர்­ணமி தினங்­க­ளுக்குள் பாதாள உல­கக்­கு­ழுக்கள் உட்­பட போதைப்­பொருள் வலை­ய­மைப்­புக்­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைப்போம்” என்று தேர்தல் மேடை­களில் காட்­ட­மாகக் கூறிய ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சியில் இருக்­கின்­றது.
ஆளும் தரப்­பாக வினைத்­தி­ற­னுடன் செயற்­ப­டு­வ­தற்­கான அனு­பவம் அவர்­க­ளுக்கு குறை­வாக இருந்­தாலும், உள்­நாட்டு நிலை­வ­ரங்கள் தொடர்பில் ஆழ­மான தர­வு­க­ளு­ட­னான தக­வல்­களும், அறிவும் அவர்­க­ளுக்கு நிறை­யவே காணப்­ப­டு­கின்­றன.

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து: மீண்டும் தொடக்கம்!

 மின்னம்பலம் : நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (பிப்ரவரி 22) தொடங்கியது. 83 பயணிகள் இன்று பயணம் மேற்கொண்டனர். Nagapattinam Srilanka passenger ship
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.

காளியம்மாள் திமுகவிடம் நாகப்பட்டினம் தொகுதி அல்லது ராஜ்யசபா சீட் கேட்கிறார்

மின்னம்பலம் -  vanangamudi :  நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அந்த கட்சியில் இருந்து விலகுவது உறுதியாகிவிட்டது.
அடுத்து அவர் எந்த கட்சிக்கு செல்லப் போகிறார் என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில்  நடந்து வருகின்றன.
இது தொடர்பாக இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘தங்கை காளியம்மாள் கட்சியில் இருப்பதா அல்லது விலகி வேறு இயக்கத்தில் சேர்வதா என்பது அவருடைய சுதந்திரம்’ என தெரிவித்திருக்கிறார்.